PDA

View Full Version : சாலை விதிகள்



மதி
01-12-2006, 06:19 AM
ஏனோ தெரியல. நாலு நாள் எழுதணும்னு தோணுச்சு. அதான் எழுதறேன். கோச்சுக்காதீங்க.

போன சனிக்கிழம எங்க ஆபிஸிலேர்ந்து ஒரு பேருந்தில் கோலார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு மருத்துவ முகாம் நடத்தறதுக்காக போயிருந்தோம். கிட்டத்தட்ட மூணரை மணி நேர பயணம். சீக்கிரமே வந்துடலாம்னு தான் புறப்பட்டோம். ஆனா எதிர்பாரத கூட்டம். சமாளிக்க முடியல. ஒரு வழியா சமாளிச்சு முகாம் நடத்தி அங்கிருந்து புறப்படறப்போ மணி ஆறரை ஆயிடுச்சு. நம்ம பெங்களூர் மன்ற கூட்டத்துல கலந்துக்க முடியாம போனதுக்கு அது தான் காரணம். வந்து சேரும் போது மணி பத்து. அதான் படத்துக்கும் (படிக்க: பிரதீப்பின் சிவப்பதிகார விமர்சனம்) போகாம தப்பிச்சேன்.

ச்சே. என்னவோ சொல்லணும்னு ஏதேதோ உளறிட்டிருக்கேன். திரும்பி வரும் போது பன்னர்கட்டா ரோட்டில் தான் அந்த சம்பவம் நடந்துச்சு. பெங்களூருக்குள்ளே நுழைஞ்சதுக்கப்புறம் அங்கங்கே வண்டியை நிறுத்தி அலுவலக நண்பர்களை இறக்கி விட்டுட்டு இருந்தோம். பன்னார்கட்டா ரோட்டிலே வந்துட்டு இருந்தப்போ என்னவோ திடீர்ன்னு லெஃப்ட்டில இண்டிகேட்டர போட்டு வண்டிய ஓரம் கட்டினார் ஓட்டுநர். சரி யாரோ இறங்கப்போறாங்கன்னு நெனச்சா எங்க வண்டிய தாண்டி ஒரு அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) போச்சு. அது போனதுக்கப்புறம் வண்டிய எடுத்தார் ஓட்டுநர். அங்கிருந்த எங்களுக்கு இனம் புரியாத இன்ப அதிர்ச்சி.

விதிகளை, குறிப்பாக சாலை விதிகளை மிதிக்க கூடாதென்ற எண்ணம் தான் நம்மகிட்ட இருக்குன்னு இது வரை நினைச்சிருந்தேன். அவசர ஊர்தி வரும் போது வண்டியை சாலையோரமா நிறுத்தனும்ங்கறது இங்க எத்தன பேருக்கு தெரியும்னே தெரியல. இதுல அந்த ஓட்டுநரோட செயலால ஆச்சர்யபட்டோம். அதைவிட ஆச்சர்யம் எங்களுக்கு முன்னாடி போய்ட்டு இருந்த வண்டியெல்லாம் ஓரமா ஒதுங்கி வழி விட்டது தான். நிமிஷத்துல அந்த ஆம்புலன்ஸ் கண்ண விட்டு மறைஞ்சிடுச்சு. சைரன் சத்தமும் கேக்கல.

இதுல என்னடா பெரிசா சொல்ல வந்துட்டன்னு நீங்க கேக்குறது புரியுது. எத்தனையோ தடவை ஊரு சரியில்ல, உலகம் சரியில்ல, எவனுமே விதிகளை மதிக்க மாட்டேன்றான், அப்படி இப்படின்னு குத்தம் கண்டுபுடிக்கறதில்லேயே நம்ம வாழ்நாள் முழுதா போகுது. அட ஒரு மனுஷன் நல்லது பண்ணினா அவனை பத்தி மட்டும் யாரும் பேசறதில்லை. நெனச்சுக்கூட பாக்குறதில்ல. சாலை பற்றிய அறிவு ரொம்பவே குறைஞ்சிகிட்டு வர்றதா புலம்பல்கள் ஒரு பக்கம் இருக்குற சமயத்துல இது மாதிரி சம்பவங்களும் நடக்குது.

என்னவோ சொல்லத்தோணுச்சு. சொல்லிப்புட்டேன். அம்புட்டுத் தான்.

franklinraja
01-12-2006, 07:39 AM
சாலை விதின்னு தலைப்பை பார்த்ததும்,

சாலையில் பயணிக்கிற விதியப்பத்தி புலம்பப்போராங்களோன்னு தான் நினைச்சேன்..

ஆனா, விதிகளை கடைபிடித்த ஒருவரை பாராட்டும் விதமா,
அதை எல்லோரும் உணரனும்ன்ற நல்லெண்ணத்துல உள்ள உங்களின் இந்த பதிவுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்..! :)

pradeepkt
01-12-2006, 07:44 AM
பெங்களூர்ல நானே பல தடவை பாத்திருக்கேன் மதி! சாலை விதிகளை ஓரளவுக்காச்சும் மதிப்பார்கள். அதை நானே பலமுறை கண்டிருக்கிறேன். இந்த முறை ஞாயிற்றுக்கிழமை காலை ஏர்ப்போர்ட் ரோட்டில் வழக்கம் போல் எள் போட்டால் எண்ணெய் ஆகி அது கொதிச்சு ஆவியாகும் அளவு டிராபிக்.

ஆனாலும் மணிப்பால் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸுக்கு மக்கள் வின்ட் டன்னல் ரோட்டில் இருந்து சும்மா இருபுறமும் சட்டு சட்டென்று விலகி விஐபி மரியாதை கொடுத்தார்கள். அதில் ஏதோ ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் காரும் ஜீப்பும் அடக்கம்.

எனக்கு ஹைதராபாதில் இருந்து வந்து அதைப் பார்த்தபிறகு அப்படியே சிலிர்த்துவிட்டது. ஏனெனில் இங்கே போன வாரம் சிகப்பு சிக்னலுக்காகக் காரை நிறுத்தியதற்குப் பின்னால் நின்ற பேருந்து (அரசுதேன்) ஓட்டுநர்கிட்டே இருந்து சரளமான உருதில் சரசமான வார்த்தைகள் வந்து விழுந்தன. நானும் இறங்கி எனக்குத் தெரிஞ்ச தெலுங்கு இந்தி தமிழ் ஆங்கிலம்னு பல மொழிகளில் சண்டை போட்டேன். ரெண்டு பேருக்குமே ஒண்ணும் புரியாததுனாலயும் சிக்னல் விழுந்துட்டதுனாலயும் நிறுத்திக்கிட்டோம்.

ஓவியா
01-12-2006, 03:20 PM
எழுதியதும் எழுதிட்டு கூட ஒருவரியா கோச்சுக்காதீங்க...னு

மதி,
எனக்கு ஒரே கோவம்...
(நாலு நாள் கழிச்சு எழுதினாய் என்றுதேன்), ...இனி அப்பப்ப சுடச்சுட எழுது.....ம்ம்

இனி சாலை விதிகளை மீறமாட்டோம்........உறுதிமொழிதன்

ஒருவரை பாராட்டிய உன் எண்ணத்திற்க்கு ஒரு பாராட்டு.

இளசு
02-12-2006, 08:13 PM
அன்பு மதி,

எழுதணும்னு தோணும்போது எழுதிடணும்....
பல வாரம், பல மாதம் பின்னர் எழுதத் தோணாத வறட்சிக்காலம் வரும்போது
இந்த அடைமழைக்காலம் ஈடு செய்யும்..


நல்லதைப் பாராட்டும் இப்பதிவுக்கு என் பாராட்டுகள்.


பன்மொழிப்புலமையை அந்த ஓட்டுநரிடம் காட்டியதற்கு சபாஷ்!

-----------------------

பொதுவாகவே சிக்னல் கொடுப்பது, ஹாரன் அதிகம் அடிக்காதது
என அண்மையில் நானும் நல்லவை கண்டேன் சென்னையில்...

பல்லாவரம் முன்பு என்னை காவலர் ஓரங்கட்டினர். 80 கிமீயில் வந்துகொண்டிருந்தேன். 60கிமீ தான் வேக எல்லை என நினைவூட்ட அந்த ஓரங்கட்டல். இன்ப அதிர்ச்சி. கைகுலுக்கல்... நல்லனுபவம்!

இன்னும் முன்னேறுவோம் என்ற நம்பிக்கையுடன் அன்று என் பயணம்
தொடர்ந்தது..

இளசு
02-12-2006, 09:13 PM
இன்றைய தினமலர் செய்தி:

லாரிகளில் திருட்டு பொருட்களை ஏற்றிச் சென்றால், அரசால் தடை விதிக்கப்பட்ட பொருட்களை கொண்டு சென்றால், லாரியில் அதிக பாரத்தை ஏற்றினால், நிர்ணயிக்கப் பட்ட வேகத்தை விட அதி வேகமாகச் சென்றால் அந்த வாகன டிரைவர்களின் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் பெரும்பாலான அலுவலர்கள் பணிச்சுமை காரணமாக இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. தற்போது டிரைவர் லைசென்சை நிரந்தரமாக ரத்து செய்வது மற்றும் குறிப்பிட்ட காலம் வரை தகுதியிழக்க செய்வது போன்ற நடவடிக்கைகளை வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
டிரைவர் லைசென்சை ரத்து செய்ய அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்களின் விவரம்: * வாகனங்களை திருடுபவர் மீது திருடிய குற்றம் தவிர அவரது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். * லாரிகளில் திருட்டு பொருட்களை ஏற்றிச் செல்லுதல், அரசால் தடை விதிக்கப்பட்ட பொருட்களை கொண்டு செல்வது, கார்களில் பயணிகளை கடத்துவது, லாரியில் அதிக பாரம் ஏற்றுதல், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதி வேகமாக செல்லுதல், லாரியின் கேபின் மற்றும் வெளி பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்வது. * பஸ்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் தனது கவனத்தை திசை திருப்பும் வகையில் ஆடியோ கேசட்டுகளை மாற்றுதல், வீடியோவை ரிமோட் மூலம் இயக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது
* விபத்து நடக்கும் போது காயம்பட்ட பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை செய்யாமல் இருப்பது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தவிர்ப்பது, போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்காதது. * பயணிகளிடம் தரக்குறைவாக நடப்பது, பஸ்சை ஓட்டும் போது சிகரெட் பிடிப்பது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி வைப்பது, பஸ்சுக்குள் பயணிகளை அமர்த்தி வைத்து விட்டு ஓட்டலில் டிபன் சாப்பிட செல்வது, போதையில் இருப்பது, பஸ்சின் மேற்கூரையில் பயணிகளை உட்கார அனுமதிப்பது. * ஒவ்வொரு பஸ்சும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஸ்டாப்பில் வரவில்லை என்றால், வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போனில் பேசினால் டிரைவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறும் டிரைவர்கள் பற்றிய தகவல்களை பயணிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என்றும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிஞர்
08-12-2006, 02:12 PM
நாடு முன்னேறுகிறது என்ற விசயம் மகிழ்ச்சியை தருகிறது.......

வெளிநாடுகளில் உள்ள மனநிலை நம் மக்களுக்கும் வருவது மகிழ்ச்சியே...

leomohan
08-12-2006, 03:15 PM
இல்லை ராஜேஷ் நம்ம ஊர்ல விதிகள் உடைக்கப்படுகின்றன. ஆனாலும் மதிக்கப்படுகின்றன.

தேவையான நேரத்தில் தேவையான விஷயங்கள் நடந்துகிட்டு தான் இருக்கு அது இந்திரா காந்தி கைதி பண்றதாகட்டும், நரசிம்மராவ் மேல வழக்கு போடறதாகட்டும், அத்வானி அரஸ்ட் பண்றதாகட்டும், இல்லை இப்ப வெச்ச மாதிரி ஷிபுசுரேனுக்கும் சித்துவுக்கும் ஆப்பாகட்டும்.

ஊழல் இருந்தாலும் பணி நிற்காமல் நடக்கிறது.

இந்த ஆம்புலன்ஸ் விஷயம் விதிகளை விட மனிதாபிமானம் செத்து போகவில்லை என்பதையே காட்டுகிறது.

ஆனால் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸூம் மணி அடித்துக் கொண்டு அதை துஷ்ப்ரயோகம் செய்தால் தான் கஷ்டம்

இளசு
09-12-2006, 10:07 PM
இன்றைய தினமலர் செய்தி:


மதுபோதையில் வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்துவது அதிகரித்துள்ளதால், "தண்ணி' போட்டுவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் பிடிக்கப்பட்டால், அங்கேயே அவர்களின் டிரைவிங் லைசென்சை பறிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சகம் விரைவில் அறிக்கை அனுப்ப உள்ளது.
சமீபத்தில் உலக வங்கியும், ஐக்கிய நாடுகள் சபையும் சேர்ந்து சில அமைப்புகளை அமர்த்தி, சாலை விபத்துகள் பற்றி கணக்கெடுக்க வைத்தது. அதில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறப்பது தெரிந்தது. அதில், 92 ஆயிரம் பேர் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறக்கின்றனர் என்று தெரிந்தது. சாலை விபத்துகளுக்கு காரணம், அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டுவது போன்றவை இருந்தாலும், கணிசமான அளவு, மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க இன்னும் தண்டனையை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே, உள்ள விதிகளில், மதுபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்டால், இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ஆறு மாதம் முதல் இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனையும் சில வழக்குகளில் போட முடியும். இந்தியாவை பொறுத்தவரை, சிறை தண்டனை என்பது காலம் கடந்ததாக இருக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் மீண்டும் அந்த நபர்கள், வாகனம் ஓட்டுவதும் அனுமதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, வேறு இடங்களில் வேறு பெயர்களில் லைசென்ஸ் எடுத்து ஓட்டுவதும் நடக்கிறது.
இப்படிப்பட்ட நடைமுறைகளை சீராக்கி, மதுபோதையில் வாகனம் ஓட்டும் எவரையும் உடனே பிடித்து அந்த இடத்திலேயே லைசென்சை பறிக்க வேண்டும். மூன்று மாதம் வரை ஓட்டாமல் தடுக்க வேண்டும்' என்று புதிய விதிகளை கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. விரைவில் அமைச்சரவையில் இது தாக்கல் செய்யப்படும்.
இதன்படி, நெடுஞ்சாலையில், ஒரு "பெக்' அடித்து போதையில் வாகனம் ஓட்டினாலும், போலீசார் பிடித்து அவர்களிடம் உள்ள லைசென்சை பறிக்க முடியும். அதனால், மூன்று மாதங்கள் வாகனம் ஓட்ட முடியாது. மதுபோதையில் விபத்து ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் வரை நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வழிவகை செய்யப்பட உள்ளது. உலக நாடுகளில் அதிக வாகனங்கள் உள்ள நாடு என்ற வரிசையில் இந்தியா மூன்றாவதாக உள்ளது. மொத்தம் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என்ற வகையில், ஏழு கோடி வாகனங்கள் உள்ளன. அதுபோல, சாலை விபத்துகளில் உலகில் இரண்டாவதாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

leomohan
10-12-2006, 04:17 AM
சாலை வசதிகளும், சக்கர வாகனங்கள், ஜனதொகை விகிதங்களையும் பார்த்தால் இந்தியாவில் விபத்துக்கள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஓவியா
10-12-2006, 02:52 PM
மதுபோதையில் வாகனம் ஓட்டும் எவரையும் உடனே பிடித்து அந்த இடத்திலேயே லைசென்சை பறிக்க வேண்டும். மூன்று மாதம் வரை ஓட்டாமல் தடுக்க வேண்டும்' என்று புதிய விதிகளை கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அருமையான திட்டம்.

போதை இல்லாமல் வண்டி ஒட்டமுடியாது என்று வாழும் கூலித்தொழிளார்களின் நிலை???????

திட்டம் செயல் படுமா?

thoorigai
13-01-2007, 07:51 AM
மதுபோதையில் வாகனம் ஓட்டும் எவரையும் உடனே பிடித்து அந்த இடத்திலேயே லைசென்சை பறிக்க வேண்டும். மூன்று மாதம் வரை ஓட்டாமல் தடுக்க வேண்டும்' என்று புதிய விதிகளை கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அருமையான திட்டம்.

போதை இல்லாமல் வண்டி ஒட்டமுடியாது என்று வாழும் கூலித்தொழிளார்களின் நிலை???????

திட்டம் செயல் படுமா?


போதை வேண்டுமா? அல்லது அதற்கும் மேலான வாழ்வு வேண்டுமா?
பேதைமை களைய கூட்டு சேர்வோமே நாம்...
இக்கூலித்தொழிலாளர்க்கு போதை தேவையென நியாயப்படுத்தாது (வேலையில் உள்ள போதாவது) அதனால் உண்டாகக்கூடிய அவலங்களை எடுத்தோதுவோமா?

ஷீ-நிசி
13-01-2007, 11:29 AM
அட ஒரு மனுஷன் நல்லது பண்ணினா அவனை பத்தி மட்டும் யாரும் பேசறதில்லை. நெனச்சுக்கூட பாக்குறதில்ல.

அந்தக் குறை இனி வேண்டாம். உங்களைப் போல் ஓரிருவர் இருக்கிறார்களே. நினைத்து பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மற்றவர்களோடும் பகிர்ந்துக்கொண்டீர்களே..