PDA

View Full Version : ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11

ராஜா
30-11-2006, 02:29 PM
விடாக் கண்டன்..கொடாக் கண்டி..

--------------------------------------------------------------------------------

ஒரு அழகான பொண்ணை ரொம்ப நாளா கணக்குப் பண்ணிகிட்டுருந்த பையன் ஒருத்தன், ஒரு விருந்துல சந்திச்சான்.. எப்படியும் அடைப்புக்குறி போட்டுறணும்ன்னு முடிவு பண்ணி, அவள்கிட்டே போயி கடலை போட ஆரம்பிச்சான்.. அவள் வெட்டிக்கிட்டே இருந்தா.. இவனுடைய மனந்தளரா முயற்சிகளும்.. அவளுடைய மூக்குடைப்புகளும்..

அவன் ; நான் ஒரு புகைப்பட நிபுணர்.. உங்கள் முகம் போல அழகான முகத்தை நான் பார்த்ததே இல்லை.
இவள் ; நான் முகச் சீரமைப்பு நிபுணர்.. உங்கள் முகம் போல நிறைய முகங்களை பார்த்திருக்கிறேன்..!

அவன் ; இதற்கு முன் நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம் இல்லையா..?
இவள் ; ஆமாம்.. அன்றிலிருந்து நான் அங்கு போவதையே நிறுத்திவிட்டேன்..!

அவன் ; என் வாழ்க்கையில் இவ்வளவு நாளாக உங்களை எப்படி சந்திக்காமல் இருந்தேன்.?
அவள் ; கண்ணுல படாம இருக்க நான் பட்ட பாடு எனக்குதானே தெரியும்..!

அவன் ; பிரம்மன் முழுத்திறமையையும் காட்டி உங்களை உருவாக்கி இருக்கிறான்..
இவள் ; இருக்கலாம்.. அடுத்ததாக படைத்தது உங்களையா..?

அவன் ; வரும் சனிக்கிழமை நாம் எங்காவது வெளியில் போகலாமா..?
இவள் ; மன்னிக்கவும்.. சனிக்கிழமை மாலையில் எனக்கு தலைவலி வந்து விடும்..!!

அவன் ; உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா..?
இவள் ; வேண்டாம்.. அந்தப் பேரை நீங்க வச்சுக்கிட்டா நல்லா இருக்காது..!

அவன் ; நாம இப்போ சந்திச்சுக்கிட்டது பூர்வ ஜென்ம புண்ணியம்தான் இல்லையா..?
இவள் ; என் கஷ்ட காலமாகவோ, பூர்வ ஜென்ம பாவமாகவோ கூட இருக்கலாம்..!

அவன் ; உங்க பக்கத்து இருக்கை காலியாத்தானே இருக்கு..?
இவள் ; ஆமாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உக்காந்து இருக்கறதும் காலியாகப் போகுது..!

அவன் ; உன் மனசுல இருக்கறத தயங்காம என்கிட்டே சொல்லலாம்..
இவள் ; அப்படியா.. இடத்தை காலி பண்ணு..!

அவன் ; உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்..
இவள் ; ஏன்.. கிளம்பப் போறியா..?

அவன் ; நான் உன்கிட்டே என்னை கல்யாணம் பண்ணிக்கோ' ன்னு சொன்னா நீ என்ன சொல்லுவே..?
இவள் ; ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. நான் ஜோக் கேட்டு சிரிக்கறப்போ என்னால பேச முடியாது..!

அவன் ; உன் அழகு என் மனச கலக்குது..

இவள் ; உன் பர்சனாலிட்டி என் வயித்த கலக்குது..!

அவன் ; என்னைப் பார்த்து அன்பா ஒரு தடவையோ ரெண்டு தடவையோ சிரிச்சியா இல்லையா..?

இவள் ; ஒரு தடவை தான்.. நான் எந்த தப்பையும் ரெண்டாவது முறை செய்யறதே இல்லை..!!

அவன் ; உனக்காக இந்த உலகத்தின் மூலைக்கு கூட போவேன்..

இவள் ; அங்கேயே இருந்துடு.. திரும்ப வந்துராதே..!!!

ராஜா
30-11-2006, 02:32 PM
மின்னஞ்சல் முக"ரவி" மாறினால்..

--------------------------------------------------------------------------------

ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..!

வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..சிறிது நேரத்தில்..

" சக்கரம்" என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..!

TO ----------என் அன்பான ம்னைவி

SUBJECT------ வந்து சேர்ந்துவிட்டேன்..

TIME---------- மர்ச்சுவரி 32/ 2000 ... 9.00 pm.

அன்பே..

அதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்த்து. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.

அப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.

உன் வரவை எதிர் நோக்கி..

உன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்

ராஜா
30-11-2006, 02:33 PM
சில நிரந்தர விதிகள்..

எதுக்காவது வரிசையிலே நிக்கிறோம்ன்னு வச்சுக்கங்க.. நாம் நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது.. மத்த வரிசையெல்லாம் கிடு கிடுன்னு கரையும்.. கவனிச்சிருக்கீங்களா..?

தப்பா நம்பர் அடிச்சு போன் பண்ணினோம்ன்னு வைங்க.. எங்கேஜ்டா இருக்காது.. தப்பு நம்பர் எதிராளி தொடர்பு எல்லைக்குள்ளேயே இருப்பான்.. லொடக்குன்னு 2 ரூபா காலியாயிடும்..!

பைக்கையோ காரையோ தெரிஞ்சவரைக்கும் ரிப்பேர் பார்த்துட்டு, கையை ஆயிலாவோ, கிரீஸாவோ வச்சுருக்கோம்ன்னு வைங்க.. அப்பத்தான் மூக்கு அரிக்கும்.. உண்டா இல்லையா..?

உங்க முதலாளி ஏன் லேட் ன்னு கேட்டு வண்டி பஞ்சர் ன்னு சொல்லி சமாளிச்சுடுவீங்க.. சோதனையா மறுநாள் உண்மையாவே பஞ்சர் ஆகி முதலாளிக்கிட்டே பேய் முழி முழிச்சுருக்கீங்களா இல்லையா..?

வீட்டை பூட்டிட்டு வெளிலே கெளம்பும்போது தொலைபேசி ஒலிக்கும்.. திறந்து உள்ளே வர்றதுக்குள்ள நின்னு போயிடும்..

ஒரு முக்கியமான ஆளு அவங்கூட சேராதே ன்னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் சின்சியரா சரின்னுருப்பீங்க.. மறுநாளே அவ்னோட சுத்தறத அந்த முக்கியமானவங்க பாத்துடுவாங்க.. வாசஸ்தவம் தானே..?

ஒரு மேஜிக்'கையோ, இல்லே வேறே எதாவது வித்தையையோ கத்துட்டு வந்துருப்பீங்க. ஒரு ஆள அசத்தணும்ன்னு அதை செஞ்சு காமிக்கறப்போ சொதப்பிடும்.. அவங்க போனப்புறம் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க.. கரெக்டா வரும்.. அப்படி நொந்து நூலாயிருக்கீங்களா இல்லையா..?

கொட்டாவி விட்டுட்டு வெட்டியா உக்காந்து இருப்பீங்க.. ஒரு வேலையும் இருக்காது.. ஒரு டீ சாப்பிடலாம்ன்னு கப்பை கையிலே எடுப்பீங்க.. உடனே ஒரு வேலை வானத்துலேருந்து குதிக்கும்.. சூடா அந்த டீயை குடிக்க விடாமப் பண்ணிடும்.. அனுபவிச்சுருக்கீங்களா..?

ராஜா
30-11-2006, 02:35 PM
ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..

கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?

கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?

கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன்? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!
__________________

ராஜா
30-11-2006, 02:37 PM
ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்.
************************************
1. காரை நிறுத்துவான்.
2. இயந்திரத்தில் அட்டையை செருகுவான்.
3. குறியீட்டு எண்ணை அழுத்துவான்.
4. பணத்தையும் அட்டையையும் சேகரிப்பான்.
5. காரைக் கிளப்புவான்.

ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் பெண்.
**************************************
1. காரை நிறுத்துவாள்.
2. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
3. ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினை ஆஃப் செய்வாள்.
4. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
5. இயந்திரத்தை அணுகுவாள்.
6. கைப்பையில் அட்டையை தேடுவாள்.
7. அட்டையை செருகுவாள்.
8. குறியீட்டு எண்ணை அழுத்துவாள்.
9. அழுத்திய எண்களை ரத்து செய்வாள்.
10. கைப்பையில் எண் குறிப்பை தேடுவாள்.
11. மீண்டும் அட்டையை செருகுவாள்.
12. குறிப்பைப் பார்த்து எண் அழுத்துவாள்.
13. பணத்தை சேகரிப்பாள்.
14. காருக்கு திரும்புவாள்.
15. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
16. காரை ஸ்டார்ட் செய்வாள்.
17. ஆஃப் செய்வாள்.
18. இறங்கி ஒடுவாள்.
19. இயந்திரத்தில் இருந்து அட்டையை பிடுங்குவாள்.
20. காருக்கு வருவாள்.
22. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
23. ஸ்டார்ட் செய்வாள்.
24. 1 கிலோ மீட்டர் ஓட்டுவாள்.
25. ஹாண்ட் ப்ரேக்கை எடுத்து விடுவாள்

ராஜா
30-11-2006, 02:38 PM
சந்திரமுகி படப்பிடிப்பு ஒரு காட்டில் நடந்தது. அப்போது இரு காட்டுமிராண்டிகள் அவ்வழியே வந்தனர். தகப்பனும் மகனுமான அவர்கள் மிகுந்த பசியுடன் இருந்தனர்.. அப்போது அங்கு ரஜினி வந்தார்..

மகன் ; அப்பா இதைப் புடிச்சுட்டு வர்றேன் திம்போமா..?

அப்பா ; வேணாம்டா.. ஒரே எலும்பா இருக்கும்.. பல்லு உடைஞ்சுடும்..

பின்னர் பிரபு அங்கு வர...

மகன் ; இது நல்லா புஷ்டியா இருக்குப்பா.. புடிச்சுட்டு வரவா..?

அப்பா ; வேணாம்டா.. ஒரெ கொழுப்பு.. அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்துடும்..!

பின்னர் ஜோதிகா வருவதைப் பார்த்ததும்..

மகன் ; அப்பா.. இது 'நச்' பிகருப்பா.. இதை புடிச்சு சாப்பிடுவோமா..?

அப்பா ; புடிச்சுட்டு வா.. ஆனா சாப்பிட வேண்டாம்..

மகன் ; அப்போ இன்னிக்கு நாம சாப்பிட என்ன செய்யறது..?

அப்பா ; உங்க அம்மாவை காலி பண்ணிடுவோம்..!!!

ராஜா
30-11-2006, 02:45 PM
ஒரு ஊரில் ஒரு சைவ காதலனும் சைவ காதலியும் இருந்தார்கள்..

காதலி எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நின்றாள்..

65 கி.

குதி உயர் காலணியை அகற்றினாள்..

63 கி.

துப்பட்டாவை காதலனிடம் கொடுத்தாள்....

62 கி.

அத்துடன் கையில் இருந்த சில்லறை தீர்ந்தபடியால் அடுத்து என்ன செய்வதென்றறியாமல் நின்ற போது.. காதலன் சொன்னான்...

கவலைப்படாதே.. அன்பே.. என்கிட்ட 25 நாணயங்கள் இருக்கின்றன...!!!

ராஜா
30-11-2006, 02:48 PM
பக்தன் ; கடவுளே..! நான் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..?

கடவுள் ; நல்லா அழகானவளா இருக்கணும்.

நல்லா சமைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்..

பணக்காரியா இருக்கணும்.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...!!!

ராஜா
30-11-2006, 02:52 PM
அட்லாண்டிக் கடலில்.. யு.எஸ். கடற்படை கப்பலின் தலைவர் வானொலி மூலம் விடுக்கும் எச்சரிக்கை..

எதிரில் தெரியும் விளக்குக்கு சொந்தமானது எதுவாக இருந்தாலும் சரி.. உடனே 15 டிகிரி வலப்பக்கம் விலக்கி செலுத்துங்கள்..

கப்பல் தலைவர் அவர்களே.. தயவு செய்து தங்கள் கப்பலை 15 டிகிரி இடப்பக்கம் திருப்பி செலுத்தினால் விபத்தை தவிர்க்கலாம்..

என்ன..? அமெரிக்காவின் போர்க்கப்பல் இது.. உனக்கு உத்தரவிடுகிறேன்.. உடனே வலப்பக்கம் திருப்பு..

எவராக இருந்தால் என்ன.. ? விலகுவது எங்களால் முடியாத காரியம்.. அறிவுடன் செயல்படுங்கள்.. திசையை மாற்றுங்கள்.. அதுவும் உடனே...!!

என்ன.. எங்களுக்கே ஆணையிடுகிறாயா.. ? உலகின் பெரும் வல்லரசு நாட்டின் விமானம் தாங்கிக் கப்பலின் தலைவன் கடைசி முறையாக எச்சரிக்கிறேன்.. உடனடியாக விலகு..

அட முட்டாளே..! இது லைட் ஹவுஸ்.. !!!!

ராஜா
30-11-2006, 03:08 PM
புதிதாக மணம் செய்துகொண்ட இணை.. உணவகத்தில்... அடுத்த மேசையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனையே புதுப்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்..

கணவன் ; ஏன் டார்லிங்.. அவரை உனக்கு முன்பே தெரியுமா..?

மனைவி ; ஆம் உயிரே.. என் முன்னாள் கணவன்.. 2 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் பிரிந்து விட்டோம் .. அதிலிருந்து இப்படி ஆகிவிட்டார்..

கணவன் ; என்னதான் சந்தோஷத்தை கொண்டாடுகிறார் என்றாலும் ரெண்டு வருஷம் கொஞ்சம் ஓவர் தான்.. இல்லியா அன்பே..?

மனைவி ; ?????????????????????????????

ஓவியா
30-11-2006, 06:13 PM
ராஜா அண்ணா.... சும்மா தூள்பன்னரீங்க...........:D

அதுவும் அந்த
ஆTM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்./பெண்....:D

அண்ணா,
நீங்க இனைக்கு என்னை நல்லா மாட்டிவுட்டுட்டீங்க :cool:
சிரித்து சிரித்து எதிரில் உல்ல ஒருவனை சிறையிலிட்டேன்.....:eek:


---------------------------------------------------------
பல்கலைகலகத்திலே உட்கார்ந்து இதை படித்தேன்,
எதிரில் உல்ல ஒருவன் போகும் பொழுது மேடம் நீங்க இங்க படிக்க வந்துல்லீர்கல்,
நீங்க படிக்கலனாலும் பரவாயில்லை ...என்னையாவது படிக்கவுடுங்க......
சிரித்து சிரித்து என்னை மய****னு சொன்னான்.... :D
:eek:

இளசு
30-11-2006, 08:27 PM
கலக்கல்..ராஜா..!

அடைப்புக்குறி விடாக்கண்டனும்
முகரவியும் போர்க்கப்பலும் வாய்விட்டு சிரிக்கவைத்தன.

ஏடிஎம் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

மதி
01-12-2006, 03:25 AM
ராஜா அண்ணா.... சும்மா தூள்பன்னரீங்க...........:D

அதுவும் அந்த
ஆTM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்./பெண்....:D

அண்ணா,
நீங்க இனைக்கு என்னை நல்லா மாட்டிவுட்டுட்டீங்க :cool:
சிரித்து சிரித்து எதிரில் உல்ல ஒருவனை சிறையிலிட்டேன்.....:eek:


---------------------------------------------------------
பல்கலைகலகத்திலே உட்கார்ந்து இதை படித்தேன்,
எதிரில் உல்ல ஒருவன் போகும் பொழுது மேடம் நீங்க இங்க படிக்க வந்துல்லீர்கல்,
நீங்க படிக்கலனாலும் பரவாயில்லை ...என்னையாவது படிக்கவுடுங்க......
சிரித்து சிரித்து என்னை மய****னு சொன்னான்.... :D
:eek:
அக்கா..
என்ன இது...? உங்க ஏரியாவுல இருக்கவங்க எல்லாம் பைத்தியம் புடிச்சு அலையபோறாங்க..பாத்து...

pradeepkt
01-12-2006, 06:28 AM
ராஜா கலக்கிட்டீங்க போங்க.
இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்ல கொடுக்க வேண்டிய அறிக்கையின் கீழே இந்த மதி ஜோக்கு (அதான் பொம்பளப் புள்ளைகிட்ட வழிஞ்சது) சில பகுதிகளை மொழிபெயர்த்துச் சேர்த்தேன்.

பயங்கர சீரியசா மட்டுமே இருக்க வேண்டிய மீட்டிங் கொஞ்சம் சிரியசாவும் ஆகிருச்சு :) நன்றி!

மதி
01-12-2006, 07:06 AM
ராஜா கலக்கிட்டீங்க போங்க.
இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்ல கொடுக்க வேண்டிய அறிக்கையின் கீழே இந்த மதி ஜோக்கு (அதான் பொம்பளப் புள்ளைகிட்ட வழிஞ்சது) சில பகுதிகளை மொழிபெயர்த்துச் சேர்த்தேன்.

பயங்கர சீரியசா மட்டுமே இருக்க வேண்டிய மீட்டிங் கொஞ்சம் சிரியசாவும் ஆகிருச்சு :) நன்றி!
இது எப்ப நடந்தது..எனக்குத் தெரியாம..?
ஆனா என் ஸ்டைல் இது இல்ல....:D :D :D :D

அறிஞர்
01-12-2006, 04:33 PM
கலக்கிட்டிங்க.. ராஜா.. எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது.

ஒரு சிலவற்றை முன்பு படித்துள்ளேன்....

இன்னும் கலக்குங்க... தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.

pradeepkt
02-12-2006, 02:35 PM
இது எப்ப நடந்தது..எனக்குத் தெரியாம..?
ஆனா என் ஸ்டைல் இது இல்ல....:D :D :D :D
தம்பி... இது ஸ்டைலே இல்லை... :D :D

மதி
04-12-2006, 02:08 AM
என்னவோ போங்க சிலருக்கு வயசாயிட்டே வருதுன்னு தெரியுது..

guna
04-12-2006, 02:45 AM
ராஜா அண்ணா.... சும்மா தூள்பன்னரீங்க...........:D

அதுவும் அந்த
ஆTM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்./பெண்....:D

அண்ணா,
நீங்க இனைக்கு என்னை நல்லா மாட்டிவுட்டுட்டீங்க :cool:
சிரித்து சிரித்து எதிரில் உல்ல ஒருவனை சிறையிலிட்டேன்.....:eek:


---------------------------------------------------------
பல்கலைகலகத்திலே உட்கார்ந்து இதை படித்தேன்,
எதிரில் உல்ல ஒருவன் போகும் பொழுது மேடம் நீங்க இங்க படிக்க வந்துல்லீர்கல்,
நீங்க படிக்கலனாலும் பரவாயில்லை ...என்னையாவது படிக்கவுடுங்க......
சிரித்து சிரித்து என்னை மய****னு சொன்னான்.... :D
:eek:

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்..
கண்ணம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
னினைக்க நினைக்க நெஞில் நிறைந்து விட்டாய்...

ஓவியா, சிரிச்சி சிரிச்சி சிரீயசா எதிலயாச்சும் மாட்டிக்காதீங்க..:eek:

ராஜா
04-12-2006, 05:55 AM
ஒரு பெரிய மனிதரின் இறுதிச் சடங்கு. சவப்பெட்டி இறுதி யாத்திரைக்கு தயாராக இருக்க, அங்கு வந்திருந்த மந்திரி தன் நண்பரின் நற்குணங்களைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்..

"மறைந்த நண்பர் கற்பில் ராமன். எவ்வித தீயப் பழக்கங்களும் அண்டாமல் நெருப்பாய் வாழ்ந்தவர். ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து உயிர் நீத்தவர்... "

இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து, " சென்கல்வராயா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு கொஞ்சம் பாரு..".

ராஜா
04-12-2006, 05:56 AM
டாக்டர் சர்தார் புது மருத்துவமனை திறந்தார்.. ஆனால் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த போது தச்சர், பெயிண்டர் எல்லோரையும் கடுமையாக திட்டவே.. தங்கள் கைவரிசையை காட்டிவிட்டார்கள்.

மூட்டு வைத்தியரின் அறைக்கதவு ஒரு கீல் இல்லாமல் இருந்தது.

காது டாக்டரின் அழைப்பு மணி வேலை செய்யவில்லை,,

சிறுநீரக மருத்துவர் அறையில் உள்ள டாய்லெட்டில் கதவே இல்லை..

கண் டாக்டர் அறைக்கதவில் கண்ணாடி இல்லை.. சாவித் துவாரமும் இல்லை..

முத்தாய்ப்பாக..டாக்டர் . சர்தார்.. psychotherapist என்பதை இவ்வாறு எழுதிச் சென்றுவிட்டனர்..

Dr. SARDAR...
Pscho The Rapist.

ராஜா
04-12-2006, 05:59 AM
ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்.." ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்.." என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்."

அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.

பாதிரியார் பெருமையுடன், "என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்" என்றார்.

அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!

ராஜா
04-12-2006, 06:02 AM
வேகமாக வாகனம் ஓட்டிய வழக்குக்காக ஒரு ஆசிரியர் நீதிமன்றம் வந்தார். மிகவும் தாமதமானதால் நடுவரை வேண்டினார்.

"அய்யா நான் ஒரு ஆசிரியன். பள்ளிக்கு மிகவும் தாமதமாவதால் தயவு செய்து என் வழக்கை முதலில் விசாரிக்க வேண்டுகிறேன்.."

மிகுந்த ஆர்வம் கொண்ட நடுவர், " நீங்கள் ஒரு ஆசிரியரா..!" எனக்கேட்டு, தன் நினைவுகளை பின்னோக்கி ஓடவிட்டார். பின் ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக, "நல்லது ஆசிரியரே.. கூண்டில் ஏறி நின்று, 500 முறை 'நான் வேகமாக வாகனம் செலுத்த மாட்டேன்' என எழுதிக்கொடுத்துவிட்டு நீங்கள் போகலாம்...!!".

ராஜா
04-12-2006, 06:04 AM
டேனியல் ; பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்..
1,2,3 கத்துத் தரப்போறேன்..

சின்னா ; எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!

டேனி ; வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?

சின்னா ; 4 சார்.

டேனி ; 8 க்கு முன் என்ன வரும்..?

சின்னா ; 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!

டேனி ; எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..

சின்னா ; ஜாக், குயின், கிங், ஆஸ்.. எங்கப்பா சொல்லி குடுத்துருக்காங்க...!!!!

ராஜா
04-12-2006, 06:06 AM
ஒரு ஆசிரியை புதிதாக அந்தப் பள்ளியில் சேர்ந்தாள்..

முதன் முதலாக வகுப்பு எடுக்க ஒரு விவகாரமான் பிரிவுக்கு போக நேர்ந்தது. மாணவர்களுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள எண்ணி....

ஆசி ; மாணவ மணிகளே.. உங்கள் பெயரையும் பொழுது போக்கையும் ஒவ்வொருவராகச் சொல்லுங்கள் பார்க்கலாம்..

மா..1 ; நான் சுரேஷ்.. என் வீட்டுக்கு அருகில் ஒரு நீச்சல் குளம் உள்ளது. அதில் பந்து வைத்துக்கொண்டு விளையாடுவது என் பொழுதுபோக்கு//

ஆசி ; உடலுக்கு ஆரோக்கியம்... நல்ல பழக்கம்.. அடுத்து..

மா..2 ; நான் ரமேஷ்.. பந்துடன் நீரில் விளையாடுவேன்..

ஆசீ ; பரவாயில்லையே.. சுரேஷ் போலவே உனக்கும் பந்து விளையாட்டு தான் பிடிக்குமா..? அடுத்து..

மா...3 ; நான் மகேஷ்.. தண்ணீரில் பந்தோடு விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..!

ஆசி ; என்னதான் நண்பர்கள் என்றாலும் எல்லொரும் ஒரே மாதிரியா..? சரி.. மாணவிகளே.. நீங்கள் சொல்லுங்கள்...

மாணவி 1 ; நான் என் வீட்டருகே உள்ள நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் குளிப்பேன்.

ஆசி ; ( வெறுத்துப் போனவளாக..) முதலில் உன் பெயரைச் சொல்..

மாணவி 1 ; மங்காத்தா மார்க்க"பந்து"...!!!

அறிஞர்
05-12-2006, 05:46 PM
முத்தாய்ப்பாக..டாக்டர் . சர்தார்.. psychotherapist என்பதை இவ்வாறு எழுதிச் சென்றுவிட்டனர்..

Dr. SARDAR...
Pscho The Rapist. இதுக்கு தான், சர்தார் ராஜாக்கிட்ட வந்து எப்படி நடந்துக்க வேண்டும் கத்துக்கனும்..

அருமை ராஜா

அறிஞர்
05-12-2006, 05:47 PM
தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!! பெண் என்றாலே வில்லங்கம் தான்.... என பாதிரியாருக்கு தெரியாதா??????????
:rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
05-12-2006, 05:49 PM
பின் ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக, "நல்லது ஆசிரியரே.. கூண்டில் ஏறி நின்று, 500 முறை 'நான் வேகமாக வாகனம் செலுத்த மாட்டேன்' என எழுதிக்கொடுத்துவிட்டு நீங்கள் போகலாம்...!!". ஆசியரை பழி வாங்க நடுவருக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்... :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
05-12-2006, 05:50 PM
டேனி ; எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..

சின்னா ; ஜாக், குயின், கிங், ஆஸ்.. எங்கப்பா சொல்லி குடுத்துருக்காங்க...!!!!
பிள்ளைங்களுக்கு எளிய முறையில கற்று கொடுத்திருக்கிறார் அப்பா.... சூதாட்டத்தில் சிறந்து வருவான் சின்னா?????????

அறிஞர்
05-12-2006, 05:52 PM
இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து, " சென்கல்வராயா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு கொஞ்சம் பாரு..".
நல்ல சந்தேகம் தான்....... ஒன்றாக வாழ்த்தவருக்கு தானே உண்மை தெரியும்.

ராஜா
06-12-2006, 03:44 PM
ஏது.. அறிஞரே... என்னுடைய நகைச்சுவையை உங்க பின்னூட்டம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும் போலருக்கே...!!!

ராஜா
06-12-2006, 03:58 PM
புதிதாக மணமான் கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவருடைய அலமாரியை திறந்து பார்ப்பதில்லை என்று.

30 ஆண்டுகள் உருண்டோடின..

ஒருநாள் மனைவி தன்னுடைய அலமாரியை சுத்தம் செய்யும் போது ஒரு மூலையில் 3 புளியங்கொட்டைகளும், சில்லறையாக 500 ரூபாய்க்கு நோட்டுகளும் இருந்தன.

ஆச்சர்யம் அடைந்த மனைவி தன் கணவனிடம் இது குறித்து கேட்டாள். கணவன் சொன்னான்..

" அன்பே என்னை மன்னித்துவிடு.. ஒவ்வொருமுறை திருட்டுத்தனமாக உன் அலமாரியைத் திறக்கும்போதும் ஒரு புளியங்கொட்டையை போட்டு வைப்பேன்.."

" பரவாயில்லை உயிரே..! 30 வருடங்களில் மூன்றே மூன்று புளியங்கொட்டைகள் தானே.. அது என்ன பத்தும் ஐம்பதுமாக ரூபாய் நோட்டுகள்..?"

" புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!"

????????????????????????????

ராஜா
06-12-2006, 04:02 PM
ஒரு ஊரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது.. பின்னர் ஊர் தலைவரும் கணக்கெடுப்பவரும் இவ்வாறு பேசிக்கொண்டனர்..

கணக்கு ; தலைவரே.. கணக்கு ஒத்து வரலையே.. 1000 பேர் இருக்காங்க..5 வருஷம் முந்தியும் இதே 1000 பேர்தான் இருந்தாங்க..!

தலை ; அப்ப சரிதான்..!

கணக்கு ; எப்படி சரியாகும்.? ஒரு குழந்தை கூடவா பொறக்கல்லே இவ்வளவு நாளா..?

தலை ; பொறந்துச்சு.. ஆனா ஒவ்வொரு குழந்தை பொறந்த உடனே ஒரு விடலைப் பய ஊரை விட்டு ஓடிப் போயிடுவான்...!!!

ராஜா
06-12-2006, 04:02 PM
ஒரு நடிகை..

18 வயசுக்காரியா இருந்தா கால் பந்து மாதிரி.. 22 பய தொரத்திக்கிட்டு திரிவான்..

24 வயசாயிட்டா... கூடை பந்து மாதிரி... 10 பய இழுத்துக்கிட்டு திரிவான்..

30 வயசாயிட்டா.. கோல்ஃப் பந்து மாதிரி.. ஒரே ஒரு ஆள்தான் வச்சு விளையாடிட்டு இருப்பாரு..

35 வயசுக்கு மேலே ஆயிடுச்சுன்னு வச்சுக்கங்க... டென்னிஸ் பந்து மாதிரி.. இவன் அவன்கிட்டே தள்ளி விடுவான்.. அவன் இவன்கிட்டே அடிச்சு விரட்டுவான்..!!

ராஜா
06-12-2006, 04:03 PM
புஷ், மன் மோகன் சிங் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்..

சிங் ; அடுத்த வருடம் சந்திரனுக்கு ஆள் அனுப்பப் போகிறோம்..

புஷ் ; நாங்கள் ஏற்கனவே அனுப்பி விட்டோம்..

சிங் ; நாங்கள் 100 பேரை அனுப்பப் போகிறோம்..

புஷ் ; அடேயப்பா.. அவ்வ்ளவு பேரா..? யார்..யார்..?

சிங் ; பிற்பட்டோர் 27 பேர்.
மிக பிற்பட்டோர்---17 பேர்
பெண்கள் ----------33 பேர்.
விளையாட்டு வீரர்-- 2 பேர்.
போர் விதவை------ 1 பேர்
சுனாமி பாதிப்பு------ 5 பேர்
பயங்கரவாத பாதிப்பு 5 பேர்
ஊனமுற்றோர்------- 5 பேர்.
அரசியல்வாதிகள்-----4 பேர்.. இடம் இருந்தால்..
விண்வெளி வீரர்-----1 பேர்.

ராஜா
06-12-2006, 04:04 PM
மஹான் சீடரிடம்..

மகனே... (?) எந்த தேவியின் பிரசாதம் மகிமை வாய்ந்தது தெரியுமா..?

தெரியும் குருவே... ராப்ரி "தேவியின்" லாலு "பிரசாதம்...!".

ராஜா
06-12-2006, 04:06 PM
ஆசிரியர் ; கவலை , மனக்குழப்பம், போனால் போகட்டும் என்ற மன நிலை.. இவை மூன்றுக்கும் விளக்கம் சொல்ல முடியுமா..?

சின்னா ; முடியும் சார்..

உங்க மனைவியை பிரசவத்துக்காக மருத்துவ மனையில் சேர்த்திருந்தீங்கன்னா நல்லபடியா ஆகணுமேன்னு கவலையா இருப்பீங்க..

காதலியை சேர்த்திருந்தீங்கன்னா நாமதானான்னு மனக்குழப்பத்திலே இருப்பீங்க.

ரெண்டு பேரையும் ஒரே நேரத்திலே ஒரே மருத்துவ மனையிலே சேர்க்கறாப்பல ஆயிருச்சுன்னா, தலைக்கு மேல் ஜான் என்ன.. முழம் என்ன.. போனால் போகட்டும் போடாங்கற முடிவுக்கு வந்துடுவீங்க..!!!

ராஜா
06-12-2006, 04:07 PM
ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...

மாணவன்: சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்:என்ன சந்தேகம்?

மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?

அறிஞர்
06-12-2006, 06:09 PM
ஏது.. அறிஞரே... என்னுடைய நகைச்சுவையை உங்க பின்னூட்டம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும் போலருக்கே...!!!
நினைச்சதை சொல்லிருனும் இல்லையா... என்ன நம்ம மக்க யாரும் இதை படிக்கலையா...

எனக்கு உங்க கையொப்பத்தை (வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை)பார்த்து ஒரு சந்தேகம் வருது..... நீங்க புத்திசாலியா........ இல்லையான்னு. :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
06-12-2006, 06:12 PM
" புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!"

????????????????????????????
அப்பாவி மனைவி.....

புளியங்கொட்டை வியாபாரம் பண்ணினது நீங்க தானா ராஜா....:confused: :confused: :confused: :confused: :confused:

மன்மதன்
07-12-2006, 11:45 AM
படித்தேன் .. ரசித்தேன். ஒரு சில ஏற்கனவே படித்திருந்தாலும் மத்ததெல்லாம் புதுசு ராஜா புதுசு. கலக்குங்க..

அறிஞர்
08-12-2006, 02:58 PM
தலை ; பொறந்துச்சு.. ஆனா ஒவ்வொரு குழந்தை பொறந்த உடனே ஒரு விடலைப் பய ஊரை விட்டு ஓடிப் போயிடுவான்...!!!
நல்ல ஊருப்பா.. விடலை பையன்கள் குறைந்தால் கிழடுகளுக்கு கொண்டாட்டம் தான்.:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
08-12-2006, 02:59 PM
ஒரு நடிகை.. ..!!
உண்மை தத்துவமா.... ஹாலிவுட்டில் நடிகை உள்ளே வரும் வயதே.... அதிகம்... :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
08-12-2006, 03:00 PM
சிங் ; பிற்பட்டோர் 27 பேர்.
மிக பிற்பட்டோர்---17 பேர்
பெண்கள் ----------33 பேர்.
விளையாட்டு வீரர்-- 2 பேர்.
போர் விதவை------ 1 பேர்
சுனாமி பாதிப்பு------ 5 பேர்
பயங்கரவாத பாதிப்பு 5 பேர்
ஊனமுற்றோர்------- 5 பேர்.
அரசியல்வாதிகள்-----4 பேர்.. இடம் இருந்தால்..
விண்வெளி வீரர்-----1 பேர்.
ஜனநாயக நாட்டின் பொறுப்பான பிரதமர்....

அறிஞர்
08-12-2006, 03:01 PM
தெரியும் குருவே... ராப்ரி "தேவியின்" லாலு "பிரசாதம்...!".
உண்மையில் இரயில்வே துறைக்கு லாலு வரபிரசாதம் தான்.. :eek: :eek: :eek:

அறிஞர்
08-12-2006, 03:03 PM
ரெண்டு பேரையும் ஒரே நேரத்திலே ஒரே மருத்துவ மனையிலே சேர்க்கறாப்பல ஆயிருச்சுன்னா, தலைக்கு மேல் ஜான் என்ன.. முழம் என்ன.. போனால் போகட்டும் போடாங்கற முடிவுக்கு வந்துடுவீங்க..!!!
ஆஹா அனுபவஸ்தர்.. ராஜா. பேசுகிறார்... வந்து கேளுங்கப்பா... உபயோகமாக இருக்கும்...

அறிஞர்
08-12-2006, 03:05 PM
மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....? உண்மையான சந்தேகம்.. தான்... :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

ராஜா
13-12-2006, 04:06 AM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.சாதா'ஸ் துணிக்கடை.

உலகிலேயே பெரிய துணிக்கடையாக உருவெடுக்க இருப்பதால்.. லாப நோக்கம் இல்லாமல் அடக்க விலையிலும் ஐம்பது சதவீத தள்ளுபடி. மக்கள் கூட்டம் அலைமோதும் அதிசயம். தன் திருமணத்துக்கும், எதிர் காலப் பேரப் பிள்ளைகளுக்கும் இப்போதே துணி வாங்கும் புத்திசாலித்தனம். ஊரெங்கும் இதே பேச்சு.. சாதாஸ் துணி சட்டித்துணி ஆச்சு..!!
__________________________________________________________________

சாதாஸ் துணிக்கடை பங்கு வெளியீடு துவக்கம்.. பங்குதாரர்களுக்கு அதிக பட்ச டிவிடெண்ட் உத்தரவாதம்.. உடனே முந்துங்கள்...!
__________________________________________________________________

ராஜா
13-12-2006, 04:09 AM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.நாய்கள் சிறப்பு விற்பனை..

மிகக் குறைந்த விலையில் வீட்டு நாய்கள்... இரவில் குரைத்து உங்கள் தூக்கத்தை கெடுக்காது.. நீங்கள் காலையில் எழுப்பும் வரை தூங்கக் கூடியது..

எந்த உணவு கொடுத்தாலும் தின்னும்.. குழந்தைகள் என்றால் கொள்ளை விருப்பம்..

காட்டு ராணி வீட்டுப் பிராணி விற்பனை நிலையம்.
____________________________________________________

மாமியாரைக் கடிக்க பயிற்சி பெற்ற நாய்கள் விற்பனை முன்பதிவு முடிந்து விட்டது

ராஜா
13-12-2006, 04:10 AM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.

அக்கப்போர் கார்ஸ். எங்களிடம் வாங்கும் கார்களுக்கு இலவசமாக கயிறு தருகிறோம்.
ஒருமுறை எங்களிடம் கார் வாங்கிப் பாருங்கள்.. அப்புறம் நீங்கள் வேறு "எங்குமே" போக மாட்டீர்கள்..!!!

புத்தாண்டு சிறப்பு சலுகை ; 1 முதல் 3 தேதிகளில் வாங்கும் கார்களுக்கு ஆயுட்கால தள்ளி விடும் சேவை இலவசம்.
_________________________________________________________

வேறு எங்கும் சென்று ஏமாறாதீர்கள்.. முதலில் எங்களிடம் வாருங்கள்..!!

ராஜா
13-12-2006, 04:12 AM
புத்தாண்டு சிறப்பு சலுகை..வாய்ப்பை நழுவ விடாதீர்.

கம்சன் குழந்தைகள் பராமரிப்பு நிலையம்.

அலுவலகம் செல்லும் தாய்மார்களே..! ஊர் சுற்றும் தந்தைமார்களே..!

உங்களுக்கு ஒரு நற்செய்தி. உங்கள் குழந்தைகளை காலை முதல் மாலை வரை நாங்கள் கண்ணும் கடுப்புமாய் கவனித்துக் கொள்கிறோம்..

அன்பான ஆயாக்கள்.. உடனடி ஆம்புலன்ஸ் வசதி.!!!

குழந்தைகள் விளையாட ஏற்பாடு.. கார்ட்டூன் சீட்டுக் கட்டுகள்..!!!

சென்னை குப்பத்து பாஷை இலவசமாக கற்றுத் தருகிறோம்..!
___________________________________________________________
முதல் 25 குழந்தைகளுக்கு லாக்-அப்பில் காவலர்களை சமாளிக்கும் வித்தை போதிக்கப்படுகிறது.

ராஜா
13-12-2006, 04:13 AM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.ரூ.

217. 25 க்கு 27 இலவச பொருள்கள்..

1. பலாப்பழ தோலில் பஜ்ஜி தயாரிக்கும் இயந்திரம்.

2. பச்சை மிளகாய் அல்வா பாக்கெட்.

3. மாமியார் தொட்டால் ஷாக் அடிக்கும் ரேடியோ.

4. இரண்டு இறக்கை விசிறி..( பனை தொழிலாளர்கள் தயாரிப்பு.)

5. இரு சக்கர தள்ளு வண்டி..( பனை தொழிலாளர்கள் தயாரிப்பு.)

6. ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக் பயிற்சி முறை.( பழம் உள்ளடங்கியது)

7. இருமும் தொல்லையையும், சளி பிரச்னையையும் உண்டாக்கும் இடத்தை இறுக்கி பிடிக்கும் மூன்று முழ உத்தர தொங்கி.

மற்றும் 20 நாய் விரட்டிகள்.
__________________________________________________________
இந்த விளம்பரத்தை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு கீழ்ப்பாக்கத்தில் இலவச அனுமதி கூப்பன்.

வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு வல்லவன் பட டிக்கட்டும், பழைய வாடிக்கையாளர்களுக்கு தர்மபுரி பட டிக்கட்டும் இலவசம்.

ராஜா
13-12-2006, 04:15 AM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.

அமீனா அபார்ட்மெண்ட்ஸ்..

மாதம் 1234 வீதம் 4321 மாதங்கள் செலுத்தி வாருங்கள்..!

சென்னைக்கு மிக அருகில் சீட்டட் வீட்டடி மனைகளை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்..

மனையின் சிறப்பம்சங்கள்..

கூப்பிடு தூரத்தில் கோவையும் திரும்பி பார்த்தால் திருச்சியும் மிக அருகில் அமையப்பெற்ற மனைகள்.

10 நிமிட ஹெலிகாப்டர் பயண தூரத்தில் பல்லாவரம்.

123456789 அடி ஆழத்தில் அருமையான அமெரிக்க குடிநீர்..

மனை தொடர்பான விவாதங்களுக்கும் சந்தேகங்களுக்கும் அருகில் உள்ள மதுரை உயர்நீதி மன்றக் கிளையிலேயே தீர்வு காண வசதி.
--------------------------------------------------------------------------
, அபூர்வ ஊர்வன வகைகள் பண்ணை, படகு குழாம், நீர் விளையாட்டுகள்..முதலிய வசதிகள் வருடத்துக்கு 2 மாதம் இலவசம்.

ராஜா
13-12-2006, 04:18 AM
புத்தாண்டு சிறப்பு திரைப்படம்..காண (த)வராதீர்கள்..!

லிட்டில் 'டூப்'பர் ஸ்டார் வம்பு பாடி, ஆடி, ஓடி, இயக்கி, மயக்கி, கலக்கி, நசுக்கி நடிக்கும்...

அய்யோ சாமி பிக்சர்ஸ்.. வழங்கும்..


தப்பு இசை தென்றல் தலையிடி இசை ஒப்பாரியில்..

தமிழின் முதல் 4டி திரைப்படம்..

"உள்ளே வந்தா உதைப்பேண்டா" (anti dts).

பயங்கரமான பாடல்கள்.. கண்ணுக்கினிய வசனங்கள்.. கண்ணீர் வரவழைக்கும் காமெடி.. மனதைத் தொடும் வில்லத்தனம்..

_____________________________________________

டாய்லெட்டில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவசர நிலையை அனுசரித்து கதவு திறந்து விடப்படும்.
படத்தின் இடையில் எக்காரணத்தைக் கொண்டும் தியேட்டரை விட்டு ஓட அனுமதி கிடையாது.

ராஜா
13-12-2006, 04:21 AM
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் .

"அய்யோ" தொலைக்காட்சி வழங்கும் அசத்தல் நிகழ்ச்சிகள்..

காலை 6.00 மங்கள இசை.
கொலைகாரன் பேட்டை குணக்கொடி குழுவினர் நாதஸ்வரம்..

காலை 7.00 சிறப்பு உதைக்கும் உத்தரப் பிரதேசம்..
விருந்தினர்.. முத்தமிழ் மொத்துநர் (மீசை) முளைக்காத சிங்கம் மாதவம்.

காலை 9.00

வெட்டி மன்றம்..நடுவர் திரு.சோளமா கேப்பையா

தலைப்பு வம்பு காதல் முறிவு..

நம்புபவர்கள் நாங்கள்.. அணித்தலைவர் ..முனைவர் சொனைகோல் பாண்டியன்
மற்றும் புளுகர் பொன்னையா, அழுகை அனிதா.

வெம்புபவர்கள் நாங்கள்அணித்தலைவர் அறுவை அரசர் அரைப் பட்டினி தாசன்.
மற்றும் கொலைப் பட்டினி குணா, முறைவாசல் முனியம்மா.

11.00 மணி.

சீலம் மிகு செயலட்சுமி..

போலிஸ் புகழ் செயலட்சுமியின் புலம்பல்கள்..

பகல் 3.00

கடலை கன்னியப்பனின் ஊமை கானா..

மாலை 5.00

உலகத் தொலைக்காட்சிகளில் ஒன்பதாவது முறையாக.. திரைக்கு வந்து இரண்டே ரீல்கள் ஒடி டப்பா ஆன சூப்பர் ஹிட் திரைப்படம்..

டண்டான் டமுக்குடா..

ராஜா
13-12-2006, 04:22 AM
புத்தாண்டுக்கு முதல்நாள்.. மனைவி சொன்னாள்..

என்னங்க.. நீங்க புத்தாண்டுக்கு வைர நெக்லேஸ் வாங்கி தர்ற மாதிரி கனவு கண்டேன்.. அதுக்கு என்னங்க அர்த்தம்..

அப்படியா.. நாளை வரை பொறு.. தெரிந்து கொள்வாய்..!

மறுநாள் ஒரு பரிசுப் பொட்டலத்துடன் கணவன் வீட்டுக்கு வந்தான்.. மனைவி எந்நாளும் போல் இல்லாமல் வாசலுக்கு வந்து வரவேற்று உபசரித்தாள்.. புரிந்து கொண்ட கணவன் புன்னகைத்தான்.. பொட்டலத்தை தந்தான்.. மனைவி மகிழ்வுடன் வாங்கி மட்டற்ற ஆவலுடன் பிரிக்க.. உள்ளே இருந்தது...

மணிமேகலை பிரசுரத்தின் ' கனவுகளின் அர்த்தங்கள்' என்னும் நூல்.

arun
13-12-2006, 05:23 AM
எப்படி ராஜா இதெல்லாம் ? சும்மா கலக்கோ கலக்குன்னு கலக்குறிங்க?

தொடர்ந்து இது போல படைப்புகளை படைக்க எனது வாழ்த்துக்கள்

அறிஞர்
13-12-2006, 03:57 PM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.சாதா'ஸ் துணிக்கடை.

__________________________________________________________________
திருச்சிக்கார ஆசாமி.. லொள்ளு தாங்கலையே...:eek: :eek:

அறிஞர்
13-12-2006, 04:01 PM
முதல் 25 குழந்தைகளுக்கு லாக்-அப்பில் காவலர்களை சமாளிக்கும் வித்தை போதிக்கப்படுகிறது. ரவுடி ரங்கா குழந்தை முதல் எல்லாரும் இங்கே தஞ்சம்.. :rolleyes: :rolleyes:

அறிஞர்
13-12-2006, 04:11 PM
மணிமேகலை பிரசுரத்தின் ' கனவுகளின் அர்த்தங்கள்' என்னும் நூல்.
ம்ம்ம்.... மனைவியின் கனவு என்றுதான் நினைவாகுமோ :rolleyes: :rolleyes:

ஓவியா
13-12-2006, 06:04 PM
அசத்தல்

நன்றி அண்ணா

ராஜா
20-12-2006, 02:17 PM
அது ஒரு விவாக ரத்து வழக்கு. மகள் 18 வயது வரை தாயிடமே வளரவேண்டும் என்றும், அதுவரை மகளின் பராமரிப்புக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கணவன் வழங்கி வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி 18 வயது நிறைவில் கடைசி தொகையை மகளிடம் கொடுத்த அப்பா சொன்னார்..

" கலா.. .. இதை உன் அம்மாவிடம் கொடு.. இதுதான் நான் தரும் கடைசி தொகை என்று நான் சொன்னதாக சொல்.. பின்னர் அவள் முகம் போகும் போக்கை பார்.. ஒரெ காமெடி்யா இருக்கும்..!"

மகள் அப்படியே செய்தாள்.. அப்பா சொன்னதையும் சொன்னாள்..

அம்மா எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் பதிலளித்தாள்...

"கலா.. அவர்ட்ட சொல்லு.. 18 வயசு வரைக்கும், தனக்கு பொறக்காத ஒரு பெண்ணுக்கு பராமரிப்பு தொகை கொடுத்ததுக்கு நான் நன்றி சொன்னேன்னு.. அப்புறம் அவர் முகம் போகும் போக்கைப் பார்.. ஒரே டிராஜடியா இருக்கும்..!"

ராஜா
20-12-2006, 02:18 PM
ஒரு ஆள் முரட்டு நாய் ஒன்ன அழைச்சுக்கிட்டு வாக்கிங் போனான்.. நாய் அத்துக்கிட்டு போனதோட இல்லாம ஒரு பொம்பளய கடிச்சு வேற வச்சுடிச்சு.. அவ தன் புருஷனை இழுத்துக்கிட்டு வந்துட்டா.. ஓங்கு தாங்கா பெரிய மீசையோட அவனைப் பாத்ததும் நாய்காரனுக்கு பேதி புடுங்கிகிச்சு.. பணத்தைக் கொடுத்து அசமடக்கிடலாம்ன்னு மெதுவா மீசைக்காரனை தனியா அழைச்சுட்டுப் போனான்..

" 1000 ரூபாய்லே இந்த விசயத்தை சமாதானமா முடிச்சுக்கலாம்ன்னு பாக்கறேன்.. நீங்க என்ன சொல்றீங்க..?"

மீசைக்காரன் நாய்க்காரனை ஏற இறங்க பார்த்துட்டு, பையில் இருந்து 1000 ரூபாயை எடுத்து கொடுத்துட்டு சொன்னான்..

" அடுத்த வாரமும் உன் நாயை அழைச்சுட்டு வா.. இன்னொரு 1000 ரூபாய் தரேன்.. என் மாமியார் வராங்க..!!!"

ராஜா
20-12-2006, 02:22 PM
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கிடையே பெருந்தகராறு மூண்டது. கணவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் காவல்துறையும், அவர்களால் அமைதிப்படுத்த இயலாததால் துணைநிலை ராணுவமும் அழைக்கப்பட்டும் பலனில்லை. பின்னர் விவகாரம் நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்து நீதிபதியே அங்கு நேரில் வருகை தந்தார்.. ஒவ்வொரு பெண்ணும் மற்றவர்களை குற்றம்சாட்டி கூச்சலிட்டுக்கொண்டிருக்க, நீதிபதி உரத்த குரலில் அறிவித்தார்...

அம்மணிகளே.. அமைதி.. உங்கள் வழக்கை விசாரிக்கவே நான் வந்திருக்கிறேன்.. ஒவ்வொருவராக உங்கள் தரப்பு நியாயத்தை கூறுங்கள்..! முதலில் இங்குள்ளவரில் யார் வயதில் மூத்தவரோ அவர் தன் தரப்பை கூறட்டும்...!!"

அவசரமாக அனைத்து குடியிருப்பு கதவுகளும் அடைக்கப்பட, போதிய ஆதாரம் இல்லாததால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது...!

ராஜா
20-12-2006, 02:23 PM
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு.. எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!!

ராஜா
20-12-2006, 02:29 PM
ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.

கணவன்: என்ன பிரச்சனை சார்?

போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..

கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.
மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...

(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..

கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...

மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..

(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..

கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.

மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...

கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..

போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?

மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..

போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?

மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!

போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?

மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!

போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?

மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!

கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?

மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!

meera
21-12-2006, 07:07 AM
ஹா ஹா ஹா :D :D :D :D

mukilan
21-12-2006, 07:12 AM
நல்ல வேளை எனக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை. இல்லைனா சீட் பெல்ட் போடலைனு டிக்கெட் கொடுத்த அக்கா வேற என்ன என்னத்துக்கெல்லாம் டிக்கெட் கொடுத்திருப்பாங்களோ! நல்ல ரவுசுதான் ராஜா! சத்தாய்ச்சிட்டீங்க போங்க!

மதி
21-12-2006, 07:13 AM
அடடா..
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சும்மாவா சொன்னாங்க..?

நம்பிகோபாலன்
21-12-2006, 04:04 PM
என்னை மறந்து சிரிக்கிரேன்....அருமை

ஆதவா
21-12-2006, 04:21 PM
ஏற்கனவே ராஜா அண்ணன்கிட்ட 1000 ரூபாய் கேட்டேன்... இப்போ திரும்பவும் கேட்க வைக்கிறாரே!!!! அண்ணா!!!! வவுத்து வலி தாங்க முடியலீங்ணா!!!!

அறிஞர்
21-12-2006, 04:37 PM
ராஜா பொறுமையா படித்து தனித்தனியாக கருத்து கொடுக்க ஆசை....
----
பலரை சிரிக்க வைக்க இன்னும் கொடுங்கள்..

மன்மதன்
21-12-2006, 08:18 PM
எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற உங்களுக்கு ஏதாவது கொடுத்தே தீரணும் ராஜா .. ஏம்மா மீரா.. அந்த 43ம் நம்பர் ஜாடியை எடு :D :D

gayathri.jagannathan
22-12-2006, 06:45 AM
ராஜா... எப்படிப்பா இந்த மாதிரி நகைச்சுவையை அள்ளி விடறீங்க? கலக்கிட்டிங்க.....ரொம்ப நல்லாயிருந்தது.... அதுவம் அந்த டாக்டர் 43ம் நம்பர் ஜாடி.... கலக்கல்.....அட்டகாசம்....

ராஜா
24-12-2006, 09:23 AM
ரோட்டுல ரெண்டுபேரு கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க.. பக்கத்துலே ஒரு சின்னப் பையன் நின்னுக்கிட்டு "அப்பா... அப்பா.." ன்னு அழுதுக்கிட்டு இருந்தான்.. அந்த வழியா போன ஒருத்தர் அந்தப் பையனை என்னவென்று விசாரித்தார்..
அப்போதும் அப்பா... அப்பா.. என்று அழுதவனை இதிலே யாருடா உங்கப்பா..? என்று கேட்டார்.. பையன் சொன்னான்..

"அதை முடிவு பண்ணத்தான் ரெண்டுபேரும் அடிச்சுக்கறாங்க...!"

ராஜா
24-12-2006, 09:27 AM
ஒருவன் மதுக்கடையில் மூக்கு முட்ட குடித்தான்.. பின்னர் வீட்டுக்கு திரும்ப நினைத்தபோது அவனால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை..குப்புற விழுந்து கிடந்தவன், "சே.. குடித்தாலே இப்படித்தான்.. இனிமேல் குடிக்கக்கூடாது..இப்போது மற்றவர்கள் கேலி செய்யுமுன் எவ்வாறாவது சுதாரித்து எழுந்து வீட்டுக்கு போகவேண்டும்.." என எண்ணியவாறே மீண்டும் எழ முயற்சித்த போது, மறுபடியும் தவறி சேற்றில் விழுந்து விட்டான். முகமெல்லாம் சேறு.. "சரி..இனி தவழ்ந்தாவது வீட்டுக்கு செல்வேன்..இனி விழுந்து மற்றவர்களின் கேலிக்கு இலக்காக மாட்டேன்.." என்று முடிவு செய்து இரவு முழுவதும் தவழ்ந்து வீட்டுக்கு வந்தவன் சோர்வு மிகுதியால் வாசல் படியிலேயே தூங்கி விட்டான்.

காலையில் வாசல் தெளிக்க கதவைத்திறந்த மனைவி அவன் முகத்திலும் தெளித்து எழுப்பினாள்.. கணவன் அசட்டுச் சிரிப்புடன் கண் விழிக்க.. மனைவி கேட்டாள்..

" மறுபடியும் குடிக்க போயிட்டீங்களா..?"

"அட.. எப்படி தெரியும்..?"

" சக்கர நாற்காலியை விட்டுட்டு வந்துருக்கீங்களே.. மதுக்கடையிலே தானே இருக்கு..?

ராஜா
24-12-2006, 09:32 AM
ஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தாள்.. மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்கு பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தாள்.. (உங்க கலவரம் எனக்கு புரியுது மக்கா.. இதிலே அசைவமும் இல்லே... அந்தப் பய சின்னாவும் இல்லே.. நிம்மதியா தொடருங்கப்பு.. ) சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவது ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்..

" கணினி ( என் சந்தேகம் கணிணியா அல்லது கணினியா..?) ஆணா... பெண்ணா..?

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்..

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ..

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க..

அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

ராஜா
24-12-2006, 09:42 AM
சம்பவம் ஒன்று.. விளைவுகள் இரண்டு..
___________________________________________________________________
ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.

உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..
"தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்.."
____________________________________________________________________
ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா...சோம்பேறி.

அவராலே செய்யமுடியலேன்னா....." நேரம் இல்லே.."
____________________________________________________________________
எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா..." முட்டாள்தனம்"

அவர் பண்ணினா.." அவரும் மனுஷந்தானே..கடவுளா..?"
--------------------------------------------------------------------
நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்"

அவர் செஞ்சா.." முன்னுதாரணம்"
--------------------------------------------------------------------
நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா.."பிடிவாதம்"

அவர் அப்படி நெனைச்சா..." கொள்கையில் உறுதி.."
--------------------------------------------------------------------
நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா.." காக்கா பிடிக்கறீங்க."

அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா.." ஒத்துழைப்பு..பணிவு"
--------------------------------------------------------------------
நீங்க அலுவலக் நேரத்திலே வெளியே இருந்தா.." ஊர் சுத்தறீங்க"

அவர் இருந்தா.. " பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கறார்.."
--------------------------------------------------------------------
நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவு போட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க"

அவர் லீவு போட்டா..ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்.."

ராஜா
24-12-2006, 11:50 AM
[b]

சின்னாவுக்கு திடீரென்று ஒரு சக்தி கிடைத்தது.. அதை வைத்து எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்தான்..

ஒரு நாள் பூனை அவனை பிராண்டிவிட்டது.. அன்று இரவு படுக்கப் போகும்போது இறைவனை இவ்வாறு வேண்டினான்..

" கடவுளே .. அன்னையைக் காப்பாற்று.. தந்தையை காப்பாற்று.. என் நாய்க்குட்டியைக் காப்பாற்று.. பூனை எக்கேடொ கெட்டுப் போகட்டும்...!"

மறுநாள் கொல்லைப் புறத்தில் பூனை செத்துக் கிடந்தது.

இன்னொரு நாள் நாய் சின்னாவின் நண்பனைக் கடித்து விட்டது. சின்னா இவ்வாறு வேண்டினான்..

" கடவுளே .. அன்னையைக் காப்பாற்று.. தந்தையை காப்பாற்று.. என் நாய்க்குட்டி எக்கேடொ கெட்டுப் போகட்டும்...!"

மறுநாள் நீங்கள் நினைப்பது போலவே நாய் "பணால்...!"

கொஞ்ச காலத்துக்கு எல்லாம் நல்லபடியாகவே போய்க் கொண்டிருந்தது. காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் சின்னாவை அப்பா சுளுக்கு எடுத்துவிட்டார்..

சின்னா இரவு வேண்டுதலில் தன் சக்தியைக் காட்ட, அப்பாவை திகில் ஆட்டிப் படைக்கத் தொடங்கியது.. இரவெல்லாம் தூங்கவில்லை.. வீட்டில் இருந்த தண்ணீரையெல்லாம் குடித்தும் பதற்றம் குறையவே இல்லை.. அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.." உங்களுக்கு ஒண்ணும் ஆகாது.. தூங்குங்க.." ஊஹூம்.. அவர் பைத்தியம் பிடித்தது போல திரிந்துகொண்டுதான் இருந்தார் இரவெல்லாம்..

இரக்கமற்ற அந்த இரவு ஒருவழியாக கழிந்தது.பொழுது புலர்ந்தது..என்ன ஆச்சர்யம்.. அப்பாவுக்கு ஒன்றும் ஆகவில்லை.. பகல் வெளிச்சம் மேலும் தென்பைத் தர, அப்பா கொல்லைக் கதவைத் திறந்து கிணற்றடிக்கு சென்றபோது...
பக்கத்து வீட்டுக்காரன் காம்பவுண்டு சுவரில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தான்..!

( இப்போ என்னை நல்லா திட்டியிருப்பீங்களே... போகட்டும்.. கொஞ்சம் கோபிச்சுக்காம இந்த ஜோக்கை இன்னொரு முறை படியுங்க.. போன தடவை புரியாத ஒரு விஷயம் இப்போ புரியும்..!).

ராஜா
01-01-2007, 11:42 AM
உளுந்தூர் பேட்டை மோட்டல்.. ஒரு கிழட்டு லாரி ஓட்டி சாப்பிட்டுக்கிட்டு இருந்தார்.. அப்போ 4 மோட்டார் சைக்கிள்ல ஒரு கும்பல் எங்கேயோ போயிட்டு வந்தானுங்க.. மோட்டலுக்குள்ள நுழைஞ்சவனுங்களுக்கு கிழ ட்ரைவரைப் பார்த்ததும் குஷி கெளம்பிடுச்சு..

ஒருத்தன் வழுக்கை தலையிலே ஒரு தட்டு தட்டுனான்..
இன்னொருத்தன் தான் குடிச்சுட்டு இருந்த சிகரெட் சாம்பலை ட்ரைவர் தண்ணி டம்ளர்லே ஒரு தட்டு தட்டுனான்..
மற்றொருவன் அவர் உக்காந்துருந்த நாற்காலியை ஒரு தட்டு தட்டுனான்..
பிறிதொருவன் அவர் சாப்பிட்டுட்டு இருந்த தட்டை எடுத்து அவர் தலையிலேயே தட்டிக் கவிழ்த்தான்..

ட்ரைவர் ஒண்ணுமே பேசல.. காசக் குடுத்துட்டு கிளம்பிட்டாரூ.

இந்த பசங்கள்ள ஒருத்தன் கல்லாவுல உக்காந்துருந்த பொண்ணுக்கிட்ட போயி சொன்னான்..

என்னா ஆளு இவன்.. எவ்வளவு அட்டகாசம் பண்ணினோம்..? தட்டி கேட்கவே இல்லையே..?
சரியான ஆம்பள இல்ல போலருக்கு.. ஏன் பாப்பா..?

சரியான ஆம்பளை இல்லையோ என்னமோ தெரியலே.. ஆனா சரியான ட்ரைவர் இல்ல போலருக்கு.. இப்பதான் இங்கே நின்னுட்டு இருந்த 4 புது மோட்டார் சைக்கிள தட்டி எறிஞ்சுட்டு போனார்..

நல்லா இருக்கா..? எங்க தட்டுங்க கையை..!

ராஜா
01-01-2007, 11:44 AM
கடவுள் கழுதையைப் படைத்தார்..

நீ பொதி சுமப்பாய்.. காகிதத்தால் பிழைப்பாய்.. உன் ஆயுள் 30 ஆண்டு.

கழுதை அப்படியானால் 20 ஆண்டே போதும் என்றது.

கடவுள் நாயைப் படைத்தார்..

வீட்டைக் காப்பாய்.. மனிதன் போடும் மிச்சத்தை தின்பாய்.. உன் ஆயுள் 30 ஆண்டு.

என் நாய்ப் பிழைப்புக்கு 15 ஆண்டே அதிகம் என்றது நாய்.

கடவுள் குரங்கைப் படைத்தார்..

நீ அங்கும் இங்கும் தாவுவாய்.. சேட்டைகள் செய்வாய்.. உனக்கு ஆயுள் 20 ஆண்டு.

குரங்கு 10 ஆண்டே போதும் என்றது.

கடவுள் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு மனிதனைப் படைத்தார்..

நீ புத்திசாலியாக இருப்பாய்.. அனைத்து மிருகங்களையும் அடக்கி ஆள்வாய்.. உனக்கு 20 ஆண்டுகள் ஆயுள்..

மனிதன் சொன்னான்.. எனக்கு 20 ஆண்டு போதாது.. கழுதை வேண்டாமென்ற 30 ஆண்டுகளையும், நாய் மறுத்த 15 ஆண்டுகளையும், குரங்கு ஒதுக்கிய 10 ஆண்டுகளையும் எனக்குத் தாருங்கள்..

கடவுள் மனசுக்குள் சிரித்தவாறே அப்படியே ஆகட்டும் என்றார்..

அதனால்தானோ என்னவோ.. மனிதனாக முதல் 20 ஆண்டுகள் வாழ்கிறான்..

பின்னர் குடும்பத்துக்காக பொதி சுமக்கிறான்.. அலுவலகக் காகிதத்தால் பிழைப்பு நடத்துகிறான்..

அப்புறம் ஈட்டிய செல்வங்களைக் காக்க நாய் போல சுற்றி சுற்றி வருகிறான்.. எல்லாரிடமும் வள்'ளென்று விழுகிறான்.. டாக்டர் சாப்பிட அனுமதிக்கிற மிச்ச மீதியை தின்று காலத்தை ஓட்டுகிறான்..

கடைசியாக வாழ இடம் கிடைக்காமல் மகன் வீடு, மகள் வீடு, உறவினர் வீடு, என்று தாவிக்கொண்டே இருக்கிறான்.. பேரன் பேத்திகளுக்கு விளையாட்டு காட்டி சிரிக்க வைக்கிறான்..


இதற்குத் தான் ஆசைப்பட்டாயா மனிதகுமாரா..?

ராஜா
01-01-2007, 11:46 AM
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

ராஜா
01-01-2007, 11:48 AM
சின்னாவின் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சின்னா ஒருநாள் தன் வளர்ப்புப் பிராணியான குரங்கு குட்டி ஒன்றை அழைத்து வந்தான்.. அது செய்த அட்டகாசம் சொல்லி மாளாது.. தாவுவதும் குதிப்பதும் கண்டதையும் எடுத்து விழுங்குவதுமாக அட்டூழியம் செய்தது. திடீரென்று ஒரு கிரிக்கெட் பந்தை எடுத்து விழுங்கிவிட்டது. பையன்கள் ஆரவாரம் செய்ய டேனி வந்து விபரம் அறிந்து கத்தினார்..

"டேய் சின்னா.. உன் குரங்கை அடக்கி வைக்கப் போகிறாயா இல்லையா..?

பூப்பந்து ஆடிக்கொண்டு இருந்த சின்னா உடன் வந்து குரங்கை அழைத்து சென்றுவிட்டான்.. இருந்தாலும் பையன்கள் எல்லாம் முழு கிரிக்கெட் பந்தை விழுங்கிய குரங்கின் சாமர்த்தியத்தை ஆச்சரியமாக டேனியிடம் சொல்லி வெறுப்பேற்றினர்..

விளையாட்டுப் போட்டிக்கு முதல்நாள் அதே குரங்கை மீண்டும் சின்னா அழைத்து வந்தான்.. டேனி அந்தக் குரங்கின் நடவடிக்கையை குரோதமுடனும் அதே நேரத்தில் ஆர்வமுடனும் கண்காணித்து வந்தார்.. என்ன குற்றம் கண்டுபிடித்து இந்த குரங்கை விரட்டலாம் என்ற சிந்தனையுடன்... குரங்கு வழக்கம்போல இல்லாமல் கொஞ்சம் எச்சரிக்கையாகவே எல்லா வேலைகளையும் செய்தது. திடீரென்று ஒரு பூப்பந்தை எடுத்து தன் பின்புறத்தில் வைத்து திணித்தது.. பின் அதை எடுத்து வாயில் போட்டு விழுங்கியது..

டேனி பொறுமையிழந்து கத்தினார்.. "டேய் சின்னா.. உன் குரங்கு என்ன வேலை செய்யுது பாரு.."

சின்னா அமைதியாக சொன்னான்..

" அன்னிக்கு கிரிக்கெட் பந்தை முழுங்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டிருச்சு சார்.. அதிலேருந்து அளவு பார்க்காம எதையும் முழுங்குறதே இல்ல...!"

ராஜா
01-01-2007, 11:49 AM
டேனி ; சின்னா.. மது பழக்கம் கூடாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; மாது சிந்தனை கூடவே கூடாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; மாமிசம் ஆகாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; சூது ஆகவே ஆகாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; நாட்டுக்காக உயிரிழக்க தயங்கவே கூடாது..

சின்னா ; அதைத்தான் செஞ்சாகணும்.. அப்புறம் வெட்டியா இந்த உயிரை வச்சுக்கிட்டு என்ன செய்யறது..?

டேனி ; ???????????????????????

ராஜா
12-01-2007, 04:57 PM
பொருள்களைத் தொலைத்தவர்கள், பறிகொடுத்தவர்கள் ஆகியோருக்கு அவர்கள் உடைமைகளை கைப்பற்றி திரும்பத் தருவதை ஒரு விழாவாக காவல் துறை நடத்தியது. ஏற்கனவே புகார் கொடுத்திருந்தவர்கள் ஆனாலும், மீண்டும் ஒருமுறை அவர்கள் வாயால் தொலைந்த பொருட்களின் பட்டியலைக் கேட்டு சரிபார்த்த பின்னரே ஒப்படைத்தார்கள்.

பெறுவோர்க்கான வரிசையில் தன் கைப்பையை பறிகொடுத்த ஒரு பெண்மணியும் நின்றிருந்தாள்.. ஆனால் அவளுக்கு என்னென்ன பொருட்கள் உள்ளே இருந்தன என்று சரியாக நினைவுக்கு வரவில்லை. குழப்பத்துடன் இருந்த அவள் முறை வந்த போது சோதனையாக காவல் துறை தலைவர் முதல் அனைத்து அதிகாரிகளும் அங்கு வந்து விட்டனர்.

போதாததற்கு சன் தொ.கா. படப்பிடிப்பாளரும் வந்து விட்டார்.. அம்மணி இன்று நாம் அவமானப்படப் போவது உறுதி என்ற முடிவுடன் இருந்த போது அவள் கைப்பையும், பொருட்களும் தனியாகக் கொடுக்கப்பட்டன. வேறெந்த கேள்வியும் இல்லை.

எல்லாவற்றையும் உள்ளே எடுத்து வைத்துக் கொண்டு புறப்படும் போது ஆவல் மிகுதியில் கா.து. தலைவரைக் கேட்டாள்..

" அய்யா.. என்னை மட்டும் ஏன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை..?"

" அம்மணி.. டி.வி. நிருபர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்களே எதற்காகத் தெரியுமா..? ஒரு சின்னக் கைப்பையில் அரை லாரி பொருட்களை எப்படி எடுத்து வந்தீர்கள் என்று பார்க்கத்தான்.. எப்போது அவ்வளவு பொருட்களையும் உள்ளே வைத்தீர்களோ அப்போதே தெரிந்து கொண்டோம்.. நீங்கள் தான் உண்மையாக தொலைத்தவர் என்று..!"

ராஜா
12-01-2007, 04:58 PM
சுடச் சுட பிட்ஸாவை கொண்டு வந்து கொடுத்தான் அந்த இளைஞன்.
வீட்டுக்காரர் கேட்டார்..

"எவ்வளவு டிப்ஸ் வேண்டும்..?"

அய்யா.. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளேன்.. இங்கு வரும்போது பழைய ஆட்கள் உங்களிடம் பைசா பெயராது என்று சொல்லி அனுப்பினார்கள்..

" அப்படியா சொன்னார்கள்..? இந்தா 100 ரூபாய்.. வைத்துக்கொள்.."

"நன்றி அய்யா.. இது நான் எழுதிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உதவியாக இருக்கும்.."

"அப்படியா..? என்ன கட்டுரை எழுதுகிறாய்..?

" கஞ்சர்களிடம் காசைக் கைப்பற்றுவது எப்படி..!"

ராஜா
12-01-2007, 04:59 PM
ஐ.நா.சபையின் நல்லெண்ணப் பயணமாக ஒரு அமெரிக்க விவசாயி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அங்கு ஒரு ஆஸ்திரேலிய விவசாயியை சந்திக்க, அவர் தன் பெரிய கோதுமை வயலைச் சுற்றிக் காட்டினார். உடன் தங்களுக்கே உரிய அலட்டல் தன்மையுடன் அமெரிக்கர் சொன்னார்.. "

என்னுடைய பண்ணை இதைவிட நான்கு மடங்கு பெரியது..!"

அடுத்து தன் மாட்டுப் பண்ணையை ஆஸ்திரேலியர் காட்ட, அமெரிக்கர்..

" என் மாடுகளின் கொம்ம்புகள் உங்கள் மாடுகளைப் போல் இருமடங்கு பெரிதாக இருக்கும்..!"

அவர்கள் நகருக்கு திரும்பும்போது திமு திமுவென கங்காருகள் குதித்து ஓடுவதைப் பார்த்து மிரண்டு போன அமேரிக்கர் கேட்டார்..

" அவை என்ன மிருகங்கள்..?"

வாய்ப்புக்கு காத்திருந்த ஆஸ்திரேலியர் பதிலடி கொடுத்தார்...

" ஏன் உங்க நாட்டில் நீ சுண்டெலிகளைப் பார்த்ததில்லையோ..?"

ராஜா
12-01-2007, 04:59 PM
நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; லொள்..லொள்..

நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; வவ்..வவ்.. வவ்,,

நாய் 1 ; நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்கு இப்போ பேச்சை மாத்துறே..?

ஆதவா
12-01-2007, 05:10 PM
அருமை நண்பரே!!!!

மன்மதன்
12-01-2007, 05:41 PM
அட்டகாசம்..அட்டகாசம்..வவ்..வவ்...:D :D

மதுரகன்
12-01-2007, 08:13 PM
சிரிப்பு வெடி என்பதற்கு இங்குதான் அர்த்தம் புரிந்தது நண்பரே :) :) அற்புதம்... :0 :0 :0

tamil81
13-01-2007, 08:37 PM
சில நிரந்தர விதிகள்..

எதுக்காவது வரிசையிலே நிக்கிறோம்ன்னு வச்சுக்கங்க.. நாம் நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது.. மத்த வரிசையெல்லாம் கிடு கிடுன்னு கரையும்.. கவனிச்சிருக்கீங்களா..?

தப்பா நம்பர் அடிச்சு போன் பண்ணினோம்ன்னு வைங்க.. எங்கேஜ்டா இருக்காது.. தப்பு நம்பர் எதிராளி தொடர்பு எல்லைக்குள்ளேயே இருப்பான்.. லொடக்குன்னு 2 ரூபா காலியாயிடும்..!

பைக்கையோ காரையோ தெரிஞ்சவரைக்கும் ரிப்பேர் பார்த்துட்டு, கையை ஆயிலாவோ, கிரீஸாவோ வச்சுருக்கோம்ன்னு வைங்க.. அப்பத்தான் மூக்கு அரிக்கும்.. உண்டா இல்லையா..?

உங்க முதலாளி ஏன் லேட் ன்னு கேட்டு வண்டி பஞ்சர் ன்னு சொல்லி சமாளிச்சுடுவீங்க.. சோதனையா மறுநாள் உண்மையாவே பஞ்சர் ஆகி முதலாளிக்கிட்டே பேய் முழி முழிச்சுருக்கீங்களா இல்லையா..?

வீட்டை பூட்டிட்டு வெளிலே கெளம்பும்போது தொலைபேசி ஒலிக்கும்.. திறந்து உள்ளே வர்றதுக்குள்ள நின்னு போயிடும்..

ஒரு முக்கியமான ஆளு அவங்கூட சேராதே ன்னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் சின்சியரா சரின்னுருப்பீங்க.. மறுநாளே அவ்னோட சுத்தறத அந்த முக்கியமானவங்க பாத்துடுவாங்க.. வாசஸ்தவம் தானே..?

ஒரு மேஜிக்'கையோ, இல்லே வேறே எதாவது வித்தையையோ கத்துட்டு வந்துருப்பீங்க. ஒரு ஆள அசத்தணும்ன்னு அதை செஞ்சு காமிக்கறப்போ சொதப்பிடும்.. அவங்க போனப்புறம் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க.. கரெக்டா வரும்.. அப்படி நொந்து நூலாயிருக்கீங்களா இல்லையா..?

கொட்டாவி விட்டுட்டு வெட்டியா உக்காந்து இருப்பீங்க.. ஒரு வேலையும் இருக்காது.. ஒரு டீ சாப்பிடலாம்ன்னு கப்பை கையிலே எடுப்பீங்க.. உடனே ஒரு வேலை வானத்துலேருந்து குதிக்கும்.. சூடா அந்த டீயை குடிக்க விடாமப் பண்ணிடும்.. அனுபவிச்சுருக்கீங்களா..?


உண்மை உண்மை

மன்மதன்
15-01-2007, 07:56 AM
அதே அதே :D :D

Narathar
21-01-2007, 02:24 AM
நாராயணா!!!!!

எனக்கும்ட்டும்தான் இப்படின்னி நெனச்சேன் எல்லோருக்குமா?

ஓவியா
21-01-2007, 02:10 PM
ராஜா அண்ணா,

அடுத்த கடி குண்டுகளை போடவும்,

(எங்கே அண்ணாவை ஆளையே காணோம்??)

omnlog03
21-01-2007, 03:03 PM
very nice jokes

ராஜா
28-01-2007, 11:25 AM
ஒரு விற்பனைப் பிரதிநிதி. அவர் பெயர் செல்லப்பா. அவருக்கு அவசரமாக 3 நாட்கள் விடுமுறை தேவைப்பட்டது.. முதலாளியிடம் கேட்க, அவரோ செல்லப்பா அலுவலகம் தொடர்பான பயணம் ஒன்று போகவேண்டி இருப்பதாகவும் அதை முதலில் கவனிக்கும்படியும், போய்வந்த பின்னர் விடுப்பு வழங்குவதாகவும் சொன்னார்.

சரி என்று செல்லப்பா டூர் கிளம்பினார்.. போய்ச் சேர்ந்த அன்றே கடும் புயல் காற்று.. மின்சாரம் பழுது பட்டு விட்டது. சாலைத் தொடர்புகள் துண்டிக்கப் பட்டுவிட்டன. இவர் போன விஷயம் தொடர்பான வேலைகளைக் கவனிக்க இயலாது போயிற்று. முதலாளியுடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு, நிலைமை சீரடைய 3 நாட்கள் ஆகுமென்றும், அடுத்து என்ன செய்யலாம் எனவும் அறிவுரை கேட்டார்.. முதலாளி சொன்னார்.." சரி.. நீ கேட்ட அந்த 3 நாள் விடுப்பை எடுத்துக் கொள்.. இன்றிலிருந்து விடுமுறை தொடங்குகிறது. பயணப் படி கிடையாது.. விடுப்பு முடிந்தவுடன் நான் சொன்ன வேலையை முடித்துவிட்டு வா...!"
__________________

ராஜா
28-01-2007, 11:27 AM
ஒருநாள் நள்ளிரவில்..

ஒரு மருத்துவர் வீட்டின் படுக்கையறையில் உள்ள குளிர் சாதன இயந்திரம் பழுது பட்டு விட்டது. மருத்துவரால் தூங்க இயலவில்லை. உடனே தனக்கு பழக்கமான கம்மியர் (மெக்கானிக்) ஒருவருக்கு தொலைபேசினார்.

பாதித் தூக்கத்தில் எழுந்த கம்மியர், "காலையில் பார்த்துக் கொள்ளலாமே அய்யா.." என்றார். வெகுண்டு போன மருத்துவர், உங்களுக்கு ஒரு அவசரம் என்றால் பாதி ராத்திரியில் என்னை எழுப்பி மருந்து கேட்பீர்கள்.. எனக்கு மட்டும் உதவக் கூடாதா..?" என்று சூடாகக் கேட்டார்.

எதிர் முனையில் சில வினாடிகள் நிசப்தம்.. பின்னர் கம்மியர் சொன்னார்...

" அய்யா.. இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு ஆஸ்பிரின் மாத்திரையைப் போடுங்கள்.. வெந்நீர் குடிக்க கொடுங்கள்.. சரியாகவில்லை என்றால் காலையில் அழைத்து வாருங்கள்..!
__________________

ராஜா
28-01-2007, 11:27 AM
வீட்டுக்கார'னு'ம் பிச்சைக்கார'ரு'ம்..

ஏம்பா உனக்கு 5 ரூபாய் போட்டா என்ன பண்ணுவே..?

வாயார வாழ்த்துவோம் சாமி..

25 பைசா போட்டா..?

எங்க செலவுல திருவோடு வாங்கித் தருவோம்....!
__________________

ராஜா
28-01-2007, 11:28 AM
உணவு விடுதியில் காதலனும் காதலியும்...

காதலன் ; அன்பே.. நாம் இருவரும் ஒன்றறக் கலந்து விட்டோம் கண்ணே..!

காதலி ; அந்தக் கதையே வேணாம்.. ஒழுங்கா ரெண்டு ரவா தோசைக்கு ஆர்டர் கொடுங்க.. கஞ்சப் பிசிநாறி...!

ராஜா
28-01-2007, 11:29 AM
கணவனும் மனைவியும்..

அன்பே.. உண்மையில் நீங்கள் என் மீது உயிரை வைத்திருக்கிறீர்களா..?

ஆமாம்.. அதில் சந்தேகம் வேறா..?

நான் இறந்தால் அழுவீர்களா..?

கண்டிப்பாக...

எங்கே.. அழுது காட்டுங்கள்..

லேடீஸ் ஃபர்ஸ்ட்...!
__________________

ராஜா
28-01-2007, 11:29 AM
அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க ஒரு ரஷ்யர் வந்தார். ஒரு வழிகாட்டி அமெரிக்கப் பெருமைகளை சொல்லி ரஷ்யரை வெறுப்பேற்றிக் கொண்டே இருந்தான்.. கடைசியாக வெள்ளை மாளிகைக்கு வந்தார்கள்..

வழிகாட்டி ; இது எங்கள் அதிபரின் இருப்பிடம். இங்கு நின்று "புஷ் ஒரு கழுதை..!" என்று நாங்கள் சொல்லலாம்.. அந்த அளவுக்கு எங்கள் சனநாயகம் உயர்வானது.. உங்களால் உங்கள் நாட்டில் உங்கள் அதிபர் மாளிகையில் இவ்வாறு சொல்ல முடியுமா..?

ரஷ்யர் ; ஓ..சொல்லலாமே.. கிரெம்ளின் மாளிகை முன்பு நின்று "அமெரிக்க அதிபர் புஷ் ஒரு கழுதை" என்று சொன்னால் எல்லோரும் வரவேற்கவே செய்வார்கள்...!
__________________

ராஜா
28-01-2007, 11:31 AM
ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம் பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி பேரை சொல்லிட்டு போவோம்...!
__________________

ராஜா
28-01-2007, 11:31 AM
ஏன் தாத்தா.. காந்தி நல்லவர் தானே..?

ஆமாம்.

நேர்மையாளர் தானே..?

ஆமாம்.

திருட்டு, ஏமாற்று இதெல்லாம் செய்ய மாட்டார் தானே..?

ஆமாண்டா. ஏன் இதெல்லாம் கேட்கிறே..?

அப்புறம் ஏன் அவர் பிறந்த நாளுக்கு வங்கிகளை மூடி வைக்கிறாங்க..?
__________________

ராஜா
28-01-2007, 11:32 AM
மின் தூக்கியில் (லிஃப்ட்) கணவனும் மனைவியும்.. கணவன் ஒரு அழகிய பெண்ணை ஒட்&#