PDA

View Full Version : ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11

அமரன்
27-09-2007, 08:52 AM
மொக்கையின் ரவுசை விட அமர்க்களமாக இருக்கே...நடத்துங்க..

ராஜா
27-09-2007, 05:15 PM
உங்கள் மீது சுமந்தப்பட்டுள்ள அன்னியச் செலவாணி மோசடிக் குற்றச்சாட்டைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் ?

எனக்கு இந்த மோசடி விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று நிரூபிக்காமல் விடமாட்டேன் எத்தனை மில்லியன் டாலர் செலவானாலும் பரவாயில்லை..!
_________________

அம்மானு யாரோ குரல் கொடுக்கறாங்க..

பிச்சைக்காரா இருந்தா போட்டு அனுப்பு .. .. வேட்பாளரா இருந்தா போடறோம்னு சொல்லியனுப்பு ..!
_________________

தொகுதியில் வாக்குப்பதிவு உங்க மாதிரியே இருந்துச்சு தலைவரே..!

அப்படின்னா ?

மந்தமா இருந்துச்சு ..!
_________________

நான் அந்தக் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கேன், எனக்கு அண்ணாதுரையை எல்லாம் நல்லாத் தெரியும்

நான் கொஞ்ச நாளாத்தான் அரசியலில் இருக்கேன். எனக்குத் தம்பிதுரையைத்தான் தெரியும..!
________________________________________
தமிழ் ஜோக்ஸ்.. 28-09-07.

அக்னி
27-09-2007, 05:48 PM
அம்மானு யாரோ குரல் கொடுக்கறாங்க..

பிச்சைக்காரா இருந்தா போட்டு அனுப்பு .. .. வேட்பாளரா இருந்தா போடறோம்னு சொல்லியனுப்பு ..!

இது கலக்கல் ராஜா அண்ணா...

மலர்
28-09-2007, 04:09 AM
அண்ணா... இந்த தடவை அரசியல
போட்டு தாக்கிட்டீங்களே.....

ஜோக்குகள் எல்லாமே நல்லாயிருக்கு அண்ணா....

ராஜா
28-09-2007, 03:26 PM
மரியாதையா சொல்லுங்க.. . நேத்து ராத்திரி உங்க கனவுல யார் வந்தா.. .?

நீதாண்டி வந்தே

பொய் சொல்லாதீங்க.. . பின்ன நீங்க தூக்கத்துல சிரிச்சீங்களே ?
----------------------------

"சட்டை பொத்தான் போடறதையே 2 வாரமா காமிச்ச மெகா சீரியல் டைரக்டரோட அடுத்த சீரியல் விறுவிறுப்பா இருக்குமாம்"

"எப்படி?"

பொத்தானுக்கு பதிலா "ஜிப்" வச்சுட்டாராம்.
_________________

மரண தண்டனை கொடுத்து எலக்ட்ரிக் சேர்ல ஒக்காந்தப்பறம் கூட அந்த கொலைகாரனுக்கு கொழுப்பு அடங்கல.

ஏன் . . . என்ன சொல்றான்?

உன் கடைசி ஆசை என்னன்னு கேட்டதுக்கு, என் கையை நீங்க புடிச்சுக்கணும்னு சொல்றான்னா பாத்துக்கயேன் . .
_________________

என் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட பாக்கவிடமாட்டேன்றாங்க?

இதென்ன அக்ரமமா இருக்கு?

தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிதான் பாக்கணுமாம். இல்லாட்டா 3 வருஷம் சிறை தண்டனையாம்.
____________________

"ஐயா என் மனைவியை ஒரு வாரமா காணுங்க"

"போட்டோ இருக்கா?"

"அசின் மாதிரி யாராவது இருந்தா கூட பரவால்லீங்க."
___________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம். 29-09-07.

அமரன்
28-09-2007, 03:45 PM
மரியாதையா சொல்லுங்க.. . நேத்து ராத்திரி உங்க கனவுல யார் வந்தா.. .?
நீதாண்டி வந்தே
பொய் சொல்லாதீங்க.. . பின்ன நீங்க தூக்கத்துல சிரிச்சீங்களே ?

கனவுகூட வெவரமாகத்தான் காண வேண்டும் போல..

"சட்டை பொத்தான் போடறதையே 2 வாரமா காமிச்ச மெகா சீரியல் டைரக்டரோட அடுத்த சீரியல் விறுவிறுப்பா இருக்குமாம்"
"எப்படி?"
பொத்தானுக்கு பதிலா "ஜிப்" வச்சுட்டாராம்

சிப்பிலதானே இழுவை அதிகம் இருக்கும்..அப்புறம் எப்படி விறு விறுப்பாக இருக்கும்?.

mathura
28-09-2007, 04:48 PM
மொக்கையின் சிரிப்புகள் எல்லாம் மொக்கையாக இல்லாமல் மிகவும் கூர்மையாக இருக்கின்றன

மனோஜ்
28-09-2007, 09:13 PM
"ஐயா என் மனைவியை ஒரு வாரமா காணுங்க"

"போட்டோ இருக்கா?"

"அசின் மாதிரி யாராவது இருந்தா கூட பரவால்லீங்க."
___________________________________________

மெக்கை மெக்ககையா இருந்தாலும்
மொகம் அதிகம்தான்

நன்றி அண்ணா

சுகந்தப்ரீதன்
29-09-2007, 03:47 AM
அந்த கொலகார பய நம்பல மாதிரி கொழுப்பு புடிச்சவனா இருப்பான் போலிருக்கு...?

மலர்
29-09-2007, 06:59 AM
"ஐயா என் மனைவியை ஒரு வாரமா காணுங்க"

"போட்டோ இருக்கா?"

"அசின் மாதிரி யாராவது இருந்தா கூட பரவால்லீங்க."
___________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம். 29-09-07.

ஆசை தோசை அப்பளம் வடை.....
ஹீ...ஹீ....மொக்கை இந்த தடவை தப்பிச்சிட்ட்டாரு...
அடுத்த தடவை மாட்டுவாரு.....

க.கமலக்கண்ணன்
29-09-2007, 07:23 AM
அசத்திறீங்க ராஜா அவர்களே...

அருமையாக இருக்கிறது

ராஜா
30-09-2007, 05:04 PM
ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்.." ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்.." என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்."

அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.

பாதிரியார் பெருமையுடன், "என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்" என்றார்.

அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!

ராஜா
30-09-2007, 05:06 PM
அந்த டாக்டர்கிட்டே இருக்கிற பணமெல்லாம் நேர்வழில சம்பாதிச்ச பணம் இல்லை ..

பின்ன எப்படி ?

எல்லாம் பைபாஸ் ஆபரேஷன் பண்ணி சம்பாதிச்சது..!
_________________

அந்தப் பொண்ணு டான்ஸ் ஆடறதுபோது முத்திரைகள் எல்லாம் எவ்வளவு அற்புதமா இருக்கு பாருங்க ..

பின்னே... தபால்காரர் பொண்ணாச்சே..!
_________________

எங்க ஆபீஸ்ல பிரச்சனை ஏற்பட்டா ஒரு குரூப் பிரச்சினையை அலசும், இன்னொரு குரூப் தீர்வுகள அலசும், இன்னொரு குரூப் செஞ்சு முடிச்சுடும்.

அப்படி என்ன பிரச்சினையை தீர்த்திங்க சமீபமா?

ஒரு டேபிளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாத்தினோம்.
_________________

மண்டையில அடிபட்டதுல உங்க மாமியாருக்குப் பழசெல்லாம் மறந்து போச்சு

அப்ப.. . பழைய சண்டையை எல்லாம் மறுபடியும் போடலாமா டாக்டர் ?

அமரன்
30-09-2007, 05:37 PM
ஹஹ்ஹ்ஹ்ஹா...
கிளிகள் புத்திசாலிகள்..
நன்றி அண்ணா.

அன்புரசிகன்
30-09-2007, 05:37 PM
அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!

கிளிங்களெல்லாம் ஒரு டைப்பாத்தான் இருக்குதுங்க...
மனமே மனமே தடுமாறும் மனமே என மனதுக்குள் பாட்டுப்படித்துக்கொண்டிருந்திருக்கும்.

இனியவள்
30-09-2007, 05:52 PM
[COLOR="Purple"]

மரியாதையா சொல்லுங்க.. . நேத்து ராத்திரி உங்க கனவுல யார் வந்தா.. .?
நீதாண்டி வந்தே

பொய் சொல்லாதீங்க.. . பின்ன நீங்க தூக்கத்துல சிரிச்சீங்களே ?

COLOR]

கணவன் :- உன்னை அடிக்கிற மாதிரி
கனவு கண்டன் சிரிப்பு வந்திட்டு :icon_rollout:

மனைவி :- :sauer028::sauer028::sauer028::sauer028:

கணவன் :- :traurig001::traurig001:

இனியவள்
30-09-2007, 05:56 PM
ராஜா அண்ணா அனைத்து
நகைச்சுவைகளும் நல்லா இருந்தது :icon_rollout:

ஹீ ஹீ எப்படி அண்ணா
இப்படி எல்லாம் உங்களாலை
முடியுது வாழ்த்துக்கள் அண்ணா

இன்னும் நாங்கள் சுவைக்க நிறைய
நகைச்சுவைகள் தாருங்கள் :)

அமரன்
30-09-2007, 07:07 PM
அந்த டாக்டர்கிட்டே இருக்கிற பணமெல்லாம் நேர்வழில சம்பாதிச்ச பணம் இல்லை ..
பின்ன எப்படி ?
எல்லாம் பைபாஸ் ஆபரேஷன் பண்ணி சம்பாதிச்சது..!

கலக்கல் அண்ணா...நகைச்சுவையில் இனிய கவிதை ஒழிந்துள்ளது போன்ற பிரம்மை..

பைபாஸ் சிகிச்சையில்
ஈட்டிய செல்வம்
வெள்ளைப் பணமாக
வருமான கணக்கில்..

ராஜா
01-10-2007, 05:49 PM
கணவன் : ''இன்னைக்கு நைட் என்ன டிபன்?''

மனைவி : ''விஷம்!''

கணவன் : ''ஓ.கே, எனக்காக வெயிட் பண்ணவேண்டாம். நீ சாப்பிட்டுட்டு தூங்கு!''
_________________

'இப்பலாம் நீ ஏன் சீரியலே பாக்கறது இல்லை?''

''நான் அழுவறதைப் பார்த்து என் மாமியார் சந்தோஷப்படுறாங்களே?''
_________________

'நம்ம இன்ஸ்பெக்டரை ஏ.டி.எம். முனியாண்டின்னு ஏன் சொல்றாங்க...?''

''அவர் எனி டைம் மாமூல் கேக்கறவர்... அதனாலதான்!''
_________________

எங்க அம்மா ஊர்லேர்ந்து வர்றாங்களாம். ஸ்டேஷனுக்கு நீ போய் அழைச்சிட்டு வர்றியா? இல்ல நான் போகவா...?''

''நீங்க போங்க... நான் போய் ஸ்டேஷன்லயே சண்டையை ஆரம்பிச்சா நல்லாவா இருக்கும்...?''
___________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம்.2-10-07.

இனியவள்
01-10-2007, 05:58 PM
'இப்பலாம் நீ ஏன் சீரியலே பாக்கறது இல்லை?''

''நான் அழுவறதைப் பார்த்து என் மாமியார் சந்தோஷப்படுறாங்களே?''
_________________

எனித் தொலைக்காட்சிகளுகு ஓய்வு தான் :icon_rollout:

தமிழ்ச்சூரியன்
01-10-2007, 11:00 PM
வாய் வலிக்கச் சிரிக்க வைக்கும் அருமையான திரி.. வாய் விட்டு சிரிச்சு என்னோட நோய் பாதி போயிருக்கும்னு நெனைக்கறேன். ராஜா அவர்களுக்கு என் நன்றிகள்.

அக்னி
02-10-2007, 01:05 AM
கணவன் : ''இன்னைக்கு நைட் என்ன டிபன்?''

மனைவி : ''விஷம்!''

கணவன் : ''ஓ.கே, எனக்காக வெயிட் பண்ணவேண்டாம். நீ சாப்பிட்டுட்டு தூங்கு!''

அப்போ அவங்களே சமைச்சிட்டாங்களோ...
(நம்ம மலர் சமையல் போலவோ...:icon_hmm:)

ராஜா
02-10-2007, 05:32 PM
''அறுபதாம் கல்யாணம்கிறதுக்காக பத்தரிகையை இப்படியா அச்சடிக்கிறது?''

''ஏன்.. என்ன ஆச்சு?''

'''' 'திருநரைச் செல்வன் திருநரைச் செல்வி'னு போட்டிருக்காங்க..!''
_________________

இவருக்கு மணிமணியா ரெண்டு பசங்க!

அப்படியா!

ஆமாம். மூத்தவன் சுப்பிரமணி, இளையவன் சண்முகமணி.
_________________

வேலைக்காரி : எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டுதானேம்மா செய்யறேன்... அப்புறம் ஏம்மா குறை சொல்றீங்க?

வீட்டுக்காரி : நல்லா இழுத்துப் போர்த்திக்கிட்டும் செய்யணும், புரிஞ்சுதா?
_________________

தொ.கா. நிலையத்தில்..

பெண் : என்ன சார் இது.. வித்தியாசமான கடிதமா இருக்கு..? ""உங்க நிலையக் கட்டிடம் விதிமுறைக்கு மீறி இருக்கு.. இடிககப்போறோம்"ன்னு ஒரு நேயர் கடிதம் போட்டிருக்காரே..!

அதிகாரி: நல்லாப் பாரும்மா... அது நேயர் க்டிதம் இல்லே..மேயர் கடிதம்..!
____________________________________________
தமிழ் ஜோக்ஸ்.ஆர்க்குட் த்னியினம்.03-10-07.

க.கமலக்கண்ணன்
03-10-2007, 05:42 AM
தொ.கா. நிலையத்தில்..

பெண் : என்ன சார் இது.. வித்தியாசமான கடிதமா இருக்கு..? ""உங்க நிலையக் கட்டிடம் விதிமுறைக்கு மீறி இருக்கு.. இடிககப்போறோம்"ன்னு ஒரு நேயர் கடிதம் போட்டிருக்காரே..!

அதிகாரி: நல்லாப் பாரும்மா... அது நேயர் க்டிதம் இல்லே..மேயர் கடிதம்..!

அருமையான நகைச்சுவை...

அசத்திருங்க ராஜா அசத்திருங்க

அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால்

அடுத்தடுத்து கோப்பை உங்களுக்கு தான்...

ராஜா
03-10-2007, 05:00 PM
என் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமா போட்டிருக்கேன்..!

வித்தது எவ்வளவு?

என் மனைவியோட நகை நட்டு அத்தனையும்!
_________________

இன்னிக்கு உங்களுக்கு எல்லாவிதமான டெஸ்ட்டுகளும் எடுத்தாகணும்னு சொல்லியிருந்தேனே... தயாரா வந்திருக்கீங்களா?

ஆமா டாக்டர்.... ஒரு குயர் பேப்பர், ஒரு பேனா, பென்சில், ஸ்கேலோடு வந்துட்டேன். ஓ.கே-தானே?
_________________

நீங்க வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிச்சாதான், எங்க அப்பா உங்களுக்கு என்னை கட்டிவைப்பாராம்...''

''அவர் கை நிறைய சம்பாதிச்சா என் பின்னாடி ஏன் சுத்தப் போறாருன்னு நீ திருப்பிக் கேட்கவேண்டியதுதானே?''
_________________

''உங்க வீட்டு நாய் என் மாமியாரைக் கடிச்சிடுச்சு..!''

''நன்றி கெட்ட நாய்... எங்க வீட்டு சோற்றைத் தின்னுட்டு அது வந்து உன் மாமியாரைக் கடிச்சிருக்கு பாரு...''
_____________________________________________________
தமிழ் ஜோக்ஸ்.ஆர்க்குட் நகைச்சுவைத் தனியினம். 04-10-07.
_____________________________________________________

இனியவள்
03-10-2007, 05:52 PM
என் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமா போட்டிருக்கேன்..!

வித்தது எவ்வளவு?

என் மனைவியோட நகை நட்டு அத்தனையும்!

அப்பாடா நான் தப்பிச்சுட்டன் :icon_rollout:

ராஜா அண்ணா அனைத்து
நகைச்சுவையும் ஒரு அருமை போங்கோ :icon_b:

சுகந்தப்ரீதன்
04-10-2007, 03:42 AM
நீங்க வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிச்சாதான், எங்க அப்பா உங்களுக்கு என்னை கட்டிவைப்பாராம்...''

''அவர் கை நிறைய சம்பாதிச்சா என் பின்னாடி ஏன் சுத்தப் போறாருன்னு நீ திருப்பிக் கேட்கவேண்டியதுதானே?''

_____________________________________________________
தமிழ் ஜோக்ஸ்.ஆர்க்குட் நகைச்சுவைத் தனியினம். 04-10-07.
_____________________________________________________

இதுகூட தெரியாத மாமனார வச்சிகிட்டு என்ன பன்றது நாங்க..?

அருமையான நகைச்சுவையன்னா... வாழ்த்துக்கள்..!

மனோஜ்
04-10-2007, 02:29 PM
கெக்கபக்க சிறிப்புகள் அருமை அண்ணா

ராஜா
04-10-2007, 04:33 PM
''ஒரு வாரமா என் காது சரியாக கேட்கவே மாட்டேங்கது டாக்டர்!''

''நீங்க சொல்லியே கேட்காத காது, நான் சொன்னா மட்டும் கேட்கவா போகுது!.''
_________________________

''உங்க மாமியாருக்கு இதயம் பலவீனமா இருக்கும்மா....எந்த அதிர்ச்சியான நியூஸையும் சொல்லக் கூடாது!''

''அப்ப எழுதிக் காண்பிக்கலாமா டாக்டர்...?''
__________________________

''இளவரசே... உமது தந்தை அந்தப்புரத்தில் சந்தோஷமாக இருக்கிறார். இது என்ன காலம்?''

''பொற்காலம்!''

''உமது தந்தை சுரங்கப் பாதைக்குள் ஓடி ஒளிகிறார். இது என்ன காலம்?''

''போர்க்காலம்!''
______________________________

சிறையில் இருக்கற தலைவருக்கு சென்ட் பாட்டில் கொடுத்துட்டு வர்றியே... ஏன்?''

''தலைவருக்கு சிறை 'வாசம்' நல்லா இருக்கட்டும்னுதான்..!''
_______________________________

'சரி, எங்களுக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுப் போச்சு... என்ன போடணும்னு எதிர்பார்க்கறீங்க..?''

''முன் ஜாமீன் பேப்பர்ல கையெழுத்து போடணும்..!''
___________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம்.05-10-07.

மலர்
04-10-2007, 05:08 PM
ராஜா அண்ணா உங்கள் நகைச்சுவைகள் அனைத்தும் அருமை.....
கலக்கல்ஸ்
எப்படி எப்படியோ யோசிக்கிறீங்க போங்க.....''உங்க மாமியாருக்கு இதயம் பலவீனமா இருக்கும்மா....எந்த அதிர்ச்சியான நியூஸையும் சொல்லக் கூடாது!''

''அப்ப எழுதிக் காண்பிக்கலாமா டாக்டர்...?''
___________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம்.05-10-07.

ஓவியரே உமது நினைவு தான் வருகிறது...

ஹீரோ போன்ற அழகான, ஆளுமையான ! :aetsch013:

[COLOR="DarkRed"][FONT="Latha"]ஹீ,ஹீ!!!
திமிங்கலம் மாமா அப்படியே நம்மளைப் போல அறிவாளியாக இருக்கிறாரே.....???? :D

நீர் பாட்டுக்கு இனி யோசிக்காது பதிவு போடாதிரும்

சுகந்தப்ரீதன்
06-10-2007, 10:23 AM
ராஜா அண்ணா.. நகைசுவையோடு சேர்த்து வார்த்தை விளையாட்டையும் ந*ட*த்துகிறீர்க*ள்... அருமையா இருக்குது அண்ணா..!

ராஜா
07-10-2007, 02:44 PM
''நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பொண்ணு வீட்டுக்காரரா?''

''ம்... நான் கல்யாணப் பொண்ணோட பழைய வீட்டுக்காரன்...
______________________________

தொலைக்காட்சியில் பணிபுரிந்துகொண்டிருந்தவரை அரசரின் அறிவிப்பாளராக நியமனம் செய்ததது தவறாகிவிட்டது!''

''என்ன ஆயிற்று?''

''நமது மன்னர் அவைக்கு வரும்போது 'பதவிக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய மன்னரைக் காணத்தவறாதீர்கள்னு கூவுறாரு!''
_______________________________

''என்னங்க, தனக்குத்தானே சிரிச்சுக்கிறீங்க! பேப்பர்லே அப்படி என்ன விஷயம்?''

''ஆவணி மாசம் 7ம் தேதி திருமணம் செய்துகிட்டா ஏழேழு பிறவிக்கும் நீதான் என் மனைவியாம்! நல்லவேளை நம்ம கல்யாணம் ஆறாம் தேதியே நடந்திருச்சு.''
_______________________________

அடேய்..காவலா... இப்போது எதற்காகப் போர் முரசு கொட்டினாய்..?''

''பயப்படாதீர்கள் மன்னா! ஓயாத உங்கள் விக்கல் சட்டென்று நின்றுவிட்டது பார்த்தீர்களா?!''
________________________________

'என் மனைவியின் சமையலை சாப்பிட்டுச் சாப்பிட்டு என் நாக்கே செத்துப்போச்சு!''

''அட, இது பரவாயில்லையே! என் பொண்டாட்டி சமையலைச் சாப்பிட்டு எங்க வீட்டு நாயே செத்துப்போச்சு!''
___________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம்.08-10-07.

ராஜா
08-10-2007, 04:44 PM
''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''

''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''

''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''

''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''
_________________

'மந்திரியாரே....என் வீரத்தைப் புகழ்ந்து ஏராளமான பாடல்களைப் பாடிய கவிஞர் காத்தப்பன், இன்று ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் உள்ளாராமே..?!''

''இப்போதாவது நம்புகிறீர்களா மன்னா... பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பதை!''
__________________

''அத்தே! நான் உங்ககிட்டே சண்டைக்கு வராமலிருக்கிறது உங்க கையில்தான் இருக்கு!''

''என் கையில் என்ன இருக்கு?''

''நாலு வளையல் இருக்கே... அதைக் கழட்டிக் குடுத்துட்டீங்கன்னா சண்டைக்கு வரமாட்டேன்!''
___________________

'எதிரி மன்னனுடன் போர் அடுத்த மாதம்தானே தொடங்குகிறது... அதற்குள் ஏன் மன்னா அவன் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து ஓடி வருகிறீர்கள்.?''

''இது சோதனை ஓட்டம் அமைச்சரே...''
_____________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம். 09-10-07

மலர்
08-10-2007, 07:32 PM
நானும் சிரிக்காமல் சென்று விடலாம்
என்றால் நல்லா வாய் விட்டே சிரிக்க வைத்து விடுகிறீர்களே....

''என்னங்க, தனக்குத்தானே சிரிச்சுக்கிறீங்க! பேப்பர்லே அப்படி என்ன விஷயம்?''
''ஆவணி மாசம் 7ம் தேதி திருமணம் செய்துகிட்டா ஏழேழு பிறவிக்கும் நீதான் என் மனைவியாம்! நல்லவேளை நம்ம கல்யாணம் ஆறாம் தேதியே நடந்திருச்சு.''

இத அவர் சொன்னதுக்கு பிறகு அவருக்கு வீட்ல ஒரு கும்மாபிஷேகமே நடந்திருக்கும்.....ஹா,,ஹா

அடேய்..காவலா... இப்போது எதற்காகப் போர் முரசு கொட்டினாய்..?''
''பயப்படாதீர்கள் மன்னா! ஓயாத உங்கள் விக்கல் சட்டென்று நின்றுவிட்டது பார்த்தீர்களா?!''

அண்ணா சந்தேகமே வேண்டாம்
இதில் உள்ள மன்னர் நிச்சயம் நம்ம லொள்ளு வாத்தியாரு தான்

''அத்தே! நான் உங்ககிட்டே சண்டைக்கு வராமலிருக்கிறது உங்க கையில்தான் இருக்கு!''
''என் கையில் என்ன இருக்கு?''
''நாலு வளையல் இருக்கே... அதைக் கழட்டிக் குடுத்துட்டீங்கன்னா சண்டைக்கு வரமாட்டேன்!''

ஆகா இது சரியான போட்டி

'என் மனைவியின் சமையலை சாப்பிட்டுச் சாப்பிட்டு என் நாக்கே செத்துப்போச்சு!''
''அட, இது பரவாயில்லையே! என் பொண்டாட்டி சமையலைச் சாப்பிட்டு எங்க வீட்டு நாயே செத்துப்போச்சு!''

ஹீ...ஹீ.... இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.....

ராஜா
09-10-2007, 02:52 PM
"மகாராணி, ரோஜாவுக்குத் தேரைக் கொடுத்துட்டார் அரசர்!"

"தரட்டுமே... ஏற்கனவே முல்லைக்குத் தந்தவர்தானே!"

"ஐயையோ! இந்த ரோஜா அரசருடைய சின்னவீடு!"
_______________________

"எதிர்வீட்டு கமலாவிடம் ஒரு மணி நேரம் பேசியதில் வயிற்றெரிச்சல்தான் மிச்சம்!"

"ஏன்?"

"நெக்லஸ் புதுசானு கடைசிவரை கேட்கவே மாட்டேனுட்டா பாவி!"
________________________

"நேத்து என் கனவுல ஜென்னிஃபர் லோபெஸ் வந்தாங்க....."

"இதைப்போய் ஏன் இவ்வளவு சலிச்சிக்கிட்டு சொல்றீங்க?"

"ஒன்பது கெஜம் புடவையைக் கட்டிக்கிட்டு நல்லா இழுத்துப் போர்த்திட்டு வந்தாங்க...!"
_________________________

"இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில, அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத் திரும்பிடுது!"

"படத்தோட பேரு?"

"ஜிம்மி ரிடர்ன்ஸ்!"
____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம்.10-10-07.

யவனிகா
09-10-2007, 03:09 PM
அருமையான சிரிப்புகள்... மருத்துவமனையில் தனியாக*
அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்த என்னை பார்த்து...மேடத்துக்கு நேரம் நெருங்கிருச்சுன்னு நெனைச்சு சைக்காட்டிரிஸ்ட் கிட்ட ஒரு பக்கி போட்டுக் குடுக்க,அவரு வேற என்னம்மா ஆச்சி? வீட்ட ஏதாவது பிரச்சனையான்னு போற போக்கில கேட்டிட்டு போறாரு.என்ன செய்ய ராஜா அண்ணா நீங்கதான் சொல்லணும்?

ராஜா
09-10-2007, 04:10 PM
ஹா..ஹா... ஹா..!

இப்படி வேற எடைஞ்சல் இருக்கா..?

சாரி யவனி...!

அல்லிராணி
09-10-2007, 04:14 PM
"மகாராணி, ரோஜாவுக்குத் தேரைக் கொடுத்துட்டார் அரசர்!"

"தரட்டுமே... ஏற்கனவே முல்லைக்குத் தந்தவர்தானே!"

"ஐயையோ! இந்த ரோஜா அரசருடைய சின்னவீடு!"
_______________________

"எதிர்வீட்டு கமலாவிடம் ஒரு மணி நேரம் பேசியதில் வயிற்றெரிச்சல்தான் மிச்சம்!"

"ஏன்?"

"நெக்லஸ் புதுசானு கடைசிவரை கேட்கவே மாட்டேனுட்டா பாவி!"
________________________

"நேத்து என் கனவுல ஜென்னிஃபர் லோபெஸ் வந்தாங்க....."

"இதைப்போய் ஏன் இவ்வளவு சலிச்சிக்கிட்டு சொல்றீங்க?"

"ஒன்பது கெஜம் புடவையைக் கட்டிக்கிட்டு நல்லா இழுத்துப் போர்த்திட்டு வந்தாங்க...!"
_________________________

"இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில, அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத் திரும்பிடுது!"

"படத்தோட பேரு?"

"ஜிம்மி ரிடர்ன்ஸ்!"
____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம்.10-10-07.

1. அப்ப மஹாராணிக்கு அல்வா கொடுத்தாரா?

2. வயித்தெரிச்சல் ஏன்? அவங்க புதுப் புடவை கட்டி இருந்தாங்களா? எதி வீட்டுக்காரி கேட்கலைன்னா ஒரு வேளை கவரிங்குன்னு பளிச்சுன்னு தெரியுதோ என்னவோ!!

3. மாமி கெட்டப்புல ஜெனீஃபரா! அபாரக் கற்பனை! சோபனா, ஸ்ரீதேவி, மீனா ன்னு அள்ளுற கெட்டப்பு இல்லியா? அதுக்கெதுக்கு சலிச்சுக்கனும்???

sifania
09-10-2007, 09:49 PM
நன்று,வாழ்த்துக்கள்!!

ஓவியன்
10-10-2007, 02:39 AM
என் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமா போட்டிருக்கேன்..!

வித்தது எவ்வளவு?

என் மனைவியோட நகை நட்டு அத்தனையும்!

ஆமா ராஜா அண்ணே!!

உங்க நகைச்சுவையைப் பார்த்து அமர் அதிர்ந்து போயிருக்கார், எங்கே இந்த நகைச்சுவையைப் படித்தால் ஒரு கவிஞனான தன்னை கல்யாணம் கட்ட ஒரு பொண்ணுங்களும் வர மாட்டாங்கேளே என்று...??

ராஜா
10-10-2007, 04:00 PM
"நம்ம ஈஸ்வரன் கருத்துக் கணிப்பு எடுக்கிறதுலே கெட்டிக்காரன்..."

"அப்ப 'சர்வே'ஸ்வரன்னு சொல்லு!"
_________________

நீதிபதி : "உன் பெண்டாட்டியை யாருக்கும் சந்தேகம் வராம எப்படி கொலை செஞ்சே?"

குற்றவாளி : "ஏனுங்க எசமான்..? உங்க வீட்லயும் அதே பிரச்னையா?"
_________________

வக்கீல்: "எதிரியுடன் சமாதானமாப் போயிடலாம்னு தோணுதா ஏன்?"

கட்சிக்காரர் : "முதல் நாள் எனக்காகக் கோர்ட்டில் நீங்க வாதாடிய லட்சணத்தைப் பார்த்துத்தான்!"
_________________

நம்ம விளையாட்டு அமைச்சருக்கு தடகள போட்டிகள் பற்றி அவ்வளவா தெரியாதோ..?

ஏன்..? என்னாச்சு..?

அடுத்தது "குண்டு எறியும் போட்டி"ன்னு மைக்ல சொன்னதுமே, அலறி அடிச்சுகிட்டு ஓடறாரே..!
_________________

"சே! என் உடம்பே என் அரசியல் வாழ்க்கைக்கு எதிரியா இருக்கு!"

"என்னாச்சு தலைவரே?"

"முன் ஜாமீன் கிடைச்ச பிறகு நெஞ்சு வலி வருது!"
____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 11-10-07.

மனோஜ்
10-10-2007, 06:40 PM
நம்ம விளையாட்டு அமைச்சருக்கு தடகள போட்டிகள் பற்றி அவ்வளவா தெரியாதோ..?
ஏன்..? என்னாச்சு..?

அடுத்தது "குண்டு எறியும் போட்டி"ன்னு மைக்ல சொன்னதுமே, அலறி அடிச்சுகிட்டு ஓடறாரே..!
அப்ப துப்பாகிசுடும் போட்டிக்கு என்ன பன்னுவாரு இவுரு ?
அருமை அண்ணா

சுகந்தப்ரீதன்
11-10-2007, 09:29 AM
!"
_________________

நீதிபதி : "உன் பெண்டாட்டியை யாருக்கும் சந்தேகம் வராம எப்படி கொலை செஞ்சே?"

குற்றவாளி : "ஏனுங்க எசமான்..? உங்க வீட்லயும் அதே பிரச்னையா?"
_________________

. 11-10-07.

எல்லாரும் இப்படிதானட்டுக்கு... அப்ப கொஞ்ச நாளைக்கு தள்ளி போடுவோம்...சரியான நேர காமடி அண்ணா..இது! வாழ்த்துக்கள்..!

ராஜா
11-10-2007, 03:22 PM
"பதினைந்து வருஷமா இந்த ஆபீஸ்ல குப்பை கொட்டி இருக்கேன்..."

"பதினைந்து வருஷத்துல ஒருநாள் கூட யாரும், ஆபீஸ்ல குப்பை கொட்டக்கூடாதுனு சொல்லலையா?"
_________________________

"என்னடி... உன் புருஷன் தண்ணியடிச்சுட்டு தண்டவாளத்துல விழுந்து கெடக்காரு?"

"ஆமா, ரயில்-Way-ல இருக்கார்னு சொல்லித்தான் என்னை இவருக்குக் கட்டி வெச்சாங்க!"
_________________

"எங்க ஊரில இருக்கிற ஒவ்வொரு தெருவிலேயும் ஒரு கிறுக்கு இருக்கு."

"அப்படியா? நீங்க எந்தத் தெரு கிறுக்கு?"
_________________

"டிவியில் வரும் உங்க தொடர் ஒரே திகிலா இருக்குதே!"

"அப்படி எதுவும் இல்லையே! என்ன திகில்?"

"அடுத்த வாரமும் வரப் போகுதே என்கிற திகில்தான்!"
_________________

"எங்க பேமிலி டாக்டருக்கு நான் சந்தோஷமா இருந்தாலே பிடிக்காது."

"நிஜமாவா...?"

"ஆமாம். பாரேன்! என் மாமியாருக்கு என்ன உடம்புக்குன்னு என்கிட்டே சொல்லாம மறைக்கிறாரு."
___________________________________________________
தமிழ் ஜோக்ஸ். ஆர்க்குட் நகைச்சுவைத் தனியினம்.12-10-07.

ராஜா
12-10-2007, 03:47 PM
மிஸ்டர் மொக்கை ஒரு பாலைவனத்தில் சிக்கீக்கொண்டு வழிதெரியாமல் அல்லாடினார்.. இரண்டு நாட்கள் நடந்தும் ஊரோ, தண்ணீரோ தென்படாமல் தவித்தார்.. அப்போது ஒரு அராபியன் ஒட்டகத்தில் ஏறி வந்தான்.. அவனிடம் தண்ணீர் கேட்டு கெஞ்சினார் மொக்கை.. அவனோ...

"மன்னியுங்கள்.. என்னிடம் தண்ணீர் இல்லை.. கழுத்தில் கட்டும் டை இருக்கிறது.. வாங்கிக் கொள்கிறீர்களா..? வெறும் 5 டாலர்தான்..

நான் தண்ணீர் தாகத்தால் தவிக்கிறேன்.. நீங்கள் டை வியாபாரம் செய்கிறீர்களே.. தயவுசெய்து எனக்கு உதவுங்கள்..

சரி.. உங்களுக்காக விலை குறைத்துக் கொள்கிறேன்.. 3 டைகள் வாங்கிக்கொள்ளுங்கள்.. 10 டாலர் கொடுங்கள் போதும்..!

சினமுற்ற மொக்கை, அந்த அராபியனிடம் ஒன்றும் பேசாமல் மேலே நடக்கலானார்.. மேலும் அரைநாள் நடந்ததும் கண்ணில் ஒரு உணவுவிடுதி தென்பட்டது. உள்ளே நிறையபேர், பெப்சி, கோக், மினரல் வாட்டர் குடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், மொக்கைக்கு உயிர் வந்தது.. ஆவலோடு உள்ளே நுழையப் போன மொக்கையை வாயிற்காவலன் தடுத்து ஒரு அறிவிப்புப் பலகையை படிக்கும்படி சொன்னான்.. அதில்..

"கழுத்துப் பட்டை [டை] அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே நுழையலாம்..!"

என்று போட்டிருந்தது.
_________________________________________

மொக்கை நண்பனிடம்..

டேய்.. சாமிநாதா.. நான் எழுதி அனுப்பியது எதையுமே "ஆனந்த விகடன்" பத்திரிகையில் ஏத்துக்க மாட்டாங்கன்னு சொன்னியே.. இப்போ நான் அனுப்பியதை ஏத்துகிட்டு கடிதம் போட்டிருக்காங்க பாருடா..!

வாழ்த்துகள்டா மொக்கை.. என்ன அனுப்பினே..? கதையா .. கவிதையா..?

ரெண்டும் இல்லடா.. ஒரு வருஷ சந்தாவுக்கான காசோலை..!
__________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 13-10-07.

மலர்
12-10-2007, 05:44 PM
எல்லாரும் இப்படிதானட்டுக்கு... அப்ப கொஞ்ச நாளைக்கு தள்ளி போடுவோம்...சரியான நேர காமடி அண்ணா..இது! வாழ்த்துக்கள்..!

அடப்பாவி.... இரு சொல்லி தாரேன்....:icon_rollout:

மலர்
12-10-2007, 05:49 PM
ஹா...ஹா..........
ராஜா அண்ணா...
மறுபடியும் நம்ம மொக்கை வந்து மொக்கையாய் மாட்டிக்கிட்டாரே....

"பதினைந்து வருஷமா இந்த ஆபீஸ்ல குப்பை கொட்டி இருக்கேன்..."

"பதினைந்து வருஷத்துல ஒருநாள் கூட யாரும், ஆபீஸ்ல குப்பை கொட்டக்கூடாதுனு சொல்லலையா?"

நான் கூட ரெண்டு வருஷமா ஓரே ஆபீஸ்ல குப்பை கொட்டுரேன்.....
யாருமே எதுவுமே சொல்லலையே.......

அக்னி
13-10-2007, 02:06 PM
நான் கூட ரெண்டு வருஷமா ஓரே ஆபீஸ்ல குப்பை கொட்டுரேன்.....
யாருமே எதுவுமே சொல்லலையே.......
குப்பைகிட்ட என்னத்த சொல்லுறதுன்னு விட்டிருப்பாங்க...
அ.சிங்கம் நீங்கதானே...

மலர்
13-10-2007, 03:33 PM
குப்பைகிட்ட என்னத்த சொல்லுறதுன்னு விட்டிருப்பாங்க...
அ.சிங்கம் நீங்கதானே...

யார் சொன்னது.....
நான் ஒண்ணும் சிங்கம் எல்லாம் கிடையாது.....
பின்ன இப்படியே... நீங்க சொல்லிட்டு இருந்தீங்கன்னா...
என் வாயில இருந்து நல்லா நல்லா வரும்...
ஆமா சொல்லிட்டேன்...

அப்புறம் ஏண்டா இந்த குரங்குகிட்ட வம்பு வச்சிக்கிட்டோன்னு தோணும்....

சுகந்தப்ரீதன்
14-10-2007, 10:41 AM

ராஜா அண்ணா.. மொக்கைக்கு ஜோடி கிடைக்கலன்னு வருத்தபட்டீங்கள்ள.. இங்க பாருங்க நம்ப மன்றத்துலயே ஒன்னு இருக்குது..?! ( உபயோகபடுத்திக்குங்க..)

ராஜா
14-10-2007, 02:11 PM
இந்தாப்பா.. நீ மொக்கையோட மகன் தானே..? உங்க வீட்டுல குட்டிப்பாப்பா பிறந்திருக்காமே.. தம்பியா... தங்கச்சியா..?

தெரியலை மாமா.. அதுக்கு இன்னும் எங்கம்மா ட்ரெஸ் போட்டு விடலே..!
_________________

இந்தாப்பா.. நீ மொக்கையோட மகன் தானே..? உங்க வீட்டுல குட்டிப்பாப்பா பிறந்திருக்காமே.. அது பேர் என்ன..?

தெரியலே ஆண்ட்டி.. இன்னும் அது பேச ஆரம்பிக்கலே... பேசறப்போதான் கேட்க முடியும்.. உன் பேர் என்னன்னு..!
__________________

ஹலோ.. மொக்கையா..? சென்னையிலிருந்து உன் பக்கத்து வீட்டுக்காரன் பேசறேன்.. நம்ப ஊர்ல வானம் எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லேன்..

[சிறிது நேரம் கழித்து..]

வானம் எப்படியிருக்குன்னு தெரியலப்பா.. ஒரே மேகமா மறைச்சுட்டு இருக்கு..!
___________________

டேய்.. மொக்கை.. குடை அழகா இருக்கே.. ஏதுடா..?

என் தங்கையோட கிஃப்ட்..!

உனக்குதான் தங்கையே கிடையாதே..?

அந்தக் குடையில் அப்படிதான் போட்டிருக்கு..!
___________________

இன்றைய தத்துவம்..

நடிகன் : தன் இயல்பான குணத்தைத் தவிர மற்ற எல்லோரைப் போலவும் காட்டிக்கொள்ள ஆசைப்படுபவன்.
____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 15-10-07.

மலர்
15-10-2007, 04:11 AM
ராஜா அண்ணா.. மொக்கைக்கு ஜோடி கிடைக்கலன்னு வருத்தபட்டீங்கள்ள.. இங்க பாருங்க நம்ப மன்றத்துலயே ஒன்னு இருக்குது..?! ( உபயோகபடுத்திக்குங்க..)

ஓ பிட்டு எடுத்து குடுக்கிறீங்களா...???
ஆனால் எங்க ராஜா அண்ணா ரொம்ப நல்லவரு....

(ஏய் சுகு....
இரு உன்னை
நான் சினிமா விளையாட்டில் கவனிச்சிக்கிறேன்....)

சுகந்தப்ரீதன்
15-10-2007, 04:22 AM
நன்றி ஆத்தா... என்ன கவனிக்க ஆளில்லன்னு நான் கூட வருத்தபட்டேன்.. வாங்கோ வாங்கோ...!?

மலர்
15-10-2007, 04:35 AM
இந்தாப்பா.. நீ மொக்கையோட மகன் தானே..? உங்க வீட்டுல குட்டிப்பாப்பா பிறந்திருக்காமே.. தம்பியா... தங்கச்சியா..?

தெரியலை மாமா.. அதுக்கு இன்னும் எங்கம்மா ட்ரெஸ் போட்டு விடலே..!

இன்றைய தத்துவம்..

நடிகன் : தன் இயல்பான குணத்தைத் தவிர மற்ற எல்லோரைப் போலவும் காட்டிக்கொள்ள ஆசைப்படுபவன்.____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 15-10-07.

ஹா...ஹா... மொக்கையோட. மொத்த பேமிலியையே வம்பிக்கு இழுப்பது நியாயமா.....அண்ணா

நகைச்சுவையோட
தத்துவமும் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா,,,,
வாழ்த்துக்கள்...அண்ணா....

சுகந்தப்ரீதன்
15-10-2007, 04:40 AM
நல்லா கவனிச்சியா மலர்.. நம்ப ராஜா அண்ணா.. மொக்கையோட ஜோடிய இழுக்கவே இல்லன்னு..( நீ தப்பிச்சிட்ட..)

ராஜா
15-10-2007, 03:14 PM
ஒருவர் : இதுதான் நானே ஆரம்பிச்சிருக்கிற புது போஸ்டாபீஸ்!

மற்றவர் : கார்டு, கவரெல்லாம் கிடைக்குமா?

ஒருவர் : அதெல்லாம் வர கொஞ்சம் நாளாகும். இப்போதைக்கு மணியார்டர் மட்டும்தான் பண்ண முடியும்!
_________________

டாக்டர்! எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணனும்...!"

"ஸாரி. நான் ஆபரேஷன் மட்டும்தான் பண்ணுவேன்.... காரியம் நீங்கதான் செய்யணும்!
_________________

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.
_________________

"எல்லாரும் பேசி முடிச்சாச்சு.... தலைவர் எதுக்கு இன்னமும் வெயிட் பண்றார்?"

"அவர் கணக்குபடி இன்னும் ரெண்டு பொன்னாடை வரணுமாம்!"
_________________

சிறுவன் : "அந்த மாமா உங்க கிட்டே 'ஐலவ்யூ'ன்னு சொல்லச் சொன்னாருக்கா!"

அவள் : "சரி, நான் அவர்கிட்ட 'ஐ வள் யூ'ன்னு சொல்லச் சொன்னேன்னு சொல்லிடு!"
_________________

இன்றைய தத்துவம்...

நடிகை : உயரத்தில் வளர்வதை நிறுத்திக்கொண்டு பக்கவாட்டில் வளர ஆரம்பிப்பவள்...!
____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 16-10-07.

மலர்
15-10-2007, 05:58 PM
டாக்டர்! எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணனும்...!"

"ஸாரி. நான் ஆபரேஷன் மட்டும்தான் பண்ணுவேன்.... காரியம் நீங்கதான் செய்யணும்!
____________________________________________
இன்றைய தத்துவம்...

நடிகை : உயரத்தில் வளர்வதை நிறுத்திக்கொண்டு பக்கவாட்டில் வளர ஆரம்பிப்பவள்...!
____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 16-10-07.

ராஜா அண்ணா....
அப்படின்னா பேஷ்ண்டுக்கு காரியம் நிச்சயமா.....
ரொம்ப நல்ல டாக்டரா இருக்காரே.....

அடுத்து அண்ணா....
இன்றைய தத்துவத்துக்கு ஏதாவது பொருள் உண்டா...
எனக்கு புரியலை.....

சுகந்தப்ரீதன்
16-10-2007, 05:34 AM
சிறுவன் : "அந்த மாமா உங்க கிட்டே 'ஐலவ்யூ'ன்னு சொல்லச் சொன்னாருக்கா!"

அவள் : "சரி, நான் அவர்கிட்ட 'ஐ வள் யூ'ன்னு சொல்லச் சொன்னேன்னு சொல்லிடு!"

அண்ணா.. அடியேனுக்கும் ஒரு சந்தேகம்.. "ஐ வள் யூ" ன்னா இன்னா அண்ணா..?

மலர்
16-10-2007, 08:12 AM
அண்ணா.. அடியேனுக்கும் ஒரு சந்தேகம்.. "ஐ வள் யூ" ன்னா இன்னா அண்ணா..?

இதுவா........??
இது கூட உனக்கு தெரியாதா...........???
...
..
...
..
...
..
..
..

எனக்கும் தெரியாது..:D

ராஜா
16-10-2007, 08:28 AM
விழுந்து பிடுங்குறாளாமாம்..

[லவ் <> வள் >>> ஓசை நயம்..]

மலர்
16-10-2007, 08:34 AM
விழுந்து பிடுங்குறாளாமாம்..

[லவ் <> வள் >>> ஓசை நயம்..]

மக்கு சுகு இப்பவாவது தெரிஞ்சிக்கோ....
நன்றி ராஜா அண்ணா

சுகந்தப்ரீதன்
16-10-2007, 08:48 AM
மக்கு சுகு இப்பவாவது தெரிஞ்சிக்கோ....
நன்றி ராஜா அண்ணா
தெரிஞ்சுகிட்டேன்...ருக்கு..! நன்றி ராஜா அண்ணாவுக்கு மட்டும்..!

மலர்
16-10-2007, 08:52 AM
தெரிஞ்சுகிட்டேன்...ருக்கு..! நன்றி ராஜா அண்ணாவுக்கு மட்டும்..!

இதெல்லாம் அநியாயம்டா....

ராஜா
16-10-2007, 08:58 AM
சுக்கு [சுகந்தன்], மக்கு [மலர்] ரவுசு, நம்ம ரவுசத்தாண்டிரும் போல இருக்கே...?

என்ன சொல்றீங்க லொக்கு..[லொள்ளு வாத்தி]..?

நுரையீரல்
16-10-2007, 09:10 AM
இன்றைய தத்துவம்...
நடிகை : உயரத்தில் வளர்வதை நிறுத்திக்கொண்டு பக்கவாட்டில் வளர ஆரம்பிப்பவள்...!
இன்றைய தத்துவத்துக்கு ஏதாவது பொருள் உண்டா...
எனக்கு புரியலை.....
முன்னால் நடிகை: தான் நடிகையாக இருக்கும் காலத்தில் உடற்பயிற்சி மற்றும் நடனமாடி உடலை பிட்னெஸாக வைத்திருப்பவள். சினிமா சான்ஸ் முடிந்ததும் உப்பி விடுவார்கள். (உ.ம்: நளினி, அம்மா, மஞ்சுளா, கே.ஆர். விஜயா......)

நிகழ்கால நடிகை: (உ.ம்: மும்தாஜ், நமீதா....) எங்களைப் போன்ற ரசிகர்களின் வேண்டுகோளுக்காக உப்பி இருக்கிறார்கள். ராஜாண்ணா...... உங்களையும் வேண்டுகோள் விடுபவர் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளட்டுமாண்ணே.......

அன்புரசிகன்
16-10-2007, 09:15 AM
ஒருவர் : இதுதான் நானே ஆரம்பிச்சிருக்கிற புது போஸ்டாபீஸ்!
மற்றவர் : கார்டு, கவரெல்லாம் கிடைக்குமா?
ஒருவர் : அதெல்லாம் வர கொஞ்சம் நாளாகும். இப்போதைக்கு மணியார்டர் மட்டும்தான் பண்ண முடியும்!

நல்லாப்புரியுது....அப்போ மணியாடருக்கு 111 தான்ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.

மாணவன் கெட்டிக்காரன் போலிருக்கிறானே...

சூப்பர் மாப்பு....

ராஜா
16-10-2007, 03:00 PM
கிளி ஏன் 'கீ கீ'ன்னு கத்துது?"

"அதோட கூண்டுச் சாவி தொலைஞ்சு போச்சாம்!"
_____________________________

"பிச்சை கேட்க ஆபீசிற்கா வருவது?"

"வீட்டிலே போய் கேட்டேன். ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே!"
______________________________

"இவன்தான் குற்றவாளின்னு ஒப்புக் கொள்கிறானே... நீங்கள் ஏன் இல்லேன்னு வாதாடுறீங்க?"

"யுவர் ஆனர்... இவன் பெரிய கேடி. இவனை நம்பவே கூடாது"
_____________________________

ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"

"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!"
_____________________________

இன்றைய தத்துவம்:

தற்பெருமைக் காரன் : நீங்கள் உங்களைப் பற்றி என்னென்னவெல்லாம் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவ்வளவு தகுதிகளும் தனக்கு இருப்பதாக உங்களிடம் பெருமை அடித்துக் கொள்பவன்.
_______________________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம். 17-10-07.

அக்னி
17-10-2007, 01:46 AM
அட ரவுசு பக்கத்தில் ரவுசு தத்துவங்களும் வரத் தொடங்கிவிட்டனவே...
நடக்கட்டும்... நடக்கட்டும்...
சுக்கு, மக்கு நல்ல காரெக்டர்கள் போலிருக்கே ராஜா அண்ணா... கவனத்திற்கொள்ளுங்க...

ராஜா
17-10-2007, 04:34 PM
இன்று..

இந்த..

ரவுசு திரியைப்...

பார்வையிட்ட...

300 ஆவது சொந்தத்துக்கும்...

அதற்கு அடிப்படையாக இருந்த..

ஏனைய...

299 உறவுகளுக்கும்...

நன்றி..! நன்றி..!! நன்றி.. !!!.முந்தியெல்லாம் அடிக்கடி எங்க பியூட்டி பார்லருக்க வருவீங்க ஏன் நிறுத்திட்டீங்க?"

"எதிர்த்த மாடி வீட்டு பையனுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு!"
_________________

"இப்ப நான் சொல்லப் போறது ரொம்ப பரம ரகசியம்... யார்கிட்டேயும் மறந்து போய்ச் சொல்லிடாதே... முக்கியமா குமார்கிட்ட சொல்லிடாதே..."

"ஏன்?"

"அவன்கிட்ட ஏற்கெனவே சொல்லிட்டேன்...!"
_________________

"புதுப் படம் எடுக்கறதுக்கு நல்ல 'நாட்' உள்ள ஒரு கதையை யோசிச்சு யோசிச்சுக் கடைசியில திடீர்னு செத்துட்டார் சார் இவரு!"

"ஓ... 'நாட்'டுக்காக உயிரையே விட்டவர்னு சொல்லுங்க!"
_________________

"என்ன சொல்றீங்க, உங்களுக்குக் 'காதுல வியாழனா'..? என்ன சொல்லறீங்கன்னு புரியலையே!"

" 'நாக்குல சனி'னு சொல்லி ரொம்பப் போரடிச்சிடுச்சு... அதான்!"
_________________

நேற்றைய, "இன்றைய தத்துவம்" தொடர்ச்சி..

பொறாமைக்காரன் : உங்கள் உயர்வான தகுதிகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவற்றை ஈடுபாடு இல்லாமல் கேட்பவன்.
___________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம். 18-10-07.

மலர்
17-10-2007, 04:42 PM
நான் தான் முதல்ல சொல்லுவேன்....
இப்படி ஒரு அருமையான திரியை துவக்கியமைக்கு,,,,,
முதல்ல ராஜா அண்ணாவுக்கு நன்றி,,,

அடுத்து பார்வையிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்...

மீனாகுமார்
17-10-2007, 04:53 PM
நல்ல வெற்றிச் சாதனை இது.. வாழ்த்துகள் ராஜா அண்ணா...

நேசம்
17-10-2007, 07:43 PM
ஆச்சரிய படுவதற்கு ஒன்றுமில்லை. அருமையான உங்களுடைய பங்களிப்பு தான் இந்த திரிக்கு வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் ராஜா

ராஜா
18-10-2007, 05:48 AM
நன்றி மலர், மீனா குமார், நேசம்..!

சுகந்தப்ரீதன்
18-10-2007, 06:06 AM
அண்ணா நீங்க கொடுத்த சுக்கு காப்பியில சுகமா தூங்கிட்டேன்.. அதான் உடனெ வர முடியல.. அதுக்குல்ல மக்கு முந்திக்கிச்சு...! ஆனாலும் என்னோட நன்றிதான் உங்களுக்கு பெருசா இருக்கனும்..!
முந்தியெல்லாம் அடிக்கடி எங்க பியூட்டி பார்லருக்க வருவீங்க ஏன் நிறுத்திட்டீங்க?"

"எதிர்த்த மாடி வீட்டு பையனுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு!"
.
எல்லா பொன்னுங்களும் மாடிவிட்டுல இருக்கவ்னதான்யா பாக்குதுங்க கீழ் ஊட்டுல இருக்குற நாங்க எல்லாம் இதுங்களுக்கு தெரியவே மாட்டோமாட்டுக்கு..?

மலர்
18-10-2007, 06:12 AM
அண்ணா நீங்க கொடுத்த சுக்கு காப்பியில சுகமா தூங்கிட்டேன்.. அதான் உடனெ வர முடியல.. அதுக்குல்ல மக்கு முந்திக்கிச்சு...! ஆனாலும் என்னோட நன்றிதான் உங்களுக்கு பெருசா இருக்கனும்..!
எல்லா பொன்னுங்களும் மாடிவிட்டுல இருக்கவ்னதான்யா பாக்குதுங்க கீழ் ஊட்டுல இருக்குற நாங்க எல்லாம் இதுங்களுக்கு தெரியவே மாட்டோமாட்டுக்கு..?

சுகு நீ என்னதான் பெரிசா போட்டாலும்
நான் தான் முதல்ல போட்டேன் ............:icon_rollout::icon_rollout:

அடப்பாவி கீழ்வீட்டுல இருக்கவனுக்கு கலியாணம்
ஆயிடிச்சே...
பின்ன எப்படி பாக்கதாம்...............????:D:D

சுகந்தப்ரீதன்
18-10-2007, 06:20 AM
அடப்பாவி கீழ்வீட்டுல இருக்கவனுக்கு கலியாணம்
ஆயிடிச்சே...
பின்ன எப்படி பாக்கதாம்...............????:D:D

நான் உங்க எதிர்த்த வீட்டுக்கு கீழ இருக்கவன சொல்ல மக்கு... உங்க வீட்டுக்கு கீழ இருக்குறவன சொன்னென்...!

ராஜா
18-10-2007, 06:42 AM
உங்க சண்டைக்கு நான் வரலப்பா.. ஆளை விடுங்க..!

அக்னி
18-10-2007, 07:04 AM
ரவுசு திரியில் அனுதினமும் எங்களுக்கு கலகலப்பைத் தரும்
ராஜா அண்ணாவுக்கும்,
வெற்றித்திரியாக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் (உனக்கும் தாண்டா அக்னி...),
வாழ்த்துக்கள்... நன்றிகள்... பாராட்டுக்கள்...

சிவா.ஜி
18-10-2007, 07:44 AM
அசத்தல் திரியின்னா அது ராஜா சார் திரிதான்.எல்லோரையும் சிரிக்கவைக்கும் திரியின் பிதாமகன் ராஜா சாருக்கு வாழ்த்துக்கள்.

அமரன்
18-10-2007, 07:50 AM
இளசு அண்ணா சொன்னது போல வராது வந்த மாணியான சிலரில் ஒருவரான ரவுசு அண்ணா ஏற்றிய சுடரை, சுடர்விட்டுப்பொலிய வைப்பதற்கு, அவர் பொழிந்த நெய்கள் கலன்களில் அடக்க முடியாது. உணரும் அயர்ச்சி இத்திரி கண்டால் புறமுதுகு காட்டி ஓடும். அப்படியான மகத்தான இத்திரிக்கு சொந்தக்காரனான அண்ணாவுக்கும் அப்பப்போ பயன்பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்தும் நன்றியும்

அக்னி
18-10-2007, 07:54 AM
அசத்தல் திரியின்னா அது ராஜா சார் திரிதான்.எல்லோரையும் சிரிக்கவைக்கும் திரியின் பிதாமகன் ராஜா சாருக்கு வாழ்த்துக்கள்.
திட்டுறாங்களா... வாழ்த்துறாங்களா...
:icon_hmm::icon_hmm::icon_hmm:
ஒண்ணுமா புரியலையே....
அப்ப்ப்ப்ப்பாடா... வந்த வேல முடிஞ்சிடுச்சு... :whistling::sport-smiley-018::whistling::sport-smiley-018:

ராஜா
18-10-2007, 08:15 AM
அனைவருக்கும் நன்றி..!

ராஜா
18-10-2007, 08:19 AM
திட்டுறாங்களா... வாழ்த்துறாங்களா...
:icon_hmm::icon_hmm::icon_hmm:
ஒண்ணுமா புரியலையே....
அப்ப்ப்ப்ப்பாடா... வந்த வேல முடிஞ்சிடுச்சு... :whistling::sport-smiley-018::whistling::sport-smiley-018:

அக்னின்னு சரியான பேருதான் வச்சுருக்கீங்க தம்பி..!

பத்த வச்சுகிட்டும், கொளுத்தி போட்டுகிட்டும் திரியறீங்களே..!

[சும்மா.. தமாஷ்.. நம் அக்னியை எனக்குத் தெரியாதா..?]

சிவா.ஜி
18-10-2007, 08:19 AM
அடடா......இந்த விளக்கம் வீராசாமிங்க தொல்லைத் தாங்க முடியலையே...எதைச் சொன்னாலும் அதுல ஒரு துணுக்கை கண்டுபிடித்துவிடுகிறார்களப்பா...அதிலயும் வர வர இந்த அக்னி தொல்லைத் தாங்க முடியலை. மழை வர்றதுக்கு யாகம் பண்ண வேண்டியிருக்குன்னு நினைக்கிறேன்.பிதாமகனுக்கு....வில்லங்கமா...?ஸ்..அப்பாடா...என்னது இது

ராஜா
18-10-2007, 05:12 PM
"அந்த கோவில் உண்டியல்ல யாரோ கள்ளநோட்டுக் கட்டைப் போட்டுட்டாங்க போலிருக்கு..."

"எப்படிச் சொல்றே?"

"ஐநூறு ரூபாய் நோட்டுல விபூதி குங்குமம் மடிச்சுத் தர்றாங்களே"
_________________

"நடிப்பை விட்டுட்டு திடீர்னு அரசியலுக்கு வர காரணம் என்ன?"

"நம்மளோட நடிப்பு உடனடியா மக்கள்கிட்டே போய்ச் சேரணும்ங்கிற ஆசைதான்."
_________________

"ஹலோ மளிகைக் கடைங்களா? கதவு வேணும் இன்னிக்கே டெலிவரி கிடைக்குமா?"

"அதுக்கெதுக்குங்க எங்களுக்கு போன் பண்ணிணீங்க?"

"நீங்கதானே இலவச டோர் டெலிவரிக்கு அணுகவும்ன்னு விளம்பரம் கொடுத்திருக்கீங்க?"
_________________

"என்னங்க, ஒரு குட் நியூஸ்! இருந்த ஒண்ணரை லிட்டர் பாலையும் பூனை குடிச்சிடுச்சு!"

"சரி, சரி! எதிர்வீட்டு நியூஸையெல்லாம் எதுக்கு என்னிடம் சொல்லித் தொலைக்கறே?"
_________________

இன்றைய தத்துவம்...

நாகரீக சமுதாயம் : அதிகமாக இருக்க வேண்டிய அம்சங்கள் குறைவாகவும், குறைவாக இருந்தே தீரவேண்டியவை அதிகமாகவும் இருக்கும் இடம்.
_________________________________________________
தமிழ் ஜோக்ஸ்.. நகைச்சுவைத் தனியினம். 19-10-07.

அக்னி
18-10-2007, 06:15 PM
சூப்பர் ஜோக்குகளோடு,

நாகரீக சமுதாயம் : அதிகமாக இருக்க வேண்டிய அம்சங்கள் குறைவாகவும், குறைவாக இருந்தே தீரவேண்டியவை அதிகமாகவும் இருக்கும் இடம்.

அசத்தல் தத்துவம்...
உண்மைதான் ராஜா அண்ணா...
நாகரீகம் என்ற பெயரில், சமுதாயம் சிதைந்துகொண்டே போகின்றது...
உங்களின் வார்த்தையில் சொன்னால்...
நச்...

பென்ஸ்
18-10-2007, 07:08 PM
300 பேர் வந்து பார்க்கும் அளவுக்கு நல்ல திரியை கொடுத்த உங்களுக்கு அல்லவா நாங்கள் நன்றி சொல்லவேண்டும்...

மிக்க நன்றி ராஜா...

அறிஞர்
18-10-2007, 07:26 PM
பெரிய வெற்றி.... தளராமல்.. கொடுக்கும்.. உமக்கு நன்றி ராஜா..

தங்கள் பதிவை பலரை கவர்ந்துள்ளது.. இன்னும் பலரை கவரட்டும்.....

கஜினி
19-10-2007, 06:42 AM
என்னோட சேர்த்து 301 ஆ ஆகட்டும்.

ராஜா
19-10-2007, 07:00 AM
நன்றி கஜினி..!

ராஜா
19-10-2007, 04:38 PM
"பேங்க்ல பணத்தை கொள்ளையடிச்சே சரி... போகும்போது மானேஜர் வழுக்கைத் தலையில ஏன் ரெண்டு குட்டி குட்டினே?"

"பணம் மட்டுமே ஒரு மனுஷனுக்கு சந்தோஷம் தந்துடாது எசமான்!"
_________________

"கற்பனைசக்தி அதிகமா இருக்குறதால இந்த பத்திரிகையில என் கதை...

"பிரசுரமாகியிருக்கா?"

"ஊஹூம்! பிரசுரமாகியிருக்குறதா கற்பனை பண்ணிக்கச் சொல்லி ஆசிரியர்கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு!"
_________________

"செத்துப்போன உங்க அம்மா, நம்ம வீட்ல ஆவியா நடமாடறாங்க!"

"என்னடி சொல்றே?"

"ஆமாங்க... நான் மெகா சீரியல் பார்க்கறப்ப என்கூட இன்னொருத்தரும் சேர்ந்து அழற சத்தம் கேட்குது!"
_________________

"சாமியார் பூர்வாசிரமத்திலே வங்கிகள்கிட்டே நிறைய லோன் வாங்கினவராமே?"

"இப்ப இவருக்கு இருக்கிற நூற்றுக்கணக்கான சிஷ்யனுங்களெல்லாம் யாருன்னு நினைக்கிறீங்க? லோன் வசூல் பண்ண வந்துஇங்கேயே தங்கிவிட்ட பாங்கி அதிகாரிகள்தான். வசூல் பண்ணாம வரக்கூடாதுன்னு ஹெட் ஆபீஸ்லே சொல்லிட்டாங்க!"
_________________

இன்றைய தத்துவம்...

உள்ளுணர்வு : ஒரு செயலை செய்யாதே என்று உங்களுக்கு உணர்த்தும் குரல் : பெரும்பாலான சமயங்களில் அந்தத் தவறை நீங்கள் செய்து முடித்த பிறகு..!
____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 20-10-07

மலர்
20-10-2007, 12:24 PM
"பேங்க்ல பணத்தை கொள்ளையடிச்சே சரி... போகும்போது மானேஜர் வழுக்கைத் தலையில ஏன் ரெண்டு குட்டி குட்டினே?"

"பணம் மட்டுமே ஒரு மனுஷனுக்கு சந்தோஷம் தந்துடாது எசமான்!"

ஹீ..ஹீ.....
எனக்கும் லேசா தொட்டுப்பாக்கணுன்னு இல்லைன்னா லைட்டா ஒரு கொட்டு கொட்டணுன்னு ஆசையா தான் இருக்கும்

இன்றைய தத்துவம்...
உள்ளுணர்வு : ஒரு செயலை செய்யாதே என்று உங்களுக்கு உணர்த்தும் குரல் : பெரும்பாலான சமயங்களில் அந்தத் தவறை நீங்கள் செய்து முடித்த பிறகு..!

நான் எல்லாம் பலமுறை அந்த சத்தததை ஒதுக்கி
பின்னால் கஷ்டப்பட்டுள்ளேன்

ராஜா
21-10-2007, 05:14 PM
"வாடகைக்கு வீடு பார்க்கறீங்களாமே, எப்படிப்பட்ட வீடா பார்க்கறீங்க?"

"உள்ளே கொலையே நடந்தாலும் அக்கம் பக்கம் யாருக்கும் தெரியக்கூடாது! கிடைக்குமா?"
_________________

"இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரைன்னுட்டு திரியறாரே... அவரென்ன செயின் ஸ்மோக்கரா?"

"இல்லை மெகா சீரியல் டைரக்டர்!"
_________________

"என்னங்க, அந்த அரசியல் தலைவர் மைக்கே இல்லாம பேசிக்கிட்டு இருக்காரு...?"

"நீங்க வேற சார், சமயத்துல மக்களே இல்லாமகூட அவரு பேசுவாரு"
_________________

"தினமும் கனவுலே சப்பை நடிகைங்கதான் வர்ராங்க. அவமானமாயிருக்கு."

"கண்ணை டக்குனு முழிச்சிடேன்."

"பக்கத்திலே படுத்திருக்கிறதைப் பார்க்கணுமே."
_________________

இன்றைய தத்துவம்..

சிக்கனம் : நீங்கள் விரும்பும் ஒரு பொருளை நாளைக்கு வாங்குவதற்காக, இன்று தேவைப்படும்போது அதை வாங்காமல் பணம் சேர்த்து வைப்பது.
__________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 22-10-07.

ஓவியன்
22-10-2007, 02:45 AM
"என்னங்க, அந்த அரசியல் தலைவர் மைக்கே இல்லாம பேசிக்கிட்டு இருக்காரு...?"

"நீங்க வேற சார், சமயத்துல மக்களே இல்லாமகூட அவரு பேசுவாரு"

ஹீ,ஹீ அசத்தல் அரசியல்வாதி......!!!

300 பயணாளர் இரசித்த திரியை நானும் இரசிப்பதில் கொள்ளை மகிழ்ச்சி, மகிழ்சி தந்த இராஜா அண்னனுக்கு என் நன்றிகள் கோடி...!!

சுகந்தப்ரீதன்
22-10-2007, 04:40 AM
"வாடகைக்கு வீடு பார்க்கறீங்களாமே, எப்படிப்பட்ட வீடா பார்க்கறீங்க?"

"உள்ளே கொலையே நடந்தாலும் அக்கம் பக்கம் யாருக்கும் தெரியக்கூடாது! கிடைக்குமா?"
.
கிடைக்குமா அண்ணா..? கிடைச்சா சொல்லுங்க எனக்கும் ஒன்னு வேணும்..!:icon_rollout:

ராஜா
22-10-2007, 03:20 PM
"என்னது? ஒரு சினிமாப் பாட்டை முணு முணுத்ததுக்காக மேனேஜர் 'மெமோ' கொடுத்துட்டாரா?"

"அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கற! அந்தாளுக்கு 'சொட்டைத் தலை'ன்றது ஞாபகமில்லாம, 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்'னு பாடித் தொலைச்சுட்டேன்!"
_________________

"உங்க படத்தைப் பார்த்து, ஒரு பழக்கத்தையே விட்டுட்டேன், சார்!"

"வெரிகுட்! என்ன பழக்கம்?"

"படம் பார்க்கற பழக்கம்தான்."
_________________

"பூட்டு வியாபாரம் செய்யலாம்னு இருக்கேன் சார்..!"

"அப்படியா.. பெஸ்ட் ஆப் லாக்!"
_________________

"டாக்டர் நீங்க ஆபரேஷன் பண்ணினதுல இருந்து, எனக்கு ஒரே தும்மலா வருது."

"அடடா. என்னோட பொடி டப்பா உங்க வயித்துலதான் இருக்கா?"
_________________

"பக்கத்து வீட்டுக்காரன் பூனைக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறான்."

"தூக்கி வைச்சிட்டுக் கொஞ்சறாரா?"

"எலியைப் பிடித்துக் கொண்டு வந்து ஊட்டி விடறான்!"
_________________

இன்றைய தத்துவம்..

அடுத்த வீட்டுக்காரன் : உங்களுக்கு இருக்கும் பிரச்னைகளையும், சிக்கல்களையும் உங்களைவிட அதிகமாக அறிந்து வைத்திருப்பவன்.
____________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம்.23-10-07.

மனோஜ்
22-10-2007, 06:09 PM
"பக்கத்து வீட்டுக்காரன் பூனைக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறான்."

"தூக்கி வைச்சிட்டுக் கொஞ்சறாரா?"

"எலியைப் பிடித்துக் கொண்டு வந்து ஊட்டி விடறான்!"
அனைத்தும் அருமை மனது ரிலாக்ஸ் ஆனது நன்றி அண்ணா
303 வாசகர்கள் வாழ்த்துக்கள் வெற்றி திரிக்கு

mgandhi
22-10-2007, 06:56 PM
[COLOR="DarkRedஇன்றைய தத்துவம்..

அடுத்த வீட்டுக்காரன் : உங்களுக்கு இருக்கும் பிரச்னைகளையும், சிக்கல்களையும் உங்களைவிட அதிகமாக அறிந்து வைத்திருப்பவன்.
[/COLOR]
த்ததுவத்திர்க்கு நன்றி ஐய்யா

அன்புரசிகன்
22-10-2007, 07:57 PM
"என்னது? ஒரு சினிமாப் பாட்டை முணு முணுத்ததுக்காக மேனேஜர் 'மெமோ' கொடுத்துட்டாரா?"

"அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கற! அந்தாளுக்கு 'சொட்டைத் தலை'ன்றது ஞாபகமில்லாம, 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்'னு பாடித் தொலைச்சுட்டேன்!"

இதிலும் பார்க்க... ஒளியிலே தெரிவது உன் மொட்டந்தலையா என்று நேரடியாக பாடி வெளியில் வந்திருக்கலாம்."உங்க படத்தைப் பார்த்து, ஒரு பழக்கத்தையே விட்டுட்டேன், சார்!"
"வெரிகுட்! என்ன பழக்கம்?"
"படம் பார்க்கற பழக்கம்தான்."

குட் பொலிஸி...
"பூட்டு வியாபாரம் செய்யலாம்னு இருக்கேன் சார்..!"
"அப்படியா.. பெஸ்ட் ஆப் லாக்!"

திருடன் வந்தால் பெட்டர் லாக் நெக்ஸ்ட் டைம் என்று சொல்லியிருப்பான்.
"டாக்டர் நீங்க ஆபரேஷன் பண்ணினதுல இருந்து, எனக்கு ஒரே தும்மலா வருது."
"அடடா. என்னோட பொடி டப்பா உங்க வயித்துலதான் இருக்கா?"

நல்லவேளை... சகுனப்பிழையான நேரத்தில் ஆபரேஷன் செய்துவிட்டேன் என்று சொல்லவில்லை..."பக்கத்து வீட்டுக்காரன் பூனைக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறான்."
"தூக்கி வைச்சிட்டுக் கொஞ்சறாரா?"
"எலியைப் பிடித்துக் கொண்டு வந்து ஊட்டி விடறான்!"

இம்சை அரசன் 24ம் எலிகேசி...
இன்றைய தத்துவம்..

அடுத்த வீட்டுக்காரன் : உங்களுக்கு இருக்கும் பிரச்னைகளையும், சிக்கல்களையும் உங்களைவிட அதிகமாக அறிந்து வைத்திருப்பவன்.

தொலைஞ்சுது போங்க...

சூப்பர் மாப்பு...:icon_b:

அக்னி
23-10-2007, 02:35 AM
ராஜா அண்ணாவின் ரவுசுக்கு, பக்கவாத்தியம் வாசிக்கும் அன்புரசிகனின் ரவுசுகளும் சேர்ந்து,
மன்றத்தில் சிரிப்பலைகளை எழுப்புகின்றன...

ராஜா
23-10-2007, 03:48 AM
"பூட்டு வியாபாரம் செய்யலாம்னு இருக்கேன் சார்..!"
"அப்படியா.. பெஸ்ட் ஆப் லாக்!"
திருடன் வந்தால் பெட்டர் லாக் நெக்ஸ்ட் டைம் என்று சொல்லியிருப்பான்.
கொலை ரேட்..!

மாம்ஸ்.. உங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது..!

சுகந்தப்ரீதன்
23-10-2007, 10:31 AM
மாணவி 1 ; மங்காத்தா மார்க்க"பந்து"...!!!

அண்ணா ரொம்பவே என் வயித்த பதம் பாத்துடுச்சு உங்க ரவுசு பந்து... (விவகாரமான பிள்ளைங்க..) வாழ்த்துக்கள்..!

ராஜா
23-10-2007, 11:17 AM
அண்ணா ரொம்பவே என் வயித்த பதம் பாத்துடுச்சு உங்க ரவுசு பந்து... (விவகாரமான பிள்ளைங்க..) வாழ்த்துக்கள்..!

ஓ... நீங்க ஆரம்பத்தில் இருந்து பார்த்துகிட்டு வரீங்களோ..?

ராஜா
23-10-2007, 04:49 PM
"ச்சே! எப்ப பார்த்தாலும் மாமியாரைத் திட்டிக்கிட்டே இருக்கியே.. ஏண்டி..?!"

"நான் உங்க மாமியாரையா திட்டறேன்? என் மாமியாரைத் தானே திட்டறேன்?"
_________________

"மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?"

"பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்"
_________________

"வக்கீல் சார்... வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது."

"ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?"
_________________

இப்ப வரும் தர்மா மீட்டர்ல சிலது தப்பு தப்பா ஜுரம் காட்டுதாமே டாக்டர்?"

"ஆமாம். 'அதர்மா' மீட்டரா இருக்கு!"
_________________

"என்ன மொக்கை... பாதி ராத்திரியில் வீடேறி வந்து எழுப்பி எதுக்காக கோணிப் பை இருக்கான்னு கேட்கறீங்க?"

"எங்க வீட்டுக்கு வந்திருக்கிற திருடன்தான் கேட்கச் சொன்னான். திருடின பொருளை மூட்டை கட்ட வேணுமாம்...."
_________________

இன்றைய "ரவுசு" தத்துவம்..

நாட்டுப்பற்று மிக்கவன் : 9 விக்கெட் போன பிறகும், 20 பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்து தன் நாட்டு அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்பவன்.
____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 24-10-07.

mgandhi
23-10-2007, 06:32 PM
[COLOR="DarkRed_________________

"மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?"

"பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்"
_________________

.
[/COLOR]

நன்றி ராஜா

அக்னி
24-10-2007, 01:52 AM
கொலை ரேட்..!

மாம்ஸ்.. உங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது..!
அதெல்லாம் வுட்டுடுவாங்களா...
ராஜா அண்ணா,
உங்களுக்கு மட்டும் சொல்றன் வெளில சொல்லிடாதீங்க...
அன்புரசிகருக்கு பொண்ணு பாக்கறங்கன்னு,
புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன...

அதுக்கப்புறம், நீங்க மேல பட்ட கவலை தீர்ந்துடும்...

"நாட்டுப்பற்று மிக்கவன் : 9 விக்கெட் போன பிறகும், 20 பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்து தன் நாட்டு அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்பவன்.

சிற்றுவேசன் தத்துவம்... சூப்பர்...

ராஜா
24-10-2007, 02:55 PM
"இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா! யார் பேருக்கு?"

"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான். என் மறைவுக்குப் பிறகு அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!"
_________________

"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
_________________

"ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா! ஏன் நர்சம்மா இப்படி சொல்றீங்க?"

"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாத்தான் வருவாராம். அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்.. வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!
_________________

"பேய்னா அது சாதாரணமா பாழடைஞ்ச பங்களாலதானே இருக்கும்? இந்தப் பேய் மட்டும் ஏன் பாழடைஞ்ச குடிசையில இருக்கு?"

"இது ஏழைப் பேயாம்!"
_________________

இன்றைய "ரவுசு" தத்துவம்..

தலைவன் : தன்னலமற்ற தொண்டுக்கும், தியாகத்துக்கும் உங்களைத் தயார் படுத்தி பயனடைபவன்.
__________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம். 25-10-07

அறிஞர்
24-10-2007, 03:24 PM
இன்றைய "ரவுசு" தத்துவம்..

தலைவன் : தன்னலமற்ற தொண்டுக்கும், தியாகத்துக்கும் உங்களைத் தயார் படுத்தி பயனடைபவன்.

உண்மையான தொண்டனே.. நல்ல தலைவனாக பலரை வழி நடத்த இயலும்..

நன்றி.. ராஜா..

மன்மதன்
24-10-2007, 05:33 PM
"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

ஹாஹ்ஹா.. செம டைமிங்..

ராஜா
25-10-2007, 04:11 PM
மசால் தோசை, மைசூர் போண்டா எல்லாம் தின்னக் கூடாதுன்னு என்னைச் சொன்னது உடல் நலத்துக்காகத்தானே டாக்டர்?"

"ஆமாம். இதுல என்ன சந்தேகம்?"

"பொறாமையில சொல்லலியே?!"
_________________

"ஆறு மணிக்கு, ஹாய்யா....பெட் காபி குடிக்கலாம்னு ஆசையா மாடு வாங்கினேன்..."

"என்ன கஷ்டம் இப்போ?"

"அஞ்சு மணிக்கே எழுந்து அதுக்குத் தீனி வைக்க வேண்டியிருக்கே?"
_________________

"நம்ம வீட்டுப் பூனை டயட்ல இருக்கா?"

"ஏன் கேட்கறீங்க?"

"பாதி எலியைத் தானே திங்குது?"
_________________

"அக்கம் பக்கத்துலே கடன் வாங்கியாவது இப்ப சினிமா பார்த்தாகணுமா?"

"படம் எடுக்கறவங்களே கடன் வாங்கித் தாங்க எடுக்கறாங்க. அதனால இது ஒண்ணும் தப்பில்லே!"
_________________

குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு
டாக்டரைக் கேளுங்க."

"அவரை எதுக்கு கேட்கணும்?"

"டாக்டரை கேட்காம இந்தக் குழந்தைக்கு எதுவும்
தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க."
_________________

இன்றைய ரவுசு தத்துவம்...

பாதசாரி : நமக்கு மணி சொல்வதற்காகவே, கடிகாரம் கட்டிக்கொண்டு சாலையில் திரிபவன்.
__________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 26-10-07.

ஓவியன்
25-10-2007, 06:05 PM
மசால் தோசை, மைசூர் போண்டா எல்லாம் தின்னக் கூடாதுன்னு என்னைச் சொன்னது உடல் நலத்துக்காகத்தானே டாக்டர்?"

"ஆமாம். இதுல என்ன சந்தேகம்?"

"பொறாமையில சொல்லலியே?!"

ஹீ,ஹீ!!!
இப்படி பொறாமைப் படுற டாக்கர்கள் வேற இருப்பாங்க இல்லே, நான் இது வரை இது பற்றி சிந்திக்காமல் இருந்து விட்டேனே....!!

எச்சரித்தமைக்கு நன்றிகள் அண்ணா!! :D:D:D

மன்மதன்
25-10-2007, 07:18 PM
இன்றைய ரவுசு தத்துவம்...

பாதசாரி : நமக்கு மணி சொல்வதற்காகவே, கடிகாரம் கட்டிக்கொண்டு சாலையில் திரிபவன்.

ரவுசு தத்துவம் வெகு யதார்த்தம்..!

ஏறக்குறைய மன்றம் வந்த அனைவரும் படித்த ஒரே திரி இதுவாகத்தான் இருக்கும்.. பாராட்டுகள் ராஜா..

ராஜா
26-10-2007, 05:07 PM
பாராட்டியோர் அனைவருக்கும் நன்றி..!

ராஜா
26-10-2007, 05:08 PM
கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவங்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?

மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிரி இருக்காங்களே, அதான்!
_________________

நண்பர் : இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"

மொக்கை : "அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"
_________________

வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?

டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.
_________________

ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?

மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!
_________________

ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :

"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."
_________________

இன்றைய ரவுசு தத்துவம்..

கொடை வள்ளல்: உங்களிடம் இருந்து எடுத்த பணத்தில் ஒரு சிறுபகுதியை உங்களுக்கே திருப்பித் தந்து விளம்பரம் தேடிக் கொள்பவன்.
_________________________________________________
தமிழ் ஜோக்ஸ். ஆர்க்குட் நகைச்சுவைத் தனியினம். 27-10-07.

karikaalan
26-10-2007, 06:27 PM
"_________________

"ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா! ஏன் நர்சம்மா இப்படி சொல்றீங்க?"

"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாத்தான் வருவாராம். அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்.. வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!
_________________
25-10-07

ராஜாஜி

மெய்யாலுமே வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.. இரவு இந்த நேரத்திலும்... நன்றிகள்

===கரிகாலன்

யவனிகா
27-10-2007, 04:49 AM
என்னங்கண்ணா! இன்னைக்கு டாக்டர்களுக்கே ஆப்பரேசனா? நீங்க பெரிய அறுவையாளர் போங்கள்!

சுகந்தப்ரீதன்
27-10-2007, 06:44 AM
இன்றைய தத்துவம் ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா...! கலக்குங்க ராஜா(அண்ணா)

மனோஜ்
27-10-2007, 03:18 PM
இன்றைய ரவுசு தத்துவம்..

கொடை வள்ளல்: உங்களிடம் இருந்து எடுத்த பணத்தில் ஒரு சிறுபகுதியை உங்களுக்கே திருப்பித் தந்து விளம்பரம் தேடிக் கொள்பவன்.

.................நச்............:icon_b:

ஓவியன்
28-10-2007, 01:40 PM
.................நச்............:icon_b:

ஹா,ஹா!!!

ராஜா அண்ணாவுக்கே "நச்" ஆ...??

நடக்கட்டும், நடக்கட்டும் மக்களே...!! :):):)

ராஜா
28-10-2007, 03:11 PM
மிஸ்டர் மொக்கையின் மனைவி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு போன் செய்தார்..

"ஐயா.. தங்களிடம் 10,000 ரூபாய்க்கு இன்ஷ்யூர் செய்திருந்த குளிர்சாதன இயந்திரம் எரிந்து போய்விட்டது.. உடனடியாக 10000 ரூபாயை அனுப்பி வையுங்கள்.."

அப்படியெல்லாம் பணம் தரமாட்டோம் அம்மா.. எங்கள் ஆள் வந்து பார்ப்பார்..முடிந்தால் சரிசெய்து தருவார்..இல்லையெனில் அதைப் போல இன்னொரு இயந்திரம் புதிதாகத் தருவோம்.. இதுதான் எங்கள் நடைமுறை..

கொஞ்ச நேரம் நிதானித்து யோசித்த திருமதி மொக்கை சொன்னார்..

"இதுதான் உங்கள் நடைமுறை என்றால்.. என் கணவர் பெயரில் செய்த 5 லட்சம் ரூபாய் காப்பீட்டை நான் ரத்து செய்ய விரும்புகிறேன்..!"
_________________

மிஸ்டர் மொக்கைக்கு வழுக்கைத் தலை.. முடி திருத்துபவரிடம் சொன்னார்..

என் தலைக்கும் முடிவெட்ட நீ அதே காசு கேட்கிறாயே.. நியாயமா..?

நியாயமில்லைதான் அய்யா.. ஒவ்வொரு முடியையும் தேடிப்பிடித்து வெட்ட கூடுதல் பணம் வசூலிக்க வேண்டும்.. இருந்தாலும் நீங்கள் பழைய வாடிக்கையாளர் என்பதால், அதே கட்டணம்தான் வசூலிக்கிறோம்.
_________________

மிஸ்டர் மொக்கை குட்டி விமானத்தில் பயணம் செய்தார்.. சென்னையில் இருந்து விமானம் சீறிக் கிளம்பியது.. அப்போது விமானி அடக்கமுடியாமல் சிரித்தார்.. அருகிலிருந்த மொக்கை கேட்டார்..

அது என்ன தமாஷ் என்று சொன்னால் நாங்களும் சிரிப்போமுல்ல..?

"விமானி" சொன்னார்..

என்னை அறையில் காணாமல் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி இன்னேரம் என்ன அமர்க்களப் படுதோ..?
_________________

மிஸ்டர் மொக்கை குற்றவாளிக் கூண்டில்.. எதிர்தரப்பு வக்கீலிடம் நீதிபதி கேட்டார்..

இவர் குடித்துவிட்டு தன்னிலை மறந்தநிலையில் ரகளை செய்தார் என்று எப்படிக் கூறுகிறீர்கள்..?

யுவர் ஆனர்.. இவர் ஆட்டோ டிரைவரிடம் கட்டணத்தகராறு செய்ததை அனைவரும் பார்த்திருக்கிறார்கள்..

இது சகஜம்தானே.. இதில் என்ன தவறு..?

ஆனால் அங்கே ஆட்டோவோ, ஆட்டோ டிரைவரோ யாருமே இருக்கவில்லை யுவர் ஆனர்..!
_________________

இன்றைய ரவுசு தத்துவம்..

தத்துவம் : நீங்க புரிஞ்சுகிட்டா எஸ்.எம்.எஸ் ல வந்திருக்குன்னு அர்த்தம்.. புரியலேன்னா யாரோ பெரிய ஆள் சொன்னதுன்னு அர்த்தம்.
___________________________________________
தமிழ் ஜோக்ஸ்.ஆர்க்குட் நகைச்சுவைத் தனியினம்.29-10-07.

ஓவியன்
28-10-2007, 05:51 PM
இன்றைய ரவுசு தத்துவம்..

தத்துவம் : நீங்க புரிஞ்சுகிட்டா எஸ்.எம்.எஸ் ல வந்திருக்குன்னு அர்த்தம்.. புரியலேன்னா யாரோ பெரிய ஆள் சொன்னதுன்னு அர்த்தம்

நன்னா புரிஞ்சிடுச்சு...!!
கலக்கல் தத்துவம் ராஜா அண்ணா...!!! :icon_b:

ராஜா
29-10-2007, 04:49 PM
டாக்டர் : 37'ம் நம்பர் படுக்கையில் இருந்த பேஷண்ட் எப்படியிருக்கிறார்?

நர்ஸ் : அவருக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குது... டாக்டர்..

டாக்டர் : ஏன்? என்ன ஆயிற்று அவருக்கு?

நர்ஸ் : என்னைப் பிடிக்க ரூம் முழுவதும் சுற்றி ஓடியதால் ஏற்பட்ட களைப்பு!
_________________

ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!

டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!

நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.
_________________

"எனக்கு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் பிடிக்கும்."

"உன் காதலருக்கு...?"

"அவர் அரசியல்வாதியாச்சே... பித்தலாட்டம்தான்!"
_________________

"அய்யாவுக்கு ஒண்ணும் ஆகலியே?"

"நல்லாதான் இருக்கார். நீ எதுக்குடி கேக்கறே முனியம்மா?"

"நானும் அவரும் ஜாலி டூர் போன கார் மரத்துல மோதற மாதிரி கனவு கண்டேன். அதான்!"
_________________

இன்றைய ரவுசு தத்துவம்..

சொற்பொழிவு : 2 நிமிடத்தில் சொல்லக்கூடியதை 2 மணி நேரம் விரிவாகச் சொல்லுதல்..
____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 30-10-07.

mgandhi
29-10-2007, 06:03 PM
]_________________

ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!

டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!

நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.
_________________[/COLOR].

நன்றி ராஜா

மனோஜ்
29-10-2007, 08:03 PM
இன்றைய ரவுசு தத்துவம்..

சொற்பொழிவு : 2 நிமிடத்தில் சொல்லக்கூடியதை 2 மணி நேரம் விரிவாகச் சொல்லுதல்..
இது தான்னா உண்மையே உண்மை

ராஜா
30-10-2007, 02:23 PM
"உங்க மாமனார் தேர்தல்ல நின்னு தெருத் தெருவா பிரச்சாரம் பண்றாரு. வாக்குறுதியும் கொடுக்குறாரு. நீங்க பின்னாலயே போய் அவரு சொல்றதை எல்லாம் நம்பாதீங்கன்னு சொல்றீங்களே ஏன்?"

"கல்யாணத்தப்ப எனக்கு ஒரு மோட்டார் பைக், பிரிஜ், டி.வி. எல்லாம் வாங்கித் தர்றேன்னு சொல்லிட்டு வாங்கித் தராம ஏமாத்திட்டாரே!"
_________________

"யாருய்யா அது... இந்த நேரத்துல ஆராய்ச்சிமணி அடிக்கிறது?"

"மன்னா, அது ஆராய்ச்சிமணி இல்லை... வீதியிலே சோன்பப்படிக்காரன் போறான்..."
_________________

"நீங்கதான் கையில வாட்ச் கட்டிட்டு இருக்கீங்களே அப்புறம் எதுக்கு என்னை டைம் கேட்கறீங்க?"

"என்னோட டைம் இப்ப சரியில்லைன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு...!"
_________________

"என்னது, நீங்க ஆட்சி செய்த காலத்துல நீங்க செய்ததைச் சொல்லி நீங்களே ஓட்டு கேட்க முடியலையா? ஆனால் அதையே எதிர்க்கட்சிக்காரர்கள் சொல்லி ஓட்டு கேட்கிறாங்களா? அப்படி நீங்க என்ன செஞ்சீங்க?"

"ஊழல் செஞ்சோம்!"
_________________

இன்றைய ரவுசு தத்துவம்..

உங்க பேவரிட் ஆங்கில வார்த்தை: அதைவிடப் பொருத்தமான வேறு ஒரு சொல்லுக்கு சரியான ஸ்பெல்லிங் உங்களுக்கு தெரியாமல் இருப்பது..!
_____________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம். 31-10-07.

பூமகள்
30-10-2007, 02:37 PM
"நீங்கதான் கையில வாட்ச் கட்டிட்டு இருக்கீங்களே அப்புறம் எதுக்கு என்னை டைம் கேட்கறீங்க?"

"என்னோட டைம் இப்ப சரியில்லைன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு...!"
ஆஹா.... அருமையோ அருமை அண்ணா..!!
எப்படி ராஜா அண்ணா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க???!!!
பாராட்டுகள்..!

அன்புரசிகன்
30-10-2007, 04:29 PM
"உங்க மாமனார் தேர்தல்ல நின்னு தெருத் தெருவா பிரச்சாரம் பண்றாரு. வாக்குறுதியும் கொடுக்குறாரு. நீங்க பின்னாலயே போய் அவரு சொல்றதை எல்லாம் நம்பாதீங்கன்னு சொல்றீங்களே ஏன்?"
"கல்யாணத்தப்ப எனக்கு ஒரு மோட்டார் பைக், பிரிஜ், டி.வி. எல்லாம் வாங்கித் தர்றேன்னு சொல்லிட்டு வாங்கித் தராம ஏமாத்திட்டாரே!"

அதுக்குத்தானே ஒரு பென்ஸூ காரு தி-நகர் போத்தீஸூக்கு முன்னால பங்களா என்று தந்தேனே...."யாருய்யா அது... இந்த நேரத்துல ஆராய்ச்சிமணி அடிக்கிறது?"

நிச்சயமா அது நானில்ல... :D"நீங்கதான் கையில வாட்ச் கட்டிட்டு இருக்கீங்களே அப்புறம் எதுக்கு என்னை டைம் கேட்கறீங்க?"
"என்னோட டைம் இப்ப சரியில்லைன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு...!"

அப்போ நேரத்துக்கு இன்றĬ