PDA

View Full Version : ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11

அன்புரசிகன்
24-06-2007, 07:38 PM
மாப்பிள்ளையின் ரவுசுப்பக்கத்தில் 1000 ஆவது பதிவுகள் கடந்து செல்கிறது. 100 வது பக்கத்தையும் தாண்டி 101ல் காலடி எடுத்து வைத்துள்ளது.

இந்த தருணத்தில் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு இன்னமும் அனைவரின் வாழ்வுகளில் இன்பம் பிறக்கக்கூடியவாறு நகைச்சுவைகளை அள்ளித்தாருங்கள் என மாப்பிள்ளைக்கு அன்புக்கட்டளை இடுகிறேன்.

ஓவியன்
24-06-2007, 07:46 PM
ராஜா அண்ணா!

மன்றத்தில் ஆயிரம் பின்னூட்டத்தைத் தொட்ட:sport009: இந்த வெற்றிகரத் திரிக்கும் இதன் உரிமையாளரான உங்களிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

:4_1_8: :sport-smiley-014: :icon_clap: :nature-smiley-002: :party009: :icon_good: :aktion033: :icon_dance: :sport-smiley-018: :medium-smiley-080: :huepfen024: :huepfen024: :huepfen024:

ராஜா
25-06-2007, 03:58 AM
நன்றி நண்பர்களே..!

ராஜா
25-06-2007, 04:42 PM
வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...

அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?

அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..

நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..

இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!

பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. விலையைச் சொல்லு..!

சொன்ன கேளுங்க்.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!

வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..

புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!

எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..

கிளி. மீண்டும் சொல்லிற்று...

." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..

எஜமானிக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்தது..

இவ்வளவு அருமையான கிளியைப் பற்றி அவதூறு சொன்னானே கடைக்கார கடன்காரன்..கட்டையில போக..

சற்று நேரம் கழித்து கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...

புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு...
அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???
_________________

ராஜா
25-06-2007, 04:43 PM
ஒருவன் இறைவனை வேண்டி தவமிருந்தான்..

இறைவன் தோன்றி " என்ன வரம் வேண்டும் பக்தா ? " என்று நேரடியாக நிகழ்ச்சியை ஆரம்பித்தார்..

ஆண்டவா.. அமெரிக்காவில் என் மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க வான் வழிப் பாலம் ஒன்று அமைத்துக் கொடு.. நான் விரும்பிய சமயத்தில் காரில் சென்று திரும்ப வசதியாக இருக்கும்..என்றான்.

இறைவனோ.." பக்தா.. இது என்னால் முடியும் என்றாலும், எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா..? பெரிய தூண்கள் அமைத்து அதன் மேல் பாலம் உருவாக்க வேண்டும்..இது உன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயம்..
உனக்காக மட்டும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா..?
நீ கேட்கும் வரம் உனக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்க வேண்டும்.. உனக்கு புகழையும் எனக்கு மரியாதையும் தரும் படியாக ஒரு வரத்தைக் கேள்.. நன்றாக யோசி.. நாளை வருகிறேன்...

மறுநாள்.... நம்ம ஆள் கேட்டான்.. " இறைவா..எல்லாம் அறிந்தவனே..! நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா..!"

அதிர்ச்சியடைந்த இறைவன் சொன்னார்.." உனக்கு பாலம் மட்டும் போதுமா..இல்லே முழுக்க சோடியம் வேப்பர் விளக்கும் வேணுமா..???
_________________

அமரன்
25-06-2007, 04:53 PM
இன்றைய இரண்டும் கலக்கல் காமெடீஸ்..

ராஜா
26-06-2007, 04:44 PM
நன்றி அமர்..!

ராஜா
26-06-2007, 04:45 PM
வாங்க அடுத்த பக்கத்துக்குப் போவோம்..!

ராஜா
26-06-2007, 04:46 PM
ஒரு இந்திய அரசியல்வாதி ( எம்.பி.) அமெரிக்கா சென்ற போது அங்குள்ள அரசியல்வாதியின் (செனட்டர்) வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்..செனட்டரின் மாளிகையில் ஒவ்வொரு இடத்திலும் பொருட்செலவு மிக்க ஆடம்பரப் பொருட்கள் அணிவகுத்திருப்பதைக்க் கண்டார்.. ஆச்சர்ய மிகுதியில் செனட்டரைக் கேட்டார்..

"எப்படி இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்..?

செனட்டர், எம்.பி.யை அழைத்து ஜன்னலுக்கு வெளியே ஒன்றைக் காட்டினார்..

அது ஒரு பிரம்மாண்டமான தொங்கு பாலம்.. செனட்டர் சொன்னார்..

" 10 சதவீதம்...!"

எம்.பி. புரிந்துகொண்டார்.

பின்னர் ஒரு ஆண்டு கழித்து அதே செனட்டர் இந்தியா வந்தார்.. எம்.பி. விருந்துக்கழைக்க அவரது அரண்மனைக்கும் வந்தார்.. ஏராளமான நகைகள்.. வாகனங்கள்.. செருப்புகள்.. பிரமித்துப் போன செனட்டர் கேட்டார்..

"எப்படி இவ்வளவு பணம் செர்த்தீர்கள்..?"

எம்.பி. அவரை ஜன்னலுக்கு வெளியில் உள்ள பாலத்தைப் பார்க்க சொன்னார்..

" ஆனால்... அங்கு பாலம் எதுவும் இல்லையே..?"

எம்.பி. பெருமையுடன் சொன்னார்..

"100 சதவீதம்...!".

பின்னர் செனட்டருக்கு முதலுதவி செய்து மயக்கத்தை தெளிய வைக்க வேண்டியதாயிற்று...!
_________________

ராஜா
26-06-2007, 04:49 PM
ஒரு மருந்துக் கடையில் பெண்ணும் கடைக்காரரும்..

அய்யா சயனைட் இருக்கா..?

என்ன..? சயனைடா.. எதுக்கு..?

என் கணவனை கொல்லுவதற்கு..

அதெல்லாம் நாங்கள் தரக்கூடாது..அப்புறம் ரெண்டு பேரும் சிறைக்கு போகணும்..

இதைப் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க..( ஒரு புகைப்படத்தை காட்டுகிறாள்.. அதில் அவள் கணவனும் மருந்து கடைக்காரர் மனைவியும் ஒன்றாக உணவகத்தில் இருக்கிறார்கள்)

ஏம்மா.. மருந்து சீட்டு (prescription) இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..? இந்தா வாங்கிட்டு போ..!
_________________

ராஜா
26-06-2007, 04:51 PM
அது ஒரு விவாக ரத்து வழக்கு. மகள் 18 வயது வரை தாயிடமே வளரவேண்டும் என்றும், அதுவரை மகளின் பராமரிப்புக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கணவன் வழங்கி வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி 18 வயது நிறைவில் கடைசி தொகையை மகளிடம் கொடுத்த அப்பா சொன்னார்..

" கலா.. .. இதை உன் அம்மாவிடம் கொடு.. இதுதான் நான் தரும் கடைசி தொகை என்று நான் சொன்னதாக சொல்.. பின்னர் அவள் முகம் போகும் போக்கை பார்.. ஒரெ காமெடி்யா இருக்கும்..!"

மகள் அப்படியே செய்தாள்.. அப்பா சொன்னதையும் சொன்னாள்..

அம்மா எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் பதிலளித்தாள்...

"கலா.. அவர்ட்ட சொல்லு.. 18 வயசு வரைக்கும், தனக்கு பொறக்காத ஒரு பெண்ணுக்கு பராமரிப்பு தொகை கொடுத்ததுக்கு நான் நன்றி சொன்னேன்னு.. அப்புறம் அவர் முகம் போகும் போக்கைப் பார்.. ஒரே டிராஜடியா இருக்கும்..!"
_________________

ஓவியா
26-06-2007, 05:39 PM
ரொம்ப நாட்கள் கழித்து இன்றுதான் விடு பட்ட அனைத்தையும் படித்தேன்............சிரித்து சிரித்து வரு வலிதான் வந்தது.

மிக்க நன்றி ராஜா அண்ணா.

ராஜா
27-06-2007, 04:51 PM
மிஸ்டர் மொக்கை கார் ஓட்டிட்டு போகும்போது போலீஸ் தடுத்து நிறுத்திடுச்சு.. ஓட்டுநர் உரிமத்தை சோதனை பண்ணியப்போது அது சென்ற வருடத்துடன் காலாவதியானது தெரிய வரவே மொக்கையிடம் போலீஸ் விளக்கம் கேட்டது..

மொக்கை சொன்னார்...

அதனால் என்ன இன்ஸ்பெக்டர்.. இந்தக் காரின் ஆண்டு வரி, காப்பீடு கூட போன வருடத்தோடு காலாவதி ஆயிடுச்சு.. இந்த கார் ஒழுங்காதானே ஓடுது..?
_________________

ராஜா
27-06-2007, 04:52 PM
மாசியும் சுசியும் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஆட்கள்..
ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சிலிண்டர் போட போனாங்க.. 4 வது மாடியில் ஒரு வீட்டுல நின்னுட்டு இருக்கும்போது மாசி கேட்டார்..

சுசி .. பில் புத்தகம் கொடு..

என்கிட்ட எங்கே இருக்கு..நீதானே வச்சிருந்தே..?

இல்லே சுசி.. கேஷ் பேக்கில வச்சிருப்பே பாரு..

ஐயோ கேஷ் பேக்கா..? கீழே ட்ரை சைக்கிள்ல மாட்டியிருக்கேனே..

அடப்பாவி.. எவனாவது திருடிட்டா என்ன பண்றது..?

இருவரும் புயல் வேகத்தில் படியில் இறங்கி கீழே ஓடினர்.. அப்போது அவர்கள் பின்னால் ஒரு ஆள் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார்.. கீழே பேக் இருக்கவே நிம்மதி அடைந்த மாசி யார் பின்னால் ஓடி வந்ததெனப் பார்க்க... அவர் மிஸ்டர் மொக்கை..!

நீங்க ஏன் சார் இப்படி அலறியடிச்சுகிட்டு ஓடி வந்தீங்க..?

மொக்கை சொன்னார்..

ஏம்பா.. சிலிண்டரைக் கொண்டாந்து வச்சிட்டு ஒரே ஓட்டமா ஓடினா நான் என்னத்தை நினைக்கிறது..? சிலிண்டர் வெடிக்கப் போகுதுன்னு ஓடறீங்க போல இருக்குன்னு நானும் ஓடியாந்தேன்..!
_________________

ராஜா
27-06-2007, 04:53 PM
ஒரு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்..

ஒரு மனிதர் ஒரு குறும்புக்காரச் சிறுவனை அங்கு அழைத்து வந்திருந்தார்..சிறுவனோ அங்கிருக்கும் பொருள்களைத் தள்ளுவதும், தூக்கி எறிவதுமாக இருந்தான்..

அந்த மனிதர் அடிக்குரலில் உறுமினார்..

மொக்கை.. கம்முன்னு வா.. அசிங்கமா நடந்துக்காதே..

மீண்டும் மீண்டும் சிறுவன் அட்டூழியம் செய்துகொண்டே இருக்க, தந்தையும் வேண்டாம் மொக்கை.. கூடாது மொக்கை.. அப்புறம் அடி விழும்..அசிங்கமாயிடும் மொக்கை.. என்று கூறியவாறே இருந்தார்.. இவ்வளவையும் ஒரு பெண்மணி அருகிலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தாள்.. கடைசியாக சொன்னாள்..

ஆனாலும் நீங்க ரொம்ப டீசண்ட்.. பொது இடத்துல அடிக்கக் கூடாதுன்னு எவ்வளவு பொறுமையா இருந்தீங்க.. [பையனைப் பார்த்து..] ஏம்பா மொக்கை.. நீ இவர் பையனா..?

பையன் சொன்னான்..

நான் அவர் பையந்தான்.. ஆனா மொக்கைங்கறது என் பேர் இல்லே.. எங்க அப்பா பேரு..!
_________________

ராஜா
27-06-2007, 04:54 PM
மிஸ்டர் மொக்கை பூச்செடிகள் விற்கும் கடைக்கு வந்தார்..

மஞ்சள் ரோஜாச் செடி இருக்கா..?

இல்லையே சார்.. கருப்பு ரோஜா செடி இருக்கு .. பார்க்கறீங்களா..?

இல்லப்பா.. மஞ்சள் ரோஜாதான் வேணூம்..

காஷ்மீர் ரோஜா செடி இருக்கு பாருங்க சார்.. பளபளன்னு இருக்கும்..மஞ்சள் ரோஜா சோகை புடிச்ச மாதிரி இருக்கும் சார்..!

எனக்கு தெரியும்பா.. ஆனா .. " நான் ஊர்லேருந்து திரும்பற வரைக்கும் ஒழுங்கா இந்த மஞ்சள் ரோஜாவுக்கு தண்ணி ஊத்துங்க.. ஏதாச்சும் ஆச்சுது.. நான் மனுஷியா இருக்க மாட்டேன்"னு சொல்லிட்டுப் போன என் மனைவிக்கு அது தெரியமாட்டுதே....!
_________________

அமரன்
27-06-2007, 05:00 PM
ரொம்பக் களைப்பாக இருந்தேனுங்க. ஆனால் இப்போ போயே போச்சு. ராஜா அண்ணாவின் ரவுசைப்படித்ததும் பறந்து போச்சு. நன்றி ராஜா அண்ணா.

ராஜா
28-06-2007, 05:09 PM
நன்றி அமர்..!

நீங்களாவது விடாமல் பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்தறீங்களே..!

ராஜா
28-06-2007, 05:11 PM
மிஸ்டர் மொக்கைக்கு ஏன் தர்ம அடி விழுந்துச்சு தெரியுமா..?
மொக்கை ; அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக்கிட்டு ஆஃபீஸ் வந்திருக்கான் தெரியுமா?

நண்பன் ; தெரியலையே!

மொக்கை ; வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.மொக்கை ; ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் காசி போயிருந்தப்போ என்னோட வாட்ச் கங்கையிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

நண்பர் ; பரவாயில்லியே.. அதே வாட்சா..?

மொக்கை ; வாட்ச் இல்லே.. கங்கைதான் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு..!மொக்கை ; நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!

நண்பர் ; அதிசயமாயிருக்கே!

மொக்கை ; காரணம். அவன்தான் அவ புருஷன்...!மொக்கை ; எனக்கு லேட் மேரேஜ்!

நண்பர் ; காலங்கடந்த வயசிலே கல்யாணமா?

மொக்கை ; அப்படியில்ல, பத்து மணிக்கு நடக்கவேண்டிய மேரேஜ் பத்தரை மணிக்கு நடந்துச்சு!காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !

மொக்கை : லட்டு, ஜிலேபி.நண்பர் : வாங்க, வாங்க!

மொக்கை : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!

நண்பர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!

மொக்கை : சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!
மொக்கை ; சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!

நண்பர் ; தெரியாது!

மொக்கை ; சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.நண்பர் ; என் தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது...இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

மொக்கை ; இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.


நண்பர் ; பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?

மொக்கை ; மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை...!


முதலாளி ;பக்கத்து தியேட்டரிலே ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?

மொக்கை ; நம்ம தியேட்டரிலே பாயும் புலி ஓடுதுல்லே..!.மொக்கை ; எல்லா மொழிகளையும் பேசக்கூடியது எது தெரியுமா ?

நண்பர் ; தெரியாதே.. எது..?

மொக்கை ; எதிரொலி...!நண்பர் ; நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?

மொக்கை ; எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.
நண்பர் ; உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

மொக்கை ; அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்...!பஸ் பயணி ; சார் கொஞ்சம் காலை மடக்கி வச்சுக்கங்க...உங்களிடம் உதை வாங்குவதற்காக நான் இங்கே வரவில்லை.

மொக்கை ; அப்படியானால் நீங்கள் வழக்கமாக எங்கே போவீர்கள்?


அதுக்கு அப்புறம்தான் மொக்கைக்கு தர்ம அடி விழுந்ததாக ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்..!
_________________

அமரன்
28-06-2007, 05:17 PM
மிஸ்டர் மொக்கைக்கு ஏன் தர்ம அடி விழுந்துச்சு தெரியுமா..?


இப்படி போறவாக்கில எல்லாரையும் கடிச்சால் மிஸ்டர் மொக்கைக்கு அடிவிழாமல் என்ன செய்யும். ஒவ்வொன்றும் செமகடி ராஜா அண்ணா. எனக்கு இத்திரி மிகவும் பிடிக்கும். ரொம்பக் களைப்பாக அல்லது ஏதாவது பிரச்சினையில் சோகமாக் இருக்கும்போது இத்திரியின் ஜோக்ஸை படிப்பேன். உடனே ஃபிரெஷ்ஷாகிடுவேன். தொடருங்கள் ராஜா அண்ணா.

ஓவியா
28-06-2007, 06:00 PM
அருமை அருமை அருமை, பல பக்கங்கள் ஒன்றாக படித்ததால், சிரித்து சிரித்து வயிற்று வலிதான் வந்தது.....அய்க்கோ ஒரே சிப்புதான் போங்க.

நன்றி ராஜா அண்ணா.

mgandhi
28-06-2007, 06:20 PM
மிஸ்டர் மொக்கைக்கு ஏன் தர்ம அடி விழுந்துச்சு தெரியுமா..?


நண்பர் ; உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

மொக்கை ; அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்...!அதுக்கு அப்புறம்தான் மொக்கைக்கு தர்ம அடி விழுந்ததாக ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்..!
_________________

நன்றி ராஜா........

அக்னி
28-06-2007, 06:55 PM
ஒவ்வொரு துணுக்குகளும் சிரிப்பை தருகின்றன...
தொடருங்கள் எங்களுக்கு ஆயுள் கூட்டும் உங்கள் பணியை...
சந்தோஷ நிமிஷங்களை பெறுவதே கடினமான உலகில்,
தொடர்ந்தும் அளிக்கும் உங்களுக்கு
நன்றிகளும்... பாராட்டுக்களும்... வாழ்த்துக்களும்...

aren
28-06-2007, 09:40 PM
ராஜா அவர்களே, ஒவ்வொரு ஜோக்கும் அருமை. உங்கள் ஜோக்குகளைப் படித்தால் சோர்வுகள் அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் போய் உடம்பில் மறுபடியும் சுறுசுறுப்பு உண்டாகிறது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ராஜா
29-06-2007, 06:25 PM
மொக்கையும் நண்பர்களும் தங்கள் இன்னொரு நண்பனின் திருமணத்துக்காக முன்பின் அறியாத ஒரு ஊருக்கு காரில் பயணமானார்கள்..வழி தெரியாமல் பல இடங்கள் சுற்றி அலைய பெட்ரோல் தீரும் நிலைக்கு வந்து விட்டது. சரியாக வழி விசாரிக்கத் தெரியவில்லை என்று மொக்கை தன் நண்பர்களை கடிந்து கொண்டார். எனவே வழி விசாரிக்கும் பொறுப்பை மொக்கையிடம் ஒப்படைத்து விட்டார்கள்..வழியில் ஒரு கிராமவாசியைப் பார்த்த மொக்கை தன் நண்பர்களை ஒரு லுக் விட்டபடியே விசாரித்தார்..

ஏம்பா.. கொஞ்சம் நில்லு.. வெட்டுவாங்கேணிக்கு சீக்கிரமா போற வழி எது..? சட்டுன்னு சொல்லு..

வெட்டுவாங்கேணியா..? எப்படிப் போகப் போறீங்க.. நடந்தா.. கார்லயா..?

கார்லதாம்பா..

கார்லயா.. அப்ப அதுலேயே போயிருங்க.. சீக்கிரமாப் போயிரலாம்..!
_________________

மொக்கையின் மகள் கல்லூரி மாணவி.. ஒருநாள் அவள் தன் தந்தையிடம் சொன்னாள்..

அப்பா.. இன்னிக்கு சுட்டி எனக்கு முத்தம் கொடுத்துட்டாம்பா..

கண்கள் சிவந்த மொக்கை கேட்டார்..

என்ன சொல்கிறாய்.. எப்படி இது நடந்தது..? உனக்குதான் கராத்தே தெரியுமே.. அவ்வளவு சுலபமாகவா அந்த சம்பவம் நடந்தது..?

மகள் சொன்னாள்..

இல்ல்லை அப்பா.. அவ்வளவு சுலபத்தில் அது நடக்கவில்லை.. அது நடந்தபோது என் தோழிகள் 3 பேர் சுட்டியை அசையாமல் அமுக்கிப் பிடிக்கவேண்டி இருந்தது..!
_________________

சிவாஜி ; பன்னிதான் கூட்டமா வரும்.. சிங்கம் ஒத்தையிலதாண்டா வரும்..

மொக்கை ; ஏன்.. அதுக்கு டபுள்ஸ் வைச்சு ஓட்டத் தெரியாதா..?
_________________

சிவாஜி ; சும்மா அதிருதில்ல...?

மொக்கை ; சும்மா அதிரல.. நீ பயந்து நடுங்கிகிட்டு நாற்காலியை ஆட்டிகிட்டு இருக்கே... அதில அதிருது..!
_________________

mgandhi
29-06-2007, 06:32 PM
[QUOTE=ராஜா;230644]
சிவாஜி ; பன்னிதான் கூட்டமா வரும்.. சிங்கம் ஒத்தையிலதாண்டா வரும்..

மொக்கை ; ஏன்.. அதுக்கு டபுள்ஸ் வைச்சு ஓட்டத் தெரியாதா..?
_________________

சிவாஜி ; சும்மா அதிருதில்ல...?

மொக்கை ; சும்மா அதிரல.. நீ பயந்து நடுங்கிகிட்டு நாற்காலியை ஆட்டிகிட்டு இருக்கே... அதில அதிருது..!
_________________

[/QUOTஏ

நன்றி ராஜா

அறிஞர்
29-06-2007, 06:38 PM
சிவாஜி ; பன்னிதான் கூட்டமா வரும்.. சிங்கம் ஒத்தையிலதாண்டா வரும்..

மொக்கை ; ஏன்.. அதுக்கு டபுள்ஸ் வைச்சு ஓட்டத் தெரியாதா..?
_________________

சிவாஜி ; சும்மா அதிருதில்ல...?

மொக்கை ; சும்மா அதிரல.. நீ பயந்து நடுங்கிகிட்டு நாற்காலியை ஆட்டிகிட்டு இருக்கே... அதில அதிருது..!
_________________

யார*ந்த சிவாஜி.. உங்க நண்பரா..

அமரன்
29-06-2007, 07:17 PM
அடடா உங்க ரவுசுக்கு சிவாஜியும் தப்பவில்லையா.....நன்றி அண்ணா.

மனோஜ்
29-06-2007, 07:19 PM
சிவாஜி பாவம் இவருக்கிட்ட கடிவாங்கரமாதிரி அயிடுச்சே

அருமை அண்ணா

ராஜா
30-06-2007, 05:28 PM
மொக்கைக்கு தூக்குத் தண்டனை.. கழுத்தில் சுருக்கை மாட்டும்போது சரமாரியாக விக்கல் வந்துவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை.. அங்கு நின்ற மருத்துவரும் என்னென்னவோ செய்து பார்த்தும் பலனில்லை.வேறு வழியில்லாமல் மொக்கையிடமே கேட்டார்கள்..

என்ன செய்தால் உன் விக்கல் நிற்கும்..?

கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டுவதற்காகக் காத்திருந்த ஊழியரைப் பார்த்து மொக்கை சொன்னார்..

சட்டுன்னு..க்..க்... யாராவது..க்க்...எதையாவது க்...க்..க்.. செஞ்சு..க் எனக்கு .க்க்.. பயம் காட்டுங்க..!
_________________

ராஜா
30-06-2007, 05:31 PM
நம்ம அமர் ஒருநாள் மலேசியாவில் வேகமாக கார் ஓட்டிக் கொண்டு போனார்.. போலீஸ் பிடித்து நிறுத்திவிட்டது..

ஏன் வேகமாகப் போனாய்..? எங்கே உன் உரிமம்..?

உரிமமா..? அப்படின்னா..?

உரிமம் தெரியாதா..? கார் ஆவணங்களை எடு..

ஆவணமா..? இது திருட்டுக் கார்.. என்னிடம் ஏது ஆவணம்..?

ஓ.. திருட்டுக் காரா..? திருடனா நீ..?

இல்லே.. அதுக்கும் மேலே.. கார் டிக்கியில் ஒரு பிணம் இருக்கு.. நான் போட்டுத் தள்ளியது..!

காரியம் கை மீறிப் போவதை உணர்ந்த போலீஸ் அதிகாரி மேலிடத்துக்கு தகவல் சொல்லி மேலதிகாரியை வரவழைத்தார்.. அவர் வந்து டிக்கியைத் திறக்க.. அங்கே பிணம் இல்லை.
கார் ஆவணத்தைக் கேட்க, டேஷ் போர்டிலிருந்து செல்லுபடியாகும் ஆவணங்களை அமர் எடுத்துக் காட்டினார்.. உரிமம் கேட்க, சட்டைப் பையில் இருந்து எடுத்து நீட்டினார்..

திகைத்துப் போன மேலதிகாரி, அமரை பிடித்து நிறுத்திய போலீசை கடிந்து கொண்டார்.. அப்போது அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அமர் சொன்னார்..

வேண்டாம் விட்டுடுங்க சார்.. அவருக்கு வீட்டுல என்ன டார்ச்சரோ.. ரொம்ப கொடைஞ்சீங்கன்னா, அப்புறம் நான் ஓவர் வேகம் போனேன்னு அபாண்டமா என் மேல் பழி சொல்லுவார்.. அதை என்னால் இல்லேன்னு நிரூபிக்க முடியாது..
_________________

ராஜா
30-06-2007, 05:34 PM
ஆசிரியர் கலை வேந்தர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..

அக்னி.. நீ சொல்லு.. நமக்கு பால் எங்கேருந்து கிடைக்குது..?

மாடு புல்லைத் தின்று பால் கறக்கிறது.. பால்காரர் அதை நமக்குத் தருகிறார்..

வெரி குட்.. மனோஜ் .. நீ சொல்லு..மழை எப்படிக் கிடைக்கிறது..?

கடல் நீர் ஆவியாகிறது..மரங்கள் வெளிய்யிடும் ஆக்சிஜனால் மேகங்கள் குளிர்விக்கப்பட்டு, மழை பொழிகிறது..

சுட்டி.. நீ சொல்லு.. நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?

மூதேவிப் பசங்க கிட்டேருந்து..சார்..

மூதேவிப் பசங்களா..? என்ன சொல்றே..?

ஆமாம் சார்.. எப்போ கரண்ட் நின்னாலும் எங்கப்பா சொல்லுவார்.. "மூதேவிப் பசங்க.. கரண்டை நிறுத்திட்டானுக.. எப்போ விடுவானுகளோ..?"

அன்புரசிகன்
30-06-2007, 05:51 PM
வேண்டாம் விட்டுடுங்க சார்.. அவருக்கு வீட்டுல என்ன டார்ச்சரோ.. ரொம்ப கொடைஞ்சீங்கன்னா, அப்புறம் நான் ஓவர் வேகம் போனேன்னு அபாண்டமா என் மேல் பழி சொல்லுவார்.. அதை என்னால் இல்லேன்னு நிரூபிக்க முடியாது..


அமர் .. ஆனாலும் இது ரொம்ப ஓவர். குடிச்சிட்டு இப்படியா கன்னா பின்னான்னு வண்டிய ஓட்டுறது? அது சரி பக்கத்தில இருந்து இந்த கேவலங்கெட்ட ஐடியா தந்தது ஓவியர் தானே? :D

அன்புரசிகன்
30-06-2007, 05:54 PM
ஆமாம் சார்.. எப்போ கரண்ட் நின்னாலும் எங்கப்பா சொல்லுவார்.. "மூதேவிப் பசங்க.. கரண்டை நிறுத்திட்டானுக.. எப்போ விடுவானுகளோ..?"

உண்மையை சொன்ன சுட்டிக்கு ஒரு :aktion033:

இது தான் நம்ம ரவுசு மாப்புவின் கலைவண்ணம்... மாப்புவுக்கு நிகர் அவர் தான். :D

அக்னி
30-06-2007, 06:42 PM
அன்புரசிகர் நம்ம தலைவர் இல்லாம எங்களை எல்லாம் கோர்த்து விடுவது நியாயமா?
அப்புறம், நம்ம ஓவியா அக்கா, ஓவியன், ஆதவன், மற்றும் மேற்பார்வையாளர்களையும்,
கலாய்க்கிறது...

மனம் விட்டுச் சிரித்தேன்...
நன்றி!

அமரன்
30-06-2007, 08:54 PM
அமர் .. ஆனாலும் இது ரொம்ப ஓவர். குடிச்சிட்டு இப்படியா கன்னா பின்னான்னு வண்டிய ஓட்டுறது? அது சரி பக்கத்தில இருந்து இந்த கேவலங்கெட்ட ஐடியா தந்தது ஓவியர் தானே? :D

விடுங்க ப்ரதர். ராஜா அண்ணனாவது என்னை புத்திசாலின்னு ஒத்துக்கிடாரேன்னு சந்தோசப்பட்டால் அதைக்கூட ஓவியனுடையது என்கிறீரே... நியாயமா.
நம்ம அக்னி அரசியல்வாதி ஆகிட்டாரோ.. அடிக்கடி தலைவர்களை மாற்றிகொண்டே இடுக்கின்றார். சுட்டியின் பதிலைப் பார்த்தீங்களா.

நன்றிகள் ராஜா அண்ணா.

aren
30-06-2007, 11:17 PM
சுட்டி.. நீ சொல்லு.. நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?

மூதேவிப் பசங்க கிட்டேருந்து..சார்..

மூதேவிப் பசங்களா..? என்ன சொல்றே..?

ஆமாம் சார்.. எப்போ கரண்ட் நின்னாலும் எங்கப்பா சொல்லுவார்.. "மூதேவிப் பசங்க.. கரண்டை நிறுத்திட்டானுக.. எப்போ விடுவானுகளோ..?"

சுட்டி ரொம்ப வெகுளிப்பா.

நல்ல சிரிப்பு.

ராஜா
01-07-2007, 05:18 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
01-07-2007, 05:24 PM
http://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke131.jpg
_________________________________________________________________________________________

நான் உங்கிட்ட 51 ரூபாய் கொடுத்தேன், நீ ஏன், 15 ரூபாய் திருப்பிக்கொடுக்கறே?

நீங்கதானே 51 ரூபாயைத் திருப்பிக் கொடுக்கணும்னு சொன்னீங்க!
_______________________________________________________________________________________

நர்ஸ் 1 : டாக்டர் ஏன் ஆறாம் நம்பர் ரூமையும், நூறாம் நம்பர் ரூமையும் ஆபரேஷன் செய்யற பேஷண்ட்டுகளுக்காக ஒதுக்கி வச்சுருக்கார்?

நர்ஸ் 2: ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்பதால் தான்!
_________________________________________________________________________________________

''யோவ் சாப்பாட்டுல கல் கிடக்குன்னு சொன்னா எறும்பு பிடிச்சி விடறே.''

''எறும்பு ஊர கல்லு தேயும் சார்.''
________________________________________________________________________________________

''இப்ப வந்துட்டுப் போற பையனோடு என்ன தகராறு?''

''ஏழெட்டு வருஷமா மெகா சீரியல்ல என் பையனா நடிச்சிட்டிருக்கானாம். அதனால சொத்தில பங்கு கேட்க வந்துட்டான்.''
_________________________________________________________________________________________

தன்னோட கல்யாண நாள்ல கமலா தன் புருஷனை வெட்டிட்டாளா... ஏன்?''

''வெட்டிங் டே'ங்கிறதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டா..!''
__________________________________________________________________________________________

''டெய்லி இந்த ஓட்டலுக்கு வந்து, கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு, எதுவுமே சாப்பிடாம போயிடுறியாமே... ஏன்...?''

''ஒரு மாசத்துக்கு, ஓட்டலுக்குப் போய் எதுவுமே சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே..!'
_______________________________________________________________________________________

mgandhi
01-07-2007, 05:27 PM
நர்ஸ் 1 : டாக்டர் ஏன் ஆறாம் நம்பர் ரூமையும், நூறாம் நம்பர் ரூமையும் ஆபரேஷன் செய்யற பேஷண்ட்டுகளுக்காக ஒதுக்கி வச்சுருக்கார்?

நர்ஸ் 2: ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்பதால் தான்!


நன்றி ராஜா

அக்னி
01-07-2007, 05:31 PM
ராஜா அவர்களே இன்றைய ரவுசு அசத்தல்...

அமரன்
01-07-2007, 05:33 PM
நான் உங்கிட்ட 51 ரூபாய் கொடுத்தேன், நீ ஏன், 15 ரூபாய் திருப்பிக்கொடுக்கறே?
நீங்கதானே 51 ரூபாயைத் திருப்பிக் கொடுக்கணும்னு சொன்னீங்க!

இது தெரியாது வாங்கிய காசெல்லாம் கொடுத்தேனே... ஆலோசனைக்கு நன்றி ராஜா அண்ணா.

ஓவியன்
01-07-2007, 06:09 PM
http://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke131.jpg

''இப்ப வந்துட்டுப் போற பையனோடு என்ன தகராறு?''

''ஏழெட்டு வருஷமா மெகா சீரியல்ல என் பையனா நடிச்சிட்டிருக்கானாம். அதனால சொத்தில பங்கு கேட்க வந்துட்டான்.''
_[/COLOR][/SIZE][/FONT][/B]

அதுக்கென்ன அவனுக்குச் சொத்தை ஒரு மெகாசீரியலில் வைத்தே பிரித்துக் கொடுத்துவிட வேண்டியது தானே!:spudnikbackflip:

அக்னி
01-07-2007, 06:12 PM
அதுக்கென்ன அவனுக்குச் சொத்தை ஒரு மெகாசீரியலில் வைத்தே பிரித்துக் கொடுத்துவிட வேண்டியது தானே!:spudnikbackflip:

சொத்தை மெகாசீரியலில் சொத்துப் பிரிப்பதைவிட,
உண்மையாகவே பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்...

ஓவியன்
01-07-2007, 06:19 PM
சொத்தை மெகாசீரியலில் சொத்துப் பிரிப்பதைவிட,
உண்மையாகவே பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்...

ஆ!!!!!!!!!, ஊஊ!!!!!!!

அக்னி!

சொத்தைனைப் பிரிக்க வழி சொன்னால், நான் எழுதினதைப் பிச்சு பிச்சு பிரிக்கிறீரே????????

அமரன்
01-07-2007, 06:20 PM
ஆ!!!!!!!!!, ஊஊ!!!!!!!

அக்னி!

சொத்தைனைப் பிரிக்க வழி சொன்னால், நான் எழுதினதைப் பிச்சு பிச்சு பிரிக்கிறீரே????????

அவரு சொத்தைப்பல்லைப் பிடுங்கிப் பலம் பார்கிறாருன்னு நான் சொல்லவே மாட்டேன்..

ராஜா
02-07-2007, 04:48 PM
மொக்கை திருமணம் செய்துகொள்ள பெண் தேடிக் கொண்டிருந்தார்.. ஒருநாள் ஒரு அழகான, உயரமான பெண் தெருவில் போனாள்.. அவளைப் பார்த்த மொக்கை நண்பரிடம் சொன்னார்..

அந்தப் பொண்ணைப் பாரு..

ஆனா மொக்கை.. நீ ரொம்பக் குள்ளமாச்சே.. அவள் பொருத்தமா இருக்க மாட்டாளே..

அதுக்குதான் சொல்றேன்..அவளுக்கு கொடுத்து வைக்கலே பாரு.. என்னைக் கல்யாணம் பண்ணிக்க..!
_____________________________________________________________________________

தொலைபேசி மூலம் சாமான்கள் வாங்கும் நிறுவனத்துக்கு மொக்கை போன் செய்தார்.. அங்கு இருக்கும் பெண் பேசினாள்..

எங்கள் நிறுவனத்துக்கு நல்வரவு.. என்ன வாங்க விரும்புகிறீர்கள்..?

மொக்கை பதிலளித்தார்..

நான் சும்மா பொருட்களைப் பார்வையிட வந்தேன்..!
_____________________________________________________________________________

மொக்கை மனநல மருத்துவரைப் பார்த்தார்..

எனக்கு சாவைக் கண்டு பயமாக இருக்கிறது.. டாக்டர்..

சாவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்..இதிலே என்ன பயம்..?

வாழ்க்கையின் ஒரு பகுதி.. சரி.. ஆனா கடைசிப்பகுதியா இல்லே இருக்கு.. 1
_____________________________________________________________________________

மொக்கை தன் நண்பருடன் கிரிக்கெட் பார்க்கப் போனார்..வழக்கம் போல இந்தியர்கள் சொதப்பவே...மொக்கை சொன்னார்..

நான் விளையாடி இருந்தா ஜெயிச்சுருக்கும்..

நண்பர் கேட்டார்..

நீ விளையாடினா இத்தனை பேர் காசு கொடுத்து பார்க்க வருவாங்கன்னு உண்மையிலேயே நம்பறியா..?
_____________________________________________________________________________

பிச்சைக்காரன் ; அய்யா.. ஒரு ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி..

மொக்கை ; ரோட்டுல நின்னுகிட்டு போறவங்க வர்றவங்ககிட்ட கையேந்தறியே.. வெட்கமாயில்லே உனக்கு..?

பிச்சை ; நீ கொடுக்கற ஒத்தை ரூபாய்க்கு மவுண்ட் ரோட்டுல ஆபீசா திறக்க முடியும்..?
______________________________________________________________________________

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLhttp://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke128.jpg LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

அக்னி
02-07-2007, 09:12 PM
இன்றைய ரவுசில் கடைசி ரவுசு... :music-smiley-010: :music-smiley-010: :music-smiley-010:
:4_1_8:

அறிஞர்
03-07-2007, 01:33 PM
மொக்கை திருமணம் செய்துகொள்ள பெண் தேடிக் கொண்டிருந்தார்.. ஒருநாள் ஒரு அழகான, உயரமான பெண் தெருவில் போனாள்.. அவளைப் பார்த்த மொக்கை நண்பரிடம் சொன்னார்..

அந்தப் பொண்ணைப் பாரு..

ஆனா மொக்கை.. நீ ரொம்பக் குள்ளமாச்சே.. அவள் பொருத்தமா இருக்க மாட்டாளே..

அதுக்குதான் சொல்றேன்..அவளுக்கு கொடுத்து வைக்கலே பாரு.. என்னைக் கல்யாணம் பண்ணிக்க..!

இது மாதிரி.. பாஸிட்டிவ் திங்கிங்க் இருன்தால்... என்றும் வெற்றி தான்...ஹிஹிஹி அனைத்து சிரிப்புக்களும் அருமை அண்ணா

ராஜா
03-07-2007, 05:11 PM
மிஸ்டர் மொக்கை இரவு வெகுநேரம் விழித்திருந்து கிரிக்கெட் பார்த்தார்.. பின் அப்படியே சோபாவில் இருந்தபடியே தூங்கி விட்டார்.. மறுநாள் காலை மனைவி எழுப்பினாள்..

இதோ பாருங்க.. எழுந்திரிங்க.. 9 ஆயிடுச்சு...

மொக்கை அரைக்கண்ணை மூடியபடியே பதில் சொன்னார்..

ஓ.. இந்தியா பேட்டிங்கா..?
____________________________________

மொக்கைக்கு திடீர் வயிற்றுவலி.. அவர் ஊரிலிருந்த ஒரே மருந்துக்கடைக்கு ஓடினார்.. கடைக்காரனோ அப்போதுதான் கதவை இழுத்து சாத்திக் கொண்டிருந்தான்.. மொக்கை அவனைக் கேட்டார்..

போர்டுல 24 மணி நேர சேவைன்னு போட்டிருக்கியே..?

கடைக்காரன் சொன்னான்..

ஆமாம்.. ஆனா 1 நாளைக்கு இல்லே.. ஒரு வாரத்துக்கு..1
____________________________________

மொக்கை இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.. ஒரு திருடன் வழிமறித்து கத்தியைக் காட்டினான்..

பணத்தைக் கொடுக்கறியா.. இல்லை உயிரை விடப்போறியா..?

மொக்கை ஒன்றும் பதில் சொல்லாமல் நின்றார்.. திருடன் மீண்டும் மிரட்டினான்..

சொல்லு.. பணமா.. உயிரா..?

மொக்கை சொன்னார்..

இரு.. சிந்திச்சுகிட்டு இருக்கேன்.. யோசனை பண்ணி பதில் சொல்ல வேண்டாமா..?
____________________________________

மொக்கை தாமதமாக அலுவலகத்துக்கு வந்தார்.. முதலாளி வாசலிலேயே வழிமறித்து...

நீ.. 10 மணிக்கெல்லாம் இங்கே இருந்திருக்கணும்..

மொக்கை ஆவலோடு கேட்டார்...

அப்படியா..? 10 மணிக்கு அப்படி என்ன அதிசயம் நடந்துச்சு இங்கே..?
____________________________________

மொக்கை தன் நண்பருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உணவருந்தினார்.. நணப்ர் சொன்னார்..

என்ன மொக்கை.. இந்த ஓட்டலில் எந்த டிபனுமே நல்லா இல்லையே..?

மொக்கை பதிலளித்தார்..

ஆமாம்.. இன்னொரு விஷயம்.. எல்லா டிபனுமே கொறைச்சலா வேற இருக்கும்..!
____________________________________

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLhttp://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke127.jpgLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

மனோஜ்
03-07-2007, 05:15 PM
ஆசிரியர் கலை வேந்தர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..
அக்னி.. நீ சொல்லு.. நமக்கு பால் எங்கேருந்து கிடைக்குது..?

மாடு புல்லைத் தின்று பால் கறக்கிறது.. பால்காரர் அதை நமக்குத் தருகிறார்..

வெரி குட்.. மனோஜ் .. நீ சொல்லு..மழை எப்படிக் கிடைக்கிறது..?

கடல் நீர் ஆவியாகிறது..மரங்கள் வெளிய்யிடும் ஆக்சிஜனால் மேகங்கள் குளிர்விக்கப்பட்டு, மழை பொழிகிறது..

சுட்டி.. நீ சொல்லு.. நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?

மூதேவிப் பசங்க கிட்டேருந்து..சார்..

மூதேவிப் பசங்களா..? என்ன சொல்றே..?

ஆமாம் சார்.. எப்போ கரண்ட் நின்னாலும் எங்கப்பா சொல்லுவார்.. "மூதேவிப் பசங்க.. கரண்டை நிறுத்திட்டானுக.. எப்போ விடுவானுகளோ]

சுட்டி எப்பவுமே சுட்டிதான் என்பதை நிறுபித்து விடுகிறார்
இன்றைய நோற்றைய நகைசுவைகள் அனைத்தும் அருமை
நன்றி அண்ணா:icon_08:

அக்னி
03-07-2007, 05:16 PM
இன்றும் பட ரவுசு சூப்பர்...
சின்னதாய் ஒரு பிட்டு...

காதல்,
கல்யாணமாவது..,
களங்கமல்ல..,
மங்களம்...

ஓவியன்
03-07-2007, 06:26 PM
காதல்,
கல்யாணமாவது..,
களங்கமல்ல..,
மங்களம்...

அக்னி!
அது யார் மங்களம்? :grin:

சொல்லவேயில்லை............................... :icon_shok:

அமரன்
03-07-2007, 07:43 PM
ஏப்பா ஓவியன். ராஜாவின் ரவுசே தாங்க முடியல. அதில நீங்க வேறா.

ஓவியன்
03-07-2007, 07:52 PM
நான் என்ன அப்படி தப்பாக் கேட்டுட்டன், நண்பன் தன்னோட விசயங்களை மூடி மறைச்சா கோவம் வருமா இல்லையா− நீங்களே சொல்லுங்கோ!.

அமரன்
03-07-2007, 07:54 PM
வரும்தான்...

அக்னி
03-07-2007, 08:37 PM
அக்னி!
அது யார் மங்களம்? :grin:

சொல்லவேயில்லை............................... :icon_shok:
நீங்க கேக்கவேயில்லையே...

நான் என்ன அப்படி தப்பாக் கேட்டுட்டன், நண்பன் தன்னோட விசயங்களை மூடி மறைச்சா கோவம் வருமா இல்லையா− நீங்களே சொல்லுங்கோ!.
மூடி மறைக்காம இருந்தா அது மூடி இல்லையே...
தவிர, களை மூடி மறைச்சா அது என் தப்பா..?

ராஜா
04-07-2007, 04:08 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
04-07-2007, 04:08 PM
டாக்டர்: உங்களுக்கு வந்திருப்பது நிமோனியா

நோயாளி: சரியாகச் சொல்லுங்கள் டாக்டர். இப்படித்தான் என் சிநேகிதிக்கு ஒரு டாக்டர் நிமோனியா என்றார். ஆனால் அவள் டைபாய்டால் இறந்து விட்டாள்.

டாக்டர்: கவலைப்படாதீர்கள். நான் ஒரு நோயாளிக்கு நிமோனியா என்றால் அவர் நிமோனியாவால் தான் இறப்பார்.
___________________________________

டாக்டர்: நான் என்னுடைய கையுறையை உள்ளே வைத்துத் தைத்துவிட்டேன். இன்னுமொரு ஆபரேஷன் செய்யவேண்டும்.

நோயாளி: அந்தக் கையுறைக்கான காசைக் கொடுத்து விடுகிறேன். இன்னுமொரு ஆபரேஷன் வேண்டாமே.
___________________________________

நோயாளி: "என்னை நம்பி 3 பேர் இருக்காங்க டாக்டர்."

டாக்டர்: "என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்."
____________________________________

டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.

மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.

டாக்டர்: ? ? ? ? ?
_____________________________________

"டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது."

"டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க."

"எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."
____________________________________

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLhttp://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke126.jpgLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
05-07-2007, 03:27 PM
ஒரு சர்க்கஸ் சொந்தக்காரர் ஒரு கடைக்குள் நுழைந்தார். அங்கு பலர் கூடி ஒரு மேஜை முன்னால் நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த சின்ன மேஜையில் ஒரு சட்டி தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டிருந்தது. அதன் மீது ஒரு வாத்து நடனமாடிக்கொண்டிருந்தது.

அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்ட அந்த சர்க்கஸ் சொந்தக்காரர், அந்த வாத்தை அந்த கடையின் சொந்தக்காரரிடமிருந்து வாங்கிக்கொள்வதாகக் கேட்டார். அதன் பிறகு பேரம் பேசி சுமார் 10000 ரூபாய்க்கு அந்த வாத்தை வாங்கிக்கொண்டு சந்தோஷத்துடன் சர்க்கஸ்காரர் சென்றார்.

மூன்று நாட்களுக்குப் பின்னர், அந்த சர்க்கஸ்காரர் மிகுந்த கோபத்துடன் அந்தக் கடைக்குத் திரும்பி வந்தார். 'உன்னுடைய வாத்து பெரும் மோசடி. சர்க்கசுக்கு வந்திருந்த அனைவருக்கும் முன்னால் ஒரு சட்டியை கவிழ்த்துப்போட்டு அந்த வாத்தை நடனமாடச் சொன்னேன். அது ஒரே ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை '

அந்தக் கடை சொந்தக்காரர் யோசித்துக்கொண்டே. ' ,ம்,,,ம்ம்... அந்த சட்டிக்குக்கீழே ஒரு பெரிய மெழுகுவர்த்தியை மறக்காமல் ஏற்றி வைத்தாயா ? ' என்று கேட்டார்.
_________________________________

நர்சிங் ஹேhம்லே ஒரு நர்சம்மா எல்லா நோயாளிகளுக்கும் மாத்திரை கொடுத்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சி திரும்பி வந்தாங்க.

ஒரு நோயாளி புலம்பினாரு,

என்ன நர்சம்மா, மத்தவங்களுக்கு எல்லாம் பொடிப் பொடி மாத்திரையாக் கொடுத்தீங்க. எனக்கு மட்டும் ஏன் நீளமான மாத்திரையாக் கொடுத்தீங்க ? ரொம்பக் கஷ்டப்பட்டு முழுங்கினேன். இனிமே எனக்கும் பொடி மாத்திரையாக் கொடுங்கம்மா-ன்னாரு.

நர்சம்மா- அதிர்ச்சி தாங்காம அலறிச்சு..

. அடப்பாவீ * உனக்கு நான் கொடுத்தது மாத்திரை இல்லை. காய்ச்சல் எவ்வளவுன்னு பார்க்கிறதுக்குத் தெர்மாமீட்டரைத் தானே வச்சிட்டுப் போனேன். உன்னை யார் முழுங்கச் சொன்னா ?
_________________________________

பத்து வருஷமானாலும் இந்தப் புடைவை சாயம் போகாது கிழியாது...!"

"அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?"

"பத்து வருஷமா எங்க கடையிலதான் இருக்கு; சாயம் போகலை கிழியலையே...?!"
_________________________________

கோபி: 'புதுசா கார் வாங்க வந்திருக்கறவருக்கு காரைப்பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கே...?'

கோபு: எதவச்சு சொல்றீங்க...?'

கோபி: 'வண்டில்' ஸ்பீடு பிரேக்கர் எங்கேயிருக்குன்னு கேட்கறாரே...?
_________________________________

.................................................http://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke124.jpg

அக்னி
05-07-2007, 03:34 PM
ஒரு சர்க்கஸ் சொந்தக்காரர் ஒரு கடைக்குள் நுழைந்தார். அங்கு பலர் கூடி ஒரு மேஜை முன்னால் நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த சின்ன மேஜையில் ஒரு சட்டி தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டிருந்தது. அதன் மீது ஒரு வாத்து நடனமாடிக்கொண்டிருந்தது.

அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்ட அந்த சர்க்கஸ் சொந்தக்காரர், அந்த வாத்தை அந்த கடையின் சொந்தக்காரரிடமிருந்து வாங்கிக்கொள்வதாகக் கேட்டார். அதன் பிறகு பேரம் பேசி சுமார் 10000 ரூபாய்க்கு அந்த வாத்தை வாங்கிக்கொண்டு சந்தோஷத்துடன் சர்க்கஸ்காரர் சென்றார்.

மூன்று நாட்களுக்குப் பின்னர், அந்த சர்க்கஸ்காரர் மிகுந்த கோபத்துடன் அந்தக் கடைக்குத் திரும்பி வந்தார். 'உன்னுடைய வாத்து பெரும் மோசடி. சர்க்கசுக்கு வந்திருந்த அனைவருக்கும் முன்னால் ஒரு சட்டியை கவிழ்த்துப்போட்டு அந்த வாத்தை நடனமாடச் சொன்னேன். அது ஒரே ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை '

அந்தக் கடை சொந்தக்காரர் யோசித்துக்கொண்டே. ' ,ம்,,,ம்ம்... அந்த சட்டிக்குக்கீழே ஒரு பெரிய மெழுகுவர்த்தியை மறக்காமல் ஏற்றி வைத்தாயா ? ' என்று கேட்டார்.

நகைச்சுவையாய் இருந்தாலும்,
இதைப்போன்ற வாயில்லா ஜீவன்கள் மேல், கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகள் தினசரி நிகழ்வுகளே...
அவற்றின் வேதனையில், மகிழ்கின்றான் மனிதன்.
மனிதனுக்கும் மேலான சக்திகளின் பிடியில், சிக்கித்தவித்தால்தான்,
இந்த கொடுமை புரியும்.
வீணே உயிரினங்களை வதைத்தல் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

பி.கு.1:-
வாயில்லா ஜீவன் என்றால் எப்படி உண்ணும், குரலெழுப்பும் என்று யாரும் கடிக்க வேண்டாம்.

பி.கு.2:-
ராஜா அவர்களுக்கு நன்றி...

ஓவியன்
05-07-2007, 11:03 PM
கோபி: 'புதுசா கார் வாங்க வந்திருக்கறவருக்கு காரைப்பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கே...?'

கோபு: எதவச்சு சொல்றீங்க...?'

கோபி: 'வண்டில்' ஸ்பீடு பிரேக்கர் எங்கேயிருக்குன்னு கேட்கறாரே...?

ஹீ!,ஹீ!

அது நம்ம அன்பு ரசிகன் தானே ராஜா அண்ணா!!! :icon_clap:

ராஜா
06-07-2007, 04:26 AM
அகத்தியன், அக்னி, அன்புரசிகன், அமரன், அய்யா., அறிஞர், ஆதவா, இக்ராம், இதயம், இனியவள், இளசு, உதயநிலா, ஓவியன், ஓவியா, கண்மணி, கலைவேந்தன், கேசுவர், கோபி, க.வே.இராமச்சந்திரன், சக்தி, சாராகுமார், சிவாஜி, சிவா.ஜி, சூரியன், செல்விபிரகாஷ், சேரன்கயல், ஜீவா, ஜே.எம், தங்க கம்பி, தமிழன், தமிழ்நிலா, தாமரை, திராவிடன், நண்பன், நியா, பங்காளிமகன், பாரதி, பார்த்திபன், பாலமுருகன், பிச்சி, பிரசாத், பிரித்தா, பென்ஸ், மதி, மதிவாணன், மதுரகன், மனோஜ், மலர், மீனாகுமார், மொக்கச்சாமி, ராஜா, வரிப்புலி, விராடன், விவேக்ராஜா, வேணு, ஷீ-நிசி, 20012001, aam537, aflacnerd, akumetro, alaguraj, anujega2002, aravindaan, Aravinth, aren, aromabest, arsvasan16, arun, asai78, asho, Bala manian, balasubramanian, bangman, banupriya, barakathnisha, Basheera, battom4484, bronzen, cchandru007, cindrella, ckumar, coolgoose, crisho, csk, demi, devendira, djkrushanth, drjperumal, dupukku, emkay, EzhilR, faizer80, farhan, gayathri.jagannathan, gnana61, Gobalan, gragavan, greatsenthil, grponly, Isaiprabhu, jaikumar123, Jasithas, javith, jeya_uk, Joe, jpl, jptheepan, kaaman, kalairajan, kamban_muthu, karikaalan, karthik.p.mca, kathalan, kbogoss, Knowit007, kr_srinivasan1977, ksmani21, Kugathas, kunathika, lebaster6528, lenram80, liaquatali, lolluvathiyar, maggi, maheshuae, maja, malan, mania, Manimegalai, manippayal, Mano.G., manosham, march, Mathu, mathura, mayooresan, mgandhi, moorthy-kv, mravikumaar, mrefai, mukilan, murthykmd, Myboy, namsec, Narathar, nathas, NIDHI, niranjshan, nisha, omnlog03, paarthiban, palani, pappu_zulu, paramsothy, pathman, pgk53, pksrath, ponchandar, ponrajesh, poo, pradeepkt, princy, puthuvaithamizan, ragavanx, raj6272, rajani_shamx, rajasi13, RajeshP, ralah, Ramki, rangan, rasan, rathi_lux, reash, rekha, rina, rithik, rmsrams16@yahoo.com, rtmz, saba1979, sadha, safari, sagee, samkum, santhoshvenu, sarcharan, saritha_1147, sarukh, sasikumar, SathishVijayaraghavan, scartone, sham, shanthi5551, sivapiraba, skumar16975, sla026, slgirl, sreeram, srikaninanda, sriram, srjah, staker789, Studds, sujeendran, sunpack, sunr, superhero, suraj, sureshkumaar1611, sureshkumarcdm, sutha, svmurali1983, syedkabeer, s_mohanraju, tamil81, tamilmars, tamilyouandme, thamilpuyal, thamizhmahan, thilak, thiruppam, umakarthick, unas, ursamu, uthaya, varsha, vijayan_t, Vimala, vimalms4, virumaandi, visakagn, vithiy,

இனி வர இருக்கும் அந்த
250 ஆவது பார்வையாளரை அன்புடன்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.. வாங்க... வாங்க..!

aren
06-07-2007, 05:32 AM
இந்தத் திரி இன்னும் தொடர்ந்து 1000 நபரையும் வரவேற்கும் என்பதில் சந்தேகமேயில்லை. பாராட்டுக்கள் ராஜா அவர்களே.

அமரன்
06-07-2007, 07:53 AM
இரண்டு நாட்களாக ரவுசுகளைப் படிக்கவில்லை. இப்போ படித்து இரண்டு நாட்களுக்கான சிரிப்பையும் சேர்த்து சிரித்துவிட்டேன். பக்கத்தில் இருப்பவர் ஒருமாதிரி பார்க்கின்றார். நன்றி ராஜா அண்ணா.

ஓவியன்
06-07-2007, 11:15 AM
வாழ்த்துக்கள் ராஜா அண்ணா!

அந்த 250 அன்பர்களின் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரங்களாக உயரட்டும்.

ராஜா
06-07-2007, 03:51 PM
அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்

எப்படிச் சொல்றே?

நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரே..
_________________________________

மெடிக்கல் காலேஜ் பிரின்ஸ்பால் வந்திருக்கிறார் குருவே!''

''என்ன விஷயம் அப்பனே?''

''லாபரட்டரிக்கு எலும்புக் கூடு ஒண்ணு தேவைப்படுதாம்... ஆசிரமத்தைத் தோண்டி எடுத்துக்கலாமா என்று எ என்று கேட்கத்தான்!''
_________________________________

'நீங்க கொடுத்த மாத்திரையை முழுங்கறதுக்கு கஷ்டமாயிருக்கு டாக்டர்!''

''மாத்திரையை மாத்திரையா நினைக்காமல் கட்சிப் பணமாக நினைச்சுக்கங்க!''
_________________________________

''கமலா... ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருக்கிற உன் ப்ரெண்டைப் பார்க்கப் போகும்போதுகூட இப்படிக் கை நிறைய வளையல் போட்டுக்கணுமா என்ன?''

''பேஷன்ட்டைப் பார்க்கப் போறப்ப வெறுக்கையோட போனா நல்லா இருக்காதுன்னாங்களே!''
_________________________________


''ஆக்சிஜன்லே இருந்த கோமா பேஷண்ட் எப்படிக் பொழச்சிகிட்டாரு?''

ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதிலா அடைக்கிற ஹைட்ரஜன் சிலிண்டர் தவறுதலா சப்ளை ஆகியிருக்கு டாக்டர்!''
_________________________________

''உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் அவங்களால பேச முடியாது!''

அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?''
_________________________________

''பேஷண்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தாச்சு ஆனா, மயக்க மருந்து ஸ்டாக் இல்லை டாக்டர், என்ன செய்யறது?''

''ஆபத்துக்குப் பாவமில்லை என் ஷூ சாக்ஸை அவர் மூக்குகிட்டே லேசா காட்டிடு!''
_________________________________

_____________________________http://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke125.jpg

aren
06-07-2007, 05:10 PM
அருமையான ஜோக்குகள் ராஜா அவர்களே. எவ்வளவு படித்தாலும் இன்னும் ஜோக்குகள் வேண்டும் என்று மனது கேட்கிறது.

இந்த பகுதி மிகவும் சுவாரசியமானது. பல பிரச்சனைகள் இருந்தால் இந்தப் பகுதிக்கு வந்தவுடன் பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போய்விடுகின்றன. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
06-07-2007, 07:25 PM
மெடிக்கல் காலேஜ் பிரின்ஸ்பால் வந்திருக்கிறார் குருவே!''
''என்ன விஷயம் அப்பனே?''
''லாபரட்டரிக்கு எலும்புக் கூடு ஒண்ணு தேவைப்படுதாம்... ஆசிரமத்தைத் தோண்டி எடுத்துக்கலாமா என்று எ என்று கேட்கத்தான்!''

படிக்க சிரிப்பாக இருந்தாலும் உண்மை சுடுகின்றது. நன்றி ராஜா அண்ணா.

ராஜா
07-07-2007, 02:50 PM
குட்டி குட்டி ஜோக்ஸ்..


பத்து வருஷமானாலும் இந்தப் புடைவை சாயம் போகாது கிழியாது...!"

"அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?"

"பத்து வருஷமா எங்க கடையிலதான் இருக்கு; சாயம் போகலை கிழியலையே...?!"கோபி: 'புதுசா கார் வாங்க வந்திருக்கறவருக்கு காரைப்பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கே...?'

கோபு: எதவச்சு சொல்றீங்க...?'

கோபி: 'வண்டில்' ஸ்பீடு பிரேக்கர் எங்கேயிருக்குன்னு கேட்கறாரே...?
நான் எழுதின நாவல்களையெல்லாம் படிச்சிருக்கீங்களா?

ஓயெஸ்...

நீங்க எழுதறதுக்கு முன்னாடியே படிச்சிருக்கேன்!
"செத்தவன் பாடியையும் காணோம். கொலைகாரனும் தலைமறைவாகிட்டான். கேஸை என்னய்யா பண்றது?"

"ரெண்டு பேரும் சமாதானமாப் போய்ட்டாங்கன்னு பைலைக் குளோஸ் பண்ணிடுவமா சார்!"
"என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார் டாக்டர்...!"

"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு போவட்டும்!"
"இதென்ன... டாக்டரை வரச்சொல்லி போன் செய்தீங்க... ஒரு குடும்பமே வந்து நிக்குதே?"

"அதான் சொன்னேனே.. இவர் குடும்ப டாக்டர்ன்னு...!
ஜாதகம் ரொம்பப் பொருத்தமா இருக்கு..."

"அப்புறம்?"

"பெயர் ராசியும் பிரமாதம்..."

"பலே!"

"எதிர்காலத்துல பிள்ளைச் செல்வத்துக்கும் பொருள் செல்வத்துக்கும் பஞ்சமேயில்லே. ஜோஸ்யர் சொல்லிட்டார்."

"பிறகென்ன... இன்னைக்கு ராத்திரியே ஓடிப் போய்டுவோம்!"
"அடேங்கப்பா...! ஒரு கிலோ தக்காளி முப்பது ரூபாயா...! கிலோவுக்கு எத்தனை பழம்பா வரும்...!"

"அது எப்படியும் சுமாரா முக்கா கிலோப் பழம் தேறிடும் சார்!"
"பாய் வியாபாரத்தில் கூட்டு வேணான்னு சொன்னேனே கேட்டியா?"

"என்னாச்சு?"

"பார்ட்னர் எல்லாத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டான்."
பேச்சாளர்: நமது தலைவருக்கு "எய்ட்ஸ்" நோய் என்று எதிர்க்கட்சி காரர்கள், கிளப்பி விட்ட புரளியை யாரும் நம்ம வேண்டாம். இதோ டாக்டரே சர்டிபிக்கேட் கொடுத்திருக்கிறார். கட்சியை விட்டுச் சென்ற, செயலாளர்கள், பொருளாளர், முக்கியமா மகளிர் அணி அமைப்பாளர்களனைவரும் உடனே தாய்க் கட்சிக்குத் திரும்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
"சார், மணி பன்னிரண்டு ஆவது... கடையைச் சாத்தலாமா?"

"சரி, சரி... எதுக்கும் குவிஞ்சு கிடக்கிற அந்தப் புடைவைக் குவியலுக்குள்ளே லேடீஸ் யாராவது மாட்டிக்கிட்டிருக்காங்களான்னு ஒருதரம் நல்லாப் பார்த்துடு!"

அக்னி
07-07-2007, 02:56 PM
ஆரென் அவர்கள் கூறியதைப்போலவே..,
மனம் கனதி கூடிய நேரங்களில் ரவுசு பண்ணி இலகுவாக்குகின்ற ராஜா அவர்களுக்கு, நன்றிகளும் பாராட்டுக்களும்...

அன்புரசிகன்
07-07-2007, 03:31 PM
பத்து வருஷமானாலும் இந்தப் புடைவை சாயம் போகாது கிழியாது...!"
"அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?"
"பத்து வருஷமா எங்க கடையிலதான் இருக்கு; சாயம் போகலை கிழியலையே...?!"


ரொம்ப ராசியான புடவையாக்கும்...


நான் எழுதின நாவல்களையெல்லாம் படிச்சிருக்கீங்களா?
ஓயெஸ்...
நீங்க எழுதறதுக்கு முன்னாடியே படிச்சிருக்கேன்!


அதெப்டி? கரக்ட்டா கண்டுபிடிச்சாரு... ?"செத்தவன் பாடியையும் காணோம். கொலைகாரனும் தலைமறைவாகிட்டான். கேஸை என்னய்யா பண்றது?"
"ரெண்டு பேரும் சமாதானமாப் போய்ட்டாங்கன்னு பைலைக் குளோஸ் பண்ணிடுவமா சார்!"

நல்லகாலம்.. வேறு யாராவது அப்பாவி மாட்டவில்லை போல...
"என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார் டாக்டர்...!"
"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு போவட்டும்!"

இந்த பெண்ணுங்களே இப்படியா? கொஞ்ச நேரமாவது..............


ஜாதகம் ரொம்பப் பொருத்தமா இருக்கு..."
"அப்புறம்?"
"பெயர் ராசியும் பிரமாதம்..."
"பலே!"
"எதிர்காலத்துல பிள்ளைச் செல்வத்துக்கும் பொருள் செல்வத்துக்கும் பஞ்சமேயில்லே. ஜோஸ்யர் சொல்லிட்டார்."
"பிறகென்ன... இன்னைக்கு ராத்திரியே ஓடிப் போய்டுவோம்!"

ஆனாலும் அந்த ஆளுக்கு புத்த மட்டு.. எதிர் காலத்தில் நிம்மதியா இருப்பாரா என்று கேட்டாரா?"பாய் வியாபாரத்தில் கூட்டு வேணான்னு சொன்னேனே கேட்டியா?"
"என்னாச்சு?"
"பார்ட்னர் எல்லாத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டான்."
அவனுக்கு அரசியலில் முன்னனுபவம் இருக்குப்போல...


பேச்சாளர்: நமது தலைவருக்கு "எய்ட்ஸ்" நோய் என்று எதிர்க்கட்சி காரர்கள், கிளப்பி விட்ட புரளியை யாரும் நம்ம வேண்டாம். இதோ டாக்டரே சர்டிபிக்கேட் கொடுத்திருக்கிறார். கட்சியை விட்டுச் சென்ற, செயலாளர்கள், பொருளாளர், முக்கியமா மகளிர் அணி அமைப்பாளர்களனைவரும் உடனே தாய்க் கட்சிக்குத் திரும்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நோ கொமட்ஸ்:icon_shout:

அசத்தலாக இருக்கு மாப்பு...:sport-smiley-018:

அமரன்
07-07-2007, 03:32 PM
அன்பு நான் படித்துக்கொண்டு இருக்கும்போதே பதிவிட்டு எனக்கு சந்தர்ப்பம் கொடுக்காது கமென்ட் அடித்துவிட்டார். நன்றி ராஜா அண்ணா.

Gobalan
07-07-2007, 05:02 PM
ராஜா அவர்களே, நன்றி. இந்த அருமையான திரிக்கு. அலுவுலகத்திலும் மற்றும் அன்றாட வாழ்ககையில் வரும் ப்ரச்சனைகளுக்கு, இந்த திரியில் வரும் ஜோக்குகளை படித்தவுடன், பறந்தோடும் தன்மை வந்து விடுகிறது. இந்த மகத்தான சேவையை செய்யும் ராஜா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நன்றி.

ஓவியன்
08-07-2007, 01:53 PM
அன்பு நான் படித்துக்கொண்டு இருக்கும்போதே பதிவிட்டு எனக்கு சந்தர்ப்பம் கொடுக்காது கமென்ட் அடித்துவிட்டார். நன்றி ராஜா அண்ணா.

இந்த ஜோக்கும் நல்லாவே இருக்கு இல்லையா ராஜா அண்ணா? :icon_hmm:

இனியவள்
08-07-2007, 02:14 PM
இந்த ஜோக்கும் நல்லாவே இருக்கு இல்லையா ராஜா அண்ணா? :icon_hmm:

ஓவியன் என்டாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி :spudnikbackflip: :spudnikbackflip:

ஓவியன்
08-07-2007, 02:28 PM
ஓவியன் என்டாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி :spudnikbackflip: :spudnikbackflip:

இது குசும்பில்லே ரவுசு கண்ணா!, ரவுசு!:icon_good:

மனோஜ்
08-07-2007, 03:33 PM
அனைத்தும் அருமையான நகைசுவைகள் நன்றி ராஜா அண்ணா
1000 மாக ரசிகர்கள் மாற

ராஜா
08-07-2007, 03:41 PM
"பர்ஸ் தொலஞ்சு போச்சு. டிபன் சாப்பிட முடியல."

"உனக்கேது பர்ஸ்?"

"எனக்கு டிபன் வாங்கித் தரேன்னு சொன்னவர் பர்சு தொலஞ்சு போச்சுன்னு சொல்றேன்..."
"பக்கத்து தெரு பொண்ணுக்கு 'லவ் லெட்டர்' கொடுத்த ஆளை உங்க அம்மா செமத்தியா அடிச்சாங்கண்ணு சொல்றியே... உங்க அம்மாவுக்கு என்ன அவ்வளவு அக்கறை?"

"லவ் லெட்டர் கொடுத்தவர் எங்க அப்பாதானே..."
"தலைவர் ரெண்டே வார்த்தை சொல்லி தொண்டர்கள் அத்தனை பேரையும் மகிழ வச்சிட்டாரு..."

"அப்படி என்ன சொன்னாரு..?"

"ராஜினாமா பண்றேன்'னாரு..."

"எங்க வீட்டு நாய் நேற்று செத்துப் போச்சு. எங்க அம்மாவால் இதை ஜீரணிக்கவே முடியல."

"உங்க அம்மா ஏங்க நாயைப் போய்ச் சாப்பிடுறாங்க?"


ஒரு வாசகர் கடிதம் :

ஆசிரியர் அவர்களுக்கு,

இந்த வாரத் தலையங்கம் டாப் டக்கர். அசத்திவிட்டீர்கள் அசத்தி!

பின்குறிப்பு : ஒருவேளை தலையங்கம் எழுதாவிட்டால் 'கார்ட்டூன்' என்று மாற்றிக் கொள்ளவும்.
அவர் : இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.

இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?

அவர் : இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.

அன்புரசிகன்
08-07-2007, 04:05 PM
"பக்கத்து தெரு பொண்ணுக்கு 'லவ் லெட்டர்' கொடுத்த ஆளை உங்க அம்மா செமத்தியா அடிச்சாங்கண்ணு சொல்றியே... உங்க அம்மாவுக்கு என்ன அவ்வளவு அக்கறை?"
"லவ் லெட்டர் கொடுத்தவர் எங்க அப்பாதானே..."

ஒருத்தியையே கட்டிக்காக்க முடியல. இதுல 2வது கேட்குது.. தேவைதான்..."தலைவர் ரெண்டே வார்த்தை சொல்லி தொண்டர்கள் அத்தனை பேரையும் மகிழ வச்சிட்டாரு..."
"அப்படி என்ன சொன்னாரு..?"
"ராஜினாமா பண்றேன்'னாரு..."

தொண்டர்களுக்கு மகிழ்ச்சி. அடுத்த தலைவருக்கு போட்டியிருக்குமே...???"எங்க வீட்டு நாய் நேற்று செத்துப் போச்சு. எங்க அம்மாவால் இதை ஜீரணிக்கவே முடியல."
"உங்க அம்மா ஏங்க நாயைப் போய்ச் சாப்பிடுறாங்க?"

அடக்கடவுளே... இது வேறயா???அவர் : இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
அவர் : இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.
பாசத்தின் உச்சக்கட்டம்... புரிந்துணர்வின் வெளிப்பாடு

ராஜா
08-07-2007, 04:15 PM
நன்றி அன்பு, அமர், அக்னி, மனோஜ், கோபாலன், ஆரென், மற்றும் உள்ள நண்பர்களே..!

ஓவியன்
08-07-2007, 07:26 PM
"பக்கத்து தெரு பொண்ணுக்கு 'லவ் லெட்டர்' கொடுத்த ஆளை உங்க அம்மா செமத்தியா அடிச்சாங்கண்ணு சொல்றியே... உங்க அம்மாவுக்கு என்ன அவ்வளவு அக்கறை?"

"லவ் லெட்டர் கொடுத்தவர் எங்க அப்பாதானே..."


அந்தப் பொண்ணுக்கே அவ்வளவு அடினா???

அவங்க அப்பாவுக்கு எவ்வளவு அடி விழுந்திருக்கும்!.:icon_hmm:

ஹீ!,ஹீ!,ஹீ:D :D :D :D :D :D !!!!!!!!!!!

ராஜா
09-07-2007, 04:25 PM
கங்குலியின் கைத்தடி ஒருவன் வந்து " அண்ணே!!! அக்தர் நம்ம ஆளுங்கள அவுட்
ஆக்கிட்டான்..."

கங்குலி: "அக்தருக்கு நேரம் சரியில்லன்னு நினைக்குறேன்.. எட்ரா பேட்ட"

கங்குலி: "எவன்டா என் டீம் ஆளுங்கள அவுட் ஆக்கினத்து???"

அக்தர்: "என்னது .. கொஞ்சம் சத்தமா சொல்லு ...காது கேக்கல"

கங்குலி: "நான் பெவேலியனை தாண்டி வரமாட்டேன்.. டென்டுல்கர்ரை அனுப்பி
வைக்கிறேன் முடின்சா அவனை அவுட் ஆக்கி பாரு.."

அந்த நேரத்தில் டென்டுல்கர் அக்தர் பந்தில் கிளின் போல்ட் ஆக....

கங்குலி: "ஒத்துகிறேன் உன் பவுலிங் நல்ல இருக்குன்னு ஒத்துகிறேன்..
அடுத்த மேட்சில மீட் பன்னுறேன்.."

அமைதிய நழுவுகிறான்... அக்தர் நாலைந்து பந்துகளை கக்குலி விலாவில்
எறிய... சரியாக வங்கி கட்டிகொன்டு.. சமாளித்து கொன்டு

"உங்களையெல்லாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு"

கக்குலி: "என்னை யாரும் அவுட் ஆக்கினது இல்லை.."

அக்தர்: "போன மேட்சிலதானே நடு ஸ்டம்பு ஏகிறிடிச்சு...??"

கக்குலி: "ஆது போன மேட்ச்சு... நான் சொல்லுறது இந்த மேட்ச்சு.."

அந்த நேரத்தில் அக்தர் ஒரு யார்க்கர் பந்து வீச...

கங்குலி: "வேண்டாம்.. இதோட நிறுத்திக்க.."

அக்டர்: " டேய் ...நான் என்னும் உன்னை அவுட் ஆக்கலை டா.."

கங்குலி: "அவுட் அக்கிறதுக்கு முன்னாடிதானே நிறுத்த முடியும்..

அக்தர்: மவனே எவ்வளவு பட்டாலும் ஏன்டா திருந்தவே மாட்டேங்குறா???

கக்குலி: " வேண்டாம்... நான் ரன்ஸ் அடிக்க மாட்டேன்.."

அக்தர்: அடிச்சா...

கங்குலி: அதுதான் அடிக்க மாட்டேன்னு சொல்லுறேன்மில்ல..

அக்தர் ஒரு பவுன்சர் அனுப்ப...

கங்குலி: வேண்டாம்...

அக்தர் மீண்டும் ஒரு யர்க்கர் அனுப்ப...

கங்குலி: வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்...அழுதுருவேன்...

அலுத்து போன அக்தர் அடுத்த பந்தில் கங்குலி விக்கெட்டை எடுத்து பவெலியன்
அனுப்புகிறார்... வழக்கம் போல் கங்குலி டிரஸ்சிங் ரூம் சென்று அமைதியாக
இருக்கிறார், அந்த வழியாக போகும் இருவர்

"எலா.. சிக்செர் அடிச்ச கக்குலியே இந்த கவலையா இருக்காருனா, பந்து
போட்டவன் நிலமைய யோசிச்சு பாருல"

கக்குலி இதி கெட்டு விட்டு "ஐயா.. இப்படி பெங்கால் டைகர்ன்னு
சொல்லியே..என் கெரியரை நாசமாக்கி போட்டியளேட..." என்று
முனுமுனுக்கிறார்..

இனியவள்
09-07-2007, 04:32 PM
கங்குலி என்ன இது வடிவேலு சொல்ற மாதிரி சின்ன பிள்ளைத் தனமாவே இருக்கே :grin: :grin:

அன்புரசிகன்
09-07-2007, 04:36 PM
மாப்பு ஒரு வின்னர்தான்... அடுத்தது என்ன? தீப்பொறி ஆறுமுகமா???

எப்படித்தான் முடியுதோ?...

அக்னி
09-07-2007, 04:36 PM
கங்குலி என்ன இது வடிவேலு சொல்ற மாதிரி சின்ன பிள்ளைத் தனமாவே இருக்கே :grin: :grin:

நகைச்சுவை என்பதனால், தனம் இருக்கும்தானே...

கங்குலியும் தப்பவில்லையா...
பார்த்தா வெந்து நூடில்ஸ் ஆகிடுவாரு... (நன்றி:− ஓவியன்)

பாராட்டுக்கள் ராஜா அவர்களே...

அக்னி
09-07-2007, 04:37 PM
மாப்பு ஒரு வின்னர்தான்... அடுத்தது என்ன? தீப்பொறி ஆறுமுகமா???

எப்படித்தான் முடியுதோ?...


முனுமுனுக்கிறார்..

கடைசில 2 முற்றுப்புள்ளிலதான் முடியுது...

அன்புரசிகன்
09-07-2007, 04:47 PM
கடைசில 2 முற்றுப்புள்ளிலதான் முடியுது...

இப்போ இன்னா சொல்ல வாறீங்கோ :music-smiley-012:

அக்னி
09-07-2007, 04:48 PM
இப்போ இன்னா சொல்ல வாறீங்கோ :music-smiley-012:

ஒண்ணுமில்ல நைனா...

aren
09-07-2007, 06:42 PM
கங்குலி விட்டா வேறு ஆளே இல்லையா உங்களுக்கு. டெண்டுல்கர் இருக்காரே அல்லது ஷேவாக் இருக்காரே அவங்களை இப்படி போட்டுத் தள்ளுங்களேன்.

இருந்தாலும் நல்ல சிரிப்பு. தொடருங்கள்.

மனோஜ்
09-07-2007, 08:21 PM
கங்குளி அக்தர் சூப்பர் அண்ணா

ராஜா
10-07-2007, 04:53 PM
http://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke123.jpg

......................................http://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke120.jpg

.............................................................................http://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke119.jpg

.......................................http://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke118.jpg

http://i181.photobucket.com/albums/x216/RAJA-RAVUSU/joke116.jpg

அமரன்
10-07-2007, 04:58 PM
காதல்,சினிமா,டாக்டர், காலம் என கலந்து கட்டி ரவுசுபண்னி விட்டீங்க. நன்றி அண்ணா.

ராஜா
11-07-2007, 02:42 PM
பெண் பாடகி ஏன் உணர்ச்சி இல்லாமப் பாடறhங்க ?

பெண் பாவம் பொல்லாததாம் ..!

*********

அலைகடலென திரண்டிருக்கும் உங்களைப் பார்க்கும் பொழுது...

நீ உப்பு வித்தது ஞாபகம் வந்திடுச்சா ?

*********

பஸ்ஸில் உனக்குப் பட வாய்ப்பு கிடைச்சதா ? என்ன சொல்றே ?

ஒரு பெண்ணின் மீது *

*********

ஆபீஸை மையமா வெச்சு ஒரு படமா ? என்ன தலைப்பு ?

போர்வை ஒன்றே போதுமே *

*********

அந்த நடிகையின் ரெக்கார்டு 10-10-15-2.

அப்படியா ?

ஆமா * 10 முறை கல்யாணம், 10 முறை டைவர்ஸ், 15 குழந்தைகள், 2 முறை இரட்டைக் குழந்தைகளாம் *

**********

என்னய்யா இது... ஊது பத்தி புகை-யைப் படம் எடுத்து இணைத்திருக்கிறhய் ?

அப்ளிகேஷன்ல புகைப்படம் இணைக்கவும்னு போட்டிருந்ததே சார்... அதான். ..*

**********

தினமும் பீச்சுக்கு வந்ததும் என்னை நிக்கச் சொல்லி சுத்தி வர்றீங்களே... ஏன் டார்லிங் ?

எனக்கு ஜhதகத்துல தோஷம் இருக்கறதால தினமும் சனீஸ்வரனை சுத்திவரணும்னு nஜhஸியர் சொல்லி யிருக்காரே *

**********

தலைவர் வீட்ல ஆயிரக்கணக்குல செருப்புகள் இருந்ததுக்கு, அதிகாரிகள் கணக்கு கேட்டாங்களாமே... தலைவர் என்ன சொன்னார் ?

வாங்கினா கணக்கு காட்டலாம். மேடைல வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டறதுன்னாராம்.. *

**********

உன் மூணாவது பையனுக்குப் பெண் பார்க்கறீயாமே, மருமகள் எப்படி இருக்கணும் ?

என்னோட கூட்டணி அமைச்சு, என் மூத்த மருமகள்களை ஓரங்கட்டணும். ..*

**********

பையன் உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?

பெண் செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?

பையன் உங்க தங்கையோட லவ்வர் தான்.

***********

காதலன் கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,,

காதலி அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?

காதலன் உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.

************

நண்பர் கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,, நீங்க

என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?

அரசியல்வாதி இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற

கவலைதான்.

*************

mania
11-07-2007, 02:52 PM
அசத்தல் ராஜா.....:D
அன்புடன்
மணியா

ஓவியன்
11-07-2007, 02:58 PM
ஆபீஸை மையமா வெச்சு ஒரு படமா ? என்ன தலைப்பு ?

போர்வை ஒன்றே போதுமே

அட இது என் ஆபிசுக்கும் பொருந்துமே!

தூங்கிறதுக்கு இல்லைங்க, எனக்கு பக்கத்திலே இருந்து பணி புரிபவர் ஏசியை மிகவும் அதிகமாக குளிர் வருவது மாதிரி வைத்திருப்பார்!.

தாங்க முடியாது, வெட வெடத்துக் கொண்டே இருப்பேன்!. :D

aren
11-07-2007, 04:37 PM
அட இது என் ஆபிசுக்கும் பொருந்துமே!

தூங்கிறதுக்கு இல்லைங்க, எனக்கு பக்கத்திலே இருந்து பணி புரிபவர் ஏசியை மிகவும் அதிகமாக குளிர் வருவது மாதிரி வைத்திருப்பார்!.

தாங்க முடியாது, வெட வெடத்துக் கொண்டே இருப்பேன்!. :D


முதல் வரியைப் படித்தவுடன் வேறு மாதிரி நினைத்துவிட்டேன் (உண்மை அதுதானா).

ராஜா
12-07-2007, 04:51 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
12-07-2007, 04:53 PM
முதல் பெண் ; இன்னிக்கு எங்க வீட்ல அடுப்பு எரியதுன்னா அதுக்கு இவர்தான் காரணம்.

இரண்டாம் பெண் ; அவ்வளவு பெரிய கொடை வள்ளலா ?

முதல் பெண் ; ஊஹும் ,,, கியாஸ் கம்பெனி வெச்சிருக்கார்.

++++++++++++++

ராஜா
12-07-2007, 04:53 PM
கணவன் நம்ம வீட்டுக்கு சாப்பிட ஏங்க மானேஜரை கூப்பிட்டிருக்கிறேன்.

மனைவி என்ன திடீர்னு ?

கணவன் அவர் மனைவியோட சாப்பாட்டை கொஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாராம் அவரும் தெரிஞ்சுக்கட்டும்..நான் படும் பாட்டை...

++++++++++++++

ராஜா
12-07-2007, 04:54 PM
பெண் ; வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க...

பையன் ; நிச்சயம் பண்ணவா ?

பெண் ; ஒரு மாசமா என் பின்னாடியே வர்றிங்களே அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கதான்

++++++++++++++

ராஜா
12-07-2007, 04:55 PM
மனைவி ; போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?

கணவன் ; ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?

மனைவி ; உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.

++++++++++++++

ராஜா
12-07-2007, 04:56 PM
ஆசிரியர் ; உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நு}று ரூபா வைக்கிறhரு. காலையில பார்க்கிறப்ப நு}று ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ?

மாணவன் ; எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார் *

++++++++++++++

ராஜா
12-07-2007, 04:56 PM
டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..

எப்படி சொல்றீ;ங்க?

சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறhரு டாக்டர்..

++++++++++++++

ராஜா
12-07-2007, 04:57 PM
அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?

++++++++++++++

இனியவள்
12-07-2007, 05:00 PM
பெண் ; வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க...

பையன் ; நிச்சயம் பண்ணவா ?

பெண் ; ஒரு மாசமா என் பின்னாடியே வர்றிங்களே அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கதான்

++++++++++++++

ஹா ஹா ராஜா

பொண்ணு தான் கிடைக்கேலை சம்பளமாவது கிடைக்குதே என்று வாங்கி கொண்டு போய் இருப்பார் :sport-smiley-017:

அமரன்
13-07-2007, 08:01 AM
அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?

++++++++++++++

ஹா....ஹா....வேற யாராவது இருந்திருந்தால்....

ராஜா
13-07-2007, 03:58 PM
நன்றி இனி..!

நன்றி அமர்..!

ராஜா
13-07-2007, 04:03 PM
"ஜோசியருக்கு நல்ல பசின்னு நினைக்கிறேன்.."

"எப்படிச் சொல்றே?"

"ராகு தசைன்னு எழுதாம ராகு தோசைன்னு எழுதித் தராரே?"

ராஜா
13-07-2007, 04:04 PM
"கூட இருந்தே குழி பறிச்சிட்டான்.."

"அய்யய்யோ .. அப்புறம் ?"

"அவனை அந்தக் குழியிலேயே விட்டுட்டு நான் மட்டும் டீ வாங்கிட்டுப் போக மேல ஏறி வந்துட்டேன்...."

ராஜா
13-07-2007, 04:05 PM
"பேக்கரியில ஒரு பன் வாங்கினாக் கூட நாலு பேருக்குப் பிய்ச்சுக்
குடுத்துட்டுதான் தின்பேன்.."

"நல்ல 'பன்'பாடுதான்..!"

ராஜா
13-07-2007, 04:06 PM
தாய்: ஏங்க! நம்ப பய கண்ணும் அடுத்த வீட்டுப் பொண்ணு கண்ணும் பேசிக்குதாமே!

தந்தை: அப்படியா! அப்ப காதும் காதும் வைச்ச மதிரி விஷயத்தை முடிச்சுடணும்!

ராஜா
13-07-2007, 04:07 PM
நொண்டி விளையாட்டு ஒலிம்பிக்ஸில் இருந்தால் இந்தியா ஜெயிக்குமா?

ஒருக்கால் ஜெயிக்கலாம்.

ராஜா
13-07-2007, 04:08 PM
வாடிக்கையாளர்:* முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப
பிடிச்சுருக்கலாம் அதுக்காக போர்டுல இப்படியா
எழுதறது.

*முதலாளி : *என்ன எழுதியிருக்கேன்?

*வாடிக்கை :* தயிர் சதாம் தக்காளி சதாம் லெமன் சதாம்
ரெடி அப்படீன்னு
எழுதியிருக்கீங்க. **

ராஜா
13-07-2007, 04:09 PM
தளபதி: மன்னா, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யாதீர்கள் என்றேனே கேட்டீர்களா?

மன்னர்: ஏன் என்னாச்சு?

தளபதி: மன்னரையே மூக்கறுத்து விட்டேன் என்று தலைமை
மருத்துவர் பெருமை பேசுகிறார்

ராஜா
13-07-2007, 04:10 PM
அரசியல்வாதி 1 :* கட்சியில எந்தத் தொண்டரும் சரியா வேலை செய்ய
> மாட்டேங்குறாங்க.

> *அரசியல்வாதி 2 :* அப்ப 'தண்டர்கள்' னு சொல்லுங்க.

அறிஞர்
13-07-2007, 04:14 PM
"ஜோசியருக்கு நல்ல பசின்னு நினைக்கிறேன்.."

"எப்படிச் சொல்றே?"

"ராகு தசைன்னு எழுதாம ராகு தோசைன்னு எழுதித் தராரே?"தோசையை நினைத்து பிழைப்பு ஓட்டுகிறாரோ என்னவோ...

அறிஞர்
13-07-2007, 04:15 PM
தாய்: ஏங்க! நம்ப பய கண்ணும் அடுத்த வீட்டுப் பொண்ணு கண்ணும் பேசிக்குதாமே!

தந்தை: அப்படியா! அப்ப காதும் காதும் வைச்ச மதிரி விஷயத்தை முடிச்சுடணும்!

எள்ளென்றால் எண்ணெயாக இருக்காங்க..

அறிஞர்
13-07-2007, 04:15 PM
*வாடிக்கை :* தயிர் சதாம் தக்காளி சதாம் லெமன் சதாம்
ரெடி அப்படீன்னு
எழுதியிருக்கீங்க. **
தமிழ் பண்டிதர்களின் உதவி தேவையோ என்னவோ...

ராஜா
13-07-2007, 04:19 PM
தமிழ் பண்டிதர்களின் உதவி தேவையோ என்னவோ...

ஆரம்பிச்சுட்டாருய்யா.. !

அறிஞர்
13-07-2007, 04:28 PM
ஆரம்பிச்சுட்டாருய்யா.. !
ஆர*ம்பிச்ச*து நீங்க*.. நாங்க* கூட* பாட்டு பாடுறோமுங்க*..

ஓவியன்
14-07-2007, 10:54 AM
ஆரம் பிச்சுட்டாருய்யா.. !

இவரும் ஆரத்தைப் பிச்சிட்டாரா?

இது தான் சொல்லுறது ஆரத்தைக் கவனமாக வைக்க வேண்டுமென்று..............:)

அன்புரசிகன்
14-07-2007, 01:09 PM
இவரும் ஆரத்தைப் பிச்சிட்டாரா?

இது தான் சொல்லுறது ஆரத்தைக் கவனமாக வைக்க வேண்டுமென்று..............:)

இங்கே யாரை குரங்கென்கிறீர்கள்???:innocent0002:

ராஜா
14-07-2007, 04:40 PM
படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"

"கரும்பு"
________________________________________

என்ன உங்க மனைவி உங்களை மதிக்கவே மாட்டேங்கிறh .. .. ?

பத்தாயிரம் ரூபாய் சம்பாளம் வாங்கற திமிரு .. ..

ஓ...வேலைக்குப் போறhங்களா .. .. ?

நீங்க வேற .. .. அவ வாங்கறது என்னோட சம்பளத்தை .. ..
________________________________________

என் பெண்ணோட பயோ - டே;டடாவைப் பார்த்துட்டு
மாப்பிள்ளை பையன் என்ன சொன்னான் ?

அந்தப் பய டாட்டா காட்டிட்டுப் போயிட்டான் *
________________________________________

வேலை செய்யற இடத்துலே வேலையை நல்லா கத்துக்கிட்டு
சொந்தமா தொழில் ஆரம்பிக்கிறது தப்பா * அதுக்கு போயி
என் மகனை உள்ளே தள்ளிட்டாங்க *

உங்க பையன் எங்கே வேலை செய்தான் ?

ரூபா நோட்டு அச்சடிக்கிற நாசிக் பிரஸ்ல *.
________________________________________

அவன் ; போன மாசம்தான் என்னை ஈவ் டீஸிங்னு போலீஸ்ல
பிடிச்சுக் கொடுத்தே. ஆதுக்குள்ளே இப்ப என்ன லவ் லெட்டர் ?

அவள் ; போலீஸ்ல நீங்க அறை வாங்கினதைப் பார்த்ததும்,
மனசு இளகி காதலாயிடுச்சுங்க.
________________________________________

நான் இப்ப தலைநிமிர்ந்து பேசறதுக்கு நீங்கதான் காரணம்.

அப்படி நான் என்ன பெரிசா செஞ்சிட்டேன் ?

என்னைவிட ரொம்ப உயரமா இருக்கீங்களே *

mania
14-07-2007, 04:43 PM
என் பெண்ணோட பயோ - டே;டடாவைப் பார்த்துட்டு
மாப்பிள்ளை பையன் என்ன சொன்னான் ?

அந்தப் பய டாட்டா காட்டிட்டுப் போயிட்டான் *
சூப்பர் ராஜா...!!!!!
அன்புடன்
மணியா

ஓவியன்
14-07-2007, 04:45 PM
படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"

"கரும்பு"

கவனம் ராஜா அண்ணே!

படம் திரையரங்க முதலாளியைச் சக்கையாகப் புளியவும் சாத்தியம் இங்கே உண்டு................:whistling:

அன்புரசிகன்
14-07-2007, 04:46 PM
படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"

"கரும்பு"

அடி சக்கை...நீங்க வேற .. .. அவ வாங்கறது என்னோட சம்பளத்தை .. ..

நீங்க வாங்கினா என்ன. அவ வாங்கினா என்ன... :Dஎன் பெண்ணோட பயோ - டே;டடாவைப் பார்த்துட்டு
மாப்பிள்ளை பையன் என்ன சொன்னான் ?
அந்தப் பய டாட்டா காட்டிட்டுப் போயிட்டான் *

டூ மச் இன்சல்ட். ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி என்ற பாடல் பாடவேண்டியது தானே...அவன் ; போன மாசம்தான் என்னை ஈவ் டீஸிங்னு போலீஸ்ல
பிடிச்சுக் கொடுத்தே. ஆதுக்குள்ளே இப்ப என்ன லவ் லெட்டர் ?
அவள் ; போலீஸ்ல நீங்க அறை வாங்கினதைப் பார்த்ததும்,
மனசு இளகி காதலாயிடுச்சுங்க.

இது தான் வாங்கீட்டு வாங்கிறது... (அடி-லவ் லெட்டர்)


நான் இப்ப தலைநிமிர்ந்து பேசறதுக்கு நீங்கதான் காரணம்.
அப்படி நான் என்ன பெரிசா செஞ்சிட்டேன் ?
என்னைவிட ரொம்ப உயரமா இருக்கீங்களே *

பெருசா ஒன்னுமல்ல. பெருசாகிட்டாரு...

சூப்பருங்கோ மாப்பு...:angel-smiley-026:

இனியவள்
14-07-2007, 04:52 PM
படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"

"கரும்பு"
________________________________________பிய்ச்சுக் கொண்டு போற மாதிரி ஒரு படப் பெயர் சொல்லுங்க...

"செருப்பு" :