PDA

View Full Version : ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!

Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11

ராஜா
07-05-2007, 05:03 PM
""போஸ்ட்மேனுக்கும் போலீஸ்காரருக்கும் என்ன சண்டை?''

""அதுவா... சார் "தந்தி'ன்னு சொல்றதுக்கு பதிலா சார்
"தொந்தி'ன்னு சொல்லிட்டாராம்...!''
_________________

கடவுள் ; பக்தா! உன்னை ஒரு ஆம்பிளை சிங்கமா ஆக்கவா...
இல்லை, பயந்து நடுங்கற சுண்டெலியா மாத்தவா...?

பக்தன் ; சுண்டெலியாவே மாத்திடுங்க பிரபு... அதுக்குத்தான்
என் மனைவி பயப்படுவா..!
_________________

""நான் எதுக்குப் பயந்தேனோ, அது நடக்க ஆரம்பிச்சுடுச்சு..''

""என்னய்யா சொல்றே?''

""கால்ல அடிபட்டுப் படுக்கையில் கிடந்த என் மனைவி
நடக்க ஆரம்பிச்சுட்டா!'
_________________

என்னது... உங்க மாமியார் கால்ல விழுந்ததுக்கு கோவிச்சுக்கிட்டாங்களா?

ஆமா.... அவங்க கால்ல விழுந்தது, என் கையில இருந்த அம்மிக்குழவி!
_________________

சமைக்கும்போது என் மாமியார் காய் நறுக்கித் தருவாங்க. துணி
துவைச்சா பிழிஞ்சு காய வைப்பாங்க. வாசல் தெளிச்சா
கோலம் போடுவாங்க.

உனக்கு இவ்வளவு உதவியா இருப்பாங்களா?

எனக்கா? நீ வேற அவங்க பிள்ளைக்கு!
_________________

அந்த டாக்டர்கிட்டே போனால் படிப்படியாத்தான் மருந்து
கொடுப்பாரு...

நிஜமாவா?

ஆமாம். தூக்கம் வரலைன்னு அவர்கிட்ட போனா, முதல்ல
கொட்டாவி வர்றதுக்குத்தான் மருந்து கொடுப்பாரு.
_________________

ஏன் அந்தப் பையனைப் போட்டு அடிக்கிறீங்க?

படிச்சதெல்லாம் மறந்துடுச்சுன்னு சொல்றான்.... அதான் அடிக்கிறேன்.

விடுங்க அவனை... அவன் பக்கத்து வீட்டுப் பையன். இதோ
இவன்தான் நம்ம பையன்.
_________________

""கபாலி சிலைகளைத் திருடச் சொன்னா ரகம் ரகமா விக்குகளைத்
திருடி வந்திருக்கியே..ஏன்?''

""நீங்கதானே பாஸ் "விக்'ரகங்களைத் திருடச் சொன்னீங்க?''
_________________

"காபி பொடி'னு எழுதி இருக்கு, நீங்க ஏன் காபின்னு படிக்கறீங்க..?

நான்தான் சொன்னேனே டாக்டர்.. பொடி எழுத்தைப்
படிக்க முடியலைன்னு..
_________________

தயாரிப்பாளர் : படத்தோட பெயரை பார்த்ததுமே அத்தனை
பேரும் தியேட்டருக்கு அடிச்சு பிடிச்சு ஓடி வரணும்.
அப்படியொரு டைட்டில் சொல்லுங்க.

இயக்குநர்: தண்ணி லாரி.
_________________

விரைவில்....

சந்திப்போம்...

வணக்கம்..!

என்னை மறந்துடாதீங்க மக்கா..!
_________________

அன்புரசிகன்
07-05-2007, 06:45 PM
உடனே அண்ணா கூறினார் - அப்ப இனிமேல் முதல் வாளி தண்ணீரில் குளிக்காதே:nature-smiley-008: அதனைக் கீழே கொட்டி விட்டு இரண்டாவது வாளித் தண்ணீரிலிருந்து குளிக்கத் தொடங்கு என்று....:icon_shout:

இரத்தத்தில் ஊறிய அதி உயர் ஞானம்...
இப்பொழுதும் முதல் வாளி நீரை விரையம் செய்யும் பழக்கம் உண்டோ,??

அன்புரசிகன்
07-05-2007, 06:54 PM
தயாரிப்பாளர் : படத்தோட பெயரை பார்த்ததுமே அத்தனை
பேரும் தியேட்டருக்கு அடிச்சு பிடிச்சு ஓடி வரணும்.
அப்படியொரு டைட்டில் சொல்லுங்க.

இயக்குநர்: தண்ணி லாரி.

யாழ்ப்பாணத்தில் படம் ஓட்டினால் யாருமே வரமாட்டாங்களே...

விரைவில்....

சந்திப்போம்...

வணக்கம்..!

என்னை மறந்துடாதீங்க மக்கா..!

ஏனிந்த அவசரம். சூட்டிங்கா?

அறிஞர்
07-05-2007, 07:10 PM
_________________

விரைவில்....

சந்திப்போம்...

வணக்கம்..!

என்னை மறந்துடாதீங்க மக்கா..!
_________________இது என்ன ராஜா.... உங்களை மறப்பதாவது.... எங்களை விட்டுட்டு எங்க போகப்போறீங்க...

ஓவியன்
08-05-2007, 07:48 AM
தயாரிப்பாளர் : படத்தோட பெயரை பார்த்ததுமே அத்தனை
பேரும் தியேட்டருக்கு அடிச்சு பிடிச்சு ஓடி வரணும்.
அப்படியொரு டைட்டில் சொல்லுங்க.

இயக்குநர்: தண்ணி லாரி.

நகைச்சுவையென்றாலும் நிஜம் சுடுகிறது.
இந்த நிலை என்று மாறுமோ??
தெரிந்து கொண்டும் தொடர்கின்றோம் காடழிப்பை,
தொடர்சியாக......

வாசகி
08-05-2007, 03:54 PM
ராஜாவின் ரவுசு என்ற திரியின் தலைப்பைப் பார்த்ததும் என்னமோ ரவுசுப்பாட்டியின் தனிராச்சியம் என்று நினைத்தேன். அதில் பாதி பொய் மீதி உண்மை என்று படித்ததும் புரிந்துகொண்டேன். ராச்சியம் என்பது உண்மை. ரவுசுப்பாட்டியின் இராச்சியம் என்பது பொய். அத்தனையும் நகைச்சுவை முத்துகள். சிரிக்கமடுமல்ல சிந்திக்கவும் வைத்த மணிகள். வாழ்த்துகள் (நகைச்சுவை) ராஜா. ஆமா இறுதிப்பதிப்பு ஏன்? விடுமுறையில் செல்கின்றீர்களா?

ராஜா
08-05-2007, 04:34 PM
வணக்கம் நண்பரே..!

பாராட்டுக்கு நன்றி..! இது தற்காலிகப் பிரிவுதான்.. மீண்டு[ம்] வருவேன்..

ராஜா
08-05-2007, 04:35 PM
நன்றி அனைத்து நண்பர்களே..!

ராஜா
08-05-2007, 04:37 PM
""என்னங்க இது.. உங்க
பையன் "யுனிவர்சிட்டி'ங்கறதை "யுனிவர்குட்டி'னு தப்பா படிக்கிறான்?''

""அவனுக்கு இங்க்லீஷ் புரிஞ்சுக்கற கெப்பாகுட்டி இல்ல..தயவு
செஞ்சு இதை வெளியில் சொல்லி, பப்ளிகுட்டி பண்ணாதீங்க சார்
_________________________________________________________________________

நர்ஸ்: சாப்பிட ரொம்பக் கஷ்டமா இருக்கு... டாக்டர்.

டாக்டர் : மாத்திரை ஏதும் எழுதித் தரட்டுமா?

நர்ஸ் : வேண்டாம் டாக்டர்... சம்பளம் மட்டும் கொஞ்சம்
கூடப் போட்டுக் கொடுங்க.... போதும்.
_________________________________________________________________________

""மழை வந்தபோது சேகரிச்சு வெச்சதால இப்ப ரொம்ப உதவுது...''

""எது? மழை நீரா?''

""இரவல் குடை''
__________________________________________________________________________

""தலைவர் ஏக கடுப்புல இருக்காரே.. ஏன்?''

""காண்ட்ராக்ட்ல சைன் பண்ணா ஆறு
சூட்கேஸ்னு சொல்லிட்டு காலி சூட்கேஸ் கொடுத்துட்டாங்களாம்.''
_______________________________________________________________________

ராஜா
08-05-2007, 04:39 PM
ஒரு குடிகாரன் மூக்கு முட்டக் குடித்துவிட்டு வெளியில் நிற்கும்
கார்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.. அதைக் கவனித்த
காவலாளி விசாரித்தான்..

இங்கே என்ன செய்கிறாய்..?

என் வண்டியைத் தேடுகிறேன்..

வண்டியைத் தேடுவதானால் எண் தகட்டை அல்லவா பார்க்க
வேண்டும்..? நீ வண்டியின் மேல் தடவிக் கொண்டிருக்கிறாய்...?

என் வண்டியின் மேல் இரண்டு நீல விளக்குகள், இரண்டு
சிவப்பு விளக்குகள், ஒரு சைரன் இருக்கும்.. மதுவிலக்கு பிரிவு
என்று எழுதியிருக்கும்...!
_________________

ராஜா
08-05-2007, 04:40 PM
ஒரு குடிகாரன் ஒரு மதுக்கடையில் அமர்ந்து
அழுதுகொண்டிருந்தான்.. பக்கத்திலிருந்தவர் அவனை விசாரிக்க...
அவன் சொன்னான்..

கேவலம் ஒரு விஸ்கி புட்டிக்காக என் மகனை விற்றுவிட்டேன்..

அடடா.. என்ன வேலை செய்து விட்டாய்.. உனக்கு வெட்கமாக இல்லை..?

முட்டாள் தனம் செய்துவிட்டேன்.. அப்படி செய்திருக்கக் கூடாது..

இப்போது உன் மகன் உனக்கு வேண்டும் தானே..?

ஆமாம்.. வேறெதையும் விட மகனையே இப்போது விரும்புகிறேன்..

ஆனால் காலம் கடந்துவிட்டது.. இப்போது மகன் பாசம்
உன்னை ஆட்டிப்படைக்கிறது.. உண்மைதானே..?

அதெல்லாம் இல்லை.. அதே மகனுக்கு இந்தக் கடைக்காரன்
இரண்டு புட்டிகள் தருவதாகச் சொல்கிறான்..!
_________________

ராஜா
08-05-2007, 04:42 PM
ஒரு மனிதர் அலுவலக வாயிலில் காத்திருந்தார்.. வரவேற்பாளன்
அவரைக் கேட்டான்..

"அய்யா.. காபி அருந்துகிறீர்களா..?

வேண்டாம் நன்றி.. ஒருமுறை காபி குடித்தேன்.. குமட்டிக்
கொண்டு வந்தது.. அத்துடன் காபி குடிப்பதை விட்டுவிட்டேன்..!

சரி.. உள்ளே ஏ.சி. இருக்கிறது.. போய் சற்று அமருங்களேன்..

வேண்டாம்.. நன்றி.. ஒருமுறை ஏ.சி.அறைக்குள் சென்றேன்..
ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து ஏ.சி.அறைக்குள்
போவதே இல்லை.

நல்லது.. யாருக்காகக் காத்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா..?

என் மகனுக்காக.. இங்குதான் வேலை செய்கிறான்.. அவன்...

தெரியும்.. அவர் உங்களின் ஒரே மகன்.. சரிதானே..?
_________________

ஷீ-நிசி
08-05-2007, 04:45 PM
ரவுசு தாங்கலைங்கோ..... கலக்கல் ராஜா சார்..

வாசகி
08-05-2007, 04:47 PM
ராஜா! வயிற்று வலிதாங்கமுடியவில்லை. உங்க ரவுசுக்கு அடிமையாகிவிடுவேன் போலுள்ளது.

ஓவியன்
09-05-2007, 09:42 AM
ராஜா! வயிற்று வலிதாங்கமுடியவில்லை. உங்க ரவுசுக்கு அடிமையாகிவிடுவேன் போலுள்ளது.

உண்மை தான் உதய நிலா!

எங்கள் மன்றத்தின் நகைச்சுவை ராஜா இவர்.

சும்மா, பின்னி எடுப்பார்.

ஓவியன்
09-05-2007, 09:50 AM
""என்னங்க இது.. உங்க
பையன் "யுனிவர்சிட்டி'ங்கறதை "யுனிவர்குட்டி'னு தப்பா படிக்கிறான்?''

""அவனுக்கு இங்க்லீஷ் புரிஞ்சுக்கற கெப்பாகுட்டி இல்ல..தயவு
செஞ்சு இதை வெளியில் சொல்லி, பப்ளிகுட்டி பண்ணாதீங்க சார்

ஜோக்கிலே இந்தளவு கெப்பாகுட்டி வருவதற்கு எந்த யுனிவர்குட்டில படிச்சீங்க ராஜா அண்ணா?

நான் இந்த பதிவைப் படிக்கும் போது இங்கே இலக்றிக் குட்டி நிண்டுட்டுது, இந்த இடத்திற்கும் குட்டிக்கும் கொஞ்ச தூரம். குட்டியில இருந்த ஒருத்தர் வந்து எங்கட மின்சார இணைப்புக்களைப் பழுது பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. :natur008:

உங்க பப்ளிகுட்டி என்னை பிரமிக்க வருது.:icon_good:

அன்புரசிகன்
09-05-2007, 10:50 AM
என்னங்க இது.. உங்க
பையன் "யுனிவர்சிட்டி'ங்கறதை "யுனிவர்குட்டி'னு தப்பா படிக்கிறான்?''
""அவனுக்கு இங்க்லீஷ் புரிஞ்சுக்கற கெப்பாகுட்டி இல்ல..தயவு
செஞ்சு இதை வெளியில் சொல்லி, பப்ளிகுட்டி பண்ணாதீங்க சார்

குட்டிக்குடும்பம் என்று சொல்லுங்கோ.

நர்ஸ் : வேண்டாம் டாக்டர்... சம்பளம் மட்டும் கொஞ்சம்
கூடப் போட்டுக் கொடுங்க.... போதும்.
_________________________________________________________________________
""மழை வந்தபோது சேகரிச்சு வெச்சதால இப்ப ரொம்ப உதவுது...''
""எது? மழை நீரா?''
""இரவல் குடை''

இது கூட நல்ல ஐடியாக்களாத்தான் படுது.

""காண்ட்ராக்ட்ல சைன் பண்ணா ஆறு
சூட்கேஸ்னு சொல்லிட்டு காலி சூட்கேஸ் கொடுத்துட்டாங்களாம்.''

அது சரி. கண்ராக்ட் கல்ட்ராக்ட் ஆகிவிட்டது.

நன்றி மாப்பு.

ராஜா
09-05-2007, 11:53 AM
நன்றி நண்பர்களே..!

பாக்கு கொள்முதலுக்காக என் அலுவலகம் என்னை இந்தோனேஷியாவுக்கு அனுப்ப முயன்ற சதியை [!] முறியடித்து உங்களோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.

ஓவியன்
09-05-2007, 12:01 PM
நன்றி நண்பர்களே..!

பாக்கு கொள்முதலுக்காக என் அலுவலகம் என்னை இந்தோனேஷியாவுக்கு அனுப்ப முயன்ற சதியை [!] முறியடித்து உங்களோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.

அட!

ஏதாவது பிரச்சினை எண்டால் சொல்லுங்கோ,
உங்களுக்கு உதவ நிறைய ஆட்டோ அனுப்புறம்.

ராஜா
09-05-2007, 12:03 PM
புள்ளைங்களா..! பொழப்பைக் கெடுத்து போடாதேங்கோ..!

ஓவியன்
09-05-2007, 12:04 PM
புள்ளைங்களா..! பொழப்பைக் கெடுத்து போடாதேங்கோ..!

சதி எண்டீங்க அதான் உதவுவம் எண்டு:D

அக்னி
09-05-2007, 12:05 PM
பாக்கு கொள்முதலா..?

ராஜா
09-05-2007, 06:10 PM
ஆம் அக்னி..!

நன்றி நண்பர்களே..! இன்று உங்களுக்கு புதிய சிரிப்பு நாயகனை அறிமுகப்படுத்த இருக்கிறேன்.. அவர் பெயர் மிஸ்டர் மொக்கையன்..!

இவர் இருப்பவரையோ இறந்தவரையோ குறிப்பவர் அல்ல..!

ராஜா
09-05-2007, 06:12 PM
மிஸ்டர் மொக்கை சினிமா பார்க்கப் போனார்..திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது, முன் சீட்டில் அமர்ந்திருந்த காதல் ஜோடி தொண தொணவென்று பேசவே, வசனங்கள் எதுவும் காதில் விழவில்லை.பின் வரிசையில் இருந்தவர்கள் நெளியவே, மொக்கை பஞ்சாயத்து செய்யக் கிளம்பினார்..

மொக்கை ; ஹலோ.. எங்களுக்கு ஒண்ணும் காதிலே விழல்லே..

காதலன் ; மூதேவி..! நாங்க பேசறது உன் காதிலே எதுக்கு விழணும்..? பேசாம படத்தைப் பாரு..!
_________________

மொக்கைக்கு சிறுநீர் பிரச்னை.. டாக்டரிடம் போனார்.. மொக்கையை சோதித்த டாக்டர்,

இந்தாங்க.. இந்த சிவப்பு மாத்திரையை காலையில் போட்டுகிட்டு 3 கிளாஸ் தண்ணி குடிங்க.. மஞ்சள் மாத்திரையை மதியம் போட்டுகிட்டு 3 கிளாஸ் தண்ணி குடிங்க.. நீல மாத்திரையை இரவு போட்டுகிட்டு 3 கிளாஸ் தண்ணி குடிங்க..

ஏன் டாக்டர்.. எனக்கு ஏதும் பெரிய பிரச்சினையா..?

சின்ன பிரச்னைதான்.. தேவையான தண்ணி குடிக்காம இருந்திருக்கீங்க..!
_________________

மொக்கை ஒரு ஓவியர்.. தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்தார்.. ஒருநாள் காட்சிக் கூட மேலாளர் மொக்கையிடம் சொன்னார்..

மிஸ்டர் மொக்கை.. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட செய்தி..

நல்ல செய்தி என்ன..?

உங்கள் ஓவியங்களை ஒரு வியாபாரி வாங்கியிருக்கிறார்.. பொதுவாக அவர் இறந்த ஓவியமேதைகளின் படைப்புகளை மட்டுமே வாங்குவார்..

கெட்ட செய்தி..?

அந்த வியாபாரி உங்கள் குடும்ப டாக்டரை இன்று காலை சந்தித்தபின் வாங்கியிருக்கிறார்.
_________________

மிஸ்டர் மொக்கை முதன் முறையாக விமானத்தில் சென்றார்..அவருக்குப் பக்கத்தில் ஒரு வெளி நாட்டுக்காரர்.. அவர் அடிக்கடி பணிப்பெண்ணைக் கூப்பிட்டு ஏதாவது சொல்லுவார்..

விளக்கு ரொம்ப கூசுகிறது..உடனே நிறுத்து...
ஏசி குளிர்கிறது உடனே நிறுத்து..

கொஞ்ச நேரம் கழித்து, அவர் மொக்கையிடம் சொன்னார்.. எஞ்சின் சத்தம் ஜாஸ்தியா இருக்குல்ல..?

உடனே மொக்கை அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்.. தயவு செய்து அதையும் ஆஃப் பண்ண சொல்லிராதீங்க சார்..!
_________________

அன்புரசிகன்
09-05-2007, 06:34 PM
மொக்கை ; ஹலோ.. எங்களுக்கு ஒண்ணும் காதிலே விழல்லே..
காதலன் ; மூதேவி..! நாங்க பேசறது உன் காதிலே எதுக்கு விழணும்..? பேசாம படத்தைப் பாரு..!

இது தான் நல்ல மூக்குடைப்பு. ஆனாலும் சாதாரணமாக பக்கத்திலிருக்கும் சோடிகள் பேசினாலே கேட்க்காது. ....

இந்தாங்க.. இந்த சிவப்பு மாத்திரையை காலையில் போட்டுகிட்டு 3 கிளாஸ் தண்ணி குடிங்க.. மஞ்சள் மாத்திரையை மதியம் போட்டுகிட்டு 3 கிளாஸ் தண்ணி குடிங்க.. நீல மாத்திரையை இரவு போட்டுகிட்டு 3 கிளாஸ் தண்ணி குடிங்க..
ஏன் டாக்டர்.. எனக்கு ஏதும் பெரிய பிரச்சினையா..?
சின்ன பிரச்னைதான்.. தேவையான தண்ணி குடிக்காம இருந்திருக்கீங்க..!

அப்போகொடுத்த நிற மாத்திரைகள் பூச்சிமுட்டை மிட்டாயயா அல்லது ஸ்மார்ட்டீஸா?

கொஞ்ச நேரம் கழித்து, அவர் மொக்கையிடம் சொன்னார்.. எஞ்சின் சத்தம் ஜாஸ்தியா இருக்குல்ல..?
உடனே மொக்கை அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்.. தயவு செய்து அதையும் ஆஃப் பண்ண சொல்லிராதீங்க சார்..!

அந்த ஆளையே தூக்கி வெளியே போடவேண்டியதுததானே....
சோக்கான ஜோக்குகள். நன்றி மாப்ஸ்.

அது சரி... பிளையிட் கான்ஸலோ? எம்மை சிரிக்க வைக்காம உங்களுக்கு தூக்கம் வந்திடுமோ மாப்பு???... இந்தோனோசியா போய் நித்திர வராம... தேவையா.. தவிர ஒரு சீரியசான செய்தி. அங்கு நோய் எல்லாம் கண்டபாட்டுக்கு பரவுதாம். கேட்டுக்குங்க... பாக்கு இந்தியயாவில இல்லையா?

அறிஞர்
09-05-2007, 06:34 PM
ராஜாவின் நாயகன்.... மொக்கையின் சிரிப்புகள் அருமை...
சினிமா தியேட்டரும், ஓவியரின் ஜோக்கும் வெகு அருமை..

ராஜா
10-05-2007, 11:00 AM
நன்றி அறிஞரே..!!

மனோஜ்
10-05-2007, 11:05 AM
படித்தேன் சிரித்தேன் அண்ணா

அரசன்
10-05-2007, 01:09 PM
பேருக்கேத்த நகைச்சுவை. மொக்கையன் காமெடி. நன்றாக இருக்கிறது.

மதி
10-05-2007, 01:36 PM
ராஜா..மொக்கை காமெடிஸ் சூப்பருங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.....!

ராஜா
10-05-2007, 06:02 PM
மிஸ்டர் மொக்கையின் அடுத்தவீட்டுக்காரன் ஒரு ஓசிப் பேர்வழி. எப்போ பார்த்தாலும் ஏதாவது பொருளை ஓசி கேட்டு உயிரை எடுப்பான்.அன்று ஒருநாள் தன் கிரிக்கெட் மட்டையை வைத்து மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் மொக்கை.. அப்போது ஓசிப் பேர்வழி வந்தான். அவன் வருவதைப் பார்த்த மொக்கை மனைவியிடம் பெருமையாகச் சொன்னார்..

இன்னிக்கு அவனுக்கு மேட்ச் இருக்கு.. பேட் ஓசி கேட்க வரான்.. எப்படி சமாளிக்கிறேன்னு பாரு..!

ஓசி அ.வீ.கா. வந்து, " மொக்ஸ்,.. இன்னிக்கு எனக்கு ஸ்டேடியத்திலே மேட்ச்.." என்று ஆரம்பித்ததுமே, மொக்கை கறாராகச் சொன்னார்...

" பேட் ஓசி தர முடியாது.. இன்னிக்கு பூரா என் பெண்டாட்டி பிள்ளைகளோட நான் கிரிக்கெட் விளையாடப் போறேன்.. சாரி...!"

ஓசி கிராக்கியின் அதிர்ச்சியை ஓரக் கண்ணால் ரசித்தவாறே மனைவியைப் பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரித்த மொக்கையின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை...ஓசி சொன்னான்..

ஓகே மொக்ஸ்.. நீ நாள் பூரா விளையாடு.. உன் பைக்கை இரவல் கேட்கத் தான் வந்தேன்.. இன்னிக்குதான் உனக்கு அது தேவைப் படாதே.. ! என்றவாறே பைக்கை எடுத்துக் கிளம்ப மொக்கை வழக்கம் போல வழியலானார்.

ராஜா
10-05-2007, 06:03 PM
மிஸ்டர் மொக்கை ஒரூமுறை பெட்ரோல் செலவைக் குறைக்க சைக்கிள் ஒன்றைப் புதிதாக வாங்கினார்..ஆனால் தொடர்ந்து காரிலேயே
அலுவலகம் வந்தார்.. நண்பன் கேட்டான்..

என்ன மொக்ஸ்..? சைக்கிள் வாங்கினே போல..
ஆனா
கார்லேயே சுத்திகிட்டு இருக்கே..?

அதை ஏன் கேட்கிறே.. அந்த சைக்கிள்ல ஏதோ கோளாறு இருக்கு.
.சீட்டுல ஏறி உக்காந்ததுமே பொத்'துன்னு கீழே விழுந்துடுது..
கார் மாதிரி ஸ்டெடியா நிக்க மாட்டுது..!

ராஜா
10-05-2007, 06:05 PM
மிஸ்டர் மொக்ஸ் உடம்பைக் குறைக்க உதவும் உணவு ஒன்றை
வாங்கி வந்தார்.. அதில் போட்டிருக்கும் முறைப்படி
வெந்தது பாதி..வேகாதது பாதியாக சமைத்து சாப்பிட்டார்.
அதன் கேவலமான ருசியைப் பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு
1 மாதம் சாப்பிட்டு எடை பார்க்க 5 கிலோ கூடியிருந்தது.
கோபமாக கடைக்காரனிடம் பாய்ந்தார்..

தினம் வந்து ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போறேனே..
ஒருநாளாவது சொல்லியிருக்கியா.. இது உடம்பு உப்புற உணவுன்னு..?

இல்லையே.. இது இளைக்க வைக்கிற உணவுதானே..?

பின்ன ஏன் எனக்கு மட்டும் உப்புது..?

கடைக்காரன், மொக்ஸ் சமைக்கும் முறை, சாப்பிடும்
முறை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பாக்கெட்டின்
மேல் இருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினான்..அதில்....

" 6 பேருக்கு தேவையான உணவு.."

என்று இருந்தது..!

அன்புரசிகன்
10-05-2007, 11:12 PM
6 பேருக்கு தேவையான உணவு..

நல்ல வேளை... அது சாபப்பாட்டிற்கு முன்னா பின்னா என கேட்க்கவில்லை...

அருமை மாப்பு.

அறிஞர்
11-05-2007, 03:12 PM
ஓகே மொக்ஸ்.. நீ நாள் பூரா விளையாடு.. உன் பைக்கை இரவல் கேட்கத் தான் வந்தேன்.. இன்னிக்குதான் உனக்கு அது தேவைப் படாதே.. ! என்றவாறே பைக்கை எடுத்துக் கிளம்ப மொக்கை வழக்கம் போல வழியலானார்.
இப்படி மொக்கையை கவுக்க எத்தனை பய எழும்பியிருக்கானோ.

அறிஞர்
11-05-2007, 03:13 PM
கார்லேயே சுத்திகிட்டு இருக்கே..?

அதை ஏன் கேட்கிறே.. அந்த சைக்கிள்ல ஏதோ கோளாறு இருக்கு.
.சீட்டுல ஏறி உக்காந்ததுமே பொத்'துன்னு கீழே விழுந்துடுது..
கார் மாதிரி ஸ்டெடியா நிக்க மாட்டுது..!
சுட்டிக்கிட்ட சைக்கிள் பழக அனுப்பிட வேண்டியதுதானே...

அறிஞர்
11-05-2007, 03:28 PM
" 6 பேருக்கு தேவையான உணவு.."

என்று இருந்தது..!
6 பேரு உணவு தனியாளா அடிச்சா...
உப்புமா என்னப்பண்ணும்.

அருமை ராஜா.. இன்னும் தொடருங்கள்.

அக்னி
11-05-2007, 04:05 PM
ஒரு ஜேம்ஸ்பாண்ட் போல், ஒரு ஸ்பைடர்மான் போல் தமிழுலகில் ராஜா உருவாக்கிய "மொக்கையன்" புகழ் பெற வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி
11-05-2007, 04:51 PM
மிஸ்டர் மொக்ஸ் உடம்பைக் குறைக்க உதவும் உணவு ஒன்றை
வாங்கி வந்தார்.. அதில் போட்டிருக்கும் முறைப்படி
வெந்தது பாதி..வேகாதது பாதியாக சமைத்து சாப்பிட்டார்.
அதன் கேவலமான ருசியைப் பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு
1 மாதம் சாப்பிட்டு எடை பார்க்க 5 கிலோ கூடியிருந்தது.
கோபமாக கடைக்காரனிடம் பாய்ந்தார்..

தினம் வந்து ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போறேனே..
ஒருநாளாவது சொல்லியிருக்கியா.. இது உடம்பு உப்புற உணவுன்னு..?

இல்லையே.. இது இளைக்க வைக்கிற உணவுதானே..?

பின்ன ஏன் எனக்கு மட்டும் உப்புது..?

கடைக்காரன், மொக்ஸ் சமைக்கும் முறை, சாப்பிடும்
முறை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பாக்கெட்டின்
மேல் இருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினான்..அதில்....

" 6 பேருக்கு தேவையான உணவு.."

என்று இருந்தது..!

ஹி ஹி.... சிரிக்காம இருக்கமுடியாது.. அருமையான மொக்கை ஜோக்குங்க சூப்பரா இருக்குது....:huh:

வாசகி
11-05-2007, 06:43 PM
மொக்ஸின் காமெடி கலக்கல். அதிலும் பாட்டிங்செய்ய பேட் ஓசியாக வாங்க வருகின்றார் என நினைத்து நண்பரிடம் மாட்டுப்படும் நகைச்சுவை பிரமாதம். அவர் வெற்றிக்களிப்பில் மனைவியைப்பார்க்கும் போது நண்பர் மோட்டர்வண்டி ஓசிகேட்க வந்தேன் என்று சொல்கின்றாரே. அப்போது மனைவி மொக்கையை எப்படிப்பாத்திருப்பார் என்று கற்பனைபண்ணினேன். தாங்க முடியலை.

மனோஜ்
11-05-2007, 06:58 PM
மொக்கை ரவுசுகள் சுப்பர்

ராஜா
11-05-2007, 07:04 PM
மிஸ்டர் மொக்கை பஸ்ஸுக்காக காத்திருந்தார்..
ஒரு கார் வந்து நிற்க லிஃப்ட் கேட்டு ஏறி பின் சீட்டில் அமர்ந்தார்..
ஏதோ நினைவில் இருந்த மொக்கை முதலில் கவனிக்கவில்லை..
பின்னர் தான் தெரிந்தது.. கார் மிகவும் மெதுவாக சென்று
கொண்டிருந்தது. ஓட்டுநர் இருக்கையிலும் ஆள் இல்லை..
கார் மட்டும் போய்க் கொண்டிருந்தது. மொக்கை கிலியின்
உச்சத்துக்குப் போனவராய் அலறினார்..

ஜன்னலுக்கு வெளியே வியர்வை வழியும் முகத்தோடு
ஒருவன் தோன்றினான். ...

மூதேவி.. கீழே இறங்கித் தொலை.. நானே கார் ரிப்பேர்
ஆச்சேன்னு 4 மைல் தள்ளிகிட்டு வரேன்.. நீ வேற
உள்ளே ஏறி உக்காந்துகிட்டு உயிரை வாங்குறே..!
_________________

ராஜா
11-05-2007, 07:06 PM
மிஸ்டர் மொக்கை அவசரமா கார்ல வீட்டுக்குப்
போய்கிட்டு இருந்தார்..திடீர்ன்னு ஸ்வீட் கடையைப்
பார்த்ததும் ரோட்டுலேயே வண்டியை நிறுத்திட்டு இறங்கினார்..
இதைப் பார்த்து ட்ராபிக் போலீஸ் ஓடி வந்தார்.. மொக்கை
அவர்கிட்டவே காரைக் கொஞ்சம் பார்த்துக்கங்கன்னு சொன்னார்.
போலீஸ் கேட்டார்..

நான் யாருன்னு தெரியலையா..? போலீஸ்காரன்..
என்கிட்டேயே வண்டியைப் பார்த்துக்கச் சொல்றியா..?

மொக்ஸ் பொறுமையாக பதிலளித்தார்..

போலீசா இருந்தாலும் உங்களை நம்பறேன்..கொஞ்சம் பார்த்துக்கங்க..!
_________________

ராஜா
11-05-2007, 07:09 PM
மொக்கையன் ஒரு ஓட்டலில்
சர்வராக இருந்தார்.. நல்ல கூட்டம் உள்ள நேரம். ஒரு ஆள்
45 ரூபாய்க்கு சாப்பிட்டார். 50 ரூபாய் நோட்டு ஒன்றை
மொக்கையிடம் கொடுத்து 5 ரூபாய் டிப்ஸ் என்று சொல்லிவிட்டு
எழுந்து போனார். கல்லாவில் முதலாளி இல்லை. மொக்கை சட்டென்று
50 ரூ. நோட்டைச் சுருட்டி அண்டர்வேருக்குள் வைக்க
முயலும்போது சமையலறையில் இருந்து வந்து
முதலாளி பார்த்துவிட்டார்...மொக்கை சட்டென்று
சுதாரித்தவராக சொன்னார்...

முதலாளி.. பார்த்தீங்களா அநியாயத்தை.. எனக்கு 50 ரூபாய்
டிப்ஸ் கொடுத்துட்டு பில்லுக்கு காசு கொடுக்காமப் போயிட்டான்
அந்த ஆள்..!
_________________

gragavan
11-05-2007, 07:10 PM
ஆகா மொக்கையன் கதை பெருங்கதையா இருக்கும் போல. தொடரட்டும். மொக்கைபுராணக் கதைகளைக் கேட்க ஆவலாக இருக்கிறோம்.

ராஜா
12-05-2007, 06:44 PM
என் இல்லத்தரசியின் ஆத்திச்சூடி..

அட தூங்குனது போதும் எந்திரிங்க

ஆறிகிட்டு இருக்கு காப்பி.

இன்னைக்காச்சும் குளிங்க.

ஈஈஈ காட்டுங்க.. உங்களை நம்பமுடியாது.

உருப்படற வழியைப் பாருங்க.

ஊரு சுத்தப் போகாதீங்க.

எல்லாத்துக்கும் குறை சொல்லாதீங்க..

ஏன் இப்படி முறைக்கறீங்க..?

ஐய்யே.. அசடு வழியாதீங்க.

ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லே..

ஓரமா உக்காருங்க..

ஔவை மன்னிப்பாராக..
_________________

ராஜா
12-05-2007, 06:45 PM
"வண்டிய கடத்திட்டுப் போகும் போது வேகமாக ஓட்ட முடியாததால மாட்டிக்கிட்டாயாமே! என்ன வண்டிடா அது?"

"ரோடு ரோலர்."
______________________________________________

"கிளி ஏன் "கீ கீ"ன்னு கத்துது?"

"அதோட கூண்டுச் சாவி தொலைஞ்சு போச்சாம்!"
_______________________________________________

"எங்க அப்பா இனிமேல் என்னைத் தண்டச்சோறுன்னு திட்ட முடியாது."

"ஏன் எங்காவது வேலைக்குப் போறியா?"

"இல்லை. வீட்லே இப்பல்லாம் டிபன்தான் சாப்பிடறேன்."
__________________________________________________

"நம்ம மாசி இரவல் கொடுத்த சைக்கிள் நிஜமாகவே காஸ்ட்லியானதுதான்"

"எதை வைச்சு சொல்றே?"

"அடகு வைச்சுத்தான்..."
____________________________________________________

"எதுக்கு வாட்ச்மேனை கூட்டுட்டு வந்து கடன் கேட்கறீங்க?"

"நீங்கதானே செக்யூரிட்டி இருந்ததாதான் கடன் தருவேன்னு சொன்னீங்க?!"
_________________

மனோஜ்
12-05-2007, 07:34 PM
"எதுக்கு வாட்ச்மேனை கூட்டுட்டு வந்து கடன் கேட்கறீங்க?"

"நீங்கதானே செக்யூரிட்டி இருந்ததாதான் கடன் தருவேன்னு சொன்னீங்க?!"
மிக மிக அருமை அண்ணா இது
இனி செக்யூரிட்டி கேட்டா இப்படி செய்யலாம்

மனோஜ்
12-05-2007, 08:03 PM
அட தூங்குனது போதும் எந்திரிங்க
அட அன்பின் சென்னது
ஆறிகிட்டு இருக்கு காப்பி.
ஆத்திக்கிட்டே வந்தாங்களா
இன்னைக்காச்சும் குளிங்க.
இனியாவது சுத்தமா இருங்க
ஈஈ காட்டுங்க.. உங்களை நம்பமுடியாது.
ஈ வாயில் புராம இருந்தா சரி
உருப்படற வழியைப் பாருங்க.
உருப்புட்டு தனே இருக்கிங்க
ஊரு சுத்தப் போகாதீங்க.
ஊரு ஊரா தொழிலுக்கா போரிங் அதான் அப்படி சென்ங்க போல
எல்லாத்துக்கும் குறை சொல்லாதீங்க..
என்னத இப்படி குறை சொன்நீங்க
ஏன் இப்படி முறைக்கறீங்க..?
ஏசிட்டாங்கலே அண்ணி அதான்
ஐய்யே.. அசடு வழியாதீங்க.
ஐய்யா பாசம் போங்குது வாழ்த்துகள்
ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லே..
ஒன்னுமே செய்யலையா அண்ணிக்கு அதான்
ஓரமா உக்காருங்க..
ஓடிப்போயி சரதாஷ்ல ஒரு சரி எடுத்து குடுங்க சும்மா உக்காரமா எல்ல சரிஆயிடும்
ஔவை மன்னிப்பாராக..
ஓளவைய இப்ப எதுக்கு இழுக்கிறீங்க அவங்க பாட்டுக்கு செவெனோனு இருக்கரது புடிக்கிலியா அண்ணே

ஓவியா
12-05-2007, 08:08 PM
என் இல்லத்தரசியின் ஆத்திச்சூடி..

அட தூங்குனது போதும் எந்திரிங்க

ஆறிகிட்டு இருக்கு காப்பி.

இன்னைக்காச்சும் குளிங்க.

ஈஈஈ காட்டுங்க.. உங்களை நம்பமுடியாது.

உருப்படற வழியைப் பாருங்க.

ஊரு சுத்தப் போகாதீங்க.

எல்லாத்துக்கும் குறை சொல்லாதீங்க..

ஏன் இப்படி முறைக்கறீங்க..?

ஐய்யே.. அசடு வழியாதீங்க.

ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லே..

ஓரமா உக்காருங்க..

ஔவை மன்னிப்பாராக..
_________________

சூப்பரோ சுப்பேர்.....ரொம்ப ரசித்தேன்.

நன்றி அண்ணா.

ராஜா
13-05-2007, 05:01 AM
நன்றி மனோஜ்.. ஓவிம்மா..!

ராஜா
13-05-2007, 07:29 PM
மிஸ்டர் மொக்கை ஒரு ஆலயத்தில் மத போதகர். அன்றைய
உரையை முடித்துவிட்டு மொக்ஸ் ஒரு அதிர்ச்சியளிக்கும்
செய்தியை கூட்டத்தினருக்கு அறிவித்தார்.

அன்புக் குழந்தைகளே.. இதுதான் நான் உங்களுக்குத் தரும்
இறுதிச் செய்தி. நாளை நான் கோத்தகிரிக்கு மாறுதலாகிச் செல்கிறேன்..!

கூட்டத்தில் பரபரப்பு.. ஒரு மூதாட்டி வந்து மொக்ஸை கட்டிப்
பிடித்துக் கொண்டு அழுதாள்.. அவளை மோக்ஸ் ஆறுதல் படுத்தினார்..

கவலைப்படாதீர்கள் அம்மா.. நாளை வரும் போதகர்
சிறந்த அறிவாளராகவும், மிகத் தெளிவான உரை
அளிப்பவராகவும் இருக்கக் கூடும்..!

மூதாட்டி ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து சொன்னாள்..

போன தடவை மாறுதல் ஆகிப் போனவரும் இப்படிச்
சொல்லிதான் ஏமாத்திட்டுப் போனாரு..!
_________________________________________________________________________

ஒருநாள் மிஸ்டர் மொக்கையின் அடுத்த வீட்டுக்கார அம்மாள் தன்
5 வயதுக் குழந்தையை மொக்ஸிடம் விட்டுவிட்டு
அலுவலகம் போனாள்.பையனை அன்று மட்டும் பார்த்துக்
கொள்வதாக மொக்ஸ் முன்பே வாக்களித்திருந்தார்..மதிய
உணவுக்கு அருமையான உணவைத் தயாரித்து பொடியனைச்
சாப்பிடச் சொன்னார். அவனோ தன் தாய் தினமும் அரிசிப்
புட்டு தயாரித்துக் கொடுப்பார் என்று சொன்னான்.

சிறுவனுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத மொக்ஸ் பரணில் இருந்து
புட்டு உபகரணத்தை எடுத்து வேர்க்க விறுவிறுக்க புட்டு தயார்
செய்து கொண்டு போய் சிறுவனிடம் கொடுக்க, அவனோ
அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..

மொக்ஸ், அவனிடம் "தம்பி.. உனக்குப் பிடித்த புட்டு
தயார் செய்துள்ளேன்.. சாப்பிடு.." என்றார்.பொடியன் சொன்னான்..

" எனக்குப் பிடிக்கும்ன்னா சொன்னேன்..? எங்கம்மா
செஞ்சு கொடுப்பாங்கன்னு தானே சொன்னேன்.. எனக்கு இது
பிடிக்காது.. வேண்டாம்..!"
__________________________________________________________________________

மிஸ்டர் மொக்கையன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்று நினைப்பார்.
. ஒருநாள் அவருக்கு ரொம்பவும் உடம்பு முடியாமல் போய்விட
ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அவருடைய அறைக்கு ஒரு பெரிய மெஷினைத் தள்ளிக்
கொண்டு வந்தார்கள். அதில் பெரிய பெரிய டியூபுகளும்,
சிலிண்டர் ஒன்றும் இருந்தது.

மொக்கை அதைப் பார்த்து தான் மிரண்டு போய்விடவில்லை
என்று காட்டிக் கொள்ள விரும்பினார். அதை தள்ளிவந்த
பணியாளரிடம் சொன்னார்..

"நீ எவ்விதத் தயக்கமும் இல்லாமல் என் உடலில் இந்தக்
குழாய்களை இணைக்கலாம்.. நான் உனக்கு ஒத்துழைப்பு தருவேன்..
இதை வாயில்தானே வைத்துக் கொள்ள வேண்டும்..?

பணியாள் யோசனையுடன் மொக்ஸை பார்த்தவாறே சொன்னான்..

"நீங்கள் சிரமப்படத் தேவை இருக்காதென்றே நினைக்கிறேன் சார்..
இது கழிவறை சுத்தம் செய்யும் இயந்திரம்..!"

அன்புரசிகன்
14-05-2007, 12:38 PM
போன தடவை மாறுதல் ஆகிப் போனவரும் இப்படிச்
சொல்லிதான் ஏமாத்திட்டுப் போனாரு..!

பாவம் அந்த ஊர்

சிறுவனுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத மொக்ஸ் பரணில் இருந்து
புட்டு உபகரணத்தை எடுத்து வேர்க்க விறுவிறுக்க புட்டு தயார்
செய்து கொண்டு போய் சிறுவனிடம் கொடுக்க, அவனோ
அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..

மொக்ஸ், அவனிடம் "தம்பி.. உனக்குப் பிடித்த புட்டு
தயார் செய்துள்ளேன்.. சாப்பிடு.." என்றார்.பொடியன் சொன்னான்..

" எனக்குப் பிடிக்கும்ன்னா சொன்னேன்..? எங்கம்மா
செஞ்சு கொடுப்பாங்கன்னு தானே சொன்னேன்.. எனக்கு இது
பிடிக்காது.. வேண்டாம்..!"

அடப்பாவமே... இருந்தாலும் முயற்சியை பாராட்டவேண்டும்.

"நீங்கள் சிரமப்படத் தேவை இருக்காதென்றே நினைக்கிறேன் சார்..
இது கழிவறை சுத்தம் செய்யும் இயந்திரம்..!"

அவசரத்தில் புத்தி மட்டாகிவிட்டதே...

வாழ்த்துக்கள். மொக்ஸ் ரவுசு சூப்பர்மா...

அன்புரசிகன்
14-05-2007, 12:46 PM
"வண்டிய கடத்திட்டுப் போகும் போது வேகமாக ஓட்ட முடியாததால மாட்டிக்கிட்டாயாமே! என்ன வண்டிடா அது?"
"ரோடு ரோலர்."
தேவைதான். பேரீச்சம் பழம் தின்ன ஆசைபோல...

"கிளி ஏன் "கீ கீ"ன்னு கத்துது?"
"அதோட கூண்டுச் சாவி தொலைஞ்சு போச்சாம்!"
வெள்ளைக்கார கிளி.

"எங்க அப்பா இனிமேல் என்னைத் தண்டச்சோறுன்னு திட்ட முடியாது."
"ஏன் எங்காவது வேலைக்குப் போறியா?"
"இல்லை. வீட்லே இப்பல்லாம் டிபன்தான் சாப்பிடறேன்."
சூப்பர் டெக்னிக்கா இருக்கே... மாற்றிடவேண்டியதுதான். தண்ட டிபன் தண்ட பிட்டு தண்ட இடியாம்பம் தண்ட தோசை தண்ட இட்லி... ஹி ஹி ஹி

"நம்ம மாசி இரவல் கொடுத்த சைக்கிள் நிஜமாகவே காஸ்ட்லியானதுதான்"
"எதை வைச்சு சொல்றே?"
"அடகு வைச்சுத்தான்..."
அநியாயத்திற்கு நல்லவனாகிவிட்டார்

"எதுக்கு வாட்ச்மேனை கூட்டுட்டு வந்து கடன் கேட்கறீங்க?"
"நீங்கதானே செக்யூரிட்டி இருந்ததாதான் கடன் தருவேன்னு சொன்னீங்க?!"
முன்பின் என்றெல்லாம் போய்விட்டதா? செக்யூரிட்டியா?... அம்பேல்தான். (செக்யூரிட்டிதான்)

அக்னி
14-05-2007, 12:57 PM
எதைப் பாராட்டுவது என்று தெரியவில்லை. எல்லாமே சிறந்த நகைச்சுவைகள். ராஜாவின் மொக்ஸ் வாழிய வாழிய...

ராஜா
14-05-2007, 03:55 PM
மாமனாரின் லொள்ளு வரவர ஓவராயிட்டு வருது..

என் ஜோக்கை விட அவர் பின்னூட்டம் கலக்குது.. தொடர்ந்து உற்சாகமூட்டும் மாம்ஸுக்கு ந்நன்றி.. நேற்று எங்கே ஆளைக் காணோம்..?

ராஜா
14-05-2007, 03:57 PM
நன்றி அக்னி..!

உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.. !

ராஜா
14-05-2007, 03:58 PM
ஜோரா கைதட்டுங்க.. அடுத்த பக்கத்துக்கு போவோம்..!

ஷீ-நிசி
14-05-2007, 04:03 PM
மூதாட்டி ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து சொன்னாள்..

போன தடவை மாறுதல் ஆகிப் போனவரும் இப்படிச்
சொல்லிதான் ஏமாத்திட்டுப் போனாரு..!

நீங்கள் சிரமப்படத் தேவை இருக்காதென்றே நினைக்கிறேன் சார்..
இது கழிவறை சுத்தம் செய்யும் இயந்திரம்..!"

ஹி ஹி ஹி ஹி... அருமையான சிரிப்புகள் ராஜா சார்.

அன்புரசிகன்
14-05-2007, 05:44 PM
[B]மாமனாரின் லொள்ளு வரவர ஓவராயிட்டு வருது..
என் ஜோக்கை விட அவர் பின்னூட்டம் கலக்குது..
ஐயகோ... இது என்ன விபரீதம்? :1:

நேற்று எங்கே ஆளைக் காணோம்..?
பெரிய ஒரு வேலைக்கு போய்விட்டேன். விடியத்தான் வந்தேன். (பெரிதாக நினைக்க வேண்டாம். வழமையான நேரத்திற்கு முன்பாக நித்திரைக்கு போய்விட்டேன் :D.. என்ன? :4_1_8: என்கிறீர்களா?)
காலையில போட்டிட்டம்லே... அது சரி .. கதை சொல்லுற ஐடியா என்னமாதிரி?

ராஜா
14-05-2007, 07:38 PM
ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட செய்தி..

மனைவி புது காரை வெளியே எடுத்துப் போய் வெகு நேரம்
ஆகியும் காணோம்.. ஒரு போன் அழைப்பு.. பேசியது
மனைவியே தான்..

என்னங்க.. ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட செய்தி..

நல்ல செய்தி என்ன..? அதை முதலில் சொல்லித் தொலை..

நம்ம கார்ல ஏர் பேக் நல்லா வேலை செய்யுதுங்க..!
________________________________________________________________________

ஒருவர் வாடகைக்கு வீடு பார்க்கப் போனார்.. வீடு வாடகை
எல்லாம் பிடித்திருக்கவே உரிமையாளரிடம் மேலும் விபரங்கள் கேட்டார்..

இந்த வீட்டைப் பொருத்தவரை ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட
செய்தி இருக்கு..

என்ன அது கெட்ட செய்தி..?

வீட்டுக்கு தெற்கே தோல் தொழிற்சாலை இருக்கு.. .. வடக்கே
கரும்புப் பாகு தொழிற்சாலை இருக்கு..

நல்ல செய்தி..?

காற்று எந்த பக்கத்தில் இருந்து வீசுதுன்னு உங்களுக்கு
நல்லா தெரிஞ்சுடும்..!
_______________________________________________________________________

ஒரு மத போதகர் உரையாற்றும்போது சொன்னார்..

என்னிடம் ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட செய்தி இருக்கிறது..
நல்ல செய்தி என்னவென்றால் நாம் புது தேவாலயம் கட்ட
போதுமான பணம் இருக்கிறது.. கெட்ட செய்தி
என்னவென்றால், அவ்வளவு பணமும் உங்கள் அனைவரின்
பாக்கெட்டில் இருக்கீறது..!
_______________________________________________________________________

டாக்டர் நோயாளியிடம் சொன்னார்..

உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட செய்தி..

கெட்ட செய்தி என்ன..?

இதுவரை யாருக்குமே வராத புது வியாதி
உங்களுக்கு வந்திருக்கிறது..இதற்கு மருந்தே இல்லை..

நல்ல செய்தி என்ன டாக்டர்..?

அந்த வியாதிக்கு உங்க பேரை வைக்கலாம்ன்னு
முடிவு பண்ணியிருக்கோம்..!
_______________________________________________________________________

ஒரு வக்கீல் தன் கட்சிக்காரரிடம் சொன்னார்..

உன் ரத்தம் டெஸ்ட்டுக்கு போய் வந்து விட்டது.. ஒரு நல்ல செய்தி..
ஒரு கெட்ட செய்தி.. கெட்ட செய்தி என்னவென்றால்
கொலையானவர் நகக் கண்களில் உறைந்திருந்த ரத்தமும்
உன்னுடையதும் ஒன்று என்று முடிவாகி இருக்கிறது..

நல்ல செய்தி என்ன அய்யா..?

உன் சர்க்கரை அளவு நார்மலாக இருக்கிறது..!
_______________________________________________________________________

பென்ஸ்
14-05-2007, 07:46 PM

அட பிரியா பிளட் டெஸ்ட் வேற பண்ணுறாங்களா??? பரவாயில்லையே....

mania
15-05-2007, 01:56 AM
அட பிரியா பிளட் டெஸ்ட் வேற பண்ணுறாங்களா??? பரவாயில்லையே....

அது யாரு பிரியா பென்ஸ் ??????:confused:

சந்தேகத்துடன்
மணியா...........:grin:

தாமரை
15-05-2007, 03:05 AM
ரத்தக் காட்டேரி போல இருக்கு.. பென்ஸ் டெஸ்ட் ஆ இல்லை டேஸ்டா?

அன்புரசிகன்
15-05-2007, 03:06 AM
ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட செய்தி..

இணைந்து வழங்குவோர் யார்?

நம்ம கார்ல ஏர் பேக் நல்லா வேலை செய்யுதுங்க..!
அப்போ பிறேக் எப்படி?

காற்று எந்த பக்கத்தில் இருந்து வீசுதுன்னு உங்களுக்கு
நல்லா தெரிஞ்சுடும்..!
நல்லாத்தெரியுது...

உன் சர்க்கரை அளவு நார்மலாக இருக்கிறது..!
அது ஆவது தெரிஞ்சுதே...

சூப்பர் மாமு.

ஓவியன்
15-05-2007, 07:24 AM
நான் ஒரு முறை இப்படித்தான் மோட்டார் சைக்கிளில் வெளியே சுற்றிவிட்டு மறுபடி வீடு திரும்பிய போது மோட்டார் சைக்கிளின் பிரேக் வேலை செய்யவில்லை.

அப்போது வேறு வழியின்றி வீட்டுச் சுவருடன் மோட்டார் சைக்கிளை மோதி நிறுத்தினேன். அதிலும் ஒரு நல்ல செய்தி+கெட்ட செய்தி.

நல்ல செய்தி
மோட்டார் சைக்கிளின் பிரேக்காக வீட்டுச் சுவரையும் பாவிக்கலாம்:icon_shout:

கெட்ட செய்தி
அப்படி வீட்டுச் சுவரை பிரேக்காகப் பாவித்தால், மோட்டார் சைக்கிள் பழுதாகி மெக்கானிக்குக்கு 5000 ரூபாய் கொடுக்க வேண்ண்டி வரும்.:grin:

அன்புரசிகன்
15-05-2007, 10:39 AM
ஓவியரே.. நீருமா? மோட்டார் சைக்கிள் நன்றாக ஓடத்தெரிந்துவைத்துள்ளீர்.

ராஜா
15-05-2007, 05:50 PM
ஹா..ஹா.. நன்றி நண்பர்களே..!

ராஜா
15-05-2007, 05:55 PM
.டெ.கு.டேனி ; இனிமே ஒழுங்கா இருப்பேன்னு சொன்னியா
இல்லையா..?

சின்னா ; ஆமாம் அய்யா..!

டேனி ; ஒழுங்கா இல்லேன்னா உதைப்பேன்னு நானும்
சொன்னேன் இல்லையா..?

சின்னா ; நான் என் வாக்கை மீறினால் நீங்க உங்க
வார்த்தையைக் காப்பாத்தணும்ன்னு அவசியம் இல்லே சார்.. 1
_________________

டேனி ; சின்னா.. இனிமே நீ அடுத்தவனைப் பார்த்து காப்பி
அடிக்கிறதை நான் பார்க்கக் கூடாது..!

சின்னா ; அடடே.. அதே எண்ணம்தான் சார் என் மனசிலேயும் இருக்கு..!
_________________

சின்னாவோட அப்பா கோர்ட் கிளார்க்.. அதிருஷ்டவசமா
அவருக்கு நீதிபதிகள் வசிக்கும் பல அடுக்குமாடி குடியிருப்புல
வீடு கொடுத்தாங்க.. வீட்டுக்கு எல்லா பொருள்களையும் கொண்டு
சேர்க்க இரவு 12 மணி ஆயிடுச்சு. சின்னா அப்பா,
அம்மாகிட்ட சொல்லிகிட்டு இருந்தாரு..

இங்கே நாம ரொம்ப அடக்கமா நடந்துக்கணும்.. எல்லாரும்
பெரிய ஆளுங்க.. ஏதாவது கோளாறு பண்ணினோம்......
சீட்டைக் கிழிச்சுடுவாங்க..

அப்போ சின்னா வந்து சொன்னான்...

அப்பா.. எல்லா வீட்டிலேயும் காலிங் பெல் வேலை செய்யுதுப்பா..!
_________________

சின்னா பள்ளியில கணினி சொல்லிக் கொடுத்தாங்க..
மின்னஞ்சல் அனுப்பறது பத்தியும் சொல்லித் தந்தாங்க..
கொஞ்ச நாள் கழிச்சு சின்னா கணினி டீச்சர் கிட்ட புகார்
பண்ணினான்..

டீச்சர்.. ஒரு எடத்துக்கு மெயில் அனுப்பினேன்.. போகவே மாட்டேங்குது..

டீச்சர் எல்லாவற்றையும் ்சரிபார்த்தார்.. எதுவும் கோளாறு இல்லை..
தன் கண் முன்னால் ஒருமுறை அனுப்பச் சொன்னார்..

சின்னா அட்ரஸ்பாரில் இவ்வாறு எழுதினான்..ட

begins @ 7.30 pm.

Mathu
15-05-2007, 09:21 PM
ரவுசென்றால் ரவுசு தாங்க முடியல, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

மயூ
16-05-2007, 03:25 AM
சூப்பர் சூப்பர்!!!
சிரித்து சிரித்து... வயிறு புண்ணாகிவிட்டது போங்க!!!

அன்புரசிகன்
16-05-2007, 10:43 AM
சின்னா ; நான் என் வாக்கை மீறினால் நீங்க உங்க
வார்த்தையைக் காப்பாத்தணும்ன்னு அவசியம் இல்லே சார்..

சூப்பர் எஸ்கேப் டிப்ஸ். நாமளும் இதை பாவிச்சுக்கலாம்.

அப்பா.. எல்லா வீட்டிலேயும் காலிங் பெல் வேலை செய்யுதுப்பா..!

ரொம்ப சமத்துப்பையன். யாருடைய தூக்கத்தையும் கெடுக்காம அழைப்பு மணியை மட்டும் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறான். நம்ம ஓவியரப்போல...

நன்றி மாப்பு. :4_1_8: (எப்பிடித்தான் முடியுதோ?:icon_hmm: )

ராஜா
16-05-2007, 05:12 PM
நன்றி நண்பர்களே..!

அமரன்
16-05-2007, 05:14 PM
அசத்தல் காமெடிகள். நன்றியுடன் வாழ்த்துகளும் ராஜா

ராஜா
16-05-2007, 05:17 PM
ரயிலில் மிஸ்டர் மொக்கையும் மாசியும்..

மாசி ; இது என்ன ஸ்டேஷன்..?

மொக்ஸ் ; ரயில்வே ஸ்டேஷன்..

மாசி ; அட அதில்லே.. பேர் என்ன..?

மொக்ஸ் ; மிஸ்டர் மொக்கையன்..

மாசி ; லூசு.. ஸ்டேஷன் பேரைக் கேட்டேன்யா..

மொக்ஸ் ; அட .. ஸ்டேஷனுக்கெல்லாம் யாருங்க பேர்
வைப்பாங்க..? ஆளுகளுக்குதான் பேரெல்லாம்..!

_________________

மிஸ்டர் மொக்கையின் பக்கத்து வீட்டு மாணவி கையில் நாடக
டிக்கெட் புத்தகத்துடன் மொக்ஸைப் பார்த்து..

அங்கிள்.. நவம்பர் 14 ம் தேதி நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா..?
என்று கேட்டாள்.. ஆம் என்றால் டிக்கெட் கிழித்துக் கொடுத்து
விடுவாள் என்று சுதாரித்த மொக்ஸ்,

இல்லையே.. அன்னிக்கு நான் பாம்பேல இருக்கேன்மா..
17 ம் தேதி காலைதான் திரும்பறேன் என்று சொன்னார்..

வெரிகுட்.. 17 ம் தேதி மாலைதான் நாடகம்.. இந்தாங்க டிக்கெட்..
என்று 500 ரூபாய் டிக்கெட் ஒன்றைக் கிழித்து மொக்ஸின்
கையில் திணித்தாள் அந்த கல்லூரி மாணவி..!
_________________

ஒரு மத போதகர் உரையாற்றிக் கொண்டிருந்தார்..
சொர்க்கத்துக்கு என்னோடு வர விரும்புபவர்கள் எல்லாம்
கையைத் தூக்குங்கள் என்றார்.. எல்லோரும் கையைத்
தூக்கினார்கள்.. மிஸ்டர்.மொக்கையைத் தவிர.. போதகர் கேட்டார்..

மகனே.. நீ வர விரும்பவில்லையா..?

மொக்கை சொன்னார்..

கூட்டம் முடிஞ்சதும் வேற எங்கேயும் யார் பின்னாடியும் அலையாம
நேரா வீட்டுக்கு என் மனைவி வரச் சொல்லியிருக்காங்க..!
_________________

மிஸ்டர் மொக்கை தன் மனைவியிடம் பெருமையடித்துக் கொண்டார்..

என் அப்பா ஒரு தீர்க்கதரிசி..

இப்போ எதுக்கு உங்க அப்பா புராணம்.. ?

இல்லே.. பிற்காலத்துல என்னை எல்லோரும் என்ன பேர்
சொல்லிக் கூப்பிடுவாங்கன்னு தெரிஞ்சுகிட்டு கரெக்டா அந்தப்
பேரையே நான் குழந்தையா இருக்கறப்பவே வச்சுட்டாரே..!
_________________

மிஸ்டர் மொக்கை ஒரு டாக்டரைப் பார்க்கப் போனார்..
அவரிடம் கேட்டார்..

டாக்டர் உங்கள் பெயர் என்ன..?

ரவி.. ஏன் கேட்கிறீர்கள்..

இல்லை.. நான் பார்க்க வந்தபோது வெளியில் பேசிக்
கொண்டார்கள்.. உங்களுக்கு இந்த ஊர்ல பெரிய பேருன்னு..
அப்படி ஒண்ணும் பெருசா இல்லியே..!

_________________

மனோஜ்
16-05-2007, 05:24 PM
அனைத்தும் அருமை அண்ணா

அமரன்
16-05-2007, 05:28 PM
ரயிலில் மிஸ்டர் மொக்கையும் மாசியும்..

மாசி ; இது என்ன ஸ்டேஷன்..?

மொக்ஸ் ; ரயில்வே ஸ்டேஷன்..

மாசி ; அட அதில்லே.. பேர் என்ன..?

மொக்ஸ் ; மிஸ்டர் மொக்கையன்..

மாசி ; லூசு.. ஸ்டேஷன் பேரைக் கேட்டேன்யா..

மொக்ஸ் ; அட .. ஸ்டேஷனுக்கெல்லாம் யாருங்க பேர்
வைப்பாங்க..? ஆளுகளுக்குதான் பேரெல்லாம்..!

தாங்கமுடியாத சிரிப்பை வரவழைத்த காமெடி. ரவுசு என்றால் இது ரவுசு.

அன்புரசிகன்
17-05-2007, 05:30 AM
மாசி ; லூசு.. ஸ்டேஷன் பேரைக் கேட்டேன்யா..
மொக்ஸ் ; அட .. ஸ்டேஷனுக்கெல்லாம் யாருங்க பேர்
வைப்பாங்க..? ஆளுகளுக்குதான் பேரெல்லாம்..!

இரண்டு லூசுகளுக்கும் தெரியல...

வெரிகுட்.. 17 ம் தேதி மாலைதான் நாடகம்.. இந்தாங்க டிக்கெட்..
என்று 500 ரூபாய் டிக்கெட் ஒன்றைக் கிழித்து மொக்ஸின்
கையில் திணித்தாள் அந்த கல்லூரி மாணவி..!

புது புது டெக்னிக். நாம எல்லாம் இலங்கையில் 100ரூபா டிக்கட் விற்க எத்தனை வசைப்பாடல் கேட்க்கவேண்டியிருக்கும்.

கூட்டம் முடிஞ்சதும் வேற எங்கேயும் யார் பின்னாடியும் அலையாம
நேரா வீட்டுக்கு என் மனைவி வரச் சொல்லியிருக்காங்க..!

கல்லானாலும் மனைவி புல்லானாலும் பொண்டாட்டி.

mravikumaar
17-05-2007, 11:34 AM
ரவுசு எல்லாம் தூள்

அன்புடன்,
ரவிக்குமார்

ராஜா
17-05-2007, 05:33 PM
ஒலி'தாங்கி' ; அலாரம் கழுதையாக அலறினால் கூட அசராமல் அசந்து தூங்கும் சக்தி கொண்டவர்.

நயன்'டாரா' ; அடுத்த பெண்ணிடம் வழியும் காதலனை கண்ணாலேயே கிழிக்கும் வல்லமை கொண்டவள்.

'ட்ரை'சைக்கிள் ; பழைய சைகிளை வைத்துக் கொண்டே லவ் டெவலப் செய்ய முயற்சிப்பவர்.

கில்'லாலி' ; குழந்தைக்கு வேடிக்கை காட்டியபடியே அது கையிலிருக்கும் லாலி பாப்பை ஒரு கை பார்ப்பவர்.

திரி'சா' ; த்ரிஷாவைப் பற்றியே எப்போதும் திரி துவங்கி அறுப்பவர்..

பிரி'கேடி'யர் ; கூட்டத்தில் வாயுவைப் பிரித்தாலும் யாரும் கண்டுபிடிக்க இயலாத கேடி. கேடு விளைவிப்பவர் என்றும் கொள்க.

சுண்டல்-சீ ; பழைய காதல் மேட்டரை சுண்டல்காரன் போட்டுக் கொடுத்துவிடுவானோ என்ற பயத்தில் காதலன் சுண்டல் வேண்டுமா என்று கேட்டால் சீ வேண்டாம் என்பவள்.

சிம்'ரன்' ; போஸ்ட் பெயிட் கனெக்ஷன் வாங்கி மொக்கை போட்டு பில் வசூலுக்கு வரும் ஆட்கள் கையில் சிக்காது ஓடி ஒளிபவர்.

லை'லா' ; எல்லா கூத்தும் அடித்து பின் சட்டபூர்வமாக பொய் சொல்லித் தப்புபவள்.

மீறா ஜாஸ்மின் ; மல்லிகைப்பூவைத் தவிர வேறெதுவுமே வாங்கிக் கொள்வதில்லை என்ற கொள்கையை மீறாதவர்.

தேவையா'நீ' ; மால் மாலாக உங்களை இழுத்துப்போய் குடியைக் கெடுத்துவிட்டு, பின்னர் வேறு பைசா பார்ட்டியைப் பிடித்தபின் டாட்டா காட்டுபவள்.

சமிக்'சா' ; உங்க லவ் லட்டருக்கு கிரீன் சிக்னல் [சமிக்ஞை] கொடுத்து ஓரம்கட்டி தாதா அண்ணனைவிட்டு சாவடி அடிக்க வைப்பவர்.

சினேகா ; சினேகமாய் பேசுகிறாளே என்று வரம்பு மீறினால் சீறி செருப்பு சைஸ் காட்டும் மாடர்ன் கண்ணகி.

மால்விக்கா ; பிறந்தநாள் பார்ட்டிக்கு உங்களிடம் இருக்கும் பொருட்களை எல்லாம் விக்க வைத்து கொண்டாடுபவள்.

நமீதா ; ஒன்றரைக்கண் பார்ட்டி. நாய்க்குட்டியை லுக் விட்டால் கூட விழி அம்பு பாய்ந்தது நம் மீதா என்று எல்லோரையும் உருக வைப்பவள்.

சதா ; எப்போதும் போய்யா போய்யா என்று விரட்டிக் கொண்டே இருப்பவள்.

பிரியா மணி ; நாயுடன் இணை பிரியாமல் திரிபவள்.. அணுக ஆபத்தானவள்..

ஜோதி'கா' ; கடைசி வரையிலும் அல்வா கொடுத்து தாடி வளர்க்கவிட்டு சபரிமலை சாமி ரேஞ்சுக்கு அலைய விடுபவள்..

திரி'ஷா' ; நீங்க கொஞ்சம் பாலிஷா, ஃபிரெஷ்ஷா, ஃபூலிஷா இருந்தா காதலிப்பவள்.

அன்புரசிகன்
18-05-2007, 08:29 AM
அது சரி.. என் பொண்ணு எந்த ரகம்? விஜயசாந்தி போல தனே?.. :D

அமரன்
18-05-2007, 08:32 AM
ராஜா அண்ணாவின் புதுரவுசு அகராதி கலக்கல்.

ராஜா
18-05-2007, 04:07 PM
நன்றி ரவி, அமர் & மாம்ஸ்..!

ராஜா
18-05-2007, 04:12 PM
டாக்டர் ; இங்க பாருங்க.. நீங்க ஓவர் வெயிட் போட்டுருக்கீங்க..
நீச்சல் அடிங்க உடல் இளைச்சுடும்..

மொக்ஸ் ; ஹி..ஹி... என்ன டாக்டர் விளையாடறீங்க..? திமிங்கிலம்
நாள் பூரா நீச்சலடிச்சுகிட்டுதான் இருக்கு.. அது என்ன ஒல்லியாவா இருக்கு..?
_________________

மொக்ஸ் ; அங்க பாரு.. உங்கப்பா வராரு.. ஒளிஞ்சுக்கலாமா..?

காதலி ; வேண்டாம்.. அவர் பார்க்கட்டும்.. அப்போதான் ஒரு வழி பொறக்கும்..

மொக்ஸ் ; என்ன வழி பொறக்கும்..? நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரா..?

காதலி.. நமக்கு இல்லே.. எனக்கு.. கண்ட கழுதையோட
சுத்தாதேன்னு சொல்லி அப்புறமாவது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பார்..!
_________________

திருப்பதி செல்லும் பேருந்து அது.. மொக்ஸ் உள்ளே குறுக்கும்
நெடுக்கும் நடந்தபடியே இருந்தார்.. எரிச்சலுற்ற நடத்துநர் கேட்டார்..

ஏன் சார் இப்படி நடக்கறீங்க..

மொக்ஸ் மொழிந்தார்..

திருப்பதிக்கு நடந்தே வர்றேன்னு வேண்டியிருக்கேன்..!
_________________

மொக்ஸ் ஒரு தையல் காரர்..! ஆனால் குறித்த அளவில்\
தைக்காமல் சொதப்புவார்..ஒருநாள் ஒரு வாடிக்கையாளர்.
.மொக்ஸிடம் வந்தார்...

யோவ் மொக்கை.. என் சட்டையை பெருசா தச்சுட்டியே..

சரி.. சரி.. உங்க அப்பாட்ட கொடுத்துடுங்க.. போட்டுக்கட்டும்..

சரி.. என் பையன் சட்டையும் பெருசா இருக்கே..

அப்படியா..? அதை நீங்க போட்டுக்கங்க..

அப்போ என் மகனுக்கு..?

உங்களுக்கு ஒரு பேரன் இல்லாததுக்கு நானா பொறுப்பு..?
_________________

மொக்ஸுக்கு பெண் பார்க்கப் போனார்கள்.. பெண் பிடித்துப்
போய் விட்டது.. மொக்ஸின் அப்பா சொன்னார்..

எனக்கு இருதய நோய்.. இன்னும் கொஞ்ச நாளில் இறந்து
விடுவேன்.. அப்புறம் எல்லா சொத்தும் என் மகனுக்குதான்..!

மறுநாள் மொக்ஸ் சோகமாக வந்தார்.. நண்பன் கேட்டான்..

என்னடா ஆச்சு..?

அந்த பொண்ணு எனக்கு சித்தி ஆயிட்டாடா..!
_________________

விடு ஜூட்.. நாளைக்குப் பார்ப்போம்.. வர்ட்டா..?

அமரன்
18-05-2007, 04:15 PM
திருப்பதிக்குப் போகும் ஜோக் கலக்கல்.

மனோஜ்
18-05-2007, 04:26 PM
மொக்ஸ் ; அங்க பாரு.. உங்கப்பா வராரு.. ஒளிஞ்சுக்கலாமா..?
காதலி ; வேண்டாம்.. அவர் பார்க்கட்டும்.. அப்போதான் ஒரு வழி பொறக்கும்..
மொக்ஸ் ; என்ன வழி பொறக்கும்..? நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரா..?
காதலி.. நமக்கு இல்லே.. எனக்கு.. கண்ட கழுதையோட
சுத்தாதேன்னு சொல்லி அப்புறமாவது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பார்..!
அருமை அண்ணா இது
இப்படி நடந்தா மெக்கையும் எஸ்கேப்பு

அன்புரசிகன்
18-05-2007, 05:54 PM
மொக்ஸ் ; என்ன வழி பொறக்கும்..? நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரா..?
காதலி.. நமக்கு இல்லே.. எனக்கு.. கண்ட கழுதையோட
சுத்தாதேன்னு சொல்லி அப்புறமாவது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பார்..!

எப்படியெல்லாம் டெவலப்பாகிப்புட்டாய்ங்க. ஏதோ நாசமாப்போகப்போகுதுங்க.:209:

திருப்பதிக்கு நடந்தே வர்றேன்னு வேண்டியிருக்கேன்..!

அட.. ச்சே... இப்படித்தெரிந்திருந்தால் நான் இங்கிருந்தே வழமானத்தில் வந்திருப்பேனே...

உங்களுக்கு ஒரு பேரன் இல்லாததுக்கு நானா பொறுப்பு..?

அது தானே... சரியான கேள்வி.

அந்த பொண்ணு எனக்கு சித்தி ஆயிட்டாடா..!

அடப்பாவமே... இப்படியெல்லாம் ஆசப்பட ஆரம்புச்சிட்டாங்களா?:4_1_8:

அக்னி
18-05-2007, 06:04 PM
அசத்துகின்றீர்கள்...
பெண்பார்க்கும் படலம் வெடிச்சிரிப்பு...

ஓவியன்
19-05-2007, 09:36 AM
திமிங்கிலம் இளைக்கணும்னா, நீச்சல் அடிச்சா சரிவராது சைக்கிளிங் தான் செய்ய வேண்டும்:natur008: .

ராஜா
19-05-2007, 05:55 PM
மொக்ஸ் ; டாக்டர்.. ஒரு காலும் ஒரு கையும் வீங்கிப் போச்சு
டாக்டர்.. பாருங்க.. எவ்வளவு அசிங்கமா இருக்கு..

டாக்டர் ; சரி.. சரி.. இந்த மாத்திரையைப் போட்டுக்கங்க..

மொக்ஸ்; வீக்கம் குறைஞ்சுடுமா டாக்டர்..?

டாக்டர் ; இல்லே.. இன்னொரு கையும் காலும் வீங்கிடும்..
வித்தியாசமா தெரியாது..!
_________________

புலவர் 1 ; இப்போது நாம் பாடப் போகும் அரசன் சரியான கேடி..

புலவர் 2 ; அப்படியா..? என்ன செய்வார்..

புலவர் 1 ;தீனி போட முடியாமல் இளைத்துப் போயிருக்கும்
யானைகளை பரிசு என்ற பெயரில் நம் தலையில் கட்டிவிடுவான்.. கிராதகன்..!
_________________

வீரன் 1 ; அரசர் , "உயிரைப் பணயம் வைத்தாவது போரில்
என்னைக் காப்பாற்றுங்கள்" என்று தளபதிகளிடம் உருக்கமாகக்
கூறுகிறாரே.. ஏன்..?

வீரன் 2 ; உன்னை சிறைப்பிடித்து என் மகள் எலிமுகியை
உனக்கு திருமணம் செய்து வைப்பேன் என்று எதிரி மன்னன்
சவால் விட்டிருக்கிறானாம்..!
_________________

என்ன மொக்ஸ்..? புல்லா பெட் சீன் இருக்குன்னு சொல்லிட்டு
குஷியா படம் பார்க்கப் போனியே.. ஏன் முகத்தை தொங்க
போட்டுகிட்டு வரே..?

கதாநாயகிக்கு டி.பி. ன்னு சொல்லி ஆஸ்பத்திரி படுக்கையிலேயே
போட்டு வெறுப்பேத்திட்டானுகடா..!
_________________

என்ன டைரக்டர் சார்.. உங்க படம் ரொம்ப பயங்கரமாமே..
சென்சார்ல விடமாட்டாங்கன்னு பேசிக்கறாங்க..

புதுமை பண்றேன்னு ஹீரோயினை மேக் அப் இல்லாம நடிக்க
வச்சேன்.. இப்போ அனுபவிக்கறேன்..!
_________________

தீபா
19-05-2007, 06:18 PM
சிரிப்பு ஒரு கலை
சிறந்த கலை
யாவரும்
அறியா
அரிய கலை
அதைச் செய்யும் உங்களுக்கு
வணங்குது என் தலை.
வாழ்த்துக்கள்.

அமரன்
19-05-2007, 08:30 PM
நான் தினமும் தூங்கச் செல்லும் முன்னர் இயலுமானவரை இத்திரியைப் படித்துவிட்டுச் செல்வது வழக்கம். மனம் பஞ்சுபோலாகி தூக்கம் கண்களைத் தழுவுகின்றது. இன்றைய ரவுசில் திரைத்துறை சார்ந்த ரவுசுகள் என்னைக் கவர்ந்து விட்டன. நன்றி ராஜா.

ஓவியன்
20-05-2007, 03:52 AM
என்ன டைரக்டர் சார்.. உங்க படம் ரொம்ப பயங்கரமாமே..
சென்சார்ல விடமாட்டாங்கன்னு பேசிக்கறாங்க..

புதுமை பண்றேன்னு ஹீரோயினை மேக் அப் இல்லாம நடிக்க
வச்சேன்.. இப்போ அனுபவிக்கறேன்..!
[/COLOR][/SIZE][/FONT][/B]

ஹா!,ஹா!!

புதுசா எதாவது வித்தியாசமாப் பண்ணுறதென்பது இது தானா?:sport-smiley-007:

நடிகைக்கு மட்டுமல்ல, இது பலரது வாழ்க்கைக்கும் பொருந்தும்.

அன்புரசிகன்
20-05-2007, 05:10 AM
வீரன் 2 ; உன்னை சிறைப்பிடித்து என் மகள் எலிமுகியை
உனக்கு திருமணம் செய்து வைப்பேன் என்று எதிரி மன்னன்
சவால் விட்டிருக்கிறானாம்..!

அரச வம்சத்திலும் அதோ கெதி தானோ?

என்ன டைரக்டர் சார்.. உங்க படம் ரொம்ப பயங்கரமாமே..
சென்சார்ல விடமாட்டாங்கன்னு பேசிக்கறாங்க..

புதுமை பண்றேன்னு ஹீரோயினை மேக் அப் இல்லாம நடிக்க
வச்சேன்.. இப்போ அனுபவிக்கறேன்..!
புது மேக்கப். புது ஸ்டைல். புது ஸீன். புதுமை சென்ஸர். கலக்கரே டைரக்கர்.

மயூ
20-05-2007, 06:30 AM
ராஜஜா அவர்களே சூப்பரோ சூப்பர்!!!
கலக்கல் போங்க!!!!

aren
20-05-2007, 07:15 AM
திருப்பதி ஜோக் அருமை.

பாவம் அந்த பெண்பார்க்கும் பேர்வழி. பார்த்த பெண்ணே சித்தியாக. ஐயோ பாவம். எல்லாம் பணம் படுத்தும்பாடு.

ராஜா
20-05-2007, 04:43 PM
ஏண்டி மீனா..? உங்க அப்பனுக்கு சூடு சொரணையே கிடையாதா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

கொடுத்த வரதட்சணைப் பணத்தில் லோன் கிடைக்குமான்னு
கேட்டு லெட்டர் போட்டிருக்காரு..!
_________________

சாப்பிட வந்தவர் ; உங்க சர்வர் பரஞ்சோதியைக் கொஞ்சம்
கண்டிச்சு வைங்க..

ஓட்டல் முதலாளி ; ஏன் சார்..? என்ன ஆச்சு..?

சாப்பிட வந்தவர் ; உங்க கடை பேரு அவ்வையார் விலாசா
இருக்கலாம்.. அதுக்காக வர்றவங்க கிட்ட சுட்ட வடை வேணுமா..
சுடாத வடை வேணுமான்னு கேட்டுகிட்டு திரியறது நல்லா இல்லே.. ஆமாம்....
_________________

உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேர் இருக்கீங்க..?

என் வீட்டுக்காரர் மட்டுந்தாங்க மொத்தமா இருப்பார்.. நாங்க
எல்லாம் ஒல்லிதான்..!
__________________

என்னங்க சொல்றீங்க..? உங்க நண்பர் உங்ககிட்ட கடன்
கேட்க வந்திருக்காரா..? எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க..?

உன் காப்பியைப் போய் ஆஹா.. ஓஹோ ன்னு புகழ்ந்து
தள்ளறான் பாரு..!
_________________

இந்தத் தேர்தல்ல நாம ஆட்சியைப் பிடிச்சே ஆகணும் தலைவரே..!

தம்பி.. உன் ஊக்கத்தைப் பாராட்டுகிறேனடா..

ஊக்கமும் இல்லே.. மண்ணாங்கட்டியுமில்ல.. மெடிக்கல் சீட்
வாங்கித் தரேன்னு சொல்லி நாலு பேர்கிட்ட காசு வாங்கிட்டேன்..!
_________________

Gobalan
20-05-2007, 05:52 PM
ராஜா உங்கள் ரவுசு மிக ஜோர். எவ்வளவு ஜோக்குகள். மிக அறுமையானா ஜோக்குகள் பல. பல ஜோக்குகளை படித்தபின் வயிரு வலிக்க சிரிக்க வைத்தன. பொறுமையுடன், நகச்சுவை குன்றாத நடையுடன் ஜோக்குகளை நித்தியம் பதித்து இந்த பதிப்பினை தொடருவதர்க்கு நன்றி. தினம் நகச்சுவைகளை படித்தால் மனம் உற்சாகம் அடையும் என்பது நம் கண்டறிந்த உண்மை. அந்த நற் சேவையை செய்து கொண்டிருக்ரீர்கள் இந்த திரியின் முலம். தொடருங்கள் உங்கள் நற் சேவயை. நன்றி. கோபாலன்.

அறிஞர்
20-05-2007, 06:03 PM
_________________

இந்தத் தேர்தல்ல நாம ஆட்சியைப் பிடிச்சே ஆகணும் தலைவரே..!

தம்பி.. உன் ஊக்கத்தைப் பாராட்டுகிறேனடா..

ஊக்கமும் இல்லே.. மண்ணாங்கட்டியுமில்ல.. மெடிக்கல் சீட்
வாங்கித் தரேன்னு சொல்லி நாலு பேர்கிட்ட காசு வாங்கிட்டேன்..!
_________________

சுட்டி தானே அந்த தம்பி.....

அருமை ராசா.. தொடரட்டும்...

அன்புரசிகன்
20-05-2007, 06:20 PM
ஊக்கமும் இல்லே.. மண்ணாங்கட்டியுமில்ல.. மெடிக்கல் சீட்
வாங்கித் தரேன்னு சொல்லி நாலு பேர்கிட்ட காசு வாங்கிட்டேன்..!

இது தான் பொலி ட்ரிக்ஸ்.:D
மற்ற ஜோக்குகளும் சோக்கானவை. உடல் நலம் சரியில்லை.:violent-smiley-010: அதனால் சரியக பின்னூட்டம் இட முடியவில்லை.

அமரன்
20-05-2007, 06:37 PM
என்னங்க சொல்றீங்க..? உங்க நண்பர் உங்ககிட்ட கடன்
கேட்க வந்திருக்காரா..? எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க..?

உன் காப்பியைப் போய் ஆஹா.. ஓஹோ ன்னு புகழ்ந்து
தள்ளறான் பாரு..!

ஒவ்வொன்றும் கலக்கல் ராஜா. எனக்குப் ரொம்பப் பிடித்தது இந்த ஜோக்கதான்

மனோஜ்
20-05-2007, 07:07 PM
அருமை அண்ணா

ஓவியா
20-05-2007, 08:35 PM
அருமையான ஜோக்ஸ்.

நானும் திருப்பதி வெங்கடவாரை லண்டனிலிருந்து நடந்து வந்தே தரிசிக்கிறேன் என்று முடீவு பண்ணிட்டேன்.....ஹி ஹி ஹி

ராஜா
21-05-2007, 05:16 PM
அனைவருக்கும் நன்றி..!

ராஜா
21-05-2007, 05:20 PM
டிக்கெட் பரிசோதகர் ; என்னய்யா.. பாசஞ்சர் வண்டிக்கு டிக்கெட்
எடுத்துட்டு எக்ஸ்பிரஸ்சுல ஏறி வர்றே.. ?

மொக்ஸ் ; வேணும்ன்னா ட்ரெயினை மெதுவா ஓட்டச் சொல்லுங்க..
எனக்கு ஒண்ணும் அவசரமில்லே..!
_________________

புதியவர் ; உங்க ஊருல ஆறு,குளம் இருக்காப்பா..?

மொக்கை ; ம்ஹூம்.. ஒரே ஒரு குளம்தான் இருக்கு..!
_________________

மொக்கையின் மகனும் மனைவியும்...

அம்மா.. பொட்டு நகை கூட வாங்கிப்போடாத இந்த அப்பாவை
ஏம்மா கட்டிகிட்டே..?

என்னாச்சுப்பா.. திடீர்ன்னு ஏன் இப்படிக் கேட்கிறே..?

பின்ன என்னம்மா..? இன்னிக்கு தெருக்கோடில ஒரு மீசைக்கார
மாமா சாக்லேட் வாங்கித் தந்து, "அம்மா நகை எல்லாம்
எங்கே வச்சுருக்காங்க"ன்னு கேட்டாரு.. எனக்கு எவ்வளவு
வெட்கமாப் போச்சு தெரியுமா..?
_________________

மேனேஜர் ; ஏன்யா மொக்கை..? கணக்குல ஐம்பதாயிரம்
குறையுதே.. என்ன பண்ணப்போறே..?

மொக்க்கை ; ஒரு 24 மணி நேரம் டைம் கொடுங்க சார்...

மேனேஜர் ; அதுக்குள்ள பணத்தை கட்டிடுவியா..?

மொக்கை ; இல்லே.. மூட்டை முடிச்சை கட்டிகிட்டு பாம்பே
பக்கம் ஓடிடுவேன்..!
_________________

மொக்ஸ் ; டாக்டர்.. என் கையில பாருங்க ... திட்டு திட்டா படை
போல இருக்கு.. ஆனா அரிப்பு, எரிச்சல் எதுவும் இல்லே..

டாக்டர் ; ஒருவேளை "அமைதிப்படை"யா இருக்குமோ என்னமோ..!
_________________

அன்புரசிகன்
21-05-2007, 07:11 PM
மொக்ஸ் ; வேணும்ன்னா ட்ரெயினை மெதுவா ஓட்டச் சொல்லுங்க..
எனக்கு ஒண்ணும் அவசரமில்லே..!

இப்படி வேற கிளம்பிட்டாய்ங்களா? இப்ப இந்தியாவில ரயில்வே லாபத்தில ஓடுறதா கேள்விப்பட்டேன். சீக்கிரத்தில் கெடுத்திடுவாய்ங்க.

புதியவர் ; உங்க ஊருல ஆறு,குளம் இருக்காப்பா..?
மொக்கை ; ம்ஹூம்.. ஒரே ஒரு குளம்தான் இருக்கு..!

இருக்கல. படுத்திருக்கு என்று சொல்லலியே...

பின்ன என்னம்மா..? இன்னிக்கு தெருக்கோடில ஒரு மீசைக்கார
மாமா சாக்லேட் வாங்கித் தந்து, "அம்மா நகை எல்லாம்
எங்கே வச்சுருக்காங்க"ன்னு கேட்டாரு.. எனக்கு எவ்வளவு
வெட்கமாப் போச்சு தெரியுமா..?

மொக்ஸ் தீர்க்கதரிசி போல.

மொக்ஸ் ; டாக்டர்.. என் கையில பாருங்க ... திட்டு திட்டா படை
போல இருக்கு.. ஆனா அரிப்பு, எரிச்சல் எதுவும் இல்லே..
டாக்டர் ; ஒருவேளை "அமைதிப்படை"யா இருக்குமோ என்னமோ..!

இப்படிக்கூற முடியதா? அரிந்தும் எரியாமலும்.

நகைப்புக்கள் சுவையாக இருந்தன மாப்பு.

அறிஞர்
21-05-2007, 07:19 PM
மருமகனின் சிரிப்புக்களும்,,, மாமனாரின் அலசல்களும் அருமை.. தொடரட்டும்.. ரவுசுகள்...

அமரன்
22-05-2007, 06:51 AM
ராஜா அனித்தும் அருமை. அதிலும் ஆறு குளம் கடிக்காமடி சூப்பர். நன்றி ராஜா.

ராஜா
22-05-2007, 04:33 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
22-05-2007, 04:36 PM
_____________________________________________________
அப்பா: (அந்தப் பெண்ணிடம்) உனக்கு ரோஜாப்பூ வாசனை
பிடிக்குமா? அல்லது மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா?

அந்தப் பெண்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும்.
______________________________________________________

எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்.

ஏன், ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே?

எங்க ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க
மாட்டாங்களே!
_______________________________________________________

என் அப்பா ஒரு சங்கீத வித்வான்,அம்மாவும் பாடுவாள்,
அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத்தெரியும், அண்ணி
வீணை வாசிப்பா---

சரி, நீ என்ன பண்றே?

வேறென்ன பண்றது, தனிக்குடித்தனம் பண்றேன்!
________________________________________________________

பணக்கார வியாதி..

எஜமானி - தினமும் எங்கடை வீட்டில் மட்டும் வந்து
சாப்பாடு கேட்கிறாய். ஏன் சமையல் அவ்வளவு பிடிச்சுக்கொண்டதா...?

பிச்சைக்காரன் - வைத்திய நிபுணர் நான் உணவில் அதிக கவனம்
எடுக்க வேண்டுமாம். சலரோகம், இரத்தக்கொதிப்பு, வயித்தெரிச்சல்
எண்டு மூன்றும் உள்ள வீடு இது தான்.

எஜமானி - என்ரை அவருக்குப் பணக்கார வியாதி என்டு
சந்தோசமாக இருந்தனான்.
____________________________________________________

கண் ஆஸ்பத்திரியில் ஒரு காட்சி:_

"இடது கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணால் பாருங்கள்."

"நன்றாக தெரிகிறது டாக்டர்."

"இப்போது வலது கண்"

"இதுவும் நன்றாக தெரிகிறது டாக்டர்"

"இப்போது இரண்டு கண்"

"ஒன்றுமே தெரியவில்லையே டாக்டர்"

"யோவ்! இரண்டு கண்களையும் மூடிக்கொண்டால் எப்படி தெரியும்?
_____________________________________________________

அக்னி
22-05-2007, 04:39 PM
என் அப்பா ஒரு சங்கீத வித்வான்,அம்மாவும் பாடுவாள்,
அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத்தெரியும், அண்ணி
வீணை வாசிப்பா---

சரி, நீ என்ன பண்றே?

வேறென்ன பண்றது, தனிக்குடித்தனம் பண்றேன்!

அமோகம்....

அன்புரசிகன்
22-05-2007, 07:16 PM
அப்பா: (அந்தப் பெண்ணிடம்) உனக்கு ரோஜாப்பூ வாசனை
பிடிக்குமா? அல்லது மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா?
அந்தப் பெண்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும்.

சீனி வாசனில (:D) அப்படி என்னதான் இருக்கு??? :thumbsup:

எங்க ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க
மாட்டாங்களே!

சொந்த பிஸ்னஸ் பண்ணிட வேண்டியது தான்:food-smiley-002: . குடும்பம் நிச்சயம் உருப்படும்.:music-smiley-008:

வேறென்ன பண்றது, தனிக்குடித்தனம் பண்றேன்!

சுயேச்சையாக கிளம்பீட்டார். புத்திசாலி.

பிச்சைக்காரன் - வைத்திய நிபுணர் நான் உணவில் அதிக கவனம்
எடுக்க வேண்டுமாம். சலரோகம், இரத்தக்கொதிப்பு, வயித்தெரிச்சல்
எண்டு மூன்றும் உள்ள வீடு இது தான்.

நகைச்சுவை என்றாலும் உண்மை இதுதான். பணம் இருப்பவர்களால் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.

"யோவ்! இரண்டு கண்களையும் மூடிக்கொண்டால் எப்படி தெரியும்?

இது புத்திசாலி வைத்தியர். பிரச்சனையை கண்டுகொண்டார் போலும். இப்போதெல்லாம் இப்படி இல்லை. உடனே யாருக்கும் விளங்காத மொழியில் ஒரு சிட்டை எழுதி கவுண்டருக்கு கொண்டுபோங்கள் என்பார். அங்கே போனால் கண்ணாடி என்று சொல்லி 10000 அறுத்துப்போட்டுத்தான் விடுவாய்ங்க.

ராஜா
23-05-2007, 04:11 PM
ஆபரேஷனுக்கு அப்புறம் கண்ணு நல்லா தெரியுது டாக்டர்..

நான் நர்ஸ்.. டாக்டர் அங்க இருக்கார்...!
___________________________________________________________________

நீ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்க
சம்மதம்ன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் என்னம்மா யோசிக்கிறே..?

இல்லப்பா.. அதில யாரைக் கல்யாணம்
பண்ணிக்கலாம்ன்னு யோசிக்கிறேன்..!
____________________________________________________________________

அடேய் சின்னா.... எரிபொருள்ன்னா என்ன..?

டிஞ்சர் சார்..
_____________________________________________________________________

என்னங்க..உடனே உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைங்க..

எதுக்கு இவ்ளோ அவசரம்..?

உங்க அம்மாவையும் அக்காவையும் என்னாலே தனியா
சமாளிக்க முடியலே..!
______________________________________________________________________

திருடன் ; நீ அப்படியே குந்து சார்.. சாவி எங்கே
இருக்குமுன்னு எனக்குதான் தெரியுமே .. நான் எடுத்துக்கறேன்..
நான் என்ன புதுசாவா வர்றேன்..?
______________________________________________________________________

சினிமா உலகத்தில இவ்வளவு நாளா இருக்கீங்களே மேடம்..
எப்படி மூடிஞ்சது..? உணவுக் கட்டுப்பாடா..? மனசுக் கட்டுப்பாடா..?

ரெண்டும் இல்ல.. குடும்பக் கட்டுப்பாடு..!
______________________________________________________________________

முற்பகல் செயின் என்று தொடங்கும் குறள் சொல்..

பிற்பகல் அடகு வை..!
______________________________________________________________________

-

அமரன்
23-05-2007, 04:18 PM
நீ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்க
சம்மதம்ன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் என்னம்மா யோசிக்கிறே..?

இல்லப்பா.. அதில யாரைக் கல்யாணம்
பண்ணிக்கலாம்ன்னு யோசிக்கிறேன்..!

இன்றைய ரவுசுகளில் எனக்கு முத்தாகத் தெரியும் துணுக்கு இது. நன்றி ராஜா.

அக்னி
23-05-2007, 05:12 PM
மன்றம் வந்தாலே மனம் இலேசாவதுண்டு. ரவுசு பக்கம் வந்தால்
"கவலையா... கிலோ என்ன விலைதான்?"

நன்றிகள் ராஜா...

mgandhi
23-05-2007, 07:23 PM
முற்பகல் செயின் என்று தொடங்கும் குறள் சொல்..

பிற்பகல் அடகு வை..!
நன்றி ராஜா

மனோஜ்
23-05-2007, 07:29 PM
அடேய் சின்னா.... எரிபொருள்ன்னா என்ன..?

டிஞ்சர் சார்..பையன் அவஷ்த பட்டதல சேல்லிருப்பான் அருமை அண்ணா அனைத்தும்

அறிஞர்
23-05-2007, 08:14 PM
___________________________________________________________________

அடேய் சின்னா.... எரிபொருள்ன்னா என்ன..?

டிஞ்சர் சார்..
_____________________________________________________________________

என்னங்க..உடனே உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைங்க..

எதுக்கு இவ்ளோ அவசரம்..?

உங்க அம்மாவையும் அக்காவையும் என்னாலே தனியா
சமாளிக்க முடியலே..!

______________________________________________________________________

முற்பகல் செயின் என்று தொடங்கும் குறள் சொல்..

பிற்பகல் அடகு வை..!
______________________________________________________________________

-

"ஒன்றுமே தெரியவில்லையே டாக்டர்"

"யோவ்! இரண்டு கண்களையும் மூடிக்கொண்டால் எப்படி தெரியும்?
_____________________________________________________
சின்னா ரேஞ்ச்.. அவ்வளவுதான்...சின்னான்னு.. சுட்டியை சொல்லவில்லையே..

ஹிஹி.. மாமியாரை சமாளிக்க என்ன பண்ணுவது...

திருக்குறள்.. செயின், மோதிரம் என்றுச்சொன்னா.. நம்மாளு என்ன நினைப்பான்..

டாக்டர் தெளிவா சொல்லனும்.. அதற்கு இப்படியா..

ராஜா
24-05-2007, 05:19 AM
நன்றி நண்பர்களே..!

"அய்யா" அறிஞரே.. ! உங்களுக்கு மட்டும்தான் கண்டுபிடிக்கத் தெரியுமா..?

அன்புரசிகன்
24-05-2007, 03:30 PM
நன்றி நண்பர்களே..!

"அய்யா" அறிஞரே.. ! உங்களுக்கு மட்டும்தான் கண்டுபிடிக்கத் தெரியுமா..?

நல்லகதையா கிடக்கு.. அப்போ நாம எல்லாம் வெட்டியா? :D

குப்பிவிளக்கில படிக்கிறத எங்க வீட்டில நான் தான் கண்டு பிடிச்சனான்.

முட்டை போடாமல் தயாரிக்கும் கேக்கில் ரவை போடாமல் தயாரித்தால் மில்க் டொபி போல் வருமென்பதை நான் கண்டுபிடித்தேன்.

3-4 நாள் பிந்திய பாணை ஊறவைத்து பிழிந்து பின் தாளியம் முட்டை போட்டு உப்புமாவிற்கு ஈக்குவலா ஒரு டிஷ் தயாரிப்பேன் தெரியுமா?

பெற்றோல் இல்லாத காலத்தில் மண்ணெண்ணை விட்டு ஓடும்பொழுது காபரேட்டருக்குள் ஒரு செலைன் குழாய் விட்டு ஊதி ஊதி மோட்டார் சைக்கிள் ஓடும் வித்தை யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. (நான் பிரக்டிக்கலா டெஸ்ட் பண்ணிப்பார்த்தனான்)...

இன்னும் எத்தனையே உண்டு... இப்படி இருக்க எப்படி நீங்க இப்படி கூற முடியும் மாப்பு... :medium-smiley-029:

ராஜா
24-05-2007, 04:26 PM
மாம்ஸ்.. குமுறிக் கொந்தளிச்சது போதும்.. நிப்பாட்டுங்க..!

ராஜா
24-05-2007, 04:29 PM
ஹலோ .. டாக்டர்.. ! காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு
பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்..

அடப்பாவி.. ! இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு
நேரம் என்னய்யா பண்ணினே..?

சந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..!
_________________

எஙக டாக்டர் ஆபரேஷனுக்குப் பிறகும் நோயாளிகளை
வரவழைச்சுப் பேசுவார்..

அப்படியா..? அது என்ன பழக்கம்..?

ஆவிகளோடு பேசும் பழக்கம்..!
_________________

காதலன் ; கண்ணே நீ சொல்லப் போற அந்த மூணு வார்த்தை
என்னை காத்தில மிதக்க வைக்கணும்.. ப்ளீஸ்.. சொல்லேன்..

காதலி ; போய் தூக்குல தொங்கு..!
_________________

என்னங்க.. உங்க புள்ளையும் உங்களைப் போலதான் இருக்கான்..

அவ்வளவு புத்திசாலியா..?

இல்லே.. .. நிலாவைக் காட்டினா சோறு திங்க மாட்டுறான்..
எதிர் வீட்டு நீலாவைக் காட்டினா இளிச்சுகிட்டு திங்கிறான்..!
_________________

அறிஞர்
24-05-2007, 07:36 PM

காதலனுக்கு அப்பவா நிம்மதி கிடைக்குமே...
---
அப்பனுக்கு பிள்ளை தப்பாமா பிறந்திருக்கு.. ஹிஹிஹீ..

அமரன்
25-05-2007, 06:37 AM
என்னங்க.. உங்க புள்ளையும் உங்களைப் போலதான் இருக்கான்..

அவ்வளவு புத்திசாலியா..?

இல்லே.. .. நிலாவைக் காட்டினா சோறு திங்க மாட்டுறான்..
எதிர் வீட்டு நீலாவைக் காட்டினா இளிச்சுகிட்டு திங்கிறான்..!

எந்த நிலாவைச் சார் காட்டுறாங்க. இன்றைய நகைச்சுவைகளில் எனக்குப் பிடித்தது. நன்றி ராஜா.

sadha
25-05-2007, 10:19 AM
ஒரு ஊரில் ஒரு சைவ காதலனும் சைவ காதலியும் இருந்தார்கள்..

காதலி எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நின்றாள்..

65 கி.

குதி உயர் காலணியை அகற்றினாள்..

63 கி.

துப்பட்டாவை காதலனிடம் கொடுத்தாள்....

62 கி.

அத்துடன் கையில் இருந்த சில்லறை தீர்ந்தபடியால் அடுத்து என்ன செய்வதென்றறியாமல் நின்ற போது.. காதலன் சொன்னான்...

கவலைப்படாதே.. அன்பே.. என்கிட்ட 25 நாணயங்கள் இருக்கின்றன...!!!

கலகிட்டீங்க அன்பரே !!

ராஜா
25-05-2007, 04:21 PM
டாக்டருக்கு இதுதான் முதல் ஆபரேஷனா ஸிஸ்டர்..?

ஆமாம்.. எப்படித் தெரியும்..?

ஆபரேஷன் வாங்க கத்தி வாங்கணும்ன்னு அட்வான்ஸ் கேட்கறாரே..!
_________________

போலீஸ் ; உங்க வீட்ல திருடிக்கிட்டு ஓடின வேலைக்காரி
அங்க அடையாளம் சொல்ல முடியுமாம்மா..?

எஜமானி ; என்னங்க.. எதோ கேக்கறாங்க பாருங்க.. !
_________________

ஆசிரியர் ; அக்கால ஆட்சிக்கும் இக்கால ஆட்சிக்கும் என்ன வேறுபாடு..?

சின்னா ; அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!
_________________

ஏண்டி..? பக்கத்து வீட்டுக்கு புதுசா குடிவந்தவங்க பொண்ணு
பேரு ரமாவா..?

ஆமாங்க.. ஏன் கேக்கறீங்க..?

இங்கே பாரு உன் பையன் ராமஜெயம் எழுதியிருக்கிற அழகை..
ரமா ஜெயம்..ரமா ஜெயம்ன்னு !
_________________

காதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..?

காதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?
_________________

அக்னி
25-05-2007, 04:24 PM
காதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..?

காதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?

ஹா ஹா ஹா...
அதிர்கிறது....

அமரன்
25-05-2007, 04:50 PM
எப்படியாவது உங்க இந்தத் திரியைப் படித்து விடனும் என்ற ஆவல் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்றது ராஜா. நன்றி.

மனோஜ்
25-05-2007, 07:02 PM
அருமை அண்ணா படித்து விட்டேன் நகைத்து விட்டேன் நன்றி

அன்புரசிகன்
25-05-2007, 07:55 PM
ஆபரேஷன் வாங்க கத்தி வாங்கணும்ன்னு அட்வான்ஸ் கேட்கறாரே..!

பரவாயில்லை. திருப்பாச்சி கத்தி கேக்கலியே?

எஜமானி ; என்னங்க.. எதோ கேக்கறாங்க பாருங்க.. !

ரொம்ப அண்டர்ஸ்ராண்டிங் மனைவி

ஆசிரியர் ; அக்கால ஆட்சிக்கும் இக்கால ஆட்சிக்கும் என்ன வேறுபாடு..?
சின்னா ; அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!

இல்லேன்னா தொண்டர்கள் கெட்அவுட்.

இங்கே பாரு உன் பையன் ராமஜெயம் எழுதியிருக்கிற அழகை..
ரமா ஜெயம்..ரமா ஜெயம்ன்னு !

அப்போ அனுமான் யாரு??? (மாமா யாருன்னு கேட்டேனுங்க:grin: )

காதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..?
காதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?

நெவர்

ம்... முடியல மாப்பு. :icon_clap:

ஓவியா
25-05-2007, 10:07 PM
காதலன் ; கண்ணே நீ சொல்லப் போற அந்த மூணு வார்த்தை
என்னை காத்தில மிதக்க வைக்கணும்.. ப்ளீஸ்.. சொல்லேன்..

காதலி ; போய் தூக்குல தொங்கு..!

இந்த ஜோக படிச்சு சிரிச்ச மகளுக்கு என் வாழ்த்துக்கள். ராஜா அண்ணாக்கு நன்றி.

எனக்கு ??????

பின் குறிப்பு
:4_1_8: :4_1_8: இது தான் ஓரே வழி.

ராஜா
27-05-2007, 02:01 PM
சுட்டி ; என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..?

டேனி ; எவன்டா அது..? வகுப்புல பாட்டு பாடுவது..?

சின்னா ; இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அப்பா ; உன் வகுப்புல மொத்தம் 53 பேர் தானே..?

சின்னா ; அட.. எப்படிப்பா சரியா சொல்றீங்க..?

அப்பா ; உன் ரேங்க் பார்த்தாலே தெரியுதே..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

டேனி ; இரண்டாம் புலிகேசி எப்போது முடிசூட்டிக் கொண்டார்..?

சின்னா ; முதலாம் புலிகேசி இறந்த பிறகு சார்..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஏட்டு ; சார்.. நாம சாப்பிட்டுகிட்டு இருந்தப்போ கைதி
நைஸா தப்பிச்சிட்டான் சார்..

இன்ஸ் ; அடப்பாவி.. இப்படி கோட்டைவிட்டுத்
தொலைச்சிட்டியே.. இப்போ சாப்பிட்டதுக்கு யார் காசு
கொடுப்பாங்க..?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நீதிபதி ; கொலையைக் கண்ணால பார்த்த சாட்சி நீ தானே..?
குற்றம் நடந்த சூழ்நிலையை அப்படியே விவரி பார்ப்போம்..

சாட்சி ; இந்தக் கோர்ட்டுதான் பொறம்போக்குன்னு வச்சுக்குங்க..
நீங்க ஒரு குட்டிச்சுவரு..இந்த வக்கீலு கழுதை.. அந்த வக்கீலு
புண்ணாக்கு மூட்டை.. அந்த போலீஸ்காரய்யா பாழுங்கிணறு..
இதுக்கு நடுவுலதானுங்கய்யா கொலை உழுந்துச்சு..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நீதிபதி ; கொலை நடந்ததுக்கு காரணம் நட்புதான்னு சொல்றீயே..
கொலை ஆனவரும் நீயும் நண்பர்களா இருந்தீர்களா..?

குற்றவாளி ; அந்த ஆளோட சம்சாரமும் நானும் நண்பர்கள் எசமான்..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பியூலாஸ்ரீ ; இந்தப் படத்துல ஏல்லாமே உங்களைச் சுத்தி வர்ற
மாதிரி கேரக்டர்ன்னு சொல்லி ஏமாத்திட்டானுகடி..

தோழி ; எப்படிடி..?

பியூலாஸ்ரீ ; குடை ராட்டினம் சுத்தறவளா நடிக்க
விட்டுட்டானுக படுபாவிப் பசங்க..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&[/COLOR]

அமரன்
27-05-2007, 02:10 PM
சுட்டி ; என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..?

டேனி ; எவன்டா அது..? வகுப்புல பாட்டு பாடுவது..?

சின்னா ; இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்..!

அசத்திவிட்டீர்கள் ராஜா சார். உங்களால் எனக்கு மேலதிக செலவுகள் சார். அடிக்கடி வயிற்று வலிக்கு மாத்திரை எடுக்கவேண்டி இருக்கு.

மனோஜ்
27-05-2007, 02:14 PM
நீதிபதி ; ரவுசு பக்கத்தை கண்ணால பார்த்த சாட்சி நீ தானே..?
ரவுசுபக்கத்தை நடத்திய சூழ்நிலையை அப்படியே விவரி பார்ப்போம்..

சாட்சி ; இந்தக் மன்றம் தான் பொறம்போக்குன்னு வச்சுக்குங்க..
நீங்க ஒரு வெட்டி..இந்த பக்கம் வரும் கழுதை.. அந்த பதிவுகள்
புண்ணாக்கு மூட்டை.. அந்த ராஜா அண்ணா சூப்பர் கிணறு..
இதுக்கு நடுவுலதானுங்கய்யா ரவுசு உழுந்துச்சு..!
(தவறு என்றால் மன்னிக்கவும் )

ராஜா
28-05-2007, 04:15 PM
அப்பா ; உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே..
ஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..

மகள் ; அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க ?

அப்பா ; பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..!
_________________

ப.வீ.காரர் ; மிஸ்டர் மொக்கை.. உங்ககிட்ட இருக்கற ரயில்வே
கைடு கொஞ்சம் கொடுங்களேன்.. கும்பகோணத்திலிருந்து
சென்னை எவ்வளவு தூரம்ன்னு பார்த்துட்டு தரேன்..

மொக்ஸ் ; அடடே.. அது பழைய கைடாச்சே.. இப்போ எல்லாம்
மாறிப் போயிருக்குமே..!
_________________

சார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம் சூப்ப்ர்..
அதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..!

அப்படியா..? என்ன அது கடைசி வரி.. ?

அடுத்த இதழில் முடியும்ன்னு போட்டிருக்கே.. அதான்..!
_________________

காதலன் ; உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா
என்ன செய்யறான்னு சொல்றியா..?

காதலியின் தம்பி ; இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..
எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!
_________________

என்ன மொக்கை சார்.. டூத் பேஸ்டை தலையில்
தேய்ச்சுகிட்டு இருக்கீங்க..?

ஈறு உபாதைக்கு சிறந்ததுன்னு போட்டிருக்குதே.. எனக்கு தலை
பூரா ஈரும் பேனுமா இருக்கு..!
_________________

நண்பர் ; மொக்கை சார்..! நீங்க எழுதியிருக்கற கதையை எங்கேயோ படிச்சது போல இருக்கே..?

மொக்ஸ் ; உங்களுக்கு இந்தி படிக்கத் தெரியுமா..?

நண்பர் ; தெரியாதே சார்..

மொக்ஸ் ; அப்பன்னா நீங்க இந்தக் கதையை ஏற்கனவே
படிச்சிருக்கவே முடியாது..!
_________________

அமரன்
28-05-2007, 05:39 PM
நன்றி ராஜா அண்ணா.

ராஜா
29-05-2007, 03:24 PM
டேனி ; சின்னா.. நீ சொல்லு... திருவள்ளுவர் இன்று உயிரோடு
இருந்தால் மக்கள் அவரைப்பற்றி என்ன சொல்லுவார்கள்..?

சின்னா ; உலகிலேயே அதிக வயதாகியும் உயிரோடு இருக்கும்
கின்னஸ் சாதனையாளர்ன்னு சொல்லுவாங்க சார்..!
_________________

டேனி ; டேய் சின்னா.. "கஞ்சன்" என்கிற பெயரில் கட்டுரை
எழுதச் சொன்னேனே.. ஏன் இன்னும் எழுதலை..?

சின்னா ; பேனாவில் இருக்கும் இங்கை செலவழிக்க விரும்பலை
ஐயா..!
_________________

டேனி ; சின்னா.. ஏன் அழுகிறாய்..?

சின்னா ; அப்பா அம்மாவைக் கழுதைன்னு திட்டினார்..
பதிலுக்கு அம்மா குரங்குன்னு ஏசினாங்க..

டேனி ; சரி.. அதுக்கு நீ ஏன் அழறே..?

சின்னா ; அப்போ நான் யாரு சார்..?
_________________

மாமா ; டேய் சின்னா.. உங்க பள்ளி ஸ்டேட் போர்டா..
செண்ட்ரல் போர்டா..?

சின்னா ; எல்லாமே பிளாக் போர்டுதான் மாமா..!
_________________

டேனி ; சின்னா.. முட்டை போடும் இரண்டு உயிரினங்கள் என்னென்ன..?

சின்னா ; வாத்து, வாத்தி..!
_________________

அன்புரசிகன்
29-05-2007, 04:22 PM
டேனி ; டேய் சின்னா.. "கஞ்சன்" என்கிற பெயரில் கட்டுரை
எழுதச் சொன்னேனே.. ஏன் இன்னும் எழுதலை..?
சின்னா ; பேனாவில் இருக்கும் இங்கை செலவழிக்க விரும்பலை
ஐயா..!

நிஜமான நிழல்

டேனி ; சின்னா.. ஏன் அழுகிறாய்..?
சின்னா ; அப்பா அம்மாவைக் கழுதைன்னு திட்டினார்..
பதிலுக்கு அம்மா குரங்குன்னு ஏசினாங்க..
டேனி ; சரி.. அதுக்கு நீ ஏன் அழறே..?
சின்னா ; அப்போ நான் யாரு சார்..?

எல்லா டிஸ்கவரியும் வந்திடும் போல...

மாமா ; டேய் சின்னா.. உங்க பள்ளி ஸ்டேட் போர்டா..
செண்ட்ரல் போர்டா..?
சின்னா ; எல்லாமே பிளாக் போர்டுதான் மாமா..!
________________
டேனி ; சின்னா.. முட்டை போடும் இரண்டு உயிரினங்கள் என்னென்ன..?
சின்னா ; வாத்து, வாத்தி..!

சின்னா வகுப்பின் முதல் மாணவன் பேல...

நல்ல ஜோக்குகள் மாப்பு

ராஜா
30-05-2007, 04:35 PM
பொண்டாட்டி தொல்லை தாங்கலடா.. பேசாம சாமியாராப்
போயிடலாமான்னு தோணுது...!

ஒரு பொம்பளைய சமாளிக்க முடியாத நீ எப்படிடா நாலைஞ்சு
பொம்பளைங்களை சமாளிக்கப் போறே..?
_________________

எப்படிடா அது..? உங்க வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க ஒரே
நாள்ல ஊருக்கு கிளம்பிடறாங்க..?

ரொம்ப சிம்பிள்.. விருந்தாளிகள் வர்ற அன்னிக்கு மட்டும்
என் மனைவி சமைப்பா..!
_________________

டாக்டர் ; ஏன் மிஸ்டர் மொக்ஸ்.. உங்க மனைவி கண்ணுல
தண்ணியே வரக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி
அனுப்பினேன்.. இப்படி அழுது முகமே வீங்கிக் கிடக்குதே..?

மொக்ஸ் ; நான் என்ன சார் பண்ணுவேன்.. நாள் பூரா ஒரு
சீரியல் விடாம பார்த்துத் தொலைக்கிறா..!
_________________

நான் குளிக்கும்போது என் கணவர் நைசா எட்டிப் பார்க்கிறார்டி..

புதுக் கல்யாணம்ன்னா அப்படித்தாண்டி இருக்கும்..

அடிப்போடி.. மூக்குத்தி, தோடு எதுவும் கழட்டி வச்சிருக்கேனான்னு
நோட்டம் விடறார்டி..!
_________________

ஒருநாளைக்கு நீங்க சமைச்சுப் பாருங்க.. அப்பதான் நாங்க
படற கஷ்டம் ஆம்பளைங்களுக்கு புரியும்..

ஒருநாளைக்கு நாங்க சமைக்கிறோம்.. நீங்க சாப்பிட்டு பாருங்க..
அப்பதான் நாங்க படற கஷ்டம் பொம்பளைங்களுக்கு தெரியும்..!
_________________

என்னங்க.. டீவி ல பயங்கரமான பேய்ப்படம் ஓடுதுங்க..

அது டீவி இல்ல.. கண்ணாடி.. உன் உருவம்தான் அதில
தெரியுது..!
_________________

சுட்டிபையன்
31-05-2007, 05:55 AM
ஹீ ஹீ நன்றி அண்ணா சூப்பர் ஜோக்ஸ்

அமரன்
31-05-2007, 06:30 AM
கலக்கிறீங்க ராஜா அண்ணா. தினமும் இப்படி நகைச்சுவைத் தூவி அசத்துறீங்க. நன்றி அண்ணா.

அறிஞர்
31-05-2007, 03:19 PM
ஒருநாளைக்கு நீங்க சமைச்சுப் பாருங்க.. அப்பதான் நாங்க
படற கஷ்டம் ஆம்பளைங்களுக்கு புரியும்..

ஒருநாளைக்கு நாங்க சமைக்கிறோம்.. நீங்க சாப்பிட்டு பாருங்க..
அப்பதான் நாங்க படற கஷ்டம் பொம்பளைங்களுக்கு தெரியும்..!
_________________

என்னங்க.. டீவி ல பயங்கரமான பேய்ப்படம் ஓடுதுங்க..

அது டீவி இல்ல.. கண்ணாடி.. உன் உருவம்தான் அதில
தெரியுது..!
_________________
ஹிஹி உண்மையான சிரிப்புக்கள்....

aren
31-05-2007, 05:30 PM
நம்ம எவ்வளவு கஷ்டப்பட்டு சாப்பிடுகிறோம் என்று அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரியும். ஆனால் அப்படியும் அவர்களுடைய சமையல் மட்டும் என்று எப்படி ஒப்புக்கொள்வார்கள்.

ராஜா
31-05-2007, 05:37 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
31-05-2007, 05:40 PM
இந்தப் படத்தை டீ.வி.க்கு கொடுக்கணும்ன்னு திட்டம்
போட்டே தயாரிச்சுருப்பாங்க போல..

ஏன் அப்படிச் சொல்றீங்க..?

படம் பூரா 20 நிமிஷத்துக்கு ஒருதடவை விளம்பரங்கள் வருதே..!
_________________

நான் சின்னவயசில 5 மைல் நடந்து போய் சங்கீதம் கத்துண்டேன்..

அப்போலேருந்தே உங்களுக்கும் சங்கீதத்துக்கும் ரொம்பதூரம்ன்னு சொல்லுங்க..!
_________________

ஹலோ வசந்த் & கோ தானே..? எனக்கும் மனைவிக்கும்
பெரிய சண்டை.. உடனே வாங்க..

நாங்க எதுக்கு வரணும்..?

நீங்கதானே சார் சொன்னீங்க.. டீ.வி. வாங்கி ரெண்டு வருஷம்
வரைக்கும் எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நாங்க வந்து
தீர்த்து வைப்போம்ன்னு..!
_________________

என்னடா.. மருந்துக் கம்பெனிக்கு வேலைக்குப் போனியே..
எப்படி இருக்கு../

மாசம் ரெண்டாகுது.. மருந்துக்குக் கூட சம்பளத்தைக் கண்ணுல
காட்ட மாட்டறானுகடா..!
_________________

என்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..?

ம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்
கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..!
_________________

அமரன்
31-05-2007, 05:47 PM
ஹலோ வசந்த் & கோ தானே..? எனக்கும் மனைவிக்கும்
பெரிய சண்டை.. உடனே வாங்க..

நாங்க எதுக்கு வரணும்..?

நீங்கதானே சார் சொன்னீங்க.. டீ.வி. வாங்கி ரெண்டு வருஷம்
வரைக்கும் எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நாங்க வந்து
தீர்த்து வைப்போம்ன்னு..!

ராஜா அண்ணா இது நிதர்சனம். இப்போ பல வீடுகளில் பிரச்சினைக்கு தொலைக்காட்சியும் ஒரு காரணம். நன்றி அண்ணா.

பென்ஸ்
31-05-2007, 05:53 PM
ராஜா...
ஒருமுறை மருத்துவர் இளசுவை கிண்டலடித்து ஒரு கடியை பதித்தேன்...
அது அவரை புண்படுத்தியிருக்குமோ என்று அழித்துவிட்டு , தனிமடலில் மன்னிப்புகேட்டேன்...
அதற்க்கு அவர்...
"சீரியசான எந்த பிரச்சினையும், ஜோக்காய்தானே வெளிபடும்" என்றார்.... அது எத்தனை உண்மை அல்லவா???. உங்கள் ஜோக்குகள் ஒவ்வொன்றும் நான் சிரிப்பதற்க்கு காரணம், இது சீரியசான உண்மை என்பதால்தானே....!!!??

மனோஜ்
31-05-2007, 06:00 PM
சூப்பர் அண்ணா கடைசி

சுட்டிபையன்
01-06-2007, 12:54 PM
ஹிஹி உண்மையான சிரிப்புக்கள்....

அனுபவம் பேசுகிறது..........?

எதுக்கும் வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு எடுக்கத்தான் வேணும் போல இருக்கு

சக்தி
01-06-2007, 01:14 PM
ராஜா அவர்களே, ஒவ்வொன்றும் அருமையான ஜோக்குகள். நன்றி

ராஜா
01-06-2007, 05:29 PM
தொண்டன் 1 ; எங்க தலைவர் பெரிய ஜமீன் பரம்பரை..!

தொண்டன் 2 ; போடா.. எங்க தலைவர் பெரிய "ஜாமீன்" பரம்பரை..!
_________________

ஏண்டா தலைவர் இன்னும் சோகமா இருக்காரு..? அதான் மந்திரி
பதவி கொடுத்துட்டாங்களே..?

அரசாங்க அச்சகம்ன்னா பணம் அடிக்கிற எடம்ன்னு
நெனைச்சு கல்வித்துறையைக் கேட்டு வாங்கினாராம்..
இப்போதான் தெரிஞ்சதாம் அது பள்ளிக்கூட புத்தகம்
அச்சடிக்கிற இடம்ன்னு..!
_________________

எங்க கட்சியில நிறைய கோஷ்டி இருக்கறது உண்மைதான்..
அதுக்காக ஓரு கொள்ளை கோஷ்டி இருக்குன்னு பிரச்சாரம்
பண்றது ரொம்ப அநியாயம்.. அதெல்லாம் இருந்தா நாங்க ஏன்
இவ்வளவு கஷ்டப்படணும்..?
_________________

தலைவர் தெரியாத்தனமா மௌன விரதம் இருக்கற
நாள்ல பொதுக்குழுவைக் கூட்டிட்டார்.. பாரு.. அவரை
மேடையில வச்சுகிட்டே அவனவன் திட்டறானுக..! தலைவர்
பேய்முழி முழிக்கிறார்.. பாவம்..
_________________

ஹலோ.. தினப்புளுகு பத்திரிகையா..? எங்க தலைவர் சீரியஸா
இருக்கார் வாஸ்தவம்தான்.. அதுக்காக இப்பவே அவரோட
வாழ்க்கை வரலாறு வெளியிடறது ரொம்ப அநியாயம்ங்க..!
_________________

அமரன்
01-06-2007, 05:33 PM
ஏண்டா தலைவர் இன்னும் சோகமா இருக்காரு..? அதான் மந்திரி
பதவி கொடுத்துட்டாங்களே..?

அரசாங்க அச்சகம்ன்னா பணம் அடிக்கிற எடம்ன்னு
நெனைச்சு கல்வித்துறையைக் கேட்டு வாங்கினாராம்..
இப்போதான் தெரிஞ்சதாம் அது பள்ளிக்கூட புத்தகம்
அச்சடிக்கிற இடம்ன்னு..!

ராஜா அண்ணா இன்று என்னை அதிகம் கவர்ந்தது இதுதான். இது உண்மையும் கூட. பல மந்திரிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள். இதை மேலோட்டமாகப் படித்தால் நகைச்சுவை ஆழ்ந்து படித்தால் பல சுவை. நன்றி அண்ணா.
அன்புத்தம்பி

அக்னி
01-06-2007, 06:34 PM
அரசியல் ஜோக்குகள் அருமை...
ஆனால்,
அரசியலே ஜோக்காய் மாறுவதுதான் கவலை...

ஓவியா
01-06-2007, 07:32 PM
ராஜா அண்ணா, நகைசுவை அனைத்தும் அருமை.

அதுவும் ஜமீன் அண்ட் ஜாமீன். ஹி ஹி ஹி

சக்தி
01-06-2007, 08:04 PM
ராஜா அண்ணா அரசியல் ஜோக் அத்தனையும் தூள் ரகம்.

ராஜா
03-06-2007, 02:24 AM
நன்றி நண்பர்களே...!

சார்.. நீங்க நடிச்ச முதல் படமே வெற்றிப்படம் ஆயிடுச்ச்சே.. அடுத்த படம் எப்போ..?

அடுத்து கல்லூரி கட்டணும்.. கட்சி ஆரம்பிக்கணும்.தேர்தல்ல நிக்கணும்..
பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து சின்ன எம்ஜியார்ன்னு எழுதச் சொல்லணும்..
அப்புறம்தான் அடுத்த படம்...
_________________

நம்ம எம்.எல்.ஏ வை பொதுமக்கள் சேர்ந்து தாக்கிட்டாங்களாமே ..ஏன்..?

ரொம்பநாள் கழிச்சு தொகுதிக்குள்ள வந்தாரா..? மக்கள் அடையாளம் தெரியாம
புள்ள புடிக்கிறவன்னு நெனைச்சு பின்னி எடுத்துட்டாங்க..!
_________________

ஆபரேஷன் தியேட்டர்ல நர்ஸ் "வெற்றி..வெற்றின்னு கத்தறாங்களே..
பேஷண்ட் பொழைச்சுட்டாரா..?

இல்லே.. ஆபரேஷன் ஊத்திக்கும்ன்னு டாக்டர்கிட்ட நர்ஸ் பந்தயம்
கட்டினாங்களாம்..!
_________________

சார்.. உங்க பத்திரிகையில் "மணவாழ்க்கையில் வெற்றிபெறுவது எப்படி..?"ன்னு
ஒரு தொடர் வந்துச்சே.. ஏன் திடீர்ன்னு நின்னுடிச்சு..?

அதை எழுதறவருக்கும் அவர் மனைவீக்கும் விவாகரத்து வழக்கு நடந்துட்டு
இருக்கு. முடிச்சுட்டு வந்து தொடர்ந்து எழுதுவார்..!
_________________

நான் இன்னிக்கு உயிரோட இருக்கேன்னா போட்டோல இருக்கற இந்த டாக்டர்தான்
காரணம்..

வைத்தியம் பார்த்து பிழைக்க வச்சாரா..?

இல்லே.. பேஷண்ட் பிழைக்க மாட்டார்.. வைத்தியம் பார்க்க முடியாது.. வீட்டுக்குத்
தூக்கிட்டுப் போங்கன்னு சொல்லி அனுப்பிட்டாரு..!

அமரன்
03-06-2007, 01:29 PM
சார்.. நீங்க நடிச்ச முதல் படமே வெற்றிப்படம் ஆயிடுச்ச்சே.. அடுத்த படம் எப்போ..?

அடுத்து கல்லூரி கட்டணும்.. கட்சி ஆரம்பிக்கணும்.தேர்தல்ல நிக்கணும்..
பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து சின்ன எம்ஜியார்ன்னு எழுதச் சொல்லணும்..
அப்புறம்தான் அடுத்த படம்...

கலக்கிட்டீங்கண்ணா. எப்படி உங்களால் மட்டும் முடிகின்றது. எனக்குச் சிரிக்க மட்டும்தான் வருகின்றது.

ராஜா
03-06-2007, 05:54 PM
நன்றி நண்பர்களே..!

வாங்க.. அடுத்த பக்கம் போவோம்..!

அமரன்
03-06-2007, 05:59 PM
நன்றி நண்பர்களே..!

வாங்க.. அடுத்த பக்கம் போவோம்..!
காத்திட்டு இருக்கோம்ல சார்.:sport-smiley-007: :sport-smiley-007: :sport-smiley-007:

ராஜா
03-06-2007, 05:59 PM
மிஸ்டர் மொக்கை சிறையில் இருந்தார்.. சக கைதி கேட்டார்..

எப்படி போலீசில் மாட்டினே..?

சின்ன டெக்னிக்கல் தவறு..நான் சிக்கிக்கொண்டேன்...

அப்படி என்ன தவறு..?

கடத்திய பயணிகளை விடுவிக்க 2 கோடி பணமும் ஒரு
பாராசூட்டும் கேட்டேன்..

நல்ல திட்டம் தானே..! எங்கு த்வறு நேர்ந்தது..?

கப்பலில் இருந்து பாராசூட்டில் த்ப்பிக்க முடியலை.. மாட்டிக்கிட்டேன்..!
_________________

மொக்கை ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைக்கு
சேர்ந்தார்.. முதல்நாளே பெரிய ஆர்டர் கிடைத்தது.. ஆனால்
அவருக்கு மகிழ்ச்சி இல்லை..ஏன் தெரியுமா..?

அவருக்கு கிடைத்தது "டிஸ்மிசல் ஆர்டர்..!"
_________________

ரேஷன் கடையில் பெரிய கியூ. மொக்கை குறுக்கே புகுந்து
முன்னே செல்ல முயன்றார்.. ஆனால் மக்கள் விடவில்லை..
கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளினார்கள்.. இரண்டு மூன்று
முறை இவ்வாறு நடந்தது.. கடைசியில் வெறுத்துப் போன
மொக்கை கத்தினார்..

இன்னும் ஒருதடவை என்னை தள்ளி விட்டா அப்புறம் நான்
ரேஷன் கடையைத் திறக்கவே மாட்டேன்.. நாள்பூரா நீங்க
நின்னுகிட்டே இருக்க வேண்டியதுதான்..!
_________________

மொக்கை ஒரு சங்கீத வித்வான்.. என்றாலும் அவர் முன்னுக்கு
வரவே இயலவில்லை.. இரண்டு விஷயங்கள் தடையாக இருந்தன..

ஒன்று குரல், இரண்டாவது ராகம்...!
_________________

மொக்கை தினமும் பேப்பரில் மரண அறிவிப்பு வரி விளம்பரங்களை படிப்பார்..
நீண்ட நாளாக அவருக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி
சாகிறவர்கள் எல்லாம் அகர வரிசைப்படியே சாகிறார்கள் என்று...!
_________________

அமரன்
03-06-2007, 06:02 PM
மொக்கை ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைக்கு
சேர்ந்தார்.. முதல்நாளே பெரிய ஆர்டர் கிடைத்தது.. ஆனால்
அவருக்கு மகிழ்ச்சி இல்லை..ஏன் தெரியுமா..?

அவருக்கு கிடைத்தது "டிஸ்மிசல் ஆர்டர்..!"
-------------------------------------------
மொக்கை தினமும் பேப்பரில் மரண அறிவிப்பு வரி விளம்பரங்களை படிப்பார்..
நீண்ட நாளாக அவருக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி
சாகிறவர்கள் எல்லாம் அகர வரிசைப்படியே சாகிறார்கள் என்று...!
_________________

முதல் நகைச்சுவையில் கடிச்சிட்டீங்க ராஜா. அடுத்த நகைச்சுவையில் மொக்கையின் அறிவு கண்ணைக்கூச வைக்குதுசார். ம்...ம்...உங்க தர்ப்பார் கம்பீரமாகத்தான் இருக்கு. தொடருங்கள்.

ராஜா
05-06-2007, 05:13 AM
மிஸ்டர் மொக்கை சம்பந்தப்பட்ட கேள்வி- பதில்கள்..
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

1) நண்பன் ; இது உன் நாயா மொக்கை..? பேர் என்ன..?

மொக்கை ; தெரியல.. அது இன்னும் என்கிட்ட தன் பேரைச்
சொல்லல..
_______________________________________________

2) மொக்கை ; உன் பேண்டில் ஓட்டைகள் இருக்கா..?

நண்பன் ; இல்லையே..

மொக்கை ; உன் கால்கள் வெளியே தெரியுதே.. எப்படி..?
_______________________________________________

3) மொக்கை ; காலையில் பல் வலிக்குதுன்னு டாக்டர்ட்ட
போனேன்..

நண்பன் ; இப்போவும் அந்தப் பல்லு வலிக்குதா..?

மொக்கை ; தெரியாது.. இப்போ அந்த பல்லு டாக்டர்ட்ட
இருக்கு..!
_______________________________________________

4) மொக்கை ; உன் பிறந்தநாளுக்கு கண்டிப்பாக உன்க்கு
ஒன்று கிடைக்கும்..

நண்பன் ; என்ன அது..?

மொக்கை ; கூடுதலாக ஒரு வயது..!
_______________________________________________

5) மொக்கை ; நானும் மனைவியும் சண்டை போட்டால்
ஒரே வார்த்தைதான் சொல்வேன்.. பெட்டிப்பாம்பாகி
விடுவாள்..

நண்பன் ; என்னது..?

மொக்கை ; மன்னிச்சுடு..மல்லிகா !
_______________________________________________

6) சலூன் கடைக்காரர் ; எப்படி சார் முடி வெட்ட வேண்டும்..?

மொக்கை ; காசு வாங்கிக்காமல்..!
_______________________________________________

7) அதிகாரி ; 5 பேர் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில்
செய்தால் 10 பேர் எத்தனை நாட்களில் செய்வார்கள்..?

மொக்கை ; தேவையிருக்காது.. ஏற்கனவே 5 பேர் அந்த
வேலையை செய்து விட்டார்களே..!
_______________________________________________

8) நண்பன் ; நேற்று நீ மரண அறிவிப்பு பார்ப்பதைப்பற்றி
ஒரு ஜோக் போட்டிருந்தார்களே..ஏன் அதையெல்லாம்
பார்க்கிறாய்..?

மொக்கை ; நான் உயிரோடு இருப்பதை எப்படி தெரிந்து
கொள்வது..?
_______________________________________________

9) மனைவி ; நமக்கு திருமணமாகி 24 மணி நேரம் ஆயிடுச்சு..

மொக்கை ; அப்படியா..? நேத்துதான் ஆனது போல இருக்கு..!
_______________________________________________

10) மொக்கை ; முதலாளி.. உங்க முகத்தில வாய், மூக்கு
எல்லாம் எங்கெங்கே இருக்குன்னு தெரியுமா..?

முதலாளி ; தெரியுமே.. ஏன் கேட்கிறாய்..?

மொக்கை ; நல்லதாப் போச்சு.. நீங்க ஷேவிங்
பண்ணிக்கற கண்ணாடியை உடைச்சுட்டேன்..!
_______________________________________________

ஓவியன்
05-06-2007, 05:45 AM
அண்ணா மொக்கையின் அறிவு பூர்வமான சிந்தனைகள்!

தூள்!!!!!:icon_clap:

மொக்கை அப்படியே நம்ம அன்புரசிகன் மாதிரிலே யோசிக்கிறார்.:icon_shades:

ஷீ-நிசி
05-06-2007, 06:02 AM
ரேஷன் கடையில் பெரிய கியூ. மொக்கை குறுக்கே புகுந்து
முன்னே செல்ல முயன்றார்.. ஆனால் மக்கள் விடவில்லை..
கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளினார்கள்.. இரண்டு மூன்று
முறை இவ்வாறு நடந்தது.. கடைசியில் வெறுத்துப் போன
மொக்கை கத்தினார்..

இன்னும் ஒருதடவை என்னை தள்ளி விட்டா அப்புறம் நான்
ரேஷன் கடையைத் திறக்கவே மாட்டேன்.. நாள்பூரா நீங்க
நின்னுகிட்டே இருக்க வேண்டியதுதான்..!

மொக்கை பாவம்யா... உண்மையிலேயே இதுபோல ரேஷன் ஊழியர்களுக்கு நடந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.....

அமரன்
05-06-2007, 07:09 AM
வ்வொரு நாளும் புதுசு உதுசாக நகைச்சுவை தரும் ராஜாவுக்கு நன்றிகள். .இன்றைய சுவை எல்லாமே தூள்.

அறிஞர்
05-06-2007, 12:23 PM
இன்னும் ஒருதடவை என்னை தள்ளி விட்டா அப்புறம் நான்
ரேஷன் கடையைத் திறக்கவே மாட்டேன்.. நாள்பூரா நீங்க
நின்னுகிட்டே இருக்க வேண்டியதுதான்..!

ஒரு போர்டை கழுத்தில் மாட்டி சென்றிருந்தால் இந்த வம்பு வந்திருக்காதே...

மிஸ்டர் மொக்கை சம்பந்தப்பட்ட கேள்வி- பதில்கள்..

2) மொக்கை ; உன் பேண்டில் ஓட்டைகள் இருக்கா..?

நண்பன் ; இல்லையே..

மொக்கை ; உன் கால்கள் வெளியே தெரியுதே.. எப்படி..?
_______________________________________________
ஒவ்வொரு கேள்வியும்... மொக்கையின் அறிவை வெளிப்படுத்துகிறது....

பேண்ட்.. ஹிஹிஹிஹிஹி...

சபாஷ் ராஜா... :icon_08: :icon_08: :icon_08: :icon_08:

ராஜா
05-06-2007, 04:33 PM
மொக்கையை அழைத்துக் கொண்டு அவர் மனைவி டாக்டரிடம் சென்றார்...

மனைவி ; டாக்டர்.. இவருக்கு பெரிய கட்டி வந்திருக்கு..
ஆபரேஷன் பண்ணலாமா பாருங்க..

டாக்டர் ; கழுத்துக்கு மேல இருக்கே.. அதான் யோசனையா
இருக்கு...

மனைவி ; ஐயோ டாக்டர்.. அது அவர் முகம்.. கட்டி
முதுகில இருக்கு..!
_______________________________________________

மொக்கை மனைவி ; என் கணவர் எப்போதும் ரெண்டு
பேரோட சேர்ந்துதான் குடிக்கப் போவார்..

பக்கத்து வீட்டுக்காரி ; ஏன் அப்படி.. அவ்வளவு தாராளமா..?

மொ.மனைவி ; அதெல்லாம் இல்ல.. முகர்ந்து பார்த்ததுமே
மூதேவி மூர்ச்சையாகி விழுந்துடும்.. வீட்டுக்கு அள்ளிகிட்டு
வர ஆள் வேணுமே..!
_______________________________________________

மொக்கை மனைவி ; இருந்தாலும் இவர் மோசம்டி..
தலை முடி வெட்டிக்கப் போனா இவருக்கு மட்டும்
டபிள் சார்ஜ் வாங்குவாங்க..

பக்கத்து வீட்டுக்காரி ; ஏன் அப்படி.. அவ்வளவு முடி
வச்சிருப்பாரா..?

மொ மனைவி ; அதெல்லாமில்ல.. இவருக்கு ரெட்டை மண்டை..!
_______________________________________________

பக்கத்து வீட்டுக்காரி ; என்னடி சொல்றே..? உன்
வீட்டுக்காரருக்கு தானா எதுவும் வராதா..?

மொ.மனைவி ; அப்படியும் சொல்ல முடியாது.. அவருக்கு
தானா வர்றது மீசையும் தாடியும்தான்..
_______________________________________________

மொக்கை மனைவி ; என் கணவர் ரொம்ப மோசம்.
.அவருக்கு மறுபிறவியில அசாத்திய நம்பிக்கை..

பக்கத்து வீட்டுக்காரி ; ரொம்பப் பேரு அப்படித்தான்..
இதில கவலைப்பட என்ன இருக்கு..?

மொ.மனைவி ; உயிலைக்கூட தன் பேருக்கே எழுதி
வச்சிருக்காருடி..!
_______________________________________________

சக்தி
05-06-2007, 04:51 PM
யப்பா! இப்பதான் கொஞ்சம் பிரியா இருக்கற மாதிரி தோணுது. ரொம்ப நன்றி ராஜா அண்ணா

அமரன்
05-06-2007, 04:58 PM
ஒவ்வொன்றும் அருமை ராஜா! நன்றி.

நியா
06-06-2007, 01:26 AM
5) மொக்கை ; நானும் மனைவியும் சண்டை போட்டால்
ஒரே வார்த்தைதான் சொல்வேன்.. பெட்டிப்பாம்பாகி
விடுவாள்..

நண்பன் ; என்னது..?

மொக்கை ; மன்னிச்சுடு..மல்லிகா !
_

ரசித்தேன்...

"நீ சொல்லுவது மட்டும் தான் சரி என்றாலும் அடங்கிடுவோம்", சில உண்மைகள் :nature-smiley-008:

ஓவியா
06-06-2007, 02:29 PM
சூப்பர் ஜோக். நல்லவே சிரித்தேன். நன்றி நன்றி நன்றி.

ராஜா
06-06-2007, 04:13 PM
நல்ல மழைக்காலம்..

மாசி ; உங்க குடையை இங்கே வச்சிட்டுப் போங்க..

சுசி ; நான் குடை எடுத்துட்டு வரலியே..

மாசி ; அப்போ நீங்க முதலாளியைப் பார்க்க முடியாது. குடையை
இங்கே வச்சுட்டு வர்றவங்க்ளைத்தான் உள்ளே விடச் சொல்லியிருக்கார்..!
_________________

சுசி ; என்ன மாசி.. ஏதாவது ஜோக் சொன்னியா இப்போ..?

மாசி ; அட.. ஆமாம்.. உனக்கு எப்படித் தெரியும்..?

சுசி ; எல்லாரும் பேயறைஞ்சது போல இருக்காங்களே..
அதை வச்சுத்தான்..!
_________________

மாசி ; இப்போ உன் மனைவி பிறந்த நாளுக்கு 50000 ரூபாய்
செக் கொடுத்தியே.. அதைப் பார்த்துட்டு தாங்க முடியாம
சிரிச்சாரே ஒருத்தர்.. யாரு சுசி அது..?

சுசி ; ஓ அவரா.. நான் அவர் மேனேஜரா இருக்கும்
வங்கியிலதான் கணக்கு வச்சிருக்கேன்..!
_________________

மாசி ; உன் ரெண்டு காதலிகளும் உணவில் விஷம்
இருந்ததால் இறந்துட்டாங்க.. சரி.. மூன்றாவது காதலி
மலை உச்சியில் இருந்து விழுந்து இறந்துட்டாளே.. அது எப்படி..?

சுசி ; விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட மறுத்ததால்..!
_________________

சுசி ; நான் 13 வருஷமா வயலின் க்த்துகிட்டேன் மாசி.. நேற்றுதான்...

மாசி ; என்ன அரங்கேற்றம் நடந்துச்சா..?

சுசி ; இல்லே.. நேற்றுதான் வயலினை வாயில வச்சு
ஊதக்கூடாதுன்னு தெரிஞ்சிகிட்டேன்..!
_________________

ஓவியா
06-06-2007, 04:18 PM
வயலின் அஹஹ்ஹஹஹ்.

நன்றி பெஸ்ட் ஃபடி அண்ணா.

அமரன்
06-06-2007, 04:26 PM
வயலின் காமெடி, மனைவிக்கு பிறந்தநாள் பரிசுகாமெடி இரண்டும் சூப்பர். நன்றி ராஜா!

ராஜா
07-06-2007, 04:34 PM
டயரடக்கர் ; மேடம் சீரான உடலமைப்பு என்பதைத்
தப்பா புரிஞ்சிகிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. 45-45-45 ங்கற
அளவுள்ள உங்களை ஹீரோயினா நடிக்க வைக்க எப்படி முடியும்..?
_________________

டிரைவர் ; மேடம்.. ரொம்பக் கஷ்டப்படறீங்களே .கார்
கண்ணாடியை இறக்கி விடட்டுமா..?

நடிகை ; வேண்டாம்.. வேண்டாம்.. அப்புறம் நம்பக் காரில்
ஏ.சி. இல்லாதது தெரிஞ்சுடும்..!
_________________

நடிகை பியூலாஸ்ரீ தன் திருமணத்துக்கு அழைப்பு கொடுத்தாள்.. அப்போது..

டயரடக்கர் ; 40 வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கறீங்களே..
"லேட்" மேரேஜா..?

நடிகை ; லேட்டஸ்ட் மேரேஜ்..!
_________________

பரிட்சை ஹாலில் வினாத்தாளை பார்த்து விழித்துக்கொண்டிருக்க
ஆசிரியர் கேட்டார்..

என்ன .. கேள்வி புரியலையா..?

புரியுது சார்.. பதில்தான் எந்தப் பாக்கெட்டில் வச்சிருக்கேன்னு புரியலை..
_________________

சுசியிடம் மாசி சொன்னார்..

மாசி ; என்மேல கோபம்.. என் மனைவி சட்டையைத்
துவைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க..

சுசி ; என் மனைவி அப்படிச் சொல்றதில்லே.. ஆனா கோபமா
இருந்தா வேற மாதிரி துவைப்பாங்க..

மாசி ; வேற மாதிரியா..? எப்படி..?

சுசி ; நான் சட்டையை போட்டிருக்கும்போதே
துவைக்க ஆரம்பிச்சுடுவாங்க..!
_________________

ராஜா
08-06-2007, 06:20 PM
தொண்டன் 1 ; ஏண்ணே.. நம்ம தலைவர் மலச்சிக்கலில் அவதிப்படறாரோ..?

தொண்டன் 2 ; ஏன் அப்படிக் கேட்கிறே..?

தொண்டன் 1 ; இன்று முக்கிய பேட்டி தர்றதா நிருபர்களை
வரச் சொல்லியிருக்காரே..!
_________________

தொண்டன் 1 ; என்ன இருந்தாலும் பணம் சம்பாதிக்கறதில
நம்ப தலைவரை அடிச்சுக்க முடியாது..

தொண்டன் 2 ; எப்படிச் சொல்றே..?

தொண்டன் 1 ; நேத்து 10 பேர்கிட்ட பிளேன்ல கண்டக்டர்
வேலை வாங்கித் தரேன்னு சொல்லி பணம் கறந்துட்டாரே..!
_________________

திருடன் ; நான் 3 கொலை பண்ணினவன்.. ஒழுங்கா பீரோ
சாவியக் கொடு..

டாக்டர் ; நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்.. ஒழுங்கா
ஓடிப் போயிடு..!
_________________

டாக்டர் ; நடக்கக் கூட முடியாம வந்தாரே ஒரு பேஷண்ட்...
இப்போ எப்படி இருக்கார்..?

நர்ஸ் ; வர்றியா.. ஓடிப் போகலாம்ன்னு என்னைப் பார்த்து
கேட்கிற அளவுக்கு தேறிட்டார் டாக்டர்..!
_________________

விருந்தாளி ; வாசல் வரை வந்து வழியனுப்பறது ரொம்ப
சந்தோஷமா இருக்குங்க..

வீட்டுக்காரர் ; நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்
நம்ப முடியலீங்க..!
_________________

அமரன்
08-06-2007, 06:22 PM
இந்த நாள் எனக்கு இனிய நாள்.
தமிழ்ச்சுவையுடன் நகைச்சுவையும் தந்தீட்ட திருநாள்.
நன்றி ராஜா.

ஓவியா
08-06-2007, 07:18 PM
அனைத்தும் சூப்பர் ஜோக்

நன்றி அண்ணா.

கலைவேந்தன்
08-06-2007, 07:37 PM
கலக்குறீங்க ராஜா அண்ணா!

ராஜா
09-06-2007, 05:22 PM
நன்றி அமர் மற்றும் கலை...
-----------------------------------------------------------

டயரடக்கர் ; நம்ம படத்துல ஒரு திருடனை அப்பா நடிகராப்
போட்டது தப்பா போச்சு..

தயாரிப்பாளர் ; ஏன்.. என்ன சொல்றான்..?

டயரடக்கர் ; கதாநாயகி கன்னத்துல கன்னம் வச்சே தீருவேன் என்கிறான்..!
_________________

மொக்ஸ் ; எங்க தெருவில் எனக்கு எதிரிங்க நிறைய இருப்பாங்க
போல..

நண்பர் ; ஏன் அப்படி சொல்றே..?

மொக்ஸ் ; என் மனைவி காணாமல் போனதும் அவ படத்தை
அவங்க செலவிலேயே பத்திரிகையில் போட்டு கண்டுபிடிச்சு
கூட்டி வந்துட்டாங்களே..!
_________________

கல்யாண வீட்டில் இருவர்...

ஹலோ.. அது நான் பார்த்து வச்சிருக்கற செருப்பு.. கழட்டுங்க..

அடப்பாவி.. இது என் சொந்த செருப்புய்யா..!
_________________

டேனி ; சின்னா.. கழுகு, மனிதன்.. ரெண்டுக்கும் ஒரு ஒற்றுமை
இருக்கு.. என்ன சொல்லு பார்ப்போம்..

சின்னா ; ரெண்டுமே ரஜினி நடிச்சது சார்..!
_________________

கணவன் ; மாமியாரும் மருமகளும் சொல்ல சொல்ல கேட்காம
ரோட்டுல குடுமியைப் பிடிச்சி அடிச்சிகிட்டீங்க.. இப்போ
குடும்ப ரகசியம் எல்லாம் வெளியே போச்சேன்னு வருத்தப் படறீங்களா..?

மனைவி ; அதுக்கு கூட வருத்தப் படலீங்க.. ரெண்டு பேருக்குமே
சவுரி முடிங்கறதை பக்கத்து வீட்டு கடன்காரி பாத்து
தொலைச்சிட்டா.. இல்லே அத்தை..?
_________________

ஓவியா
09-06-2007, 05:41 PM
கழுகு மனிதன் 'நச்'

நன்றி.

ராஜா
11-06-2007, 05:46 PM
உதவி ஆசிரியர் ; சார்.. மர்மக்கதை ஆசிரியர் மாடுசாமி
தன்னோட தொடர்கதை முடிவை நம்மையே எழுதிக்கச் சொல்றாரு..

பத்திரிகை ஆசிரியர் ; ஏன்யா அப்படி..?

உதவி ஆசிரியர் ; ஓவரா சஸ்பென்ஸ் வச்சுட்டாராம்.. இப்போ அவராலேயே கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க முடியலையாம்...!
_________________

நர்சம்மா.. உங்க க்ளினிக் ல டீவி வச்சிருக்கீங்களே.. டாக்டர்
வர்ற வரைக்கும் நோயாளிகள் பார்க்கறதுக்குதானே..?

இல்லே.. நோயாளிகள் வரும்வரை டாக்டர் பார்க்கறதுக்கு..!
_________________

பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை தனியா கூப்பிட்டு
பேசினப்போ " நான் அந்த மாதிரி பொண்ணு இல்லே..
தப்பா பேசாதீங்க.." ன்னு சொன்னியே.. அப்படி என்னடி கேட்டார் ..?

சமைக்கத் தெரியுமான்னு கேட்டார்டி..!
_________________

ஆனாலும் உங்க ஆபீஸ் மேனேஜர் ரொம்ப கொயட்..
வர்றதும் தெரியல.. போறதும் தெரியல..

எல்லா ஸ்டாஃப் கிட்டேயும் அவ்வளவு கடன் வாங்கியிருக்காரு..!
_________________

ரொம்ப அதிகமா காட்டுதேன்னு எடை பார்க்கும் மெஷினல
ரெண்டாவது தடவை ஏறி நின்னது தப்பாப் போச்சுடி..!

ஏன்.. கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா..?

இல்லேடி.. வீணா என்னை சந்தேகப்படாதே.. திங்கிற தீனியைக்
குறைன்னு கார்டு அனுப்புதுடி சனியன்..!
_________________

ராஜா
12-06-2007, 05:46 PM
அந்த நடிகை இடுப்புல குடம், தலையில அண்டா.. கையில சொம்பு.. இதெல்லாம் வச்சுகிட்டு போஸ் கொடுத்திருக்காங்களே.. எதுக்காம்..?

எந்த பாத்திரத்தையும் தாங்கி நடிக்கத் தயார்ன்னு சிம்பாலிக்'கா காட்டுறாங்களாம்..!
_________________

என்னங்க.. கலப்புத் திருமணத்துல கலந்துக்கறதா சொல்லிட்டு போனீங்க.. சட்டையை எல்லாம் கிழிச்சுகிட்டு வந்திருக்கீங்க..?

கை கலப்புத் திருமணமா போயிருச்சுடி..!
_________________

வீட்டுல சாப்பிடும் போது கூட என் ப்ருஷனுக்கு ஆபீஸ் நெனைப்புதாண்டி..

என்ன சொல்றாரு..?

உப்பு வேணும்ன்னா கூட டைனிங் டேபிளுக்கு கீழே கையை நீட்டறார்டி..!
_________________

அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!

குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?

இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
_________________

எதிர் அணி பயிற்சியாளர் வெறியோட விளையாடுங்கன்னு சொல்லி அனுப்பிருப்பாருன்னு நினைக்கிறேன்..

எப்படி சொல்றே..

அந்த கேப்டன் டாஸ் போட சுண்டுன காசு கீழ வர 10 நிமிஷம் ஆச்சு..!
_________________

aren
12-06-2007, 06:03 PM
_________________

நர்சம்மா.. உங்க க்ளினிக் ல டீவி வச்சிருக்கீங்களே.. டாக்டர்
வர்ற வரைக்கும் நோயாளிகள் பார்க்கறதுக்குதானே..?

இல்லே.. நோயாளிகள் வரும்வரை டாக்டர் பார்க்கறதுக்கு..!

_________________

நல்ல ஜோக்.

அமரன்
12-06-2007, 06:39 PM
யாரங்கே...சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டால் என்பதை சிரிக்கவைத்து எம்மை சிறையிலிட்டார் என மாற்றிவிடுங்கள்.

அறிஞர்
13-06-2007, 02:29 PM
கல்யாண வீட்டில் இருவர்...

ஹலோ.. அது நான் பார்த்து வச்சிருக்கற செருப்பு.. கழட்டுங்க..

அடப்பாவி.. இது என் சொந்த செருப்புய்யா..!
__
சொந்த செருப்புக்கே போட்டியா.... ஹிஹிஹீ

ரொம்ப அதிகமா காட்டுதேன்னு எடை பார்க்கும் மெஷினல
ரெண்டாவது தடவை ஏறி நின்னது தப்பாப் போச்சுடி..!

ஏன்.. கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா..?

இல்லேடி.. வீணா என்னை சந்தேகப்படாதே.. திங்கிற தீனியைக்
குறைன்னு கார்டு அனுப்புதுடி சனியன்..!
_________________
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... எடை மிஷினில் ஏறினது.. பென்ஸா...

அந்த நடிகை இடுப்புல குடம், தலையில அண்டா.. கையில சொம்பு.. இதெல்லாம் வச்சுகிட்டு போஸ் கொடுத்திருக்காங்களே.. எதுக்காம்..?

எந்த பாத்திரத்தையும் தாங்கி நடிக்கத் தயார்ன்னு சிம்பாலிக்'கா காட்டுறாங்களாம்..!
_________________

என்னங்க.. கலப்புத் திருமணத்துல கலந்துக்கறதா சொல்லிட்டு போனீங்க.. சட்டையை எல்லாம் கிழிச்சுகிட்டு வந்திருக்கீங்க..?

கை கலப்புத் திருமணமா போயிருச்சுடி..!

வாயில சொன்னா கேட்க மாட்டாங்க.... அதான் சிம்பாலிக்கா புது முயற்சி.......

கைகலப்பு திருமணத்துல சகஜம் தானே

ராஜா
13-06-2007, 02:48 PM
என்ன அறிஞரே..!

ஃபுல் ஃபார்ம்ல இருக்காப்புல தெரியுது..? நடக்கட்டும்.. நடக்கட்டும்..!

அறிஞர்
13-06-2007, 02:50 PM
என்ன அறிஞரே..!

ஃபுல் ஃபார்ம்ல இருக்காப்புல தெரியுது..? நடக்கட்டும்.. நடக்கட்டும்..!
உங்க பதிவை பார்த்தா ஃபுல்லா மாறிடவேண்டியதுதான்...

ராஜா
13-06-2007, 03:55 PM
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?

சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
_________________

இருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்வளவு ஜொள்ளு ஆகாது..

ஏம்பா.. என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு "கையில்லாத இலவச நைட்டி வழங்கும் திட்டம்" அறிவிச்சுருக்காரே..!
_________________

எதுக்கு தலைவரே.. மூனாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக் காலில் நிற்கறீங்க..?

ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றமாமே..!
_________________

தயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..

கதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..

தயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..!
_________________

namsec
13-06-2007, 03:59 PM
அருமையாம கடி பாராட்டுக்கள்

அக்னி
13-06-2007, 04:13 PM
உங்க பதிவை பார்த்தா ஃபுல்லா மாறிடவேண்டியதுதான்...
ஆமா... வாசிச்சு வாசிச்சு :music-smiley-010: :music-smiley-010: :music-smiley-010: தாங்க முடியாம போய் எங்கயாவது முட்டிக்க வேண்டியதுதான்....

அறிஞர்
14-06-2007, 03:56 PM
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?

சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
ஹிஹிஹி காதல் மீது அவ்வளவு நம்பிக்கையா...

ரவுசுகள்.. தொடரட்டும் அண்ணா...

சாராகுமார்
14-06-2007, 04:42 PM
ராஜா நகைச்சுவையின் ராஜா.அனைத்தும் அருமை.படிக்க இனிமை.மனதிற்கு குளுமை.ஏடிஎம் பெண் சுவை.நன்றி.

அமரன்
14-06-2007, 04:45 PM
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?

சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
_________________

அவர் அனுப்பிய படைப்புகளும் திரும்பி வந்திருக்கும் போலும்.

ஷீ-நிசி
14-06-2007, 05:12 PM
தயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..

கதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..

தயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..!

ஹி ஹி! அது 'சிவாஜி' படத்தோட கதை இல்லையே!

ராஜா
14-06-2007, 05:38 PM
என்னது..? உன் பெயர் ஜெயராஜ் விஜய்சன்னா..? அப்படின்னா..?

எங்க அம்மா அப்பா ரெண்டு பேருமே சீரியல் நடிகர்கள்.. அதான் இப்படிப் பேர் வச்சுட்டாங்க..!
_________________

என்ன இருந்தாலும் நம்ம பாகவதருக்கு இவ்வளவு குசும்பு ஆகாது..

ஏன்.. என்ன பண்ணினார்..?

தன்யாசி ராகத்துக்கும், சுத்த தன்யாசி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்ன்னு கேட்டேன். குளிக்காமப் பாடினா தன்யாசி குளிச்சுட்டுப் பாடினா சுத்த தன்யாசிங்கறார்..
_________________

உங்க நாய் கழுத்துல தாயத்து கட்டியிருக்கீங்களே.. ஏன்..?

ஹி..ஹி.. திருடனைப் பார்த்து பயப்படாம இருக்கத்தான்...!
_________________

டாக்டர்.. என்னால ஒரு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல..

என்னாலயும் முடியாது.. புட்டு புட்டு சாப்பிடுங்க.. போங்க..!
_________________

எதுக்கு உன் மனைவி படத்தை ஸ்கூட்டர்ல ஒட்டி வச்சிருக்கே..?

கொஞ்சம் ஸ்டார்ட்டிங் ட்ரபுள்.. அவ படத்தைப் பார்த்துகிட்டே உதைச்சாதான் கிளம்புது..!
_________________

கலைவேந்தன்
14-06-2007, 07:48 PM
அருமை ராஜா அவர்களே

ராஜா
15-06-2007, 04:31 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
15-06-2007, 04:34 PM
தலைவர் ஏன் மண்டையைப் பிய்ச்சுகிட்டு யோசிக்கறார்..?

மனைவியோட ஆஜராகச் சொல்லி கோர்ட்லேருந்து சம்மன் வந்திருக்குதாம்..

அதுக்கென்ன இப்போ..?

எந்த மனைவியோட போய் ஆஜராகறதுன்னுதான்..!
_________________

நான் என் மனைவியை அடி கண்ணம்மான்னு கூப்பிடறதை விட்டுட்டேன்..

ஏன்.. மரியாதையா..?

அதெல்லாமில்ல.. அந்த வார்த்தையைச் சொன்னவுடனே சுளுக்கு எடுத்துடறாங்க..!
_________________

டாக்டர் சார்.. கொஞ்ச நாளாவே யாரோ எனக்கு போன் பண்ணி பேசறது போலவே தோணுது.. கவலையா இருக்கு..

அதுக்கு நீங்க ஏன் சார் கவலைப்படறீங்க.. பில் அவங்கதானே கட்டப் போறாங்க..?
_________________

உங்க வீட்டைக் கோவில் போல வச்சிருக்கீங்க.. நல்ல விஷயம்தான்.. ஆனா அதுக்காக வாசலில் உண்டியல் வச்சு வர்றவங்களைக் காசு போடச் சொல்லறது அநியாயமுங்க..!
_________________

நகர சபை தொழிலாளி அதிகாரியிடம்..

சார்.. எவ்வளவு மருந்து கொடுத்தும் இந்த நாயெல்லாம் சாகவே மாட்டேங்குதுங்க..

என்ன பண்ணலாம் குப்பா..?

வேற வழியில்ல.. உங்க டிபன் பாக்சைத் திறங்க.. அம்மா சாப்பாடு கொடுத்து விட்டுருக்காங்க தானே..?
_________________

மனோஜ்
15-06-2007, 04:57 PM
என்னது..? உன் பெயர் ஜெயராஜ் விஜய்சன்னா..? அப்படின்னா..?

எங்க அம்மா அப்பா ரெண்டு பேருமே சீரியல் நடிகர்கள்.. அதான் இப்படிப் பேர் வச்சுட்டாங்க..!
இது சரியாக புரியவில்லை
மற்றவை அனைத்தும் கலக்கல் அண்ணா

அறிஞர்
15-06-2007, 05:02 PM
எதுக்கு உன் மனைவி படத்தை ஸ்கூட்டர்ல ஒட்டி வச்சிருக்கே..?

கொஞ்சம் ஸ்டார்ட்டிங் ட்ரபுள்.. அவ படத்தைப் பார்த்துகிட்டே உதைச்சாதான் கிளம்புது..!
_________________ ஹிஹிஹி பலருக்கு பிரயோஜனப்படும் தகவல்... :icon_shok: :icon_shok:

ராஜா
15-06-2007, 05:04 PM
இது சரியாக புரியவில்லை
மற்றவை அனைத்தும் கலக்கல் அண்ணா

தம்பி..

பெற்றோர் டீ.வி. சீரியலில் நடிக்கறதுனாலே ஜெயா, ராஜ், விஜய், சன் எல்லா சானல் பேரும் சேர்த்து பையனுக்கு வச்சிருக்காங்க..!

அமரன்
15-06-2007, 05:06 PM
தம்பி..

பெற்றோர் டீ.வி. சீரியலில் நடிக்கறதுனாலே ஜெயா, ராஜ், விஜய், சன் எல்லா சானல் பேரும் சேர்த்து பையனுக்கு வச்சிருக்காங்க..!
சீரியல் பெயர்களை வைக்காது விட்டாங்களே...

மனோஜ்
15-06-2007, 05:21 PM
தம்பி..

பெற்றோர் டீ.வி. சீரியலில் நடிக்கறதுனாலே ஜெயா, ராஜ், விஜய், சன் எல்லா சானல் பேரும் சேர்த்து பையனுக்கு வச்சிருக்காங்க..!

மிக்க நன்றி அண்ணா :grin: :grin: :grin: ::icon_shok: grin: :grin: :grin: :grin:

அக்னி
15-06-2007, 05:36 PM
எதுக்கு உன் மனைவி படத்தை ஸ்கூட்டர்ல ஒட்டி வச்சிருக்கே..?

கொஞ்சம் ஸ்டார்ட்டிங் ட்ரபுள்.. அவ படத்தைப் பார்த்துகிட்டே உதைச்சாதான் கிளம்புது..!

ஒரு ஸ்கூட்டி வாங்கி பிடிக்காதவங்க படத்தை எல்லாம் ஒட்டி வைக்கத்தான் இருக்கு...

பென்ஸ்
15-06-2007, 05:45 PM
நான் என் மனைவியை அடி கண்ணம்மான்னு கூப்பிடறதை விட்டுட்டேன்..

ஏன்.. மரியாதையா..?

அதெல்லாமில்ல.. அந்த வார்த்தையைச் சொன்னவுடனே சுளுக்கு எடுத்துடறாங்க..!
_________________
சொல் பேச்சு கேக்குற பொண்டாட்டி போல...:4_1_8: :4_1_8:

இளசு
15-06-2007, 09:28 PM
நர்சம்மா.. உங்க க்ளினிக் ல டீவி வச்சிருக்கீங்களே.. டாக்டர்
வர்ற வரைக்கும் நோயாளிகள் பார்க்கறதுக்குதானே..?

இல்லே.. நோயாளிகள் வரும்வரை டாக்டர் பார்க்கறதுக்கு..!

ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆ!

ஞாபகம் வருதே ..ஞாபகம் வருதே!!!:musik010:

பல்சுவை நகைச்சுவை வழங்கி
நிம்மதிப் பசியாற்றும் ராஜாவுக்கு நன்றி!!

ராஜா
16-06-2007, 06:04 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
16-06-2007, 06:07 PM
நாளைக்கு என்னைத் தேடாதே... சினிமா பார்க்கப் போறேன்! என்றார் நண்பர்.

அப்படின்னா, என்னை சில வருடங்களுக்குத் தேடாதே.நான் மெகா சீரியல் பார்க்கப் போறேன் என்றார் மிஸ்டர் மொக்கை.
_________________

நம்ம பத்மா வீட்டுக்காரர் சொக்கத் தங்கம்.. ஒரு கணவன் எப்படி இருக்கணுமோ அப்படி இருப்பார்.. நம்ம லேடீஸ் கிளப்ல அவருக்கு ஏதாவது விருது கொடுக்கணும்டி..

பத்ம புருஷன் அவார்டு கொடுங்களேன்..!
_________________

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் வாங்கிக் கொடுத்தே டெவலப் பண்ணுனியே உன் காதல்.. இப்போ எப்படி இருக்கு..?

வெறும் மாங்கா போதும்ன்னு சொல்ற அளவுக்கு டெவலப் ஆகியிருக்கு..!
_________________

அப்பா.. அம்மா எங்கே.. கொஞ்ச நாளா காணோமே..?

சாமிகிட்ட போயிட்டாங்கப்பா...

சாமி பாவம்.. இல்லப்பா..?
_________________

யோவ்.. யாராவது என்னைத் தேடி வந்தா "அண்ணன் பிசியா இருக்காருன்னு " சொல்லு போதும்.. அண்ணன் உள்ள இருக்காருன்னு சொல்லி தொலைக்காதே.. தப்பா புரிஞ்சிக்கப் போறாங்க..!
_________________

அமரன்
16-06-2007, 06:09 PM
அப்பா.. அம்மா எங்கே.. கொஞ்ச நாளா காணோமே..?
சாமிகிட்ட போயிட்டாங்கப்பா...
சாமி பாவம்.. இல்லப்பா..?

பிஞ்சு மனசில நஞ்சை விதைச்சிட்டாங்கப்பு...

ஆதவா
16-06-2007, 06:31 PM
விட்ருங்க... இதோட விட்ருங்க... என்னால முடியல..

ஓவியன்
17-06-2007, 05:54 AM
சொக்கத் தங்கம்.. ஒரு கணவன் எப்படி இருக்கணுமோ அப்படி இருப்பார்.. நம்ம லேடீஸ் கிளப்ல அவருக்கு ஏதாவது விருது கொடுக்கணும்டி..

பத்ம புருஷன் அவார்டு கொடுங்களேன்..!
[/COLOR]

ஹீ!,ஹீ!

அவர் எத்தனை கரேட் தங்கம் ராஜா அண்ணே!

ராஜா
17-06-2007, 05:39 PM
மாசி ; எனக்கு
மூன்றாவது குழந்தை பிறக்கப் போகுது சுசி.. என்ன பேர்
வைக்கலாம்.. சொல்லேன்..

ஆண் குழந்தை பிறந்தா சேஷா"த்ரீ" ன்னு வை.. பெண்ணா
போயிட்டா காய"த்ரீ"ன்னு வெச்சுடு..!
_________________

நடிகையின் செயலாளர் ; மேடம்.. மேக்கப்போட
வாங்கன்னு சொன்னேனே.. கேட்டீங்களா..? இப்போ பாருங்க..
தவிர்க்க முடியாத காரணத்தால் ஜிகினாஸ்ரீ வரமுடியாததால்
தன் அம்மாவை அனுப்பி வச்சிருக்காங்கன்னு மைக்குல
அறிவிக்கிறாங்க..!
_________________

சுசி ; தண்ணிக்குள்ளே உன்னால எவ்வளவு நேரம் தம்
பிடிக்கமுடியும் மாசி..?

மாசி ; என்ன உளர்றே..? தண்ணிக்குள்ளே
சிகரெட்டைக் கொண்டுபோனாலே அணைஞ்சு போயிடாதா..?
_________________

இப்படி ஆகும்ன்னு தெரிஞ்சிருந்தா அந்தக் கல்யாணத்துக்கே
போயிருக்க மாட்டேன்..

ஏங்க.. உங்களை யாரும் சரியா கவனிக்கலையா..?

அதில்லே.. செருப்பு ஒண்ணும் புதுசாவே இல்ல.. எல்லாம்
அரதப் பழசு..
_________________

அதோ போறாரே.. அவர் பல புனை பெயர்களில்......

கதை எழுதறவரா..?

இல்லே.. கடன் வாங்கறவர்...!
_________________

மாசி ; பொண்ணு கிளி மாதிரின்னு சொன்னதை நம்பி
ஏமாந்துட்டேன் சுசி..

சுசி ; மூக்கு வளைஞ்சு இருக்கா..?

மாசி ; இல்லே.. நான் என்ன சொல்லித் திட்டினாலும் திருப்பி
திட்டறா..!
_________________

அமரன்
17-06-2007, 05:49 PM
அதோ போறாரே.. அவர் பல புனை பெயர்களில்......
கதை எழுதறவரா..?
இல்லே.. கடன் வாங்கறவர்...!

சத்தியமா அது நான் இல்லைங்க

mgandhi
17-06-2007, 06:41 PM
நடிகையின் செயலாளர் ; மேடம்.. மேக்கப்போட
வாங்கன்னு சொன்னேனே.. கேட்டீங்களா..? இப்போ பாருங்க..
தவிர்க்க முடியாத காரணத்தால் ஜிகினாஸ்ரீ வரமுடியாததால்
தன் அம்மாவை அனுப்பி வச்சிருக்காங்கன்னு மைக்குல
அறிவிக்கிறாங்க..!_

அருமை ராஜா அவர்களே.

மனோஜ்
17-06-2007, 07:23 PM
:icon_good: :medium-smiley-065: :medium-smiley-002: :grin: :icon_dance: :4_1_8:
இந்த சிரிப்பு பொதுமா இன்னு கொஞ்சம் வேனுமா
ஹ ஹ சூப்பர் அண்ணா

ராஜா
18-06-2007, 05:37 PM
வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

ஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..?

இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
_________________

ஏன் உங்களை அரண்மனை வேலையில் இருந்து நீக்கிட்டாங்க..?

மாமன்னர் வருகிறார்ன்னு சொல்றதுக்கு பதிலா மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..!
_________________

கோவிலில் இருவர்..

யோவ்.. என்ன உண்டியலுக்குள்ளே கை விடறே..?

ஹி..ஹி.. தப்பா நினைக்காதீங்க.. 50 பைசா போடறதுக்கு பதிலா 1 ரூபாய் போட்டுட்டேன்.. அதான் பாக்கிக் காசை எடுக்கறேன்..
_________________

கல்யாண வீட்டில்..

மாப்பிள்ளை அடிக்கடி தரை டிக்கெட்டில் சினிமா பார்ப்பாரோ..?

அட.. ஆமாம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க..?

கரண்ட் கட் ஆனதும் மண்டபமே கிழியறாப்பல விசில் அடிக்கிறாரே..!
_________________

மனோஜ்
18-06-2007, 05:41 PM
ஏன் உங்களை அரண்மனை வேலையில் இருந்து நீக்கிட்டாங்க..?

மாமன்னர் வருகிறார்ன்னு சொல்றதுக்கு பதிலா மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..!
இந்த நகைசுவையை 23 நாம் புலிகேசியில் சேர்கலாம் அண்ணா மிக அருமை

ராஜா
19-06-2007, 05:34 PM
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
_________________

மேனேஜர் சார்.. உங்க ஸ்டெனோ அனு ரொம்ப அதிகப்படியா இருக்காங்க.. உங்களைப் பார்க்க வர்றப்போ என் காலை மிதிச்சுட்டு சாரி கூட சொல்லாமப் போறாங்க..

வாசலில் அனு மிதி பெற்று உள்ளே வருக ன்னு போட்டிருக்கோமே பார்க்கலையா..?
_________________

ஏண்டி.. நீ மாசமா இருக்கறது தெரிஞ்சுமா உன் புருஷன் கரண்ட் பில் கட்டாம வீட்டை இருட்டுல போட்டு வச்சிருக்காரு..?

அவர் போட்டோ கிராபர்டி.. இருட்டறையில இருந்தாதான் பிள்ளை நல்லா டெவலப் ஆகுமாம்..
_________________

அவள் ; ஏண்டி.. உனக்கு கிளார்க் லவ் லெட்டர் கொடுத்ததை மேனேஜர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினியா../

இவள் ; ஆமாண்டி.. நல்லா டோஸ் விட்டாரா..? என்ன சொல்லித் திட்டினார்..?

அவள் ; உனக்கு என்ன கண்ணு அவிஞ்சா போயிடுச்சு.. போயும் போயும் அந்தக் குரங்குக்கா லட்டர் கொடுத்தேன்னு திட்டினார்..
_______________

அமரன்
19-06-2007, 05:36 PM
நகைச்சுவை படித்து நகைத்தேன்

அன்புரசிகன்
19-06-2007, 05:45 PM
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

ரொம்ப உஷாரான மனுசன். முக்கியமான விடையத்தை மறைச்சுட்டாங்க. அப்புறமா அடி உதை வாங்கிக்கட்டப்போவது அவர்தானே..

மேனேஜர் சார்.. உங்க ஸ்டெனோ அனு ரொம்ப அதிகப்படியா இருக்காங்க.. உங்களைப் பார்க்க வர்றப்போ என் காலை மிதிச்சுட்டு சாரி கூட சொல்லாமப் போறாங்க..
வாசலில் அனு மிதி பெற்று உள்ளே வருக ன்னு போட்டிருக்கோமே பார்க்கலையா..?

மனேஜர் சார் எத்தனை தடவை அனுமிதி வாங்கினாங்கினாரே...

ஏண்டி.. நீ மாசமா இருக்கறது தெரிஞ்சுமா உன் புருஷன் கரண்ட் பில் கட்டாம வீட்டை இருட்டுல போட்டு வச்சிருக்காரு..?
அவர் போட்டோ கிராபர்டி.. இருட்டறையில இருந்தாதான் பிள்ளை நல்லா டெவலப் ஆகுமாம்..

நல்ல பமிலி டெவலப்மன்ற்.

அவள் ; ஏண்டி.. உனக்கு கிளார்க் லவ் லெட்டர் கொடுத்ததை மேனேஜர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினியா../
இவள் ; ஆமாண்டி.. நல்லா டோஸ் விட்டாரா..? என்ன சொல்லித் திட்டினார்..?
அவள் ; உனக்கு என்ன கண்ணு அவிஞ்சா போயிடுச்சு.. போயும் போயும் அந்தக் குரங்குக்கா லட்டர் கொடுத்தேன்னு திட்டினார்..

ஆபீஸ் ஆண்கள் ஸ்டாஃவ் மீது ரொம்ப பாசமா இருக்கார் அந்த மனேஜர்...

சூப்பரா இருக்கு மாப்பு.

தாமரை
19-06-2007, 06:13 PM
நல்ல சேவை ராஜா!

aren
20-06-2007, 12:41 AM
[/COLOR][/SIZE][/FONT][/B]

அதானே.

நல்ல சிர்ப்பு. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

தாமரை
20-06-2007, 01:54 AM
ஏங்க என்னதான் என் தங்கச்சி அனு குண்டா இருந்தாலும் அணுகுண்டு −ன்னு கூப்பிடறதெல்லாம் ரொம்ப ஓவர்.. சொல்லிபுட்டேன்..

அறிஞர்
20-06-2007, 03:12 AM
ஏங்க என்னதான் என் தங்கச்சி அனு குண்டா இருந்தாலும் அணுகுண்டு −ன்னு கூப்பிடறதெல்ல்ம் ரொம்ப ஓவர்.. சொல்லிபுட்டேன்..
உங்க* த*ங்க*ச்சி... யாரு.. ஓவியாவா..

மதி
20-06-2007, 04:06 AM
உங்க* த*ங்க*ச்சி... யாரு.. ஓவியாவா..

இதென்ன கலாட்டா..? ஓவியாக்கா சீக்கிரமே வந்து என்னான்னு கேளுங்க..!

தாமரை
20-06-2007, 04:13 AM
_________________

மேனேஜர் சார்.. உங்க ஸ்டெனோ அனு ரொம்ப அதிகப்படியா இருக்காங்க.. உங்களைப் பார்க்க வர்றப்போ என் காலை மிதிச்சுட்டு சாரி கூட சொல்லாமப் போறாங்க..

வாசலில் அனு மிதி பெற்று உள்ளே வருக ன்னு போட்டிருக்கோமே பார்க்கலையா..?
_________________

மிதியடிகளை வெளியே விட்டு வரவும்னு போர்டு போடலைன்னு சொல்லி மிதிச்சு அடிச்சு ஒரு வழி பண்ணியிருக்கலாமே! சான்ஸை கோட்டை விட்டுட்டீங்களே

aren
20-06-2007, 11:44 AM
மிதியடிகளை வெளியே விட்டு வரவும்னு போர்டு போடலைன்னு சொல்லி மிதிச்சு அடிச்சு ஒரு வழி பண்ணியிருக்கலாமே! சான்ஸை கோட்டை விட்டுட்டீங்களே

ஆமாம் இந்த ஐடியா நல்லாத்தானே இருக்கு. செய்து பார்க்கலாமா?

ராஜா
20-06-2007, 04:01 PM
ஆபீஸ் பியூன் கிட்டே சண்டை போட்டது தப்பாப் போச்சு..?

ஏன் .. என்னாச்சு..?

சம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..!
_________________

நடிகை ஜிகினாஸ்ரீ இன்னிக்கு விழாவுக்கு வராங்கன்னு போனியே.. என்னாச்சு..?

கனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சுட்டாங்கடா..!
_________________

ஏன் நடிகை கொய்யாஸ்ரீ திருமணத்தை பத்திரிக்கைக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க..?

பின்ன என்ன.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டா கோபம் வராதா..?
_________________

காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..?

நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..!
_________________

எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்..

அதுக்காக நாக்கை நீட்டச் சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..?
_________________

கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்..

ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..?

முதலிரவு அறைக்குள்ள 3 கேமிரா இருக்கு பாரு..!
_________________

அறிஞர்
20-06-2007, 06:41 PM
நடிகை ஜிகினாஸ்ரீ இன்னிக்கு விழாவுக்கு வராங்கன்னு போனியே.. என்னாச்சு..?

கனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சுட்டாங்கடா..!
_________________

ஹிஹிஹி.. க*ன*வு தேவ*தை க*ன*வில்....

தொட*ர*ட்டும்.. ராஜாவின் ர*வுசுக*ள்..

ராஜா
21-06-2007, 05:10 PM
சேவகன்1:-"நமது மன்னருக்கு மகாராணி மீது எப்படிச் சந்தேகம்
வந்தது?"

சேவகன்2:-"குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்'பாயா.. (Bad)'பேட்'பாயா?'னு
மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்!"
_________________

மன்னன்: எதிரி நாட்டு மன்னனின் அறைகூவலை இனிமேலும்
நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது மந்திரியாரே!

மந்திரி: போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா?

மன்னன்: வேண்டாம் அறைகூவல் கேட்காவண்ணம் சவுண்ட்
புரூஃவ் சிஸ்டம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.

_________________

பெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு
இருக்கா, டாக்டர்?

டாக்டர்:- ஆமாம்! அதுசரி அத்தனை குழந்தைகளைப்
பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே?

_________________

நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?

1905 லே பிறந்ததுதான்
_________________

ஒருவர் ஒரு சின்ன தீவில் வசித்து வந்தார். அவர் வேலை
பார்க்கும் அலுவலகத்திற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். படகை விட்டு விட்டால்
அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகி
விடும். ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்ப படகுத்
துறைக்கு வந்து கொண்டிருந்தார் அந்த நபர். அப்போ துறையில்
இருந்து ஒரு 15 அடி தூரத்தில் படகினை பார்த்தார். அடடா.
இந்த படக விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா
காத்திருக்கனுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று
படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவி
குதித்தார் படகில். குதித்த வேகத்தில் கைகளை கீழே
ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிரராய்ப்புகளோடு
எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல
எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில்
இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடி. ஒரு வழியா
படக பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல
வீணா காத்திருக்கணும்?" என்றார்.

படகில் இருந்த ஒருவர் சொன்னார். "அட. ஒரு நிமிசம் காத்திருந்தீங்கன்னா
படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம்
நீங்க பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?" :!:

_________________

அமரன்
21-06-2007, 05:13 PM
கதைவடிவ நகைச்சுவை ரொம்ப புத்திசாலித்தனமாக இருக்கு.ஹ....ஹா......

மனோஜ்
21-06-2007, 05:24 PM
கதை நகைச்சுவை:grin: அருமை அண்ணா

ஓவியன்
21-06-2007, 05:51 PM
ராஜா அண்ணே பொய் சொல்லாம உண்மையைச் சொல்லுங்க*!!!!

அந்த படகில் தாவி ஏறியவர் நம்ம அன்பு ரசிகன் தானே!:icon_good:

சுட்டிபையன்
22-06-2007, 03:42 AM
ஹீ ஹீ அவரேதான் ஓவி

ஷீ-நிசி
22-06-2007, 03:49 AM
நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?

1905 லே பிறந்ததுதான்

ஹா ஹா ஹா....

படகுல தாவி ஏறியது ஓவியன்னு சொன்னாங்களே!

ராஜா
22-06-2007, 05:02 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
22-06-2007, 05:03 PM
அடுத்த பக்கம் போவோமா..?

அக்னி
22-06-2007, 05:04 PM
படகு ஜோக் :musik010: :musik010: :musik010:

ராஜா
22-06-2007, 05:06 PM
பரம்ஸ் அரபு நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்,. அப்போது அங்கே வந்த மாசி கேட்டார்.. " மணி என்ன ஐயா?"

பரம்ஸ் இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு..

"ஆறாக 10 நிமிடம் இருக்கு".

"வாவ். உங்க கடிகாரம் நல்லா இருக்கு . எங்க வாங்கினீங்க்?"

"நன்றி. இது நானே டிசைன் பண்ணின கடிகாரம்... இங்க பாருங்க" என்று தன் வாட்சைக் காட்டினார் பரம்ஸ். ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது அந்த வாட்ச். அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த மாசிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கிறேன் என்று டிராக் பண்ணிக்கொண்டே இருக்கும்". அதோட பல நகரங்களின் தெளிவான வரைபடம்(map), இரவு விளக்கு, மேப்பை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் புரொஜெக்டர் திறன், அதில் இருந்த லேசர் பாயிண்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்த மாசி அசந்து போய் விட்டார்.

"நீங்களே டிசைன் பண்னினது என்று சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???"

"இல்ல . இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகவில்லை. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டி இருக்கு"

"நீங்க வேற தயார் பண்ணிக்கோங்க.. . இந்த கடிகாரத்தை எனக்கு விலைக்கு தாங்க"

"இல்லை ஐயா"

"ரூ. 10 ஆயிரம் தர்றேன் சார்"

"அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகவில்லை"

"சரி. ஒரே விலை 15000'

"சொன்னா கேளுங்க.."

"ம்ஹீம். 25000 ரூபாய்.. இப்பவே தாங்க"

"இல்ல...."

"ம் . ஒண்ணும் பேசாதீங்க. 40000. இப்ப என்ன சொல்றீங்க?"

"அட உண்மையாவே இது இன்னும் முழுசா....."

"ரெடி ஆகலேன்னு தானே சொல்ல வர்றீங்க்? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி விலை 50,000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளாவு விரும்பி கேட்கிறேன்"

பரம்ஸ் யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த வாட்ச்சுக்கு செலவழித்தது ரூ.10000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ 50000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் பரம்ஸ் அவரிடம் இருந்து 50000 வாங்கிக் கொண்டு கடிகாரத்தைக் கழட்டிக் கொடுத்தார். வாங்கிய மாசி ஆனந்தமாய் கையில் கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்.

"ஹலோ ஒரு நிமிசம்" என்று பரம்ஸ் கூப்பிட்டார் .

கடிகாரத்தை வாங்கிய மாசி, "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப பரம்ஸ் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி சொன்னார்....

"அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"
_________________

ராஜா
23-06-2007, 04:23 PM
எனக்காக எங்கப்பா, இருபது ஏக்கர் நிலத்தை விட்டுட்டுப் போனார், உங்கப்பா என்னத்தை விட்டுட்டுப் போனார்..?

இந்த உலகத்தையே விட்டுட்டுப் போய்ட்டார்..!

_________________

ராஜா
23-06-2007, 04:24 PM
1) ஜப்பானியர்கள் ரொம்ப குறைவாய் கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடுகிறார்கள். அதனால் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய்வருகிறது.

2) ஆனால் அதே நேரம், பிராஞ்சுக்காரர்கள் மிக அதிக கொழுப்பு உணவு உட்கொள்கிறார்கள். ஆனாலும் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

3) ஜப்பானியர்கள் ரொம்ப குறைவாய் சிவப்பு வைன் அருந்துகிறார்கள். அதனால் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

4) ஆனால் அதே நேரம், இத்தாலியர்கள் மிக அதிகமாக சிவப்பு வைன் அருந்துகிறார்கள்.ஆனாலும் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

இந்த ஆராய்ச்சியின் முடிவு???

உணவோ அல்லது குடிப்பழக்கமோ அல்ல பிரச்சனை. ஆங்கிலம் பேசுவது தான்....
_________________

ராஜா
23-06-2007, 04:25 PM
ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..

அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..

அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?

குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..

அதி ; பணிப் பெண்கள்..?

குர ; பெல்ட் போட உதவினார்கள்..

அதி ; விமானிகள்.. ?

குர ; விமானத்தை கிளப்பினார்கள்..

அதி ; நீ என்ன செய்தாய்..?

குர ; வேடிக்கை பார்த்தேன்..

அதி ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?

குர ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..

அதி ; நீ என்ன செய்தாய்..?

குர ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!

அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?

குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..

அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!
_________________

அமரன்
23-06-2007, 04:36 PM
ஹி....ஹி.......அப்போ குற்றவாளி குரங்கார்தானா.

ஓவியன்
23-06-2007, 06:07 PM
அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?

குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..

அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!
_________________

ஹீ!,ஹீ!,ஹீ!

தட்டச்சு செய்யும் குரங்கா!, அது விமானம் ஓட்டிச்சா! - ராஜா அண்ணா!, அருமையிலும் அருமை பாராட்டுக்கள்.:icon_clap: :icon_clap: :icon_clap:

ராஜா
24-06-2007, 06:10 PM
உங்க கடைய இன்னும் எப்படி ஆக்ரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க??

என்னய்யா சொல்றே??

ஆமாங்க.. நீங்கதானே சொன்னீங்க.. திருச்சி மெயின்ரோடுல கடை வச்சிருக்கேன்னு...
_________________

அந்த வீட்டில இவ்வளவு சீக்கிரம் மாமியார்-மருமகள் சண்டை வரும்னு யாரும் எதிர்பார்க்கல...

அப்படியா, என்ன ஆச்சு?

வலது காலை எடுத்து வச்சி உள்ளே வாம்மான்னு சொன்ன கையோட இடது காலை எடுத்து வச்சா வெட்டிடுவேன் சொல்றாங்க அந்த மாமியார்க்காரி....
_________________

என் பையன் பெரிய ஆளாகணும்.. அதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்??

ஒரு இருபது வருஷம் வெயிட் பண்ணுங்க...
_________________

அந்த டாக்டர் ஒரு பெரிய தாதாவுக்கு ஆபரேஷன் பண்றதா இருந்திச்சி.. ஆனா டாக்டர் முடியாதுன்னுட்டார்...

ஏன்?

எல்லோரும் என்கவுண்ட்டர்னு கிண்டல் பண்ணாங்களாம்...
_________________

அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...

எதை வச்சு சொல்றீங்க??

ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசை இருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....
_________________

இவர்தான் எங்க சுனாமி மாமா!''

""சுனாமி மாமாவா?''

""இவர் எப்போ வருவார்... எப்படி வருவாருன்னு தெரியாது!''

_________________

அமரன்
24-06-2007, 06:22 PM
இவர்தான் எங்க சுனாமி மாமா!''
""சுனாமி மாமாவா?''
""இவர் எப்போ வருவார்... எப்படி வருவாருன்னு தெரியாது!''

ராஜா அண்ணா நீங்க எங்க அன்புரசிகனைச்சொல்லவில்லையே...:musik010: :musik010: :musik010:

அன்புரசிகன்
24-06-2007, 07:28 PM
அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?
குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!

அது ஒரு தீவிரவாதி குரங்கு போல...:icon_hmm:

சூப்பர் மாப்பு.

அன்புரசிகன்
24-06-2007, 07:36 PM
அந்த வீட்டில இவ்வளவு சீக்கிரம் மாமியார்-மருமகள் சண்டை வரும்னு யாரும் எதிர்பார்க்கல...
அப்படியா, என்ன ஆச்சு?
வலது காலை எடுத்து வச்சி உள்ளே வாம்மான்னு சொன்ன கையோட இடது காலை எடுத்து வச்சா வெட்டிடுவேன் சொல்றாங்க அந்த மாமியார்க்காரி....

சபாஷ் சரியான போட்டி

என் பையன் பெரிய ஆளாகணும்.. அதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்??
ஒரு இருபது வருஷம் வெயிட் பண்ணுங்க...

பொறுப்பார் உயரமாவார் என்பது அந்த வைத்தியரின் நம்பிக்கை போலும்.

அந்த டாக்டர் ஒரு பெரிய தாதாவுக்கு ஆபரேஷன் பண்றதா இருந்திச்சி.. ஆனா டாக்டர் முடியாதுன்னுட்டார்...
ஏன்?
எல்லோரும் என்கவுண்ட்டர்னு கிண்டல் பண்ணாங்களாம்...

உண்மை எப்போதும் கசக்குமாக்கும்லே..

அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...
எதை வச்சு சொல்றீங்க??
ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசை இருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....

அப்டியில்ல மாப்பு. கடைசி விருப்பத்தை கேட்க்கிறார்...

இவர்தான் எங்க சுனாமி மாமா!''
""சுனாமி மாமாவா?''
""இவர் எப்போ வருவார்... எப்படி வருவாருன்னு தெரியாது!''

சும்மா இருங்க. அப்புறமா நான் ஒருதடவ வந்தா நூறுதடவ வந்த மாதிரி என்று சொல்லிவிடும்.

அமரன்
24-06-2007, 07:37 PM
1000 பதிப்புகள் கடந்தது ராஜாவின் ரவுசு

அவருக்கு எனது வாழ்த்துகள்

http://www.tamilmantram.com/photogal/images/2/medium/1_rose_for_u.jpg[/