PDA

View Full Version : ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11

ராஜா
10-04-2007, 05:01 PM
ஆ..."சிரி.." யர்கள்... [தொடர்ச்சி].

ஒண்ணாவதுலேருந்து எட்டாவது வரைக்கும் இருக்கற பள்ளிகள்..
அதுவும் கிராமத்துப் பள்ளிகள்ள பாத்தீங்கன்னா இந்த ஆசிரியர்கள்
லந்து ஓவரா இருக்கும்.. அவங்க நடவடிக்கை, ஆங்கிலம் இதிலேயெல்லாம் கிரைம் ரேட் கூடிகிட்டே போகும்.. காரணம்..
யாரு கண்டுபிடிக்கப் போறாங்கங்கற நம்பிக்கை.. அப்படிப்பட்ட அட்டகாசங்களில் சில ....

ஆறாம்ப்பு டீச்சர் ஒரு கேள்வி கேட்டாங்க.. செல பயலுக பதில்
தெரியாம திரு திருன்னு முழிச்சானுக.. நல்லா போட்டு
சாத்திபுட்டு இன்னும் எவன் எவனுக்குத் தெரியாதோ அவனுகளா
பார்த்து கேட்டுச்சு அந்த டீச்சரம்மா.. ஒரு புத்திசாலிப்
பையன்.. உங்களைப் போல.. எந்திரிச்சு.." டீச்சர்.. எனக்கு
பதில் தெரியும்... நான் சொல்லட்டுமா..?" ன்னு கேட்டான்..
அந்தம்மா கடுப்பா சொன்னுச்சு..


i know..you know... you know I know..you know..?

என்னா முழிக்கிறீங்க..? அர்த்தம் புரியலியா..? "

உனக்கு தெரியும்ன்னு எனக்குத் தெரியும்.. உனக்குத்
தெரியும்ன்னு எனக்குத்ஹ் தெரியுங்கறது உனக்குத் தெரியுமா..?
அப்படன்னு அர்த்தமாம்..!

இது எவ்வளவோ பரவாயில்லே.. ஒரு வாத்தியார் ஆங்கிலப்
பாடம் நடத்துனார்.. ஒரு மாணவிக்கு ஆங்கில இலக்கணம்
சரியாத் தெரியலே.. உடனே வாத்தியார் கண்டிச்சார்..

You should improve your glammar.. ilஇல்லேன்னா ரொம்பக்
கஷ்டப் படுவே..!

அவர் சொல்ல நெனைச்சது கிராமர்.. கிளாமர் இல்லே..!

இந்தக் கூத்து இப்படியா..? ஒரு பள்ளியில ஒரு ஆசிரியைக்கு
அவசரமா கடைக்கு அனுப்ப ஒரு பையன் தேவைப் பட்டான்..
நேரா ஒரு வகுப்புக்கு போச்சு.. அங்க பாடம் நடத்திகிட்டு
இருந்த வாத்தியார் கிட்ட சொன்னுச்சு..

Excuse me sir.. I need a boy from you ..please help me..!

இதெல்லாம் உண்மையா நடந்த சங்கதி.. ஒரு மாதிரியா சிரிக்கப் படாது..

ராஜா
10-04-2007, 05:05 PM
இன்னொரு கூத்தைக் கேளுங்க.. இந்த வாத்தியாருக பசங்க
எது செஞ்சாலும் குத்தம் கண்டுபிடிப்பாங்க.. மதிய உணவு
இடைவேளை.. ரெண்டு பசங்க வராந்தாவில நடந்து
போயிட்டு இருந்தாங்க.. எதிர்த்தாப்பல வந்த வாத்தியார் சொன்னாரு..

டேய்.. அமைதியா லைன்ல ஒவ்வொருத்தனா போங்க..!

போனது ரெண்டு பய.. இதில லைன்ல போகணுமாம்..
எதையாவது சொல்லி மெரட்டிகிட்டே இருக்கணும்
ஆசிரிய அய்யாவுகளுக்கு..!

அது கூட பரவாயில்லீங்க.. இந்த தமிழ் வாத்தியார்களுக்கு
இங்கிலீஷ் பேசணும்ங்கற வெறி சமயத்தில வரும் பாருங்க.. அப்பப்பா..!

அப்படித்தான் ஒரு தடவை பள்ளி வாகனம் ரிப்பேருக்கு
போயிருந்துச்சு.. மாலை பள்ளி விட்டப்புறமும் பட்டறையில்
இருந்து வரலை.. பசங்க பூரா வெளையாடப் போயிட்டாங்க..
பொம்பளப் புள்ளைக எல்லாம் வகுப்புக்கு போய்
உக்காந்துடிச்சுங்க.. தமிழ் வாத்தியாரும் அந்த வண்டியில
தான் போயாகணும்.. வண்டியைக் காணாம தவிச்சுப்
போயிட்டாரு.. கொஞ்ச நாழி கழிச்சு வண்டி வந்துச்சு..
வண்டி வந்த சந்தோஷத்துல வெளையாடிக்கிட்டு இருந்த
பயலுகளைக் கூப்பிட்டு மாணவிகளை அழைச்சுட்டு வரச்
சொன்னார்.. எப்படி தெரியுமா..?

PLAY BOYS....! CALL GIRLS...!!!

இது தொலைஞ்சுட்டுப் போகுது.. பள்ளியில ஆண்டு விழா
நடக்கும் பார்த்திருக்கீங்களா..? அப்போ பொம்பளைப் புள்ளைங்க
டான்ஸ் ஆடும்.. அதுக்கு பேரு டான்ஸ் அயிட்டம்..
ஒரு நிகழ்ச்சி முடிஞ்சு மேடையில திரை போட்டாங்க.
.அடுத்த நிகழ்ச்சி. [அது ஒரு இரவுப் பாடல]..
ஒரு ஆசிரியர் ரெடி பண்ணினார்.. மைக் இயங்கிக்கிட்டு
இருந்தது தெரியாம..

அந்த நைட்டு அயிட்டம் நளினாவை ஏற்பாடு பண்ணுங்கம்மா..!

அந்த நளினாவோட பெற்றோர் தலையிலயே அடிச்சுகிட்டாங்க..
இந்தப் பள்ளியில பொண்ணை சேர்த்தோமேன்னு..

இன்னொரு பள்ளி.. டீச்சரம்மா பாடம் நடத்தும்போது
ஒரு பய எழுந்து ஏதோ சந்தேகம் கேட்டான். அந்தம்மாவுக்கு
விளக்கம் சொல்லத் தெரியல.. அதனால கண்டுக்காதது போல
இருந்துச்சு.. அவனும் விடறாப்பல இல்ல.. எழுந்து நின்னு
மிஸ்.. மிஸ் ன்னு நச்சரிச்சான்.. டென்ஷன் ஆன டீச்சரம்மா
ஆங்கிலத்துல அலறிச்சு..

. SIT DOWN AND GET OUT...!

ஓவியா
10-04-2007, 05:06 PM
கண்டுக்கினேன் தங்காச்சி.. அப்பால பேஜார் பண்ணிராதே ஹக்காங்..!

அதுExcuse me sir.. I need a boy from you ..please help me....ஹி ஹி ஹி

தூள்

இளசு
10-04-2007, 08:56 PM
சிட் டவுன் அண்ட் கெட் அவுட்டா???!!!
விபரீத ஆங்கில ஆசையால் விளையும் கேடுகளை பட்டை உரிச்சி கெளப்பிட்டீங்க ராஜா...

நடுநடுவில் பேசும் ஒரு மாணவனைப் பார்த்து ஆங்கிலமோக ஆசிரியர் சொன்னது இது:
ஐ டாக்.. யூ டாக்.. செண்ட்டர் செண்ட்டர் ஒய் டாக்?

ராஜா
11-04-2007, 07:53 AM
அது சரிதான்..!

ஹா..ஹா..

இதயம்
11-04-2007, 02:50 PM
இந்த ஏரியாவில ரவுசு கொஞ்சம் கூடுதலாத்தேன் தெரியுது..!! நாம வெவரம் தெரியாம இங்க வந்துட்டமோ..?!!

இதயம்
11-04-2007, 02:50 PM
என்னாது..? இந்தப் பக்கமே கீழ்ப்பாக்கம் மாதிரி தெரியிது..?!! ஏப்பூ.. இப்படி எழுதி வச்சிட்டு போனா போதுமா? கூடவே வயித்துவலி மாத்திரையையும் அனுப்புங்கப்பூ..!!

ராஜா
11-04-2007, 03:49 PM
ஆதவன் நிறைய வாங்கி வச்சிருக்காரு.. பார்த்தா ரெண்டு மாத்திரை வாங்கிக்கோங்க..!

நன்றி ஜாஃபர்..!

மனோஜ்
11-04-2007, 04:26 PM
இந்தக் கூத்து இப்படியா..? ஒரு பள்ளியில ஒரு ஆசிரியைக்கு
அவசரமா கடைக்கு அனுப்ப ஒரு பையன் தேவைப் பட்டான்..
நேரா ஒரு வகுப்புக்கு போச்சு.. அங்க பாடம் நடத்திகிட்டு
இருந்த வாத்தியார் கிட்ட சொன்னுச்சு..

Excuse me sir.. I need a boy from you ..please help me..!
அவுங்க 10 வருசம் அப்பரமாக நினைத்து செல்லியிருப்பார்கள் அண்ணா அதான்:D :medium-smiley-002:

ராஜா
11-04-2007, 05:26 PM
திருச்சிக் காரரே... சூப்பர்... துவம்சம் பண்றீங்க.. !

நன்றி வர்ஷா..!

ராஜா
11-04-2007, 05:32 PM
மா.சி. யும் சு.சி.யும் ஒரே வீடு எடுத்துத் தங்கி இருந்தாங்க..
மாசி சொந்த ஊருக்குப் போயிட்டு வரும்போது தன்னோட
சாவியை வச்சுட்டு வந்துட்டாரு.. காலையில ரயிலை விட்டு
இறங்கி வீட்டுக்கு வந்து பார்த்தா பூட்டி இருந்துச்சு. காரணம்
சுசிக்கு பேப்பர் போடற வேலை.. கிளம்பிப் போயிட்டாரு.

மாசி பக்கத்துல இருக்கற மளிகைக் கடைக்குப் போய்
சுசியோட கைபேசிக்கு போன் பண்ணி, "உன்னோட சாவியை
கொஞ்சம் கொடு" ன்னு சொல்லிட்டு வந்தாரு..

எதிர்த்தாப்பல சுசி சைக்கிள்ல வந்தவர்," ஜன்னல் வழியா
சாவியை உள்ளே போட்டிருக்கேன் எடுத்துக்கோ.. எனக்கு
லேட் ஆயிடுச்சு..!" ன்னு சொல்லிட்டுப் போனாரு..!
___________________

மாசியும் சுசியும் பேசிக் கொண்டார்கள்..

என்ன சுசி.. உனக்கு வயசாகிக்கிட்டே போகுதே.. எப்போ
கல்யாணம் பண்ணிக்கப் போறே..?

அதுக்குதான் மாசி.. நல்ல பொண்ணாத் தேடிட்டு இருக்கேன்..

இன்னுமா கிடைக்கலே..?

ஓ.. நிறையப் பொண்ணுங்க கிடைச்சாங்க மாசி..

அவங்களில் ஒருத்திய கட்டிக்கறது தானே..?

அந்த கழுதைகளுக்கெல்லாம் நல்ல பையனா, புத்திசாலியா
வேணுமாம் மாசி..!
____________________________

மாசி ஒரு வக்கீல்.. சுசி அவர்கிட்டே அவசரமா வந்து...

வக்கீலய்யா.. ஒரு ஆளை வெட்டிக் கொன்னுட்டேன்..
நீங்கதான் காப்பாத்தணும்..

சரி..சரி.. கவலைப் படாதே.. காப்பாத்தறேன்.. ஆனா ஃபீஸ்
கொஞ்சம் அதிகமாகும்.. சொல்லு.. யாரைக் கொன்னே..
ஏன் கொன்னே..?

அவர் ஒரு டாக்டர்.. பீஸ் அதிகமா கேட்டாருன்னுதான்
போட்டுத் தள்ளினேன்..

மாசி அப்ப ஓடினவர்தான் குவைத்துக்கு..!
_______________________________

சுசி பள்ளி மாணவன்..மாலை பள்ளி விட்டு வந்து தாயிடம்..

அம்மா இன்னிக்கு பிரேயர்ல ரெண்டாங் கிளாஸ் பையனோட
டிராயர் அவுந்து விழுந்துடிச்சு..எல்லாரும� � சிரிச்சாங்க.. நான்
மட்டும் சிரிக்கவே இல்ல..

என் கண்ணு.. அப்படித்தான் இருக்கணும்.. அடுத்தவங்களைக்
கேலி பண்றது தப்பு.. சரி.. யாரு அந்தப் பயித்தியக் காரப்பய..?
நம்ப பக்கத்து வீட்டு மாசியா..?

இல்ல. நான் தாம்மா அது..!
_______________________________

மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பிய சுசி மனைவியிடம்...

வர.. வர.. ஞாபக மறதி அதிகமாப் போகுது வனஜா.. காலையில
என் ஆபீஸ்ன்னு நெனைச்சு எதிர்த்த ஆபீஸுக்குள்ள போயிட்டேன்..

சரி.. சரி..சம்பள கவர் பத்திரமா கொண்டு வந்தீங்களா ..?

இன்னிக்கு இல்லையாம்.. நாளைக்குத் தானாம்..

அப்படியா..? சரி.. யாருய்யா நீ.. ஆம்பள இல்லாத வீட்டுல
நுழைஞ்சு கலாட்டா பண்ணப் பாக்கறியா..? ஒழுங்காப் போறீயா
இல்ல போலீசைக் கூப்பிடவா..?
______________________________

ஓவியா
11-04-2007, 05:37 PM
அடிச்சு தூள் கிளப்புறீக அண்ணா, ஹி ஹி ஹி

varsha
11-04-2007, 05:40 PM
அடிச்சு தூள் கிளப்புறீக அண்ணா, ஹி ஹி ஹி

ஆமாம் ஆமாம் ரொம்ப ஸ்பீடாதான் அடிச்சு தூள் கிளப்புறீக ராஜா சார்

இளசு
11-04-2007, 05:48 PM
ஆமாம் ஆமாம் ரொம்ப ஸ்பீடாதான் அடிச்சு தூள் கிளப்புறீக ராஜா சார்


வர்ஷா அவர்களுக்கு

ராஜா அவர்களின் வேகம் அவரின் சொந்தத் தட்டச்சிய பதிவுகளால் வருவது.....
வெறும் வெட்டி ஒட்டல் அன்று...

varsha
11-04-2007, 05:52 PM
வர்ஷா அவர்களுக்கு

ராஜா அவர்களின் வேகம் அவரின் சொந்தத் தட்டச்சிய பதிவுகளால் வருவது.....
வெறும் வெட்டி ஒட்டல் அன்று...ராஜா அவர்களின் வேகம் அவரின் சொந்தபடைப்பின் அமுதம் இதன் பலன் அதிகம் தானே

நன்றி ராஜா சார் அண்ட் இளசு சார்

இளசு
11-04-2007, 05:55 PM
அன்பு ராஜா

மாசி+ சுசி கூட்டணி சில படங்களில் வடிவேலு+விவேக் இணைந்து தந்த சிரிப்பு வெடிகளை வென்றுவிடும் போல...

குறிப்பாய் டவுசர் கழண்டதும், சம்பள கவர் பல்டியும்!!!!

அசத்துங்க ராஜா!

varsha
11-04-2007, 06:01 PM
அன்பு ராஜா

மாசி+ சுசி கூட்டணி சில படங்களில் வடிவேலு+விவேக் இணைந்து தந்த சிரிப்பு வெடிகளை வென்றுவிடும் போல...

குறிப்பாய் டவுசர் கழண்டதும், சம்பள கவர் பல்டியும்!!!!

அசத்துங்க ராஜா!

இளசு சார் அவர்களின் நல்ல தோள்கொடுப்பு அசத்துங்க ராஜா சார்

அன்புரசிகன்
11-04-2007, 06:16 PM
மாசி அப்ப ஓடினவர்தான் குவைத்துக்கு..!

ஐயோ பாவம். குவைத்திலயாவது நலமா?


அப்படியா..? சரி.. யாருய்யா நீ.. ஆம்பள இல்லாத வீட்டுல
நுழைஞ்சு கலாட்டா பண்ணப் பாக்கறியா..? ஒழுங்காப் போறீயா
இல்ல போலீசைக் கூப்பிடவா..?

விவாகரத்து செலவு மிச்சம்.:icon_dance:

இன்னும் இன்னும் வேண்டும் மாப்ளே...:Christo_pancho:

மனோஜ்
11-04-2007, 06:48 PM
அப்படியா..? சரி.. யாருய்யா நீ.. ஆம்பள இல்லாத வீட்டுல
நுழைஞ்சு கலாட்டா பண்ணப் பாக்கறியா..? ஒழுங்காப் போறீயா
இல்ல போலீசைக் கூப்பிடவா..?

பணம்னா பிணமும் வாயைப் பிளக்கும்!
ஆனா இது கொஞ்சம் வாயை அதிகமா பிளக்கவைத்துள்ளது போல...
தொடருங்கள் அண்ணா

ஓவியன்
12-04-2007, 03:53 AM
மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பிய சுசி மனைவியிடம்...

வர.. வர.. ஞாபக மறதி அதிகமாப் போகுது வனஜா.. காலையில
என் ஆபீஸ்ன்னு நெனைச்சு எதிர்த்த ஆபீஸுக்குள்ள போயிட்டேன்..

சரி.. சரி..சம்பள கவர் பத்திரமா கொண்டு வந்தீங்களா ..?

இன்னிக்கு இல்லையாம்.. நாளைக்குத் தானாம்..

அப்படியா..? சரி.. யாருய்யா நீ.. ஆம்பள இல்லாத வீட்டுல
நுழைஞ்சு கலாட்டா பண்ணப் பாக்கறியா..? ஒழுங்காப் போறீயா
இல்ல போலீசைக் கூப்பிடவா..?

அருமை ராஜா அண்ணா! :icon_dance:

ராஜா
12-04-2007, 04:02 AM
நன்றி இளசு, வர்ஷா, மாமனாரே, திருச்சிக்காரரே, ஓவியன்.. மற்றுமுள்ள நண்பர்களே..!

ராஜா
12-04-2007, 04:04 AM
அடடா.. போச்சுடா.. என்ன ஆகப் போகுதோ தெரியலியே..

ஓவியா வுக்கும் நன்றி..!

வெள்ளைக் கொடியுடன்...

அண்ணா.

ராஜா
12-04-2007, 05:10 PM
இருந்தாலும் அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கு என் மேல இவ்வளவு விரோதம் ஆகாது சார்..

ஏன்.. என்னாச்சு..?

கதையைக் கொலை பண்ணிட்டேனாம்.. போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துட்டார்..
____________________________________________________________________


மாப்பிள்ளை ஆபீஸ்ல நிறைய லஞ்சம் வாங்குவார் போல..

ஏங்க அப்படிச் சொல்றீங்க..?

அங்க பாரு.. மொய் கவரையெல்லாம் திருட்டு முழி முழிச்சுகிட்டு வாங்கி அவசரமா பனியனுக்குள்ள சொருவிக்கறதை...!
_____________________________________________________________________


ஏன் கவிஞரே.. உங்க பாடலுக்கு தேசிய விருது கொடுத்தது நல்ல விஷயம் தானே..? அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க..?

எனக்கு கெடைச்சது தமிழ்ப் படப் பாடலுக்கு இல்லையாம்.. அஸ்ஸாம் மொழிக்காம்..!
___________________________________________________________________


கவனிச்சியா.. நம்ம தலைவர் தேர்தல் பிரச்சார பயணம் பக்காவா ரெடி பண்ணியிருக்கார்..

அப்படியா..?

ஆமாம்.. 1 ம் தேதியில் இருந்து 5 ம் தேதி வரை ஆளும் கட்சிக் கூட்டணிக்கு.. அப்புறம் கூட்டணி மாறி 6 ம் தேதியிலேருந்து 10 ம் தேதி வரை எதிர்க்கட்சி கூட்டணிக்கு பிரச்சாரம். பின்னர் மனம் திருந்தி ஆளும் கூட்டணிக்கு திரும்பி 11 ம் தேதியில் இருந்து 15 ம் தேதி வரைக்கும் சூறாவளி பிரச்சாரம். இப்பவே ரெடி..!
____________________________________________________________________


உங்க படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப வித்தியாசமா எடுத்திருக்கீங்களாமே.. உண்மையா..?

ஆமாம்.. கடைசியில போலீஸ் வராது.. ஹீரொ, வில்லன் ரெண்டு பேரும் ஜீப்ல ஏறி போலீஸ் ஸ்டேஷன் போறாங்க..!
____________________________________________________________________

ராஜா
13-04-2007, 05:43 PM
அன்புச் சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...!

கண்ணம்மா ; ஏங்க.. நமக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆகுது.. அப்போலேருந்து என் சமையலைக் குறை சொல்லிகிட்டுதான் இருக்கீங்க..இன்னும் என் சமையலை நீங்க சாப்பிட்டு பழகலைன்னா அதுக்கு நானா பொறுப்பு..?
_________________

ராஜா ; ஏம்மா .. இது நல்லா டேஸ்டா இருக்கே..? என்ன இது..?

கண்ணம்மா ; அடப் பாவி மனுஷா... இது தண்ணிங்க..

ராஜா ; அப்படியா.. எதிலே தயார் பண்ணது இது..?
_________________

கண்ணம்மா.. கல்யாணத்துக்கு முந்தி நீ விதம் விதமா சமைப்பேன்னு சொன்னாங்க..இப்படி உப்பில்லாம, உறைப்பில்லாம, புளிப்பில்லாம, ருசியில்லாம, சமைக்கிறதைத்தான் சொன்னாங்கன்னு இப்பத்தாம்மா புரியுது..!
_________________

ஏங்க.. பஸ்ஸில யாரோ ஒரு அழகான பொண்ணு கூட ஒண்ணா உக்காந்து வந்தீங்களாமே..? ரொம்ப ஜாலியா..?

அட நீ ஒண்ணும்மா..! கொஞசம் கூட வெக்கப்படாம என் பக்கத்துல உக்காந்து வந்தா என்ன அர்த்தம்..?எனக்கு ரொம்ப வயசாயிடுச்சுன்னுதானே..?
_________________

வீட்டுக்கு வருகை தந்த ஆதவனும் நானும்...

என்ன அய்யா.. கண்ணம்மா அக்கா கொஞ்சம் முரட்டு சுபாவமோ..?

ஹி..ஹி.. எப்படி தெரியும்..?

அங்கங்கே பேண்டேஜ் துணியும் டிஞ்சர் பாட்டிலும் வச்சிருக்கீங்களே..!
_________________

பென்ஸ்
13-04-2007, 05:47 PM
கண்ணம்மா ; ஏங்க.. நமக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆகுது.. அப்போலேருந்து என் சமையலைக் குறை சொல்லிகிட்டுதான் இருக்கீங்க..இன்னும் என் சமையலை நீங்க சாப்பிட்டு பழகலைன்னா அதுக்கு நானா பொறுப்பு..?

ராஜா...

சொல்லவேயில்லை...
வீட்டில் சொல்லவேற செய்திட்டாங்களா...

இளசு
13-04-2007, 05:53 PM
ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆ!

கலகலப்பாய் புத்தாண்டை தொடங்கிவைத்த ராஜாவுக்கு
முகமலர்ந்த நன்றியும் பாராட்டும்..

கதை, கவிதை, அரசியல், சினிமாவில் நீங்கள் சொன்ன அனைத்தும்
நாளை நிசத்தில் நடக்கலாம்..
அதிலும் பிரச்சாரத்திட்டம் இப்பவே
இருக்கோன்னு ஒரு குன்சா யோசனை!

அண்ணி -ராஜா கூட்டணி வெற்றிக்கூட்டணி..
எல்லா ஜோக்கும் வெற்றி..
என் முதல் வாக்கு - சுவையான தண்ணீர் சமையலுக்கே!
வெந்நீர் சமைத்த பிரதீப்புக்கே தண்ணி காட்டிடுவாங்க போல...

ஓவியா
13-04-2007, 08:57 PM
அடடா.. போச்சுடா.. என்ன ஆகப் போகுதோ தெரியலியே..
ஓவியா வுக்கும் நன்றி..!
வெள்ளைக் கொடியுடன்...

அண்ணா.

ஹி ஹி ஹி ஹி :grin:

உங்க படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப வித்தியாசமா எடுத்திருக்கீங்களாமே.. உண்மையா..?

ஆமாம்.. கடைசியில போலீஸ் வராது.. ஹீரொ, வில்லன் ரெண்டு பேரும் ஜீப்ல ஏறி போலீஸ் ஸ்டேஷன் போறாங்க..!
இது செம்ம சூப்பர்.

ராஜா
14-04-2007, 10:50 AM
இன்று இத்திரியைப் பார்வையிட்ட அந்த 150 ஆவது உறுப்பினருக்கும் ஏனைய 149 அன்பர்களுக்கும் நன்றி.

மனோஜ்
14-04-2007, 01:53 PM
அண்ணியிடம் ஆசத்திய அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

mukilan
14-04-2007, 03:38 PM
ராஜா உங்களின் ரவுசு பக்கங்களை முழுவதுமாகப் படிக்கவில்லை. ஆனால் நான் படித்த எல்லாமே ரவுசுதான். முடிந்தால் எல்லாவற்றையும் PDF கோப்பாக மாற்றி வையுங்கள். புத்தகமாக கொண்டு வர முயற்சிக்கலாம். இனிய தமிழ்ப்புத்தாண்டு உண்மையிலேயே இனிமையாகத்தான் இருக்கிறது. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ராஜா
14-04-2007, 05:01 PM
டாகடர்் ; ஓ கே. இனி நீங்க என்ன வேண்ணாலும் சாப்பிடலாம்..

நோயாளி ; வியாதி தீர்ந்து போயிடுச்சா டாக்டர்..?

டாக்டர் ; ஆயுசு தீர்ந்து போச்சு..!
_________________

நர்ஸ்..1 ; என்னடி.. ராத்திரி பூரா பெரிய டாக்டர் ரூம்ல லைட்
எரியுதே என்ன விஷயம்..?

நர்ஸ் ..2 ; இந்த தடவையாவது ப்ளஸ் 2 அரியர்ஸ்
முடிக்கணும்ன்னு லட்சிய வெறியோட படிச்சுகிட்டு இருக்கார்டி...!
_________________

என்ன இருந்தாலும் நம்ம டாக்டர் ரொம்பக் கெட்டிக்காரர்
தான்யா.. கடைசியா பேஷண்ட்க்கு என்ன வியாதின்னு
கண்டு பிடிச்சிட்டாரே..!

அப்படியா.. எப்போ..?

போஸ்ட் மார்ட்டம் பண்ணும் போதுதான்..!
_________________________

நோயாளி ; டாக்டர்.. எப்போதான் என்னை டிஸ் சார்ஜ் பண்ணுவீங்க..?

பொறுங்க.. அவசரப்படாதீங்க.. ஒரு ரிலீவர் வரட்டும்..!
__________________________

நோயாளி.; ..டாக்டரய்யா..! வயித்துப்போக்கு அரெஸ்ட்
ஆயிடும்ன்னு மாத்திரை கொடுத்தீங்க.. மறுபடி வந்துடிச்சே...!

டாக்டர்.; . கவலைப்படாதீங்க.. "ஜாமீன்" ல வந்திருக்கும்..
இப்போ "அரெஸ்ட்" பண்ணிடறேன்..!
_________________

மனோஜ்
14-04-2007, 05:10 PM
கொஞ்சம் அதிகமா கிம்பளம் கொடுத்தா
ஜாமீன் கிடைக்காதுல்ல அப்படிதான்ணா

ராஜா
15-04-2007, 02:16 PM
நன்றி திருச்சிக் காரரே..!

நர்ஸ் 1 ; ஏண்டி பெரிய டாக்டர் காலையில் இருந்து ஒரே கோவமா இருக்கார்..?

நர்ஸ் 2. ; எந்த படுபாவியோ "ஒன் வே" போர்டை நம்ம ஆஸ்பத்திரி வாசல்ல நட்டுட்டு போயிட்டானாம்டி..!

அன்புரசிகன்
15-04-2007, 02:57 PM
நல்ல மருத்துவமனை. நல்ல தருத்துவர். நல்ல தாதியர். பாவம் நோயாளிகள்.

ஓவியா
15-04-2007, 03:32 PM
நர்ஸ்..1 ; என்னடி.. ராத்திரி பூரா பெரிய டாக்டர் ரூம்ல லைட்
எரியுதே என்ன விஷயம்..?

நர்ஸ் ..2 ; இந்த தடவையாவது ப்ளஸ் 2 அரியர்ஸ்
முடிக்கணும்ன்னு லட்சிய வெறியோட படிச்சுகிட்டு இருக்கார்டி...!


ஹி ஹி ஹி
ஒரு டாக் +2 முடிக்கணும்ன்னு லட்சிய வெறியோட படிச்சுகிட்டு இருக்கார்..! :icon_smokeing:

ஓவியா
15-04-2007, 03:33 PM
"ஒன் வே" போர்டை ஹி ஹி ஹி

நல்லா ரவுசு பன்னுகிறீர்கள் தலிவ

ராஜா
15-04-2007, 05:18 PM
நல்ல மருத்துவமனை. நல்ல மருத்துவர். நல்ல தாதியர். பாவம் நோயாளிகள்.

சூப்பர்...மாமனாரே..!

ராஜா
15-04-2007, 05:19 PM
"ஒன் வே" போர்டை ஹி ஹி ஹி

நல்லா ரவுசு பன்னுகிறீர்கள் தலிவ

எல்லாம் ஒன்ற ட்ரெயினிங் தான் அம்மணி..!

ராஜா
15-04-2007, 06:58 PM
நன்றி நண்பர்களே...!

ஓவியா
15-04-2007, 06:59 PM
எல்லாம் ஒன்ற ட்ரெயினிங் தான் அம்மணி..!

அது அது :feiertag014:

:ernaehrung004:

ராஜா
15-04-2007, 07:03 PM
தொண்டர்: நம்ம தலைவரு ஏது திடீர்னு அவர் பையனை மிலிட்டரிலே சேர்த்துட்டாரு?

மற்றவர்: பையன் பேரிலே நிறைய பணம் போட்டதை அவன் மேஜரானாதான் எடுக்க முடியும்னு பாங்கிலே
சொல்லிட்டாங்களாம்.
___________________________

வயல்ல வேலை பார்க்குற பெண்களையெல்லாம் அழைச்சுட்டு வந்திருக்கியே எதுக்குய்யா?

நம்ம கட்சியில களை எடுக்கணும்னு சொன்னீங்களே தலைவரே!
___________________________

எதிர்க் கட்சிக் காரங்க மேல தனி மனிதத் தாக்குதல் நடத்தறது அநாகாகம்னு தலைவர் சொல்லிட்டாரு."

அப்படியா..........

ஆமாம். இனிமே கும்பல் கும்பலா போய் அட்டாக் பண்ணச் சொல்லியிருக்கார்
_________________________

"ஊழ்ல் வழக்கில் 'உள்ளே' இருக்குற நம்ம தலைவரால ஜெயில்லே பிரச்னையாமே?"

"ஆமாம், ஜெயிலரோட பேச்சு திருப்தி அளிக்கலைன்னு சொல்லி, 'வெளிநடப்பு'
செய்ய ஆரம்பிச்சுட்டாராம்...............!"
__________________________

புது தலைவர் ஏன் ரெண்டு மலர் வளையம் வைக்கிறாரு..?

ஒண்ணு மறைந்த தலைவருக்கு.. இன்னொன்னு அவரோட நீதி, நேர்மை, நியாயம் மற்றும் கொள்கைகளுக்கு..!
___________________________

அன்புரசிகன்
15-04-2007, 07:21 PM
ஒண்ணு மறைந்த தலைவருக்கு.. இன்னொன்னு அவரோட நீதி, நேர்மை, நியாயம் மற்றும் கொள்கைகளுக்கு..!

நாடு உருப்பட்ட மாதிரித்தான். இதுதானட 2 பூச்செண்டின் மகிமையோ?...

ராஜா
16-04-2007, 04:42 PM
நன்றி மாமனாரே..!

வீட்டுக்காரரும் வேண்டாத விருந்தாளியும்...

வீ.கா.; மார்க்கெட்டுக்கு போய் கொஞ்சம் கறிகாய் வாங்கிட்டு வரீங்களா..?

விரு ; ஐயோ.. எனக்கு காய்கறி வாங்கத் தெரியாதே..

வீ.கா.; சரி.. காய்கறி நானே வாங்கிட்டு வந்துட்டேன்..கொஞ்சம் நறுக்கி
தரீங்களா..?

விரு ; ஐயோ.. கையை வெட்டிக்குவேன்.. என்னால் ஆகாது.

வீ.கா.; சரி.. சமையல் ஆயிடுச்சு.. சாப்பிட வரீங்களா..?

விரு.; ஹி..ஹி.. ஏல்லாத்துக்கும் மறுப்பு தெரிவிக்கறது சரியில்ல.. இதையாவது
கேட்கணுமில்ல.. இதோ வர்ரேன்.

மனோஜ்
16-04-2007, 04:52 PM
வீ.கா: இத எல்லதையூம் சப்படுங்க

விரு.; முடியாதுங்க உப்பு அதிகமா இருக்கே

வீ.கா: ஹி..ஹி.. ஏல்லாத்துக்கும் மறுப்பு தெரிவிக்கறது சரியில்ல.. இதையாவது கேட்கணுமில்ல..

ஆதவா
16-04-2007, 04:53 PM
ஆதவா!!! இனி மன்றம் பக்கமே தலை வெச்சு படுக்காதேப்பா!!!

இங்க ராசாங்கற ஒருத்தர் நல்லா பட்டையா அருவாளை தீட்டிக்கிட்டு இருக்கார்....

அய்யோஒ!!! படிக்க முடியலப்பா சாமி..

ராஜா
16-04-2007, 04:57 PM
விருந்தாளியும்.. வீட்டு சிறுவனும்..

வாங்கோ மாமா.. ஆயுசு நூறு.. இப்போதான் அப்பா உங்களப் பத்தி சொல்லிண்டு இருந்தார்..

அப்படியா.. என்ன சொன்னார்..

கடன்காரப் பய வர்றதுக்குள்ள இலையைப் போடு.. சாப்பிட்டுட்டு ஓடறேன்னு அம்மாகிட்ட சொன்னார்.

__________________________________________________________________

ஏண்டா கொழந்தே..? நான் சாப்பிடறச்சே அந்த நாய் ஏன் இப்படி வெறிச்சுப்
பார்த்துண்டிருக்கு..?

அதோட தட்டுல சாப்பிடறீங்க.. அதான் கோபமா பாக்குது.!

____________________________________________________________________

இரு நண்பர்கள்..

இந்த ஆஸ்பத்திரியில உடனே அட்மிட் ஆகியே தீரணும்....

ஓ.. டாக்டரைப் பார்த்துட்டு வரியா..?

இல்லே..நர்சைப் பார்த்துட்டு வரேன்..!

______________________________________________________________________

சாப்பிட வந்த கணவனிடம் மனைவி....

ஏங்க திடீர்ன்னு என்ன வந்தது உங்களுக்கு..?நாலு நாளா
வெண்டைக்காய் கூட்டு பண்ணினேன்.. ஒண்ணும் சோல்லாம சாப்பிட்டீங்க..இன்னைக்கு இப்படி கோச்சுக்கறீங்க..?

_________________________________________________________________________

டேய் சின்னா.. வற்றாத ஜீவநதி ஒண்ணு சொல்லு..

உங்க பொண்ணோட மூக்கு சார்..!

________________________________________________________________________

ராஜா
16-04-2007, 05:00 PM
ஆதவா!!! இனி மன்றம் பக்கமே தலை வெச்சு படுக்காதேப்பா!!!

இங்க ராசாங்கற ஒருத்தர் நல்லா பட்டையா அருவாளை தீட்டிக்கிட்டு இருக்கார்....

அய்யோஒ!!! படிக்க முடியலப்பா சாமி..

ரொம்ப அறுவை ஜோக்கா இருக்கோ ஆதவா..?

ஓவியா
16-04-2007, 05:24 PM
வீட்டுக்காரரும் வேண்டாத விருந்தாளியும்...
விருந்தாளியும்.. வீட்டு சிறுவனும்..


ஹி ஹி ஹி

சூப்பர். நன்றி அண்ணா.

அன்புரசிகன்
16-04-2007, 07:35 PM
நான் உங்கள் வீட்டிற்கு வந்தாலும் எனக்கு வெண்டிக்காய்க்கறிதானா?... எனக்கு அது பிடிக்காது.

சூப்பர் சூப்பரா இருக்கு.

ராஜா
17-04-2007, 05:09 AM
அன்பு ரசிகருக்கு என்ன பிடிக்கும்ன்னு சமையல் விளையாட்டுல தெரிஞ்சுகிட்டோமுல்ல..

இளசு
17-04-2007, 05:11 AM
டாக்டர், அரசியல் தலைவர், விருந்தினர், சமையல் என
நாலாபக்கமும் சிரிப்பு சிலம்பம் சுற்றும் வஸ்தாது ராஜாவுக்கு
'சிரிச்சு சிரிச்சு வந்த சீனாதானாவின்' நன்றி!

ராஜா
17-04-2007, 03:08 PM
நன்றி இளசு அவர்களே..!

"நன்றி"க்கு காரணம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்..!

சுட்டிபையன்
17-04-2007, 03:25 PM
ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து..

நான் உங்கள் மதியூகங்களை செக் பண்ணப் போறேன்...

ஆசிரியர் கேள்வி கேட்டதும் பையங்கள் விழுந்தடிச்சுப் பதில் சொல்லிக்கிட்டே இருந்தாங்க..

ஒருவன் மட்டும்.. மெளனமா..

ஆசிரியர் அவனிடம் : என்ன உன் பதிலைக் காணேல்ல..

மாணவன்: நீங்க தானே சார் மதியை ஊகிக்கச் சொன்னிங்க.. அதுதான் மதி எப்படி இருப்பான்னு ஊகிச்சிட்டு இருக்கேன்.

ராஜா
17-04-2007, 05:43 PM
ஹா..ஹா.. நன்றி சுட்டிப் பையன்..!

ஆதவர் ; என்ன அய்யா.. தலை வீங்கி இருக்கு..?

ராஜா ; ஹி..ஹி.. விறகு பட்டிருச்சு..

ஆதவர் ; விறகா.. எங்க இருந்துச்சு..?

ராஜா ; என் வீட்டுக்காரம்மா கையீல...

____________________________________________________________________

ராஜா ; எனக்கும் என் மனைவிக்கும் இன்னைக்கு பயங்கர சண்டை.. சத்தமா நாலு வார்த்தை விட்டேன்.. உடனே அடங்கிட்டாங்க..

ஆதவர் ; அட.. உண்மையாவா..? அப்படி என்ன சொன்னீங்க..?

ராஜா ; கொலை கேசுல உள்ளே போயிருவ..!

_____________________________________________________________________

ராஜா ; என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..

கண்ணம்மா ; இப்ப புரியுதா..? நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லேன்னு..!

_____________________________________________________________________

ராஜா ; என்ன கண்ணம்மா.. ஆமை வடை சுடப்போறேன்ன்னு கிளம்பினே.. இப்போ திருதிருன்னு முழிக்கறே..?

கண்னம்மா ; ஒரு வடைக்கு எத்தனை ஆமை போடணும்ன்னு யோசிக்கிறேங்க..!

_____________________________________________________________________

கண்ணம்மா ; என்ன தைரியம் இருந்தா ஆபீஸ் ஸ்டெனோவைக் கூட்டிகிட்டு நேத்து சினிமாவுக்கு போயிருப்பீங்க..?

ராஜா ; முந்தா நாள் என்னை அழைச்சுகிட்டு அவ சினிமாவுக்கு போனா.. திரும்ப நான் செய்யலேன்னா தப்பா நெனைச்சுக்க மாட்டாளா..?

ராஜா
17-04-2007, 05:44 PM
பகவான் கிருஷ்ணர் ; அன்பே ருக்மணி..! ஏன் கோபமாக இருக்கிறாய்..?

ருக்மணி ; பின்னே என்ன ஸ்வாமி.. உங்கள் பெயரில் கிருஷ்ணாயில் இருக்கு.. அந்த சக்களத்தி பெயரில் "பாமா"யில் இருக்கு.. என்பெயரில் ஒன்றுமே இல்லையே..?

அன்புரசிகன்
17-04-2007, 05:48 PM
ராஜா ; என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..

கண்ணம்மா ; இப்ப புரியுதா..? நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லேன்னு..!


உங்க மனைவிக்கு பின்புத்தி முன்புத்தி சைடு புத்தியெல்லாம் இருக்குப்பொல..
(அவ எ மக.. :icon_ush: )

அன்புரசிகன்
17-04-2007, 05:50 PM
பகவான் கிருஷ்ணர் ; அன்பே ருக்மணி..! ஏன் கோபமாக இருக்கிறாய்..?

ருக்மணி ; பின்னே என்ன ஸ்வாமி.. உங்கள் பெயரில் கிருஷ்ணாயில் இருக்கு.. அந்த சக்களத்தி பெயரில் "பாமா"யில் இருக்கு.. என்பெயரில் ஒன்றுமே இல்லையே..?

கிளம்பிட்டாளுங்கையா.. கிளம்பிட்டாளுங்க..:music-smiley-009:

ஓவியா
17-04-2007, 06:08 PM
பகவான் கிருஷ்ணர் ; அன்பே ருக்மணி..! ஏன் கோபமாக இருக்கிறாய்..?

ருக்மணி ; பின்னே என்ன ஸ்வாமி.. உங்கள் பெயரில் கிருஷ்ணாயில் இருக்கு.. அந்த சக்களத்தி பெயரில் "பாமா"யில் இருக்கு.. என்பெயரில் ஒன்றுமே இல்லையே..?

:1: :1: :1:

pradeepkt
18-04-2007, 04:54 AM
பின்னிப் பெடலெடுக்கிறீங்களே சார்!!!
காலங்கார்த்தால ஆபீசுக்கு வந்து கணினியைப் பார்த்தி கெக்கேபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டே இருந்தா மக்கள் எங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க????

சரி, என்ன வேணா நினைச்சிட்டுப் போவட்டும்... நீங்க தொடருங்க... :D :icon_dance:

அன்புரசிகன்
18-04-2007, 02:29 PM
காலங்கார்த்தால ஆபீசுக்கு வந்து கணினியைப் பார்த்தி கெக்கேபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டே இருந்தா மக்கள் எங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க????


:icon_hmm:
பெரிசா ஒன்றும் நினைக்க மாட்டாங்க....:icon_wacko: :p
:medium-smiley-044:

ராஜா
18-04-2007, 04:40 PM
சுசி & மாசி

மாசி ; என்ன சுசி..? நம்மை யாரும் பிக்பாக்கெட் அடிக்காம இருக்க வழி கண்டுபிடிச்சுருக்கியா..? சபாஷ்.. என்ன வழி..?

சுசி ; இனிமே பேண்ட் போட்டு அது மேல ஜட்டியைப் போட்டுக்கணும்..
_______________________________________________________________________

ராஜா சார்...

ராஜா சார் அலுவலகத்தில் இருக்கிறார்..போன் வருகிறது..

ஹலோ அங்கிள்.. நான் பக்கத்து வீட்டு கவிதா பேசறேன்..

ஹாய் கவி... என்ன விஷயம்.. சொல்லுப்பா..

கண்ணம்மா அக்கா உங்க கூட பேசணுமாம்..

சாரி.. ராங் நம்பர்..!

______________________________________________________________________

சிரிப்புத் திருடர் சிங்கார வேலர்...

வக்கீலய்யா.. என்மேல உள்ள கேஸ் "தள்ளுபடி" ஆயிடுமா..?

கேஸ் போற போக்கைப் பார்த்தா உன்னை உள்ளே "தள்ளும்படி" ஆயிரும் போல இருக்கு சிங்காரம்..!

______________________________________________________________________

மருத்துவர்கள் பொறுத்தருள்க..

என்ன டாக்டர் ஆபரேஷனை முடிச்சுட்டு தையல் போடாம கிளம்பறீங்க..?

அடப்பாவி.. நீ உயிரோடதான் இருக்கியா..?

______________________________________________________________________

மாண்புமிகு வேலைக்காரி...!

நான் எங்கம்மா வீட்டுக்குப் போறேன்..

போய்த் தொலை.. விட்டது சனியன்..

இப்படி சொல்லுவீங்கன்னு தெரியும்.. வேலைக்காரியை நேத்தே வேலையை விட்டு நிறுத்திட்டேன்..

அய்யோ.. !

______________________________________________________________________

மாதவ் சிங்....!

ஏன் மாதவ்.. போன மாசம் தானே குடி வந்தீங்க.. ? அதுக்குள்ள ஏன் காலி பண்றீங்க..?

என்னய்யா வீடு கட்டியிருக்கே..? என் வீடுலேருந்து பார்த்தா எந்த வீட்டு பாத்ரூமும் தெரிய மாட்டேங்குதே..!
________________________________________________________________________

என்னப்பா.. டாஸ் போட்ட ரெண்டு கேப்டனும் ஏன் கட்டிப் புரளறாங்க..?

காயின்ல ரெண்டு பக்கமும் தலை இருக்குதாம்..?
_______________________________________________________________________

நிருபர் ; டீ.வி. சீரியல் தயாரிக்கணும்ங்கற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்துச்சு..?

டயரடக்கர் ; இந்த சமூகத்தைப் பழி வாங்கணும்ன்னு ஒரு வெறி ரொம்ப நாளாவே இருந்துச்சு.
_________________________________________________________________________

அன்புரசிகன்
18-04-2007, 04:54 PM
ராஜா சார்...
ராஜா சார் அலுவலகத்தில் இருக்கிறார்..போன் வருகிறது..
ஹலோ அங்கிள்.. நான் பக்கத்து வீட்டு கவிதா பேசறேன்..
ஹாய் கவி... என்ன விஷயம்.. சொல்லுப்பா..
கண்ணம்மா அக்கா உங்க கூட பேசணுமாம்..
சாரி.. ராங் நம்பர்..!

இது நல்லா இல்ல ஆமா....என்ன டாக்டர் ஆபரேஷனை முடிச்சுட்டு தையல் போடாம கிளம்பறீங்க..?
அடப்பாவி.. நீ உயிரோடதான் இருக்கியா..?

அப்போ மயக்க ஊசி போடவே இல்லையா?


என்னய்யா வீடு கட்டியிருக்கே..? என் வீடுலேருந்து பார்த்தா எந்த வீட்டு பாத்ரூமும் தெரிய மாட்டேங்குதே..!

இது வேற இப்போ கென்சிடர் பண்ணணுமா???:082502now_prv:டயரடக்கர் ; இந்த சமூகத்தைப் பழி வாங்கணும்ன்னு ஒரு வெறி ரொம்ப நாளாவே இருந்துச்சு.

அது என்னமோஉண்மை தானுங்க... சூப்பர் ஐடியா...
வாழ்த்துக்கள் மாப்ளே....:thumbsup:

அன்புரசிகன்
18-04-2007, 04:57 PM
இளசு சார், பென்ஸ் சாருக்கு ஒரு டிவி சீரியல் ஒன்று தயாரித்து ஓட்டுங்க...

மனோஜ்
18-04-2007, 05:12 PM
ராஜா சார்...
ராஜா சார் அலுவலகத்தில் இருக்கிறார்..போன் வருகிறது..
ஹலோ அங்கிள்.. நான் பக்கத்து வீட்டு கவிதா பேசறேன்..
ஹாய் கவி... என்ன விஷயம்.. சொல்லுப்பா..
கண்ணம்மா அக்கா உங்க கூட பேசணுமாம்..
சாரி.. ராங் நம்பர்..!
ஓ இப்படியல்லா நடந்ததா
திருச்சி வந்து முதல் வேலை அண்ணிகிட்ட இத போட்டு குடுக்கனு

ராஜா
18-04-2007, 05:32 PM
எல்லாமே ஒரு முடிவோடதான் இருக்கீங்க ..

நடத்துங்கப்பா... நடத்துங்க..

திருச்சிக்காரரே..நீங்களுமா..? மாமனார் எல்லாரையும் கெடுத்து குட்டிச் சுவராக்கி வச்சிருக்கார்.

அன்புரசிகன்
18-04-2007, 05:35 PM
கெடுத்து குட்டிச் சுவராக்கி

அப்பிடீன்னா என்ன?

slgirl
19-04-2007, 04:37 AM
ஐயாவின் ரவுசுங்கள் அனைத்துமே என்றும் சூப்பரே

மனம் லேசாக இந்த பக்கம் வந்து போவதும் உண்மையே தொடருங்க ஐயா சுசி மாசின்னு போட்டு கலக்குறீங்க

ராஜா
19-04-2007, 05:53 PM
நன்றீ நண்பர்களே..!

ராஜா
19-04-2007, 05:56 PM
சுசி ; தமிழ்நாடு பூரா 40 கிளை இருக்குன்னு சொன்னானுங்கன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்பி என் பணத்தை அந்த பைனான்ஸ் கம்பெனியில போட்டேன் மாசி.. தூக்கிட்டு ஓடிட்டானுங்க..!

மாசி ; அப்படியா..? ஆமாம்.. கம்பெனி பேர் என்ன..?

சுசி ; அலிபாபா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்..!
_________________

சுசி ; இன்னிக்குதான் முதல் முதலா பஸ்ல ட்ராவல் பண்ணினேன் மாசி.. அதுக்குள்ளேயே பஸ் ஓட்டக் கத்துக்கிட்டேன்..

மாசி ; அப்படியா..? ஆச்சர்யமா இருக்கே..?

சுசி ; இதிலே என்ன ஆச்சர்யம் மாசி.. நீ கூட கத்துக்கலாம்.. ஈஸிதான்.. ஒருதடவை விசில் அடிச்சா ஓடுற பஸ் நிக்கும்.. ரெண்டு தடவை விசில் அடிச்சா நிக்கிற பஸ் ஓடும்.. !
_________________

சுசி கைபேசி வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு...

ஹலோ வா.சே. யா..?

ஆமாம்.. உங்களுக்கு என்ன வேணும்..?

என் கிட்ட பேசணும்ன்னா உங்களுக்கு ஃப்ரீ தானே..?

ஆமாம்..

அப்போ ஏன் நான் மிஸ்டு கால் கொடுத்தா கூப்பிட மாட்டேங்கறீங்க..? காலையில் இருந்து எத்தனை தடவை போடறது..?
_________________

சுசி கார் ஓட்டுநர்.. மாசி கார் உரிமையாளர்..

மாசி ; டிரைவர்.. ஏன் அப்போலேருந்து சிரிச்சுகிட்டே இருக்கே..? மலைப் பாதையிலே இறங்கும்போது கவனமா ஓட்டவேண்டாமா..?

சுசி ; இல்லீங்க முதலாளி.. துன்பம் வரும் வேளையில சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லியிருக்காருங்க..

மாசி ; அப்படி என்ன துன்பம் வந்துடிச்சி உனக்கு..?

சுசி ; எனக்கு மட்டும் இல்லே.. உங்களுக்கும் தான்.. அரை மணி நேரமா முயற்சி பண்றேன்.. பிரேக் பிடிக்க மாட்டேங்குது முதலாளி..!
_________________

மாசி ; அந்த ஆளுக்கு கடன் கொடுத்தா வாங்குறதுக்குள்ள நடையா நடந்து செருப்பு தேஞ்சிரும்ன்னு சோன்னேனே... அப்படியும் ஏன் பணம் கொடுத்தே சுசி..?

சுசி ; நான் என்ன அவ்வளவு முட்டாளா..? செருப்புக்கு காசு கழிச்சுகிட்டுதான் கடன் கொடுத்தேன்.. தெரிஞ்சுக்கோ..!
_________________

அன்புரசிகன்
20-04-2007, 11:33 AM
சுசி ; நான் என்ன அவ்வளவு முட்டாளா..? செருப்புக்கு காசு கழிச்சுகிட்டுதான் கடன் கொடுத்தேன்.. தெரிஞ்சுக்கோ..!

சங்குதான்...:music-smiley-009:

ராஜா
20-04-2007, 01:08 PM
மாம்ஸ்... ரொம்ப ஓவர்..!

மனோஜ்
20-04-2007, 01:50 PM
சுசி கார் ஓட்டுநர்.. மாசி கார் உரிமையாளர்..
மாசி ; டிரைவர்.. ஏன் அப்போலேருந்து சிரிச்சுகிட்டே இருக்கே..? மலைப் பாதையிலே இறங்கும்போது கவனமா ஓட்டவேண்டாமா..?
சுசி ; இல்லீங்க முதலாளி.. துன்பம் வரும் வேளையில சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லியிருக்காருங்க..
மாசி ; அப்படி என்ன துன்பம் வந்துடிச்சி உனக்கு..?
சுசி ; எனக்கு மட்டும் இல்லே.. உங்களுக்கும் தான்.. அரை மணி நேரமா முயற்சி பண்றேன்.. பிரேக் பிடிக்க மாட்டேங்குது முதலாளி..!
வள்ளுவர் வாக்கு மெய்பித்த ராஜா அண்ணா வாழ்க

ராஜா
20-04-2007, 02:17 PM
இருங்கப்பு..

திருச்சிக்கு வந்துதானே ஆகணும்..!

பென்ஸ்
20-04-2007, 02:31 PM
சுசி கைபேசி வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு...

ஹலோ வா.சே. யா..?

ஆமாம்.. உங்களுக்கு என்ன வேணும்..?

என் கிட்ட பேசணும்ன்னா உங்களுக்கு ஃப்ரீ தானே..?

ஆமாம்..

அப்போ ஏன் நான் மிஸ்டு கால் கொடுத்தா கூப்பிட மாட்டேங்கறீங்க..? காலையில் இருந்து எத்தனை தடவை போடறது..?
_________________

ராஜா...
உன்மையை சொல்லுங்க....
இப்படி ஒன்று நமக்கு தெரிந்து நடக்கலைதானே..!!???

மதி
20-04-2007, 03:17 PM
சுசி ; இதிலே என்ன ஆச்சர்யம் மாசி.. நீ கூட கத்துக்கலாம்.. ஈஸிதான்.. ஒருதடவை விசில் அடிச்சா ஓடுற பஸ் நிக்கும்.. ரெண்டு தடவை விசில் அடிச்சா நிக்கிற பஸ் ஓடும்.. !

அட..இவ்ளோ ஈ.ஸி.யா...???

ராஜா
20-04-2007, 03:22 PM
லூஸ்ல விடுங்க மக்கா..!

ரொம்ப விவரம் கேட்காதீங்க.. மாட்டிக்குவேன்..!

ராஜா
20-04-2007, 04:52 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
20-04-2007, 04:53 PM
அட..இவ்ளோ ஈ.ஸி.யா...???

மதி கேட்கறதைப் பார்த்தா அவர் கூட.....

ராஜா
20-04-2007, 04:57 PM
எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கறானுங்கன்னு பாருங்க...

அவன் ; அன்னிக்கு ரவியோட லவரோட தங்கையோட பிறந்தநாள் பார்ட்டிக்கு விஜயோட ஃபிரண்டோட லவரோட அண்ணனோட நான் பெர்முடாஸோட கையில கோக்கோட வாயில கேக்கோட திருட்டு முழியோட நின்னப்போ சிரிச்சீங்களே ஞாபகமிருக்கா..?

அவள் ; ஏண்டா மூதேவி..! இத்தனை ஜொள்ளோட நீ அவசியம் கடலை போட்டுத் தான் ஆகணுமா..?அவன் ; பொதுவா நான் முன்ன பின்ன தெரியாத பொண்ணுங்களுக்கு ஸ்கிராப் அடிக்க மாட்டேன்.. ஆனா உங்க ப்ரொபைல் அட்டகாசம்.. என்னால கட்டுப்படுத்த முடியல.. இது வரைக்கும் நான் பார்த்ததிலே இதுதான் பெஸ்ட்.

[இவுரு ரொம்ப நல்லவராம்...அந்த பாப்பாவோட புத்திசாலித்தனம் இவரை இம்ப்ரெஸ் பண்ணிடுச்சாம்..]

அவள் ; தேங்க் யூ சார்.. 31 க்கு அடுத்தது என்ன தெரியுமா..? யெஸ்.. 32.. இதுவரைக்கும் 32 புண்ணாக்கு பயலுக இதே போல எனக்கு ஸ்கிராப் அடிச்சிருக்கானுங்க.


இன்னொரு புத்திசாலி ; ஹாய் க்யூட்டி.. நான் ஐ.ஐ.டி மாணவன்.. உன்கிட்டேருந்து பதில் வரும்ன்னு நெனைக்கிறேன்..உனக்கு எழுதப் படிக்க தெரியும்ன்னு நம்பறேன்..

[ இவர் ரொம்ப இண்டலிஜெண்டாம்.. அவளோட ஈகோவை தட்டி எழுப்பறாராம்..]

அவள் ; மொன்னை நாயே..! எழுதப் படிக்க தெரியாம எப்படிடா ஆர்க்குட்ல கணக்கு ஆரம்பிக்க முடியும்..? உன்னை எவண்டா ஐஐடில அட்மிஷன் போட்டான்..?
_________________

ராஜா
20-04-2007, 04:59 PM
கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சுசி: ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.
_________________

சுசியும் நண்பர் மாசியும்...


சுசி ; என்னோட முதல பையன் அப்படியே என்னை உரிச்சு வைச்ச மாதிரி இருப்பான்!"

மாசி ; "அடப்பாவமே!.....ரெண்டாவது் பையனாவது அழகா இருப்பானா.................?"
_________________

மிஸ்டர் சுசியும் மிஸஸ் சுசியும்...

படிக்காம உங்க பையன் ஊரைச் சுத்திட்டு இருக்கானே. நீங்க அவனைக் கேள்வி கேட்க மாட்டீங்களா?"

அவன் தான் படிக்கலையே, என்ன கேள்வி கேட்கறது?
_________________

அன்புரசிகன்
20-04-2007, 07:43 PM
அவன் தான் படிக்கலையே, என்ன கேள்வி கேட்கறது?

அதுதானே...:icon_shok:

அன்புரசிகன்
20-04-2007, 07:45 PM
எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கறானுங்கன்னு பாருங்க....

அனுபவமேதுமில்லையே...:nature-smiley-006:

இளசு
20-04-2007, 08:49 PM
ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹா...

ஆர்க்குட் அமர்களமும் சுசீ அண்ட் கோவின் குசும்புமாய்
ஆரவாரத் தொடர்ச்சி..

என்னை சீனாதானாவாக்கும் இத்திரிக்கு நன்றி...

ஓவியன்
21-04-2007, 10:03 AM
கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சுசி: ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

என்னைக் கட்டுப் படுத்தவே முடியல, அலுவலகம் என்று கூடப் பாராமல் சிரிச்சிட்டேன்.

அருமை ராஜா அண்ணா!

lolluvathiyar
21-04-2007, 02:46 PM
அண்பு ராஜா
இன்றுதான் உன் நகைசுவைகளை படித்தேன்
இதுவர 25 பக்கங்கள் தான் படித்தேன்
நகைசுவை சுரங்கம் தான் நீங்கள்
அனைத்துக்கும் பின்னூட்ட இட முடியாது.
ஆனால் பிடித்த 2 க்கு பின்னூட்டம் இட ஆசைபடுகிறேன்
சர்தார்ஜி ஜோக்குகள் அனைத்தும் அருமை
ஆரஞ்சுப் பழத்தை இன்னொருத்தருக்குக் கொடுக்கணும்ன்னா வழக்கறிஞர் கொடுத்தா எப்படிக் கொடுப்பார்ன்னு

நாளது ##ம் வருடம் ##ம் நாள் சென்னை வியாசர்பாடி, ##விலாசத்தில் வசிக்கும் தமுக்கடிச்சான் மகன் ##குடியிருந்து வரும் ஈயடிச்சான் மகன் கொசு கடிச்சான் கமலா ஆரஞ்சு கொடுப்பதோடு மட்டுமல்லாது, இதன் பேரில் எனக்கிருக்கும் உரிமை, சொந்தம், பாத்தியம்,ஆதாயம் ஆகியவற்றையும் உங்கள் அனைவர் முன்னிலையில், என் சுய புத்தியோடும், முழு மனதோடும், எவ்வித நெருக்குதலுக்கு ஆளாகாமலும், மனமுவந்து அளிக்கிறேன்.
இதை இவர், உடனடியாகவோ அல்லது தான் விரும்பும் போதோ, தனக்காகவோ அல்லது பிறர்க்காகவோ பயன்படுத்தலாம்.

பழங்களை இவரோ இவரது வம்சாவளியினரோ சர்வ சுதந்திரமாக விற்பனை செய்யவோ இலவசமாக வழங்கவோ, தூக்கி எறியவோ யாதொரு இடர்ப்பாடும் இல்லை.. அந்த ஆரஞ்சு மரத்தை வெட்டி விறகாகவோ அல்லது...


இந்த நகைசுவை அருமை,
ஆனால் இது வாக்கீலின் மனு அல்ல
பத்திர எழுத்தாளர் பாசை,
வக்கீல் என்பதர்க்கு பதிலாக பத்திர எழுத்தாளர் என்று
வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.


புஷ், மன் மோகன் சிங் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்..

சிங் ; அடுத்த வருடம் சந்திரனுக்கு ஆள் அனுப்பப் போகிறோம்..

புஷ் ; நாங்கள் ஏற்கனவே அனுப்பி விட்டோம்..

சிங் ; நாங்கள் 100 பேரை அனுப்பப் போகிறோம்..

புஷ் ; அடேயப்பா.. அவ்வ்ளவு பேரா..? யார்..யார்..?

சிங் ; பிற்பட்டோர் 27 பேர்.
மிக பிற்பட்டோர்---17 பேர்
பெண்கள் ----------33 பேர்.
விளையாட்டு வீரர்-- 2 பேர்.
போர் விதவை------ 1 பேர்
சுனாமி பாதிப்பு------ 5 பேர்
பயங்கரவாத பாதிப்பு 5 பேர்
ஊனமுற்றோர்------- 5 பேர்.
அரசியல்வாதிகள்-----4 பேர்.. இடம் இருந்தால்..
விண்வெளி வீரர்-----1 பேர்.முதலில் ஸ்காட்லாந்து அணியினர் விடுதலைப் "புலி" என்று ஒரு சுள்ளி பொறுக்கும் கிராமவாசியைப் பிடித்து இழுத்து வந்தனர்..

அடுத்து அமெரிக்க அணியினர் காட்டுக்குள் புகுந்தனர்.." அல் காயிதா" எல்லா புலிகளையும் கடத்திச் சென்று விட்டதாகவும், பின் லாடன் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்"

இந்திய போலீஸ் படை
ஒரு கரடியை மரத்தில் கட்டி வைத்து, " புலின்னு ஒத்துக்கோ.. உனக்கு வேற வழியே இல்லே.. பேசாம நான் புலி தான்னு வாக்குமூலம் கொடுத்துடு..இல்லேன்னா என்கவுண்டர்தான்" என்று மிரட்டிக்கொண்டிருந்தனர்..!

இந்த நகைசுவை அருமை,
இதை நகைசுவையாக மட்டும் பார்க்காமல்
அறிவின் கன்னோட்டத்தில் பார்த்தால் புரியும் அவலம்

ராஜா
21-04-2007, 03:56 PM
நன்றி நண்பர்களே...!

ராஜா
21-04-2007, 03:57 PM
ஆசிரியர் : ஒரு பெண்ணின் உயர்வுக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?

மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.
_________________________________________________________________

நபர் : ஜோசியரே, நம்ம ஜாதகத்துல ஏதும் தோஷம் இருக்கா பாருங்க.

ஜோசியர் : தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்குப்பா. கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும்.

நபர் : என்ன தோஷம்?

ஜோசியர் : சந்தோஷம்
___________________________________________________________________

இந்த வாழ்த்துச்செய்தியை அனுப்பியவருக்கு, இருதயநோய் இருக்கும் போலிருக்கிறது"

எப்படிச் சொல்றே?

பின்னே, வாழ்த்துச்செய்தியில், I wish you all the success hole heartedly, அப்படின்னுபோட்டிருக்காரே.
_____________________________________________________________________

ஆசியர்: ஆங்கிலேயர்கள் நம் நாட்டை படிப்படியாக கைப்பற்றினார்கள். இதில் இருந்து என்ன தொகிறது?

சின்னா;: அந்தக் காலத்தில் லிப்ட் இல்லை என்று தொகிறது ஸார்..........
_____________________________________________________________________

"அந்த நடிகைக்கு ஏகப்பட்ட காதலர்கள்!"

"கணவர்...?"

"அது கொஞ்சம் தான்!"
_________________

leomohan
21-04-2007, 04:03 PM
___________________________________________________________________

இந்த வாழ்த்துச்செய்தியை அனுப்பியவருக்கு, இருதயநோய் இருக்கும் போலிருக்கிறது"

எப்படிச் சொல்றே?

பின்னே, வாழ்த்துச்செய்தியில், I wish you all the success hole heartedly, அப்படின்னுபோட்டிருக்காரே.
_____________________________________________________________________
_________________


சூப்பரு

varsha
21-04-2007, 04:05 PM
அருமையான நகைச்சுவை நன்றி படித்து மகிழ்ந்தேன்

மனோஜ்
21-04-2007, 04:06 PM
அந்த நடிகைக்கு ஏகப்பட்ட காதலர்கள்!"

"கணவர்...?"

"அது கொஞ்சம் தான்!"
இது புரியலையே அண்ணா

mravikumaar
21-04-2007, 04:09 PM
அருமையான தமாசுகள் ராஜா

அன்புடன்
ரவி

ராஜா
21-04-2007, 04:26 PM
இது புரியலையே அண்ணா

காதலர்கள் எண்ணிக்கை அளவுக்கு கணவர்கள் எண்ணிக்கை இல்லியாமாம்..!

நண்பன்
21-04-2007, 04:59 PM
உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இவ்வளவு நகைச்சுவைத்துனுக்குகள் கிடைக்கின்றன!!! எவ்வளவு கவலையில் இருந்தாலும் உங்கள் நகைச்சுவை துணுக்குகளை படித்தால் உடனே புதுத்தெளிவு பிறந்துவிடும். வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
21-04-2007, 06:43 PM
மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.

ஆம்புளேங்கதா பாவம்.நபர் : என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்

அடி வயித்தில புளிய கரைக்கிறீங்களே...சின்னா;: அந்தக் காலத்தில் லிப்ட் இல்லை என்று தெரிகிறது ஸார்..........

ரொம்பகஷ்டப்பட்டிருப்பாங்க போல..

மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் மாப்ளோய்...:icon_clap: :icon_clap: :icon_clap:

aren
22-04-2007, 03:28 AM
செம்ம கடி கடிக்கிறீங்க. எப்படித்தான் மக்கள் உங்களுடன் ஆபீஸில் வேலை செய்கிறார்களோ தெரியவில்லை. எல்லோரும் இந்நேரம் ஓடியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

இதுவரை 60 பக்கங்கள் ஓடி இன்னும் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
22-04-2007, 04:00 AM
ஆசிரியர் : ஒரு பெண்ணின் உயர்வுக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?

மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.


அருமை அண்ணா!!:icon_clap:
பல வேளைகளில் அவர்களது பலத்திற்கும் அதுதான் காரணமாக அமைகிறது - ஒரு தடவை அதனால் அடி வாங்கினால் தான் அது விளங்கும்.:D :D :D

அன்புரசிகன்
22-04-2007, 04:06 AM
அருமை அண்ணா!!:icon_clap:
பல வேளைகளில் அவர்களது பலத்திற்கும் அதுதான் காரணமாக அமைகிறது - ஒரு தடவை அதனால் அடி வாங்கினால் தான் அது விளங்கும்.:D :D :D

ஆகா..ஆகா... அனுபவ முதிர்ச்சி என்பது இதுவல்லவா...:4_1_8:

ஓவியன்
22-04-2007, 04:38 AM
ஆகா..ஆகா... அனுபவ முதிர்ச்சி என்பது இதுவல்லவா...:4_1_8:

அனுபவத்திலே இரண்டு வகை உண்டு தோழரே........
01 தானே பட்டுத் தெளிவது
02 மற்றவர் படும் போது நேரே பார்த்து கேட்டு அறிவது:thumbsup:
எனக்கு கிடைத்த நண்பர்கள் புண்ணியத்தால் இரண்டாம் வகை அனுபவம் தாராளமாகவே கிடைத்தன, கிடைக்கின்றன, இன்னமும் தொடர்ந்து கிடைக்கும் (அவ்வளவு நம்பிக்கை எனக்கு!!!,ஏனென்றால் என் நண்பர்கள் அப்படி!!!):lachen001: :lachen001: :lachen001:

ராஜா
22-04-2007, 04:43 AM
மாமனாரே..!

நீங்க அன்பு ரசிகனா... இல்லே.....வம்பு ரசிகனா..?

இதெல்லாம் அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கணும்ங்கிறது இல்லே.. யாராவது வம்பு பண்ணிட்டு வாங்குறதைப் பார்த்தா கூட தெரிஞ்சுக்கலாம்..!

ஓவியன்
22-04-2007, 04:47 AM
மாமனாரே..!

நீங்க அன்பு ரசிகனா... இல்லே.....வம்பு ரசிகனா..?

இதெல்லாம் அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கணும்ங்கிறது இல்லே.. யாராவது வம்பு பண்ணிட்டு வாங்குறதைப் பார்த்தா கூட தெரிஞ்சுக்கலாம்..!

அதே!:thumbsup:
இதனைத் தான் நானும் சொன்னேன்!!
ஹி!,ஹி!

அன்புரசிகன்
22-04-2007, 09:58 AM
அனுபவத்திலே இரண்டு வகை உண்டு தோழரே........
02 மற்றவர் படும் போது நேரே பார்த்து கேட்டு அறிவது:thumbsup:

எனக்கு கிடைத்த நண்பர்கள் புண்ணியத்தால் இரண்டாம் வகை அனுபவம் தாராளமாகவே கிடைத்தன, கிடைக்கின்றன, இன்னமும் தொடர்ந்து கிடைக்கும் (அவ்வளவு நம்பிக்கை எனக்கு!!!,ஏனென்றால் என் நண்பர்கள் அப்படி!!!):lachen001: :lachen001: :lachen001:

நீரல்லவோ நட்புக்கு இலக்கணம்.
உமது நண்பர்கள் கொடுத்துவைத்தவர்கள். (உம்மைப்போல் ஒரு நண்பர் கிடைக்க.)

அன்புரசிகன்
22-04-2007, 10:02 AM
நீங்க அன்பு ரசிகனா... இல்லே.....வம்பு ரசிகனா..?

வம்பு இருக்கிற அடத்தில் அன்பும் இருக்கும்.
நல்லவர் போல் நடிப்பவர்களிடம் அன்பும் அவ்வாறே இருக்கும்.இதெல்லாம் அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கணும்ங்கிறது இல்லே.. யாராவது வம்பு பண்ணிட்டு வாங்குறதைப் பார்த்தா கூட தெரிஞ்சுக்கலாம்..!

பார்த்தப்பெறுவதிலும் நேரடியாக கிடைக்கும் அனுபவம் பெரியது. அவருடைய பதிலில் அனுபவ முதிர்ச்சி தெரிந்தது. (எப்படித்தெரிந்தது என cross question கேட்க்க வேண்டாமே...) :whistling:

ஓவியன்
22-04-2007, 10:06 AM
நீரல்லவோ நட்புக்கு இலக்கணம்.
உமது நண்பர்கள் கொடுத்துவைத்தவர்கள். (உம்மைப்போல் ஒரு நண்பர் கிடைக்க.)

என் நண்பர்கள் ..................வேண்டாமே இத்துடன் விட்டு விடுகிறேன்:shutup:

அன்புரசிகன்
22-04-2007, 10:27 AM
என் நண்பர்கள் ..................வேண்டாமே இத்துடன் விட்டு விடுகிறேன்:shutup:

ஏனிந்த தயக்கம். அவ்வளவு மோசமானவர்களா???(உமது நண்பர்கள்)

ஓவியன்
22-04-2007, 10:31 AM
ஏனிந்த தயக்கம். அவ்வளவு மோசமானவர்களா???(உமது நண்பர்கள்)

ஹி!,ஹி!!!

இது நீர் உமது அறிமுகத்தின் போது பதித்த பதிவு!

ஹி!,ஹி!!


அன்பின் தமிழ் பேசும் உறவுகளே
...........
............
இப்போது வந்தாரை வெருட்டி வாழவைக்கும் கட்டாரில் உள்ளேன். ஓவியனின் அறிமுகத்தால் இந்த இணையத்திற்கு பிரவேசித்துள்ளேன்.
.........
.
:icon_clap: :icon_clap: :icon_clap:

அன்புரசிகன்
22-04-2007, 10:33 AM
ஓவியனின் அறிமுகத்தால் இந்த இணையத்திற்கு பிரவேசித்துள்ளேன்.. அவ்வளவே... வேறு என்ன கூறினேன்.??

ராஜா
22-04-2007, 12:20 PM
நடக்கற கூத்தைக் கவனிச்சா உதை வாங்கிய நண்பர்... ஒவியனின் நண்பர் ..... நம்ம...... மா............ ஹி..ஹி...

இளசு
22-04-2007, 12:41 PM
ஆசிரியர் : ஒரு பெண்ணின் உயர்வுக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?

மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.
_________________________________________________________________
எல்லாமே அருமை ராஜா..

நகைச்சுவைச் சக்கரவர்த்தி என்று அழைக்கலாமா உங்களை?

இங்கே ஹை-ஹீல்ஸ் பற்றிய கலியமூர்த்தி கவிதை -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8660

அன்புரசிகன்
22-04-2007, 01:33 PM
நடக்கற கூத்தைக் கவனிச்சா உதை வாங்கிய நண்பர்... ஒவியனின் நண்பர்

அப்பிடித்தான் சொல்லுறார்.அவற்ற நண்பர் (???) வாங்கினத பார்த்தவராம்.


..... நம்ம...... மா........
புரியல... என்ன சொல்ல வாறீங்க... :innocent0002:

ராஜா
22-04-2007, 01:45 PM
லூஸ்ல விடுங்க மாமு...!

அன்புரசிகன்
22-04-2007, 01:46 PM
விட்டுட்டேன்...

ராஜா
22-04-2007, 05:45 PM
மாதவ் சிங் சுபனிடம்....போனைக் காட்டி...

என்ன சுபன் இந்த ரீ-டயல் பட்டன் நாம் முதல்ல அமுக்கின நம்பரை தானா
போட்டுக்கும் தானே..?

ஆமாம்.. அதிலென்ன குழப்பம் உனக்கு..?

உன் நம்பர் 98424 98424 தானே..?

ஆமாம்.. என்ன பிரச்சினை மாசி..?

98424 போட்டு ரீ-டயல் போட்டா உனக்கு போகவே மாட்டேங்குது சுபன்..! நம்பரை சரி பார்க்கச் சொல்லுது..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

மாதவ் சிங் தன் நாயோட வாலை ஒரு இரும்பு குழாய்க்குள்ள விட்டு ஏதோ பண்ணிகிட்டு இருந்தாரு. அங்கே வந்த சுபன் இதைப் பார்த்துட்டு...

இப்படி்யெல்லாம் பண்ணினா நாய் வால் நிமிராது...மாசி...!

எனக்க்குத் தெரியும்.. நான் என்ன அவ்வளவு முட்டாளா..? நான் இரும்புக் குழாயை வளைக்க முயற்சி பண்ணிகிட்டிருக்கேனாக்கும்..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

மாதவ் ஒரு ஆட்டோ ஓட்டுநர்.. அவசரம் அவசரமா தன் ஆட்டோவோட ஒரு சக்கரத்தைக் கழட்டிகிட்டு இருந்தார்.. சுபன் பார்த்துட்டு கேட்டார்...

என்ன மாதவ்.. டயர் பஞ்சரா..?

கருமமே கண்ணாக இருந்த மாதவ் சிங் மேலே இருந்த அறிவிப்பைக் காட்டினார்..அதில்...

"இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துமிடம்" என்று போட்டு இருந்தது..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ஒரு நாள் மாதவ் சிங் தன்னை நாய் கடிக்கிறது போல கனவு கண்டார்.. உடனே தன் வங்கிக் கணக்குல இருந்த ப்பணத்தைப் பூரா எடுத்துட்டு வந்துட்டார்.. ஏன் தெரியுமா..?

"எங்களிடம் சேமியுங்கள்.. உங்கள் கனவுகள் நனவாகும்" அப்படின்னு அந்த வங்கியோட விளம்பரம் இருந்ததே காரணம்..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

சுபன் ; என்ன மாதவ்..? போன் பண்ணினா எடுக்கவே மாட்டியா..? காலையில் இருந்து போட்டுகிட்டே இருக்கேன்.. அடிச்சு அடிச்சு ஓயுது.. என்ன சமாச்சாரம்..?

மாதவ் சிங் ; 45 ரூபாய் செலவு பண்ணி காலர் ட்யூன் பாட்டு போட்டிருக்கேன்.. போனை எடுத்தா அதை யார் கேக்கறதாம்..?

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

மாதவ் சிங் பரிட்சைக்கு படிக்கும் போது நிலைக் கண்ணாடிக்கு முன்னாடிதான் உட்கார்ந்து படிப்பார்.. ஏன்னு காரணம் கேட்டா ...

1) ஒரு தடவை படிச்சா ரெண்டு தடவை படிச்ச மாதிரி...

2) ஒருத்தர் படிக்கிறதை இன்னொருத்தர் காதிலே வாங்கிக்கலாம்..

3) குரூப் ஸ்டடி ன்னும் வச்சுக்கலாம்..

அப்படின்னு சொல்லுவார்..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

அன்புரசிகன்
22-04-2007, 06:11 PM
சோக்கான ஜோக்குகள். நன்றி.. சுபன் ரொம்ப அறிவாளி தான்.

ஓவியா
22-04-2007, 07:43 PM
"இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துமிடம்" என்று போட்டு இருந்தது..!

ஹி ஹி ஹி தூள்

ராஜா
23-04-2007, 04:37 PM
தமிழ்த்திரைப்பட உலகமும் ..................... கணிணி உலகமும்

பில்லா - ஆள் விற்பவன் (பாடி ஷாப்பர்)

எங்க ஊரு பாட்டுக்காரன் - எங்க ஊரு பாடி ஷாப்பர்

வேலைக்காரன் - புரோகிராமர் (நம்மதான்)


கோபுர வாசலிலே - அமெரிக்க தூதரக நுழைவாயில்

வாழ்வே மாயம் - கிடைக்காத H1 விசா

மெளனராகம் - விசா கிடைக்காமல் போனதும் வீட்டில் பாடுவது

உன்னால் முடியும் தம்பி - மீண்டும் விசா அப்ளிகேஷன் போட தேவையான ஊக்கம்

மறுபடியும் - மீண்டும் H1 க்கு முயற்சி

24 மணி நேரம் - அமெரிக்க தூதரகத்தில் விசா ஒப்பம் வாங்க காத்திருக்கும் நேரம்

கடலோரக் கவிதைகள் - விசா வாங்கிய பின்னர் மெரினா பீச்சில் பாடுவது

அந்த 7 நாட்கள் - H1 விசா வாங்கியதற்கும் அமெரிக்காவில் இறங்குவதற்கும் இடையே உள்ள கால இடைவெளி


மின்சாரக் கனவு - கிரீன் கார்ட்(பச்சை அட்டை)

சகலகலா வல்லவன் - பில் கேட்ஸ்

நீரும் நெருப்பும் - மைக்ரோசாப்ட் ஐபிஎம்

நேருக்கு நேர் - நெட்ஸ்கேப்பும் எக்ஸ்புளோரரும்

பார்த்தால் பசி தீரும் - மின்வலையில் நேர்வது

பட்டிக்காடா பட்டணமா ? - லெகஸி ஸிஸ்டமா, கிளையண்ட் சர்வரா ?

புன்னகை மன்னன் - நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாத ப்ராஜக்ட் மேனேஜர்

டிக் டிக் டிக் - கிளையண்ட் அலுவலகத்தில் முதல் நாள்

ஓட்டம் - முதல் பாடி ஷாப்பரை விட்டு ஓடுவது

அலைகள் ஓய்வதில்லை - கம்பெனி விட்டு கம்பெனி ஓடிக்கொண்டே இருப்பது

நல்லவனுக்கு நல்லவன் - பெஞ்சில் இருக்கும் போதும் முழு சம்பளம் கொடுக்கும் கம்பெனி

அடிமைச் சங்கிலி - பாண்ட்

பசி - பெஞ்சில் சம்பளம் இல்லாமல்

வைதேகி காத்திருந்தாள் - பெஞ்ச் முடிய காத்திருப்பது

படிக்காத மேதை - y2k புரோகிராமர்

சர்வர் சுந்தரம் - y2k வேலை முடிந்ததும்

பயணங்கள் முடிவதில்லை - புரோகிராமில் உள்ள தவறுகளை களைவது

திருடா திருடா - அடுத்தவன் புரோகிராமை காப்பி அடிப்பது

எங்கேயோ கேட்ட குரல் - ஒரே ஒரு தடவை ஓடிய புரோகிராம்

ஆயிரத்தில் ஒருவன் - அஸெம்பிளி புரோகிராமர்

ராஜா
23-04-2007, 04:39 PM
ரஜினிகாந்த் விஜயகாந்த் (பழைய எம்ஜியார் பாணியில்) ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன், பால்காரன் என்று எல்லாத் தொழில்களையும் செய்து நடித்துவிட்டார்கள். புரோகிராமர் சோகங்கள் தெரிந்தால், புரோகிராமராகவும் அவர்கள் நடித்திருப்பார்கள்.

இதுவரை நடிக்கவில்லையாதலால், ஆறுதலுக்கு டைட்டில் பாடலாவது பாடிப்பார்ப்போம்நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்

நாலும் தெரிந்த பிஸி காரன்

மெயின்பிரேம்ல கோபால்காரன்

இண்டர்நெட்டில ஜாவாக்காரன்

கட் அண்ட் பேஸ்ட் வேலைக்காரன்

லாஜிக்குள்ள மூளைக்காரன்டா

நான் எப்பவுமே பாடி ஷாப்பர் உறவுக்காரன்டா


ஒய்டுகேன்னா அஜக்குத்தான்

ஒய்டுகேன்னா குமுக்குத்தான்

---( நான் சாஃப்வேர்காரன்..


ப்ராஜக்ட் பெரிசாச்சி

கோடு பெரிசாச்சி

பக்-கு எதிர்பார்த்து பாதி வயசாச்சி

ரிவியூ படிப்பதுக்கும் நேரத்திலே


ஈ-மெயில் விண்டோ ஓரத்திலே

ஒய்டுகேன்னா அஜக்குத்தான்

ஒய்டுகேன்னா குமுக்குத்தான்

---( நான் சாஃப்வேர்காரன்..


நான் ஹெச்-ஒன்னு இலவசமா போறேம்மா

உன் பிள்ளைக்கொரு

பி-ஒன்னு வாங்கித் தாரேம்மா

நம்பி வந்து பாரு

இது நம்ம சாஃப்வேரு

மைக்ரோசாஃப் புராடக்டு

விண்டோசுன்னு பேரு


நான் சாஃப்வேர்காரன்..சாஃட்வேர்காரன்

பேக்கெண்டில டிபிக்காரன்

ஃப்ரண்ட் எண்டுல விபிக்காரன்

ஓஎஸ்ஸில எண்டிக்காரன்

மைக்ரோசாஃப் மெளஸ்காரன்

இண்டெர்நெட்டில டிசிபி ஐபிக்காரன்


ஒய்டுகேன்னா அஜக்குத்தான்

ஒய்டுகேன்னா குமுக்குத்தான்


---

ஐஎஸ்ஓ ஆடிட்டில் ஆபத்தில் விடமாட்டேன்

சிஎம்எம் லெவல் 4ஐ மாட்டேன்னு சொல்லமாட்டேன்

அப்பப்போ போரு

அடிச்சாக்கா ஹாட்மெயிலு

அக்ஸெஸ் லைன் எல்லாம் டெடிக்கேட்டடு


ஒய்டுகேன்னா அஜக்குத்தான்

ஒய்டுகேன்னா குமுக்குத்தான்


-- நான் சாஃப்வேர்காரன்..சாஃட்வேர்காரன்

leomohan
23-04-2007, 05:00 PM
சாஃப்ட் வேர் பாட்டு சூப்பர். இதனால் பழைய பாடலை உல்டா செய்ய அருமையான கற்பனைகளை தட்டிவிட்டீர்கள். நன்றி.

மனோஜ்
23-04-2007, 05:03 PM
அருமை
ஆனா எங்கே படித்த ஞபாகம்

ஓவியா
24-04-2007, 02:30 AM
நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்

அடடா எங்கயோ போகுதே பாட்டு!!!!!!!! சூப்பர்

ராஜா
24-04-2007, 03:01 PM
ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?


பல்வேறு முறைகள்


ரஜினிகாந்த் முறை:

1) இதோ தாக்கப்போறேன், இதோ அடிக்கப்போறேன் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். சிங்கம், பயத்திலேயே வாழ்ந்து பயத்தாலேயே இறந்துவிடும்

2) இல்லையென்றால், ரஜினி முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை எடுத்து சிங்கத்தின் மீது போட்டுவிட்டால் போது, எடை தாங்காமல் உயிரைவிட்டுவிடும்


கமலஹாசன் முறை:

சிங்கத்தின் அருகே சென்று நாயகன் ஸ்டைலில் கதறி அழவேண்டும். துக்கம் தாங்காமல் செத்துவிடும் சிங்கம்

இல்லாவிட்டால் கமல் முத்தம் கொடுக்கப் போகிறார் என்று வதந்தியைக் கிளப்பி விடலாம்.. சிங்கம் அதிர்ச்சியில் செத்து விடும்.


ஜெயலலிதா முறை:

இரவு 2 மணிக்கு, போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனைக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தைக் கொல்வதுதான்.

அல்லது ஹெலிகாப்டரில் அடிக்கடி காட்டுப் பக்கம் சுற்றி வந்தால், ஹெலியின் நிழலுக்கு காலில் விழுந்து விழுந்து களைத்துப் போய் செத்துவிடும்.

கருணாநிதி முறை :

முதலில் சிங்கத்தை உடன் பிறப்பாக்க வேண்டும். ஆக ஒரு மாதம் தொடர்ந்து, 'என் சிங்கமே, என் உடன் பிறப்பே ' என்ற ரீதியில் கடிதங்கள். பிறகு, ஜெயலலிதாவின் வழக்கமான அட்டகாசத்தை காரணமாக வைத்து, 'சிங்கமே, என் உடன் பிறப்பே.. நீ எனக்காக தற்கொலை செய்து கொள்ளாதே ' என்ற ரீதியில் கடிதம் வந்ததும், தலைவர் தன்னை தற்கொலை செய்து கொள்ள சொல்கிறார் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, சிங்கம் தற்கொலை செய்து கொள்ளும். அவ்வளவுதான்.


மணிரத்னம் முறை:

சிங்கத்துக்கு சூரிய வெளிச்சமே காட்டக்கூடாது. ஒரே ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து இருட்டறையில் அதனிடம்

செத்துடு...

மொத்தமா செத்துடு..

ரத்தம் வராம செத்துடு

என்று ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் போகாமல் சுகாசினி டப்பிங்கில் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். எரிச்சலில் தற்கொலை செய்துகொண்டுவிடும்.

பாலச்சந்தர் முறை:

ஒரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள். நமது சிங்கமும், பெண் சிங்கமும் காதலில் விழும். இன்னொரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள், அப்புறம் இன்னொரு பெண் சிங்கத்தை. அப்புறம் ஒரு ஆண் சிங்கத்தை. முதல் ஆண் சிங்கம் இரண்டாவது பெண் சிங்கத்தை காதலிக்கும். முதல் பெண்சிங்கம் இரண்டாவது ஆண் சிங்கத்தை காதலிக்கும். சரி, இப்போது உங்கள்ளுக்குள் என்ன உறவுமுறை என்று கேளுங்கள்...

குடும்பமே கூட்டமாக் தற்கொலை செய்துகொள்ளும்.


பாரதிராஜா முறை:

நெப்போலியனை அனுப்பி திருப்பாச்சி அருவாளால் ஒரே போடு. அவ்வளவு தான். தீர்ந்தது.

இல்லாவிட்டால் அவர் மகன் ஆணழகன் மனோஜ் நடிக்க ஒரு படம் தயாரிக்கிறியா..? என்று கேளுங்கள்.. சிங்கம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.


சங்கர் முறை:

சிங்கத்தை ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே சுவிட்ஸர்லாந்து ஆல்ப்ஸ் மலை செட்டிங் போட்டு, நல்ல அழகான லொகேஷனில் கம்ப்யூட்டர் அனிமேஷனில் எலும்பு தனி சதை தனியாக பிரிக்க வேண்டியதுதான்.

அல்லது சிவாஜி ரிலீஸ் எப்போ என்று கேளுங்கள்.. சிங்கம் பரலோகப் பிராப்திதான்...!

அன்புரசிகன்
24-04-2007, 03:07 PM
அலுவலகத்தில் பெரிதாக சிரித்துவிட்டேன். அடக்க முடியாமல். அதிலும் பாலச்சந்தர் முறை தூள். நன்றி மாப்ளோய்.

ஓவியா
24-04-2007, 04:58 PM
ஹி ஹி ஹி

ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?

அண்ணா,
ரொம்ப அட்டாகாசம் பன்ன ஆரபிச்சுடீங்க ....படித்து வாய் விட்டே சிரித்தேன்......ஹி ஹி ஹி

அண்ணா, இதை நகைச்சுவை நடிகர்கள் எப்படி செய்வார்கள்????

ஓவியன்
25-04-2007, 07:21 AM
ஹாஹா அருமையாக இருக்கு

இன்னும் சில முறைகள் உள்ளனவே

ஏ.ஆர்.ராஜா முறை

ராஜா அண்ணாவின் முன்னால் விட்டு அவரது நகைச்சுவையைக் கேட்கச் செய்ய வேண்டும், அது சிரிச்சு சிரிச்சு வயிறு வெடித்துச் செத்துவிடும்.


மயூரேசன் முறை

மயூரேசனின் கதைகளைக் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும், வாசித்து விட்டு மயூரேசன் சிங்களப் பெட்டையளப் பற்றி விட்ட பீலாவை நம்பி வயிற்றெரிச்சலில் வயிறு புண்ணாகி நோய்வாய்ப் பட்டுச் செத்துவிடும்.:D

ஓவியன்
25-04-2007, 07:35 AM
மயூரேசன் முறை 2

மயூவிடம் சொல்ல வேண்டும் இந்த சிங்கத்தைக் கொல்வது உன் பொறுப்பு என்று, உடனே அவர் தனது ஹரிப் பொட்டர் துடைப்பக் குச்சியை எடுத்துப் போயி சிங்கத்துன் மூக்கில் நுளைப்பார் (மந்திரம் தெரியாததால் அதனைத் தானே செய்யலாம்:D ). உடனே சிங்கம் மூச்சு விட முடியாமல் தும்மித் தும்மிச் செத்துவிடும்.

மனோஜ்
25-04-2007, 07:46 AM
அருமை நகைசுவைகள் நன்றி ராஜா அண்ணா

pradeepkt
25-04-2007, 09:50 AM
மயூரேசன் முறை 2

மயூவிடம் சொல்ல வேண்டும் இந்த சிங்கத்தைக் கொல்வது உன் பொறுப்பு என்று, உடனே அவர் தனது ஹரிப் பொட்டர் துடைப்பக் குச்சியை எடுத்துப் போயி சிங்கத்துன் மூக்கில் நுளைப்பார் (மந்திரம் தெரியாததால் அதனைத் தானே செய்யலாம்:D ). உடனே சிங்கம் மூச்சு விட முடியாமல் தும்மித் தும்மிச் செத்துவிடும்.

ஓய்... ஹாரி பாட்டர் பத்திப் பேசாதே... மயூரேசன் நினைத்தால் சும்மா மந்திரம் சொல்லி சிங்கத்தைச் சிக்கன் 65 ஆக மாற்றித் தின்று விடுவான்.. :violent-smiley-010:

மதி
25-04-2007, 10:00 AM
ஓய்... ஹாரி பாட்டர் பத்திப் பேசாதே... மயூரேசன் நினைத்தால் சும்மா மந்திரம் சொல்லி சிங்கத்தைச் சிக்கன் 65 ஆக மாற்றித் தின்று விடுவான்.. :violent-smiley-010:
ஏ...சாமி
இவ்ளோ ஹாரிபாட்டர் ரசிகர்களா???:huh:

மதி
25-04-2007, 10:02 AM
ராஜாண்ணே...
அத்தனை முறையும் அருமை...
ரொம்பவும் புடிச்சது பாலச்சந்தரும் மணிரத்னமும் தான்..
கலக்கிட்டீங்க போங்க..

எங்கிருந்து தான் யோசிப்பீங்களோ..?

ஷீ-நிசி
25-04-2007, 10:04 AM
கலக்கிட்டீங்க ராஜா சார்.....

வைகோ இருந்தா எப்படி சாகடிச்சி இருப்பார் சிங்கத்த....

ஹிரோஷிமா நகரத்திலே, சம்பல் பள்ளத்தாக்கிலே கி.மு 1900 ஆண்டுகளிலே.....

சார் போதும்..... சிங்கம் செத்துடுச்சி...

ஓவியன்
25-04-2007, 10:13 AM
ஓய்... ஹாரி பாட்டர் பத்திப் பேசாதே... மயூரேசன் நினைத்தால் சும்மா மந்திரம் சொல்லி சிங்கத்தைச் சிக்கன் 65 ஆக மாற்றித் தின்று விடுவான்.. :violent-smiley-010:

அப்ப அது சிங்கம் 65!!!

அதற்கு 65 சிங்கம் வேணுமே???:icon_tongue:

அன்புரசிகன்
25-04-2007, 10:26 AM
அப்ப அது சிங்கம் 65!!!
அதற்கு 65 சிங்கம் வேணுமே???:icon_tongue:

ஏம்பா உண்மையிலெயே சிக்கன் 65 எப்பிடீன்னு தெரியாதா..? அது தெரிந்தால் சிங்கம் 65 ற்கு 65 சிங்கம் தேவைன்னு சொல்லியிருக்கமாட்டீர்.

ஓவியன்
25-04-2007, 10:52 AM
ஏம்பா உண்மையிலெயே சிக்கன் 65 எப்பிடீன்னு தெரியாதா..? அது தெரிந்தால் சிங்கம் 65 ற்கு 65 சிங்கம் தேவைன்னு சொல்லியிருக்கமாட்டீர்.

நகைச்சுவைப் பகுதியில் வந்து ஆராய்ட்சி செய்கிறீரே?

உம்மை.......:violent-smiley-004:

அன்புரசிகன்
25-04-2007, 10:57 AM
ஆராச்சி செய்யவும் இடம் முக்கியமோ,?

ராஜா
25-04-2007, 04:37 PM
!நீங்க ஆபரேஷன் டேபிள்ல இருக்கீங்க.. அப்போ கீழே இருக்கற
மாதிரி எதுவும் உங்க காதிலே விழலேன்னா நீங்க பொழைக்க
வாய்ப்பு அதிகம் இருக்கு....

1) சிஸ்டர்.. அதை பத்திரமா எடுத்து வையுங்க..
போஸ்ட் மார்ட்டம் செய்யும்போது தேவைப்படும்..!

2) என்னப்பா..? இந்த ஆள் பொண்டாட்டி நாம கேட்ட
தொகைக்கு ஒத்து வந்துட்டாங்களா..?

3) ஏம்மா..? எத்தனை தடவை சொன்னாலும் கேட்க
மாட்டீங்களா..? உங்க நாய் அதைக் கவ்விகிட்டு ஓடிருச்சே..
போங்க.. போய் அதைப் பிடிக்க முடியுமா பாருங்க..

4) ஏன் டாக்டர்..? ் குழாய்ல ஆக்சிஜன வரலை போல
இருக்கே.. எம்ட்டி சிலிண்டர் மாத்தவே இல்லியா..?

5) டாக்டர்.. கரண்ட் இல்லாதப்போ தையல் போடாதீங்கன்னு
சொன்னா கேட்க மாட்டீங்களா..? ரெண்டு மூனு கத்தரிக்கோல்
குறையுது பாருங்க..

6) ஏன் சிஸ்டர்.. மீட்டர் இவ்வளவு எகிறுதே..!
காலையில செத்துப்போனாரே ஒரு பேஷண்ட்
அவருக்கும் இப்படித்தானே..?

7) என்ன டாக்டர்..? ஆபரேஷன் ஓவர்ங்கறீங்க.. ட்ரேயில
எடுத்து வச்ச கல்லீரல் அப்படியே இருக்கே.. கவனிக்கலையா..?

8) ஏன் டாக்டர்.. நம்ம விஐபி பேஷண்ட்க்கு தேவைப்படற
அதே ரேர் குரூப் கிட்னி இவருக்கும் இருக்கு கவனிச்சீங்களா..?

ராஜா
25-04-2007, 04:40 PM
மூன்று மருத்துவர்கள்
சொர்க்கம் போனார்கள்.. வாயில் தேவதை வழிமறித்து ...

நீங்கள் செய்த சேவைகளைச் சொல்லிவிட்டு உள்ளே செல்லுங்கள்..

டாக் 1 ; நான் குழந்தைகள் மருத்துவன்.. ஏராளமான
குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறேன்..

தேவதை ; சரி.. உள்ளே செல்லுங்கள்..

டாக் 2 ; நான் பொது மருத்துவன்.. அனேகம் பேரை
குணமடைய வைத்திருக்கிறேன்..

தே ; சரி.. நீங்களும் உள்ளே போகலாம்..

டாக் 3 ; நான் தர்ம ஆஸ்பத்திரி டாக்டர்..!

தே ; ஓ ..அப்படியா..? சரி. ரெண்டு நாள் மட்டும் இங்க
இருங்க.. அப்புறம் வெளியே போயிடுங்க..!
_______________________________________

அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலை
நிறுத்தம் துவங்கியது. டாக்டர்கள் 7 அம்ச கோரிக்கைப்
பட்டியலைக் கொடுத்து நிறைவேற்றக் கோரினார்கள்..

ஆஸ்பத்திரி நிர்வாகிகள் ஒரு பதில் அறிக்கை கொடுத்தார்கள்,


"ஒரு மருந்துக் கடைக்காரரைக் கூப்பிட்டு, டாக்டர்கள் எழுதிக்
கொடுத்த கோரிக்கைகள் என்ன என்று புரிந்த பிறகு
முடிவு எடுப்போம்."
________________________________

அந்தப் பெண் டாக்டரிடம் சொன்னாள்,
"டாக்டர், என் கணவர் தன்னை ஒரு டிஷ் ஆண்டனாவாகக் கற்பனை செய்து கொள்கிறார்."

டாக்டர்: கவலைப்படாதீர்கள்- சரி செய்து விடலாம்.

பெண்மணி: வேண்டாம் ...டாக்டர், அவரை சன் டீவி தெரியற
ஆங்கிள்ல திரும்பி இருக்கும்படி செய்தால் போதும்.
________________________________________

மனோஜ்
25-04-2007, 04:46 PM
இதை எல்லம் அவரு கேட்டா ஆபரேஷன் வேன்டாம் நானே சாவுரேனு செத்துருவாரு
எப்படி அண்ணா இப்படி யோசிக்கிறிங்க சூப்பர்

poo
26-04-2007, 04:43 AM
ஆப்பரேஷன் தியேட்டர் வசனங்கள் அருமை...நாட்டுநடப்பை நல்லாவே சொல்லியிருக்கீங்க ராஜா..

aren
26-04-2007, 05:07 AM
நல்லகாலம் ஆபரேஷன் செய்யும்பொழுது மயக்கமருந்து கொடுத்து விடுகிறார்கள். இல்லையென்றால் இந்த மாதிரி வார்த்தைக்களை கேட்டு அனைவரும் தானாகவே செத்துவிடுவார்கள்.

நல்ல சிரிப்பு.

தொடருங்கள் ராஜா அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்

ராஜா
26-04-2007, 06:04 PM
நன்றி நண்பர்களே...!

ராஜா
26-04-2007, 06:06 PM
அமெரிக்க அதிபர் புஷ் ஒருநாள் காலையில் மெல்லோட்டம் [ஜாகிங்] சென்ற போது ஒரு சாக்கடைக் குழிக்குள் விழுந்து உயிருக்குப் போராடினார்.. அங்கு விளையாடிக்கொண்டிருந்த 3 சிறுவர்கள் புஷ்சைக் காப்பாற்றவே, மகிழ்ந்த அதிபர், சிறுவர்கள் வேண்டும் பரிசைத் தருவதாக உறுதியளித்தார்..

முதல் சிறுவன் ; எனக்கு ஒரு ஃபெராரி கார் வேண்டும்..

புஷ் ; நாளைக் காலை உன் வீட்டு வாசலில் அது நிற்கும்..

2ம் சிறுவன் ; எனக்கு ஒரு நல்ல வீடு வேண்டும்..

புஷ் ; அப்படியே கிடைக்கும்..

3ம் சிறுவன் ; எனக்கு ஒரு சக்கர நாற்காலி வேண்டும்..

புஷ் ; ஆனால் மகனே.. உன் கால்கள் நன்றாகத்தானே உள்ளன..?

3ம் சிறுவன் ; ஆம்.. ஆனால் உங்களைக் காப்பாற்றியது என் தந்தைக்குத் தெரிந்தால் பிறகு எனக்கு சக்கர நாற்காலி தேவைப்படும்..!

ராஜா
26-04-2007, 06:08 PM
கொஞ்சம் பழசுதான்.. ஆனா இன்னொருமுறை படிக்க உகந்தது...

லாலு பிரசாத் யாதவ் தன் மகனுக்கு திருமணம் செய்விக்க விரும்பினார்..

முதலில் மகனிடம் பேசினார்..

லாலு ; மகனே உனக்கு ஒரு பெண் பார்த்திருக்கேன்..

மகன் ; ஆனா நான் ஒரு பொண்ணை லவ் பண்றேனே..!

லாலு ; அந்தப் பொண்ணு நான் பார்த்திருக்கற அம்பானி பொண்ணை விட பணக்காரியா..?

மகன் ; அப்படியா..? உங்க வார்த்தையை நான் என்னைக்குப்பா மீறியிருக்கேன்.. உங்க இஷ்டப்படி செய்யுங்க..!

அடுத்து லாலு முகேஷ் அம்பானியை அணுகினார்..

லாலு ; உங்க பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்..

அம்பானி ; ஆனா என் பொண்ணுக்கு இ