PDA

View Full Version : ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11

ராஜா
24-02-2007, 03:49 AM
ஒரு சர்தார் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றார்.. வெகு நேரமாகியும் தூண்டிலில் எதுவும் சிக்கவில்லை.. இந்த ஏரியில் மீன்களே கிடையாது என்ற முடிவுக்கு வந்து எழுந்து செல்ல முடிவு செய்தபோது ஒரு சிறுவன் தூண்டிலுடன் வந்தான்.. சர்தார் ஏளனமாகச் சிரித்தார்..

" 4 மணி நேரமா எனக்கே கிடைக்கலே.. உனக்கு கிடைச்சுடுமா..?

ஆனால் சிறுவன் மீன்களைப் பிடித்து குவிக்க ஆரம்பித்தான்.. இது எப்படி..? நானும் வெகுநேரமாக முயற்சி செய்கிறேன்.. எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.. இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு மீன்கள்..? சிறுவனிடமே கேட்டார்..

" தம்பி.. இதோ பார்.. உன் தூண்டில் போலதான் நானும் வச்சிருக்கேன்.. நீ பிடிக்கற இடத்திலேதான் நானும் முயற்சி செய்யறேன்.. ஆனா எனக்கு மட்டும் ஏன் மீன் கிடைக்கவே மாட்டேங்குது..?

சிறுவன் சொன்னான்.. " ஒரே ஒரு வித்தியாசம் இருக்கு.. நான் தூண்டில் முள்ளுல மண் புழு கோத்து போடறேன்.. நீங்க வெறும் முள்ளைப் போட்டு மீன் பிடிக்க முயற்சி செய்யறீங்க.. முறைப்படி அணுகுங்க.. வெற்றி நிச்சயம்..!"

ராஜா
24-02-2007, 04:01 AM
மூன்று தோழிகள் சந்தித்துக் கொண்டபோது தங்கள் காதலர்கள் பற்றி பேச்சு திரும்பியது..

ஒருத்தி சொன்னாள்.. "என் ஆள் ரொம்ப முரடன்.. ஆசையா பேசினாக் கூட முகத்துல குத்து விட்டுட்டுதான் கொஞ்சுவான்.. !"

அப்படியா..? என்னடி வேலை பார்க்கறாரு..?

குத்து சண்டை பயிற்சியாளர்..

அடுத்தவள் கதையோ இன்னும் சோகம்.. ரெஸ்டாரண்ட் போனால் ஒவ்வொரு உணவு வகையிலும் உடலுக்கு கேடான சமாச்சாரம் இருக்குன்னு சொல்லி, வெறும் மினரல் வாட்டர் மட்டும் வாங்கிக் கொடுப்பானாம் அவளோட டாக்டர் காதலன்..!

மூன்றாமவள் சொன்னாள்.. " என் காதலர் தங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி எப்படி எல்லாம் இருக்கும் என்று அழகாக வர்ணிப்பார்.. அவர் சொல்வதைக் கேட்கும்போது உலகத்தில் சிறந்த காதலர் இவர்தான் எனும் வியப்பு தோன்றும்.."

மற்ற இருவரும் ஆர்வமுடன் கேட்டனர்.. "நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரிடி.. உன் காதலர் எங்கே வேலை செய்யறார்..?"

"அதிர்ஷ்டமும் இல்ல.. புண்ணாக்கும் இல்ல.. அந்தாளு மைக்ரோ சாஃப்ட் ல வேலை பார்க்கறார்.. பேச்சு மட்டும்தான் அப்படி... காரியத்தில் ஒண்ணும் இருக்காது.. எல்லாம் சொதப்பும்..!"

ஆதவா
24-02-2007, 04:16 AM
நுண்ணியமென்மையை இவ்வளவு கேவலமாக்கிவிட்டு எங்களை சிரிக்க வைத்துவிட்டீர்களே!

மனோஜ்
24-02-2007, 08:45 AM
"அதிர்ஷ்டமும் இல்ல.. புண்ணாக்கும் இல்ல.. அந்தாளு மைக்ரோ சாஃப்ட் ல வேலை பார்க்கறார்.. பேச்சு மட்டும்தான் அப்படி... காரியத்தில் ஒண்ணும் இருக்காது.. எல்லாம் சொதப்பும்..!"
ராஜா ஆனால் அந்த சொதப்பல் தான் அனனைவறாலும் உபயோகிக்கபடுகிறது இது அசாத்திய உன்மைதானே

தாமரை
24-02-2007, 09:40 AM
மூன்றாமவள் சொன்னாள்.. " என் காதலர் தங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி எப்படி எல்லாம் இருக்கும் என்று அழகாக வர்ணிப்பார்.. அவர் சொல்வதைக் கேட்கும்போது உலகத்தில் சிறந்த காதலர் இவர்தான் எனும் வியப்பு தோன்றும்.."

மற்ற இருவரும் ஆர்வமுடன் கேட்டனர்.. "நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரிடி.. உன் காதலர் எங்கே வேலை செய்யறார்..?"

"அதிர்ஷ்டமும் இல்ல.. புண்ணாக்கும் இல்ல.. அந்தாளு மைக்ரோ சாஃப்ட் ல வேலை பார்க்கறார்.. பேச்சு மட்டும்தான் அப்படி... காரியத்தில் ஒண்ணும் இருக்காது.. எல்லாம் சொதப்பும்..!"




யாரோ யாருக்கோ எப்படி எப்படியோ ஆப்பு வைக்கறாங்கப்பு.. சாக்கிரத மக்கா சாக்கிரத!!!

ராஜா
25-02-2007, 07:15 AM
ஆண்கள் ஹெல்மெட் போல.. எப்போவாவது அவசரத்துக்கு பயன்படுவாங்க..ஆனா அதுக்காக வாழ்க்கை பூரா கூடவே வச்சுத் தொலைக்கணும் அதுகள...!


வாழ்க்கை சக்கரம் மாதிரி.. எப்போதும் நீ காக்காயா இருக்க முடியாது..
சில நேரங்களில் சிலையாகவும் இருக்கணும்.. அப்பதான் இன்னொரு காக்கா என்னென்ன அட்டூழியம் பண்ணும்ன்னு உனக்கு தெரியும்..!

உங்க பிள்ளைகள் வளர்ந்துட்டாங்கன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..
பொம்பளப் பிள்ளைங்க உதட்டுச் சாயம் போட்டுக்க ஆரம்பிக்கும்..
ஆம்பளப் பிள்ளைங்க அந்த சாயத்தை எல்லாம் அழிக்கத் தொடங்கும்..!


ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு ஆச்சரியப்படும் பெண் இருப்பாள்.. இதுக்கு எப்படி இப்படி ஒரு வாழ்வுன்னு வியப்போட..!
__________________

ராஜா
25-02-2007, 07:20 AM
பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனா வர சில எளிய வழிகள்..

அதிகாலையில் 4 மணிக்கு எழுந்திருங்க.. குளிரடிச்சாலும் குளிக்க மறக்காதீங்க..
அதுவும் பச்சைத் தண்ணில குளிச்சா ரொம்ப நல்லது.ஒரு அஞ்சு மணி வாக்கில அம்மா தர்ற டீயையோ சாப்பிட்டுட்டு டி.வி. ஆன் பண்ணுங்க.. லோக்கல் சானல்ல நல்ல பக்தி பாட்டு போடுவாங்க.. இல்லேண்ணா சி.டி.யில பி.சுசிலாவோட பக்திப் பாடல் போட்டு அட்மாஸ்பியர் கிரியேட் பண்ணுங்க.. சூழ்நிலை ரொம்ப முக்கியம்.. மனசை ஒருமுகப் படுத்துங்க.. இப்ப ஆறு மணி ஆகியிருக்கும்.. இப்ப கெளம்புனீங்கன்னா நிச்சயமா நீங்கதான் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்.. ஒரு ஆறரைக்கெல்லாம் போயிரலாம்..யுனிவர்சிட்டிக்கு..!
-----------------------------------------------------------------------------------

அன்புரசிகன்
25-02-2007, 09:11 AM
பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனா வர சில எளிய வழிகள்..

ஒரு ஆறரைக்கெல்லாம் போயிரலாம்..யுனிவர்சிட்டிக்கு..!
-----------------------------------------------------------------------------------
என்னத்துக்கு? கூட்டித்துடைக்கவா? அது சரி நீங்க தான் கல்லூரியிலும் முதல் மாணவரா வந்தீங்களாமே. உண்மையா? ம் ம் அனுபவம்.

ரசித்தேன் வாழ்த்துக்கள். நகைச்சுவையை.:p

ஷீ-நிசி
25-02-2007, 12:58 PM
உங்க பிள்ளைகள் வளர்ந்துட்டாங்கன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..
பொம்பளப் பிள்ளைங்க உதட்டுச் சாயம் போட்டுக்க ஆரம்பிக்கும்..
ஆம்பளப் பிள்ளைங்க அந்த சாயத்தை எல்லாம் அழிக்கத் தொடங்கும்..!


ஹ ஹ ஹ ஹ ஹ..... நண்பரே! இரண்டே வரிகளில் இருதலைமுறையினரின் வளர்ச்சி வேகத்தை சொல்லி சிரிக்க வைத்துவிட்டீர்கள்....

ராஜா
25-02-2007, 01:13 PM
என்னத்துக்கு? கூட்டித்துடைக்கவா? அது சரி நீங்க தான் கல்லூரியிலும் முதல் மாணவரா வந்தீங்களாமே. உண்மையா? ம் ம் அனுபவம்.

ரசித்தேன் வாழ்த்துக்கள். நகைச்சுவையை.:p

அட.. இது எனக்கு தோணவே இல்லியே.. என்ன இருந்தாலும் உங்கள் தொழில் சுத்தம் ..!அலாதி.. தொடருங்க.. பாராட்டறதை..;-)

ராஜா
26-02-2007, 02:52 AM
சர்தார்ஜி டாக்டர் தன் நோயாளியிடம் சொன்னார்..

உங்களுக்கு வலி வருவதற்கு அரை மணி முன் இந்த மாத்திரையைச் சாப்பிடுங்க.. திடீர் திடீர்ன்னு வர்ற தலைவலி இனி வராது..!
_______________________________________

ஒருவர் தவறுதலாக கார் சாவியைக் காருக்குள்ளேயே வைத்து கதவை பூட்டிவிட்டார். ஒரு [சர்தார்] மெக்கனிக்கை வரவழைத்து கதவைத் திறந்து விடச் சொல்லிவிட்டு காபி குடிக்க வீட்டுக்குள் சென்றுவிட்டார். அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது சர்தார் ஓட்டுநர் பக்க கதவைத் திறக்க போராடிக் கொண்டிருந்தார்.. எதேச்சையாக கார் உரிமையாளர் அடுத்த பக்க கதவின் கைப்பிடியை அழுத்திய போது கதவு திறந்து கொண்டது.ஆச்சரியமடைந்த கார்க்காரர் சர்தாரைப் பார்த்து...

" ஹலோ.. இந்த பக்கம் திறந்துதான் இருக்கு.. நான் சரியா கவனிக்கல போல இருக்கு..!"

சர்தார் மெக்கானிக் சொன்னார்..

" இல்லே.. நான் தான் அதை சற்று முன் சிரமப்பட்டு திறந்தேன்.. மற்ற மூன்று பக்க கதவுகளையும் திறந்தபின் அழைக்கிறேன்.. நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்..!
____________________________________________

சர்தார் தன் நண்பனிடம்...

என்ன இருந்தாலும் கடவுளுக்கு அறிவு ஜாஸ்திதான்..!

எதுக்கு இப்படி சொல்றே..?

மூக்கு கண்ணாடி கண்டுபிடிக்கறதுக்கு ரொம்ப காலத்துக்கு முந்தியே அதை மாட்டிக்கறதுக்கு நமக்கு ரெண்டு காதை வச்சு நம்மை படைச்சுருக்காரே..!
______________________________________

சர்தாரின் நண்பர் ஜாப் டைப்பிங் கடை துவக்கினார்.. அவர் கடை வாசலில் இவ்வாறு விளம்பரப் பலகை இருந்தது.. இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் தட்டச்சு செய்யப்படும..

பக்கத்திலேயே சர்தார் ஜெராக்ஸ் கடை ஆரம்பித்து இவ்வாறு பலகை வைத்தார்..இங்கு எல்லா மொழிகளிலும் ஜெராக்ஸ் எடுக்கப்படும்..!
_______________________________________

ஏப்ரல் ஒன்றாம் தேதி தன் நண்பனை கேலி செய்ய நினைத்த ஒருவர் அவரை விருந்துக்கு அழைத்துவிட்டு கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். நண்பர் [சர்தார்] வந்து பார்த்தபோது..கதவில் ஒரு அட்டையில் நல்லா ஏமாந்தியா.. ஏப்ரல் ஃபூல் என்று இருந்தது. சற்றும் அயராத சர்தார், நான் விருந்துக்கு வரவே இல்லையே.. நீதான் ஏப்ரல் ஃபூல் என்று எழுதி பதில் எழுதிவிட்டுச் சென்றார்..!

pradeepkt
26-02-2007, 05:27 AM
யாரோ யாருக்கோ எப்படி எப்படியோ ஆப்பு வைக்கறாங்கப்பு.. சாக்கிரத மக்கா சாக்கிரத!!!ஆமாங்க எல்லாரும் சாக்கிரதயா இருந்துக்கிருங்க :D

ஓவியன்
26-02-2007, 08:09 AM
ராஜாவின் ரவுசு உண்மையில் தாங்க முடியலீங்கோ!!!!!!!!!!

ராஜா
27-02-2007, 05:49 AM
புயல் காரணமாக பள்ளிக்கு 3 நாள் விடுமுறை..

பள்ளி திறந்த பிற்பாடு ஆசிரியர் கேட்டார்.. பிள்ளைகளே..!
விடுமுறையை நல்ல வழியில் செலவிட்டீர்களா..?

சின்னா ; ஆமாம் அய்யா.. கடவுளை வணங்கினேன்..

என்ன வேண்டிக்கொண்டாய்..?

இன்னொரு புயல் வரவேண்டும் என்று...!!!

_________________________________________________________________________

ஆசிரியர்: முட்டாள்! உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல் பர்ஸ்ட்டா இருந்தார் தெரியுமா?

மாணவன்: சார்! உங்க வயசுலே ஹிட்லர் தற்கொலை பண்ணிக்கிட்டார் தெரியுமா?
__________________________________________________________________________

சர்தார்ஜியின் மகன்: அப்பா! நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்

சர்தார்ஜி: எப்படிடா?

சர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்!

_________________________________________________________________________

ஆசிரியர் பழமொழி என்ற பொருளில் அன்றைய பாடத்தை எடுத்தார். அவரது சுவாரஸ்யமான இழுவையின் காரணமாக ஒரு மாணவன் அச்ந்து தூங்கி விட்டான்.. கடுப்பான ஆசிரியர் பக்கத்து மாணவனைக் கூப்பிட்டு அவனை எழுப்பச் சொன்னார்..

அவன் மறுத்து இவ்வாறு சொன்னான்.." உப்பத் தின்னவன் தான் தண்ணி குடிக்கணும்".. நீங்களே எழுப்புங்க சார்..!!!

_________________________________________________________________________

ஆசிரியர் ; மாணவர்களே.. நாம் உணவு சாப்பிடும் முறை, உணவு எப்படி ஜீரணம் ஆகிறது என்று சுருக்கமாக சொல்லமுடியுமா..?

சின்னா ; முடியும் அய்யா.. வலது கையால் துவங்கி இடது கையால் முடிக்கிறோம்...!!!

________________________________________________________________________

ஆசிரியர் ; பிள்ளைகளே.. 5 ம் 4 ம் எவ்வளவு ?

சின்னா ; 9.

ஆசிரியர் ; 4 ம் 5 ம் எவ்வளவு..?

சின்னா ; 6.

ஆசிரியர் ; எப்படி..?

சின்னா ; நீங்க கேள்வியை மாத்திக் கேட்டீங்க.. நான் பதிலை திருப்பி சொன்னேன்..!!!!

மனோஜ்
27-02-2007, 06:41 AM
புயல் காரணமாக பள்ளிக்கு 3 நாள் விடுமுறை..
பள்ளி திறந்த பிற்பாடு ஆசிரியர் கேட்டார்.. பிள்ளைகளே..!
விடுமுறையை நல்ல வழியில் செலவிட்டீர்களா..?

சின்னா ; ஆமாம் அய்யா.. கடவுளை வணங்கினேன்..
என்ன வேண்டிக்கொண்டாய்..?
இன்னொரு புயல் வரவேண்டும் என்று...!!!
..!!!!

பள்ளி காலத்தில் அனைவரின் ஆசையூம் இது தான் ரவுசு ராஜா அவர்களே

அமரன்
27-02-2007, 02:01 PM
ராஜா தொடர்ந்து படிச்சிட்டு வரேன். கலக்கிறீங்க.

ராஜா
28-02-2007, 09:46 AM
சில தப்புகள் ரொம்ப கேவலமா இருக்கும்.. நமக்கே இன்னொரு தடவை அந்த தப்பைச் செய்ய வெட்கமா இருக்கும்ன்னா பார்த்துக்கங்களேன்..!

சுத்தமான மேஜையோட உள் இழுவை அறையிலே ரொம்ப குப்பை இருக்கும்..

ஒரு கடுமையான விவாதம் முடிவுக்கு வருதுன்னா அதில் பங்கெடுத்துக்கிட்டவங்க களைச்சுப் போயிட்டாங்கன்னு அர்த்தம்..

மோசமான அனுபவத்துக்கப்புறம் நல்ல முடிவு எடுக்கறோம்.. ஆனா மோசமான முடிவுகளால் நிறைய நல்ல அனுபவமும் கிடைக்குது.. ஒத்துக்கறீங்களா..?

எப்போவும் நினைவு வச்சுக்கங்க.. நீங்க மத்தவங்களைப் போல இல்ல.. வித்தியாசமானவர்.. முக்காவாசிப் பேர் உங்களைமாதிரிதான்..!

நான் 300 பக்கத்துல ஒரு புத்தகம் எழுதிக்கிட்டு இருக்கேன்.. முக்காவாசி முடிஞ்சுடுச்சு.. எல்லா பக்கத்துக்கும் நம்பர் போட்டுட்டேன்.. இனி விஷயம் எழுதவேண்டியது மட்டும்தான் பாக்கி..!

யாருமே உங்களைக் கண்டுக்க மாட்டேங்கறாங்களா..? ஒரு மோட்டார் சைக்கிளை கடனுக்கு வாங்கிட்டு ரெண்டு தவணை கட்டாம விட்டுப் பாருங்க..!

ரொம்ப பயலுக உயிரோட இருக்கக் காரணமே நாட்டுல கொலை ஒரு குற்றமா கருதப்படறதாலதான்..

நமக்கு வெற்றி தனிமையிலும் தோல்வி எல்லோரும் இருக்கும்போதும் தான் வரும்..

எச்சரிக்கை ; காலண்டரில் உள்ள தேதிகள் தோற்றமளிப்பதைவிட விரைவில் நெருங்கிவிடும்..!

அது என்னாங்கோ இலவசப் பரிசு..? பரிசுன்னாலே இலவசம்தானே..?

ராஜா
28-02-2007, 09:47 AM
பில் கேட்ஸ் இறந்த பிறகு எமலோகம் சென்றார்.

எமன்: வாருங்கள் கேட்ஸ். நீங்க பண்ணிய காரியத்திற்கு இனி உங்களுக்கு இதுதான் உறைவிடம். ஆனால் நான் இப்போது நல்ல மூடில் இருக்கின்றேன். ஆகையினால் உங்களுக்கு மூன்று சாய்ஸ் தருகிறேன்

இதோ பாருஙள், இது நெருப்பு குண்டம், இதில் அனைவரையும் போட்டு காய்த்து எடுப்போம். இரண்டாவது, அது ஜல பீடகம். அதில் ஒவ்வொருவரும் அமிலம் கரைத்த நீரில் மூழ்கடிக்க படுவார்கள்.

மூன்றாவதாக அங்கே ஒரு அறை தெரிகிறதே அதனுள் ஓரு கணிணியும், ஓரு குவளை பழரசமும் இருக்கிறது.

இம்மூன்றில் உங்கள் தேர்வு என்ன?

கேட்ஸ் புத்திசாலித்தனமாக கணிணி உள்ள அறையை தேர்தெடுத்துக்கொன்டார்.

இதைப்பார்த்த சித்திரகுப்தன் எமனிடம் கேட்டான்.

நீங்கள் என்னதான் நல்ல மூடில் இருந்தாலும் இப்படி செய்திருக்கக்கூடாது. அவருக்கு மிக அதிகபட்சமான தண்டணையை கொடுத்திருக்கவேண்டும்.

எமன் சொன்னார்: கவலைப்படாதே சித்திரகுப்தா, நான் அங்கு வைத்திருக்கும் குவளையில் ஒரு பெரிய ஓட்டை இருக்கிறது.

சி. கு: அப்போது கணிணி??????????

எமன் : அதில் நான் மூன்று பொத்தான்களை எடுத்துவிட்டேன்.

சி. கு. : எந்த மூன்று பொத்தான்கள்?

எமன் : Control , ALT, Delete

ஷீ-நிசி
28-02-2007, 09:58 AM
ஒரு கடுமையான விவாதம் முடிவுக்கு வருதுன்னா அதில் பங்கெடுத்துக்கிட்டவங்க களைச்சுப் போயிட்டாங்கன்னு அர்த்தம்..

நான் 300 பக்கத்துல ஒரு புத்தகம் எழுதிக்கிட்டு இருக்கேன்.. முக்காவாசி முடிஞ்சுடுச்சு.. எல்லா பக்கத்துக்கும் நம்பர் போட்டுட்டேன்.. இனி விஷயம் எழுதவேண்டியது மட்டும்தான் பாக்கி..!

நமக்கு வெற்றி தனிமையிலும் தோல்வி எல்லோரும் இருக்கும்போதும் தான் வரும்..

எச்சரிக்கை ; காலண்டரில் உள்ள தேதிகள் தோற்றமளிப்பதைவிட விரைவில் நெருங்கிவிடும்..!

நான் மிக மிக ரசித்தவைகள் ராஜா சார்.....

அறிஞர்
28-02-2007, 12:52 PM
ராஜாவின் ரவுசில் தத்து[பித்து]வங்கள்... அருமையாக விளையாடுகிறது...

தொடரட்டும்.

அறிஞர்
28-02-2007, 12:55 PM
சர்தாரின் சாகசங்கள் மிக அருமை... ராஜா அண்ணா.. தொடரட்டும்..

மனோஜ்
28-02-2007, 02:25 PM
நான் 300 பக்கத்துல ஒரு புத்தகம் எழுதிக்கிட்டு இருக்கேன்.. முக்காவாசி முடிஞ்சுடுச்சு.. எல்லா பக்கத்துக்கும் நம்பர் போட்டுட்டேன்.. இனி விஷயம் எழுதவேண்டியது மட்டும்தான் பாக்கி..!

இதை ஐந்து முறை படிந்தேன் அப்பதா சரியா விளங்கினது
இததா பல பேர் செஞ்சுகிட்டு இருக்காகங்க நன்றி ராஜா தத்துவங்களுக்கு

ஆதவா
28-02-2007, 03:52 PM
பில் கேட்ஸ் இறந்த பிறகு எமலோகம் சென்றார்.

சி. கு. : எந்த மூன்று பொத்தான்கள்?

எமன் : Control , ALT, Delete

வயிறு வலிக்க சிரித்தேன்..... :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

ஷீ-நிசி
28-02-2007, 03:56 PM
வயிறு வலிக்க சிரித்தேன்..... :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D


பாத்து ஆதவா வாய் வலிக்கப்போகுது..

மன்மதன்
28-02-2007, 04:06 PM
சர்தார்ஜியின் மகன்: அப்பா! நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்

சர்தார்ஜி: எப்படிடா?

சர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்!


ஹாஹ்ஹ்ஹா.. அனைத்துமே அருமை.. :D :D :D

ஆதவா
28-02-2007, 04:09 PM
பாத்து ஆதவா வாய் வலிக்கப்போகுது..


:D :D:D :D:D :D:D :D வாய் வலிக்கவில்லை.. வயிறுதான் வலிக்கிறது.

மயூ
28-02-2007, 04:27 PM
இதை ஐந்து முறை படிந்தேன் அப்பதா சரியா விளங்கினது
இததா பல பேர் செஞ்சுகிட்டு இருக்காகங்க நன்றி ராஜா தத்துவங்களுக்கு
ஆ... இதத்தான் தமிழில டியூப் லைட்டு என்று சொல்லுவாங்க!!! :D :D

மயூ
28-02-2007, 04:29 PM
பாவம் பில் கேட்சு!!!

அறிஞர்
28-02-2007, 08:55 PM
ஆ... இதத்தான் தமிழில டியூப் லைட்டு என்று சொல்லுவாங்க!!! :D :D
ட்யூப் லைட் என்பது ஆங்கில வார்த்தைதானே.. தமிழா... :rolleyes: :rolleyes: :rolleyes:

ராஜா
01-03-2007, 02:34 AM
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?

ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.
பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.
கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..
திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..பட்டம்.
சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல்.
ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.
சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு பூசல்..

praveen
01-03-2007, 04:26 AM
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?

.

இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க. இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.

pradeepkt
01-03-2007, 05:03 AM
ட்யூப் லைட் என்பது ஆங்கில வார்த்தைதானே.. தமிழா... :rolleyes: :rolleyes: :rolleyes:
இப்ப தமிழில்தான் டியூப் லைட்டு அதிகமா உபயோகிக்கப்படுது அப்படிங்கறான் மயூரேசன் :D

ஆதவா
01-03-2007, 05:34 AM
இப்ப தமிழில்தான் டியூப் லைட்டு அதிகமா உபயோகிக்கப்படுது அப்படிங்கறான் மயூரேசன் :D

ஆமா.....

அதுசரி... ஏங்க பிரதீப் சார். நீங்க ஃபிளைட்ல பறந்துகிட்டே இருக்கீங்களே பெட்ரோல் தீர்ந்து போகாது?.:confused: ... (இதுக்குப் பேர்தான் ட்யூப்லைட்டோ?:D )

மனோஜ்
01-03-2007, 06:47 AM
ஆமா.....

அதுசரி... ஏங்க பிரதீப் சார். நீங்க ஃபிளைட்ல பறந்துகிட்டே இருக்கீங்களே பெட்ரோல் தீர்ந்து போகாது?.:confused: ... (இதுக்குப் பேர்தான் ட்யூப்லைட்டோ?:D )
இது கூட தொரியதம விளக்வேற கேக்குறாறு பிரதீப் இப்பபுரியூதா :D :D
மிக்க நன்றி ஆதவா;)

pradeepkt
01-03-2007, 09:40 AM
அது சரி... இது பழங்காலத்துப் புஷ்பக விமானம் அப்படின்னு வேணா வச்சுக்கங்களேன் :D
நானே என் அவதாரத்தை மாத்தலாமின்னு யோசிக்கிறேன், வேறு ஏதாவது நல்ல அவதார் இருந்தால் சொல்லவும்...

மயூ
01-03-2007, 02:09 PM
ட்யூப் லைட் என்பது ஆங்கில வார்த்தைதானே.. தமிழா... :rolleyes: :rolleyes: :rolleyes:
ஹி...ஹி...:p

மயூ
01-03-2007, 02:12 PM
ராஜா எதிர் கால வாழ்க்கைக்குப் பின்னால இப்படி ஒரு சோகங்கள் இருக்கா!!! கடவுளே!! :D

மயூ
01-03-2007, 02:17 PM
அது சரி... இது பழங்காலத்துப் புஷ்பக விமானம் அப்படின்னு வேணா வச்சுக்கங்களேன் :D
நானே என் அவதாரத்தை மாத்தலாமின்னு யோசிக்கிறேன், வேறு ஏதாவது நல்ல அவதார் இருந்தால் சொல்லவும்...
நான் மன்றம் வந்த காலத்தில இருந்து புட்பக விமானம் பறந்து கொண்டே இருக்குது!! சிலவேளை இராவணனிட்டை இருந்து சுருட்டினதோ??? :rolleyes: :rolleyes:
அது சரி இந்தப் பிளேன் மைக்ரொசாப்ட் பப்ளிசர் கிளிப்தானே??? பார்த்த ஞாபகம் இருக்குது!!! :confused:

அன்புரசிகன்
01-03-2007, 03:37 PM
சில தப்புகள் ரொம்ப கேவலமா இருக்கும்.. நமக்கே இன்னொரு தடவை அந்த தப்பைச் செய்ய வெட்கமா இருக்கும்ன்னா பார்த்துக்கங்களேன்..!

ஒரு கடுமையான விவாதம் முடிவுக்கு வருதுன்னா அதில் பங்கெடுத்துக்கிட்டவங்க களைச்சுப் போயிட்டாங்கன்னு அர்த்தம்..

மோசமான அனுபவத்துக்கப்புறம் நல்ல முடிவு எடுக்கறோம்.. ஆனா மோசமான முடிவுகளால் நிறைய நல்ல அனுபவமும் கிடைக்குது.. ஒத்துக்கறீங்களா..?

எப்போவும் நினைவு வச்சுக்கங்க.. நீங்க மத்தவங்களைப் போல இல்ல.. வித்தியாசமானவர்.. முக்காவாசிப் பேர் உங்களைமாதிரிதான்..!

நான் 300 பக்கத்துல ஒரு புத்தகம் எழுதிக்கிட்டு இருக்கேன்.. முக்காவாசி முடிஞ்சுடுச்சு.. எல்லா பக்கத்துக்கும் நம்பர் போட்டுட்டேன்.. இனி விஷயம் எழுதவேண்டியது மட்டும்தான் பாக்கி..!

யாருமே உங்களைக் கண்டுக்க மாட்டேங்கறாங்களா..? ஒரு மோட்டார் சைக்கிளை கடனுக்கு வாங்கிட்டு ரெண்டு தவணை கட்டாம விட்டுப் பாருங்க..!


ரவுசிலையும் அர்த்தங்கள் உண்டு. அதுதான் ராஜாவவின் மவுசோ?
வாழ்த்துக்கள்.

அறிஞர்
01-03-2007, 03:41 PM
ரவுசிலையும் அர்த்தங்கள் உண்டு. அதுதான் ராஜாவவின் மவுசோ?
வாழ்த்துக்கள்.
அன்புரசிகனும் ரவுசு பண்ணினால் நாங்கள் ரசிப்போம்.

ராஜா
01-03-2007, 06:16 PM
ராஜா ; அடுத்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்குற பொண்ணு அழகா இருக்குதே..

கண்ணம்மா ; அழகு மட்டுமில்லீங்க.. அறிவும் இருக்கு.. வந்த அன்னிக்கே என்னை "அண்ணி" ன்னு முறை சொல்லி கூப்பிடுது..!!

ராஜா ; @#$%&&^*!!!

_______________________________________________________________________

டாக்டர் ; தூக்கத்துல நடக்குற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே.. இப்போ முன்னேற்றம் தெரியுதா..?

நோயாளி ; நல்ல முன்னேற்றம் இருக்கு டாக்டர்..! இப்போ நடக்கறதில்லே.. ஸ்கூட்டரை எடுத்துட்டு ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்..!
_________________________________________________________________________

இளவரசர் ஏன் பின் பக்கமா ஓடி பயிற்சி எடுத்துக்கறார்..?

எதிர்காலத்துல புறமுதுகிட்டு ஓடிய கோழை'ன்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னு கவனமா இருக்கார்..!
_________________________________________________________________________

வீட்டு சுவர்ல வெடிப்பு விழுந்துடுச்சுன்னு நிவாரணம் கேட்டு மனு அனுப்பினது தப்பா போச்சா.. ஏன்..?

ரெண்டு வீட்டுக்கும் வரி கட்டணும்ன்னு நோட்டீஸ் வந்திருக்கு..!
_________________________________________________________________________

சார்.. நான் ரிட்டையர் ஆயிட்டேன்.. ஒத்துக்கிறேன்.. ஆனா என் நிலைமையையும் நீங்க யோசிச்சுப் பார்க்கணும்.. ஒரு மனுஷன் எவ்வளவு நாளைக்கு தூங்காம இருக்க முடியும்..? ஒரு ஓரமா கொஞ்சம் இடம் கொடுத்தா தினம் வந்து உங்க தூக்கத்துக்கு இடைஞ்சல் இல்லாம நானும் நிம்மதியா தூங்கிட்டு போவேன்..

pradeepkt
02-03-2007, 03:16 AM
நான் மன்றம் வந்த காலத்தில இருந்து புட்பக விமானம் பறந்து கொண்டே இருக்குது!! சிலவேளை இராவணனிட்டை இருந்து சுருட்டினதோ??? :rolleyes: :rolleyes:
அது சரி இந்தப் பிளேன் மைக்ரொசாப்ட் பப்ளிசர் கிளிப்தானே??? பார்த்த ஞாபகம் இருக்குது!!! :confused:
யாரு கண்டது? எங்கயோ இருந்துச்சு எடுத்துப் போட்டுட்டேன்.
கொஞ்ச நாள் முன்னாடி மக்கள் அவங்க பேர் வச்சு எல்லாம் ஐகான் போட்டாங்க... எனக்கு அதெல்லாம் தெரியலையே... அதுனால இன்னும் பறந்துகிட்டே இருக்கேன்... :rolleyes:

ராஜா
02-03-2007, 05:31 PM
குணா படத்துல வர்ற கண்மணி அன்போடு.. மெட்டில் படிக்கவும்..
==============================================================

கண்மணி அன்போடு நான் அனுப்பும் எஸ்.எம்.எஸ்..

இல்ல மெஸேஜ்... வேணாம் எஸ்.எம்.எஸ் ன்னே இருக்கட்டும்..

பொன்மணி..

உன் செல்லில் சிக்னல் கிடைக்குதா..?

என் செல்லில் இங்கு கிடைக்குதே..!

உன்னை எண்ணிப் பார்க்கையில் மெஸேஜ் கொட்டுது..

[இங்கே எஸ்,எம்.எஸ்... இல்ல..மெஸேஜ்ன்னே இருக்கட்டும்..]

அதை அனுப்ப நினைக்கையில் பேலன்ஸ் முட்டுது...!

மனிதர் உணர்ந்து கொள்ள இது கெட்ட எஸ்.எம்.எஸ் அல்ல... அல்ல..

அதையும் தாண்டி மட்டமானது... மட்டமானது..!

அது என்னமோ தெரியல.. என்ன மாயமோ புரியல..

என் செல்லுல மட்டும் பேலன்ஸ் நிக்கிறதே இல்ல..!
delete

ராஜா
02-03-2007, 05:47 PM
ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள்..

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை..

கைதி பதில் எழுதினான்..

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்..

அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது.. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்..

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!

ராஜா
02-03-2007, 05:56 PM
நண்பர் ; என்ன சார்..? நேத்து உங்க பையன் "குடிக்காதேன்னு சொன்னா கேட்க மாட்டியா..? எத்தனை தடவை சொன்னாலும் அறிவிருக்காதான்னு கண்டிச்சான் போலருக்கே..!

சின்னச்சாமி ; ஹி.. ஹி.. அவன் வாங்கி வச்சிருந்த கட்டிங்'கை நான் ஃபிட்டிங் போட்டுட்டேன்.. அதான் கடுப்பாயிட்டான்..!
______________________________________________________________________________

ஒரு வருஷமா உங்க் ஒய்ஃபுக்கும் அம்மாவுக்கும் சண்டையே வர்றதில்லையா..? ஆச்சரியமா இருக்கு..

எங்கம்மாவுக்கு காது கேட்காமப் போயிருச்சு.. இவளாலேயும் உசுரக் குடுத்து கத்தி சண்டை போட முடியல்லே..!

______________________________________________________________________________________

அடடா..! சினிமாவுக்கு போறேன்னு மனைவி சொன்னா விட்டுட வேண்டியது தானே சார்.. இப்ப பாருங்க.. கண்ணு பிதுங்கற அளவுக்கு அறைஞ்சிருக்காங்க.. ஆமாம் என்ன படத்துக்கு போகணும்ன்னாங்க..?

கணவனே கண் கண்ட தெய்வம்..!
________________________________________________________________________________

அரசர் அந்தப்புரத்திலிருந்து "போர்..போர் !" ன்னு கத்திகிட்டே வீராவேசமா வராரே.. எதாவது வெளிநாட்டுப் படையெடுப்பா..?

அதெல்லாம் இல்லே.. இன்னிக்கு மகா ராணியாரோட நடன அரங்கேற்றம்..அதை சகிக்க முடியாமதான் அலறிக்கிட்டு ஓடி வந்தார்..!
____________________________________________________________________________________

ஆச்சரியமா இருக்கு.. எப்போதும் நாம விடற ராக்கெட் பூரா மேல் போறதுக்கு பதிலா கடல்ல போய் விழுந்திடும்.. இந்த தடவை சரியா மேலே போய்க்கிட்டிருக்கு..

ராக்கெட்டை தலைகீழ வச்சு கிளப்பி விட்டாங்களாம்..!
___________________________________________________________________________________

ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு கெட்ட பழக்கத்தை விட்டுடறதா வீர சபதம் எடுப்பீங்களே.. இந்த வருஷம் எதை விடப் போறீங்க..?

சபதம் எடுக்கறதைத் தான்.. வேற எதையும் விட முடியலே..!
________________________________________________________________________________

நண்பர் ; அட பரவாயில்லியே.. டீ.. காபி சாப்பிடுறதை விட்டுட்டீங்களாமே..? சபாஷ்..!

சின்னச்சாமி ; ஆமாம் சார்.. இப்போதான் சார் டீ.. காபி சாப்பிட்டா போட்ட போதை எறங்கிடும்ன்னு தெரிஞ்சிக்கிட்டேன்..!
_____________________________________________________________________________________

போரில் தோற்று ஓடிவருவது அவமானமில்லை.. ஆனா ஆயுதங்களைப் போட்டுட்டு ஓடி வராதீங்கன்னு அரசர் அறிவுரை சொல்றாரே ஏன்..?

வேற என்ன.. பேரீச்சம்பழமாவது கிடைக்குமேன்னு ஒரு அல்ப ஆசை..!
__________________________________________________________________________________

என்னது சிங்காரம் திருட்டுத் தொழிலை விட்டுட்டானா..? என்னய்யா சொல்றே..? என்ன கேடாம் அவனுக்கு..?

மாமூல் அதிகம் கேட்டு கொள்ளையடிக்கிறோமாம்..!
_________________________________________________________________________________

என்னாய்யா.. கள்ளச் சாராய பாட்டில்ல கூட ஐ.எஸ்.ஐ மாதிரி எதோ முத்திரை போட்டிருக்கு..?

அது பி.எஸ் முத்திரை.. போலீஸ் ஸ்டேஷன் மாமூல் கட்டியாச்சுன்னு அர்த்தம்..!

அமரன்
02-03-2007, 06:24 PM
ராஜாவின் ஜோக்குகள் அனைத்தும் நன்று. எஸ் எம் எஸ் ஜோக்க் ரொம்பப் பிடித்திருக்கு. ராஜா பதியும் போது எழுத்தின் அளவை குறைத்துப் பதியலாமே.

ஆதவா
03-03-2007, 02:54 AM
முடியல........... சிரிப்பை அடக்க முடியல..

raj6272
03-03-2007, 03:08 AM
ராஜா உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இப்படி மணி மணியா ஜோக் கிடைக்குதோ.

தங்க கம்பி
03-03-2007, 03:21 PM
ஒவ்வொண்றும் அருமை. சிரிப்போ சிரிப்பு.

ராஜா
04-03-2007, 04:40 AM
நன்றி நண்பர்களே..!

ராஜா
04-03-2007, 04:43 AM
சித்திர குப்தன் ; என்ன பிரபோ.. நடந்து வருகிறீர்கள்..? உங்கள் வாகனம் என்ன ஆச்சு..?

எமன் ; இன்று நான் உயிர் பிடிக்க போன மாட்டுத்தரகர் நல்ல விலைக்கு வித்து தரேன்னு சொல்லி எருமையையும் ஓட்டிகிட்டு தப்பிச்சு போயிட்டான்..!


பரிட்சையில ஏதோ புதுசா மாற்றம் வரப்போகுதாமே..?

என்ன வந்து என்னடா பிரயோசனம்..?

ஏண்டா இப்படி சலிச்சுக்கறே..?

பின்ன என்னடா.. எப்படி இருந்தாலும் பரீட்சை நாமதானே எழுதித் தொலைக்கணும்..?


ஓகே சுந்தர்.. என்னை நீங்க காதலிக்கணும்ன்னா ஒரு கண்டிஷன்..

என்ன அது..? உன்னை எந்நாளும் கைவிடக் கூடாதுன்னு தானே..?

அதுதான் இல்லை.. நாள பின்ன உன்னையே கட்டிக்கிறேன்னு பிடிவாதம் பிடிக்கக் கூடாது..!


பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை வித்தியாசமான பேர்வழியா இருப்பார் போலருக்கே.. சாப்பாட்டுப் பிரியரோ..?

ஏன்.. என்னாச்சு..?

டக்குன்னு 4 பஜ்ஜியை எடுத்து பேண்ட் பாக்கெட்டுல சொருகிக்கிட்டாரே..!


எங்க ஆபீஸ்ல பொது மக்களுக்கு உதவ ஒரு அதிகாரி நியமிச்சிருக்கோம்..

இது எல்லா ஆபீஸ்லயும் இருக்கறது தானே.. இதில என்ன ஆச்சரியம்..?

இவர் என்னென்ன வேலைக்கு யார்யாருக்கு எவ்வளவு லஞ்சம் குடுத்தா போதும்ன்னு அறிவுரை தருவார்..!


எங்க ஆபீஸ்ல எனக்கு முன்னாடி இருந்த மேனேஜர் கிணறு வெட்டறதா சொல்லி 15,000 ரூபாய் முழுங்கிட்டார்..

அடடா.. அப்புறம் எப்படி சமாளிச்சீங்க..?

சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்குதுன்னு சொல்லி 10,000 ரூபாய் செலவு பண்ணதா சொல்லி சமாளிச்சோம்..!


என்னப்பா கூட்டத்துக்கு ஆள் சேர்த்து கொண்டு வந்திருக்கே.. எதிர்க்கட்சிக் காரன் பேரை சொன்னாலே கை தட்டறானுங்க..

சாரி தலைவரே.. அவசரமா அழைச்சுட்டு வந்ததாலே விபரம் சொல்ல முடியல..


இந்த எம்.எல்.ஏ தேர்தல்ல ஜெயிச்சது ரொம்ப வேடிக்கையானது தெரியுமா..?

அப்படியா..?

ஆமாம்.. இவருக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு. ஆனா " இப்போவே இரவு நேரத்துல தொகுதி சுத்தி வர்றாரே..!" ன்னு நெனச்சி மக்கள் ஓட்டு போட்டுட்டாங்க..


நம் இளவரசியாரோட சுயம்வரத்துக்கு இவ்வளவு படை வீரர்களை குவிச்சுருக்காங்க..ஏன்..?

இளவரசியைப் பார்த்து பயந்து தெறிச்சு ஓடற இளவரசர்களை திரும்ப இழுத்துட்டு வர்றதுக்காகத் தான்..!


அரசர் விதம் விதமா எழுத்தாணி வாங்கி சேர்க்கிறாரே.. கவிதையில் ஆர்வம் அதிகமோ?

அதெல்லாம் இல்லே.. முதுகு அரிச்சா சொறிஞ்சுக்க வசதியா இருக்காம்..!

ராஜா
04-03-2007, 07:16 PM
சர்தார்ஜி மாதவ் சிங் ஒரு நவீனமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார். அதை வீட்டில் பொருத்தி, செய்முறை விளக்கம் கொடுக்க ஒரு ஊழியரும் வந்திருந்தார். தங்கள் நிறுவன தொ.கா. வின் சிறப்பை ஓயாது வர்ணித்த ஊழியர், பின் தொலைக் கட்டுபாட்டுக் கருவியை [ரிமோட் கண்ட்ரோல்] எடுத்தார். அதை சர்தாரிடம் காட்டிய ஊழியர், "இது மிகவும் நுட்பமானது. இதன் வீச்சும் திறனும் மிக அதிகம். வாருங்கள் காட்டுகிறேன்" என்று சொல்லி, பக்கத்தில் இருந்த 25 மாடிக்கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்துப் போனார். அங்கிருந்து தொ.கா. வை இயக்க, மிக அழகாக இயங்கியது. மாதவ் சிங்கும் மகிழ்ச்சி ஆகி விட்டார்.

ஒரு மாதம் கழித்து தொ.கா. நிறுவனத்துக்கு மாதவ் சிங் போன் செய்து புலம்பினார்..

" தயவு செய்து எனக்கு ரிமோட் கண்ட்ரோலை மாற்றிக் கொடுங்கள்..ஒவ்வொருமுறை சானல் மாற்றவும் 25 மாடிகள் ஏறி இறங்க என்னால் முடியவில்லை.. மேலும், அந்தக் கட்டிடத்தின் வாட்ச் மேனுடன் வேறு சண்டை வந்துவிட்டது..!"

ராஜா
04-03-2007, 07:23 PM
சர்தார்ஜி மாதவ் சிங் டாக்டரிடம் போனார்..

"டாக்டர்.. எனக்கு பாத்ரூம் போவதில் கொஞ்சம் பிரச்சினை.."

என்ன பிரச்னை.. சரியாக போவதில்லையா..?

அதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது..?

கண்ட நேரத்தில் பேதியாகிறதா..?

அப்படியெல்லாம் இல்லை டாக்டர்.. சரியாக காலை ஆறு மணிக்கு அலாரம் வைத்தது போல் வந்து விடுகிறது..

எல்லாம்தான் சரியா இருக்கே..? அப்புறம் என்ன..?

ஒன்று மட்டும் சரியில்லை டாக்டர்.. தினமும் காலை எட்டு மணிக்கு தான் எனக்கு விழிப்பே வருகிறது...!

ராஜா
04-03-2007, 07:44 PM
பி.பி.சி. தொலைக்காட்சியின் செய்தியாளராக நம் மாதவ் சிங் இருந்தார்.. அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது நிறுவனத்தில் இருந்து அழைப்பு..

" காமிராவை எடுத்துக் கொள்.. ஓடு ..உன் வீட்டு அருகில் பெரும் காட்டுத் தீ பரவிக் கொண்டிருக்கிறது.. உடனடியாக அதைப் படம் பிடித்து நேரடியாக ஒளிபரப்பு.."

" ஆனால்.. காட்டுத் தீயை படம் பிடிக்க எனக்கு ஒரு சிறு விமானம் வேண்டுமே..?"

" முட்டாளே.. எல்லாம் தயார்.. அருகில் உள்ள தளத்தில் நீ செல்ல வேண்டிய விமானம் தயாராக நிற்கிறது.. கிளம்பு உடனே..!"

மாதவ் அலறிப் புடைத்துக்கொண்டு விமான தளத்துக்கு விரைந்தார்.. சொன்னது போலவே விமானம் தயாராக இருக்க ஜேம்ஸ்பாண்ட் போல தாவி ஏறினார். அதிர்ச்சியுடன் நோக்கிய விமானியிடம் ஸ்டைலாக உத்தரவிட்டார்..

" கிளப்பு உடனே.. தெற்கு நோக்கி விமானத்தை செலுத்து..இன்று உன் வாழ்க்கையிலேயே சாகசம் மிக்க பயணம் மேற்கொள்ளப் போகிறாய்.. மலைப்பாக பார்ப்பதை நிறுத்து.. என் வேகத்துக்கு ஈடு கொடு.."

விமானி மறு பேச்சின்றி செலுத்தினார்.. எரியும் காட்டை அருகில் சென்று படம் பிடிக்க எண்ணிய சர்தார் மாதவ் சிங் ..விமானியிடம் சொன்னார்..

"இளைஞனே.. எரியும் தீக்கு சற்று மேலே நாம் இருக்கும்னடி விமானத்தை இறக்கு.. உயரத்தைக் குறை.."

விமானி அதிர்ச்சியுடன் சொன்னார்...

"என்ன விளையாடுகிறீர்களா..? இன்னும் உயரத்தைக் குறைப்பது கீழே தரை இறங்குவது எல்லாம் இன்னும் சொல்லிக் கொடுக்கவே இல்லையே.. இதுவரை மேலே விமானத்தை கிளப்புவது எப்படி என்ற பாடம் தானே உங்கள் நண்பர் சொல்லிக் கொடுத்தார்.."

" என்னது..? பி.பி.சி. நிறுவனம் ஏற்ற்பாடு செய்த விமானம் இது இல்லையா..?"

" பி.பி.சி.யா..? அப்படியானால் நாளை புது பயிற்சியாளர் வரப் போவதாகச் சொன்னார்களே.. நீங்கள் அவர் இல்லையா...?"

இளசு
04-03-2007, 08:03 PM
ராஜா ..உங்கள் அட்டகாசத்தை நிறுத்துங்கள்...
இப்போது மாதவ் சிங்கையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு நீங்கள்
செய்யும் அலம்பலால் இப்போ எனக்கு வயிற்றுவலி...

மன்மதன்
05-03-2007, 05:41 AM
ரிமோட் ஜோக்கை படிச்சி சிரிச்சி..சிரிச்சி..சிரிச்சி....................:D :D

அறிஞர்
05-03-2007, 02:45 PM
சிங்க் ஜோக்குக்கள்.. வயிற்றை வலிக்கச் செய்கிறது...

தொடரட்டும்.. ரவுசுகள்.

அமரன்
05-03-2007, 03:39 PM
அறிஞரே மருத்துவப்பகுதியில் விரைவில் ஒரு திரி தொடங்கப்போகின்றேன். வயிற்றுவலிக்கு என்ன நிவாரணம் என்ற தலைப்பில். பல கருத்துக்கள் வரும் அதே வேளை பலர் அதைப் படிப்பார்கள் என நினைக்கின்றேன். காரணம் நம்ம ராஜாதான்.

ராஜா
06-03-2007, 04:30 AM
ஐம்பத்தாறு தேசங்களுக்கு ஓலை அனுப்பியும் ஒருவர் கூட வர்வில்லையே .. ஏன் அமைச்சரே..?

சுயம்வர ஓலையில் இளவரசியார் படத்தையும் இணைத்தது தப்பாகி விட்டது மன்னா..!
_________________________________________________________

உலகம் ரொம்ப வெவரமாகிக்கிட்டு வருது சார்..

டீ.வீ. பத்திரிக்கையெல்லாம் விழிப்புணர்ச்சி ஊட்டுது இல்லியா..?

அட அதில்லே சார்.. ஒருத்தன் கிட்ட 100 ரூபாய் கைமாத்து வாங்கணும்ன்னா எவ்வளவு கஷ்டப்பட வெண்டியிருக்கு தெரியுமா..? முந்தியெல்லாம் இப்படி இல்லே சார்..!
__________________________________________________________

பரீட்சையில் காப்பி அடிச்சா ஒரு ஆண்டுதானே சிறை..? உனக்கு ஏன் ரெண்டு வருஷம் போட்டாங்க..?

சிறையில் இருக்கறப்போ அனுமதி வாங்கி அக்டோபர் பரீட்சை எழுதினேன்..அப்போவும் காப்பி அடிச்சு மாட்டிக்கிட்டேன்..!
_________________________________________________________

என்ன சிங்காரம்..? எங்கே திருடப் போனாலும் சூப்பரா தப்பிச்சு போயிடுவே.. நேத்து ஜவுளிக்கடையிலே மாட்டிக்கிட்டியாமே..?

நேத்து என் மனைவியும் புடவை செலெக்ட் பண்ண வந்தா.. விடிஞ்சு கடை திறக்கறவரைக்கும் புடவை தேடிக்கிட்டு இருந்ததிலே மாட்டிக்கிட்டோம்..!
______________________________________________________

கமலா.. கல்யாணத்துக்கு போயிட்டு வந்துடறேன்..

சரீங்க.. மறக்காம பிள்ளைகள் கால் அளவு எடுத்துட்டுப் போங்க..!
________________________________________________________

என்னத்தை சார் பண்ணித் தொலைச்சீங்க..? "அவ்வளவு துளிர் விட்டுப் போச்சா..?" ன்னு கேட்டு உங்க மனைவி உங்களை பெண்டு எடுத்தாங்க..?

அதை ஏன் சார் கேக்கறீங்க..? நேத்து அவள் கனவுல நான் எதிர்த்துப் பேசிட்டேனாம்..!
________________________________________________________

உங்கப்பனை மாதிரி ஒரு லூசு எங்கேயும் பார்க்க முடியாதுடி..

உங்களுக்கு இப்போதான் தெரிஞ்சுதா..? நம்ம கல்யாணத்தப்போ உங்க போட்டோவைக் காட்டி இவர்தான் மாப்பிள்ளைன்னு சொன்னப்பவே எனக்கு தெரியும்..!
_________________________________________________________

புலவர் 1 ; இந்த அரசருக்கு ஞாபக சக்தியே கிடையாதுன்னு சொல்றீயே.. எப்படி..?

புலவர் 2 ; தொடர்ந்து 13 வது வருஷமா இவரைப் புகழ்ந்து ஒரே பாட்டைப் பாடிகிட்டு இருக்கேன்.. அவரும் புதுமையான சிந்தனைன்னு சொல்லி பரிசு கொடுத்துகிட்டு இருக்காரே..!
_________________________________________________________

என்ன இது.. அம்மா நடிகை எல்லாம் கொடி பிடிச்சு ஊர்வலம் போறாங்க.. என்ன கோரிக்கையாம்..?

ஓட்டு போட குறைந்த பட்ச வயசை 16 ஆ ஆக்கி அவங்களையும் வாக்களிக்க அனுமதிக்கணுமாம்..!
_________________________________________________________

மதி
06-03-2007, 04:47 AM
ராஜா..
ஜோக்குகள் ஒவ்வொன்னும் அசத்தல் ரகம்.
சிங் ஜோக் சூப்பர்.
பல பேர் வயிற்றுவலிக்கு காரணமாயிட்டீங்க...!

அறிஞர்
06-03-2007, 09:41 PM
ஐம்பத்தாறு தேசங்களுக்கு ஓலை அனுப்பியும் ஒருவர் கூட வர்வில்லையே .. ஏன் அமைச்சரே..?

சுயம்வர ஓலையில் இளவரசியார் படத்தையும் இணைத்தது தப்பாகி விட்டது மன்னா..!_________________________________________________________
படத்தை வரைந்து அனுப்பி விட்டார்களோ.... :rolleyes: :rolleyes:

அறிஞர்
06-03-2007, 09:46 PM
சரீங்க.. மறக்காம பிள்ளைகள் கால் அளவு எடுத்துட்டுப் போங்க..!
________________________________________________________


அதை ஏன் சார் கேக்கறீங்க..? நேத்து அவள் கனவுல நான் எதிர்த்துப் பேசிட்டேனாம்..!
இது மாதிரி மனைவிகள் அமைந்தால்... நாடும், வீடும் உறுப்பட்டடும்.

ராஜா
07-03-2007, 04:30 AM
நம்ம டெங்குஸ்ரீ பி.எல். படிச்ச ஒருத்தரை பி.ஏ.வா தேடிக்கிட்டு இருக்காங்களாமே ஏன்..?

விவாகரத்து வழக்குகளுக்கு வக்கீலுக்கு பணம் குடுத்து கட்டுப்படி ஆகலியாம்..!


ஊருக்கு போற உங்க மனைவிக்கிட்ட " போய் மறக்காம பதில் போடு" ன்னு உங்கம்மா சொல்லிகிட்டு இருக்காங்களே.. ரொம்ப பிரியமா மருமக மேல..?

நாசமாப் போச்சு..! கடைசியா அவங்க போட்டுக்கிட்ட சண்டையிலே எங்கம்மா கேட்ட ஒரு கேள்விக்கு அவ இன்னும் பதில் சொல்லலியாம்..!


ஒரே குழப்பமா இருக்குடி..

எதுக்கு..?

குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுகிட்டா 500 ரூபாயாம்.. கர்ப்பிணி உதவித் தொகை 5000 ரூபாயாம்.. ரெண்டையும் எப்படி வாங்குறதுன்னுதான்..!


என்னங்க ஒருமாசமா நம்ம ராப்பிச்சை நம்ம வீட்டு வாசல்ல நின்னுகிட்டு முறைச்சு பார்த்துட்டு இருக்கான்.. எனக்கு பயமா இருக்குங்க.. வந்து என்னான்னு கேளுங்க..!

அடிப் போடி இவளே..! எனக்கு உன்னைவிட அதிகமா பயமா இருக்கு.. ரெண்டு மாசமா அவன்கிட்ட வாங்கின கடனுக்கு வட்டியே கட்டலே..!


லட்சாதிபதியா இருந்தவர்.. பிச்சைக்காரனா ஆயிட்டார்..

அடப்பாவமே..! விதி அப்படி..!

விதி இல்லே.. சதி.. இப்போ மில்லியனரா ஆகிட்டு வரார்..!

karikaalan
07-03-2007, 04:25 PM
ராஜா ஜி

ஒவ்வொரு ஜோக்கும் அக்ஷர லட்சம் பெறும். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

அமரன்
07-03-2007, 04:54 PM
ஒரே குழப்பமா இருக்குடி..

எதுக்கு..?

குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுகிட்டா 500 ரூபாயாம்.. கர்ப்பிணி உதவித் தொகை 5000 ரூபாயாம்.. ரெண்டையும் எப்படி வாங்குறதுன்னுதான்

சிரிப்புடன் நாட்டு நடப்பை பற்றி சிந்திக்கவும் வைக்குது.

ராஜா
07-03-2007, 05:56 PM
நன்றி நண்பர்களே..!

ஆடி மாதத் தள்ளுபடியிலே குடும்பத்தோட ஷாப்பிங்கா..?

ஆமாங்க..! எல்லார் செருப்பும் சொல்லி வச்சாப்பல கிழிஞ்சுட்டுது.. கல்யாண சீசன் வேற கிடையாது.. என்ன பண்றது..?
__________________________________________________________________________

நம்ம தலைவி முன்னாள் நடிகைன்னு காமிச்சுட்டாங்க..!

ஏன்..? என்னாச்சு..?

"உன்னை ஏன் கட்சியிலேருந்து டைவர்ஸ் பண்ணக்கூடாதுன்னு" நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க..!
___________________________________________________________________________

என் காதலர் "நிலவும் வானும் போல இருப்போம்" ன்னு சொன்னப்பவே சுதாரிச்சிருக்கணும்டி..

ஏண்டி.. என்னாச்சு..?

சரியா 15 ம் நாள்.. ஆளைக் காணோம்டி.. எங்கேயோ ஓடி ஒளிஞ்சிட்டார்டி..!
__________________________________________________________________________

டாக்டர்.. ஒரு வாரமா குழந்தை அழுதுட்டே இருக்கு..

குழந்தைன்னா அப்படித்தான்.. தொட்டில்ல போட்டு தாலாட்டு பாடவேண்டியது தானேம்மா..?

நீங்க வேற டாக்டர்.. அப்படி பாடினப்போ ஆரம்பிச்ச அழுகைதான்.. இன்னும் நிக்கல்லே..!
___________________________________________________________________________

சரிடி.. ரெண்டும் பொண் குழந்தையாப் போச்சு .. இதுக்கு ஒரு பொண்ணா இருந்துகிட்டு நீ இவ்வளவு ஃபீல் பண்ணலாமா..? அங்க பாரு.. உன் கணவர் கூட குஷியா இருக்காரு..

அடிப் போடி இவளே..! எனக்கு என் மாமியார் செஞ்ச கொடுமையை எல்லாம் நான் இன்னொருத்திக்கு செய்ய முடியாமப் போச்சே..!
_________________________________________________________________________

இளசு
07-03-2007, 06:01 PM
ராஜா ஜி

ஒவ்வொரு ஜோக்கும் அக்ஷர லட்சம் பெறும். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்


கோடி பெறும் அண்ணலின் பாராட்டைப் பெற்ற குஷியில்
சிக்ஸர்களாய் விளாசும் மன்ற டெண்டுல்கர் ராஜாவுக்கு
ஒரு பெரிய ஓ!

அறிஞர்
07-03-2007, 08:50 PM
அடிப் போடி இவளே..! எனக்கு என் மாமியார் செஞ்ச கொடுமையை எல்லாம் நான் இன்னொருத்திக்கு செய்ய முடியாமப் போச்சே..!
_________________________________________________________________________
பெண்கள் பட்டாலும்.. இப்படி தானா......

ராஜாவின் ரவுசுகள் இன்னும் கலக்கட்டும்.

அன்புரசிகன்
08-03-2007, 10:11 AM
லட்சாதிபதியா இருந்தவர்.. பிச்சைக்காரனா ஆயிட்டார்..

அடப்பாவமே..! விதி அப்படி..!

விதி இல்லே.. சதி.. இப்போ மில்லியனரா ஆகிட்டு வரார்..!

சூப்பருங்கோ. இதுதான் நாட்டில இப்ப நடக்குது.பாராளுமன்றத்தில் இடஒதுக்கீடு கேட்காத குறை.

ஓவியா
08-03-2007, 11:57 AM
அனைத்து நகைச்சுவைகளும் அருமை.

முகியமா அந்த ....... ராப்பிச்சை :D :D

நன்றி

அண்ணா :)
ஒரு செய்தி இந்த பதிவை 93 நண்பர்கள் படித்து ஆனந்தமடைந்துள்ளனர்
Members who have read this thread : 93 :eek: :eek:

அறிஞர்
08-03-2007, 03:22 PM
ஒரு செய்தி இந்த பதிவை 93 நண்பர்கள் படித்து ஆனந்தமடைந்துள்ளனர்
Members who have read this thread : 93 :eek: :eek: 94 காட்டுது... நாளுக்கு நாள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயருகிறது.
அண்ணன் புகழ்.. மன்றத்தில் இன்னும் பரவட்டும்.

ராஜா
08-03-2007, 05:20 PM
இருந்தாலும் இந்த அநியாயம் எங்கேயும் நடக்காது..

என்னங்க..? கல்யாணத்துக்கு போயிட்டு ரொம்ப சலிச்சுகிட்டு வரீங்க..?

நல்ல செருப்பா செலெக்ட் பண்ணி வச்சிருந்தேன்.. சாப்பிட்டுட்டு வர்றதுக்குள்ள வேற ஏதோ களவாணிப்பய சுட்டுகிட்டு போயிட்டான்..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

இருந்தாலும் இந்த அநியாயம் எங்கேயும் நடக்காது..

என்னங்க..? கல்யாணத்துக்கு போயிட்டு ரொம்ப சலிச்சுகிட்டு வரீங்க..?

அதிகமா மொய் போட்டவங்களுக்கு கல்யாண வீட்டுக் காரங்களே நல்ல செருப்பா திருடி தாம்பூலப் பையில போட்டுத் தராங்க..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

மேலாளர் புதிதாய்ப் பணிக்கு சேர்ந்த தட்டம்மையிடம்..

இந்த ஆபீஸை உங்க வீடா நினைச்சுக்கங்க.. எது வேணும்ன்னாலும் தயங்காமக் கேளுங்க..

சரிங்க சார்.. நீலக்கலர்ல சின்னச் சின்ன பூ டிசைன் போட்ட சுடிதார் வாங்கித் தாங்க சார்..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

என்னாய்யா.. நாம எவ்வளவோ இலவசத் திட்டம் அறிவிச்சும் தேர்தல்ல தோத்துட்டோமே..?

எதிர்க்கட்சிக் காரன் "இலவச மதிப்பெண் வழங்கும் திட்டம்"ன்னு ஒன்ன அறிவிச்சு ஓட்டுகளை அள்ளிட்டான் தலைவரே..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

என்னடி.. உன் புருஷனுக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்காமே ..?

அதெல்லாம் டூப்பு.. ராத்திரியில சின்ன வீட்டுக்கு போறதுக்கு அப்படி ஒரு ஐடியா பண்ணி நடிச்சிருக்கு சனியன்..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

அறிஞர்
08-03-2007, 08:29 PM
என்ன அண்ணா.. சமீபத்தில் கல்யாண வீடு சென்றீரா...

கல்யாண வீட்டு ஜோக் அதிகமா வருது..

அறிஞர்
08-03-2007, 08:30 PM
அதெல்லாம் டூப்பு.. ராத்திரியில சின்ன வீட்டுக்கு போறதுக்கு அப்படி ஒரு ஐடியா பண்ணி நடிச்சிருக்கு சனியன்..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

இது சூப்பர் ஐடியாவா இருக்கே...
கலக்குங்க.. ராஜா..

மன்மதன்
09-03-2007, 05:20 AM
நகைச்சுவைக்களஞ்சியம் என்ற பட்டமே கொடுக்கலாம்..

இளசு
09-03-2007, 06:15 AM
ஹாஹ்ஹா...

மீஸில்ஸ் -தான் தட்டம்மை என எண்ணியிருந்தேன்..

டைப்பிஸ்ட்டுக்கும் அதே பேர்தானா?


கலக்கும் -அசத்தும் ராஜாவுக்கு பாராட்டுகள்..

ராஜா
09-03-2007, 05:08 PM
என்ன.. நம்ம மாதவன் உடம்பெல்லாம் பேண்டேஜா போட்டிருக்கு..?

வாடகைக்கு வீடு பார்க்கப் போனவர் தன் வீட்டுல போய் " சின்ன வீடுதான்.. சூப்பரா இருக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு" ன்னு சொல்லியிருக்கார்..!

HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

உன் பாடலில் குற்றம் இருக்கிறது என்று தலைமைப் புலவர் சொன்னாராமே..? சொற் குற்றமா.. பொருட் குற்றமா..?

ரெண்டும் இல்லே.. திருட்டு குற்றமாம்.. அவர் செய்யுளில் இருந்தே நான் சுட்டது தெரிஞ்சு போச்சு..!

HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

வக்கீல் 1 ; நம்ம டெங்குஸ்ரீ லொள்ளு தாங்க முடியாமப் போய்க்கிட்டு இருக்கா..ஏன்?

வக்கீல் 2 ; முன் ஜாமீன் வாங்கற மாதிரி முன் விவாகரத்து வாங்கித் தாங்கன்னு கேக்குது..!

HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

கணவர் இல்லாம சினிமாவுக்கு போக மாட்டியா.. ஏன்.. அவ்வளவு பிரியமா..?

திடீர்ன்னு குழந்தை அழுதா அவர்கிட்டே கொடுத்து வெளியே அனுப்பிட்டு நிம்மதியா சினிமா பார்க்கலாமே..!

HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

என்னாய்யா.. ஸ்டேஷன் உள்ளேயே சாராயம் காய்ச்சறீங்க..?

கேஸ் பிடிச்சப்ப கைப்பத்தின சாராய பாட்டில் எல்லாம் உடைஞ்சு போச்சு.. நாளைக்கு கோர்ட்டுல எவிடென்ஸ் காட்டணும்.. ஹி..ஹி..

HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

மனோஜ்
09-03-2007, 05:22 PM
என்னாய்யா.. ஸ்டேஷன் உள்ளேயே சாராயம் காய்ச்சறீங்க..?

கேஸ் பிடிச்சப்ப கைப்பத்தின சாராய பாட்டில் எல்லாம் உடைஞ்சு போச்சு.. நாளைக்கு கோர்ட்டுல எவிடென்ஸ் காட்டணும்.. ஹி..ஹி..

HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

இது உன்மையான சிரிப்பு தா ராஜா:)
ஆனா இதே மாதிரி எத்ததையே நடக்குது :D :D :D

ராஜா
10-03-2007, 07:39 PM
போலீஸ் சங்கம் வைக்கும் கோரிக்கையை ஏன் வாபஸ் வாங்கிட்டாங்களாம்..?

கள்ளச் சாராயம் காய்ச்சுவது தவறு இல்லைன்னு சட்டம் போடப் போறதா மந்திரி மிரட்டினாராம்..!
__________________________________________________________________________________________

நிருபர் ; பஞ்சாயத்து ராஜ் பற்றி உங்க கருத்து என்ன..?

டெங்குஸ்ரீ ; பிரகாஷ் ராஜோட நடிச்சிட்டு இருக்கறதாலே அவருக்கு கால் ஷீட் கொடுக்க முடியலே.. நல்ல வளரும் நடிகர்.. !
___________________________________________________________________________________________

அவர் லஞ்சக் கவர்ன்னாலே கடுப்பாயிடுவாரு..

அவ்வளவு நேர்மையா..?

இல்லே..! ஒருதடவை காரியத்தை சாதிச்சுக்கிட்டு பழைய லாட்டரி சீட்டை கவர்ல வச்சு எவனோ குடுத்துட்டானாம்.. !
__________________________________________________________________________________________

ஜோல்னா பையிலே என்ன சார் வச்சிருக்கீங்கன்னா தூக்க மாத்திரைன்னு சொல்றீங்க.. இவ்வளவு பெருசா இருக்கு..?

ஆபீஸ் பைல் சார்..! தூக்கம் வரலேன்னா எடுத்து பார்ப்பேன்.. உடனே தூக்கம் அசத்தும்..!
____________________________________________________________________________________________

எதுக்கு தலைவரே இப்ப வீடு வீடா போகணும்ன்னு சொல்றீங்க..? அதான் தேர்தல்ல தோத்துப் போயிட்டீங்களே..?

ஒரு லட்சம் பேர் ஓட்டு போட பணம் வாங்கிக்கிட்டு வெறும் 57 பேர் மட்டும் போட்டிருக்கீங்களே..? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கான்னு ஒவ்வொருத்தனையும் நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேக்கணும்..!
____________________________________________________________________________________________

கண்ணம்மா ; என்னங்க .. உங்களுக்கு பத்திரிக்கை ஆபீஸ்லேருந்து சன்மானம் வந்திருக்கு..

ராஜா ; அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.. என்ன எழுதியிருக்காங்க..?

கண்ணம்மா ; மாசா மாசம் முடிஞ்ச சன்மானத்தை அனுப்பி வைக்கிறாங்களாம்.. இனிமே அபத்த ஜோக்கெல்லாம் அனுப்பி வைக்காதீங்கன்னு போட்டிருக்காங்க..!
____________________________________________________________________________________________

கண்டிப்பா அவர் போலி டாக்டர்தான்.. சந்தேகமே இல்ல..

எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றே..?

இதுவரைக்கும் அவர் செய்த ஆபரேஷன்ல எல்லா பேஷண்டும் பிழைச்சிட்டாங்களே..!
___________________________________________________________________________________________

தலைவர் சட்டசபைக்கு வந்து கையெழுத்து போட்டுட்டு அப்படியே போயிடறாரே..ஏன்..?

அரசியலுக்கு வர்றதுக்கு முந்தி போலீஸ் ஸ்டேஷன்ல தினமும் கையெழுத்து போட்டுட்டு போற வழக்கம் இன்னும் மாறலே..!
___________________________________________________________________________________________

உங்க படத்துக்கு இப்போதானே பூஜை போட்டிருக்கீங்க..? அதுக்குள்ளே படம் சூப்பன்னு விமர்சனம் எழுதிட்டாங்க.. எப்படி சார்..?

ஒருவேளை நான் காப்பி அடிக்கப் போற ஆங்கிலப் படத்தை பார்த்துட்டு எழுதறாங்களோ என்னமோ..? வித்தியாசமா எடுத்து அவங்க கணிப்பை பொய்யாக்குவேன்..!
____________________________________________________________________________________________

என்னது..? உங்க டாக்டர் M.B.B.S., B.L., படிச்சிருக்காரா..?

ஆமாம்.. ஆபரேஷன் பண்ணும்போதே உயில் விவகாரத்தையும் கவனிச்சுக்குவார்..!
___________________________________________________________________________________________

leomohan
11-03-2007, 06:03 AM
நிருபர் ; பஞ்சாயத்து ராஜ் பற்றி உங்க கருத்து என்ன..?

டெங்குஸ்ரீ ; பிரகாஷ் ராஜோட நடிச்சிட்டு இருக்கறதாலே அவருக்கு கால் ஷீட் கொடுக்க முடியலே.. நல்ல வளரும் நடிகர்.. !
___________________________________________________________________________________________


பஞ்ச்....................

ராஜா
12-03-2007, 03:21 AM
ஒரு சின்னக் கேள்வி..பதில் சொல்ல முடியுமா..? பேப்பர், பென்சில், கால்குலேட்டர் பயன்படுத்தாம பதில் சொல்லணும்.. ஓகே..?

சென்னை கோயம்பேட்டிலிருந்து, ஒரு பேருந்தை 18 பயணிகளோடு ஓட்டிட்டுப் போறீங்க.. காசி தியேட்டராண்ட 7 பேர் இறங்கறாங்க.. மூணு பேர் ஏறுறாங்க.. பல்லாவரத்துல ஒத்தன் கூட எறங்கல.. ஆனா ஏழு பேர் ஏறுறாங்க.. தாம்பரத்தில எட்டு பேர் எறங்கி 14 பேர் ஏறிட்டாங்க.. இப்போ மறுபடி கணக்கை படிக்காம சொல்லுங்க.. பஸ் டிரைவர் பேர் என்ன..?


மறுபடி படிச்சீங்கதானே..?

__________________________________________________________________________

கீழே இருக்கற வாக்கியத்தில எத்தனை 'F' இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்..

perfect fushion means a sort of sufficient amount of fishy functioned familior, freeky, funny, effortless thing.

இப்போ விடையைச் சொல்லுங்க..ஒரே தடவை தான் மறுபடி படிக்காதீங்க் .. fராட் அடிக்காதீங்க..!



13.. ஆனா ரொம்ப பேரு தப்பாதான் சொல்லியிருப்பீங்க.

_________________________________________________________________________

ஒரு பெண்மணி அவசர மருத்துவ உதவி சேவையகத்துக்கு தொலை பேசினாள்.. என் கணவர் நாய் பிஸ்கட்டை திங்கறார்.. நாய் சோப்பைப் போட்டு குளிக்கிறார்..

"சிலர் அப்படிதாம்மா..! கிறுக்குத்தனமா ஏதாவது செய்வாங்க.. அடுத்தவங்களுக்கு ஒண்ணும் எடைஞ்சல் இல்லாம இருந்தா விட்டுருங்க.. அவர் சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும்..!

கொஞ்ச நாள் கழித்து சேவையகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு..

இப்போ எப்படிம்மா இருக்கார் உங்க கணவர்..?

ஒரு மழை நாளில் சிறுநீர் கழிக்கும்போது, மின்சாரம் தாக்கி இறந்து விட்டார்..!.

_________________________________________________________________________

டாக்டர்.. கை ரொம்ப நடுங்குது.. ஏதாவது சிகிச்சை பண்ணுங்க..!

ரொம்பக் குடிப்பீங்களோ..?

எங்க டாக்டர்..? கை ஆடுற ஆட்டத்திலே எல்லாம் கீழ சிந்திடுது டாக்டர்..!




மனைவி ; என் கணவர் தான் ஒரு கோழின்னு நெனச்சுக்கறார்டி..

தோழி ; டாக்டர்ட்ட காட்டலாமே..

மனைவி ; இப்ப முடியாதுடி.. முட்டை போட்டுகிட்டு இருக்காரு.. கொஞ்ச நாள் போகட்டும்..




சர்தார் ; என் விலை உயர்ந்த நாய் எங்கேயோ காணாமப் போயிருச்சு..

நண்பர் ; பேப்பர்ல விளம்பரம் கொடுத்துப் பார்க்கறது தானே..?

சர்தார் ; மடத்தனமா பேசாதே.. அதுக்கு படிக்கத் தெரியாது..!
__________________________________________________________________________

மன்மதன்
12-03-2007, 05:43 AM
ஹாஹ்ஹா.

மின்சார கம்பத்தில் சுசூ போன நாய் பிஸ்கட் கணவன் கதி... அய்யகோ.. சிட்டியில கூட இது மாதிரிதான், அங்கங்கே அடிக்கிறாங்கோ..

aren
12-03-2007, 07:52 AM
நாய்க்கு நிச்சயம் படிக்கத் தெரியாதுதான். ஆனால் அது எப்படி சர்தாருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

அறிஞர்
12-03-2007, 02:34 PM
ஒவ்வொன்றும் அருமை ராஜா

F பற்றிய... கேள்வியை முன்பு படித்திருந்ததால் சரியான விடை கிடைத்தது... பெரிய எழுத்துகளை உபயோகித்து இருந்தால் கொஞ்சம் கடினமாக இருக்கும்.

ராஜா
12-03-2007, 06:22 PM
உலகக் கோப்பை முடிவில் இந்திய ரசிகர்கள் பாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் பாடல் இது..

சட்டி சுட்டதடா.. கை விட்டதடா..
புத்தி கெட்டதடா.. நெஞ்சைத் தொட்டதடா..

அரை மண்டை சேவாக்கு அவுட் ஆயிட்டாண்டா..
உள்ளூர் புலி உத்தப்பாவும் ஊத்திக்கிட்டாண்டா..!
தட்டித் தட்டி தெண்டுல்கரும் எட்டு அடிச்சாண்டா..பந்தை
தடவித் தடவி கங்கூலியும் கையில தந்தாண்டா....[சட்டி...]

திராவி எடுத்து திராவிடுமே அம்பது எடுத்தாண்டா.. அதை
எடுக்குமுன்னே முப்பது ஓவர் முடிஞ்சு போச்சுடா..
பாடு பட்டு யுவராஜ் பையன் ஓடி உழைச்சாண்டா..
கூட சேர்ந்து தோனி நல்லா கும்மி அடிச்சாண்டா.. [சட்டி..]

எல்லாம் சேந்து எரநூறு ரன்னு அடிச்சாங்கடா.. எதித்து
ஆடும் இலங்கை அணியில் குழப்பம் வந்ததடா..
எனக்கும் வேணும்.. காஜி ..உனக்கும் வேணுமடா
இத்துணூண்டு ஸ்கோரில் அது எப்படி நடக்குமடா..?..[சட்டி..]

சீட்டு குலுக்கி போட்டுப் பார்த்து அனுப்பி வச்சாங்கடா..
எட்டு ஓவரில் பொட்டு பொட்டுன்னு நூறு அடிச்சாங்கடா..
கும்ப்ளே கையில் பந்தை குடுத்து போடச் சொன்னாண்டா..
நம்புனா நம்பு.. இல்லாட்டிப் போ.. ஜெயசூரியா அவுட்டுடா.. [சட்டி..]

பார்த்திருந்த பாழாப் போனவங்களுக்கு ஆசை வந்ததடா..
காத்திருந்த சங்கக்காரா பாஞ்சு வந்தாண்டா.. அவன்..
மாட்டப் போட்டு சாத்துறதாட்டம் ஆட்டம் போட்டாண்டா..அவன்
போட்ட போட்டில் இலங்கை அணி எளிதாய் வென்றதடா.. [சட்டி..]


இது நகைச்சுவைக்காக மட்டுமே.. யாரும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்..
என் வாரிசுகள் இதை உல்ட்டா செய்ய உரிமை உண்டு..!

அமரன்
12-03-2007, 06:29 PM
ராஜா. நாளை எதுவும் நடக்கலாம். இந்தப்பாட்டின் பிரகார நடக்கலாம் அல்லது காட்சி மாறலாம். இப்போது இதை படித்துச் சிரிக்கலாம். அருமை.

ராஜா
12-03-2007, 06:30 PM
சர்தார் தன் நண்பனிடம்..

அந்தப் பொண்ணுக்கு காது செவிடுன்னு நெனைக்கிறேன்..

ஏன் அப்படிச் சொல்றே..?

அவளப் பார்த்து "ஐ லவ் யூ சொன்னேன்.. அவ செருப்பு புதுசுன்னு சொல்றா..!

அமரன்
12-03-2007, 06:32 PM
ஐயோ.... என்னால தாங்க முடியலையே......

ராஜா
12-03-2007, 06:35 PM
இரு சர்தார்ஜி மாணவர்கள் கட்டிப் புரண்டு சண்டை இட்டனர்.. சமாதானம் செய்ய வந்தவர் கேட்டார்..

ஏம்பா தம்பி சண்டை போட்டுக்கறீங்க..?

பீன்ன என்ன சார்..? இன்னிக்கு பரிட்சையில கடைசி கேள்வியை நான் எழுதாம விட்டுட்டேன்.. இவனும் எழுதலேன்னு சொல்றான்.. இப்போ எங்க சார் என்ன நெனைப்பாரு..? அவனப் பாத்து நான் காப்பி அடிச்சேன்னு தானே?

மதி
13-03-2007, 03:26 AM
அட்டகாசம்..அருமை...

raj6272
13-03-2007, 08:27 AM
சத்தார் மாணவர்கள் ஜோக் மிக அருமை

மனோஜ்
13-03-2007, 08:42 AM
உங்கள் உலகக் கோப்பை பாடல் அருமை உன்மையில் நல்ல படித்து சிரித்தேன்:D :D :D :D :D

ராஜா
14-03-2007, 07:23 AM
நம்ம சானல்ல சமையல் நிகழ்ச்சி நடத்தறாரே.. அவர் போன் நம்பர் கேட்டு நிறைய பேர் விசாரிக்கறாங்க..

சமையல் டிப்ஸ் கேட்டா..?

இல்லே.. அவர் சமையல் பண்றது நல்லா இருக்குதாம்..கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு விசாரிக்கறாங்க..!

**************************************************************************************************

தலைவரே.. ஆளுங்கட்சி நம்ம மாநாட்டை தோல்வி அடையச் செய்ய சதி பண்ணியிருக்குதாம்..

அப்படியா..? என்னய்யா சொல்றே..?

லாரிகளை தேசிய மயமாக்கப் போறாங்களாம்..!

******************************************************************************************************

ஏன் முனியம்மா.. அந்தக் கோடி வீட்டு வேலையில் இருந்து நின்னுட்டே..?

பின்ன என்னாடி..? அக்கம் பக்கத்து வீட்டுக் கதையை சொன்னா ஒரு ஆர்வமா கேட்க மாட்டேங்குது அந்த ஊட்டம்மா..!

*****************************************************************************************************

கலா.. அதான் வேலைக்காரி இருக்காளே..? பின்ன ஏண்டி உன் புருஷன் சட்டையைப் போட்டு துவைச்சுகிட்டு இருக்கே..?

தலையெழுத்துடி..! வேலைக்காரி துவைக்கப்போறதா நெனைச்சுக்கிட்டு பத்து, இருபதுன்னு பையிலே வச்சுட்டு போறார்டி..!

******************************************************************************************************

பிச்சைக் காரன் ; அம்மா அய்யா மனசு கோணாம நடந்துக்கங்கம்மா.. கவலைப் பட விடாதீங்க.. ஒரு வாரமா சமையல்ல அவர் கைமணம் இல்லே..!

*****************************************************************************************************

என்ன கமலா..? நம்ம வேலைக்காரி டேப் ரிக்கார்டரும் கையுமா வந்திருக்கா..? என்ன விஷயம்..?

அவ வேலை செய்யற வீட்டுல எல்லாம் நம்ம சண்டை ரொம்ப பாப்புலராம்.. அடுத்த எபிசோட் கேட்க முன்பதிவு பண்ணியிருக்காங்களாம்..!

*****************************************************************************************************

என்ன சார்..? உங்க ஊர்ல போலீஸ் ஜாக்கிரதைன்னு போர்டு போட்டிருக்கே..?

ஆம்மாம் சார்.. எங்க ஊர்ல மாமூல் ரேட் அதிகம்.. பிக் பாக்கெட் காரங்க வச்சிருக்குற போர்டு அது..!

***************************************************************************************************

எங்க படத்துல சண்டைக்காட்சி எல்லாம் பிரம்மாண்டமா இருக்கும்.. இதுக்காகவே ஸ்பெஷலா...

ஹாலிவுட்லேருந்து ஸ்டண்ட் மாஸ்டர் வராங்களா..?

சட்டசபையிலேருந்து எம்.எல்.ஏ. வராங்க..!

****************************************************************************************************

என்ன சார்..? வேலைக்காரிகிட்ட இவ்வளவு வழியறீங்க.. உங்க சம்சாரம் கண்டுக்கவே இல்லே..?

இவளை விட்டா வேற நல்ல வேலைக்காரி கிடைக்க மாட்டாளே..? அதனாலதான்..?

அப்போ உங்களை விட்டுட்டா பரவாயில்லியா அவங்களுக்கு..?

********************************************************************************************************

வார்டு எலெக்ஷன்ல நின்னது தப்பாப் போச்சா .. ஏன் சார்..?

மொத்தம் விழுந்த 3 ஓட்டை வச்சு என் சின்ன வீடு யார்ன்னு துளைச்சி எடுக்கறா.. மாட்டிக்குவேன் போல இருக்கு..!

*******************************************************************************************************

நடிகை டெங்குஸ்ரீக்கு வயசு அதிகமா இருக்கும் போலருக்கே..?

எப்படிடா சொல்றே..?

அவங்க நடிச்ச படம் இந்த வாரம் பொதிகையிலே போடறாங்களாம்..!

**************************************************************************************************

நாளைக்கு மட்டும் ஒருநாள் விடுப்பு வேணும் மக்கா...!

மன்மதன்
14-03-2007, 08:25 AM
நாளைக்கு மட்டும் ஒருநாள் விடுப்பு வேணும் மக்கா...!

அனைத்து சிரிப்புகளும் அள்ளுது. இருந்தாலும் மேலே உள்ள ஜோக் புரியவில்லை..:rolleyes: :rolleyes:

pradeepkt
14-03-2007, 09:55 AM
அனைத்து சிரிப்புகளும் அள்ளுது. இருந்தாலும் மேலே உள்ள ஜோக் புரியவில்லை..:rolleyes: :rolleyes:
அவரு இப்படி ஜோக் எழுதி எழுதி... அவரு எழுதுறது எல்லாம் ஜோக்குன்னு நீயே முடிவு பண்ணிட்ட... இதெல்லாம் நல்லதில்லை. :D

அறிஞர்
14-03-2007, 05:06 PM
நாளைக்கு மட்டும் ஒருநாள் விடுப்பு வேணும் மக்கா...!
என்ன ராஜா அண்ணா வீட்டுல விசேஷமா.....

விடுப்பு எடுத்து வந்ததும்,
விடாமல் தொடருங்க...

ராஜா
14-03-2007, 06:08 PM
நான் பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம்..
எதிர்வரும் நிதியாண்டில் வகுக்கப்படவேண்டிய தொழிற்கொள்கைகள் குறித்து முடிவெடுக்கவிருக்கிறோம்..

நாளை மறுநாள் உங்கள் அனைவரையும் காண ஓடோடி வந்து விடுவேன்.. நன்றி.

mgandhi
14-03-2007, 06:41 PM
கலெக்டர் தேர்வில் இளைஞன் ஒருவன் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பணக்காரர் ஒருவர் அறிந்தார். பத்து வேலைக்காரர்களை அனுப்பி சொகுசுக் காரில் அந்த இளைஞனைத் தன் மாளிகைக்கு வரவழைத்தார்.

அரண்மனை போன்ற தன் மாளிகையைப் பெருமையுடன் அவனுக்குச் சுற்றிக் காட்டினார். அவருடன் நண்பர்களும் இருந்தனர்.

இளைஞனே! உன்னைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக உள்ளது. இந்தப் பகுதியிலேயே பெரிய பணக்காரன் நான். எனக்கு இருப்பது ஒரே மகள். அவள் அவ்வளவு அழகாக இருக்க மாட்டாள். அவளை உனக்கு திருமணம் செய்து வைத்து என் மருமகனாக்கிக் கொள்ள விரும்புகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார் அவர்.

மகிழ்ச்சியுடன் அவரை வணங்கிய அவன், ஏழையும் எளியவனுமான எனக்கு இவ்வளவு பெரிய நல்வாய்ப்பா? பேரும் புகழும் வாய்ந்த உங்கள் பரம்பரையில் பெண் எடுக்க நான் தவம் செய்திருக்க வேண்டும். என் வீட்டிற்குச் செல்ல அனுமதி தாருங்கள். இந்தத் திருமணத்திற்கு என் மனைவியிடம் ஒப்புதல் வாங்கி வந்து விடுகிறேன், என்றான்.

ராஜா
15-03-2007, 04:24 PM
நல்ல நகைச்சுவை மோகன் காந்தியாரே..!

ராஜா
15-03-2007, 04:33 PM
நாளை...


ஜொள்ள..ஜொள்ள இனிக்குதடா..!

ராஜா
15-03-2007, 05:55 PM
ஜொள்ள ஜொள்ள இனிக்குதடா..!

உன்னைக் கண்டேன்
என்னை மறந்தேன்
உன் தங்கையைக் கண்டேன்
உன்னை மறந்தேன்

என கவிதை எழுதுவது

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

வரும் நாட்களில்
அவளைப் பார்ப்பது
வராத நாட்களில்
அவள் தோழியைப் பார்ப்பது

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

Unit testல் 2 மார்க்
எடுத்தாலும்
கைகுலுக்கிப் பாராட்டுவது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,

குட்டைப்பாவாடையில்
குலதெய்வம் போலிருக்கிறாய்
என கரடி விடுவது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,

மூப்படைந்தாலும்
மூக்கில் எதோவென
கன்னத்தை கிள்ளி சரி செய்வது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,

ஞாயிறு பீச்சிற்கு
கூலிங்கிளாஸ் அணிந்து
செல்வது


ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,

தன் ஏரியாவில்
தன்னடக்கமாய் இருந்து
அடுத்த ஏரியாவில்
அடக்கமிழப்பது !


ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,

கும்பலில் செல்லும் போது
பாக்கெட்டில் கைவிட்டுக்கொண்டு
செல்வது

அறிஞர்
15-03-2007, 06:15 PM
ராஜா உங்க லொள்ளு ரொம்ப.... சூப்பர்.. :080402cool_prv: :080402cool_prv: :080402cool_prv:
:medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002: :icon_36: :icon_36: :icon_36:

ராஜா
15-03-2007, 06:24 PM
சுபனும் மாதவ் சிங்கும் வேலை தேடிப் போனார்கள்.. ஒரு அலுவலகத்தில் இருவரூக்கும் நுழைவுத் தேர்வு வைத்தார்கள்... இருவரும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தனர்.. ஒரே ஒரு கேள்வியைத் தவிர..

சுபனுக்கு மட்டும் வேலை கிடைத்தது.. மாதவ் சிங்குக்கு கிடைக்கவில்லை..

மாதவ் புரட்சிக் குரல் எழுப்பினார்.. இருவரும் ஒரே மாதிரிதான் தேர்வு எழுதினோம்.. இருவரும் கடைசிக் கேள்விக்கு பதில் எழுதவில்லை.. பின் அவருக்கு மட்டும் வேலை.. எனக்கு ஏன் இல்லை...?

பொறுப்பாளர் விடைத்தாள்களைக் காட்டினார்..

கடைசிக் கேள்விக்கு சுபன் எழுதி இருந்த பதில்...

எனக்கு விடை தெரியவில்லை...

மாதவ் சிங்கின் பதில்...

எனக்கும் தான்..!

ராஜா
15-03-2007, 06:39 PM
சுபனின் சிபாரிசின் பேரில் மாதவ் சிங்குக்கு ஒரு வேலை கிடைத்தது.. ஊர் ஊராகச் செல்லும் வேலை.. எனவே மாதவ் சிங்குக்கு செல்பேசியும் கொடுத்திருந்த்தனர்.. ஆனால் அதை "ஆன்" செய்து வைத்திருந்தால்தான் அழைப்புகள் கிடைக்கும் என்று மாதவுக்கு தெரியாது.. ஒருமுறை ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல தலைமையகம் தேடியபோது மாதவ் சிங்கை செல்பேசியில் பிடிக்க இயலவில்லை..

ஒரு வாரம் கழித்து திரும்பிய மாதவை மேலாளர் கேட்டார்..

"உன்னை செல்லில் பிடிக்க முயன்றோம்.. முடியவில்லை.. ஏனென்று அறிவாயா..?

மாதவ் உரைத்தார்..

நான் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கும்போதூ எஸ்.டி.டீ கோட் எண்ணும் மாறியிருக்கும்.. அதனால்தானே..?

சுபனுக்கும் வேலை போய்விட்டது..!
_________________

அறிஞர்
15-03-2007, 06:42 PM
நான் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கும்போதூ எஸ்.டி.டீ கோட் எண்ணும் மாறியிருக்கும்.. அதனால்தானே..?

சுபனுக்கும் வேலை போய்விட்டது..!
_________________
அப்பாவியான சிங்க்..
பாவமான சுபன்........

அருமை.. ராஜா.. :music-smiley-008: :music-smiley-008:

ராஜா
16-03-2007, 05:36 PM
லொள்ளத் துடிக்குது மனசு...! (1)

ராஜாவின் லொள்ளு..

லொள்ளு எனப்படுவது யாதெனின் எல்லோரையும்
சொல்லவியலா தொல்லைக்கு உள்ளாக்கல்...

வடிவேலு லொள்ளு..

ஜட்டி ஈரம் உள்ளே ஆனாலும்
வெட்டி வீரம் வெளியே பேசுதல்..

நைட்டு கடை லொள்ளு..

ஒத்தை ஆப்பாயில் வாங்கி இலை ஒரமா வச்சு
மத்தவங்க பார்க்கும்வரை தின்னாதிருப்பது..

டூ ஸ்ட்ரோக் பைக் காரன் லொள்ளு..

வாயை வயிறைக் கட்டி வட்டிக்கு பணம் வாங்கி பெட்ரோலில்
ஆயில் அதிகமாப் போட்டு ஊரை நாற அடிப்பது..

சப்பை ஃபிகருங்க லொள்ளு..

முக்காவாசி சுடிதார்ல காத்தும் ஒரமா நாலு எலும்பும் இருந்தாலும்
அக்காமாருங்க எல்லாம் அசினும் ஐஷும் போல அலட்டுறது..

மன்மதன்
16-03-2007, 05:37 PM
'எனக்கும்தான்' என்று எழுத அவரைவிட்டா யார் இருக்கா..!!

ராஜா
16-03-2007, 05:42 PM
லொள்ளத் துடிக்குது மனசு...! (2)

கல்யாணம் பண்ணி வைக்கிற ஐயர் லொள்ளு..

இல்லாத பொல்லாத பொருளையெல்லாம் நெருப்புல போட்டு
நல்லாருக்குற எல்லாத்தையும் மூட்டை கட்டுறது..

அல்லக்கை லொள்ளு.

சின்னப் பயலையெல்லாம் அண்ணேன்னு தெய்வமேன்னு அழைப்பது..
தண்ணியிலே இருக்கையிலே கன்னா பின்னான்னு திட்டுவது..


தொலைக்காட்சி தொடர் லொள்ளு..

நாளும் பொழுதும் துரோகம்.. வசவு.. சோகம்..சொதப்பல்..
காலம் போன கடைசியிலே திருந்துதல்.. வருந்துதல்..


பொதுமக்கள் லொள்ளு..

வாரவன் போறவனுக்கெல்லாம் உனக்குதான் ஓட்டுன்னு வாக்கு கொடுப்பது..
யாரவன் ஆண்டாலும் கீழே இறக்கி வேட்டு வைப்பது..

ராஜா
16-03-2007, 05:45 PM
என்ன நண்பர்களே..?

லொள்ளு எல்லாம் நல்லா இருக்கா..? தொடரலாமா இல்லே நிறுத்திடலாமா..?

மன்மதன்
16-03-2007, 06:10 PM
நிறுத்துனீங்கன்னா ஆட்டோ வரும் ஆமா..:icon_hmm:

ராஜா
17-03-2007, 07:53 PM
ஒரு பொருளை விற்பது என்பது சின்ன விஷயம் இல்லீங்க.. பெரிய பெரிய நிறுவனம் எல்லாம் படாத் பாடு பட்டிருக்காங்க தெரியுமா..?

.

ராஜா
17-03-2007, 07:55 PM
பிரபல் சியர்ஸ் என்னும் நிறுவனம் தயாரித்த ஹேர் டிரையர் உபயோகிக்கும் வழிமுறைப் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தது..

எக்காரணம் கொண்டும் தூங்கும்போது உபயோகிக்காதீர்கள்..

[யாருங்க தூங்கிட்டே முடி உலர்த்துவாங்க..?]
__________________________________________________________

ஃபிரைட்டோஸ் என்னும் தீனி பாக்கெட்டின் மேல் இருந்த வார்த்தைகள்...

நீங்கள் கூட லட்சாதிபதி ஆகலாம்.. எதுவும் வாங்க வேண்டிய அவசியமில்லை.. விவரங்கள் பாக்கெட்டுக்குள் இருக்கின்றன..

[வாங்காம எப்படி பாக்கெட்டுக்குள்ள பார்க்கறதாம்.. திருடிக்கிட்டு ஓடிப்போயா..?]
__________________________________________________________

டியால் என்னும் சோப் உறையின் மேல் எழுதப்பட்டிருக்கும் உபயோகிக்கும் முறை..

வழக்கமாக மற்ற சோப்புகளை உபயோகிப்பது போல் பயன்படுத்தவும்..

[இதுக்காக மத்த சோப்பெல்லாம் வேற வாங்கிப் பார்க்கணும் போலருக்கே..?]
___________________________________________________________

டெஸ்கோ என்னும் நிறுவனம் தயாரித்த டெசர்ட் [ இனிப்பு வகை] யின் பேக்கிங்கில் இருந்த எச்சரிக்கை என்ன தெரியுமா..? தலை கீழாக திருப்பாதீர்கள்.. அது அச்சிடப் பட்டிருந்த இடம் எது தெரியுமா..?

அடிப்பக்கத்தில்..
____________________________________________________________

மார்க்ஸ் & ஸ்பென்சர் நிறுவனம் தயாரித்த உணவு வகையின் மேல் இருந்த குறிப்பு இது..

உஷ்ணப் படுத்தினால் இந்த புட்டிங் சூடாக இருக்கும்..
____________________________________________________________

ரோவெண்டா என்ற நிறுவனத்தின் இஸ்திரிப் பெட்டியில் இருக்கும் எச்சரிக்க்கை..

அணிந்திருக்கும் ஆடைகளின் மேல் பயன்படுத்தாதீர்கள்..
_____________________________________________________________

பூட்ஸ் என்னும் நிறுவனத்தின் குழந்தைகள் இருமல் மருந்து பாட்டிலில் உள்ள வாசகம்..

இதை அருந்திய பின் வாகனம் ஓட்டவோ, பெரிய இயந்திரங்களைக் கையாள்வதோ கூடாது..
_____________________________________________________________

கிறிஸ்துமஸ் வரிசை விளக்குகளின் அட்டைப் பெட்டியின் மேல்..

வீட்டுக்குள் மற்றும் வீட்டுக்கு வெளியில் மட்டும் உபயோகிக்கவும்..
_____________________________________________________________

ஃபுட் ப்ராஸஸர் மேல்..

உணவு தயாரிப்பு தவிர வேறு எதற்காகவும் உபயோகிக்கக் கூடாது..
_____________________________________________________________

அமெரிக்க நிறுவனம் ஒன்றின் வேர்க்கடலைப் பாக்கெட்டின் மீது..

பாக்கெட்டை பிரித்தபின் கடலையைத் தின்னவும்..
____________________________________________________________

குழந்தைகளுக்கான சக்திமான் உடையின் மேல்..

இதை அணிந்தால் பறக்க முடியாது.. அறியவும்..
____________________________________________________________

ராஜா
17-03-2007, 07:58 PM
கோல்கேட் ன்னா ஸ்பானிஷ் மொழியில தூக்குல தொங்குன்னு உங்களுக்கு தெரியும்.. ஆனா இன்னொரு அக்குரும்பு நடந்துச்சு.. தெரியுமா..?

பிரான்ஸ் நாட்டில் கோல்கேட் நிறுவனம் "க்யூ" என்ற பெயரில் ஒரு பற்பசையை அறிமுகப்படுத்தியது.. பெரிய அளவில் விளம்பரமெல்லாம் செய்தபின் தான் தெரிந்தது.. க்யூ என்றால் பிரெஞ்ச் மொழியில் செக்ஸ் என்று அர்த்தமென்று...
__________________________________________________________________________

கெர்பெர் என்னும் நிறுவனம் ஆப்பிரிக்காவில் குழந்தைகளுக்கான பால் டின்களை விற்க முயன்றது.. ஒரு அழகான குழந்தையை டப்பாவின் மேல் அச்சிட்டிருந்தது. எவ்வளவோ விளம்பரம் செய்தும் போணியாகவில்லை.. பின்னர்தான் விபரம் தெரிந்தது..

உள்ளே இருக்கும் பொருளின் படத்தை தான் ஆப்பிரிக்காவில் பேக்கிங் மேல் அச்சிடுவார்கள் என்று..
__________________________________________________________________________

ஸ்பெயின் நாட்டுக்கு போப் ஆண்டவர் வருகை தந்தார்.. இதைப் பயன்படுத்தி விற்பனையைப் பெருக்க ஒரு அமெரிக்க டீ சர்ட் நிறுவனம் முயன்றது. ஆனால் கதை கந்தலாகி விட்டது.. ஏன் தெரியுமா..?

EL PAPA [நான் போப் அவர்களை தரிசித்தேன்] என்று டீ சர்ட் மேல் அச்சிடுவதற்கு பதிலாக LA PAPA [நான் உருளைக் கிழங்கை பார்த்தேன்] என்று அச்சிட்டுத் தொலைத்ததே காரணம்.
_________________________________________________________________________

பெப்ஸி நிறுவனம் சீனாவில் காலூன்ற முயன்றபோது அடித்த கூத்து என்ன தெரியுமா..?

பெப்சியின் புதிய தலைமுறை உங்கள் அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் என்ற கேப்ஷனை சீன மொழியாக்கம் செய்யும்போது கோட்டை விட்டு விட்டது.. பெப்சி உங்கள் முன்னோர்களை கல்லறையில் இருந்து உயிர்த்தெழச் செய்யும் என்று...
__________________________________________________________________________

ஆனால் கோக் நிறுவனம் கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து கொண்டது.. கோக்கா கோலா என்பதை சீன மொழியில் எழுதினால் "கே-காவ் கே-லா" என்று எழுத வேண்டும். அதன் பொருள் மெழுகு வர்த்தி ஸ்டாண்டை கடித்து தின்னு ..

கோக் நிறுவனம் சுமார் 40,000 வகையான சீன எழுத்து மாற்றங்களைச் செய்து ஒருவழியாக கு-கோவ் கோ-லெ என்று மொழியாக்கம் செய்தது. அதன் பொருள்..வாய்க்கு ஆனந்தம்..!
__________________________________________________________________________

ஸ்பானிஷ் மொழி எப்போதுமே விளம்பரதாரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.. செவர்லே கார் நிறுவனம் தன்னுடைய "நோவா" மாடல் காருக்கான விளம்பரத்தை செய்து விட்டது.. கார்தான் விற்பனையாகும் வழியைக் காணோம்.. பின்னரே தெரிந்தது.. "நோவா" என்றால் "எங்கேயும் போகாதே" என்று பொருளாம்..!

இளசு
17-03-2007, 10:38 PM
ஆஹா ..இந்த ஏரியாவிலும் நுழைந்து கலக்கலா?

அருமை ராஜா..

நான் ரோவெண்ட்டா அயர்ன் தான் வைத்திருக்கிறேன்..எச்சரிக்கைக்கு நன்றி!!!!??????

aren
18-03-2007, 01:09 AM
நான் ரோவெண்ட்டா அயர்ன் தான் வைத்திருக்கிறேன்..எச்சரிக்கைக்கு நன்றி!!!!??????

அப்படின்னா நீங்கள் தினமும் அயர்ன் செய்வது ................

சரி எப்படியோ. நல்லா இருந்தா சரிதான்.

நன்றி வணக்கம்
ஆரென்

அன்புரசிகன்
18-03-2007, 11:16 AM
கருத்துக்களும் நிறைந்தவை. வாழ்துக்கள்.:food-smiley-002:

ராஜா
18-03-2007, 07:29 PM
திருக்குறள் போல சில கிறுக்கு'றள்..

சினிமா..

திரிஷா இருக்க நமீதா, பூஜா தேடல்..
கனியிருக்க காய் கவர்ந்தற்று..

மருத்துவம்..
பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்.. மற்றெல்லாம்
சளி பிடித்து சாவார்..


உணவு..

ஆட்டலில் சிறந்தது மாவாட்டல்..காசின்றி
ஓட்டலில் ஆட்டப் படும்..

தொழில்..

எப்பொருள் யார் பையில் இருப்பினும் உடன்
அப்பொருள் சுடல் நன்று..

போக்குவரத்து..

பெல்'லென்ப..பிரேக்'கென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப சைக்கிளுக்கு.

கல்வி..

பிட் அடித்து வாழ்வாரே பாசாவார் மற்றெல்லாம்
அக்டோபரில் அட்டெம்ப்ட் ஆவார்.

பாசாயிட்டா...

கற்க கசடற.. கற்றபின் நூல்களை
விற்க பாதி விலைக்கு.

பணி அமைப்பு..

டை கட்டி வாழ்வாரே வாழ்வார்.. மற்றெல்லாம்
கை கட்டி பின்செல்வார்.

அரசியல்..

உற்ற தலைமை காலில் விழுந்தால் வாழ்க்கை..
மற்ற தலைவர்க்கெல்லாம் அல்லக்கை.

காதல்..

தேறினால் நன்று..தேறாவிடில் என்றும் மாற்றானிடம்
தேறாமல் செய்து விடல்..

தொலைத் தொடர்பு..

மிஸ்டு கால் கொடுத்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் பில் கட்டி சாவார்

இல்லே.. கல்லை எடுக்காதீங்க.. நிறுத்திடறேன்.. ஆளை விடுங்க..

மன்மதன்
18-03-2007, 07:54 PM
விளம்பர யுக்திகள் நாட்டுக்கு நாடு வேறுபடும்..

கோக் விளம்பரம் சவுதியில் செய்த போது 'ஒருவன் களைப்பாக இருப்பது மாதிரியும், கோக் அருந்துவது மாதிரியும், பின்னர் புத்துணர்வு பெறுவது மாதிரியும்' மூன்று போட்டோக்களை வரிசையாக வைத்தனர்..

வியாபாரம் படுத்துவிட்டது..

அப்புறம்தான் தெரிந்தது. அரபுகாரர்கள் ரிவர்ஸில் படிப்பார்கள் என்று..


(இதுவும் ஜோக்தான்..!! ஹிஹி..)

உங்கள் சிரிப்புகள் ஜோர் ராஜா ஜோர்..

pradeepkt
19-03-2007, 05:40 AM
கலக்கிப் போட்டீங்க ராஜா.
அதிலும் அந்த கிறுக்குறள் இருக்கு பாருங்க...
ஆனா நீங்க இன்னும் அசின் காலத்துக்கு வரலை போல... ஹி ஹி

மனோஜ்
19-03-2007, 08:47 AM
கிறுக்குறள் உண்மையில் அருமையே அருமை ராஜா அண்ணா

அறிஞர்
19-03-2007, 01:11 PM
வியாபர யுக்திகள், மற்ற மொழியில் விளம்பரங்கள்.. குறள் என ஒரே கலக்கல் பதிவுகள் ராசா....

தொடருங்கள்...

ராஜா
20-03-2007, 04:42 AM
good morning..

ராஜா
20-03-2007, 04:44 AM
நான் தற்போது பெங்களூரு'வில் இருக்கிறேன்.. தமிழ் எழுத்துகள் இங்கு சரியாகத் தெரியவில்லை.. தயவு செய்து இன்று மட்டும் ஆங்கிலம் அனுமதியுங்கள்.. நன்றி நண்பர்களே..!



நான் ஆட்டோ காரன் பாட்டை எ-கலப்பை இல்லாத தேசத்தில் பாடினா எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்னக் கற்பனை..

I am autofellow autofellow
Four knowing route fellow
Justice having rate fellow
Good people mix fellow
Nice singing song fellow
Gandhi borning country fellow
Stick take means hunter fellow
Big people's relation fellow
Mercy having mind fellow da
I am all poor's relative fellow da
I am always poor people's relative fellow da
Achak means achak only; Gumuk means gumuk only
Achak means achak only; Gumuk means gumuk only

Town become big, population become big
Bus expecting, half age over
Life become hectic in time, exist in corner of street
Ada eye beat means love coming they telling
You hand clap means auto coming I telling
Front coming look, this three-wheel chariot
Good come and arrive, you trust and climb up
Mercy having mind fellow da
I am always poor people's relative fellow da
Achak means achak only; Gumuk means gumuk only
Achak means achak only; Gumuk means gumuk only

Mummy motherfolk, danger not leave
Heat or cyclone, never I never tell
There there hunger take means, many savoury
Measurement food is one time
For pregnancy I come free mummy
Your child also name one I keep mummy
Letter lacking person ada trusting us and coming
Address lacking street ada auto fellow knowing
Achak means achak only ; Gumuk means gumuk only
Achak means achak only ; Gumuk means gumuk only"][/INDENT][/COLOR][/FONT][/B]

மனோஜ்
20-03-2007, 09:56 AM
ராஜா அண்ணா இங்கிலிபுசுலையூ கலக்கல்தான் போங்க:lachen001: :lachen001:

paarthiban
20-03-2007, 12:29 PM
அபாரம் சார். அசத்தலோ அசத்தல் ராஜா சார்.

அறிஞர்
20-03-2007, 12:43 PM
ஆட்டோக்காரன் பாட்டு.. நம்ம ராசாவின் கையில் எவ்வாறு விளையாடுகிறது.. கலக்கல் தான்.

ராஜா
21-03-2007, 01:25 PM
நம் மாதவ் சிங் புதிதாகப் பணியில் சேர்ந்தார்.. வாக்குவம் கிளீனர் இயந்திரத்தை வீடு வீடாகச் சென்று விற்கும் பொறுப்பு.

ஒரு வீட்டில் தன் இயந்திரத்தின் அருமை பெருமைகளை எடுத்து சொன்னபின் மாதவ் தான் கையோடு கொண்டுவந்த குப்பைகளை வீடு முழுதும் இறைத்தார்.. வீட்டுக்கார அம்மாள் கேட்டார்..

என்ன முட்டாள்தனம் செய்கிறாய்..?

இல்லை அம்மா.. என் இயந்திரம் இவ்வளவு குப்பையையும் பதினைந்தே நொடிகளில் உறிஞ்சி எடுத்துவிடும். நான் சவாலாகவே சொல்கிறேன்.. இல்லையென்றால் என் நாக்கால் எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி தருகிறேன்..போதுமா..?

ஓ.. அப்படியா சொல்கிறாய்..? சரி உன் வசதிக்காக கொஞ்சம் மிளகுத் தூள் தூவட்டுமா..?

இயந்திரத்தை மின் துளையில் சொருகும்போது மாதவ் சிங் கேட்டார்..

ஏனம்மா அப்படிச் சொல்கிறீர்கள்..? எதற்கு மிளகுத் தூள்..?


இல்லை.. எங்கள் வீட்டில் இன்னும் மின் தொடர்பு கொடுக்கவில்லை.. எப்படியும் நீ தான் சுத்தம் செய்யவேன்டும்.. அதற்காகக் கேட்டேன்..!

_________________________________________________________________________

நம் மாதவ் சிங் கிராமத்து ஆசாமி.. வெவரமானவர் என்றாலும் நகரத்தைக் கண்டறியாதவர். ஒருமுறை சென்னைக்கு வந்தார்.. மாதவின் நண்பர் சுபன் கேட்டார்..

என்னா சிங்கு..? சென்னை பிடிச்சுருக்கா..?

ம்ம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா வேகத்தடை எல்லாம் பெருசு பெருசா போட்டிருக்காங்க.. ஒரு அளவு வேண*டாம்.. அங்க பாரு.. ஒரு வேகத்தடை மேல எத்தனை கார், ஆட்டோ ஏறிப்போகுதுன்னு..

சுபன் தலையில் அடித்துக் கொண்டார்.. ஏனென்றால் மாதவ் காட்டியது ஜெமினி மேம்பாலத்தை...!

_________________________________________________________________________

சுபன் ; முதல் மாடியிலே இருந்து கீழே விழுபவனுக்கும் நூறாவது மாடியில் இருந்து கீழே விழுபவனுக்கும் என்ன வித்தியாசம்..?

மாதவ் சிங் ; முதல் மாடியில் இருந்து முதல்ல விழுவான்.. அப்புறம் கொஞ்ச நேரத்துல அய்யோ அம்மான்னு அலறுவான்..

நூறாவது மாடியில் இருந்து விழுறவன் முதல்ல அய்யோ அம்மான்னு அல்றுவான். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு விழுவான்

__________________________________________________________________________

ஓவியா
21-03-2007, 01:29 PM
அண்ணா

நான்
திருக்குறள் போல சில கிறுக்கு'றள்..
மிகவும் ரசித்தேன்.....சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉப்ப்ப்பர்

நகைச்சுவை களஞ்சியம் ராஜா அண்ணா வாழ்கவே.....

அறிஞர்
21-03-2007, 01:57 PM
வேக்கும் கிளினர் சிரிப்பு அருமை.. தொடருங்கள்.. ராசா..

பென்ஸ்
21-03-2007, 03:00 PM
நான் தற்போது பெங்களூரு'வில் இருக்கிறேன்.. தமிழ் எழுத்துகள் இங்கு சரியாகத் தெரியவில்லை.. தயவு செய்து இன்று மட்டும் ஆங்கிலம் அனுமதியுங்கள்.. நன்றி நண்பர்களே..!

ராஜா....
ஆங்கிலத்தில் பதித்தது கூட தவறில்லை...
பெங்களூர் வந்து தமிழ் மன்ற நண்பர்களை சந்திக்காமல் சென்றதுக்கு உங்க ஜோக்குகளை நீங்களே படிக்கவேண்டும் என்று கட்டளை இடுகிறென்....
(உங்க ஜோக்குகளை நங்க மட்டும் படித்து மருந்து போட்டா போதுமா???)

ராஜா
21-03-2007, 04:43 PM
நன்றி பெஞ்சமின்..

நான் இன்னும் பெங்களூருல தான் இருக்கேன்.. வெள்ளிக்கிழமைவரை இங்குதான் இருப்பேன்..

மயூ
21-03-2007, 04:51 PM
பகிடிகள் நன்றாக இருந்தது...
ஆனாலும் மேம்பாலம் ஜோக்கு விளங்கவில்லை!!!

ராஜா
21-03-2007, 05:26 PM
ரோடுல வேகத் தடை பார்த்திருக்கீங்களா மயூர்..?

கொஞ்சம் மேடா இருக்கும்தானே.. சிங்கு மேம்பாலத்தை மெகா சைஸ் வேகத்தடையா நினைச்சுட்டார்..

மயூ
21-03-2007, 05:30 PM
ரோடுல வேகத் தடை பார்த்திருக்கீங்களா மயூர்..?

கொஞ்சம் மேடா இருக்கும்தானே.. சிங்கு மேம்பாலத்தை மெகா சைஸ் வேகத்தடையா நினைச்சுட்டார்..
சின்னப்புள்ளையா இருக்கிறாரு அந்த சிங்கு.....
அவங்க ஊரில வேகத் தடை இல்லியா என்ன;

பென்ஸ்
21-03-2007, 05:42 PM
சின்னப்புள்ளையா இருக்கிறாரு அந்த சிங்கு.....
அவங்க ஊரில வேகத் தடை இல்லியா என்ன;
ஏல , உன்பேரு என்ன மயூரேசிங் - கா????:icon_nono: :icon_nono:
அந்த ஜோக்கில வாற ஆள மாதிரியே கேள்வி கேக்குற.... :waffen093: :waffen093:

பேசாம போயி தூங்கு, இல்லைனா உன் சூப்பர்வைசர்கிட்ட சொல்லு கொடுத்து போடுவேன் ஆமா...!!!!:teufel021: :teufel021: :teufel021:

aren
21-03-2007, 06:23 PM
நன்றி பெஞ்சமின்..

நான் இன்னும் பெங்களூருல தான் இருக்கேன்.. வெள்ளிக்கிழமைவரை இங்குதான் இருப்பேன்..

அப்படின்னா ஒரு சின்ன கூட்டமே நடத்திடலாமே. மன்றத்தின் பெரிய தலைகளுள் பலர் பெங்களூரில்தான் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு கண்டிஷன், சந்திப்பு முடிந்தவுடன் அதைப்பற்றி விலாவாரியாக நகைச்சுவையுடன் எழுதவேண்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

மயூ
21-03-2007, 06:42 PM
ஏல , உன்பேரு என்ன மயூரேசிங் - கா????:icon_nono: :icon_nono:
அந்த ஜோக்கில வாற ஆள மாதிரியே கேள்வி கேக்குற.... :waffen093: :waffen093:

பேசாம போயி தூங்கு, இல்லைனா உன் சூப்பர்வைசர்கிட்ட சொல்லு கொடுத்து போடுவேன் ஆமா...!!!!:teufel021: :teufel021: :teufel021:
அந்த ஆள வைச்சு எத்தன பேரு மிரட்டப் போறீங்க....
ஆமா ஆமா நேரமாயிடுச்சு போயி தூங்கணும்.... இப்போ 12:12 பேய் உலாவிற நேரம்! :teufel021: :teufel021: :teufel021: :teufel021:

ராஜா
22-03-2007, 01:44 PM
நாளை...

கிரிக்கெட் நகைச்சுவைகள்..!

அறிஞர்
22-03-2007, 01:46 PM
நாளை...

கிரிக்கெட் நகைச்சுவைகள்..!
இது என்ன முன்னோட்டமா... ராஜா...

ஓவியன்
22-03-2007, 09:55 PM
அருமையான நகைச்சுவைகள் வாழ்த்துக்கள் நண்பரே!
ஜமாயுங்கள்!

ராஜா
23-03-2007, 04:24 AM
ஆஸ்திரேலியா 300 ரன் குவித்திருந்தது.. அடுத்து ஆட இந்திய மட்டையாளர்கள் வந்தனர்.. சவுரவ் சேவாக்கிடம் சொன்னார்.. வீரு.. நீ மெக்ராவை கவனி.. நான் கில்லெஸ்பியை உண்டு இல்லேன்னு ஆக்கிடறேன்..

4 ஓவர்.. 6 ரன்.. சேவாக் அவுட்..

சவுரவ் உத்தப்பாட்ட சொன்னார்.. இரு இந்த பயக ரெண்டு பேரும் ஸ்பெல் முடிக்கட்டும்.. அடுத்து பிராக்கனும் ஜான்ஸனும் தான் வருவாங்க.. வெளுத்து எடுத்துப்புடலாம்..

10 ஓவர்.. 26 ரன்.. உத்தப்பா அவுட்..

திராவிட் வரும்போதே கங்கூலிக்கிட்ட சொன்னார்.. நீ நிறைய பந்து சந்திச்சிருக்கே.. நீ 5 பால் புடி.. நான் ஒரு பால் புடிச்சிக்கறேன்..

15 ஓவர்.. 40 ரன்.. கங்கூலி அவுட்..

ராகுல் யுவ்ராஜ் கிட்ட சொன்னார்.. புதுப் பசங்களும் நல்லாத்தான் போடுறானுக.. கொஞ்சம் பொறு.. இவனுக முடிச்சுட்டுப் போகட்டும்.. அடுத்து ஸ்பின்னர்தான்.. நாமதான் ஸ்பின் பவுலிங்கை உரிச்சு எடுப்போமே..

25 ஓவர்.. 63 ரன்.. ராகுல், யுவராஜ் ரெண்டு பேரும் அவுட்..

தோனியும் டெண்டுல்கரும்.. ஸ்பின் பவுலிங்கை சந்திச்சாங்க.. ஒண்ணும் மாட்டல.. சச்சின் சொன்னார்.. இரு 40 ஓவர் ஆகட்டும்.. எல்லா பயலும் சோர்ந்து போயிருப்பானுக.. நாம வாண வேடிக்கை விடலாம்..

40 ஓவர் 115 ரன் 7 விக்கெட் அவுட்..

பஜ்ஜி சொன்னார் பத்தான் கிட்டே.. கொஞ்சம் ஒத்தி ஒத்தி நீ ஒரு 50 ரன் எடுத்துக்கோ.. நான் ஒரு ஃபிஃப்டி போட்டுடறேன்.. அப்புறம் சுத்துவோம்..

43 ஓவர்.. ஆல் அவுட்,, 127 ரன்.. கோச் சொன்னார் கேப்டன்கிட்ட..

அடுத்த மேச் பெர்முடா.. சாவடிச்சிடலாம் பொறு.. இப்ப போய் என்ன எழவையாவது மைக்குல சொல்லி சமாளிச்சுட்டு வா..!

ராஜா
23-03-2007, 04:25 AM
உலகக் கோப்பை போட்டிகளில் பெற்ற பரிதாப தோல்வியின் காரணமாக அணித் தலைவர் திராவிட் வெளியே தலை காட்டவே அஞ்சினார். என்றாலும் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவரைக் காணச் சென்றார். போகும்போது சர்தார்ஜியைப் போல மாறு வேடத்தில் சென்றார். என்றாலும் பக்கத்தில் அமர்ந்திருந்த நோயாளிப் பெண்ணொருத்தி " ஹே திராவிட் ..! " என்று அழைக்கவே தெறித்து ஓடி வந்துவிட்டார்.

மற்றொருநாள் மார்க்கெட்டுக்கு சமையல்காரன் வேடத்தில் போகும்போதும், சினிமாவுக்கு வெள்ளைக்காரன் வேடத்தில் போகும்போதும் இதே கதை.

பொறுக்கமுடியாமல் திராவிட் அந்தப் பெண்ணைக் கேட்டார்..

ஏனம்மா.. நானே வெட்கி வேறு வேடங்களில் வருகிறேன்.. நீ சரியாக கண்டுகொள்கிறாயே.. யார் நீ..?"

திராவிட்.. என்னைத் தெரியவில்லையா..? நாந்தான் சச்சின்..!

ராஜா
23-03-2007, 04:28 AM
ஒரு தம்பதியரின் விவாக ரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. அவ்ர்களுக்கு ஒரே ஒரு சிறு பெண். அவள் யாரிடம் வளர்வதென்ற பூசலுக்கு தீர்வு காண நீதியரசர் கேட்டார்..

ஏனம்மா உன் தந்தையாருடன் வசிக்க விரும்புகிறாயா..?

இல்லை அய்யா.. அப்பா அடிப்பார்..

பின் உன் அம்மாவிடம் இருக்கிறாயா..?

மாட்டேன்.. அவளும் அடிப்பாள்..

பின் யாருடன் இருக்க விரும்புகிறாய்..?

இந்திய கிரிக்கெட் அணியினருடன்.. அவர்கள்தான் "அடிக்கவே" மாட்டார்கள்..!

ராஜா
23-03-2007, 04:30 AM
மானேஜேர் : "லோகோ எதுவும் சட்டைல போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமா... "
விளையாட்டு வீரர் : " இது லோகோ இல்லை ... ஜூஸ் குடிக்கும் போது சட்டைமேல சிந்திடுச்சு... "
_________________

அமரன்
23-03-2007, 08:40 AM
மானேஜேர் : "லோகோ எதுவும் சட்டைல போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமா... "
விளையாட்டு வீரர் : " இது லோகோ இல்லை ... ஜூஸ் குடிக்கும் போது சட்டைமேல சிந்திடுச்சு... "


இதுகூட ஒரு விளம்பர யுக்தியாக இருக்கலாம். சிரிக்க வைக்கும் ராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்.

அறிஞர்
23-03-2007, 03:39 PM
43 ஓவர்.. ஆல் அவுட்,, 127 ரன்.. கோச் சொன்னார் கேப்டன்கிட்ட..

அடுத்த மேச் பெர்முடா.. சாவடிச்சிடலாம் பொறு.. இப்ப போய் என்ன எழவையாவது மைக்குல சொல்லி சமாளிச்சுட்டு வா..!
ஆஹா இந்திய அணி பற்றி எப்படி விளக்கமான சிரிப்பு.. ரசித்தேன் ராஜா.. :sport-smiley-007: :sport-smiley-007: :sport-smiley-007:

அறிஞர்
23-03-2007, 03:40 PM
ஏனம்மா.. நானே வெட்கி வேறு வேடங்களில் வருகிறேன்.. நீ சரியாக கண்டுகொள்கிறாயே.. யார் நீ..?"

திராவிட்.. என்னைத் தெரியவில்லையா..? நாந்தான் சச்சின்..!
இது என்ன சர்தார்ஜீ.... வாஷிங்க் மிசின் வாங்க கதை போல இருக்கு....

இன்றைக்கு ஜெயிக்காவிட்டால் எல்லாருக்கும் ஆப்பு உண்டு.

அறிஞர்
23-03-2007, 03:41 PM
இந்திய கிரிக்கெட் அணியினருடன்.. அவர்கள்தான் "அடிக்கவே" மாட்டார்கள்..!
ஆஹா சிறு பிள்ளைக்கு கூட தெளிவா தெரியுது.... நம் அணியினரை பத்தி... :food-smiley-011: :food-smiley-011:

அறிஞர்
23-03-2007, 03:42 PM
மானேஜேர் : "லோகோ எதுவும் சட்டைல போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமா... "
விளையாட்டு வீரர் : " இது லோகோ இல்லை ... ஜூஸ் குடிக்கும் போது சட்டைமேல சிந்திடுச்சு... "
_________________

ஆஹா விடமாட்டங்களே.. நம்மாளுங்க...
எவ்வளவு கோடி சம்பாதிக்கிறார்கள்... இந்த சின்ன லோகோவை போட்டு..

ராஜா
24-03-2007, 06:34 AM
நன்றி அறிஞர் பெருமானே..!

ராஜா
24-03-2007, 06:35 AM
சட்டி சுட்டதடா.. கை விட்டதடா..
புத்தி கெட்டதடா.. நெஞ்சைத் தொட்டதடா..

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் போட்டதடா..
காசு வாங்காத இலங்கை 254 எடுத்ததடா
அஞ்சு விக்கெட் விழுந்ததிலே மகிழ்ச்சி வந்ததடா..பிட்ச்
கொஞ்சம் கூட பவுலிங் எடுக்காதுன்னு இந்தியா நெனச்சதடா

ஆரவாரமா பேட்டிங் ஆட உத்தப்பா வந்தாண்டா..
ஊரு திரும்ப் புள்ளையார் சுழி போட்டு வ்ச்சாண்டா..
ஏழு எடுத்த் கங்கூலியும் காலி ஆயிட்டாண்டா.. பின்
வாழும் பிராட்மேன் சச்சின் அங்கே பாஞ்சு வந்தாண்டா..

மட்டை கடவுள் டெண்டுல்கரும் மனசு வக்கலடா.. அவன்
முட்டை போட்டு திராவிடுக்கு கரியப் பூசுனாண்டா..
சுவர் போல காக்கும் நம்ம தலைவன் வந்தாண்டா..
அவர் கூட அரை மண்டை சோடி சேர்ந்தாண்டா..

பார்த்திருந்த பைத்தியங்களுக்கு ஆசை வந்ததடா..இலங்கையை
பேர்த்து எடுத்து பின்னிடுவாங்கன்னு இன்பம் கொண்டதடா
கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் கும்மி அடிச்சாங்கடா..பின்
வஞ்சம் வச்ச இலங்கை அணி சுருட்டிப் போட்டதடா..

தோனி வந்தான்.. யுவராஜ் வந்தான் ஒண்ணும் ஆகலடா.. கதை
போணி ஆகா இந்திய அணி தலை குனிந்ததடா.. டீ.வி.
விளம்பரக் கோப்பை வச்சா ஜெயிச்சு காட்டுமடா.. இல்லே
களம் பல காணா பெர்முடா போல அணிகள் வேணுமடா..

இப்போவாச்சும் இந்திய அணி திறமை தெரிஞ்சுக்கப்பா..
கப்பு வாங்கும் திறமையெல்லாம் அதுக்கு இல்லேப்பா.
பள்ளி, அலுவலகம் லீவு போட்டு பார்க்காதீங்கப்பா..
உள்ளபடியே உதவாக்கரை பசங்க இவங்கதாம்ப்பா..
_________________

ராஜா
24-03-2007, 06:38 AM
நீதிபதி: " ஏம்ப்பா ! அந்த வீட்டில எல்லாத்தயும் கொள்ளை அடிச்சுட்டு டி.விஐ மட்டும் ஏன் ஓடைச்சுட்டு போன ? "

திருடன் : " பின்ன என்னாங்க எசமான் , இந்தியா தோத்து போனா பார்த்துக்கிட்டு சும்மாவா இருக்க முடியும்... "
________________________________________________________________________

எனது அருமை இந்தியர்களே ,

ஒரு மகிழ்ச்சியான செய்தி... கடைசியாக கிரிக்கெட் உலக கோப்பையில் நாம் வென்று விட்டோம்...

(இந்தியா Vs மே.இந்தியா)

இந்தியா 43 ரன் வித்தியாசாத்தில் வெற்றி பெற்றது...

இந்த தகவலை நமக்காகாக தெரிவித்தவர் : திரு. கபில் தேவ் ...
தெரிவித்த தேதி/நேரம் : 25-06-1983. / 05:17:33 PM .
தகவல் தாமதத்திற்க்கு வருந்து கிறோம் ...

இப்படிக்கு,
தகவல் தொலை தொடர்பு துறை.
_________________________________________________________________________

முப்பதே வினாடியில் ஆங்கிலம் மறப்பது எப்படி ???


பர்ஸ்ட் எய்ட் ( First Aid ) - முதல் எய்ட்ஸ் நோயாளி.

ஹோம் ஒர்க் ( Home Work )- ஆபீஸ் போகாமல் வீட்டிலேயே வேலை பார்ப்பது.

கேப்பிடல் லேட்டர்ஸ் (Capital Letters) - டெல்லியிலிருந்து வந்த கடிதங்கள்.

இன்கம்மிங் கால் ( Incoming Call ) - சம்பளத்திற்கு கூப்பிடுவது.

ஜீப்ரா க்ராஸிங் (Zebra Crossing ) - வரிக்குதிரை ரோடைக் கடக்குது .

பால்ஸ் ஸீலிங் (False Ceiling) - கூரை விழுகிறது .

ஆல் ரவுண்டர் (All Rounder ) - எல்லோரையும் சுற்றுபவன்.

காட் பாதர் ( Good Father ) - கடவுளோட அப்பா.

வெல் விஷர் ( Well Wisher )- கிணறுக்கு ஹலோ சொல்பவர் .

டாப்-10 ( Top-10 ) - பத்து பம்பரங்கள்.

ஆதவா
24-03-2007, 07:11 AM
கிரிக்கெட் சோக்குகள் அருமை ராஜா அவர்களே@@ விழுந்து சிரித்தேன்.

மனோஜ்
24-03-2007, 08:50 AM
அருமையான கிரிக்கெட் பாடல்

pradeepkt
24-03-2007, 12:45 PM
இப்பதாங்க எனக்குக் கொஞ்சமாவது ஆறுதலா இருக்கு...
இந்தப் பசங்களை அடுத்த உலகக் கோப்பை வரைக்கும் எங்க போனாலும் இப்படித்தான் ஓட்டணும்..

அமரன்
24-03-2007, 05:39 PM
சூப்பர் கண்ணா சூப்பர்.
ஆங்கிலம் மறப்பது இன்னும் சூப்பர்.
ஏற்கனவே நொந்து நூடுல்சான இந்திய அணி பற்றிய ஜோக்கைப் பற்றி விமர்சனம் பண்ண விரும்பவில்லை

ராஜா
25-03-2007, 06:24 AM
இந்திய அணி தோல்வி குறித்து நம்மவர்கள்...

டாக்டர் கலைஞர் ; தமிழக விவசாயிகளுக்கு நீர் கொடாத கன்னடத்து திராவிடனைத் தலைவனாகப் போட்டது மட்டுமல்ல.. தமிழகத்துத் தங்கம் தம்பி தினேசு கார்த்திக்கை தள்ளியே வைத்துவிட்டார்களே தருக்கர்கள்..

அதுமட்டுமா.. ஐயகோ.. ஒளிபரப்பும் உரிமையை சூரியத் தொலைக் காட்சிக்கு தந்திடாமல் வேறு ஒரு சோனிக்கு கொடுத்திட்ட செய்தி நெஞ்சில் பேரிடியாய்த் தாக்கியதே..!

என்றாலும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று சொன்னாரே அண்ணா.. தென்னாட்டு பெர்னார்ட் ஷா.. அவர் வாக்குக்கேற்ப, சிங்களத்துச் செல்வன், தங்கத் தமிழ்க் காளை.. முரளீதரன் திறமை காட்டி வென்றிட்ட செய்தி நெஞ்சில் இனிப்பாய் தித்திக்குதடா தம்பி..!
:nature-smiley-006:

ஜெய லலிதா ; இது மைனாரிட்டி தி மு க அரசின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது.. சென்ற முறை உங்கள் அன்புச் சகோதரியின் பொற்கால ஆட்சி நடந்தபோது, 2003 ம் ஆண்டு.. நம் இந்திய அணி இறுதிப் போட்டிவரை சென்று, கருணநிதியின் குடும்பத் தொலைக்காட்சியின் சதியால் வெற்றி வாய்ப்பை இழந்த செய்தியை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்..

மக்களுக்கு உயிநாடியான இந்தப் பிரச்சினையில் கூட திறமையாகச் செயல்பட முடியாத மக்கள் விரோத கருணாநிதி அரசைக் கண்டித்து உங்கள் அன்புச் சகோதரி, இன்று இரவு 12 மணியில் இருந்து நாளைக் காலை 6 மணி வரை தியாக உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்பதை கரவொலிக்கு இடையேயும், காலில் விழும் கண்மணிகளுக்கிடையேயும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..!
:sport-smiley-013:

விஜய் காந்த் ; உலகக் கோப்பையிலே 16 டீம் 4 குரூபு.. குரூப்புக்கு 4 அணி.. ஒரு அணிக்கு 15 பெரு.. ஒரு பயிற்சியாளர்.. ஒரு மேனேஜர்.. ஒரு டாக்டர்.. போட்டியில ஆடுறவங்க 11 பேரு.. சும்மா உக்காந்திருக்குறவங்க 4 பேரு.. ஆடுறவங்கள்ள ஒருத்தர் கேப்டனாம்.. ஹா..ஹா.. ஒருத்தர் விக்கெட் கீப்பரு.. 4 பேர் பவுலரு.. 5 பேரு பேட்ஸ்மேன்.. ஒரு ஆல் ரவுண்டர்.. பவுலர்ல மூணு பேரு வேகப் பந்து வீச்சாளர்.. ஒருத்தர் ஸ்பின்னர்.. வேகப்பந்து வீச்சாளர்ல ஒருத்தர் இடது கர பந்து வீச்சாளர்.. ஒருத்தர் வலதுகை பந்து வீச்சாளர்.. ஒருத்தர் நடுக்கை பந்து வ்வீச்சாளர்.. பேட்ஸ்மேன்ல ரெண்டு பேர் இடது கை மட்டையாளர்.. மூணு பேர் வலது கை மட்டையாளர்.. ஒரு அணிக்கு 50 ஓவரு.. அதிலே பவர் ப்ளே 20 ஓவரு.. அம்பயர் ரெண்டு பேரு..

பண்ருட்டி ; கேப்டன் ப்ளீஸ் நிப்பாட்டுங்க.. நிருபர் அப்போவே தெறிச்சு ஓடிப் போயிட்டாரு..!

:1:

மூப்பனாரிடம் சொர்க்கத்தில் பேட்டி...

நிருபர் ; இந்தியா தோத்து போச்சுங்களே அய்யா.. அதைப் பத்தி என்ன நெனைக்கிறீங்க..

மூப்பனார் ; உய்.. உய்யாங் உய் உய்யா உய்..

[சப்-டைட்டில் ; இலங்கை ஜெயிச்சதாலே இந்தியா தோத்துடிச்சு..]

நிருபர் ; அதான் இலங்கை எப்படி ஜெயிச்சுது..?

மூப்பனார் ; கிய் கொய்யா கொய்.. உய் உய்யா கொய்..

[ச-டை ; இந்தியா தோத்துச்சு.. அதனால இலங்கை ஜெயிச்சுடுச்சு..]

நிருபர் ; இந்தியா கோப்பை எப்போ வாங்கும்..?

மூப்பனார் ; கய் முய்யா கய் காய் காயா கை..

[ச-டை ; அடுத்த தேர்தல்ல காம்ராஜ் ஆட்சி அமையும்போது கிடைக்கும்..]

:sport-smiley-014:

கமல ஹாசன் ; இந்த கிரிக்கெட் என்பது இந்தியாவில் பல கோடி ரசிகர்களின் விருப்ப விளையாட்டாக இருந்து வந்திருக்கிறது என்பது எனக்கு தெரியாவிட்டாலும் கூட என்னுள் இன்னும் இருக்கும் அதே பரமக்குடி கோபக்கார இளைஞன் வாயிலாக நான் சொல்லிக் கொள்ள நினைப்பது என்னவென்றால்.. அது எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும் கூட, என் இந்திய ரத்தம் சூடேறிக் கொதிக்கின்ற சத்தம் என் காதுகளில் ஒலிக்கின்ற இந்த வினாடியில் இந்தியாவில் வாழும் தமிழனாகக் கூட அல்ல.. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சின்னச் சாதனையாளனாக.. பெரிய சாதனையாளன் என்று நீங்கள் ஒப்புக் கொண்டால் கூட, எனக்குக் கவலையில்லை.. டபிள்யூ. ஜி. கிரேஸ், பிராட்மேன் போன்றவர்கள் எல்லாம் யார் என்று எனக்கு தெரியாமல் கூட போயிருக்கலாம்.. அதுபற்றிக் கவலையில்லை.. என்னுடைய குரு பாலச்சந்தர் சார் அடிக்கடி நகைச்சுவையாகக் கோபப்படுவார்.. டேய் கமல்.. நீ சாதிக்கப் பொறந்தவண்டா என்று.. அது தப்பான விஷயமாகப் போய்யிருக்கலாம்..

பின்னர் அந்த நிருபர் கீழ்ப்பாக்கத்தில் இருப்பதாகக் கேள்வி..

:1:
_________________

மனோஜ்
25-03-2007, 08:43 AM
பின்னர் அந்த நிருபர் கீழ்ப்பாக்கத்தில் இருப்பதாகக் கேள்வி..
நிருபர்களுக்கு இது கஷ்டகாலதான்

aren
25-03-2007, 11:10 AM
ராஜா அவர்களே, இப்படி அநியாயத்திற்கு கலக்குகிறீர்களே. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும் போலிருக்கிறது.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ராஜா
26-03-2007, 06:59 AM
நன்றி நண்பர்களே...!

ராஜா
26-03-2007, 07:02 AM
நம் நடிகர்களின் மின்னஞ்சல் முகவரிகள்...

[i]சின்னிஜெயந்த்@சில்ஃபான் ஸ்.காம்.

வெண்ணிறஆடைமூர்த்தி@தம்ப் ர்ர்ர்ர்ர்ர்ரி.காம்.

சத்யராஜ்@தகடுதகடு.காம்.

பிரகாஷ்ராஜ்@செல்லம்.காம்.

கவுண்டமணி@அட்றாசக்கை.காம� �.

தேவா@திருட்டிசைத்தென்றல் .காம்.

அஜித்@டப்பா.காம்.

பிரஷாந்த்@ஐயோபாவம்.காம்.

தேங்காய்@சிலுப்புசிப்பான..காம்.

மணிரத்ணம்@விஐபிகாப்பி.காம்.

ராமராஜன்@டவுசர்.காம்.

செந்தில்@வாழைப்பழம்.காம்.

மோகன்@மைக்.காம்.

கேப்டன்@கோவிந்தா.காம்

ரம்பா@டோரியா.காம்.

விஜய்@ரீமேக்.காம்.

சூர்யா@நெக்ஸ்ட்கமல்.காம்.

கவுசல்யா@வளர்ந்துகெட்டவள்..காம்.

மீனா@எப்பம்மாகல்யாணம்.காம்

ஜோதிகா@அரைமெண்டல்.காம்.

சிம்ரன்@கோரலட்சுமி.காம்.

கனகா@கரகா.காம்.

தேவயானி@தேவையாநீ.காம்.

விவேக்@25ஆண்டாமாணவன்.காம்.

வடிவேலு@எஸெமெஸரசன்.காம்

ரீமாசென்@மே/98மேஜர்.காம்

மும்தாஜ்@பெரியமனசு.காம்.

திரிஷா@பாத்ரூம்.காம்

அசின்@ஐயடா.காம்.

சதா@போய்யா.காம்.

விக்ரம்@அணுகுண்டு.காம்.

சரத்@ஆல்டப்பாபூபதி.காம்.

ராஜ்கிரண்@வேட்டிமேலஜட்டி .காம்.

_________________

ராஜா
26-03-2007, 07:03 AM
நம் மாதவ் சிங் ஒரு லாரி டிரைவர்.. ரொம்ப தூரம் வண்டி ஓட்டிட்டு வந்ததில* களைப்பாயிட்டாரு. ஒரு மரத்துக்குக் கீழ நிறுத்திட்டு தூங்க ஆரம்பிச்சாரு.. ஆனா அது எல்லாரும் வாக்கிங் போற இடம். போறவங்க, வர்றவங்க எல்லாம் மாதவ் சிங்கை எழுப்பி மணி என்னன்னு கேட்டு உயிரை எடுத்தாங்க.. ஒரு ஐடியா பண்ணி " எனக்கு மணி எத்தனைன்னு தெரியாது" அப்படின்னு ஒரு அறிவிப்பு வச்சுட்டு படுத்தாரு.. சுபன் அவரை எழுப்பி, "மணி சரியா 5;53 .. கரெக்டா திருப்பி வச்சுக்க" அப்படின்னு சொல்லிட்டுப் போனார்..

_________________

ராஜா
26-03-2007, 07:04 AM
சுபனுக்கு சென்னையில் வேலை கிடைச்சுது. ஒரு ஹாஸ்டலுக்கு போயி பேயிங் கெஸ்டாக* தங்க விரும்பினார்.. ஆனா எல்லா அறைகளும் நிரம்பிவிட்டன. ஒன்றைத் தவிர.. அதில் மாதவ் சிங் தங்கியிருந்தார்.. அவர் விடும் குறட்டையால் அடுத்த அறைகளில் தங்கியிருந்தவர்கள் கூட தூங்க முடியாமல் தவித்தனர். வேறு வழியில்லாமல் சுபன் மாதவுடன் தங்கினார்..


விடிந்தது.. எல்லோரும் ஆவலாய் சுபனைக் கேட்டனர்..

நன்றாக தூங்கினீர்களா..?

ஓ..

மாதவ் குறட்டை விட்டிருப்பாரே..

இல்லை..

இல்லையா..? நம்ப முடியவில்லையே..?

மாதவ் தூங்கவே இல்லை.. எப்படி குறட்டை விடுவார்..?

ஏன் அவர் தூங்கவில்லை..?

சுபன் சொன்னார்..

என் சூட்கேஸைக் காட்டி "இது ஒரு அதிச*ய* டி.வி. இன்று இர*வு இதில் இருந்து அசின் வ*ருவார்.. யார் தூங்காம*ல் இருக்கிறார்க*ளோ அவ*ர்க*ளுக்கு முத்த*ம் த*ருவார்.." என்று சொல்லிவிட்டு தூங்கினேன்.. அவ*ர் விழித்திருந்தார்..!
_________________

ஓவியா
26-03-2007, 10:40 AM
ஹி ஹி ஹி

நன்றி ராஜா அண்ணா.

ராஜா
26-03-2007, 05:22 PM
வழுக்கப் போகுது பாரு..!

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் கொளத்துப் படியில கால் வைக்க பயப்படாதீங்க.. இது அது இல்ல...இது நம்மில் பாதிக்கு மேற்பட்ட ஆண்கள் சந்திக்குற ஒரு பொது பிரச்சினை - வழுக்கை..

இப்பொல்லாம் பார்தீங்கன்னா ரொம்ப சின்ன வயசுலேயே முடி கொட்ட ஆரம்பிச்சி ஒரு 20 வயசு வரும்போது போன வருஷம் சென்னைல கொட்டின மழை விட அதிகமா கொட்டிடுது... என்னோட நண்பனுக்கு 15 வயசுல கொட்ட ஆரம்பிச்சிடுச்சு....அதுக்க ு காரணம் அவர் யூஸ் பண்ண ஷாம்பூ.. Clinic ஆல் க்ளியர் பயன்படுத்தினார்.. .. அப்புறம் தலைக்கு மேல "ALL CLEAR"..!

இந்த வழுக்கை அஞ்சு வகை படும்

1. ஒரு சிலரோட தலைய பார்த்தீங்கன்னா டென்னிஸ் பந்துல வர shape மாதிரி சொட்டை விழுந்திருக்கும்.. இவங்க சும்மா இருக்க மாட்டாங்க.. கண்ணாடிக்கு முன்னாடி சுமார் கால் மணி நேரம் நின்னு சீப்பு வெச்சி அப்படி என்னதான் செய்வாங்கன்ணு தெரியாது.. இருக்குற முடியையும் சீப்பால பிச்சி எடுப்பாங்க.....

2. ஒரு சிலருக்கு கால்பந்து மைதானம் மாதிரி விசாலாமா விரிஞ்சி இருக்கும்.. ஒருபக்க கோல் போஸ்ட்டுலேருந்து நடு மண்டை வரைக்கும் ஒண்ணும் இருக்காது.. இவங்களுக்கு ஷாம்பூக்கு ஆகுற செலவ விட சோப்புக்கும் பவுடருக்கும் தான் செலவு ஜாஸ்தி.. "Less of head and more of face" range....!

3. இன்னும் சில பேர் இருக்காங்க..சாதாரணமா பாக்குறதுக்கு ஒழுங்கா தெரிவாங்க.. ஆனா top angle ல பாத்தாதான் உண்மை தெரியும்... நடு மண்டையில சொட்டையால "ஓ" போட்டு இருப்பாங்க..

4. இன்னொரு விதமான சொட்டை.. இன்னும் சொல்ல போன இவங்கள சொட்டைன்னு சொல்றத விட மொட்டைன்னுதான் சொல்லணும்... இவங்க சொட்டை இயக்குநர் சங்கரோட பிரமாண்ட படைப்பு மாதிரி இருக்கும்.. இவங்க தொல்லை தாங்க முடியாது.. ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ Hair Cut பண்ணிக்க கெளம்பிடுவாங்க... அவங்க தலையை பாக்குற பார்பர் கேக்குற முதல் கேள்வி "என்ன சார் ஷேவிங்தானே?" இல்லப்பா நான் முடி வெட்டிக்க வந்தேன்னு சொன்னா .."போங்க சார். விளையாடாதிங்க!!ணு சொல்லுவார்..! இந்த ஆளுக ஹெல்மட் போடாட்டா கூட காவலர் கண்டுபிடிக்க முடியாது..

5. கடைசியா ஒரு கும்பல் இருக்கு.. இவங்கதான் மிக பெரிய culprits.. கன்னா பின்னான்னு சொட்டை இருக்கும். ஆனா அவங்க இருக்குற இடத்துல முடி வளர்த்து இல்லாத இடத்துல கவர் பண்ணி வச்சுப்பாங்க..அதுக்காக தினம் ரெண்டு மணி நேரம் ஒதுக்குவாங்க..இதை மாதிரி ஆளுங்க சட்டம் வந்தாலும் வராட்டாலும் கைவசம் ஹெல்மட் வச்சிருப்பாங்க..
_________________

ராஜா
26-03-2007, 05:24 PM
வழுக்கப் போகுது பாரு...! [தொடர்ச்சி..]



இந்த அகண்ட தலைவரிசை.. (அதாங்க சொட்டை. கொஞ்சம் டெக்னிக்கலா டீசண்டா சொன்னேன்) விஷயத்தை நெறய பேர் வித விதமா எடுத்துப்பாங்க.. ஆனா இந்த பதிவு மூலமா இதோட வசதிகள் பததி சொல்லி.. எல்லா முடிசூடா மன்னர்களுக்கும் ஒரு optimistic outlook குடுக்க போறேன்..

வழுக்கையரா இருப்பதன் பெருமைகள்

* நெறய முடி இருக்குறவங்க காலைல தூங்கி எழுந்து வந்தாங்கன்னாஅவங்க தலை மேல முள்ளம் பன்றி இருக்குறா மாதிரி தெரியும்.. ஆனா அந்த ப்ரோப்ளேம் நம்மாளுக்கு கெடையாது..

* பைக்குல வேகமா போன முடி கலைஞ்சு போய் ஓமன் படம் பாத்துட்டு வந்த மாதிரி நட்டுக்குனு இருக்கும்.. நமக்கு அந்த பிரச்னை இல்ல...

* நமக்கு ஷாம்பூ, ஹேர் gel, சீப்பு செலவு கம்மி..

* மழை பெஞ்ச நமக்கு தான் முதல்ல தெரியும்..(it falls directly on the head without any intermediary hair)..

* அடை மழை பேஞ்சு முடி இருக்குறவங்களுக்கு தண்ணி முடில தங்கி moisture level அதிகம் ஆகி ஜல்ப்பு வந்துடும்.. நமக்கு அதெல்லாம் இல்ல..

* அதே மாதிரி கருகருன்னு முடி இருந்தா சூரிய வெப்பத்தை அதிகமா ஈர்த்து மண்டைக்குள்ள விட்டுடும்... இந்த தொல்லையும் நமக்கு இல்ல..

* காக்கா அசிங்கம் பண்ணும் போது முடி மேல விழுந்தா.. தண்ணியைத் தேடி ஓடணும்.. ஷாம்பூ போட்டு கழுவணும். ஆனா நமக்கு அந்த ப்ரோப்ளேம் இல்ல.. சும்மா ஒரு கைக்குட்டை இருந்தா போதும்...

* சீக்கிரமா தலைக்கு குளிச்சிடலாம்..

* ஹேர் கட் சீக்கிரம பண்ணிககலாம்..பார்பருக்கு� �் நம்ம தலையை பாததா சந்தோஷம்.. கம்மி வேலை அதே வருமானம்..

* சீப்பு தேடித் திரிய வேண்டாம்..தன் கையே தனக்கு உதவி..

* இதையெல்லாம் விட ஒரு பெரிய வாய்ப்பு இருக்குங்க..

நடிகர், முதல்வர், பிரதமர் ஆக ஒரு முக்கியமான தகுதி நமக்குதாங்க இருக்கு..

இந்த மாதிரி நெறயா advantages இருக்கு.. ஸோ..இனிமேல் யாரும் தன் தலை சொட்டையாயிடுச்சேன்னு வருத்த படாதீங்க.. .உன்னால் "முடி"யும் தம்பி... ,
_________________

karikaalan
26-03-2007, 05:44 PM
ராஜா ஜி

வழுக்கையாண்டிகளைக் கொன்னுட்டீங்க... வாழ்த்துக்கள்... இன்னும் "வார"...

===கரிகாலன்

இளசு
26-03-2007, 08:43 PM
உன்னால் 'முடி'யும் என்ற ராஜாவின் குறும்புக்கு
அண்ணல் இன்னும் 'வார' வாழ்த்தளித்த விதம்...

வழுக்கையும் பிரதிபலிப்பும் போல மெத்தப் பொருத்தம்..


புதியபறவையில் நாகேஷ் -கருணாநிதி காட்சி ஒன்று உண்டு..

நாகேஷ் - அர்ச்சுனன் எப்படி இருப்பான்? தலையில் உங்களைப்போல் ஜடாமுடி இருக்குமா?

கருணாநிதி : சூரியன் சஞ்சாரம் பண்ணும் இடத்தில் புல்பூண்டுகள் முளையா... அர்ச்சுனன் தலையில் முடி முளையா...
அர்ச்சுனன் ஆப்பத்தலையன்..பரோட்டாத் தலையன்.. ரிஃப்ளக்டர் தலையன்!


வழுக்காமல் தொடர்ந்து அசத்த வாழ்த்துகள் ராஜா..

(என் கவலை - அடுத்து என்ன? பஞ்சவர்ணத்தலையர்கள் பற்றியா?)

பென்ஸ்
26-03-2007, 08:54 PM
இவங்களுக்கு ஷாம்பூக்கு ஆகுற செலவ விட சோப்புக்கும் பவுடருக்கும் தான் செலவு ஜாஸ்தி.. "Less of head and more of face" range....!
_________________
இதுல ஒரு நல்ல விஷயம் என்னானா...
முத்த இடம் மொத்தமா கிடைக்கும்...

(bald, gives your girl more kissing area)

karikaalan
27-03-2007, 04:41 AM
வழுக்கையர்களைப் பற்றி இன்னுமோர் ஜோக்!

பின்னந்தலை வழுக்கையர்கள் சிந்தனை செய்வோர்.

முன்னந்தலை வழுக்கையர்கள் செக்ஸியானவர்கள்.

முன்னும் பின்னும் வழுக்கை இருப்போர், தாம் செக்ஸியாக இருப்பதாக சிந்தனை செய்துகொள்பவர்கள்!!

===கரிகாலன்

ராஜா
27-03-2007, 05:09 AM
ஹா.. ஹா.. சூப்பர்..!

பின்னும் முன்னும் வழுக்கையாக இருப்போரின் சிந்தனை செக்ஸிலேயே இருக்குமென்றும் வைத்துக் கொள்ளலாம்.. ஹி..ஹி.

அன்புரசிகன்
27-03-2007, 11:10 AM
கண்ணீர் கூட வந்துவிட்டது. சிரித்ததில். நன்றி ராஜா.

march
27-03-2007, 11:25 AM
ரவுசு என்றால் என்ன?

வித் லவ்
மார்ஷ்

பென்ஸ்
27-03-2007, 01:01 PM
வாழ்த்துகள் ராஜா....
"Members who have read this thread : 120 "

raj6272
27-03-2007, 01:22 PM
ராஜா சார் கலக்கு கலக்குன்னு கலக்கிட்டாரு

ராஜா
27-03-2007, 05:00 PM
நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி ' பாணியில் பேசினால்.....

"உலகக் கோப்பை. பல விசித்திரமான போட்டிகளைச் சந்தித்திருக்கிறது.. விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் , இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல. நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல. போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை எந்தக் கேவலமும் இன்றி் தோளிலே சுமந்து வரும் சாதாரண இந்திய கேப்டன் தான் நான்.

பங்களாதேசிடமும் , இலங்கையிடமும் தோற்றேன். உலகக் கோப்பையைத் தவற விட்டேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். பங்களாதேசிடமும் இலங்கையிடம் தோற்றேன் - அவர்களிடம் தோறக் வேண்டுமே என்பதற்காக அல்ல. ஆனால் நேரு வகுத்த பஞ்சசீலக் கொள்கையின் படி அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக. உலகக் கோப்பையைத் தவற விட்டேன். அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக அல்ல. ' தன்னைப் போல பிறரையும் நேசி ' என்று இயேசுபெருமான் சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.

உனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஆறு ஃபீலடரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச சொன்னால் லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து போடும் பரதேசிகளால் பாதிக்கப்பட்டேன். செத்த பாம்பு போல பெர்முடா கிடைத்தால் ' சாத்து சாத்தென்று ' சாத்திவிட்டு தேவை வரும்போது மட்டும் 'வெயில் தாங்கலை 'ன்னு பெவிலியனுக்கு ஓடும் 'மாஸ்டர் பிளாஸ்டர்களால் ' பிளாஸ்டர் போட்டுக் கொள்ளும்படி பாதிக்கப்பட்டேன்.

கேளுங்கள் என் கதையை. என் வீட்டில் கல்லெறியுமுன் தய்வுசெய்து கேளுங்கள் என் கதையை....."


_________________

ராஜா
27-03-2007, 05:01 PM
" நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்.


" அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்.
கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன். புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்..
_______________________________

ராஜா
27-03-2007, 05:04 PM
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தனித் தன்மை இருக்குது மக்கா...

மலையாளக் கரையோரம்....

ஒரு மலையாளின்னா அவரு டீ கடைக்காரர்..

ரெண்டு பேர் சேர்ந்தா.. அவங்க சபரிமலை பக்தர்கள்..

மூணு பேர் கூடினா அவங்க வளைகுடா நாட்டுல வேலை செய்யறவங்க..

நாலு பேர்ன்னா அவங்க போட் ரேஸ் காரங்க..

____________________________________________________________________

சுந்தரத் தெலுங்குன்னா...

ஒரு ஆள்ன்னா அவர் ஏழுமலை பக்தர்..

ரெண்டு வாடு ஒண்ணாச் சேர்ந்தா அவங்க மெஸ் வச்சிருக்காங்க..

மூணு பேர்ன்னா நிச்சயமா ஆஸ்பத்திரி வச்சிருப்பாங்க..

நாலு பேர் ஒண்ணு கூடிட்டா நகந்துக்கோங்க அவங்க நக்ஸலைட் குரூப்பு.
_________________

மத்த ஸ்டேட் நாளைக்கு.. வர்ட்டா..?

அறிஞர்
27-03-2007, 06:34 PM
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும், ஒவ்வொரு மாநிலத்தையும் விடமாட்டீர்கள் போல்...

அருமை ராஜா.. கலக்கல்கள் தொடரட்டும்.

அமரன்
27-03-2007, 06:36 PM
எல்லாமே சூப்பர். சிரிக்கட் ஜோக்குகள் இன்னும் சூப்பர். அதென்னங்க திராவிட்டுக்கு நவரச நாயகன்னு ஒரு பட்டம்.

ஓவியன்
28-03-2007, 03:46 AM
வழுக்கை ஆராய்ட்சி அருமை ராஜா!

மன்மதன்
28-03-2007, 03:03 PM
மானேஜேர் : "லோகோ எதுவும் சட்டைல போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமா... "
விளையாட்டு வீரர் : " இது லோகோ இல்லை ... ஜூஸ் குடிக்கும் போது சட்டைமேல சிந்திடுச்சு... "
_________________




ஹிஹி.. நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க.. :D

மன்மதன்
28-03-2007, 03:17 PM
கிரிக்கெட் சிரிக்கெட்டாக

இருந்தது.. கலக்கல்..


வழுக்கை சிரிப்பு

வழவழப்பாக இருந்தது..



பைக்குல வேகமா போன முடி கலைஞ்சு போய் ஓமன் படம் பாத்துட்டு வந்த மாதிரி நட்டுக்குனு இருக்கும்.. நமக்கு அந்த பிரச்னை இல்ல...


ஹிஹி :D :D

ராஜா
28-03-2007, 05:00 PM
ஒரு பெண்மணிக்கு வெறும் பென் குழந்தைகளாகவே பிறந்தன.. முதலில் ஆசையோடு சீராட்டினாலும் அடுத்தடுத்து பெண்ணாகப் பிறக்கவே நொந்து போய் விட்டாள்..ஒருநாள் மூத்த மகள் தாயிடம் கேட்டாள்..

அம்மா ஏம்மா எனக்கு மல்லிகான்னு பேர் வச்சே..?

உனக்கு பேர் வைக்கிற அன்னிக்கு உன் தலையிலே ஒரு மல்லிகைப்பூ விழுந்துச்சு.. உடனே உனக்கு மல்லிகான்னு பேர் வச்சுட்டேன்..

அப்போ தங்கச்சிங்க பேர் ரோஜா, கனகான்னு பேர் வச்சதுக்கும் இதுதான் காரணமா..?

ஆமாம்..!

அந்தச் சமயத்தில், அறை உள்ளேயிருந்து ஒரு சத்தம்.. "ங்காஊஊஊஉ.."
அந்த சப்தத்தை கிளப்பியது கடைசி மகள். தலையில் அடிபட்டதால் பேசும் சக்தியை இழந்து விட்டிருந்தது. மீண்டும் அது சப்தம் எழுப்பவே அம்மா அதட்டினாள்..

" அம்மிக் குழவி.. கம்முன்னு இரு..!"

ராஜா
28-03-2007, 05:12 PM
ஒரு அழகான பெண் நவீன சுயம்வரத்துக்கு [கல்யாண மாலை] வந்தாள்.. அமைப்பாளர் கேட்டார்..

உங்களுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளைம்மா வேணும்..?

சொல்றேன் அய்யா.. நல்லா அழகா, கலரா, நகைச்சுவையா பேசற, என் மனசுக்கு பிடிச்ச கதைகள் சொல்ற, சினிமாவுக்கு அடிக்கடி அழைச்சிட்டுப் போற, நல்லா பாட்டுப் பாடற, புதுப் புதுப் பொருள்களை வீட்டுக்கு கொண்டு வர்ற, உலகச் செய்திகளை என்னோடு பகிந்துக்கற, பேசச் சொன்னா பேசற, வாயை மூடச் சொன்னா உடனே மூடிடுற, சமையல்ல எனக்கு உதவற, ஒரு நல்ல வாழ்க்கைத் துணை வேணும்..!

கொஞ்சம் கூட அசந்துபோகாத அமைப்பாளர் சொன்னார்..

உங்களுக்கு நீங்க விரும்பினபடியே ஒரு வாழ்க்கைத்துணை நிச்சயம் கிடைக்கும்மா.. ஆனா இங்கே இல்ல.. ரெண்டு மூணு கட்டடம் தாண்டி, "வசந்த் & கோ" ன்னு ஒரு கடை இருக்கு. அங்க போய்ப் பாருங்க..!

அன்புரசிகன்
28-03-2007, 05:18 PM
" அம்மிக் குழவி.. கம்முன்னு இரு..!"

அடக்கடவுளே...!!!!

பிரசாத்
30-03-2007, 11:51 AM
நீங்கள் செய்த இந்த ரவுசினால் இன்றுமுதல் நீங்கள்

ரவுசு ராஜா என்று அனைவராலும் அழக்கப்படுவீர்..சிறந்த நகைச்சுவை தொகுப்பு. வாழ்த்துக்கள் பல

நன்றி

பிரசாத்

ராஜா
30-03-2007, 05:19 PM
சின்னாவின் தந்தை கோட் சூட் அணிந்து அலுவலக பார்ட்டிக்கு கிளம்புவதை கவலையோட பார்த்துகிட்டுருந்தான்.. அப்பா கேட்டார்..

ஏண்டா சின்னா அப்படி பார்க்கிறே..?

இல்லப்பா வரும்போது இதையெல்லாம் கழட்டிட்டு வாங்களேன்..

ஹா..ஹா.. எதுக்கு அப்படி சொல்றே..?

இல்லப்பா.. இப்படி ட்ரெஸ் போட்டுட்டு போகும்போது நல்லா போறீங்க.. ஆனா வரும்போது அடுத்த வீட்டுக் கதவை தட்டுறீங்களா..? அந்த ஆண்டி "எருமை மாடு வந்துடிச்சு.. தண்ணியை குடிச்சுட்டு" அப்படின்னு திட்டுறாங்கப்பா.. இந்த ட்ரெஸ் உங்களுக்கு ராசி இல்லே.. வரும்போது எருமை மாடா உங்களை ஆக்கிடுது..!
_________________

டேனி ; பிள்ளைகளே.. எந்த மாதத்துக்கு 28 நாட்கள் உள்ளன சொல்லுங்கள் பார்ப்போம்..?

சின்னா ; எல்லா மாசத்திலும் 28 நாள் இருக்குய்யா..!

___________________________________________________________


டேனி ; பிள்ளைகளே.. நான் உங்களை கடக ரேகைக்கு தெற்கே 32 டிகிரியில் சந்திக்க நினைப்பதாக வைத்துக் கொள்வோம்.. அப்படியென்றால் நாம் எந்த ஊரில் சந்திப்போம்..?

சின்னா ; இப்படியெல்லாம் வில்லங்கமா கேள்வி கேட்டா ஒருத்தனையும் நீங்க சந்திக்க முடியாதுய்யா.. போய் நின்னு பார்த்துட்டு ஏமாந்து போய் திரும்ப வேண்டியதுதான்..!
_________________

டெ.கு.டேனியல் ; கற்காலத்துக்கும் உலோக காலத்துக்கும் இடையில் இருந்தது என்ன காலம்..?

சின்னா ; எங்க கஷ்ட காலம் சார்.. ஒண்ணுமே நினைவுக்கு வரலியே..

___________________________________________________________________

டேனி ; யாருக்காச்சும் பனிக்கட்டியா உறையாத திரவம் எதுன்னு தெரியுமா?

சின்னா ; தெரியும் சார்.. கொதிக்கிற வென்னீர்..
_________________

சின்னா'வுக்கு ஒரு தங்கச்சி பாப்பா பொறந்துச்சு. அது ஓயாம ராவும் பகலும் அழுதுச்சு.. எரிச்சலுற்ற சின்னா கேட்டான்..

எங்கேருந்தும்மா இந்த பாப்பா வந்துச்சு..?

அம்மா திடுக்கிட்டாலும் பின் சமாளித்து சொன்னாள்.. "கடவுள் கொண்டுவந்து கொடுத்தாருப்பா..!"

சற்றும் தயங்காமல் சின்னா சொன்னான்..

"உடனே இந்த சனியனைகொண்டுபோய் அவர்கிட்ட விட்டுடு.. அவரால சமாளிக்க முடியாத குழந்தைகளை வச்சுக்கிட்டு கஷ்டப்பட நாமதானா கிடைச்சோம்..?
_________________

மயூ
30-03-2007, 05:51 PM
அடப் பாவி சின்னா.. தங்கச்சிப் பாப்பாவை இப்படியா திட்டிறது!

மனோஜ்
30-03-2007, 06:18 PM
சின்னாவின் தந்தை கோட் சூட் அணிந்து அலுவலக பார்ட்டிக்கு கிளம்புவதை கவலையோட பார்த்துகிட்டுருந்தான்.. அப்பா கேட்டார்..

ஏண்டா சின்னா அப்படி பார்க்கிறே..?

இல்லப்பா வரும்போது இதையெல்லாம் கழட்டிட்டு வாங்களேன்..

ஹா..ஹா.. எதுக்கு அப்படி சொல்றே..?

இல்லப்பா.. இப்படி ட்ரெஸ் போட்டுட்டு போகும்போது நல்லா போறீங்க.. ஆனா வரும்போது அடுத்த வீட்டுக் கதவை தட்டுறீங்களா..? அந்த ஆண்டி "எருமை மாடு வந்துடிச்சு.. தண்ணியை குடிச்சுட்டு" அப்படின்னு திட்டுறாங்கப்பா.. இந்த ட்ரெஸ் உங்களுக்கு ராசி இல்லே.. வரும்போது எருமை மாடா உங்களை ஆக்கிடுது..!
குடியர்களே சிந்தியூங்கள் என்கிறது நகைசுவை நன்றி ராஜா ஆண்ணா

ஆதவா
30-03-2007, 06:34 PM
கலக்கல் சோக்குகள்.... உங்களின் வெற்றி மாலையின் கனம் கூடிக்கொண்டே போகிறது..
வாழ்த்துக்கள்

ராஜா
31-03-2007, 05:03 PM
ஒரு இளைஞன் பாதிரியாரிடம்...

முன்பின் தெரியாத இளம்பெண்ணுடன் ஒரே அறையில் தூங்குவது பாவமா ஃபாதர்..?

தூங்கினால் அது பாவம் இல்லை.. ஆனால் உங்களைப் போன்றவர்கள் தூங்க மாட்டீர்களே..!
_____________________________________________________________________

ஒரு ஓட்டலில் சாப்பிட வந்தவரும் சர்வரும்...

என்னா எழவுய்யா இது..? விளக்கெண்ணெய் மாதிரி இருக்கு.. காப்பியாய்யா இது..?

விளக்கெண்ணெய் மாதிரியா இருக்கு..? அப்ப அது டீ. காப்பி மண்ணெண்ணெய் மாதிரில்லே இருக்கும்..!
_________________

:sport009:

_________________

சலவைக் கடைக்காரரும் குடும்பத் தலைவியும்..

ஏம்பா.. 10 புடவை கொடுத்ததுக்கு 9 புடவைதான் கொண்டாந்துருக்கே.. கேட்டா தொலைஞ்சு போச்சுன்றே.. ஆனா 10 புடவைக்கான கூலி கேக்கறியே.. நியாயமா..?

அதைத் துவைச்சு இஸ்திரி போட்டதுக்கு அப்புறம் தாம்மா காணா போச்சு..!
___________________________________________________________________

மகனும் தந்தையும்...

அப்பா .. 1 பெருசா.. 50 பெருசா..?

50 தாண்டா கண்ணு பெருசு..

அப்ப கையைக் கொடுங்க.. உங்க பையன் வகுப்பில 50 வது ரேங்க் எடுத்திருக்கேன்..!
_________________

:music-smiley-019:

_________________

இரு தோழிகள்..

ஏண்டி கலா..? என் அண்ணாவையும் அண்ணான்னு கூப்பிடறே.. வீட்டுக்காரரையும் அண்ணான்னே கூப்பிடறே..?

அதுக மூஞ்சிக்கு அப்படிக் கூப்பிடறதே பெருசு..போ..!
_____________________________________________________________________

இரு தோழர்கள்..

ஏண்டா பாலு..? ஆணோட சம்பளத்தையும் பொண்ணோட வயசையும் சொல்லக் கூடாதுங்கறாங்களே.. ?

நம்ம சம்பளம் குறைச்சல்.. அவங்க வயசு அதிகம்.. எதைச் சொன்னாலும் அதிர்ச்சிதான்..!
_________________

:violent-smiley-004: :icon_drunk:

மனோஜ்
31-03-2007, 08:15 PM
மகனும் தந்தையும்...

அப்பா .. 1 பெருசா.. 50 பெருசா..?

50 தாண்டா கண்ணு பெருசு..

அப்ப கையைக் கொடுங்க.. உங்க பையன் வகுப்பில 50 வது ரேங்க் எடுத்திருக்கேன்..!
இப்டியூ தப்பிக்லாமா தெரியாம போச்சே ராஜா அண்ணா

இளசு
31-03-2007, 10:15 PM
_________________

சலவைக் கடைக்காரரும் குடும்பத் தலைவியும்..

ஏம்பா.. 10 புடவை கொடுத்ததுக்கு 9 புடவைதான் கொண்டாந்துருக்கே.. கேட்டா தொலைஞ்சு போச்சுன்றே.. ஆனா 10 புடவைக்கான கூலி கேக்கறியே.. நியாயமா..?

அதைத் துவைச்சு இஸ்திரி போட்டதுக்கு அப்புறம் தாம்மா காணா போச்சு..!
___________________________________________________________________




தொழில் சுத்தம்!

அசத்தல் மன்னன் ராஜாவுக்குப் பாராட்டுகள்!

ராஜா
01-04-2007, 05:55 PM
ஒருநாளு சுசி புது பூட்ஸ் போட்டுக்கிட்டு பள்ளிக்கு வந்துச்சு. அதோட பிரெண்டு மாசி கேட்டுச்சு...

என்னா சுசி.. புது பூட்செல்லாம் போட்டுட்டு வந்திருக்கே..?

இல்லே மாசி.. நான் ரொம்ப நகம் கடிக்கிறேனாம்.. அதனால எங்கம்மா இந்த கழட்ட முடியாத பூட்ஸ் போட்டு அனுப்பிட்டாங்க..!
_________________

சுசி க்கு ஒரே குழப்பம்.. எப்போ எதைச் செய்யறதுன்னு.. எல்லாத்தையும் மாத்தி செஞ்சுட்டு மனைவி முதல் மானேஜர் வரைக்கும் திட்டு வாங்குவார்.. ஒருநாள் பொறுக்க முடியாமல் டாக்க்டரைப் போய் பார்த்தார்.. இப்போ ஒரு பிரச்சினை தீர்ந்துட்டுது.. எப்படி தெரியுமா..?

தினமும் டாய்லட் போகும்போது வாயில் ஒரு விசிலை வச்சு ஊதிக்கிட்டே இருப்பார்.. எதுக்கா..?

சரியான இடத்தைக் கழுவிட்டு வரத்தான்..!
_________________

சுசி ஒருநாள் தாறு மாறா காரை ஓட்டிட்டுப் போய் போலீஸ்ல மாட்டிக்கிட்டார்.. போலீஸ் ஓட்டுநர் உரிமத்தைக் கேட்கவே, சுசி வெடித்தார்...

என்னை என்ன கேணைன்னு நெனைச்சீங்களா..? நேத்துதானே ஒரு ஆளை அரைச்சுட்டேன்னு லைசன்ஸை புடிங்கிட்டு போனீங்க.. அப்புறம் எப்படி இன்னைக்கு இன்னொன்னு வரும்..? தெரியாமத்தான் கேட்கிறேன்.. நேத்தி லைசன்ஸை வாங்கிட்டு போன போலீசும் நீங்களும் சந்திச்சுக்கவே இல்லியா..?
_________________

சுசியும் மாசியும் நண்பர்கள். சுசியின் ஓட்டலுக்கு மாசி தன் விலை உயர்ந்த காரில் வருவார்.. அன்றும் அப்படித்தான்.. வாசலில் கல்லாவில் இருந்த சுசியை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மாதவ் உள்ளே சாப்பிடப் போனார். கொஞ்ச நேரத்தில் சுபன் சிங் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்.. மாசி கேட்டதற்கு ...

மாசி.. உன்னோட காரை யாரோ திருட்டுப் பசங்க ஓட்டிட்டுப் போயிட்டாங்க மாசி..

அடப்பாவி சுசி.. உன்னை பார்த்துக் கொள்ளச் சொன்னேனே.. நீ தடுத்திருக்கலாமே..

கவலைப்படாதே மாசி.. நான் கார் நம்பரை குறிச்சு வச்சிருக்கேன்.. கண்டுபிடிச்சிடலாம்..!
_________________

மாசி ஆசிரியர்.. அவர் வகுப்பில் சுசியின் மகன் புதிதாகச் சேர்ந்தான்.. மாசி அவனைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பி மாசி விசாரித்தார்..

உங்க அப்பா என்ன பண்றார்..?

வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யறார் அய்யா..

நல்லா விற்குதா..?

ஓ.. இன்னும் டீ,வி. மட்டும் தான் பாக்கி இருக்கு.. அதையும் வித்துட்டு அடுத்தது நகை வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கார்.
_________________

இளசு
01-04-2007, 08:57 PM
கார் எண் நகைச்சுவை - இதில் முதல் இடம்!

அசராமல் அசத்துறார் நம்ம ராஜா!

sinnavan
01-04-2007, 09:26 PM
ஒரு இளைஞன் பாதிரியாரிடம்...

முன்பின் தெரியாத இளம்பெண்ணுடன் ஒரே அறையில் தூங்குவது பாவமா ஃபாதர்..?

தூங்கினால் அது பாவம் இல்லை.. ஆனால் உங்களைப் போன்றவர்கள் தூங்க மாட்டீர்களே..!
ஃபாதர் நன்கு அறிந்துவைத்துள்ளார். :animal-smiley-026: :animal-smiley-026:

raj6272
02-04-2007, 08:40 AM
கர்னாடகாவை பற்றி எப்போது சொல்வீர்கள் ராஜா

மனோஜ்
02-04-2007, 09:00 AM
அருமை அருமை நகைசுவைகள்

அன்புரசிகன்
02-04-2007, 10:23 AM
சுசி ஒருநாள் தாறு மாறா காரை ஓட்டிட்டுப் போய் போலீஸ்ல மாட்டிக்கிட்டார்.. போலீஸ் ஓட்டுநர் உரிமத்தைக் கேட்கவே, சுசி வெடித்தார்...

என்னை என்ன கேணைன்னு நெனைச்சீங்களா..? நேத்துதானே ஒரு ஆளை அரைச்சுட்டேன்னு லைசன்ஸை புடிங்கிட்டு போனீங்க.. அப்புறம் எப்படி இன்னைக்கு இன்னொன்னு வரும்..? தெரியாமத்தான் கேட்கிறேன்.. நேத்தி லைசன்ஸை வாங்கிட்டு போன போலீசும் நீங்களும் சந்திச்சுக்கவே இல்லியா..?


அப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே... :icon_wacko:

ராஜா
02-04-2007, 05:38 PM
ஒருநாள் டேனியல் பிள்ளைகளைக் கேட்டார்..

குழந்தைகளே அண்மையில் நீங்கள் கேள்விப்பட்ட அதிர்ச்சிகரமான செய்தி என்ன..?

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள்.. சின்னாவின் முறை வந்ததும்.....

ரெண்டு நாளைக்கு முந்தி எங்க அப்பா கிணத்துல விழுந்துட்டாருய்யா..

அடடா.. இப்போது எப்படி இருக்கிறார்.. நல்லா இருக்காரா..?

அப்படித்தான் நெனைக்கிறேன்.. நேத்து சாயங்காலம் வரைக்கும் "காப்பாத்துங்க..காப்பாத்த� ��ங்க.."ன்னு கத்திகிட்டு இருந்தார்.. இப்போ சத்தத்தைக் காணோம்..!
_________________

சின்னாவின் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப் பட்டு வந்திருந்தன.

டேனி ; சின்னா எல்லா பாடத்திலும் சேர்த்து 57 மதிப்பெண்கள்.. வெட்கமா இல்லே..?

சின்னா ; அதை விடுங்க சார்.. உங்களை பயமுறுத்தறதுக்கு இதைச் சொல்லல.. அடுத்த தடவையும் மார்க் குறைஞ்சா அதுக்கு காரணமான ஆளை சும்மா விடமாட்டேன்னு எங்க அப்பா சொன்னார்.. உங்களை நெனச்சா பரிதாபமா இருக்கு..!
_________________

ஒருநாள் பள்ளிக் கூடத்துக்கு லேட் ஆயிருச்சின்னு சின்னாவோட அப்பா "நோ எண்ட்ரி" யில புகுந்து வந்தார்.. அப்போ சின்னாகிட்ட சொன்னார்..

என்ன இருந்தாலும் சட்டத்தை மீறியது மனசுக்கு கஷ்டமா இருக்கு சின்னா..

சின்னா அவரைத் தேற்றினான்..

கவலைப் படாதீங்க அப்பா.. ! ஒரு போலீஸ் வண்டியும் நோ எண்ட்ரியில புகுந்து நம்ம பின்னாடி வந்துகிட்டு இருக்கு..!
_________________

ஒருநாள் டேனி சின்னாவைக் கேட்டார்..

உலகம் உருண்டைன்னு எப்படி நிரூபிப்பாய்..?

என்னால் முடியாது அய்யா.. மேலும் பூமி உருண்டைன்னு யார்கிட்டயும் நான் சொல்லிக்கிட்டு திரியல..!
_________________

சின்னாவின் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு..

பள்ளியின் வடக்கு பகுதியில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் அங்கு மிதிவண்டிகளை வைத்திருக்கும் மாணவர்கள் அவற்றை அப்புறப் படுத்தக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.. இதற்காக 15 நிமிடம் அவர்களுக்கு அவகாசம் வழங்கப் படுகிறது..

15 நிமிடம் கழித்து இன்னொரு அறிவிப்பு...

22 மிதிவண்டிகளை அப்புறப் படுத்தச் சென்ற 1500 மாணவர்களும் உடனடியாக வகுப்பறைகளுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்...!
_________________

நாளைக்குப் பார்ப்போம் .. வர்ட்டா..?

அன்புரசிகன்
02-04-2007, 06:17 PM
கவலைப் படாதீங்க அப்பா.. ! ஒரு போலீஸ் வண்டியும் நோ எண்ட்ரியில புகுந்து நம்ம பின்னாடி வந்துகிட்டு இருக்கு..!

மேலும் பூமி உருண்டைன்னு யார்கிட்டயும் நான் சொல்லிக்கிட்டு திரியல..!

கலக்கல் நகைச்சுவைகள். வாழ்த்துக்கள் ராஜா.

இளசு
02-04-2007, 06:19 PM
மீண்டும் ராஜா..
அசத்திக்கிட்டே இருங்க...

இம்முறை என் வாக்குகள்; ஒருவழிப்பாதைக்கும், பள்ளி ஒலிபெருக்கிக்கும்...

gayathri.jagannathan
03-04-2007, 04:06 AM
சின்னாவின் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு..

பள்ளியின் வடக்கு பகுதியில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் அங்கு மிதிவண்டிகளை வைத்திருக்கும் மாணவர்கள் அவற்றை அப்புறப் படுத்தக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.. இதற்காக 15 நிமிடம் அவர்களுக்கு அவகாசம் வழங்கப் படுகிறது..

15 நிமிடம் கழித்து இன்னொரு அறிவிப்பு...

22 மிதிவண்டிகளை அப்புறப் படுத்தச் சென்ற 1500 மாணவர்களும் உடனடியாக வகுப்பறைகளுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்...!
_________________



சோக்கு சூப்பர்....நன்றி ராஜா....:icon_clap:
கலக்குங்க... கலக்குங்க......கலக்கிக்கிட்டே இருங்க.... :mittelgr124:

ராஜா
03-04-2007, 06:35 AM
நன்றி இளசு உள்ளிட்ட நண்பர்களே..!

தங்கள் பாராட்டுகளே என்னை ஊக்குவிக்கும் எரிபொருள்.

எப்போதும் உங்களுடன் இணைந்திருப்பேன்..

ஓவியா
03-04-2007, 02:01 PM
அண்ணா அனைத்து கடிகளும் அருமை


கடவுள் அளித்த சிறந்த வரம் இது.
உங்கள் நகைச்சுவை உணர்வை மதிக்கிறேன்.

தொடருங்கள்

ராஜா
03-04-2007, 06:16 PM
பள்ளி ஆசிரியர்கள் ரொம்பப் பேரு தெனாவட்டா இருப்பாங்க.. ஆனா உள்ளுக்குள்ள அவங்களுக்கு இருக்குற நடுக்கம் அவங்களுக்குத் தான் தெரியும்.. எப்ப எவன் ஏழரையை குடுப்பான்னே தெரியாம திரிவாங்க.. அந்த இனம் புரியாத பதட்டமே அவங்களை பல கோமாளித்தனம் செய்ய வைக்கும்.. அவற்றில் சில...

ஒருநாள் ஒரு வகுப்புல திருவிழா காரணமா வருகை குறைவா இருந்துச்சு. அந்த வழியே போன தலைமை ஆசிரியர் வகுப்பாசிரியர்கிட்ட விளக்கம் கேட்க, அவர் உண்மையைச் சொல்லிட்டார்.. கடுப்பான தலை. உள்ளே வந்து இவ்வாறு முழங்கினார்...

இன்னிக்கு ஸ்கூலுக்கு வராத பய எல்லாம் எழுந்து நில்லுங்க..!

ஒரு பள்ளிக்கூடத்தில டாய்லட் பக்கத்திலேயே குடிதண்ணீர்க் குழாயும் இருந்துச்சு. அன்னிக்கு குழாய் ரிப்பேர்ங்கறதால மாற்று ஏற்பாடா வேற இடத்துல தண்ணி வச்சிருந்தாங்க.. அதை ஆங்கிலத்தில் இப்படி சொன்னார் ஒரு அறிவாளி ஆசிரியர்..

Don't go to toilet and drink water..!"

இன்னொருத்தர் பின்னாடி பேசிக்கிட்டு இருந்த மாணவனைப் பார்த்து இப்படிச் சொன்னார்...

The boy behind last bench.. you stand up..!

அவராவது பரவாயில்லே.. ஒரு வாத்தியார் டாய்லட் போயிட்டு ஜிப் சரியாப் போடாம வந்துட்டார்.. பசங்க சிரிச்சாங்க..உடனே அவர் கண்டிச்சார்..

If you laugh continously, I.ve no other way than send out..!

ஒரு அல்ட்டாப்பு டீச்சரம்மா இருந்துச்சு.. ஒருநாள் மதியானம் வேர்த்த்ப் போய் க்ளாஸ் உள்ளே நுழைஞ்சு ஃபேன் சுவிட்சைப் போட்டுச்சு. ஆனா காத்தாடி ஓடலே.. உடனே அதுக்கு தெரிஞ்ச ஆன்ங்கிலத்துல அலுத்துக்குச்சு...

Why is the fan not on'ing..?

கெமிஸ்ட்ரி வாத்தியார் ஒரு பொண்ணுக்கிட்ட கேட்டார்..

வாட் ஈஸ் நைட் ரேட்..?


அவர் கதை அப்படின்னா சரித்திர ஆசிரியர் கதை இன்னும் அக்குரும்பு..கையில ஒரு சார்ட் கொண்டு வந்தார்.. அதை ஒரு பையன் கையில கொடுத்து ஆணியில மாட்டச் சொன்னார்.. அவனோ குள்ளம்..
வாத்தியார் சொன்னார்...

"hang this calender or else I will hang myself".


மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் ல அவ்வளவா பொண்ணுங்க இருக்காது.. ஒரே ஒரு பொண்ணுதான்.. ஒருநாள் லெக்சரர் பசங்ககிட்ட ஒரு டயாக்ராம் வரையச் சொன்னார்.. ஆனா பசங்க கேட்கற மாதிரி இல்ல.. உடனே சத்தம் போட்டு சொன்னார்..

"Please Note The only figure for this class then u can do wat ever u want.."


இது கூட பரவாயில்லீங்க.. ஒரு ஆண்டுவிழாவில பிரின்சி பேசினார்..துணை ப்ரின்சி ஒரு பெண்மணி.. அவரைக் காட்டியபடி...

நானும் அவங்களும் ராப்பகல் பாராம கடுமையா வேலை செஞ்சோம்.. இப்போ உங்களை மாதிரி ஆயிரக் கணக்கான குழந்தைகளை உருவாக்கியிருக்கோம்ன்னா அதுக்கு எங்க உழைப்புதான் காரணம்..!
_________________

அறிஞர்
04-04-2007, 01:31 AM
சின்னா சிரிப்புக்கள் அருமை அண்ணா...
-------
பெயரின் கீழ் சீன மொழியில் என்ன எழுதியிருக்கிறது.. "சிரிப்புத்திலகம்" என்றா..

அறிஞர்
04-04-2007, 01:37 AM
Don't go to toilet and drink water..!"

The boy behind last bench.. you stand up..!

If you laugh continously, I.ve no other way than send out..!


Why is the fan not on'ing..?

வாட் ஈஸ் நைட் ரேட்..?

"hang this calender or else I will hang myself".


"Please Note The only figure for this class then u can do wat ever u want.."
_________________ ஒவ்வொன்றும் வெகு அருமை.... நாட்டில் பல இங்கலீஸ் மேதாவிகள் இப்படி தான் பேசித் திரியுறாங்க......

அன்புரசிகன்
04-04-2007, 10:47 AM
நகைச்சுவை என்றாலும் உண்மை தான். வாழ்த்துக்ள் ராஜா. உங்க ரவுச தொடருங்க.

ராஜா
04-04-2007, 06:06 PM
சுசியும் மாசியும் நண்பர்கள்..!
மாசி நாடக டயரடக்கர்.. சுசி நடிகர். ஆனா வசனத்தை மறந்து நடிப்புல சொதப்பி மாசிக்கு உதை வாங்கி கொடுக்கறதே நடிகர் சுசியின் வேலை.

வெறுத்துப்போன மாசி சுசியை இனி நடிக்க வைக்கிறதில்லேன்னு முடிவு பண்ணிட்டார். மாசி புதுசா ஒரு காதல் காவியம் அரங்கேற்ற முடிவு செய்தார்.. அதைக் கேள்விப்பட்ட சுசி ஓடோடி வந்து மாசியிடம் கெஞ்சினார்.. "இந்த முறை ஒரு சான்ஸ் கொடுத்துப் பாரு மாசி.. பின்னிடறேன்..!

மாசி எவ்வளவோ மறுத்தும் கேட்காம பிடிவாதமா கதாநாயகன் வாய்ப்பை சுசி வாங்கிட்டாரு.. முதல் காட்சியில கையில ஒரு மலரை வச்சுக்கிட்டு முகர்ந்து பார்த்து "என் காதலியின் வாசனையை இதில் நான் அனுபவிக்கிறேன் அப்படின்னு சொல்லணும்.. அவ்வளவுதான்..

இந்த தடவை கடும் பயிற்சி எடுத்துக்கிட்டார் சுசி.. மாசியே சபாஷ் சொல்ற அளவுக்கு ரிகர்சல் ல அசத்திக் காட்டினார்..நாடக நாள் வந்தது.. முதல் காட்சி... ரசிகர்கள் கூச்சல் கேட்டு மாசி ஓடி வந்து பார்த்தார்..சுசி கரெக்டாதான் வசனம் பேசினார்..ஆனா பூ எடுத்துட்டு வர மறந்துட்டார்..

என் காதலியின் வாசனையை இதில் நான் அனுபவிக்கிறேன்...அப்படின்� ��ு சொன்னது வெறும் கையை முகர்ந்து பார்த்து.. அதுவும் இடது கையை..!

அன்னியிலேருந்து மாசி செவத்த பையனாயிட்டார்..!

_______________________________________________________________________

சுசி ஒரு மலைப்பாதை வழியா திறந்த ஜீப் ஓட்டிட்டு போனார்.. ஒரு திருப்பத்துல எதிரே ஒரு பொண்ணு ஓட்டிட்டு வந்த கார் மேல மோதற மாதிரி போயிட்டார்..அந்த பொண்ணு ...எருமை மாடு..!ன்னு சத்தம் போட்டுட்டு போச்சு..

கடுப்பான சுசி பதிலுக்கு பன்னி...ன்னு கத்திட்டு போனார்..

அடுத்த திருப்பத்துல.. ஏராளமான காட்டு எருமைங்க கூட்டமா சுசி ஜீப்பை வளைச்சிக்கிட்டு..............

அன்னியிலேருந்து சுசி கருத்தப் பையனா போயிட்டாரு..!
________________________________________________________________________
-

மனோஜ்
04-04-2007, 06:11 PM
சுசி இப்படி நிறம் மாறிகிட்டே இருப்பாற ராஜா அண்ணா

ஓவியன்
05-04-2007, 09:19 AM
அடடா அது தான் சுசியும் மாசியும் இப்படி இருக்காங்களா?

நான் என்னவோ எதோனு நினைச்சேன்.

s_mohanraju
05-04-2007, 11:39 AM
பிண்ரீங்க ராஜா தொடரட்டும் உங்கள் கலை சேவை
அனைத்தும் அருமை , ஒரு புத்தகமே போடலாம்

சூரியன் எப் எம் போல பாடவும்

சிரிங்க சிரிங்க சிரிங்க சிரிச்சுகிட்டே இருங்க
எல்லாம் ராஜாவின் ஜோக்ஸ் தான்

ராஜா
05-04-2007, 11:48 AM
நன்றி நண்பர்களே...!
-------------------------------------------------------------------

ஒரு நோயாளி வெகு கோபமாக டாக்டரிடம் கத்தினார்..

என்னாய்யா நெனச்சுகிட்டு இருக்கீங்க மனசுல.? நீங்க வந்து
1000 ரூபாய்க்கு மருந்து எழுதி கொடுக்கறீங்க.. இன்னொருத்தர்
வந்து அதெல்லாம் வேஸ்ட் ன்னு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு
ஆயிரம் ரூபாய்க்கு எழுதித் தரார்..? இதுக்கு என்ன அர்த்தம்..?

டாக்டர் அமைதியாக சொன்னார்..

எதுக்கு கத்தறீங்க..? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுல
தெரிஞ்சுட்டுப் போவுது.. யார் மருந்து சரி.. எது தப்புன்னு..!
_________________

ஒரு இளஞ்சோடி உணவகத்தில் அமர்ந்து நேரம் காலம்
தெரியாமல் பேசிக் கொண்டிருந்தது..பொறுத்துப் பொறுத்துப்
பார்த்த சர்வர் அவர்களைக் கிளப்பி விட்டபோது..

காதலன் ; ஹி..ஹி.. நாங்க கடிகாரத்தைக் கவனிக்கவே இல்ல..

சர்வர் ; தொலையுது.. காலண்டரையாவது பார்த்திருக்கலாமில்ல..?
_________________

இரு நண்பர்கள்.. அடுத்தடுத்து கடை வைத்திருந்தார்கள்..

ஒருவன் ; மாப்ளே.. உன் கடைக்கு மட்டும் பெண்கள்
கூட்டம் மொய்க்குதே.. எப்படிடா..?

அடுத்தவன் ; எவ்வளவு வயசாகி இருந்தாலும் அவங்களை
பாப்பா ன்னு கூப்பிட்டுப் பாரு.. உன் கடைக்கும் கூட்டம் வரும்..!
_________________

என்னங்க.. என்னை சினிமாவுக்கு கிளம்ப சொல்லிட்டு நீங்க
எங்கே வெளியிலே போறீங்க..?

நீ அலங்காரம் முடிச்சு தயார் ஆகறதுக்குள்ள நான் மேட்னி
ஷோ வேற படம் பார்த்துட்டு வந்துடறேன் இரு..!
_________________

மழை வரும் போல இருந்தது.. அலுவலகத்தில் இருந்து
எல்லோரும் அவசர அவசரமாக வீட்டுக்கு கிளம்பினார்கள்..
சுசி மட்டும் கிளம்பவில்லை.. பியூன் கேட்டார்..

என்ன சார் கிளம்பலையா..? மழை வராப்பல இருக்கு..
யாருக்கு காத்திருக்கீங்க..?

சுசி சொன்னார்..

மழைக்குதான்.. வீட்டுலேருந்து வேலை மெனக்கெட்டு
எடுத்துட்டு வந்த குடை வேஸ்ட் ஆயிடக் கூடாது இல்லையா..?
_________________

இனிமே சனிக்கிழமைதான் வருவேன்.. வர்ட்டா..?

ஓவியன்
06-04-2007, 08:07 AM
அடடடா!

அருமை, அதிலும் அந்தக் குடைக் கதை சூப்பர்!

அன்புரசிகன்
06-04-2007, 08:20 AM
ஒருவன் ; மாப்ளே.. உன் கடைக்கு மட்டும் பெண்கள் கூட்டம் மொய்க்குதே.. எப்படிடா..?
அடுத்தவன் ; எவ்வளவு வயசாகி இருந்தாலும் அவங்களை
பாப்பா ன்னு கூப்பிட்டுப் பாரு.. உன் கடைக்கும் கூட்டம் வரும்..!
---
என்ன சார் கிளம்பலையா..? மழை வராப்பல இருக்கு..
யாருக்கு காத்திருக்கீங்க..?
சுசி சொன்னார்..
மழைக்குதான்.. வீட்டுலேருந்து வேலை மெனக்கெட்டு
எடுத்துட்டு வந்த குடை வேஸ்ட் ஆயிடக் கூடாது இல்லையா..?


நல்லாச்சொன்னீங்க ரவுசு மாப்ளே...:icon_good:

ராஜா
06-04-2007, 08:47 AM
ஹா..ஹா.. ஹா...

நல்லாச் சொன்னீங்க மாமனாரே..!

aren
06-04-2007, 09:30 AM
நிச்சயம் கொண்டுவந்த குடையை உபயோகிகவேண்டுமே. இல்லாவிட்டால் எடுத்துவந்தது வெறும் வேஸ்ட்தானே.

நல்ல சிரிப்பு. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ராஜா
06-04-2007, 02:34 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
06-04-2007, 02:44 PM
நம் மன்னர் ஏன் சோகமாக இருக்கிறார்..?

இப்போ யாரும் அவரைப் பற்றி ஜோக் போடுவது கிடையாதாம்.. இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றிதான் எல்லோரும் ஜோக் சொல்லிக்கிட்டு இருக்காங்களாம்..

_______________________________________

இருந்தாலும் நம் மன்னருக்கு இவ்வளவு ஆகாது..

ஏன்..? என்னாச்சு..?

இந்திய கிரிக்கெட் அணியை விட அவர் எவ்வளவோ பரவாயில்லையாம்.. சொல்லிகிட்டு திரியறார்..!

________________________________________

ராசா நீங்க நம்ம ராணிட்ட எப்பவும் ஜாக்கரைதையா இருங்க

ஏன்

அவங்க கத்தியால பழத்தை அறுத்துக் கொண்டே இப்படி பாடுனாங்க.

என்ன பாடுனாங்க

''உன்னைத்தான் நானறிவேன்...மன்னவனை யார் அறிவார்'' னு பாடுறாங்க.

_________________________________________

புலிகேசி : மந்திரி நிதி நிலை எப்பிடியிருக்கிறது?

மந்திரி : திருப்திகரமாக உள்ளது மன்னா

புலிகேசி :நான் தங்களின் நிதி நிலைமையை கேட்கவில்லை நாட்டின் நிதி நிலையைக்கேட்டேன் ....!

__________________________________________

அமைச்சரே.. இன்று அரசர் மிகவும் ஆக்ரோஷமாகப் போரிடுகிறாரே.. என்ன விஷயம்..?

இன்று வெற்றி பெற்றால் சின்ன வீட்டை அதிகாரப்பூர்வ சின்ன அரண்மனையாக்க அரசி ஒப்புக்கொண்டு விட்டார்களாம் தளபதியாரே..!

___________________________________________

எதுக்கு அந்த தரகரைப் போட்டு கும்முறாங்க..

மாப்பிள்ளை ராஜா மாதிரி இருப்பாருன்னு சொல்லி பொண்ணு பாக்க அழச்சுட்டு போனாராம்.. அங்க போயி பாத்தா மாப்பிள்ளை "இம்சை அரசன் 23-ம் புலிகேசி" மாதிரி இருந்தானாம்..!

___________________________________________

மன்னரை புலவர் " கோழை " என்று பாடியது தவறுதான்.. இருந்தாலும் மரணதண்டனை கொடுத்தது அநியாயம்.. இல்லையா..?

தண்டனை திட்டினதுக்கு இல்லையாம்.. அரசாங்க ரகசியத்தை வெளியிட்டதுக்காகவாம்...!

மனோஜ்
06-04-2007, 02:46 PM
ஒரு இளஞ்சோடி உணவகத்தில் அமர்ந்து நேரம் காலம்
தெரியாமல் பேசிக் கொண்டிருந்தது..பொறுத்துப் பொறுத்துப்
பார்த்த சர்வர் அவர்களைக் கிளப்பி விட்டபோது..

காதலன் ; ஹி..ஹி.. நாங்க கடிகாரத்தைக் கவனிக்கவே இல்ல..
சர்வர் ; தொலையுது.. காலண்டரையாவது பார்த்திருக்கலாமில்ல..?
இது தான் காதல் சமாச்சாரம் கடைசில காசு காலி ஆகும் இல்ல இடம் காலியாகும்

அன்புரசிகன்
06-04-2007, 07:31 PM
எதுக்கு அந்த தரகரைப் போட்டு கும்முறாங்க..

மாப்பிள்ளை ராஜா மாதிரி இருப்பாருன்னு சொல்லி பொண்ணு பாக்க அழச்சுட்டு போனாராம்.. அங்க போயி பாத்தா மாப்பிள்ளை "இம்சை அரசன் 23-ம் புலிகேசி" மாதிரி இருந்தானாம்..!


:Christo_pancho: :icon_smokeing: உங்களைப்போல இருப்பார் என்று கூறிவிட்டாரா? எப்படி அந்தப்பெண் முதலிலே சம்மதித்தாள்?
நகைச்சுவைகளிற்கு நன்றி மாப்ளே. :icon_dance: :icon_dance: :sport-smiley-018:

ஓவியன்
07-04-2007, 03:27 AM
இனி மன்னர் கவலைப் பட மாட்டார் ராஜா - அது தான் நீங்க மன்னர் ஜோக் போட்டுட்டீங்களே!

ராஜா
07-04-2007, 01:34 PM
:Christo_pancho: :icon_smokeing: உங்களைப்போல இருப்பார் என்று கூறிவிட்டாரா? எப்படி அந்தப்பெண் முதலிலே சம்மதித்தாள்?
நகைச்சுவைகளிற்கு நன்றி மாப்ளே. :icon_dance: :icon_dance: :sport-smiley-018:
உங்க பொண்ணுதானே..? :209:

leomohan
07-04-2007, 01:37 PM
ராசா நீங்க நம்ம ராணிட்ட எப்பவும் ஜாக்கரைதையா இருங்க

ஏன்

அவங்க கத்தியால பழத்தை அறுத்துக் கொண்டே இப்படி பாடுனாங்க.

என்ன பாடுனாங்க

''உன்னைத்தான் நானறிவேன்...மன்னவனை யார் அறிவார்'' னு பாடுறாங்க.

_________________________________________



அறிஞ்சிட்டீங்க போங்க.

ஓவியா
07-04-2007, 01:53 PM
இருந்தாலும் நம் மன்னருக்கு இவ்வளவு ஆகாது..

ஏன்..? என்னாச்சு..?

இந்திய கிரிக்கெட் அணியை விட அவர் எவ்வளவோ பரவாயில்லையாம்.. சொல்லிகிட்டு திரியறார்..!

கி கி கி

நன்றி ராஜா அண்ணா

ராஜா
07-04-2007, 06:14 PM
கண்ணம்மா ; ஏங்க.. ஒருநாள் ஓட்டு போட்டுட்டு அஞ்சு வருஷம் கஷ்டப் படறாங்களே.. இந்த வாக்காளர் எல்லாம் பாவம்தானே..?

ராஜா ; அடப் போம்மா.. அஞ்சு நிமிஷத்துல தாலியக் கட்டிட்டு ஆயுசு பூரா அவதிப் படற ஆளுக தாம்மா ரொம்ப பாவம்..!
_________________

ராஜா ; ஏம்மா..? இப்போ உனக்கு அறிவுரை எல்லாம் சொன்னேனே.. நல்லா இருந்துச்ச்சா..?

கண்ணம்மா ; அதெல்லாம் டி.வி.யில நீங்க சொல்லியிருக்கணும்ங்க..

ராஜா ; அவ்வளவு நல்லாவா இருந்துச்சு..?

கண்ணம்மா ; இல்லே... பொசுக்குன்னு சானல் மாத்தியிருக்கலாம்.. !
_________________

ஒருநாள் ராஜா ராத்திரி தண்ணி போட்டுட்டு வந்தார்.. மனைவிக்கு வாசனை தெரியாம இருக்க கண்ணாடிக்கு முன்னே நின்னு ஒரு பிளாஸ்திரியை வாயில ஒட்டிக்கிட்டார்.. ஆனா கண்ணம்மா கரெக்டா கண்டுபிடிச்சு அடுத்த நாள் காலையில நேத்து போதையில வந்தீங்களான்னு கேட்டாங்க.. ராஜா எப்படித் தெரிஞ்சதுன்னு கேட்க தலையில் அடித்துக் கொண்டே கண்ணம்மா சொன்னாங்க..

அங்க போய்ப் பாருங்க.. கண்ணாடியில பிளாஸ்திரியை ஒட்டி வச்சுருக்கீங்க..!
_________________

முந்தா நாள் காய்கறி வாங்கப் போன ராஜாவைக் காணோம்ன்னு அடுத்த வீட்டுக் காரியிடம் கண்ணம்மா. வருத்தப் பட்டாங்க . அந்த ராட்சஸி சொன்னா..

இந்த மாதிரி கஷ்டம் வாழ்க்கையில எல்லாருக்கும் வரும்.. சரி.. கவலைப் படாதே.. என் ஃபிரிட்ஜ் ல காய்கறி இருக்கு.. எடுத்து தரேன் வா..!
_________________

கண்ணம்மா அவங்க அம்மா வீட்டுக்குப் போய் ஒரு வாரம் கழிச்சு ராஜாவுக்கு போன் பேசினாங்க..

என்னங்க ..இந்த ஒரு வாரத்துல நான் பாதியா இளைச்சுப் போயிட்டேங்க.. எப்போ வந்து என்னை கூட்டிட்டு போகப் போறீங்க..?

இன்னும் ஒரு வாரம் போகட்டும்..!
_________________

varsha
07-04-2007, 06:43 PM
போக்கிரி

அறிமுக சண்டை காட்சி...
விஜய் : கதவை தொறந்து வை... ஓடறதுக்கு வசதியா இருக்கும்

படம் பார்க்க வந்தவன் : டேய் மச்சான் எனக்கென்னுமோ இது நமக்கு சொல்ற மேசஜ் மாதிரி தெரியுதுடா...

ஓவியன்
08-04-2007, 03:58 AM
கண்ணம்மா ; ஏங்க.. ஒருநாள் ஓட்டு போட்டுட்டு அஞ்சு வருஷம் கஷ்டப் படறாங்களே.. இந்த வாக்காளர் எல்லாம் பாவம்தானே..?

ராஜா ; அடப் போம்மா.. அஞ்சு நிமிஷத்துல தாலியக் கட்டிட்டு ஆயுசு பூரா அவதிப் படற ஆளுக தாம்மா ரொம்ப பாவம்..!


ஹி,ஹி,ஹி!!!!!!!!!

:sport-smiley-007: :sport-smiley-007: :sport-smiley-007:

இளசு
08-04-2007, 07:13 AM
ராசா- ராணி ஜோடி, ராஜா-கண்ணம்மா ஜோடி..

காலம் மாறியும் தொடரும் ரவுசுகள்!

குறிப்பாய் கண்ணாடியில் பிளாஸ்திரி ஒட்டிய காட்சி...


இங்கே சிரிக்க வைத்து , கதைகளில் நெகிழ வைக்கும்
நம் ராஜா - மன்றத்தின் சார்லி சாப்ளின்!

ஓவியன்
08-04-2007, 08:51 AM
இங்கே சிரிக்க வைத்து , கதைகளில் நெகிழ வைக்கும்
நம் ராஜா - மன்றத்தின் சார்லி சாப்ளின்!

ஹா!,ஹா!,ஹா!

அருமை, அருமை!:icon_dance:

மன்றத்தின் சார்லி சப்ளினுக்கு எனது வாழ்த்துக்கள்!

:icon_wink1: ராஜா உங்கள் மீசை எப்படி இருக்கும் சாப்ளின் போலவே இருக்குமா?

ராஜா
08-04-2007, 04:59 PM
சுசி தன் மேலதிகாரியைக் காக்கா பிடிப்பதில் வல்லவர். ஒருநாள் மேலதிகாரி " எந்தக் காரியத்தையும் நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே செய்பவர்களை எனக்குப் பிடிக்கும் என்று சொன்னார். வழக்கம் போல சுசி முதல் ஆளா அந்தக் கொள்கையைக் கடை பிடிச்சார்.. இருந்தாலும் ஒரு வாரம் இடை நீக்கம் செய்யப் பட்டார்.

ஏன் தெரியுமா..?

ஆகஸ்ட் 14 ம் தேதியே தேசியக் கொடி ஏத்தி மிட்டாய் கொடுத்துட்டார்..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

சுசி யும் மாசி யும் பேசி கொண்டிருந்தார்கள்..

எனக்கு இந்த டீ.வி. , ரேடியோ ரெண்டையுமே பிடிக்காது மாசி..!

அப்படியா சுசி..? ஏன்..?

ரெண்டும் எப்போ பார்த்தாலும் அந்த தலைவர் செத்துப் போயிட்டார்.. இந்த நடிகர் செத்துப் போயிட்டார்ன்னு தான் சொல்லும்.. என்னிக்காவது ஒரு தலைவர் இன்னிக்கு பொறந்துருக்கார்ன்னு சொன்னது உண்டா..?

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

சுசி பள்ளி இறுதித் தேர்வு எழுதிட்டு வந்தார்.. அவர் அப்பா கேட்டார்..

எப்படிடா எழுதியிருக்கே..? இன்னிக்கு கணக்கூ எல்லாம் சுலபம் தானே..?

சுலபம் தான்.. ஆனா எனக்குப் பக்கத்துல மாசி உக்காந்துகிட்டு என்னைக் காப்பி அடிச்சாப்பல.. அதனால எல்லாக் கணக்கையும் தப்பு தப்பா போட்டு வச்சேன்.. மாசியும் அதைக் காப்பி அடிச்சு எழுதியிருக்காப்பல.. இந்த வருஷம் மாசி கோட்டு தான்..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

சுசி ஒரு ஓட்டலுக்கு சர்வர் வேலை கேட்டுப் போனார்...

ஏம்பா இதுக்கு முன் எங்கே வேலை பார்த்தே..? ஏதாவது சர்ட்டிபிகேட் வச்சிருக்கியா..?

சுசி சொன்னார்...

சர்டிபிகேட்டு ஒண்ணும் இல்லை அய்யா..! அங்க வேலை செஞ்சப்ப எடுத்த தட்டு, டம்ளர் எல்லாம் நிறைய இருக்கு.. "மரண விலாசில் திருடியது"ன்னு போட்டிருக்கும்.. எடுத்தாறேன்.. பாக்கறீங்களா..?

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

அன்புரசிகன்
08-04-2007, 05:45 PM
சுலபம் தான்.. ஆனா எனக்குப் பக்கத்துல மாசி உக்காந்துகிட்டு என்னைக் காப்பி அடிச்சாப்பல.. அதனால எல்லாக் கணக்கையும் தப்பு தப்பா போட்டு வச்சேன்.. மாசியும் அதைக் காப்பி அடிச்சு எழுதியிருக்காப்பல.. இந்த வருஷம் மாசி கோட்டு தான்..!

சுசி ஒரு மார்க்கமாகத்தான் இருக்காப்பல.:sport-smiley-018:

ராஜா
09-04-2007, 06:26 AM
அதானே..?

இளசு
09-04-2007, 06:30 AM
அன்பு ராஜா

சிரிப்பு வெயிலும் நீங்களே...
நெகிழ்ச்சி மழையும் நீங்களே...

இந்த வாரம் முழுதும்
மன்ற வானில்
உங்கள் ஆரவாரம்.. ஆதிக்கம்!
இது தொடர, நீடிக்க
இந்த சுவைஞனின் ஆசை!

ராஜா
09-04-2007, 06:34 AM
நல்லவர்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்..

நீங்கள் நல்லவர்.

ஓவியா
09-04-2007, 11:13 AM
நல்லவர்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்..

நீங்கள் நல்லவர்.

அண்ணா,
என்னத்தான் நீங்கள் இந்த தங்சியின் மேல் அளவில்லா பாசம் வைத்திருந்த்தாலும், இப்படியா உண்மையை போட்டு உடைப்பது!!!! :icon_08: :icon_08:

ஹி ஹி ஹி.

raj6272
09-04-2007, 11:57 AM
அண்ணா உங்க ரவுசு தாங்க முடியலண்ணா, இந்த வாத்தியாருங்க ஜோக் ஒண்ணு போட்ருக்கீங்களே, அதுக்கு ஈடு இணையே கிடையாது. எங்கிருந்துண்ணா கலெக்ட் பண்றீங்க, இல்லே உங்க சொந்த கற்பனையா? சொந்த கற்பனையா இருந்தால், உங்களுக்கு இந்த தம்பியோட ஸ்பெஷல் கும்பிடுண்ணா!

varsha
09-04-2007, 01:39 PM
அருமையான பதிப்பு நிதானமாக படிக்கிறேன் நண்றி சுட்டி காட்டிய இளசு சார் அவர்களுக்கும் இத்திரியின் ராஜா சார் அவர்களுக்கும்

ராஜா
09-04-2007, 01:56 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
09-04-2007, 05:31 PM
சின்னாவின் அழகான ஆசிரியை வகுப்பு மாணவர்களுக்கு மிகக் கஷ்டமான
கணக்கைக் கொடுத்து ," நாளை இந்தக் கணக்கை போட்டுக் கொண்டு வருபவர்களுக்கு
நான் ஒரு முத்தம் பரிசாகத் தருவேன்..!" என்றாள்.

மறுநாள் வகுப்புக்கு வந்து பார்த்த அவள் மயங்கி விழுந்து
விட்டாள்.. காரணம்...

எல்லா மாணவர்களின் தந்தையரும் நல்லா ஷேவிங் பண்ணிகிட்டு
வந்து காத்திருந்ததுதான்..!
_________________

சின்னாவின் பள்ளியில் மருத்துவ முகாம்.. காது, மூக்கு நிபுணர்கள் வந்திருந்தனர்.
யாருக்காவது காது, மூக்கால பிரச்சினை இருக்கான்னு கேட்க
சின்னா கைதூக்கினான்..

அருகில் அவனை அழைத்து என்னப்பா பிரச்சினை என்று விபரம்
கேட்க, சின்னா சொன்னான்

பனியன் போடும் போது காது, மூக்குல மாட்டிக்குது டாக்டர்..!
_________________

காலையில் இருந்து சின்னாவைக் காணோம் எனத் தேடினாள்
அம்மாக்காரி. சின்னா மதியம் வந்தான்..

எங்கேடா போனே..?

தபால் காரன் விளையாட்டு விளையாடினேன் அம்மா.. நம் தெரு
முழுதும் எல்லா வீட்டுக்கும் நிஜத் தபாலே கொடுத்து விட்டு வந்தேன்..

அவ்வளவு கடுதாசி எங்கேருந்துடா கெடைச்சது..?

நீ அப்பாக்கு தெரியாம பீரோவில ஒளிச்சு வச்சிருந்தியே ஒரு
கட்டு.. அதான்..!
_________________

சின்னாவின் வகுப்பு ஆசிரியர் உள்ளே நுழைந்ததுமே கரும்பலகையில் வரையப்
பட்டிருந்த தன் படத்தை பார்த்து வெகுண்டார்.. சின்னாவை அழைத்துக் கேட்டார்..

இந்த அசிங்கத்தை செய்தது யார் என்று தெரிந்து கொள்ளலாமா..?

சின்னா முனகினான்..

பெத்தவங்கதான்.. வேற யாரு..?
_________________

சின்னாவோட அம்மா கேணியில் இருந்து சமையலுக்கு தண்ணி கொண்டு வரச்
சொன்னாங்க.. போன சின்னா உடனே அலறிகிட்டு ஓடி வந்தான்..
அம்மா கேட்டாங்க..

என்னாச்சுப்பா..?

கேணிக்குள்ள முதலை இருக்கும்மா..!

அது ரொம்ப நாளா இருக்கு.. ஒண்ணும் பண்ணாது.. நீ அதைப்
பார்த்து பயந்த மாதிரி அதுவும் உன்னைப் பார்த்து பயந்திருக்கும்..

அதுவும் என்னைப் போல பயந்திருக்குமா..? அப்போ அந்தத்
தண்ணியில நாம சமையல் செய்ய வேணாம்மா..!
_________________

varsha
09-04-2007, 05:45 PM
ராஜா சார்.. நீங்க ரொம்ப நல்லா ஜோக் எழுதுவறீங்கன நினைக்கிறேன்

ரொம்ப நல்லா இருக்குது இன்னும் முழுசும் படிக்கவில்லை

மிகவும் நல்ல படைப்புக்கு நன்றி

அன்புரசிகன்
09-04-2007, 05:48 PM
இந்த அசிங்கத்தை செய்தது யார் என்று தெரிந்து கொள்ளலாமா..?

சின்னா முனகினான்..

பெத்தவங்கதான்.. வேற யாரு..?
_________________
அதுவும் என்னைப் போல பயந்திருக்குமா..? அப்போ அந்தத்
தண்ணியில நாம சமையல் செய்ய வேணாம்மா..!

சூப்பர். மாப்ளே... நீங்க ஒரு all in all.:icon_08:

ஓவியா
09-04-2007, 07:04 PM
அதுவும் என்னைப் போல பயந்திருக்குமா..? அப்போ அந்தத்
தண்ணியில நாம சமையல் செய்ய வேணாம்மா..!

ஹி ஹி ஹி ஹி

:angel-smiley-010: :angel-smiley-010: :angel-smiley-010:
அண்ணாவின் சின்ன வயசு எண்ண் பறவை பறக்கின்றது...

இளசு
09-04-2007, 07:11 PM
சின்னா என்னா வாலுப்பயலா இருக்கான்!

ராஜா அவர்களின் சின்ன(னா) குறும்புகள் ஜோர்!

குறிப்பாய் 'பயந்து - போனது...'

ராஜா
10-04-2007, 04:05 AM
பயந்து "போனது" ?

சூப்பர்.. இளசு அவர்களே..! ஒரு சொல்லுக்குள் பல பொருள்களைப் பொதிந்து வைக்கும் சூத்திரம் அறிந்தவர் நீங்கள்..!

ராஜா
10-04-2007, 04:07 AM
அதுவும் என்னைப் போல பயந்திருக்குமா..? அப்போ அந்தத்
தண்ணியில நாம சமையல் செய்ய வேணாம்மா..!

ஹி ஹி ஹி ஹி

:angel-smiley-010: :angel-smiley-010: :angel-smiley-010:
அண்ணாவின் சின்ன வயசு எண்ண் பறவை பறக்கின்றது...

கண்டுக்கினேன் தங்காச்சி.. அப்பால பேஜார் பண்ணிராதே ஹக்காங்..!

ராஜா
10-04-2007, 04:18 AM
சூப்பர். மாப்ளே... நீங்க ஒரு all in all.:icon_08:

நன்றி மாமனாரே..!

நீங்க ஒரு all in all[ நல்ல வேளை அதுக்கு மேல சொல்லியிருந்தா பாதி பொய்யா இருந்திருக்கும்..!

இளசு
10-04-2007, 06:17 AM
அண்ணியிடம் கேட்டுப்பாருங்கள்

முழு வாக்கியமும் முற்றிலும் உண்மை எனச் சத்தியம் பண்ணுவார்கள்..

நான் அண்ணியின் கட்சி!