PDA

View Full Version : பூமிதினம்..rambal
27-04-2003, 05:32 PM
நெருப்பு...

கண்ணி வெடி
விதைக்கப் பட்ட
சாலைகள்..
கையில் ஏகே47
தூக்கிய சிறார்கள்..
இது ஒரு தேசம்..

கஞ்சா உற்பத்தி
தேசியத்தொழில்..
ஹெராயின்
குடிசைத்தொழில்..
பதின்மூன்றில் கர்ப்பம்..
இது ஒரு தேசம்...

பெண்கள் கொத்தடிமைகள்..
குழந்தை பெற்றுப் போடும்
ஜந்துக்கள்..
பண்டமாற்றுப் பொருட்கள்..
இது ஒரு தேசம்..

சுயதேசம் விட்டுப் பிரிந்த
அகதிகள் மட்டும்
சுமார் 50 கோடி..
அதிக அகதிகள் கொண்டதாய்..
இது ஒரு தேசம்..

ஒரு ரொட்டிக்கு
ஒரு கூடை நிறைய
பணக்கட்டு..
சதை வியாபாரம்..
இது ஒரு தேசம்...

ஒரே ஒரு ஆர்.டி.எக்ஸ்
தொழிற்சாலை...
உலகம் முழுமைக்கும்
அழிவு இங்கிருந்து..
இது ஒரு தேசம்...

வருடத்திற்கு
குறைந்தபட்சம் 8000 கொலைகள்..
ஒரு நகரில்..
இரண்டு மாநிலங்களை
சட்டப்புறம்பான செயல்களுக்காகவே..
இது ஒரு தேசம்...

பார்லிமெண்ட் உள்ளேயும்
சட்டசபை அருகிலும்
குண்டே விழுந்தாலும்
கவலையேபடாமல்..
மதக்கலவரங்கள் சாதாரணமாய்..
இது ஒரு தேசம்..

மனித வெடிகுண்டுகளை
உற்பத்தி பண்ணி
ஆயுத பேரங்கள் நடத்துவதை
சட்டமாக்கியுள்ளது..
இது ஒரு தேசம்...

கட்டவிழ்த்து விடப்பட்ட
நிறவெறி..
காமவெறி..
சிறுபான்மை அடக்குமுறை...
இது ஒரு தேசம்..

விபச்சாரத்தையும்
போதை வஸ்துக்களையும்
அடிநாதப் பொருளாதாரமாகக்
கொண்டு அனைத்தும் செய்யும்..
இது ஒரு தேசம்...

இருந்தாலும் என்ன?
இருக்கிறது
ஒரே ஒரு நாள்
பூமிதினம்..
கொண்டாடிவிட்டு
வெடித்து விட்டால் போச்சு..

madhuraikumaran
27-04-2003, 09:54 PM
இது.. இது... இதத்தான கேட்கிறோம்... இந்தச் சாட்டையடிகள் விட்டு விட்டு கதை மட்டும் போதும் என்கிறீரே நியாயமா?...

lavanya
27-04-2003, 11:25 PM
உணர்ச்சிக் குவியலாய் வெளிப்பட்டிருக்கிறது உங்கள் கவிதை... மனம் புழுங்கி
கோப பிரவாகமாய் வந்து விழுந்திருக்கின்றன வார்த்தைகள்..... கவிதையின்
ஒவ்வொரு வரியும் சுடுகிறது

poo
28-04-2003, 03:04 PM
நல்லவை கண்ணில்படுவது அரிதாகத்தான் இருக்கிறது... பாஸிட்டிவான கவிதை காண இந்த பூமிதினம் கொடுத்துவைக்கவில்லையா?!!!

Mano.G.
29-04-2003, 12:31 AM
அன்னை பூமிக்கு வணக்கம்
நடக்கும் வன்முறைகளுக்கும்
உயிர்பலிக்கும் நீயா பொறுப்பு,

உன்னைக் கொண்டு உயிர்வாழ முடியாத
மனிதர்களை என்ன செய்வது,

அவர்களை உயிர்வாழவைத்து கொண்டிருக்கும்
உனக்கும் நன்றி செலுத்த தெரியாதவர்கள்

வழியைதான் காண்பிக்கலாம்
கூட்டிச்சென்றா விடமுடியும்

படித்துவிட்டால் அறிவாளி என்ற நினைப்பா
அடுத்தவர்களின் துன்பம் உனக்கு இன்பமா

பூமி தாயே நீ தான் இதற்கு வழி சொல்ல வேண்டும்.

மனோ.ஜி

gankrish
29-04-2003, 07:17 AM
ராம் நீர் எந்த தேசத்தை கூறுகிறீர்கள்.

rambal
29-04-2003, 01:21 PM
நான் குறிப்பிட்டது எல்லா நாடுகளையும்தான்..
இப்படி பூமியில் இருக்கும் எல்லா நாடுகளும் தறிகெட்டுப்போய் இருக்க அதில் பெருங்கூத்தாய் பூமிதினம் வேறு கொண்டாடுகிறார்கள்..
அந்த வேதனையின் வெளிப்பாடுதான் இந்தக்கவிதை..
மனோ அண்ணன் தவறாகபுரிந்து கொண்டு விட்டார்.
இருந்தாலும் என்ன..
ஒரு அருமையான எசப்பாட்டு..
பாராட்டுக்கள் அண்ணனுக்கு..

Hayath
29-04-2003, 01:37 PM
பார்லிமெண்ட் உள்ளேயும்
சட்டசபை அருகிலும்
குண்டே விழுந்தாலும்
கவலையேபடாமல்..
மதக்கலவரங்கள் சாதாரணமாய்..
இது ஒரு தேசம்..

பூமிக் கிரகத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் உங்கள் கவிதை அருமையாக பொருந்துகிறது.பாராட்டுகள்.திறமையுள்ளவர்கள் எது எது எந்த நாட்டிற்கு பொருந்தும் என்று கூறுங்களேன் ?

Mano.G.
29-04-2003, 11:50 PM
ஐயா,
ராம்பால்ஜி, நான் யாரையும் சாடவில்லை
அமெரிக்கனின் அராஜகத்தின் எதிரொலியே
இப்படி வெளிவந்திருக்கிறது.

எங்கள் நாட்டு பிரதமரை அண்மையில்
தரக்குறைவாக வெளிட்ட ஒரு கட்டுரையின் தாக்கமே.

அதோடு எங்கள் நாட்டின் பிரதமர் இந்திய வம்சாளியில் பிறந்தவரே..

மனோ.ஜி.

குறிப்பு: அப்படி யாரையும் பாதித்து இருந்தால் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிரேன்.

அமரன்
02-10-2007, 02:32 PM
பரந்திருக்கும் பூமியில்
பரவலாக அவலங்கள்.
என்று போய்ச்சேருமோ
பரலோகம்.

வரிகளில் தெரிவது
ராம் அண்ணாவின் மனதில்
சாட்டை பட்டவரிகள்...

இளசு
04-10-2007, 10:35 PM
ராமின் அக்கினி வரிகளும்
மதுரைக்குமரன், லாவண்யா, மனோஜி, கான்கிரீஷ், தம்பி பூ - இவர்களின்
கந்தக பின்னூட்டங்களும்..

பழைய நினைவுகளில் என்னை மூழ்கடித்துவிட்டன...

வருவார்களா வாராதவர்கள்?

ஷீ-நிசி
06-10-2007, 01:30 AM
மிக சிறப்பான கவிதை....

நாசங்கள் ஏற்படுத்த மட்டுமே சில தேசங்கள்!

மிக தெளிவான தொகுப்பு.... மிக அருமை!