PDA

View Full Version : தேடிக்கொண்டிருக்காதே!

meera
29-11-2006, 03:45 PM
தேய்ந்து கொண்டிருக்கும் நிலவில்
தேடிக்கொண்டிருக்காதே
வாழ்வை..
வளர்ந்து வரும்
வளர்பிரையை விட்டுவிட்டு!

திரும்பிக்கொண்டிருக்கும் அலையில்
தேடிக்கொண்டிருக்காதே
வாழ்வை..
மீண்டு வரும்
அலைகளை விட்டுவிட்டு!

கரைந்து கொண்டிருக்கும் இரவில்
தேடிக்கொண்டிருக்காதே
வாழ்வை..
விடிந்து கொண்டிருக்கும்
விடியலை விட்டுவிட்டு!

கடந்துவிட்ட காலங்களில்
தேடிக்கொன்டிருக்காதே
வாழ்வை..
உன்னை எதிர்நோக்கும்
இனிய காலங்களை விட்டுவிட்டு!

தாமரை
29-11-2006, 03:48 PM
தேய்ந்து கொண்டிருக்கும் நிலவில்
தேடிக்கொண்டிருக்காதே
வாழ்வை..
வளர்ந்து வரும்
வளர்பிரையை விட்டுவிட்டு!

திரும்பிக்கொண்டிருக்கும் அலையில்
தேடிக்கொண்டிருக்காதே
வாழ்வை..
மீண்டு வரும்
அலைகளை விட்டுவிட்டு!

கரைந்து கொண்டிருக்கும் இரவில்
தேடிக்கொண்டிருக்காதே
வாழ்வை..
விடிந்து கொண்டிருக்கும்
விடியலை விட்டுவிட்டு!

கடந்துவிட்ட காலங்களில்
தேடிக்கொன்டிருக்காதே
வாழ்வை..
உன்னை எதிர்நோக்கும்
இனிய காலங்களை விட்டுவிட்டு!

தேயும் நிலவே வளர்கிறது,
சென்ற அலையே திரும்புகிறது
இரவிருந்தால் தானே விடியல்..
வரலாற்றை படிக்காதவன்
மீண்டும் மீண்டும்
பழைய தவறையே செய்கிறான்..
படித்தவன்
புதிது புதிதாக
தவறு செய்கிறான்
எது மேல்
எதனால்

meera
29-11-2006, 03:54 PM
செல்வா அண்ணா

உங்கள் தங்கை உங்க அளவுக்கு புத்திசாலி இல்ல அதனால கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

leomohan
29-11-2006, 03:57 PM
அருமை மீரா, very good come back.

தாமரை
29-11-2006, 03:57 PM
செல்வா அண்ணா

உங்கள் தங்கை உங்க அளவுக்கு புத்திசாலி இல்ல அதனால கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
கடந்ததை மறந்தால்
கடப்பது எப்படி
வாழ்க்கை நதியை!

meera
29-11-2006, 04:04 PM
கடந்ததை மறந்துவிட சொல்லவில்லை அண்ணா.
கடந்ததை நினைத்து வருவதை விட்டுவிடாதே என்று சொன்னேன்

அண்ணா சரிதானே நான் சொன்னது

meera
29-11-2006, 04:05 PM
அருமை மீரா, very good come back.

நன்றி மோகன்

ஓவியா
29-11-2006, 06:31 PM
மீரா,
கவிதை சிறப்பாக இருக்கு

உங்கள் கவிதை என்னை எங்கோ கொண்டு சென்றுவிட்டது...

வாழ்த்துக்கள் தோழி

இளசு
29-11-2006, 07:26 PM
கண்கள் முன்னால் இருப்பதே இதற்காகத்தான்!

கடந்த காலம் கற்றுக்கொடுத்ததையும் உள்வாங்கி
மேலும் ஓடுபவரே நதி..

தேங்கியவர் பெயர் - குளம்!

வாழ்வியல் பாடம் இக்கவிதை!

வாழ்த்துகள் மீரா!

தாமரை
30-11-2006, 12:25 AM
கடந்ததை மறந்துவிட சொல்லவில்லை அண்ணா.
கடந்ததை நினைத்து வருவதை விட்டுவிடாதே என்று சொன்னேன்

அண்ணா சரிதானே நான் சொன்னது

கடந்ததை நினைத்துவருவதை விட்டுவிடாதே ...

கடந்ததை நினைத்து, வருவதை விட்டுவிடாதே

வித்தியாசம் புரியுதா மீரா???

தாமரை
30-11-2006, 12:31 AM
கண்கள் முன்னால் இருப்பதே இதற்காகத்தான்!

கடந்த காலம் கற்றுக்கொடுத்ததையும் உள்வாங்கி
மேலும் ஓடுபவரே நதி..

தேங்கியவர் பெயர் - குளம்!

வாழ்வியல் பாடம் இக்கவிதை!

வாழ்த்துகள் மீரா!

இளசு,

மாறாதது மாற்றம் மட்டுமே..

தேங்கிய குளமும் பாசனத்திற்கு பயன்படும்...
ஓடும் நதியும் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஊரையே அழிக்கலாம்...

தேங்குவது குட்டையாகத்தானா இருக்க வேண்டும்?
ஏன் கடலாக இருக்கக் கூடாதா?
நதி கடலில் கலக்கிறது
வாழ்க்கை கடவுளில் கலக்கிறது

உலகில் மழை பெய்ய
காரணம் நதியல்ல
கடல்...

நதி நீர் நல்ல நீர்
கடல் நீர் உப்பு நீர்
கடல் என்ன உப்பு தொழிற்சாலையா வைத்திருக்கிறது?
குளத்தளவு நீர் ஓடினால் அது
ஒரு கிலோ மீட்டர் கூட தாங்காது

வாழ்க்கை நதியாக ஓடி
அனுபவம் என்னும் கடலாகிறது..
உப்புகள் என்னும் கெட்டவை கடலோடு நின்றுவிட
நன்னெறி என்னும் நல்லனுபவம்
ஆவியாகி
மழையாய் பெய்து
அடுத்த வாழ்க்கையாய்...

கடலின்றி
நதியில்லை
நாதியில்லை

கடலுக்குள் ஓடும் நீரோட்டம்
உலகின்
தட்ப வெப்ப நிலையையே
கட்டுப்படுத்துகிறதாம்

அனுபவத்தை தேக்கி
எண்ணங்களை அதனுள் ஓட விடுங்கள்
நீங்களே
அனுபவமாகிவிடாதீர்கள்...

meera
30-11-2006, 03:37 AM
கடந்ததை நினைத்துவருவதை விட்டுவிடாதே ...

கடந்ததை நினைத்து, வருவதை விட்டுவிடாதே

வித்தியாசம் புரியுதா மீரா???

அண்ணா மன்னிக்கவும்

இன்னும் தங்கைக்கு பயிற்சி போதவில்லை.

meera
30-11-2006, 03:38 AM
மீரா,
கவிதை சிறப்பாக இருக்கு

உங்கள் கவிதை என்னை எங்கோ கொண்டு சென்றுவிட்டது...

வாழ்த்துக்கள் தோழி

வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி தோழி.

மதி
30-11-2006, 04:30 AM
அண்ணா மன்னிக்கவும்

இன்னும் தங்கைக்கு பயிற்சி போதவில்லை.

ஆகா...எனக்கு புரிஞ்சுடுச்சே...
செல்வரே...உங்ககிட்ட பாடம் படிச்சுட்டோமில்ல..:) :)

தாமரை
30-11-2006, 11:34 AM
அண்ணா மன்னிக்கவும்

இன்னும் தங்கைக்கு பயிற்சி போதவில்லை.

கடந்ததை நினைத்துவருவதை மறந்து விடாதே
- கடந்ததை இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறாயே அதை மறந்து விடாதே
கடந்ததை நினைத்து, வருவதை மறந்து விடாதே
- போய் விட்டதை எண்ணி வர இருக்கின்றதை மறக்காதே..
ஆனால் மீரா.. நேற்று செத்து இன்று பிறந்து நாளை பறக்கும் உயிர்
எவ்வளவுதான் சிந்திக்கறது சொல்லுங்களேன்

meera
30-11-2006, 02:19 PM
கண்கள் முன்னால் இருப்பதே இதற்காகத்தான்!

கடந்த காலம் கற்றுக்கொடுத்ததையும் உள்வாங்கி
மேலும் ஓடுபவரே நதி..

தேங்கியவர் பெயர் - குளம்!

வாழ்வியல் பாடம் இக்கவிதை!

வாழ்த்துகள் மீரா!

நன்றி இளசு அண்ணா

உங்கள் பாராட்டு எனக்கு உற்சாக டானிக்.

meera
30-11-2006, 02:23 PM
கடந்ததை நினைத்துவருவதை மறந்து விடாதே
- கடந்ததை இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறாயே அதை மறந்து விடாதே
கடந்ததை நினைத்து, வருவதை மறந்து விடாதே
- போய் விட்டதை எண்ணி வர இருக்கின்றதை மறக்காதே..
ஆனால் மீரா.. நேற்று செத்து இன்று பிறந்து நாளை பறக்கும் உயிர்
எவ்வளவுதான் சிந்திக்கறது சொல்லுங்களேன்

அண்ணா உங்க விளக்கம் புரியுது

ஆனா அது என்ன நேற்று செத்து இன்று பிறந்து நாளை பறக்கும் உயிர் இது தான் புரியலை:eek: :eek: :eek:

franklinraja
30-11-2006, 02:32 PM
கடந்துவிட்ட காலங்களில்
தேடிக்கொன்டிருக்காதே
வாழ்வை..
உன்னை எதிர்நோக்கும்
இனிய காலங்களை விட்டுவிட்டு!

மீரா..

சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான கருத்துக்களை
அருமையான கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள்..

இது போன்றக் கவிதையை வெகு நாட்க்களாக எதிர்பார்த்தேன்..

மீண்டும் உங்கள் கவிதை மழையை ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி..

ஆனால், நான்தான் கொஞ்சம் தாமதமாக வந்து படித்துவிட்டேன்... :D

யானைக்கும் அடி சறுக்கும், சோர்ந்துவிடாதே நண்பா - என்கிறது உங்கள் கவிதை !

"விழுவது வீழ்ச்சியல்ல - விழுந்தேகிடப்பதுதான் வீழ்ச்சி.." - சரிதானே..? :)

ஓவியா
30-11-2006, 02:37 PM
வாழ்க்கை நதியாக ஓடி
அனுபவம் என்னும் கடலாகிறது..
உப்புகள் என்னும் கெட்டவை கடலோடு நின்றுவிட
நன்னெறி என்னும் நல்லனுபவம்
ஆவியாகி
மழையாய் பெய்து
அடுத்த வாழ்க்கையாய்...
...

தாமரையண்ணா
மீண்டும் ஒருமுறை என்னை கவர்ந்தீர்...

அருமையான விளக்கம்
நன்றி

தாமரை
30-11-2006, 02:40 PM
அண்ணா உங்க விளக்கம் புரியுது

ஆனா அது என்ன நேற்று செத்து இன்று பிறந்து நாளை பறக்கும் உயிர் இது தான் புரியலை:eek: :eek: :eek:

நேற்றிருந்த நான் செத்து விட்டேன்
இன்று புதிதாய் பிறந்தேன்
ந்ளை என்பது உறுதியில்லை
அதுதானம்மா உங்க கையொப்பத்தில் உள்ளதே

meera
30-11-2006, 02:45 PM
நேற்றிருந்த நான் செத்து விட்டேன்
இன்று புதிதாய் பிறந்தேன்
ந்ளை என்பது உறுதியில்லை
அதுதானம்மா உங்க கையொப்பத்தில் உள்ளதே

மன்றத்துல எல்லாரும் ஓடிவாங்க செல்வா அண்ணா பதிவில் நான் குறை கண்டுவிட்ட்டேன்

meera
30-11-2006, 02:47 PM
மீரா..

சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான கருத்துக்களை
அருமையான கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள்..

இது போன்றக் கவிதையை வெகு நாட்க்களாக எதிர்பார்த்தேன்..

மீண்டும் உங்கள் கவிதை மழையை ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி..

ஆனால், நான்தான் கொஞ்சம் தாமதமாக வந்து படித்துவிட்டேன்... :D

யானைக்கும் அடி சறுக்கும், சோர்ந்துவிடாதே நண்பா - என்கிறது உங்கள் கவிதை !

"விழுவது வீழ்ச்சியல்ல - விழுந்தேகிடப்பதுதான் வீழ்ச்சி.." - சரிதானே..? :)

நன்றி ராஜா,

உங்க விமர்சனம் எனக்கு உற்சாகம் தருகிறது.

தாமரை
30-11-2006, 02:49 PM
மன்றத்துல எல்லாரும் ஓடிவாங்க செல்வா அண்ணா பதிவில் நான் குறை கண்டுவிட்ட்டேன்
ந்ளை என்பது உறுதியில்லை

அதைத்தானே சொன்னேன். நாளை என்பது உறுதியாய் இருந்தால் ஒரு A காணாமல் போயிருக்குமா? :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

meera
30-11-2006, 03:10 PM
மீரா, உனக்கு இதெல்லாம் தேவையா????????????:confused: :confused:

சமாளிப்பு திலகத்திடம் போட்டிபோடலாமா????????????:confused: :confused:

அண்ணா மன்னிக்க.
அறியா சிறுமி தெரியாமல் தவறு செய்துவிட்டாள் அருள்கூர்ந்து மன்னிக்கவும்.:eek: :eek:

ஓவியா
30-11-2006, 03:15 PM
:D :D :D :D

சமாளிப்பு திலகத்திடம்
சமாலிப்பு திலகத்திடம்

எது சரியான வார்த்தை நண்பர்களே?

meera
30-11-2006, 03:18 PM
:D :D :D :D

சமாளிப்பு திலகத்திடம்
சமாலிப்பு திலகத்திடம்

எது சரியான வார்த்தை நண்பர்களே?

அடடா, ஆரம்பிச்சுடாங்கைய்யா ஆரம்பிச்சுட்டாங்க....:cool: :cool: :angry:

இளசு
30-11-2006, 07:13 PM
அன்பு செல்வன்,

குளம் எனச் சிறிதாய் என் மனம் எண்ண
கடல் என பெரிதாக்கி - கருத்தைச் சொல்லி
கவர்ந்த விதம் அருமை!

----

மீரா சொல்ல வந்தது -
அனுபவ உரமேற்றி உறுதி வளர்ப்பவர்களுக்கல்ல...
அனுபவக் குப்பை சுமந்து குலைந்து நிற்பவர்களுக்காக....

என எண்ணுகிறேன்...

உங்கள் மன அமைவு இருந்தால்-

கடல் தான்! அலைதான்! காற்றுதான்! மேகந்தான்!

ஆனால் என்னைப்போல் பலருக்கும்
அந்த வரம் வாய்த்துவிடவில்லை..

அவர்கள் மன வளம் வளர்க்க
இவ்வகைக் கவிதை தேவை..

தாமரை
01-12-2006, 12:53 AM

அனுபவம் என்பது
தனி மனித சொத்தல்ல..
அது பொதுச் சொத்து
உங்கள் அனுபவம்
இங்கே
பதிக்கப் பெற்றதால்
என் அனுபவமாயிற்று..
கங்கையில் இருந்து வந்து
வங்கக் கடலில் கலந்த நீர்
பெரியாறாய்
ஓடுவதைப் போல...
ஒருவன்
தன்னை மட்டுமே பார்க்கிறான் என்றால்
அவன்
தனிமைச் சிறையில் இருக்கிறான்
என்றுதானே அர்த்தம்

சிலர் கடலில் முத்தெடுக்கிறார்கள்
சிலர் மீன் பிடிக்கின்றனர்
சிலருக்கு உப்பு
சிலரோ கடலைத் தாண்டி
நெடுந்தூரப் பயணம்
சிலருக்கோ
குடிப்பதற்கே
கடல் நீரை குடி நீராக்கி..
ஆனால் இன்னும் அந்தக் கடலுக்குள்
எத்தனையோ அதிசயங்கள்
அனைவரின் தேவையையும் கடந்து
அறிவதற்கு ஒருவன் முயன்றால்
அதிலுண்டோ தவறு...
அவனது வாழ்க்கை உமக்கு
தவறாய் தோணலாம்
ஆனால்
பதில் சொல்ல வேண்டியது
காலம் அல்லவா
தேவாரம் படித்த நீரா
நாவார இதை
மறுதலிப்பது

தாமரை
01-12-2006, 12:54 AM
:D :D
:D :D :D :D

சமாளிப்பு திலகத்திடம்
சமாலிப்பு திலகத்திடம்

எது சரியான வார்த்தை நண்பர்களே?
சமாளிப்புத் திலகத்திடம் :eek: :eek: :eek: :eek:

sriram
01-12-2006, 05:42 AM
மீரா சொல்லிய கவிதையில் எதுவும் தவறல்ல.

அனுபவம் ஆகி விடுவதுதான் பேருண்மை.
மீரா நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். குதர்க்கமான விமர்சனங்கள் செய்பவர் செய்து கொண்டுதான் இருப்பார்கள். பொருட்படுத்தாடீர்கள். சிலர் குறை சொல்வதே வாடிக்கையாக கொண்டு இருப்பார்கல்.

"நிகழ்கால உணர்தலே முக்கியமானது. இளசு அண்ணா சரியாக விமர்சனம் செய்துள்ளார்.

meera
01-12-2006, 06:02 AM

ராம்,

தங்களின் பாராட்டுக்கு நன்றி.

ஆனால் ஒன்று மன்னிக்க வேண்டும் ராம், இங்கு யாரும் குதர்க்கமாய் விமர்சிப்பது இல்லை.ஒவ்வொருவர் அனுபவமும் இங்கே பதிவாகிறது அவ்வளவே.யாரையும் கஷ்ட படுத்தும் நோக்கம் அல்ல.ஆகவே கவலை வேண்டாம்.

ராம் நான் ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

sriram
01-12-2006, 08:59 AM
நான் தான் கொஞ்சம் கோபப்பட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

இளசு
01-12-2006, 07:23 PM
அனுபவம் என்பது
தனி மனித சொத்தல்ல..
அது பொதுச் சொத்து
உங்கள் அனுபவம்
இங்கே
பதிக்கப் பெற்றதால்
என் அனுபவமாயிற்று..
கங்கையில் இருந்து வந்து
வங்கக் கடலில் கலந்த நீர்
பெரியாறாய்
ஓடுவதைப் போல...
ஒருவன்
தன்னை மட்டுமே பார்க்கிறான் என்றால்
அவன்
தனிமைச் சிறையில் இருக்கிறான்
என்றுதானே அர்த்தம்

சிலர் கடலில் முத்தெடுக்கிறார்கள்
சிலர் மீன் பிடிக்கின்றனர்
சிலருக்கு உப்பு
சிலரோ கடலைத் தாண்டி
நெடுந்தூரப் பயணம்
சிலருக்கோ
குடிப்பதற்கே
கடல் நீரை குடி நீராக்கி..
ஆனால் இன்னும் அந்தக் கடலுக்குள்
எத்தனையோ அதிசயங்கள்
அனைவரின் தேவையையும் கடந்து
அறிவதற்கு ஒருவன் முயன்றால்
அதிலுண்டோ தவறு...
அவனது வாழ்க்கை உமக்கு
தவறாய் தோணலாம்
ஆனால்
பதில் சொல்ல வேண்டியது
காலம் அல்லவா
தேவாரம் படித்த நீரா
நாவார இதை
மறுதலிப்பது

மிக அழகான வாதம்..செல்வன்!

இதுபோன்ற மனமார்ந்த கருத்துப்பரிமாற்றங்கள்தான்
மன்றத்தின் பலம்!

நீங்கள், ராகவன், பென்ஸ், பிரதீப் போன்றவர்களின்
உயிர்ப்பான, ஈடுபாடுள்ள பின்னூட்டங்களால்தான்
மன்றப் பதிவுகள் இன்னும் மிளிர்கின்றன...

நான் ஒரு குறுகிய எல்லைக்குள் நின்று கவிதையை அர்த்தம் செய்தது
இப்போது உங்கள் விரிவான பார்வை மூலம் விளங்குகிறது..

விசாலமாகுகிறேன்.. நன்றி செல்வன்!

--------------------------------------------------------------

அன்பு ஸ்ரீராம்,

உங்கள் புரிதலுக்கு நன்றி...

இன்னும் கொஞ்சம் உலவினால் இங்குள்ள அன்புப்பின்னலில்
எல்லாம் விளங்கும்...

தாமரை
02-12-2006, 04:33 AM

சொல்லப்போனால் எதுவுமே முழுதாக சரியுமில்லை
எதுவுமே முழுதாக தவறுமில்லை..

வரலாற்று ஆராய்ச்சியிலே சிலர் வாழ்க்கையைச் செலவழிக்கின்றனர்..
அறிவியல் ஆய்விலே சிலர் வாழ்க்கையை செல்வழிக்கின்றனர்
சிலர் வரலாற்றை அறிந்து அறிவியலை உபயோகப்படுத்தி வாழ்கின்றனர்.. இவர்கள் வரலாற்று ஆய்வாளனையும், அறிவியல் ஆய்வாளனையும் வாழ வைக்கின்றனர்.. ஏனென்றால் மனித குலத்துக்கு இரண்டும் முக்கியம்..

பழையதை தேடுபவனும் வேண்டும்..
புதியதை தேடுபவனும் வேண்டும்..
இல்லாவிட்டால் வீண்..

நாளையை தேடுபவன் நேற்றை அறியவேண்டும்..
நேற்றைத் தோண்டுபவன் நாளைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்...

நேற்றையது தேவையில்லையெனில் இங்கே எழுதுவது வீண்... ஏனென்றால் போன வினாடியே கருத்து மரித்து விட்டது..

நாளை தேவையில்லை என்றால் சிந்திப்பதே வீண்..

குட்டை கூட நிலத்தடி நீராய் உதவும்.. அதை உதாசீனம் செய்யத் தேவையில்லை..

சிந்திக்க சிந்திக்க தேவையில்லை என்று எதுவுமே இல்லை.. இது மட்டும் போதும் என்றும் எதுவும் இல்லை..

ம்ம்... தலை சுத்துது கொஞ்சம் பொறுத்து எழுதறேன்

பென்ஸ்
02-12-2006, 06:31 PM
மீரா....
பணி பளு அதிகமாக இருக்கும் காலங்களில் மன்றம் வந்தாலும் கவிதைகளை வாசித்தாலும் அதை ரசிக்கும் அளவுக்கு மனம் இடம் கொடுப்பதில்லை. அதனால் கவிதைகளுக்கு விமர்சனமும் கொடுக்க முடிவதில்லை. கடந்த சில வாரங்கள் இவ்வாறக.....

நேற்று விமர்சணம் எழுதாமையால் இன்று எழுதகூடாது இல்லையே....
நாளையை பற்றி நாளை பார்த்துகொள்ளலாம் இன்று எழுத வேண்டிய விமர்சணத்தை எழுதலாம் என்று நினைத்தேன். எழுதுகிறென்.

சொல்லுவதை இன்னும் "சுருக்"கமாக சொல்லலாம் என்பது என் கருத்து...
வரிகளை "குறை"த்து கொள்...
கவிதை நல்லா இருக்கு, இன்னும் தெளிவாகனும்....

பென்ஸ்
02-12-2006, 06:49 PM
மன்றத்தில் கவிதா, நீங்கள், பாரதி, நண்பன் போன்றவர்கள் கொடுக்கும் பின்னுட்டங்களை கண்டு அட கவிதைகள் இவ்வளவு ஆரோக்கியமாக அலச படுகிறதே என்று பெருமை படுவேன்... இப்போ அது கொஞ்சம் குறைவோ என்று தோன்ரும், அந்த சமயங்களில் இதை போல் சில பதிவுகள் கண்முன்னால் வந்து அட இல்லப்பா, இன்னும் அது மன்றத்தில் தொடருதுன்னு சொல்லும்....

வாழ்க்கை ஓட்டத்தில் தேங்கியவர் குளம்..
ஆமா இளசு ...

வாழ்க்கையின் ஓட்டத்தை அலசும் போது இது கூட நியாமாக படும், ஓட்டத்தில் நின்று போனவர்கள் "குளம்" தான் செல்வன்... ஓடி கொண்டிருப்பவர்களின் சங்கமமே "கடல்".
குளமாக சிலர் நின்று நாற்றமடிபார்கள், கால கட்டத்தில் "தூர்" வரபடுவர்... இங்கு பழைய வெள்ளம் போயி புது வெள்ளம் வந்தாலும் இதை சுவைக்க முடியாது. இருந்தாலும் இவர்களும் உயிர்களை வாழ வைப்பார்கள்....

வாழ்க்கையில் ஓடி கொண்டிருப்பவர்கள், தன்னுள் உப்பையும் கொண்டே சென்றாலும் "கடவுள்" என்னும் கடலில் சங்கமமாகி தன் பாவ உப்பை அவ்விடத்தில் கழைந்து விட்டு மீண்டும் நதியாய், அடுத்தவர் உயிர் வாழ செய்வாற்கள்.

பிறப்பு எல்லாம் ஒரு காரணத்துடனே படிக்கபடுகின்றன... நாம் பயப்படும் சிரு பூச்சி புழுக்கள் கூட....

எதோ சொல்ல வந்தேன்.. எதோ சொல்லிகிட்டு இருக்கிறென்... சரியா புரின்சா சரிதான்....

பென்ஸ்
02-12-2006, 07:01 PM
நான் தான் கொஞ்சம் கோபப்பட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

ராம், என்ன பன்னுறது சில "நக்கீரர்"களும் மன்றத்தில் இருக்கிறார்களே....

நானும் தருமியாக வந்து அடிவாங்கியவந்தான்... இன்று சிறுவிமர்சனம் எழுதமுடிகிறது என்றால் அது மன்றம் தான்...

நீங்க என்னதான் எழுதினாலும் இளசு பாராட்ட மட்டும் தான் செய்வார்... அவர் தட்டி கொடுக்கவில்லை என்றால் நான் இந்த அளவு கூட இருக்கமாட்டேன்

செல்வன் இதற்க்கு மற்று சிந்தனை இருக்கா என்று பார்ப்பார்... இப்படியும் சிந்திக்கலாமே என்பது அவர் பார்வை...

ஓவியா... அப்படியே வந்து காலாயிஷுட்டு போயிடுவா...

மீரா... "கவிதை நல்லா இருக்கு, இன்னும் எதிர்பாக்கிறென்" அப்படின்னு ஒரு வசனத்தி கஷ்டபட்டு எழுதிட்டு போயிடுவா...

பிரதிப்பு... வாழ்க்கை ஓட்டத்தோது கவிதையை இனைத்து "எடுத்து" கொடுப்பார்...

ராகவன்... சின்ன செல்வன் ...பெரிய இளசு

அறிஞர் .. ஒரு குச்சியை வச்சுகிட்டு வாத்தியார் மதிரி யாராவது தப்பு பன்னுறாங்க்களான்னு கவனித்து கொண்டிருப்பார்... (அட சூப்பரா பதில் கவிதை கூட கொடுப்பார்)

இப்படி எல்லாரும் ஒருவிதம்... அட உங்களுக்கே போக போக புரியும்....

ஆனால் நீங்களும் ஏன் இப்படி விமர்சணகள் வருது என்பதை ஆராய்ந்து கோபபட்டிருக்கலாமோ????

இளசு
02-12-2006, 07:26 PM
மன்றத்தில் கவிதா, நீங்கள், பாரதி, நண்பன் போன்றவர்கள் கொடுக்கும் பின்னுட்டங்களை கண்டு அட கவிதைகள் இவ்வளவு ஆரோக்கியமாக அலச படுகிறதே என்று பெருமை படுவேன்... இப்போ அது கொஞ்சம் குறைவோ என்று தோன்ரும், அந்த சமயங்களில் இதை போல் சில பதிவுகள் கண்முன்னால் வந்து அட இல்லப்பா, இன்னும் அது மன்றத்தில் தொடருதுன்னு சொல்லும்....

இனிய பென்ஸ்,

இந்தப் பதிவைக் கண்டதும் என் மனதில் தோன்றிய எண்ணங்கள்
அப்படியே அச்சாய் உங்கள் வரிகளில்..

அட போங்கப்பா...

மாறன் என் மனசாட்சின்னு கலைஞர் சொன்னதுபோல்
பென்ஸ் என் மனசாட்சின்னு சொல்ல வச்சிடுவீங்க போலிருக்கே...:)

உண்மையில் செல்வன் போன்ற ஆத்மார்த்த வாசிப்படைப்பாளிகள் இல்லை என்றால் மன்றப்பொலிவு பல மாற்று கம்மியாக இருக்கும் என்பதே மாறாத உண்மை.

படித்ததை உள்வாங்கி, இன்னும் சிந்தித்து அர்த்தம் பொதிந்த பலவரி பின்னூட்டம் பெறுவதை விட, ஒரு படைப்புக்கு வேறு என்ன பெரிய அங்கீகாரம் கிடைத்துவிட முடியும்?

உங்கள் அடுத்த பதிவில் பல விமர்சகர்களையும் மிக அழகாக
விமர்சித்த விதம் - படு பாங்கு!

உள்ளவியல் வல்லுநர்தான் நம் பென்ஸ்!!!!!

தாமரை
03-12-2006, 05:28 AM
மன்றத்தில் கவிதா, நீங்கள், பாரதி, நண்பன் போன்றவர்கள் கொடுக்கும் பின்னுட்டங்களை கண்டு அட கவிதைகள் இவ்வளவு ஆரோக்கியமாக அலச படுகிறதே என்று பெருமை படுவேன்... இப்போ அது கொஞ்சம் குறைவோ என்று தோன்ரும், அந்த சமயங்களில் இதை போல் சில பதிவுகள் கண்முன்னால் வந்து அட இல்லப்பா, இன்னும் அது மன்றத்தில் தொடருதுன்னு சொல்லும்....

வாழ்க்கை ஓட்டத்தில் தேங்கியவர் குளம்..
ஆமா இளசு ...

வாழ்க்கையின் ஓட்டத்தை அலசும் போது இது கூட நியாமாக படும், ஓட்டத்தில் நின்று போனவர்கள் "குளம்" தான் செல்வன்... ஓடி கொண்டிருப்பவர்களின் சங்கமமே "கடல்".
குளமாக சிலர் நின்று நாற்றமடிபார்கள், கால கட்டத்தில் "தூர்" வரபடுவர்... இங்கு பழைய வெள்ளம் போயி புது வெள்ளம் வந்தாலும் இதை சுவைக்க முடியாது. இருந்தாலும் இவர்களும் உயிர்களை வாழ வைப்பார்கள்....

வாழ்க்கையில் ஓடி கொண்டிருப்பவர்கள், தன்னுள் உப்பையும் கொண்டே சென்றாலும் "கடவுள்" என்னும் கடலில் சங்கமமாகி தன் பாவ உப்பை அவ்விடத்தில் கழைந்து விட்டு மீண்டும் நதியாய், அடுத்தவர் உயிர் வாழ செய்வாற்கள்.

பிறப்பு எல்லாம் ஒரு காரணத்துடனே படிக்கபடுகின்றன... நாம் பயப்படும் சிரு பூச்சி புழுக்கள் கூட....

எதோ சொல்ல வந்தேன்.. எதோ சொல்லிகிட்டு இருக்கிறென்... சரியா புரின்சா சரிதான்....

பென்ஸூ நான் தலையாகி தலையாய ஒரு பொறுப்பினை செய்ய வேண்டியது இருக்குன்னு உங்களிக்கு புரியும்னு நினைக்கிறேன்,, உங்கப் பதிவை நீங்களே மறுபடியும் படிங்க.. முதல்ல புரியலைன்னா இப்ப புரியும்..

சலனம் தலைப்பில இருக்கிற விவாதங்களையும் இணைத்துக் கொள்ளலாம்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7027

குட்டை கூட நிலத்தடி நீராய் உதவும்.. அதை உதாசீனம் செய்யத் தேவையில்லை.. தேங்கிய நீரும் மண்ணில் இறங்கி குடிநீராவதால் தான் கிணறுகள்.. குளத்து நீர் குடிநீராகும் கதை உமக்குப் புரியாதா?

தேங்கிய குளத்து நீர் சும்மா இல்லை.. நிலத்தினுள்ளே இறங்குகிறது.. தவத்திலுள்ளேர் தம்முள்ளே இறங்குவதைப் போல்..

ஏரிகளை நம்பியே வாழும் கிராமங்கள் எத்தனை தெரியுமா?

ஓடும் ஆற்றில் அணை கட்டி தேக்கி நிலத்தடி நீரை உயர்த்துகிறோம்..
இந்த நீர் ஆறு வரண்டாலும் பல நாட்களுக்கு குடி நீராக பயன்படுகிறது,,

இன்னும் சிந்திக்க சிந்திக்க..

உபயோகமில்லா நீரே தெரியவில்லை எனக்கு,,

குட்டையில் பிளாஸ்டிக் குப்பைகளை எறிந்து நீர் உட்செல்லமுடியாத படி தடுப்பதே நாம்தானே..

தவறை நம்மேல் வைத்துக்கொண்டு குட்டை மேல் போட முடியுமா?

இந்தியாவிற்கு முஸ்லீம்கள் உட்பட பலபேர் படையெடுக்க காரணம் தங்கம்..

எங்கே அந்த தங்கம்?.. எங்கிருந்து கிடைத்தது?.. எப்படி பிரித்தெடுக்கப்பட்டது? ஆற்று மணலில் இருந்து தங்கம் கிடைத்ததாமே? உண்மையா?

2000 ஆண்டிற்கு முந்தைய திருக்குறள் நமக்குத் தேவையா?

யோசியுங்கள்..

பழமை தேவையே இல்லை என்று சொல்லவும் முடியாது.. புதுமை தேவையில்லை என்றும் சொல்ல முடியாது...

எல்லாமே தேவைதான் என்ன விகிதம் என்பதும் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்.. நான் சொன்ன மாதிரி...

ஏனென்றால் மனித குலத்துக்கு எல்லாமே முக்கியம்..

meera
03-12-2006, 06:04 AM
மீரா....
பணி பளு அதிகமாக இருக்கும் காலங்களில் மன்றம் வந்தாலும் கவிதைகளை வாசித்தாலும் அதை ரசிக்கும் அளவுக்கு மனம் இடம் கொடுப்பதில்லை. அதனால் கவிதைகளுக்கு விமர்சனமும் கொடுக்க முடிவதில்லை. கடந்த சில வாரங்கள் இவ்வாறக.....

நேற்று விமர்சணம் எழுதாமையால் இன்று எழுதகூடாது இல்லையே....
நாளையை பற்றி நாளை பார்த்துகொள்ளலாம் இன்று எழுத வேண்டிய விமர்சணத்தை எழுதலாம் என்று நினைத்தேன். எழுதுகிறென்.

சொல்லுவதை இன்னும் "சுருக்"கமாக சொல்லலாம் என்பது என் கருத்து...
வரிகளை "குறை"த்து கொள்...
கவிதை நல்லா இருக்கு, இன்னும் தெளிவாகனும்....

நன்றி பென்ஸ்,

வார்தைகளை குறைக்க முயற்சிக்கிறேன்.

தாமரை
03-12-2006, 06:06 AM
ராம், என்ன பன்னுறது சில "நக்கீரர்"களும் மன்றத்தில் இருக்கிறார்களே....

நானும் தருமியாக வந்து அடிவாங்கியவந்தான்... இன்று சிறுவிமர்சனம் எழுதமுடிகிறது என்றால் அது மன்றம் தான்...

நீங்க என்னதான் எழுதினாலும் இளசு பாராட்ட மட்டும் தான் செய்வார்... அவர் தட்டி கொடுக்கவில்லை என்றால் நான் இந்த அளவு கூட இருக்கமாட்டேன்

செல்வன் இதற்க்கு மற்று சிந்தனை இருக்கா என்று பார்ப்பார்... இப்படியும் சிந்திக்கலாமே என்பது அவர் பார்வை...

ஓவியா... அப்படியே வந்து காலாயிஷுட்டு போயிடுவா...

மீரா... "கவிதை நல்லா இருக்கு, இன்னும் எதிர்பாக்கிறென்" அப்படின்னு ஒரு வசனத்தி கஷ்டபட்டு எழுதிட்டு போயிடுவா...

பிரதிப்பு... வாழ்க்கை ஓட்டத்தோது கவிதையை இனைத்து "எடுத்து" கொடுப்பார்...

ராகவன்... சின்ன செல்வன் ...பெரிய இளசு

அறிஞர் .. ஒரு குச்சியை வச்சுகிட்டு வாத்தியார் மதிரி யாராவது தப்பு பன்னுறாங்க்களான்னு கவனித்து கொண்டிருப்பார்... (அட சூப்பரா பதில் கவிதை கூட கொடுப்பார்)

இப்படி எல்லாரும் ஒருவிதம்... அட உங்களுக்கே போக போக புரியும்....

ஆனால் நீங்களும் ஏன் இப்படி விமர்சணகள் வருது என்பதை ஆராய்ந்து கோபபட்டிருக்கலாமோ????

ஆமாம் அந்த நன்று நன்று பற்றி இந்த நண்டு ஒன்றும் கிண்டவில்லையே ஏன்?

ஆதவா
11-05-2007, 07:43 PM
மீண்டுமொரு அருமையான பதிவு அண்ணா.. மீராவின் கவிதை அழகு... அதற்கு பதில் கவிதை அளித்த செல்வன் அண்ணாவின் திறம்... சொல்ல வார்த்தை இல்லை.. அதிலும் சமாளிப்பு செல்வன் ....... தூள்.... இடையிடையே மீரா அடிவாங்கியது சிரிப்பு வருகிறது...

அரசன்
12-05-2007, 12:27 PM
ஒவ்வொரு தனி மனித சிந்தனைக்கும் ஏற்ற சிறந்த வரிகள். பழங்கதைகளையும், பழைய நினைவுகளையும் சுமந்துக் கொண்டே இருப்பதை விட்டு, தான் சாதிக்க வேண்டியவைகளைப் பற்றி சிந்திக்கலாம்.
மீராவின் வரிகள் அருமை. வாழ்த்துக்கள்!

அமரன்
19-06-2007, 06:15 PM
நண்பர்களே இதைப்படியுங்கள்.
இவை படிதான் நமக்கு.
மேலோட்டமாகப்படித்தபோதே பலவிடயங்கள் சிக்குகின்றன.
ஆழ்ந்துபடித்தால் எத்தனையோ இருக்கும்..
விரைவில் ஆழ்ந்து படிப்பேன். நீங்களும் படிக்க இந்தத்திரியை மேலே கொண்டு வருகின்றேன்.

கண்மணி
24-03-2008, 02:32 PM
கொண்டு வந்து என்ன பிரயோசனம் அமரரே?

பூமகள்
24-03-2008, 05:19 PM
நகர்ந்து கொண்டே பாதையில்
தேடிக் கொண்டிருக்காதே
வெட்டுண்ட மரங்களை
எதிர்வரும் பூக்காடுகளை விட்டுவிட்டு..!

தொலைந்த புன்னகையை
தேடிக் கொண்டிருக்காதே..
உன் இதழோரச் சிரிப்பை
மறந்து விட்டுவிட்டு..!!

ஆஹா.. எனக்கும் எழுத முடிகிறதே இப்படி..?? :sprachlos020::eek: :D:D

அழகிய கவிதை மீரா அக்கா..!! பாராட்டுகள்..!!

தோண்டித் தந்த அமரன் அண்ணாவுக்கு நன்றிகள். :)

பின்னூட்ட புயல்களின் சங்கமம் கண்டு அசந்தேன்..!!
பெரியண்ணா... சொற்சிலம்பரோடு கருப்போரிட்டது சூப்பரோ சூப்பர்..!!
பென்ஸ் அண்ணாவின் விமர்சகர் விமர்சனம் அருமையோ அருமை.. முற்றிலும் உண்மையோ உண்மை.
எக்காலத்துக்கும் பொருந்தும் பதிவுகள்..!!

நல்மணியைத் தேடித் தந்த பொன்மணிகளுக்கு எனது நன்றிகள் கோடி..!! :)

ஷீ-நிசி
26-03-2008, 05:08 PM
ேய்ந்து கொண்டிருக்கும் நிலவில்
தேடிக்கொண்டிருக்காதே
வாழ்வை..
வளர்ந்து வரும்
வளர்பிரையை விட்டுவிட்டு!

வழக்கமாக ஹைக்கூ பாணியிலேயே எழுதுவதைத்தான் படித்ததாக எனக்கு ஞாபகம். முதல்முறையாக பார்க்கிறேன் நீள கவிதையை..

தேய்ந்து கொண்டிருக்கும் நிலவில்
தேடிக்கொண்டிருக்காதே
வாழ்வை..
வளர்ந்து வரும்
வளர்பிரையை விட்டுவிட்டு!

கவிதைகென எடுத்துக்கொண்ட விஷயங்கள் அனைத்தும் அழகு. ஆனால் படிக்கையிலே கவிதையின் வார்த்தைகள் படிப்பதற்கு இலகுவாக இல்லாமலிருப்பதாய் ஒரு உணர்வு...

வரியமைப்பில் ஒரு சின்ன திருத்தம் மீரா..

தேய்ந்துக்கொண்டிருக்கும் நிலவில்
தேடிக்கொண்டிருக்காதே!!
வளர்ந்துக்கொண்டிருக்கும்,
வளர்பிறையில் தேடு!!
வாழ்வை..

'பிரை' சரியல்ல 'பிறை' என்பதே சரி!

இது எனக்கு தோன்றிய வரியமைப்பு மீரா..
கருத்துக்களை மாற்றவில்லை... மாற்றுக் (மாற்றின) கருத்தில் ஏதாவது மனக்குறை இருப்பின் மன்னியுங்கள்..

வாழ்த்துக்கள்!

meera
27-03-2008, 10:33 AM
இந்த கவிதையை மீண்டும் தோண்டி எடுத்த பெருமைக்குரிய கண்மனி, அன்பு தங்கை பூ, மற்றும் ஷி அனைவருக்கும் என் நன்றி.

ஷி மனதில் தோன்றிய கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.எந்த ஒரு தவறும் படைப்பவருக்கு தெரிவதில்லை பார்ப்பவருக்கே தெரியும்.தவறுகளை சுட்டி காட்டும் போது தான் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆகவே மீண்டும் நன்றி ஷி

kavitha
27-03-2008, 10:52 AM
கடந்துவிட்ட காலங்களில்
தேடிக்கொன்டிருக்காதே
வாழ்வை..
உன்னை எதிர்நோக்கும்
இனிய காலங்களை விட்டுவிட்டு!

நல்லவரிகள் மீரா.

meera
27-03-2008, 11:01 AM
நன்றி கவிதா.

உங்களிடமிருந்து விமர்சம் பெருவது எனக்கு மிக்க மகிழ்ச்சி

நாகரா
29-03-2008, 09:27 AM
இல்லாத இடங்களில்
தேடிக்கொண்டிருக்காதே
இறைவனை...
இருக்கும் இடமான
உன் மெய்யை விட்டுவிட்டு!

அறிவுறுத்தும் நல்ல கவிதை, வாழ்த்துக்கள் மீரா. தாமரை, பென்ஸ் மற்றும் இளசுவின் பின்னூட்டங்களும் அருமை.

அக்னி
24-08-2009, 06:58 PM
ஒரு கவிதை பந்தாகக், கருத்துக்களால் ஆடப்பட்டால்,
அதுதான் ரசிப்பும் சிறப்பும்...

இங்கும் அவ்வாறே...

(கடந்த) வாழ்வைத் தேடி
(வரும்) வாழ்வைத் தொலைத்துவிடாமல்,
(கடந்த) வாழ்விற் தேடி
(வரும்) வாழ்வில் நிலைத்துவிடவேண்டும்.

இதுவரை இப்படி என்றால்
இதிலிருந்து எப்படி
இனி எப்படி
என்று சிந்தித்தால்,
வாழ்க்கை சிறப்பாகும்.

கடந்தவை யாவும் தவிர்க்கப்பட மட்டுமே வேண்டியவையல்ல...

இப்படி இருக்கக்கூடாது, இப்படி இருக்கவேண்டும்
எனக் காட்டுபவை...

தவிர்க்க வேண்டியவற்றையும், தொடரத் தேவையானவற்றையும்,
கடந்துபோன வாழ்க்கையிற்தான் தெரிந்துகொள்ளமுடியும்...

செல்வர் சொன்னதைப்போல,
கடந்ததை நினைத்துவருவதையும்
கடந்ததை நினைத்து வருவதையும்
விட்டுவிடக்கூடாதுதான்...

பின்னூட்டக் கருத்தாடல்களால் ஒளிர்கின்றது இத்திரி...

அனைவருக்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்...