PDA

View Full Version : அடி



மேமன்கவி
28-11-2006, 06:50 PM
பேசினால் அடிக்கிறார்கள்
அடித்தால்தான் பேசிகிறார்கள்

இளசு
28-11-2006, 08:39 PM
அடடா.. உங்கள் கன்னத்தின் மூன்றாம் அடி பற்றிய கவிதை என்று வந்தால்... இது வேறு..

கெஞ்சினால் விஞ்சுவதும்
விஞ்சினால் கெஞ்சுவதும்...

ஆதி தொட்டே ...! இல்லையா மேமன் கவி அவர்களே?

தாமரை
28-11-2006, 11:08 PM
பேசினால் அடிக்கிறார்கள்
அடித்தால்தான் பேசிகிறார்கள்
மேடையிலிருந்து : பேசினால் அடிக்கிறார்கள்
மேடையின் கீழிருந்து : அடித்தால்தான் பேசுகிறார்கள்..

சிச்சுவேஷனை இப்படி விளக்கமா சொல்லப்பா!

மேமன்கவி
29-11-2006, 07:16 PM
இங்கு மேடை என்ன ஐயா?
ஜாடையிலே
பேசினாலே அடிக்கிறார்களே
அதுக்கு என்ன செய்வது?
நன்றிகள்!!!!!
தமிழ் அடிகளால்
அடியேனின்
அடிக்கு
அணி செய்தமைக்கு!

தாமரை
30-11-2006, 12:23 AM
இங்கு மேடை என்ன ஐயா?
ஜாடையிலே
பேசினாலே அடிக்கிறார்களே
அதுக்கு என்ன செய்வது?
நன்றிகள்!!!!!
தமிழ் அடிகளால்
அடியேனின்
அடிக்கு
அணி செய்தமைக்கு!

ஜாடைப் பேச்சு
ஜடைப் பேச்சு..
அதாவது அது
பெண்களின் பிறப்புரிமை
அதை நீர்
தட்டிப் பறிக்க நினைத்தால்
தட்டித் தான் வைக்கப் படுவீர்..

தட்டினால் திறக்குமாமே
உம் கண்கள்
திறந்ததா இப்போதாவது???

மேமன்கவி
01-12-2006, 10:55 AM
நண்பர் தாமரை செல்வன்
என்ன சொல்கிறார்?
நான் என்ன
பெண்ணடிமைவாதி என
கருதி விட்டாரோ?
என் கவிதையில்
பெண்ணடிமை எங்கே வந்தது?
விளங்கவில்லை.
சரி! அது அவருடைய கருத்து என ஏற்றுக் கொண்டு,
அவருக்கு எனது கவிதை ஒன்றை
பதிந்துரை செய்கிறேன்.
http://memonkavi.adadaa.com/

தாமரை
02-12-2006, 02:36 AM
நண்பர் தாமரை செல்வன்
என்ன சொல்கிறார்?
நான் என்ன
பெண்ணடிமைவாதி என
கருதி விட்டாரோ?
என் கவிதையில்
பெண்ணடிமை எங்கே வந்தது?
விளங்கவில்லை.
சரி! அது அவருடைய கருத்து என ஏற்றுக் கொண்டு,
அவருக்கு எனது கவிதை ஒன்றை
பதிந்துரை செய்கிறேன்.
http://memonkavi.adadaa.com/

கோபம் கொள்ளாதீர்.. நான் ஜாடையயும் ஜடையையும் இணைத்தால் வரும் நயத்தை சொன்னேன்.. இதற்கும் பெண்ணடிமை வாதத்துக்கும் சம்பந்தமே இல்லை..

ஆண்கள் ஜாடை பேசினால் அடி விழுகிறது என்பதில் பெண்ணடிமை வாதம் எங்கிருந்து வரும்... ஜடை (என்ற வார்த்தை)யும், பிறப்புரிமை என்ற வார்த்தையும் உங்களை தவறாக எடுத்துக் கொள்ள செய்திருக்கலாம்.

நான் சொன்னதிற்கு (ஆண்கள் ஜாடை பேசினால் அடி விழுகிறது) உதாரணம் இதுதானே..ஜாடை, ஜடை.. பெண்கள்..பிறப்புரிமை என்று ஜாடையாய் சொன்னால் அடிக்க வருகிறீர்கள் பார்த்தீர்களா...??:D :D :D :D

மேமன்கவி
02-12-2006, 03:12 AM
நண்ப தாமரைசெல்வனுக்கு
சந்தோஷம். பேசுவோம்.
நீங்கள் எழுதியது மூலம்
ஒரு சில சிந்தனைகளை
தமிழ் மன்ற நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள
தூண்டி விட்டது.
அதற்கு உங்ளுக்கு
விசேட நன்றிகள்.