PDA

View Full Version : கடவுள் சுவை



sriram
26-11-2006, 05:31 PM
தேனை சுவைத்தான்.- பிறகு
வேம்பை சுவைத்தான் சந்தோசமாக!
கடவுள் அவனுக்கு எதற்கு?

meera
27-11-2006, 02:23 PM
நல்ல கவிதை ராம்.வாழ்த்துகள்.

வாழ்க்கையும் இப்படிதான் என்பதை அழகாய் சொல்லிருகீங்க.

தாமரை
28-11-2006, 12:56 AM
தேனை சுவைத்தான்.- பிறகு
வேம்பை சுவைத்தான் சந்தோசமாக!
கடவுள் அவனுக்கு எதற்கு?
இன்னும் சுவைக்க
எத்தனையோ உண்டே
உப்பு
மிளகாய்
புளி
....
..
..
.
அதற்கு

sriram
01-12-2006, 06:44 AM
selvan avarkaLe..!
inippum, kasappum neerethir suvaikkaana uvamaikaL
(inbam-thunbam).
maRRa suvaikaLai kuRippida veeNdiya avasiyam illai.
kadavuL thanmai ezuvaay anRu. anubavipparum, anubavamum kalakkum wilai. anupabavippavar maRainththu anubavamee minjsum .

iyalbaay iruththal-rusiththal.!

( niingkaL maangkaay, miLakaay ellaam suvaiyungkaL. )

waan kuRipidum suvai samamaaka paaviththu eeRkum suvai..

sriram
01-12-2006, 06:46 AM
செல்வன் அவர்களே..!
இனிப்பும், கசப்பும் நேரெதிர் சுவைக்கான உவமைகள்
(இன்பம்-துன்பம்).
மற்ற சுவைகளை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
கடவுள் தன்மை எழுவாய் அன்று. அனுபவிப்பரும், அனுபவமும் கலக்கும் நிலை. அனுபபவிப்பவர் மறைந்து அனுபவமே மிஞ்சும் .

இயல்பாய் இருத்தல்-ருசித்தல்.!

( நீங்கள் மாங்காய், மிளகாய் எல்லாம் சுவையுங்கள். )

நான் குறிப்பிடும் சுவை சமமாக பாவித்து ஏற்கும் சுவை..

pradeepkt
01-12-2006, 07:55 AM
ஒரு விஷயம் புரியவில்லை.
தேனைச் சுவைத்தாலும் வேம்பைச் சுவைத்தாலும் ஒரே மாதிரி எண்ண வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் ஒரு "உம்" சேர்க்கலாம் உங்கள் கவிதையில் -- வேம்பையும் என்று!

அப்படியாயின் என்னைப் பொறுத்தவரை இரண்டையும் ஒன்றாக எண்ண வேண்டிய அவசியமில்லை. ஆனால் இரண்டுமே நம்மை எதிர்மறையாகப் பாதிக்க விடாத மனம் வேண்டும். அதுதான் முக்கியம்.

பாராட்டுகள்.

gragavan
01-12-2006, 08:50 AM
இன்பமும் துன்பமும் ஒன்றாகப் பார்ப்பது சரியென்றால் அதைத் தேன் என்றும் வேம்பென்றும் உணர்வது எங்கனம்? ஆப்பிளை வைத்தாலும் தேங்காயை வைத்தாலும் தெர்மோகோலைத் தின்பது போலத்தானே இருக்கும். அப்படியிருக்க இனிப்பும் கசப்பும் வெவ்வேறாய்ப் புரிவதெப்படி? அப்படி இன்பமும் துன்பமும் ஒன்றாய்ப் போனது என்றால் அது இறையால் மட்டுமே முடியும். இறைவனை உணர்ந்த நிலை மட்டுமே இனிப்பும் கசப்பும் ஒன்றெனவாக்கும்.

sriram
01-12-2006, 09:31 AM
ராகவன்! சரியாகதான் சொல்கிறீர்கள். துன்பத்தையும் இன்பமாக நினைத்தால் துன்பம் துன்பமாக இருக்காது என வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

"சுமப்பது இல்லை!
வெற்றியை தலையிலும்!
தோல்வியை நெஞ்சிலும்!"

என்பது போல !

இறை உனர்வு இருந்தால்தான் சாத்தியம்.அப்படி உணர்ந்தவர் மேற்கொண்டு சொல்வதற்கு அவரிடம் ஒன்றும் இல்லை. இந்த கவிதையின் நோக்கம் இறை பற்றிய சிந்தனை.! அவ்வளவே.!
"நோக்கி செல்லுதல்" என வைத்து கொள்ளுஙளேன். அதாவது எந்திரவியலில் 100 சதவீத பயனுறுதிறன் கொடுக்கும் எந்திரம் எப்படி 'ஐடியல்' ஆக இருக்கிறதோ அதை போல.!
ஆனால் அதை நோக்கி செல்வதற்கு எண்ணுகிறோம்.
மூட நம்பிக்கை இல்லாத ஆன்மிகம் பற்றிய புரிந்துணர்வுக்கு ..!
இறை எண்க்கும் பரவி இருகிறது -"அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்"
கவிதைக்கு வருகிறேன். தேனையும், வேம்பையும் சந்தோசமாக சுவைக்க முடியாது.(என்னாலும், உங்களாலும்). முடிந்தவரை தோல்வியில் துவளாமல், வெற்றியில் மமதை கொள்ளாமல் இருக்க முயற்சி செஇவதெ.!
இன்னும் சொல்ல நினைப்பது,

"சூரியன் கிழக்கே உதித்துவிட்டான் என
சந்தோசப் படதே.!
மேற்கே விழும்.!
மேற்கே விழுந்தான் என
கவலை படதே..!
கிழக்கே எழும்.!
ரசி..! முழுமையாக ரசி.! "

leomohan
01-12-2006, 01:17 PM
இன்பமும் துன்பமும் ஒன்றாகப் பார்ப்பது சரியென்றால் அதைத் தேன் என்றும் வேம்பென்றும் உணர்வது எங்கனம்? ஆப்பிளை வைத்தாலும் தேங்காயை வைத்தாலும் தெர்மோகோலைத் தின்பது போலத்தானே இருக்கும். அப்படியிருக்க இனிப்பும் கசப்பும் வெவ்வேறாய்ப் புரிவதெப்படி? அப்படி இன்பமும் துன்பமும் ஒன்றாய்ப் போனது என்றால் அது இறையால் மட்டுமே முடியும். இறைவனை உணர்ந்த நிலை மட்டுமே இனிப்பும் கசப்பும் ஒன்றெனவாக்கும்.


ராகவன் இந்த கருத்தில் நான் சற்றே மாறுபடவிரும்புகிறேன். இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக பாவிப்பது என்பது இனிப்புக்கும் கசப்புக்கும் ஒப்பிட முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.

கண்ணதாசன் சொன்னது போல வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது. புகழந்தால் என் மனம் புல்லரிக்காது, இகழந்தால் என் மனம் இறந்துவிடாது என்று சொல்வார்.

இனிப்பு இனிப்பு தான். கசப்பு கசப்பு தான். ஆனால் இரண்டையும் ஒரு சுவையாக எடுத்தக் கொள்ளவேண்டும். இனிப்பு பிடிக்கும் கசப்பு பிடிக்கும், நன்மை பிடிக்கும், தீமை பிடிக்காது, உண்மை பிடிக்கும், பொய் பிடிக்காது, செல்வம் பிடிக்கும், ஏழ்மை பிடிக்காது என்றில்லாம் இரு நிலையும் சமமாக பார்க்கவேண்டும் என்பதே கருத்து.

தாமரை
02-12-2006, 03:02 AM
செல்வன் அவர்களே..!
இனிப்பும், கசப்பும் நேரெதிர் சுவைக்கான உவமைகள்
(இன்பம்-துன்பம்).
மற்ற சுவைகளை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
கடவுள் தன்மை எழுவாய் அன்று. அனுபவிப்பரும், அனுபவமும் கலக்கும் நிலை. அனுபபவிப்பவர் மறைந்து அனுபவமே மிஞ்சும் .

இயல்பாய் இருத்தல்-ருசித்தல்.!

( நீங்கள் மாங்காய், மிளகாய் எல்லாம் சுவையுங்கள். )

நான் குறிப்பிடும் சுவை சமமாக பாவித்து ஏற்கும் சுவை..
கடவுள் அவனுக்கு எதற்கு?
இந்த கேள்வியைத்தான் நான் அணுக நினைத்தேன்..
உலகில் இரண்டு எதிரெதிர் பதங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் உலகம் அதில் அடங்கி விடுவதில்லை.. கிழக்கும் மேற்கும் என்றால் வடக்கும் தெற்கும் அடங்கி விடுவதில்லை...
பக்குவப் பட்ட மனம் உள்ளது என்பதால் மட்டுமே கடவுள் தேவையில்லை என்று ஆகிவிடுவதில்லை..
பக்குவப்பட்ட மனதிற்குத்தான் கடவுள் தேவை என முழுமையாகப் புரியும்..
பக்குவப் படாதோர் கடவுளே தெவையில்லை எனச் சொல்லலாம்..

ராகவன்! சரியாகதான் சொல்கிறீர்கள். துன்பத்தையும் இன்பமாக நினைத்தால் துன்பம் துன்பமாக இருக்காது என வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

"சுமப்பது இல்லை!
வெற்றியை தலையிலும்!
தோல்வியை நெஞ்சிலும்!"

என்பது போல !

இறை உனர்வு இருந்தால்தான் சாத்தியம்.அப்படி உணர்ந்தவர் மேற்கொண்டு சொல்வதற்கு அவரிடம் ஒன்றும் இல்லை. இந்த கவிதையின் நோக்கம் இறை பற்றிய சிந்தனை.! அவ்வளவே.!

தேனை சுவைத்தான்.- பிறகு
வேம்பை சுவைத்தான் சந்தோசமாக!
கடவுள் அவனுக்கு எதற்கு?

உங்கள் இந்த இரு கருத்துக்களையும் ஒரு சேர படித்துப் பாருங்கள்.. முரண் புரியும்..

கவிதைகளை படித்து விட்டு சபாஷ் சூப்பர் என்று சொல்லிவிட்டு போவார் சிலபேர்..

அதில் தமக்கு எது பிடிக்குமேன சொல்வர் சிலபேர்..

அதில் உள்ள குறைகளை சொல்வர் சிலபேர்..

நான் இவர்களிலிருந்து சற்று மாறுபட்டு கவிதையின் நயத்தை விட்டு கருவை வேறொரு கொணத்தில் அணுக முயற்சிக்கிறேன்..
மனதுக்குள் கேள்வி எழுப்பி விடை தேடுகிறேன்..

அதனால் சரி, தவறு, சரியல்ல (சரியல்ல என்பதெல்லாம் தவறு ஆகி விடுவதில்லை) தவறல்ல (தவறல்ல என்பதெல்லாம் சரி ஆகி விடுவதில்லை) என பலப் பல வர்ணங்கள் எனக்கு மனதில் தோன்றுகின்றன.. மன்றம் என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு ஊடகமாக இருக்கிறது.

.
மன்றத்துக்கும் புத்தகத்திற்கும் இதுதான் வித்தியாசம்...

புத்தகத்தை படிப்போர் அதை விமர்சிக்கின்றனர்..

மன்றத்திலோ.. கருத்து விவாதிக்கப் படவேண்டும்.. அப்போது அது ஆரோக்கியமாக இருக்கும்..

இது உங்கள் மனத்தை புண்படுத்தி இருக்குமானால் மன்னிக்கவும்.

ஆனால் எனக்குத் தெரிந்தவரை, பலர் என் கவிதைகளை விமர்சனமாக கருதாமல் தங்கள் மனதில் எழும் இன்னொரு எண்ணமாகக் கருதி அந்த வழியிலும் சிந்திக்க முயல்கின்றனர்..
இது ஒருவகை "ப்ரெய்ன் ஸ்டார்மிங்".. அவ்வளவுதான்

leomohan
02-12-2006, 05:43 AM
சுவாரஸ்யமாக செல்கிறது தலைப்பு செல்வன். தொடருங்கள்.

sriram
02-12-2006, 02:19 PM
செல்வன் அவர்களே..!

நான் சொல்ல விரும்புவது, "னாம் செயும் செயலில் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்கும்போது தனியாக கடவுளை வணங்க அவசியம் இல்லை. ஏன் எனில் அந்த ஈடுபாடுதான் கடவுள்.( ஆன்மநேயத்திற்கு தீங்கு இழைக்காத செயலில்)

கடவுள் என்பதை ஏன் ஒரு எழுவாயாக பார்க்கிரீர்கள்? அதனை செய்கையாக , அனுபவமாக அணுக முயற்சிப்பதைதான் "இயங்கு நிலை தியானம் ' என்று ஜென் கூறுகிறது.
"அக காத்திருப்பு " -(அகத் தேடல் என்றால் கூட ஒரு பரபரப்பு வந்து விடுகிறது.).
ஜென் பக்குவப்பட்ட சிந்தனை இல்லையா? சுபி பக்குவபட்டது இல்லைய?

"உனக்குள் இருக்கும் கடவுளை " உணர் . என்பது போன்ற சிந்தனை தான்.
கடவுள் = கடந்த தன்மை உள்ளே இருப்பது. உள்ளே ஊடுருவி (கடந்து கொண்டெ செல்லுதல்)

தாமரை
02-12-2006, 02:40 PM
செல்வன் அவர்களே..!

நான் சொல்ல விரும்புவது, "னாம் செயும் செயலில் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்கும்போது தனியாக கடவுளை வணங்க அவசியம் இல்லை. ஏன் எனில் அந்த ஈடுபாடுதான் கடவுள்.( ஆன்மநேயத்திற்கு தீங்கு இழைக்காத செயலில்)

கடவுள் என்பதை ஏன் ஒரு எழுவாயாக பார்க்கிரீர்கள்? அதனை செய்கையாக , அனுபவமாக அணுக முயற்சிப்பதைதான் "இயங்கு நிலை தியானம் ' என்று ஜென் கூறுகிறது.
"அக காத்திருப்பு " -(அகத் தேடல் என்றால் கூட ஒரு பரபரப்பு வந்து விடுகிறது.).
ஜென் பக்குவப்பட்ட சிந்தனை இல்லையா? சுபி பக்குவபட்டது இல்லைய?

"உனக்குள் இருக்கும் கடவுளை " உணர் . என்பது போன்ற சிந்தனை தான்.
கடவுள் = கடந்த தன்மை உள்ளே இருப்பது. உள்ளே ஊடுருவி (கடந்து கொண்டெ செல்லுதல்)


பல பேர் கடவுளிடம் வேண்டுகின்றனர்..
சில பேர் கடவுளிடம் நன்றி சொல்கின்றனர்
வெகு சில பேர் கடவுளை வியக்கின்றனர்
யாரோ ஓரிருவர் கடவுள் என்ற சிந்தனையையே வராத அளவில் தன் செயலில் தன்னை இழக்கின்றனர்..

சந்தோஷமாக.. வேம்பையும் கரும்பயும் சுவைப்பவனுக்கு கடவுள் தேவைதான்,,, ஏனென்றால் அவனுக்கு சந்தோஷம் என்ற உணர்வும் சுவை என்ற உணர்ச்சியும் உண்டல்லவா.. சந்தோஷமாக இருக்க நினைப்பவன்.. கடவுளின் தேவையை உணர்வான்... வேம்பை உண்டான் பிறகு கரும்பை உண்டான் என்று சொல்லும் பொழுது சிறிது கவனம் திருப்பப் பட்டு விடுகிறது...
வேம்பும் இருந்தது, கரும்பும் இருந்தது ஒன்றை உண்டான் கடவுள் அவனுக்கு எதற்கு என்று கேட்டிருந்தால் கண்டிப்பாய் நீங்கள் சொல்ல நினைத்த கருத்திற்கு 100 சதவிகிதம் பொருந்தியிருக்கலாம்..

நாம் செயும் செயலில் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்கும்போது தனியாக கடவுளை வணங்க அவசியம் இல்லை. ஏன் எனில் அந்த ஈடுபாடுதான் கடவுள்.

என்பது எனக்கு 100 % உடன்பாடு...

leomohan
02-12-2006, 02:43 PM

sriram
02-12-2006, 03:05 PM
செல்வன் அவர்களே..!
இன்னும் கொஞசம் இப்படி சிந்தித்து பாருங்களேன்.
சுவை மாறும் சுவைகளை ( டையனமிக் நிலைகளில்)சுவைக்கும் கோணத்தில் பாருங்களேன்.
அதுதானே நிகழ் கால இருப்பியல் தன்மை.

sriram
04-12-2006, 03:18 AM
செல்வன் அவர்களே..! இன்னும் சிறிது நுண்ணாய்வு செய்யுங்களேன்..! இன்னும் நம் சிந்தனையை செதுக்கலாம்.

தாமரை
04-12-2006, 03:23 AM
செல்வன் அவர்களே..!
இன்னும் கொஞசம் இப்படி சிந்தித்து பாருங்களேன்.
சுவை மாறும் சுவைகளை ( டையனமிக் நிலைகளில்)சுவைக்கும் கோணத்தில் பாருங்களேன்.
அதுதானே நிகழ் கால இருப்பியல் தன்மை.

டைனமிக் என்பது உலகியல்.. இப்பேரண்டம் டைனமிக்காக இருப்பதால்தான் மாற்றம் கூட மாறிக்கொண்டே இருக்கிறது.. நேற்றைய மாற்றம் வேறாய் இருக்க இன்றைய மாற்றம் வேறாய்..

நேற்றும் இன்றும் நாளையும் வரிசையாய் செத்துக் கொண்டிருக்கின்றன.. காலத்தின் இந்த ஒழுங்கு மனிதனுக்கு இருந்தால்..? பாதி துயரங்கள் காணாமல் போயிருக்கலாம்.. கடவுள் சுவை தெரியாதிருக்கலாம்..

காலத்தைக் கடந்து ஜீவிக்க எண்ணமிடுகிறான் மனிதன்.. எண்ணங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன மனம் விட்டு மனம் தாவி..

இருப்பதை இருப்பதாய் இருக்கவிட்டு இருந்து இறக்கிறார் சில பேர்..
இது இருப்பியலோ???

sriram
04-12-2006, 04:19 AM
கஜினி படத்தில் வரும் "சார்ட் டைம் மெமோரி லாஷ்" போலவா?
எண்ணங்கள் இல்லாமல் இருப்பது எப்படி? நீங்கள் சொல்வதை போலதான் நானும் சிந்தித்து பார்த்து இருக்கேன். வெறுமையில் இருந்து ஆரம்பித்து பின் எல்லாம் நிறைந்த பின்னர் அது மீண்டும் வெறுமையாகவே ஆகிவிட்டது.
பேரண்ட இயற்பியலும், சிவ தத்துவமும் ஒத்து போகின்றன.

"வெளியே" என்று ஒன்று எப்படி இருக்க முடியும்? வெளியேக்கு வெளியே என்பது எதன் உள்ளே இருக்கிறது ?
ஆற்றல் மாற்றம் என்பதுதான் பிரபஞ்ச இயக்கம்..
அந்த ஆற்றல் எங்கிருந்து ஆரம்பமானது ?
பேரண்ட பெருவெளியில் நாம் பொடியிலும் பொடி .. ஆனால் அந்த பொடி பேரண்டத்தின் ஒரு பகுதி. பேரண்டமும், இந்த பொடியும் வேறல்ல..
(ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று ) ஆனால் வேறாகவும் இருகிறது.. ( த்வய்தம்- அத்வைதம்)

இரண்டுமாகி, ஒன்றுமாகி, பலவுமாகி எல்லாம், எதுவும் இல்லாததுமாகியில் இருந்து வந்தது என்றால் அந்த எதுவும் இல்லாததுமாகியெ (கிரேட் நத்திங்) எல்லாம் இருப்பதா?

ஒரு வட்டதில் ஆரம்ப புள்ளி எது? ஆனல் ஆரம்ப புள்ளி எதுவோ அதுவே அந்தம புள்ளி .( எங்கிருந்து எதை எடுத்தாயோ அது அங்கேயே விடப்படுகிறது- கீதா!)

பூஜியத்திற்குள் இந்த ராஜ்ஜியமோ -(கண்ண தாசன் )

பூஜ்ஜியம் என்பது இல்லத ஒன்று இருப்பதா? இருந்த ஒன்று இல்லாமல் போவதா?
அந்த பூஜியமும் இல்லத ஒன்று இருந்தால் அதற்கு பெயர் 'நல்' என்ட்றால் அது எப்படி இருக்கும் ?

கடவுள் என்பது அப்படி என்றால் நிகழ்வா? நிகழ்வு கடவுள் என்றால் நிகழ்த்துவது யார்? நிகழ்துபவர் (எழுவாய்) இல்லாமல் நிகழ்வு நிகழ்கிறதா?

நாம் ஒரு செயல் செய்தால் அந்த "நானை" நாம் மறந்து செயலாகி கொன்டு இருப்பதே கடவுளா? (மெய் மறந்த தவம்.)

தவம் என்பது இயங்கு நிலையில் சாத்தியமா? (இயங்கு நிலை தியானம்- ஓஷோ)

மலை உச்சியில் நின்று கொன்டு மலை உச்சிக்கான பயணமா? ( -ஜென்)

உள்முக பயணம் செய்ய ஈடுபாடுதான் முதல் படியா? அதன் பெயர்தான் விழிப்புணர்வு நிலையா? இருப்பியல் என்ற நிகழ் கால வாழ்வியலில் நினைவுக்கு வழி இல்லையா?

நினைவு எங்கே இருக்கிறது? நினைவு ஒரு ஆற்றல் என்றால் அதன் நுண்வடிவம் எதனால் ஆனது?
(தலை சுற்றுகிறது....!!!!!!!!!!!!!!!)

sriram
05-12-2006, 03:40 AM
செல்வன் அவர்களே... தொடருங்கள்....! சிந்தனை அகழ்வை !!