PDA

View Full Version : கவிதை



sriram
26-11-2006, 05:11 PM
பேனாவை மூடி விட்டு ஒரு கவிதை!
மழையில் நனைகிறேன்!!

guna
28-11-2006, 04:32 AM
மழையில் நனைவதும் கூட, கவிதை'ன்னு சொல்றீங்களா ஸ்ரீ?

மழையில நனய மட்டும் செய்வீங்களா? இல்லை விஜய் & த்ரிஷா மாதிரி ஐஸ்கிரிமும் சாப்பிடுவீங்களா;) ?

இளசு
29-11-2006, 07:46 PM
நல்ல கவிதை!

இயற்கையை விஞ்ச எதிலும் வேறென்ன உண்டு?

பாராட்டுகள் ஸ்ரீராம்!


( எல்லா சிறு கவிதைகளையும் ஒரே திரியில் - ஸ்ரீராம் கவிதைகள்- என தரலாமே!)

sriram
05-12-2006, 04:05 AM
கவிதை என்பது நம் உனற்வொடு உறவாடுவது..!

"வியத்தலும், ரசித்தலும் கொண்ட
உறவில் உருவாகும் கவிதை குழந்தை...!"


மலர் மௌனமாக இருக்கிறது...! எதுவும் பேசுவதில்லை...!
மலரின் மொழி மௌனம்..! அதை பார்க்கும்போது நம் உள்ளம் பரவசம் அடைகிறது... மலர்

எதுவும் பேசாமல் பரவசபடுத்துகிறது..!நிறத்தலொ, மணத்தலோ நம் மனம் பரவசப்படுகிறது...
பரவசபடும்போது என்னால் பேனாவை வைத்து எழுதி கொண்டுஇருக்க முடியாது. ஏன் எனில் அந்த

பரவச உணர்வுதான் என் கவிதை.. ! நான் அதில் இருந்து விடுபட விரும்பாமல் அதன்

லயத்திலே போகிறேன்..!
மலர்களின் மொழியொடும், மழையின் மொழியொடும் நான் சம்பாசித்து கொண்டு இருகிறேன்..! என்

பரவசத்தை நான் விளக்க முற்படும்பொதே நான் அதிலிருந்து விலகி விடுகிறேன். அதனால்

நான் அதனை இப்போது விளக்க நினைத்து அதிலிருந்து விலக விரும்பவில்லை..!

நான் கவிதை எழுதவில்லை.. கவிதையில் இருக்கிறேன்.. மழை கவிதை எழுதி

கொன்டிருக்கிறது... நான் கரைந்து கொண்டு இருக்கிறேன்..!

"எதுவுமே பேசாமல் எல்லமே புரிகிரது..!"

பென்ஸ்
07-12-2006, 07:18 PM
நான் கவிதை எழுதவில்லை.. கவிதையில் இருக்கிறேன்.. மழை கவிதை எழுதி கொன்டிருக்கிறது... நான் கரைந்து கொண்டு இருக்கிறேன்..!
"எதுவுமே பேசாமல் எல்லமே புரிகிரது..!"

:)
:) :)
:) :) :)