PDA

View Full Version : இப்போதே சொர்க்கம்.



sriram
26-11-2006, 04:48 PM
தேடிய சாவி கிடைக்காமல்
களைத்தபோது தெரிந்தது.
பூட்டு பூட்டப்படவே இல்லை என்று !!!

sriram
29-11-2006, 05:15 PM
பூட்டு திறந்து இருப்பது என்பது நிகழ் காலத்தைக் குறிக்கும். நிகழ் காலத்தை உணராமல் நாம் எதயோ தேடிகொன்டு இருக்கிறோம். நிகழ் காலமே கடவுள் தன்மை வாய்ந்தது."க்ஷண நேரத்தில் வாழ்" என்ன்றா ஜென் தத்துவதை அடிப்படையாகக் கொண்டு இந்த கவிதை எழுதினேன்.
"இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி அலைந்தாயோ ஞானத் தங்கமே" என்ற சித்தர் வரி.
கடவுளை எங்கேயும் தேட வேண்டியது இல்லை. அவர் இப்போதே இங்கேயே இருக்கிறார். வெளியில் தேடாதே. உள்ளே தேடு.
பூட்டு பூட்டப்படவே இல்லை. திறந்தே இருக்கிறது.

(யாருக்கும் இந்த கவிதை பிடிக்கவில்லையா? எதுவும் சொல்ல மாட்ரீங்க?)

ஓவியா
29-11-2006, 05:45 PM
சில நண்பர்கள் அதிகம் பணிபளுவில் மன்றம் வர இயலாமல் இருப்பார்கள்,

ஒரு சிலருக்கு அர்த்தம் விளங்காமல் இருக்கலாம்,

அதனால் விமர்சனம் இல்லாமல் இருக்கலாம்

விமர்சனம் இல்லையென்றால் வருத்தம் வேண்டாம் நண்பரே.

நீங்களே ஒரு சிரு குறிப்பாக விமர்சனமும் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும், என்னை போல் சிறு பிள்ளைகளுக்கு கவிதை இன்னும் விளக்கமாக புரியும்.

அட, ரொம்ப அழகான கவிதைனு சொல்வதைவிட சூப்பர் விமர்சனம்....
இப்பதான் தங்களின் கவிதைக்கு ஒரு அழகு வந்துல்லது....:D

தயங்காமல் தொடரவும்

இளசு
29-11-2006, 07:38 PM
அன்பு ஸ்ரீராம்

மீராவின் கையெழுத்தும் , அவரின் தேடிக்கொண்டிருக்காதே கவிதையும்
உங்களின் இந்த == இப்பொழுதே-- இக்கண நேரத்தில் வாழ் - என்ற
கவிதையின் அம்சத்தையே சொல்கின்றன...


உங்கள் கவிதை ரத்தினச் சுருக்கம்- தன்மையிலும் அளவிலும்..

பாராட்டுகள்!

தாமரை
30-11-2006, 12:33 AM
தேடிய சாவி கிடைக்காமல்
களைத்தபோது தெரிந்தது.
பூட்டு பூட்டப்படவே இல்லை என்று !!!


பூட்டப் படாத பூட்டுகள்
இதை 10 வருடங்களுக்கே முன்னரே படித்து இருக்கிறேன்...
:eek: :eek:

sriram
01-12-2006, 05:52 AM
செல்வன் ஐயா ..! இருக்கலாம் ஐயா. ! அது எனக்கு தெரியாது ஐயா.
உங்களுக்கு நிறய நிறய தெரிகிறது ஐயா..

franklinraja
01-12-2006, 06:05 AM
நிகழ்காலமே நிதர்சனம் !

அருமை !

வாழ்த்துக்கள், மேலும் தொடருங்கள்..!

meera
01-12-2006, 06:05 AM
ராம், நான் இந்த கவிதை படித்தேன் பொருள் விளங்காததால் விமர்சனம் சொல்லவில்லை.

பாராட்டுகள் ராம். அழகான கவிதை.