PDA

View Full Version : எங்கே தேடுவேன்?

sriram
26-11-2006, 04:34 PM
மல்லாக்க படுத்து மேலே பார்த்தால்
எவ்வளவு பெரிய வானம்!!
எங்கே தேடுவேன் ?
என் கவலைகளை!

meera
01-12-2006, 06:44 AM
பாராட்டுகள் ராம் நல்ல கவிதை.

தொடருங்கள் உங்கள் கவிதை கணைகளை.

கவலையுடன் படுத்தேன்
கண்சிமிட்டும் நட்ஷத்திரங்கள்
என் கவலைகளை அள்ளிக்கொண்டன.

franklinraja
01-12-2006, 07:42 AM
பாராட்டுகள் ராம் நல்ல கவிதை.

தொடருங்கள் உங்கள் கவிதை கணைகளை.

கவலையுடன் படுத்தேன்
கண்சிமிட்டும் நட்ஷத்திரங்கள்
என் கவலைகளை அள்ளிக்கொண்டன.

கவலைகளை
நட்ஷத்திரங்களில் ஒளித்த
மீராவுக்கு ஒரு நட்ஷத்திர வாழ்த்து..! :)

pradeepkt
01-12-2006, 07:50 AM
ஹ்ம்ம்... கவலை தேடும் கவலை... நல்ல சிந்தனை.

நாம் படும் கவலைகள் குறித்துக் கொஞ்ச நாள் முன்னால் நான் கிறுக்கியது இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5613)இருக்கிறது.

sriram
01-12-2006, 09:57 AM
மீரா நட்சத்திரத்திலும், நான் வானத்திலும் கவலைகளை இழக்கிறோம்.

"செருப்பு இல்லாதவன் கவலை கால் இல்லாதவனை பார்க்கும் வரை."

நான் வானம் என குறிப்பிட்டதும், மீரா நட்சத்திரம் என குறிப்பிட்டதும் பிரபஞ்சம் பற்றிய எல்லை அற்று விரிந்து கிடக்கும் சமாசாரங்கள்.
அதை ஒப்பிடும்போது நாம் ஒரு துரும்பிலும் , துரும்பு கிடையாது.
அந்த துரும்பின் துரும்பிடம் உள்ள கவலைகளை எங்கே போய்தேடுவது?
" வாருங்கள் தோழர்களே..!
ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்வோம்.!"

"வாழ்க்கையின் சுவை வாழ்வது.!"

meera
01-12-2006, 10:58 AM
ஹ்ம்ம்... கவலை தேடும் கவலை... நல்ல சிந்தனை.

நாம் படும் கவலைகள் குறித்துக் கொஞ்ச நாள் முன்னால் நான் கிறுக்கியது இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5613)இருக்கிறது.

பிரதீப்,

என்னை உருக வைத்தது உங்கள் கவிதை.

அழகான கவிதை,ஆழமான கருத்து.

துடிக்க வைத்த வரிகள் இவை:

கொடுத்து முடிக்குமுன்
பரபரவென்று பிரித்து
வாயில் அடக்கியதில் கவளம் சிக்க
கண்ணீர் நன்றியோடு ஒரு பார்வை!

ஓவியா
01-12-2006, 01:23 PM

ஆமாம் ராம்.

அழகான வாழ்க்கை தத்துவம்

franklinraja
01-12-2006, 01:41 PM
ஹ்ம்ம்... கவலை தேடும் கவலை... நல்ல சிந்தனை.

நாம் படும் கவலைகள் குறித்துக் கொஞ்ச நாள் முன்னால் நான் கிறுக்கியது இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5613)இருக்கிறது.

படித்தேன்..

கவிதை நடைக்கும், கருணைப் பார்வைக்கும், கருத்து சிந்தனைக்கும்
ஒரு சல்யூட்..! :)

pradeepkt
02-12-2006, 01:17 PM
பிரதீப்,

என்னை உருக வைத்தது உங்கள் கவிதை.

அழகான கவிதை,ஆழமான கருத்து.

துடிக்க வைத்த வரிகள் இவை:

கொடுத்து முடிக்குமுன்
பரபரவென்று பிரித்து
வாயில் அடக்கியதில் கவளம் சிக்க
கண்ணீர் நன்றியோடு ஒரு பார்வை!
மிக்க நன்றி மீரா. என் வாழ்க்கையில் என்னையே கவிதை எழுதவைத்த கணங்கள் மிகக் குறைவு.

ஆமா, இதை அங்கயே எழுதி இருக்கலாம்ல??

pradeepkt
02-12-2006, 01:18 PM
படித்தேன்..

கவிதை நடைக்கும், கருணைப் பார்வைக்கும், கருத்து சிந்தனைக்கும்
ஒரு சல்யூட்..! :)
பதில் சல்யூட் நண்பா! :)

meera
02-12-2006, 01:49 PM
ஹி ஹி இங்கிருந்து தானே அங்கே சென்று அந்த கவிதையை படித்தேன். அதான் ஆர்வக்கோளாறில் இங்கே பதித்துவிட்டேன்:eek: :eek: :D

ஓவியா
03-12-2006, 02:55 PM
ஹி ஹி இங்கிருந்து தானே அங்கே சென்று அந்த கவிதையை படித்தேன்.
அதான் ஆர்வக்கோளாறில் இங்கே பதித்துவிட்டேன்:eek: :eek: :D

ஹி ஹி
ஹி ஹி
:D :D

அமரன்
15-06-2007, 08:29 PM
கறுப்புவானத்தில்
கவலையை தேடாதே
கிடைக்கவா போகிறது.
கண்சிமிட்டும் விண்மீன்கள்
கண்ணுக்குத் தெரியலையா
சந்தோசத்தை விட்டு
துக்கத்தை தேடுகிறாயே.

M.Jagadeesan
21-01-2013, 12:11 PM
மல்லாக்க படுத்து மேலே பார்த்தால்
எவ்வளவு பெரிய வானம்!!
எங்கே தேடுவேன் ?
என் கவலைகளை!

கவலைகளைத் தேடுவானேன்? கலைகளைத் தேடினால் , கவலைகள் போய்விடும்.

M.Jagadeesan
23-02-2013, 12:05 PM
கைப்பிடி இதயத்திற்குள்
கவலைகள் ஒளிந்திருக்க
எல்லையில்லா வானத்தில்
எங்குபோய்த் தேடுவீர் ?