PDA

View Full Version : ஏதாம் கொடுத்த ஆப்பிள்...



rambal
27-04-2003, 04:48 PM
ஏதாம் கொடுத்த ஆப்பிள்...

அந்தக்
குட்டைப்பாவாடைக்கு
சொந்தக்காரியா?

இல்லை, இவளை விட
அந்த மோகனப்புன்னகை
எவ்வளவோ மேல்..

இல்லை, அந்தக் கன்னக்குழி
தெற்றுப்பல்,
காட்டன் சுரிதார்..

இல்லை இல்லை..
தாவணி.. ரெட்டை ஜடை..
மண்வாசனை..

நாயாய் அலைகிறது..
திரும்பி என்னிடமே வருகிறது
வான் நோக்கி வீசி எறிந்த பந்தாய்...

போஸ்ட்மரம் கண்டவுடன்
காலைத் தூக்குவதாய்..
மாராப்பு ஒதுங்குகிறதா என்று கண்கள்..

இவள் சிரிக்கமாட்டாளா?
பேசமாட்டாளா?
ஏங்குகிறது...

ராத்திரி நேரம் என்பது
மதிய நேர சஹாராவாய்
அனல் அடிக்கிறது...

உடைந்து போன
டைட்டானிக்காய்
அல்லாடுகிறது..

எல்லாவற்றையும்
எழுதத் துடிக்கிறது..
நிர்வாணமாய் காண
வெட்கமாய்..

ஆதாமே.. ஏனடா
வாங்கினாய் ஏவாள்
கொடுத்த ஆப்பிளை?

karikaalan
27-04-2003, 04:53 PM
வழியில் காணப்படும் அனைத்துப் பெண்டிரும் தனது காதலியாகவேண்டும் என்னும் ஆசை!
நனவானால்...... நினைக்கவே இனிக்கிறதே
ஆதாம், இன்னோர் ஆப்பிள் சாப்பிடு!

Vandhiyathevan
27-04-2003, 04:54 PM
கவிதை வரிகளில் ரொம்பவே தீவிரம்..

அதுசரி, ஆதாம்+ஏவாள் = ஏதாம்???

poo
27-04-2003, 05:03 PM
அன்று விதைத்தது...

அருமை ராம்!!!

kavitha
06-04-2004, 09:06 AM
அனர்த்தமாகாத
ரசனைகள்!
நுணுக்கமான
பார்வைகள்!

சகோதரிகளும் படிக்கும்படி எழுதுங்கள் ராம்!

Nanban
06-04-2004, 05:31 PM
வெகு சிலராலே மட்டுமே மன ஊசலாட்டத்தை ஒத்துக் கொள்ள முடியும்....

அந்த வகையில் இந்த கவிதையும் ஒன்று.....

எத்தனையோ விஷயங்கள் படிக்காமல் விடப்பட்ட போதிலும், விடாமுயற்சியும், ஆர்வமும் கொண்ட சிலரால், சில நல்லவற்றை மீண்டும் படிக்க முடிவது சந்தோஷமே.....