PDA

View Full Version : கேள்விக்குறி?

crisho
25-11-2006, 10:32 AM
பூவை நீ
பூவைப் போல் மென்மை
என்று தான்
கண் வைத்தேன்...
காதலித்தேன்...

ஆனால் உன்
வாய் வார்த்தையில்
வன்மை அல்லவா தெரிகிறது?
உன் மனக் கதவு பூட்டி
அல்லவா இருக்கிறது?

விண்மதியின் பார்வை
குளிர்ச்சியானது
மெண்மதி (.....), ஏன்
உன்பார்வை மட்டும் தீயானது?

உன் முழு அழகும்
வியப்புக்குறி!
நீ எனக்கு கிடைப்பாயா
என்பது தான் (.....), கேள்விக்குறி?

(இது என் பழைய கவிதைகளில் ஒன்று)

ஓவியா
25-11-2006, 12:55 PM
காதலிக்கும் தருனம்
இப்படிதான் அனைத்தும்
அத்தனை அழகாய் தெரியுமாம்......பூவாய் ,விண்மதியாய் ,அழகாய்

கிஷோர்,
பூக்களை கூட
தொட்டு பர்த்தால் தான்
அதன் மெண்மையளவு தெரியும்.....

meera
01-12-2006, 06:51 AM
கிஷோர்,

நீண்ட இடைவெளிக்கு பின் உங்க கவிதை படித்தேன்.அழகாய் இருக்கிறது உங்க கவிதை.

தொடர்ந்து உங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.

leomohan
01-12-2006, 07:26 AM
அருமை கிஷோர். கிடைக்கலேன்னாலும் கவலை வேண்டாம்.

டாக்ஸி, ஆட்டோ, பஸ், ட்ரெயின், பெண்கள், இவை ஒன்று போனால் இன்னொன்று வரும் என்று எங்கள் தானை தலைவர் காதல் மன்னன் ஆமீர் கான் சொல்லியிருக்கிறார். :)

franklinraja
01-12-2006, 07:50 AM
நீ எனக்கு கிடைப்பாயா
என்பது தான் (.....), கேள்விக்குறி?

கேள்விக்குறியை,
முற்றுப்புள்ளியாக்கிவிடாமல்,
அரைப்புள்ளியாக மாற்றி,
ஆச்சரியக்குறியாக்கிவிடுங்களேன்..! :)

ஓவியா
01-12-2006, 03:06 PM
அருமை கிஷோர். கிடைக்கலேன்னாலும் கவலை வேண்டாம்.

டாக்ஸி, ஆட்டோ, பஸ், ட்ரெயின், பெண்கள்,
இவை ஒன்று போனால் இன்னொன்று வரும் என்று எங்கள் தானை தலைவர் காதல் மன்னன் ஆமீர் கான் சொல்லியிருக்கிறார். :)

டாக்ஸி, ஆட்டோ, பஸ், ட்ரெயின், விமானம், படகு, நீர்முழ்கி கப்பல், ஆண், மாப்பிள்ளே,
இவை ஒன்று போனால் இன்னொன்று வரும் என்று எங்கள் தலைவிகள் காதல் மன்னிகள் (நன்றி:லியோமோகன்) லச்சுமி, ராதிகா, குஷ்பு சொல்லியிருக்காங்க.......

தாமரை
02-12-2006, 03:08 AM

பூவை நீ
பூவைப் போல் மென்மை
என்று தான்
கண் வைத்தேன்...
காதலித்தேன்...

ஆனால் உன்
வாய் வார்த்தையில்
வன்மை அல்லவா தெரிகிறது?
உன் மனக் கதவு பூட்டி
அல்லவா இருக்கிறது?

விண்மதியின் பார்வை
குளிர்ச்சியானது
மெண்மதி (.....), ஏன்
உன்பார்வை மட்டும் தீயானது?

உன் முழு அழகும்
வியப்புக்குறி!
நீ எனக்கு கிடைப்பாயா
என்பது தான் (.....), கேள்விக்குறி?

(இது என் பழைய கவிதைகளில் ஒன்று)

காதலில் தன்சுகம் தேடல் முதலடி..
காதலியே சுகம் என்பது இரண்டாமடி..
காதலே சுகமென்பது மூன்றாமடி..
இன்னும் எத்தனையோ "அடி"கள் இருக்கின்றன..
என் காதலிக்காக
அவள் நிம்மதிக்காக
அவளை நான்
காதலிக்கவில்லை..

இப்படி எத்தனையோ காதலர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது தெரியுமா?

தாமரை
02-12-2006, 12:23 PM
கேள்விக்குறியை,
முற்றுப்புள்ளியாக்கிவிடாமல்,
அரைப்புள்ளியாக மாற்றி,
ஆச்சரியக்குறியாக்கிவிடுங்களேன்..!

கேள்விக் குறி
நிமிர்ந்தாலே
ஆச்சர்யக் குறிதானே.. (? --> !)

குனிந்து இருந்தால்
வாழ்க்கை கேள்விக்குறி
நிமிர்ந்தால்
ஆச்சர்யக் குறி..

இதில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப் புள்ளி, கரும்புள்ளி, பெரும்புள்ளிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை

இளசு
02-12-2006, 07:55 PM
தமிழ் விளையாடுகிறது...

கிஷோரின் கவிதையிலும்.. செல்வனின் பின்னூட்டங்களிலும்...

மன்றம் மிளிர்கிறது....

----------------------------------------

காதல்?
அது பாட்டுக்கு வளரட்டும்..
தற்குறியாகவோ.. எந்தக்குறியாகவோ...

கவிதைகளுக்குக் கருவாக இருப்பதால்
காதல் பரவட்டும்..

பென்ஸ்
02-12-2006, 08:01 PM
கிஷோர்...

முள்ளில்லாத ரோஜாவுக்கு புகழேது...
அது அவளாக இருக்கிறாள்

நிலவு அவள்..
பார்வை சூரியன் - உமக்கு
உலகம் அவள் என்றால்
இன்னும் சுற்றிவாரும்...

பென்ஸ்
02-12-2006, 08:05 PM
அருமை கிஷோர். கிடைக்கலேன்னாலும் கவலை வேண்டாம்.

டாக்ஸி, ஆட்டோ, பஸ், ட்ரெயின், பெண்கள், இவை ஒன்று போனால் இன்னொன்று வரும் என்று எங்கள் தானை தலைவர் காதல் மன்னன் ஆமீர் கான் சொல்லியிருக்கிறார். :)

மோகன்... நான் 12வது படிக்கும் பொது ஆங்கிலத்தில் (அது எப்படி ஆங்கில பாடம் மட்டும் மறக்காம இருக்குன்னு கேக்கபிடாது) ஒரு பாடம் " டிசம்பர் மாத குளிரில் தவற விட்ட கடைசி பேருந்தை பற்றிய ஒரு நல்ல சிறுகதை...

never miss an oppertunity.... சரியா...:rolleyes: :rolleyes: :rolleyes:

leomohan
02-12-2006, 08:07 PM
டாக்ஸி, ஆட்டோ, பஸ், ட்ரெயின், விமானம், படகு, நீர்முழ்கி கப்பல், ஆண், மாப்பிள்ளே,
இவை ஒன்று போனால் இன்னொன்று வரும் என்று எங்கள் தலைவிகள் காதல் மன்னிகள் (நன்றி:லியோமோகன்) லச்சுமி, ராதிகா, குஷ்பு சொல்லியிருக்காங்க.......

ஓஹோ அப்படி ஒரு சங்கதி இருக்கா. நல்லது தான். ஆட்டோ, டாக்ஸியிலையும் ஆண் (ON) டாக்ஸி, ஆஃப் (OFF) டாக்ஸி இருக்கத்தானே செய்யுது.

leomohan
02-12-2006, 08:08 PM
மோகன்... நான் 12வது படிக்கும் பொது ஆங்கிலத்தில் (அது எப்படி ஆங்கில பாடம் மட்டும் மறக்காம இருக்குன்னு கேக்கபிடாது) ஒரு பாடம் " டிசம்பர் மாத குளிரில் தவற விட்ட கடைசி பேருந்தை பற்றிய ஒரு நல்ல சிறுகதை...

never miss an oppertunity.... சரியா...:rolleyes: :rolleyes: :rolleyes:

Never miss an opportunity .................. to hold on........................... :-)

If you happen to miss............................just pass on........................ :-)

தாமரை
03-12-2006, 04:08 AM
ஓஹோ அப்படி ஒரு சங்கதி இருக்கா. நல்லது தான். ஆட்டோ, டாக்ஸியிலையும் ஆண் (ON) டாக்ஸி, ஆஃப் (OFF) டாக்ஸி இருக்கத்தானே செய்யுது.
அப்பிடியெல்லாம் சொல்லப் படாது.. படாதுன்னா படாது... அப்புறம் ஸ்விட்சை "ஆண்" பண்ணினாத்தான் லைட் எரியும்.. கம்ப்யூட்டரை "ஆண்" பண்ணினாத்தான் வேலைசெய்யும் என்று வசனங்கள் வரும்..

அமரன்
30-07-2007, 07:12 PM
அழகுக் கவிதை...உரிமையாளரை தேடவேண்டியுள்ளது.

விகடன்
30-07-2007, 07:16 PM
காதலிக்கும் தருனம்
இப்படிதான் அனைத்தும்
அத்தனை அழகாய் தெரியுமாம்......பூவாய் ,விண்மதியாய் ,அழகாய்
.

ஏனக்கா?
உங்களையும் யாராச்சும் இப்படி ஆரம்பத்தில சொல்லி.....