PDA

View Full Version : சகியரே மற்றும் சகாக்களே வணக்கம்



ranjith_1973
25-11-2006, 03:43 AM
சகியரே மற்றும் சகாக்களே
வணக்கம்
நான் சென்னையில் ஒரு மென்பொருள் குழுமத்தில் திட்டக்குழு தலைவராக பணியாற்றுகின்றேன். எனது இலங்கை தமிழ் சகா ஒருவர் கதைக்கும் அழகுத்தமிழ் பிடித்துப்போனதால், முடிந்தவரை தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தவேண்டுமென்று முயன்று கொண்டிருக்கிறேன். பிழைகளிருப்பின் மன்னித்து சுட்டவும்.

தாமரை
25-11-2006, 03:47 AM
பரவாயில்லையே.. இங்குளோர் சகிப்புத்தன்மை கொண்டோர் என்
பதை இவ்வளவு சீக்கிரம் அறிந்து கொண்டீரே,, (சகியரே ன்னா அப்படித்தானே அர்த்தம் :confused: :confused: :confused: )

தமிழில் கரைகண்டோர் கிடையாது.. வாங்க வாங்க ஒரு பலகை (சங்கப் பலகையாய் இருக்குமோ :D :D :D ) கிடைச்சிருக்கு.. பிடித்துக் கொண்டு நீந்துவோம்.

crisho
25-11-2006, 09:20 AM
ரஞ்சித்தை வருக வருக என வரவேற்று மகிழ்கின்றேன்!

leomohan
25-11-2006, 10:14 AM
வாருங்கள் ரஞ்சித் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ஓவியா
25-11-2006, 11:14 AM
வணக்கம் ரஞ்சித்

நலமா?

தங்களை வருக வருவென்று இரு கரம் கூப்பி வரவேர்கின்றேன்

உங்கள் வரவு எங்களுக்கு மகிழ்ச்சியே

மதி
27-11-2006, 01:56 AM
வரவேற்புகள் ரஞ்சித்

மயூ
27-11-2006, 03:15 AM
ஈழத் தமிழனால் உந்தப் பட்ட இந்தத் தமழனை இன்னுமொரு ஈழத் தமிழன் வரவேற்கின்றான்....

franklinraja
27-11-2006, 10:06 AM
வருக.. வருக.. ரஞ்சித்..!

செந்தமிழும் நாப்பழக்கம் !
இப்போது, செந்தமிழும் கைப்பழக்கமுன்னு சொல்லலாம்..!
(எழுத, எழுத வந்துடும் பாருங்க..!!)

அறிஞர்
27-11-2006, 11:33 PM
ரஞ்சித்தின் வருகை மன்றத்தை சிறப்பிக்கட்டும்.....

தமிழர்கள்.. தமிழில் உரையாடவேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.

இனியவன்
28-11-2006, 03:31 AM
ரஞ்சித்துக்கு அன்பு வரவேற்பு.

இளசு
28-11-2006, 09:13 PM
வருக ரஞ்சித் அவர்களே!

தமிழார்வமும் கொஞ்சம் மன்றம் உலாவ நேரமும் இருந்தால் போதும்..

பிழைகளின்றி தட்டச்சலாம்...!

ஒத்த கருத்துடைய மன்ற உறவுகளுடன் இனிமையாய் அளவளாவலாம்!

வாழ்த்தும் வரவேற்பும்!

veejaysurgicals
29-11-2006, 12:55 AM
I am Sampath from Tamilnadu. I do not know how to download the Tamil font ? I want to converse in Tamil with you.

veejaysurgicals
29-11-2006, 12:57 AM
My e-mail id: sampa001us@gmail.com
Ph: 0431-2764588 , Mob: 09894671322

pradeepkt
29-11-2006, 04:14 AM
வாருங்கள் ரஞ்சித் மற்றும் சம்பத்.

சம்பத், எஸ் டி டி கோடைப் பார்த்தால் உங்களுக்கும் திருச்சி போல் தெரிகிறதே.. மீண்டும் வரவேற்புகள். தமிழில் அச்சடிக்க உதவிக்கு கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

meera
29-11-2006, 02:00 PM
வாங்க ரஞ்சித் மற்றும் சம்பத்.



உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.