PDA

View Full Version : காபி வித் கலைஞர்!pradeepkt
24-11-2006, 03:34 AM
இதை இந்த வாரம் விகடனில் படித்துவிட்டு ஆபீசில் தன்னந்தனியாகச் சிரித்துக் கொண்டிருந்தேன். எனவே யாம் பெற்ற இன்பம் இவ்வையம். சும்மாப் பின்னிப் பெடலெடுக்கிறாங்க மக்கா! அதிலயும் தயாநிதியையும் கலைஞரையும் போட்டு வாங்கிருக்காங்க பாருங்க... ஹி ஹி

காபி வித் கலைஞர்!

--
விஜய் டி.வி&யின் கிரவுண்ட் ஃப்ளோர் செட்கிடு கிடுக்கிறது. பின்னாலேயே தயாநிதி மாறன் தலையை கேமராவுக்கு வாகாக நீட்டிக்கொண்டு வர, கலைஞர் புன்னகையுடன் வருகிறார். இது ‘காபி வித் கலைஞர்’ நிகழ்ச்சி...

‘‘நிகழ்ச்சியின் பெயரைத் தெள்ளு தமிழில் ‘தேநீருடன் கலைஞர்’ என மாற்றியிருந்தால், கேளிக்கை வரி விலக்கே தந்திருப்பேன்’’ என்று கலைஞர் சொல்ல, தயாநிதி மாறன் சைடு ஸ்க்ரீனை கிழித்துக்கொண்டு எட்டிப் பார்க்க முயல்கிறார். நாலைந்து பேர் அவரைக் கெஞ்சிக் கொஞ்சிப் பிடித்து அழைத்துப் போகிறார்கள்.
கலைஞர்: ‘‘முதலில் நம் நிகழ்ச்சிக்கு கடுப்பு விருந்தினர்களாக வந்திருப்பவர்கள் அன்புத் தங்கச்சி, பாச மலர், இந்த அண்ணணின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிற புரட்சித் தமிழச்சி ஜெயலலிதா... அவரோடு அழுகைத் தம்பி, பாசக்காரப் பயல், கலிங்கப்பட்டி சுக்கா ரொட்டி, தோட்டம் மாறினாலும் காட்டம் மாறாத தாயகத் தம்பி வைகோ...’’ என்று சொல்ல,

‘‘இன்னிசை அளபெடையே அம்மா,
ஜெயா டி.வி. போயிடலாம் வாம்மா,
கலைஞர் காதில் சுத்திடுவாரு ரீல்மா” எனப் பாட்டுச் சத்தம். ‘வரலாறு’ படப் பாடலை வைகோ அழுத படியே பாடி வர, ‘‘ம்ம்ம்’’ என அதட்டியபடி வருகிறார் ஜெயலலிதா.

கலைஞர்: ‘‘தம்பி வைகோ... இது ‘பாட்டுக்குப் பாட்டு’ இல்லையடா கண்மணி! சரி, நிகழ்ச்சிக்குப் போக லாம். (ஜெயலலிதாவைப் பார்த்து) எப்படி இருக்கிறாய் தங்கச்சி?”

ஜெயலலிதா(ஆவேசமாகி): ‘‘நல்லாவே இல்லை. எல்லா பஸ்லயும் திருக்குறளை அழிக்கிறீர்களாமே? இரவோடு இரவாக நூதனப் போராட்டம் நடத்தப் போகிறோம். பஸ் ஸ்டாண்டில் நிற்கிற எல்லா பஸ்லயும் ஏறி, ‘என்னாத்த சொல் வேனுங்கோ... வடுமாங்கா ஊறு துங்கோ’, ‘அரைச்ச மாவ அரைப்போமா, துவைச்ச துணியத் துவைப்போமா?’ போன்ற கருத்தாழமிக்க வரிகளை எங்கள் தொண்டர்கள் எழுதப் போகிறார்கள்...”

வைகோ: ‘‘அய்யகோ... 1879&-லே பெல்ஜியம் மாநகரிலே, கால்கோல் மாலின் அரசுக்கெதிராக எழுந்ததே எழுத்துப் புரட்சி... நான் நினைத்துப் பார்க்கிறேன்...”

pradeepkt
24-11-2006, 03:39 AM
கலைஞர்(குறுக்கிட்டு): ‘‘நினைத்துப் பார்க்க நேரமில்லையடா செல்லமே! நான் என்றால் உதடுகள் ஒட்டாது; நாம் என்றால்தான் ஒட் டும். இது உனக்குத் தெரியாதா?”
ஜெ: ‘‘ஆமா... கருணாநிதின்னா உதடு ஒட்டலை, ஸ்டாலின்னா ஒட்டலை, தயாநிதி, கலாநிதி, தயாளு, ராசாத்தி, அழகிரின்னு இவங்க குடும்பத்திலேயே யாருக்கும் ஒட்டலை! அப்புறம் எப்படி ஒற்றுமை பத்திப் பேசுறாங்க..?” என்று சொல்ல, தன் பெயரைக் கேட்டதும் கேமராவுக்குக் குறுக்கே ஓடி வருகிறார் தயாநிதி. அவரை மறித்துத் தூக்கிப் போகிறார்கள் செக்யூரிட்டிகள்.

கலைஞர்(மெதுவாக): ‘‘வர வர இந்தம்மா நம்மள மாதிரி பேச ஆரம்பிச்சிடுச்சே... (சத்தமாக) காபிதான் சூடாக இருக் கும்; இந்த நிகழ்ச்சி அல்ல! (சட்டென்று குரலைக் குழை வாக்கி) தங்கச்சி, உன்னை மாடர்ன் தியேட்டர்ஸ் படப் பிடிப்புத் தளத்தில் நானும் ஆருயிர் நண்பன் கண்ணதாச னும் பார்த்தபோது, உனக்கு வளமான எதிர்காலம் இருக் கிறது என வாழ்த்தினேனே, நினைவில்லையா..?”
வைகோ(மெதுவாக): ‘‘ஆஹா... காட்டமா பேச ஆரம்பிச்சா, கலைப்பயண ஃப்ளாஷ்பேக் சொல்லிக் கவிழ்க்கிறதே இவருக்கு வேலையாப் போச்சே..!”

ஜெ(சட்டென்று உருகி): ‘‘எப்படியண்ணே மறப்பேன்..? அன்றிலிருந்து இன்று வரை என்னை இவ்வளவு உயரத்துக்குக் கொண்டுவந்ததே நீங்கள்தானே? இப்போதும் நான் சறுக்குகிறபோதெல்லாம், ஏதாவது படத்துக்கு வசனம் எழுதியும், முரசொலியில் கவிதை எழுதியும் எனக்கு மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் வாங்கித் தருவதே நீங்கள்தானே..!”

கலைஞர்(உணர்ச்சி வசப்பட்டு): ‘‘வாழ்க்கை என்னும் போட்டு... வழங்குகின்ற பாட்டு... ஒரே குட்டையில் ஊறின அண்ணன் தங்கச்சி கூட்டு...”

ஜெ(பதிலுக்கு): ‘‘பையனூர் பங்களாவில் தங்கை உறங்குகிறாள், அண்ணன் கூட்டணி சண்டையில் கலங்குகிறார், தயாநிதி&ஸ்டாலி னைத் திரியவிட்டார், தங்கை தினகரன்& சகாதேவனென வளர்த்துவிட்டாள்” எனப் பாட, இருவரும் கண்கலங்குகிறார்கள். அதைக் கண்டு டர்ர்ராகி,

வைகோ: ‘‘ஆஹா... இப்பிடியே விட்டா, நாம எத்தியோப்பியாவுக்குப் போய்தான் அரசியல் பண்ணணும்..!” என உஷாராகிறவர், ஆவேசங்கொண்டு...
‘‘போட்டுத் தாக்கு, கூட்டணி வூட்டுல போட்டுத் தாக்கு, நடுவுல பூந்து நீ போட்டுத் தாக்கு, புரியலை ஒண்ணுமே போட்டுத் தாக்கு..!” என புலி டான்ஸ் போட, ‘‘அப்படிப் போடு போடு போடு, கேஸ போடு புதுசாக...” எனப் பாதுகாவலர்களின் பிடிக்குள் இருந்தபடி திமிறிப் பாடுகிறார் தயாநிதி.

கலைஞர்: ‘‘போதும்! இப்போ உங்களைப் பற்றி உங்கள் நண்பர்களிடம் எடுத்த வீடியோ க்ளிப்பிங்ஸ் பேட்டி...” என்றதும், பக்கத்து ஸ்க்ரீனில் தோன்றுகிறார் சசிகலா.

சசிகலா:‘‘அக்கா, அந்தாளு ரொம்ப மோசமானவருக்கா! தம்பி இப்பதான் போன் பண்ணிச் சொல்லுச்சு. கவிதையாப் பேசுவாரு; ஆனா, காலை வாரிடுவாருங்கிறாங்க. அவர் மேல இப்பவே ஒரு கேஸ் எழுதி வெச் சுக்கிறது நல்லதாம்... ஜாக்கிரதையா இருக்கா. அப்புறம் உன் இஷ்டம்!”

வைகோ(ஜெர்க்காகி) ‘‘யாரைச் சொல்றாங்க... இன்னிக்கும் தூங்க முடியாது போலிருக்கே!”

சசி(தொடர்ந்து): ‘‘மகாதேவனுக்கு ‘ஈ’ பட டி.வி.டி வேணுமாம். வரும் போது வாங்கிட்டு வந்துடுக்கா. இன்னிக்கு மொச்சைக் கொட்டைப் புளிக்கொழம்பு பண்ணச் சொல்லி இருக்கேன். நேரத்துக்குச் சாப்பிட வந்திருக்கா!” என்கிறார். ஜெயலலிதா முகத்தில் புன்னகை.

கலைஞர்: ‘‘தங்கச்சி, ஒரு பர்ஸனல் கேள்வி... இந்த ஆணவம், திமிர் போன்ற நற்குணங்களை உனக்குக் கற்றுத் தந்தது யார்?”

ஜெ(ஆவேசமாகி): ‘‘குடும்ப ஆட்சி நடத்துகிற கருணாநிதி ஒரு குள்ளநரி, தயாநிதிக்கு கோயம்புத்தூரில் தொழிற்சாலை இருக்கிறது, செல்விக்கு சிங்கப்பூரில் துணிக்கடை, கனி மொழிக்கு துபாயில் நகைக்கடை, திருவள்ளுவரையே அவமானப் படுத்திவிட்டார் கருணாநிதி! விட மாட்டோம் நாங்கள்...” என வைகோவை முறைக்க,
வைகோ: ‘‘அய்யகோ... காட் டாட்சி...” எனக் கதற, திடுதிடுவென எங்கிருந்தோ ஜெயா டி.வி. கேமரா மேன் ஓடி வருகிறார். அதைக் கண்டு, ‘‘ஏய்... ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?” என சன் டி.வி. கேமராமேனுடன் தயாநிதி ஓடி வர, அத்தனை பேரையும் வெளியேற்றுகிறார்கள் காவலர்கள்.
நிகழ்ச்சி தொடர்கிறது...


கலைஞர்: ‘‘அடுத்து நம் நிகழ்ச் சிக்கு வரப்போகும் கசப்பு விருந்தி னர்கள் குனிந்தால் குடிதாங்கி, நிமிர்ந் தால் வெடி தாங்கி, மருத்துவர் ராமதாஸ், அவருடன் ‘அன்புத் தோழி’ நாயகன், முறுக்கு மீசைக் காவலன், கறுத்த சிறுத்தை தம்பி திருமா...” எனச் சொல்ல, மியூஸிக்!
‘‘வர்றாரு வர்றாரு வர்றாரு...” என முன்னால் தாவி வருகிற திருமா,
‘‘கற்க கற்க கலைஞர் கற்க,
நிற்க நிற்க அய்யா நிற்க,
அங்கே இங்கே கூட்டணி
வைத்து
தம்பி எங்கேயோ போகிறான்...” என ஸ்டைல் டான்ஸ் போட, பின்னாலேயே காற்றில் கை தட்டியபடியே வருகிற ராமதாஸ், ‘‘கொசுத் தொல்லை அதிகமா இருக்கப்பா..!” என் கிறார்.

கலைஞர்: ‘‘பொடி வைத்துப் பேசுவதில் மருத்துவர் ஒரு கருத்தவர்..!”

pradeepkt
24-11-2006, 03:43 AM
ராமதாஸ்: ‘‘சிம்பு & நயன்தாரா பிரிஞ்சுட்டாங்களாம்ல... தம்பிங்க சொன்னானுங்க. அதைப் பத்திக் கூட்டணிக்குள்ள யாரும் பேசல. அதான் நாங்களே கூடி சில முடிவுகள் எடுத்திருக்கோம்...”

திருமா: ‘‘ஆமா... இவங்க காதலிப்பாங்களாம்... பார்க் ஓட்டல்ல சுத்துவாங்களாம். சிங்கப்பூர்ல திரிவாங்களாம், பாங்காக்ல பின்னுவாங்களாம்... கடைசியில நட்பு முறிஞ்சு, காதல் பொழிஞ்சுன்னு கட்டையைக் கொடுப்பாங்களாம். என்னடா, விளையாடுறீங்களா? தமிழ்க் கலா சாரத்தைத் தாளிக்கிறாங்க, பார்த்துட்டு சும்மா இருக்கிறதா?”

கலைஞர்: ‘‘புதுசா பிரச்னை யைக் கிளப்புறாங்களே..!”

திருமா: ‘‘அதனால சீமான் தலைமையில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கப் படையை அனுப்பி, சிம்பு & நயன்தாராவை அள்ளிட்டு வந்து, தமிழ் முறைப்படி இரு மன வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்தப் போறோம். மக்கள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு உண்டு...”

ராம: ‘‘இதுக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தரலைன்னா, அரசுக்கு ஆதரவு தர்றதை வாபஸ் வாங்குறது பற்றிப் பரி சீலிக்க வேண்டி வரும். ஏன்னா, தி.மு.க&வில் கலைஞர், அன்பழகன், அறிவாலயம் வாட்ச்மேனைத் தவிர யாரும் நல்லவங்க கிடையாது” எனும்போது, திருமா திடுதிப் பென ஒரு மஞ்சள் சால்வையை உதறி கலைஞருக்குப் போட, டென்ஷனாகிறார் ராமதாஸ்.

கலைஞர்: ‘‘சகோதரா... கூட்டணியில் குழப்பங்கள் வருவது வாடிக்கை. குழப்பமே கூட்டணியாய் இருப்பது வேடிக்கை. தைலாபுரம் தோட்டத்து மாம்பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, இனிது இனிது என மகிழ்ந்த அண்ணனை மறந்துவிட்டாயா..?” என சென்டிமென்ட் ராக்கெட்டை வீச,

திருமா: (மெதுவாக) ‘‘பேசாம ‘கலகம் வித் கலைஞர்’னு பெயர் வெச்சிருக் கலாம்!’’

கலைஞர்: ‘‘சமீபத்தில் என்ன படம் பார்த்தீர்கள் மருத்துவரே?’’
ராமதாஸ்: ‘‘தர்மபுரிதான்... தம்பி விஜயகாந்த் நடிப்பில் வெளுத்துக் கட்டிவிட்டார். அன்புமணியிடம் சொல்லி, சோனியாவிடம் பேசி, ஆஸ்கருக்கே பரிந்துரைக்கலாம் எனத் தோன்றியதற்கும் கூட்டணியின் ஒத்துழைப்பு வேண்டும்...”

திருமா: ‘‘புதுசு புதுசா துண்டைப் போடுறதில் இவரை மிஞ்ச முடியாது சாமீ..! (சத்தமாக) ஏங்க, ‘அன்புத் தோழி’யையும் சிபாரிசு பண்ணுங்க. நல்லா வந்திருக்கு...”

கலைஞர்(மெதுவாக): ‘‘இவர்களை அனுப்பிவிட வேண்டியதுதான்... இப்போ, இவர்களைப் பற்றி நண்பர் களின் பேட்டி வீடியோ க்ளிப்பிங்ஸ்...” என்றதும், சைடு ஸ்க்ரீன் விஷงவலில் சேகுவேரா தேநீர்ச் சட்டையுடன் தோன்றுகிறார் சீமான்.

சீமான்: ‘‘அய்யா... ‘சிவாஜி’ படத் தோட காட்சிகளை வலைதளத்தில் விட்டிருக்கானுங்க. மசமசன்னுதான் தெரியுது. ஆனா, சமாசாரம் என்னன்னா, ‘சிவாஜி மெடிக்கல் காலேஜ்’னு ஒரு பெயர்ப் பலகை வருது. படத்துல மத்திய சுகாதாரத் துறையை ஏதோ கிண்டுறாங்களாம். ஏதோ சதி இருக்குன்னு பெரிசா பிரச்னையைக் கிளப்பினா, ஆறு மாசத்துக்குப் போராட்டம், ஆர்ப் பாட்டம்னு பட்டை கிளப்பி குட் டையைக் குழப்பிரலாம்! தம்பிங்க எல்லாம் வேலை இல்லாம வாட்டமா இருக்கானுங்க. வள்ளுவர் கோட் டத்துல கூடிரலாமா? தங்கருக்கு தாக்கல் அனுப்பிரவா?” என்கிறார்.

ராம: ‘‘ஆமா, அதுதான் சரி! இது தமிழ் இனத்துக்கே இழுக்கு. கூட்டணித் தலைவர் உடனடியா வாய் திறக்கணும். ஆதரவு தரணும். இல்லைன்னா பச்ச பச்ச பச்ச...” என ராமதாஸ் காட்டமாக,
‘‘விளம்பர இடைவெளி விடடா என் வெல்லக்கட்டி...” என அலறி, வந்தவர்களை அப்புறப்படுத்துகிறார் கலைஞர்.


கலைஞர்: ‘‘அடுத்து நம் அரங்குக்கு வரப்போகிற இடிப்பு விருந்தினர்கள்... இதோ...”

‘‘மானா மதுரை தலைவன் ஒருத்தன் கலக்குறான்டா,
மண்டபத்தை இடிக்கிற பயலு களையெல்லாம் கிழிக்கிறான்டா,
பட்டிதொட்டி கலகலக்க சிட்டிதொட்டி விறுவிறுக்க,
அம்மா அய்யா எல்லோருமே அய்யோ அய்யய்யோ...” எனப் பாட்டுச் சத்தம் வருகிறது. பண்ருட்டி ராமச் சந்திரன் நின்று வழிவிட, வீராவேசமாக வருகிறார் விஜயகாந்த்.

கலைஞர்: ‘‘வாடா என் கலைத் தம்பி... கலகத் தும்பி... கோபாலபுரம் வீட்டுக்கு வந்தபோது போட்ட ஆப்பிள் மாலையை அப்படியே குளிர்பெட்டிக்குள் வைத்திருக்கிறேனடா, ஆண்டாள் அழகர் தங்கக் கம்பி...”

விஜயகாந்த்: ‘‘வணக்கம். வயசுல மூத்தவங்க நீங்க. ஆனா, எனக்குப் பிடிச்சா ஆப்பிள் மாலை போடவும் தெரியும்; இடிச்சா, ஆப்பிளாட்டம் பொளக்கவும் தெரியும்..!”

பண்ருட்டி: ‘‘அடடா... எப்பிடி எம்.ஜி.ஆர். மாதிரியே பேசுறார் பாருங்க..!”

கலைஞர்: ‘‘எம்.ஜி.ஆர். என் ஆருயிர் நண்பர். ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தவர்கள். உன்னைக் கறுப்பு எம்.ஜி.ஆர். என அழைக்கிறபோது உள்ளம் உவகை கொள்கிறது. மண்ட பத்தை இடிப்பது அரசு. உன்னை ஆருயிர்த் தம்பியாக ஏற்பது என் மனசு. அரசு வேறு, மனசு வேறு..!”

pradeepkt
24-11-2006, 03:44 AM
பண்(மெதுவாக): ‘‘அறுபது வருஷமா இப்படிப் பேசிப் பேசியே பல பேரை போண்டாவாக்கி அறிவாலயம் வாசல்ல அண்டா குண்டா தூக்கவிட்டிருக்கார். உஷாரு, உஷாரு..!”

விஜய(கண்கள் சிவக்க): ‘‘ஆமா.... அம்பது வருஷமா மாறி மாறி ஆட்சி பண்ணி என்ன கிழிச்சாங்க? ஒண்ணு ஒரு குடும்ப ஆட்சி, இன்னொண்ணு பல குடும்ப ஆட்சி... இதுதானேங்க நடக்குது! மக்களுக்கு என்ன பண்ணீங்க? கேட்க ஆளில்லைன்னு நினைச்சீங்களா..? நான் கேட்பேன். காபி வித் கலைஞர்னு நிகழ்ச்சி நடத்தறீங்களே, நாட்ல எல்லா மக்களும் காபி குடிச்சாங்களான்னு யோசிச்சீங்களா?”

பண்(குறுக்கிட்டு): ‘‘எம்.ஜி. ஆரோட கர்லாக்கட்டைதான் சத்யராஜ்கிட்டே இருக்கு; பிரசார வேன் இவர்கிட்டேதான் இருக்கு. அதனால இவர்தான் அடுத்த எம்.ஜி.ஆர்...”

கலைஞர்(மெதுவாக): ‘‘ஆஹா... எந்நேரமும் பிரசார மூட்லயே இருக்காங்களே! (சத்தமாக) இப்போ இவர்கள் பற்றிய நண்பர்களின் வீடியோ க்ளிப்பிங்ஸ் பார்த்துத் தொலைப்போமடா கண்மணி!” என்றதும், சைடு ஸ்க்ரீனில் விஷงவல் வருகிறது.

ஆட்டோக்காரர், பூ விற்கும் பெண், டாஸ்மாக்வாசி எனப் பலரும் ஸ்க்ரீனில் தோன்றி, ‘‘தப்புங்க! மண்டபத்தை இடிக்கிறது தப்புங்க. விஜயகாந்த் நல்லவருங்க. அவரு சின்னக் கவுண்டர்ங்க, ரமணாங்க, வல்லரசுங்க... இதைத் தட்டிக் கேட்கணுங்க...” என்றெல்லாம் பேச,
‘‘சார், சார்... க்ளிப்பிங்ஸை மாத்திட்டாங்க” என உள்ளேயிருந்து பதற்றமான குரல் வருகிறது.

‘‘ஏய்... வர்றேன், வர்றேன்...” என உள்ளே ஓடிவருகிற தயாநிதி, ‘‘கரீட்டுப்பா, மெயின் ரோட்ல மண்டபம் கட்னா, பாலம் எப்டிக் கட்றது? இடிக்கிறது கரீட்டுங்க!’’ என்றெல்லாம் இன்னொரு செட் க்ளிப்பிங்ஸை ஓட்ட, ஏரியாவில் எக்கச்சக்க சத்தம்!

leomohan
24-11-2006, 07:02 AM
ரகளை தான் ப்ரதீப். படித்தேன், ரசித்தேன்

gragavan
24-11-2006, 01:13 PM
ஹா ஹா ஹா.........உண்மையிலேயே அரசியல் நிலை இப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் மனம் உவந்து சிரிக்க முடிந்தது.

เฎ‡เฎฉเฎฟเฎฏเฎตเฎฉเฏ
24-11-2006, 01:43 PM
அய்யோ படிச்சுப்புட்டு ஒரே சிரிப்பாணிதான் போங்கோ.
மொக்கராசுக்கு பாதுகாப்புக் கொடுக்கணும். இல்லைனா இந்த அரசியல்வாதிங்க தூக்கிரவாய்ங்க.. நன்றி பிரதீப் வாசிக்கத் தந்தமைக்கு...

เฎ“เฎตเฎฟเฎฏเฎพ
24-11-2006, 06:45 PM
அரசியல் சரியா தெரியாது இருந்தாலும் படிச்சு ஜோரா சிரிச்சேன்

நன்றி பிரதீப்

காபி வித் பிரதீப் அப்படினு மன்றத்திலே ஆரம்பிக்க்லாமே!!!!

เฎ‡เฎณเฎšเฏ
24-11-2006, 08:32 PM
வாராவாரம் வாய்விட்டு சிரிக்கவைக்கும் தொடர்.
ஜோக்கிரி மொக்கராசு உடல்நலம் பற்றி எனக்கும் கவலை உண்டு.

ஆனாலும் கண்டவனிடம் அடிவாங்கும் வடிவேலு காமெடி போல -
மீண்டும் மீண்டும் சீமான், கார்த்திக், தங்கர், டர்ர்ர்ர்ராவது, தெறிப்பது
என சிரிக்க வைத்தாலும் கூட....அண்மையில் சற்றே சலிப்பாய்...


பகிர்ந்த பிரதீப்புக்கு கொஞ்சநாள் Z பிரிவு பாதுகாப்புக்கு பரிந்துரைக்கிறேன்..

arun
18-12-2006, 05:26 AM
சிரிப்பு தாங்க முடியல எனக்கு சாயந்திரம் வரைக்கும் சிரிச்சிட்டே இருக்க போறேன்னு நினைக்கிறேன் :) :) :)