PDA

View Full Version : கறுப்பு வரலாறுleomohan
22-11-2006, 06:02 AM

ஓவியா
22-11-2006, 05:17 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

13. (1)

சார் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும் என்றான் ரகு பழனியப்பனின் அறைக்கு வந்து. உட்காரு ரகு. சொல்லு என்றார்.

சார், சுற்று முற்றும் பார்த்தவிட்டு தொடர்ந்தான். சார், அன்னிக்கு தம்பிரான் கிட்டேர்ந்து அவர் எழுதின கட்டுரை வாங்கி படிச்ச உங்களோட முகம் இறுகி போயிட்டுத்தே எதுக்கு.

ஹா ஹா, ஐந்து சின்ன பசங்களை கூட அழைச்சிகிட்டு வந்திருக்கேன்னு நினைச்சேன். ஆனா நீங்கள் எல்லாருமே புத்திசாலி பசங்கத்தான். ஒரு ஓவியனுக்கு கவனித்தல் தான் ஆயுதம். அந்த திறமை உன்கிட்டு இருக்கு.
தாங்கஸ் சார். ஆனா................
சொல்றேன் ரகு என்று விட்டு அமைதியானார்.

அறைக்குள் உலவினார். பிறகு ஏதோ உறுதி செய்துக் கொள்வது போல அறையின் கதவை திறந்து முடினார்.
ரகு, தம்பிரான் எழுதிய முதல் 20 பக்கங்கள் அப்படியே எங்கேயோ படிச்ச மாதிரி இருந்துச்சு. அதனால தான் அதிர்ச்சி ஆயிட்டேன். ஆனா சங்கரோட பிரச்சனையெல்லாம் முடிந்து தஞ்சாவூர் வந்த பிறகு தான் எனக்கு எங்கே படிச்சேன்னு ஞாபகம் வந்தது.

எங்கே சார் என்றான் ஆர்வமாக.
சொன்னா நம்ப பாட்டே ரகு. சந்திரசேகர் தான் எழுதினதா கொடுத்த கட்டுரையிலிருந்த முதல் 20 பக்கம், வார்த்தைக்கு வார்த்தை தம்பிரான் சார் எழுதின கட்டுரை.

என்ன என்று அதிர்ந்தான்.
ஆமா ரகு. தம்பிரானை ஆராய்ச்சி பண்ண வேண்டாம்னு சொல்லிட்டு அந்த தலைப்பை அவரு ஆராய்ச்சி செய்ய எடுத்துகிட்டு இருக்காரு. இப்ப வயசாகி தொடர முடியாம போனதால என்னை பண்ண சொல்லி எனக்காவது டாக்டர் பட்டம் வாங்கித் தர பார்க்கறாரு.
சார் அப்படின்னா.......................

சொல்லு ரகு. ஏன் முழுங்கறே...
அப்படின்னா....... ஞானப்ரகாசம் சாரை இந்த தலைப்பில ரிசர்ச் பண்ண விடாம பண்ணது சந்திரசேகரோட ஆளுங்களா இருக்குமா.
எனக்கும் அப்படித்தான் தோணுது. யாரோ கதவு கிட்டே வர்ற மாதிரி இருக்கு. இந்த விஷயம் நம்ம இரண்டு பேருக்குள்ளேயே இருக்கட்டும் என்று சொல்லியவாறு கதவு திறந்தார்.

நேராக சவிதாவை அறையில் விட்டுவிட்டு பழனியப்பனை பார்க்க வந்திருந்தான் ரவி. அவன் முகம் இருண்டிருந்த்து.
என்னப்பா 30 நிமிஷம் சொல்லிட்டு 2 மணி நேரம் ஆக்கிட்டீங்களே என்றார் சற்றே குரலை உயர்த்தியபடி பழனியப்பன்.

சார் என்னென்மோ விஷயம் நடந்திருக்கு சார் என்று பயத்துடனும் கோபத்துடனும் கரிகாலன் சவிதாவிடம் தவறாக நடந்துக் கொண்டது, காகிதங்கள் மாறியது, அவர்கள் ஞானப்ராகசத்திடம் பேசியது, மறுபடியும் அவரை பெரிய கோவிலில் சென்று கட்டுரையை வாங்கி வந்தது என்று அனைத்தையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

ரகுவும் பழனியப்பனும் அதிர்ந்த உறைந்திருந்தனர்.
சார், ஐந்தாம் படையின்னு ஞானப்ரகாசம் சொன்னது கரிகாலன் சாரைத்தான்.

அனைவரும் அமைதியாயினர். பழனியப்பன் பொறுமையாக தம்பிரான் கட்டுரையின் கண்டுபிடிப்பை பற்றி தானும் ரகுவும் பேசிக் கொண்டதை பகிர்ந்துக் கொண்டார்.

எல்லோரும் வியப்பில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சட்டென்று ஏதோ தோன்றியவனாய் சார் நீங்க சங்கருக்கு கொடுத்த பக்கங்கள் எங்கே. அவன் அன்னிக்கு ஓட்டலுக்கு போகும் போது எடுத்துக்கிட்டு போனானே.

அப்போது தான் அதை உணர்ந்தவர்களாய் சே இதை விட்டுட்டோமே என்று தங்களையே கடிந்துக் கொண்டார்கள்.
சார் எனக்கு என்னமோ சங்கர் மின்தாரம் தாக்கி சாகலைன்னு தோனுது. அவனை யாரோ கொலை பண்ணியிருக்கனும். ஏன், கரிகாலன் கூட கொலை செய்திருக்கலாம் என்றான் ரவி.

இருக்கலாம் ரவி. ஒரு நிமிஷம் நான் சிதம்பரம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்யறேன் என்று சொல்லியபடியே தொலைபேசியை எடுத்து சுழற்றினார்.

என்ன ............................
அப்படியா .....................
என்ன சார் சொல்றீங்க ...........................
ஏதாவது கிடைச்சிதா .............................
ஆமாம் சார் இருந்துது.....................
அதுவும் இல்லையா .........................
நன்றி சார்.

ஓவியா
22-11-2006, 05:18 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

13.(2)

எனக்கு ஒரு குழப்பமாகவும் பயமாகவும் இருக்கு. நீங்க தான் தஞ்சை காவல்துறையிடம் சொல்லி எங்களுக்கு பாதுகாப்பு தரணும். ஏன்னா என்னை நம்பி பெற்றோர்கள் அவங்க பிள்ளைகளை ஒப்படைச்சிருக்காங்க.
நன்றி. அவசியம் சொல்றேன்.

இன்னொரு புறம் நடக்கும் பேச்சுக்களை கேட்காமல் குழப்பான சூழ்நிலையில் ஒரு தொலை பேசி பேச்சு மேலும் குழப்பத்தையே தரும். அதை புரிந்துக் கொண்ட பழனியப்பன் தன்னுடைய இரு மாணவர்களுக்கும் விளக்கினார்.
வணக்கம் பழனியப்பன். உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. சங்கரோட பிரேத பரிசோதனை அறிக்கை வந்துடுத்து. அவர் கொலை செய்யப்பட்டிருக்காரு.

என்ன ............................
அவர் மின்சாரம் பாய்ந்து சாகரத்துக்கு முன்னாடி அவரை இரண்டு முறை தலையில் பலமாக தாக்கியிருக்காங்க. அவர் நினைவிழந்து போயிருக்காரு. அதுக்கப்புறம் அவரை பம்பு செட்டில் கட்டி மின்சார வொயரை இனணைச்சிருக்காங்க.
அப்படியா .....................
ஆமாம்.
என்ன சார் சொல்றீங்க ...........................
ஆமாம். அவரை தாக்கிய ஆயதும் எதுன்னு தேடிக்கிட்டு இருக்கோம்.
ஏதாவது கிடைச்சிதா .............................
இல்லை. இன்னும் தேடிக்கிட்டு இருக்கோம். அவர்கிட்ட கடிகாரம் பர்ஸ் இப்படி ஏதாவது இருந்துதா.
ஆமாம் சார் இருந்துது....................

அப்படி எதுவுமே கிடைக்கலை.
அதுவும் இல்லையா .........................
ஆமாம் சார். இன்னும் தேடிக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தா சொல்லுங்க. நான் தஞ்சாவூர் போலீஸை உங்களை வந்து பாக்க சொல்றேன்.
நன்றி சார்.

இது தாம்பா பேசினோம். இப்ப என்ன பண்ணலாம்.
சார் எனக்கென்னவோ இதைப் பத்தி எல்லாம் போலீஸுக்கு சொல்லிடனும்னு தோனுது என்றான் ரவி பயத்துடன்.
ஆமாம் சார் என்னமோ எனக்கும் அப்படித்தான் தோனுது. ஆனா எந்த காரணத்தை கொண்டும் பயத்தினால் இந்த ப்ராஜெக்டை விடக்கூடாது.
சரி ரவி, ரகு உங்களோட தைரியம் எனக்கும் தைரியம் கொடுக்குது. முதல்ல அந்த பொண்ணங்களுக்கு நான் தான் பாதுகாப்பு கொடுக்கனும்னு நினைச்சேன். உங்களோட பக்குவத்தை பார்த்த பிறகு நீங்க அந்த பொறுப்புக்கு சரியான ஆட்கள் அப்படின்னு நினைக்கிறேன்.

அந்த பெண்களோட கொளரவம் நம்ம கல்லூரியோட கெளரவம் இந்த ஆராய்ச்யோட வெற்றி, இது எல்லாத்தையும் நம் நாட்டின் எதிர்காலமான இளைஞர்கிட்டேயே ஒப்படைக்கிறேன்.
ரொம்ப நன்றி சார் என்று கூறிவிட்டு இருவரும் அகன்றனர். நீலாவுக்கு இனிமே சங்கரா நானா அப்படிங்கற பிரச்சனை இல்லை. நான் மட்டும் தான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் ரகு.
அப்பாடா சவிதாவை இனிமே எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டான் ரவி.

ஓவியா
22-11-2006, 05:20 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

14.

மத்திய உளவுத்துறை அதிகாரி ரமேஷ் கடிகாரத்தை பார்த்தான். 45 நிமிடம் ஓடியிருந்தான். வழக்கமான நேரம் தான். ஆனால் வழக்கமான தூரம் இல்லை. மிக தொலைவில் வந்திருந்தான். செல்பேசியை எடுத்து மனைவி ஜெயாவை அழைத்தான்.
பிக் மீ அப் என்று விட்டு வைத்தான்.

மெதுவாக கடலோரத்தில் இருந்த மணல்வெளியில் தன் வெற்று கால்களை பதித்தான். நீலாங்கரை கடல் அன்று மிக அழகாக நீலமாக காட்சியளித்தது.
செல்பேசி ஒலித்தது.
டீக் ஹெய். தீஸ் மின்டோமே பஹூஞ்ச் தான் ஹூன் என்று விட்டு கையடக்க தொலைபேசியை கழுத்தில் தொங்கவிட்டான்.
அழகான மனைவிகள் அல்லது திருமதி அழகிகள் என்று போட்டி வைத்தால் சென்னையில் ஜெயா முதலாக வந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அழகு, எளிமை, புத்திசாலித்தனம் என்று அனைத்திலும் 100 மார்க். வேகமாக டாட்டா ஸபாரியை ஓட்டிக் கொண்டு கடற்கரை சாலையில் தார் ரோடு இருக்கும் வரை கடலுக்கு அருகில் சென்று நிறுத்தினாள்.

கெட் இன் என்றாள் வாயை மட்டும் அசைத்து ஓசையில்லாமல்.
சட்டென்று கதைவை திறந்து உள்ளே நுழைந்தான்.
ஒரு குடுவையில் இருந்த க்ளுகான்-டியை எடுத்து நீட்டினாள் ஜெயா.
வாங்கி குடித்துவிட்டு துண்டெடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.

ஆபீஸ் என்றான்.
வாட்.

எஸ். அவசரமா வரச் சொல்லியிருக்காங்க.
இந்த டிரெஸ்லயா.
ஆமா.
யூ ஆர் ஸ்டின்கிங் லைக் எ ராட்டன் எக் என்றாள் சிரித்தப்படியே.
ஆம் இந்த அழுகிய முட்டயை யாரோ இன்னிக்கு ஆம்லெட் போடப்போறாங்க.
லக்கி தெம் என்றபடியே சென்னை சாலைகளில் லாவகமாக வண்டியை ஓட்டிச் சென்றாள்.
லா மெரிடியனுக்கு அருகில் இருந்து உளவுத்துறை அலுவலகத்தில் வண்டியை நிறுத்தினாள்.

அவன் இறுங்கவதற்கு முன் டாஷ் போர்டில் இருந்த அவனுடைய துப்பாக்கியை எடுத்து நீட்டியவாறு
யூ வுட்டுன்ட் வான்ட் கோ அவுட் வித்அவுட் திஸ் என்றாள்.
ஆம். இது தான் உன் தாலி தொங்கிக் கொண்டிக்கிறதுக்கான அத்தாட்சி என்றான் கண்ணடித்துக் கொண்டே.

இது போல பல துணுக்குகளை முன்பே கேட்டுவிட்டதால் கையை விரித்து உதறி அலட்ச்சியமாக வண்டியை நகற்றினாள்.
வண்டியை ஓட்டிச் சென்றவள் நினைவலைகளில் பின்னால் சென்றாள். முதுகலை பாரென்ஸிக் சைன்ஸ் படித்துக் கொண்டிருந்த அவள் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த செமினாருக்கு சென்றாள். அதற்கு பிறகு அவர்களை ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போஸ்ட்மார்டம் நடப்பதைப் பற்றி காட்டப்போவதாக இருந்தது.
10ம் அறைக்குள் நுழைவதற்கு பதிலாக 11ம் அறைக்குள் நுழைந்தவள் அங்கு குண்டடி பட்டு கிடந்திருந்த ரமேஷை பார்த்தாள். மரக்கட்டைபோல

படுத்திருந்த ரமேஷை பார்த்தும் அது தான் பிரதேம் என்று நினைத்தாள். மற்றவர்கள் வரும் வரை அங்கே காத்திருக்கலாம் என்று உலாற்றியவள் பிரேததத்தை பார்க்கலாம் என்று அருகில் வந்த அவனை உற்றுப் பார்த்தாள்.

அவன் தூக்க மருந்திலிருந்து மீண்டவன் மெதுவாக கண்விழித்து பார்க்க அவனுடயை முகத்திற்கு இரண்டு அங்குல தூரத்தில் இருந்தவள் பிரேதம் கண் திறப்பதைப் பார்த்து ஐயோ அம்மா என்று அலற மருத்தவர்களும் நர்ஸுகளும் ஓடி வந்து பார்க்க ஒரே கூத்தாகிவிட்டது.
அடுத்த சந்திப்பு நீலாங்கரை கடற்கரையில் தான். வழக்கமாக அவனை அழைத்து செல்ல வரும் ரமேஷின் தம்பி ரஞ்சித் அன்று தாமதமாக வர, ஓடிக் களைத்து தன் வண்டியில் ஏறச் சென்ற ஜெயா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

யாருக்காகவாது காத்திருக்கீங்களா என்றாள்.
ஆம் தம்பிக்காக என்று சொல்ல நினைத்தவன் சற்றே வம்பு செய்யலாம் என்று நினைத்து
ஆம். என் வாழ்கையில் உங்களைப் போன்ற ஸ்மார்ட் பெண் வருவாளா என்று காத்திருக்கிறேன் என்றான் சிரித்தப் படியே.
ஹாஹா என்ன பகல் கனவா என்றாள் முறைத்தப்படியே.
சட்டென்று தன் கால்சட்டையிலிருந்து துப்பாக்கியை எடுத்த அவளை அணைத்துப் பிடித்து என்னை கல்யாணம் பண்ணிக்கலை உங்களை சுட்டுடுவேன் என்றாள்.

என்ன விளையாட்டு இது. என்றாள் காட்டமாக.
சாரி மிஸ். ஐயாம் ரமேஷ். சீஃப் இன்வெஸ்டிகேடிங் ஆபீஸர் சென்டரல் க்ரைம் ப்ராஞ்ச் என்று ஐடி கார்ட்டை எடுத்துக் காட்டினான். இப்போதைக்கு என்னை அடையாறுல விட முடியுமா என்று கேட்டான் கெஞ்சலாக. ஏறுங்க என்று வண்டியில் ஏற்றிக் கொண்டவள் இன்னும் 2-3 மணி நேரம் வரை எங்குமே போகாமல் சென்னையை சுற்றி வந்தனர்.

என்ன படித்தீர்கள், அப்பா அம்மா, என்ன நிறம் பிடிக்கும் என்ன சாப்பாடு பிடிக்கும் என்ன உடைகள் பிடிக்கும் எந்த சினிமா பிடிக்கும் எதனால் அன்று ரமேஷ் குண்டடி பட்டுக் கிடந்தான் என்று தொடங்கி உலக விஷயங்கள் அனைத்தையும் பேசினார்கள். காதல் வயப்பட்டார்கள். இரண்டற கலந்தார்கள்.

அடையாறு மத்திய கைலாஷ் தாண்டி ஒரு யு வளைவு எடுத்து சிந்தூர் பிரஸ்டிஜ் பாயிண்ட் அபார்ட்மென்டில் வண்டியை நிறுத்தினாள்.
மை கிரெஸி மாச்சோ மான் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.

ஓவியா
22-11-2006, 05:32 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

15 & 16

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=160548#post160548

leomohan
22-11-2006, 05:51 PM
ஓ உங்களால பதிக்க முடியுதா நன்றி.

ஓவியா
22-11-2006, 07:16 PM
இல்ல மோகன்,
ரொம்ப சிரமபட்டுதான் (சில கோல்-மால் பன்னிதான்) செய்தேன்....


கதை சரியா வந்துல்லதா?
தயவு செய்து சரி பார்க்கவும்!!!!!!!!

leomohan
22-11-2006, 07:39 PM
ஆம். நன்றி. மற்ற பதிவுகளையும் இடு முடியுமா. இங்கேர்ந்து மிகவும் சிரமம் தான்.

மதி
23-11-2006, 01:26 AM
அப்பாடி ஒரு வழியா...பதிஞ்சாச்சா...?
நன்றி ஓவியாக்கா..!

ஓவியா
24-11-2006, 06:27 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

17

ரமேஷ் இரண்டாவது நாளே சென்னை கிளம்பினான். பழனியப்பனுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான் மாணவர்களை. தம்பிரானையும் ஞானப்ரகாசத்தையும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தான். காவல் துறை இந்த விவகாரத்தில் நுழைந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டாம் என்று பார்த்துக் கொண்டான். கரிகாலன் விஷயமும் பத்திரிகை துறைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
அடுத்து சந்திரசேகர் என்று சொல்லிக் கொண்டான்.
வீட்டுக்கு வந்ததும் மாடிக்குச் சென்று திறந்தவெளி நீச்சல் குளத்தில் குளித்தான். படுக்கையறைக்கு வந்து ஜெயாவின் தோள்களில் சாய்ந்தான்.
காகிதங்கள் என்ன சொல்லுது.
இது என்னோட யூகம். முதல்ல என்னோட யூகத்தை சொல்றேன். அப்புறம் நான் படிச்சதை சொல்றேன்.
ஷூட் என்று தலையணயை எடுத்து அணைத்துக் கொண்டே ஆர்வமாக கேட்டான்.
1.வெள்ளைக்கார்ர்கள் இதில் இன்வால்வ் ஆகியிருக்காங்கன்னு வெச்சிப்போம். நம்ம ஃபோகஸ் லண்டனுக்கு போகுது.
2.ஒரு இரண்டு பேர்ல நம்பிக்கை வெச்சி இந்த வேலையை கொடுத்திருக்க மாட்டாங்க. குறைஞ்சது 10 பேரையாவது தனித்தனியா இந்த வேலையை செய்யச் சொல்லியிருப்பாங்க. அது தான் அவங்களோட அணுகுமறை. அப்படின்னா அந்த 10 பேர் யாருன்னு கண்டுபிடிக்கனும். இது தமிழக வரலாறு சம்பந்தப்பட்ட விஷயங்கறதால தமிழ் நாட்டுக்கு தமிழ் நாட்டிலிருந்து லண்டனுக்கு போன வந்த தொலைபேசி கால்களை டிராக் பண்ண்னும். ஒரு குறிப்பிட்ட எண்களை டிரேஸ் பண்ணா யாரு இந்த ஆராய்ச்சிக்கு பணம் கொடுக்கறாங்கன்னு தெரிஞ்சிடும்.
3.இந்த விஷயம் தெரியாம இருக்கறதுக்கு கொலைகளும் நடந்திருக்கலாம்.
4.இதுவரைக்கும் யாருக்குமே இந்த ரிசர்ச்சில் வெற்றி அடைஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏன்னா களப்பிறர் ஆட்சி 50 சதவீதம் கட்டுக் கதை, 50 சதவீதம் தான் உண்மையாக இருக்கலாம். அதுக் கூட சந்தேகம் தான்.
என் புத்திசாலி பெண்ணே என்று சொல்லி அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். பல பேர் பல நாட்கள் சேகரித்த விஷயங்களை தன் மனைவி இரண்டு நாட்களில் செய்ததை எண்ணி வியந்தான். இவளை மனைவியாக பெற நான் என்ன தவம் செய்தேன் என்று சொல்லிக் கொண்டான்.
சரி. உன் யூகத்திற்கு என் பதில்கள்.
1. ஆமாம். லண்டன் டிரிப் தேவைப்படும்
2. அந்த 10ல ஒரு ஆள் சந்திரசேகர்.
3. ஆமாம். எனக்கு தெரிஞ்சு ஒரு கொலை நடந்துடுத்து. சங்கர் அப்படிங்கற ஒரு ரிசர்ச் மாணவன்.
4. ஆமாம். அதனால தான் ஆங்கிலேயர் போன 50 வருஷம் ஆகியும் இது இன்னும் வெற்றியடையாம நடந்துக் கொண்டிருக்கிறது.
அது சரி. உன் யூகம் சரிதான். நீ படிச்ச விஷயங்களை பத்தி சொல்லு.
ரமேஷ், இதுவரைக்கும் கொள்ளையடிச்சவங்க மலைகளிலும் பூமிகளிலும் காடுகளிலும் தான் புதைச்சு வச்சிருக்காங்க. ஆனா களப்பிறர்கள் அப்படி செஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏன்னா அவங்க கடல் வழியாக வந்தவர்கள். என்னுடைய கருத்துப்படி அவர்கள் இந்தியர்களா கூட இருக்க வாய்ப்பில்லை. அவங்க தமிழ்நாட்டை அட்டாக் பண்ணதால அவர்கள் வங்காளக் கடல் அல்லது இந்திய மகாசமுத்திரம் வழியாக வந்திருக்கனும். ஜாவா சுமத்திராவிலேர்ந்து கூட இருக்கலாம்.
அதனால அவர்கள் கடலுக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் நுட்பமோ இல்லை அருகாமையில் இருக்கும் தீவுகளிலோ இருக்க வேண்டும். தண்ணீருக்குள் எப்படி ஒளித்து வைக்கு முடியும். அப்படி ஒளித்து வைத்தால் இது நாள் வரை எப்படி தாக்கு பிடிக்கும். பாதாள உலகம் ஒரு வேளை நிஜமான கருத்தா. புராணங்கள்ல தண்ணிக்குள்ளேயே அரண்மனை இருந்ததா எல்லாம் சொல்றாங்க. அதெல்லாம் உண்மையா. இதுக்கெல்லாம் எனக்கு விடை தெரியலை.

ஓவியா
24-11-2006, 06:27 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

அவள் கைகளை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு அவள் தன் அகலமான கண்களை விரித்து உற்சாகமாக பேசியதை கேட்டுக் கொண்டிருந்தான்.
சரி நீங்க போயிட்டு வந்த்தை பத்தி சொல்லுங்க.
ம்ம். சரி சொல்றேன் என்று ஆரம்பித்தான்.
பழனியப்பன் அவர் குரூப்போட சிதம்பரம் போய் பாத்திருக்காரு. தம்பிரானை இந்த சந்திரசேகர்தான் களப்பிறர் பத்தி ஆராய வேண்டாம்னு சொல்லியிருக்காரு. ஆனா சந்திரசேகர் எழுதின ஆய்வு கட்டுரையில் முதல் 20 பக்கமும் வரிக்கு வரி தம்பிரான் எழுதினது தான்.
அவள் கண்கொட்டாமல் அவனை பார்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஞானப்ரகாசம் இந்த தலைப்பை எடுத்து ரொம்ப நாளா ஆராய்ச்சி செஞ்சிருக்காரு. அவரை வேலை செய்யவிட்டு அப்புறமா அடிச்சி அவர்கிட்டேர்ந்து வேலையை பிடிங்கிட்டாங்க. சந்திரசேகரோட மத்த பக்கங்கள் எல்லாம் ஞானப்ரகாசத்துடையது. ஆக அவரா ஒரு வரிக்கூட எழுதலை. அப்படி எழுதியிருந்தா கூட அதை இவங்க கிட்டே கொடுக்கலை.
சங்கரை எதுக்காக கொன்னாங்க.
அது தான் சுவாரஸ்யமான விஷயம். சந்திரசேகர் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டிலே இந்த தலைப்பை தன் பேர்ல பதிச்சிருக்காரு. அதோட நகல் அவர் கொடுத்த பக்கங்களோட பழனியப்பன்கிட்டே வந்துடுத்து. பழனியப்பன் பசங்க கிட்ட பக்கங்களை பிரிச்சு கொடுத்து படிக்க சொல்லியிருக்காரு. முதல் நாள்லயே சங்கர்கிட்ட அந்த நகல் மாட்டிடுச்சு. அதை சொல்லத்தான் அவன் வந்திருக்கான். வழியில கரிகாலன்கிட்ட சொல்லியிருக்கான். அவரு அவனை அடிச்சுப்போட்டுட்டு எங்கேயாவது கொண்டு போய் மிரட்டி மசிய வைக்கலாம்னு நினைச்சிருக்கலாம். இல்லை கொன்னு போடனும்னே அடிச்சிருக்கலாம்.
அந்த பக்கங்கள் என்னாச்சு.
சிதம்பரம் போலீஸ் அதிகம் விசாரனை செய்யலை. அதனால கொஞ்சம் அலட்ச்சியமாகவே இருந்துட்டாரு கரிகாலன். சுமோவோட டூல்கிட் பாக்ஸல இந்த பேப்பர்ஸ் கிடைச்சிது.
அப்ப சங்கரோட பர்ஸ் பணம்.
அது ஒரு வேளை கிராம ஜனங்க எடுத்திருக்கலாம். சொல்ல முடியலை.
அது சரி இதுவரை சுமார் 100 பக்கம் ஆராய்ச்சி கட்டுரை சேர்ந்தாச்சே. அதை படிச்சீங்களா.
அதை அரைமணி நேரத்துல படிச்சிட்டேன். ஆனா பொறுமையா படிக்கனும் அதனால பென்ஸ்கானர்ல ஸ்கேன் பண்ணி எடுத்துட்டு வந்திருக்கேன். உனக்கு தரேன்.
படிச்ச வரைக்கும் என்ன புரிஞ்சு உங்களுக்கு.
ஹாஹா. என் பெண்டாட்டியை விட புத்திசாலி உலகத்திலே இல்லை அப்படின்னு தெரிஞ்சுது என்று அவளை அணைத்து அவள் காதை கடித்தான்.
விடுங்க. சொல்லுங்க என்ன இருந்துது.
நீ சொன்ன எல்லம் இருந்துது. அதுக்கு மேலேயும் இருந்தது.
அதான் கேட்கறேன். சொல்லுங்க.
எல்லாம் இன்னிக்கே கேட்கனுமா.
ஆமாம்.
சரி என்று சொல்லி விவரிக்க ஆரம்பித்தான். கேட்க கேட்க அவள் வியந்தாள். வானம் இருட்ட தொடங்கியது. வானம் கறுப்பு அங்கியை அணிந்து நின்றது.

ஓவியா
24-11-2006, 06:30 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

18

ரமேஷ் சென்னையின் தலைமை தொலைபேசி நிலையத்தின் இயக்குனருக்கு முன்பு அமர்ந்திருந்தான்.

மிஸ்டர் ரமேஷ் இப்ப ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து நம்ம தமிழ் நாடு முழுவதும் டிஜிடல் எக்ஸசேன்ஜ் தான். போன கால்கள் இப்பவே எடுத்துக் கொடுத்திடலாம். ஆனா வந்த கால்கள் கண்டுபிடிக்கனும்னா இனிமே தான் சர்வீஸ் ஆக்டிவேட் பண்ணவேண்டியதிருக்கும்.

அதுவில்லாம இது ஒரு பொலிடிகல் ப்ராப்ளமா ஆகிடக்கூடாது. ஏற்கனவே நாங்க போன் டாப்பிங்க் பண்றோம் அப்படின்னு எதிர் கட்சிகள் கூச்சல் போடறாங்க.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான் ரமேஷ். பல முக்கியமான கேஸ்களில் அவனுடைய பெரும் பங்கு இருந்ததால் அவன் மத்திய மந்திரிகளை நேராக கூப்பிடும் அளவுக்கு செல்வாக்கு வைத்திருந்தான்.

சட்டென்று மத்திய தகவல் தொடர்பு மந்திரிக்கு போன் போட்டு மிகவும் குறைந்த வார்த்தைகளில் விஷயத்தை சொன்னான். அவர் தொலைபேசியை இயக்குனரின் கொடுக்கச் சொல்ல அவரிடம் ஆனணயிட்டார்.

இயக்குனர் பேசிவிட்டு ரமேஷின் செல்பேசியை அவனிடம் கொடுத்தார். ரமேஷ் நீங்க அமேஸிங்க். நாங்களே அவர்கிட்ட பேசறுதுக்கு முன்னாடி பல முறை யோசிப்போம் என்றார் ஆச்சர்யத்துடன்.

சார் இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அதனால தான் என்றான் அடக்கத்துடன்.

அடுத்த 20 நிமிடங்களில் இரண்டு பக்கமும் ஓட்டையுடன் இருக்கும் கம்ப்யூட்டர் அச்சுக் காகிதங்கள் ஒரு பெரிய கட்டாய் அவன் முன் வந்து விழுந்தது.

சார் இதில் தமிழ் நாட்டிலேர்ந்து லண்டனுக்கு கடைசி ஒரு மாசத்தில போன போன் கால். இன்னையிலர்ந்து இன்கம்மிங் காலையும் டிரேஸ் பண்ண சொல்றேன். வேறென்ன வேண்டும் உங்களுக்கு.

சார், இதோட ஸாப்ட் காபி வேண்டும். அப்பத்தான் அனலைஸ் பண்ண சரியாக இருக்கும்.

சரி என்று அருகிலிருந்தவரிடம் கண் அசைத்தார். உடனே அவர் மறைந்து மறுபடியும் தோன்றும்போது ஒரு குறுவட்டுடன் காட்சியளித்தார். அதை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்து விடை பெற்றான் ரமேஷ்.

leomohan
24-11-2006, 06:31 PM
மிக்க நன்றி ஓவியா. உங்கள் சேவை மன்றத்துக்கு தேவை. :)

ஓவியா
24-11-2006, 06:32 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

19

நான்கு நண்பர்களும் பழனியப்பனின் அறையில் இருந்தார்கள்.

நிலைமை இறுக்கமாக இருந்தது. சங்கரின் கொலையை அவர்கள் ஜீரணிக்க முடியவில்லை.

கரிகாலன் தான் கொலையை செய்தது என்பது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
யாரும் சங்கரின் வீட்டில் இதைப் பற்றி தகவல் சொல்லவில்லை. அது போலீஸின் வேலை என்று தடுத்துவிட்டார் பழனியப்பன்.

இன்னும் நமக்கு தஞ்சை போலீஸ் பாதுகாப்பு தரவில்லையே என்று வருத்தப்பட்டார்.

ஆனால் லிப்டின் ஆப்பரேட்டர் ஆள் மாறியதை நண்பர்கள் காணத் தவறவில்லை.

சார் நாம் இப்ப அடுத்தது என்ன செய்யலாம்.

இப்ப நாம போகவேண்டியது மதுரைக்கு. மதுரை பல்கலைகழகத்திலே இந்த தலைப்பில யாராவது ஆராய்ச்சி பண்ணாங்களான்னு பாக்கனும்.

ஏன் மதுரைக்கு என்றாள் நீலா.

ஞானப்ரகாசம் சார் எடுத்த நோட்ஸ்ல எந்த லைப்ரரிலே எந்த புத்தகத்திலேர்ந்து இந்த விஷயங்களை சேகரிச்சாருன்னு எழுதியிருக்காரு. இதே புத்தகங்களை யாரெல்லாம் எடுத்துட்டு போனாங்கன்னு பார்த்தா இன்னும் மேலே போகலாம்.

ஆராய்ச்சியில் மேலே போகறோமோ இல்லை மேலே............. போகப்போறோமோ என்றாள் சவிதா.

பயப்படாதே சவி அதான் கொலை பண்றவங்களை உள்ளே தூக்கி வெச்சாச்சே என்றான் ரவி.

இல்லை ரவி. கரிகாலன் மட்டுமே இதுல இருக்கறதா எனக்குப் படலை என்றான் ரகு குழப்பத்துடன்.

சங்கரிடம் இருந்த காகிதங்களில் சந்திரசேகரின் பெயர் டாக்டர் பட்டத்திற்காக பதிவு செய்யப்பட்டது என்ற விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ரமேஷ் சொல்லியிருந்ததால் மௌனம் காத்தான்.

இனிமையான சுற்றுலா இறுக்கமாக மாறிக் கொண்டிருந்தது.

போலீஸ் ஆய்வுக்கு பின் வண்டியை திருப்பிக் கொடுத்திருந்தனர். ரகு ஓட்டுனராக மாற அவன் அருகில் நீலா ஜோடியாக பின் இருக்கையில் பழனியப்பன் தனிமைப்பட அதற்கு பின் இருக்கையில் சவி-ரவி இன்னொரு ஜோடி.

வண்டியில் சங்கர் இல்லாத்தால் நகைச்சுவை குறைந்திருந்தது.

இவர்கள் வண்டியை எடுத்ததும் இன்னொரு வண்டி அதன் பின் தொடர்ந்த்து.

ஓவியா
24-11-2006, 06:33 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

20சொல்லுங்க கரிகாலன் எதுக்காக நீங்க சங்கரை கொன்னீங்க என்று பொறுமையாக கேட்டார் இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட்.

சார், நான் அவரை கொலை பண்ணலை.

சரி. ஆனா உங்கள் வண்டியில் ரத்த கறை கிடைச்சிருக்கு. அவரு உங்களோட காலை வந்தவரு திரும்பி வரலை.

ஆமாம் சார். ஆனா என் வண்டியை ரகு தம்பியும் ஓட்டுவாரு.

அப்ப ரகு இந்த கொலை செஞ்சாருன்னு சொல்றீங்களா.

அப்படி சொல்லலை சார். எல்லா புள்ளைங்களும் நல்ல புள்ளைங்க தான். ஆனா............ என்று இழுத்தார்.

ஆனா என்ன சொல்லுங்க.

சார். இந்த சங்கருக்கும் ரகுவுக்கும் நீலா மேல ஒரு கண்ணு இருந்துது. ரெண்டு பேரும் தனித்தனியா அவளை காதலிச்சாங்க. இது அரசல் புரசலா எல்லாருக்கும் தெரியும். நீலாவுக்காக ரகு சங்கரை கொலை செஞ்சிருப்பான்னு நான் சொல்லலை. ஆனா தகராறு வந்திருக்கலாம். அதுலை எதிர்பாராம அவன் பம்பு செட்டில இவனை தள்ளி விட்டிருக்கலாம். அங்க வொயர் அவனை பதம் பாத்திருக்கலாம்.

ஆனா............... போஸ்ட் மார்டத்தில் அவன் தலையிலே அடி என்று சொல்ல வந்தவர் நிறுத்திக் கொண்டு மௌனமானார் ரிச்சர்ட். இதுவும் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எதனால் கரிகாலனை மட்டும் சந்தேகப்படவேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நிமிஷம் என்று சொல்லி வெளியே வந்தார். இன்னொரு அறைக்கு சென்று ரமேஷுக்கு போன் போட்டார்.

சார் கரிகாலன் இப்படி ஒரு ஆங்கிள் சொல்றாரு. என்ன பண்ணலாம்.

அப்படியா. அவரு சொல்றது சரியா இருக்கலாம். நீங்க அவரை ரீலீஸ் பண்ணுங்க. ரகுவை அரஸ்ட் பண்ணுங்க. ஆனா நான் சொல்ற விதத்துல அரஸ்ட் பண்ணுங்க என்று ஒரிரு வார்த்தைகள் கூறினான்.

அவன் அருகில் அமர்ந்து ஹிஸ்ட்ரி சானல் பார்த்துக் கொண்டிருந்த ஜெயா அவன் போனை வைத்ததும் அவனிடம், ரமேஷ், உங்களுக்கு அவர்தான் கொலை பண்ணாருன்னு தெரியும், அந்த சந்திரசேரோட அப்ளிகேஷனை காப்பாத்தத்தான்னு தெரியும் அதுக்கப்புறம் எதுக்கு அவரை ரீலீஸ் பண்ண சொன்னீங்க. பாவம் அந்த ரகுவை ஏன் கைதி பண்ண சொல்றீங்க என்றாள் குழப்பத்தில் மண்டை வெடித்துவிடுவதை போல பாவனை கொண்டு.

என் புத்திசாலி பொண்டாட்டியே ஒரு கப் டீ கொண்டுவா சொல்றேன் என்றான்.

அவள் சமையலைறயில் நுழைய அவனும் அவள் பின்னே சென்று உணவு மேசைக்கு அருகே அமர்ந்தான்.

ஜெயா நாம இரண்டாம் தேனிலவுக்கு லண்டன் போனா என்ன என்று கேட்டான்.

நான் தயார். ஆனா எதுக்கு ரகுவை அரஸ்ட் பண்ண சொன்னீங்க. அதை சொல்லுங்க முதல்ல என்றாள் விடாப்பிடியாக.

சரிப்பா சொல்றேன் கேளு. கரிகாலன் அலட்ச்சியமாக இருந்ததால மாட்டிக்கிட்டாரு. ஆனா அவரு தான் கொலை பண்றாருங்கறதுக்கு எந்த ஆதாரமும் சிக்கலை. அவர் வண்டியில ரத்தக்கறை இருந்ததால மட்டும் அவரு கொலை செஞ்சாருன்னு சொல்ல முடியாது. அது மட்டுமல்ல அவர் அம்பு தான். அவரை அனுப்பிய வில்லு வேறு எங்கோ இருக்கிறது. இந்த அம்பு திரும்பி அம்பாரைக்கு போகும். அப்ப போயி கப்புன்னு பிடிக்கனும்.

அவரை எதுக்கு விடுதலை பண்ணீங்கன்னு என்னாலேயே கெஸ் பண்ண முடிஞ்சுது. ஆனா பாவம் ரகுவை ஏன் அரெஸ்ட் பண்ண சொன்னீங்க.

செல்லம், கரிகாலனுக்கு நாம அவர் மேல சந்தேகம் இல்லை அப்படின்னு காட்டிக்கனும். ரகுவை அரெஸ்ட் பண்ணா அவரு மறுபடியும் ரிலாக்ஸ் ஆக வாய்ப்பு இருக்கு.

அப்ப அவரை ரிலாக்ஸ் பண்ணனும்னா அரெஸ்ட் பண்ணாமே இருந்திருக்கலாமே.

அங்க தான் திருப்பமே. அவருக்கு போலீஸ் பயம் இருக்கனும். இருந்தா அவங்க முதலாளிகளும் கொஞ்ச நாள் அடங்கி இருப்பாங்க. அந்த நேரத்தை பயன்படுத்திக்கிட்டு நமக்கு புரியாத பல விஷயங்களை புரிஞ்சிக்கனும்.

ஆனா அவங்களை வெளிய விட்டு பிடிக்கிறது தானே வழக்கமா போலீஸ் கையாள்ற யுத்தி.

ஆமா. அப்படி பண்ணா அதுக்கு விலையா பல உயிர்கள் போகும். அதனால கீப் தெம் கொயட் அண்ட் ஆக்ட். இது தான் என்னுடைய திட்டம்.

என் செல்லத்துக்கு மூளையே மூளை என்று ரமேஷை பின்புறமாக வந்து அணைத்துக் கொண்டாள்.

ஓவியா
24-11-2006, 06:34 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

21


மதுரை சென்று அடைந்ததும் அனைவரும் களைத்திருந்தனர். உடலும் மனமும் சோர்வடைந்திருந்தது.

மதுரை ஆனந்த விலாஸில் வண்டியை நிறுத்தி உணவு உண்டுவிட்டு பல்கலைகழகத்திற்கு அருகிலேயே ஒரு விடுதி எடுத்து தங்கினர்.

அனைவருக்கும் பல மணி நேரம் உறங்கியது போல் ஒரு உணர்வு. முதலில் எழுந்த்து சவிதா தான். ரவியை எழுப்பி வா, கோவிலுக்கு போகலாம் என்று அழைத்தாள். அவன் எழுந்து முகம் கழுவி, தயாரானான்.

நீலாவும் ரகுவும் தயாரானார்கள். பழனியப்பனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நால்வரும் ஜோடிகளாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார்கள்.

இன்று எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தான் ரகு. ஆறுவருடமாக காத்திருந்தான் இப்பேர்ப்பட்ட தருணத்திற்கு. சங்கர் என்ற தடை அகன்றுவிட்டது. இப்போது நீலா இருக்கும் மனநிலையில் தன் காதலைப் பற்றி சொன்னால் ஏற்றுக் கொள்வாள் என்று நினைத்தான்.

கோவிலில் சுமார் 2 மணி நேரம் இருந்திருப்பார்கள். இருள துவங்கியிருந்த்து. சரி போகலாம் என்று சவிதா சொல்ல அனைவரும் வாசல் நோக்கி வெளியே வந்தார்கள்.

சரி அவளுக்கு மல்லிகை வாங்கி கொடுக்கலாம். அப்படியே தலையில் வைத்துவிடவா என்று கேட்கலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டே ஒரு பூக்கடைக்கு அருகில் வந்தான் ரகு.

ஒரு காவல் வாகனம் வந்து நிற்க சட்டென்று ஒரு போலீஸ் அதிகாரி இறங்கினார். ரகுவிடம் வந்து நீங்க தானே ரகு என்றார்.

ஆம் என்று குழப்பமாக பார்த்தான்.

அந்த அதிகாரியின் பின்னால் இருந்து கரிகாலன் இறங்கினார். மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

சவிதா, ரவி, நீலா அதிர்ந்து நின்றனர்.

ரகு நீங்க நீலாவை காதலிக்கிறீங்க. சங்கர் அதுக்கு தடையாக இருந்ததால அவரை கொன்னுட்டீங்க. அதுக்காக உங்களை நான் கைதி செய்யறேன் என்றார் வசனம் ஒப்பிப்பது போல்.

நீலா ரகுவை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

ரகு, சார் என்ன சொல்றீங்க. நான் நீலாவை காதலிக்கிறது உண்மை தான். ஆனா சங்கர் என்னோட நண்பன். நான் அவனை எக்காரணத்தக் கொண்டு கொல்ல மாட்டேன் என்று பலம்பினான்.

நீலா ரகுவைப் பார்த்து, ரகு, நீ என்னை காதலிக்கிற விஷயத்தை இப்படித்தான் எனக்கு சொல்லனுமா. எதுக்காக இப்படி செஞ்சே. நான் உன்னைத்தான் காதலிக்கிறேன் அப்படின்னு வாய்விட்டுதான் உங்கிட்டே சொல்லனுமா என்றாள் கண்களில் நீர் வழிய.

நீலா, நீலா, அப்படி சொல்லாதே. நான் சங்கரை கொலை செய்யலை என்றான் கெஞ்சலாக.

ரகுவை ஏற்றிக் கொண்டு காவல் வாகனம் சென்றது. சவிதாவுக்கும் ரவிக்கும் கரிகாலனுடன் செல்ல இஷ்டம் இல்லை.

வண்டி சாவியை கரிகாலனிடம் கொடுத்துவிட்டு மெதுவாக நடந்து சென்றனர் இருவரும்.

சவிதாவிடம் தான் நடந்துக் கொண்டதைப் பற்றி ரவியிடம் சொல்லியிருப்பாள். அதனால் தான் இருவரும் முகம் கொடுக்காமல் போகிறார்கள் என்று உணர்ந்த கரிகாலன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

ஆட்டோவை பிடித்து விடுதியை சென்று அடைந்தனர். பழனியப்பன் தகவலை கேட்டு அதிர்ந்தார்.

கரிகாலனுடன் தொடர்ந்த ஒரு சாதாரண உடை அணிந்த போலீஸ் அதிகாரி அவர் எல்லையை கடந்ததும் ரகுவை கைது செய்த அதிகாரிக்கு போன் செய்தார்.

விடுதியில் இருந்த உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வந்தனர். நேராக வரவேற்பாளரிடம் சென்ற நீலா, ரகு அவசரமா ஊருக்கு போயிட்டாரு. அதனால அவர் ரூம் சாவி கொடுத்தீங்கன்னா அவரோட திங்க்ஸ் நான் எடுத்துப்பேன் என்றாள்.

ஊருக்கு போயிட்டாரா. இப்பத்தானே மேலே போனாரு என்றார் வரவேற்பாளர்.

என்ன என்று அதிர்ச்சியடைந்த நீலா ஒடிச் சென்று லிஃப்டில் ஏறி மேலே சென்று அவசரமாக ஓடி ரகுவின் அறையை அடைந்தாள்.

அவளுக்காகவே காத்திருந்த்து போல ரகு அவளை பார்த்த்தும் சிரித்தவாறே கைகளை விரித்து நின்றான்.

என்ன நடக்குது இங்கே.

நீலா, போலீஸ் கரிகாலனை திசை திருப்ப என்னை அரஸ்ட் செய்த மாதிரி நாடகமாடினாங்க. ஆனா கரிகாலனை அவிழ்த்து விட்டு அவர் எங்கே போறாருன்னு பின் தொடர்ந்து போறாங்க என்றான்.

அவள் ஓடி வந்து ரகுவை இறுக அணைத்தாள். 1 மணி நேரத்தில என் உயிர் எத்தனை தடவை போயிடுத்து தெரியுமா என்றாள் கண்களில் ஆனந்த கண்ணீருடன்.

நீ சங்கரைத் தான் ஆசைபட்டிருந்தா உன்னோட சந்தோஷத்துக்காக என் காதலை தியாகம் செஞ்சிருப்பேன் நீலா. நான் எப்படி அவனை கொன்னிருப்பேன் சொல்லு என்றான் நாதழுதழுக்க.

எனக்குத் தெரியும் என்று நீலா சொல்லியபடியே அவனை இன்னும் இறக அணைத்தாள். அவள் பின்னால் வந்த சவிதாவும் ரவியும் சந்தோஷமாக தங்கள் அறைக்கு திரும்பிச் சென்றனர்.

பழனியப்பன் நடந்த விஷயங்களை கேட்டு ஆச்சர்யப்பட்டார். என்னப்பா நடக்குது. மதுரை வந்த பிறகும் பிரச்சனை முடியலையா. நாளைலேர்ந்தாவது நிம்மதியா ஆராய்ச்சியை பண்ணுவோம் பா என்றார்.

ஆம் என்று அனைவரும் தலையாட்டிவிட்டு அவரவர் அறைக்கு சென்றனர். பழனியப்பன் நடப்பது புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்.

ஓவியா
24-11-2006, 06:36 PM

ஓவியா
24-11-2006, 06:36 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

22


கொழும்பு விமான நிலையத்தில் அரை மணி நேரம் நின்ற ப்ரிடீஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் நோக்கி விடாமல் 10 மணி நேரம் சென்றது.

ரமேஷ் ஜெயாவிடம் விமானத்தில் எதுவும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டான். சாதரணமாக ஊரை சுற்ற செல்லும் சுற்றுலா பயணிகள் போல் இருப்போம் என்று சொல்லிவிட்டான்.

அவர்களும் பொதுவான பல விஷயங்களை பேசிவிட்டு உறங்கினர். சுமார் 10 மணி காலையில் ஹீத்ரூ சென்றடைந்தனர். ஒரு டாக்ஸி அமர்த்திக் கொண்டு ஓட்டல் ரெஸிடென்ஸி சென்றடைந்தனர்.

அதிகம் நேரம் செலவிட விரும்பாத ரமேஷ் தொலைபேசி அலுவலகத்தில் கொடுத்த கற்றை காகிதங்களை அதிகம் பார்வையிடாமல் சந்திரசேகர் அழைத்த எண் என்ன என்பதை பார்த்தான்.

அந்த லண்டன் எண்ணின் முகவரி லண்டன் பிரிட்ஜ் எனும் இடத்தில் இருந்தது. அதற்கு அதிகம் அருகாமையில் அதே நேரம் நினைத்தால் போகவேண்டிய தூரத்தில் ரெஸிடென்ஸி இருந்ததால் அதை எடுத்து தங்க முடிவ செய்தான்.

முதல் நாள் நன்றாக உறங்கி விட்டு மறு நாளே வேலை துவங்க முடிவ செய்தான். நவம்பர் மாதம். இருட்டத் துவங்கியிருந்த்து. குளிரத்துவங்கியிருந்தது. இருவரும் நீளமான கம்பளி ஆடையை அணிந்துக் கொண்டு நடக்கத் துவங்கினர்.

ஜெயா களப்பிறர் அப்படிங்கறவங்க ஜமீன்தார்களால் அடிமைபடுத்தப்பட்ட மக்கள் என்றும் அவர்கள் ஜமீன்தார்களை எதிர்த்து போர் கொடி தூக்கினார்கள் என்றும் சொல்றாங்களே. அதுமட்டுமில்லாம அது பொற்காலம் என்றும் மேல் ஜாதியினர் தான் அதை இருண்ட காலம் அப்படின்னு சொல்றாங்களே.


அது மட்டுமில்ல ரமேஷ், நான் படிச்சதுல, களப்பிரர் தென் இந்தியாவை ஆண்ட அரசாளர்கள் அப்படின்னு சொல்றாங்க. களப்பாளர் அப்படின்னு இன்னொரு பேரு இவங்களுக்கு. 300 - 600 A.D காலத்தில இருந்திருக்காங்க.

புத்திஸம், ஜெயினஸம் மதங்கள் பரவலாக இருந்திருக்கு அந்த காலத்தில. இவங்க யூஸ் பண்ண லாங்வேஜ் பாளி. நம்ம சிட்டிசன் படத்தில ஒரு கிராமத்தையே வரைபடத்திலேர்ந்து எடுத்த மாதிரி இவங்களுக்கு அப்புறம் ஆட்சிக்கு வந்தவங்க இந்து மதமோ சைவ மதமோ இவங்களை பத்தின எல்லா விஷயத்தையும் கவர்-அப் பண்ணிட்டாங்க.

இவங்க எங்கேர்ந்து வந்தாங்க, யாரை தோற்கடிச்சு தமிழ் நாட்டுக்குள் நுழைந்தாங்க, இப்படி ஒரு விவரமும் யாருக்கும் தெரியலை.

களவர் தான் களப்பாளர், களப்பாளர் தான் களப்பிறர் அப்படிங்கறாங்க. இன்னும் சில புத்தகங்கள் க ள பி ர ர் அப்படின்னு ஸ்பெல் பண்ணியிருக்காங்க. ரொம்ப குழப்பமாகவே இருக்கு.


சில பேரு முத்தரையர் குலத்துடன் களப்பிறரை இணைக்கிறாங்க. சில பேர் அவங்க கர்நாடகத்தை சேர்ந்தவங்களா இருக்கலாம்னு சொல்றாங்க.

ஹோ ஹோ. பைத்தியம் பிடிச்சிரும் போலிருக்கே. நாம களப்பிறர் திருடர்கள் அப்படின்ற ரூட்ல போறதா இல்லை அரசர்கள் அப்படிங்கற ரூட்ல போறதா குளிருக்கு இதமாக அவளுடைய கைகளுக்குள் கைவிட்டுக் கொண்டபடியே கேட்டான் ரமேஷ்.

ரமேஷ், இப்ப நாம ஏன் நம்ம ஊர் பேரை சென்னை-னு மாத்தினோம்.

ஏன்னா அது ஆங்கிலேயர்கள் வெச்ச பேரு. அது அவமான சின்னம்.

சரி. இன்னும் 50 வருஷத்துக்கப்புறம் யாருக்காவது மெட்ராஸ் அப்படின்னு சொன்னா தெரியுமா.

தெரியாது.

ஆக நாம வரலாற்றை மாத்த முயற்சிக்கிறோம் இல்லையா.

ஆமாம்.

இப்ப ஆப்கானிஸ்தான்ல தாலிபான் ஆட்சி செஞ்ச ஆட்சியைப் பத்தி சொல்ல என்ன இருக்கு. அதனால ஒரு வரலாறும் எழுத வேண்டியதில்லை. அதுபோல ஒரு கெட்ட ஆட்சியாக இருந்திருக்கலாம் இல்லையா.

அது சரி, ஆனா, அவங்க கொடுங்கோல் ஆட்சி புரிஞ்சாங்கன்னாவது ஒரு கெட்ட வரலாறு எழுதனும் இல்லையா.

சரி இதெல்லாம் இல்லாம மஹாபாரதத்துக்கு பிறகு தான் களப்பிறர் ஆட்சின்னு எடுத்துக்கிட்டா நாம ஆராய்ச்சி பண்ணவே தேவை இல்லை.

இல்லை ரமேஷ் எனக்கு என்னமோ பல்லவர்களுக்கு முன்னாடி தான் இருக்கனும்னு தோனுது. பல்லவர்கள் கட்டிய கோவில்கள் இருக்கு இன்னும். ஆக அதுக்கு முன்னாடி இருந்ததா இருக்கலாம்.

ஓவியா
24-11-2006, 06:37 PM
ஆனா ஜெயா நான் என்ன நினைக்கிறேன்னா இது 300-400 வருஷம் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. இத்தனை பெரிய நேரத்தை இருட்டடிப்பு செய்யறது சுலபம் இல்லை. ஆக, இது மிஞ்சிப் போன 50 வருஷம் இருக்கலாம்.

இப்ப நாம சென்னை, மும்பையின்னு மாத்திர மாதிரி 50 வருஷ ஆட்சியை அதற்கான சரித்திரத்தை அழிப்பது சுலபம். நம்மையே எடுத்துக்கோயேன் ஒரு தாஜ் மஹாலையோ பார்லிமென்ட் ஹவுசையோ இடிச்சு தள்ள முடியுமா.

முடியாது ரமேஷ். இந்தியா சாகிற வரைக்கும் முகமதியரும் ஆங்கிலேயரும் போர்ச்சுகீஸியரும் பிரென்ச்சுக்கார்ரும் நம்மை ஆண்ட அவமானம் எப்போதுமே இருக்கும். ஏன்னா நாம இந்தியா, அதனால. இதே ஒரு சதாம் ஹூசேன் இருந்தா...... இந்தியாவை ஒரு வருஷத்துல அவமான சின்னங்கள் இல்லாத ஒரு நாடா ஆக்கிடுவான். ஹிட்லர் இருந்தா வரலாறுகளை கொளுத்தி, வரலாற்று ஆசிரியர்களை கொன்று, இருப்பவர்களை வைத்து ஒரு புதிய வரலாற்றை எழுதியிருப்பான். அதுல 5000 வருஷமா ஒருத்தனே ஆண்டதாகவும் அவனை மக்கள் எல்லாம் விரும்பியதாகவும் எழுதியிருப்பான்.

ஆம் ஜெயா. நாம் தாஜ் மஹாலை இடிக்கவில்லை. பார்லிமென்ட் ஹவுசை இடிக்கவில்லை. நாம் வரலாற்றை மறக்கவில்லை. நேற்றைய முட்டாள் இன்று புத்திசாலிகளாக ஆகலாம். நேற்றைய கோழைகள் இன்று வீரர்களாக ஆகலாம். வரலாற்றை மாற்ற நினைப்பவன் தான் பிறந்ததே தப்புன்னு சொல்லிட்டு மறுபடியும் அம்மாவின் வயிற்றில் நுழைய நினைப்பது போல். நான் இந்தியனாக இருப்பதில் பெருமை படுகிறேன். இன்றைய இந்தியன். நாளை உலகை ஆளப்போகும் இந்தியன். ஐயாம் ப்ரவூட் டூ பி அன் இன்டியன் என்றான் அவளை அணைத்து கட்டியபடியே.

டெலிபோன் கார்டுகள் விற்றுக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவன், சார், ஐயாம் டூ ப்ரவுட் அபௌட் பீயிங் அன் இன்டியன் என்றான்.

அவனை பார்த்து சிரித்தப் படியே ஓட்டலுக்கு திரும்பி நடந்தனர் இருவரும்.

ஓவியா
24-11-2006, 06:38 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

23


மறுநாள் காலையில் எழுந்தவன் ஜெயாவை சௌத்தாலில் இருக்கும் அவளுடைய மாமவின் வீட்டுக்கு போக சொல்லிவிட்டு ட்யூப் ரயிலை பிடித்து லண்டன் பிரிட்ஜ் வந்து இறங்கினான். லண்டனின் சிறப்பே இந்த ட்யூப் தான். ஒடிச் செல்லும் மனிதர்கள், அனைத்து நிறம், இனம், மொழி. லண்டனில் உயிர் இல்லை என்றால் உயிருக்கே உயிர் இல்லை என்று பொருள் என்றோ எங்கோ படித்ததை நினைத்துக் கொண்டான்.

தி ஆப்ஸென்ட் மைன்ட் எனும் புத்தகத்தை வாங்கினான். ஒரு பெரிய கலத்தில் காபியை ஒன்னரை பவுன்ட் கொடுத்து வாங்கிக் கொண்டு முகவரி தேடி அந்த வீட்டின் எதிரே உள்ள பூங்காவில் சென்று அமர்ந்தான்.

ஒரு மணி நேரத்தில் சுமார் 120 பக்கங்கள் படிக்கும் திறன் கொண்ட அவன் 2 மணி நேரத்திலேயே அந்த புத்தகத்தை முடித்துவிட்டான். ஆனால் அவன் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த வீட்டில் அசைவுகள் இல்லை.

சட்டென்று ஒரு காதித்தை எடுத்து அதில் அந்த புத்தகத்தில் இருந்த கடையின் முகவரியை எழுதினான். அந்த புத்தகத்தை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டான். பிறகு நேராக அந்த வீட்டிற்கு சென்றான். கதவைத் தட்டினான்.

ஒரு ஐம்பது வயது மனிதர் கதவைத் திறந்தார்.

வாட் டு யூ வான்ட் என்றார் அவன் வந்ததை சற்றும் விரும்பாதவராய்.

சுத்தமாக ஆங்கிலம் தெரியாதவன் போல் ஏதேதோ உளறினான். மெதுவாக நோட்டம் விட்டான். இது வீடு இல்லை. ஏதோ ஒரு அலுவலகம். காமிரா இருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. கடைசியாக எப்படியோ தனக்கு அந்த காகிதத்தில் உள்ள முகவரிக்கு போகவேண்டும் என்பதை அவருக்கு புரியவைத்தான்.

அவரும் வழக்கமான ஆங்கில வார்த்தைகளில் அவனை திட்டிவிட்டு வழி சொல்லி கதவை சாத்தினான்.

ஆஹா, நல்ல புத்தகம். ஜெயாவுக்கு ரொம்ப பிடிக்கும். சரி இன்னொன்னு வாங்கிக்கலாம் என்று எண்ணியபடியே லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உலாற்றினான். ஒரு பெரிய அரங்கம் கண்ணுக்குத் தென்பட்டது. 25 பவுன்ட் டிக்கெட்டு வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தான்.

மேடை நாடகம் நடந்துக் கொண்டிருந்தது. கதை முழுவதும் ஒருவனை ஒருவள் காதலிக்கிறாள். அதை ஜவ்வுமாதிரி இழுத்துக் கொண்டிருந்தார்கள். நன்றாக ந்டிக்கிறார்கள் என்று அப்பட்டமாக தெரியும் படி நடித்துக் கொண்டிருந்தார்கள். சே, நம்ம ஊர் மேடை நாடக நடிகர்கள்கிட்டேர்ந்து இவங்க நடிப்பை கத்துக்கனும் என்று நினைத்துக் கொண்டான். எதிர்பாராத விதமாக தான் காதலித்தவனை மணக்காமல் வேறு ஒருவனை மணந்துவிடுகிறாள். சரிடா புதுக்கதையா எதாவது சொல்லுங்க என்றுவிட்டு வெளியேறினான்.

மணி 4.30 இன்னும் 1.30 மணி நேரம் ஓட்டவேண்டுமே. சரி, என்றுவிட்டு இன்னொரு புத்தகம் வாங்கினான். மாஸ்டர் மைன்ட் - தி ஸ்டோரி ஆஃப் எ காஃப். நம்ம சமாச்சாரமாச்சே என்று ஒரு ஒரத்தில் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான்.

சாதாரணமாக நம்ம ஊர் கான்ஸ்டபிள்கள் செய்யும் வேலைகளை கதையின் நாயகன் செய்துக் கொண்டிருந்தான். சிரித்துக் கொண்டே, நமக்கு நம்ம ஊரை பத்தி கர்வம் தான் என்று படித்து முடித்த புத்தகத்தை தூக்கி எரிந்துவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினான். குளிர ஆரம்பித்தது. இருட்ட ஆரம்பித்தது.

நேராக தான் கண்காணித்துக் கொண்டிருந்த வீட்டிற்குச் சென்றான். அங்கே பிராக்ஸிமிடி ரீடர் போட்ட கதவு இருந்தது. பிரத்யேகமான அட்டையிருந்தால் மட்டுமே அதை திறக்க முடியும். மாறிவரும் கணினி காலத்தில் பாதுகாப்புகளும் புதுவகையாக மாறியிருந்தன. என்ன செய்வது என்று யோசித்தான்.

பிறகு மீண்டும் லண்டன் பிரிட்ஜ் ட்யூப் ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்த ஒரு எலக்டிரானிக்ஸ் கடையில் வெற்று ஸ்மார்ட் கார்டுகளும் சின்ன யூஎஸ்பி ப்ரோகிராமரும் வாங்கி அங்கிருந்த ஒரு இணைய தொடர்பு நிலையுத்துக்குள் நுழைந்தான். அங்கிருந்த ஒரு கணினியில் அந்த அட்டையை இணைத்து மென்பொருள் திறந்து ஏதோ செய்தான். பிறகு பணம் கொடுத்து விட்டு மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தான். சகஜமாக அந்த அட்டையை நுழைத்து தன்னிடமிருந்த கைகடிகாரத்தின் மூலம் சில கமாண்டுகளை தட்டினதும் அந்த கதவு பச்சைவிளக்கு காட்டி திறந்துக் கொண்டது.

உள்ளே நுழைந்த அவனுக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது.

ஓவியா
24-11-2006, 06:40 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

24

அனைவரும் காலையில் குளித்து முடித்து தயாராகி காலை சிற்றுண்டி கழித்து நேராக மதுரையின் பெரிய நூலகத்திற்குள் நுழைந்தார்கள்.

பல மணி நேரம் தேடிய பிறகும் அவர்கள் தேடிய புத்தகம் கிடைக்கவில்லை. அங்கிருந்து நூலக பதிவாளரை கேட்டார்கள். அவர் ரொம்ப பழைய புத்தகமாக இருக்கும் போலிருக்கே. கையாள கஷ்டமான புத்தகங்களை நாங்கள் எடுத்து கோடவுன்ல வெச்சிடுவோம். ரொம்ப அவசியம்னா அங்க போய் தேடுங்க.

பழனியப்பன் மிகுந்த பணிவுடன் ஆமாம் சார். ரொம்ப அவசியம். கொஞ்சம் அனுமதி கொடுத்தீங்கன்னா................ என்று இழுத்தார்.

என்ன சார் அனுமதி கினுமதின்னு பெரிய வார்தையெல்லாம் சொல்றீங்க. நேரா போய் ரைட்ல திரும்புங்க. ஒரு கதவு தெரியும். பூட்டாம தான் இருக்கு போய் பாருங்க. ஆனா எதையும் எடுத்தக்கறதுக்கு முன்னாடி என்கிட்டே காண்பிச்சுடுங்க.

ரொம்ப நன்றி என்று சொல்லி அனைவரும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.

மலைபோல் புத்தகங்களின் குவியல். பழைய புத்தகங்கள் பூச்சியின் வாடை. மூக்கடைக்கும் அளவுக்கு தூசி. உள்ளே வருபவர்களுக்கு ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்தும். புத்தகங்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டாலும் முறையாக அடுக்கி வைக்கப்படவில்லை.

இதில் இந்த ஒரு புத்தகத்தை மட்டும் எப்படி தேடுவது.

ராணுவ அதிகாரியை போல் ரவி விரைத்து நின்றான்.

சவிதா நீ அந்த மூலைக்குப் போ. ரகு நீ அந்த மூலைக்குப் போ. நீலா நீ இடது பக்கம் போ. நான் வலது பக்கம். சார் நீங்க நடுவில. முதல்ல இந்த இடத்தை சுத்தம் செய்யலாம். எல்லா புத்தகங்களையும் தலைப்புப்படி அடுக்குவோம். ஆங்கில புத்தகங்களை அந்த ஓரத்தில் வைப்போம். இல்லாட்டா நம்மளால ஒன்னும் செய்ய முடியாது. சரியா என்றான் ஆணையிடும் பாணியில்.

அனைவரும் அடிபணிந்தனர். விரைவாக வேலை நடந்தது. சுமார் 2 மணிக்கு அறை சற்று சுத்தமாக தெரிந்தது. புத்தகங்கள் பெருமளவு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அனைவரும் களைத்திருந்தனர். உடலில் தூசு தும்மல்.

ரவியின் சட்டையை பிடித்து இழுத்து பசிக்குதுடா என்றாள் சவிதா.

சரி. நாம ஒரு மணி நேரம் பிரேக் எடுத்துக்கிட்டு மறுபடியும் வரலாம்.

அனைவரும் பூனை போல் அவன் பின் தொடர்ந்தனர். வெளியே வந்ததும் ஒரு செட்டியார் மெஸ் கண்ணுக்கு பட்டது. அனைவரும் படையெடுத்தனர். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் நூலகத்திற்கு வந்து சேர்தனர். நூலக அதிகாரி ஒரு நட்பு புன்னகை வீசினார். சம்பிரதாயத்திற்கு சிரித்துவிட்டு மறுபடியும் அந்த பழைய அறைக்குள் நுழைந்தனர்.

இந்த பெண்கள் சுடிதார் அணிவது எத்தனை வசதி என்று அன்று தான் உணர்ந்தார் பழனியப்பன். அனைவரும் கீழே உட்கார்ந்தனர்.

மறுபடியும் ரவி தன்னுடயை தலைவன் பணியை செய்தான்.

சரி, நீலா நீ லாப்டாப்பை எடுத்துக்க. யூனிகோட் தமிழ்ல 50 வார்த்தைக்கு மேலே வேகமாக அடிக்க உன்னாலத்தான் முடியும். சவிதா புத்தகங்களை எடுத்துக் கொடுக்க நீ டைட்டிலை நோட் பண்ணிக்க, பென்சில்லை புக்குக்கு மேலே ஒரு நம்பரை எழுதிக்கோ. மறுபடியும் அதே புக் வரக்கூடாது. நாம தேடற மூனு புக்ஸ் கிடைச்சதும் நீ உன் வேலையை நிறுத்து. நானும் ரகுவும் பேப்பர்ல எழுதிக்கிறோம் அந்த கார்னர்ல. சார் வேண்டுமானால் கொஞ்ச ரெஸ்ட் எடுக்கட்டும்.

இல்லைப்பா. நானும் அந்த கார்னருல வேலையை செய்யறேன். மறுபடியும் நாம் 2 மணி நேரத்துக்கு அப்புறம் பேசுவோம். ப்ராக்ரெஸ் என்ன அப்படின்னு டிஸ்கஸ் பண்ணுவோம்.

அங்கே பணியாளர் ஒருவர் நூலக பதிவாளரிடம் வந்து உங்களுக்கு சந்திரசேகர் கிட்டேர்ந்து போன் என்றார்.

ஓவியா
24-11-2006, 06:41 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

வணக்கம் சார்.
.......................................

ஆமாம் சார். நான் தான் போன் போட்டேன் உங்களுக்கு.

........................................
நீங்க சொல்லியிருந்தீங்கள்ல அந்த புத்தகங்களை தேடி யார் வந்தாலும் சொல்லச் சொல்லி. அதுக்குத்தான் போன் போட்டேன். 4 மாணவர்களும் ஒரு வாத்தியாரும் தான் வந்திருக்காங்க.
.........................................
இல்லை சார் டாட்டா சுமோவில வர்ல. பஸ்சுல வந்த மாதிரி தான் இருக்கு.

..........................................
ஆமாம் சார். ஒரே வாத்தியாரு தான். இரண்டு பேரு இல்லை.

.........................................
சரி சார். அவசியம் சொல்றேன்.

இவ்வாறாக பேசிவிட்டு தொலைபேசியை அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

சுமார் இரண்டரை மணி நேரத்தில் பணியாளர் வந்து இன்னும் அரை மணியில் மூடிடுவோம் என்று சொல்லிவிட்டு போனார்.

அனைவரும் சோர்ந்திருந்தனர். மூன்றில் ஒன்று கூட கிடைக்கவில்லை. நாளை வந்த தொடரலாம் என்றிருந்த போதும் ஏதோ இன்றே உலகம் முடிந்துவிட்டது போன்ற ஒரு பிரமை.

ரவி மறுபடியும் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

கமான். லெட் அஸ் கன்டின்யூ அவர் வொர்க்.

அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. சரியாக 20 நிமிடத்தில் அடுத்தடுத்து அந்த மூன்று புத்தகங்களும் கிடைத்தன. வெற்றிக் களிப்போடு அதை எடுத்துக் கொண்டு விடுதிக்கு சென்றனர்.

மாலை மீனாட்ச்சியம்மனின் தரிசனம் அவர்களுக்கு மன அமைதியை தந்தது. பழனியப்பன் குழப்பத்தில் இருந்தார். அவர்களை யாரோ எப்போதும் தொடர்வது போல அவருக்கு ஒரு பயம் இருந்தது. மாணவர்களுக்கு அந்த பயம் இருப்பதை உணர்ந்தார். எப்படியாவது மற்ற 4 பிள்ளைகளையாவது ஒழுங்காக போய் சேர்க்கவேண்டுமே என்ற பயம். தனியாக இந்த காரியத்தை செய்ய முடியாது என்பது தெரிந்ததால் அமைதியாக இருந்தார்.

நீண்ட பகலுக்கு பிறகு உடல் சோர்ந்து ஆனால் மனதில் ஒரு வெற்றிக் களிப்புடன் படுக்கைக்கு சென்றனர்.

ரவி தானே அப்புத்தகங்களை வைத்துக் கொள்வதாக கூறினான். ரகு தன்னுடயை அறையை காலி செய்துவிட்டு ரவியின் அறைக்கு அவனுக்கு துணையாக வந்தான்.

மதுரையை இருள் கவ்வியது.

ஓவியா
24-11-2006, 06:44 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

25

ரொம்ப வித்தியாசமான தகவல்கள் கிடைச்சிருக்கு செல்லம். நீ வந்து உன் மூளையை கடன் கொடுத்தா நல்லா இருக்கும் என்றான் ஓட்டலுக்கு திரும்பிய ரமேஷ்.

சரிம்மா. நாளைக்கு காலையில் அங்கே இருப்பேன். உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கா வெளியிலே என்று கேட்டாள். அவளுக்கு இப்போதே அவனை பார்த்து என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள ஆர்வம்.

இல்லை. ஓட்டல்ல தான் என்றான்.

சரி. நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி தொலைபேசி மூலம் ஒரு முத்தத்தை பதித்து வைத்தாள்.

தான் சேகரித்த விஷயங்களை தன்னுடைய மடிகணினியில் நுழைத்தான். தான் எடுத்த புகைப்படங்களை அதில் ஏற்றினான். பிறகு ஒரு கோப்பையில் தேனீர் கலந்துக் கொண்டு வந்தான். இன்னிக்கு ஜெயாதான் இல்லையே என்று நினைத்துக் கொண்டு கணினியின் உள் பையில் மறைத்து வைத்திருந்த சுருட்டுப்பெட்டியை எடுத்தான். நன்றாக அதன் தலையை எரித்துவிட்டு ஒரு இழுப்பு இழுத்து அறையை புகையாக்கினான்.

பிறகு விஷயங்களை ஏற்ற ஏற்ற தனக்குத்தானே பேசியவாறு அருகில் இருந்த காகிதத்தில் வரைய ஆரம்பித்தான்.

முதல் பட்டியல் லண்டன் வருவதற்கு முன்பே தெரிந்திருந்த விஷயம். சந்திரசேகர் பழனியப்பனை ஆராய்ச்சிக்காக ஊக்குவித்திருக்கிறார். கரிகாலனை உளவு பார்க்க அனுப்பியிருக்கிறார். பழனியப்பன் மற்ற ஐந்து மாணவர்களை ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் சங்கர் உயிருடன் இல்லை. கரிகாலனை கழற்றி விட்டுவிட்டேன். கரிகாலனை தொடர்ந்து சென்ற அதிகாரி மின்னஞ்சலில் தகவல் அனுப்பியிருந்தார். கரிகாலன் நேராக ராஜ மன்னார்குடிக்கு சென்றுவிட்டார். யாருடனும் இதுவரை போனில் தொடர்பு கொள்ளவில்லை. சந்திரசேகரையும் போய் பார்க்கவில்லை. ஒருவேளை தாங்கள் தொடர்ந்து வருவது அவனுக்கு தெரிந்திருக்கலாம். அதனால் ஒரு வேளை அவர் போலீஸை சுத்தலில் விடுவதற்காக தன் சொந்து ஊருக்கு சென்று சில நாட்கள் தங்க முடிவு செய்திருக்கலாம்.


சுருட்டு பாதி புகைந்திருந்தது. அவன் மூளைக்குள் பல கணிதங்கள்.

இரண்டாவது பட்டியல். படத்தை உற்றுப் பார்த்தான். இன்று கண்டெடுத்தது. ஜான் ஸ்டுவர்ட் என்பவருக்கு சொந்தமான இடம் அது. வங்கி போக்குவரத்தில் கைவைத்ததில் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் சுமார் 8 பேருக்கு பல முறை பணம் அனுப்பப்படுள்ளது. சந்திரசேகரும் கணிசமான அளவு பணம் பெற்றிருந்தார்.மற்ற ஏழு பேரு யாரு என்று கேட்டுக் கொண்டான். அவர்களை கண்டுபிடிப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால் எதற்காக இவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் ஜான். அப்படியென்றால் களப்பிறர் அவர்களின் புதையல் இந்த கட்டுக்கதையெல்லாம் நிஜமா. ஜான் இத்தனை பணம் அனுப்பி இந்த ஆராய்ச்சியை தொடர வைக்க முட்டாளா. பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அப்படி புதையல் புதைத்து வைத்திருந்தாலும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒருவன் அதை தேட முயலுகிறான், அதற்காக இத்தனை ஆயிரம் பவுண்டுகள் செலவு செய்கிறான் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

சரி நாம் எடுத்த புகைப்படங்களை பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டே அவன் அன்று எடுத்தவைகளை ஒன்றொன்றாக பார்த்தான். அவனுடைய ஆச்சர்யம் எல்லை மீறி போனது.

ஜெயா கம் அன்ட் கிவ் மீ ஏ ப்ரேக் என்று சொல்லிவிட்டு தூங்கச் சென்றான்.

leomohan
24-11-2006, 08:42 PM
மிக்க நன்றி பாரதி காணாத புதுமைப் பெண்ணே:)

ஓவியா
25-11-2006, 10:54 AM
மிக்க நன்றி பாரதி காணாத புதமைப் பெண்ணே:)


புதமைப் பெண்ணா
:eek: :angry: :D ;)


இப்படிக்கு
புதுமைப்பெண்

leomohan
25-11-2006, 11:40 AM
திருத்திவிட்டேன் அம்மணி

மதி
27-11-2006, 02:15 AM
சுவாரஸ்யங்களும் பல மர்ம முடிச்சுகளும் கொண்ட தொடர்...
வாழ்த்துக்கள் மோகன்..பதிப்பித்த ஓவியாக்காவிற்கும் நன்றி பல..

leomohan
27-11-2006, 07:27 AM
நன்றி ராஜேஷ். உங்கள் ஆதரவு எப்போதும் உற்சாகமூட்டுவதாகவே உள்ளது. மேலும் எழுதவும் தூண்டுகிறது. மிக்க நன்றி.

ஓவியா
01-12-2006, 04:12 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

26


காலையில் எழுந்தவுடன் ரவி தன்னுடைய ஆராய்ச்சியை உணவுடன் மற்றுவர்களுடன் பகிர்ந்துக் கொண்டான்.

சார் இந்த புத்தகம் சுமார் 7 பேர்கிட்ட மாத்தி மாத்தி போயிருக்கு. மத்த பேர்கிட்டெல்லாம் ஒரு தடவைதான் போயிருக்கு. அதனால நாம முதல்ல இந்த 7 பேரு யாருன்னு தேடனும். யாரு இந்த 7 பேருன்னு தெரியாது. ஏன்னா அவர்களுடைய உறுப்பினர் எண்கள் மட்டும் தான் இதுல இருக்கு.

முதல் புத்தகம் 1976ல் தான் வெளியிட்டிருக்காங்க. என்னுடயை கணிப்பு சரியா இருந்ததுன்னா 1990க்கு அப்புறம் தான் கணினி மூலம் புத்தகம் வெளியிடு செய்வது வழக்கத்திற்கு வந்திருக்கு. ஆக இது எழுத்து கோர்த்து அச்சு செய்யும் பழைய முறை. டெலிபோன் டைரக்டரியில் பார்த்துட்டேன். இந்த பப்ளிஷிங்க கம்பெனி இப்ப இல்லை.

இந்த புத்தகங்களை சுமார் 4 வருஷமா தான் இந்த 7 உறுப்பினர்களும் மாற்றி மாற்றி எடுத்திருக்காங்க. அதுக்கு முன்னாடி அங்கொன்னும் இங்கொன்னுமா தான் இந்த புத்தகங்கள் வெளியே போயிருக்கு. ஆக இந்த ஆராய்ச்சியில் கடந்த நாலு வருஷமா தான் ஆர்வம் அதிகமாயிருக்கு.

அப்ப நாலு வருஷத்துக் முன்னாடி ஏதோ முக்கியமானது ஒன்னு நடந்திருக்கனும்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சொல்றேன். இந்த மூன்று புத்தகங்களிலும் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கு. முதல் புக்குல 17,18,19, 20 மிஸ்ஸிங். இரண்டாவது புக்குல 13, 14, 15, 16 காணோம். மூன்றாவது புத்தகத்தில மறுபடியும் 13,14,15,16 காணோம். அதோட உள்ளடக்கம் பக்கமும் காணோம். இந்த மூன்று புத்தகங்களும் ஒரு நிறுவனத்தால வெளியிடப்பட்டிருக்கு. முதல் புத்தகத்தை எழுதியவர் ரெயின் ஸ்டுவர்ட். அதை மொழியாக்கம் செய்தது க. கதிரவன். பாக்கி இரண்டு புத்தகங்களையும் எழுதியதும் க. கதிரவன் தான். இந்த எந்த புத்தகமுமே மறு வெளியீடு செய்யப்படலை அப்படிங்கறது என்னோட யூகம்.

இப்ப நாம கண்டுபிடிக்க வேண்டியது

1. யாரு ரெயின் ஸ்டுவர்ட், எங்கே இருக்காரு
2. யாரு க. கதிரவன், எங்கே இருக்காரு
3. இந்த பதிப்பகம் கலை பதிப்பகம் நடத்தினது யாரு, எங்க இருக்கு, இப்ப எந்த பேருல இருக்கு
4. இந்த 7 உறுப்பினர்கள் யாரு, எங்கே இருக்காங்க, இன்னும் இந்த ஆராய்ச்சி செய்றாங்களா இல்லையா
5. எல்லாமே இந்த நால வருஷம் தான் இந்த ஆராய்ச்சியில ஆர்வம் இருக்கற மாதிரி இருக்கு. அப்படின்னா சந்திரசேகர் தம்பிரானை 30 வருஷத்துக் முன்னாடி இந்த ஆராய்ச்சியை ஏன் தடுக்கனும். ஞானப்ராகசத்தை ஏன் ஆளை வச்சி அடிச்சி இந்த ஆராய்ச்சியை தொடரவிடாம பண்ணனும்.
6. அப்படி இவரே எல்லாரையும் ஆராயச்சி செய்விடாம பண்ணிட்டு நம்மை மட்டும் மறுபடியும் ஏன் ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்கனும்.
7. கரிகாலன் தான் சங்கரை கொன்னாருன்னு வச்சிக்கிட்டா கூட அவருக்கு பின்னாடி யாரு இருக்காங்க. ஒரு ஆளா, இல்லை ஒரு அரசாங்கமா.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனதில் பல கேள்விகள்.

சவிதா முந்திக் கொண்டாள்.

ரவி, ஏன் அநாவசியமா பக்கங்களை கிழிக்கனும். புத்தகத்தையே தொலைச்சிருக்கலாமே.

நீ சொல்றது சரிதான். பக்கங்களை கிழிச்சதனால முக்கியமான விஷயங்களை யாருக்கும் தெரியாம பண்ணியாச்சு. அந்த புத்தகங்களை விட்டு வச்சிருக்கறதால யாரு யாரு அந்த புத்தகம் தேடி வராங்கன்னு ஒரு ட்ராக் வைக்கறதுக்காக தான்.

ஓ அப்படியா. சரி நேரா போய் இன்னொரு புத்தகம் வாங்கலாமே.

நானும் அது யோசிச்சேன். ஒன்னு இந்த வேலைக்கு தடை செய்யறவங்க எல்லா புத்தகங்களையும் வாங்கியிருக்கனும். அப்படி இல்லைன்னா இந்த புத்தகத்தை எழுதியவரு இந்த பதிப்பகத்தை தவிர வேறே எங்கேயும் கொடுத்திருக்க முடியாம போயிருக்கலாம். இல்லை அந்த காலத்தில இப்ப இருக்கற மாதிரி ஆயிரக்கணக்கான பிரதிகள் அடிக்காமல் இருந்திருக்கலாம். பொது மக்கள் வாங்கிப்போயின பிரதிகளை தேடி தேடி திரும்பி எடுக்கறது கொஞ்சம் சிரமமான காரியம் தான்.

ஒரே குழப்பமா இருக்கு. ரொம்ப த்ரில்லிங்காவும் இருக்கு என்றாள் நீலா.

அதுவரை அமைதியாக இருந்த ரகு சட்டென்று ஒன்று சொன்னான்.

ஓவியா
01-12-2006, 04:13 PM
ரவி, அந்த புத்தகங்கள் அங்கே வெச்சிட்டு, பக்கங்களை கிழித்து, யாரு வர்றாங்க அப்படின்னு டிராக் பண்ண முடிவு செஞ்சவங்க, கட்டாயம் லைப்ரரி காரனை விலைக்கு வாங்கியிருப்பாங்க. சுலபமா கிடைக்க வேண்டிய புத்தகத்தை வேண்டும்னு நேரம் கடத்தி வெச்சிருக்காங்க. அப்படின்னா இந்த தகவல் நம்மை கண்காணிப்பவர்களுக்கு போயிருக்கும். இப்ப நாம்ப ஜாக்கிரதையா இருக்கனும். நாம போய் லைப்ரரி உறுப்பினர் பட்டியலை கேட்டா கொடுக்க மாட்டாங்க. நாம உடனடியா சில காரியம் பண்ணனும்.

சொல்லு என்ன பண்ணலாம்.

உடனே நாம ஓட்டலை காலி பண்ணனும். ஒரு 15 கிலோமீட்டர் வண்டியில சுத்திட்டு வேற ஓட்டல்ல ரூம் எடுக்கனும். அதுக்குள்ள நம்மளை யார் தொடர்ந்து வர்றங்கன்னு கண்டு பிடிக்கனும். ரமேஷ் கிட்டே பேசுவோம். போலீஸ் கிட்ட போகவேண்டாம். நீலா, சவிதா, நீங்க ரெண்டு பேரும் லைப்ரரிக்கு போய் எப்படியாவது மெம்பர்ஸ் ரிஜிஸ்டரை திருடிக்கிட்டு வரனும். கொஞ்ச ரிஸ்க் தான். ரவி உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பான். நீலா, சவிதா நீங்க ரெண்டு பேரும் கம்ப்ளீட்டா கெட்டப் மாத்திக்கிட்டு போங்க. ரவி, நீயும் வேஷ்டி சட்டைக்கு மாறிடு என்றான். இன்று ரகு இன் சார்ஜ்.

அதுவரை முழுவதையும் கேட்டுக் கொண்டிருந்த பழனியப்பன், நான் வேணா நேரடியா சந்திரசேகர்கிட்டே பேசட்டுமா என்றார்.

வேண்டாம் சார். இதுவரைக்கும் இது ஒரு வரலாறு ஆராய்ச்சின்னு மட்டும்தான் நினைச்சேன். இல்லை. இது துப்பறியும் நாவல். இந்த நாவல்ல நாம் தான் டிடெக்டிவ்ஸ். இது ஒரு சாலென்ஜிங்க அசைன்மென்ட் என்றான் ரவி உற்சாகமாக.

என்னமோ பண்ணுங்க. யாரோட உயிருக்கும் ஆபத்து வரக்கூடாது. ரவி, எனக்கு அந்த புத்தகங்கள் கொடுத்தீன்னா நானும் படிக்க ஆரம்பிச்சுடுவேன்.

சரி என்று சொல்லவிட்டு வேலை இறங்கியது இந்த இளைஞர் கூட்டம்.

ஓவியா
01-12-2006, 04:18 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

27

ஓடி வந்து அனைத்துக் கொண்டாள் ஜெயா. யூ மிஸ்ட் மீ டார்லிங்க என்று ரமேஷின் நெற்றியில் முத்தமிட்டாள்.

கம். யூ நீட் டூ காட்ச் அப் லாட் ஆஃப் திங்ஸ். கதை எங்கேயோ போயிட்டிருக்கு. உன்னோடைய எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ் வேண்டும்.

இருவரும் பெரிய கோப்பைகளில் தேனீர் எடுத்துக் கொண்டு மேஜையின் அருகே வந்து அமர்ந்தனர்.

ஜெயா, முதல்ல இந்த புகைப்படங்களை பாரு. இதுல சுமார் நாலு புத்தகங்கள் மீன் வகைகளைப் பத்தியிருக்கு. நெறைய மீன்களோட போட்டோக்கள் இருக்கு. இதுக்கும் இந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்.

ஜெயா புகைப்படங்களை பெரிதாக்கி புத்தகத்தின் தலைப்பை படிக்க முயன்றாள். பிறகு கணினியின் மூலம் ஓட்டல் அளித்திருந்த இலவச கம்பியில்லா இணைய தொடர்பை துவக்கினாள். கிடைத்த தலைப்பில் தேடினாள். கிரெடிட் கார்ட் உபயோகித்து அந்த புத்தகங்களை மின்புத்தக வடிவில் இறக்கினாள். அடுத்த 5 நிமிடங்களில் அந்த நான்கு புத்தகங்களும் அவள் கணினியில்.

மனைவியை தொந்திரவு செய்யாமல் அவள் செயல்களை ரசித்துக் கொண்டிருந்தான் ரமேஷ். இந்த புத்திசாலி மட்டும் மனைவியாக கிடைக்காவிட்டால் என்ன ஒரு வெற்று வாழ்கையாக இருந்திருக்கும். வீட்டில் வந்தால் நம் கேஸைப்பற்றி என்னதான் பேசுவது. இரண்டாம் வியூகம் தெரியவேண்டும் என்றால் கூட வீட்டை விட்டு வெளியே போகவேண்டிருக்கும்.

அவளை உற்று நோக்கினான். பெரிய அழகி இல்லை. ஆனால் அவளுடைய முகத்தில் அவளுடைய அறிவு துடிப்பு ஒரு ஒளியை தந்திருந்தது. அதுவே அவளுக்கு அழகு சேர்த்தது. சற்றும் கர்வம் இல்லாத பெண் அவள். அதனால் தன்னுடைய புத்திசாலித்தனத்திற்கும் அவளுடைய புத்திசாலித்தனத்திற்கும் ஆயிரம் இகோ பிரச்சனைகள் வந்திருக்கும். பல முறை பல விஷயங்களில் அவனுடைய கருத்தை அவள் சொல்ல மாற்றியிருக்கிறான். ஆனால் ஒரு முறை கூட அவளுடயை கட்டாயத்தினால் அல்ல. அழகாக புரிய வைத்துவிடுவாள்.

சரி ரமேஷ். எனக்கு அதிக நேரம் வேண்டும். ஆனால் என்னுடயை துரித கருத்து வேணும்னா களப்பிறர்கள் கடல் மூலமா தங்களுடைய தீவகளுக்கு தங்க, வைர, வைடூரியங்களை அனுப்பியிருக்கலாம். நல்லா பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு வகை மீன்கள் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு போய் வரும். இந்த வகை மீன்கள் சுமார் 20,000 கிலோ மீட்டர்கூட ஒரு நாள்ல நீஞ்சி கடக்கும். களப்பிறர்கள் தங்களுடைய புதையல்களை இந்த மீன் மேல கட்டி அனுப்பியிருப்பாங்க. அங்கே அவர்களுடைய மக்கள் அதை இறக்கியிருப்பாங்க. சுமார் 80 சதவீதம் மீன்கள் போய் சேர்ந்தாலே போதுமே. எல்லாம் திருடிய பொருட்கள் தானே. ஆனா ஒன்னு தங்க, வைரங்களை விட அவங்க பல வகைப்பொருட்களையும் அனுப்பியிருக்கலாம். இது ஒரு யூகம் தான். இது எல்லாமே பொய்யா இருக்கலாம். இந்த புத்தகங்கள் வைத்திருந்தவர் மீன்களைப்பற்றி படிப்பதில் ஆர்வம் கொண்டவராக கூட இருக்கலாம். அப்படி இருக்கற பட்சத்தில் நான் சொன்னது எல்லாமே தப்பாயிருக்கலாம்.

ஓ. நல்ல இமாஜினஷேன்.

அது சரி. நீங்க என்ன பண்ணீங்க அதை சொல்லுங்க முதல்ல.

இந்த இரண்டு படத்தை பாரு. இதுல முதல் படத்தில எழுதியிருந்த பெயர்களோட நீ ஏற்கனவே பரிட்சயம் ஆகியிருக்கே இல்லையா.

ஆமா.

இப்ப இந்த இரண்டாவது லிஸ்ட்டை பாரு. நான் போன முகவரியில் அந்த நிறுவனத்தின் முதலாளி ஜான் ஸ்டுவர்ட். அங்கிருந்த விஷயங்களை கொடைஞ்சதுல பாங்க் டிரான்சாக்ஷன்ஸ் கிடைச்சுது.

இந்த ஜான் இந்தியாவில இருக்கற இந்த ஆளுங்களுக்கு நிறைய பணம் அனுப்பியிருக்காரு.

அவள் அந்த பட்டியலை கூர்ந்து பார்த்தாள்.

யார் யாருக்கு எந்த எந்த அக்கௌண்டில் எப்ப எப்ப பணம் போயிருக்குன்னு ஒரு பட்டியல் போடலாம். அதை கிராஃப் பண்ணி பார்க்கலாம். ஏதாவது பாட்டர்ன் கிடைக்கும் என்றாள்.

சரி எனக்கு 15 நிமிஷம் கொடு. நீ அந்த புக்ஸ் படிக்க ஆரம்பி.

சரி என்று சொல்லிவிட்டு அவள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்.

ஓவியா
01-12-2006, 04:20 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

28

அந்த தனி பங்களாவில் ஒரு பெரிய பென்ஸ் கார் வந்து நின்றது. தமிழ் நாட்டில சில பேரிடம் மட்டும் தான் அந்த மாதிரி வண்டி இருக்கும் போல. அந்த பங்களாவின் பெரிய கதவுகள் திறந்து வழி விட்டது.

நேராக உள்ளே சென்ற சந்திரசேகரை அவர் மனைவி வரவேற்றார். என்னங்க இத்தனை நாளா காணோம்.

அதான் இப்ப வந்திட்டேன்ல அப்புறம் என்ன.

பேசாம நாங்களும் சென்னைக்கே வந்திடறோம்.

ஆமா, சென்னைக்கு வந்த அந்த குடிசையில தங்கு என்னோட. உனக்கும் பிள்ளைகளுக்கும் தான் இத்தனை கஷ்டப்படறேன். படகு மாதிரி காரு, பங்களா, நீச்சல் குளம், நகை நட்டு அப்படின்னு.

அது சரிங்க. உங்களை தனியா விட்டுட்டு நாங்க மட்டும் இதையெல்லாம் அனுபவிச்ச எப்படிங்க.

அதான் நான் அடிக்கடி வந்துட்டுப் போறேன்ல என்றார் காட்டமாக.

நேராக பின்புறம் சென்று நீச்சல் குளத்தின் அருகே இருந்த பெரிய சாய்வு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார். அவருடைய மனைவி அந்த உயர்ந்த ரக மதுபானத்தையும் அதனுடயை இதர பொருட்களையும் தாங்கி வந்தார்.

அந்த சிறிய கண்ணாடி குடுவையில் அந்த மென் நிற திரவத்தை நிரப்பி பனிக்கட்டி துண்டுகளை போட்டு கையில் எடுத்துக் கொண்டார்.

கரிகாலன் கிட்டேயிருந்து போன் வந்துதா.
இல்லையே. அவர் இங்க போனே பண்றதில்லை.

எங்க போய் தொலைஞ்சான்னு தெரியலை. அவன் மொபைல்ல போன் போட்டா பதிலும் இல்லை. லைப்ரரிகாரனும் லைப்பரரிக்கு அவன் வரலைன்னு சொல்றாங்க. எதாவது பிரச்சனையில மாட்டிக்கிட்டான்னு தெரியலை.

ஐயோ என்னங்க சொல்றீங்க. உங்களுக்கு போலீஸால ஏதாவது பிரச்சனை வருமா.

ஏய் என்ன உள்ர்ற. நான் என்ன கொலை பண்றேனா. எல்லாம் சட்டப்படி தான் பண்ணிக்கிட்டு வரேன். நமக்கு வர்ற பணம் எல்லாம் ஆராய்ச்சிக்காக முறைப்படி வர்ற வெள்ளைப்பணம். இந்த நிலம் உங்க அப்பாவோடது.

அது சரிங்க. ஆனா அரசாங்க சம்பளத்தில் இந்த சொத்தெல்லாம் எப்படி வந்ததுன்னு கேட்டா.

அந்த கவலை உனக்கு எதுக்கு. அவன் அவன் கோடிகோடியா சம்பாதிச்சிகிட்டு உலாத்திக்கினு இருக்கான். நீ சும்மா பெனாத்திக்கினு இருக்கே. உள்ள போ.

அவள் உள்ளே சென்றதும், மது கோப்பையை எடுத்து மதுவருந்த தொடங்கினார். அவருடைய செல் பேசி ஒலித்தது.

ஆங்கிலத்தில் பேசி வேண்டிய போன் கால். சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தார். முகம் வெளிறியிருந்தது.

மடக் கென்று குடித்துவிட்டு மூன்று ஐந்தில் ஒன்றை எடுத்து பற்றவைத்தார்.

leomohan
01-12-2006, 04:21 PM
நன்றி ஓவியா. எங்கே மறந்திட்டீங்களோன்னு நினைச்சேன்.

ஓவியா
01-12-2006, 04:22 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

29

சரி ஜெயா. இது தான் என்னுடயை திட்டம். நாம்ப இரண்டு பேரும் நேராக ஜான்கிட்டே போகலாம். நீ வீட்டுக்கு வெளியே இரு. நான் ஒரு ஆராய்ச்சியாளன் மாதிரி உள்ளே போறேன். நான் 2-3 மணி நேரத்தில திரும்பி வரலேன்னா நீ போலீஸோட உள்ளே வந்துடு. சரியா என்றான்.

அது சரி. ஜான்கிட்டே என்னன்னு சொல்லப்போறீங்க.

நான் சந்திரசேகர் அனுப்பிய ஆள்னு சொல்றேன்.

அப்படி சந்திரசேகர் அனுப்பறதா இருந்தா அவர் போன் பண்ணி சொல்லியிருக்க மாட்டாரா.

ஜெயா, இது சும்மா உள்ளே நுழைய தான். எப்படியிருந்தாலும் நம்மை உள்ளே விடப்போறதில்லை. பார்ப்போமே.

இருவரும் ட்யூப் பிடித்து லண்டன் ப்ரிட்ஜ் நிறுத்தத்தில் இறங்கினர். ரமேஷ் ஜெயாவுக்கு அந்த வீட்டை காட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

ஜான் இவரை எதிர்பாராதவிதமாக வரவேற்று உள்ளே அமரச் செய்தார். அதுவே ரமேஷ்க்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனுடைய ஏழாவது அறிவு அவனை தயாராக இருக்கச் சொன்னது.

அவன் தான் சென்னையிலிருந்து வந்திருப்பதாகவும் சந்திரசேகர் அனுப்பியிருப்பதாகவும் களப்பிறர் ஆட்சியை பற்றி முக்கியமான தகவல் கிடைத்திருப்பதாகவும் கூறினான்.

அவரும் அப்படியா நல்லது. வாருங்கள் உங்களை என் பாஸிடம் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார். சற்றே இருட்டிய அறை. பெரிதாக இருந்தது. பல புத்தகங்களும் சில பெரிய போட்டோக்களும் அதில புராதான சின்னங்களும் சிலைகளும் இருந்தன.

அவர் ஒரு பெரிய மேசைக்கு பின்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவனை அதன் எதிர்புறம் அமரச்சொன்னார்.

உங்கள் பெயர் என்ன.

ரமேஷ்.

அப்படியா. நீங்கள் தானே நேற்று வந்தது.

ஆமாம்.

ஏன் நேற்றே என்னிடம் இதைப் பற்றி பேசவில்லை.

அதுவா, உங்கள் முகவரிக்கு பதிலாக வேறொரு முகவரியை தவறுதலாக தேடிக் கொண்டிருந்தேன்.

ஒ. சரி. நேற்று என் அலுவகத்தில் நுழைந்து என்ன செய்தீர்கள்

என்ன இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் அதிர்ச்சியாவது போல் காட்டிக் கொண்டான்.

ஹா ஹா. ரொம்ப அதிர்ச்சியாக வேண்டாம் ரமேஷ். இதோ இந்த புகைப்படத்தை பாருங்கள். இது எங்களுடயை பாதுகாப்பு காமிராக்கள். புத்தகங்களுக்கு நடுவே இருந்து நீங்கள் செய்தவைகளை கச்சிதமாக படம் பிடித்திருக்கிறது என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு எதிராக சில புகைப்படங்களை வீசினார்.

அதை எடுத்த பார்த்த அவன் மெல்ல புன்னகைத்தான்.
ஆம். நேற்று அழையா விருந்தாளியாக வரவேண்டியிருந்தது.

ஏன்.

நான் ஒரு சுற்றுலா பயணி. பணம் தொலைந்துவிட்டது. திருட வந்தேன். உங்கள் அலுவலகத்தில் பணம் கிடைக்கவில்லை. சில காகிதங்களில் இந்திய பெயர்கள் இருந்தது. அதனால் அந்த பெயர்களை சொல்லி ஏதாவது பணம் பறிக்கலாமா என்று பார்த்தேன். இப்போது மாட்டிக் கொண்டேன்.

வெரி ஸ்மார்ட். இங்கு பணம் இல்லை என்று யார் சொன்னது. அதோ பார் அந்த ஸேஃப். அதில் நிறைய பணம் இருக்கிறது. அந்த பக்கம் போகவில்லை நீ என்றார் வில்லத்தனமாக.

ஒ அப்படியா. நான் நடுவில் பயந்துவிட்டேன். அதனால் பாதியிலேயே ஓடி விட்டேன்.

நீ புத்திசாலி ரமேஷ். என் கதவின் பாதுகாப்பை உடைச்சி உள்ளே வந்திருக்கே. ஆனா நீ உன்னை ரொம்ப புத்திசாலின்னு நினைச்சிக்கறே. அதுதான் பிரச்சனையே என்றார்.

என்ன சொல்றீங்க.

எதுக்காக டாக்குமெண்ட்ஸ் தேடினே, போட்டோ எடுத்தே சொல்லு.

அமைதியாக இருந்தான் ரமேஷ்.

ஓவியா
01-12-2006, 04:22 PM
இன்னும் சில போட்டோக்களை அவன் முன் எரிந்தார். அவன் போட்டோ எடுத்தது எல்லாம் அதில் பதிவாகியிருந்தது.

அவன் அதை பார்த்துவிட்டு மீண்டும் மேசை மேல் வைத்தான்.

ரமேஷ் நீ துப்பறியும் நிபுணரா இருக்கலாம். இல்லை அரசாங்க உளவுத்துறையிலிருந்து வந்திருக்கலாம். எனக்கு அதைப்பத்தி கவலை இல்லை. நான் எதுவுமே சட்டவிரோதமா செய்யலை. உன் நாட்டில் ஏதாவது சட்ட விரோதகாரியம் நடந்தா அதை உன் நாட்டில போய் தேடு. இங்கே நேரம் செலவிடாதே. போ என்றார்.

ஜான் நீ எதுக்காக இவ்வளவு பணம் எங்க நாட்டுக்கு அனுப்பறே.

கள்பிறர் ஆட்சி காலத்தை ஆராய்ச்சி செய்ய.

அதுக்கு இத்தனை பணம் அனுப்பறது சரியா படலையே.

அப்ப கண்டுபிடி.

கண்டுபிடிக்கறேன்.

அதுக்கு முன்னாடி உனக்கு எங்கள் நண்பரை அறிமுகப்படுத்தறேன் என்று கூறியவாறே அவனை கடந்து சென்று கதவை திறந்தார்.

லண்டன் போலீஸ் கையில் விலங்கோடும் துப்பாக்கி நீட்டியபடியே நின்றிருந்தது.

உங்களை ஜான் ஸ்டுவர்டின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்கிறோம் என்றார் அந்த கூட்டத்தில் மேலதிகாரியாக தெரிந்த ஒருவர்.

என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. அதை நான் எடுக்கச் சென்று நீங்கள் என்னை சுடுவதற்கு பதில் நீங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று திரும்பி நின்றான்.

இரண்டு அதிகாரிகள் துப்பாக்கியை எடுத்து அவன் மீது குறிவைத்தபடியே இருக்க ஒருவர் சர்வ ஜாக்கிரதையாக அவனிடம் சென்று அவனுடைய பைகளை துளாவினார். அவன் பையில் ஒரு காமிரா மட்டும் கிடைத்தது.

எங்கே துப்பாக்கி. எங்கே துப்பாக்கி என்று கத்தினார்.

ஹாஹா உங்கள் விமான தள பாதுகாப்பு சோதனை பற்றி உங்களுக்கே பெரிய அபிப்பராயம் இல்லை போலிருக்கு. நான் சும்மா தமாஷ் பண்ணேன். வாங்க போகலாம் என்ற சர்வசாதாரணமாக.

அந்த மேலதிகாரி சற்றும் அந்த நகைச்சுவை ரசிக்காதவர் போல அவனை தள்ளிக் கொண்டு காவல் வண்டியில் ஏற்றினார்.

அங்கிருந்த அகல்வதற்கு முன் ரமேஷ் ஜானைப் பார்த்து மெதுவாக உன் வேலைகளையும் உன் நாட்டிலே வைத்துக் கொள். எங்க ஊர் பக்கம் வாலாட்டினால் வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் என்றான் முகத்திலிருந்த புன்னகை மாறாமல்.

கெட் லாஸ்ட் என்றார் ஜான் அவனுடயை புன்னகையால் எரிச்சலடைந்தவாறே.

ஓவியா
01-12-2006, 04:26 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

30

மன்சூர் அலி, திருவேங்கடன், சாமிநாதன், சிதம்பரம், கருணைநாயகம், யேசுநாதன், சந்தரவடிவேல் புத்தகம் எடுத்துச் சென்றவர் பட்டியலில் இருந்த உறுப்பினர்களின் பெயரைகளையும் எண்களையும் சரிபார்த்து எழுதி சத்தமாக படித்துக்காட்டினான்.

மதுரையை விட்டு அவர்கள் வெகு தூரம் வந்திருந்தார்கள்.

இதற்கு முன்னால் சவிதாவும் நீலாவும் முஸ்லீம் பெண்களைப் போல் வேடமிட்டு நூலகத்தில் நுழைந்து சுமார் 5-6 வருட உறுப்பினர் பட்டியலை எடுத்து வந்திருந்தனர்.

அவர்கள் விடுதியை காலி செய்து விட்டு வண்டியை சில தூரம் ஒட்டிச் சென்று பிறகு சவிதா, நீலா, ரவியை ஏற்றிக் கொண்டு மதுரையை விட்டுச் சென்றனர்.

ரவி எதிர்பார்த்த படியே அவர்கள் அனைவரும் 5 வருடங்களுக்கு உள்ளாகவே உறுப்பினர் ஆகியிருந்தார்கள்.

வண்டியில் இந்த பட்டியலை படித்துக் காட்டியதும் பழனியப்பன் கேட்டார். இந்த பட்டியலை வைத்து என்ன பண்ண முடியும்.

இவர்களை ஒவ்வொருத்தரா போய் பார்க்கனும் சார் என்றான் ரகு.

அது சரி பின்னாடி நம்மை தொடர்ந்து வர்ற வண்டியை என்ன பண்றது என்றான்.

ரவி உடனடியாக ஒரு பதிலை சொன்னான். ரகு நாம நிலமைய கையில் எடுத்துக் வேண்டியது தான். இப்பவே இவனை பிடிச்சி நல்லா உதைச்சா யாரு என்னன்னு தெரிஞ்சிடும் என்றான்.

சவிதாவும் ஆமாம் ரவி. இதுக்கு ஒரு முடிவை கட்டனும் என்றாள்.

நீலாவோ வேண்டாம் ரவி, இது இன்னும் பெரிய பிரச்சனையில் கொண்டுவிடும் என்றாள்.

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ரகு, சட்டென்று வண்டியை ஒரு ஓரத்தில் நிறுத்தினான். அவனை தொடர்ந்த இரண்டு சக்கர வாகனம் விருப்பமில்லாமல் மெதுவாக அவர்களை கடந்து செல்ல முயன்றது.

சட்டென்று கதவை திறந்து அந்த பைக்கை நிலை குலையச் செய்தான் ரகு. ரவி சட்டென்று வெளியே பாய்ந்து அந்த பைக்கின் ஓட்டினரை இழுத்துப் பிடித்தான்.

கீழே இறங்கிய ரகுவும் அவனை பிடித்து டேய் யாருடா நீ. எதுக்காக எங்களை பின் தொடர்ந்து வர்றே என்றான் காட்டமாக.

சார் சட்டையிலேர்ந்து கையை எடுங்க சார். நான் போலீஸ். உங்களோட பாதுகாப்புக்காக பின் தொடர்ந்து வர்றேன் என்றபடியே தன்னிடம் இருந்த அடையாள அட்டையும் கைதுப்பாக்கியும் எடுத்துக் காட்டினார்.

சாரி சார் என்று கைகளை விடுவித்துவிட்டு இருவரும் விலகி நின்றார்கள்.

தம்பி நீங்க ஆராய்ச்சியோட நிறுத்திக்கோங்க. துப்பறியும் வேலை எங்கோளடையது. நீங்க இதுமாதிரி செய்வீங்கன்னு தான் ரமேஷ் சார் உங்களை கண்காணிக்க சொன்னார்.

சார் உங்க பாதுகாப்புக்கு ரொம்ப நன்றி. நாங்கள் இன்னிக்கே ஊர் திரும்பறோம் என்று அவருக்கு நன்றி கூறினார் பழனியப்பன்.

மாணவர்களை பார்த்து, நாம் ஊருக்கு போகலாம். எனக்கு சில விஷயங்கள் தெளிவாகாம இந்த ஆராய்ச்சியை தொடர்வது ஆபத்தாக தெரியுது. நேருக்கு நேரா சந்திரசேகரை பார்த்து பேசிடலாம். நம்ம உயிர்களை எடுக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.

அவர் சொன்னது சரியென்று படாவிட்டாலும் அனைவரும் அதற்கு சம்மதித்தனர். ரவிக்கு சற்றும் உடன்பாடு இல்லை. ரகு அவனைப்பார்த்து கண்ணடித்தான். ரவியும் புரிந்துக் கொண்டு அமைதியானான்.

ஆராயச்சி கூட்டம் மீண்டும் பல மணி நேரம் பயணம் செய்து சென்னை திரும்பியது. ஆராய்ச்சி முடிக்காமல் சங்கரையும் இழந்துவிட்டு ஒரு வெற்று உணர்வோடு அனைவரும் ஊர் திரும்பினர்.

ஓவியா
01-12-2006, 04:45 PM
நன்றி ஓவியா. எங்கே மறந்திட்டீங்களோன்னு நினைச்சேன்.

பாஸ்,

நீங்க கேட்டது போல், கறுப்பு வரலாறு கதையை ஒரு ஐந்து நாட்கள் இடைவெளியில் தொடர்ந்துல்லேன்.......ஓக்கேவா பாஸ்

:D

leomohan
02-12-2006, 01:50 PM
ஓ. சரிதான். புத்திசாலி பொண்ணுப்பா.

ஓவியா
03-12-2006, 02:54 PM
ஓ. சரிதான். புத்திசாலி பொண்ணுப்பா.

அய்க்கோ...:eek: :eek:

சார்
இப்படியா பகிரங்கமா பொய் சொல்லுவாங்க!!!!:D :D :D

மதி
04-12-2006, 01:29 AM
எது எப்படியோ..
பதிஞ்ச அக்காவுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓ...!
சுவாரஸ்யமான திருப்பங்கள்..!
மேலும் எதிர் நோக்கி...!

ஓவியா
11-12-2006, 06:01 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

31

காவல் வாகனம் அவளைக் கடந்து சென்றதையும் அதில் ரமேஷ் இருப்பதையும் பார்த்தாள். என்ன நடந்திருக்கும் என்று யூகித்தாள்.

பாஸ்கர் பராஷரை உடனடியாக செல்பேசியில் தொடர்பு கொண்டாள். அவரும் அமைதியாக, சரி நீங்கள் ஓட்டலுக்கு போங்க. அவர் வருவார் என்று சொல்லிவிட்டு வைத்தார்.

தன்னை இயல்பாக வைத்துக் கொள்ள முயன்றாலும் அவளால் முடியவில்லை.

எப்படி உங்களுக்கு குண்டடி பட்டிச்சி.

ஹா. எதுக்கு இப்ப அதை கேட்கறே.

சொல்லுங்க ரமேஷ்.

அதுவா. அது எங்க தொழில்ல சகஜம் ஜெயா.

சொல்லுங்க.

எதுக்கு வேண்டும் உனக்கு அந்த விவரம்.

சொல்லுங்க. இல்லாட்டா உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.

ஒ. அப்படி சொல்லாதே பெண்ணே. சொல்றேன். சென்னை துறைமுகத்திலே இரண்டு கோஷ்டிகள் உருவாயிடுத்து. நிறைய கடத்தல் பொருட்கள். அரசாங்கத்தை மானவாரியாக ஏமாத்திகிட்டு திரிஞ்சாங்க. உள்ளூர் காவல் அவர்களிடமே சாப்பிட்டு கொழுத்துட்டாங்க. அவங்களால பிடிக்க முடியாதுன்னு மத்திய உளவுத்துறைக்கு மாத்திட்டாங்க. யாருமே இந்த கேஸை எடுத்துக்கலை. நான் அப்பத்தான் புதுசா சேர்ந்திருந்தேன். ரொம்ப தைரியமா செய்யறேன்னு எடுத்துகிட்டேன்.

21 பேரை கண்டுபிடிச்சி அரஸ்ட் பண்ணேன். 3 பேரை கொன்னேன். கடைசியில் ஒருத்தனோட நேரடியா மோதவேண்டியதாயிடுத்து. 4 மணி நேரம் அவன் சுட்டுக்கிட்டே இருந்தான். நான் இரண்டு குண்டுதான் சுட்டிருப்பேன். இன்னும் அனுபவ முதிர்ச்சி இருந்திருந்தா எனக்கு குண்டடி பட்டிருக்காது. பசிக்க ஆரம்பிச்சிடுத்து. இருட்ட ஆரம்பிச்சிடுத்து. ஆனது ஆகட்டும்னு நேரா அவன்கிட்டே நடந்த போனேன். அவன் சுட்டான். என் மேல பட்டுது. நான் அவனை நெத்தியிலே சுட்டுட்டேன். அவ்வளவுதான்.

அடப்பாவி கொலையெல்லாம் பண்ணியிருக்கீங்களா.

ஆமாம். ஆனா அந்த குண்டடி பட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

என்ன.

ஆமா இல்லாட்டி இந்த செல்லப் பெண் கிடைச்சிருப்பாளா எனக்கு.

அவளால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. கண்ணீரை கட்டுபடுத்திக் கொண்டு ட்யூப் பிடித்த ஸ்டேஷனில் இறங்கி ரெஸிடென்ஸிக்கு சென்று அறைக்கு சென்றடைந்தாள்.

ஓவியா
11-12-2006, 06:02 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

32


சொல்லுங்க எதுக்காக பிரேக்-இன் பண்ணீங்க.

அவரு எங்கள் நாட்டிலேர்ந்து பழங்காலத்து சிலைகளை கடத்தறாரு.

அப்படியா. அதுக்கு ஆதாரம் இருக்கா உங்க கிட்டே.

இருக்கு.

உங்க ஊரில் இருப்பவர்களை விட்டு இவரோட அலுவலகத்தில் அத்துமீறி நுழையறது சரியா.

நான் இந்தியாவின் மத்திய உளவுத்துறை அதிகாரி.

இருக்கட்டும். முறையாக சர்வதேச காவலின் மூலம் அனுமதி பெற்றீர்களா.

இல்லை.

நீங்கள் செய்தது எங்கள் நாட்டு சட்டப்படி குற்றம் தெரியுமா.

ஆம்.

உங்கள் மேல் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியா.

சரி.

என்ன சரியா.

ஆமாம். வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்.

இல்லை உங்களுடயை விளக்கம் இவ்வளவு தானா.

ஆமாம். உங்களிடம் நான் அத்துமீறி நுழைந்ததற்காக புகைப்படங்கள் இருக்கு. ஜான் ஸ்டுவர்ட் புகார் கொடுத்திருக்காரு. என்னை கையும் களவுமா பிடிச்சிருங்கீங்க. நான் சொல்றதையா கேட்கப்போறீங்க.

அவர் முதன் முதலாக சிரி்த்தார்.

ரமேஷ், உங்கள் நாடு மிகப்பெரியது. உங்கள் ஜனத்தொகை அதிகம். அதில் மிகத் தேர்ச்சியாக சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது மிகவும் கடினம் தான். உள்நாட்டு விவகாரம், வெளி நாட்டு சதி, தீவிரவாதம் என்று பல விஷயங்களை சமாளிக்கிறது இந்திய காவல் துறையும் உளவுத்துறையும். நாங்கள் வியப்படைவதுண்டு. ஆனால், நீங்கள் இதுபோல ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று எங்களிடம் சொன்னால் இந்த பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். சர்வதேச விதிகளை மதித்தே எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும்.

நீங்கள் யாரையும் காயப்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் செய்தது சட்ட விரோதமான செயல். என்ன செய்யலாம்.

நீங்கள் சொல்வது சரிதான் என்றான் ரமேஷ். பிறகு மெதுவாக, கொஞ்சம் காபி வரவழையுங்கள் என்று சொல்லிவிட்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஹாயாக உட்கார்ந்தான்.

அவனை வியப்புடன் பார்த்த அதிகாரி ஒரு காபி வரவழைக்க சொன்னார்.

காபி குடித்து விட்டு, மிஸ்டர் நான் இன்னும் 15 எண்ணுவதற்குள் இங்கிருந்த போய்விடுவேன். பார்க்கிறீர்களா என்றான்.

அப்படியா, பார்க்கலாமே என்றார் அந்த ஆங்கிலேய அதிகாரி, ஆச்சர்யத்துடன்.

1, 2, 3, தொலபேசிகள் ஒலித்தன. 4, 5, 6, அவனுடன் பேசின அதிகாரி வெளியே சென்றார், 7, 8, 9, 10, 11, 12, வாங்க ரமேஷ், நீங்க போகலாம் 13, 14, நன்றி 15.

ஓட்டலை அடைந்த கதவை திறந்தவுடன் கட்டி அணைத்துக் கொண்டாள் ஜெயா. ஊருக்கு போக தயாரானார்கள் இருவரும்.

ஓவியா
11-12-2006, 06:03 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

33


கரிகாலன் தலைமறைவாக இருந்து அலுத்துப் போனார். இதற்கு மேலும் யாராவது தன்னை தொடர்வார்களா என்று யோசித்தார். இத்தனை நாள் நல்ல பிள்ளையாக இருந்தாயிற்று. இதற்கு மேலும் அவரை தொடர்பு கொள்ளவில்லையென்றால் சந்திரசேகர் தன்னை கொன்றுவிடுவார் என்று தெரியும் அவருக்கு.

ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு ராஜ மன்னார்குடியின் விளிம்பிலிருந்த அவருடயை பழைய வீட்டை விடுத்து நகரம் சென்றடைந்தார்.

ஒரு தொலைபேசி பூத்தில் நுழைந்தார். சுற்று முற்றும் நன்றாக நோட்டம் விட்டார். பிறகு ஒரு செய்தித்தாளை எடுத்து வைத்து சற்று நேரம் படித்தார். யாரும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு, உள்ளே நுழைந்தார்.

சார் நான் கரிகாலன் பேசறேன்.

என்ன கரிகாலன். எங்கே போய் தொலைஞ்சீங்க. எதுக்கு என் வீட்டு நம்பர்ல போன் பண்றீங்க.

சார். ஒரு பிரச்சனையாயிடுத்து. அதனால தான் தலைமறைவாயிட்டேன். சங்கர்..... பண்ணவேண்டியதா போச்சு.

என்ன காரியம் பண்ணிட்டீங்க. எதுக்காக ............

சார். அவன் நீங்க உங்க பேர்ல டாக்டருக்காக பதிவு பண்ணதை பார்த்துட்டான்.

அதெப்படி அவன் கிட்டே போச்சு.
சார் நீங்க போட்டோ காபி எடுத்துட்டு வர சொன்னீங்க இல்லையா, நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி. அதை டாஷ்போர்டில் வெச்சிருந்தேன். அவன் தன்னோட பேப்பர்ஸ் அதில வைச்சி எடுத்தான் போலிருக்கு. இதுவும் வந்திடுத்து. சின்ன தப்பாயிடுத்து. என்னால தான்.

அந்த பார்த்தா என்னைய்யா. அதுக்காக கொலை பண்றதா.

இல்லை சார் அவனை அடிச்சிட்டு, பேப்பர்ஸை எடுத்துகிட்டு சரிகட்டிலாம்னு பார்த்தேன். ஆனா அடி பலமாயிடுத்து. இது பழனியப்பனுக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிடும் இல்லையா.

சரி. நாம அனுப்ப வேண்டிய ஷிப்மென்ட் ரெடியாக இருக்கு. உங்களை தேடிகிட்டு இருக்கேன். சீக்கிரம் சென்னை போங்க. அப்புறம் ஒரு விஷயம். ஜான் கால் பண்ணியிருந்தாரு. ரமேஷ்னு ஒரு சிஐடி ஆபீஸர் அவரோட ஆபீஸ்ல நோன்டியிருக்கான். வங்கி போக்குவரத்தெல்லாம் அவருக்கு போயிடுத்து. நேரடியா எந்த பிரச்சனையில்லயின்னாலும் எப்படியோ மோந்து பார்த்து வந்திருவாங்க. கொஞ்ச நாள் அமைதியாக இருந்துட்டு அப்புறம் ஆரம்பிக்கலாம். நீங்க யாருகி்ட்டேயும் மாட்டாம ஜாக்கிரதையா இருங்க.

சரி என்றுவிட்டு வெளியே வந்து பணம் கொடுத்து நிமிர்ந்தவரை இரண்டு காவல் அதிகாரிகள் எதிர் கொண்டனர். உங்களை கைது பண்றோம் கரிகாலன் என்றார் ஒருவர். இன்னொருவர் அவர் பேசிய எண்ணை பிரின்ட் செய்து எடுத்துக் கொண்டார். கரிகாலனின் முகம் கறுத்து போயிருந்தது.

ஓவியா
11-12-2006, 06:05 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

34

ஜெயா ரமேஷைப்பார்த்து ஹீத்ரூவிமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் கேட்டாள்.

உங்களோட முடிவு என்ன இந்த கேஸை பொருத்தவரையிலும்.

ஜெயா ஜான் வீட்டிலே கிடைத்த ஆவனங்களை வெச்சி பார்த்தா, நாலு வருஷங்களுக்கு முன்னால அவன் இந்தியாவுடைய முன்னனி பத்திரிக்கைகளில் களப்பிறர் ஆட்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு தான் நிதி உதவி செய்ய முன் வருவதாக கூறியிருந்தான். அதில் தான் தமிழ் நாட்டில் பிறந்ததாகவும், அவனுடயை தந்தை ரெயின் ஸ்டுவர்ட் தமிழ் நாட்டில் வாழந்ததாகவும், அவர் களப்பிறர் பற்றி ஆராய்ச்சி செய்வதாகவும் அவர் இறந்துவிட்டதாகவும், அவரின் உயிலில் எழுதியவாறு தான் எத்தனை நிதி உதவியும் செய்யத் தயாராக இருக்கிறன் என்றும் அறிவித்திருக்கிறான்.

அதை பார்த்து வந்தவங்கள் தான் இந்த 8 பேரும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்றால் அதிலிருந்த 7 பேருக்கு வெறும் 1000 பவுண்ட் தான் இதுவரையிலும் 4 வருஷத்தில் அவன் அனுப்பியது. ஆனால் சந்திரசேகருக்கு மட்டும் சுமார் 60,000 பவுண்ட்.

இது தான் என் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. சந்திரசேகர் கள்ப்பிறர் காலத்து பொருட்களை தேடி தேடி அதை வெளிநாட்டுக்கு விற்கிறார். அவருக்கு வரும் பணம் வெள்ளை பணமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த ஆராய்ச்சி போர்வை. டாக்டர் பட்டத்திற்கு அவருடைய பெயர் பதிவு எல்லாம்.
களப்பிறர் ஒரு ஊரை பிடித்ததும், அதன் நடுவில் இரண்டு வாள் ஒரு மீனை சூழ்ந்த பாதுகாப்பது போல ஒரு சிலையை வைப்பார்கள். அது ஐம்பொன்னால் ஆன சிலைகள் மட்டும் அல்லாமல் அதில் வைர வைடூரியங்கள் நிரப்பப்பட்டிருக்கும். அவர்கள் அந்த ஊரை விட்டுச் செல்லும் போது அதை எடுத்து செல்வார்கள். அதற்கு பிறகு வந்த பல்லவர்கள், தாங்கள் அந்த ஊரை கைப்பற்றியதும் அந்த நினைவுச்சின்னங்களை அங்கேயே புதைத்து அதன் மேல் தங்கள் ஸ்தம்பங்களை வைத்தார்கள்.
களப்பிறர் ஆராய்ச்சி செய்பவர்கள் அவர்கள் எந்தெந்த இடத்தில் இருந்தார்கள் என்று தெரிந்தாலே போதும், அந்த சிலைகள் எடுக்க வசதியாக இருக்கும். ஆனால் பல இடங்களிலும் இப்போது மனிதர்கள் இருப்பதால் மிகவும் கடினம். ரெயின் ஸ்டுவர்ட் அப்படிப்பட்ட இரண்டு இடங்களை கண்டுபிடித்துவிட்டார். அவர் காலத்திலேயே அதை இங்கிலாந்துக்கு எடுத்துக் கொண்டு போய்விட்டார். அவருடயை இந்த நடவடிக்கை தெரிந்ததும் அவரை இந்தியாவில் வேலை விட்டு எடுத்துவிட்டனர். அவரும் தன் குடும்பத்துடன் இங்கிலாந்து வந்துவிட்டார். இப்போது தான் அந்த பெரும் புதையல் ரகசியத்தை அறிந்த அவர் பிள்ளை மீண்டும் இதை தொடர்ந்திருக்கிறான். இவன் அனுப்பிய பணத்தை வைத்து பார்த்தால் குறைந்தது மேலும் 2 சின்னங்களாவது கிடைச்சிருக்கும். இந்த சின்னத்தின் உண்மையான மதிப்பை அறியாமல் சொற்ப காசுக்கு விற்றுவிட்டார் சந்திரசேகர். ஒவ்வொரு சின்னமும் ஒரு வருட தமிழக பட்ஜெட்.

அப்ப ரெயின் ஸ்டுவர்ட் தான் ஞானப்ரகாசத்தை தாக்கியிருக்கனும். சரிதானே.

ஆம். 30 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஞானப்ரகாசத்தை தாக்கி அந்த காகிதங்களை எடுத்திருக்கிறார். பிறகு இங்கிலாந்து போய் பல வருடங்களுக்கு பின்தான் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

அவ்வளவு தானே கதை. நேராக ஊருக்கு போய் சந்திரசேகரை கைதி பண்ணவேண்டியது தானே.

இல்லை ஜெயா. அவ்வளவு சுலபம் இல்லை. அதில் தான் க்ளைமாக்ஸே இருக்கிறது. பாரு என்றான் அவளை பார்த்து கண்ணடித்தபடியே.

ஓவியா
11-12-2006, 06:06 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

35


ரவி ரகுவை போன் போட்டு அழைத்தான். வா நேராக சந்திரசேகரை சந்திப்போம் என்றான்.

நேராக இரவரும் அவர் வீட்டுக் சென்றார்கள்.

வாங்கப்பா உட்காருங்க. என்ன ஆராய்ச்சி முடிக்காம வந்திட்டீங்களா. எங்கே பழனியப்பன் என்றார்.

சார் உங்க கிட்டே நேரடியாக சில கேள்விகளை கேட்கனும்.

சொல்லுப்பா என்றார் சந்திரசேகர்.

சார், நீங்க கொடுத்த ஆராய்ச்சி கட்டுரையில் முதல் 15 பக்கங்கள் எழுதினது யாரு.

அதுவா. என்னுடயை மாணவன் தம்பிரான். நீங்க கூட போய் பார்த்தீங்களே.

அவருடைய இந்த பதில் அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. பொய் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்தார்கள்.

பின்னே அவரை ஏன் ஆராய்ச்சியை நிறுத்த சொன்னீங்க.

அதுவா. படிக்கிற வயசுல கவனம் சிதறக்கூடாதேங்கறதுக்காக அப்படி சொன்னேன். அவன் எழுதிய கட்டுரை படிச்சிட்டு எனக்கே ஆர்வம் வந்திடுத்து. அப்புறம் அவனை தொடரச் சொன்னேன். ஆனா அவன் விட்டுட்டான்.

சரி. மற்ற பக்கங்களை நீங்க எழுதினீங்களா.

இல்லை. அது ரெயின் ஸ்டுவர்ட் கொடுத்தாரு.

ரெயின் ஸ்டுவர்டா.

ஆமாம்.

அவரை உங்களுக்கு தெரியுமா.

தெரியும் என்னோட தான் வேலை செஞ்சாரு. நான் வேலைக்கு சேர்ந்த புதுசு. அவரு சீனியர். கொஞ்ச கொஞ்சமா வெள்ளைக்காரங்கள் நம்ம நாட்டைவிட்டு போய்கிட்டு இருந்தாங்க. ஆனா பல பேரு இங்கே தங்கிட்டாங்க.

அவரு எழுதினதா.

இல்லை. அவருக்கு ஞானப்ரகாசம் கொடுத்ததா சொன்னாரு. தம்பிரானுக்கும் ஞான ப்ரகாசத்திற்கும் அவரு தான் முதுகலை பாடம் நடத்தினாரு.

அப்ப நீங்க ஒன்னுமே எழுதலையா.

எழுதியிருக்கேன்பா. ஆனா இந்த தலைப்பில இல்லை. இந்த தலைப்பை ஆரம்பத்திலேயே பழனியப்பன் கிட்டே கொடுத்திட்டேன்.

ரெயின் ஸ்டுவர்ட் எதுக்காக உங்க கிட்டே கொடுக்கனும்.

அவரு ஒரு பிரச்சனையில மாட்டிக்கிட்டாரு. அதனால அவரை வேலை விட்டு போகச்சொல்லிட்டாங்க. போகும் போது, இந்த ஆராய்ச்சி கட்டுரைகள் கொடுத்திட்டு, இதை கண்டுபிடி, நீ பல கோடிகள் பார்க்கலாம்னு சொல்லிட்டு போயிட்டாரு.

என்ன பிரச்சனை.

அதுவா. அவரு ஒரு பெரிய ரிசர்சர். பல விஷயங்களை கண்டுபிடிச்சிருக்காரு. அப்படி கண்டு பிடிச்ச இரண்டு பழங்கால சிற்பங்களை இங்கிலாந்துக்கு கடத்திட்டதா போலீஸ் புகார் வந்து அரெஸ்ட் பண்ணிட்டாங்க. கல்லூரியும் அவரை டிஸ்மிஸ் பண்ணிடுத்து.

சரி. நீங்க எதுக்காக இந்த ஆராய்ச்சியை உங்க பேர்ல பதிவு செஞ்சீங்க.

என்னப்பா சொல்ற. நான் எங்கே பதிவு செஞ்சேன். இது பழனியப்பன் பேர்ல தானே பதிவு செஞ்சேன்.

அதுக்கு என்ன ஆதாரம் உங்ககிட்டே ரகு கப்பென்று பிடித்துவிட்டதாக நினைத்து ஒரு கேள்வி கேட்டான்.

இருப்பா என்று உள்ளே சென்றவர் ஒரு காகிதத்துடன் வந்தார்.

ஓவியா
11-12-2006, 06:07 PM
அதை எடுத்து பார்த்த ரகுவுக்கு ரவிக்கும் ஒரு ஆச்சர்யம். அதில் பழனியப்பன் பெயிரில் இந்த தலைப்பை பதிவு செய்திருந்தார்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம்.

சார். நீங்க லண்டனுக்கு எதாவது போன் செய்ததுண்டா.

ஆமாம்பா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரெயின் ஸ்டுவர்டோட பையன் ஜான் ஸ்டுவர்ட் இந்த ஆராய்ச்சியை தொடர்பவர்களுக்கு பண உதவி செய்வதா விளம்பரும் கொடுத்திருந்தாரு. நானும் உங்க அப்பாவோட வேலை செஞ்சவன்னு சொல்லி பண உதவி கேட்டிருந்தேன். இதுவரைக்கும் 2000 பவுண்ட் வரை உதவி செஞ்சிருக்காரு. இன்னும் செய்யத் தயார்னு சொல்யிருக்காரு. அதை கொண்டு தான் உங்களுக்கெல்லாம் கொடுக்கறேன்.

சார். எங்களுக்கு ஒரு குழப்பமா இருக்கு. இந்த காகிதத்தில் உங்க பெயர் இருக்கு. இதை பார்த்துட்டு தான் சங்கர் பழனியப்பன் கிட்டே சொல்றதுக்கு ஓடி வந்திருக்கான். நீங்கள் துரோகம் செய்திட்டதா நாங்க நினைச்சோம். கரிகாலன் சங்கரை கொன்னுட்டாரு. நீங்க வெச்ச ஆளுதான் கரிகாலன் நினைச்சோம். ஆனா நீங்க சொல்றதை பார்த்தா ஒரே குழப்பமா இருக்கே.

என்ன. கரிகாலன் சங்கரை கொன்னுட்டாரா. என்னப்பா சொல்றீங்க.

ஆமாம் சார். ஆனா ஆதாராம் இல்லாததால அவரை விட்டுட்டாங்க. ஆனால போலீஸ் அவர் பின்னாடி தான் இருக்கு.

கரிகாலனா இப்படி ஒரே குழப்பமா இருக்கு.

சார் அது மட்டுமில்லை நாங்க தேடின மூனு புத்தகத்திலும் சில பக்கங்கள் இல்லை. அது எங்களோட சந்தேகத்தை அதிகமாக்கிடுச்சு.

அப்படியா. எந்த மூனு புத்தகங்கள்.

ஒன்னு ரெயின் ஸ்டுவர்ட் எழுதினது. மத்த இரண்டும் கதிரவன் எழுதினது.

இருங்க. என்கிட்ட அந்த புத்தகங்கள் இருக்கு எடுத்துட்டு வரேன்.

ஆவலாக மாணவர்கள் புத்தகங்களை தேடினார்கள். முதல் புத்தகத்தில் அந்த நான்கு பக்கங்களும் இல்லை. இரண்டாவது புத்தகங்களிலும் அந்த நான்கு பக்கங்கள் இல்லை. மூன்றாவது புத்தகத்தில் பக்கங்கள் இருந்ததை கண்டு ரகு ஆவலாக படித்தான். ஆனால் கிழித்து மறைக்கும் அளவிற்கு சுவையாக ஒன்றும் கிடைக்கவில்லை. அலுத்து போனது போல புத்தகங்களை மேசை மீது எறிந்தான்.

தம்பி, புத்தகங்கள் அச்சடிக்கப்படும் போது பக்கங்களின் எண்கள் மிஸ்ஸாகறது சகஜம் தான். அது மாதிரி நூலகத்தில் உபயோபடுத்தும் புத்தகங்களின் பக்கங்கள் தொலைஞ்சி போறதும், கிழிந்து போகறதும் சகஜம் தான். சங்கர் கொலையான உடனே நீங்கள் எதை எடுத்தாலும் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டீர்கள்.

அப்ப, நீங்க உங்க பேர்ல டாக்டர் பதிவு செஞ்ச மனு பொய்யா என்று ரவி சற்று குரலை உயர்த்தி கேட்டான்.

நான் என் பெயரில் பதிவு செஞ்சேனா எங்க காமிங்க அந்த காகிதத்தை என்று கேட்டார்.

ரவி தயங்கினான்.

கொடுப்பா, நான் கொல்லமாட்டேன். என்னால முடியவும் முடியாது என்றார்.

ரகு தலை அசைக்க ரவி அந்த காகிதத்தை எடுத்து நீட்டினான்.

அந்த காகிதத்தை உற்று பார்த்த அவர் அவர்களுக்கு அதில் ஒரு இடத்தை காட்டினார். அவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார்கள்.

ஓவியா
11-12-2006, 06:09 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

36

அடையாறு வந்து சேர்ந்ததும் நன்றாக ஓய்வெடுத்தனர் இருவரும். பிறகு நேராக வங்கிக்கு சென்றான் ரமேஷ். தன்னிடமிருந்த வங்கி கணக்குகளின் விவரங்களை காட்டி அவர்களுடயை விவரங்கள் வேண்டும் என்று கேட்டான்.

வழக்கமாக மறுத்த வங்கியினர் உளவத்துறை என்றது பேசாமல் எடுத்து கொடுத்தனர்.

பட்டியலில் அதிக நேரம் செலவிடாமல், நேராக திருவான்மயூரின் அந்த வீட்டில் வண்டியை நிறுத்தினான். உள்ளே சென்ற சில நிமிடங்களில் ஒரு மனிதரை அழைத்துக் கொண்டு நேராக பேராசிரியர் சந்திரசேகரின் வீட்டிற்கு சென்றான்.

செல்பேசியில் தொடர்பு கொண்டு ரவி, ரகு, நீலா, சவிதா மற்றும் பழனியப்பனை சந்திரசேகர் வீட்டிற்கு வரச் சொன்னான்.

சிதம்பரம், தஞ்சை மற்றும் மதுரை காவல் துறைகளுக்கு தகவல் சொன்னான். பாஸ்கர் பராஷருக்கும் தகவல் சொன்னான்.

ஜெயாவை அழைத்து விவரத்தை சொன்னான். ஐ காட் மை மான் பேபி என்றான். யூ ஆர் த பெஸ்ட் என்றாள் ஜெயா.

அனைவரும் சந்திரசேகர் வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து விட்டு அந்த மனிதரை தன் வண்டியிலிருந்து உள்ளே அழைத்து வந்தான்.

நேராக பேராசிரியர் சந்திரசேகரை பார்த்து, ப்ரோபஸர் எஸ். சந்திரசேகர், மீட் மிஸ்டர் எஸ். சந்திரசேகர், சீனியர் ஆபீஸர், ஆர்கியாலாஜிக்கல் டிபார்மென்ட் ஆஃப் இண்டியா.

தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் உயர் அதிகாரியாக இருந்துகிட்டு கள்பிறர் ஆராய்ச்சி பண்றதாகவும் டாக்டர் பட்டத்துக்கு ஆராய்ச்சி பண்றதாகவும் சொல்லி தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து கிடைக்கும் தொல்பொருட்களை விற்று நம் நாட்டுக்கே துரோகம் செய்து குற்றத்துக்காகவும், கரிகாலன் மூலமாக சங்கரை கொலை செய்து குற்றத்துக்காகவும் நான் உங்களை கைது பண்றேன் என்று சொல்லிவிட்டு, சென்னை காவல் அதிகாரியை பார்த்து அவர் இனிமே உங்க பாடு என்று சொல்லிவிட்டு பழனியப்பனையும் அவருடைய மாணவர்களையும் பார்த்தான். அவர்கள் அவனை புன்னகையோடு பார்த்தார்கள்.

அன்று டிசெம்பர் 31. சந்திரசேகர் எனும் வரலாற்று பேராசிரியர் மீது இருந்த தூசி மறைந்த நாள்.

சந்திரசேகர் நன்றி பெருக்கோடு ரமேஷை பார்க்க மாணவர்களும் பழனியப்பனும் அவரை சந்தேகப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

கறுப்பு அகன்று மகிழ்ச்சி பொங்கியது.சுபம்.

ஓவியா
11-12-2006, 06:12 PM
அன்பு மோகன் (பாஸ்),

சுபம் வரை பதிந்தாகிவிட்டது....

ஓவியா

leomohan
11-12-2006, 06:19 PM
அன்பு மோகன் (பாஸ்),

சுபம் வரை பதிந்தாகிவிட்டது....

ஓவியா

மிக்க நன்றி ஓவியா. அடுத்த கதையின் தலைப்பு எண்ணத்தில் எழும் மாற்றம் புரட்சி.

ஓவியா
11-12-2006, 06:24 PM
மிக்க நன்றி ஓவியா. அடுத்த கதையின் தலைப்பு எண்ணத்தில் எழும் மாற்றம் புரட்சி.

சார், அந்த லிப்ட் பாகம் இரண்டு இருக்கா, இல்லையா, பதிப்பீங்களா..இல்லையா....:Dஎண்ணத்தில் எழும் மாற்றம் புரட்சி...............:)

தங்களின் புதிய கதைக்கு வாழ்த்துக்கள்

மதி
12-12-2006, 02:09 AM
அப்பாடி ஒரு வழியா...
சுபம் போட்டாச்சு..!

உண்மையிலேயே எதிர்பாராத திருப்பம் தான்..
வாழ்த்துக்கள் மோகன்..!

leomohan
12-12-2006, 06:58 AM
நன்றி ராஜேஷ்.

அவசியம் ஓவியா

ஓவியா
12-12-2006, 02:45 PM
நன்றி ராஜேஷ்.

அவசியம் ஓவியா

எதுக்கு அவசியம்...

எனக்கு தமிழ்ப்புலமை ரொம்ப கம்மீ ...இது எதுக்கு சார்????:confused: :confused: :confused:

leomohan
12-12-2006, 05:18 PM
சார், அந்த லிப்ட் பாகம் இரண்டு இருக்கா, இல்லையா, பதிப்பீங்களா..இல்லையா....:D


இந்த வரிக்கு தான் அவசியம் என்று சொன்னேன்.

பிறகு பதிப்பதில் மீண்டும் பிரச்சனை. என்ன செய்வது. அதனால் உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது பதியுங்கள்.

ஓவியா
12-12-2006, 05:44 PM
இந்த வரிக்கு தான் அவசியம் என்று சொன்னேன்.

பிறகு பதிப்பதில் மீண்டும் பிரச்சனை. என்ன செய்வது. அதனால் உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது பதியுங்கள்.

:D :D :D :D :D

இப்படி சீக்ரட் கோட்'டில் சொன்னால் எனக்கு எப்படி பாஸ் புரியும்......
நான் கொஞ்சம் மண்டு....


சரி பாஸ்
அப்படியே ஆகட்டும்

gayathri.jagannathan
21-12-2006, 06:10 AM
கதை மிகவும் அருமை... தோழர் மோகனின் கதை நடையில் ராஜேஷ் குமாரின் சாயல் உள்ளது... கதையிலிருந்து விஷயங்கள் பல தெரிந்து கொண்டேன்...

விறுவிறுப்பாக சென்றாலும் சில இடங்களில் தோய்வு தட்டுகிறது

மோகன் அவர்களே எனக்கு ஒரு சின்ன சந்தேகம்...உரைநடை கதைகளில் கூட ஹீரோ தனது ஹீரோயீசத்தை காட்டாமல் இருக்க மாட்டாநா?B) :confused:

leomohan
21-12-2006, 07:37 AM
நன்றி காயத்ரி. அப்படி ராஜேஷ்குமாரின் சாயல் இருக்கும் பட்சத்தில் மாற்றிக் கொள்ள முயல்கிறேன். தனிபாணி இருப்பது தானே ஒரு எழுத்தாளனுக்கு நல்லது?

ஹீரோயிசம்-ம்ம். இதில் பார்த்தீர்களானால் இளைஞர் கூட்டமும் கிட்டதட்ட கண்டுபிடித்துவிட்டன. மேலும் இதை கண்டுபிடிக்கும் பணி ஹீரோவுக்கு அல்லவா தரப்பட்டிருக்கிறது. இதில் அவருடைய மனைவியின் பங்கும் இருக்கிறதல்லவா. இது கூட்டு முயற்சி எனலாம்.

:)

ஆனால், கடைசி பேட்டி கதையில் முழுக்கு ஹீரோயிசம் தான். :D

gayathri.jagannathan
21-12-2006, 08:52 AM
ஹீரோவின் மனைவியும் உதவினாள்... சரி மாணவர்கள் ரூட் மாறி போயிட்டாங்களே.... சந்திரசேகர்ன்னு பார்த்த உடனே... அவங்க சந்தேகப்பட்டது ப்ரோபாஸ்ஸர தானே... காரண கர்த்தா சந்திரசேகர் அப்படீங்கறது கதை ஆரம்பிச்சு அவங்க சிதம்பரம் போன உடனே தெரிஞ்சிது இல்லயா?

அப்பறம் இன்னும் ஒரு சந்தேகம்... தம்பிரானுக்கு எப்படி இவங்களோட கிரூப்ப்ல ஒரு ஐந்தம்பதை இருக்கற விஷயம் தெரிஞ்சது? இல்ல அவரா கணிச்சாரா?

இன்னும் ஒரு விஷயம்...இப்போ யாராவது நமக்கு படிக்க ஏதோ ஒரு புக் குடுக்கறாங்கன்ணு வச்சிக்குவோம்... வாங்கின உடனே நாம பண்ற வேலை என்ன அந்த புஸ்தகத்த ஒரு தடவையாவது புரட்டி உள்ள கொஞ்சம் நோட்டம் விடுவோம் இல்லயா?

சாதாரண மனுஷங்களே இப்படி பண்ணும் போது... ஆராய்ச்சி பண்ற மாணவர்கள்... சரி மாணவர்களா விடுங்க.. ஒரு டாக்டர் பட்டம் வாங்க ஆசைப்படும் பேராசிரியராவது வாங்கி படிக்க (வேண்டாம்... குறைஞ்சபட்சம் புரட்டவாவது ) மாட்டாரா? அங்க கொஞ்சம் லாஜிக் உதைக்கிது....

:p

leomohan
21-12-2006, 09:01 AM
ஹீரோவின் மனைவியும் உதவினாள்... சரி மாணவர்கள் ரூட் மாறி போயிட்டாங்களே.... சந்திரசேகர்ன்னு பார்த்த உடனே... அவங்க சந்தேகப்பட்டது ப்ரோபாஸ்ஸர தானே... காரண கர்த்தா சந்திரசேகர் அப்படீங்கறது கதை ஆரம்பிச்சு அவங்க சிதம்பரம் போன உடனே தெரிஞ்சிது இல்லயா?

அப்பறம் இன்னும் ஒரு சந்தேகம்... தம்பிரானுக்கு எப்படி இவங்களோட கிரூப்ப்ல ஒரு ஐந்தம்பதை இருக்கற விஷயம் தெரிஞ்சது? இல்ல அவரா கணிச்சாரா?

இன்னும் ஒரு விஷயம்...இப்போ யாராவது நமக்கு படிக்க ஏதோ ஒரு புக் குடுக்கறாங்கன்ணு வச்சிக்குவோம்... வாங்கின உடனே நாம பண்ற வேலை என்ன அந்த புஸ்தகத்த ஒரு தடவையாவது புரட்டி உள்ள கொஞ்சம் நோட்டம் விடுவோம் இல்லயா?

சாதாரண மனுஷங்களே இப்படி பண்ணும் போது... ஆராய்ச்சி பண்ற மாணவர்கள்... சரி மாணவர்களா விடுங்க.. ஒரு டாக்டர் பட்டம் வாங்க ஆசைப்படும் பேராசிரியராவது வாங்கி படிக்க (வேண்டாம்... குறைஞ்சபட்சம் புரட்டவாவது ) மாட்டாரா? அங்க கொஞ்சம் லாஜிக் உதைக்கிது....

:p

விளக்கம் தருவதாக நினைக்கவேண்டாம். மேலும் Justification இல்லை. பெரிய கதைகளில் லாஜிக் பல இடங்களில் உதைப்பது சகஜமே.

ஆனால் இந்த இடத்தில் மாணவர்கள் பல வித Thirllகளுக்கு இருந்ததாலும், மேலும் தம்பிரான் பலத்த பீடிகைகள் போட்டதாலும், மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டதாலும் அவர்கள் வாங்கியவுடன் படிக்கவில்லை.

தம்பிரான் தன்னுடைய அனுபவங்களை வைத்து யூகித்ததுதான் அந்த ஐந்தாம்படை கமென்ட்.

gayathri.jagannathan
21-12-2006, 10:31 AM
அது சரி தான் எடததுலையும் எல்லா கதைலையும் லாஜிக் பாக்க முடியாது... (தப்பா ஏதாவது சொல்லிருந்தென்னா மன்னிச்சிடுங்க...):) :)

leomohan
21-12-2006, 10:35 AM
அது சரி தான் எடததுலையும் எல்லா கதைலையும் லாஜிக் பாக்க முடியாது... (தப்பா ஏதாவது சொல்லிருந்தென்னா மன்னிச்சிடுங்க...):) :)

என்னங்க நீங்க பெரிய வார்தையெல்லாம். நம் மன்றத்தில் திறந்த மனதுடன் நன்றாக விவாதிக்கலாம்.

leomohan
29-12-2006, 03:26 PM
நண்பர்களே கறுப்பு வரலாறு கதையை பிடிஎஃப் வடிவில் இங்கு (http://ebooks.etheni.com/mohan/karuppuvaralaru.pdf)ஏற்றியுள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.

ஓவியா
02-01-2007, 06:15 PM
அப்படியே ஆகட்டும்

நன்றி மோகன்