PDA

View Full Version : இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி.................



அகத்தியன்
20-11-2006, 05:58 PM
இணையத்தின் மூலமாக வீட்டில் இருந்தவாறே பணம் உழைக்கலாம் என பல தளன்க்கள் விளம்பரப்படுத்துகின்றன. இவ்வாறு பணம் உழைப்பத்தற்கான வழிகள் உள்ளனவா? இருந்தால் எனக்கும் கூறுங்கள். ந்ண்பர்களே!. இதிலுள்ள நம்பகரமான இணைய முகவரி தாருன்க்கள்.

ஓவியா
20-11-2006, 06:17 PM
ஆதியன் நலமா?

எனக்கு இதில் மிக கசப்பான அனுபவம் உள்ளது.....
(நட்டம் மட்டும் USD 1,500.00)

அதனால் சற்று ஆராய்ந்து செயல் படவும்

பின் குறிப்பு
எங்கே தங்களின் கவிதைகளை காணமுடிவதில்லையே?

அகத்தியன்
20-11-2006, 06:55 PM
எப்படி உங்கள் அனுபவம்? சொல்லுங்கள்
என்ன இணைய பக்கம்?


விரைவில் கவிதைகள் வரும் ஓவியா.

pradeepkt
21-11-2006, 05:54 AM
எனக்குச் சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் எதிலும் நம்பிக்கை இல்லை.
ஓவியா தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

இராசகுமாரன்
21-11-2006, 06:10 AM
இது போல ஏமாற்று வேலைகள் தான் இணையத்தில் அதிகம்.
குறிப்பாக, யாராவது முன்பணம் கட்டக் கூறினால், பணம் கட்டாதீர்கள்.
ஆனால், இணையத்தில் உழைத்தும் சம்மாதிக்க சில வழிகள் உள்ளன.

pradeepkt
21-11-2006, 06:34 AM
முக்கியமாகக் கடன் அட்டை விவரங்களைக் கேட்டால் கொடுக்கவே கொடுக்காதீர்கள். சில வலைத்தளங்களில் தாம் கடன் அட்டை விவரத்தை வயது மற்றும் முகவரி அறிவதற்காக மட்டுமே பயன்படுத்துவதாக உங்கள் தலையில் (?!) அடித்துச் சத்தியம் செய்வார்கள். ஆனால் ரகசியமாகத் தடவிப் பாருங்கள். மிளகாய்ப் பொடியாகக் கொட்டும்!

கவனமாக இருக்கவும்!

மயூ
24-11-2006, 04:48 AM
உலகிலே சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழி இல்லை...
நான் அறிய ஒரு வழி உங்கள் வலைத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் விளம்பரம் இடலாம்...
மேலும் விபரங்களுக்குச் செல்க
http://www.google.com/adsense
http://www.adbrite.com

kad
25-11-2006, 04:01 PM
இங்கே விஸிட் செய்யுங்கள்

http://homejobsplus.info/

ஓவியா
26-11-2006, 01:46 PM
ம்ம்
நேரம் இருப்பின் கண்டிப்பா எழுதுறேன் பிரதீப்

தாமரை
26-11-2006, 02:24 PM
ஆதியன் நலமா?

எனக்கு இதில் மிக கசப்பான அனுபவம் உள்ளது.....
(நட்டம் மட்டும் USD 1,500.00)

அதனால் சற்று ஆராய்ந்து செயல் படவும்

பின் குறிப்பு
எங்கே தங்களின் கவிதைகளை காணமுடிவதில்லையே?

அதாவது இணையத்தில் "some" பாதித்து பக்குவப்பட்டிருக்கீங்க...

ஓவியா
26-11-2006, 02:32 PM
அதாவது இணையத்தில் "some" பாதித்து பக்குவப்பட்டிருக்கீங்க...

:D :D :D

ஒரே ஆசர்யமா இருக்கே.....
நீங்க இவ்வலவு அறிவாளியா இருக்கும் பொழுது....
(தங்கச்சி நான் மட்டும் ஏன் இப்படினு..:eek: .)

pradeepkt
27-11-2006, 06:11 AM
ஒரு குடும்பத்துல எல்லாருமே அறிவாளியா இருந்துட்டா உலகம் தாங்காதே... :eek:

மயூ
05-12-2006, 03:58 AM
இங்கே விஸிட் செய்யுங்கள்

http://homejobsplus.info/

புதுயவரே அங்கே யாரோ நம்மளை வைத்து கூகள் அட்சென்ஸ் மூலம் உழைக்கப் பார்க்கிறானுங்கோ!! :eek:

pradeepkt
05-12-2006, 04:51 AM
மயூரேசா, எப்படி இருக்கிறாய்?
வந்து ரொம்ப நாளாச்சு, ஆனாலும் வந்தவுடனே நம்மை வைத்து யாரோ பிழைக்கப் பார்ப்பதைக் கண்டு சொல்லி விட்டாயே :)

aren
05-12-2006, 09:53 AM
உங்களுடைய இணையத்தளமாக இருந்தால் சம்பாதிக்கமுடியும். மற்றவர்களுடைய இணையத்தளத்திற்கு உழைக்கவேண்டுமென்றால் நட்டம்தான் கிடைக்கும். அவர்கள் சொல்லுவதையெல்லாம் நம்பாதீர்கள்.

நீங்களே உங்களுக்கு தெரிந்த விஷயத்தை இணையத்தளம் மூலம் விநியோகித்தால் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

அறிஞர்
05-12-2006, 01:27 PM
உள்ளதே போதும் என்றே போக்கு சிறந்தது.

தெரிந்த வழியில் சம்பாதிப்பது சிறந்தது. தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிப்பதை விட......

ஆதவா
15-12-2006, 03:01 PM
கூகுள் அட்சென்ஸ் கூட நம்பமுடியாத ஒன்று.. நானும் ஒரு தளம் ஆரம்பித்து மிகச் சரியாக கூகுள் சொன்ன வழிமுறைப்படி நடந்து நடத்திக் கொண்டு இருந்தேன். 100 டாலர் ஆனதும் பணம் கைக்கு கிடைக்கும் என்று எதிர் பார்த்திருந்தேன்,, எனக்கு கூகுள் கடிதம் கூட கிடைத்தது.. ஆனால் கடிதம் கிடைத்த மறுநாளே என் accunt ஐ தடை செய்துவிட்டார்கள்.. எனக்கு அப்போது நூறு டாலர்களைத் தாண்டிவிட்டது.. (இதற்கே மூன்று மாதமாகிவிட்டது... )

saguni
23-12-2006, 08:25 AM
இணையத்தின் மூலமாக வீட்டில் இருந்தவாறே பணம் உழைக்கலாம் என பல தளன்க்கள் விளம்பரப்படுத்துகின்றன. இவ்வாறு பணம் உழைப்பத்தற்கான வழிகள் உள்ளனவா? இருந்தால் எனக்கும் கூறுங்கள். ந்ண்பர்களே!. இதிலுள்ள நம்பகரமான இணைய முகவரி தாருன்க்கள்.

ஆமாம் நண்பர்களே! முக்கியமாய் chain link அனைத்துமே ஏமாற்றுவேலைதான். நானும் பலவற்றை பார்த்து விட்டேன். முக்கியமாய் going platinum, amway மற்றும் multi level marketing இந்த வார்த்தையைக்கேள்விப்பட்டாலே ஓடி விடுவதுதான் புத்திசாலித்தனம். கேட்க கேட்க இனிக்கும் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து தனியாய் யோசித்துப்பாருங்கள் இதில் சம்பாதித்தவர்கள் லட்சத்தில் ஒருவராய் இருப்பர். ஆயிரம் சம்பாத்தவர் லட்சம் சம்பாதித்தாய் புழுகு மூட்டை அவிழ்த்துவிடுவர் ஆகவே :eek: :eek: :eek: உஷார் உஷார்!!:eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek:

மயூ
24-12-2006, 10:53 AM
மயூரேசா, எப்படி இருக்கிறாய்?
வந்து ரொம்ப நாளாச்சு, ஆனாலும் வந்தவுடனே நம்மை வைத்து யாரோ பிழைக்கப் பார்ப்பதைக் கண்டு சொல்லி விட்டாயே :)
ஹி... ஹி... எல்லாம் ஒரு பரந்த நோக்கம் அல்லது பொறாமைதான்!!!:D :D :D

மயூ
24-12-2006, 10:55 AM
கூகுள் அட்சென்ஸ் கூட நம்பமுடியாத ஒன்று.. நானும் ஒரு தளம் ஆரம்பித்து மிகச் சரியாக கூகுள் சொன்ன வழிமுறைப்படி நடந்து நடத்திக் கொண்டு இருந்தேன். 100 டாலர் ஆனதும் பணம் கைக்கு கிடைக்கும் என்று எதிர் பார்த்திருந்தேன்,, எனக்கு கூகுள் கடிதம் கூட கிடைத்தது.. ஆனால் கடிதம் கிடைத்த மறுநாளே என் accunt ஐ தடை செய்துவிட்டார்கள்.. எனக்கு அப்போது நூறு டாலர்களைத் தாண்டிவிட்டது.. (இதற்கே மூன்று மாதமாகிவிட்டது... )
கூகள் அட்சென்ஸ் ஏமாற்று வேலை என்று சொல்வதற்கில்லை நீங்கள் அங்குள்ள அட்களை கிளிக் செய்தாலோ பாட் பேஜ் இம்பிரசன் ஏற்படுத்தினாலோ அக்கவுண்டை தடுத்து விடுவார்கள்!!!

ஆதவா
25-12-2006, 02:47 PM
கூகள் அட்சென்ஸ் ஏமாற்று வேலை என்று சொல்வதற்கில்லை நீங்கள் அங்குள்ள அட்களை கிளிக் செய்தாலோ பாட் பேஜ் இம்பிரசன் ஏற்படுத்தினாலோ அக்கவுண்டை தடுத்து விடுவார்கள்!!!

மயூரேசன் அவர்களே... கூகுளைப் பயன்படுத்தும் முன் எல்லா விதிமுறைகளையும் படித்துவிட்டுத்தான் பயணித்தேன்....
கூகுள் அட்சென்ஸ் பயன்படுத்தும் எல்லாருக்கும் நீங்கள் மேற்சொன்ன விபரம் தெரியும்... தெரிந்தும் யாராவது கிளிக் செய்வார்களா?

கீழ்காணும் தளத்திற்கு சென்று பாருங்கள் எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று..
http://groups.google.com/group/adsense-help
நான் இரு வேறு தளங்களை நிறுவி கூகுள் அட்சென்ஸ் உபயோகித்தேன்.. இரண்டும் வேறுவேறுகால கட்டங்கள்... IP அட்ரஸ் கூட வேறு...
அவர்கள் மிகப்பெரிய தளங்களை மட்டுமே விட்டுவைக்கிறார்கள்...

என் நண்பன் கூட ஆரம்பித்தான். (about steel business) அவனுக்கும் இதே கதிதான்.. தன் தளத்தின் விளம்பரங்களை அவன் தொட்டுகூட பார்த்திருக்கமாட்டான்.. ( இடைப்பட்ட காலத்தில் அவன் ஊரிலேயே இல்லை... வேலை விஷயமாக புவனேஸ்வர் போயிருந்தான் )

(என்னுடைய தளத்திற்கு தினமும் 100 லிருந்து 150 பேர் வரை வருவார்கள்..இவற்றிர்க்கு இன்றும் ஆதாரம் உள்ளது.. நான் 100 டாலரைத் தொடும்போது கிட்டத்தட்ட 3 மாதங்கள்..என் உழைப்பு வீண்.. )

கூகுள் அட்சென்ஸ் பயன்படுத்திப் பாருங்கள்.. உங்களுக்கே தெரியும்..

Narathar
19-01-2007, 12:51 AM
நானும் ஒருகாலத்தில் ஒரு தளத்தை நிறுவி சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன்..... ஆனால் சேர்வர் பணத்தை கைக்காசு போட்டு கட்ட வேண்டிய நிலை!!!!!!

கையை கடிக்குதே என்று கைமாற்றி விட்டேன்.

ஆனால் இப்போது அத்தளம் சிறப்பாக இயங்குகிறது.............
என்ன தளம் என்று கேட்காதீர்கள். ஆனால் பழையவர்கள் அறிவார்கள்....

அவர்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் போது அத்தளத்தை நிறுவியவன் நான் தான் என்று பெருமை கொண்டாட விரும்பவில்லை..........

எனவே தயவு செய்து என்ன தளம் என்று கேட்காதீர்கள்

ஆனால் அவர்கள் சம்பாதிக்கின்றார்களா? இல்லையா என்பதை நான் அறியேன்

ஷீ-நிசி
19-01-2007, 02:41 AM
Adsense -க்காக ஒரு வெப்தளம் உருவாக்கி முயற்சி பண்ணிக்கொண்டிருக்கிறேன்.. ஒன்றும் நடக்கவில்லை. ஏதாவது ஒரு குறை இருகிறது என்று கூறி விடுகிறார்கள்.. நீங்கள் இப்பொழுது சொல்வதைப் பார்த்தால் திட்டத்தையே கைவிடுவது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறேன்

மதுரகன்
19-01-2007, 05:54 PM
உண்மைதான் ஷீ நானும் பல இடங்களில் முயன்று விட்டேன்
நேரமும் பணமும் வீணானதுதான் மிச்சம்....

மனோஜ்
19-01-2007, 06:12 PM
நானும் இதை தொடங்களாமா வேன்டாமா என்று இருந்தோன்
முடிவு எடுத்து விட்யடேன் வேன்டாம் என்று
அனைவருக்கும் நன்றி