PDA

View Full Version : நூறில் ஒரு வார்த்தை..!



franklinraja
20-11-2006, 09:10 AM
நண்பர்களுக்கு வணக்கம்..!

மன்றத்தில் சேர்ந்த 28-வது நாளில் -
எனது நூறாவது பதிவில் சில வார்த்தைகள்.. :)

மன்றத்தில் நண்பர்களைத் தேடித்தான் நுழைந்தேன் -
இப்போது - உறவுகளைக் காண்கிறேன்..!

உலகின் பல்வேறு இடங்களில் இருந்தாலும்,
உறவுகளை இணைக்கும் ஒரு பாலமாய் இருக்கின்றது -
நம் தமிழ்மன்றம்..! :)

நன்றி சொல்ல கடன்பட்டிருக்கின்றோம்..!

நூற்றுக்கு நூறு பெறுகிறோமா - தெரியாது !
ஆனால், பல நூறு நண்பர்களைப் பெற்றிருக்கிறோம் ! ;)

சில நண்பர்களை பல நாட்களாய் காண முடியவில்லை -
பதிவுகளும் இல்லை..! :confused:
நண்பர்கள் தொடர்ந்து வாருங்கள் -
தங்கள் உறவுகளைக் காணுங்கள்..!

கண்டதால் நட்புகொள்கிறோம் -
காணாமலே நட்புகொள்ளும் நாம் பாக்கியசாலிகள்..! B)

__________________
நட்புடன்,
Franklin Raja.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி
வேரொன்றும் அறியேன் பராபரமே..!"

மதி
20-11-2006, 11:16 AM
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ராஜா...!
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.... !

பென்ஸ்
20-11-2006, 12:24 PM
உண்மையை இப்படி புட்டு புட்டு வைப்பது எனக்கு பிடிக்காது.... :-)

இராசகுமாரன்
20-11-2006, 12:36 PM
சதமடித்த நண்பர் ஃப்ராங்கிலின் ராஜாவுக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.

நண்பர்கள் வராமலிருக்க பற்பல காரணங்கள் இருக்கலாம், அவர்களை இங்கே மீண்டும் கவர்ந்து இழுக்குமாறு மன்றத்தில் ஒரு விசை பட்டன் வைத்துக் கொள்ளுங்கள்.

ஓவியா
20-11-2006, 05:23 PM
சில நண்பர்களை பல நாட்களாய் காண முடியவில்லை -
பதிவுகளும் இல்லை..!
நண்பர்கள் தொடர்ந்து வாருங்கள் -
தங்கள் உறவுகளைக் காணுங்கள்..!

இளம் புயலுக்கு
தென்றலின் வாழ்த்துக்கள்

எனக்கும் ரொம்ப நாளாகவே இதை போல் ஏக்கங்கள் இருந்தன....

முகம் தெரியாமலே...ஒரே லூட்டியும் கும்மாளமும்...என்ன உறவுகள்...எங்கே அவர்கள்....கடவுளுக்கே வெளிச்சம்

அதுவும் பழைய பதிவுகளை படிக்கும் போழுது.......மனம் கனக்கும்...

காணாமலே நட்புகொள்ளும் நாம் பாக்கியசாலிகள்தான்


பதிவுக்கு நன்றி ஃபிரக்லின்ராஜா

இளசு
20-11-2006, 07:41 PM
உங்கள் ஆர்வமான அன்புக்கு ஈடுகொடுக்கும்படி
மன்ற சொந்தங்கள் உலவிக் குலவுவார்கள் என நம்புகிறேன்.

சதத்துக்கு வாழ்த்துகள் ராஜா!

அறிஞர்
20-11-2006, 08:59 PM
சதமடித்த அன்பருக்கு வாழ்த்துக்கள்... இன்னும் பல சதங்களை அடித்து... அநேக நண்பர்களை கவர வாழ்த்துக்கள்

pradeepkt
21-11-2006, 06:11 AM
வாழ்த்துகள் ராஜா.

franklinraja
21-11-2006, 07:16 AM
நன்றி.. நன்றி.. நன்றி..! :D

"பண்பட்டவர்" பட்டத்திற்கு மிக்க நன்றி..!! ;)

ஓவியா
21-11-2006, 04:33 PM
நன்றி.. நன்றி.. நன்றி..! :D

"பண்பட்டவர்" பட்டத்திற்கு மிக்க நன்றி..!! ;)

வாழ்த்துக்கள்

அந்த "பண்பட்டவர்" பகுதிக்கும் சென்று கலக்கவும் நண்பரே

வெற்றி
10-03-2007, 11:22 AM
சில நண்பர்களை பல நாட்களாய் காண முடியவில்லை -
பதிவுகளும் இல்லை..!
நண்பர்கள் தொடர்ந்து வாருங்கள் -
தங்கள் உறவுகளைக் காணுங்கள்..!

இளம் புயலுக்கு
தென்றலின் வாழ்த்துக்கள்
எனக்கும் ரொம்ப நாளாகவே இதை போல் ஏக்கங்கள் இருந்தன....
முகம் தெரியாமலே...ஒரே லூட்டியும் கும்மாளமும்...என்ன உறவுகள்...எங்கே அவர்கள்....கடவுளுக்கே வெளிச்சம்
அதுவும் பழைய பதிவுகளை படிக்கும் போழுது.......மனம் கனக்கும்...
காணாமலே நட்புகொள்ளும் நாம் பாக்கியசாலிகள்தான்




யாரோ வருவார் யாரே இருப்பார் வருவதும் போவதும் தெரியாது..

பிரசாத்
26-03-2007, 06:34 AM
உங்களது 100 வது பதிப்பிற்க்கு என் வாழ்த்துக்கள். உங்களது உணர்வுப் பூர்வமான கவிதையை படித்தேன். மிக்க நன்றி

பிரசாத்