PDA

View Full Version : ♔. பஸ்சா.? கசங்கல்.! (அல்லது) பஸ் சாகசங்கள்...!!! (1)ராஜா
18-11-2006, 09:00 AM
இந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..!
பாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..!
இன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட..!! தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..!

இது இப்புடியா..? ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து முடிஞ்சிருக்கும்..பை..குடை..கைச்சீப், .. துண்டு.. புள்ளைங்க..பொண்டாட்டி..எல்லாத்தப் போட்டும் சீட் புடிக்கிற ஒரே இனம் நம்ம இந்திய இனம்தான்..

ஒரு நாளு அப்படித்தான்..சன்னல் வழியா புள்ளயை தூக்கி விட்டு சீட் புடிக்கச் சொன்னான் ஒருத்தன்.. ஏற்கனவே அந்த சீட்டுலே உக்காந்திருந்த இன்னொருத்தன் கடுப்பாயி, சனியனே வெளியிலே போ.. அப்படின்னு சன்னல் வழியாவே தூக்கி பொடியனை வெளியிலே போட்டுட்டான்.. அப்பங்காரன் போயி போலிஸ்காரர் கிட்டே எம்புள்ளய ஒரு பய சனியன்னு திட்டுறான்னு சொன்னான்.. அப்படியா நடந்துச்சி..? நீ போயி அந்த பயலை நான் கூப்டேன்னு சொல்லு..ன்னாராம்.. அப்பங்காரனும் புள்ளையத் தூக்கிக்கிட்டு கெளம்பறப்ப.. நீ மட்டும் பொயிட்டு வா.. அது வரைக்கும் இந்தக் குரங்குக் குட்டிய நான் பாத்துக்கறேன்.. னாராம்.

சரி ..கதைக்கு வருவோம்.. இந்த சீட் புடிச்ச ஆளுக மூஞ்ச ( முழிச்சுட்டு இருந்தா ) பாக்கணுமே... ஏதோ எம்.எல்.ஏ சீட்டு கெடைச்சது மாதிரி சந்தோஷமா இருப்பாங்க.. செல பய..அடிச்சு புடிச்சு சீட் போட்டு அப்புறம் தான் இந்த பஸ் எங்க போகுதுன்னு பக்கத்தாள கேப்பான்..அப்புறம் எறங்கி ஒடுறதும்.. அந்த சீட்டுக்கு அஞ்சாறு பேர் மல்லுக்கு நிக்கிறதும்...அடேயப்பா..

நூறு ஆம்பளக பஸ்சுலே இருந்தாக்கூட அவ்வளவு சத்தம் இருக்காது..நாலு பொம்பளக இருந்தாப் போதும் ஒரே அக்குரும்பு தான்.. அவங்க கிட்டே இருக்கறதெல்லாம் அவங்களே சொல்லி விப்பாங்க..! காரணம் கேட்டா ஒன்னும் பெருசா இருக்காது.. இடம் உட மாட்டேங்கறா.. காலை மிதிச்சுட்டா.. அப்படிம்பாங்க... ஆனா சண்டை போட்டுக்கற் ஆளுகளை கவனிச்சு பாருங்க... ஒரு பார்ட்டி நெறையா நகை போட்டுருக்கும்..!!! செல சமயத்திலே இந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் தீவிரமடைஞ்சு..ஆம்பளைகளுக்கும் பரவி, அவங்க பஸ்சுக்கு வெளியிலே சேத்திலே பொறண்டுகிட்டிருப்பாங்க.. இதுக ரெண்டும் ஒன்னா உக்காந்து சன்னல் வழியா பாக்கும்...!

பஸ் உள்ளே எள்ளு போட்டா எண்ணெய் ஆயிரும்.. இதிலே புகுந்து பேனா, ட்யரி, தைலம், சீப்பு, நெல்லு போடுற குதிர், புக் இப்படி பல சாமான் விக்கிற ஆளுக வேற உயிரை எடுப்பாய்ங்க..கடுதாசி குடுத்து காசு கேக்குற கவுரவப் பிச்சை வேறே.. அப்புறம் இன்னொன்னு..இந்த புருசங்காரங்களுக்கு, பஸ் கெளம்புறவரைக்கும் எங்கேயாவது பதுங்கிக்கிட்டு பொண்டாட்டிகள பதற வச்சி பழிதீக்கறதுன்னா,, பால் கோவா சாப்பிடுற மாதிரி..ஆனா பல பொண்டாட்டிங்க டிக்கிட்டு எடுக்கதான் புருசனத் தேடுவாங்க..!

இந்த ரெண்டு பேரு சீட்டு இருக்கே..அத மாதிரிக் கொடுமை வேறே எதுவும் கிடையாது.. ரெண்டுல ஒன்னு குண்டு.. அப்படிங்கறது காலத்தின் கட்டாயம்... இதில் முதலில் வந்தவர் எவரோ அவரே அதற்கு முதலாளி. மற்றவர் தக்காளி..! இப்புடித்தான் பாருங்க.. ஒரு தடவை ஒரு பெர்ர்ர்ர்ரிய ஆளு ரெண்டுபேரு சீட்டுலே சிரமப்பட்டு ஒண்டியா உக்காந்து இருந்தாரு.. வேறே எங்கேயும் இடமில்லாம ஒருத்தன் அவர நகந்து உக்காரச் சொன்னான்.. அவரு முடியாதுன்னு சொல்ல.. இவன் ரெண்டு பேருக்கான சீட்டுன்னு சட்டம் பேச, அவரு சைலண்டா ரெண்டு சீட்டை எடுத்து காட்டினார்.. சரின்னு முன்னாடி போனா அடுத்த சீட்டுலேயும் ஒரு வயசுல சின்ன,,ஆனா டபுள் சைஸ் பையன் உக்காந்திருக்கான்.. நின்னவன் ஒன்னும் சொல்லலே.. ஆனா அவனுக்குத் தெரியாது ரெண்டு குண்டர்களும் அப்பனும் மகனும்ன்னு..! இவங்களுக்காகத் தான் குண்டர் தடைச் சட்டம் இருக்கோ..? வளமான உடல் படைத்தவர்கள் கோபம் கொள்ள வேண்டாம்..நானும் உங்கள் இனம் தான்..!)


இருக்கட்டும்.. பஸ்சு ஒரு வழியா கெளம்பிருச்சுன்னு வைங்க.. அப்புறம்தான் இருக்கு விசயமே...!!

( எல்லாத்தையும் இப்பவே சொன்னா ருசி இருக்காது.. ரெண்டு நாள் போகட்டுமே..என்ன.. அது மேட்டர்..!)

guna
18-11-2006, 09:54 AM
சிரிச்சு சிரிச்சு ஆர்வமா படிச்சுகிட்டு இருந்தேன்,பாதியிலேயே நிறுத்திடீங்கலே ராஜா..

காத்திருக்க வைகறதிலே, அப்படி என்ன ஆசை ராஜா?
சரி, காத்துத்தான் இருக்கனும்'ன்னு ஆச்சு.,
அடுத்த பதிவை காத்திருந்தே படிச்சுக்கறேன்..

சுவாரஷ்யமான பதிவுக்கு, நன்றிகள் ராஜா

குணா

ஓவியா
18-11-2006, 12:58 PM
ராஜா அண்ணா

அருமையான பதிவு.....பாரட்டுக்கள்

நண்பர் ராகவன் போல் தாங்களும் ரசனை நிறைந்த படைப்பாளிதான்

ரசித்து படித்தேன்....

இப்படியே ரசனையா பதிவினை தொடரவும்....

நன்றி


சிரி:D த்து:D க்கொ:D ண்டே:D
:D ஓ:D வி:D யா:D

ராஜா
24-11-2006, 09:22 AM
இருக்கட்டும்.. பஸ்சு ஒரு வழியா கெளம்பிருச்சுன்னு வைங்க.. அப்புறம்தான் இருக்கு விசயமே...!!

ஆனா அவ்வளவு சீக்கிரம் பஸ் கிளம்பாது.. தனியார் பஸ்ஸா இருந்தா அடுத்து கெளம்பற பஸ்காரன் வந்து கேவலமா திட்டற வரைக்கும் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கும்..! அரசாங்க பஸ்ன்னா கேக்கவே வேணாம்..எப்போ கெளம்பும்ன்னு அதுக்கே தெரியாது. அதிலே இன்னொரு அநியாயம் நடக்கும் பாருங்க..
நாம அடிச்சு புடிச்சு ஏறுறதையும், இடம் புடிக்க அல்லாடுறதையும் ஒரு சிப்பந்தி அரைக்கண்ணால் பார்த்து ரசிச்சுட்டு இருப்பாரு. ஒரு வழியா ஏறி குடுத்து வச்சவங்க சீட் புடிச்சு செட்டில் ஆயிடுவாங்க. மத்தவங்க நின்னுக்கிட்டும், தொங்கிக்கிட்டும் இருப்பாங்க. அப்ப இந்த சிப்பந்தி வந்து சொல்லுவாரு.." இந்த பஸ் பணிமனைக்குப் போகுது.. அதோ அந்த பஸ்லே போயி ஏறிக்குங்க" அப்படின்னு ஒரு ஒன்னுக்கும் உதவாத லங்கடா வண்டியைக் காட்டுவாரு.

அப்புறம் என்ன.. நின்னவன், தொங்குனவன் எல்லாம் ஓடிப்போயி அந்த பஸ்லே ஜம்முன்னு ஒக்காந்துக்குவாங்க..இந்த பஸ்லே உக்காந்து இருந்தவங்க அங்கே போயி இடம் கிடைக்காம ஸ்டாண்டிங் போட்டுக்கிட்டு உக்காந்திருக்கவங்களை " கருவாட்டுக் கடையை நாய் பார்க்கற மாதிரி" பரிதாபமா பாத்துட்டிருப்பாங்க..!!!

ஒரு வழியா பஸ் கிளம்பிடும்.. இதிலே பஸ் வாசப்படி இருக்கு பாருங்க.. அதுக்கிட்டே ஜன்னல் ஓர சீட் புடிச்சு உக்காந்து இருக்கறவங்க மாதிரி பரோபகாரி யாரையும் பார்க்க முடியாது..
தொங்குற பயலுக சாமானுக்கெல்லாம் குப்பத் தொட்டி அவருதான்.. புஸ்தகம், டிப்பன் டப்பா, பம்ப் செட் மோட்டாரு, பொண்டாட்டி தைக்க குடுத்துவிட்ட செருப்பு, தாத்தாவோட யூரின் டெஸ்டுக்கு போற சாம்பிள், ஒத்தைக் கொலுசோட புள்ள, எல்லாத்தையும் அவர்கிட்டெ ஒப்படைச்சுட்டு நிம்மதியா வருவானுங்க.. பாவம்.. இவர் நிம்மதி போயிடும்.. முதல்ல கவனிச்சுருக்க மாட்டாரு.. அப்புறம் தான் பாப்பா கால்லே ஒத்தை கொலுசு இல்லாதது தெரியும்.." அய்யய்யோ.. இது என்னடா ரோதனை..? எவனோ லவட்டிக்கிட்டு பூட்டான்.. பஸ்-ஸ்டாண்டு போனப்புறம் நம்மள வாயிலேயே மிதிக்கப்போறான் புள்ளயக் கொடுத்தவன்." ங்குற நெனப்புலேயே பாதி உசுரு போயிரும்..!! இந்த புள்ளய வாங்கிக்கிட்டு அவரு படுற மனக்கிலேசம், கல்யாணம் ஆகாம புள்ளய வாங்குனவள் கூட பட மாட்டா..!!!

அவருக்குப் பக்கத்திலே-- ரெண்டுபேர் சீட்டு ஒரத்திலே-- நடைபாதையை ஒட்டி ஒரு ஆள் உக்காந்திருப்பான் பாருங்க..
அவன் பாடு இன்னும் மோசம்.. பாதி நேரம் அவன் தோள் மேலே ஏறி குந்திக்கிட்டுதான் நடத்துனர் டிக்கிட்டு போடுவாரு..! அது மட்டும் இல்லே.. போறவன், வர்றவன் எல்லாம் எறங்குற், ஏறுற அவசரத்திலே அவன் தலையைப் பதம் பார்த்துட்டுத் தான் போவானுங்க..வருவானுங்க..! அதிலும் வழுக்கைத் தலையா வேறே இருந்துட்டா.. கேக்கவே வேணாம்..!! க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகும்..!

இது இப்படின்னா.. மத்த சீட்டுலே தூங்கி (கோட்டுவாய்) வழியற பயலுக ரவுசு படுமோசம்.. அதிலும் சில பயலுக... 'வாழ்க்கையிலே இனிமே தூங்க வாய்ப்பே கிடைக்காதது மாதிரி' தூங்குவானுக. இன்னும் சிலபேரு உண்மையிலேயே தூஙகுறானா.. இல்லே தோள்ல சாய்ஞ்சுக்கிட்டு செல் போனை நோட்டம் உடுறானான்னே கண்டுபிடிக்க முடியாது..!!

தூங்கறவன் கதை இப்படின்னா.. அவனுக்கு பக்கத்துலே உக்காந்துருக்குறவன் இன்னும் வில்லங்கமான பார்ட்டியா இருப்பான்.. தூங்கறவனை சொல்லி சொல்லி பாப்பான்.. தூங்காதேன்னு.. அவண்தான் கேட்க மாட்டானே..!! அவன் தூக்கம் அவனை உடாது..!! முழிச்சுட்டு இருக்கறவன் என்ன பண்ணுவான் தெரியும்மா..? எங்கேயாவது பஸ் லேசா ஸ்லோ ஆனா போதும்.. டக்குன்னு முன்னே நகந்துக்குவான்..! தூங்கறவன் அவன் தோள்பட்டையிலிருந்து நழுவி, சீட்டு சாய்மானத்துலே மோதி, உக்காந்திருக்கறவன் முதுகுக்கும் சாய்மானத்துக்கும் நடுவிலே மாட்டிக்குவான்.. இப்போ முன்னாலே நகந்த முழிச்சுட்டிருக்குற பாவிப்பய.. வேணும்ன்னே பின்னாலே நகர்ந்து விழுந்தவனை மேலும் நசுக்குவான்..

அப்புறம் அந்தப் பய தூங்குவான்ங்கறீங்க...?

உக்காந்து இருக்கறவங்க கதை இப்படின்னா, நின்னுக்கிட்டு வர்றவனுக அக்குரும்பு இருக்குதே.. அது இன்னும் ரகளை.. அடுத்த முறை அதைப் பற்றிப் பார்ப்போமா..? நன்றி..வணக்கம்.

ஓவியா
24-11-2006, 06:18 PM
ராஜா அண்ண,
எப்படி இவ்வளவு ரசனையா எழுதுறீங்க....?

எழுதுவதே ஒரு கலை - அதிலும்
எழுத்துபிழை இல்லாமல் எழுதுவது ஒரு அழகு - அப்புரம்
இந்த நோட்டம் விட்டு குசும்பு செர்த்து எழுதுவது மாபெரும் கலைதான்....

பதிவுக்கு நன்றிகள் பல

ராஜா
25-11-2006, 12:48 PM
நன்றி தாயே..

தங்கள் அனைவரின் ஆதரவும் பாராட்டும் தொடர்ந்தால் முடியாதது எதுவுமில்லை.

நம் மன்றத்தை என் வீடாகவே உணர்கிறேன்.

karikaalan
25-11-2006, 03:43 PM
ராஜா ஜி

அருமையான படைப்பு.. சிரித்துச் சிரித்து வயிறு புண்ணானதே.. அடாடா.. இவ்வளவு சிரித்து மிக நீண்ட நாட்களாகிவிட்டன.. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

ஓவியா
26-11-2006, 03:01 PM
நன்றிக்கு ஒரு நன்றி

அண்ணா
நீங்க வந்த வரிக்கு எழுதிகினே போங்கா, நாங்க பின்னாடி படிச்சிகினே வாரோம்...
ஆதரவுதானே !! சும்மா ஜோரா கடைக்கும்...

மறவாமல் தொடரவும்

தாமரை
26-11-2006, 03:04 PM
முழிச்சுட்டு இருக்கறவன் என்ன பண்ணுவான் தெரியும்மா..? எங்கேயாவது பஸ் லேசா ஸ்லோ ஆனா போதும்.. டக்குன்னு முன்னே நகந்துக்குவான்..! தூங்கறவன் அவன் தோள்பட்டையிலிருந்து நழுவி, சீட்டு சாய்மானத்துலே மோதி, உக்காந்திருக்கறவன் முதுகுக்கும் சாய்மானத்துக்கும் நடுவிலே மாட்டிக்குவான்.. இப்போ முன்னாலே நகந்த முழிச்சுட்டிருக்குற பாவிப்பய.. வேணும்ன்னே பின்னாலே நகர்ந்து விழுந்தவனை மேலும் நசுக்குவான்..

அப்புறம் அந்தப் பய தூங்குவான்ங்கறீங்க...?

எப்பவாவது என்னோட பக்கத்து சீட்டில தூங்கினீரா என்ன?:confused: :confused: :confused:

pradeepkt
27-11-2006, 07:06 AM
கலக்கறீங்க ராஜா.. கலக்கறீங்க...
மெயின்கார்டு கேட்ல துவாக்குடி போற பஸ்ஸு (கொஞ்ச நாளைக்கு முன்னாடி) பிடிச்சுருக்கீங்க போல... சும்மா ராவா போட்டுத் தாக்கறீங்க!!!
அதிலயும் அந்த உவமான உவமேயங்களுக்காகவே இன்னொரு தடவை இதைப் படிச்சு ரசிச்சேன்... இன்னும் நிறைய நிறைய எழுதுங்க.

அறிஞர்
28-11-2006, 08:40 PM
கலக்கலோ கலக்கல்.. நம்மூரில் பஸ் பயணிப்பது போல் ஒரு உணர்வு.. கலக்குறீங்க.. இன்னும் தொடருங்க ராசா....

இளசு
28-11-2006, 09:11 PM
செம அசத்தல் ராஜா ... கலக்கி எடுத்துட்டீங்க!

வசிப்பிடம் மன்னை டு திருச்சின்னா சும்மாவா என்ன?

பஸ்ஸில் வரும் குடிமகன்கள்... அவர்தம் வாய்வழி வழியும் நற்றமிழ் நாறா வார்த்தைகள்... வாந்தி மகாத்மியங்கள்...

கண்ணில் திணிக்கப்படும் விஜயகாந்த் பட வீடியோக்கள்..

நிமிடக்கணக்கில் மட்டுமே குடித்தனம் பண்ண விழையும் இடிமன்னர்கள்..

இன்னும் இன்னும் என்னென்னவோ அக்குரும்புகள்...

பஸ் பயணம் என்றாலே பயமாயிருக்குப்பா...


நீங்கள் ஜோராய்த் தொடருங்கள்..


உங்கள் எழுத்துத் திறமை ரசிக்க வைக்கிறது. பாராட்டுகள் ராஜா!

ராஜா
01-12-2006, 07:11 AM
உக்காந்து இருக்கறவங்க கதை இப்படின்னா, நின்னுக்கிட்டு வர்றவனுக அக்குரும்பு இருக்குதே.. அது இன்னும் ரகளை..

இந்த பஸ்சுல போகும் போது பாத்தீங்கன்னா.. செல பயலுக புட்போர்டுல தொங்கிக்கிட்டே வருவாய்ங்க.. 100 பேரு இறங்கிப் போனாலும் அவிங்க உள்ள வந்து குத்தவைக்க மாட்டாய்ங்க.. ஆனா பாருங்க.. உள்ள தேமேன்னு நிக்கிற ஆளுகளாப் பாத்து " யோவ்.. பெருசு.. உள்ள போய்யா.. நாங்க தொங்கிக்கிட்டு வர்றோமில்ல..!" அப்படின்னு ஸ்டாப்பிங்குக்கு ஸ்டாப்பிங் மெரட்டிக்கிட்டே வருவாய்ங்க.. என்னமோ இவனுக தொங்கி தொங்கி மனுஷ குலத்துக்கு தொண்டாற்றுற மாதிரி..! அதுவும் வயசாளிங்களாப் பாத்துதான் மெரட்டுவாய்ங்க.. எளச மெரட்டுனா எட்டி வாயிலேயே மிதிச்சுட்டாய்ங்கன்னா..! அதிலேயும் வெவரமான பயகதான்..!!!
அப்புடியும் ஓவர் வெவரமான பெருசுககிட்டே " உள்ள போ.. உள்ள போ"ன்னு சொல்லிட்டாய்ங்கன்னு வைங்க..
அதுக என்ன சொல்லும் தெரியுமா..? " இனிமே உன்ன கத்தியாலே சொருவிட்டுதான் 'உள்ள' போகணும்" !!!.

நடுவிலே நின்னுகிட்டு வாராக பாருங்க.. அவுக தான் பாவப்பட்ட ஆளுக. ஏன்னா, ரெண்டு படியிலே தொங்குற பயகளும் உள்ள நகந்து போ..போன்னா எங்கிட்டுதான் போவாக..?

இப்புடி நின்னுக்கிட்டே வர்ற ஆளுகள வெறுப்பேத்தற மாதிரி சில காரியம் நடக்கும்.. எதாவது ஸ்டாப்பிங் வரும்போது உக்காந்துக்கிட்டு வர்ற ஆள் திடீர்ன்னு எந்திரிப்பான்.. நிக்கிற ஆளுக உடனே வியூகம் வகுப்பாய்ங்க.. எப்புடி அந்த சீட்ட கைப்பத்தலாமுன்னு..
ஆனா எந்திரிச்சு நின்ன பய, ஸ்டாப்பிங் வந்தவுடன டக்குன்னு திரும்பவும் உக்காந்துக்குவான். திட்டம் போட்ட ஆளுக மூஞ்சு தொங்கிப் போயிரும். மனசுக்குள்ள அந்த ஆள் வம்சத்தையே நாறடிச்சு திருப்தி பட்டுக்குவானுக. நைஸா அவன்கிட்டே கேப்பாய்ங்க..
" ஏன் பங்காளி.. எறங்கலயா..?"

"நானா..? நான் கடைசி ஸ்டாப்பிங்லே எறங்கணும்"

" அப்புறம் எந்திரிச்சே..?"

" ஊட்டுக்காரி இருக்காளான்னு பார்த்தேன்..!"

" இருக்காங்களா..?"

இவன் நக்கலை அவன் புரிஞ்சுக்கிட்டு ஒரு மொறை மொறைப்பான்.

இன்னும் செல பயக இருக்காய்ங்க.. "இம்புட்டு நேரம் உக்காந்து வந்தோம்.. எறங்கத்தான் போறோம்.. பாவம்.. பக்கத்துல நின்னுக்கிட்டு வர்றவர் உக்காரட்டும்" அப்படின்னு நெனைக்கவே மாட்டானுக.. எங்கேயோ நிக்கிற ஆள சத்தம் போட்டு கூப்பிட்டு, தன் சீட்டுல உக்காரச் சொல்லி வாரிசு நியமனம் பண்ணிட்டு எறங்கிப் போவானுக..!!

பஸ் சீட்டுக்கே இப்படின்னா... அரசியல்லே நாம யாரையும் குத்தம் சொல்லலாமோ..?
******************************************************************************

நன்றி நண்பர்களே..! எந்த விஷயமும் சுவாரஸ்யம் குறையும் முன்பே முடிவுக்கு வருவதே நல்லது.. இத்துடன் இத்திரி நிறைவுறுகிறது..!

தங்கள் பின்னூட்டங்களையும், விமரிசனங்களையும் எதிர்நோக்கி..

ராஜா.

ஓவியா
01-12-2006, 03:47 PM
இனிமே உன்ன கத்தியாலே சொருவிட்டுதான் 'உள்ள' போகணும்" !!!.

" ஊட்டுக்காரி இருக்காளான்னு பார்த்தேன்..!"

" இருக்காங்களா..?"

ரசித்தேன்


மிகவும் நகைச்சுவையான பதிவு,
அருமையாய் படைத்துல்லீர்கள்

:Dபா:D ரா:D ட்:D டு:D க்:D க:D ள்:D
(பாராட்டைதான் இப்படி சொலுறேன்)

மிக்க நன்றி அண்ணா


அடுத்த பதிவு எப்பொழுது ஆரம்பம்?

அறிஞர்
01-12-2006, 04:23 PM
கடைசியில் சுவாரய்ம் குறையும் போது நிறுத்திக்கொண்டீரே.. சமத்து....

படிக்கட்டு பயணம் ஒரு இன்பம் தான்... அனுபவித்தவருக்கு தான் தெரியும் அதன் மகிமை

pradeepkt
02-12-2006, 02:34 PM
பஸ்ஸூல எடம் போடுறதுல நான் தில்லாலங்கடி. இந்த உடம்பை வச்சுக்கிட்டும் எப்படியோ நொழஞ்சுருவேன். குறிப்பா ராத்திரி ஒம்போது மணிக்குமேல திருச்சி மெயின்கார்டுகேட்டுல இருந்து துவாக்குடிக்குப் போற பஸ்ஸூ இருக்கே... அது வரவேண்டியதுதான் தாமசம், நம்ம மக்கள் பாஞ்சு புகுந்து கர்ச்சீப்பு, பை, புத்தகம், புள்ளை (மீதிய நீங்களே சொல்லிட்டீங்களே) அது இதுன்னு பனியன் ஜட்டி தவிர எல்லாத்தையும் போட்டு எடம் புடிப்பாக! அந்தக் கூட்டத்திலயும் எடத்தைப் போட்டு எங்கூட வந்தவகளை ஏலம் போட்டுக் கூப்பிட்டு ஒக்கார வரவகளைச் சாம தான பேத தண்ட (நம்மள விட சின்னப் பயலுகளா இருந்தா மட்டும் கடைசி) உபாயங்களை வச்சு ஒக்கார வச்சுட்டுதேன் மூச்சு வரும்!

சரிதாங்க ... அப்படியே அடுத்த திரியை ஆரம்பிச்சுருங்க.

ஆதவா
02-01-2007, 05:05 PM
அருமை அருமை ராஜா.... நகைச்சுவை எப்படி எழுதறீங்க? யப்பா!!!

gayathri.jagannathan
03-01-2007, 06:52 AM
ராஜா, பதிவு மிகவும் அருமை... ரொம்ப சுவாரசியமா இருந்தது எனக்கு என்னோட கல்லூரி நாட்கள் ஞாபகம் வந்துருச்சு... நீங்க சொன்ன எல்லாமும் நான் நேரடியா பாத்திருக்கேன்... ரொம்ப ரசித்து ரசித்து பதிவு செய்துள்ளீர்கள்...

ஒரு வாட்டி பஸ்ஸுல போறப்ப இப்படித்தான்... ஒரு கிழவி தெற்குதெரு பஸ் ஸ்டொப்பில ஏரிச்சு.... கண்டக்டர் கிட்ட செம மொக்கைய போட்டுக்கிட்டு வந்துச்சு... திடீர்னு அவரு ஏதோ சந்தேகம் வந்து டிக்கெட் எடுத்தியான்னு கேட்டரு... அதுக்கு அந்த கிழவிக்கு வந்த கோவத்த பாக்கணுமே....

கன்னா பின்னானு கத்த ஆரம்பிச்சிடுச்சு... ஒரு கட்டத்துல அது சொல்லிச்சு... "டாய் என்னடா னெனாச்சிக்கிட்டு இருக்க என்னய பத்தி நான் யார் தெரியுமா? இந்திரா காந்தி என் கூட உக்காந்து தான் சாப்பிடுவாங்க... இப்போவே போயி அவங்க கிட்ட complaint பண்றேன்" அப்படின்னு சொல்லிச்சு...

நம்ம conducturக்கு ஒரே சிரிப்பு... உடனே அந்த கிழவிய ஹை கோர்ட்டு கிட்ட இறக்கி விட்டுட்டு சொன்னாரு " இந்திரா காந்தி இப்போ கோர்ட்டுல தான் இருக்காங்க, நீ போயி பேசிட்டு வா" அப்படின்னு சொல்லி இறக்கி விட்டுட்டாரு.... அதுவும் சரின்னு சொல்லி இறங்கிச்சு...

யப்பா அன்னைக்கு பூரா சிரிச்சு சிரிச்சு வயிறு புன்ணா போயிடுச்சு...

ஷீ-நிசி
03-01-2007, 07:35 AM
ராஜா... இன்னைக்கு தான் இந்த திரியைப் பார்த்தேன்.. அதனாலேயே முழுக்க படிக்க முடிஞ்சது.. சில விஷயங்களைப் பார்த்து நாம சிரிக்கலாம்... அதை அப்படியே அடுத்தவங்க கிட்ட கொண்டுபோய் சேர்க்கறதுக்கு ஒரு திறமை வேணும்... அது உங்ககிட்ட நிறையவே இருக்கு... நான் இதை அலுவலகத்தில் இருக்கும்போது படித்தேன். என்னால் உண்மையிலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை. உணர்ந்த அனுபவங்களை நேரடியாக படித்ததனாலோ என்னவோ? அதிலும் எவனாவது எழுந்துபானுங்களானு காத்திட்டிருக்கும்போது எழுந்து எழுந்து உட்கார்ந்து படம் காட்டுவானுங்களே.... அது நிஜம் ராஜா அவர்களே... தொடர்ந்து இது போல் எங்களை சிரிக்க வையுங்களேன்....

மன்மதன்
04-01-2007, 05:08 AM
செம கலக்கல் பதிவு.. பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் இது மாதிரியான அனுபவம் கண்டிப்பா இருக்கும்.


அதுக்கிட்டே ஜன்னல் ஓர சீட் புடிச்சு உக்காந்து இருக்கறவங்க மாதிரி பரோபகாரி யாரையும் பார்க்க முடியாது..
தொங்குற பயலுக சாமானுக்கெல்லாம் குப்பத் தொட்டி அவருதான்.. புஸ்தகம், டிப்பன் டப்பா, பம்ப் செட் மோட்டாரு, பொண்டாட்டி தைக்க குடுத்துவிட்ட செருப்பு, தாத்தாவோட யூரின் டெஸ்டுக்கு போற சாம்பிள், ஒத்தைக் கொலுசோட புள்ள, எல்லாத்தையும் அவர்கிட்டெ ஒப்படைச்சுட்டு நிம்மதியா வருவானுங்க.. பாவம்.. இவர் நிம்மதி போயிடும்.. முதல்ல கவனிச்சுருக்க மாட்டாரு.. அப்புறம் தான் பாப்பா கால்லே ஒத்தை கொலுசு இல்லாதது தெரியும்.." அய்யய்யோ.. இது என்னடா ரோதனை..? எவனோ லவட்டிக்கிட்டு பூட்டான்.. பஸ்-ஸ்டாண்டு போனப்புறம் நம்மள வாயிலேயே மிதிக்கப்போறான் புள்ளயக் கொடுத்தவன்." ங்குற நெனப்புலேயே பாதி உசுரு போயிரும்..!! இந்த புள்ளய வாங்கிக்கிட்டு அவரு படுற மனக்கிலேசம், கல்யாணம் ஆகாம புள்ளய வாங்குனவள் கூட பட மாட்டா..!!!


ஹாஹ்ஹா................:D

sarcharan
04-01-2007, 05:20 AM
கலக்கறீங்க ராஜா.. கலக்கறீங்க...
மெயின்கார்டு கேட்ல துவாக்குடி போற பஸ்ஸு (கொஞ்ச நாளைக்கு முன்னாடி) பிடிச்சுருக்கீங்க போல... சும்மா ராவா போட்டுத் தாக்கறீங்க!!!
அதிலயும் அந்த உவமான உவமேயங்களுக்காகவே இன்னொரு தடவை இதைப் படிச்சு ரசிச்சேன்... இன்னும் நிறைய நிறைய எழுதுங்க.


ஹய்யோ அந்த ஆர்.ஈ.சி போறதுக்குள்ள அப்பப்பா.....

ஒருவேளை ஆர்.ஈ.சின்னாலே இப்படித்தானோ????;)

sarcharan
04-01-2007, 05:25 AM
காலையில பள்ளிக்கூடம் செல்லும்போது இப்படி நாங்கள் பலதடவை பயணித்தது உண்டு.. இனிய அனுபவம்.

பெரியம்மா படம் பாடல் ஞாபகம் வந்தது...

ஒரு முறை பேருந்து வேகமாக செல்லவே "நான் டிக்கெட் சத்திரத்துக்கு தான் எடுத்தேன், மேலே போக அல்ல" என்று நக்கலடித்தது நினைவுக்கு வருது

kr_srinivasan1977
04-01-2007, 05:46 AM
உனக்கும் ஆர்.ஈ.சி க்கும் சம்பந்தம் கிடையாது எதுக்கு பிரதீபை வம்புக்கு இலுக்கிறாய்

varsha
07-04-2007, 04:05 PM
எப்படி இவ்வளவு ரசனையா எழுதுறீங்க....?

எழுதுவதே ஒரு கலை - அதிலும்
எழுத்துபிழை இல்லாமல் தட்டச்சு செய்து எழுதுவது ஒரு அழகு - அப்புரம் இந்த நோட்டம் விட்டு குசும்பு நகைச்சுவை சேர்த்து எழுதுவது மாபெரும் கலைதான்

ராஜா
07-04-2007, 04:44 PM
நன்றி வர்ஷா..

இன்னொரு லின்க் நாளைக்கு தரேன்..!

இதயம்
12-04-2007, 09:11 AM
இதை படிக்கும் போது என்னால் கணிணியின் முன் அமர்ந்திருப்பது போல் உணரமுடியவில்லை. ஏதோ ஒரு பாடாவதி டவுன் பஸ்ஸில், ஏகப்பட்ட அமளிகளுக்கு நடுவே அமர்ந்திருப்பது போல் ஒரு உணர்வு..! பேரு தான் ராஜா-ன்னா எழுதுறதிலேயும் ராஜா போலிருக்கே..! நகைச்சுவை எழுதும் கலையை கரைத்துக் குடித்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் பெரும்பாலான சம்பவங்கள் நம் அனைவரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. ஆனால், எல்லோராலும் இத்தனை நகைச்சுவையுடனும், மொழிப்பிரவாகத்துடனும், நினைவாற்றலுடனும் எழுத முடியாது. ஐயா ராஜா..! இது வரமைய்யா உங்களுக்கு..!! கொடுத்த வரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். இல்லையென்றால் கிடைத்தவரம் சரியாக பயன்படுத்தாத காரணத்தால் பறிக்கப்படும்..!!!!!
வாழ்த்துக்கள் ராஜா..!!

மனோஜ்
12-04-2007, 09:39 AM
ராஜா அண்ணா திரும்ப சென்றல்பஸ்டான்டுல இருந்து சந்திரம் போன அனுபவம் வந்தது இப்ப பாலகரை பாலம் சரிஆயிடுச்சா இல்லையா அந்த தென்னுர்ல நிக்கும்பாருங்க பஸ்சு இங்சு இங்சுசா நகரும் போது வரும் வெறுப்புபாருங்க யப்பா அது ஞாபகம் வந்தது
வாழ்த்துக்கள் திருச்சிபயணம் ஞாபகபடுத்தியதற்கு தொடருங்கள் நன்றி

banupriya
12-04-2007, 10:02 AM
"பஸ் பயணங்களில்" ஞாபகங்களை நினைவுப்படுத்தியிருக்கிறீர்கள் ஹாஷ்யமாவும் சுவாரஷ்யமாவும் எழுதிறீங்க நல்லாருக்கு உங்கள் நகைச்சுவை எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள்.

ராஜா
12-04-2007, 01:51 PM
ந்ன்றி நண்பர்களே..!

poo
13-04-2007, 10:15 AM
கலக்கிட்டீங்க ராஜா...

என்கிட்ட ரெண்டு மூணு பேரு வந்து என்னங்க தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டுட்டு போறாங்க சார்.

ராஜா
13-04-2007, 10:19 AM
நன்றி பூ...!

ராஜா..\வேர் ; சன்னா நல்லூர். விழுது மன்னார்குடி. கிளை ; திருச்சி.

சக்தி
22-05-2007, 07:05 AM
தூள் படைப்பு மாமே பிரமாதம்

அக்னி
22-05-2007, 12:45 PM
சிறி பொறியிலிருந்து பெரும் தீ...
சிரிப்பாய்த் தந்தாலும் சிந்திக்கவேண்டிய விடயங்களும் அதிகம் தந்திருக்கின்றீர்கள்.
தொடருங்கள்...

ராஜா
18-12-2008, 04:37 AM
நன்றி நண்பர்களே..!