PDA

View Full Version : மீண்டும் ஞானிleomohan
18-11-2006, 05:44 AM
மீண்டும் ஞானி 1. பொடி மட்டை


17 வருடங்களுக்கு பிறகு ஞானியை நான் வழக்கமாக செல்லும் தேனீர் கடையின் வாசலில் சந்தித்தேன்.

வணக்கம் ஞானி, நலமா என்று கேட்டேன்.

அடேடே மனிதா, நான் நல்ல சுகம். நீ எப்படி என்றான்.

என்னை உற்றுப் பார்த்தான். நான் அவனை உற்றுப் பார்த்தேன்.

நான் தொந்தியுடன் தலை நரைத்து கிழடு தட்டியிருந்தேன். அதை அவன் பார்ப்பதை நன்கு உணர்ந்தேன். அவனோ அதே போல் இருந்தான். கண்களில் அந்த துருதுருப்பு, உடலில் எந்த மாற்றமும் இல்லை. உடை மட்டும் வேட்டி சட்டையாக மாறியிருந்தது. தலை முடியில் நரையேதும் இல்லை.

ஞானி, அதெப்படி நீ 17 வருடத்திற்கு முன் பார்த்த மாதிரியே இருக்கிறாய்.

அது உனக்கு அநாவசியம் என்றான்.

சொல்லேன் கேட்போம் என்றேன் நான்.

பொடி மட்டை தும்முமா என்று கேட்டான்.

நான் யோசித்து பார்த்துவிட்டு, தும்மாது என்றேன்.

அதெற்கென்ன இவ்வளவு யோசனை. சரிதான் தும்மாது என்றான்.

அதெற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்.

இருக்கிறது. வாழ்கை பொடி போல. நீ பொடி மட்டை போல. வாழ்கையின் நிகழ்வுகள் உன்னை பாதிக்காவண்ணம் பார்த்துக் கொண்டால் உன் உடலிலும் மனதிலும் எந்த மாற்றமும் இருக்காது. பொடி மட்டை தும்மக்கூடாது.

சரிதான்.

சாராய பாட்டில் சாராயம் குடித்தால் நீ குடிக்க என்ன மிஞ்சும். பாட்டிலுக்கு போதை ஏறக்கூடாது. நீ பாட்டில். உன்னை சுற்றி இருப்பது சாராயம். பார்த்து போதையில் விழாது இருந்தால் பிரச்சனையே இல்லை என்றான்.

முதன் முறையாக அவன் பேசியது எனக்கு நன்றாக புரிந்தது. ஒரு வேளை அவன் எனக்கு புரியும் வகையில் பேசினானா இல்லை எனக்கு அறிவு வளர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை.

நான் போகலாமா என்று கேட்டான்.

அடேடே என் அனுமதியெல்லாம் கேட்கிறானே. இதே பழைய ஞானியாக இருந்தால் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவானே என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது அவன் மாறவில்லை. நான் அவனுடயை சைக்கிளில் கைவத்து நின்றுக் கொண்டிருந்தேன்.

கையை எடுத்ததும் சட்டென்று ஏறி பட்டென்று மாயமானான் ஞானி.

மதி
18-11-2006, 06:04 AM
பொடிமட்டை தத்துவம் சூப்பரா இருக்கு...!

leomohan
18-11-2006, 06:36 AM
மீண்டும் ஞானி 2. பகட்டு


அன்று ஞானியை விருந்துக்கு அழைத்திருந்தேன். நன்றாக கீழே அமர்ந்து வாழை இலையில் போட்டு உணவை உண்டான். நடுவில் இரு முறை பேச முயன்றும் பதில் அளிக்க வில்லை. பிறகு கொல்லைபுறம் சென்று இலையை எங்கள் வீட்டு மாட்டுக்கு உணவாக கொடுத்துவிட்டு கை கழுவிவிட்டு மறுபடியும் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்தான்.


என்னிடம் என்ன காரியம் ஆக வேண்டும் என்று எனக்கு விருந்து அளித்தாய்? என்று நேரடியாக கேட்டான்.

காரியம் ஆக வேண்டும் என்பதால் தான் உனக்கு விருந்து அளித்தேன் என்று நினைக்கிறாயா? என்று கோபமாக கேட்டேன் நான்.

ஆம். மனிதர் காரியம் ஆக வேண்டும் என்றால் மட்டுமே யாருக்கும் சோறு போடுவர். வேண்டும் என்றால் காலையும் பிடிப்பர்.

இருக்கட்டும். ஆனால் இந்த காரியம் எனக்காக இல்லை.

அப்படியா சந்தோஷம். விஷயத்தை சொல்.

என்னை ஒரு பள்ளியின் கருத்தரங்கில் பேச அழைத்திருக்கிறார்கள். நீயும் வந்தால் உன் ஞானத்தை வளரும் பிள்ளைகளுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். நான் உன்னிடமிருந்து கற்ற விஷயங்கள் பல. அதில் சில வற்றை செயலாக்கி பயனும் கண்டேன். சில அறிவுரைகளை என்னால் பின்பற்ற முடியாத சூழ்நிலைகள்.

நல்லது. எந்த தேதி?

அடுத்த வாரம்.

ஒ நான் அடுத்த வாரம் அமெரிக்கா போகிறேன். வர முடியாதே.

ஒ நீ வெளி நாடெல்லாம் போயிருக்கிறாயா?

என்ன சந்தேகம் உனக்கு? 50 நாடுகள் போயிருக்கிறேன்.

ஒ நல்ல விஷயம். அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை. நீ என்று வரமுடியுமா அன்றே கருத்தரங்கை வைத்துக் கொள்ளலாம். எப்போது வரமுடியும் என்று சொல்?

அடுத்த மாதம் 14ம் தேதி. சரியா?

சரி. நான் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கிறேன். நீ உன் வெளிநாட்டு அனுபவங்களை சொல்லேன்.

நானே கற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை பற்றி சொல்லவா என்று கேட்டான். நானே ரொம்பத்தான் கர்வம் இவனுக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

சரி சொல்லேன்.

நான் ஒரு முறை இங்கிலாந்து செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தேன். என் அருகில் இரண்டு மனிதர். (மறுபடியும் அந்த ஞானித்தனம்). இருவரும் இலவச மதுபானம் குடிக்கும் போட்டியில் இருந்தனர் போலும். விமானப் பணிப்பெண்ணுடன் சண்டை. இன்னும் மது அளிக்க வேண்டும் என்று. அவளோ நீங்கள் அதிகம் குடித்துவிட்டீர்கள். இதற்கு மேல் வேண்டாம் என்று மன்றாடினாள். அவர்கள் கேட்கத்தயாராகவில்லை. சரியென்று இன்னொரு சுற்று மதுபானத்தை கொண்டு வந்து கொடுத்தாள். அதை குடித்த அந்த மனிதன் சில நிமிடங்களில் வாந்தி எடுத்து மூச்சு முட்டி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிட்டான்.
பிறகு அவன் சண்டையிட்ட அதே பெண் அவனுக்கு பிராணவாயு வைத்து அவன் நிலமையை சீராக்கினாள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்று என்னை கேட்டான்.

விமானத்தில் குடிக்கக் கூடாது, சரியா? என்று உற்சாகமாக கேட்டேன்.

முட்டாள். அது குழந்தைகளுக்கு கூட தெரியும்.

பிறகு?

உன் உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத விஷயங்களை வெறும் பகட்டுக்காக மட்டும் செய்யாதே. இது தான் நான் கற்றுக் கொண்ட பாடம்.

leomohan
18-11-2006, 11:47 AM
மீண்டும் ஞானி 3. பரிணாம வளர்ச்சி

சொன்ன மாதிரி 14ம் தேதி பள்ளிக்கு வந்து சேர்ந்தான். அவன் தலைமை ஆசிரியருடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிள்ளைகளுக்கு ஒரு வார்த்தை கூறினேன்.

அன்புள்ள மாணவர்களுக்கு வணக்கம். நான் என்னுடைய நண்பர் ஞானியை அழைத்து வந்திருக்கிறேன். அவர் பேசும் விதத்தை தப்பாக எடுத்துக் கொள்ளாமல் அவரிடமிருந்து ஞானத்தை மட்டும் கிரஹித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

ஞானி அரங்கத்தில் நுழைந்தான். அனைவரும் எழுந்து அவனுக்கு வணக்கம் சொல்லி அமர்ந்தார்கள். அவனும் வணக்கம் சொல்லி அமர்ந்தான்.

பிள்ளைகளில் தலைவன் எழுந்து எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் உங்கள் இருவருக்கும் எங்கள் நன்றிகள். இப்போது என்னுடம் பயிலும் மாணவர்கள் கேள்விகள் கேட்பார்கள். உங்களுடைய மேலான பதில்களை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி அமர்ந்தான்.

ஒரு மாணவன் எழுந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஐயா, மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்பதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா என்று கேட்டான்.

அவன் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் அப்படித் தோன்றலாம். ஆனால் மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. மற்ற உயிரினங்கள் போல தோன்றியவன் தான் மனிதனும்.

அப்படியென்றால் டார்வின் கூற்று தவறா.

சார்ல்ஸ் டார்வின் ஒரு முட்டாள். அவனுடயை கூற்றும் பிதற்றல் தான்.

என்ன சொல்கிறீர்கள்.

ஆம். மேலை நாடுகள் எழுதும் விஞ்ஞான கூற்றையும் வரலாறையும் படித்து பித்துக்களாக அலைகிறீர்கள். சற்றே உங்கள் அறிவையும் பயன்படுத்துங்கள்.

ஐயா நீங்கள் கூறுவது விளங்கவில்லை என்றான் அந்த மாணவன் பவ்யமாக.

தம்பி, நீ கற்றவையெல்லாம் மற்றவை. நீ பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் வெளிநாட்டு கண்டுபிடிப்புகள். இப்படி எல்லாவற்றிற்கும் வெளிநாட்டையே நம்பி இருக்கும் நீ, ஞானத்திற்கும் வெளிநாட்டை நாடுவது வருந்தத்தக்கது என்றான் ஞானி. அவன் இவ்வளவு அழகாக பேசியது எனக்கே பிடித்திருந்தது.

அனைத்து உயிரினங்களும் ஒரு சேர உலகில் வந்தன. சில உயிரினங்கள் தங்கியது. சில உயிரினங்கள் தங்கவில்லை. இன்னும் கூட முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா எனும் முட்டாள்தனமான கேள்விக்கே பதில் தேடிக் கொண்டிருக்கிறது விஞ்ஞானம்.

ஒரு ஆதாம் ஏவாளால் தான் இந்த மக்கட் பெருங்கடல் உருவானது என்றால் ஏன் கறுப்பு, மஞ்சள், வெள்ளை, மாநிற மக்கள் இருக்க வேண்டும். நீங்கள் படித்த டி என் ஏ மரபணு கூற்று என்னவாகும். இதிலிருந்தே தெரியவில்லையா, உலகில் பல இடங்களில் ஒரு சமயத்தில் பல்வேறு பகுதிகளில் மனிதனும் மற்ற உயிரினங்களும் தோன்றின. அதிலிருந்தே சந்ததிகள் வளர்ந்தன.

அறிவுக்கு அயல்நாட்டிற்கு போகாதே. உன் சான்றோர் எழுதியதையும் படி.

leomohan
18-11-2006, 11:48 AM
மீண்டும் ஞானி 4. ஞானி என்ன வாதி

இன்னொரு மாணவன் எழுந்து கேட்டான்.

நீங்கள் ஆத்திகவாதியா நாத்திகவாதியா.

ஆத்திகம் என்றால் என்ன என்று அந்த மாணவனையே திருப்பி கேட்டான் ஞானி.

ஆத்திகம் என்றால் கடவுளை நம்புவது என்று சொன்னான் அந்த மாணவன்.

இல்லை கடவுளை நம்புவதாக சொல்வது ஆத்திகம். நாத்திகம் என்றால் என்ன.

நாத்திகம் என்பது கடவுளை மறுப்பது.

மீண்டும் இல்லை. நாத்திகம் என்பது கடவுள் இருக்கிறார் என்பவர்களை எதிர்ப்பது. நான் ஆத்திகமும் இல்லை நாத்திகமும் இல்லை. நான் ஞானி. ஆத்திகம், நாத்திகம் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதற்கு மேலும் விருப்பு வெறுப்பு இல்லாத, கொலை, கற்பழிப்பு, கொள்ளை, பொய், புரட்டு இல்லாத உலகம் என்னுடயைது. என் உலகுக்கு வாருங்கள் என்றான் ஞானி.

ஏன் நீங்கள் நாத்திகம் ஆத்திகம் இரண்டும் தவறு என்று கூறுகிறீர்கள்.

ஆத்திகம் என்பது புரியாத கடவுள் எனும் ஒரு விஷயத்தை சுற்றி பொய்யான பழக்கவழக்கங்களையும் கலாச்சாரத்தையும் வளர்த்து மனிதர்களை மூடராக்கும் ஒரு விஷயம். இந்த புரியாத விஷயங்களை வைத்து மந்திரம், தந்திரம், சடங்கு, சாங்கியம், வாஸ்து, ஜோசியம், பரிகாரம் என்று இடுக்குகளை வைத்து பணம் பார்க்கும் சில பேர். இவர்கள் கடவுளை நம்புவதாக சொல்லி கோவில்களை இடிப்பவர்கள்.
நாத்திகம் என்பது கடவுளை நம்புவர்களை எதிர்த்து, பகுத்தறிவாதம் என்று சொல்லி, மத நூல்களை கொளுத்தி, கடவுள் சிலைகளை கொளுத்தி மற்றவர்கள் காலில் விழக்கூடாது என்று சொல்லி தன் காலில் மக்களை விழ வைக்கும் கூட்டம். இவர்களும் கோவில்களை இடிப்பவர்கள்.

இந்த இருவரில் நீ எந்த கூட்டத்தை சேர்ந்த நிற்ப்பாய்? இரண்டு முட்டாள்களுக்கும் இடையில் நீ நின்றால் உன்னை காப்பாற்றுவேன். ஆனால் நீ இரண்டு முட்டாள்களாக்கும் கூட்டதில் நிற்கிறாய். நான் என்ன செய்வது?

இந்த மடத்தனத்திலிருந்து வெளியே வா. மனிதத்துவம் என்று உள்ளது. அது என்ன என்று கண்டுக் கொள். பிறகு இந்த இரண்டு கூட்டங்களையும் ஓட ஓட விரட்டு.

அப்படியென்றால் நாங்கள ஞானியாவது எப்போது என்று கேட்டான் அந்த மாணவன்.

முதலில் மனிதானாக மாறுங்கள். பிறகு ஞானியாவதை பற்றி பேசலாம்.

leomohan
18-11-2006, 05:28 PM
மீண்டும் ஞானி 5. மதம்

கருத்தரங்கம் களை கட்டியிருந்தது. மாணவர்களும் உற்சாகமாக இருந்தனர். ஆசிரிய ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் கூட கருத்தரங்கில் இணைந்துவிட்டனர். கருத்தரங்கு என்பதை விட ஞானி கேள்வி-பதில்கள் நிகழ்ச்சியே நடந்து கொண்டிருந்தது.

ஒரு மாணவன் எழுந்து ஐயா, மதம் என்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டான்.

மதம் என்பதை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஒரு கற்பனை நிலையைப் பற்றி கூறுகிறேன் கேளுங்கள் என்று ஆரம்பித்தான்.

ஆஹா, ஞானியும் ஜோதியில் கலந்துவிட்டான். இத்தனை நாளாக இதுமாதிரி பொறுமையாக என் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறானா. பிள்ளைகள் என்றதும் ஞானிக்கே பொறுமை வந்துவிட்டதே என்று நினைத்தேன். அவன் பேசுவதை ரசித்தேன்.

நான் இங்கு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்கிறேன்:

மனிதன் அவன் குணப்படி சண்டையிடும் உணர்ச்சி கொண்டவன். ஒரு கற்பனை செய்து பார்ப்போமே?

உலகம் முழுவதும் இந்துக்களாக மக்கள் மாறிவிட்டால் சண்டைகள் நின்றுவிடுமா? (மதச்சண்டை)

இல்லை.

பிறகு மேல் சாதி இந்து கீழ் சாதி இந்துவுடன் சண்டையிடுவான். இல்லையா.

உலகம் முழுவதும் மேல் சாதி இந்துக்களாக ஆகிவிட்டால் சண்டைகள் நின்றுவிடுமா? (சாதிச்சண்டை)

இல்லை.

பிறகு பணக்கார மேல் சாதி இந்துக்கள் ஏழை மேல் சாதி இந்துக்களுடன் சண்டையிடுவர்.

உலகம் முழுவதும் பணக்கார மேல் சாதி இந்துக்களாக ஆகிவிட்டால் சண்டைகள் நின்றுவிடுமா? (அந்தஸ்து சண்டை)

இல்லை.

பிறகு பணக்கார மேல் சாதி இந்து தன்னுடைய நிலத்திற்காகவோ இன்னொருவருடைய பெண்ணுக்காவோ மனைவியை அபகரிக்கவோ சண்டையிடுவான்.

ஆக நிலம் நீர் பெண் சொத்து நிறம் சாதி சமயம் என்று சண்டையிட வழிகளை தேடுவது தான் மனித இனம். இதில் பகுத்தறிவுக்கு இடமே இல்லை. ஏனென்றால் பகுத்தறிவு எள் அளவும் நமக்கு இருந்தால் இன்று உலகில் பல பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

ஆக உலகத்தின் வயது ஏற ஏற முதிர்ச்சியோ அமைதியோ வருவதற்கு பதிலாக தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சண்டை, விஞ்ஞானத்தை பயன்படுத்தி அதிக அளவு இழப்பைக் கொடுக்கும் போர்கள், இதுவே நடந்துவருகின்றன்.

ஆக மக்கள் தொகைக்கு ஏற்ப நாச சக்தியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடவுளையும் மதங்களையும் மனிதன் தான் படைத்தான். அது மக்களை பிரித்து பகுத்து ஆளவே இந்த வேறுபாடுகள். இவை என்றும் மாறாது. கருப்பனும் வெளுப்பனும் இணைந்து புகைப்படத்திற்காக நிற்பார்கள். மனதால் என்றும் அவர்களை மாற்றமுடியாது. தேர்தல் வந்தால் இந்துவும் முஸ்லீமும் சேர்ந்து இஃப்தார் செய்வார்கள். ஆனால் இவர்கள் ஒன்று சேருவார்கள் என்று நினைப்பது வாதத்திற்கு மட்டுமே சரியாக இருக்கும்.


கேள்வி கேட்ட மாணவன் எழுந்து, அப்படியென்றால் இந்த சண்டைகள் நிற்காதா. அமைதியான உலகை எங்கள் சந்ததி பார்க்க முடியாதா என்று ஆதங்கத்துடன் கேட்டான்.

வரும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. எப்போது சரி தவறு என்று பிரித்தெடுக்கும் அறிவு வளர்கின்றதோ, எப்போது பொய்யை ஆதரித்து உண்மையை குழி தோண்டி புதைக்கும் பழக்கம் போகிறதோ, எப்போது பொய்யையும் புரட்டையும் அழிக்கும் ஞானம் வருகிறதோ, அப்போதே இந்த குருட்டுத்தனங்கள் விலகி அறிவொளி வீசத்தொடங்கும்.

அதுவரை என்ன செய்வது என்று கேட்டான் இன்னொரு மாணவன்.

அதுவரை காத்திருக்காமல் ஞானத்தை வளருங்கள், போலிகளை வளரவிடாமல் தடுக்க தயாராகுங்கள்.

leomohan
18-11-2006, 05:39 PM

leomohan
19-11-2006, 09:42 AM
மீண்டும் ஞானி 6. மதமாற்றம்

இன்னொரு பிள்ளை எழுந்து நின்று, ஐயா, மதமாற்றம் சரியானதா என்று கேட்டான். போட்டு தாக்குங்கடா பசங்களா என்று குஷியாகிவிட்டேன் நான்.

மதமே கூடாது என்று கூறுகிறேன் நான் என்றான் ஞானி.

அது சரி ஐயா. இன்றைய நிலையில் மதங்கள் இருக்கின்றனவே. ஆக இன்றைய சூழ்நிலையில் உங்கள் கருத்து என்ன.

மதமாற்றம் மனிதனின் பாதுகாப்பற்ற Insecurity, பயந்த நிலையையே காட்டுகிறது. மனிதன் தான் தனியாக இருக்க விரும்பாமல் தன் கூட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளவே இந்த முயற்சி. ஆனால் நான் முன்பு கூறியது போல மனிதனால் கூட்டமாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க முடியாது.

முதலில் உலகில் இருக்கும் மதங்களை பாருங்கள். எல்லா மதங்களிலும் ஆயிரமாயிரம் பிரிவுகள். தனி கோவில்கள், தனி கூட்டங்கள், தனி சின்னங்கள், குறியீடுகள், வழிபாட்டு முறைகள். இவை மதங்களில் இருக்கும் வேறுபாடுகள் அல்ல. ஒரு மதத்தினுள் இருக்கும் வேறுபாடுகள். முதலில் ஒவ்வொரு மதங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகள் மறந்து ஒரு கிளையாக மாறி நிற்கட்டும். பிறகு மற்ற மதங்கள் தவறு என்றும் தம் மதம் சரியென்றும் மற்ற மதத்தினரை தம் மதத்தில் சேருமாறும் அழைக்கட்டும்.

உனக்கு பிற மதத்தின் கோட்பாடுகள் நன்றாக இருந்தால் அவற்றை உன் மதத்தில் இருந்துக்கொண்டே பின்பற்றலாம். அதற்கு அந்த மதத்திற்கு மாறவேண்டும் எனும் அவசியம் இல்லை. மேலும் உலகில் அனைத்து மதங்களிலும் நல்ல கோட்பாடுகள் உள்ளன. நீ உன் மதத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை பின் பற்றுகிறாயா முதலில்?

மதம் மாற்றம் என்பது ஒரு கடவுளின் மீது நம்பிக்கை போய் இன்னொரு கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் ஏற்படுகிறது. அப்படியென்றால் நீ மாறும் மதத்தை கடைபிடிப்பவர் அனைவரும் கஷ்டமே இல்லாமல் சுகமாக இருக்கிறார்களா?

சிலர் காசுக்காக மாறுகிறார்கள். அவர்களைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. மதத்தை வியாபாரமாக்கும் வியாபாரிகள்.

சிலர் மன நிம்மதிக்காக மாறுகிறார்கள். அவர்களை என்னவென்று சொல்ல.

சிலருடைய மதத்தில், ஒருவனை உன் மதத்திற்கு மாற்றினால் உனக்கு சொர்க்கம் என்று கூறுகிறார்கள். அதாவது இது போல ஒருவர் சொர்க்கத்திற்கு சென்று இவரிடம் வந்து கூறுகிறார், ஐயா, நான் ஒருவரை என் மதத்திற்கு மாற்றியதால் நான் சொர்க்த்தில் இருக்கிறேன், நீயும் அப்படி செய்தால் சொர்க்கத்திற்கு வருவாய் என்று. வெறும் பிதற்றல் இல்லையா?

ஒரு மதத்தில் பிறப்பது நீ கேட்டு வருவதல்ல. எப்படி ஒரு தாயிடம் பிறக்க வேண்டும் என்று நீ கேட்பதில்லையோ அது போலதான். ஆக ஒரு தாயிடம் பிறந்த பிறகு, எனக்கு இந்த தாய் வேண்டாம், வேறு தாயிடம் செல்கிறேன் என்று சொல்வாயா.

மதம் என்பது தாய் போல. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதை மாற்றாதே. மற்ற மதத்தை தூற்றாதே. அவைகளையும் போற்று.

மதம் எனும் மதம் பிடித்து அலையாதே.

leomohan
19-11-2006, 09:44 AM
மீண்டும் ஞானி 7. மதமாற்றம்

இன்னொரு பிள்ளை எழுந்து நின்று, ஐயா, மதமாற்றம் சரியானதா என்று கேட்டான். போட்டு தாக்குங்கடா பசங்களா என்று குஷியாகிவிட்டேன் நான்.

மதமே கூடாது என்று கூறுகிறேன் நான் என்றான் ஞானி.

அது சரி ஐயா. இன்றைய நிலையில் மதங்கள் இருக்கின்றனவே. ஆக இன்றைய சூழ்நிலையில் உங்கள் கருத்து என்ன.

மதமாற்றம் மனிதனின் பாதுகாப்பற்ற Insecurity, பயந்த நிலையையே காட்டுகிறது. மனிதன் தான் தனியாக இருக்க விரும்பாமல் தன் கூட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளவே இந்த முயற்சி. ஆனால் நான் முன்பு கூறியது போல மனிதனால் கூட்டமாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க முடியாது.

முதலில் உலகில் இருக்கும் மதங்களை பாருங்கள். எல்லா மதங்களிலும் ஆயிரமாயிரம் பிரிவுகள். தனி கோவில்கள், தனி கூட்டங்கள், தனி சின்னங்கள், குறியீடுகள், வழிபாட்டு முறைகள். இவை மதங்களில் இருக்கும் வேறுபாடுகள் அல்ல. ஒரு மதத்தினுள் இருக்கும் வேறுபாடுகள். முதலில் ஒவ்வொரு மதங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகள் மறந்து ஒரு கிளையாக மாறி நிற்கட்டும். பிறகு மற்ற மதங்கள் தவறு என்றும் தம் மதம் சரியென்றும் மற்ற மதத்தினரை தம் மதத்தில் சேருமாறும் அழைக்கட்டும்.

உனக்கு பிற மதத்தின் கோட்பாடுகள் நன்றாக இருந்தால் அவற்றை உன் மதத்தில் இருந்துக்கொண்டே பின்பற்றலாம். அதற்கு அந்த மதத்திற்கு மாறவேண்டும் எனும் அவசியம் இல்லை. மேலும் உலகில் அனைத்து மதங்களிலும் நல்ல கோட்பாடுகள் உள்ளன. நீ உன் மதத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை பின் பற்றுகிறாயா முதலில்?

மதம் மாற்றம் என்பது ஒரு கடவுளின் மீது நம்பிக்கை போய் இன்னொரு கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் ஏற்படுகிறது. அப்படியென்றால் நீ மாறும் மதத்தை கடைபிடிப்பவர் அனைவரும் கஷ்டமே இல்லாமல் சுகமாக இருக்கிறார்களா?

சிலர் காசுக்காக மாறுகிறார்கள். அவர்களைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. மதத்தை வியாபாரமாக்கும் வியாபாரிகள்.

சிலர் மன நிம்மதிக்காக மாறுகிறார்கள். அவர்களை என்னவென்று சொல்ல.

சிலருடைய மதத்தில், ஒருவனை உன் மதத்திற்கு மாற்றினால் உனக்கு சொர்க்கம் என்று கூறுகிறார்கள். அதாவது இது போல ஒருவர் சொர்க்கத்திற்கு சென்று இவரிடம் வந்து கூறுகிறார், ஐயா, நான் ஒருவரை என் மதத்திற்கு மாற்றியதால் நான் சொர்க்த்தில் இருக்கிறேன், நீயும் அப்படி செய்தால் சொர்க்கத்திற்கு வருவாய் என்று. வெறும் பிதற்றல் இல்லையா?

ஒரு மதத்தில் பிறப்பது நீ கேட்டு வருவதல்ல. எப்படி ஒரு தாயிடம் பிறக்க வேண்டும் என்று நீ கேட்பதில்லையோ அது போலதான். ஆக ஒரு தாயிடம் பிறந்த பிறகு, எனக்கு இந்த தாய் வேண்டாம், வேறு தாயிடம் செல்கிறேன் என்று சொல்வாயா.

மதம் என்பது தாய் போல. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதை மாற்றாதே. மற்ற மதத்தை தூற்றாதே. அவைகளையும் போற்று.

மதம் எனும் மதம் பிடித்து அலையாதே.

leomohan
19-11-2006, 10:47 AM
மீண்டும் ஞானி 8. காஷ்மீர்

ஐயா, இதுவரை அனைவரும் பொதுவான விஷயங்களையே கேட்டார்கள், நான் இன்றைய இந்தியாவை உலக்கும் ஒரு பிரச்சனையை பற்றி கேட்கலாமா என்று கேட்டான் ஒரு மாணவன்.

கேள் என்றான் ஞானி.

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு உண்டா?

ஆஹா, சரியான கேள்வி என்று நினைத்தேன். அனைவரும் ஆர்வமாக ஞானியை பார்த்தார்கள்.

தீர்வு உண்டு. லஞ்சைத்தை ஒழிக்க வேண்டும் என்றான் ஞானி.

என்ன என்று அந்த மாணவன் குழப்பத்துடன் கேட்டதுடன், அனைவரும் குழப்பத்துடன் அவனை பார்த்தார்கள்.

ராணுவம் தான் ஒரு நாட்டில் தலை சிறந்த ஊழல் இடமாக விளங்குகிறது. தினமும் பல கோடி செலவு செய்து எல்லைகளை பாதுகாப்பதாக சொல்வதெல்லாம் வெறும் பேத்தல். ஐந்து குண்டு வெடித்து விட்டு ஆயிரம் குண்டு வெடித்ததாக சொல்லி கணக்கு எழுதிறார்கள். இறந்த ராணுவ வீரனின் சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நம் ராணுவத்தின் முதல் நண்பன் பாகிஸ்தானின் ராணுவம் தான். இரண்டு பேரும் இத்திருட்டில் கூட்டு. இது ஒரு எல்லை பிரச்சனையோ மதப் பிரச்சனையோ இல்லை. போர் முடிந்து சமாதானம் வந்தால் பொய் கணக்கு எழுதி பணம் பார்க்க முடியுமா.

எப்படி ஒரு சாதாரண குடி மகன் எல்லையில் எத்தனை குண்டு வெடித்தது என்று கணக்கு பார்க்க முடியாதோ அது போலத்தான் வரி கட்டும் நீங்கள் அரசாங்கம் செலவு செய்வதில் எத்தனை உண்மை எத்தனை பொய் என்று அறியமுடியாமல் கோடான கோடி பணத்தை தினமும் இழக்கின்றீர்கள்.

கார்கில் என்று ஒன்று வராவிட்டால் வருடாவருடம் பாதுக்காப்புகாக நிதி திட்டத்திலிருந்து அதிக பணம் கேட்க முடியுமா? போர்கள் குடிமக்களை பயத்துடன் இருக்க உதவுகின்றன. போர்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க ஒவ்வொரு நாட்டு அரசியல்வாதிகளும் செய்யும் நாடகம்.

Wars are nothing but well rehearsed dramas by the politicans and the army to ensure that people remain scared, and are always under pressure of wars. As security budgets are never questioned, people in-between end-up in making hell a lot of money.

சுருங்கச் சொன்னால் லஞ்ச ஊழலை ஒழித்தால் காஷ்மீர் பிரச்சனை தீரும். இரண்டு நாடுகளிலும் அமைதி நிலவும். சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கும் மக்களுக்கு சோறு கிடைக்கும். மலம் கழிக்கும் இடங்களை கூட வெள்ளியாலும் தங்கத்தாலும் செய்து வைக்க எண்ணும் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கொட்டம் அடங்கும். அடங்க வேண்டும்.

leomohan
19-11-2006, 03:49 PM
ஞானியின் தத்துவக்கதைகள் வாதவிவாதங்களை கிளப்பி உள்ளன. அதனால் ஞானி விக்கிஸ்பேஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
http://nyani.wikispaces.com (http://nyani.wikispaces.com/)

யார்வேண்டுமானாலும் இதை மாற்றலாம், தொகுக்கலாம். இது சுவாரஸ்யமான, காரசாரமான தலைப்பு என்பதாலும், புரட்சிகரமான வித்தியாசமான பார்வைகள் கொண்ட கருத்துக்கள் என்பதாலும், அனைவருடைய கருத்தையும் விரும்புவதாலும் இந்த விக்கிஸ்பேஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து விவாதங்கள் கண்ணியமான முறையில் இருக்கட்டும். சபைக்கு உரிய மொழி மட்டுமே பயன்படுத்துங்கள். இதை ஒரு நல்ல விவாத களமாக மாற்ற உங்கள் ஆதரவு தேவை. நன்றி.

இளசு
20-11-2006, 08:12 PM
பாராட்டுகள் மோகன்..

உங்கள் ஆழ்மனதை ஒரு பாத்திரமாக்கி உலவ விட்ட உத்தி அருமை.

( மன்றத்தில் சின்ன தம்பி - பெரிய தம்பி என சில சிறிய பதிவுகள்
இதே பாணியில் தந்திருக்கிறேன்.. அவை சின்ன பிரசினைகளை அணுகியவை..)

பல பெரிய விசயங்களை அணுகிய நுணுக்கத்துக் பாராட்டுகள்.


ஆத்திக - நாத்திக விளக்கத்தை முழுமையாய் ஒன்றி ரசித்தேன்.

படைப்பு விளக்கத்தில் குழம்பினேன்.

நேரம் இருந்தால் நிறைய பேசலாம்.... நேரம் வரட்டும்..


பாராட்டுகள்.. ஊக்கங்கள்.. தொடருங்கள்..!

leomohan
21-11-2006, 02:55 AM
அவசியம் இளசு. உங்கள் பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

leomohan
04-12-2006, 03:22 PM
மீண்டும் ஞானி - 9. ஆசிரியர்

மாணவர்கள் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். நிறைய விஷயங்களை நானும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து.

15 நிமிடங்கள் இடைவெளி கொடுத்தனர். நானும் ஞானியும் வெளியே தேனீர் எடுத்துக் கொண்டு வந்து நின்றோம். அப்போது ஒரு ஆசிரியர் வெளியே வந்தார்.

அரங்கத்தின் அருகில் இருந்த இடைவெளியி்ல் வந்து நின்று ஒரு சுருட்டை எடுத்து புகைத்தார். ஞானியை பார்த்து ஒரு நட்பு புன்னகை வீசிவிட்டு புகைப்பெட்டியை நீட்டி, சிகரெட் என்றார்.

நீ ஆசிரியன் தானே என்றான் ஞானி காட்டமாக.

ஆம்.

நீயே பள்ளி வளாகத்தி்ல் புகைப்பிடித்தால் மற்றவர்களுக்கு என்ன கற்றுத் தருவாய்.

அந்த ஆசிரியர் அதிர்ந்து போனார். இதை சற்றும் எதிர்பார்க்கவி்ல்லை.

மாணவர்கள் என்னை பார்த்தா புகைப்பிடிக்க கற்றுக் கொள்கிறார்கள். பள்ளியை விட்டு வெளியே போன பிறகு பல பேர்களை சந்திக்கிறார்கள். அங்கிருந்து புகைபிடிக்க கற்றுக் கொண்டால் அதற்கும் நான் தான் காரணமா என்றார் தன் மீதுள்ள குற்ற கறையை அகற்றுபவர் போல்.

குழந்தை வளரும் போது தன் தந்தையை முன்னோடியாக பார்க்கிறான். பிறகு தனது ஆசிரியனை முன்னோடியாக பார்க்கிறான். கல்லூரி முடியும் வரையில் அவன் யாராவது ஒரு ஆசிரியரையோ பேராசிரியரையோ வாழ்கையின் மைல்கல் போல் பாவிக்கிறான். தந்தையிடமும் ஆசிரியரிடும் இருக்கும் பழக்கங்கள் நல்லவையா கெட்டவையா என்பதை தெரிந்துக் கொள்ளும் பக்குவம் வரும் முன்பே அந்த பழக்கங்கள் அவனுக்கு பிடித்து விடுகின்றன்.

நீயும் இவர்கள் ஆசான். நீ வீட்டிலும் ஒரு தந்தை. ஆசிரியர் அனைவரும் பாடம் கற்பிப்பவர் அல்லர்.

போ, முதலில் பாடம் கற்பிக்கும் அளவுக்கு உனக்கு தகுதிகள் இருக்கிறதா என்று யோசி. தவறுகளுக்கு சப்பை கட்டும் பழக்கத்தை விடுத்து ஒரு சமுதாயத்திற்கே முன்னோடியாக இருக்கும் தகுதி உன்னிடத்தில் இருக்கிறதா என்று பார். பிறகு வா என்னிடம்.

நான் அதிர்ந்து நின்றேன். அந்த ஆசிரியரின் உடல் நடுங்குவதை பார்த்தேன். அவர் உடல் முழுக்க வியர்த்திருந்தது.

அரங்கத்திலிருந்து மீண்டும் அழைப்பு வந்ததால் நானும் ஞானியும் உள்ளே நுழைந்தோம்.

leomohan
04-12-2006, 03:30 PM
மீண்டும் ஞானி 10. பொது எது

ஒரு மாணவன் எழுந்து கேட்ட கேள்வி மிகவும் நகைச்சுவையாக இருந்தது.

ஞானி, பொது இடங்களான திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் கழிப்பிடங்கள் அசுத்தமாக இருக்கின்றனவே. பல இடங்களில் அசிங்கமான படங்களும் சொற்களும் ஏன் எழுதுகின்றனர். இதற்கு என்ன காரணம்.

ஒரு ஆசிரியர் அந்த மாணவனை இடைமறுத்தி, இது என்ன கேள்வி என்று கேட்டார்.

ஞானி, அவரை மீண்டும் இடைமறுத்தி, மாணவன் கேட்ட கேள்வியி்ல் தப்பேதும் இல்லை என்று சொல்லிக் விட்டு என்னிடம் குறைந்த தொனியில் ஏதோ சொன்னான். சரியென்று வெளியே சென்றேன். பிறகு அவன் பேசியதை பிறர் சொல்லக் கேட்டு இங்கு எழுதுகிறேன்.

ஞானி மாணவனை பார்த்து பேசினான்.

மனிதன் வக்கிர புத்திகளை கொண்டவன். மனிதன் தனியாக இருக்கும் போது தான் அவன் மிக கேவலமாக நடந்துக் கொள்கிறான். இதற்கு காரணம் தன்னை யாரும் பார்க்க வில்லை என்பதனால். அவனுடைய வக்கிரமான புத்திகள் தான் தவறான உறவுகளும், பழக்க வழக்கங்களும், ஆபாச புத்தகங்கள், திரைப்படங்கள் என்ற வெளிப்பாடாக வெளிவருகின்றன். பல சமயம் இது போன்ற வக்கிரங்களை அவன் வெளிபடுத்த விரும்பினாலும் சமூகத்தின் கட்டமைப்பு அவனை தன் சொந்த பெயரில் இவற்றை செய்ய தடுக்கிறது. பல முறை அவன் பெயரில்லாமல் இந்த காரியங்களை செய்கிறான்.

மனிதனின் மனதில் அசிகங்கள் தான் அதிகம். அந்த அசிகங்களை அவன் நேரடியாக சம்பந்தப்படாத இடங்களில் அவிழ்த்து விடுகிறான். உதாரணமாக உன் வீடு அசிங்கமாக இருந்தால் உன் வீட்டில் உள்ளவர்கள் தான் அதற்கு பொறுப்பு. அதனால் உன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறாய். ஆனால் உன் தெரு குப்பை கூளமாக இருந்தால் நான் இல்லை நான் இல்லை என்று யாரும் பொறுப்பேற்பதை தவிர்ப்பீர்கள்.

இப்படி பேசிவிட்டு எதிரில் இருந்த கண்ணாடி கோப்பையிலிருந்த தண்ணீரை எடுத்து மெதுவாக அருந்தினான். மிகவும் மெதுவாக அருந்தினான். அந்த நேரத்தில் அவன் சொன்னபடியே அனைத்து மாணவர்களுக்கும் நான் கடையிலிருந்து வாங்கி வந்த சாக்லெட்டுகளை கொடுத்துவிட்டு மீண்டும் மேடைக்கு சென்று அமர்ந்தேன்.

என்னை பார்த்த ஞானி, நீயும் எடுத்துக் கொள் நண்பா என்றான்.அவன் என்னை நண்பா என்று அழைத்தது எனக்கு நோபல் பரிசு கிடைத்தது போல் இருந்தது.

நான் ஒரு சாக்லெட் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அவனை பார்த்தேன்.

ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு அரங்கத்தை பார்த்து பேசினான்.

அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து வெளியே செல்லுங்கள் என்றான். அனைவரும் அரங்கத்தின் வாயிலுக்கு சென்றனர்.

ஞானி எழுந்து, இங்கிருக்கும் நாற்காலிகளின் கீழ் இப்போது கொடுத்த சாக்லெட்டின் காகித உறை பார்க்கிறீர்களா என்றான். அனைவரும் வெட்கி தலை குனிந்தனர்.

பெரும்பாண்மையான நாற்காலிகளின் கீழ் காகிதங்கள் கீழே கிடைத்தன.

அனைவரையும் மீண்டும் வந்து அமரச் சொன்னான்.

கேள்வி கேட்ட மாணவனை எழுந்து நிற்கச் சொன்னான். என்ன புரிந்தது உனக்கு என்று கேட்டான்.

மாணவன், அனைவரும் தங்கள் இனிப்புகளை திறந்து தின்றுவிட்டு காதித உறைகளை கீழே வீசிவிட்டார்கள் என்றான்.

ஹா ஹா, அது தான் இல்லை தம்பி. இவர்கள் யாரும் அவரவர் நாற்காலிகளின் கீழே வீசவில்லை. தன்னுடைய குப்பை பிறருடைய நாற்காலியின் கீழ் வீசியிருக்கினர். இது தான் நீ கேட்ட கேள்விக்கு பதில்.

என்னை எழுந்து நிற்கச் சொன்னான். சட்டென்று என் சட்டைப் பையி்ல் கையை விட்டான். நான் வெளியே செல்லும் போது போடலாம் என்று எடுத்து வைத்த சாக்லெட் ராப்பரை எடுத்தான். அரங்கத்துக்கு காட்டினான்.

இவன் மனிதன். ஞானியாக மாறிக் கொண்டிருக்கும் மனிதன். குப்பையை இவன் இங்கு வீசியிருந்தாலும் இவன் மீது நீங்கள் கொண்ட மதிப்பு மாறியிருக்காது. ஆனால் சமூக சிந்தனையுடன் இதை குப்பைத் தொட்டியில் வீச எடுத்து வைத்திருக்கிறான்.

உன் வயிற்றில் நீ மலம் தக்கவைத்து பிறகு கழிக்கிறாய் அல்லவா. அது போல உன் குப்பைகளையும் கழிக்க வேண்டிய இடத்தில் கழி.

அது மனத்தில் உள்ள குப்பைக்கும் பொருந்தும் என்றான். அரங்கத்தில் கைத்தட்டல் 5 நிமிடம் தொடர்ந்த ஒலித்தது.

pradeepkt
05-12-2006, 03:49 AM
ஞானி நெறய நல்ல விஷயங்களை சொல்றாரே... நல்லது மோகன். ஞானியின் ஆர்ப்பாட்டங்கள் தொடரட்டும்.

leomohan
05-12-2006, 04:44 AM
ஞானி நெறய நல்ல விஷயங்களை சொல்றாரே... நல்லது மோகன். ஞானியின் ஆர்ப்பாட்டங்கள் தொடரட்டும்.

நன்றி ப்ரதீப்.

leomohan
08-12-2006, 04:15 PM
மீண்டும் ஞானி 11. பழையது எது

ஒரு மாணவன் எழுந்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு சரியான விளக்கம் என்ன? என்று கேட்டான்.

ஞானி உடனே பதில் சொல்லாமல் ஒரு நிமிடம் மௌனமானான்.
பிறகு மெதுவாக எனக்கு தெரியாது என்றான்.

என்ன ஞானிக்கே தெரியாதா என்று ஆச்சர்யப்பட்டேன். பிறகு குதூகலம் அடைந்தேன். அப்பாடா ஞானிக்கும் தெரியாது விஷயங்கள் இருக்கிறது என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஆனால் என்னுடைய சந்தோஷம் சில நிமிடங்கள் தான் நீடித்தது.

மாணவன் என்ன என்று கேட்டான், என்னுடைய அதே ஆச்சர்யத்துடன்.

ஆம். மனிதன் எதை புரிந்துக் கொண்டான் என்று எனக்கு தெரியாது. பழையன வற்றை எதிர்ப்பதும் பழையன தொடர்ந்தால் அவர்கள் முட்டாள்கள் என்றும் மனிதன் நினைக்கிறான்.

வீட்டில் நகம் வெட்டினால் தரித்தரம் ஏற்படும் என்று முன்னோர்கள் சொன்னார்கள். அதை மூடநம்பிக்கை என்கிறார்கள் பகுத்தறிவு வியாதிகள்.

ஆராயமால் பழைய பழக்கவழக்கங்களை முட்டாள்தனம் என்பது நம்முடைய அறிவின் சிறுமையை காட்டுகிறது.

உன்னுடயை வயதில் நகக் கண்களின் நடுவில் உள்ள அழுக்கு உன் வயிற்றுக் சென்று உபாதைகள் ஏற்படுத்தலாம் என்று சொன்னால் உனக்கு புரியுமா. அதனால் தான் பெரியவர்கள் அப்படி சொன்னார்கள். மேலும் வீட்டில் நகம் வெட்டினால் கண்ட இடங்களில் விழுந்து உணவு பதார்த்தங்களுடன் கலந்துவிடும் என்பதால்.

6 மணிக்கு மேல் பெண்கள் தலைவாரினால் லட்சுமி வீட்டுக்கு வரமாட்டாள் என்பார்கள். அதற்கு அது தான் அர்த்தமா. 6 மணிக்கு மேல் தலைவாரினால் மயிற்கால்கள் கண்ட இடங்களில் விழும். அதனால் சுகாதாரம் கெடும். பகலிலேயே கண்ணுக்கு படாத முடிகள் இரவில் கிடைக்குமா?

இது போலவே பூனை குறுக்கவருவதற்கும் மூன்று பேராக சென்றால் காரியம் நடக்காதென்பதற்கும் வடக்கு பக்கம் தலைவைத்து படுத்தால் யமனிடம் செல்வீர்கள் என்பதற்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கும். அதை உன் அறிவு கொண்டு ஆராய்ந்து அவை சரி தவறு என்று சொன்னால் அதை ஏற்கலாம். அதைப்பற்றி விவாதிக்கலாம்.

அதைவிடுத்து பழையன எதுவாக இருந்தாலும் எதிர்ப்பது என்பது வேடிக்கையாக இருக்கிறது. காரண காரியங்கள் இல்லாமல் ஒரு பழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளா வர இயலுமா. அதை நீ யோசிக்க வேண்டாமா.

பழைய பழக்க வழக்கங்களை எதேச்சையாக மூட நம்பிக்கை என்று சொல்வது நீ உன் தந்தை முட்டாள், தாத்தா முட்டாள் கொள்ளு தாத்தா முட்டாள் என்று சொல்வது போல் உள்ளது. நீ முட்டாள்களின் பரம்பரையில் வந்தவன் என்பது சொல்லிக் கொள்ள உனக்கு பெருமையாக இருந்தால் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.

பகுத்தறிவாதி என்று சொல்லிக் கொண்டு நேற்றைய மனிதன் செய்ததை இன்றைய மனிதன் எதிர்த்தான் என்றால் நாளைய மனிதன் இன்றைய மனிதன் செய்வதை மூடநம்பிக்கை என்றும் முட்டாள்தனம் என்றும் சொல்வான். ஏற்பாயா நீ?

இளசு
08-12-2006, 08:26 PM
அன்புள்ள மோகன்,

ஞானியை இன்னும் பேச விடுங்கள்.. பாராட்டுகள்!

ஆசிரியர்களின் தாக்கம், குப்பை - மனக்குப்பை உள்பட பொருத்தமான இடத்தில் கழிப்பது பற்றிய அலசல்கள் அருமை.

சில ' பழையன' - காரணகாரியங்களுடன் நிலைத்திருப்பது உண்மையே.

ஆனால் பூனை வந்தால் மீண்டும் உள்ளே வந்து தண்ணீர் குடிப்பது, விதவை வந்தால் பயணத்தைத் தள்ளுவது - என தினசரி வாழ்க்கையில் பல பழையனவற்றை அதீதமாய் பாதிக்கவிட்டுவிட்டோம் என்பது என் கருத்து.

பழையனவற்றை பகுத்தறிந்து கடைப்பிடிக்கத் தவறிவிட்டோம்..

aren
09-12-2006, 04:10 AM
ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் "அருமை".

ஒவ்வொரு பதிவும் சாட்டையால் அடிப்பது போலிருக்கிறது. இருக்கையில் சாய்ந்துகொண்டு படித்துக்கொண்டிருப்பவர்களை எழுந்து உட்கார வைக்கும் பதிவு இது. தொடருங்கள்.

அழகாக எழுதுகிறீர்கள். இன்னும் வேண்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

leomohan
09-12-2006, 05:10 AM
அன்புள்ள மோகன்,

ஞானியை இன்னும் பேச விடுங்கள்.. பாராட்டுகள்!

ஆசிரியர்களின் தாக்கம், குப்பை - மனக்குப்பை உள்பட பொருத்தமான இடத்தில் கழிப்பது பற்றிய அலசல்கள் அருமை.

சில ' பழையன' - காரணகாரியங்களுடன் நிலைத்திருப்பது உண்மையே.

ஆனால் பூனை வந்தால் மீண்டும் உள்ளே வந்து தண்ணீர் குடிப்பது, விதவை வந்தால் பயணத்தைத் தள்ளுவது - என தினசரி வாழ்க்கையில் பல பழையனவற்றை அதீதமாய் பாதிக்கவிட்டுவிட்டோம் என்பது என் கருத்து.

பழையனவற்றை பகுத்தறிந்து கடைப்பிடிக்கத் தவறிவிட்டோம்..

நன்றி.

ஆம். இளசு. உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். பழையது அனைத்தும் முட்டாள்தனமும் அல்ல. பழையது அனைத்தும் புத்திசாலித்தனமும் அல்ல. இதை வைத்து தான் அடுத்து கட்டுரை கூட்டலும் கழித்தலும்.

leomohan
09-12-2006, 05:13 AM
ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் "அருமை".

ஒவ்வொரு பதிவும் சாட்டையால் அடிப்பது போலிருக்கிறது. இருக்கையில் சாய்ந்துகொண்டு படித்துக்கொண்டிருப்பவர்களை எழுந்து உட்கார வைக்கும் பதிவு இது. தொடருங்கள்.

அழகாக எழுதுகிறீர்கள். இன்னும் வேண்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்


நன்றி ஆரென்.

leomohan
09-12-2006, 05:53 AM
ஒரு மாணவன் எழுந்து ஞானியை நோக்கி பழைய பழக்கவழக்கங்களையும் கோட்பாடுகளையும் எதிர்ப்பது தவறு என்கிறீர்கள். அப்படியென்றால் எல்லா பழைய கருத்துக்களும் சரியா என்று கேட்டான்.

நான் கேட்க வேண்டிய கேள்வி என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

எல்லா பழைய கோட்பாடுகளும் சரியல்ல என்றான் ஞானி.

எப்படி அதை நாம் அறிவது என்று மீண்டும் கேட்டான் ஞானி.

தம்பி, பழைய கருத்துக்கள் என்னென்ன என்று பட்டியல் இட்டு எது சரி எது தவறு என்று என் விளக்கம் கேட்க வேண்டிய அவசியமே வேண்டாம் உனக்கு. நீயே அறிந்துக் கொள்ள ஒரு சுலபமான வழி கூறுகிறேன், கேள்.

- உன்னுடைய மனதையும் உடலையும் நேரடியாக பாதிக்கும் முந்தைய பழக்கங்களை விட்டுவிடு.
- மற்றவரின் மனதையும் உடலையும் நோகடிக்கும் எந்த கோட்பாடுகளையும் காற்றில் விடு.
- ஒவ்வொரு பழக்கவழக்கமும் எந்த காலத்தில் தோன்றியது, அது வர சூழல் என்ன, அதே சூழல் இப்போதும் இருக்கிறதா, அப்படி அதே சூழல் இப்போது இல்லையென்றால், அந்த பழக்கம் விடப்படவேண்டிய ஒன்று தான்.

மனிதன் எதை கழிக்கவேண்டும் எதை கூட்டவேண்டும் என்று அறியாமல் நல்லவற்றை காற்றில் விட்டும் தீயவற்றை கொண்டாடியும் வருகிறான். முன்னோர் கூறியதை மறுத்தால் தான் நீ புதிய சந்ததி என்று எண்ணாதே. அது போல முன்னோர் கூறியதை நீ அப்படியே ஏற்காதே.

உதாரணமாக, 20 வருடங்களுக்கு முன் என் வீட்டில் இறைவன் வந்தருளினார். இந்த தபால் அட்டையை 7 பேருக்கு அனுப்பினால் உன் வீட்டில் நல்லது நடக்கும். இல்லையென்றால் உன் வீடு எரிந்து விடும் என்ற எழுதி அனுப்பினார்கள் பித்தர்கள். 10 வருடங்களுக்கு முன் இதே விஷயத்தை மின்னஞ்சல் மூலம் இமெயில் எழுதி அனுப்பினார்கள். இப்போது இதே விஷயத்தை குறுந்தகவல் எஸ்எம்எஸ் மூலம் அனுப்புகிறார்கள். ஆக விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் ஞானம் வளர்க்கவில்லை.

முன்பு தபால்துறைக்கும், பிறகு இணைய சேவை நிறுவனத்திற்கும், இப்போது செல் சேவை நிறுவனத்திற்கும் தான் காசு சேர்க்கிறதே தவிர யாருக்கும் இதனால் லாபமில்லை.

தபால் அட்டை எழுதினாலே பணமும் நல்ல உடலும் கிடைக்கும் என்றால் அனைவரும் இதையே செய்யலாமே. இது ஒரு மூட நம்பிக்கை. இதை எப்படி நாம் அறிவது. இதை நாம் ஒரு தெய்வ நம்பிக்கை உள்ளவருக்கு எழுதினால் அவர் அதை வேறு வழியின்றி பின்பற்ற வேண்டிவரும். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் அல்லவா. அதனால் இதை நீ செய்யாதே.

இது போலவே அனைவரும் கைகளில் பல நிற கற்கள் அணிந்தால் சிறப்பாக ஆகலாம் என்று அணிந்து வருகிறார்கள். இவர்களை பார்த்து நான் கேட்பது இது தான். ஏன் கற்களை அணிந்துக் கொண்டு வேலைக்கு வருகிறீர்கள். வீட்டிலே அமர்ந்து நல்ல காலம் எதிர்பார்ப்பது தானே.

ஆக எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து உன் மனம் தெளிவாகும்படி நடந்துக் கொள். உன் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடு. ஞானம் உள்ள சமுதாயத்தை உருவாக்கு.

நம்பிகோபாலன்
21-12-2006, 09:53 PM
அருமை

நம்பிகோபாலன்
21-12-2006, 09:56 PM
ஞானி கருத்துக்கள் அருமை...சந்திக்க விரும்புகிறேன்

leomohan
21-12-2006, 09:58 PM
ஞானி கருத்துக்கள் அருமை...சந்திக்க விரும்புகிறேன்

எந்த ஊரில் இருக்கீங்க. ஞானியை அனுப்பி விடறேன். :)

leomohan
21-12-2006, 09:59 PM
அருமை

ஐயோ இது மு.மேத்தா பதிப்புக்கு போகவேண்டியதுங்க.

நம்பிகோபாலன்
21-12-2006, 09:59 PM
சென்னை

நம்பிகோபாலன்
21-12-2006, 10:00 PM
தவறுதான் மன்னிக்க

leomohan
21-12-2006, 10:02 PM
சென்னை

அப்ப ஜனவரியில சந்திக்கலாம். ஞானியை என்னோடு அழைத்துவருகிறேன். ப்ரதீப் பெரிய மாநாடு இல்ல கூட்டப்போறாரு. மீரா வேற ட்ரீட் கேட்டிருக்காங்க. :)

leomohan
21-12-2006, 10:03 PM
தவறுதான் மன்னிக்க

அட பரவாயில்லைங்க. சும்மா தமாஷூ தான்.

நேரம் கிடைத்தால் மற்ற ஞானி கட்டுரைகளையும் படித்து கருத்து கூறுங்கள்.

உங்களுக்கு இணையத்தில் அதிக நேரம் இருக்க முடியாவிட்டால் மின்புத்தகங்களை இங்கு ஏற்றியிருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்.


http://www.esnips.com/web/leomohan

நம்பிகோபாலன்
21-12-2006, 10:05 PM
எனக்கும் சொல்லுங்க கட்டாயம் பங்கேற்க ஆசைபடுகிறேன்

நம்பிகோபாலன்
21-12-2006, 10:06 PM
நன்றி நண்பா

leomohan
21-12-2006, 10:09 PM
எனக்கும் சொல்லுங்க கட்டாயம் பங்கேற்க ஆசைபடுகிறேன்

அவசியம். அனைத்து தமிழக கர்நாடக நண்பர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்.

leomohan
22-12-2006, 10:11 AM
மீண்டும் ஞானி 13. வித்தியாசமான ஞானி

அன்று வீட்டில் பிரச்சனை. சரி ஞானியை போய் பார்க்கலாம் என்று பலரிடமும் விசாரித்து கொண்டு அவன் வீட்டை சென்றடைந்தேன். பெரிய வீடு. வாசலில் சிவப்பு கலர் மாருதி கார். ஞானிக்கு நல்ல வசதிதான் போல என்று நினைத்து உள்ளே சென்றேன்.

பெரிய அறையில் நிறைய புத்தகங்கள். அழகாக மொழி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நிறைய குறுந்தட்டுகள், ஒலி நாடாக்கள், ஒளி நாடாக்கள் என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெண் வாசமே இல்லை. ஞானி திருமணமாகாதவனோ.

ஒரு மேசையில் நிறைய காகிதங்கள். ஏதேதோ எழுதியிருந்தன. நிறைய பேனாக்கள். சின்ன காகிதங்களில் சில படங்கள் பென்சிலால் வரையப்பட்டிருந்தன. ஒரு வெள்ளை எழுத்து பலகையில் ஏதோ குறிப்புகள்.

ஞானி குளித்து முடித்துவிட்டு வந்தான்.

வா நண்பா என்ன விஷயம்? இன்று என்னை தேடி வந்திருக்கிறாய் என்றான்.

ஞானி, எனக்கு மனது சரியில்லை. வீட்டில் சண்டை உன்னை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். ஏதாவது திரைப்படம் பார்க்க போகலாமா? என்று கேட்டேன். திரைபடங்களை பற்றி பெரிய உரையாற்றப்போகிறான் என்று பயந்துக் கொண்டே.

போகலாமே என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் ஞானி. உடை அணிந்து கொண்டு சைக்கிளை எடுத்தான்.

கார் இருக்கே என்றேன்.

இருக்கட்டுமே என்றான்.

காரில் போகலாமே என்றேன்.

உடலில் தெம்பு இருக்கும் வரை நடையும் சைக்கிளும் தான் என்றான்.

அப்போ கார் எதுக்கு வாங்கினே.

அது வலுவிழந்து போகும்போது பயன்படுத்த.

அப்போ எப்போது வலுவிழந்து போகிறாயோ அப்போது வாங்கினால் போதாதா என்றேன்.

எப்போது வலவிழந்து போகிறேனோ அப்போது வாங்க வசதியில்லையென்றால்?

போட்டு தாக்கு. அது தான் ஞானி என்றேன் சிரித்துக் கொண்டே.

அது எனக்கு தெரியும் என்றான் அதே அலட்ச்சியத்துடன்.

7 கிலோ மீட்டர் தூரம்பா என்றேன்.

நீ உட்கார் நான் ஓட்டுகிறேன் என்று என்னை பின்னால் அமர வைத்து ஓட்டிச் சென்றான்.

நினைத்தற்கும் வேகமாக சென்றடைந்தோம்.

தியட்டர் வாசலுக்கு வந்ததும் 25 ரூபாய் எடுத்து நீட்டினான். இல்லை வேண்டாம் நான் வாங்குகிறேன் என்றேன்.

முட்டாள். இது எனக்கு மட்டும் தான் என்றான்.

ஞானி ரொம்ப கறார் பேர்வழி தான். கஞ்சனோ என்று நினைத்துக் கொண்டே அவனை முறைத்துவிட்டு இரண்டு சீட்டுகள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தோம்.

நான் ஆச்சர்யப்படும் நிகழ்ச்சிகள் நடந்தன. சிரிப்பு காட்சிகளில் ஜோராக வாய்விட்டு சிரி்த்தான். அழும் காட்சிகளில் அவன் கண்களில் கண்ணீர். சண்டை காட்சிகளில் விரைத்து அமர்ந்திருந்தான். நிறைய கேள்விகள் கேட்கவேண்டும் என்று தோன்றினாலும் வெளியே வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டு அமைதியாக இருந்தேன்.

வெளியே வந்ததும் ஞானி, நீ சோக காட்சிகளில் அழுதாயே.

ஆம் என்றான்.

நகைச்சுவை காட்சிகளில் சிரித்தாயே.

ஆம்.

ஏன்?

அதற்காக தானே கதை எழுதியிருக்கிறார்கள்.

நீ தான் ஞானி ஆயிற்றே.

ஆம் ஞானி தான். கல் இல்லை. ஒரு கதை படித்தால் அதை ஆழந்து படிக்கவேண்டும். திரைப்படமும் அப்படித்தான். அதற்காகத்தானே திரைப்படம் பார்க்க வருகிறோம்.

அது சரி. அதெல்லாம் சும்மா தானே.

என்ன சொல்கிறாய் நீ? நிஜமாகவே குண்டடி பட்டு ஒருவர் இறக்க வேண்டும் என்கிறாயா. இல்லை தக்காளி சாற்றுக்கு பதிலாக நிஜ ரத்தம் வந்தாக வேண்டும் என்கிறாயா? என்று கேட்டான்.

இல்லை நீ தான் பொடி மட்டை பற்றி கூறினாயே?

ஆம். நான் சொன்னது உன் வாழ்கையில் நடக்கும் விஷயங்களில் நீ பொடி மட்டையாக இருக்க வேண்டும் என்பதற்காக. சாலையில் ஒரு குழந்தை அடிபட்டு கிடந்தால் கை கொட்டி சிரித்துக் கொண்டிருப்பேன் என்று நினைக்கிறாயா. மற்றவர்களின் வாழ்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு கரிசனை கொள். அன்பு காட்டு. ஆதரவாக இரு.

அப்போது உணர்ச்சிகள் கூடாது என்று சொன்னாயே? ஒரு நாள் கனவு கண்டதற்காக திட்டினாய் என்னை.

முட்டாள். உணர்ச்சிகள் இல்லாவிட்டால் நீ கல்லாகிவிடுவாய். உணர்ச்சிகள் கொள். ஆனால் உணர்ச்சிகளை உன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்.

சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தான். நான் யோசித்துக் கொண்டே ஓடிச் சென்று பின்னால் ஏறினேன்.

leomohan
29-12-2006, 03:35 PM
நண்பர்களே மீண்டும் ஞானி இதுவரையில் இங்கு பிடிஎஃப் (http://ebooks.etheni.com/mohan/meendumnyani.pdf) வடிவில் ஏற்றியிருக்கிறேன்.

இளசு
29-12-2006, 07:53 PM
- உன்னுடைய மனதையும் உடலையும் நேரடியாக பாதிக்கும் முந்தைய பழக்கங்களை விட்டுவிடு.
- மற்றவரின் மனதையும் உடலையும் நோகடிக்கும் எந்த கோட்பாடுகளையும் காற்றில் விடு.
- ஒவ்வொரு பழக்கவழக்கமும் எந்த காலத்தில் தோன்றியது, அது வர சூழல் என்ன, அதே சூழல் இப்போதும் இருக்கிறதா, அப்படி அதே சூழல் இப்போது இல்லையென்றால், அந்த பழக்கம் விடப்படவேண்டிய ஒன்று தான்.
உருப்படியான யோசனை சொன்ன ஞானிக்கு பாராட்டுகள்...

பலதாரம் ,உடன்கட்டை என்ற பழக்கங்கள் மட்டுமல்ல..

'அந்த வகைச்' சொற்கள் திருவாசகம், சிலப்பதிகாரத்தில் இல்லையா
என வாயாடும் புதுக் கவிஞர்களுக்கும் பொருந்தும் யோசனை..

leomohan
29-12-2006, 08:14 PM
உருப்படியான யோசனை சொன்ன ஞானிக்கு பாராட்டுகள்...

பலதாரம் ,உடன்கட்டை என்ற பழக்கங்கள் மட்டுமல்ல..

'அந்த வகைச்' சொற்கள் திருவாசகம், சிலப்பதிகாரத்தில் இல்லையா
என வாயாடும் புதுக் கவிஞர்களுக்கும் பொருந்தும் யோசனை..

ஹா ஹா. சரிதான்.

நன்றி இளசு.

இளசு
29-12-2006, 08:16 PM
மீண்டும் ஞானி 13. வித்தியாசமான ஞானி

சிரிப்பு காட்சிகளில் ஜோராக வாய்விட்டு சிரி்த்தான். அழும் காட்சிகளில் அவன் கண்களில் கண்ணீர். சண்டை காட்சிகளில் விரைத்து அமர்ந்திருந்தான்.


ஞானிகள்... குழந்தைகள்..
வித்தியாசம் கொஞ்சம்தான்..


ரசிக்கிறேன் ஞானியை...

leomohan
29-12-2006, 08:21 PM
ஞானிகள்... குழந்தைகள்..
வித்தியாசம் கொஞ்சம்தான்..


ரசிக்கிறேன் ஞானியை...

மறுபடியும் நன்றி இளசு.

ஞானியை யாரும் out-of-the-world என்று நினைக்கக்கூடாதல்லவா, அதனால்தான் இந்த - வித்தியாசமான ஞானி. :)