PDA

View Full Version : கறுப்பு வரலாறு தொடர்கிறது



leomohan
17-11-2006, 11:31 AM

leomohan
17-11-2006, 11:32 AM

leomohan
17-11-2006, 11:33 AM

leomohan
17-11-2006, 11:34 AM
15
அழகான இந்தியில் பேசத் தொடங்கினார் பாஸ்கர் பாராஷேர். ரமஷின் மேலதிகாரி.
ரமேஷ் வளர்ந்த நாடுகள் நம் நாட்டில் அதிகம் உளவு செய்யும் பகுதிகளை அறிந்திருக்கறீர்களா.
ஆமாம் சார். நாட்டில் எங்கே பெட்ரோல் கிடைக்கிறது என்பது நம் அரசாங்கத்தைவிட முதலில் அவர்களுக்கு கிடைக்கிறது. அது போல அணு ஆயுத சோதனைகள், வைரம், தங்கம், ராணுவ ஒப்பந்தங்கள், அரசியல் மாற்றங்கள், மதவாதத்தினால் மாற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்கள், எங்கெல்லாம் தீவிரவாதம் ஊடுருகிறது என்றெல்லாம்.
சரி தான் ரமேஷ். அந்த பட்டியலில் தமிழக வரலாறையும் சேர்த்துக்கோங்க.
என்ன.
ஆமாம். களப்பிறர்களை பற்றி கேள்விப்படிருக்கீங்களா.
ஹாஹா. கள்ளர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கேன்.
இவங்களும் கள்ளர்கள் தான்.
அப்படியா.
ஆமாம். கள்ப்பிறர்களை பற்றி ஆராயச்சி பண்ணப்போன சென்னை அரசாங்க கல்லூரியை சேர்ந்த ஒரு குழு அதிர்ச்சியான விஷயங்களை கொண்டுவந்திருக்காங்க என்று முழு கதையையும் கூறினார்.
நீங்க உடனே தஞ்சை போகனும். போனால் சில கொலைகளை தடுக்கலாம். வெளிநாட்டிலிருந்து இன்னும் ஆதிக்கம் செய்யம் சக்திகளை கண்டு பிடிக்கலாம். அழிக்கலாம். தடுக்கலாம். தயாரா என்றார்.
அவசியம் சார் என்று சொல்லிவிட்டு அவர் கொடுத்த ரிப்போர்டை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
அங்கிருந்த ஒரு ஓட்டுனரிடம் வீட்டில விட்டுடுங்க என்று சொல்லி ஜீப்பில் ஏறிக் கொண்டான்.
வீட்டில் வந்து குளித்து முடித்து சாப்பிட்டான். ஜெயா வீட்டிலில்லை. வேலைக்கு சென்றிருந்தாள்.
அவளுடைய செல்பேசியை அழைத்தான்.
பெரிய கோவில் பார்தத்தில்லை. ஆறுமுகமாகலாம். நவரசமாகலாம் என்றான் பீடிகையுடன்.
இது போல பேசுவதில் இருவரும் வல்லவர்கள். தஞ்சை போகவேண்டும் ஆறு அல்லது ஒன்பது நாள் ஆகலாம் என்பதையே அப்படிச் சொன்னான்.
பச்சிலை தேய்த்து பக்குவமா வைச்சிருக்கேன். என் தாலியையும் எடுத்துக்கிட்டு போங்க என்றாள்.
சரி. நீ ஜாக்கிரதை. செல்லில் அலைய வேண்டாம் என்றான்.
அலையலை. என்ன விவகாரம் என்றாள்.
கத்தியில்லை ரத்தம் இல்லை. ஆனால் யுத்தம் ஒன்று வருது. பழைய பேனா ஏதோ தகறாறு பண்ணுது என்றான்.
இன்னும் விவரமா சொன்னா நானும் கண்ணை சிவப்பாக்கிப்பேன்.
களத்தில பிறர் இருந்தா ஒரு கறுப்பு வரலாறு உருவாகும் என்றான்.
ஒ. தெரியாத விஷயம் தான். காகிதங்களை கசக்கனும்.
ஆமாம்.
சரி. பாத்துக்கோங்க என்றுவிட்டு வைத்தாள்.
அவர்கள் பீடிகையில் முடியை பிய்த்துக் கொண்டவர்களுக்கு இதோ எளிய தமிழில் அவர்கள் பேசியது.
பெரிய கோவில் பார்தத்தில்லை. ஆறுமுகமாகலாம். நவரசமாகலாம் என்றான் பீடிகையுடன்.
தஞ்சை போகவேண்டும் ஆறு அல்லது ஒன்பது நாள் ஆகலாம்.
பச்சிலை தேய்த்து பக்குவமா வெச்சிருக்கேன். என் தாலியையும் எடுத்துக்கிட்டு போங்க என்றாள்.
துணிகள் அயர்ன் பண்ணி வெச்சிருக்கேன். துப்பாக்கியையும் எடுத்துக்கிட்டு போங்க.
சரி. நீ ஜாக்கிரதை. செல்லில் அலைய வேண்டாம் என்றான்.
செல் போனில் பேச வேண்டாம்.
அலையலை. என்ன விவகாரம் என்றாள்.
சரி. செல் போனில் பேச மாட்டேன். எதுக்காக போகறீங்க.
கத்தியில்லை ரத்தம் இல்லை. ஆனால் யுத்தம் ஒன்று வருது. பழைய பேனா ஏதோ தகறாறு பண்ணுது என்றான்.
கொலைகள் இல்லை. ஆனால் வரலாறு சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களோட விவகாரம்.
இன்னும் விவரமா சொன்னா நானும் கண்ணை சிவப்பாக்கிப்பேன்.
இன்னும் விவரமா சொன்னீங்கன்னா நானும் படிச்சி ஆராய்ச்சி செய்வேன்.
களத்தில பிறர் இருந்தா ஒரு கறுப்பு வரலாறு உருவாகும் என்றான்.
களப்பிறர் கறுப்பு வரலாறு சம்பந்தப்பட்ட விஷயம்.
ஒ. தெரியாத விஷயம் தான். காகிதங்களை கசக்கனும்.
அப்படியா. தெரியாத விஷயம். புத்தகங்களை படிச்சி தெரிஞ்சிக்கனும்.

leomohan
17-11-2006, 11:34 AM
16
தஞ்சையில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் வந்து தங்கினான். ரகுவை தனியாக பிடித்து விவரங்களை அறிந்துக் கொண்டான். ரவியை தனியாக சந்தித்து பேசினான். ரவியிடம் கரிகாலனை கண்காணிக்கும் பணியில் அமர்த்தினான். உணவகத்தில் தனியாக சவிதாவைப்பிடித்தான். அவளிடமும் பேசினான். நீலாவை லிப்டில் பிடித்து அவன் அறைக்கு அழைத்துச் சென்று பேசினான். பழனியப்பனிடமும் கரிகாலனிடமும் பேசவில்லை. அவன் வந்த்து அவர்கள் இருவருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னான். இருவரையுமே சந்தேகிப்பதாகவும் இருவருக்கும் நான் இங்கிருக்கும் விவரம் தெரியக் கூடாது என்றும் கூறினான். அவர்கள் நால்வரையுடை பாதுகாப்பும் தஞ்சை போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்றும் கூறினான்.
மேலும் அன்றிரவு எப்படியாவது கரிகாலனுடைய டாட்டா சுமாவை வெளியே எடுத்து வரும்படி ரகுவிடம் கூறினான்.
இரவு 12 மணிக்கு கரிகாலன் தூங்குவதை உறுதி செய்துக் கொண்டு கீழே வரவேற்பறைக்கு வந்தான் ரகு. வரவேற்ப்பில் பார்க்கிங் குறைவாக இருப்பதால் அனைத்து விருந்தினர்களும் வண்டி சாவியை கொடுத்திருக்க வேண்டும். ரகுவை பார்த்து பரிச்சயத்துடன் அவர் வண்டி சாவியை எடுத்து தந்தார். ரகு அவரிடம், சும்மா ஊரை சுத்தப்போறேன். கரிகாலன் சார் தெரிந்தால் திட்டுவார் என்று கண்ணடித்தான்.
சரி சார். சொல்லமாட்டேன் என்றார் வரவேற்பறையில் இருந்தவர்.
வண்டியை எடுத்து ஓட்டிய 15 நிமிடத்தில் சாலையில் ரமேஷை பார்த்து ஏற்றிக் கொண்டான். வண்டியில் ஏறிய ரமேஷ் இடது வலது என்று சொல்லிக் கொண்டே வந்தவன் யாரும் இல்லாது ஒரு சாலையில் வண்டியை நிறுத்தச் சொன்னான்.
ரகு இந்த வண்டியில் தான் கடைசியா போனாரு சங்கர் இல்லையா.

ஆமாம் சார்.

டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு வண்டியை வெளிப்புறமாக சோதித்தான். பிறகு பின்புறம் திறக்கச் சொல்லி நன்றாக சோதித்தான். டூல் கிட் வைக்கும் இடத்தில் சங்கரிடம் கடைசியாக இருந்த 15 பக்கங்கள் கிடைத்தது. அதில் சில ரத்தத்துளிகள்.
முன்பக்கம் பயணி உட்காரும் இடத்தில் நன்றாக சோதித்தான். கண்ணாடி இடுக்கில் ஒரு காய்ந்த ரத்த துளி. அதை தன் கையடக்க டிஜிடல் காமிராவில் படம் பிடித்துக் கொண்டான். பிறகு அதை சுரண்டி ஒரு சின்ன கவரில் போட்டுக் கொண்டான். பிறகு இன்னும் நன்றாக சோதித்தான்.
பிறகு தொலைபேசியில் ஒரு எண்ணை சுழற்றினான்.
சரி வாங்க ரகு என்று மறுபடியும் ஓட்டலுக்கு திருப்பச் சொன்னான்.
திரும்பி செல்லும் போது நீலா ரகுவிடம் ஓடி வந்து ரகு, ரகு, சங்கர் கொலை விஷயமா சிதம்பரம் போலீஸ் கொடுத்த ரிப்போர்ட் படி தஞ்சாவூர் போலீஸ் கரிகாலன் சாரை கைதி பண்ணிகிட்டு போயிட்டாங்க என்றான்.
ரகு ஆச்சர்யமாக ரமேஷை பார்த்தான்.
ரமேஷ் சிரித்துக் கொண்டே நான் நினைச்சதை விட தஞ்சை அதிகாரிகள் ரொம்ப வேகம் தான் என்றான்.
அனைவரும் களைத்திருந்தனர். பயந்திருந்தனர். அனைவரையும் தூங்க சொல்லிவிட்டு அவனும் தன் அறைக்குப் போனான்.
நடந்தது எதுவும் தெரியாமல் பழனியப்பன் உறங்கிக் கொண்டிருந்தார்.

leomohan
21-11-2006, 08:04 AM

pradeepkt
22-11-2006, 04:47 AM
கடைசிப் பதிவு வரலையா மோகன்?

leomohan
22-11-2006, 05:09 AM
கடைசிப் பதிவு வரலையா மோகன்?

ஆம் ப்ரதீப். மீண்டும் முயற்சி செய்கிறேன்.

guna
22-11-2006, 07:04 AM
மோகன், 12 ஆம் பாகம் வரை படித்தேன், பிறகு "கறுப்பு வரலாறு 13 இல் இருந்து'ன்னும் படித்தேன், ஆனால் எதுவும் பதிவாகல..

இப்போ 15 ஆம் பாகத்துல இருந்து தொடருது, அப்போ 13 & 14 ஆம் பாகம் எங்கே?
குணா தேடி தேடி பார்த்தாச்சு, காணலையே..:confused:

மோகன் சொல்லுங்க, இல்லை 13 & 14 ஆம் பாகத்தை படிச்சுடவங்க யாராச்சும் சொலுங்க..

leomohan
22-11-2006, 07:39 AM
மோகன், 12 ஆம் பாகம் வரை படித்தேன், பிறகு "கறுப்பு வரலாறு 13 இல் இருந்து'ன்னும் படித்தேன், ஆனால் எதுவும் பதிவாகல..

இப்போ 15 ஆம் பாகத்துல இருந்து தொடருது, அப்போ 13 & 14 ஆம் பாகம் எங்கே?
குணா தேடி தேடி பார்த்தாச்சு, காணலையே..:confused:

மோகன் சொல்லுங்க, இல்லை 13 & 14 ஆம் பாகத்தை படிச்சுடவங்க யாராச்சும் சொலுங்க..

பதிப்பதில் பிரச்சனை குணா. விரைவில் பிரச்சனை தீர்த்து விட்ட பதிவுகளையும் இடுகிறேன்.

guna
22-11-2006, 07:49 AM
தகவலுக்கு நன்றி மோகன்..

பிரட்ச்சனை தீர்த்து மீண்டும் பதிவுகளை மோகன் இடும் வரை மன்ற நன்பர்களோடு குணாவும் பொறுமையா காத்திருக்கறேன்..

ஓவியா
22-11-2006, 05:06 PM