PDA

View Full Version : சீனியம்மா - வடக்க சூலம்



gragavan
15-11-2006, 05:20 PM

gragavan
15-11-2006, 05:28 PM
removed

gragavan
15-11-2006, 05:29 PM
removed

gragavan
15-11-2006, 05:29 PM

gragavan
15-11-2006, 05:32 PM
removed

gragavan
15-11-2006, 05:33 PM
removed

gragavan
15-11-2006, 05:35 PM
என்னால் புதுத்திரியைப் பதியவே முடியவில்லை. என்ன செய்தாலும் உள்ளிருக்கும் எழுத்துகள் பதிவில் வருவதே இல்லை. அலுவலகக் கணிணியில் மட்டுமன்றி வீட்டுக் கணிணியிலும் அப்படியே.

இளசு
15-11-2006, 05:52 PM
என்ன பிரச்சினை என விளங்கவில்லை ராகவன்.
என்னால் வழக்கம்போல் பதிய முடிகிறதே

உங்கள் கதைப்பகுதி பதிவுகள் வேறு எழுத்துருவில் தெரிகின்றன.

சிறிய பகுதிகளாய்த்தான் பதிக்க முடிகிறதா?

இதை சரி செய்ய உடன் இராசகுமாரன் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்.

pradeepkt
16-11-2006, 10:20 AM
நல்லாச் சொன்னாங்க சீனியம்மா...
சூலத்துக்கே சூலம் வச்ச கத தெரிஞ்சு போச்சுல்ல... அடுத்த கதையப் படிச்சுட்டு இனிமே எந்தூருப் பக்கம் சூலம் வந்தாலும் தெகிரியமாப் போயிற வேண்டியதுதேன்...

அதையும் மீறிச் சூலம் ரெம்பப் பேசினா ஒரு எக்கு எக்கிற வேண்டியதுதேன் ... நமக்குத்தேன் சூலம் பெறக்காதே... ஹி ஹி :)

gragavan
16-11-2006, 04:17 PM
அகத்திக்கீடைய ஆஞ்சிக்கிட்டிருந்தா சீனியம்மா. அப்பப் பாத்துப் பக்கத்துல உக்காந்தான் அழகரு. அழகுப் பேரன். ஐயனாரு கோயிலு பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கான். கொளக்கட்டாங்குறிச்சிச் தலக்கட்டுக எல்லாம் வரி வாங்கி பெரிய ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. பெரிய கம்மாய் பக்கத்துல இருக்குற ஐயனாரு கோயில்லதான் கொடை. ரொம்ப காலமா நடக்காம இருந்து இந்த வாட்டி நடக்குது. அதுக்குத்தான் ஊருல இருந்து வந்திருக்கான் அழகரு.

"ஐயாளம்மா, அகத்திக்கீரையோட அரட்டையா?" கிண்டலாத்தாங் கேட்டான். சீனியம்மா விடுமா? "ஆமாய்யா...ஆஞ்ச கீர போட்டுத்தான் காஞ்ச பயகளத் தேத்தனுன்னா அரட்டைன்னு பாக்க முடியுமா? செரட்டைன்னு பாக்க முடியுமா?"

வழிஞ்சான். பின்ன. வேலைக்குப் போன எடத்துல கண்டதத் தின்னு காஞ்சி போயில்ல வந்திருக்கான். அப்பிடியே பேச்ச மாத்துனான். "சரி. ஊரு கூப்புட யாரு போறது? செவலார்பட்டிக்கு ஆரு போறா? இப்பயே சொல்லி விட்டாத்தான பொழுது சாய வருவாக."

செவலார்பட்டிலதான் சீனியம்மா கூடப்பொறந்த கெங்கம்மாளக் குடுத்திருக்கு. அந்தம்மாவுக்கும் புள்ள குட்டீன்னு குடும்பம் பெருசு. சம்பந்தங்காரங்க பங்காளிகன்னு பெரிய வீடு. ஊர்ப் பொங்கலுன்னா சொல்லியனுப்பனுமா இல்லையா? அதத்தான் அழகரு கேக்கான்.

"அப்பெல்லாம் நானே ரெண்டு எட்டுல செவலாருபட்டி போயிருவேன். இல்லைன்னா...வண்டி கெட்டுனா...நானே பத்திக்கிட்டு நெம்மேனி வரைக்கும் போயிருவேன். சூலங் கீலமுன்னு பாக்க மாட்டேன். இப்ப எங்க? அதான் மோட்டார் சைக்குளு இருக்கு. எளவட்டங்க படக்குன்னு போயிட்டு வந்துர்ரீக." பழைய கதைய நெனச்சு அலுத்துக்கிட்டா சீனியம்மா.

"அதென்னம்மா சூலம்? அத ஏன் பாக்கீக? வெவரஞ் சொல்லுங்களேன்"னு கேட்டான். இவனுக்கு ஒரு மண்ணுந் தெரியாது. ஊருக்குள்ள இருந்து கிருந்து படிச்சிருந்தா என்னைக்கு எங்க சூலம்னு தெரிஞ்சிருக்கும்.

"என்ன அழகரு! இப்பிடிக் கேட்டுட்ட. அப்பெல்லாஞ் சூலம் பாக்காம ஒரு எட்டு வெக்க மாட்டோமுல்ல. இந்த கெழமைக்கு எந்தப் பக்கஞ் சூலமுன்னு இருக்கு. அத மீறிப் போக முடியுமா? போனாலுஞ் சூலஞ் சும்மா விடுமால? ஆனா எந்தச் சூலமும் என்னய ஒன்னுஞ் செஞ்சிக்கிற முடியாது. நாஞ் சூலத்துக்கே சூலம்." சொல்லைலயே சீனியம்மாளுக்குப் பெருமிதந்தான்.

"அட! என்ன இந்தப் போடு! அதென்ன கத? அதையுஞ் சொல்லுங்களேங் கேக்கேன்."

"ம்ம்ம்....ஒனக்குச் சொல்லாமலாய்யா. கண்டிப்பாச் சொல்றேன்." பேரங் கேட்டதும் ஒத்துக்கிட்டா. "அப்ப எனக்கும் ஒன்னோட ஐயாளய்யாவுக்கும் முடிச்சி ஒரு மூனு வருசம் இருக்கும். ஒங்கப்பாவுக்கு ரெண்டு வயசு. அப்ப செவலார்பட்டியில ஒன்னோட சின்னப்பாட்டிக்குப் பேறுகாலம். எங்கம்மா இல்ல. நாந்தான் அக்கா. காலைல பாத்து சேதி வந்திருச்சு. இடுப்பு வலின்னு. நடந்தா நேரம் ஆகுமுன்னு சடக்குன்னு வண்டியப் போட்டுக்கிட்டுத் தனியாப் பொறப்பட்டேன். அவரு வயலுக்குப் போகனுமில்ல.

gragavan
16-11-2006, 04:18 PM
அன்னைக்கு சூலம் எந்தப் பக்கமுன்னு பாக்கல. வடக்க சூலமாம். நாந் தெரியாம ஒன்னோட ஐயாளய்யா கிட்ட சொல்லிக்கிட்டு வண்டியப் பத்துனேன். வடக்கதான போகனும். பெரிய கம்மா தாண்டி ஊர்க்கெணறு தாண்டிப் போறேன். அப்ப வந்து நிக்குதய்யா. கருகருன்னு நெடுநெடுன்னு. சூலந்தான். முண்டக்கட்டையா நிக்கி. பாக்கவே திக்குன்னு இருக்கு. ஒத்தப் பொம்பள என்ன செய்ய முடியும். பதட்டந்தான். சூலமோ கண்ணாமுழி ரெண்டையும் உருட்டி உருட்டி முழிச்சி என்னையப் பாக்குது.

அங்கன ஒரு காக்கா குருவி கூட இல்ல. நாயக் கூடக் காணோம். சூலம் இருக்குறப்ப வருமா? நாந்தான் போயி மாட்டிக்கிட்டேன்.
சூலம் வாயத் தொறந்து, "இன்னைக்கு வடக்க சூலம்னு தெரியாதா? ஏன் வந்த? ஒன்னய என்னமுஞ் செஞ்சிர வேண்டியதுதான்"னு மெரட்டுச்சு. உர்ர்ர்ர்ர்ருன்னு உறுமல் வேற. பாதகத்தி நானு. ரெண்டு வேப்பிலையாவது போட்டுக்கிட்டு வந்திருக்கக் கூடாது. ஆனாலும் விடல. "ஐயா! தெரியாம செஞ்சிட்டேன். கூடப் பொறந்தவளுக்குப் பேறுகாலம். அக்கான்னு ஒத்தையா நாந்தான். அதான் பொழுது கெழம பாக்காமப் பொறப்புட்டேன்"னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கு சூலம்.

திரும்பத் திரும்ப "இன்னைக்கு வடக்க சூலம். வடக்க சூலம்"ங்கு. நானும் பாத்தேன். நேரமாகுதேன்னு கடுப்பு வேற. எரிச்சல்ல, "யெய்யா....வடக்க சூலமுன்னு வடக்க பாக்க நிக்க வேண்டியதுதான? ஏன் இப்பிடி தெக்க ஆட்டிக்கிட்டு நிக்கீரு? ஒமக்கே மூள கொழம்பீருச்சா"ன்னேன்.

சூலமுங் கொழம்பீருச்சு. வடக்க சூலமுன்னா வடக்க பாக்கனுமா தெக்க பாக்கனுமான்னு அதுக்கே ஒரு சந்தேகம். அதான் சாக்குன்னு கூடக் கொஞ்சம் பேசிக் கொழப்பிச் சூலத்த வடக்கப் பாத்து நிக்க வெச்சிட்டு நாஞ் செவலார்பட்டிக்குப் போயிட்டேன். பேறுகாலமுஞ் சரியா நடந்து முருகம் புண்ணியத்துல கதிரேசு பொறந்தான். நாலஞ்சு நாளு இருந்துட்டு திரும்பப் பொறப்பட்டேன்.

அன்னைக்கு பாத்து வடக்க சூலமாம். குளக்கட்டாங்குறிச்சி தெக்குலதான இருக்குன்னு யாரும் கண்டுக்கல. எனக்கும் நெனப்பில்லை. ஊருக்குத் திரும்ப வந்தாத்தான சீருக்குச் செய்ய முடியுமுன்னு வண்டீல ஏறி வந்தேன். வந்தா வடக்க பாத்து நிக்குது சூலம். என்னையப் பாத்ததும் அடையாளந் தெரிஞ்சிக்கிறிச்சி சூலத்துக்கு.

"இன்னைக்கு வடக்க சூலம். அதான் வடக்க பாத்து நிக்கேன். வசமா மாட்டிக்கிட்டியா"ன்னு கும்மரிச்சம் போடுது. எனக்குக் கலங்கிப் போச்சு. கையுங் காலும் ஓடல. மாடுகளும் படபடங்குதுக.

அப்பச் சொல்லுச்சு சூலம். "இங்க பாரு பிள்ள. இன்னைக்கு வடக்க சூலம். ஒன்னுஞ் செஞ்சிராம இருக்கனுமுன்னா ஒழுங்காத் திரும்பப் போயிரு. இல்லையின்னா ஒனக்குச் சூலம் பொறக்க வெச்சிருவேன்"னு மெரட்டுச்சு.

நானும், "யெய்யா! என்னமுஞ் செஞ்சிராதீக. நாந் திரும்பியே போயிர்ரேன். நீங்க விட்டுருங்க"ன்னு கெஞ்சுனேன். சூலமும் ஒத்துக்கிருச்சு. நானும் வண்டியில திரும்பி உக்காந்துக்கிட்டு மாட்டக் கொளக்கட்டாங்குறிச்சிக்கே பத்துனேன்.

சூலத்துக்கு ஆங்காரங் கூடி, "ஏய்......திரும்பிப் போறேன்னு இங்குட்டே போறயே...என்ன திமிரு...ஒன்னய.."ன்னு பாஞ்சு வந்துச்சு.
இப்ப நானும் சுதாரிச்சிக்கிட்டேன். "இந்தா! ரொம்ப மெரட்டாதீரும். திரும்பிப் போகச் சொன்னீருன்னுதான திரும்பிப் போறேன். நேராவா போறேன். அப்புறம் எதுக்கு இந்தப் பாடு"ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன்.

சூலந் தெகச்சிப் போச்சி. காச்சு மூச்சுன்னு கத்துச்சு. ஆனா என்னைய ஒன்னுஞ் செய்ய முடியல. சொன்ன வாக்கு மாற முடியுமா? நானும் இதுதாஞ் சமயமுன்னு வண்டியப் பத்திக்கிட்டு வந்துட்டேன். இதாய்யா நடந்துச்சு.

மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டிருந்த அழகரு இப்பக் கேக்கான். "ஐயாளம்மா.....மீறிப் போனா சூலம் பொறக்க வெப்பேன்னு மெரட்டுச்சே சூலம்...இதே ஆம்பிளையா இருந்தா என்ன செஞ்சிருக்கும்?"

"அட....அதுவும் ஒரு கததான். பன்னீரு கத அப்பிடித்தான் ஆச்சு."
"அதென்ன...சொல்லுங்க" கத கேக்குற ஆவல்ல கேக்கான் அழகரு.
ஆனா சீனியம்மா விடல. "மொதல்ல குளிஞ்சிட்டு செஞ்சிட்டுச் சாப்புட்டதும் செவலார்பட்டிக்குப் போயிட்டு வா. கதையுஞ் கத்திரிக்காயும் அப்புறம் பாக்கலாம்"னு பேரனப் பத்தி விட்டுட்டா.

gragavan
16-11-2006, 04:24 PM
நான் திரும்ப அனைத்தையும் அழித்து விட்டுப் பதித்திருக்கிறேன். இப்பொழுது படிக்க வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஓவியா
05-12-2006, 07:01 PM
ஆமாங்க படிக்க வசதியதான் இருக்கு..

சென்னை தமிழின் வாசமே தனிதான்...

படிக்க அருமையா இருந்துச்சு ராகவன்

தங்களின் எழுத்து மழையில் தமிழ் நெஞ்சங்கள் நினைந்து மகிழ அரு(று)விபோல் அயராது எழுதுங்கள்.......
(சூலம் வந்தா நாங்க பாத்துகுறோம்....:D )

ஒரு கேள்வி சூலம் லன்டனுக்கு வருமாலே
சூலம் வந்தாலும் தெகிரியமாப் போயிற வேண்டியதுதேன்

இளசு
05-12-2006, 10:49 PM
நம் பகுத்தறிவுக்கு அவசரம், அவசியம் என படுபவற்றை
சமயோசிதம், சட்டென்ற சரியான சமாளிப்பு, மாற்று திட்டம் என
ஜமாய்க்கும் சீனியம்மா - செம ஹீரோயினியம்மா!

மாடு பூட்டி வண்டி ஓட்டும் சீனியம்மா மனதில் அமர்ந்துவிட்டார்!


பாராட்டுகள் ராகவன்.

அல்லிராணி
06-12-2006, 02:43 PM
ஆமாங்க படிக்க வசதியதான் இருக்கு..

சென்னை தமிழின் வாசமே தனிதான்...

படிக்க அருமையா இருந்துச்சு ராகவன்

தங்களின் எழுத்து மழையில் தமிழ் நெஞ்சங்கள் நினைந்து மகிழ அரு(று)விபோல் அயராது எழுதுங்கள்.......
(சூலம் வந்தா நாங்க பாத்துகுறோம்....:D )

ஒரு கேள்வி சூலம் லன்டனுக்கு வருமாலே
சூலம் வந்தாலும் தெகிரியமாப் போயிற வேண்டியதுதேன்

ராகவன் உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.:eek: :eek: :eek:

அல்லிராணி
06-12-2006, 02:46 PM
ஓ நீங்க பைக்கை வளைச்சு வளைச்சு ஓட்டறது இந்த சூலத்துக்கு பயந்துதானா?

ஆமாம் சூலம் னா நிஜமாவே என்ன? சூலத்திற்கு பரிகாரம் மோர், தயிர் வெல்லம் என சொல்றாங்களே ஏன்?

gragavan
06-12-2006, 04:23 PM
ராகவன் உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.:eek: :eek: :eek:உண்மைதான் அல்லிராணி. இதுவும் வேணும் இன்னமும் வேணும். :angry: :angry: :angry:

ஓவியா அது சென்னைச் செந்தமிழ் கெடையாது. பாண்டி நாட்டுப் பைந்தமிழ். :-(

ஓவியா
06-12-2006, 04:35 PM
உண்மைதான் அல்லிராணி. இதுவும் வேணும் இன்னமும் வேணும். :angry: :angry: :angry:

ஓவியா அது சென்னைச் செந்தமிழ் கெடையாது. பாண்டி நாட்டுப் பைந்தமிழ். :-(

அப்படியா.....:cool:

அதுசரி, இந்த இரண்டு பாஷையும் தமிழ் நட்டிலே தானே பேசுறாங்க...:D :D .

நாந்தான் இந்தியாவே வந்ததில்லையே.....B) B)

பாரதி
07-12-2006, 05:48 PM
அட்டகாசம் இராகவன்.. பாட்டி சொல்ற கதைய கேக்குறதுக்கு கொடுத்து வச்சிருக்கீங்க..!

இப்பயும் வீட்ல அப்பா, அம்மா சூலம் பாக்குறது சகசந்தேன். ஆனா என்னதுக்கு பாக்கணும்னு கேட்டத்தான் பதிலே வராது...!

அசத்துங்கப்பூ...

gragavan
07-12-2006, 07:18 PM
அப்படியா.....:cool:

அதுசரி, இந்த இரண்டு பாஷையும் தமிழ் நட்டிலே தானே பேசுறாங்க...:D :D .

நாந்தான் இந்தியாவே வந்ததில்லையே.....B) B)ஆகா......நான் ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

gragavan
07-12-2006, 07:22 PM
அட்டகாசம் இராகவன்.. பாட்டி சொல்ற கதைய கேக்குறதுக்கு கொடுத்து வச்சிருக்கீங்க..!

இப்பயும் வீட்ல அப்பா, அம்மா சூலம் பாக்குறது சகசந்தேன். ஆனா என்னதுக்கு பாக்கணும்னு கேட்டத்தான் பதிலே வராது...!

அசத்துங்கப்பூ...நன்றி அண்ணா. இந்தக் கதையை நீங்கள் ரசித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஊர்ப்பக்கத்து பேச்சு வேறு.