PDA

View Full Version : புன்னகை



தாமரை
15-11-2006, 03:09 PM
டைனஸோர்
மம்மூத்
யானை
புலி
எத்தனை எத்தனை
பெரிய பெரிய மிருகங்கள்
அழித்து எக்காளமிட்டான்
மனிதன்..

சின்னதாய்
வைரஸை படைத்து
கடவுள் செய்தார்
புன்னகை!!!

ஓவியா
15-11-2006, 05:31 PM
அழகான கவிதை...........ரசிக்க முடியவில்லை

ஓர் உண்மை அனுபவம்
தங்களின் கவிதிறனை காட்டுகின்றது....

கலங்க வேண்டாம்....
மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லையண்ணா

mgandhi
16-11-2006, 06:12 PM
வைரஸை-ஐ வெல்லும் காலம் வெகு விரைவில்!

leomohan
16-11-2006, 06:23 PM
நல்ல கவிதை. யானைக்கும் அடிசறுக்கும் என்பதையே காட்டுகிறது. ஓஷோ சொல்வார் - என்ன விஞ்ஞானம் மனிதனால் மூக்கு சளியை நிறுத்த முடியவில்லை என்று.

பென்ஸ்
19-11-2006, 11:54 AM
தாமரை...

வலி...

gragavan
20-11-2006, 01:59 PM
நல்ல கருத்து. வல்லவனுக்கும் வல்லவன் அகிலம் படைத்த நல்லவன் என்பதை மறவாமை நன்று.

இளசு
20-11-2006, 07:19 PM
சிறியதா பெரியதா என்பதல்ல..

'வலியன' - வாழும்!

சூழலுக்கு மாறாதவை மாளும்....!

நேற்று அவர்..
இன்று இவர்..
நாளை எவர்?

மாறும்...
மாற்றம் மட்டும் மாறாமல்
மற்றவை எல்லாமே!


பாராட்டுகள் செல்வன்!

அமரன்
21-07-2007, 10:04 AM
சிந்திக்க வைத்த வரிகள்.


நல்ல கருத்து. வல்லவனுக்கும் வல்லவன் அகிலம் படைத்த நல்லவன் என்பதை மறவாமை நன்று.

அதே நம்பிக்கையில் இருந்தாலும்....சிலவேளைகளில் திருத்துவதற்கு கல்லாக இருக்கவேண்டும்தானே.

நன்றி செல்வன் அண்ணா

சிவா.ஜி
21-07-2007, 10:16 AM
மனிதன் எத்தனைதான் ஆட்டம் போட்டாலும்
இறைவன் போடும் ஆட்டம்பாமில் அடங்கித்தான் ஆக வேண்டும்.
நல்ல கவிதை, அசத்தலான முடிவு வரிகள். பாராட்டுக்கள் தாமரை.

அக்னி
21-07-2007, 10:34 AM
மனிதனில் மட்டுமா வைரசின் ஆதிக்கம்..?
மனிதன் படைத்து பெருமைப்படும் கணினியும் தப்பவில்லையே...
அனைத்தையும் ஆட்டுவிப்பவன் கண்ணுக்குத் தெரியாமல், தடம்புரளவைக்கின்றான்...
உதாரணம் வைரஸ்...

வைரஸ் இல்லாவிட்டால், வன்முறையில் வைரமான மனம் அல்லவா மனிதனுக்கு வலுத்துவிடும்...

இனியவள்
21-07-2007, 11:15 AM
அக்னி கணனியும் கணனியை அழிக்க உருவான வைரஸ் இரண்டும் மனிதனால் உருவாக்கப்பட்டது...

கடவுளால் உருவாக்கப்பட்ட
வைரஸ்சை அழிக்க மனிதன்
முயன்று முயன்று தோற்றுக்
கொண்டிருக்கின்றான் விடா
முயற்சி கொண்டு உழைத்தால்
முடியாதது ஒன்றும் இல்லை
என மனிதன் நிருபிக்க
கடவுளின் திருவிளையாடல்களாயும்
இது இருக்கலாம்

lolluvathiyar
21-07-2007, 02:44 PM
வைரஸ மட்டுமா ஆன்டவன் படைச்சான்
புயல், பூகம்பம், சுனாமி இப்படி எத்தனையோ படைச்சு
நான் ஒருத்தன் இருகிறேன் என்று நினைவில் நிறுத்துகிறான்

ஓவியன்
21-07-2007, 02:55 PM
செல்வன் அண்ணா!

வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு...........!
சொல்லாமற் சொல்கிறது உங்கள் கவிதை!

ஆதவா
24-07-2007, 02:06 PM
ஆமாம். ஆமாம்... ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.. இல்லையேல் வைரஸ் என்ன அதற்கும் மேலும் உருவாக்குவார் அதே இறைவன்.

அறிஞர்
24-07-2007, 02:09 PM
ஆமாம். ஆமாம்... ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.. இல்லையேல் வைரஸ் என்ன அதற்கும் மேலும் உருவாக்குவார் அதே இறைவன்.

வைரஸுக்கும் மேலா.... வேண்டாம்.. உலகம் தாங்காது..