PDA

View Full Version : இன்று உலக நீரிழிவு நோய் தினம்mgandhi
14-11-2006, 06:56 PM
உடல் பருமன் குறைந்தால் நோய் வராமல் தடுக்கலாம்
உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு உலக சுகாதார அமைப்புடன் உலக நீரிழிவு அமைப்பும் சேர்ந்து 150 நாடுகளுக்கும் மேலாக இந்த நாளை அனுசரிக்கிறது.

தற்போது உலக அளவில் சுமார் 18 கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தத் தொகை இரட்டிப்பாகக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோய் வருவதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. எல்லா வயதினரையும், அனைத்து தரப்பினரையும் இந்த நோய் பாதிக்கக் கூடும். இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் விகிதாச்சாரம் அதிகரிக்கும் போது தான் உடலில் உபாதைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

இனிப்பான பொருட்கள், மாவுச்சத்து அதிகமுள்ள கிழங்கு வகைகள், கொழுப்பு சத்து உள்ள உணவுப் பொருட்களை தவிர்பதும் புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களை விட்டொழிப்பதும் இந்த நோய் வராமல் தடுக்க உதவி செய்யும்.

இந்தியா, இலங்கை பாகிஸ்தான் உட்பட தெற்காசிய நாடுகளில் இந்த சர்கரை நோயின் தாக்கம் அதிகமக இருப்பதாகவும், குறிப்பாக ஏழை மக்களிடையே இதன் பாதிப்பு கூடுதலாக இருப்பதாகவும் கூறுகிறார் நீரிழிவு நோய் வல்லுநனரும் சென்னையிலுள்ள எம்.வி.டயாபடீஸ் மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் ராமசந்திரன்

உலக அளவில் நீரிழிவு நோய வராமல் தடுப்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன எனவும், இந்த முயற்சியில் இந்தியாவில் நடைபெற்ற ஆராய்ச்சியில், வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தால் இந்த நோய் வராமல் தடுக்க இயலும் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ராமசந்திரன் தெரிவித்தார்

ஓவியா
14-11-2006, 07:08 PM
தகவலுக்கு நன்றி காந்தி

இது தங்களின் பதிவேன்றால்

தற்போது உலக அளவில் சுமார் 18 கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தத் தொகை இரட்டிப்பாகக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த தொகுப்பு எங்கிருந்து எடுக்கபட்டது கொஞ்சம் சுட்டி கொடுபீர்களா
என் ரீசேர்சு வகுப்பில் தட்டிவுடதான்

நன்றி

இளசு
14-11-2006, 07:55 PM
உலகில் ஏழுபேரில் ஒருவர் இந்தியர்.
சர்க்கரை வியாதியில் - உலகில் ஐந்து பேருக்கு ஒருவர் இந்தியர்.

அனைவரும் விழிப்பாய் இருங்க மக்கா...
நடை, உடல் உழைப்பில்லா வாழ்க்கை முறை தந்துவிடும் நிச்சயப்பரிசு இது...

வராமல் காப்பதே சிறந்தது..

தகவலுக்கு நன்றி காந்தி..

mgandhi
15-11-2006, 04:40 PM
தகவலுக்கு நன்றி காந்தி

இது தங்களின் பதிவேன்றால்

தற்போது உலக அளவில் சுமார் 18 கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தத் தொகை இரட்டிப்பாகக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த தொகுப்பு எங்கிருந்து எடுக்கபட்டது கொஞ்சம் சுட்டி கொடுபீர்களா
என் ரீசேர்சு வகுப்பில் தட்டிவுடதான்

நன்றி

இது BBC TAMIL.COM இருந்து எடுக்கப்பட்டது.

ஓவியா
15-11-2006, 05:00 PM
இது BBC TAMIL.COM இருந்து எடுக்கப்பட்டது.

நன்றி காந்தி

மன்னிக்கவும்
சிரமம் பாராது தாங்கள் அந்த
சரியான சுட்டியை கொடுத்தால் எனக்கு வசதியாக இருக்கும்

நன்றி

Mano.G.
16-11-2006, 01:43 AM
தக்க தருணத்தில் ,
நம் மக்களுக்கு தரப்பட வேண்டிய தகவல்,
நம்மக்கள் சக்கரை சத்துள்ள உணவு வகைகளை
அளவோடு உண்டு ஆரோக்கியதோடு வாழ
இத்தினம் விழிப்புணர்வை கொண்டுவரும்
என நம்புவோமாக.

மனோ.ஜி

mgandhi
16-11-2006, 06:03 PM
நன்றி காந்தி

மன்னிக்கவும்
சிரமம் பாராது தாங்கள் அந்த
சரியான சுட்டியை கொடுத்தால் எனக்கு வசதியாக இருக்கும்

நன்றி

http://www.bbc.co.uk/tamil/images/furniture/banner.gif

இந்த தகவல் பயன்படுமா?(14-11-2006) இதழில் வந்தது.

ஓவியா
17-11-2006, 02:14 PM
http://www.bbc.co.uk/tamil/images/furniture/banner.gif

இந்த தகவல் பயன்படுமா?(14-11-2006) இதழில் வந்தது.என்ன தகவல் வேண்டுமென்றாலும் கொடுக்கலாம் ஆனல் சரியான தகவலாய் இருக்கவேண்டும்......சுட்டியுடன்

நண்பா, சுட்டி வேலை செய்யவில்லையே...:eek: :cool: