PDA

View Full Version : இந்தியா சீனாவிடயே அருணாச்சலப் பிரதேசம் த



mgandhi
14-11-2006, 06:40 PM
http://newsimg.bbc.co.uk/media/images/42312000/gif/_42312150_arunachal_pradesh_map203.gifஇந்தியா சீனாவிடயே அருணாச்சலப் பிரதேசம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை

வணிகம் மற்றும் இதர ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுகளுக்காக சீன அதிபர் ஹு ஜிண்டாவ் அவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு சில நாட்களே இருக்கும் நிலையில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் எல்லை சர்ச்சை ஒன்று எழுந்திருக்கிறது.

இந்தியாவுக்கான சீனத் தூதுவர், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம், சீனாவைச் சேர்ந்தது என்று சீனா உரிமை கோருவதை மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள், அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

அருணாச்சலப் பிரதேசம் குறித்த பிராந்திய சர்ச்சை, 1962 ஆம் ஆண்டு இந்திய- சீன மோதல் இடம்பெற்றது முதல் இருந்துவருகிறது.

இந்த சர்ச்சை குறித்த விவகாரத்தை தீர்க்கும் நோக்கமாக பல சுற்றுப் பேச்சுக்கள் இதுவரை நடந்துள்ளன, ஆனால் இரு தரப்பிலும் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக இந்திய அரசின் ஓய்வு பெற்ற மூத்த அரசு அதிகாரி டி.எஸ்.இராஜன் அவர்களின் பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.