PDA

View Full Version : 03. மேலக்கரந்தையில் உக்காந்தேன்

gragavan
14-11-2006, 02:59 AM

pradeepkt
14-11-2006, 04:56 AM
யோவ் பதிவை எங்கே??? சும்மா உக்காந்துகிட்டே இருந்தா எப்படி?
பதிவை எழுத வேண்டாமா?

பென்ஸ்
14-11-2006, 05:05 AM
அட அதைதான் நானும் கேக்குறேன்...
உக்காந்தது போதும் எழுதுமையா...

gragavan
14-11-2006, 05:24 AM
ஐயோ நான் போட்ட பதிவையே காணோம். யாரு எடுத்தீங்க? உண்மையச் சொல்லீருங்க. மன்றத்தில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன்.

gragavan
14-11-2006, 05:31 AM

gragavan
14-11-2006, 05:33 AM
"தூத்துக்குடிக்கு எவ்வளவு நேரமாகும்?" பக்கத்துல ஒருத்தர் கேட்டாரு. மூனு மணி நேரமாகும்னு சொன்னேன்.

"திண்டுக்கல்ல இருந்து வர்ரேன். இப்படி நின்னுக்கிட்டே போகனுமோ"ன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு. நான் பெங்களூர்ல இருந்து வர்ரேன்னு சொல்லி அவருக்கு மாரடைப்பு உண்டாகக் காரணமாயிருக்க விரும்பல. அதுனால ஒன்னும் சொல்லாம பேசாம இருந்தேன்.

நாப்பத்தோரு ரூவா அம்பது காசு. மதுரையில இருந்து தூத்துக்குடிக்கு. அம்பத்தொன்னு அம்பது கொடுத்து பத்து ரூவா வாங்கிக் கிட்டேன். வண்டி நல்லா சல்லுன்னு போச்சு. மழை பேஞ்சிருந்ததால சுகமா இருந்தது பயணம். எல்லாரும் தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆத்தூருன்னு டிக்கெட் வாங்குனாங்க. ஆறுமுகனேரிக்கு யாரும் டிக்கெட் வாங்கலை (இது யாருக்காக சொன்னேன்னு அவங்களுக்குப் புரிஞ்சா சரி). தூத்துக்குடி வரைக்கும் நின்னுகிட்டுத்தான் போகனும் போலன்னு நெனச்சேன். சரி...நின்னுக்கிட்டு போறதுக்காவது வண்டி வந்துச்சேன்னு மனசத் தேத்திக்கிட்டேன். அப்ப அடுத்த சீட்டுல உக்காந்தவரு முத்தலாவரம் பாலத்துக்கு டிக்கெட் வாங்குனாரு.

ஆகான்னு ஒரு பேரானந்தம். பின்னே பாதி தொலைவு உக்காந்திட்டுப் போகலாமே. ஆனா வேற யாரும் அதுல நமக்கு முந்தி உக்காந்திரக் கூடாதே. நாற்காலிய எப்படியும் பிடிச்சாகனும்னு முடிவு செஞ்சேன். கள்ளவோட்டுப் போட்டாவது பதவியப் பிடிக்க முடிவு செஞ்சேன். கெடைக்கலைன்னா என்ன...அடுத்தவன் கள்ளவோட்டுப் போட்டுட்டான்னு சொல்லிக்கலாம்னு முடிவோட இருந்தேன்.

வழியில வர்ர சில ஊர்களைப் பத்திச் சொல்லியே ஆகனும். அருப்புக்கோட்டையப் பத்திச் சொல்ல வேண்டியதில்லை. அப்புறம் வர்ர ஊர்ப்பேருங்களச் சொல்றேன். ஒவ்வொன்னும் அருமையான தமிழ்ப்பேருங்க. முத்தலாவரத்துல மட்டும் புரம் வரும். மத்தபடி எல்லாம் தமிழ்ப் பேருங்க. பந்தல்குடின்னு ஒரு சின்ன ஊர் உண்டு. அப்படியே முன்னாடி வந்தா நென்மேனி. கீழக்கரந்தை. மேலக்கரந்தை. முத்தலாபுரம். சிந்தலக்கரை. எட்டையபுரம். கீழ ஈரால். எப்போதும் வென்றான். குறுக்குச்சாலை (இங்கிருந்துதான் பாஞ்சாலங்குறிச்சிக்கு விலக்கு). அப்புறம் தூத்துக்குடி.

இதுல நடுவுல வர்ர முத்தலாவரம் பாலத்துலதான் ஒருத்தர் எறங்கனும். அந்த எடத்தைப் பிடிக்கத்தான் நான் போர்வெறியோட இருந்தேன். ஏன்னா நின்னுக்கிட்டு தூங்க முடியல. குதிர, ஆன, ஒட்டகச் சிவிங்கியெல்லாம் நின்னுகிட்டேதான் தூங்குமாம். எப்படித்தான் தூங்குதோ! இப்படி நெனச்சிக்கிட்டிருக்குறப்போ டக்டண்டனக்குன்னு சத்தம் வந்தது. டிரைவர் படக்குன்னு வண்டிய ஓரங்கட்டீட்டாரு. கண்டக்டரும் அவரும் எறங்கி என்னன்னு பாத்தாங்க. டங் டங்குன்னு இடிக்கிற சத்தம் கேட்டுச்சு. ஒடனே டிரைவரு வண்டியில ஏறி வண்டிய எடுத்தாரு. நல்ல வேளை பெரிய பிரச்சனையில்லைன்னு நெனச்சேன். ஆனா உண்மையிலேயே பெரிய பிரச்சனைதான்னு கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சிருச்சு.

gragavan
14-11-2006, 05:33 AM
டிரைவரு வேகத்தக் கூட்டுனதும் மறுபடியும் டண்டணக்கா. மறுபடியும் வண்டி ஓரங்கட்டல். நாலஞ்சு டங்குடங்கு. இப்ப மக்களும் கீழ எறங்கிப் பாக்கத் தொடங்கீட்டாங்க. ஒன்னுமில்லைங்க. டயர் இருக்குதுல்ல...அந்த டயரோட நடுவுல இருக்குற இரும்புப் பட்டைய உருளையில விரிசல். வண்டி வேகமாப் போகைல அந்த விரிசலோட ரெண்டு பக்கமும் இடிச்சுக்குது. இப்ப அடுத்து வண்டிய மாத்த எந்த ஊரும் இல்லை. தூத்துக்குடிதான் அடுத்து. எப்பாடு பட்டாவது தூத்துக்குடி போனாத்தான் வண்டிய மாத்த முடியும்! எப்படிப் போறது?

மாட்டு வண்டியில போயிருக்கீங்களா? அதுலயும் பெரிய பைதா உள்ள வண்டியில போயிருக்கீங்களா? உக்காந்த எடத்துலயே இருந்த மாதிரி இருக்கும். ஆனா நகண்டுக்கிட்டேயிருப்பீங்க. அந்த மாதிரி போனா தூத்துக்குடிக்குப் போயிரலாம்னு டிரைவர் வண்டிய உருட்டுனாரு. வெளிய சிலுசிலுன்னு தூறல்.

மேலைக்கரந்தைல ஒரு மோட்டல். சகசகன்னு சகதியா இருந்துச்சு. காலையில ஏழு மணிக்கெல்லாம் பசிச்சிருச்சு போல டிரைவருக்கும் கண்டெக்டருக்கும். ஒடனே மக்களும் எறங்கீட்டாங்க. அந்த முத்தலாரக்காரரும். கொஞ்சமாவது உக்காரலாமேன்னு நானும் உக்காந்துட்டேன். மத்த சீட்டுகள்ளயும் நின்னுக்கிட்டு வந்தவங்க உக்காந்துட்டாங்க. ஓசிச்சாப்பாடு முடிஞ்சு டிரைவரும் கண்டெக்டரும் வந்து வண்டியெடுத்தாங்க. மக்களும் படபடன்னு ஏறீட்டாங்க. வண்டி நகழுது. ஆனா அந்த முத்தாலரக்காரரக் காணம். நானும் திரும்பித் திரும்பிப் பாக்கேன்.

பாத்தா...படியில நிக்காரு. கையக் காட்டி என்னையவே உக்காந்துக்கிரச் சொன்னாரு. அடுத்தது முத்தலாரந்தான். நானும் நன்றி சொல்லி உக்காந்துக்கிட்டேன். சரசரன்னு ஒரு அழகான தூரல். பஸ்சுல டிரைவருக்குப் பின்னாடி சீட்டு. சும்மாயிருக்க முடியுமா? மொபைல்ல ஒரு போட்டோ படக்குன்னு புடிச்சிக்கிட்டேன்.

இப்பதான் உக்கார எடம் கிடைச்சிருச்சே. பதவி கெடச்சதும் மொத வேலை என்ன? ஓய்வெடுக்குறதுதான. அதத்தான் நானும் செஞ்சேன். அப்படியே அப்பப்ப தூங்கி அப்பப்ப எந்திரிச்சிக்கிட்டேன். ஒரு வழியா கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல தூத்துக்குடி பழைய பஸ்டாண்டுல எறங்கினேன். பஸ்டாண்டுல இருந்து வீட்டுக்கு நாலு நிமிச நடை. ஆனா சின்னப்பிள்ளையா இருந்தப்ப அதுவே ரொம்பத் தூரம். ஏன்னா ஊருக்குப் போகனும்னா பஸ்டாண்டுக்கு ஒவ்வொரு பொழுது ரிக்கிஷாவுல போவோம். அந்த ஊருக்கு அதுவே தொலைவுதான்.

நான் படபடன்னு பையத் தூக்கீட்டு நடந்தே வீட்டுக்குப் போயிட்டேன். அந்தத் தெருவுக்குள்ள...அதாங்க...புதுக்கிராமத்துல நொழஞ்சதும் பழைய நெனப்புகள் வந்து மோதுது. எத்தனையெத்தனை நினைவுகள். வீட்டுக்குப் போறதுக்குள்ள வழியில இருக்குற ஒவ்வொரு வரலாற்று பெருமை பெற்ற இடங்களையும் அங்க நடந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சொல்றேன். கேப்பீங்களா?

தொடரும்...

gragavan
14-11-2006, 05:41 AM
http://i29.photobucket.com/albums/c291/gragavan/MyPics/RainOnBus.jpg (http://photobucket.com/)

pradeepkt
14-11-2006, 11:45 AM
ஒரு வழியா ஊருக்குப் போயிச் சேந்தீங்களே... அதுமட்டுக்குஞ் சரி...
அதென்ன பொல்லாத மகா வரலாத்துப் பேறு பெத்த நிகழ்ச்சி? அதையுந்தாஞ் சொல்றது?

டங்கு டங்குணு மாட்டு வண்டி மாதிரி பஸ்ஸூல போனதுக்கே இந்த மாதிரி எழுதி இருக்கீகளே? உங்களை நெசமாவே அந்த தட்டு மாட்டு வண்டி (லப்பர் டயரு போட்டுருக்குமே அது...) யில அனுப்பீருந்தா என்ன பதிவு போட்டிருப்பீரு??

leomohan
14-11-2006, 02:58 PM
ஐயோ நான் போட்ட பதிவையே காணோம். யாரு எடுத்தீங்க? உண்மையச் சொல்லீருங்க. மன்றத்தில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன்.

அப்பா. கொஞ்சம் கவனிங்க இந்த பிரச்சனை. கறுப்பு வரலாறு பதிப்புகள் வெறும் வெள்ளை வெள்ளையா இருக்கு.

ஓவியா
14-11-2006, 07:33 PM
ராகவன்...

அருமையான பதிவுனு சொல்வதை விட
அட்டகாசமான பதிவுனுதான் சொல்லனும்...
அம்புட்டு ரசனையா இருக்கு உங்க சோக கதை.....:D

அந்த கிராமத்து சாலை பசுமையாய் அழகாக இருக்கு.....

ஆமா அதென்னா...ஒரு வரி பொடி வச்சு...யாருக்கு அது....
ஆறுமுகனேரிக்கு யாரும் டிக்கெட் வாங்கலை

சரி மறக்கமல் தொடரவும்....

ஓவியா
14-11-2006, 07:35 PM
ஒரு வழியா ஊருக்குப் போயிச் சேந்தீங்களே... அதுமட்டுக்குஞ் சரி...
அதென்ன பொல்லாத மகா வரலாத்துப் பேறு பெத்த நிகழ்ச்சி? அதையுந்தாஞ் சொல்றது?

டங்கு டங்குணு மாட்டு வண்டி மாதிரி பஸ்ஸூல போனதுக்கே இந்த மாதிரி எழுதி இருக்கீகளே? உங்களை நெசமாவே அந்த தட்டு மாட்டு வண்டி (லப்பர் டயரு போட்டுருக்குமே அது...) யில அனுப்பீருந்தா என்ன பதிவு போட்டிருப்பீரு??

பிரதீப்
அப்ப மாட்டு வண்டியிலே போயிருந்தா
நன்ப தேங்காய் பன் புலவரின் பதிவு அவார்ட் வாங்கும் அளவுக்கு போய்ருக்குமோ.......
அடுத்த தீபாவளுக்கு தங்களின் ஆசை நிறைவேற வேண்டிக்குவோம்.....:D :D

அப்ப, பதிவு இன்னும் பிரமாதமா வருமில்லே அதான்...:D

இளசு
14-11-2006, 07:48 PM
நாற்காலி ஆசை -அது கிடைக்காதபோதுதான் வெகு உக்கிரமாய்த் தாக்கும்..
'உக்கார்ந்த' கதை சொல்லிட்டீங்க..
ந்டந்து போய்க்கிட்டே நடந்த வரலாறையும் இதே போல் சுவையா சொல்லுங்க..

அசத்துறீங்க ராகவன்...

mukilan
15-11-2006, 03:45 AM
ஆறுமுகனேரி பரம்ஸ் அண்ணா ஊரு அல்லது சகோதரி தேம்பா ஊரு! எப்படி சரியாக் கண்டுபிடிச்சேன்.

பந்தல்குடிக்கு முன்னாடி "வாழ்வாங்கி"னு ஒரு குக்கிராமம் இருக்கிறதே! அதற்கு ஏன் அப்படி பேரு வந்திச்சுன்னு தெரியுமா? அருப்புக்கோட்டைல இருந்து விளாத்திகுளத்திற்கு நான் பலமுறை அந்த வழியில போயிருக்கேன். ஜெயவிலாஸ், பாண்டியன் அந்தப் பேருந்துகளில் பாட்டுக் கேட்டுக் கொண்டே பயணிக்கும் அந்த சுகம் இனி வராது.

பாரதி
17-11-2006, 02:46 PM
ம்ம்.... கிட்டத்தட்ட இருவது வருசம் போய்கிட்டும் வந்துகிட்டும் இருந்த ரோடாச்சே இராகவன்... மறக்க முடியுமா...?

மேலக்கரந்தையில் பஸ்ஸு நிக்கிற இடத்துல, ஒரு சின்ன காப்பி கடையும் அதுல கையில் எழுதுன ஒரு விளம்பர போர்டும் இருக்குமே.. பார்த்தீங்களா..? இன்னார் மேளம் - விருந்து சடங்குகளுக்கு அணுகவும்..னு சின்ன புள்ளைக கிறுக்குன மாதிரி..!

இந்த மோட்டல் தொந்தரவு எல்லாம் ஒரு பதினஞ்சு வருசமாத்தான். பந்தல்குடியில மொதல்ல "லக்கி"-ன்னு ஒண்ணு வந்துச்சு.. அப்புறம் பந்தல்குடி பஸ்ஸ்டாண்டுலேயே.. அப்புறம் எட்டயாபுரம் விளக்குல டிடிசி யோடா மோட்டல்... அப்புறம் இப்ப நீங்க சொன்ன மாதிரி... ஆனா ஒரு இடத்துலயும் சாப்பாடோ, டிஃபனோ வாய்ல வைக்க முடியாது...ஹும்....

தூத்துக்குடி ரோட்டையும் ரசனையோட படம் பிடிச்ச உங்கள பாராட்டாம இருக்க முடியாது..!

அறிஞர்
17-11-2006, 03:23 PM
அழகான வர்ணனையுடன்.... தமிழகத்தின் பேருந்து பயணத்தை மனதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்.

அடுத்த முறை செல்லும் போது... பாரதி அண்ணா சொன்ன விளம்பர பலகையை படம் பிடித்து வாருங்கள்..

ஓவியா
17-11-2006, 03:34 PM
அழகான வர்ணனையுடன்.... தமிழகத்தின் பேருந்து பயணத்தை மனதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்.

அடுத்த முறை செல்லும் போது... பாரதி அண்ணா சொன்ன விளம்பர பலகையை படம் பிடித்து வாருங்கள்..

ஆமாமா
அருமையான ஐடியா

நண்பர் காந்திக்கு தனி மடலில் அனுப்பி இன்றைய படம்னு போடலாமே

பாரதி அண்ணாவும் அதே ஊர்தானா????????

பாரதி
18-11-2006, 12:32 AM
Ţ¡,

¢ ռ â츢. ɢ ո Ȣ á. ŢӨ, 츢 ׸ ɢ . ɡ ½ ʧ ɾ..!

ஓவியா
18-11-2006, 11:36 AM
பாரதி அண்ணாவின் பதிவு......
(கன்வெடேரில் மற்றி, மீண்டும் பதிந்துல்லேன்)

அன்பு ஓவியா,

நான் தூத்துக்குடியில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் பல வருடங்கள் பணிபுரிந்திருக்கிறேன். பிறந்த ஊர் தேனிக்கு அருகில் ஒரு சிறிய கிராமம். விடுமுறைக்கும், மற்ற முக்கிய நிகழ்வுகளுக்கும் அடிக்கடி தேனிக்கு போவதுண்டு. அதனால் கிட்டத்தட்ட அந்த பயணங்கள் அப்படியே மனதில்..!

அப்படியா அண்ணா..:)

நன்றி

gragavan
18-11-2006, 03:19 PM
அனைத்து நண்பர்களும் பதிவை ரசித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

முகிலனும் பாரதி அண்ணாவும் மிகவும் ரசித்திருப்பார்கள் என்பது ஏற்கனவே ஊகிக்கக் கூடியதுதான். :-)

பாரதியண்ணா...அந்த முத்தலாரக் கடை நினைவிருக்கிறது. ஆனால் போர்டைப் பார்த்த நினைவு இல்லை.

பென்ஸ்
19-11-2006, 11:52 AM
ராகவன்...
முன்றாவது முறையாக படிக்கிறென்...
புரியாமல் அல்ல... படிக்க படிக்க ரசனையாக இருக்கு...

gragavan
20-11-2006, 01:41 PM
நன்றி பெஞ்சமின். :-) உங்களுடைய பாராட்டுகள்தானே நமக்கு ஊக்கம்.

ஓவியன்
15-02-2007, 08:47 AM
ராகவன் அருமையான ஒரு திரியினைத் தொடங்கி அதனை மிக நேர்தியாக நடத்திச் செல்கின்றீர்கள்!

வாழ்த்துக்கள்.

ஓவியா
17-02-2007, 08:56 PM
டிரைவரு வேகத்தக் கூட்டுனதும் மறுபடியும் டண்டணக்கா. மறுபடியும் வண்டி ஓரங்கட்டல். நாலஞ்சு டங்குடங்கு. இப்ப மக்களும் கீழ எறங்கிப் பாக்கத் தொடங்கீட்டாங்க. ஒன்னுமில்லைங்க. டயர் இருக்குதுல்ல...அந்த டயரோட நடுவுல இருக்குற இரும்புப் பட்டைய உருளையில விரிசல். வண்டி வேகமாப் போகைல அந்த விரிசலோட ரெண்டு பக்கமும் இடிச்சுக்குது. இப்ப அடுத்து வண்டிய மாத்த எந்த ஊரும் இல்லை. தூத்துக்குடிதான் அடுத்து. எப்பாடு பட்டாவது தூத்துக்குடி போனாத்தான் வண்டிய மாத்த முடியும்! எப்படிப் போறது?

மாட்டு வண்டியில போயிருக்கீங்களா? அதுலயும் பெரிய பைதா உள்ள வண்டியில போயிருக்கீங்களா? உக்காந்த எடத்துலயே இருந்த மாதிரி இருக்கும். ஆனா நகண்டுக்கிட்டேயிருப்பீங்க. அந்த மாதிரி போனா தூத்துக்குடிக்குப் போயிரலாம்னு டிரைவர் வண்டிய உருட்டுனாரு. வெளிய சிலுசிலுன்னு தூறல்.

மேலைக்கரந்தைல ஒரு மோட்டல். சகசகன்னு சகதியா இருந்துச்சு. காலையில ஏழு மணிக்கெல்லாம் பசிச்சிருச்சு போல டிரைவருக்கும் கண்டெக்டருக்கும். ஒடனே மக்களும் எறங்கீட்டாங்க. அந்த முத்தலாரக்காரரும். கொஞ்சமாவது உக்காரலாமேன்னு நானும் உக்காந்துட்டேன். மத்த சீட்டுகள்ளயும் நின்னுக்கிட்டு வந்தவங்க உக்காந்துட்டாங்க. ஓசிச்சாப்பாடு முடிஞ்சு டிரைவரும் கண்டெக்டரும் வந்து வண்டியெடுத்தாங்க. மக்களும் படபடன்னு ஏறீட்டாங்க. வண்டி நகழுது. ஆனா அந்த முத்தாலரக்காரரக் காணம். நானும் திரும்பித் திரும்பிப் பாக்கேன்.

பாத்தா...படியில நிக்காரு. கையக் காட்டி என்னையவே உக்காந்துக்கிரச் சொன்னாரு. அடுத்தது முத்தலாரந்தான். நானும் நன்றி சொல்லி உக்காந்துக்கிட்டேன். சரசரன்னு ஒரு அழகான தூரல். பஸ்சுல டிரைவருக்குப் பின்னாடி சீட்டு. சும்மாயிருக்க முடியுமா? மொபைல்ல ஒரு போட்டோ படக்குன்னு புடிச்சிக்கிட்டேன்.

இப்பதான் உக்கார எடம் கிடைச்சிருச்சே. பதவி கெடச்சதும் மொத வேலை என்ன? ஓய்வெடுக்குறதுதான. அதத்தான் நானும் செஞ்சேன். அப்படியே அப்பப்ப தூங்கி அப்பப்ப எந்திரிச்சிக்கிட்டேன். ஒரு வழியா கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல தூத்துக்குடி பழைய பஸ்டாண்டுல எறங்கினேன். பஸ்டாண்டுல இருந்து வீட்டுக்கு நாலு நிமிச நடை. ஆனா சின்னப்பிள்ளையா இருந்தப்ப அதுவே ரொம்பத் தூரம். ஏன்னா ஊருக்குப் போகனும்னா பஸ்டாண்டுக்கு ஒவ்வொரு பொழுது ரிக்கிஷாவுல போவோம். அந்த ஊருக்கு அதுவே தொலைவுதான்.

நான் படபடன்னு பையத் தூக்கீட்டு நடந்தே வீட்டுக்குப் போயிட்டேன். அந்தத் தெருவுக்குள்ள...அதாங்க...புதுக்கிராமத்துல நொழஞ்சதும் பழைய நெனப்புகள் வந்து மோதுது. எத்தனையெத்தனை நினைவுகள். வீட்டுக்குப் போறதுக்குள்ள வழியில இருக்குற ஒவ்வொரு வரலாற்று பெருமை பெற்ற இடங்களையும் அங்க நடந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சொல்றேன். கேப்பீங்களா?

தொடரும்...

ராகவன் சாருக்கு பணிவான வணக்கம்

மீதி தொடர் எங்கே சார்??

சேரன்கயல்
27-02-2007, 11:34 AM
ஒரு வழியா தூத்துக்குடியை சேர்ந்தாச்சு...
அடுத்து என்ன...??
ஆர்வம் அதிகரிக்கிறது...

வெற்றி
03-03-2007, 10:00 AM
ஸ்ஸ்ஸ்ஸ்
அப்பா இப்போவே கண்ணை கட்டுதே....
இதுலே தொடருமா????

மனோஜ்
15-04-2007, 09:06 AM
மீதி எங்க ராகவன் அவர்களே