PDA

View Full Version : நுழைவுத் தேர்வு ரத்து



mgandhi
13-11-2006, 05:58 PM
மருத்துவம், பொறியியல் படிப்பவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதை ரத்து செய்யலாம் என்று முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்காக புதிய சட்டம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. சென்னை உள்பட பெருநகரங்களில் வசிக்கும் மாணவர்கள் பல்வேறு வகைகளில் பிரத்யேகப் பயிற்சி பெற்று நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். கிராமப்புறங்களில் நன்கு படித்து வரும் மாணவர்களால் கூட அவர்களுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதும், தொழிற்கல்விக் கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வது பற்றி ஆராய்ந்து பரிந்துரை செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்பட்டது.

உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன், சட்டத்துறை செயலாளர் தீனதயாளன், முன்னாள் செயலாளர் பார்த்தசாரதி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எஸ்.கே.பிரபாகர், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கமுத்து ஆகியோர் குழுவில் இடம் பெற்றி ருந்தனர்.

இந்த நிபுணர் குழு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, நுழைவுத் தேர்வு பற்றிய கருத்துகளை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கேட்டறிந்தது. அவற்றின் அடிப்படையில் விரிவான அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையை சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதியிடம் நேற்று குழுத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் வழங்கினார். அப்போது, உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் திரிபாதி மற்றும் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

நிபுணர் குழு அறிக்கை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நுழைவுத் தேர்வு ரத்து செய்வது குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட குழுவினர், தங்கள் பரிந்துரைகளை முதல்வரிடம் அளித்துள்ளனர்.

நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன்பின், டிசம்பர் 4ல் கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரிய சட்டமுன்வடிவை கொண்டு வந்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

pradeepkt
14-11-2006, 04:22 AM
இது குறித்து ஏற்கனவே நம் மன்றத்தில் ஒரு திரி ஓடிக் கொண்டிருந்தது. தேடிக் கொடுக்கிறேன் அதை...
இது நல்லதா கெட்டதான்னு விவாதிப்போம்