PDA

View Full Version : செல்(லக்) கவிதைகள் !



franklinraja
13-11-2006, 01:00 PM
ஒரு இதயம்
துடிக்கும்வரை
யாரும் கவனிக்கமாட்டார்கள்..

ஆனால்,
நின்றபின்
பலரும் துடிப்பார்கள்..!

rithik
13-11-2006, 04:06 PM
அருமை நண்பா ! அருமை,


நன்றி,
ரீத்திக்

ஓவியா
13-11-2006, 04:12 PM
நடைமுறை தத்துவமா.....ம்ம்ம்ம்

டன்டனக்கா டன்டனக்கா..(ராகத்துடன்)
பாராட்டுக்கள்

mgandhi
13-11-2006, 05:25 PM
நருக்கென துடிக்க விட்டிர்

பாராட்டுக்கள்

pradeepkt
14-11-2006, 04:18 AM
சபாஷ்...
வெகு நாட்களுக்குப் பிறகு நான் படித்த கவிதை.
அப்படியே "நச்"சுன்னு மூஞ்சியில குத்தின மாதிரி இருந்தது...

guna
14-11-2006, 06:28 AM
நெஜம் தான்..

சொல்ல நினைத்ததை இவ்வளவு சுருக்கமா, சொன்னதே, அழகு..
வாழ்த்துகள் ராஜா..

குணா

gragavan
14-11-2006, 07:07 AM
நல்ல கவிதை. ரசித்தேன். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது எவ்வளவு உண்மை.

franklinraja
14-11-2006, 08:07 AM
அனைத்து இதயங்களுக்கும் நன்றி..!

franklinraja
14-11-2006, 08:14 AM
என் அன்பை அடகு வைக்கிறேன் -
உன் மனதைக் கடனாகக் கொடு...
வாழ்க்கை முழுவதும் வட்டி கட்டுகிறேன் -
உன் காதலனாய்..!

பென்ஸ்
14-11-2006, 09:06 AM
பிராங்..
அருமையான கவிதைகள்...
கவிதையை கொடுக்கும் போது, படைப்பாளியின் பெயரையும் கொடுக்கலாமே..!

franklinraja
14-11-2006, 09:36 AM
பிராங்..
அருமையான கவிதைகள்...
கவிதையை கொடுக்கும் போது, படைப்பாளியின் பெயரையும் கொடுக்கலாமே..!

Cell-லிலிருந்து சுட்டவைதான் செல்(லக்) கவிதைகள்

படைப்பாளி யாரென்று தெரியவில்லையே..!! ;)

franklinraja
15-11-2006, 01:00 PM
பிரிந்த காதல்
சேரும்போது
கண்கள் பேசும்...

பிரிந்த நட்பு
சேரும்போது
கண்ணீர் கூட பேசும்..!

ஓவியா
15-11-2006, 06:41 PM
என் அன்பை அடகு வைக்கிறேன் -
உன் மனதைக் கடனாகக் கொடு...
வாழ்க்கை முழுவதும் வட்டி கட்டுகிறேன் -
உன் காதலனாய்..!


கவிஞரின் முகவரி கிடைக்குமா?

:D :D :D :D

தாமரை
16-11-2006, 01:09 AM
ஒரு இதயம்
துடிக்கும்வரை
யாரும் கவனிக்கமாட்டார்கள்..

ஆனால்,
நின்றபின்
பலரும் துடிப்பார்கள்..!

இப்போ இன்னான்றெ நைனா! ஹார்ட்டு துடிச்சிக்கின்னு கீறது ரைட்டா ராங்கா? ஜாலியா, சேடா?

உன் ஹார்ட்டு துடிக்குதுன்னு என் ஹார்ட்டு துடிக்குது - அப்டிக்கா யாராச்சும் டகுல் பாச்சி காட்டிகினிருந்தா நம்பிருவியா?

தாமரை
16-11-2006, 01:11 AM
என் அன்பை அடகு வைக்கிறேன் -
உன் மனதைக் கடனாகக் கொடு...
வாழ்க்கை முழுவதும் வட்டி கட்டுகிறேன் -
உன் காதலனாய்..!

அப்போ கண்ணாலம் கட்டிக்கிற ரோசனியே இல்ல. யோவ் அசலை திருப்பித் தாய்யா! வட்டியை அப்பால பாக்கலாம்.:eek: :eek: :eek:

தாமரை
16-11-2006, 01:14 AM
பிரிந்த காதல்
சேரும்போது
கண்கள் பேசும்...

பிரிந்த நட்பு
சேரும்போது
கண்ணீர் கூட பேசும்..!

நட்போ காதலோ பிரிவதில்லை.. பிரிவது நண்பர்களும் காதலர்களும் தான்.. காதலும் நட்பும் ப்ரியாமலேயே இருப்பதால் தான் காதலர்களும் நண்பர்களும் மீண்டும் இணைகிறார்கள்..

காதலர்கள் சேர்ந்தால் கண்கள் பார்த்துக் கொள்ளும் தொலைவிலா இருக்கும் (அணைத்துக் கொள்ள மாட்டார்களோ:confused: :confused: :confused: )

கண்ணீர் வந்ததால் நண்பர்கள் சேர்ந்தனரா,, நண்பர்கள் சேர்ந்ததால் கண்ணீர் வந்ததா?

எனக்கென்னவோ கண்ணீர் தான் முதலில் எனத் தோன்றுகிறது..

franklinraja
16-11-2006, 10:14 AM
கவிஞரின் முகவரி கிடைக்குமா?

:D :D :D :D

என்ன ஓவியா...

கடன் வாங்கவா..?
வட்டி கட்டவா..?? :D

franklinraja
16-11-2006, 10:43 AM
நட்போ காதலோ பிரிவதில்லை.. பிரிவது நண்பர்களும் காதலர்களும் தான்.. காதலும் நட்பும் ப்ரியாமலேயே இருப்பதால் தான் காதலர்களும் நண்பர்களும் மீண்டும் இணைகிறார்கள்..

காதலர்கள் சேர்ந்தால் கண்கள் பார்த்துக் கொள்ளும் தொலைவிலா இருக்கும் (அணைத்துக் கொள்ள மாட்டார்களோ:confused: :confused: :confused: )

கண்ணீர் வந்ததால் நண்பர்கள் சேர்ந்தனரா,, நண்பர்கள் சேர்ந்ததால் கண்ணீர் வந்ததா?

எனக்கென்னவோ கண்ணீர் தான் முதலில் எனத் தோன்றுகிறது..

இங்கே
நட்பு என்பது நண்பர்களையும்
காதல் என்பது காதலர்களையும் குறிக்கும்
என்று நினைக்கிறேன்..!

franklinraja
16-11-2006, 11:43 AM
காதலிப்பது ஒருவரை...
கல்யாணம் செய்வது இன்னொருவரை...

நீ கல்யாணம் செய்பவர்
உனக்கு கணவனாகவோ மனைவியாகவோ அகிவிடுகின்றனர்...
நீ காதலித்தவரின் பெயரோ
உன் Mail ID-க்கு பாஸ்வேர்டாய் மாறிவிடுகிறது..! :confused:

ஓவியா
16-11-2006, 03:35 PM
பிரிந்த காதல்
சேரும்போது
கண்கள் பேசும்...

இதெல்லாம் அந்த காலத்தில்.......இப்ப _______ (யோசிச்சுகுங்கோ)

பிரிந்த நட்பு
சேரும்போது
கண்ணீர் கூட பேசும்..!

அன்றிலிருந்து இன்றுவரை அதே அதே...அதான் நட்பு

ஓவியா
16-11-2006, 03:38 PM
என்ன ஓவியா...

கடன் வாங்கவா..?
வட்டி கட்டவா..?? :D

வட்டி வாங்க தான்

சும்மா ஒரு லூலுவாய்க்கு....:D

ஓவியா
17-11-2006, 03:21 PM
காதலிப்பது ஒருவரை...
கல்யாணம் செய்வது இன்னொருவரை...

நீ கல்யாணம் செய்பவர்
உனக்கு கணவனாகவோ மனைவியாகவோ அகிவிடுகின்றனர்...
நீ காதலித்தவரின் பெயரோ
உன் Mail ID-க்கு பாஸ்வேர்டாய் மாறிவிடுகிறது..! :confused:


காதலில் காதலியோ /காதலனோ தோற்றிருக்கலாம் ஆனால் காதல் தோற்கவில்லை...
அப்படிதானே.....:)

தாமரை
20-11-2006, 09:42 AM
பிரிந்த காதல்
சேரும்போது
கண்கள் பேசும்...

பிரிந்த நட்பு
சேரும்போது
கண்ணீர் கூட பேசும்..!



நட்போ காதலோ பிரிவதில்லை.. பிரிவது நண்பர்களும் காதலர்களும் தான்.. காதலும் நட்பும் ப்ரியாமலேயே இருப்பதால் தான் காதலர்களும் நண்பர்களும் மீண்டும் இணைகிறார்கள்..

காதலர்கள் சேர்ந்தால் கண்கள் பார்த்துக் கொள்ளும் தொலைவிலா இருக்கும் (அணைத்துக் கொள்ள மாட்டார்களோ:confused: :confused: :confused: )

கண்ணீர் வந்ததால் நண்பர்கள் சேர்ந்தனரா,, நண்பர்கள் சேர்ந்ததால் கண்ணீர் வந்ததா?

எனக்கென்னவோ கண்ணீர் தான் முதலில் எனத் தோன்றுகிறது..{/Quote]
[quote=franklinraja;160514]

இங்கே
நட்பு என்பது நண்பர்களையும்
காதல் என்பது காதலர்களையும் குறிக்கும்
என்று நினைக்கிறேன்..!

காதலும் நட்பும்
காதலர்களும் நண்பர்களும்..

காதலர்கள் காதலாக
நண்பர்கள் நட்பாக
இருக்க முடியும்..

ஆகி விட முடியாது...

franklinraja
21-11-2006, 12:18 PM
நான் ரசித்த
முதல் ஹைக்கூ
-அவள் பெயர்.

ஓவியா
21-11-2006, 04:01 PM
நான் ரசித்த
முதல் ஹைக்கூ
-அவள் பெயர்.


இரண்டு வரியில் பெயரா

எ.க.
அகிலாண்ட கோடி
பெருமாண்ட நாயகி

என்ன... இப்படி தானே ......:eek: இல்லையா :eek:


சரி-சரி அந்த பெயர் தான் என்ன நண்பா?

franklinraja
23-11-2006, 09:17 AM
இரண்டு வரியில் பெயரா

எ.க.
அகிலாண்ட கோடி
பெருமாண்ட நாயகி

என்ன... இப்படி தானே ......:eek: இல்லையா :eek:


சரி-சரி அந்த பெயர் தான் என்ன நண்பா?

ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
- உன்னை நான் காதலிக்க வேணும்...
சின்னஞ்சிறு குழந்தையாய் மாறி
- உன் மடியில் படுத்து உறங்க வேணும்...
சந்தித்த நாள்முதலாய் நடந்ததை
- நாம் பேச வேணும்...
என் தங்கத் தாரகையே
- நீ எனக்கு தாரமாக வேணும்..!

என்ன ஓவியா...

பெயரை கண்டுபிடிச்சாச்சா...?! :D

leomohan
23-11-2006, 10:00 AM
தூள் கிளப்பறீங்க ராஜா.

ஓவியா
23-11-2006, 03:26 PM
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
- உன்னை நான் காதலிக்க வேணும்...
சின்னஞ்சிறு குழந்தையாய் மாறி
- உன் மடியில் படுத்து உறங்க வேணும்...
சந்தித்த நாள்முதலாய் நடந்ததை
- நாம் பேச வேணும்...
என் தங்கத் தாரகையே
- நீ எனக்கு தாரமாக வேணும்..!

என்ன ஓவியா...

பெயரை கண்டுபிடிச்சாச்சா...?! :D

;)
தாரா

franklinraja
24-11-2006, 05:45 AM
;)
தாரா B)

ஹூம்ஹூம்...
(இல்ல.ன்றதத்தான் அப்படி எழுத ட்ரைப்பன்னேன்.. ஹி..ஹி..ஹி.. :D)

உங்களுக்கு இன்னொரு சான்ஸ்...

ஒரு க்ளூ: ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு எழுத்து... :rolleyes:

sarcharan
24-11-2006, 05:53 AM
ஹூம்ஹூம்...
(இல்ல.ன்றதத்தான் அப்படி எழுத ட்ரைப்பன்னேன்.. ஹி..ஹி..ஹி.. :D)

உங்களுக்கு இன்னொரு சான்ஸ்...

ஒரு க்ளூ: ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு எழுத்து... :rolleyes:



ராதா???

franklinraja
24-11-2006, 06:13 AM
ராதா???

ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு எழுத்து..! ;)

மொத்தம் நான்கு வரில்ல இருக்கு..!! :D

மதி
24-11-2006, 06:24 AM
ஹூம்ஹூம்...
(இல்ல.ன்றதத்தான் அப்படி எழுத ட்ரைப்பன்னேன்.. ஹி..ஹி..ஹி.. :D)

உங்களுக்கு இன்னொரு சான்ஸ்...

ஒரு க்ளூ: ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு எழுத்து... :rolleyes:
ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லுங்க ராஜா..
இது நாலு வரியா..இல்ல எட்டு வரியா????

franklinraja
24-11-2006, 07:17 AM
உன் நினைவாக
என்னிடம் ஒன்றுமில்லை...
ஆனால், என்னிடம்
உன் நினைவைத்தவிர வேறொன்றுமில்லை..! :rolleyes:

franklinraja
24-11-2006, 07:22 AM
ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லுங்க ராஜா..
இது நாலு வரியா..இல்ல எட்டு வரியா????

நாலு வரியத்தான், எட்டு வரியா மடக்கி மடக்கி எழுதிருக்கேன்... ;)

நீங்க என்னை மடக்கிட்டீங்க போங்க.. :D

franklinraja
24-11-2006, 07:29 AM
கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்...
என் உயிரோடு கலந்துவிட்டாய்
உயிரே உன்னை எப்படி பிரிவேன்..! :rolleyes:

தாமரை
24-11-2006, 10:25 AM
கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்...
என் உயிரோடு கலந்துவிட்டாய்
உயிரே உன்னை எப்படி பிரிவேன்..! :rolleyes:

கண்ணீரில் கண் கரையுமா? என்ன அபத்தமப்பா..:rolleyes: :rolleyes:
கண்ணில் விழுந்தவளை
கண்ணீரில் கழுவலாம்...
இதயத்தில் விழுந்தவளை
செந்நீரில் கழுவலாமா?

ஆமாம் நீர் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என் வசனம் பேச முடியாதே! இப்போ என்ன செய்வீங்க?? இப்போ என்ன செய்வீங்க??:eek:

sarcharan
24-11-2006, 11:16 AM
கண்ணீரில் கண் கரையுமா? என்ன அபத்தமப்பா..:rolleyes: :rolleyes:
கண்ணில் விழுந்தவளை
கண்ணீரில் கழுவலாம்...
இதயத்தில் விழுந்தவளை
செந்நீரில் கழுவலாமா?

ஆமாம் நீர் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என் வசனம் பேச முடியாதே! இப்போ என்ன செய்வீங்க?? இப்போ என்ன செய்வீங்க??:eek:

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி
வேறொன்றும் அறியேன் பராபரமே..!" என்பது அவரது கொள்கை....

ஓவியா
24-11-2006, 05:51 PM
ஜென்சித்தா

ஓவியா
24-11-2006, 05:55 PM
கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்...
என் உயிரோடு கலந்துவிட்டாய்
உயிரே உன்னை எப்படி பிரிவேன்..! :rolleyes:



ஓ அப்ப உயிர் போனவுடன் எப்படி !!

சரி ஒருவகையிலே நல்லதுதான்....

மோகன் சொன்னது போல் ஆவிகள் காதலை தொடரலாமே...

என்ன நாஞ்சொல்லுறது

ஓவியா
24-11-2006, 06:03 PM
உன் நினைவாக
என்னிடம் ஒன்றுமில்லை...
ஆனால், என்னிடம்
உன் நினைவைத்தவிர வேறொன்றுமில்லை..! :rolleyes:

கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்
அவன் காதலித்து வேதனையில் ........

ஒருவேலை உண்மையிலே அவருக்கு இந்த அனுபவன் இருந்திருந்தா,
கண்கள், கைகள், செவிகள் போல் இரண்டு இதயமும் கொடுத்திருப்பாறோ...

நினைவு நமக்கு சொந்தமான ஒன்று,
அதில் நினைவை நினைப்பதும் மறப்பதும் அவர் அவர் விருப்பமே......

franklinraja
27-11-2006, 06:04 AM
ஜென்சித்தா

நல்ல முயற்சி ஓவியா...

ஆனாலும் முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள் மட்டுமே சரி...

மீண்டும் ஒருமுறை முயற்சியுங்களேன்..! :rolleyes:

franklinraja
27-11-2006, 02:02 PM
கண் இமைக்கும் நேரத்தில்
சேர்வது நட்பல்ல...
கண்ணும் இமையும் போல
சேர்ந்திருப்பது தான் நட்பு..!

மதி
28-11-2006, 02:04 AM
நல்ல முயற்சி ஓவியா...

ஆனாலும் முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள் மட்டுமே சரி...

மீண்டும் ஒருமுறை முயற்சியுங்களேன்..! :rolleyes:
ஜெசிந்தா..!

franklinraja
28-11-2006, 06:05 AM
ஜெசிந்தா..!

மனுஷனை
திக்குமுக்காடவைத்துவிட்டீர்-போங்கள்..!

franklinraja
28-11-2006, 07:36 AM
எல்லா கடின உழைப்பாளிகளும்
வெற்றியாளர்களில்லை...
ஆனால், எல்லா வெற்றியாளர்களும்
கடின உழைப்பாளிகளே..!

franklinraja
28-11-2006, 07:53 AM
உரிமை கொண்டாடும்
உறவுகளை விட
உயிரைக் கொண்டாடும்
நட்பைக் கொண்டாடுவோம்..!

ஓவியா
28-11-2006, 05:25 PM
ஜெசிந்தா..!


நன்றி மதி ஹீரோ போல் வந்து காப்பாற்றினாய்....:)

ஓவியா
28-11-2006, 06:17 PM
எல்லா கடின உழைப்பாளிகளும்
வெற்றியாளர்களில்லை...
ஆனால், எல்லா வெற்றியாளர்களும்
கடின உழைப்பாளிகளே..!



உரிமை கொண்டாடும்
உறவுகளை விட
உயிரைக் கொண்டாடும்
நட்பைக் கொண்டாடுவோம்..!


அழகான பொன்மொழிகள்

பாரட்டுக்கள் நண்பா

தொடரவும்

மதி
29-11-2006, 01:42 AM
நன்றி மதி ஹீரோ போல் வந்து காப்பாற்றினாய்....:)
அக்கா..
ஹீரோ-ல்லாம் ஆக வேண்டாம்..ஜீரோ ஆகாம இருந்தால் சரி..!

pradeepkt
29-11-2006, 04:15 AM
அக்கா..
ஹீரோ-ல்லாம் ஆக வேண்டாம்..ஜீரோ ஆகாம இருந்தால் சரி..!
கெட்டிக்காரன்லே நீ! B)

மதி
29-11-2006, 05:26 AM
கெட்டிக்காரன்லே நீ! B)
எதுக்குச் சொல்லுதீய..?

ஓவியா
29-11-2006, 05:55 PM
அக்கா..
ஹீரோ-ல்லாம் ஆக வேண்டாம்..ஜீரோ ஆகாம இருந்தால் சரி..!

இதை ஒரு வரி கதையில் வந்து எழுதுங்க தம்பி.......:D

franklinraja
01-12-2006, 10:56 AM
பிரிந்திருந்து
பிரியம் காட்டவேண்டாம்..
அருகில் இருந்து
சண்டைபோடு - அது போதும்..! :rolleyes:

ஓவியா
01-12-2006, 12:46 PM
பிரிந்திருந்து
பிரியம் காட்டவேண்டாம்..
அருகில் இருந்து
சண்டைபோடு - அது போதும்..! :rolleyes:

அலைபாயுதே!!!!!!!!!:D

கண்ணுக்கு தெரியாத தேவதையைவிட
அருகில் இருக்கும் பேய் ஓகேன்றீங்க.....:p

ரசித்தேன்

நன்றி

தொடருங்கள்

franklinraja
04-12-2006, 09:47 AM
ஒரு கவிஞன் சொன்னது:

கடலைக்கூட
கால் நனையாமல்
கடந்துவிடலாம்...

ஆனால்,

வாழ்க்கையை மட்டும்
கண்ணை நனைக்காமல்
கடக்க முடியாது..! :confused:

franklinraja
04-12-2006, 12:36 PM
அன்று
காந்தி உழைத்தார்
நாட்டுக்காக...

இன்று
மக்கள் உழைக்கிறார்கள்
காந்தி நோட்டுக்காக..! :D

franklinraja
04-12-2006, 12:52 PM
கடந்துவிட்ட காலம்...
இழந்துவிட்ட வாய்ப்பு...
சொல்லிவிட்ட வார்த்தை...
கொடுத்துவிட்ட இதயம்...

இவையாவும் திரும்பப்பெற முடியாது..! :rolleyes:

pradeepkt
05-12-2006, 03:47 AM
கடந்துவிட்ட காலம்...
இழந்துவிட்ட வாய்ப்பு...
சொல்லிவிட்ட வார்த்தை...
கொடுத்துவிட்ட இதயம்...

இவையாவும் திரும்பப்பெற முடியாது..! :rolleyes:
இங்ஙனதாங்க ஒதைக்குது...
இப்பப் பலபேரு இதயத்தை பேங்க் டெப்பாஸிட் மாதிரி உபயோக்கிறாங்க. வேணுங்கறபோது கொடுக்குறதும் திரும்ப வட்டியோட எடுக்கிறதும்... சகஜமுங்க. ஆனா ஒண்ணு பாருங்க வட்டி மட்டும் எப்பவுமே அநியாய வட்டிதேன்.

ஓவியா
05-12-2006, 01:51 PM
ஒரு கவிஞன் சொன்னது:

கடலைக்கூட
கால் நனையாமல்
கடந்துவிடலாம்...

ஆனால்,

வாழ்க்கையை மட்டும்
கண்ணை நனைக்காமல்
கடக்க முடியாது..! :confused



அன்று
காந்தி உழைத்தார்
நாட்டுக்காக...

இன்று
மக்கள் உழைக்கிறார்கள்
காந்தி நோட்டுக்காக..! :D


கடந்துவிட்ட காலம்...
இழந்துவிட்ட வாய்ப்பு...
சொல்லிவிட்ட வார்த்தை...
கொடுத்துவிட்ட இதயம்...

இவையாவும் திரும்பப்பெற முடியாது..! :rolleyes:

முத்து முத்தாய் செல்(லக்) கவிதைகள்

ரசித்தேன்

பாராட்டுகிறேன்

franklinraja
05-12-2006, 01:56 PM
முத்து முத்தாய் செல்(லக்) கவிதைகள்

ரசித்தேன்

பாராட்டுகிறேன்

நன்றி.. நன்றி.. நன்றி..! :D

franklinraja
06-12-2006, 07:43 AM
வான் கொண்ட நிலவுக்கு
மூன்றாம் பிறை அழகு..
நான் கொண்ட காதலுக்கு
நீ மட்டுமில்லை -
உன் நிழல்கூட அழகு..!

sridhark2k
23-12-2006, 08:50 AM
செல் கவிதைகள் இரண்டும் அருமை....

நன்றி : தமிழ்மன்றம்

meera
23-12-2006, 02:37 PM
வான் கொண்ட நிலவுக்கு
மூன்றாம் பிறை அழகு..
நான் கொண்ட காதலுக்கு
நீ மட்டுமில்லை -
உன் நிழல்கூட அழகு..!


ராஜா,

காதல் கவிதை தூள் மக்கா.

எங்க கொஞ்ச நாளா மன்றம் பக்கம் ஆளே காணோம்??:eek: :eek: :eek:

franklinraja
26-12-2006, 05:32 AM
ராஜா,

காதல் கவிதை தூள் மக்கா.

எங்க கொஞ்ச நாளா மன்றம் பக்கம் ஆளே காணோம்??:eek: :eek: :eek:

இங்கின தான் சுத்திக்கிட்டு இருக்கோம்... :)

சில நேரம் வேலை (:rolleyes:) காரணமாக, பதிவிட முடிவதில்லை..!

தாமரை
26-12-2006, 05:52 AM
வான் கொண்ட நிலவுக்கு
மூன்றாம் பிறை அழகு..
நான் கொண்ட காதலுக்கு
நீ மட்டுமில்லை -
உன் நிழல்கூட அழகு..!

நீ
நான்
நிழல்

franklinraja
26-12-2006, 06:18 AM
உறக்கம் இல்லாத
இரவுகள் இருக்கலாம்...
ஆனால் -
விடியல் இல்லாத
இரவு என்றும் இல்லை..!

இன்றைய உறக்கத்தை விட்டு
நாளைய விடியலைத்தேடு..!

தாமரை
26-12-2006, 06:20 AM
உறக்கம் இல்லாத
இரவுகள் இருக்கலாம்...
ஆனால் -
விடியல் இல்லாத
இரவு என்றும் இல்லை..!

இன்றைய உறக்கத்தை விட்டு
நாளைய விடியலைத்தேடு..!


ஒரு இரவுக்கு
ஒரு விடியல்தான்

ஆனால்
ஒரு இரவுக்கு
கோடிக்கணக்கான
உறக்கங்கள்

இப்போ மறுபரிசீலனை செய்து சொல்லவும்..

franklinraja
26-12-2006, 08:02 AM
ஒரு இரவுக்கு
ஒரு விடியல்தான்

ஆனால்
ஒரு இரவுக்கு
கோடிக்கணக்கான
உறக்கங்கள்

இப்போ மறுபரிசீலனை செய்து சொல்லவும்..

செல்லில்
இதை அனுப்பிய
சென்டரை (அனுப்புநரை)
கேக்கோணுமே...! :D

தாமரை
26-12-2006, 08:24 AM
செல்லில்
இதை அனுப்பிய
சென்டரை (அனுப்புநரை)
கேக்கோணுமே...! :D

ஒருவனுக்கு
ஓரிரவு
ஓருறக்கம்
ஒரு விடியல்

உறக்கம் வராமல் போகலாம்
விடியல் வந்தே தீரும்


இப்படின்னு சொல்லணும்

franklinraja
04-01-2007, 06:53 AM
உலகத்தில் மிக மோசமான விசயம்
"உன்னால் யாராவது கண்ணீர் சிந்துவது"

நல்ல விசயம்
"உனக்காக யாராவது கண்ணீர் சிந்துவது"

-விவேகானந்தர்.

gayathri.jagannathan
04-01-2007, 07:11 AM
கலக்குங்க ப்ராங்க்ளின் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை...

என்னோட பங்குக்கு நானும் ஏதாவது கவிதை போட வேண்டாமா? இதோ செல்லில் வந்த சிறுகவிதை

அன்பு என்ற தலைப்பில்
ஒரு கவிதை கேட்டார்கள் என்னிடம்...

"அம்மா" என்றேன்

கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னும் சிறியதாய் சொல்லி
இருப்பேன்.....

" நீ " என்று!!

franklinraja
04-01-2007, 07:25 AM
கலக்குங்க ப்ராங்க்ளின் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை...

என்னோட பங்குக்கு நானும் ஏதாவது கவிதை போட வேண்டாமா? இதோ செல்லில் வந்த சிறுகவிதை

அன்பு என்ற தலைப்பில்
ஒரு கவிதை கேட்டார்கள் என்னிடம்...

"அம்மா" என்றேன்

கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னும் சிறியதாய் சொல்லி
இருப்பேன்.....

" நீ " என்று!!

வாங்க காயத்ரி...

தங்களுடைய செல்(லக்) கவிதையும் மிகவும் அருமை... :)

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

gayathri.jagannathan
04-01-2007, 11:29 AM
ப்ராங்க்ளின், தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி...

தங்களுக்கும் (மன்றத்து உறுப்பினர்களுக்கும் :D :D :D ) எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

franklinraja
04-01-2007, 02:23 PM
மனிதக் காட்சி சாலையைப் பார்க்க
மிருகங்கள் வந்து செல்கின்றன.
-முதியோர் இல்லம்.

franklinraja
04-01-2007, 02:31 PM
ஐய்யயோ ரெண்டு தடவை பதிவு பண்ணிட்டேனே:eek: :eek: ... இப்போ என்ன பண்றது? ஆமா ப்ராங்க்ளின் ...பண்ணின பதிவை எப்படி நீக்குவது?

அட ஆமாம்...

Edit மற்றும் Quote மட்டும் தான் இருக்கிறது.. Delete இல்லை..! :eek:

நான் இதுவரை ஏதும் delete செய்யாததால், தெரிந்துகொள்ளவில்லை..! :D

"மன்றம் குறித்த சந்தேகங்களில்" கேட்டால், மக்கள் சொல்லிவிடுவார்கள்..! :)

gayathri.jagannathan
05-01-2007, 05:54 AM
மனிதக் காட்சி சாலையைப் பார்க்க
மிருகங்கள் வந்து செல்கின்றன.
-முதியோர் இல்லம்.


இந்த கவிதையின் மூலம், பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் ஈவு இரக்கம் (குறைந்தபட்சம் மனிதாபிமானம்... ம்ம்ஹூம்) எதுவும் இன்றி வாட விடும் பிள்ளைகளின் நடு மண்டையில் சம்மட்டி அடி கொடுத்துத்டீங்க... (சற்றே பலமான அடிதான்...) வாழ்த்துக்கள்...

இன்னும் ஒரு விஷயம்.. இது செல்(லர்)க்கவிதை இல்லையே.... எல்லார் மனதிலும் செல்லும் கவிதை... உங்கள் பேர் சொல்லும் கவிதை ...:p :p

franklinraja
05-01-2007, 05:59 AM
இந்த கவிதையின் மூலம், பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் ஈவு இரக்கம் (குறைந்தபட்சம் மனிதாபிமானம்... ம்ம்ஹூம்) எதுவும் இன்றி வாட விடும் பிள்ளைகளின் நடு மண்டையில் சம்மட்டி அடி கொடுத்துத்டீங்க... (சற்றே பலமான அடிதான்...) வாழ்த்துக்கள்...

இன்னும் ஒரு விஷயம்.. இது செல்(லர்)க்கவிதை இல்லையே.... எல்லார் மனதிலும் செல்லும் கவிதை... உங்கள் பேர் சொல்லும் கவிதை ...:p :p

மிக்க நன்றி காயத்ரி..

உள்ளம் தொட்ட கவிதைகளை, பகிர்ந்து கொள்ள விரும்பிதான் இந்தப் பகுதி..! :)

ஷீ-நிசி
05-01-2007, 06:08 AM
விக்கல் எடுக்கின்றது..!
யோசிக்கின்றேன் தண்ணீர் குடிக்க..!
ஏனென்றால்,
நினைப்பது நீயாக இருந்தால்
நிலைக்கட்டுமே
சில நிமிடங்கள்

செல்லில் வந்த கவிதை...

franklinraja
05-01-2007, 06:31 AM
விக்கல் எடுக்கின்றது..!
யோசிக்கின்றேன் தண்ணீர் குடிக்க..!
ஏனென்றால்,
நினைப்பது நீயாக இருந்தால்
நிலைக்கட்டுமே
சில நிமிடங்கள்

செல்லில் வந்த கவிதை...

ம்ம்ம்...

செல்(லமான) கவிதை தான்... :D

franklinraja
08-01-2007, 01:53 PM
சிரிக்க வைப்பது மட்டும் நட்பல்ல -
சிந்திக்க வைப்பதும் நட்பு..

சந்தோஷப்பட வைப்பது மட்டும் நட்பல்ல -
சங்கடங்களை சமாளிக்க வைப்பதும் நட்பு..

அரட்டை அடிப்பது மட்டும் நட்பல்ல -
அனைத்தும் அறிய வைப்பதும் நட்பு..

அழ வைப்பது மட்டும் நட்பல்ல -
நீ விழுந்தால் எழ வைப்பதும் நட்பு..!

ஓவியா
08-01-2007, 11:02 PM
விக்கல் எடுக்கின்றது..!
யோசிக்கின்றேன் தண்ணீர் குடிக்க..!
ஏனென்றால்,
நினைப்பது நீயாக இருந்தால்
நிலைக்கட்டுமே
சில நிமிடங்கள்

செல்லில் வந்த கவிதை...

அழகான கவிதை

துன்பத்தை அதிக நேரம் தாங்க முடியாதே, அதான்
சில நிமிடங்கள் மட்டும் உன் நினைவு........... போதுமடா :eek: :eek:

ஓவியா
08-01-2007, 11:04 PM
சிரிக்க வைப்பது மட்டும் நட்பல்ல -
சிந்திக்க வைப்பதும் நட்பு..

சந்தோஷப்பட வைப்பது மட்டும் நட்பல்ல -
சங்கடங்களை சமாளிக்க வைப்பதும் நட்பு..

அரட்டை அடிப்பது மட்டும் நட்பல்ல -
அனைத்தும் அறிய வைப்பதும் நட்பு..

அழ வைப்பது மட்டும் நட்பல்ல -
நீ விழுந்தால் எழ வைப்பதும் நட்பு..!

நட்பே நீ என்னிடம் நட்பாக இரு :D

கவிதை ஜோர்

Mathu
09-01-2007, 10:42 PM
ஆ நீண்ட நாள் இங்கே வராததால் நிறைய இழந்துவிடேன் போலும்...!

அனைத்தும் அருமையான கவிதைகள் ராஜா, காயத்திரி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

Mathu
09-01-2007, 10:48 PM
என் அன்பை அடகு வைக்கிறேன் -
உன் மனதைக் கடனாகக் கொடு...
வாழ்க்கை முழுவதும் வட்டி கட்டுகிறேன் -
உன் காதலனாய்..!

கோ அனுபவம் அதிகம் போல இருக்கே......:confused:

கணவனா காலத்த ஓட்டுறத விட கடன்காறனா ஓட்டுறது சுலபம் என்று தெரிதிருக்கிறது :rolleyes:

Mathu
09-01-2007, 10:52 PM
Quote:
Originally Posted by franklinraja
என் அன்பை அடகு வைக்கிறேன் -
உன் மனதைக் கடனாகக் கொடு...
வாழ்க்கை முழுவதும் வட்டி கட்டுகிறேன் -
உன் காதலனாய்..!



கவிஞரின் முகவரி கிடைக்குமா?

:D :D :D :D

ஏன் கடன் கொடுக்கவா :confused: :confused:

முதலுக்கு மோசம் வரத வரை ஓகே கொடுங்க :cool:

ஓவியா
09-01-2007, 11:06 PM
Quote:
Originally Posted by franklinraja
என் அன்பை அடகு வைக்கிறேன் -
உன் மனதைக் கடனாகக் கொடு...
வாழ்க்கை முழுவதும் வட்டி கட்டுகிறேன் -
உன் காதலனாய்..!

ஏன் கடன் கொடுக்கவா :confused: :confused:

முதலுக்கு மோசம் வரத வரை ஓகே கொடுங்க :cool:

வட்டி வாங்க தான்...................:D :D

அரபுநாட்டு ஷேக்
ஓவியா

franklinraja
20-01-2007, 05:09 AM
சிறகுகள் கிடைத்தால்
பறப்பதல்ல காதல்...

சிலுவைகள் கிடைத்தாலும்
சுமப்பதே காதல்...

franklinraja
20-01-2007, 05:11 AM
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது...

அன்று நிலவு...

இன்று நீ..!

மனோஜ்
20-01-2007, 07:13 AM
அறுமையான மனதை தீன்டும் வரிகள்
தொடருங்கள் fராஜா

ஓவியா
21-01-2007, 01:40 PM
சிறகுகள் கிடைத்தால்
பறப்பதல்ல காதல்...

சிலுவைகள் கிடைத்தாலும்
சுமப்பதே காதல்...


நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது...

அன்று நிலவு...

இன்று நீ..!

தூள் மக்கா

கவியை பாரட்டுறேன் :D :D

ஓவியன்
15-02-2007, 10:06 AM
அருமையான பதிவுகள்!

franklinraja
23-02-2007, 09:47 AM
நீ மகிழ்ச்சியாய் இருக்கும் போது
நீ காதலிப்பவரை நினைத்துக்கொண்டிருப்பாய்...

ஆனால், துன்பமாய் இருக்கும் போது
உன்னைக் காதலித்தவரை நினைத்துக்கொண்டிருப்பாய்...

franklinraja
23-02-2007, 09:50 AM
காலம் சிலநேரம்,
சிலரை மறக்க செய்துவிடும்...

ஆனால், சிலர்தான்,
அந்தக் காலத்தையே மறக்க செய்துவிடுவார்கள்...

அவர்களில், நீயும் ஓர் ஆள்..!

franklinraja
23-02-2007, 09:53 AM
உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது -
உன் நம்பிக்கையில் நீ தோற்கும் வரை...!

franklinraja
23-02-2007, 10:00 AM
தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் -
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்...!

franklinraja
23-02-2007, 10:02 AM
உன் பேரைக்கூட நான் எழுதுவதில்லை -
பேனா முள் உன்னைக் குத்துமே என்று...!

franklinraja
23-02-2007, 10:04 AM
கிளி ஜோசியத்தில் நம்பிக்கையில்லை -
ஆனாலும் பார்த்தேன், கிளியின் 5 நிமிட சுதந்திரத்திற்காக...

ஆதவா
23-02-2007, 03:11 PM
அனைத்தும் அருமை... கிளியின் விடுதலையும் சேர்த்துதான்....

இது உங்களுடையதா?

மனோஜ்
23-02-2007, 07:19 PM
உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது -
உன் நம்பிக்கையில் நீ தோற்கும் வரை...!

அருமையான வரிகள் நம்பிக்கையே வாழ்க்கை
தொடருங்கள் நண்பா

அறிஞர்
23-02-2007, 08:42 PM
நீ மகிழ்ச்சியாய் இருக்கும் போது
நீ காதலிப்பவரை நினைத்துக்கொண்டிருப்பாய்...

ஆனால், துன்பமாய் இருக்கும் போது
உன்னைக் காதலித்தவரை நினைத்துக்கொண்டிருப்பாய்...
ஆஹா... அருமை.. பலருக்கு இந்த அனுபவம் தான்.. :rolleyes: :rolleyes:

அறிஞர்
23-02-2007, 08:43 PM
காலம் சிலநேரம்,
சிலரை மறக்க செய்துவிடும்...

ஆனால், சிலர்தான்,
அந்தக் காலத்தையே மறக்க செய்துவிடுவார்கள்...

அவர்களில், நீயும் ஓர் ஆள்..! ஊக்குவிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட வரிகள் அருமை..

அறிஞர்
23-02-2007, 08:44 PM
உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது -
உன் நம்பிக்கையில் நீ தோற்கும் வரை...!
நம்பிக்கை தான் வாழ்க்கை..
நம்பிக்கையற்ற வாழ்க்கை ஒரு வாழ்க்கையா..

அறிஞர்
23-02-2007, 08:53 PM
தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் -
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்...!
அடுத்த ஊக்குவிப்பு வரிகள்..
----
வடிவேலு ஸ்டைலில் சொல்லனும்னா...
சொல்லுறது ஈஸிப்பு.....
விடாம தோல்வி துரத்தினா...
ஒரு மனுசன் என்னதான் பண்ணுவான்..

அறிஞர்
23-02-2007, 08:55 PM
கிளி ஜோசியத்தில் நம்பிக்கையில்லை -
ஆனாலும் பார்த்தேன், கிளியின் 5 நிமிட சுதந்திரத்திற்காக...
ஆஹா என்ன இரக்க மனுசு...
-----
இரு வரியில் அர்த்தங்கள் பொதிந்து உள்ளன..

தொடரட்டும் ராஜா..

franklinraja
07-03-2007, 05:46 AM
உன்னைப் பின் தொடரும் உரிமை
என்னைத் தவிர வேறு யாருக்கும் இல்லை -
அதை உன் நிழலிடம் சொல்லிவை...

மனோஜ்
07-03-2007, 07:07 AM
ஆழ்ந்த காதல்தான் ஆனால் நிழல் இதை கேட்காதே:confused: :confused: ;)

வெற்றி
07-03-2007, 09:53 AM
என் அன்பை அடகு வைக்கிறேன் -
உன் மனதைக் கடனாகக் கொடு...
வாழ்க்கை முழுவதும் வட்டி கட்டுகிறேன் -
உன் காதலனாய்..!
வட்டி ஒழுங்க வரையின்னா,,,,(காதல் கசமுசா)
பெண் போலிஸ் தான் எசமான்
அப்பறம் குடும்ப நல கோர்டு தான் நாட்டாமை

வெற்றி
07-03-2007, 09:55 AM
உன்னைப் பின் தொடரும் உரிமை
என்னைத் தவிர வேறு யாருக்கும் இல்லை -
அதை உன் நிழலிடம் சொல்லிவை...
என் பேச்சையே என் நிழல் கேட்க மாட்டேன் என்கிறது(வேண்டாம் என்றாலும் என் கூடவே வருகிறது)
இதில் உன் பேச்சையா கேட்கப்போகுது...

உங்களில் நடை மிக அருமை..
எனக்கு மிக பிடித்துள்ளது

பென்ஸ்
07-03-2007, 11:05 AM
பணி பளுவா பிராங்....
கொஞ்ச நாள் உங்களை பாக்கமுடியலை..


உன்னைப் பின் தொடரும் உரிமை
என்னைத் தவிர வேறு யாருக்கும் இல்லை -
அதை உன் நிழலிடம் சொல்லிவை...

நிழலாய் நீரும் போவதால் தான்
அவள் உம்மிடம் சொல்லுகிறாள்...

franklinraja
08-03-2007, 07:22 AM
பணி பளுவா பிராங்....
கொஞ்ச நாள் உங்களை பாக்கமுடியலை..


ஆமாம் பெஞ்சமின்... :)

நீங்கள் நலமா...?

franklinraja
16-03-2007, 08:35 AM
ஆசைப்படுவதை மறந்துவிடு -
ஆனால், ஆசைப்பட்டதை மறந்துவிடாதே...!

:liebe028:

மனோஜ்
17-03-2007, 08:13 AM
ஆசைப்படுவதை மறந்துவிடு -
ஆனால், ஆசைப்பட்டதை மறந்துவிடாதே...!
:liebe028:
இந்த வரிகளில் ஒரு சந்தேகம் ராஜா
ஆசைபடாமல் ஆசைப்பட்டது எப்படி:sport-smiley-019: வரும் :confused:

pradeepkt
17-03-2007, 04:28 PM
இந்த வரிகளில் ஒரு சந்தேகம் ராஜா
ஆசைபடாமல் ஆசைப்பட்டது எப்படி:sport-smiley-019: வரும் :confused:
கிடைக்கணும்னு இருக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காம இருக்கிறது கிடைக்கவே கிடைக்காது :teufel021:

ஓவியா
17-03-2007, 04:52 PM
கிடைக்கணும்னு இருக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காம இருக்கிறது கிடைக்கவே கிடைக்காது :teufel021:

:medium-smiley-100: :medium-smiley-100:

அப்ப
முயற்ச்சியுடையார் இகழ்ச்சி அடையார்னு எதுக்கு சொன்னாங்களாம்....

:sport009::icon_nono: :sport009: :icon_nono: :sport009:

மனோஜ்
18-03-2007, 03:33 PM
கிடைக்கணும்னு இருக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காம இருக்கிறது கிடைக்கவே கிடைக்காது :teufel021:
அப்ப
கிடைக்காம இருக்கறது கிடைக்குமா
கிடைக்கணும்னு இருக்கிறது கிடைக்காதா ?:fragend005:
:waffen093:

மனோஜ்
18-03-2007, 03:34 PM
:medium-smiley-100: :medium-smiley-100:

அப்ப
முயற்ச்சியுடையார் இகழ்ச்சி அடையார்னு எதுக்கு சொன்னாங்களாம்....

:sport009::icon_nono: :sport009: :icon_nono: :sport009:
அப்ப இகழ்ச்சி அடைந்தார் முயற்ச்சிஅடையாறா:fragend005: :waffen093:

pradeepkt
19-03-2007, 05:17 AM
:medium-smiley-100: :medium-smiley-100:

அப்ப
முயற்ச்சியுடையார் இகழ்ச்சி அடையார்னு எதுக்கு சொன்னாங்களாம்....

:sport009::icon_nono: :sport009: :icon_nono: :sport009:
அது தாம்பரத்தில் இருந்து மாநகரப் பேருந்தில் அடையார்(று) வரை செல்பவர்களுக்கான தனிப்பட்ட பழமொழி... உங்க இஷ்டத்துக்கு அதுக்கு விளக்கம் சொல்ல முடியாது :icon_nono:

pradeepkt
19-03-2007, 05:18 AM
அப்ப
கிடைக்காம இருக்கறது கிடைக்குமா
கிடைக்கணும்னு இருக்கிறது கிடைக்காதா ?:fragend005:
:waffen093:
இதெல்லாம் பழமொழி... அனுபவிக்கணும்... ஆராயக் கூடாது (நன்றி: பி. கே. எஸ்) :aetsch013:
ஆமா எதுக்கெடுத்தாலும் ஒரு துப்பாக்கியைத் தூக்கிட்டு ஓடி வரீங்களே, என்ன காரணம்??? :Christo_pancho:

ஓவியன்
19-03-2007, 09:45 AM
நம்மாளுங்க சிலேடையால புகுந்து விளையாடுறாங்க!

மனோஜ்
21-03-2007, 05:04 PM
இதெல்லாம் பழமொழி... அனுபவிக்கணும்... ஆராயக் கூடாது (நன்றி: பி. கே. எஸ்) :aetsch013:
ஆமா எதுக்கெடுத்தாலும் ஒரு துப்பாக்கியைத் தூக்கிட்டு ஓடி வரீங்களே, என்ன காரணம்??? :Christo_pancho:
எல்லா ஒரு பாதுகாப்புதான்:waffen093: :medium-smiley-002:

pradeepkt
22-03-2007, 05:46 AM
எல்லா ஒரு பாதுகாப்புதான்:waffen093: :medium-smiley-002:
இதைப் பாத்தா வெறும் பாதுகாப்புக்கானது மாதிரி தெரியலையே... :teufel021:
சுட்ட கையோடு பி எஸ் வீரப்பா மாதிரி ஒரு கடுஞ்சிரிப்பும் சிரிக்கிறீக????

அமரன்
18-06-2007, 04:21 PM
செல் கவிதைகல் அனைத்தும் அருமை. பதிலுக்கு கலாய்த்த செல்வரின் கவிதைகளும் அருமை.

இனியவள்
18-06-2007, 04:26 PM
ஒரு இதயம்
துடிக்கும்வரை
யாரும் கவனிக்கமாட்டார்கள்..
ஆனால்,
நின்றபின்
பலரும் துடிப்பார்கள்..!

கவி அருமை நண்பரே
உயிரோடு இருக்கும் போது தெரியாத அருமை உயிர் நின்ற பிறகு தான் தெரியும் பாராட்டுக்கள் அன்பரே

அமரன்
18-06-2007, 04:37 PM
கண் இமைக்கும் நேரத்தில்
சேர்வது நட்பல்ல...
கண்ணும் இமையும் போல
சேர்ந்திருப்பது தான் நட்பு..!

நிஷியின் கையெழுத்தில் வேறுமாதிரி இருக்கே

franklinraja
19-06-2007, 06:16 AM
அமரன் மற்றும் இனியவளின் பின்னூட்ட "டானிக்கிற்கு" மிக்க நன்றி நண்பர்களே! :)

என்னவன் விஜய்
17-05-2008, 10:03 PM
முத்து முத்தாய் செல்(லக்) கவிதைகள்
ஏன் தொடரவில்லை. தொடர்ந்து பதியுங்கள் நண்பா

franklinraja
18-05-2008, 06:44 AM
முத்து முத்தாய் செல்(லக்) கவிதைகள்
ஏன் தொடரவில்லை. தொடர்ந்து பதியுங்கள் நண்பா

நன்றி விஜய்...
நேரப் பற்றாக்குறை தான் ;)
தொடர்கிறேன் நண்பரே... :icon_b:

arun
20-08-2008, 07:29 PM
செல்(லக்) கவிதைகளின் தொகுப்பு சூப்பரா இருக்கே? தொடருங்கள் :icon_b: