PDA

View Full Version : இந்திய அரசே



mgandhi
11-11-2006, 04:30 PM
இந்திய அரசே

இரவல் சோறால் பச்சம் தீருமா
இலவச டிவியால் வருமை தீருமா
இந்தியநாடு உயர்திட வேண்டுமா
இளைஞர்களை கண்டு வேலைதந்திடு

கல்வி கட்டணத்தை குறைத்திடு
கல்விகடன் சுமை குறைத்திடும்
வேலையில்லா பட்டதாரிக்கு வட்டிகட்ட
இலவச ஊதியம் தேவைபடாது

மருத்துவர் சட்டத்தை திருத்திடு-அவர்க்கு
மனிதாபிமானத்தை படிப்பில் சேர்த்திடு
உயிரை மதிக்க கற்றுக் கொடு-அவர்
பணத்தினை பாதியாய் குறைத்திடு

வராகடன்கள் கோடிகளை வசூலித்திடு-அதை
எழைக்கு வட்டிக்கு கொடு அதை
வங்கிகளை வசூலிக்க விடு -ஏழை
இந்தியாவை உயர்த்தி காட்டு.

meera
12-11-2006, 01:25 PM
காந்தி நல்ல கருத்துள்ள கவிதை.

உண்மைதான் இலவச டிவியால் வறுமை தீருவதில்லை.அதை புரிந்துகொள்ளும் மனநிலையில் நம்மவர்கள் இல்லை.

இளசு
12-11-2006, 01:43 PM
அவசர/அற்ப திருப்திகள் Vs தொலைநோக்கு/தீர்க்க சிந்தனை..
நாம் எப்போதும் முதலாவதுக்கே மயங்குகிறோம்.

காந்தியின் சிந்தனைகள் இரண்டாம் ரகம்.பாராட்டுகள் காந்தி..

வங்க தேச கிராம வங்கிக்கு வாராக் கடன்கள் இல்லை!!!!

மருத்துவர் மனசாட்சி நலிவை அறிய விகடன் பிரசுரம் - டாக்டர் கே.ஆர்.சேதுராமனின் ' போஸ்ட்மார்ட்டம்' படியுங்கள்..

ஓவியா
13-11-2006, 03:14 PM
காந்தியின் ஆசைகள் நிறைவேறுமா?

காத்திருப்போம்...காத்திருப்போம்.......ஒருநாள்..... கனவு நனவாகலாம்

பாரட்டுக்கள் காந்தி