PDA

View Full Version : சுக்பீர் சிங்

Emperor
27-04-2003, 12:28 PM
சுக்பீர்சிங் ஒரு கடைக்கு சென்றான் அங்கு
"இந்த குளிர்சாதன பெட்டி என்ன விலை" என்றான்
உடனே கடைகாரன்
"சர்தாருக்கெல்லாம் நாங்கள் அதை விற்பதற்கில்லை" என்றான்
அதிர்ச்சி அடைந்த சுக்பீர்சிங் அடுத்த நாள் குடுமியை வெட்டிவிட்டு அதே கடைக்கு சென்று
"இந்த குளிர்சாதன பெட்டி என்ன விலை" என்றான்
உடனே அந்த கடைக்காரன் மேலும் கீழும் பார்த்துவிட்டு
"சர்தாருக்கெல்லாம் நாங்கள் அதை விற்பதற்கில்லை" என்றான்
கடுப்பாகிபோன சுக்பீர்சிங் அடுத்த நாள் மீசை, தாடியெல்லாம் மழித்துவிட்டு அதே கடைக்கு சென்று
"இந்த குளிர்சாதன பெட்டி என்ன விலை" என்றான்
உடனே அந்த கடைக்காரன்
"சர்தாருக்கெல்லாம் நாங்கள் அதை விற்பதற்கில்லை" என்றான்
வெறுத்துப்.
உடனே அந்த கடைக்காரன் திரும்பி கூட பார்க்காமல்
"சர்தாருக்கெல்லாம் நாங்கள் அதை விற்பதற்கில்லை" என்றான்
உடனே பர்தாவை கலைத்த சுக்பீர்சிங் "எப்படி நான் தான் என்று கண்டுபிடித்தாய்" என்றான்
அதற்க்கு கடைக்காரன் "நீ இத்தனை நாள் விலை கேட்டது வாஷிங் மிஷனை" என்றான்.

karikaalan
27-04-2003, 04:59 PM
கீழே உள்ள மாற்றியால் நீங்கள் திஸ்கி ஐ யுனிக்கோடுக்கு மாற்றிடலாம். ஆங்கில எழுத்துக்களுக்கு என்கோடிங் திஸ்கி மாற்றம் போன்றவற்றால் பாதிப்பு வராது.

poo
27-04-2003, 05:39 PM
(மீண்டும்) சிரிக்க வைத்தமைக்கு நன்றி!!!

suma
28-04-2003, 11:21 PM
புத்திசாலிங்க இவனை எல்லாம் நாட்டிலிருந்து தூக்கணும். நல்ல சிரிப்பு.
இந்தியா முன்னேறாதது இந்தமாதிரி அறிவாளி இருப்பதால் தானே...

தஞ்சை தமிழன்
29-04-2003, 08:57 AM
புத்திசாலிங்க இவனை எல்லாம் நாட்டிலிருந்து தூக்கணும். நல்ல சிரிப்பு.
இந்தியா முன்னேறாதது இந்தமாதிரி அறிவாளி இருப்பதால் தானே...சுமாக்கா,
இந்த மாதிரி ஆட்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும். எனவே அவர்களும் நம்முடன் தேவைதான்.

( தாமாஷ¤க்குதான் )

நிலா
29-04-2003, 09:29 PM
வீர்சிங்குக்கு உறவு போலயிருக்கு இந்த சுக்பீர்சிங்!

goki
30-04-2003, 08:00 AM
இந்த சர்தார் ஜோக்குகள் எப்போதிலிருந்து ஆரம்பித்தது? யாருக்காவது தெரியுமா ?

அறிஞர்
05-05-2003, 04:41 AM
இந்த மாதிரி ஆட்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும். எனவே அவர்களும் நம்முடன் தேவைதான்.

கிருக்கன்... சார்...

உங்களை (சுக்பீர்சிங்!) போன்று... ஆட்கள் நம் மன்றத்தில்... இல்லாவிட்டால் மன்றத்தில் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும்... என்று சொல்ல வருகிறீரோ.....

மன்மதன்
28-09-2004, 09:26 AM
பெயரில் பீர் வைத்திருப்பதால் வந்த வினை.
அன்புடன்
மன்மதன்

rajasi13
27-09-2005, 01:40 PM
.
புத்திசாலிங்க இவனை எல்லாம் நாட்டிலிருந்து தூக்கணும். நல்ல சிரிப்பு.
இந்தியா முன்னேறாதது இந்தமாதிரி அறிவாளி இருப்பதால் தானே...
ஜோக்னாலும் சிங்குகளை மட்டமா நினைக்காதீங்க சகோதரி. ஒரு இஞ்சின் அல்லது கியர் பாக்சை (அது எந்த தயாரிப்பா எவ்வளவு நுணுக்கமய் இருந்தாலும்) அப்படியே வடிவமைக்கும் திறமை அவர்களுக்கு உண்டு. அது உலகில் வேரு யாருக்கும் வராது. சந்தேகமிருந்தால் டெல்லி நண்பர்களிடம் கேட்டுபாருங்கள்.

aparajithc.achan
09-05-2009, 11:24 AM
புத்திசாலிங்க இவனை எல்லாம் நாட்டிலிருந்து தூக்கணும். நல்ல சிரிப்பு.
இந்தியா முன்னேறாதது இந்தமாதிரி அறிவாளி இருப்பதால் தானே...

நண்பர்களே சர்தார்ஜி என்றால் இளக்காரம் வேண்டாம்.... ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்திய ஜெனரல் டயரைக் கொன்று பழி தீர்த்தது ஒரு சர்தார்ஜிதான்... உண்மையில் அவர்கள் வீரம் மிக்கவர்கள்...:sprachlos020:

ஓவியன்
12-06-2009, 12:27 PM
நண்பர்களே சர்தார்ஜி என்றால் இளக்காரம் வேண்டாம்.... ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்திய ஜெனரல் டயரைக் கொன்று பழி தீர்த்தது ஒரு சர்தார்ஜிதான்... உண்மையில் அவர்கள் வீரம் மிக்கவர்கள்...:sprachlos020:

உண்மைதான் நண்பரே, அபியும் நானும் படத்தில் சர்தார்களைப் பற்றி சில விடயங்கள் கூறப்பட்டிருக்கும்....

அவை எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயங்கள், முக்கியமாக ஒரு சர்தாஜி பிச்சைக் காரனைக் கண்டு பிடிக்க முடியாதென்பது....

நிஜம் அது, இது போன்ற நகைச்சுவைகள் சிரிப்பதற்கு மட்டுமே என்பதை நம் மனதில் நிலை நிறுத்தி விட்டால் வேறு பிரச்சினைகள் வந்திடாது...