PDA

View Full Version : காத்திருந்து.. காத்திருந்து..



franklinraja
09-11-2006, 01:57 PM
அதிகாலை ஐந்து மணி..
அடுத்த ரூமிலிருந்து -
அலாரம் என்னை எழுப்பிவிட்டது..

சீக்கிரமே செல்லவேண்டும்..
இன்று விடக்கூடாது..;)

பீச் ரோட்டில் ஜாக்கிங்..
சாலைக் கடையில் ஜூஸ்..:cool:

பல் விளக்க பேஸ்ட்டை -
பக்கத்து ரூமில் கடன் வாங்கி..!:D

98 ரூமிற்கும் கேட்ப்பதுபோல் -
98.3 எஃப்.எம்-ல் பாட்டு வைத்துவிட்டு..:mad:

ஜில்லென்று ஒரு குளியல்..
அயர்ன் செய்ய மறந்த சட்டை..
அழுக்கே கலராய் மாறிப்போன ஜீன்ஸ்..
நண்பனின் ஷூ..
நாற்றத்தை குறைக்க ஸ்ப்ரே..:eek:

ஃபாஸ்ட் ஃபுட்டில் டிபன்..
ஓட்டமும் நடையுமாய் பஸ்-ஸ்டாப்..

இந்நேரம் வந்திருக்குமா..?
நேற்று இந்த டையத்துல தானே வந்தது..!;)

ஆயிற்று..
அரை மணி நேரம்..!:mad:

காத்திருந்து.. காத்திருந்து..
கடைசிவரை வரவேயில்லை -
23C :confused:

இது
திருவல்லிக்கேணி மேன்ஸன்களில்
வாடிக்கையாய் நடக்கும் வேடிக்கைகளில்
ஒன்று..!

ஆங்கில கலப்பிற்காக -
ஆன்றோர்கள் மன்னிக்க..!

franklinraja
10-11-2006, 07:49 AM
காத்திருந்து.. காத்திருந்து..
யாரும் விமர்சனமே எழுதவில்லை..
போங்கள்..! ;)

guna
10-11-2006, 08:09 AM
உங்க தினசரி வாழ்க்கையை அப்படியே எழுதி இருக்கறீங்களா ராஜா..
சுவாரஷ்யமா இருந்தது படிக்க..
இந்த கவிதை மட்டும்னு இல்லை, பொதுவாவே உங்கள் எழுத்து வடிவமே சுவாரஷ்யம் தான்..

வாழ்த்துக்கள் ராஜா..

குணா

franklinraja
10-11-2006, 08:38 AM
உங்க தினசரி வாழ்க்கையை அப்படியே எழுதி இருக்கறீங்களா ராஜா..
சுவாரஷ்யமா இருந்தது படிக்க..
இந்த கவிதை மட்டும்னு இல்லை, பொதுவாவே உங்கள் எழுத்து வடிவமே சுவாரஷ்யம் தான்..

வாழ்த்துக்கள் ராஜா..

குணா

மிக்க நன்றி குணா..!

mgandhi
14-11-2006, 05:43 PM
காத்திருந்து.. காத்திருந்தால் தான்
கெக்குக்கு இறை கிடைக்கும்
பார்த்திருத்து பார்த்திருந்ததினால் -தான்
பதிலும் பாராட்டும் ராஜாவே!
வாழ்த்துக்கள்

franklinraja
15-11-2006, 08:07 AM
காத்திருந்து.. காத்திருந்தால் தான்
கெக்குக்கு இறை கிடைக்கும்
பார்த்திருத்து பார்த்திருந்ததினால் -தான்
பதிலும் பாராட்டும் ராஜாவே!
வாழ்த்துக்கள்

காத்திருந்த கொக்கிற்கு கிடைத்த
இரை போல
தெம்பாக இருந்தது உங்கள் பதில்..!

நன்றி காந்தி..!

தாமரை
16-11-2006, 02:45 AM
23 சி - யூ நெவர் சீ..
ரூட்ட மாத்து ராசா:cool: :cool:

நாம போற பஸ் வரலைன்ன
வர்ர பஸ்ஸுல போக முடியாதுதான்..:rolleyes: :rolleyes:

ஆனா ஒரு இடத்துக்கு
எத்தனையோ ரூட் இருக்க:rolleyes: :rolleyes:
எந்த ரூட்டிற்காக
இந்த ரூட்?:eek: :eek: :eek:

franklinraja
16-11-2006, 08:58 AM
23 சி - யூ நெவர் சீ..
ரூட்ட மாத்து ராசா:cool: :cool:

நாம போற பஸ் வரலைன்ன
வர்ர பஸ்ஸுல போக முடியாதுதான்..:rolleyes: :rolleyes:

ஆனா ஒரு இடத்துக்கு
எத்தனையோ ரூட் இருக்க:rolleyes: :rolleyes:
எந்த ரூட்டிற்காக
இந்த ரூட்?:eek: :eek: :eek:

நம்ம எங்க ரூட்ட போடுறது...?!!
எல்லமே ராங் ரூட்டா போவுது..!!! ;)