PDA

View Full Version : அழகான கருமை.....



இனியவன்
08-11-2006, 03:33 PM
http://img73.imageshack.us/img73/7434/pg10vj5.jpg

கதை சொல்லித்

தூங்க வைக்க

கண்ட கனவைப்

பகிர்ந்து கொள்ள

பாட்டி இருப்பாள்.

தாத்தாவின்

நடுங்கும் கரம் பிடித்து

நடக்கையில்

முதுமை அழகாய்த் தெரியும்!

ஓடும் ரயிலுக்கு

டாட்டா காட்டிய பொழுதுகள்

விவரிக்க முடியாத

பரவசத் தருணங்கள்...

சொப்பனங்களில் கூட

பயமுறுத்துவார்

பகலில் கும்பிட்ட

அத்துவானக் காட்டு அய்யனார்!

நிலவொளியில்

அமர்ந்து ரசித்த

வள்ளித் திருமணம்,

ஆசையாய் ஊதிய

பூவரச இலை நாதஸ்வரம்,

தேடிச் சேகரித்த

மயிலிறகு,

சேர்ந்து ஆக்கிய

கூட்டாஞ்சோறு,

காக்கா கடி

கடித்துக் கொடுத்த

கல்மிஷம் இல்லாத சிநேகமென...

எப்போதும்

அசை போடச் சிறந்ததாய்

என் யவ்வனப் பருவம்!...

அம்மாவாய் தான்

திருப்தியில்லை

கணினி படித்து

பீஸா கொரித்து

கார்ட்டூனோடு தூங்கிப்போகும்

மகனைப் பார்க்கையில்...

ஓவியா
08-11-2006, 06:31 PM
அடடே

இனியவன் நீங்களும் கவிஞ்சராகியாச்சா.......நல்லது..:D

உங்கள் கவிதை அருமை....
அதுவும் அந்த வார்த்தை......என் யவ்வனப் பருவம்.......
அழகான தமிழ்.......கரு சூப்பர்

உண்மையாய் ஒரு கவிதை....!...பலே

franklinraja
09-11-2006, 08:54 AM
http://img73.imageshack.us/img73/7434/pg10vj5.jpg

கதை சொல்லித்

தூங்க வைக்க

கண்ட கனவைப்

பகிர்ந்து கொள்ள

பாட்டி இருப்பாள்.

தாத்தாவின்

நடுங்கும் கரம் பிடித்து

நடக்கையில்

முதுமை அழகாய்த் தெரியும்!

ஓடும் ரயிலுக்கு

டாட்டா காட்டிய பொழுதுகள்

விவரிக்க முடியாத

பரவசத் தருணங்கள்...

சொப்பனங்களில் கூட

பயமுறுத்துவார்

பகலில் கும்பிட்ட

அத்துவானக் காட்டு அய்யனார்!

நிலவொளியில்

அமர்ந்து ரசித்த

வள்ளித் திருமணம்,

ஆசையாய் ஊதிய

பூவரச இலை நாதஸ்வரம்,

தேடிச் சேகரித்த

மயிலிறகு,

சேர்ந்து ஆக்கிய

கூட்டாஞ்சோறு,

காக்கா கடி

கடித்துக் கொடுத்த

கல்மிஷம் இல்லாத சிநேகமென...

எப்போதும்

அசை போடச் சிறந்ததாய்

என் யவ்வனப் பருவம்!...

அம்மாவாய் தான்

திருப்தியில்லை

கணினி படித்து

பீஸா கொரித்து

கார்ட்டூனோடு தூங்கிப்போகும்

மகனைப் பார்க்கையில்...

அருமை..! :)

அறிஞர்
09-11-2006, 12:55 PM
கவிதை அருமை...

ஒரு வாழ்க்கையின் இன்பம் வேண்டுமானால் மற்றொரு வாழ்க்கையை இழந்து தான் ஆகனும்.
---
இது யாருடைய கவிதை. தங்களுடையது என்றால் இங்கு பதிக்கலாம். மற்றவர்களின் படைப்பு என்றால் இலக்கிய பகுதியில் பதிவது வழக்கம்.

meera
09-11-2006, 02:22 PM
அழகான கவிதைக்கு வாழ்த்துகள் இனியவன்.

இளசு
03-12-2006, 12:33 PM
காலமாற்றத்தைக் கவிதையாக்கிய பதிவு.

நன்றி இனியவன்.

( இதைப் படைத்த சு.கவிதா, பதித்த தளம் பற்றிய விவரங்கள் கொடுங்கள் இங்கே.. )

leomohan
03-12-2006, 12:40 PM
சொப்பனங்களில் கூட

பயமுறுத்துவார்

பகலில் கும்பிட்ட

அத்துவானக் காட்டு அய்யனார்

அழகான வரிகள்.