PDA

View Full Version : தாமரைத்தண்டு...பென்ஸ்
08-11-2006, 01:40 PM
நீர் கண்டு, தண்டு வளர்த்தி
இலை காட்டும் தாமரையாய்
பணம் கண்டு தரம் உயர்த்தும் மானிடா
தண்ணிர் வற்றினால் தண்டுடையும்
என்பதை அறிவாயா..!!!

pradeepkt
09-11-2006, 02:40 AM
அதெல்லாம் தெரியாமயா இருக்கு...
எல்லாந்தேன் வாழ்க்கைன்னு வாழ்ந்துக்கிருக்கான் நம்ம பய...
பென்ஸு, உங்க ஆதங்கம் புரியுது, என்ன செய்ய???

மதி
09-11-2006, 02:51 AM
ஆதங்கமா...
ஆ...தங்கமா?? ஹிஹி

pradeepkt
09-11-2006, 03:18 AM
வந்திட்டான்யா லகுட பாண்டி... :)

பென்ஸ்
09-11-2006, 06:29 AM
அப்பா நான் கவிதையாய் சொன்னதை
கதையாய் எல்லோரிடமும் சொல்லுவார்...
என்னிடம் சொல்ல மறந்துவிட்டாரோ????

meera
09-11-2006, 02:39 PM
ஐய்ய்ய், நம்ம பென்ஸ் கவிஞராயிட்டார்.


வாழ்க்கை பாடம் நல்லா இருக்கு நண்பரே.

வாழ்த்துகள்.

அறிஞர்
09-11-2006, 02:58 PM
வாழ்க்கை தத்துவங்களை
அள்ளி விடும்
புது கவிஞருக்கு வாழ்த்துக்கள்... :rolleyes:

ஓவியா
09-11-2006, 05:46 PM
நீர் கண்டு, தண்டு வளர்த்தி
இலை காட்டும் தாமரையாய்
பணம் கண்டு தரம் உயர்த்தும் மானிடா
தண்ணிர் வற்றினால் தண்டுடையும்
என்பதை அறிவாயா..!!!


பெஞ்சு
சமுதாய சிந்தனையா........:eek:

பணம், பதவி, அந்தஷ்து இதெல்லாம் நிரந்தரமற்றதுனு நாளுவரியில் சொல்லியச்சே....................... 'தூள்' ..............:D

புது கவிஞருக்கு வாழ்த்துக்கள்...

இளசு
24-11-2006, 09:53 PM
நீர் கண்டு, தண்டு வளர்த்தி
இலை காட்டும் தாமரையாய்
பணம் கண்டு தரம் உயர்த்தும் மானிடா
தண்ணிர் வற்றினால் தண்டுடையும்
என்பதை அறிவாயா..!!!

உள்ளத்தனைய மலர்நீட்டம்
வற்றிய குளத்தின் அட்டியும் சாம்பரும் போல் -

என்ற இலக்கிய வரிகள் மனசில் வந்து போயின.

இக்காலச் சூழலுக்கு ஒரு சுருக்(கக்) கவிதை.

பாராட்டுகள் இனிய பென்ஸ்...

sriram
02-12-2006, 07:11 PM
சரியாக சொன்னீர்கள் பென்சு.! வாழ்த்துக்கள்..!

பண வேட்டையில் சிறந்தவரையே சமூகம் வெற்றி பெற்றவராக கருதுகிறது. அந்த வேட்டையில் ஒரு ஓட்டை விழுந்தாலும் ஒதுக்கி விடுகிறது..!
"தன லட்சுமியோடு வந்த சொந்தங்கள்
தாம்பூலம் தரிக்கிறது!
குண லட்சுமியோடு வந்த சொந்தங்கள்
குறை பட்டு அழுகிறது..!"
(கவி அரங்கில் நான் பேசிய இந்த வரிகள் நினைவுக்கு வருகிறது)

kavitha
13-12-2006, 09:53 AM
நீர் கண்டு, தண்டு வளர்த்தி
இலை காட்டும் தாமரையாய்
பணம் கண்டு தரம் உயர்த்தும் மானிடா
தண்ணிர் வற்றினால் தண்டுடையும்
என்பதை அறிவாயா..!!!
__________________
நட்புடன்...
பெஞ்ஜமின் வி. வின்ஸ்
சுளீர் ரக கவிதை! வாழ்த்துகள் பென்ஸ். இது போல் இன்னும் நிறைய எழுதுங்கள்.

பென்ஸ்
13-12-2006, 01:20 PM
சுளீர் ரக கவிதை! வாழ்த்துகள் பென்ஸ். இது போல் இன்னும் நிறைய எழுதுங்கள்.
நன்றி கவி....
உங்களை போன்ற கவி மக்கள் மன்றம் வராமல் இருப்பது ஒரு
கவலையாக இருந்தாலும், மீண்டும் வந்து சென்றமைக்கு நன்றி....

"சுளீர் ரகம்".. அது என்னவோ சரிதான், :p நான் சட்டியில் இருந்தாதானே
ஆப்பையில் வரும் என்று உன்மையெல்லாம் சொல்லமாட்டேன்,
பணிபளு, நேரமின்மை இதேல்லாம் என்னை ரொம்ப படுத்துதுயா...:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D

அமரன்
28-06-2007, 07:44 PM
பெரிய உண்மையை நச்சென்று நாலு வரியில் சொல்லிவிட்டார். சொர்களைக் கையாண்ட விதம் அருமை.
(தலைப்பில்தாமரையைப் பாத்ததும் உங்க சோகக்கதையை அவர் எழுதியதுபோல் நீங்கள் ஏதாவது எழுதியிருப்பீர்கள் என நினைத்து ஓடோடி வந்தேன். தத்துவமழை பொழிந்துள்ளீர்களே)

அக்னி
28-06-2007, 07:48 PM
ஆமாம்... அமரன்...
திரியை இழுத்து மேலே விட்டதற்கு நன்றிகள்...

கவிதை அருமை...
தத்துவக் கவிதைகளை ஒளித்து வைத்தல் மகாப்பாவம்!
அள்ளிவிடுங்கள் பென்ஸ் அவர்களே... இன்னமும்... இனிமேலாவது...

அமரன்
28-06-2007, 07:54 PM
ஆமாம்... அமரன்...திரியை இழுத்து மேலே விட்டதற்கு நன்றிகள்...

கவிதை அருமை...
தத்துவக் கவிதைகளை ஒளித்து வைத்தல் மகாப்பாவம்!
அள்ளிவிடுங்கள் பென்ஸ் அவர்களே... இன்னமும்... இனிமேலாவது...

ராசா இதுக்கு என்ன ராசா அர்த்தம். என்னை மாதிரி தாமரைஅண்ணாவின் சோகக்கதையை எதிர்பார்த்தா ஓடி வந்தாய். (ங்கள் போட்டு அழைக்க அந்நியமாக இருக்கின்றது. அதனாலேதான் மன்னிக்க தோழா)

இனியவள்
28-06-2007, 08:39 PM
மறுக்க முடியாத உண்மை
அருமையான கவிக்கு வாழ்த்துக்கல் பென்ஸ்

இணைய நண்பன்
28-06-2007, 09:26 PM
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

அக்னி
28-06-2007, 09:28 PM
ராசா இதுக்கு என்ன ராசா அர்த்தம். என்னை மாதிரி தாமரைஅண்ணாவின் சோகக்கதையை எதிர்பார்த்தா ஓடி வந்தாய். (ங்கள் போட்டு அழைக்க அந்நியமாக இருக்கின்றது. அதனாலேதான் மன்னிக்க தோழா)

மன்னிப்புத் தேவையில்லை நண்பா... உரிமை அதிகரிப்பதில் எனக்கும் அலாதி சுகமே...

ஆதவா
30-06-2007, 08:15 AM
என்னமோ சொல்ல வராரு.... ம்ம்....

சூரியன்
30-06-2007, 08:40 AM
நல்ல வரிகள்

ஓவியன்
14-05-2008, 01:15 PM
தண்ணீர் வற்றினால் தண்டுடையும் தான்,
ஆனால் அந்த தருணத்தில் செயற்கையாகவேனும்
தண்ணீர் நிரப்பிடலாமென்ற நம்பிக்கையில் தண்டை வளர்கிறார்கள் போல.....!! :frown:

இலகுவில் இத்தத்துவம் உறைக்காது எல்லோருக்கும்,
உறைத்திட்டால் நலம்
நமக்கும் நம்மைச் சூழ இருப்போருக்கும்...!!

பூமகள்
26-10-2010, 08:35 AM
சொன்னது
உறைத்திட்டால்..
பூமி
உன்னதப்பூங்கா ஆகிடும்..

ஆகுமா அவ்வளவு எளிதில்??