PDA

View Full Version : இந்திய கப்பல் கடத்தப்பட்டது



mgandhi
07-11-2006, 06:59 PM
ஊழியர்களுடன் இந்திய கப்பல் கடத்தப்பட்டது


13 ஊழியர்களுடன் சரக்கு ஏற்றிச்சென்ற இந்தியக்கப்பல் ஒன்று சோமாலியாவில் கடற்கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டது.

இந்தியர் ஒருவருக்கு சொந்தமான கப்பல் வீஷம். இது 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சோமாலியா நாட்டு துறைமுகமான எல்மான் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது. இந்த கப்பலை சோமாலியா நாட்டு கடற்கொள்ளைக்காரர்கள் கடத்திச்சென்றனர். அவர்கள் 50 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே கப்பலை விடுவிப்போம் என்று கடற்கொள்ளைக்காரர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்தக்கப்பலில் மொத்தம் 13 சிப்பந்திகள் இருந்தனர். அவர்களில் 4 பேர் இந்தியர்கள். 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள். 2 பேர் பாகிஸ்தானியர்கள். 2 பேர் எத்தியோப்பியர்கள், ஒருவர் எரித்ரியாவைச்சேர்ந்தவர். இவர்கள் யாரையும் காயப்படுத்தவில்லை. கடற்கொள்ளைக்காரர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

இந்த கப்பலின் சொந்தக்காரர் அஜய் குமார் பாட்டியா. அவர் கப்பல் கேப்டனை தொடர்பு கொள்ள முயன்று வருகிறார். இதற்கிடையில் கப்பலை காப்பாற்ற ராணுவம் அனுப்பப்பட்டு உள்ளது.

சோமாலியாவில் பணயத்தொகைக்காக கப்பலை கடத்துவது வாடிக்கையான ஒன்று ஆகும். அந்த நாட்டில் உறுதியான அரசு இல்லாததால் கடற்கொள்ளைக்காரர்கள் அட்டூழியம் அங்கு அதிக அளவில் உள்ளது.
நன்றி தமிழ் கூடல்

அறிஞர்
07-11-2006, 08:03 PM
பஞ்சத்தால் அவதியுறும் அந்த நாட்டின் வர்த்தகம் இன்னும் பாதிக்கும்...

பிடிபட்டவர்கள்... நல்ல முறையில் திரும்ப... கடவுள் உதவுவாராக.