PDA

View Full Version : கண்ணீர் கதை



meera
07-11-2006, 02:13 PM
பசுமையான பள்ளிக்கூட நாட்களில்
பாடிபறந்த பறவைகளில்
நீயும்,நானும் சுதந்திரப்பறவை..

சுற்றித்திரிந்தோம்-நம்மை
சுற்றிவரும் நாட்களை அறியாமல்...

சுற்றிவந்த காலம்
சூறையாடியது நம்மை...

கால நதியில்,காற்றாற்று வெள்ளத்தில்
ஆளுக்கு ஒரு கரையில்
ஒதுங்கி நின்றோம்-ஆளில்லா ஓடம் போல

உலகம் உருண்டை - சொல்லிச்சென்றான்
யாரோ ஒரு அறிஞன்

உருண்டு வந்த உலகத்தில்
மீண்டும் நாம் சந்தித்தபோது
உயிர் பிரிந்த உணர்வு எனக்கு
உண்மையை சொல்லிக்கொண்டிருந்தாய்
உயிரற்ற குரலில்-நீ
திருமணமான மூன்றே மாதத்தில்
கைம்பெண்ணான கண்ணீர் கதையை...

gragavan
07-11-2006, 02:59 PM
ஆனால்
அந்தக் கண்ணீரையும் நன்னீராக்கிய
உனது இரண்டாவது திருமணம்
எனக்கு மகிழ்ச்சியே மகிழ்ச்சியே

ஓவியா
07-11-2006, 05:55 PM
அழகான கவிதை...
பாரட்டுக்கள் மீரா

கவிதைக்கு
சுபம்..னு ஒரு அழகான முற்றுப்புள்ளி வைத்த ராகவனுக்கு நன்றி

guna
08-11-2006, 01:06 AM
அழகான கவிதைக்கு வாழ்துக்கள் மீரா

மதி
08-11-2006, 02:37 AM
மீராவின் தொடக்கமும் ராகவனின் முடிவும் அருமை..
பாராட்டுக்கள்..!

franklinraja
08-11-2006, 06:25 AM
கண்ணீர்க் கதைக்கு
பன்னீர் தெளித்த
ராகவனுக்கு பாராட்டுக்கள்..!

நன்றி மீரா..!

பென்ஸ்
08-11-2006, 08:59 AM
மீராவின் அருமையான கதை..
ராகவனின் அருமையான முடிவு...

வாசிக்க நல்லாதான் இருக்கு இல்லையா????

pradeepkt
09-11-2006, 02:25 AM
அதைத்தான் நானும் நினைத்தேன். வாசிக்கச் சுகமாத்தேன் இருக்கு. நடைமுறையில் வரும் நாள் எந்நாளோ???

meera
09-11-2006, 02:53 PM
ஆனால்
அந்தக் கண்ணீரையும் நன்னீராக்கிய
உனது இரண்டாவது திருமணம்
எனக்கு மகிழ்ச்சியே மகிழ்ச்சியே


நன்றி ராகவன்,

உங்க விருப்பம் தான் எனக்கும் ஆனா அது இன்னும் நடக்கவில்லை.
அவளுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம்.

அறிஞர்
09-11-2006, 02:57 PM
உங்க விருப்பம் தான் எனக்கும் ஆனா அது இன்னும் நடக்கவில்லை.
அவளுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களை போலவே நாங்களும் பிராத்திக்கிறோம்..

அருமையான கவிதை...:) :)

meera
09-11-2006, 03:29 PM
ஓவியா,குணா,மதி,பென்ஸ் மற்றும் பிரதீப் அனைவருக்கும் நன்றி.

meera
09-11-2006, 03:32 PM
உங்களை போலவே நாங்களும் பிராத்திக்கிறோம்..

அருமையான கவிதை...:) :)

தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி அறிஞரே.

ஓவியா
09-11-2006, 05:37 PM
நன்றி ராகவன்,

உங்க விருப்பம் தான் எனக்கும் ஆனா அது இன்னும் நடக்கவில்லை.
அவளுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம்.



அவளுக்காக
ஆண்டவனிடம் என்னுடைய பிரார்த்தனை கண்டிப்பாக உண்டு.

ப்ரியன்
15-11-2006, 10:38 AM
/*மீண்டும் நாம் சந்தித்தபோது
உயிர் பிரிந்த உணர்வு எனக்கு
உண்மையை சொல்லிக்கொண்டிருந்தாய்
உயிரற்ற குரலில்-நீ
திருமணமான மூன்றே மாதத்தில்
கைம்பெண்ணான கண்ணீர் கதையை...*/

வலி சொல்லும் வரிகள்

நல்ல கவிதை மீரா தொடருங்கள்

மன்மதன்
15-11-2006, 12:44 PM
கவிதை அருமை மீரா.. கூடிய விரைவில் அவங்களுக்கு திருமணம் நடக்க பிராத்திக்கிறேன்..

இளசு
20-11-2006, 08:05 PM
வாழ்வின் சில இருள் முடிச்சுகள்
என்றும் எவர்க்கும் விளங்காதவை.

அதே போல்தான் இறுக்கம் தளர்ந்து
வாழ்விழை இறுதி அறல் வரை நீடிப்பதும்..

-------------------------------------------

ஒரு விழல் - வலி -
ஊழ் வந்து உறுத்தும் ரணம்...


பகிர்ந்த விதம் தோழியின் வலியை குறைக்கட்டும் மீரா...

அன்பு ராகவன் சொன்னது பலிக்கட்டும்... ததாஸ்து!

சுகந்தப்ரீதன்
20-03-2008, 05:50 AM
வாழ்த்துக்கள் மீரா அக்கா..!!

இந்த கவிதையின் நாயகிக்கு இப்போது ராகவன் அண்ணாவின் சுப வாக்குபடி மறுமணம் நடந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்..!!

எதையும் கணிக்கமுடியாத வாழக்கைதானே...
நான் அன்றாடம் வாழும் வாழ்க்கை...!!
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்...
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்..!!