PDA

View Full Version : நீயோ இசையாக வழிகிறாய்!



ப்ரியன்
07-11-2006, 10:21 AM
அதிசயமான நதி நீ;
கலந்துவிட்ட பின்னும்
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
காட்டாற்றின் வெள்ளமாக!

*

ஒளியால் தொட்டுத் தழுவிச்செல்லும்
வான் நிலவு!
விழியால் தொட்டுச் சீண்டிச்செல்லும்
மண்நிலவு நீ!

*

எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!

*

உன்னால் கிழிக்கப்படுகின்றன
என் காயங்கள்
வாசிக்கப்படுகின்றன அவையே
கவிதைகளாய்!

*

உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!

*

ஒடிந்து கிடந்த
புல்லாங்குழலெடுத்து
மகுடி ஊதினேன்!
நீயோ
இசையாக வழிகிறாய்!


- ப்ரியன்.

meera
07-11-2006, 11:45 AM
பிரியன்,மீண்டும் உங்கள் கவிதைகள் படித்ததும் மகிழ்ச்சி.

அழகான கவிதைக்கு பாராட்டுக்கள்.

அறிஞர்
07-11-2006, 12:54 PM
மீண்டும் பிரியனின்...

காதல் வரிகளை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து கொடுங்கள் அன்பரே

பென்ஸ்
08-11-2006, 09:40 AM
வறண்ட நிலத்தில்
புதைந்தவிதையாய்
காதல்...

நீர் தெளிக்கிறது
ப்ரியனின் கவிதைகள்


ஒவ்வொரு துளியும் அருமை
விக்கி...
படங்களாய் பதிக்க வேண்டி இருந்தேனே????

pradeepkt
09-11-2006, 02:27 AM
உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!

மனிதன் மலை தடுக்கி விழுவதில்லை.
சின்னக் கல் தடுக்கித்தான் விழுகிறான்.

ப்ரியன்
15-11-2006, 10:29 AM
நன்றி மீரா,

மீண்டும் மீண்டும் 'மீண்டு' வந்து அதே வேலை பளு குழியில் மாட்டிக் கொள்கிறேன் இல்லையேல் இன்னும் மன்ற நண்பர்களுடன் பகிர பேச வாய்ப்புகள் எனக்கு கிடைக்கும்

ப்ரியன்
15-11-2006, 10:32 AM
நன்றி அறிஞர் அண்ணா...இனி அடிக்கடி பதிய முயலுகிறேன்

ப்ரியன்
15-11-2006, 10:34 AM
நன்றி பென்ஸ் இங்கே பதிக்கும் போது படமாக மாற்றப்படமல் இருந்து பென்ஸ் அதனால்தான் இடவில்லை..இனி நீங்கள் சொன்னபடி படமாகவே இடுகிறேன்

ப்ரியன்
15-11-2006, 10:36 AM
/*சின்னக் கல் தடுக்கித்தான் விழுகிறான்*/

உண்மை பிரதீப் ஆனால்

கல் தடுக்கி விழுபவனைவிட கண்தடுக்கி விழுபவன் அடையும் வலிகள் அதிகம்

இளசு
15-11-2006, 05:45 PM
/*சின்னக் கல் தடுக்கித்தான் விழுகிறான்*/

உண்மை பிரதீப் ஆனால்

கல் தடுக்கி விழுபவனைவிட கண்தடுக்கி விழுபவன் அடையும் வலிகள் அதிகம்

புவியீர்ப்பு விசையைவிட
விழியீர்ப்பு விசை வலிமை அதிகம்
என தபூ சங்கரின் கவிதை நினைவுக்கு வருகிறது.

-----------------------------------
காதல் ..
துன்பமான இன்பமானது..
புனைவான நிஜமானது..

காதல் ஏற்கனவே அழகானது-
ப்ரியனின் கவிதை சூடி வரும்போது
இன்னும் அழகாய் ...

ஓவியா
15-11-2006, 06:38 PM
/*சின்னக் கல் தடுக்கித்தான் விழுகிறான்*/

உண்மை பிரதீப் ஆனால்

கல் தடுக்கி
விழுபவனைவிட
கண் தடுக்கி
விழுபவன்
அடையும்
வலிகள்
அதிகம்

ப்ரியனின்
விமர்ச்னம்கூட
ஒரு கவிதை போல் உல்லதே!!!!



வாழ்த்துக்கள் ப்ரியன்