PDA

View Full Version : காலை வைத்துக் கண்டுபிடி!



ராசராசன்
06-11-2006, 06:31 PM
புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான்.
மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்தான்.

பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன. தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.

பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார்.

ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.

பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.

அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.

"அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான். தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்.
:D

ராசராசன்
06-11-2006, 06:35 PM
நள்ளிரவில் நேரம் தெரிய..

இரண்டு பையன்கள் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்து விட்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

இப்பொழுது நேரம் என்ன இருக்கும்? என்று கேட்டான் ஒருவன்.
அடுத்தவன், இரவு இரண்டு மணி இருக்கும் என்றான்.

இல்லை! மூன்று மணியாவது இருக்கும் என்றான் முதலாமவன்.

சரியான நேரத்தை எப்படித் தெரிந்து கொள்வது என்று இருவரும் சிந்தித்தனர். தெருவிலோ ஆள் நடமாட்டமே இல்லை.

இருவரும் ஓர் வீட்டின் எதிரில் நின்று உரத்த குரலில் பாடத் தொங்கினார்கள்.

சிறிது நேரத்தில் அந்த வீட்டு மேல் மாடியிலிருந்து ஒரு பெரியவர் "டேய்! பசங்களா, மணி இரண்டரை ஆகுது இல்ல. நாங்கள்ளாம் தூங்க வேண்டாமா? ஏன் இப்படிச் சத்தம் போட்டுப் பாடுகிறீர்கள்?" என்று கத்தினார்.
:D

ஓவியா
06-11-2006, 06:44 PM
கடி சூப்பர்

அதுவும் அந்த காலை வைத்துக் கண்டுபிடி! :D :D


நண்பர் தேனிசை அவர்களே
அடிக்கடி மன்றம் வந்து இதுபோல் பதிவினை தரவும்

நன்றி

pradeepkt
07-11-2006, 05:34 AM
வாங்க தேனிசை.
வந்து கொள்ள நாளு ஆயிப் போச்சு.. நீங்க எப்பயாச்சும் சென்னையில இருந்தாச் சொல்லுங்க... வந்து உங்க பாட்டுத் தொகுப்புகளையாச்சும் வாங்கிக்கிறேன்.

அறிஞர்
07-11-2006, 01:00 PM
கலக்கலான சிரிப்புக்கள்...

நள்ளிரவின் கத்தி திட்டு வாங்குவதில் ஒரு இன்பம் தான்...

ராசராசன்
07-11-2006, 03:07 PM
வாங்க தேனிசை.
வந்து "கொள்ள நாளு" ஆயிப் போச்சு.. நீங்க எப்பயாச்சும் சென்னையில இருந்தாச் சொல்லுங்க... வந்து உங்க பாட்டுத் தொகுப்புகளையாச்சும் வாங்கிக்கிறேன்.

மதுரை தமிழில்...கலக்குறீங்க பிரதீப்..

நான் போனவாரம்தான் சென்னையிலிருந்து திரும்பினேன் பிரதீப்..!
இரண்டு மாதங்கள் சரியான வேலைப்பளு..அதனால் மன்றம் வர இயலவில்லை..!
மன்ற உறவுகளிடம் அதிக பரிச்சயமும் இல்லையாதலால் யாரையும் சந்திக்கவும் இல்லை..! மறுபடியும் சென்னை வரும்போது நீங்கள் விரும்பும் அனைத்து பாடல் தொகுப்பை அளிக்கிறேன்..பிரதீப்..

ஊக்குவித்த அறிஞர், ஓவியா மற்றும் பிரதீபுக்கு நன்றிகள் பல. :)

gragavan
07-11-2006, 03:28 PM
இப்படியே நெறைய நகைச்சுவைகளைக் கொடுத்து எல்லாருக்கும் வயித்துவலி வரப்பண்ணனும் தேனிசை. தொடரட்டும் இந்த வயித்துவலி வைத்தியம். :-)