PDA

View Full Version : 02. மாட்டுத்தாவனி மகாத்மியம்gragavan
06-11-2006, 05:20 PM
முதல் பாகத்தை இங்கே படிக்கவும். http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7094

தலைப்பு வைக்கும் போது கேடிசி பிஆர்சி தூத்துக்குடீன்னு ஏன் வெச்சிருக்கேன்னு மொதல் பதிவுல சொல்லலையே. இப்பச் சொல்லீர்ரேன்.

கேடிசி = கட்டபொம்மன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன். தூத்துக்குடி திருநவேலி மாவட்டத்துக்காரங்களுக்கு நல்லா நினைவிருக்கும். நாகர்கோயில்காரங்களும் கண்டிப்பா பாத்திருப்பாங்க.

பிஆர்சி = பாண்டியன் ரோட்வேஸ் கார்ப்பரேஷன். இது மதுர மாவட்டம். விருதுநகரு மாவட்டத்துக்கும் இதுதான். ஆகையால தெக்கில இருக்குறவங்களுக்கு இந்த ரெண்டுமே கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். இப்பல்லாம் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்தானே. அதுவும் ஒருவிதத்துல நல்லதுதான்.

இந்த வண்டிகள்ள அவங்கவங்களுக்கு ஒரு நிறத்துல ஓட்டுன காலங்களும் உண்டு. பிஆர்சின்னா பச்ச வண்டி. கேடிசின்னா காவி வண்டி. சென்னையில பல்லவன் செவப்பு வண்டி. இப்படி இருந்தது. இப்ப எல்லாம் ஒன்னாயிருச்சு. ரொம்ப நாள் கழிச்சுத் தூத்துக்குடிக்குப் போனதால பழைய நெனைவுகளுக்குத் தக்க பழைய பேர்களப் போட்டுக்கிட்டேன். :-) அதையும் நம்ம நண்பர்கள் ஜோவும் தாணுவும் கண்டுபிடிச்சிட்டாங்களே!

சரி. நம்ம கதைக்கு வருவோம். விடியக்காலைல ரெண்டரைக்கு செல்பேசி எழுப்பி விட்டது. வாடிபட்டிய நெருங்கீருந்தோம். பேரப் பாத்ததுமே சிங்காரவேலன்ல "வாடிப்பட்டி வம்சம்"னு கமல் பாடுறது நினைவுக்கு வந்துச்சு. வெளிய நல்லா மழ பேஞ்சிருந்தது தெரிஞ்சது. அதென்னவோ தமிழ் நாட்டுல மழ பேஞ்சா ஒரு மகிழ்ச்சிதான். பஸ்சுல கூட வந்தவரும் மதுரைல எறங்கனுமாம். அவரு டிரைவர் கிட்ட போயி வண்டிய மாட்டுத்தாவணிக்கு விடச்சொல்லிக் கேட்டாரு.

நாங்க உக்காந்திருந்தது கடைசி வரிசை. இருந்தாலும் டிரைவரு சொன்னது காதுல விழுந்தது. "டிரைவருக்குப் பதிலா நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன்"னு சொன்ன கண்டெக்டருதான் அப்ப வண்டிய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. தாயுமானவர் மாதிரி டிரைவருமானவர் அந்த கண்டெக்டர்னு அப்பதான் தெரிஞ்சது. ஆனா பாருங்க......டிரைவர்னா நாய் மாதிரி இருக்கனும்னு அவரு தப்பா நெனைச்சிருக்காரு போல. "நீங்க இப்பிடிக் கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒங்கள ஏத்திரூக்கவே மாட்டேன்"ங்குற கொஞ்சம் கூடுதலான மரியாதை(!)யோடு குலைச்சாரு....சேச்சே.....சொன்னாரு. கடைசியில பெரிய மனசு வெச்சி ஒருவழியா எங்களையெல்லாம் ஆரப்பாளையத்துல ரோட்டு மேலயே எறக்கி விடச் சம்மதிச்சாரு. "என்ன தாராள மனசு. இவருக்கு இருவது ரூவா குடுத்திருந்தா மாட்டுத்தாவணிக்கே போயிருப்பாருன்னு யாரோ கிண்டலடிச்சாங்க." குடுத்திருக்கலாமோ!!!!!

நான் ஆரப்பாளையத்துல எறங்காம அந்த வண்டியிலயே திருநவேலி போயிருந்தா அங்கிருந்து முக்கா மணி நேரத்துல தூத்துக்குடி போயிருந்திருக்கலாம். ஆனா விதி யார விட்டது?

ஆரப்பாளையம் மெயிண்ரோட்டுல எறங்கி அப்படியே உள்ள நடந்தா ஆரப்பாளையம் பேருந்து நெலையம். இப்பல்லாம் நாட்டுல நெறைய இலவசங்களாகிப் போச்சு. அதுலயும் நிவாரண நிதிகளப் பத்திச் சொல்லவே வேண்டாம். பெஞ்ச கொஞ்ச மழைக்கும் தலைதுவட்டும் நிவாரணநிதியா துண்டு குடுக்குறாங்களோன்னு நெனைக்க வைக்கிற அளவுக்குக் கூட்டம். நிக்க ஒதுங்க எடமில்லை. மாட்டுத்தாவணிக்குப் போற வண்டியோ அந்நேரத்துக்கே பொங்கலோ பொங்கல்னு பொங்கி வழியுது. தீபாவளிக்குப் பொங்கல். என்ன செய்றது? ஆட்டோக்காரனோ எம்பது ரூவா கேக்குறான். அன்னைக்குத்தான வாழ்வு. நாங்கூட போயிரலாமோன்னு நெனச்சேன். ஆனா கூட வந்தவங்க விரும்பலை. சரீன்னு திறமையெல்லாம் காட்டி நாங்களும் பஸ்சுக்குள்ள எங்களத் திணிச்சிக்கிட்டோம்.

திடீர்னு வழியில டிரைவரு "படியில இருக்குறவங்க உள்ள நெருக்கிக்கிங்க. வெளிய இருக்காதீங்க"ன்னு சொன்னாரு. காரணத்தையும் அவரே சொன்னாரு. ஒரு குறுகலான பாலம். ஒரு பஸ்தான் போக முடியும். படியில நின்னு வெளியில தொங்குனா கண்டிப்பா எங்கையாவது ஏதாவது இழுத்து வெச்சிரும். இதுக்கு முன்னாடி அப்படி ஆயிருக்கும் போல. அதான் அவரும் அறிவுருத்துனாரு. நல்லாயிருக்கனும் அந்த டிரைவரு.

ஆரப்பாளையத்துல நிவாரணநிதிக் கூட்டம்னா மாட்டுத்தாவணியில நட்சத்திரக் கலைவிழா. அவ்வளவு கூட்டம். தூத்துக்குடி பஸ் நிக்கிற எடத்துக்குப் போனா அங்க எந்த பஸ்சும் இல்லை. நாகர்கோயில், திருநவேலி, ராசபாளையம், செங்கோட்டை, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், தேனி, கோட்டூர் (இந்த ஊரு சாத்தூர்ல இருந்து இருக்கங்குடி வழியா போனா வர்ர ரொம்ப ரொம்ப சின்ன ஊரு) அப்படீன்னு எல்லா ஊருக்கும் வண்டிக வருது. போகுது. தூத்துக்குடி அரவத்தையே காணம்.

"ஏண்டி ஒங்கூரு வண்டி இப்பிடிக் கழுத்தறுக்குது" ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க. ஒருத்தி தூத்துக்குடி. இன்னொருத்தி வேற ஊரு போல. இவள வண்டியேத்தீட்டுப் போகலாம்னு அவ காத்திருந்தான்னு நெனைக்கிறேன். "பேசாம அருப்புக்கோட்டைக்குப் போறியா?". அத விட வேற வினையே வேண்டாம்னு நெனச்சேன். நல்லவேள அந்தப் பொண்ணும் அந்த யோசனைய ஏத்துக்கலை. தூத்துக்குடி மக்கள்ளாம் இங்குட்டும் அங்குட்டும் திரும்பித் திரும்பிப் பாக்காங்க. ஒவ்வொரு பக்கமும் வர்ர வண்டியெல்லாம் எந்தூருன்னு பாக்காங்க. நானுந்தான்.

அங்க ஒரு கடைல, "அண்ணே தூத்துடி வண்டி எத்தன மணிக்கு"ன்னு கேட்டேன். அவரும் ஒடனே, "ஏழு மணிக்கு"ன்னு சொல்லீட்டு டீயாத்துறத தொடர்ந்தாரு. ஆத்துன டீயில ஜீனிக்குப் பதிலா என்னையப் போட்டு ஆத்துன நெலமை எனக்கு. ஏழு மணிக்கு இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கே. அப்ப பத்து மணிக்குத்தானா தூத்துடின்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசாம கோயில்பட்டி போயிரலாம்னு நெனச்சேன். திருநவேலி நாகர்கோயில் போற வண்டியெல்லாம் கோயில்பட்டி வழியாப் போகும். கோயில்பட்டியில எறங்குனா அங்கிருந்து ஒன்னேகால் மணி நேரந்தான் தூத்துக்குடி.

அப்படியே வருத்தத்தோட அந்த வண்டிங்க வர்ர பக்கமாப் போனேன். காலை நேரம். குளிரு வேற. அவசரமா ஒன்றாம் எண்ணுக்குப் போக அங்கிருந்த பொதுக்கழிப்பிடத்துக்குள்ள தெரியாம நொழைஞ்சிட்டேன். ஐயோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்னொரு வாட்டி அதுக்குள்ள நுழையனும்னா நீல் ஆம்ஸ்ட்ராங் கிட்ட டிரஸ் வாங்கீட்டு வந்துதான் நொழையனுங்குற மாதிரி இருந்துச்சு. என்ன செய்ய...ஆத்திரத்தைத்தான அடக்கலாம்........

இப்படி செஞ்சிட்டியே முருகான்னு வெளிய வந்து பாத்தா அங்க திருச்செந்தூர் வண்டி நின்னது. ஆனா டிரைவரும் கண்டெக்டரும் எறங்கீட்டாங்க. கண்டிப்பா வண்டி தூத்துக்குடிக்குப் போகும்ன்னு டிரைவர்கிட்ட உறுதி படுத்திக்கிட்டேன். அப்படியே முருகனே வண்டியோட நின்ன பூரிப்பு எனக்கு. உக்கார எடமில்லை. இருக்கட்டும். அதுனால என்ன. நின்னுக்கிட்டாவது போக ஒரு வண்டி அனுப்பினானே முருகன். அளவுக்கு மீறி ஆசப்பட்ட ஆம்பளையும் அளவுக்கு மீறி கோவப் பட்ட பொம்பளையும் உருப்பட்டதில்லைன்னு ஏதோ சினிமாவுல எல்லாம் சொல்றாங்களாம். சினிமாவுலதான ரொம்ப வருடங்களா கதாநாயகி கையப் பிசுக்கிக்கிட்டே கதாநாயகர்கள் நல்ல கருத்தெல்லாம் சொல்றாங்க. அதுனால நானும் இந்த உதவி செஞ்சதே போதும்னு முருகனுக்கு நன்றி சொல்லீட்டு ஏறி நின்னேன்.

அஞ்சு மணிக்கு வண்டிய எடுத்தாங்க. மூனு மணி நேரம்னா எட்டு மணிக்கெல்லாம் தூத்துக்குடின்னு திரும்ப ஒரு சந்தோசம் எட்டிப் பாத்தது. ஆனா போனேனா?

தொடரும்.......

பென்ஸ்
06-11-2006, 05:33 PM
ஆமா.... போனேனா போகலையா....
மருவாதையா மீதியை சொல்லல.. வீட்டுக்கு அருவா வருமப்பு....

ஓவியா
06-11-2006, 07:39 PM
ராகவன்,
உங்க சொகக்கதை இப்படி ரசனையாய் இருக்கே.....::D :D

சரி இருப்பு கொள்ளவில்லை...ம்ம்ம் அடுத்த பதிவை போடவும்

இல்லனா (லன்டனில் இருந்து) ஆட்டோதான் வரும்

pradeepkt
07-11-2006, 06:32 AM
ம்ம்ம்.. ஆரப்பாளையத்துல இருந்து மாட்டுத்தாவணிக்கு ஒரு நாளைக்குப் போனதே இந்தப் பாடா இருக்கே... நாங்க எல்லாம் அங்ஙனயே பெரண்டுக்கிட்டுக் கெடக்கோம், என்ன செய்யச் சொல்லுதீய?

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் காலஞ்சென்ற ஐயா பிடிஆரு தலையாலத் தண்ணி குடிச்சுக் கொண்டு வந்தது. அந்த ஆட்சியில பல ஊருகளில புதுப் பஸ் ஸ்டாண்டு கட்டினாக, எனக்குத் தெரிஞ்சு அருப்புக்கோட்டை, காரைக்குடி, மதுரை போன்ற சில ஊர்கள்! அந்த ஆட்சி முடியுங்காலையே கொஞ்சம் நஞ்சு போயிருந்துச்சு... இப்பப் பத்து வருசம் ஆயிப்போச்சு - கேக்கவே வேணாம்...

gragavan
07-11-2006, 03:45 PM
ஆமா.... போனேனா போகலையா....
மருவாதையா மீதியை சொல்லல.. வீட்டுக்கு அருவா வருமப்பு....அது அடுத்த பதிவுல தெரியும்........ :D :D :D

mukilan
08-11-2006, 01:24 AM
ஜோவும் தாணுவும் மட்டுமில்லே நானும் கண்டுபிடிச்சிட்டேனே! ஆனாலும் அருப்புக்கோட்டையைப் பற்றி இப்படித் தரம் தாழ்த்திக் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழு ஆண்டுகள் நான் அவ்வூரிலிருந்து அனுபவித்த கஷ்டத்தை நீங்களும் அனுபவிக்க கடவது!

gragavan
08-11-2006, 11:17 AM
ஜோவும் தாணுவும் மட்டுமில்லே நானும் கண்டுபிடிச்சிட்டேனே! ஆனாலும் அருப்புக்கோட்டையைப் பற்றி இப்படித் தரம் தாழ்த்திக் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழு ஆண்டுகள் நான் அவ்வூரிலிருந்து அனுபவித்த கஷ்டத்தை நீங்களும் அனுபவிக்க கடவது!தரந்தாழ்த்தி ஒன்னும் சொல்லலையே முகிலன். இப்பிடிக் கோவிச்சிக்கிட்டா எப்பிடி? அங்க போனா தூத்துக்குடி பஸ்சு கெடைக்காதுங்குறதுக்காகச் சொன்னேன். :-)

பாரதி
08-11-2006, 02:05 PM
வர்ணனை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது இராகவன். மதுரையில் இப்போது பரவாயில்லை - ஒரு பேருந்து நிறுத்தம் குறைவு! பாவப்பட்ட மக்கள் பேருந்து நிலையங்களளில் மாறி, தாங்கள் செல்ல வேண்டிய பேருந்திற்கு செல்வதற்குள் படாதபாடு படுவதை காண சகிப்பதில்லை. மக்கள் வசதி என்பதெல்லாம் கனவாக மாறி விட்டது..ஹும்....

.....அசத்துங்க.!

ஒரு சிறு குறிப்பு: தேனிக்கு செல்லும் பேருந்துகள் எல்லாம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்துதான் புறப்படும். அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து தேனி செல்லும் பேருந்துகள் மாட்டுத்தாவணி சென்று, பின் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு சென்றுதான் செல்லும்.

இளசு
12-11-2006, 02:38 PM
அன்பு ராகவன்

பயண மகாத்மியம் உங்கள் பாணியில் மகாசுவையாய் ...

ஆர்ம்ஸ்ட்ராங் உடை தேவையை நினைவில் கொண்டுவந்து.....சிரித்தேன்.
உள்ளே நடமாட அந்த உடை தோதுதான்..
ஆனால் போகும் காரியம் நிறைவேற்ற......!!???

தொடருங்கள்...

பாரதியின் மேல்தகவல்களுக்கு நன்றி..

சென்னையிலும் தாம்பரம் ஒரு துணை நிறுத்தமாகும் விரைவில் என ஒரு சேதி உலவுகிறது. தெற்கிலிருந்து வந்தால் இங்கே எல்லாரும் இறங்கியாக வேண்டும் அப்போது.

சேரன்கயல்
27-02-2007, 12:11 PM
நினைச்சு பார்க்கவே கொஞ்சம் ஆயாசமாத்தான் இருக்கு...
அனுபவப்பட்ட உங்களுக்கு எப்படியிருந்திருக்கும்னு புரியுது...

சேரன்கயல்
27-02-2007, 12:17 PM
இத்தோட தொடர்ச்சி எங்கப்பூ...
தூத்துடிக்கு எப்படி போனீங்கன்னு தெரியனுமில்ல...