PDA

View Full Version : கண்ணீர் காலம்....



பென்ஸ்
06-11-2006, 04:15 PM
துளி - 1

நினைவுகளை தழுவிகொண்டு
நான் காத்திருக்க
யதார்தத்தின் கையை
நீ பிடித்து நடக்கையில்
நம் காதல் மட்டும் அனாதையாய்..

mgandhi
06-11-2006, 06:29 PM
பட்டமரத்தினில் பட்டம் படாதிருக்கட்டும்

மதி
07-11-2006, 02:54 AM
இது நல்லதொரு அனுபவக் கவிதை பென்ஸ்...

pradeepkt
07-11-2006, 05:38 AM
யதார்த்தம்தாங்க ஜெயிக்கும்...
புத்திசாலிப் பெண்பிள்ளைகளைக் காதலித்தால் இப்படித்தான் நடக்கும். "நம்" காதல் அப்படிங்கறதுதான் இடிக்குது. அவங்க நட்டாத்துல விட்டுட்டுப் போன காதல்ல அவங்களுக்கு என்ன பங்கு இருக்கும்னு நினைக்கிறீங்க???

வேலையப் பாருங்கய்யா :)

meera
07-11-2006, 05:48 AM
பென்ஸ்,கவிதை நல்லா இருக்கு.


உங்க அளவுக்கு நமக்கு விமர்சனம் பண்ண தெரியாது ஹி ஹி ஹி :D :D :D :D

பென்ஸ்
07-11-2006, 01:10 PM
துளி - 2

நீ இருக்கும் வரை
காதல் கண்ணுக்கு தெரியவில்லை
அழகானவை மட்டுமே
எப்போதும் முதலாய்...
.

franklinraja
07-11-2006, 02:12 PM
யதார்த்தத்தை யதார்த்தமாய் வெல்க..! ;)

gragavan
07-11-2006, 02:52 PM
துளி - 2

நீ இருக்கும் வரை
காதல் கண்ணுக்கு தெரியவில்லை
அழகானவை மட்டுமே
எப்போதும் முதலாய்...
. அப்ப காதல் அழகானதில்லைன்னு சொல்றீங்களா? கோக்கும் கசந்து தியேட்டர் சீட்டும் நொந்ததெல்லாம் அழகில்லையா?

ஓவியா
07-11-2006, 06:52 PM
துளி - 1

நினைவுகளை தழுவிகொண்டு
நான் காத்திருக்க

யதார்தத்தின் கையை
நீ பிடித்து நடக்கையில்

நம் காதல் மட்டும் அனாதையாய்..
நானோ நூலறுந்த பட்டமாய்...

பெஞ்சு
அருமையான ஆரம்பம்

இதான் 'பிரக்டிக்கல் லைப்'..பா!!!!!!!!!!


தங்களின்
கவிதை துளிகளில் நான் நினையும் முன்
(கருவின்) கண்ணிர் துளிகளிடம் தோற்றுவிட்டேனே.....

mukilan
08-11-2006, 12:26 AM
யதார்த்தம்தாங்க ஜெயிக்கும்...
புத்திசாலிப் பெண்பிள்ளைகளைக் காதலித்தால் இப்படித்தான் நடக்கும். "நம்" காதல் அப்படிங்கறதுதான் இடிக்குது. அவங்க நட்டாத்துல விட்டுட்டுப் போன காதல்ல அவங்களுக்கு என்ன பங்கு இருக்கும்னு நினைக்கிறீங்க???

வேலையப் பாருங்கய்யா :)

அவர் கவிதைதானே எழுதியிருக்கார். கவிதையை மட்டும் பாராட்டாம அதென்ன வேலையைப் பாருங்கன்னு சொல்றது. இதெல்லாம் நல்லதில்லை ஆமா!:confused: பென்ஸ் உங்க அனுபத்தை சொல்லுங்க. கேட்டுக்கறோம்.:D :D

மதி
08-11-2006, 02:36 AM
அதாங்க முகில்..
அவர் அனுபவங்கள் அருமையாயில்ல இருக்கு...!

meera
08-11-2006, 04:52 AM
பென்ஸ்,

அனுபவ துளிகள் அருமை.
அடுத்த துளியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

பென்ஸ்
08-11-2006, 08:27 AM
நன்றி காந்தி , பிராங்...

மதி, ஆனுபவ கவிதையா... இது உன் அனுபவமா.... ???

பிரதிப்பு...
சரி வுடுங்க ..... "நினைப்பதேல்லாம் நடந்துவிட்டால்..."

ஓவி.. இது என்ன பண்ண மக்கா...
ஓவ்வோரு துளியும் ஒரு கதை சொல்லுதே...
பிராட்டிகலா பாத்தா, எல்லோரும் பிராட்டிகலாதான் இருக்கிறாங்க...

முகில்ஸ்.... என்ன இப்படி சொல்லி போட்டிங்க,
"உங்க" என்று சொல்லும்போது நா ஒட்டுவதில்லை, "நம்ம" என்று சொல்லும் போது நா ஒட்டும்....

மீரா... நன்றி
(நக்கலடிச்ச மாதிரி இருந்தா "கிளி"த்துடுவேன் ஜாக்கிரதை...)

பென்ஸ்
08-11-2006, 08:49 AM
துளி - 3

முத்தங்கள் கரையாதிருக்க
சரவம் செய்யாத
என் முகம் கண்டிராவியாம்

நீ கோதி விட்ட தலை முடி
வாரபடாவிட்டால் அழகில்லையாம்

உன்மணம் தேய்ந்த இந்த சட்டை
துவைக்கபட வேண்டுமாம்

பிரிவில் அழுகிறாயோ என்று
நிதமும் நினைத்து கொண்டிருபவன்
மற்றவருடன் சிரிக்கவில்லையாம்

பைத்தியங்கள்...
இவர்களுக்கு என்னை பார்த்து
சிரிக்க மட்டுமே தெரியும்..
காதலிக்கட்டும்
அப்ப புரியும்...

மதி
08-11-2006, 10:55 AM
என்ன பைத்தியம் முற்றிவிடும் என்றா???

பென்ஸூ....
இது எப்படி என் அனுபவமாகும்...கவிதையை நீங்க எழுதறப்போ..!

ஓவியா
08-11-2006, 06:39 PM
துளி - 2

நீ இருக்கும் வரை
காதல் கண்ணுக்கு தெரியவில்லை
அழகானவை மட்டுமே
எப்போதும் முதலாய்...
.


கவிராயரே,!!!!!!!!!!!
இது புரியலபா.........:confused:

ஓவியா
08-11-2006, 07:40 PM
துளி - 3

முத்தங்கள் கரையாதிருக்க
சரவம் செய்யாத
என் முகம் கண்டிராவியாம்

நீ கோதி விட்ட தலை முடி
வாரபடாவிட்டால் அழகில்லையாம்

உன்மணம் தேய்ந்த இந்த சட்டை
துவைக்கபட வேண்டுமாம்

பிரிவில் அழுகிறாயோ என்று
நிதமும் நினைத்து கொண்டிருபவன்
மற்றவருடன் சிரிக்கவில்லையாம்

பைத்தியங்கள்...
இவர்களுக்கு என்னை பார்த்து
சிரிக்க மட்டுமே தெரியும்..
காதலிக்கட்டும்
அப்ப புரியும்...


நிஜம்......
புரியுது..... புரியுது.....

ஆனாலும் நண்பா,
சில மனிதர்கள்
அப்பாடா விடுச்சுடா, அப்படீனு ஒரே கொண்டாட்டமா இருக்கங்களே...

இன்னு சிலரோ
நல்லது செய்வதா நினைத்து.....இன்னும் காயப்படுத்துறாங்களே

தொடரட்டும் உங்கள் கண்ணீர் துளிகள்

பென்ஸ்
09-11-2006, 06:20 AM
கவிராயரே,!!!!!!!!!!!
இது புரியலபா.........:confused:

ஓவி..
இதை வாசிப்பவர் கருத்துக்கு விட்டுவிடலாம்
வேனுமுன்னா டிப்ஸ் கொடுக்கிறென்
1, ரொம்ப அழகான ரோஜா கையில் இருக்கும் போது , அல்லி கையிக்ல் இருந்தாலும் அழகா தெரியாது , அத்ற்க்காக அல்லி அழகு கிடையாது என்று இல்லையே
2, வீருமாண்டி படத்தில் கமலஹாசன் ஒரு டயலாக் சொல்லுவார் "சந்தோசம் என்கிறது அது இருக்கிற வரைக்கும் தெரியாது"... சில சமயம் காதலும்...
3, கொஞ்சம் ஆபாசமாய்.. விட்டு விடலாமே...
இன்னும் எப்படி வேணுமானாலும் எடுக்கலாமே...

ஓவியா
09-11-2006, 07:03 PM
ஓவி..
இதை வாசிப்பவர் கருத்துக்கு விட்டுவிடலாம்
வேனுமுன்னா டிப்ஸ் கொடுக்கிறென்
1, ரொம்ப அழகான ரோஜா கையில் இருக்கும் போது , அல்லி கையிக்ல் இருந்தாலும் அழகா தெரியாது , அத்ற்க்காக அல்லி அழகு கிடையாது என்று இல்லையே
2, வீருமாண்டி படத்தில் கமலஹாசன் ஒரு டயலாக் சொல்லுவார் "சந்தோசம் என்கிறது அது இருக்கிற வரைக்கும் தெரியாது"... சில சமயம் காதலும்...
3, கொஞ்சம் ஆபாசமாய்.. விட்டு விடலாமே...
இன்னும் எப்படி வேணுமானாலும் எடுக்கலாமே...


நன்றி பெஞ்சுமின்

நல்லவே புரியுது

பென்ஸ்
10-11-2006, 05:35 PM
துளி - 4

திரும்பி பார்க்காதே
ஒருவேளை உன் கண்ணில்
ஈரம் இருந்தால்...!!!

meera
11-11-2006, 09:26 AM
மீரா... நன்றி
(நக்கலடிச்ச மாதிரி இருந்தா "கிளி"த்துடுவேன் ஜாக்கிரதை...)

பென்ஸ்,

நக்கலா அப்படீன்னா என்னாங்க???:confused: :confused:

பாவம் அந்த கிளி அதுபாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டுமே,அதை ஏன் இங்க இழுக்கறீங்க.B) B) B)

meera
11-11-2006, 09:31 AM
துளி - 4

திரும்பி பார்க்காதே
ஒருவேளை உன் கண்ணில்
ஈரம் இருந்தால்...!!!

அழகான கவிதை பென்ஸ்.

இளசு
11-11-2006, 02:37 PM
பசி எடுக்கும் காலமட்டும் வயித்துக்குள்ள சிக்கலில்லை என வைரமுத்து சொன்ன மாதிரி,

காதல் உள்ள காலமட்டும், இளமைக்கு மறைவில்லை என சொல்லலாம்..

இனியவேதனையும் தவிப்பான அயர்ச்சியும் என
முரண்கள் உரசி ஆர்ப்பரிக்கும் இளைய மனதால் மட்டுமே
இந்த வரிகளை வார்த்தெடுக்க இயலும்..

வந்தனங்கள் பென்ஸ்....

ஞாபகக் கண்ணாடி எடுத்து அணிய வைத்து வாசிக்க வைத்துவிட்டீர்கள்..

வரிக்கு வரி ரசிக்க ( மட்டுமே) முடிகிறது...

தொடரட்டும் துளித்துளியாய்... கொட்டும் மனத்துளியாய்...

பென்ஸ்
11-11-2006, 07:38 PM
துளி - 5

உன் நினைவுகளை தராத
ஒரு நிமிடம் வேண்டும்
என்னை உணர...

உன் சாயல் இல்லாத
முகம் காணவேண்டும்
என் வாழ்வில் வர...

எவ்விடத்தையும் கடக்கையில்
எதோ நினைத்து புன்னகைத்து
புகையாமலிருக்க...

எல்லாம் பொய் என்று
ஒரு பொய்யாவது சொல்லி போ

பென்ஸ்
11-11-2006, 07:45 PM
நன்றி மீரா...

கவிதை புரிந்ததா....
சில நேரங்களில் என் கவிதையே எனக்கு புரியாது....


நன்றி இளசு...
நீங்கள் எல்லாம் பாராட்டும் போது எனக்கே சந்தேகம் வந்துவிடுகிறது, உண்மையிலையே எனக்கு கவிதை எழுத தெரியுமா என்று....
அட உன்மையிலையே நல்லாவ இருக்கு????

meera
12-11-2006, 01:21 PM
துளி - 5

உன் நினைவுகளை தராத
ஒரு நிமிடம் வேண்டும்
என்னை உணர...

உன் சாயல் இல்லாத
முகம் காணவேண்டும்
என் வாழ்வில் வர...

எவ்விடத்தையும் கடக்கையில்
எதோ நினைத்து புன்னகைத்து
புகையாமலிருக்க...

எல்லாம் பொய் என்று
ஒரு பொய்யாவது சொல்லி போ



பென்ஸ்,

உங்களுக்கு வாழ்த்து சொல்லவோ,கவிதைக்கு விமர்சனம் சொல்லவோ வார்த்தைகள் இல்லை.

அருமையான கவிதை.

தாமரை
03-12-2006, 03:37 PM
துளி - 3

முத்தங்கள் கரையாதிருக்க
சரவம் செய்யாத
என் முகம் கண்டிராவியாம்

நீ கோதி விட்ட தலை முடி
வாரபடாவிட்டால் அழகில்லையாம்

உன்மணம் தேய்ந்த இந்த சட்டை
துவைக்கபட வேண்டுமாம்

பிரிவில் அழுகிறாயோ என்று
நிதமும் நினைத்து கொண்டிருபவன்
மற்றவருடன் சிரிக்கவில்லையாம்

பைத்தியங்கள்...
இவர்களுக்கு என்னை பார்த்து
சிரிக்க மட்டுமே தெரியும்..
காதலிக்கட்டும்
அப்ப புரியும்...

ஆஹா என்ன யதார்த்தம் ... கவிதை உங்களை நேரில் பார்த்த உணர்வைத் தருதே பென்ஸூ...

மதி
04-12-2006, 01:30 AM
ஆஹா என்ன யதார்த்தம் ... கவிதை உங்களை நேரில் பார்த்த உணர்வைத் தருதே பென்ஸூ...
அப்படியா??????

guna
04-12-2006, 03:04 AM
துளி - 5

உன் நினைவுகளை தராத
ஒரு நிமிடம் வேண்டும்
என்னை உணர...

உன் சாயல் இல்லாத
முகம் காணவேண்டும்
என் வாழ்வில் வர...

எவ்விடத்தையும் கடக்கையில்
எதோ நினைத்து புன்னகைத்து
புகையாமலிருக்க...

எல்லாம் பொய் என்று
ஒரு பொய்யாவது சொல்லி போ

வார்த்தைகள் இல்லை, வர்ணிக்க..
எல்லா துளிகளுமே அருமை, அதில் இது அருமையோ அருமை..

பென்ஸ்
11-12-2006, 12:34 PM
துளி - 6

நீ போனபின் வந்த
வெற்றிடதாலோ என்னவோ
என்னுள் ஒரு அழுத்தம்

அதனால் வா...
வந்து அழுது நிரப்பிவிட்டு போயேன்...!!!

தாமரை
11-12-2006, 12:39 PM
துளி - 6

நீ போனபின் வந்த
வெற்றிடதாலோ என்னவோ
என்னுள் ஒரு அழுத்தம்

அதனால் வா...
வந்து அழுது நிரப்பிவிட்டு போயேன்...!!!


உண்மையைச் சொல்றதுன்னா அது பென்ஸூதான்..:rolleyes: :rolleyes: :rolleyes:

எப்படி பென்ஸூ.. ஒரு பெண் உங்கள் வாழ்வில் மனதில் வந்தால் அழத்தான் வேண்டுமா? பெண்களே எச்சரிக்கை,...:eek: :eek: :eek: :eek:

பென்ஸ்
11-12-2006, 01:16 PM
உண்மையைச் சொல்றதுன்னா அது பென்ஸூதான்..:rolleyes: :rolleyes: :rolleyes:

எப்படி பென்ஸூ.. ஒரு பெண் உங்கள் வாழ்வில் மனதில் வந்தால் அழத்தான் வேண்டுமா? பெண்களே எச்சரிக்கை,...:eek: :eek: :eek: :eek:

மனதில் வந்தால் அவள் இருப்பாள்...
போனால் கண்ணீரையாவது விட்டு போகலாம்..

தாமரை
11-12-2006, 01:20 PM
மனதில் வந்தால் அவள் இருப்பாள்...
போனால் கண்ணீரையாவது விட்டு போகலாம்..


உங்கள் மனதில் அவள் வருவது அவள் கையிலா இருக்கிறது?:rolleyes: :rolleyes:

உங்களுக்குள் அழுது பாருங்கள்.. வெற்றிடம் நிறையலாம்..:eek: :eek: :eek:

அவளை அழ விட்டு நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்..:confused: :confused: :confused:

அதுவும் பென்ஸூ நீங்களா இப்படி...

பென்ஸ்
11-12-2006, 01:33 PM
தாமரை....

கவிதைகள் கவிதைகளாகவே படிக்கபடட்டும்...

நானே என் கவிதைக்கு கருத்து மாற்று சொல்லுவேன்.. இன்னொரு கவிதையாய்..

நான் சொல்லுவது தீர்வு அல்லவே, இதுவும் ஒரு டிபன்ஸ் தான்...!!!
நாம் நம் காயங்களுக்கும், தோல்விகளுக்கும் அடுத்தவர்களையே குறை கூறி பழகி போனோம் அல்லவா..??? அப்படியே தான் இந்த கவிதையும்...

நம் சோகம் தீர அடுத்தவர்கள் அழ நினைக்கும் மனது...

தாமரை
11-12-2006, 01:40 PM
நம் சோகம் தீர அடுத்தவர்கள் அழ நினைக்கும் மனது...


இதில் அம்மா குழந்தையை வைவதை போல ஒரு ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தால் நன்றாயிருந்திருக்குமோ!:) :) :)

பென்ஸ்
11-12-2006, 01:55 PM
கண்ணீர் காலத்தில் - காதலி
பன்னீர் காலத்தில் - அம்மா :-)

தாமரை
11-12-2006, 02:02 PM
கண்ணீர் காலத்தில் - காதலி
பன்னீர் காலத்தில் - அம்மா :-)
கண்ணீர் காலத்தில் - காதலி -அம்மா

pradeepkt
13-12-2006, 05:01 AM
எந்த அம்மாங்க கண்ணீர்க் காலத்துக்குக் காரணம் ஆவாங்க. அவங்களேதான் கண்ணீர்க் கலமா இருப்பாங்க.

தாமரை
13-12-2006, 05:53 AM
எந்த அம்மாங்க கண்ணீர்க் காலத்துக்குக் காரணம் ஆவாங்க. அவங்களேதான் கண்ணீர்க் கலமா இருப்பாங்க.

கண்ணீர் காலத்தில் - காதலி -அம்மா
இதுக்கு அர்த்தம் ஒருவன் கண்ணீர் வடிக்கும் காலத்தில் அவனுடைய காதலி அவனது அன்னையாய் அவனை அரவணைக்க வேண்டும் என்பது..

இதுக்குத்தான் ஆஃப்ஸில வேலை(தூக்கம்) செய்யும் போது படிக்காதீங்கன்னு சொல்றது..

காரணம் என்று நான் சொல்லலியே! இப்படி ரணமாக்கி விட்டீர்களே!

சரி உங்க கேள்விக்கு இப்ப மறுகேள்வி போடறேன்.. செண்டிமெண்டை தள்ளி வச்சுட்டு பதில் சொல்லுங்க...

அந்த குப்பைத் தொட்டிக் குழந்தையிடம் இதை சொல்லத் தயாரா?

அல்லிராணி
13-12-2006, 06:05 AM
எந்த அம்மாங்க கண்ணீர்க் காலத்துக்குக் காரணம் ஆவாங்க. அவங்களேதான் கண்ணீர்க் கலமா இருப்பாங்க.


ஓடிப்போன
அம்மாவை எண்ணி
அழுது கொண்டிருக்கிறதே அந்தக் குழந்தையையும் சமாதானம் செய்யுங்களேன்...

pradeepkt
13-12-2006, 06:27 AM
கண்ணீர் காலத்தில் - காதலி -அம்மா
இதுக்கு அர்த்தம் ஒருவன் கண்ணீர் வடிக்கும் காலத்தில் அவனுடைய காதலி அவனது அன்னையாய் அவனை அரவணைக்க வேண்டும் என்பது..

இதுக்குத்தான் ஆஃப்ஸில வேலை(தூக்கம்) செய்யும் போது படிக்காதீங்கன்னு சொல்றது..

காரணம் என்று நான் சொல்லலியே! இப்படி ரணமாக்கி விட்டீர்களே!

சரி உங்க கேள்விக்கு இப்ப மறுகேள்வி போடறேன்.. செண்டிமெண்டை தள்ளி வச்சுட்டு பதில் சொல்லுங்க...

அந்த குப்பைத் தொட்டிக் குழந்தையிடம் இதை சொல்லத் தயாரா?
ஐயா அதெல்லாம் முதல்லயே புரிஞ்சுதுங்க...
நான் கேட்டது கண்ணீருக்குக் காரணமே அவங்கதாங்கறபோது ஆறுதலை எப்படி எதிர்பார்க்க முடியுங்கறதுதான் ... ஆபீஸில் தூங்குறதை விட நிறைய வேலை இருக்குங்க... வலை மேய, அரட்டை அடிக்க, டீ குடிக்க, சாப்பிட .. அதுனால நான் தூங்கறதில்லை

மறுகேள்விக்குப் பதில் இப்போ என்கிட்ட இல்லை..

அல்லிராணி
13-12-2006, 06:59 AM
ஐயா அதெல்லாம் முதல்லயே புரிஞ்சுதுங்க...
நான் கேட்டது கண்ணீருக்குக் காரணமே அவங்கதாங்கறபோது ஆறுதலை எப்படி எதிர்பார்க்க முடியுங்கறதுதான் ... ஆபீஸில் தூங்குறதை விட நிறைய வேலை இருக்குங்க... வலை மேய, அரட்டை அடிக்க, டீ குடிக்க, சாப்பிட .. அதுனால நான் தூங்கறதில்லை

மறுகேள்விக்குப் பதில் இப்போ என்கிட்ட இல்லை..


அடிக்கிற கைதாங்களே அணைக்கும்

ஓவியா
13-12-2006, 06:13 PM
துளி - 5

உன் நினைவுகளை தராத
ஒரு நிமிடம் வேண்டும்
என்னை உணர...

உன் சாயல் இல்லாத
முகம் காணவேண்டும்
என் வாழ்வில் வர...

எவ்விடத்தையும் கடக்கையில்
எதோ நினைத்து புன்னகைத்து
புகையாமலிருக்க...

எல்லாம் பொய் என்று
ஒரு பொய்யாவது சொல்லி போ

ஆழமான வரிகள்....

ஒரு பொய் சொல்லி போனல், மனது மாறிவிடுமா என்ன?

நினைவுகள்.... வரும்....வரும்..வரும்...வரும்...வரும்....வரும்..வரும்...வரும்...வரும்....வரும்..வரும்...வரும்...வரும்

உண்மைக்காதலில்
காதலியின் கூந்தல் வாசம்
காதலனின் சாம்பலிலும் வரும்..வரும்...வரும்...

ஓவியா
13-12-2006, 06:30 PM
துளி - 6

நீ போனபின் வந்த
வெற்றிடதாலோ என்னவோ
என்னுள் ஒரு அழுத்தம்

அதனால் வா...
வந்து அழுது நிரப்பிவிட்டு போயேன்...!!!

படிக்காச்சுலே கண்ணீர் வருதே...என்னாத்த விமர்சனம் போடுறது


தேனாய் அவளின் எண்ணங்கள் நிரம்பிய மனதில்
உப்பு கண்ணீரை நிரப்ப இடம் உண்டா.?????..- கல் மனசுடா உனக்கு

meera
14-12-2006, 04:31 AM
ஆழமான வரிகள்....

ஒரு பொய் சொல்லி போனல், மனது மாறிவிடுமா என்ன?

நினைவுகள்.... வரும்....வரும்..வரும்...வரும்...வரும்....வரும்..வரும்...வரும்...வரும்....வரும்..வரும்...வரும்...வரும்

உண்மைக்காதலில்
காதலியின் கூந்தல் வாசம்
காதலனின் சாம்பலிலும் வரும்..வரும்...வரும்...

அடடே ஓவி சூப்பரு.:eek: :eek: :eek:

பென்ஸ்
14-12-2006, 08:35 AM
தேனாய் அவளின் எண்ணங்கள் நிரம்பிய மனதில்
உப்பு கண்ணீரை நிரப்ப இடம் உண்டா.?????..- கல் மனசுடா உனக்கு
இல்லை.... கற்ற மனசு :D :D

ஓவியா
14-12-2006, 02:01 PM
அடடே ஓவி சூப்பரு.:eek: :eek: :eek:
நமக்கும் கவிதை சுமாரா வருமே....:D :D :D



இல்லை.... கற்ற மனசு :D :D

:D :D :D

நம்பிகோபாலன்
15-12-2006, 08:03 PM
பட்டம் காட்ரில் இருந்தால் காதல்

அருந்தால் சாபம்

guna
16-12-2006, 03:40 AM
பட்டம் காட்ரில் இருந்தால் காதல்

அருந்தால் சாபம்

அருந்தால் சுபம்'னு தானே இப்போ எல்லாரும் நினைகறாங்க..

பென்ஸ்
28-03-2007, 08:40 AM
துளி - 7

உனக்கென்ன
உன் நிலையை சொல்லிவிட்டு
காற்றோடு கலைந்துவிட்டாய்
சுவாசத்தை நான்
நிறுத்தவா முடியும்..!!!

நாம் சாலையை கடக்கும்
பொழுதெல்லாம் நம்மையே
வெறிக்கும் இவர்கள்- இன்று
என்னையறிமாமல் போனதேன்..!!

மாறதான் போகிறது
காற்றின் திசையை போல்
இந்த பார்வைகளும்
என் மனமும்....!!!!

pradeepkt
28-03-2007, 08:47 AM
மாற்றம் ஒன்றே நிலையானது...
வாழ்க வளமுடன்.

ஓவியன்
28-03-2007, 08:52 AM
துளி - 7
நாம் சாலையை கடக்கும்
பொழுதெல்லாம் நம்மையே
வெறிக்கும் இவர்கள்- இன்று
என்னையறிமாமல் போனதேன்..!!


சமூகத்தின் காதல் மீதான பார்வையை தத்ரூபமாக சில வரிகளில் தந்துள்ளீர்கள்!

பாராட்டுக்கள்!

:aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033:

ஓவியன்
28-03-2007, 08:54 AM
மாற்றம் ஒன்றே நிலையானது...
.

நூற்றுக்கு நூறு உண்மை!

ஆனால் அந்த மாற்றத்தினை தாங்கிக் கொள்ள்த் தான் எல்லோராலும் முடிவதில்லை.

பென்ஸ்
08-05-2007, 03:59 PM
துளி - 7

மழையோடு அழுகிறேன்
யாரறிய போகிறார்..!!!

இடித்து நிலைகுலைத்து
செல்லும் உன் நினைவுகளை
நான் இறக்கிவைக்கபோகிறேன்...!!!

அதற்கு
மழையோடு அழுகிறேன்
யாரறிய போகிறார்..!!!

என் முனங்கல்கள்
இந்த சாரலில் கரைந்து போகையில்
நீ கரை கடந்து போயிருப்பாய்...

அறிந்திருந்தும்
மழையோடு அழுகிறேன்
யாரறிய போகிறார்..!!!

வீசும் காற்றில் உன் மணமில்லை ,
இருந்தாலும் உணரவுமில்லை
உன் ரணமுமில்லை

தீர்க்கமாய்
மழையோடு அழுகிறேன்
யாரறிய போகிறார்..!!!

மனோஜ்
08-05-2007, 04:22 PM
மழையோடு அழுகின்ற
சமையங்கள் மனதினில் ரணங்கள்
தீர்க்கமான வார்த்தைகள்
பென்ஸ்அண்ணாவிடம்
மழையே நீ என்னசொல்கிறாய்
அருமை அண்ணாவிற்கு நன்றி

ஷீ-நிசி
08-05-2007, 04:38 PM
பழைய நினைவுகளோடு
பழகிய நினைவுகளோடு
மழையில் நனைந்தபடி
நடக்கின்ற, நினைக்கின்ற, அழுகின்ற, ஒருவனின் கண்ணீர் கானம்...
பென்ஸின் கவிதைப் பேனாவில்....

மழையினிரைச்சலின் வழியே நடந்துசென்ற உணர்வு....

வாழ்த்துக்கள்!

மதுரகன்
08-05-2007, 06:47 PM
அற்புதமான தொடர் பென்ஸ் உங்கள் வார்த்தைப்பிரயோகங்கள்
ஏதோ ஒரு நிஜத்தை நிஷப்தமாக சாடுகின்றன
புண்பட்ட மனம் ஏதொ ஒரு இறகினால் வருடப்பட்ட சுகம் உங்கள் வார்த்தைகளில்...

பிச்சி
09-05-2007, 05:23 AM
பென்ஸ் அண்ணா,, கவிதைகள் சூப்பர். உங்க அனுபவமா. பாவம் அந்த பொண்ணு. உங்கள கட்டிக்க கொடுத்துவக்கல. எல்லா கவிதையும் நல்லா இருக்குண்ணா

பென்ஸ்
10-05-2007, 03:26 PM
மழையோடு அழுகின்ற
சமையங்கள் மனதினில் ரணங்கள்
தீர்க்கமான வார்த்தைகள்
பென்ஸ்அண்ணாவிடம்
மழையே நீ என்னசொல்கிறாய்
அருமை அண்ணாவிற்கு நன்றி
நன்றி மனோஜ்..
அது ஒரு பெண்ணின் வார்த்தைகளாக எழுதியவை... என் கிறுக்கல்கள் பலவும் ஒரு பெண்ணின் மனநிலையில் காதல் தோல்வி எத்தனை கொடுமையானது என்று இருக்கும்....
சில ஆண்களின் பார்வையில் இருந்தும் இருக்கும்...

பென்ஸ்
10-05-2007, 03:28 PM
பழைய நினைவுகளோடு
பழகிய நினைவுகளோடு
மழையில் நனைந்தபடி
நடக்கின்ற, நினைக்கின்ற, அழுகின்ற, ஒருவனின் கண்ணீர் கானம்...
பென்ஸின் கவிதைப் பேனாவில்....

மழையினிரைச்சலின் வழியே நடந்துசென்ற உணர்வு....

வாழ்த்துக்கள்!
ஷீ...
நான் கவி சொல்பவன் என்பதை விட ரசிக்க தெரிந்தவன் என்பதில் சந்தோசமே... உங்களை போன்றவர்கள் கவிதைகள் தானே என்னை எழுத வைத்தது....
நன்றி.... மற்ரும் மனோஜுக்கு சொன்னது போல் முந்தய கவிதை ஒரு பெண்ணின் பார்வையாக நான் எழுதினேன்.... (சரியா வரலையோ???)...

பென்ஸ்
10-05-2007, 03:30 PM
அற்புதமான தொடர் பென்ஸ் உங்கள் வார்த்தைப்பிரயோகங்கள்
ஏதோ ஒரு நிஜத்தை நிஷப்தமாக சாடுகின்றன
புண்பட்ட மனம் ஏதொ ஒரு இறகினால் வருடப்பட்ட சுகம் உங்கள் வார்த்தைகளில்...
நன்றி மதுரகன்...
அனேக நேரங்களில் உணர்வுகளின் அலைவரிசை ஒன்றாக இருக்கிரது.... நான் உணரும் காதலை இன்னொருவரால் உணரமுடியுன் என்றால் அதே போல தானே வலிகளும்...

அறிஞர்
10-05-2007, 03:31 PM
துளி - 7
வீசும் காற்றில் உன் மணமில்லை ,
இருந்தாலும் உணரவுமில்லை
உன் ரணமுமில்லை

தீர்க்கமாய்
மழையோடு அழுகிறேன்
யாரறிய போகிறார்..!!!
கண்ணீர் காலத்தில்
கொட்டும் கண்ணீர் வரிகள்..
பெண்ணின் மனதை தெளிவாக காட்டுகிறது...

தொடரட்டும்... பென்ஸ்

பென்ஸ்
10-05-2007, 03:32 PM
பென்ஸ் அண்ணா,, கவிதைகள் சூப்பர். உங்க அனுபவமா. பாவம் அந்த பொண்ணு. உங்கள கட்டிக்க கொடுத்துவக்கல. எல்லா கவிதையும் நல்லா இருக்குண்ணா
குழந்தை என்ன முடிவே பண்ணிடியா...
என்ன கட்டிக்க போறவா கண்டிப்பா கொடுத்த வைக்காதவா... என் இம்சைகளை சகிக்கனுமே...

பென்ஸ்
10-05-2007, 03:33 PM
துளி - 8


ஊர் சுற்றி ரசித்து...
அழகு பார்த்து நக்கலடித்து....
நண்பர்களை சிரிக்க வைத்து...
புதுத்துணி வாங்கி ...
புது தோற்றத்துடன் இருப்பதாய்....
என்னையே ஏமாற்றிகொள்ளும்
இரவுகளில்
தலையணையுடனான என்
மெளனப்போராட்டங்களில்
உன்னைவிட நான் என்னை விலகி போகிறேன்...!!!

ஷீ-நிசி
10-05-2007, 03:58 PM
ஷீ...
நான் கவி சொல்பவன் என்பதை விட ரசிக்க தெரிந்தவன் என்பதில் சந்தோசமே... உங்களை போன்றவர்கள் கவிதைகள் தானே என்னை எழுத வைத்தது....
நன்றி.... மற்ரும் மனோஜுக்கு சொன்னது போல் முந்தய கவிதை ஒரு பெண்ணின் பார்வையாக நான் எழுதினேன்.... (சரியா வரலையோ???)...

அன்பு பென்ஸ்... கவிதை இருபாலருக்கும் பொருந்துகிறது... கவிஞனின் பார்வையில் எப்படி எழுதபட்டிருக்கிறதோ அதுவே அந்த கவிதையின் உண்மையான கரு.. மற்றவையெல்லாமே பின் தொடரும் நிழல்கள்தான்... உங்கள் கவிதையில் பெண் என்று எங்கேயுமே நேரிடையாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடபடவில்லையென்பதால் பெரும்பாலும் ஆண்கள்தான் அதிகமாக நினைவுகளை சுமந்து அலைவார்கள் என்பதால் ஆணென்று எண்ணினேன்.. கவிதை சரியாகத்தான் வந்துள்ளது.. அதில் சிறிதும் சந்தேகமில்லை... பென்ஸ்..

பிச்சி
10-05-2007, 03:58 PM
அய்யோ அண்ணா.. கிரேட் கவிதை. நானும் சும்மாதான் சொன்னேன். அழகா எழுதறீங்க.

அமரன்
18-05-2007, 12:18 PM
பென்ஸின் கண்ணீர்காலத்தின் எட்டுத் துளிகளில் எனக்குப்பிடித்த துளி இதுதான்

நீ போனபின் வந்த
வெற்றிடதாலோ என்னவோ
என்னுள் ஒரு அழுத்தம்

அதனால் வா...
வந்து அழுது நிரப்பிவிட்டு போயேன்...!!!

மற்றவர்க்ளைப்போல உங்கள் அனைத்து துளிகளிலும் இருக்கும் யதார்த்தம் ஒப்பனையில்லாக் கவர்ச்சி வரிகள் என்னயும் கவர்ந்துள்ளது. படித்து விளங்குவதற்கு இலகுவாக எளிய நடையில் ஆனால் பாரம் நிறைந்த சொற்கட்டுகள். ஒருவார்த்தயில் சொல்கின்றேன் அருமை

பென்ஸ்
18-05-2007, 01:29 PM
பென்ஸின் கண்ணீர்காலத்தின் எட்டுத் துளிகளில் எனக்குப்பிடித்த துளி இதுதான்

நீ போனபின் வந்த
வெற்றிடதாலோ என்னவோ
என்னுள் ஒரு அழுத்தம்

அதனால் வா...
வந்து அழுது நிரப்பிவிட்டு போயேன்...!!!

மற்றவர்க்ளைப்போல உங்கள் அனைத்து துளிகளிலும் இருக்கும் யதார்த்தம் ஒப்பனையில்லாக் கவர்ச்சி வரிகள் என்னயும் கவர்ந்துள்ளது. படித்து விளங்குவதற்கு இலகுவாக எளிய நடையில் ஆனால் பாரம் நிறைந்த சொற்கட்டுகள். ஒருவார்த்தயில் சொல்கின்றேன் அருமை

நன்றி அமரன்....

இரவின் அரைஉறக்கத்தில்
என் மனத்தாளில் எழுதி வைத்தை
உனக்கான என் கவிதைகள்
ஒரு பனிதுளியை போல்
காலையில் தொலைந்து போயிருக்கும்
மிஞ்சிய சில துளிகள்
கண்ணீரோ என்று காத்து வருகிறேன்...


அதில் சில இந்த கவிதைகள்....உங்களுக்கு அவை பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சியே...

ஆதவா
18-05-2007, 01:56 PM
தென்றல் லூட்டி அடிச்ச கவிதைகள் இதுவா..... பிரமாதம் பென்ஸ் அண்ணா... நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விமரிசனம் போடவேண்டும்....

பென்ஸ்
18-05-2007, 02:05 PM
தென்றல் லூட்டி அடிச்ச கவிதைகள் இதுவா..... பிரமாதம் பென்ஸ் அண்ணா... நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விமரிசனம் போடவேண்டும்....

ஒரு புயல் கூட தென்றலாய் துவங்கும்...!!!!

மன்றத்தில் நண்பனின் கைஎழுத்தில் இருக்கும் வாசகன் "காத்திருக்கும்வரைதான் காற்று, புறப்பட்டால் புயல்"...

மயூ
18-05-2007, 02:59 PM
ஓவ்வொன்றாக வாசித்தேன் அத்தனையும் முத்துக்கள்...
ஒரு வரியில் என் கேள்வி...
எனக்காக கவிதை எழுத எவ்வாறு உங்களுக்குத் தோன்றியது????

பென்ஸ்
17-09-2007, 06:24 AM
துளி - 9

மரிக்க பயணிக்கும்
ஒரு துளியின்
நிமிட ஸ்பரிசங்களில்
மயங்கிய காதலில்
தன்னை கொடுத்து
கூடவே பயணிக்கும்
சிறு பூவாய்..
நான்....

விழுந்த பின்னே அறிந்தேன்
என்னை உரமாக்கி
நீ ஓடி கொண்டிருந்தாய்

ஆதவா
18-09-2007, 11:07 AM
துளி - 9

மரிக்க பயணிக்கும்
ஒரு துளியின்
நிமிட ஸ்பரிசங்களில்
மயங்கிய காதலில்
தன்னை கொடுத்து
கூடவே பயணிக்கும்
சிறு பூவாய்..
நான்....

விழுந்த பின்னே அறிந்தேன்
என்னை உரமாக்கி
நீ ஓடி கொண்டிருந்தாய்


நீங்க எப்படிங்க இந்த மாதிரி யோசனை பண்றீங்க (இது கண்டிக்கத் தக்கது)..... அசந்துட்டேன்... என்னமா கற்பனை இது...... மிக வித்தியாசமான பிரிவு சிந்தனை (பிரிக்கும் சிந்தனை) இதுக்குப் பேருதான் கூட இருந்து குழி பறிக்கிறதோ?

மன்மதன்
19-09-2007, 10:45 AM
தாமதமாய் படித்தேன்.. மன்னிக்கவும் பென்ஸ்.. இது அசாதாரண கவிதைகளுள் ஒன்று.. அனைத்துமே என்னை கவர்ந்த கவிதைகள்.. வார்த்தை ஜாலமும் காட்சியமைப்பும் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன.. பாராட்டுகள் பென்ஸ்....

பென்ஸ்
19-09-2007, 01:30 PM
துளி - 10

இது வேண்டாம் என்று
நான் சொல்லிய போது
கெஞ்சிய நீ...!!

என்னை வேண்டாம் ஏன்று
சொல்லி போகும் போது
என் கண்களை நேருங்கி
ஒரு முறையேனும் பார்..

உன் நிழலின் பிரதி
நிறமற்ற ஜடமாய்
கரைந்து வழியும்..
என்றோ நீ உணர்ந்த
அதே வலியுடன்...!!!!

பென்ஸ்
21-01-2013, 08:22 AM
துளி - 11


கால சுவற்றில் இருவரும் வரைந்த
கிறுக்கல்களை கண்ணீரால் அழித்து
புதிதாய் வரைய துவங்கிவிட்டாய்..


நீ தீட்டும் ஓவியங்களின் மறைவுகளில்
வழியும் என் ரத்தம்...
உன் தூரிகைகளின் கூர்மை
நீ அறியவில்லையா...


என் சுவற்றில் நீ விட்டெறிந்து செல்லும்
இந்த துளிகளால் என்னை பழி தீர்ப்பதாய்
நீ வலி தீர்த்து கொண்டிருக்கிறாய்...
உன் கை வலிக்கும் வரை வீசு
ஓயும் போது ஒரு நிமிடம் யோசித்து பார்
நான் புனிதனில்லை என்றாலும்
பாவியல்ல என்று புரியும்...

மஞ்சுபாஷிணி
21-01-2013, 10:17 AM
துளி - 11


கால சுவற்றில் இருவரும் வரைந்த
கிறுக்கல்களை கண்ணீரால் அழித்து
புதிதாய் வரைய துவங்கிவிட்டாய்..


நீ தீட்டும் ஓவியங்களின் மறைவுகளில்
வழியும் ஏன் ரத்தம்...
உன் தூரிகைகளின் கூர்மை
நீ அறியவில்லையா...


ஏன் சுவற்றில் நீ விட்டெறிந்து செல்லும்
இந்த துளிகளால் என்னை பழி தீர்ப்பதாய்
நீ வலி தீர்த்து கொண்டிருக்கிறாய்...
உன் கை வலிக்கும் வரை வீசு
ஓயும் போது ஒரு நிமிடம் யோசித்து பார்
நான் புனிதனில்லை என்றாலும்
பாவியல்ல என்று புரியும்...

வலிகளை கூட இப்படி கவிதைகளாக்கும் அற்புதம் இங்கே காண்கிறேன்....

வலிக்கிறது ஒவ்வொரு வரியும் வாசிக்கும்போது....

கண்டிப்பாக உண்மை நேசம் பாவி என்று சொல்லவைக்காது....

கடைசி வரி நச்.....


அருமையான வரிகள் பென்ஸ்.....

மஞ்சுபாஷிணி
21-01-2013, 10:18 AM
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

சன்டை இல்லப்பா பென்ஸ்..

சண்டை....

ஆனா நான் சண்டை இல்லையாக்கும்... :)

மஞ்சுபாஷிணி
21-01-2013, 10:19 AM
துளி - 10

இது வேண்டாம் என்று
நான் சொல்லிய போது
கெஞ்சிய நீ...!!

என்னை வேண்டாம் ஏன்று
சொல்லி போகும் போது
என் கண்களை நேருங்கி
ஒரு முறையேனும் பார்..

உன் நிழலின் பிரதி
நிறமற்ற ஜடமாய்
கரைந்து வழியும்..
என்றோ நீ உணர்ந்த
அதே வலியுடன்...!!!!

ஆழ்ந்த நேசம் உணர்த்தும் அட்டகாசமான வரிகள் பென்ஸ்......

கரைந்த மனதுடன்.....

மஞ்சுபாஷிணி
21-01-2013, 10:21 AM
துளி - 9

மரிக்க பயணிக்கும்
ஒரு துளியின்
நிமிட ஸ்பரிசங்களில்
மயங்கிய காதலில்
தன்னை கொடுத்து
கூடவே பயணிக்கும்
சிறு பூவாய்..
நான்....

விழுந்த பின்னே அறிந்தேன்
என்னை உரமாக்கி
நீ ஓடி கொண்டிருந்தாய்

நிறைய காதல்கள் இப்படி தான் ஒருசிலரின் மனதை உரமாக்கி அதில் உயிர்த்துக்கொண்டு இருப்பது....

அசத்தல்பா பென்ஸ்.....

மஞ்சுபாஷிணி
21-01-2013, 10:23 AM
துளி - 8


ஊர் சுற்றி ரசித்து...
அழகு பார்த்து நக்கலடித்து....
நண்பர்களை சிரிக்க வைத்து...
புதுத்துணி வாங்கி ...
புது தோற்றத்துடன் இருப்பதாய்....
என்னையே ஏமாற்றிகொள்ளும்
இரவுகளில்
தலையணையுடனான என்
மெளனப்போராட்டங்களில்
உன்னைவிட நான் என்னை விலகி போகிறேன்...!!!

எல்லோரையும் சிரிக்க வைக்கும் முயற்சியில் என் மன காயங்களுக்கான மருந்தை கூட நான் இட மறந்து தான் போகிறேன்....

கண்ணீரும் மனமும் படும் போராட்டம் மிக அருமையாக இங்கே கவிதையில் வரையப்பட்டுள்ளதுப்பா பென்ஸ்...

மஞ்சுபாஷிணி
21-01-2013, 10:34 AM
துளி - 7

உனக்கென்ன
உன் நிலையை சொல்லிவிட்டு
காற்றோடு கலைந்துவிட்டாய்
சுவாசத்தை நான்
நிறுத்தவா முடியும்..!!!

நாம் சாலையை கடக்கும்
பொழுதெல்லாம் நம்மையே
வெறிக்கும் இவர்கள்- இன்று
என்னையறிமாமல் போனதேன்..!!

மாறதான் போகிறது
காற்றின் திசையை போல்
இந்த பார்வைகளும்
என் மனமும்....!!!!

ஆழ்ந்த வரிகள்....

மனதை அசைத்துவிட்டது.....

உண்மையே.....

சுவாசத்தை நிறுத்த முயன்றாலும் நினைவுகளை அழிக்க முடியுமா?

தேங்கிய நினைவுகள் இப்படித்தான்....


அருமையான வரிகள் பென்ஸ்....

மஞ்சுபாஷிணி
21-01-2013, 10:38 AM
துளி - 7

மழையோடு அழுகிறேன்
யாரறிய போகிறார்..!!!

இடித்து நிலைகுலைத்து
செல்லும் உன் நினைவுகளை
நான் இறக்கிவைக்கபோகிறேன்...!!!

அதற்கு
மழையோடு அழுகிறேன்
யாரறிய போகிறார்..!!!

என் முனங்கல்கள்
இந்த சாரலில் கரைந்து போகையில்
நீ கரை கடந்து போயிருப்பாய்...

அறிந்திருந்தும்
மழையோடு அழுகிறேன்
யாரறிய போகிறார்..!!!

வீசும் காற்றில் உன் மணமில்லை ,
இருந்தாலும் உணரவுமில்லை
உன் ரணமுமில்லை

தீர்க்கமாய்
மழையோடு அழுகிறேன்
யாரறிய போகிறார்..!!!

தன் துயர் கூட யாரும் அறியாதவண்ணம்....

மழையோடு மழையாக....

பொழியும் பனித்தூறலோடு கலந்து...

யாருமே அறியாது தான் மட்டும் கைக்கோர்க்கும் மழையுடன்.....


கரைந்து போகாத கவிதை வரிகள்....

கரைந்த மனதுடன்.....

மஞ்சுபாஷிணி
21-01-2013, 10:39 AM
துளி - 1

நினைவுகளை தழுவிகொண்டு
நான் காத்திருக்க
யதார்தத்தின் கையை
நீ பிடித்து நடக்கையில்
நம் காதல் மட்டும் அனாதையாய்..

அட்டகாசம்....

நிதர்சனம் உரக்க உரைக்கும் கவிதை வரிகள்.....

மஞ்சுபாஷிணி
21-01-2013, 10:40 AM
துளி - 2

நீ இருக்கும் வரை
காதல் கண்ணுக்கு தெரியவில்லை
அழகானவை மட்டுமே
எப்போதும் முதலாய்...
.

மனதை அறியுமுன் கண்ணுக்கு எதிரே தெரியும் அழகு தான் ஆக்கிரமிக்கிறது எல்லாவற்றையும்.....

அருமைப்பா...

பென்ஸ்
21-01-2013, 04:21 PM
பின்னூட்டதிக்கு நன்றி மஞ்சுபாஷிணி..
புதியவர்களின் கவிதைகளுக்கும் இது போல்
அசத்தல் பின்னூட்டம் கிடைத்தால் சந்தோசபடுவார்களே.....
தொடருங்கள் இந்தநல்ல பணியை...

Sasi Dharan
31-01-2013, 11:45 AM
காதலும்... காதல் நினைவுகளின் தனிமைகளும்..
என்றென்றும் சுகமான வலிகள்..

பென்ஸ்
15-04-2013, 09:31 AM
துளி-12

இரண்டு கனவுகளுக்கும் இடையில்
என் இதயத்தின் காதலை பிழிந்து
உன் பயணத்தின் தாகத்தை தீர்க்கின்றாய்..

சக்கையான என் இதயத்தில்
உன்கனவுகளின் காலடியும் ,
என் கனவுகளின் காலடியும்
கல்யாணம் செய்திருப்பதை கவனிக்காமல்
எஞ்சி வடிந்தவற்றை துடைத்து செல்கிறாய்...

ஓவியன்
15-04-2013, 10:47 AM
துளி-12
சக்கையான என் இதயத்தில்
உன்கனவுகளின் காலடியும் ,
என் கனவுகளின் காலடியும்
கல்யாணம் செய்திருப்பதை கவனிக்காமல்
எஞ்சி வடிந்தவற்றை துடைத்து செல்கிறாய்...

கனவுகளின் சுவடுகளின் சுமையை,
கனமாகப் பதித்து நிற்கும் கவிதை...!!!

வாழ்த்துகள் அண்ணா..!! :)

கும்பகோணத்துப்பிள்ளை
15-04-2013, 05:54 PM
கனவுகளின் காலடிச்சுவடுகள் கனமானது
காதல்மாறினாலும் காதலர்(கள்) மாறினாலும் மாறாமல்!...
எத்தனை இதயக்கோவில்களில் இராமர்பாதமாய்!
அவைகள் இருந்து கொண்டேயிருக்கும்!
வாழுமட்டும் அந்த சுமைகளோடு!...

jpl
25-04-2013, 05:00 PM
//ஞாபகக் கண்ணாடி எடுத்து அணிய வைத்து வாசிக்க வைத்துவிட்டீர்கள்..//

அழகான மாற்று மலரும் நினைவுகளுக்கு..இளசு..

jpl
25-04-2013, 05:02 PM
துளி - 1

நினைவுகளை தழுவிகொண்டு
நான் காத்திருக்க
யதார்தத்தின் கையை
நீ பிடித்து நடக்கையில்
நம் காதல் மட்டும் அனாதையாய்..

அனாதைக்கு இப்படி ஓர் ஆதரவு..ஆம் கவிதை என்னும் ஆதரவு..

jpl
25-04-2013, 05:05 PM
துளி - 2

நீ இருக்கும் வரை
காதல் கண்ணுக்கு தெரியவில்லை
அழகானவை மட்டுமே
எப்போதும் முதலாய்...
.

காதலே அழகுதானே பென்ஸ்..அதைவிட அப்பெண் அழகா? ஓ காதலுக்கு கண்ணில்லையோ?

jpl
25-04-2013, 05:08 PM
துளி - 3

முத்தங்கள் கரையாதிருக்க
சரவம் செய்யாத
என் முகம் கண்டிராவியாம்

நீ கோதி விட்ட தலை முடி
வாரபடாவிட்டால் அழகில்லையாம்

உன்மணம் தேய்ந்த இந்த சட்டை
துவைக்கபட வேண்டுமாம்

பிரிவில் அழுகிறாயோ என்று
நிதமும் நினைத்து கொண்டிருபவன்
மற்றவருடன் சிரிக்கவில்லையாம்

பைத்தியங்கள்...
இவர்களுக்கு என்னை பார்த்து
சிரிக்க மட்டுமே தெரியும்..
காதலிக்கட்டும்
அப்ப புரியும்...

//முத்தங்கள் கரையாதிருக்க
சரவம் செய்யாத
என் முகம் கண்டிராவியாம்//

மனம் ஏனோ கரைகின்றது பென்ஸ்..

jpl
25-04-2013, 05:11 PM
துளி - 4

திரும்பி பார்க்காதே
ஒருவேளை உன் கண்ணில்
ஈரம் இருந்தால்...!!!

இந்த ஆறு வார்த்தைகளும் ஆறாயிரம் வார்த்தைகளைச் சொல்கிறதே..பென்ஸ்

jpl
25-04-2013, 05:16 PM
துளி - 5

உன் நினைவுகளை தராத
ஒரு நிமிடம் வேண்டும்
என்னை உணர...

உன் சாயல் இல்லாத
முகம் காணவேண்டும்
என் வாழ்வில் வர...

எவ்விடத்தையும் கடக்கையில்
எதோ நினைத்து புன்னகைத்து
புகையாமலிருக்க...

எல்லாம் பொய் என்று
ஒரு பொய்யாவது சொல்லி போ

இவ்வரிகளைப் படித்த பின் பொய் சொன்னாலும் பொய் என்று உணராது மனம்..
மனம் கனக்கும் வரிகள்


//எவ்விடத்தையும் கடக்கையில்
எதோ நினைத்து புன்னகைத்து
புகையாமலிருக்க...//

கும்பகோணத்துப்பிள்ளை
02-05-2013, 08:01 PM
ஒரு பொய்யாவது சொல் கண்ணே!
உன் காதலன் நான் தான் என்று!....... என்ற பாடலுக்கு சற்றே குறையாத வரிகள்...


எவ்விடத்தையும் கடக்கையில்
எதோ நினைத்து புன்னகைத்து
புகையாமலிருக்க...

எல்லாம் பொய் என்று
ஒரு பொய்யாவது சொல்லி போ

நாஞ்சில் த.க.ஜெய்
03-05-2013, 05:25 AM
துளி துளியாய் பெய்யும் மழைத்துளி இன்று பெரு மழையாய் உருவெடுத்து வெள்ளமென பாய்கிரபாய்கிறது இந்த காதல் ..

பென்ஸ்
20-11-2013, 01:58 PM
துளி-13


காதல் கொடுத்தால்
பிரிவை கொடுத்தாய்...

கை கொடுத்ததால்
அழுகை கொடுத்தாய்...

என்னை கொடுத்தால்
என்ன கொடுப்பாய்...!!!

பென்ஸ்
20-11-2013, 02:07 PM
துளி- 14


ஒவ்வொரு பிரிவின்
துவக்கத்திலும், நீ ஆறிவாய்...
நிரந்தரமானதல்ல...
இந்த பிரிவை போல்...
நம் காதலும்...!!!

மும்பை நாதன்
20-11-2013, 02:21 PM
துளி-13


காதல் கொடுத்தால்
பிரிவை கொடுத்தாய்...

கை கொடுத்ததால்
அழுகை கொடுத்தாய்...

என்னை கொடுத்தால்
என்ன கொடுப்பாய்...!!!

தாலி கொடுத்தால்
தன்னையே தருவாள் !

பென்ஸ்
20-11-2013, 02:31 PM
தாலி கொடுத்தால்
தன்னையே தருவாள் !


கழுத்தை தராமல்
கத்தியை தருவார்கள்
மும்பை நாதன்...

பென்ஸ்
20-11-2013, 02:39 PM
துளி- 15

காதலுக்கு கண் இல்லை
என்பதை விட அறிவில்லை என்றாய்.
யோசிக்க ஆரம்பித்து விட்டாயோ...
காதலோடு நீயில்லையே...!!!

மும்பை நாதன்
21-11-2013, 02:56 PM
கழுத்தை தராமல்
கத்தியை தருவார்கள்
மும்பை நாதன்...

கத்தியைவிட புத்திக்கு அதிக முக்கியத்துவம் தருபவருடன் மட்டும் பழக வேண்டுமோ ?

ஆதவா
25-11-2013, 03:45 PM
துளி-13


காதல் கொடுத்தால்
பிரிவை கொடுத்தாய்...

கை கொடுத்ததால்
அழுகை கொடுத்தாய்...

என்னை கொடுத்தால்
என்ன கொடுப்பாய்...!!!

சட்டுனு மனசுக்குத் தோணிச்சு, தப்பா எடுத்துக்காதீங்க.. என்னைக் கொடுத்தால் என்ன கொடுப்பாய்? “குழந்தை கொடுப்பேன்.”:)

மீண்டும் ஆரம்பித்துவிட்டீர்கள், இனிமையாக இருக்கிறது.
காதலில் கொடுக்கல் வாங்கல் நிறைய இருக்கிறது. அது என்ன கொடுத்தோம் என்ன வாங்கினோம் என்பதைப் பொருத்து காதலின் நிலைத்த்ன்மையை உறுதிசெய்து கொள்ளலாம்./



துளி- 14


ஒவ்வொரு பிரிவின்
துவக்கத்திலும், நீ ஆறிவாய்...
நிரந்தரமானதல்ல...
இந்த பிரிவை போல்...
நம் காதலும்...!!!

யெஸ்.. ஒரே ஒரு காதல் நிரந்தரமானதல்ல.


துளி- 15

காதலுக்கு கண் இல்லை
என்பதை விட அறிவில்லை என்றாய்.
யோசிக்க ஆரம்பித்து விட்டாயோ...
காதலோடு நீயில்லையே...!!!

:)

பென்ஸ்
26-11-2013, 11:41 PM
மீண்டும் ஆரம்பித்துவிட்டீர்கள், இனிமையாக இருக்கிறது. :)


ஆனால்... நிங்கள் எழுதாமல் இருப்பதுமட்டும் எனக்கு வருத்தம்...

முக புத்தகத்தில் மறைவகவோ இல்லை நெரடியாகவோ சொல்லியாயிற்று... மீண்டும் இங்கு பதிக்கிறேன்...

ப்ரியன், ஆதவன், ஷி-நிஷி இவர்கள் கவிதைகள் எழுத மறந்த கதையாகி போனார்களோ என்ற வருத்தமும்...

காலமும், சூழ்நிலைகளும் நம்மை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது, இதில் உங்களை போன்ற பல நல்ல எழுத்தாளர்கள் மங்கி போவது வருத்ததிற்க்கு உரியது...

நீங்கள் மீண்டும் கவிதை எழுத துவங்க வேண்டும் என்பது என் விருப்பம்...

பென்ஸ்
26-11-2013, 11:43 PM
யெஸ்.. ஒரே ஒரு காதல் நிரந்தரமானதல்ல.


ஒரே காதலில் பிரிவும் நிரந்தரமானது அல்ல..