PDA

View Full Version : நன்கு சாற்றி தாளிடப்பட்ட கதவின் பின்னால்



ப்ரியன்
06-11-2006, 11:31 AM
நன்கு சாற்றி தாளிடப்பட்ட
கதவின் பின்னால்,
தூக்கமும்
கவிதையும் இல்லா
பின்னிரவு கழிகிறது
அறுந்து விழும் வேகத்தோடு சுழலும்
மின்விசிறியின் சப்தத்தினோடு!

- ப்ரியன்.

பென்ஸ்
08-11-2006, 10:48 AM
ப்ரியன்...
கவிதை நன்று... இருந்தாலும் இது உங்கள் முன்னால் மற்று சில கவிதைகளிம் கலவையாக தெரிகிறதே.. அதனாலவோ என்னவோ இது அதிக தாக்கம் தரவில்லையோ????
இல்லை எங்களுக்கு கவிதை விளங்கலயோ...???
நீங்கள் என்ன சொல்லவந்தீர்கள்???

ப்ரியன்
15-11-2006, 10:24 AM
பென்ஸ் ,

தனிமை நம்மை தின்று புசிக்கும் ஒரு தூக்கமில்லா இரவை வரிகளில் அடைக்கும் முயற்சியே,அக்கவிதை.

முன்பு இதே பொருள் கொண்டு எழுதியதாய் நியாபகமில்லை.கண்டிப்பாக புரியக் கூடிய கவிதைதான் புரியாத அளவுக்கு இலக்கியம் கலக்க அறிந்தவனில்லை நான் :),அதனால் சரியாக பொருள் சென்று அடையாமைக்கு நானே பொறுப்பாகிறேன்..

தாமரை
16-11-2006, 02:39 AM
அறுந்து விழும் சப்தத்தோடு
ஃபேன் சுழலும் வீடுகள்
தாளிடப்படுவதில்லை
ஏ.சி. வீடுகள் தான்
உழைத்து களைத்தவனுக்கு
உறக்கம் பிரச்சனையல்ல
உறங்கி வழிபவனுக்கு
உறக்கம் பிரச்சனை..
உழைப்பவன் தனித்திருப்பதில்லை

இளசு
20-11-2006, 07:38 PM
நிச்சயம் உறங்கியாக வேண்டும் என மனசு வடம் பிடிக்க
விசிறி சப்தம் தொடங்கி சாக்குருவி சப்தம் வரை கவனத்தில் வாங்கி
வருவேனா பார் என தூக்கம் அடம் பிடிக்க -

நல்ல வேளை...

இருபதுகளோடு இந்த நோய் என்னை நீங்கியது...!

அறுபதுகளில் மீண்டும் வருமோ?!!!!


தகித்த இரவுகளை நினைவுபடுத்திய கவிதை தந்த
ப்ரியனுக்குப் பாராட்டுகள்..

mayan
03-01-2007, 04:54 PM
நல்ல பார்வை.. அருமையான வெளிப்பாடு