PDA

View Full Version : என் தோழி.. என் காதலி.. என் மனைவி..!



franklinraja
06-11-2006, 11:24 AM
இருவரும் ஒரே இடத்திலிருந்து சென்றோம்...
இருக்கைகள் அருகருகே அமர்ந்தோம்...

எனது கல்லூரி விண்ணப்பம்...
அதிலே அவளின் கையொப்பம்...

நான் கட்டடித்த வகுப்புகள்...
எனது நோட்டில் அவளின் பதிப்புகள்...

அவள் என் தோழி...:)


அன்றொரு மழை நாள்...
ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வா என்றாள்...

கன்னத்து தாடியைத் தடவினாள்...
அழகான கேடிடா நீ என்றாள்...

எண்ணை பார்க்காத தலை...
என்னைக் கவர்ந்த காளை என்றாள்...

அவளே என் காதலியாய்...:cool:


மழை பெய்யும் நேரத்தில்
ஐஸ்கிரீமா - அறிவில்ல..?

மூஞ்சியில தாடி - பார்க்க
பேட்டை ரவுடி மாதிரி..!

தலையில எண்ணை வை -
தறுதலையாப் போகாத - என்கிறாள்.

இப்போது அவள் என் மனைவி..!!:confused:

leomohan
06-11-2006, 12:46 PM
சும்மா அடிச்சு தூள் பண்ணிட்டீங்க ராஜா. அருமை.

ஓவியா
06-11-2006, 04:11 PM
தோழியே
காதலியாகி
மனைவியானதற்க்கு வாழ்த்துக்கள்

நண்பரே
உங்கள் பதிப்பிலே என்னை ரொம்ப கவர்ந்த பதிப்பு இதுதான்.........தூள்..:D

நல்லா ரசனையா இருக்கு

தொடரவும்

pradeepkt
07-11-2006, 04:33 AM
என்ன மாற்றம்??? என்ன மாற்றம்???
அதை அப்படியே கொண்டு வந்து கொட்டிட்டீங்களே பிராங்க்ளின் ... கலக்குங்க கலக்குங்க :)

meera
07-11-2006, 05:57 AM
ராஜா, நீங்க தானே கேட்டீங்க, காதலிக்கும் போது கவிதை எழுதறாங்க கல்யாணம் ஆன பிறகு ஏன் கவிதை எழுதுவது இல்லை என்று.இதோ இவரு எழுதிருக்காரே இத என்ன சொல்ல:confused: :confused: :confused:


அழகான கவிதைக்கு பாராட்டுக்கள் ராஜா.

guna
07-11-2006, 06:50 AM
கலக்கல் ராஜா

சுவாரஸ்யமான, ஒரு குட்டி கதை கவிதையாய், வாழ்துக்கள் ராஜா..

குணா

franklinraja
07-11-2006, 07:48 AM
ராஜா, நீங்க தானே கேட்டீங்க, காதலிக்கும் போது கவிதை எழுதறாங்க கல்யாணம் ஆன பிறகு ஏன் கவிதை எழுதுவது இல்லை என்று.இதோ இவரு எழுதிருக்காரே இத என்ன சொல்ல:confused: :confused: :confused:


அழகான கவிதைக்கு பாராட்டுக்கள் ராஜா.

கல்யாணமானவரோட கவிதையைப் பார்த்திங்களா மீரா...?

ரொம்பப் பாவமா இல்ல..?!! ;)

franklinraja
07-11-2006, 07:56 AM
தோழியே
காதலியாகி
மனைவியானதற்க்கு வாழ்த்துக்கள்

நண்பரே
உங்கள் பதிப்பிலே என்னை ரொம்ப கவர்ந்த பதிப்பு இதுதான்.........தூள்..:D

நல்லா ரசனையா இருக்கு

தொடரவும்

மிக்க நன்றி ஓவியா...

தோழி - காதலியாகி
காதலி - மனைவியாதல்
அரிது ஓவியா..!

உள்ளம் தொடும் கவிதைகள் தொடரும்..!

franklinraja
07-11-2006, 08:08 AM
உள்ளம் தொட்ட கவிதையைப் பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..!

பென்ஸ்
08-11-2006, 09:52 AM
தாமரையோட ஸ்டைலில் சொல்லனும்னா...

அழகி..
அழகான ராட்ஷசி..
ராட்ஷசி...

பிராங்... என்ன அடி மனசுலேருந்து வாறமாதிரி இருக்கு...

franklinraja
08-11-2006, 10:05 AM
தாமரையோட ஸ்டைலில் சொல்லனும்னா...

அழகி..
அழகான ராட்ஷசி..
ராட்ஷசி...

பிராங்... என்ன அடி மனசுலேருந்து வாறமாதிரி இருக்கு...

ஒரு ஆம்பளையோட மனசு
இன்னொரு ஆம்பளைக்குத் தான தெரியும்..! :D :D :D

ஓவியா
08-11-2006, 03:56 PM
ஒரு ஆம்பளையோட மனசு
இன்னொரு ஆம்பளைக்குத் தான தெரியும்..! :D :D :D



அப்படியா.........அடடே

அப்பாவி
ஓவியா

pradeepkt
09-11-2006, 02:51 AM
அப்படியா.........அடடே

அப்பாவி
ஓவியா
என்ன நொடடே...
எத்தனை காலமா நீங்க மட்டும் பொம்பளை மனசு பொம்பளைக்குத் தெரியும்னு உலகத்தை ஏமாத்திட்டு வந்திருக்கீங்க... அதான் நம்மாளு உண்மையச் சொல்றாரு..

ஓவியா
09-11-2006, 05:33 PM
என்ன நொடடே...
எத்தனை காலமா நீங்க மட்டும் பொம்பளை மனசு பொம்பளைக்குத் தெரியும்னு உலகத்தை ஏமாத்திட்டு வந்திருக்கீங்க... அதான் நம்மாளு உண்மையச் சொல்றாரு..


அதுசரி.....:cool:

இப்பொழுது பொம்பளை மனசு பொம்பளைக்குத்தான் தெரியும்னு சொல்வது அப்பட்டமான பொய்....

உதாரணம்
சித்தி நாடகத்தில் எந்த பெண்னின் மனதும் யாருக்கும் புரியாது.....

crisho
21-11-2006, 12:19 PM
நண்பா உண்மைய உண்மையாக எழுதியிருக்கீங்க...

சூப்பர்!!