PDA

View Full Version : ஹி.. ஹி.. க்கூ...!

franklinraja
06-11-2006, 08:44 AM
பந்தாவா கொடுக்கிறான் அட்டை
பணம் கட்டலன்ன பிடிக்கிறான் சட்டை
-கிரெடிட் கார்டு

pradeepkt
06-11-2006, 08:53 AM
என்னய்யா மன்றத்தின் அடுத்த விஜய டி ஆராக விருப்பம் போல... ஹி ஹி...

பென்ஸ்
06-11-2006, 12:48 PM
என்னய்யா மன்றத்தின் அடுத்த விஜய டி ஆராக விருப்பம் போல... ஹி ஹி...

அந்த முத ஆளு யாரு..... நீங்க தானே????:D :D :D

ஓவியா
06-11-2006, 03:56 PM
கலக்கல் ஹைக்கூ நண்பரே

தொடருங்க

ஓவியா
06-11-2006, 03:57 PM
அந்த முத ஆளு யாரு..... நீங்க தானே????:D :D :D

:D :D :D
:D :D

pradeepkt
07-11-2006, 04:35 AM
அந்த முத ஆளு யாரு..... நீங்க தானே????:D :D :D
என் முன்னோடிகளை அவமானப் படுத்துவதைக் கண்டிக்கிறேன்.. :D

meera
07-11-2006, 05:51 AM
ராஜா, ஹைக்கூ அருமையாய் இருக்கு

பாராட்டுக்கள்.

franklinraja
07-11-2006, 08:18 AM
நன்றி.. நன்றி.. நன்றி..!

ஹைக்கூ ரசிக ரசிகைகளே...!

அறிஞர்
07-11-2006, 12:55 PM
எந்த பொருளையும் விட்டு வைக்க மாட்டீர்கள் போல....

கிரெடிட் கார்டுக்கு அடுத்து எது??????????

rams98
20-11-2006, 09:05 AM
அடுத்து எது??????????

தாமரை
20-11-2006, 09:34 AM
பந்தாவா கொடுக்கிறான் அட்டை
பணம் கட்டலன்ன பிடிக்கிறான் சட்டை
-கிரெடிட் கார்டு
அட்டையில வாங்கின சட்டை
அட்டையில் ஓட்டையை (கடனை)
அடைக்கா விட்டால்
சட்டையும் கிழியும்
அட்டையும் கிழியும்

அதனால என்ன
அட்டையின் ஓட்டையை அடைக்க
வாங்கு இன்னொரு அட்டை..

மதி
20-11-2006, 11:18 AM
அட்டையில வாங்கின சட்டை
அட்டையில் ஓட்டையை (கடனை)
அடைக்கா விட்டால்
சட்டையும் கிழியும்
அட்டையும் கிழியும்

அதனால என்ன
அட்டையின் ஓட்டையை அடைக்க
வாங்கு இன்னொரு அட்டை..
அடிக்கப் பாக்குறீயளே மொட்டை..!
:eek: :eek: :eek: :eek: :eek:

தாமரை
20-11-2006, 11:34 AM
அடிக்கப் பாக்குறீயளே மொட்டை..!
:eek: :eek: :eek: :eek: :eek:
முள்ளை முள்ளால தானுங்க எடுக்கோணும்..
கடனை கடனாலதானுங்க அடைக்கோணும்.:D :D :D

ஓவியா
20-11-2006, 04:44 PM
அடுத்து எது??????????

வணக்கம் நண்பரே

முதல் பதிவே கேள்வியா.....சரி கேளுங்கள்

தங்களின் இனிய வருகையை அறிமுக பகுதியில் மறக்காமல் பதியவும்..

இளசு
20-11-2006, 07:57 PM
சட்டையைப் பிடிக்கவைக்கும்
அட்டையைப் பற்றி எழுதி
குட்டையைக் குழப்பிய
ராஜாவுக்கு ஷொட்டு!

-------------------------------------------

இந்த வாரம் விகடனில் சுஜாதா (கற்றதும் பெற்றதும்) சொன்னது --

சென்ரியு என்பது சமூகத்தை விமர்சிக்கும் குறும்பா. பெரும்பாலும் இன்று தமிழிலே ஹைக்கூ என்று எழுதப்படுவதெல்லாம் சென்ரியுக்கள்தாம்!

உண்மையான ஹைக்கூ அரிதானது. காட்சியாகப் பார்த்த ஒரு பரவசக் கணத்தின் பதிவு. சிபியின் ஹைக்கூ ஓர் உதாரணம்!

நல்ல மழை
காற்றின் கைங்கர்யத்தில்
வீட்டின் முற்றத்திலும்.
-------------------------------------

இது..சென்ரியு

குழந்தை --
அவனுக்கு
ஒரு நிமிடம்
அவளுக்கு
வாழ்க்கை.

-ஆண்டாள் பிரியதர்ஷினி

franklinraja
21-11-2006, 06:09 AM

ஹைக்கூ மற்றும் சென்ரியு பற்றி
எங்களுக்கு அறியத்தந்த
இளசு அவர்களுக்கு
நன்றிகள் பல... ;)

franklinraja
21-11-2006, 07:45 AM
கழுத்தில டை..
கையில பை..
வாயில பொய்..
-சேல்ஸ் ரெப் !

"சேல்ஸ் ரெப்" மக்கள் யாருமிருந்தால் சிரித்து மன்னித்துவிடவும் ! :D

இதே வரிகளை முன்பே கேள்விபட்டோர் எங்கு என்று சொல்லிவிடவும் ! ;)

ஓவியா
21-11-2006, 04:27 PM
கழுத்தில டை..
கையில பை..
வாயில பொய்..
-சேல்ஸ் ரெப் !

:D :D :D
அருமையான ஹைக்கூ

ஒரு காலதில் நானும் சேல்ஸ் டேமேஜெர் தான் ஆனால் பொய்யெல்லாம் கிடையாது...:cool:

உல்லதை உல்லபடி தான் சொல்லுவோம்......என்ன கொஞ்சம் அவகாசம் எடுத்து சொல்லுவோம்....;) :D

பொய் பேச பிடிக்காமல் கும்பலாக வேலையை ராஜினாமா செய்தோம்....:eek: :D

pradeepkt
22-11-2006, 04:56 AM
கழுத்தில டை..
கையில பை..
வாயில பொய்..
-சேல்ஸ் ரெப் !

"சேல்ஸ் ரெப்" மக்கள் யாருமிருந்தால் சிரித்து மன்னித்துவிடவும் ! :D

இதே வரிகளை முன்பே கேள்விபட்டோர் எங்கு என்று சொல்லிவிடவும் ! ;)
அதான் ஏற்கனவே காதல் படத்துல நா. முத்துக்குமார் சொல்லிட்டாரேங்க...
நீங்களும் அங்கேதானே கேள்விப் பட்டீங்க... ஹி ஹி

franklinraja
22-11-2006, 08:28 AM
அதான் ஏற்கனவே காதல் படத்துல நா. முத்துக்குமார் சொல்லிட்டாரேங்க...
நீங்களும் அங்கேதானே கேள்விப் பட்டீங்க... ஹி ஹி

கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீரே... :D :D :D

தாமரை
22-11-2006, 08:48 AM
அதான் ஏற்கனவே காதல் படத்துல நா. முத்துக்குமார் சொல்லிட்டாரேங்க...
நீங்களும் அங்கேதானே கேள்விப் பட்டீங்க... ஹி ஹி

அப்பு... பிரதீப்பு.. அதுக்கு முன்னாலேயெ (ஜூலை 2002) உங்க கிட்ட இருக்கிற கட்டப் பஞ்சாயத்து சி.டி யில வந்துருச்சே.. பார்க்கலியா?

pradeepkt
22-11-2006, 10:41 AM
அப்பு... பிரதீப்பு.. அதுக்கு முன்னாலேயெ (ஜூலை 2002) உங்க கிட்ட இருக்கிற கட்டப் பஞ்சாயத்து சி.டி யில வந்துருச்சே.. பார்க்கலியா?
அட ஆமா...
மறந்துருச்சே... பேசாம இங்ஙனயும் ஒரு கட்டப் பஞ்சாயத்து வச்சுருங்க... :rolleyes:

franklinraja
27-11-2006, 01:37 PM
ஊரச்சுத்தி ஓடுதடா கூவம்..
அட அது தான இந்த ஊரின் சாபம்..
-சென்னை

leomohan
27-11-2006, 01:53 PM
அச்சச்சோ அது சாபம் இல்லீங்கோ. ஒரு காலத்தில் அதை நீர்வழி போக்குவரத்துக்காக பயன்படுத்தனாங்கோ. அதை கலீஜ் பண்ணது நம்ம மக்கள் தானுங்கோவ்.

தாமரை
28-11-2006, 12:47 AM
ஊரச்சுத்தி ஓடுதடா கூவம்..
அட அது தான இந்த ஊரின் சாபம்..
-சென்னை

இது ஊருக்கு கொடுக்கப்பட்ட சாபம் அல்ல
ஊரார் செய்த பாவம்..

franklinraja
28-11-2006, 06:10 AM
இது ஊருக்கு கொடுக்கப்பட்ட சாபம் அல்ல
ஊரார் செய்த பாவம்..

அப்ப இப்படி மாத்தி எழுதிருவோம்...

ஊரச்சுத்தி ஓடும் ஆறு கூவம்..
அந்த ஓரத்துல மக்களப் பாரு பாவம்..
-சென்னை ;)

franklinraja
01-12-2006, 06:00 AM
பண்ணாதவன் பண்ணனும்னு துடிக்கிறான்..
பண்ணுனவன் ஏன்டா பண்ணோமுன்னு நினைக்கிறான்..
-கல்யாணம். :D

meera
01-12-2006, 06:10 AM
பண்ணாதவன் பண்ணனும்னு துடிக்கிறான்..
பண்ணுனவன் ஏன்டா பண்ணோமுன்னு நினைக்கிறான்..
-கல்யாணம். :D

ராஜா,அருமை அருமை..

ஆமா கடைசில என்னதான் சொல்றீய???????????

franklinraja
01-12-2006, 06:17 AM
ஆமா கடைசில என்னதான் சொல்றீய???????????

அது உங்க சாய்ஸ்...

ஹி.. ஹி.. :D :D :D

franklinraja
01-12-2006, 10:19 AM
தம்மாத்தூண்டு டீமுக்கிட்ட அடிப்போம் செஞ்சுரி..
கொஞ்சம் பெரிய டீமுனா அடிவாங்கி போட்டுக்குவோம் ப்ளாஸ்த்திரி..
-இண்டியன் கிரிக்கெட் டீம் ! :D

ஓவியா
01-12-2006, 02:29 PM
ஊரச்சுத்தி ஓடும் ஆறு கூவம்..
அந்த ஓரத்துல மக்களப் பாரு பாவம்..
-சென்னை

பண்ணாதவன் பண்ணனும்னு துடிக்கிறான்..
பண்ணுனவன் ஏன்டா பண்ணோமுன்னு நினைக்கிறான்..
-கல்யாணம்.

தம்மாத்தூண்டு டீமுக்கிட்ட அடிப்போம் செஞ்சுரி..
கொஞ்சம் பெரிய டீமுனா அடிவாங்கி போட்டுக்குவோம் ப்ளாஸ்த்திரி..
-இண்டியன் கிரிக்கெட் டீம் ! :D

:D :D

இப்படியே தங்களின் அனைத்து ஹி.. ஹி.. க்கூ...! கவிதைகலையும் எழுதி-திருத்தி எழுதி மருபடியும் திருத்தி......

ஒரு நூறு ஹி.. ஹி.. க்கூ...! செர்ந்தபின் ஒரு புத்தகமா வெளியிட வாழ்த்துக்கள்

அனைத்தும் அருமை
பாராட்டுக்கள்

franklinraja
01-12-2006, 02:33 PM
ஒரு நூறு ஹி.. ஹி.. க்கூ...! செர்ந்தபின் ஒரு புத்தகமா வெளியிட வாழ்த்துக்கள்

அனைத்தும் அருமை
பாராட்டுக்கள்

டேங்ஸ்ப்பா...! :D :D :D

franklinraja
07-12-2006, 08:52 AM
பிரிட்டிஷ்காரன் போட்டுக்கொடுத்த ரூட்டு..
அதுல நம்மாளுதான் வைக்கிறான்யா வேட்டு..
-இந்திய ரயில்வே..!

பென்ஸ்
07-12-2006, 06:43 PM
பிராங்,

ஹைக்கு என்று எழுதாமல்... ஹி ஹீ க்கூ என்று எழுதியபோது எதோ குறுஞ்செய்தியில் வருவதை எழுதுறிங்க என்ரு நினைத்தேன்...

உன்மையில் இது "ஹி ஹீ க்கூ" இல்லை... அருமையான எண்ணக்கள்... எல்லோருக்கும் தெரியும்தான், எங்கோ மனசுக்குள்ள ஒள்ச்சுகிடக்குறத வார்த்தையா பாக்கிறச்ச... அடடே அடடே தான்....

ஒவ்வொன்னும் அருமை...
நமக்கு ஹி ஹீ
சம்மந்த பட்டவர்களுக்கு "பளீர் பளீர்.."

தொடருங்கள்....

pradeepkt
08-12-2006, 03:36 AM
பிராங்கிளின்.
கலக்குறீங்க. வரிகளின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்து மக்களை என்ன சொல்ல வர்றீங்கன்னு முதல் ரெண்டு வரியில் சிந்திக்க வைத்துக் கடைசி வரியில் பொளேர்னு அடிச்சீங்கன்னு வைங்க... உங்க ஹைக்கூ "ஹைட்"கூ ஆயிரும் :)

உதாரணம்:
வெள்ளையன் போட்ட ரூட்டு
நாம வச்சோம் வேட்டு
- தண்டவாளம்

உங்க கவிதையை நான் இஷ்டத்துக்கு மாத்துறேன்னு தப்பா நினைக்காதீங்க! என் கருத்தைச் சொல்லறேன். தப்பிதமா இருந்தாச் சொல்லுங்க, விவாதிப்போம்.

franklinraja
08-12-2006, 05:55 AM
உன்மையில் இது "ஹி ஹீ க்கூ" இல்லை... அருமையான எண்ணக்கள்... எல்லோருக்கும் தெரியும்தான், எங்கோ மனசுக்குள்ள ஒள்ச்சுகிடக்குறத வார்த்தையா பாக்கிறச்ச... அடடே அடடே தான்....

ஒவ்வொன்னும் அருமை...
நமக்கு ஹி ஹீ
சம்மந்த பட்டவர்களுக்கு "பளீர் பளீர்.."

நன்றி பென்ஸ்..

உங்களின் பாராட்டு, ஊக்கத்தை அதிகப்படுத்துகிறது..!

மிக்க நன்றி..!

franklinraja
08-12-2006, 06:01 AM
பிராங்கிளின்.
கலக்குறீங்க. வரிகளின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்து மக்களை என்ன சொல்ல வர்றீங்கன்னு முதல் ரெண்டு வரியில் சிந்திக்க வைத்துக் கடைசி வரியில் பொளேர்னு அடிச்சீங்கன்னு வைங்க... உங்க ஹைக்கூ "ஹைட்"கூ ஆயிரும் :)

உதாரணம்:
வெள்ளையன் போட்ட ரூட்டு
நாம வச்சோம் வேட்டு
- தண்டவாளம்

உங்க கவிதையை நான் இஷ்டத்துக்கு மாத்துறேன்னு தப்பா நினைக்காதீங்க! என் கருத்தைச் சொல்லறேன். தப்பிதமா இருந்தாச் சொல்லுங்க, விவாதிப்போம்.

நன்றி ப்ரதீப்..

மிகவும் சரியான விமர்சனத்தை கொடுத்திருக்கிறீர்கள்..!

நாங்கள் இளையவர்தானே.. உங்கள் ஆலோசனை எங்களுக்கு கண்டிப்பாகத் தேவை..! :D

தொடர்ந்து உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்..!

உங்களுடைய கவிதை - உண்மையிலேயே "ஹைட்"க்கூ தான்..! :)

மிக்க நன்றி..!

மன்மதன்
08-12-2006, 06:11 AM
ஹிஹிக்கூ நன்றாக இருக்கிறது . ஓவியா சொன்ன மாதிரி தொடர்ந்து எழுதுங்க. சிறந்ததை தேர்ந்தெடுத்து தொகுப்பா வெளியிடுங்க... வாழ்த்துகள்.

franklinraja
08-12-2006, 08:13 AM
ஹிஹிக்கூ நன்றாக இருக்கிறது . ஓவியா சொன்ன மாதிரி தொடர்ந்து எழுதுங்க. சிறந்ததை தேர்ந்தெடுத்து தொகுப்பா வெளியிடுங்க... வாழ்த்துகள்.

மிக்க நன்றி சார்..! :D

franklinraja
14-12-2006, 06:10 AM
சட்டசபைல ஒருத்தன ஒருத்தன் அடிக்கிறான்...
சாயங்காலம் ஒன்னா உக்காந்து குடிக்கிறான்...
-அரசியல் !

pradeepkt
17-12-2006, 02:00 AM
ஒண்ணாக் குடிக்கிறதுக்குத்தானே
ஒவ்வொண்ணா அடிக்கிறான்?

franklinraja
18-12-2006, 01:23 PM
சுத்திலும் நிறைய தடிமாடு..
தாங்கமுடியல இவனுக இடிபாடு..
- சிட்டி பஸ் !

கருத்து: கலக்கப்போவது யாரு (விஜய் டிவி)

meera
18-12-2006, 02:01 PM
அடடா உண்மைதான் ராஜா,

மூணு வருஷம் காலேஜ் முடிக்கறதுக்குள்ள வாழ்க்கையே வெறுத்துட்டேன் இந்த சிட்டி பஸ்சால.:eek: :eek: :eek:

franklinraja
04-01-2007, 07:32 AM
கவலைய மறக்கணும்னு குடிக்கிறான்..
குடி குடியைக் கெடுக்குங்கிறதையே மறக்கிறான்..
-குடிகாரன் !

பி.கு: வாராவாரம் ஆராவாரம் செய்யும் நண்பர்கள் மன்னிக்க..! :D

அறிஞர்
04-01-2007, 01:18 PM
கடைசியில் கொஞ்சம் சுருதி இறங்கின மாதிரி இருக்கு...

கொஞ்சம் ஏத்துனா நல்லா இருக்கும்.

franklinraja
20-01-2007, 05:35 AM
அப்போ, தனியாளா நின்னு மாட்ட அடக்குனவன் வீரன்..
இப்போ, கும்பலா போய் விழுந்து அங்க மாடு படுற பாட்டப் பாரேன்...
-ஜல்லிக்கட்டு !

மதுரகன்
20-01-2007, 05:07 PM
உங்கள் கவிதைகள் ரசிக்கவைக்கின்றன...

இதனை குறும்பா வகை எனவும் கூறலாம்..

ஓவியா
21-01-2007, 01:55 PM
அஹ அஹ அஹ..ஹி ஹி ஹி

ரசித்து சிரித்து யோசித்தேன்
சூப்பர் ஹி.. ஹி.. க்கூ

கலக்குரீக நண்பா
பாராட்டுகள்

franklinraja
31-01-2007, 08:08 AM
கொண்டாடுகிறோம் வருடா வருடம் குடியரசு தினம்..
கொலை, கொள்ளை, வன்முறை செய்திகள்தான் தினம் தினம்...
-ஜனநாயகம் !

மனோஜ்
31-01-2007, 12:18 PM
பொங்கி வழிகிறது பொங்கள் பணக்காரர் வீட்டில்
பொங்கி வழிகிறது வென்ணீர் ஏழைவீட்டில்
- பொங்கள் திருநாளில்

leomohan
31-01-2007, 12:35 PM
கொண்டாடுகிறோம் வருடா வருடம் குடியரசு தினம்..
கொலை, கொள்ளை, வன்முறை செய்திகள்தான் தினம் தினம்...
-ஜனநாயகம் !

நெஞ்சை தொட்டுவிட்டீர்கள்.

pradeepkt
01-02-2007, 04:42 AM
பொங்கி வழிகிறது பொங்கள்(ல்) பணக்காரர் வீட்டில்
பொங்கி வழிகிறது வென்ணீர்(வெந்நீர்) ஏழைவீட்டில்
- பொங்கள்(ல்) திருநாளில்
முதலில் சில எழுத்துப் பிழைகள்.
அடுத்தது வெந்நீர் பொங்குவது இல்லை என்ற உண்மைகளை விட்டால் ஏழைகள் வீட்டில் கண்ணீர் பொங்குகிறது என்பது சரியாக இருந்திருக்கும்.

உங்கள் ஆதங்கம் கவிதை வழியாகப் பொங்குகிறது மனோ!

franklinraja
16-03-2007, 07:01 AM
நாய், பூனை உணவுக்கெல்லாம் வரிச்சலுகை...
நாளும் இங்கு சாமானியருக்கு மிஞ்சுவதென்னவோ வெறும் அழுகை...
-பட்ஜெட் 2007 !

செய்தி: நாய், பூனை உணவுக்கு கலால் வரி குறைப்பு !

ஆதாரம்: http://thatstamil.oneindia.in/news/2007/03/01/budget.html