PDA

View Full Version : நாட்டுபுற பாடல்கள்



mgandhi
05-11-2006, 10:08 AM
ஆண்டிற்கொரு விழா

நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்தது. உழவன் இளையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான். பிள்ளையாரும் அத் தெய்வங்களுள் ஒருவர். இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல. இவர் வகை வகையாக பணியார பண்டங்களை ருசியாக உண்பவர். நல்ல மேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரத்தடிப் பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள்.

மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்,
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்.
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்.
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்.
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு.

பிள்ளயார் பிறந்தார்
வடக்கே தெற்கே ஒட்டி,
வல புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளயார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
முசிறி உழவிலே
மொளச்சாராம் பிள்ளயாரு,
ஒடு முத்ம் தேங்காய
ஒடக்கறமாம் பிள்ளயார்க்கு,
குல நிறஞ்ச வாழப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளயார்க்கு,
இத்தனயும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளயார்க்கு!

கணபதி பூசை
வேண்டும் வரம் தரும் பிள்ளயாருக்குப் பூச போடுவதற்கு கிராமப்பெண்கள் தயார் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல விளச்சல், மங்கல வாழ்வு கொடுத்த பிள்ளயாருக்கு மங்களமாகப் பூச போட அவர்கள் விரும்புகிறார்கள். நிலவு காயும் நேரத்தில் பிள்ளயார் பிடித்வத் அவரச் சுற்றிக் கும்மியடித்ப் பாடுகிறார்கள். கும்மியில் பிள்ளயார் பூசனமுற பற்றி பெண்கள் பாடுகிறார்கள்.
ஒரு மிளகாயாம்-ஏலேலோ
கணபதியாம்
ஒரு ஆயிரம் திருவிளக்காம்-ஏலேலோ
கணபதியாம்
திருவிளக்கு ஏலேலோ
கணபதியாம்
சிவனே என்று பொழுதெறங்க-ஏலேலோ
கணபதியாம்
பொழுதெறங்கும் வேளயிலே-ஏலேலோ
கணபதியாம்
பொங்கலுக்கு தண்ணி கொண்டு-ஏலேலோ
கணபதியாம்
நீராடி நீர் குளித்-ஏலேலோ
கணபதியாம்
பட்டுடுத்தி பணியுடுத்தி-ஏலேலோ
கணபதியாம்
பதினெட்டு நெல் வகயும்-ஏலேலோ
கணபதியாம்
கொறித்தெடுப்போம்-ஏலேலோ
கணபதியாம்

பிள்ளயார் தூதி
நத்தத்ப் பிள்ளயாரே
நான் நடந்தேன் மாதாந்தம்
கக்குழந்த தந்தியானா-உனக்கு
கடவிளக்கு நான் விடுவேன

mgandhi
06-11-2006, 05:41 PM
வைசூரி மிகக் கொடியதொரு வியாதி இதை,
குணப்படுத்தவோ, பண்ட வத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்ல.
இந்த தெய்வத்திற்கு மாரி, மாரிமுத், மாரியம்மன், முத்மாரி என்று பல பெயர்களிட்டு அழத்தனர். இப்பொழு இத்தெய்வம் பார்வதியின் ஒரு அம்சமாகவும், பத்ரகாளியின் அம்சமாகவும் கருதப்படுகிறாள்.
ஊரில் வசூரி பரவியம், மாரியம்மனுக்குப் பல விதமான நேர்த்திக்கடன்கள் செய்ய மக்கள் நேர்ந் கொள்வர். மாவிளக்கு ஏற்றுவதாகவும், கரகம் எடுப்பதாகவும், கயிறு சுற்றுவதாகவும், பொங்கல் இடுவதாகவும், தீச்சட்டி எடுப்பதாகவும் சபதம் ஏற்றுக் கொள்வர்
அவ்வாறு விழாக் கொண்டாடும்போ உடுக்கடித் மாரியம்மன் புகழப் பாடிக்கொண்டு தலயில் தீச்சட்டி தாங்கிக் கொண்லர் வருவர். அவர்கள் பாடும் பாடல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். உடுக்குத் தாளத்தோடு சேர்ந்வரும் பாட்டு மாரியம்மனின் பக்தர்களப் பரவசப்படுத்ம்.

மாரியம்மன் பாட்டு
தொண்ணுறு லட்சம் பூவெடுத்,
வாடித் றந்தல்லோ-ஆயிரம் கண்ணாளுக்கு
வாடா மலரெடுத்,
கயாலே பூ வெடுத்தா-மாரிக்கு
காம்பழுகிப் போகுமிண்ணு
விரலாலே பூ வெடுத்தா
வெம்பிடு மென்று சொல்லி
தங்கத் ரட்டி கொண்டு-மாரிக்கு
தாங்கி மலரெடுத்தார்
வெள்ளித் ரட்டி கொண்டு
வித மலர்கள் தானெடுத்தார்
எட்டாத பூ மலர-மாரிக்கு
ஏணி வத்ப் பூ வெடுத்தார்
பத்தாத பூ மலரப்
பரண் வத்ப் பூ வெடுத்தார்.
அழகு சுள கெடுங்க-மாரிக்கு
அமு படி தானெடுங்க
வீசும் சுள கெடுங்க-மாரிக்கு
வித் வக தானெடுங்க
உப்பாம் புளி முளகா-ஆயிரம் கண்ணாளுக்கு
ஒரு கரண்டி எண்ணெய் அமு
கடலச் சிறு பயறு
காராமணி மொச்சயம்மா
அவர, வர முதல்-ஆயிரங் கண்ணாளுக்கு
ஆமணக்கங் கொட்ட முதல்
காடக் கண்ணி பருத்தி வித-மாரிக்கு
பாங்கான வித் வக
இட்டுச் செய்தவர்க்கு
எம காளி ண செய்வாள்
மக்களப் பெற்றவர்கள்
மாரி கத தானறிவார்
அறிந்தோர் அறிவார்கள்
அம்மன் திருக் கதய
தெரிந்தோர்க்குத் தெரியுமம்மா!
-ஆயிரங்கண்ணா
தேவி திருக் கதய
ஒரு கண்ணு ரெண்டு கண்ணு
உலகத் மானிடர்க்கு
ஆயிரம் கண்ணுடயா
அழகில் சிறந்த கண்ணு
பதினாயிரம் கண்ணுடயா
பாதகத்தி நீலியவ
இருசி வயத்திலேயும்,
எமகாளி பிறந்திடுவாள்
மலடி வயத்திலேயும்
மாகாளி பிறந்திடுவாள்-மாரிக்கு
ஆறு வண்டி நூறு சட்டம்
அசயா மணித் தேருகளாம்.
தேர நடத்தியல்லோ-மாரி
சித்திரங்கள் பாடி வாரா-மாரிக்கு
பூட்டுன தேரிருக்கப்
புறப்பட்டாள் வீதியிலே
நாட்டுன தேரிருக்க-ஆயிரம் கண்ணா
நடந்தாளே வீதியிலே
வீதி மறித்தாளம்மா-மாரி
வின தீர்க்கும் சக்தியல்லோ!
பிறந்தா மலயாளம்-அவ
போய் வளர்ந்தா-ஆள்பாடி
இருந்தாள் இருக்கங்குடி-மாரி
இனி இருந்தா லாடபுரம்
சமந்தால் சமயபுரம், - மாரி
சாதித்தாள் கண்ணாபுரம்
கண்ணா புரத்தில்-மாரி
காக்கும் பிரதானி-மாரிக்கு
உடுக்குப் பிறந்ததம்மா!
உத்திராட்சப் பூமியிலே
பம்ப பிறந்ததம்மா-மாரிக்கு
பளிங்கு மா மண்டபத்தில்
வேம்பு பிறந்ததம்மா-மாரிக்கு
விசய நகர்ப் பட்டணத்தில்
ஆட பிறந்ததம்மா-மாரிக்கு
அயோத்திமா நகர்தனிலே
சிலம்பு பிறந்ததம்மா-மாரிக்கு
பிச்சாண்டி மேடயிலே
சாட்ட பிறந்ததம்மா-மாரிக்கு
சர கிரி பூமியிலே
சாட்ட சலசலங்க-
சர மணி ஓசயிட
கச்ச கலகலங்க
கருங்கச்ச குஞ்சம் விட
பதினெட்டுத் தாளம் வர
பத்தினியா சித்டுக்கு
இருபத்தொரு தாளம் வர
எமகாளி சித்டுக்கு
சித்டுக்கக் கப்பிடித்
சிவ பூணணிந்தவளாம்.

mgandhi
07-11-2006, 06:10 PM
மாரியம்மன் பாட்டு-2
சின்ன முத்தாம் சிச்சிலுப்பச்
சீரான கொப்பளிப்பான்
வண்ண முத்தாம் வரகுருவி
வாரிவிட்டா தோணியிலே.
மாரியம்மா தாயே, நீ
மனமிரங்கித்தந்த பிச்ச,
தற்காத் நீகொடும்மா உன்
சன்னதிக்கே நான் வருவேன்.
வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா,
இரண்டு வடுகரோட வாதாடி
தனக்கிசந்த எல்ல என்று மாரி
தனித் அடித்தாள் கூடாரம்.
உச்சியிலே போட்ட முத்த மாரி
உடனே இறக்கிடுவாள்,
முகத்திலே போட்ட முத்த மாரி
முடிச்சா இறக்கிடுவாள்.
கழுத்திலே போட்ட முத்த மாரி
காணாமல் இறக்கிடுவாள்.
பதக்கத் முத்க்கள மாரி
மாறாமல் இறக்கிடுவாள்.
நெஞ்சில் போட்ட முத்த மாரி
உடனே இறக்கிடுவாள்.
தோளிலே போட்ட முத்த மாரி
ணிவாக இறக்கிடுவாள்.
வயிற்றிலே போட்ட முத்த மாரி
வரிசயாய் இறக்கிடுவாள்.
முட்டுக்கால் முகத்த மாரி
முடித்திருந் இறக்கிடுவாள்.
கரண்டக் கால் முத்த மாரி
காணாமல் இறக்கிடுவாள்
பாதத் முத்த மாரி
பாராமல் இறக்கிடுவாள்.
ஐந் சட கொஞ்சிவர, மாரி
அழகு சடமார் பிறழ,
கொஞ்சும் சடயிலேயே மாரிக்கு இரண்டு
குயில் இருந் தாலாட்ட.
உன் பம்ப பிறந்ததம்மா
பளிங்குமாம் மண்டபத்தில்,
உன் உடுக்குப் பிறந்ததம்மா
உத்திராட்ச மேடயிலே,
கரகம் பிறந்ததம்மா,
கண்ண நல்லூர் மேடயிலே,
சூலம் பிறந்ததம்மா
லுக்க மணி மண்டபத்தில்,
நாகம் குடப்பிடிக்க, மாரியாத்தாளுக்கு
நல்லபாம்பு தாலாட்ட,
முத் மணி விளக்காம் மாரியாத்தாளுக்கு
முதல் மண்டபமாம்.
சக்தி உடயவளே! சாம்பிராணி வாசகியே!
நாழியிலே முத்தெடுத் மாரியம்மா
நாடெங்கும் போட்டுவந்தாள்.
உழக்கிலே முத்தெடுத் மாரி
ஊரெங்கும் போட்டு வந்தாள்.
எல்ல கடந்தாளோ
இருக்கங்குடி மாரியம்மா,
முக்கட்டுப் பாதகளாம்,
மூணாத்த் தண்ணிகளாம்,
மூணாத்ப் பாதயிலே இருந்
மாரியம்மா வரங் கொடுப்பாள்.
தங்கச் சரவிளக்காம்மாரிக்குத்
தனித்திருக்கும் மண்டபமாம்,
எண்ணெய்க் கிணறுகளாம் மாரிக்கு
எதிர்க்கக் கொடிமரமாம்.
தண்ணீர்க் கிணறுகளாம் மாரிக்குத்
தவசிருக்கும் மண்டபமாம்
சப்பரத் மேலிருந்
சக்தி உள்ள மாரி அவ.
சரசரமாமால, மால கனக்குணு
மயங்கிவிட்டாள் மாரி.
ஆத்க்குள்ள அடகிடக்கு
அஞ்சு தல நாகம்
அ ஆளக் கண்டால் படமெடுக்கும்
அம்மா சக்தி
வேப்ப மரத்தவே தூருங்கடி, மாரிக்கு
வெத்திலக் கட்டவே பறத்ங்கடி,
வேர்த் வார சந்தன மாரிக்கு
வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கடி
பாசிப் பயிறு எடுத்
பத்தினியாள் கயெடுத்
உழுந்தம் பயறெடுத்
உத்தமியாள் கயெடுத்
நவராத்திரி உற்சவத்தின்போ இவள் சிம்ம வாகனத்தில் ஏறி வருவாள். பெண்கள், இவள் புகழ் பாடிக் கும்மியடிப்பார்கள்.

இளசு
12-11-2006, 10:09 AM
நல்ல பதிவு... அரிய பணி..

பாராட்டுகள் மோகன்காந்தி அவர்களே...

தொடருங்கள்..


--------------------

பழைய திஸ்கி மன்றத்தில் இந்த சுட்டியிலும் நாட்டுப்புற பாடல்களைக் காணலாம் ( முரசு அஞ்சல் தேவை)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3196

இனிமையும் எளிமையும்
இயல்பும் கற்பனையும்
இன்பமும் துன்பமும்
கலந்து "பாமரர்கள்"
மனஏட்டில் மட்டும் பதிப்பித்த
இவையும் இலக்கியமே...
"நம்" வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த
இவைதான் முதல் இலக்கியமே..

mgandhi
12-11-2006, 05:39 PM
மாரியம்மன் பாட்டு-3
நாலு காலச் சட்டம்
நடு நிறுத்தி
நட்சத்திரம் போலே
ஒரு தேர் எழுப்பி
தேருக்கு ஒடயாளி
தேசமாளும் முத்தம்மா
தேரேறி வருவதப் பாருங்கடி
ஓலப் பொட்டி
தல மேலே
ஒம்ப மக்களும்
கக்கத்திலே
மக்களப் பெத்த மாரியம்மன்
மவுந் வருவதப் பாருங்கடி.

mgandhi
15-11-2006, 04:33 PM
மழைக்காகப் பூசை செய்யும் வழக்கமும் தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்தது. சில வேளைகளில் பல நாட்கள் பூசை செய்தும் மழை பெய்யாது போய் விடும். அப்பொழுது மன வேதனையோடு மக்கள் நாராயணனை நோக்கிக் கதறுவார்கள். நாராயணன் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள்.


ஒருநாள் பூச செஞ்சேன்
நாராயணா, ஒரு
ஒளவு மழ பெய்யலியே
நாராயணா!
ஒளவு பேயாமே நாராயணா
மொளச்ச
ஒருபயிரும் காஞ்சு போச்சே
நாராயணா!
மூணு நாளாப் பூச செஞ்சேன்
நாராயணா! ஒரு
முத் மழ பேயலியே
நாராயணா
முத் செடி காஞ்சு போச்சே
நாராயணா,
அஞ்சு நாளாப் பூச செஞ்சேன்
நாராயணா ஒரு
ஆடி மழ பேயலியே
நாராயணா!
ஆடி மழ பேயாமல்
நாராயணா!
ஆரியமெல்லாம் காஞ்சு போச்சே
நாராயணா!

mgandhi
16-11-2006, 05:40 PM
வருண தேவன் கருணயால், மழ பொழியத் தொடங்குகிற, மின்னல் மின்ன இடி இடித்து மழை பெய்யும் போது பூமி குளிர்கிற. மழயில் நனைந்து கொண்டே உழவர்கள் மழை வரவேற்கிறார்கள்.

ஆடு வித், மாடு வித்து
ஐயோ வருண தேவா!
அத்தனயும் கூட வித்து
ஐயோ வருண தேவா!
கா கடுக்குவித்து
ஐயோ வருண தேவா
க வளயல் கூடவித்து
ஐயோ வருண தேவா!
இச் சிக்காய் தின்ன பஞ்சம்
ஐயோ வருண தேவா!
இன்னும் தௌயலயே
ஐயோ வருண தேவா!
காரக்காய்த் தின்ன மக்கள்
ஐயோ வருண தேவா!
காதடச்சு செத்த மக்கள்
ஐயோ வருண தேவா!
மக்க வெதச்ச கம்பு
மச்சு வந்து சேரணுமே!
ஓடி வெதச்ச கம்பு
ஊடுவந் சேரணுமே
கலப்ப பிடிக்குந் தம்பி
க சோந் நிக்கிறாங்க!
அக்கே மனமிரங்கு
ஐயோ வருண தேவா!
ஏர் பிடிக்குந் தம்பி யெல்லாம்
எண்ணப்பட்டு நிக்கிறாங்க
அக்கே இறங்க வேணும்
ஐயோ வருண தேவா!
பேயுதயா பேயுது
பேய் மழயும் பேயுது
ஊசி போல காலிறங்கி
உலகமெங்கும் பேயுது
உலக மெங்கும் பேஞ்ச மழை
ஊரிலெங்கும் பேயலே
பாசி போல காலிறங்கி
பட்டணமே பேயுது
பட்டணமே பேஞ்ச மழை
பட்டியிலே பேயிலே
பட்டு போல மின்னி
சீமயெங்கும் பேயுது
சீமயெங்கும் பெஞ்ச மழை
செல்ல மழை பேயுது.

sarcharan
17-11-2006, 12:29 PM
ராசாத்தி உன்னை எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்னு.. ஒரு பாடல் இருக்குமே.. அதன் வரிகள் தெரிந்தால் பதியுங்களேன்.

mgandhi
17-11-2006, 01:26 PM
பஞ்சத்தால் உடல் நலிந்த இளஞர்கள் எழுந் நடக்கவும் சக்தியின்றி மெலிந்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியில்ல. அவர்கள வேதனய பாம்பாச் சுருண்டழுதோம், தேளாச் சுருண்டழுதோம் என இரண்டு உவமகளின் மூலம் விளக்குகிறார்கள்.

பரட்ட புளிய மரம்
பந்தாடும் வில்ல மரம்
பந்தாடும் நேர மெல்லாம்
பகவான பார்த் தெழுதோம்.
பாம்புக்கோ ரெண்டு கண்ணு
பகவான் கொடுத்த கண்ணு
பாவிப் பய சீமயிலே
பாம்பா சுருண்ட ழுதோம்.
தேளுக்கோ ரெண்டு கண்ணு
தெய்வம் கொடுத்த கண்ணு
பாவிப்பய தேசத்திலே
தேளாச் சுருண்டழுதோம்.

mgandhi
17-11-2006, 01:28 PM
மழை பொய்த் விட்டால் வருண தேவனுக்குப் பொங்கல் வப்பார்கள். கோழி பலி கொடுப்பார்கள். நிலவுபொழியும் இரவில் கன்னிப் பெண்கள் உப்பில்லாத கூழ் குடித்து பிள்ளயார் சிலயைப் பிடுங்கி கரைத்த சாணிய அதன் மேலே ஊற்றி வைப்பார்கள். மழைக் கடவுள வேண்ட வருண பகவான் மழை பெய்து பிள்ளயாரச் சுத்தப்படுத்வதாக ஐதிகம். மழை பெய்த பின் பிள்ளயாரப் பிரதிஷ்ட செய்து பூஜிப்பார்கள்,


பூமிய நம்பி
புத்திரரத் தேடி வந்தோம்,
பூமி பலியெடுக்க
புத்திரர் பரதேசம்,
மானத்த நம்பி
மக்களத் தேடி வந்தோம்
மானம் பலியெடுக்க
மக்களெல்லாம் பரதேசம்
ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம்
பின்னப் பட்டுநிக்கிறாங்க
அந்தக் குறை கேட்டு
வந்திறங்கு வர்ணதேவா
மேழி பிடிக்கும் தம்பியெல்லாம்
முகஞ் சோந் நிக்கிறாங்க
அந்தக் குறை கேட்டு
வந்திறங்கு வர்ண தேவா,
காட்டுத் தழை பறித்
கயெல்லாம் கொப்புளங்கள்
கடி மழை பெய்யவில்ல
கொப்புளங்கள் ஆறவில்ல.
வேலித் தழைபறித்து
விரலெல்லாம் கொப்புளங்கள்
விரந்து மழை பெய்யவில்ல
வருத்தங்கள் தீரவில்ல,
மானம் விடிவதெப்போ,
எங்க மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ?
ஓடி வெதச்ச கம்பு
ஐயோ! வருண தேவா
ஊடுவந் சேரலயே
பாடி வெதச்ச கம்பு
ஐயோ வருண தேவா
பானவந்து சேரலயே.

mgandhi
22-11-2006, 05:26 PM
சில தாலாட்டுப் பாடல்களில் உண்மயான குழந்தயயும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள். பச்ச இலுப்ப வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே

இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமகள் எல்லாம் வருகின்றன
மாமனக் கேலி செய் பாடும் நகச்சுவப் பாடல்களும் உள்ளன.
உசந்த தலப்பாவோ
உல்லாச வல்லவாட்டு
நிறந்த தல வாசலிலே
வந் நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?

mgandhi
03-12-2006, 05:42 PM
[B]பாமரர் தாலாட்டில் தொட்டில் செய்த தச்சனயும் காப்புச் செய் தந்த தட்டானயும் இன்னும் இவர் போன்ற பிற தொழிலாளர்களயும் பாராட்டிப் பாடும் வழக்கமும் உள்ள.து[

பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்

ஆன விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்ட கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டகளும்
பட்டுப் புடவகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளயும் கொடுத்தானோ !

pradeepkt
04-12-2006, 05:02 AM
தமிழர் மரபில் தாய்மாமனுக்கு இருக்கும் மரியாதையே தனிதாங்க. அதை இந்தப் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்வதில் மெத்த மகிழ்ச்சி.

mgandhi
06-12-2006, 04:44 PM
தாலாட்டில் வருங்காலத்தில் தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய கடமகளத் தாய் அறிவுறுத்வாள். இவ்வறிவுர மகனைப் பார்த்க் கூறுவதாகவும் இருக்கலாம்.
மார்கழி மாசத்திலேதான்-கண்ணே நீ
மாராசாவப் பார்க்கயிலே
தைப் பொங்கல் காலத்திலே-கண்ணே நீ
தயிரும், சோறும் திங்கயிலே
மாசி மாசக் கடசியிலே-கண்ணே நீ
மாமன் வீடு போகயிலே
பங்குனி மாசத்திலே-கண்ணே நீ
பங்குச் சொத்த வாங்கயிலே
சித்திர மாசத் வக்கத்திலே-கண்ணே நீ
சீர் வரிச வாங்கயிலே,
வைகாசி மாசத்திலே-கண்ணே நீ
வயலச் சுற்றிப் பார்க்கயிலே
ஆனி மாசக் கடசியிலே-கண்ணே நீ
அடியெடுத் வக்கயிலே
அகஸ்மாத்தா ஆவணியில்-கண்ணே நீ
அரண்மனக்குப் போகயிலே
ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே-நீ
அப்பன் வீடு தங்கயிலே
கார்த்திக மாசத்திலும்-கண்ணே
கடவுளுக்குக் கையெடடி.

mgandhi
18-02-2007, 11:45 AM
தாயின் குடும்பம் எத்தொழிலச் செய் வாழ்கிறதோ அத்தொழில் தாலாட்டில் பெருமயாகக் கூறப்படுகிற.
ஐர மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாள மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தயிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரைமூடிய அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகப் பார்த்து அரண்டார்களே.
அத்திமரம் குத்தகயாம்
ஐந்லட்சம் சம்பளமாம்
சாமத்தல முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்

ஓவியன்
26-02-2007, 04:45 AM
அருமையான ஒரு பதிவு!

நம் நாட்டார் பாடல்கள் ஒவ்வொரு பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடும். அவை பெரும்பாலும் வாய்வழி மூலமே உயிர் வாழ்ந்து வருகின்றமையால் பல அருமையான பாடல்களை நாம் இழந்து விட்டோம். இவ்வாறான் திரிகள் மூலம் அவை தொகுக்கப் பட்டு பாதுகாக்கப் படவேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாது விடின் மீதமுள்ள இவ்வாறான அருமையான பாடல்களையும் இழந்து விடுவோம்.