PDA

View Full Version : ♔. ராஜா ரயில் பயணம் ராங்கா போன கதை....ராஜா
05-11-2006, 08:21 AM
10 வயது சிறுவனாக இருந்தபோது, நானும் என் நண்பனும் ( தற்போது அரசியலில் "பிரகாசித்துக்"கொண்டிருப்பவர்) திருச்சியில் இருந்து நீடாமங்கலத்துக்கு தொடர்வண்டியில் வந்து கொண்டிருந்தோம்.முகத்தில் காற்று பட்டாலே மூன்றாம் ஜாமத்துக்குப் போய்விடும் இயல்புள்ள எங்களுக்கு தொடர்வண்டியின் தாலாட்டு தூக்கத்தை தந்ததில் வியப்பென்ன இருக்க முடியும்?

என்றாலும் கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சக பயணி ஒருவரிடம் நினைவூட்டச் ( எழுப்ப?) சொல்லிவிட்டுதான் கண்ணயர்ந்தோம்.

விதி செய்த சதியாலோ, சக பயணியின் "கடலை" ஆர்வத்தாலோ நீடாமங்கலம் நினைவூட்டப்படவில்லை. வண்டி நின்று மூன்று பயணிகளை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு புறப்பட்டு விட்டது.என்றாலும் முன்னோர் செய்த புண்ணியத்தாலோ, "கடலை" முயற்சியில் ஏற்பட்ட காயத்தாலோ கடமை உணர்வுடனும் கண்ணொர ஈரத்தோடும் சக பயணி கதறி எழுப்பினார்..அதற்குள் புகைவண்டி நீடமங்கலத்தை விட்டு அரை கல் சென்று வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது.

அவரது அலறலிலும், தூக்க கலக்கத்திலும், நிலையம் தாண்டிவிட்டது என்ற கலவரத்திலும் உந்தப்பட்ட நாங்கள், பாமணியற்றுப் பாய்ச்சலாய் வெளியே குதித்தோம்.வண்டிகூடவே கொஞ்ச தூரம் உருண்டோம்.ஒருவாறு சுதாரித்து எழுந்து எங்கள் காயங்களைக் கணக்கெடுத்தோம்.

இதில் ஒரு விஷயத்தை தங்களுக்கு சொல்ல மறந்து விட்டேன்.நாங்கள் திருச்சி சென்றது அவனுக்கு வேண்டுதல் நிறைவேற்றி மொட்டை போட.
எனக்கு முழங்கையிலும் இடுப்பிலும் விழுப்புண்கள். அவனுக்கோ வீரத்தழும்பு இன்னும் தலையில் இருக்கிறது.அந்த நிலையிலும் மொட்டை மண்டை ( ஏற்கனவே ரெட்டை மண்டை) முட்டை மண்டையாக வீங்கி இருந்ததைப் பார்த்து எனக்கு சிரிப்பு பொங்கி பீறிட்டது.

இவ்வாறிருக்கையில், எதிர் தடத்தில் ஒரு வண்டி வருவதைப் பார்த்தோம். என் நண்பன் கிலியின் உச்சத்துக்கே போனவனாக, "

டேய் ராஜா, நாம குதிச்சதைப் பார்த்துட்டு போன ரயிலை திருப்பிக்கிட்டு நம்பள புடிக்க வர்றாங்கடா.!"

என்று அலறவே, சிந்திக்கும் சக்தியையும், பைகளையும் தூர வீசிவிட்டு கண் மண் தெரியாமல் ஒடினோம்..!

அதற்கப்புறம் அருகில் இருந்த ஒரு வீட்டின் கொல்லைப்புற சுவர் ஏறிக்குதித்ததும், அங்கு அரைகுறையாய் குளித்துக்கொண்டிருந்த ஒரு மாமி, எங்களை திடீரென்று பார்த்த அதிர்ச்சியில் பாரசீக மொழியில் அலறி, பின்னர் கையில் இருந்த சொம்பால் நண்பனின் மொட்டை தலைக்கு ஏவு கணை அனுப்பியதும், நாங்கள் முயற்சியில் மனந்தளரா விக்கிரமாதித்தர்களாய் வீட்டுக்குள் புகுந்து ஊஞ்சல் முதல் மாமா வரை எல்லாவற்றையும் உருட்டி, வாசல் வழியாக வெளியேறி பஸ் பிடித்து மன்னை வந்து சேர்ந்த கதை எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இன்றளவும் "இன்ட்ரெஸ்ட் குறையாத எவர்க்ரீன் இதிகாசங்கள்"..!!!

பின்குறிப்பு: எங்கேயாவது, யாராவது ரயிலைப் பார்த்து தானாக சிரித்துக் கொண்டிருந்தால் தயவு செய்து தவறாக எண்ணாதீர்கள்.!! நானாகவோ, என் நண்பனாகவோதான் இருப்போம். யார் கண்டது..? இந்த கதையைப் படித்தவராகக் கூட இருக்கலாம்..!

meera
05-11-2006, 12:11 PM
ராஜா,

ரொம்ப நல்ல கதைதான்.சிரிப்பு தாங்கல.ரயிலை திருப்பிக்கிட்டு வந்தாங்கலா??

நீங்க சொன்னமாதிரி இனிமேல் ரயிலை பார்த்தா கண்டிப்பா சிரிப்பு வரும்.

pradeepkt
06-11-2006, 06:13 AM
அடடே... நீடாமங்கலத்தில் இருந்து எப்படித் திரும்பத் திருச்சிக்கு வந்தீங்கன்னு சொன்னா அது இன்னொரு பெரிய சம்பவமா இருக்கும் போலவே...

guna
06-11-2006, 09:17 AM
உங்கள் இரயில் பயணத்தையும், உங்கள் மொட்டை தலை நன்பரையும், அந்த தலைக்கு மாமி விட்ட ஏவுகனையும், கலக்கல் ராஜா..

அமைதியா எல்லாரும் மதிய நேர மயக்கத்திலே வேலை செஞ்சுகிட்டு இருந்தச்ச, குணா மட்டும் வேகமா சிரிச்சதாலே அறையில இருந்த நிர்வாகி கூட என்னை பார்க்க தவற இல்லை..

எங்க ஊர்ல இரயில் இல்லை, பார்தா நீங்க நினைவு வர்வீங்கலோ இல்லையோ தெரியலை, உங்க மொட்டை தலை தோழர் கண்டிப்பா நினைவுக்கு வந்திடுவார்..

குணா

gragavan
06-11-2006, 09:25 AM
அடேடே! இப்படியெல்லாம் செஞ்சிருக்கீங்களே......திருச்சிக்காரங்களே இப்படித்தானோ!

மதி
06-11-2006, 10:46 AM
அடேடே! இப்படியெல்லாம் செஞ்சிருக்கீங்களே......திருச்சிக்காரங்களே இப்படித்தானோ!
வேற யாரையோ தானே தாக்கி பேசுறீங்க...ஹிஹி:D :D :D :D

pradeepkt
06-11-2006, 11:12 AM
வேற யாரையோ தானே தாக்கி பேசுறீங்க...ஹிஹி:D :D :D :D
தவளை... தவளை... :D

மதி
06-11-2006, 12:57 PM
தவளை... தவளை... :D
சொல்ல வேணாமுன்னு பாத்தேன்..தவளை எப்பலேர்ந்து தன் பேர சொல்லிக்க ஆரம்பிச்சுது??:confused: :confused: :D :D

ஓவியா
06-11-2006, 05:23 PM
10 வயது சிறுவனாக இருந்தபோது, நானும் என் நண்பனும் ( தற்போது அரசியலில் "பிரகாசித்துக்"கொண்டிருப்பவர்) திருச்சியில் இருந்து நீடாமங்கலத்துக்கு தொடர்வண்டியில் வந்து கொண்டிருந்தோம்.முகத்தில் காற்று பட்டாலே மூன்றாம் ஜாமத்துக்குப் போய்விடும் இயல்புள்ள எங்களுக்கு தொடர்வண்டியின் தாலாட்டு தூக்கத்தை தந்ததில் வியப்பென்ன இருக்க முடியும்?
என்றாலும் கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சக பயணி ஒருவரிடம் நினைவூட்டச் ( எழுப்ப?) சொல்லிவிட்டுதான் கண்ணயர்ந்தோம்.
விதி செய்த சதியாலோ, சக பயணியின் "கடலை" ஆர்வத்தாலோ நீடாமங்கலம் நினைவூட்டப்படவில்லை. ...."..!!!
..!

ராஜா அண்ணா
படித்து முடித்ததும்,
எனக்கு சிரிப்பு தாங்கவில்லை, நல்லா சிரித்தேன்..:D

பத்து வயதில் இப்படி ஒரு அழகான அனுபவம்...
பசுமரத்தாணி போல் நினைவில்.........

இப்படியே இந்த பதிவில் தங்கள் அனுபவங்களை தொடரலாமே

ஓவியா
06-11-2006, 05:29 PM
உங்கள் இரயில் பயணத்தையும், உங்கள் மொட்டை தலை நன்பரையும், அந்த தலைக்கு மாமி விட்ட ஏவுகனையும், கலக்கல் ராஜா..

அமைதியா எல்லாரும் மதிய நேர மயக்கத்திலே வேலை செஞ்சுகிட்டு இருந்தச்ச, குணா மட்டும் வேகமா சிரிச்சதாலே அறையில இருந்த நிர்வாகி கூட என்னை பார்க்க தவற இல்லை..

எங்க ஊர்ல இரயில் இல்லை, பார்தா நீங்க நினைவு வர்வீங்கலோ இல்லையோ தெரியலை, உங்க மொட்டை தலை தோழர் கண்டிப்பா நினைவுக்கு வந்திடுவார்..

குணா

மலேய்சியாவில் ரயில் இல்லையா....:eek: :eek:

குணா,
1940இல் இரயில் தன்டவாளம் அமைப்பதற்க்காகதானே நமது முன்னோர்கள் மலேய்சியா வந்தனர்....:confused:

pradeepkt
07-11-2006, 05:34 AM
சொல்ல வேணாமுன்னு பாத்தேன்..தவளை எப்பலேர்ந்து தன் பேர சொல்லிக்க ஆரம்பிச்சுது??:confused: :confused: :D :D
இந்தத் திரியில் ஆறாவது பதிவில் இருந்து... :rolleyes: :rolleyes: தவளை ... தவளை... :D

ராஜா
13-11-2006, 01:48 PM
விரைவில் எதிர்பாருங்கள்...
பஸ்சா? கசங்கல் அல்லது பஸ் சாகசங்கள்..!!!

மதி
13-11-2006, 01:49 PM
அடடே விளம்பரமே பலமா இருக்கே..?
நடத்துங்க..!

pradeepkt
14-11-2006, 05:06 AM
சில வருடங்களுக்கு முன் திருச்சி-தஞ்சை சாலையில் இருக்கும் துவாக்குடியில் இருந்தோம். அங்கேதான் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி, அமரதாரா போன்ற காவியங்களை கணேஷ் டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். இந்தக் காவியங்களுக்கும் இப்படித்தான் விளம்பரங்கள் தருவார்கள்.
விரைவில் எதிர்பாருங்கள். (அடுத்த வாரம் கடைசிக் காட்சி)
புத்தம் புது காப்பி! ("௧௯௫௯"ல் வந்தது)
பல சாகசக் காட்சிகள் நிறைந்தது - நாயகன் நாயகியை ஒரு பாட்டு முழுக்கத் துரத்திக் கொண்டே ஓடுவார். ஓடிக் கொண்டே பாடுவார். பாடிக் கொண்டே ஆடுவார். அந்த அம்மாள் கண்களால் கவிதை பாடிக் கொண்டே நாயகர் தொடாத தூரத்தில் மட்டுமே இருப்பார்...

அடடா... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே...

இளசு
03-12-2006, 01:50 PM
ராஜா,
சிரிக்க வைத்த ரயில் பயணம்... நன்றி இங்கே அழகாய்ப் பகிர்ந்தமைக்கு

பிரதீப்பின் விளம்பரநினைவுகள் பசுமை!

ஆமாம், யாரந்த 'பிரகாச' அரசியல் பிரமுக நண்பர்?

மயூ
28-12-2006, 10:05 AM
பாவம் உங்க நண்பர்!
பட்ட காலே படும் என்பது போல அவரின் மோட்டை மண்டையே மீண்டும் மீண்டும் பட்டிருக்கின்றது.!!! :D

மயூ
28-12-2006, 10:08 AM
விரைவில் எதிர்பாருங்கள்...
பஸ்சா? கசங்கல் அல்லது பஸ் சாகசங்கள்..!!!
காலேஜ்ல மார்கெட்டிங் படிச்சீங்களா??? இப்படி போட்டுத் தாக்குறீங்களே!!:D

சேரன்கயல்
27-02-2007, 11:43 AM
அழகா சொல்லியிருக்கீங்க ராஜா...
அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் இருப்பதில் ஆச்சரியமில்லை...

ஓவியன்
13-05-2008, 03:04 AM
டேய் ராஜா, நாம குதிச்சதைப் பார்த்துட்டு போன ரயிலை திருப்பிக்கிட்டு நம்பள புடிக்க வர்றாங்கடா.!

ஆஹா, என்னே ஒரு கண்டு பிடிப்பு...!! :lachen001:
காலையில் அலுவலகம் புறப்பட முன் இந்த திரியை மேலெழுப்பியதால் இன்று அலுவலகத்துக்குச் சிரித்து சிரித்து போகப் போகிறேன்...!! :)

அறிஞர்
13-05-2008, 03:10 AM
போன வருச கதையை இன்று தான் படித்தேன்...

ஆஹா... 10 வயதிலே தனியா பயணம்.... அருமையான சிரிக்க வைக்கும் நினைவுகள்...

அரசியல்வாதியுடன் இன்றும் தொடர்பு இருக்காண்ணா....

அக்னி
13-05-2008, 08:20 PM
ராஜா அண்ணா...
என்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தேன். நிகழ்வைச் சொன்னவிதம், ரயிலத் திருப்பிட்டுத் துரத்துறாங்கள் என்றதும், மொட்டை, ரெட்டை, முட்டை மண்டைகளும் என்று அனைத்துமே கண்ணீர் வரச் சிரிக்க வைக்கின்றன.
:icon_b:

ஷீ-நிசி
14-05-2008, 01:26 AM
ஹா! ஹா... ராஜா சாரின் எழுத்தில் எப்பொழுதும் ஒரு நகைச்சுவை மின்னும். பரவாயில்லை. இன்று இந்தத் திரி மேலெழும்பியதால் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

செம! செம! செம!

தங்கவேல்
15-05-2008, 10:28 AM
ஏன் இப்படி மானத்தை வாங்குறீங்க... எந்த ஊர் என்று கேட்டு தஞ்சாவூர் என்று சொன்னால் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள் அய்யா... மற்றவர்களைப் பற்றியும் யோசியும்... இருந்தாலும் சிரிப்பு வருது..

சூரியன்
18-05-2008, 02:46 PM
பின்குறிப்பு: எங்கேயாவது, யாராவது ரயிலைப் பார்த்து தானாக சிரித்துக் கொண்டிருந்தால் தயவு செய்து தவறாக எண்ணாதீர்கள்.!! நானாகவோ, என் நண்பனாகவோதான் இருப்போம். யார் கண்டது..? இந்த கதையைப் படித்தவராகக் கூட இருக்கலாம்..!

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அண்ணா.:lachen001:

விகடன்
20-05-2008, 08:53 AM
உங்களின் இந்த பரிதாப நிலையில் அமைந்த அனுபவத்தை படித்ததும் கெக்கட்டமிட்டு சிரித்தே விட்டேன். இந்த நிலமையில் அலுவலகத்தில் என்னிலமை எப்படியிருந்திருக்கும்???

உங்களை விட உங்கள் நண்பனின் வேண்டுதலும் தொடர்ந்து தலையிலேயே அடி வாங்கியதும் நினைக்க நினைக்க சிரிப்புத்தான். இனிமேல் தொடர் வண்டியை பார்த்தால் உங்கள் நினைப்பு கட்டாயம் வரும்.

அதிலும் "போன ரயிலை திருப்பிக்கிட்டு நம்பள புடிக்க வர்றாங்கடா.!" என்று சொன்னது இருக்கிறதே......
அதை படித்து பார்த்துவிட்டு சிரிக்க பக்கத்திலிருந்த உத்தியோகத்தர் என்ன என்று வினாவினார். நானும் அப்படியே விடயத்தை சொன்னேன். அவரும் சிரித்துக்கொண்டே தன்னிடத்திற்கு சென்றுவிட்டார்.

மனோஜ்
20-05-2008, 10:13 AM
உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு ஒரு பாடமாகவும் நகைசுவையாகவும் அமைவது பெருமை அன்னா நன்றி

அன்புரசிகன்
20-05-2008, 05:49 PM
போன புகையிரதம் றிட்டேன் வாறது என்பது றிபிள் குசும்பு தானே.... மாப்பு... இந்த கண்டுபிடிப்புக்கள் தங்களுக்கு மட்டும் வாறது எப்படி????

அன்புரசிகன்
20-05-2008, 05:50 PM
உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு ஒரு பாடமாகவும் நகைசுவையாகவும் அமைவது பெருமை அன்னா நன்றி

தயவு செய்து தாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தை நமக்கும் சொல்லுங்கள். நாமும் கத்துக்கிறம்... :D :D :D :lachen001: :lachen001: :lachen001:

ராஜா
17-06-2008, 10:51 AM
நன்றி நண்பர்களே..!

kavitha
17-06-2008, 11:09 AM
எங்களை திடீரென்று பார்த்த அதிர்ச்சியில் பாரசீக மொழியில் அலறி, பின்னர் கையில் இருந்த சொம்பால் நண்பனின் மொட்டை தலைக்கு ஏவு கணை அனுப்பியதும், நாங்கள் முயற்சியில் மனந்தளரா விக்கிரமாதித்தர்களாய் வீட்டுக்குள் புகுந்து ஊஞ்சல் முதல் மாமா வரை எல்லாவற்றையும் உருட்டி, வாசல் வழியாக வெளியேறி பஸ் பிடித்து மன்னை வந்து சேர்ந்த கதை எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இன்றளவும் "இன்ட்ரெஸ்ட் குறையாத எவர்க்ரீன் இதிகாசங்கள்"..!!!

உங்க லூட்டியை நினைத்து பார்க்கையில் சிரிப்பாக வருகிறது ராஜா அண்ணா. நீங்களும் திருச்சிக்காரர்தானா?

மதி
17-06-2008, 11:12 AM
உங்க லூட்டியை நினைத்து பார்க்கையில் சிரிப்பாக வருகிறது ராஜா அண்ணா. நீங்களும் திருச்சிக்காரர்தானா?

அட நீங்களும் திருச்சிக்காரர் தானா...????? :eek::eek::eek:

ராஜா
17-06-2008, 12:01 PM
உங்க லூட்டியை நினைத்து பார்க்கையில் சிரிப்பாக வருகிறது ராஜா அண்ணா. நீங்களும் திருச்சிக்காரர்தானா?

சகோதரி...!

என் சொந்த ஊர் மன்னார்குடி. பிள்ளைகள் படிப்புக்காக திருச்சியில் கடந்த 6 வருடங்களாக வசித்தேன்..

( வசித்தேன்...? ஆமாம்.. இப்போது மனதுக்கு பிடித்த மன்னைக்கு வந்துவிட்டோம்..)

ஆதவா
17-06-2008, 12:14 PM
சிரிப்பு தாங்கலை அண்ணா. வெகு நேர்த்தி... இப்படி பல பதிவுகள் கொடுக்கவும்.........

எழுதிய நடை அழகானது..

இதயம்
17-06-2008, 12:31 PM
நீங்கள் தலைதெறிக்க ஓடியதை படித்து, நாங்கள் வயிறு வலிக்க சிரிக்கும் நிலையை உண்டு பண்ணி விட்டீர்கள்.!! இரயில் திரும்பி வருவதாக "கண்டுபிடித்து" சொன்ன உங்கள் நண்பர் இன்று அரசியல்வாதியா..? அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருந்திருக்கிறது என்பதை அவர் சொன்ன கண்டுபிடிப்பிலிருந்தே உணர முடிகிறது..!!

சிவா.ஜி
17-06-2008, 12:40 PM
அதிரடி சிரிப்புன்னா அந்த ரிட்டர்ன் வர்ற ரயில்தான் ராஜா சார். நினைத்துப்பார்த்தாலே செம சிரிப்பு. மாமியாத்துக்குள்ல புகுந்து புறப்பட்டதைப் பாத்தா இப்ப தமிழ் படத்துல வர்ற சேஸிங் காட்சிகள்தான் நினைவுக்கு வருது. சூப்பர்

அக்னி
17-06-2008, 12:48 PM
அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருந்திருக்கிறது என்பதை அவர் சொன்ன கண்டுபிடிப்பிலிருந்தே உணர முடிகிறது..!!
ஓ... நீங்கள்தான்..,
”அந்த ஆட்சி நிலைக்காது... இந்த அரசியல் உடைந்துவிடும்... இவங்க கட்சி பிளந்துவிடும்... அவங்க கட்சி தெறித்துவிடும்...”
என்றெல்லாம் நிதர்சன ஆரூடம் சொன்ன ஜோசியக்காரரா..?

ஆமா... நீங்க நடக்கப் போறதைச் சொல்றதை விட,
நீங்க சொன்னதும், சொல்பவையும்தான் பலிக்கின்றன என்று சொல்கின்றார்களே...
உண்மைதானா...

(அப்பாடா... தசாவதாரம் போட்டுக் காட்டியதற்கு, இந்தியாவுக்குள்ள கால் வைக்க முடியாம பண்ணீட்டதில ரொம்பத் திருப்தியா இருக்குது...)

ஓவியன்
17-06-2008, 04:16 PM
அப்பாடா... தசாவதாரம் போட்டுக் காட்டியதற்கு, இந்தியாவுக்குள்ள கால் வைக்க முடியாம பண்ணீட்டதில ரொம்பத் திருப்தியா இருக்குது...[/COLOR]

ஆமாம் அக்னி, அவர் சொன்ன ஜோசியங்களாலே இந்தியாக்கு இதயம் வந்தால் அயிரை மீன் குழம்போட, இதயம் வறுவல் வைக்கவெண்டு சனம் காத்துக் கிடக்குதாம்..!! :D

ராஜா
18-12-2008, 06:06 AM
போன வருச கதையை இன்று தான் படித்தேன்...

ஆஹா... 10 வயதிலே தனியா பயணம்.... அருமையான சிரிக்க வைக்கும் நினைவுகள்...

அரசியல்வாதியுடன் இன்றும் தொடர்பு இருக்காண்ணா....

இப்போ அவர் " உச்சிக்கு" போயிட்டார்..!

பழசை மறந்தால்தானே வெற்றிகரமான அரசியல்வாதியாக முடியும்..?

ராஜா
25-07-2012, 10:09 AM
அனைவருக்கும் நன்றி..!

மதுரை மைந்தன்
25-07-2012, 10:20 AM
நல்ல நகைச்சுவையான பதிவு. இதை ஏன் நீங்கள் தொடர்வில்லை? பஸ் சாகசங்களை அறிய ஆவலாயிருக்கிறது.

ராஜா
25-07-2012, 02:29 PM
நன்றியண்ணா..!

பஸ் சாகசம், வேறொரு திரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது..

அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்..

அனுராகவன்
16-11-2012, 04:23 PM
அருமை ...http://www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif

ராஜா
18-11-2012, 05:17 AM
நன்றி மேடம்..!

மஞ்சுபாஷிணி
18-11-2012, 05:42 AM
10 வயது சிறுவனாக இருந்தபோது, நானும் என் நண்பனும் ( தற்போது அரசியலில் "பிரகாசித்துக்"கொண்டிருப்பவர்) திருச்சியில் இருந்து நீடாமங்கலத்துக்கு தொடர்வண்டியில் வந்து கொண்டிருந்தோம்.முகத்தில் காற்று பட்டாலே மூன்றாம் ஜாமத்துக்குப் போய்விடும் இயல்புள்ள எங்களுக்கு தொடர்வண்டியின் தாலாட்டு தூக்கத்தை தந்ததில் வியப்பென்ன இருக்க முடியும்?

என்றாலும் கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சக பயணி ஒருவரிடம் நினைவூட்டச் ( எழுப்ப?) சொல்லிவிட்டுதான் கண்ணயர்ந்தோம்.

விதி செய்த சதியாலோ, சக பயணியின் "கடலை" ஆர்வத்தாலோ நீடாமங்கலம் நினைவூட்டப்படவில்லை. வண்டி நின்று மூன்று பயணிகளை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு புறப்பட்டு விட்டது.என்றாலும் முன்னோர் செய்த புண்ணியத்தாலோ, "கடலை" முயற்சியில் ஏற்பட்ட காயத்தாலோ கடமை உணர்வுடனும் கண்ணொர ஈரத்தோடும் சக பயணி கதறி எழுப்பினார்..அதற்குள் புகைவண்டி நீடமங்கலத்தை விட்டு அரை கல் சென்று வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது.

அவரது அலறலிலும், தூக்க கலக்கத்திலும், நிலையம் தாண்டிவிட்டது என்ற கலவரத்திலும் உந்தப்பட்ட நாங்கள், பாமணியற்றுப் பாய்ச்சலாய் வெளியே குதித்தோம்.வண்டிகூடவே கொஞ்ச தூரம் உருண்டோம்.ஒருவாறு சுதாரித்து எழுந்து எங்கள் காயங்களைக் கணக்கெடுத்தோம்.

இதில் ஒரு விஷயத்தை தங்களுக்கு சொல்ல மறந்து விட்டேன்.நாங்கள் திருச்சி சென்றது அவனுக்கு வேண்டுதல் நிறைவேற்றி மொட்டை போட.
எனக்கு முழங்கையிலும் இடுப்பிலும் விழுப்புண்கள். அவனுக்கோ வீரத்தழும்பு இன்னும் தலையில் இருக்கிறது.அந்த நிலையிலும் மொட்டை மண்டை ( ஏற்கனவே ரெட்டை மண்டை) முட்டை மண்டையாக வீங்கி இருந்ததைப் பார்த்து எனக்கு சிரிப்பு பொங்கி பீறிட்டது.

இவ்வாறிருக்கையில், எதிர் தடத்தில் ஒரு வண்டி வருவதைப் பார்த்தோம். என் நண்பன் கிலியின் உச்சத்துக்கே போனவனாக, "

டேய் ராஜா, நாம குதிச்சதைப் பார்த்துட்டு போன ரயிலை திருப்பிக்கிட்டு நம்பள புடிக்க வர்றாங்கடா.!"

என்று அலறவே, சிந்திக்கும் சக்தியையும், பைகளையும் தூர வீசிவிட்டு கண் மண் தெரியாமல் ஒடினோம்..!

அதற்கப்புறம் அருகில் இருந்த ஒரு வீட்டின் கொல்லைப்புற சுவர் ஏறிக்குதித்ததும், அங்கு அரைகுறையாய் குளித்துக்கொண்டிருந்த ஒரு மாமி, எங்களை திடீரென்று பார்த்த அதிர்ச்சியில் பாரசீக மொழியில் அலறி, பின்னர் கையில் இருந்த சொம்பால் நண்பனின் மொட்டை தலைக்கு ஏவு கணை அனுப்பியதும், நாங்கள் முயற்சியில் மனந்தளரா விக்கிரமாதித்தர்களாய் வீட்டுக்குள் புகுந்து ஊஞ்சல் முதல் மாமா வரை எல்லாவற்றையும் உருட்டி, வாசல் வழியாக வெளியேறி பஸ் பிடித்து மன்னை வந்து சேர்ந்த கதை எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இன்றளவும் "இன்ட்ரெஸ்ட் குறையாத எவர்க்ரீன் இதிகாசங்கள்"..!!!

பின்குறிப்பு: எங்கேயாவது, யாராவது ரயிலைப் பார்த்து தானாக சிரித்துக் கொண்டிருந்தால் தயவு செய்து தவறாக எண்ணாதீர்கள்.!! நானாகவோ, என் நண்பனாகவோதான் இருப்போம். யார் கண்டது..? இந்த கதையைப் படித்தவராகக் கூட இருக்கலாம்..!

ஹாஹா..... இடைவிடாமல் சிரித்துக்கொண்டே இருக்கிறேன் ஐயா.... தாங்கமுடியல சிரிப்பு.... எவர்க்ரீன் இதிகாசங்கள்.... இனி ரயிலைப்பார்க்கும்போதெல்லாம் உங்கள் இருவரின் சாகசங்கள் சிரிக்கவைத்துவிடும் ஐயா...

அன்புநன்றிகள் பகிர்வுக்கு....

ராஜா
19-11-2012, 11:02 AM
நன்றிங் மேடம்..!

nandagopal.d
20-11-2012, 05:49 PM
மனம் விட்டு சிரிக்க வைத்த கதை

ராஜா
03-03-2013, 09:09 AM
நன்றி நந்து..!