PDA

View Full Version : ♔. நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை..!ராஜா
05-11-2006, 07:42 AM
1) ஆசிரியர் ; மாணவர்களே ! இன்றைய பாடம் " உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்"..! ஒரு மனிதன் ஒரு கழுதையை அடித்து இம்சிக்கிறான்..நான் அதைத் தடுக்கிறேன்.. இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் ?

மாணவர்கள் ; ( ஒட்டு மொத்தமாக) சகோதர பாசம்..!
__________________

ராஜா
05-11-2006, 07:42 AM
விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் டெ.கு. டேனியல் வாத்தியாருக்கு பிறந்த நாள். மாணவர்கள் எல்லோரும் பரிசுப் பொருள்களோடு...முதலில் மளிகைக் கடைக்காரர் மகன்..
டேனியல் ; ( லேசாக அழுத்திப்பார்த்து) இது ஜீனிப் பொட்டலம் தானே?
ம.கா.மகன் ;( ஆச்சர்யத்துடன்) அட ஆமா சார்..!

அடுத்து விவசாயி மகன்..
டேனியல் ; இது உளுந்து, பயறு தானே?
வி.மகன் ; ஐய்யோ..எப்படி சார் கண்டு பிடிச்சீங்க..?

அடுத்து பெட்டிக் கடைக்காரர் மகன்..
டேனியல் ; ( இலேசாக இருப்பதை உணர்ந்து) இது..படவா சிகரெட் பாக்கட் தானே ?
பெ.கா. மகன் ; ( வெட்கத்துடன்) ஆமா சார்.. நீங்க அநியாயத்துக்கு ப்ரில்லியண்ட் சார்..

அடுத்து நான்.. ( என் வில்லங்கத்தனம் தெரிந்தவர் ஆதலால் ஒரு முறைக்கு இரு முறை தடவிப் பார்த்த பின்)
டேனியல் ; டேய் ராஜா.. இது கேக் தானே..
நான் ; இல்லே சார்.. ( டேனியல், மாணவர்கள் இலேசான அதிர்ச்சி)
டேனியல் ; ( முகர்ந்து பார்த்து) அப்போ இது ஜாங்கிரி தானே..?
நான் ; இல்லே சார்..( அனைவர் முகத்திலும் பேரதிச்சி).
டேனியல் ; ( பரிசுப் பொதியை கிழித்து கையை உள்ளே விட்டு ந்னிரடிப் பார்த்துவிட்டு பிரகாசமான முகத்துடன்) அடேய் திருட்டுப் பயலே..குலோப் ஜாமூன் தானே..?
நான் ( அப்பாவியாக) இல்லே சார்.. ( இப்போது மானவர்கள் முகத்தில் ஆர்வமும் நக்கல் சிரிப்பும்.. டேனி. முகத்தில் எள்ளும் கொள்ளும்.) வேறே என்ன ******த்தாண்டா வச்சுத் தொலைச்சிருக்கே..?
நான் ; நாய்க் குட்டி சார்.. லீவு விடறத்துக்கு முந்தியே பேக்கிங் பண்ணிட்டேன்..!
( அன்றுடன் என் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது)

ராஜா
05-11-2006, 07:43 AM
பள்ளிக்கூட விழாவுக்கு வந்த சிறப்புப் பேச்சாளர்..

--------------------------------------------------------------------------------

அவரை அறிமுகப் படுத்தி உரையாற்றும் பொறுப்பு எனக்கு..

நான் சொன்னதும்_____(சொல்ல நினைத்ததும்..)

நமது பேச்சாளர் நீண்ட உரையாற்ற முடியாமல் "குரல்வளை" பிரச்னை உள்ளது..( ஆம்.. ரொம்ப பிளேடு போட்டா "குரல்வளை" யில் பிளேடு போடப்போறதா மிரட்டல் வந்திருக்கு..!).

நமது சொற்பொழிவாளருக்கு அறிமுக உரை தேவையே இல்லை..( இப்போ தேவைப்படுவதெல்லாம் முடிவுரையும் நன்றியுரையும் தான்)

நம் விருந்தினர் பேருரையாற்றி நம் பொறுமையை சோதிக்க மாட்டார்..( சிற்றுரையிலேயே அதை சாதிக்க வல்லவர்..)

அவரது வாய்வீச்சு உங்களுக்கு சிறந்த கேளிக்கை (entertainment) யாக இருக்கும்..( அங்க சேஷ்டைகள் அனிமல் ப்ளானட்டையும் முகபாவங்கள் கார்ட்டூன் நெட்வொர்க்கையும் நினைவு படுத்தும்).

நீங்கள் பொறுமையாக இருந்து அவர் கருத்துகளை செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறோம்..( உங்களுக்கு வேற வழியே இல்ல.ஏன்னா எல்லா கேட்டையும் இழுத்துப் பூட்டிட்டோம்

ராஜா
05-11-2006, 08:04 AM
தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..

மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..

மகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!

தாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!
__________________

ராஜா
05-11-2006, 08:08 AM
டைரக்டர் ; ( நடிகையிடம் காட்சியை விவரிக்கிறார்)..மேடம்..உங்கள வில்லன் கெடுக்க வர்றான்..நீங்க அவன்கிட்டே சிக்காம தப்பிச்சு ஒடறீங்க..

நடிகை ; சார்..ரெண்டு நாளா கால்லே சுளுக்கு..என்னாலே ஓட முடியாது..பேசாம வில்லன் ஆசைக்கு இணங்கிடுறேனே..!

டைர"டக்கர்" ; ??????????????????????

ராஜா
05-11-2006, 08:08 AM
காதலி.. செல் பேசியில் காதலனுடன் உரையாடுகிறாள்..

அன்பே.. ராத்திரி பூரா என் கனவுலே நீங்க வந்து கலக்கினீங்க..
உங்க நினைப்புதான் போங்க..அப்புறம் இன்னைக்கு நாம திட்டம் போட்ட மாதிரி சந்திக்க முடியாது..எங்கம்மா என்னை டாக்டர் கிட்டே அழைச்சுட்டு போறாங்க.. ஏனா..? பாதி ராத்திரியிலே பிசாசைக் கண்ட மாதிரி கத்துறேனாம்..வச்சுடவா.?!!!!!!!!!
__________________

ராஜா
05-11-2006, 08:10 AM
இந்திய-பாக் எல்லையில் சர்தார் குடியிருந்தார்.. ஒரு நாள் அவரது கோழி எல்லை தாண்டி ஒரு பாகிஸ்தானியின் கொல்லையில் முட்டை இட்டுவிட்டது.. முட்டையை எடுக்கப்போன சர்தாருக்கும் பாகிஸ்தானிக்கும் வாக்குவாதம்..முட்டை யாருக்கு சொந்தம் என்று..

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.. இருவரும் பலப்பரீட்சை நடத்தி வெற்றி பெறுபவர் அந்த முட்டையை எடுத்துக்கொள்வது என்று..
பாகிஸ்தானி சொன்னான்..முதலில் நீ என்னைத் தாக்கு..பின்னர் நான் உன்னைத் தாக்குகிறேன்..யாருக்கு அடி பலமோ அவரே தோற்றவர்...!
சர்தாரும் ஒப்புக்கொண்டு, பத்து அடி பின்னால் போய், பாய்ந்து வந்து பாகிஸ்தானியின் கால்களுக்கிடையில் உதைத்தார்..பறந்து மல்லாக்க விழுந்த பாகிஸ்தானி 10 நிமிடம் கழித்து மெல்ல எழுந்து பார்த்தான்..

இந்திய எல்லைக்குள் நின்றிருந்த சர்தார் சொன்னார்..அரே..பாகல்..
முட்டையை நீயே வச்சுக்கோ...!

ராஜா
05-11-2006, 08:10 AM
சர்தார் கிராமத்தில் குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு விழா.
தலைமை ஏற்ற மந்திரி இவ்வாறு உரையாற்றினார்..
" நம்ம இந்தியாவிலே எங்கேயோ ஒரு பொம்பள 10 வினாடிக்கு 1 பிள்ளை வீதம் பெத்துக்கிட்டு இருக்கா".
வெகுண்டெழுந்த சர்தார் கத்தினார்.."மந்திரி அய்யா, அவளை உடனே கண்டுபிடிச்சு புள்ள பெக்குறதை நிறுத்தச் சொல்லுங்க..!".

ராஜா
05-11-2006, 08:11 AM
சர்தார் அலுவலகத்திலிருந்து ஸ்கூட்டரைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது...

நண்பர் ; ஏன் சிங்கு தள்ளிட்டு வர்றே?

சர்தார் ; சாவியை வீட்டிலேயே வச்சுட்டு ஆபீஸ் போயிட்டேன்..

நண்பர் ; ( குழம்பியவராக..) அப்புறம் எப்படி ஆபீசுக்கு ஸ்கூட்டரை எடுத்துட்டுப் போனே?

சர்தார் ; இதே மாதிரி தள்ளிட்டு தான்..!

நண்பர் ; ????????????????????????

( உங்களுக்கு இந்த ஜோக் புரியலேன்னா நான் பொறுப்பில்லே.!)
__________________

ராஜா
05-11-2006, 08:12 AM
ஒரு கை பொம்மை வித்தைக்காரன் ( ventriculoist) பஞ்சாப் மாநில நகரமொன்றில் தன் நிகழ்ச்சியை நடத்தினான்.
நிறைய சர்தார்ஜி ஜோக் சொன்னதால் மக்கள் கோபமடைந்து மேடையை நோக்கி படையெடுத்தனர்..
சுதாரித்துக் கொண்ட வித்தைக் காரன் மன்றாடி மன்னிப்புக் கேட்டான்.
ஆனால் மக்கள், " நீங்க ஏன் முதலாளி மன்னிப்புக் கேட்கறீங்க? ஓவராப் பேசினது அந்த வாண்டுப் பயதான்..அவனை எங்க கிட்டே விட்டுட்டு நீங்க ஓரமா உக்காருங்க.. நாங்க அவனுக்கு பாடம் கற்பிக்கறோம்...!!!"
__________________

ராஜா
05-11-2006, 08:13 AM
ராமு ; டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே 1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!

சோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து எழுந்து வருவார்..தெரியுமா?
__________________

ராஜா
05-11-2006, 08:13 AM
மூணு குடிகாரப்பசங்க பேசிக்கிட்டு இருந்தானுவ. ரெண்டு பயக தாம் பொண்டாட்டியள எப்புடி எப்புடியோ ஆட்டி படப்போமுண்டு ஏகடியம் பண்ணி சிரிச்சானுவ. ஒத்தம் மட்டும் கமுக்கமா இருந்தாம்.
ரவுசுக்காரனுவ இவனயும் கேட்டானுவ..அவம் சொன்னாம்..போங்கடா
பொச கெட்ட பயலுவளா..எம்பொண்டாட்டி நேத்தைக்கு கூட எங்கிட்டெ மண்டி போட்டுக்கிட்டு என்ன சொன்னா தெரியுமாலே ன்னான்.
இவிங்கே அசந்து போயி, " என்னலே சொன்னா" ன்னு ஆர்வமா கேட்டாம்..
அவம் சொன்னானாம்.." ஏம்யா கட்டிலுக்கு கீழே போய் ஃளிஞ்சுக்கிட்டீரு.? ஆம்பளயா வெளியே வந்து சண்ட போடும்யா" ன்னா. நாம் விடல்லியே..விடியற வரைக்கும் அப்பிடியே அவள கத்த விட்ட்னாக்கும் ன்னானாம்.
__________________

ராஜா
05-11-2006, 08:14 AM
கல்யாணத்துல மனைவி கரம் ப்ற்றுவது "எப்போதும் உன்னைக் காப்பேன்" என்பதற்காக..

அதுக்கப்புறம் அவ கையை புடிச்சுக்கறது..அடி விழாம தன்னைக் காப்பாத்திக்கறதுக்காக..!
__________________

ராஜா
05-11-2006, 08:15 AM
நண்பன் 1; கனவுக்கன்னி, கை நிறைய பணம், பெரிய வீடு, பென்ஸ் காரு எல்லாம் நான் நினைச்சது மாதிரியே என் வாழ்க்கையிலும் நடந்துச்சு..அப்புறம் தான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது..

நண்பன் 2 ; ஐய்யோ.. என்னாச்சு..?

நண்பன் 1 ; எல்லாம் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சு போச்சு...!!!!
__________________

ராஜா
05-11-2006, 08:16 AM
--------------------------------------------------------------------------------

வெற்றிகரமான கணவன் யார்?
தன் மனைவி செலவழிப்பதைவிட அதிகம் சம்பாதிப்பவன்..!
வெற்றிகரமான மனைவி ??
அப்படி ஒரு மனிதனைத் தேடிப்பிடித்து திருமணம் செய்து கொள்பவள்..!!

2) கணவன்.. தனக்கு தேவைப்படும் 1 ரூபாய் பொருளை 2 ரூபாய் கொடுத்து வாங்கும் முட்டாள்.
மனைவி.... தனக்கு தேவைப்படாத 2 ரூபாய் பொருளை 1 ரூபாய் கொடுத்து வாங்கும் அதி புத்திசாலி.!

3) நல்ல மனைவி.. கணவனை அதிகம் புரிந்து கொண்டு கொஞ்சமாக நேசிப்பவள்..!
நல்ல கணவன்.... மனைவியை அதிகம் நெசித்தாலும் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவன்..!!
__________________

leomohan
05-11-2006, 12:47 PM
ஹா ஹா ஹா ஹா

ஓவியா
05-11-2006, 04:02 PM
கலக்கல்

:D :D

pradeepkt
06-11-2006, 06:40 AM
சபாஷ்... திருச்சிக்காரர் கலக்கறாருங்கோவ்...
எல்லாரும் நகைச்சு வைங்க... இல்லைன்னா அடுத்துக் கடிச்சு வச்சுருவாரு :)

karikaalan
06-11-2006, 07:12 AM
சிரிச்சே ஆக வேண்டும்!! தொடருங்கள்...


===கரிகாலன்

gragavan
06-11-2006, 07:54 AM
ஆகா நகைச்சுவை பிரமாதங்கோவ். சூப்பரு.

மதி
06-11-2006, 08:33 AM
நல்ல நகைச்சுவை..
பிரமாதம்...ராஜா..

மன்மதன்
06-11-2006, 09:46 AM
சூப்பர் காமெடி...

ராஜா
06-11-2006, 06:57 PM
சர்தார் வேலை பார்க்கும் போது இயந்திரத்தில் இடது கை மட்டியதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்..

அவரது நண்பர் ஆறுதல் கூறும்போது, " கவலைப் படாதே.. இடது கைதானே போச்சு.. நீதான் வலது கைப் பழக்கம் உள்ளவனாச்சே..சமாளிச்சுக்கலாம்.. உண்மையில் வலது கை மாட்டியிருந்தா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்ல்லே " என்றார்..

அதற்கு சர்தார், " ஆக்சுவலா வலது கை தான் மாட்ட வேண்டியது.. நான் தான் கடைசி நேரத்துலே இதையெல்லாம் சிந்திச்சுப் பார்த்து டக்குன்னு கையை மாத்தி விட்டுட்டேன்" என்றார் பெருமையுடன்..!!!

ராஜா
06-11-2006, 07:08 PM
சர்தாரிடம் பணம் இல்லை.. ஒரு பள்ளீச் சிறுவனைக் கடத்தினார்.. ஒரு கடிதம் எழுதினார்.. " உன் மகனை நான் கடத்தி விட்டேன்..இ லட்சம் கொடுத்தால் உன் மகன் பிழைப்பான். ஒழுங்காக பணத்தை ஒரு பையில் போட்டு என் வீட்டுக் கொல்லையில் வீசிவிடு.. என் வீட்டை உன் மகன் அடையாளம் காட்டுவான்" என்று எழுதி அதை அந்தச் சிறுவனிடமே கொடுத்து அனுப்பினார்..

மறுநாள் அவர் வீட்டுக் கொல்லையில் ஒரு பை கிடந்தது..அதில் பணமும், ஒரு கடித்மும் இருந்தது.

கடிதத்தில், " ஒரு சர்தராய் இருக்கும் உனக்கு, உன் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் மகனைக் கடத்தி பணம் பிடுங்க எப்படி மனம் வந்தது?" என்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது..!

ராஜா
07-11-2006, 04:41 PM
தாஜ் மகாலைப் பார்வையிடும் தம்பதி...

மனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்தீங்களா ? நீங்களும் இருக்கீங்களே...

கணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..
உன் சைடுலே தான் டிலே ஆகுது..!
__________________

ராஜா
07-11-2006, 04:43 PM
புத்த்கக் கடையில்...

--------------------------------------------------------------------------------

மனைவியை அடக்குவது எப்படி -ங்கற புக் இருக்கா..?

மர்ம நாவல் -லாம் மாடியிலே இடது பக்கம் இருக்கு சார்..!
__________________

ராஜா
07-11-2006, 04:45 PM
கல்யாணத்துக்கு முந்தி...சூப்பர் மேன்.

கல்யாண்த்தப்போ ... ஜெண்டில் மேன்.

10 வருடம் கழித்து....வாட்ச் மேன்.

20 வருடம் அப்புறம்.. டாபர் மேன்.
__________________

ராஜா
07-11-2006, 04:46 PM
--------------------------------------------------------------------------------

தோழி 1 ஏய் கலா.. எம்புருசன் சின்ன வீடு வச்சிருக்காரோன்னு சந்தேகமா இருக்குடி..!

தோழி 2 நான் இதை நம்ப மாட்டேன்.. நீ என்னை கடுப்பேத்தறதுக்காக சொல்லறே..!__________________

ராஜா
07-11-2006, 04:47 PM
நண்பன் 1; எங்களோட இருபதாவது திருமண நாள் வருது..எங்கே போய் கொண்டாடறதுன்னு யோசிச்சுட்டிருக்கேன்..

நண்பன் 2; பத்தாவது திருமண நாளுக்கு எங்கே போனீங்க..?

நண்பன் 1; அவள ஹவாய் தீவுக்கு அழைச்சுட்டுப் போனேன்..

நண்பன் 2; இப்போ என்ன செய்யப் போறே..?

நண்பன் 1; அங்கேருந்து அவள அழைச்சுட்டு வரலாமான்னு பாக்கறேன்..!
__________________

ராஜா
07-11-2006, 04:48 PM
ஒரு கணவன் மனைவி வேண்டுதல் கிணற்றுக்கு சென்றார்கள்.

முதலில் கணவன் ஏதோ வேண்டிக் கொண்டு காசை விட்டெறிந்தான்.

அடுத்து மனைவி வெண்டிக்கொண்டு காசைப் போடும் போது உள்ளே விழுந்து இறந்து விட்டாள்.

கணவன், அடேயப்பா..ரொம்ப சக்தியுள்ள கிணறுதான் என்று நினைத்துக்கொண்டான்.
__________________

ராஜா
07-11-2006, 04:51 PM
அமெரிக்காவில், சியாட்டில் நகரில் பனிப்புயலினூடே ஒரு ஹெலிகாப்டர் சிக்கித் தடுமாறியது. அதன் தகவல் தொடர்பு சாதனங்களும் பழுதுபட்டு விட்டன.
என்ன செய்வதென்றறியாமல் பைலட்டும், துணை பைலட்டும் திணறும் போது, ஒரு உயரமான கட்டிடத்தைக் கண்டனர். அதில் இருந்த சில அதிகாரிகளும் ஹெலி அலைக்கழிக்கப் படுவதை உணர்ந்து அதற்கு உதவ முன்வந்தனர்..

மிகுந்த சிரமத்துக்கிடையே, ஹெலியின் இரைச்சலையும் மீறி பைலட் அவர்களிடம் கேட்டார்..
" நாங்கள் எங்கே இப்போது இருக்கிறோம்..??"

அந்த கட்டிடத்தில் இருந்த அதிகாரிகளும் மிகுந்த சிரமத்தின் பேரில் பதிலளித்தனர்....
" உங்கள் ஹெலிகாப்டருக்குள் இருக்கிறீர்கள்..!!!"

துணை பைலட் கோபத்தின் உச்சிக்கே போக, பைலட் அவரை சமாதானப் படுத்திவிட்டு சொன்னார்..." இனி பயமில்லை..இது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம்.. இதற்கு பக்கத்தில் ஒரு இறங்குதளம் உள்ளது..நாம் பிழைத்தோம்."

சற்று நேரத்தில் ஹெலி பத்திரமாக தரை இறங்கியது..

துணை பைலட் கேட்டார்," எப்படி அது மைக்ரோசாப்ட் என்று கண்டுபிடிதீர்கள் ?

பைலட் சொன்னார்," பதில் சொன்னாங்க கேட்டீல்லே..கரெக்டா சொல்வானுங்க..ஆனா யாருக்கும் பிரயோசனம் இருக்காது..!!!".

ராஜா
07-11-2006, 04:53 PM
ஒரு சர்தார்ஜியும் அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் பாகிஸ்தானில் இர்ந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றார்கள். பாக். சிப்பாய் தடுத்து நிறுத்தி பைக்கை சோதனையிட்டான். இரு பெட்டிகளும் பூட்டப்பட்டிருந்தன. என்ன என்று கேட்டதற்கு, சர்தார் " மணல்" என்றார்..

கீழே கொட்டி பார்த்தபோது மணல்தான் இருந்தது. இருந்தாலும் அம்மணலை சோதனைச் சாலைக்கு அனுப்பி சோதித்துப் பார்த்தார்கள். முடிவு "மணல்". சர்தார் அனுப்பப்பட்டார்.

மறுநாளும் சர்தார் பைக்கில் மனைவியோடும் மணலோடும் வந்தார். மீண்டும் அதே சோதனை முறை. பலன்..பூஜ்யம்.

இது போல் 3 ஆண்டுகள் நடந்தது. என்றாலும் பாக். சிப்பாயால் எவ்விதக் குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

அந்த சிப்பாயும் ஓய்வு பெற்று விட்டான். ஒரு நாள் சர்தாரை வழியில் பார்துக் கேட்டான்," நீ என்னவோ கடத்தறேன்னு தெரியுது.. ஆனா என்னாலே கண்டு பிடிக்கவே முடியல்லே.. இப்போ சொல்லு..என்னத்தை கடத்தினே.?".

சர்தார் சொன்னார்.."பைக்"..!

"பொண்ணு"ன்னு நெனச்சவங்க எல்லாம் அசடு வழியறத தொடச்சிக்கோங்க...!!!!!!!
__________________

ராஜா
07-11-2006, 04:54 PM
சர்தார் தூங்கிக்கொண்டு இருக்கும் போது ஒரு கொசு பிடிவாதமாக காதில் பாட்டு பாடி இம்சித்தது..

ஒரு நாள் எப்படியோ அதே கொசுவை சர்தார் பிடித்து விட்டார்.. கொசு தன் கதை முடிந்ததாக நினைக்க, சர்தாரோ அதற்கு விருந்து வைத்து சிறப்பித்தார்..

பின்னர் அதற்கு ஒரு மென்மையான படுக்கையை எற்பாடு செய்தார்..உபசரிப்பில் மயங்கிய கொசு, தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, அதன் காதருகில் சென்ற சர்தார் பாடினார்..

"" ங் கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ""

அதிர்ச்சி அடைந்த கொசு அதே இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தது..!
__________________

ராஜா
07-11-2006, 04:57 PM
கொலைக் குற்ற்வாளி சார்பில் ஆஜரான வக்கீல் எவ்வளவோ திறமையுடன் வாதாடியும், சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு தண்டனை
வழ்ங்கப்படும் சூழ்நிலை. அவருக்கு ஆதரவாக இருந்தது ஒரே ஒரு விடயம் தான். கொல்லப்பட்டவர் பிணம் கிடைக்கவில்லை என்பதே அது.
இதை சாதகமாகக் கொண்டு குற்றவாளியைத் தப்புவிக்க ஒரு தந்திரம் செய்த வக்கீல். " யுவர் ஆனர், உங்களுக்கு ஒரு அச்சர்யமான செய்தி. கொல்லப்பட்டதாக சொல்லப்படும் நபர் இன்னும் 5 நிமிடங்களில் இங்கே வரப்போகிறார்." என்று அறிவித்தார்.

ஒரே பரபரப்பு..எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
5 நிமிடங்கள் கழிந்தன. ஒருவரும் வரவில்லை.

குற்றவாளி வக்கீல் தொண்டையை செருமிக்கொண்டு, "யுவர் ஆனர்..என்னதான் போலீசார் ஆதாரங்களை அள்ளி வீசினாலும், எல்லோருக்கும் ஒருவித சந்தேகம் இருந்ததால் தான் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தோம்.அந்த சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் போகவேண்டும்..அதனால்தான் இவ்வாறு பொய் சொல்ல நேர்ந்தது. தயவு செய்து அவரை விடுதலை செய்யுங்கள்" என்று முழங்கிவிட்டு அமர்ந்தார். அரசு வக்கீல் ஆடிப் போய்விட்டார்.

நீதிபதி தீர்ப்பு வாசித்தார். குற்றவாளிக்கு 7 வருடம் சிறை.
இப்போது குற்றவாளியின் வக்கீல் ஆடிப்போய்க் கேட்டார்.."யுவர் ஆனர், நீங்களும் வாசலைப் பார்த்துக்கொண்டிருந்த்ததை நான் பார்த்தேன். ஆனால் எப்படி ..." என்று இழுத்தார்.

அதற்கு நீதியரசர், " உண்மைதான்..எல்லோரும் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த போது குற்றவாளி மட்டும் உம் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போ தான் அவன் குற்றவாளின்னு முடிவு பண்ணினேன். அதுக்கு முந்தி வரைக்கும் அவனை விடுதலை பண்ணிடலாம்ன்னு நெனச்சிருந்தேன்.உங்களுக்கு நன்றி" ன்னு ஒரு அணுகுண்டை போட்டுவிட்டு சேம்பருக்குப் போய்விட்டார்..!!!!!!!

ராஜா
07-11-2006, 04:58 PM
அமெரிக்கர்களுக்கு வக்கீல்களைப் பிடிக்காது.. ஒரு ட்ரக் ட்ரைவர் வழியில் எங்கு வழியில் எங்கு வக்கில்களைப் பார்த்தாலும் தன் லாரியால் மோதி கொன்றுவிட்டு தான் மறு வேலை பார்ப்பான்.
ஒரு நாள் ஒரு பாதிரியாரை தன் வண்டியில் ஏற்றிச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு வக்கீலைப் பார்த்து விட்டான்.
அவரை கொல்லுவதற்காக அவர் பக்கம் வண்டியைத் திருப்பி விரைந்தான். கடைசி வினாடியில் பாதிரியார் இருப்பது நினைவுக்கு வர, வக்கீலைக் கொல்லும் எண்ணத்தைக் கை விட்டான்.

தன் இடம் வந்ததும் இறங்கிக்கொண்ட பாதிரியார் கேட்டார்..

" வக்கீலைக் காலி பண்ணப் பார்த்தியே...?"

"மன்னியுங்கள் பாதர்.. இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன்"

" அட போப்பா.. நீ மிஸ் பண்ணினதும் லாரியோட பக்கக் கதவாலே அந்தாளை இடிச்சுக் கொல்ல நான் எவ்வளவு சிரமப் பட்டேன் தெரியுமா

ஓவியா
07-11-2006, 06:45 PM
ராஜா அண்ணா,
பெரிய கடி மன்னன் நீங்கதான்

அதுவும் அந்த மைக்ரோசாப்ட் கடி......தங்கலடாசாமி..........சிரிப்ப அடக்கவே முடியவில்லை....:D :D

பல்கலைகலகத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த அனைத்து மாணவ மணிகளிடமும் ...சொல்லி-சொல்லி சிரித்தேன்.......:D :D

pradeepkt
08-11-2006, 12:50 PM
எல்லாருகிட்டயும் சொல்லிச் சொல்லிச் சிரிச்சாச்சா...
சந்தோஷம்... :(

பென்ஸ்
08-11-2006, 12:53 PM
ஆகா.. ஆகா...
நானும் சொல்லுவேன்...
நானும் சொல்லுவேன்....

பிரதிப்.. நீங்க சொல்லுவிங்களா????
சொல்லுங்க உடனையே பெங்களூர் வர வாய்ப்பு கிடைக்கும்...

ஓவியா
08-11-2006, 06:25 PM
எல்லாருகிட்டயும் சொல்லிச் சொல்லிச் சிரிச்சாச்சா...
சந்தோஷம்... :(


மக்களே சொன்னா நம்பவா போறீங்க

மைக்ரோசாப்ட்டுனு மூச்சுவுட்டாலே.......உடனே ஆள் அனுப்பிடராங்க......

அந்த கடியை உண்மையாக்க உடனே ஆள் அனுபிட்டாங்க.......பாருங்கா....


பின் குறிப்பு
வந்தனம், மைக்ரோசாப்ட்டு புலி....

மதி
09-11-2006, 02:44 AM
ஆகா.. ஆகா...
நானும் சொல்லுவேன்...
நானும் சொல்லுவேன்....

பிரதிப்.. நீங்க சொல்லுவிங்களா????
சொல்லுங்க உடனையே பெங்களூர் வர வாய்ப்பு கிடைக்கும்...
வேலைக்கு உலை வைக்கறதுக்குன்னே நிறைய பேர் இருக்காங்க போலருக்கே..!

pradeepkt
09-11-2006, 04:15 AM
ஆனாலும் உண்மைகளை இப்படிப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஓவியா
09-11-2006, 06:10 PM
ஆனாலும் உண்மைகளை இப்படிப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


சரி,
மேல சொல்லி கிசு கிசு பகுதிக்கு மாத்திடலாமா..!!!!!

ராஜா
12-11-2006, 06:03 PM
சர்தார் அமெரிக்காவில் உள்ள "நாசா" வில் வேலைக்கு சேர்ந்தார்..

ஒரு மாதம் கழித்து நாசா வின் பெயர் மாற்றப்பட்டு விட்டது..

"சர்வ நாசா"..!!!

ராஜா
12-11-2006, 06:04 PM
அண்ணா சாலையில் சர்தார் குதிரையில் வந்தார்..
ட்ராபிக் எச்சரிக்கை விளக்கை மதிக்காமல் மேற்கொண்டு செல்லவே காவலர் விசில் ஊதினார்..

சர்தார் குதிரையின் வாலை கையால் தூக்கி, " நம்பர் ப்ளேட் பாத்துக்கோ" என்றார்..!!
__________________

ராஜா
12-11-2006, 06:05 PM
சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..

சர்தார் சொன்னார்..நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!

நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!

அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு மாமியாராயிட்டா..!

கொஞ்ச காலம் போயி என் மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!

எஅந்தப் பொடியன் என்னோட தம்பி முறை.. ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?
ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..! ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான்..!

அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...

இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.? இன்னொரு குழப்பம் வேறே.. என் அப்பா என் மகனுக்கு மச்சினன் ஆயிட்டார்..!

ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே..?

அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினி
ஆயிட்டாங்க..!

இப்போ என்னாச்சுன்னா, எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?

அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு என்ன முறை..?

அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?

ராஜா
12-11-2006, 06:06 PM
மரணப் படுக்கையில் இருக்கும் மனைவியும் கணவனும்...

மனைவி ; ஏங்க..நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்..நீங்க இன்னொரு பொண்ணை கட்டிட்டு சந்தோஷமா வாழணும்..

கணவன் ; ஏம்மா இப்படியெல்லாம் பேசறே..? மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..

ம ; இல்லீங்க..எனக்கு தெரிஞ்சு போச்சு.. நாம பார்த்து பார்த்துக் கட்டின இதே வீட்டில் தான் ரெண்டு பேரும் வாழணும்..

க ; பேசாம கண்ண மூடிட்டு தூங்கும்மா..

ம ; நம்ம பைக்குலே என்ன மாதிரியே அவளும் பின் சீட்டுலே உக்காந்து உங்க இடுப்பக் கட்டிக்கிட்டு ஜாலியா ட்ராவல் பண்ணனும்..

க ; நீயே போனப்புறம் நான் மட்டும் இருக்கவா போறேன்..?

ம ; நான் ஒரு ரோஸ் சுடிதார் போட்டுக்கிட்டா ரொம்ப அழகா இருப்பேன்னு சொல்வீங்களே..அத் அவளுக்கும் போட்டு அழகு பாக்கணும்..

க ; (அவசரமாக ) ம்ஹூம்..மத்தவங்க ட்ரெஸ்ஸெல்லாம் அவ போட மாட்டா.. அதுவும் அவளுக்கு டைட் பிட்டிங் தான் பிடிக்கும்..!!

மனைவி ; ?????????????????????????????????

ராஜா
12-11-2006, 06:08 PM
ஒரு இந்தியன், ஒரு சீனன், ஒரு அமெரிக்கன் மூவரும் தங்கள் நாட்டு மருத்துவ முறைதான் உயர்ந்தது என்று வாதிட்டார்கள்.

அமெரிக்கன் சொன்னான்.." ஒரு ஆள் கால்லே அடிபட்டு பெரிய காயத்தோட தூக்கிட்டு வந்தாங்க.. ஒரே ஒரு ஊசி தான்..உடனே எழுந்து ஓடினான் ..தெரியுமா..?

சீனன் கூறினான்.. ஒரு ஆளுக்கு கை, கால் ரெண்டு இடத்திலேயும் எலும்பு முறிஞ்சுடுச்சு..அக்கு-பங்சர் முறையிலே வைத்தியம் பார்த்ததும் அவன் டான்ஸ் ஆடினான்..இதுக்கு என்ன சொல்றீங்க..?

இந்தியன் சொன்னான்.. இது என்ன பிரமாதம்..? எங்க மாமா மாடு ஓட்டிக்கிட்டு போனப்போ ரயில் மோதிடுச்சு,, மாடும் எங்க மாமாவும் ரெண்டா போயிட்டாங்க.. உடனே மாமாவோட மேல் பகுதியையும், மாட்டோட பின் பகுதியையும் சேர்த்து தைச்சிட்டாங்க..இப்போ மாமா நல்லா நடக்கறார்..அது மட்டுமில்லே..தினம் ரெண்டு லிட்டர் பாலும் தர்றார் !!!!

ராஜா
12-11-2006, 06:09 PM
ஆப்பரேஷன் தியேட்டரில்...

நோயாளி ; சுவத்துலே ஒரு மாலை மாட்டியிருக்குதே...யாருக்கு..?

டாக்டர் ; இதுதான் என்னோட முதல் அறுவை சிகிச்சை..இது வெற்றி அடைஞ்சா மாலை எனக்கு.. இல்லேன்ன்னா.........

ராஜா
12-11-2006, 06:11 PM
கம்ப்யூட்டருக்கும் ஏ.சி. க்கும் உள்ள ஒத்துமை என்ன..?

ரெண்டும் "விண்டோஸ்" ஐ ஒப்பன் பண்ணா சொதப்பும்..!!
__________________

ராஜா
12-11-2006, 06:12 PM
வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...

அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?

அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..

நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..

இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!

பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. விலையைச் சொல்லு..!

சொன்ன கேளுங்க்.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!

வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..

புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!

எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..

கிளி.." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..

கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...

புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு...
அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..?
__________________

ராஜா
12-11-2006, 06:15 PM
கொஞ்சம் அசைவம் மாதிரி தெரியும்..ஆனா சைவம் தான்..

--------------------------------------------------------------------------------

சின்னா ரொம்ப க்யூட். ஆனா அவனுக்கு ஒரு குறை.. அவனோட மக்கு அக்கா மூனாவது படிக்கறா.. புத்திச்சாலியான தன்னை மட்டும் ஒண்ணாங்கிளாஸ்லே சேத்து விட்டுட்டங்களேன்னு..
ஒரு தடவை இதை டீச்சர் கிட்டே சொல்லி வருத்தப்பட்டான். டீச்சர் இதை ஹெட் மாஸ்டர் ட்ட சொன்னாங்க. அவரும் சின்னாவை தன் ரூமுக்கு அழைச்சுட்டு வரச்சொன்னார்.

ஹெட் ; டீச்சர்.. இவனை என் முன்னால 4,5 கேள்வி கேளுங்க பார்ப்போம்..

டீச்சர் ; 2 ம் 2 ம் எவ்ளோ ?

சின்னா ; 4.

டீச்சர் ; 47 ம் 54 ம் எவ்ளோ ?

சின்னா ; 101.

ஹெட் ; என்ன டீச்சர் இது ? கொஞ்சம் கடினமா கேளுங்க...

டிச்சர் ; என் சட்டைக்குள்ள இருக்கு..உன் சட்டைக்குள்ள இல்லே.. அது என்ன ?

சின்னா ; தாலி..!

டீச்சர் ; உன் பேண்ட்டுல இருக்கு.. என் (சுடி) பேண்ட்டுல இல்லே.. அது என்ன ?

சின்னா ; பாக்கெட் !

டீச்சர் ; உங்கம்மாவும் அப்பாவும் ஏன் தனி ரூம்ல படுத்துக்கறாங்க ?

சின்னா ; எனக்கு ஏ.சி. ஒத்துக்காது..!

டீச்சர் ஏதோ மேலும் கேட்க முற்பட..

ஹெட் ; போதும் டீச்சர்.. இவனை 3 என்ன.. 5 ம் கிளாஸ்லேயே தூக்கிப் போடுங்க.. கடைசி 3 கேள்விக்கு எனக்கே தப்பு தப்பா தான் பதில் தெர்ஞ்சது.. இவன் ப்ரில்லியண்ட் தான்..!

ராஜா
12-11-2006, 06:17 PM
ஒரு பள்ளிக்கூடத்துக்கு சோதனை அதிகாரி வந்திருந்தார்..
அவர் ஒரு முசுடு. அதிலும் கழுதை என்ற வார்த்தை தமிழில் அவருக்கு பிடிக்காத வார்த்தை..!
நம்ம வாத்தியார் டெஸ்க் குட்டி டேனியல் ராஜ் வாத்தியார் தான் அந்தப் பள்ளியிலேயே சூப்பர்..அவர் வகுப்பை காட்டி, சோ'வை ( சோதனை அதிகாரியை) அசத்த நினைத்த தலை ( தலைமை ஆசிரியர்) மூணாம்ப்புக்கு அழைச்சுட்டு வந்தார்..
வரும் போதே, டெ.கு. டேனி. யின் ஆங்கிலப் புலமையையும் பாராட்டி சோ'விடம் சொல்லிக்கொண்டு வந்தது தலை..

வகுப்பில்.. டெ.கு.டேனி. ; கழுதை வரும் முன்னே..!
மாணவர்கள் ; {ஒரே குரலில் சத்தமாக.) கழுதை வரும் முன்னே..!!
( இந்த நேரத்தில் சோ. முன்னே வருகிறார்..)

டேனி ; சொல்லுங்க..கழுதை வரும் முன்னே..இன்னொரு கழுதை வரும் பின்னே..!!
மாணவர்கள் ; ( சத்தமாக.) கழுதை வரும் முன்னே..இன்னொரு கழுதை வரும் பின்னே..!!

( இப்போது சோ.வும், தலை.யும் முன்னும் பின்னுமாக வகுப்புக்குள் நுழைகின்றனர்..)
டேனி ; சொல்லுங்க பிள்ளைகளா..கழுதை வரும் முன்னே..இன்னொரு கழுதை வரும் பின்னே..அதற்குப் பின் நானும் வருவேன்..!!
மாணவர்கள் ; ************நானும் வருவேன்..!!!

(சோ. டென்ஷன்.. தலை. திரு திரு வென விழிக்க..)

டேனி ; நானும் வர..பின்னே நாடும் வரும்..!! சேர்த்து சொல்லுங்க..
மாணவர்கள் ; கழுதை வரும் முன்னே..இன்னொரு கழுதை வரும் பின்னே..அதற்குப் பின் நானும் வர..எனக்குப் பின் நாடும் வரும்..!!!

சோ. ; " என்னய்யா புண்ணாக்குப் பாடம் இது..? என்னவோ இங்கிலீஷ்'லே ஊடு கட்டுவான்னு சொன்னே..அந்தாளு என்னமோ கழுதை..குதிரைங்கறான்..இந்த குட்டி சாத்தாங்களும் அதையே சொல்லி கூவுதுங்க..!! என்ன வெளையாடறீங்களா..?
போயி வச்சுக்கறேன் கச்சேரி..!!
( கடுப்பாக கிளம்பிப்போக, தலை பரிதாபமாக..)

" என்ன டேனி இது..?
டேனி ; இங்கிலிஷ் வகுப்பு சார்..! " ASSASSINATION ங்கற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கத்துக் கொடுத்தேன்...!
(ASS--ASS--I--NATION )
__________________

guna
13-11-2006, 07:52 AM
சிலவற்றை ஆங்கிலத்தில் ஏற்கனவே படித்திருந்தாலும் கூட, மீண்டும் தமிழில் படிக்க நன்றாகவே இருக்கு ராஜா..

அலுவலக அயர்சியின் நடுவே மன்றம் வந்து போவதே புத்துணர்ச்சியை தரும், அதிலும் இப்படி பட்ட பதிப்புகள் நிறைவான இன்பம்..

நன்றிகள் ராஜா, தொடருங்கள்.

குணா

pradeepkt
13-11-2006, 08:52 AM
அப்படியே சிலவற்றைப் பண்பட்டவர் பகுதிக்கு மாத்துங்க சாமியோவ்..

deepak1
13-11-2006, 11:26 AM
தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..

மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..

மகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!

தாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!
__________________

மிகவும் அருமையான ஜோக்.. மிகவும் ரசித்தேன்

ஓவியா
13-11-2006, 05:08 PM
கடிகள் எல்லாமே செம்ம தூள்....நல்லா ரசித்து சிரித்தேன்

நன்றிங்கோ

balakamatchi
14-11-2006, 06:48 AM
சபாஷ் ரொம்ப நன்னா இருக்கு... தொடரவும்

ராஜா
18-11-2006, 08:43 AM
இது உண்மை நிகழ்ச்சி..

சில வருடங்களுக்கு முன்னர் ஜப்பானிய பிரதமர் அமெரிக்க அதிபரை சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. அதை முன்னிட்டு ஜப்பானிய பிரதமருக்கு சில ஆங்கில வார்த்தைகளை சொல்லிக் கொடுக்க மன்றாடினார்கள் அதிகாரிகள்.
ஆனால் சுட்டுப் போட்டாலும் அவருக்கு ஆங்கிலம் வரவே இல்லை. கடைசியாக 3 வாக்கியங்களாவது நினைவில் வைத்துக் கொள்ளச் சொல்லிக் கூத்தாடினார்கள். பலன் பூஜ்யம்.

இருந்தாலும் கடைசி நேர முயற்சியாக விமானத்தில் போகும் போது இவ்வாறு சொல்லிக் கொடுத்தனர்..

முதலில் கிளிண்டன் உங்களைச் சந்தித்து கை குலுக்குவார்..நீங்கள் " ஹவ் ஆர் யூ?"(எப்படி இருக்கிறீர்கள்) என்று வினவுங்கள்..அவர் "ஃபைன்..ஹவ் டு யூ டூ?"(நன்றாக உள்ளேன்..நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?) என்று கேட்பார்.. அதற்கு நீங்கள் "மீ டூ..(நானும் தான்..) என்று சொன்னால் போதும் என்று கரைத்து ஊற்றினார்கள்..

கிளிண்டனைச் சந்திக்கும் வேளை வந்தது..
ஜப்பானியப் பிரதமர் மோன் கை குலுக்கியது வரை சரியாகச் செய்தார்..ஆனால் ஹவ் ஆர் யூ என்பதற்கு பதிலாக ஹூ ஆர் யூ ( யார் நீங்கள்) ? என்று கேட்டு விட்டார்.. ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.. என்றாலும் கிளிண்டன் தமக்கே உரிய நகைச்சுவை உணர்வைப் பயன்படுத்தி, " நான் ஹிலாரியின் கணவன்..ஹா..ஹா" என்றார்..
பின்னர் மோன் எந்தத் தப்பும் செய்யாமல் சொல்லிக் கொடுத்தபடியே கடைசி வாக்கியத்தை ஸ்பஷ்டமாக உச்சரித்தார்..!!!

ராஜா
18-11-2006, 08:44 AM
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது அவரைப் பற்றியும் நாஜிகளைப் பற்றியும் துணிந்து ஜோக் அடித்தவர்கள் உண்டு. அவர்கள் ரகசியமாகத்தான் சிரித்தார்கள் என்றாலும் அதுவே மிக அதிகத் துணிச்சல்தான். ஜோக் சொன்னது வெளியே தெரிந்தால் மரண தண்டனைதான்.
நாஜிகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட (லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட) யூதர்களின் நகைச்சுவைக்கு ஒரு எ.கா.:
இரண்டு யூதர்கள் விசாரணையற்ற மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக தூக்கிலிடச் சொல்லி திடீர் உத்தரவு வருகிறது.
ஒரு யூதர் இன்னொரு யூதரிடம் சொல்கிறார்: பாத்தியா, அவங்களுக்கு குண்டெல்லாம் தீர்ந்து போச்சு.

ராஜா
18-11-2006, 08:45 AM
அப்பா ஏணி மீது ஏறி நின்றவாறு, கஷ்டப்பட்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து அம்மா கேட்டாள்:

நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு இதிலே ஒத்தாசை செய்வே இல்லே?

ஏன்? அதுவரைக்குமா... முடிக்காம அப்பா பெயிண்ட் அடிச்சிட்டிருப்பார்?

ராஜா
18-11-2006, 08:47 AM
பையன் (கோபமாக): அம்மா! இன்னைக்குக் காலையிலே நானும் அப்பாவும் பஸ்சுலே போயிக்கிட்டிருந்தபோது ஒரு லேடி வந்தாங்க. அப்பா என்கிட்ட, எந்திச்சு அவங்களுக்கு இடம் கொடுக்கச் சொன்னாங்க..!

அம்மா: நல்ல காரியம்தானே!

பையன்: ஆனா நான் உட்கார்ந்துக்கிட்டிருந்தது அப்பாவோட மடியிலே..[/I][/B]

ராஜா
18-11-2006, 08:49 AM
"சுவாமி, என் மனைவி என் பேச்சை கேட்பதில்லை,
அவளை கட்டுப்படுத்த ஏதாவது வழி சொல்லுங்களேன் . . . . ? "

டேய்,


"அது தெரியாமத்தானடா,
நானே சாமியாராயிட்டேன்..!!!!

(எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சிரிப்பு)

ராஜா
18-11-2006, 08:49 AM
ஒரு கணவனும், மனைவியும் ஜெருசலேத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் இருந்தபோது, மனைவி இறந்துவிட்டாள். அங்கிருந்த ஒருவர், உனது மனைவியை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், 5,000 டாலர் செலவாகும். இங்கேயே அடக்கம் செய்துவிட்டால் 150 டாலர் மட்டும்தான் செலவாகும் என்றார்.

ஆனால் கணவன் சொந்த ஊருக்கே கொண்டு செல்லப்போவதாகக் கூறினான்.

மனைவி மீது அவ்வளவு பாசமா?

இல்லே, ரொம்ப நாளைக்கு முன்பு இங்க ஒருத்தரை (யேசு) புதைச்சாங்க. அவர் 3 நாள் கழிச்சி உயிரோடு வந்துட்டாரு. அந்த ரிஸ்க்கை எடுக்க நான் விரும்பலை..!!!

ராஜா
18-11-2006, 08:50 AM
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?

முதலில் செல்வது எனது மனைவி.

என்ன ஆயிற்று அவருக்கு?

எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது

இரண்டாவது பிணம்?

அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?

அதற்கு அவர் சொன்னார், வரிசையில் போய் நில்லுங்கள்...!!!

ராஜா
18-11-2006, 08:52 AM
அமைச்சருடைய குடும்பத்தில் நான்காவது பிள்ளை பிறந்தது. சர்தார்ஜி நண்பர் ஒருவரை அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னால் பிறந்த மூன்று பையன்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார் சர்தார்ஜி,

ஒருவன் ரஹ்மத் இலாஹி (கடவுளின் அன்பு) அடுத்தவன் பர்க்கத் இலாஹி (கடவுளின் கருணை) மூன்றாமவன் ம்ஹ்பூப் இலாஹி (ஆண்டவனின் அன்புக்குரியவன்).

சர்தார்ஜி சற்று நேரம் யோசித்துவிட்டு சொன்னார் பஸ்கர் இலாறி (கடவுளே இது போதும்) என்று பெயரிடுங்கள்...!!!

முரளி
18-11-2006, 08:54 AM
Nice Jokes plz continue

ராஜா
18-11-2006, 08:55 AM
ஒரு சர்தார் வாழ்க்கை முழுதும் ஒரு விஷயத்துக்கு விடை தெரியாம வெம்பி வீணாகி......நொந்து நூலாகி.......நைந்து நாராகி செத்துப் போனார்..அது..

என் தங்கச்சிக்கு மட்டும் 3 அண்ணன் இருக்காங்க..

எனக்கு மட்டும் ஏன் 2 பேர்தான் இருக்காங்க..????
__________________

ராஜா
18-11-2006, 08:56 AM
சர்தார் ஒருமுறை செஸ் மேதை விஸ்வநாதன் ஆனந்த் பக்கத்தில் அமர்ந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தார்.
பொழுது போகாத ஆனந்த், சர்தாரை செஸ் விளையாட அழைத்தார். சர்தாருக்கு ஆனந்த் பற்றி தெரியுமாதலால் மறுத்துவிட்டார். பின்னர்...

ஆனந்த் ; சரி சிங்கு.. நீங்க வலது கையால் ஆடுங்க.. நான் இடது கையால் ஆடுகிறேன்..

சர்தாருக்கு இந்த யோசனை பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டார்.. 4 மூவ்'களில் சர்தார் தோற்றுவிட்டார்.
பின்னர் இதை தன் நண்பனிடம் சர்தார் சொல்லி வருத்தப் பட்டார்.

நண்பன் ; ஓயே.. ஆனந்த் உன்னை நல்லா ஏமாத்திட்டார்..
அவர் இயல்பாகவே இடது கை பழக்கம் உள்ளவர்.. நீ அவரை வலது கையால் ஆடச் சொல்லியிருந்தால் தோற்கடிச்சிருக்கலாம்...!!!

ராஜா
18-11-2006, 08:57 AM
ஒரு சர்தார் பாவ மன்னிப்பு கேட்க வந்திருந்தார்
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் என் வீட்டில் ஒளிந்து கொள்ள ஒரு அழகி வந்தாள் நான் அடைக்கலம் தந்தேன்

அது நல்ல விஷயம் தானே

ஆனால் நாளாக நாளாக நாங்கள் தவறு செய்து விட்டோம்

அது தவறு என உணர்ந்தாயே உன் குற்றம் மன்னிக்கப்பட்டது

நன்றி ஃபாதர், அது தான் என் மனதை இவ்வளவு நாள் உறுத்தியது

கடைசியாக ஒன்று கேட்க வேண்டும்

கேள் மகனே

இரண்டாம் உலகப்போர் முடிந்து விட்டதை நான் அவளிடம் நிச்சயம் சொல்ல வேண்டுமா..???

ஓவியா
18-11-2006, 01:12 PM
அண்ணா :D

கடிகள், அஹ ஒஹோனு இருக்கு

நல்லா சிரித்தேன்
கன்னமே வலிக்குது

நன்றி

பென்ஸ்
19-11-2006, 12:46 PM
ராஜா...

கலக்கலோ கலக்கல்...
அனைத்து ஜோக்குகளும் அருமை...

முன்னால் இளந்திரையன் இதே போன்ற சர்தார் கதைகள் சொல்லி கலக்குவார்...
இப்போ நீங்க அவரையும் ஓவர் டேக் அடிச்சிடுவிங்க போல...

சூப்பர் மக்கா...

ஓவியா
19-11-2006, 03:11 PM
ராஜா...

கலக்கலோ கலக்கல்...
அனைத்து ஜோக்குகளும் அருமை...

முன்னால் இளந்திரையன் இதே போன்ற சர்தார் கதைகள் சொல்லி கலக்குவார்...
இப்போ நீங்க அவரையும் ஓவர் டேக் அடிச்சிடுவிங்க போல...

சூப்பர் மக்கா...


ஆமாம் பெஞ்சு
கடிகள் அனைத்துமே கலக்கல் தான்

சோகமா இருக்கும் போழுது வந்து மறுபடியும் படிக்கனும்.....சோகத்தை மறந்து நல்லா சிரிக்கலாம்

ராஜா
21-11-2006, 12:06 PM
மிருகக் காட்சி சாலையில் ஒரு ஜோடி. ஒரு சிம்பன்ஸியோ உராங்குட்டானோ ஏதோ நமது முன்னோர்களில் ஒன்று கூண்டில் இருந்தது.
கணவன் தனது மனைவியை கூண்டினுள் இருந்த மனிதக் குரங்கைப் பார்த்து கண்ணடிக்கச் சொன்னான்.
மனைவியும் செய்தாள்.
குரங்கு உற்சாகமானது.

திருமலை சிம்ரன் போல் இடுப்பை ஒரு வெட்டு வெட்டேன். வெட்டினாள்.
குரங்கு துள்ளிக் குதித்தது.

ரம்பா மாதிரி ஒண்ணரைக் கண் கிறக்கத்தில் ஒரு பறக்கும் முத்தம் குடேன்.
கொடுத்தாள்.
குரங்கு கூண்டை உலுக்க ஆரம்பித்தது.

கூந்தலை ஜோதிகா மாதிரி அப்படி இப்படி ஆட்டி கோணல் சிரிப்பு சிரியேன்.
சிரித்தாள்.
இப்போது குரங்கிற்கு ஹிஸ்டீரியாவே வந்து விட்டது.

திடீரென்று கூண்டின் கதவைத் திறந்த கணவன் மனைவியை உள்ளே தள்ளி விட்டான். "இப்போ குரங்கிடம் சொல்லு செல்லமே..இன்னிக்கு வேணாம் .தலை வலிக்குதுன்னு..!!!!

ராஜா
21-11-2006, 12:08 PM
வீதியில் ஒரு நோட்டீஸ் போர்டு காலியாக இருந்தது.

அந்த வழியாக சென்ற ஒரு பாதிரியார், "எல்லோருக்கும் நான் பிரார்த்திக்கிறேன்" என்று
அதில் எழுதினார்.

அடுத்து வந்த வக்கீல், "எல்லோருக்கும் நான் வாதாடுகிறேன்" என்று எழுதினார்.

பின்னர் வந்த டாக்டர், "எல்லோருக்கும் நான் மருந்து எழுதி தருகிறேன்" என்று
எழுதினார்.

கடைசியாக வந்த பொது ஜனம் ஒருவர், "எல்லோருக்கும் நான்தான் பணம் செலவழிக்கிறேன்"
என்று எழுதி வைத்து விட்டு போனார்..!!!!

ராஜா
21-11-2006, 12:09 PM
அமெரிக்க அதிபர் "புஷ்" ஷுக்கு நெடுநாள் ஆசை கார் ஒட்டவேண்டுமென்று. ஒருநாள் ஓட்டுனரை பின்னால் அமரவைத்து ஓட்டிச் சென்றார். ஒட்டுனர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் புஷ் அதிவேகத்தில் சென்றதால், காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார்.
அபராதம் விதிக்கப் போவதாக காவலர் சொல்லவே, புஷ் " நான் யார் தெரியுமா ?' என்று கேட்டார். "சற்றுப் பொறுங்கள்.. கேட்டுச் சொல்கிறேன்" என்ற காவலர் மேலிடத்தோடு தொடர்பு கொண்டார்..
காவலர் ; ஒரு பெரும்புள்ளீயின் கார் வேகக்க் கட்டுப்பாட்டை மீறிவிட்டது.

மேலிடம் ; யார் அந்தப் பெரும்புள்ளி.. மேயரா..?

காவ ; இல்லை..

மேலி ; கவர்னரா..?

காவ ; இல்லை..

மேலி ; நம் அதிபரா..?

காவ ; இல்லை..

மேலி ; அழுக்குப் பன்றியே..வேறு யார் சொல்லித் தொலை..!

காவ ; யாரோ தெரியவில்லை..ஆனால் ஒன்று.. நம் அதிபரையே ஒட்டுனராக வைத்திருக்கும் அளவுக்கு பெரும் புள்ளி ...!!!

ராஜா
21-11-2006, 12:10 PM
நம் சர்தார் போக்குவரத்து காவலர்.. வேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களை மடக்கினார். ஒருவன் மட்டும் பைக்கைப் போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான்.
விடுவாரா சஎதார். துரத்திப் பிடித்து " எங்கே உரிமம் ?" எனக்கேட்டார். அவனோ அப்பாவியாக எல்லா ஆவணங்களையும் எடுத்துக் காட்டினான்.

சர்தார் ; அடப்பாவி.. எல்லாம்தான் சரியா இருக்கே.. அப்புறம் ஏண்டா என்னை இவ்வளவு தூரம் ஓட வச்சே..?

பைக்கன் ; என் ப்ரெண்டுக்கிட்டே ஒண்ணும் இல்லையே..

சர்தார் ; ???????????????????

ராஜா
21-11-2006, 12:11 PM
சொர்க்கத்தின் வாயிற்காவலன் ஒரு பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர் மூவரையும் தடுத்து நிறுத்தி ஒரு எளிய கேள்விக்கு பதிலளித்தால் உள்ளே அனுமதி என்று சொல்லி பொறியாளரிடம் கேட்டான்.

பனிப்பாறையில் மோதிய கப்பல் பெயர் என்ன..?

பொறி ; டைட்டானிக்.

அடுத்து மருத்துவரிடம்..

அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?

மருத்து ; ( சிறிது யோசனைக்குப் பின்) 1500.

அடுத்து வழக்கறிஞரிடம்...

அவங்க பேர் என்னென்னன்னு சொல்லிட்டு உள்ளே போ..

வழக்கு ; ?????????????????????????????????
__________________

ராஜா
21-11-2006, 12:12 PM
ஒரு அழகான கல்லூரி மாணவனும், அவனது விரிவுரையாளரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே நமது மாணவனுக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.

ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு. என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."

விரிவுரையாளர் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோண்லையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"

அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"

நம்ம மாணவன் என்ன நினைச்சான் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னோட ஆசிரியரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"
__________________

அறிஞர்
21-11-2006, 02:34 PM
திடீரென்று கூண்டின் கதவைத் திறந்த கணவன் மனைவியை உள்ளே தள்ளி விட்டான். "இப்போ குரங்கிடம் சொல்லு செல்லமே..இன்னிக்கு வேணாம் .தலை வலிக்குதுன்னு..!!!! வித்தியாசமான அசைவ ஜோக்.... சிரிக்க வைத்தது... :rolleyes: :rolleyes:

அறிஞர்
21-11-2006, 02:35 PM
கடைசியாக வந்த பொது ஜனம் ஒருவர், "எல்லோருக்கும் நான்தான் பணம் செலவழிக்கிறேன்"
என்று எழுதி வைத்து விட்டு போனார்..!!!!
என்ன பண்ணுவது.. இது பொது ஜனத்தின் விதி...... :D :D :D

அறிஞர்
21-11-2006, 02:36 PM
காவ ; யாரோ தெரியவில்லை..ஆனால் ஒன்று.. நம் அதிபரையே ஒட்டுனராக வைத்திருக்கும் அளவுக்கு பெரும் புள்ளி ...!!!
காரோட்டி பெரும்புள்ளியாகி விட்டாரா.... :cool: :cool: :cool: :cool:

அறிஞர்
21-11-2006, 02:37 PM
பைக்கன் ; என் ப்ரெண்டுக்கிட்டே ஒண்ணும் இல்லையே..

சர்தார் ; ??????????????????? சர்தாருக்காக பிறந்து வந்தவர்கள் போல பைக்கர்கள்... :D :D :D

அறிஞர்
21-11-2006, 02:39 PM
அடுத்து வழக்கறிஞரிடம்...

அவங்க பேர் என்னென்னன்னு சொல்லிட்டு உள்ளே போ..

வழக்கு ; ?????????????????????????????????
__________________
இது கொஞ்சம் ஓவரு.... இப்படி கேட்டா என்ன சொல்லுவான்.. வீட்டுல உள்ள ஆட்கள் பேரே ஒழுங்கா தெரியாது... அதுவும் 1500 பேரா.... :angry: :angry: :angry:

மதி
21-11-2006, 02:39 PM
ராஜா..ஜோக்குகள்..எல்லாமே அருமை..
கலக்கிட்டீங்க.......

அறிஞர்
21-11-2006, 02:41 PM
நம்ம மாணவன் என்ன நினைச்சான் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னோட ஆசிரியரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"
__________________
வில்லங்கமான மாணவன் நீங்க தானா ராஜா.. :p :p :p

ஓவியா
21-11-2006, 06:36 PM
கடிகள் சூப்பர்.................

ரசித்தேன்....சிரித்தேன்.........


பதிவை தொடரவும்.....:)
(இல்லனா ஆட்டோதான் வரும்)

ராஜா
24-11-2006, 09:28 AM
டோனா(ஃபோனில்) : கங்குலி இருக்காறா? நான் அவரோட மனைவி பேசுறேன். அவர்கிட்ட அவசரமா பேசனும்.

மறுமுனையில் : அவர் இப்பதான் பேட்டிங்கிற்கு போறார்.


டோனா : அப்போ சரி! நான் ஒரு நிமிடம் லைன்ல வெயிட் பண்றேன்.
__________________

ராஜா
24-11-2006, 09:29 AM
ஒரு சர்தார்ஜிக்கு 6 குழந்தைகள். அது குறித்து அவருக்கு எப்போதும் ஒரே பெருமைதான். தன் மனைவியைக் கூப்பிடும்போதெல்லாம், ஆறு குழந்தைகளின் அம்மாவே என்றுதான் கூப்பிடுவார். அது அவளுக்குப் பிடிப்பதேயில்லை. ஒரு நாள் சர்தார்ஜி குடும்பத்தோடு ஒரு பார்ட்டிக்குக் கிளம்பினார். சர்தார்ஜியின் மனைவி நெடுநேரமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார். பொறுமையிழந்த சர்தார்ஜி, ஆறு குழந்தைகளின் அம்மாவே! கிளம்பலாமா? என்று கேட்டார். அதற்கு அவரது மனைவி கூறினார், நான்கு குழந்தைகளின் அப்பாவே! கிளம்பலாம்
__________________

ராஜா
24-11-2006, 09:30 AM
ஒருவர் தாங்க முடியாத வயிற்றுவலியில் துடித்தபடி மருத்துவரிடம் சென்றார்..
மருத்துவர் சிறிய கைவிளக்கு கொண்டு அவர் வாய்க்குள் பரிசோதித்தார்.. பின் மூக்கு, காது எல்லாவற்றையும் விளக்கு அடித்துப் பார்த்துவிட்டு திருப்தியுடன் தலையசைத்தபடி சொன்னார்.. பேட்டரி நல்லா இருக்கு..!!!
__________________

ராஜா
24-11-2006, 09:31 AM
ஜார்ஜ் புஷ் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்தை நோக்கி காரில் விரைந்து கொண்டிருந்தார். கார் ஒரு பன்றிப் பண்னையை நெருங்கும்போது, வெள்ளைப் பன்றி ஒன்று எதிர்பாராத விதமாக காரில் அடிபட்டு இறந்துவிட்டது. ஜார்ஜ் புஷ் டிரைவரிடம், உள்ளே சென்று நடந்ததை பண்ணை உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உடனே வா என்று பணித்தார்.

அவ்வாறே உள்ளே சென்ற டிரைவர் திரும்பி வரும்போது, கை நிறைய பணமும், நிறைய பரிசுப் பொருட்களும் கொண்டுவந்தார். அவரது பன்றியைக் கொன்றதற்காக அவர் கோபிக்கவில்லையா? அவர் பரிசு தருமளவிற்கு என்ன சமாதானம் கூறினாய்? என்று கேட்டார். அதற்கு டிரைவர் சொன்ன பதில்: நான் ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர். அந்தப் பன்றியை இப்போதுதான் கார் ஓட்டி கொன்றேன் எனக் கூறினேன்.
__________________

ராஜா
24-11-2006, 09:33 AM
ஒரு முறை சர்வதேச வழக்கறிஞர் மாநாட்டுக்கு சென்ற விமானம் கடத்தப்பட்டது. கடத்தல்காரனின் மிரட்டலுக்கு பணிந்து அரசு அவன் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.

அவன் மிரட்டல் என்ன தெரியுமா..?

எனது கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால் 1 மணி நேரத்துக்கு 1 வழக்கறிஞர் வீதம் விடுதலை செய்வேன்....!!!!

ராஜா
24-11-2006, 09:34 AM
சர்தார்ஜி 1: நேத்து ராத்திரி உங்க வீட்டு ஜன்னல் திறந்திருந்துச்சு. அது வழியா நீயும் உன் பொண்டாட்டியும் விளையாடிக்கிட்டு இருந்த்ததைப் பார்த்துட்டேன்

சர்தார்ஜி 2: முட்டாள்! நல்லா ஏமாந்தே. நேத்து ராத்திரி நான் வீட்டிலேயே இல்லை, தெரியுமா!


ராஜா
24-11-2006, 09:35 AM
இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும். மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.c.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள் என்று...!!!


ராஜா
24-11-2006, 09:37 AM
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.

யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் 'நான் தான் இந்தியாவின் தந்தை' என்று சொல்லியிருக்கிறான்
__________________

ராஜா
24-11-2006, 09:39 AM
ஒரே நாளில் 5 முதல் 20 கிலோ வரை எடை குறைய வேண்டுமா..?
எங்களை அணுகுங்கள் என்ற விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ஒருவன் அந்நிறுவனத்துக்குப் போனான்.. அங்கே ஒரு விசாலமான அறை.. அதில் நிறைய படிகள் எற்ற இறக்கமாய் அமைக்கப் பட்டிருந்தன..
திடீரென ஒரு கதவைத் திறந்துகொண்டு ஒரு அழகான இளம் பெண் வந்தாள்.. அவளது சட்டையில், "என்னை நீ பிடித்து விட்டால் நான் உன்னுடையவள்" என்று இருந்தது.
அவனும் அவளைப் பிடிக்க ஓடினான்..பிடிபடுவதுபோல் போக்கு காட்டி அவள் எல்லா படிகளிலும் ஏறி ஓடினாள்.. 1 மணி நேரத்துக்குப் பிறகு, அவள் பிடிபடாமல் கதவுக்குப் பின்னால் ஓடி மறைந்தாள்.
பிறகு இவனை குளிக்கவைத்து எடை போட்டார்கள்.. சரியாக 5 கிலோ எடை குறைந்து இருந்தான்..!

அவன் நினைத்தான்.. இன்னும் கொஞ்சம் எடை குறைவாக இருந்திருந்தால் அவளைப் பிடித்திருக்கலாமே..? உடனே மேலும் பணம் கட்டி 20 கிலோ எடை குறைய வையுங்கள் என்றான்..

அவர்களும் வேறு ஒரு அறைக்குப் போகச் சொன்னார்கள். ஆவலாகக் காத்திருந்த போது ஒரு கதவைத் திறந்து கொண்டு ஒரு மனிதக் குரங்கு வந்தது.. அதன் பனியனில்.. "நான் உன்னைப் பிடித்துவிட்டால் நீ என்னுடையவன்" என்று எழுதியிருந்தது

ராஜா
24-11-2006, 09:41 AM
ஒரு ஆரம்பப் பள்ளிக்கு அதிபர் புஷ் வருகை புரிந்தார்.. சிறு உரைக்குப் பின் மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாரானார்..
ஒரு மாணவன் கை உயர்த்தினான்..

புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?

மா ; பாப்..

புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் பாப்..

பாப் ; நன்றி அதிபரே..! என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?

புஷ் பதிலளிக்கத் திணறிக்கொண்டிருக்கும் போது இடைவேளைக்கான மணி அடிக்கவே கேள்வி நேரம் நிறுத்தப்பட்டது.

இடைவேளைக்குப் பின்.. உற்சாகமாக வந்த புஷ். கேள்விகளைத் தொடரச் சொன்னார்.. மிகுந்த தன்னம்பிக்கையுடன்..

ஒரு மாணவன் கை உயர்த்தினான்..

புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?

மா ; ஆல்ன்..

புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் ஆலன்..

ஆலன் ; நன்றி அதிபரே..! என்னிடம் ஐந்து கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?
4.. 20 நிமிடங்கள் முன்னதாகவே இடைவேளைக்கான மணி அடிக்கப் பட்டது ஏன்..?

5.. மாணவன் பாப் எங்கே..? அவனை என்ன செய்தீர்கள்..?

ஓவியா
24-11-2006, 04:54 PM
ம்ம்ம்
கூரையை பிய்த்து கொண்டு கடிகள் கொட்டுது..:D

நன்றி
அண்ணா கடி மண்ணா

pradeepkt
27-11-2006, 06:18 AM
அவ்வாறே உள்ளே சென்ற டிரைவர் திரும்பி வரும்போது, கை நிறைய பணமும், நிறைய பரிசுப் பொருட்களும் கொண்டுவந்தார். அவரது பன்றியைக் கொன்றதற்காக அவர் கோபிக்கவில்லையா? அவர் பரிசு தருமளவிற்கு என்ன சமாதானம் கூறினாய்? என்று கேட்டார். அதற்கு டிரைவர் சொன்ன பதில்: நான் ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர். அந்தப் பன்றியை இப்போதுதான் கார் ஓட்டி கொன்றேன் எனக் கூறினேன்.
__________________
முதல் தடவை படிச்சப்ப புரியலை. புரிஞ்சப்ப சிரிப்ப அடக்க முடியலை...

ராஜா
30-11-2006, 03:10 PM
வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.
மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு " பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்கூடாது.." என்று சொல்லிப் போனார்.

ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர் அகற்றும் போது பாட்டி கேட்டாள்..

டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?

ஓ.எஸ்.. தாராளமா..

நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு..!!!

ராஜா
30-11-2006, 03:11 PM
ஆண் யானையும் பெண் எறும்பும் காதலித்தன.. எறும்பு பெற்றோர் சம்மத்ம் வேண்டி நின்றது. அவர்களும் 2 நாளில் யோசித்து சொல்வதாக கூறினர்..

படபடப்பான 48 மணி நேரத்துக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்பட்டது.

எங்களுக்கு சம்மதம் இல்லை.. பையனுக்கு பல்லு பெருசா இருக்கு..!!!

ராஜா
30-11-2006, 03:12 PM
பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக 2 கோப்பைகளுடன் திரும்பிய மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான்..

சின்ன கோப்பை எதுக்கு கிடைச்சது..?

கர்நாடக சங்கீதம் பாடினதுக்கு..

பெருசு எதுக்கு குடுத்தாங்க..?

பாட்டை நிறுத்தச் சொல்லி...!!!

ராஜா
30-11-2006, 03:13 PM
ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..

கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?

கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?

கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன்? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!

ராஜா
30-11-2006, 03:14 PM
எதுக்குப்பா கல்யாண மாப்பிள்ளையை குதிரையிலே ஏத்திவிடறாங்க..?

தப்பிச்சு போக கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்கறாங்க

ராஜா
30-11-2006, 03:14 PM
ஏதாவது கல்யாணத்துக்கு போனாப் போதும்.. இந்த பாட்டிகள் எல்லாம் வந்து கன்னத்தை கிள்ளி " அடுத்தது உனக்குதான்" ன்னு ரவுசு பண்ணுவாங்க.

இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டினேன்.. எப்படி தெரியுமா..?

நானும் அவங்களை கிண்டல் பண்ண ஆரம்பிச்சேன்.." அடுத்தது நீதான்" அப்படின்னு... துக்கம் கேட்க போற வீடுகள்லே...!!

ராஜா
30-11-2006, 03:15 PM
மரணப் படுக்கையில் கணவன்.. மனைவி கேட்டாள்..

புற்றுநோயால் சாகப் போற நீங்க ஏன் எல்லார்கிட்டேயும் எய்ட்ஸ்-னால சாகப் போறதா சொல்லிக்கிட்டு இருக்கீங்க..?

எனக்கு உன்ன பழிவாங்க வேற வழி தெரியலே மங்கையர்க்கரசி..!!!

ராஜா
30-11-2006, 03:17 PM
சர்தார் ஒருநாள் காவல் நிலையம் வந்தார்..

இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் -ல் வையுங்க..

ஏன்.. என்ன ஆச்சு..?

என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..

செத்துட்டாங்களா..?

இல்லே.. கோபமா வந்துட்டு இருக்கா.. அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!

ராஜா
30-11-2006, 03:18 PM
எங்க அப்பா ரொம்ப தைர்யசாலி. ஒரு தடவை 1000 பேர் கண் முன்னே ஒரு சிங்கம் இருக்குற கூண்டுக்குள்ள நுழைஞ்சார்...

அவரு வெளியே வரும்போது எல்லாரும் கை தட்டியிருப்பாங்களே..?

எல்லாரும் தயாராத்தான் இருந்தாங்க.. ஆனா அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்ல.

ராஜா
30-11-2006, 03:18 PM
வேலைக்கான நேர்முகம்.. சர்தார் அந்த வேலையை பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார். ..

"ஒரு சிங்கத்தை கொன்றால்தான் உனக்கு வேலை கிடைக்கும் என்றால் நீ என்ன செய்வாய்..?"

எவ்வளவோ யோசித்தும் வழியொன்றும் புலப்படவில்லை..
கடைசியில் ஒரு தீர்மானத்துடன் இவ்வாறு பதில் சொன்னார்..

"அரை லிட்டர் டெமக்ரான் ( பூச்சி கொல்லி) குடித்து விட்டு சிங்கத்தை சண்டைக்கு கூப்பிடுவேன்..!!!"

ராஜா
30-11-2006, 03:20 PM
ஒரு தடவை இங்கிலாந்துலே போட்டிக்கு தானதமாயிடுச்சுன்னு வி.வி.எஸ்.லக்ஷ்மன் மிக வேகமா காரை ஓட்டினதாலே போலிஸ் புடிச்சுட்டாங்க. அபராதம் விதிக்கும் புத்தகத்தை கையில் எடுத்து, அதில் நிரப்புவதற்காக அதிகாரி கேட்டார்..

உங்கள் பெயர் என்ன..?

வங்கிப்பரப்பு வெங்கட்ட சாய் லக்ஷ்மன்..

புத்தகத்தை மூடியவாறே.. ஓ.கே... ஓ.கே.. இனிமேல் அளவுக்கு மீறி வேகமாக ஓட்டாதீர்கள்.. நீங்கள் போகலாம்..!!!

meera
30-11-2006, 03:53 PM
ராஜா, தங்களின் நகைசுவை அருமையாய் இருக்கிறது.

உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

ஓவியா
30-11-2006, 04:05 PM
சூப்பர் கடிகள்,
நன்றி அண்ணா

முன் அறிவிப்பு
கூடியவிரைவில்
கடி மன்னனுக்கு,
கடி மன்னாதி மன்னன் என்று பட்டம் சூட்டப்படும்

(எல்லோரும் விருந்துக்கு தயாராக காத்திருக்கவும்,)

மதி
01-12-2006, 03:00 AM
அத்தனையும் சூப்பர்...

கலக்குங்க...! ராஜா...

pradeepkt
01-12-2006, 06:11 AM
நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு..!!!
பெரிய தில்லாலங்கடி பா(ர்)ட்டியா இருந்திருப்பாங்க போல...

ராஜா
06-12-2006, 03:47 PM
[B][டாக்டர்..ஆபரேஷன் தியேட்டரில் தொலைபேசி வைக்க வேண்டாம்ன்னு அடிச்சிக்கிட்டேனே..கேட்டீங்களா..?

ஏன்..? என்னாச்சு..?

அதுவும் 'டெட்' ஆயிடுச்சு..!
/B]

ராஜா
06-12-2006, 03:49 PM
சின்னா ஆசிரியர்கள் ஓய்வறை வழியாகப் போனபோது ஒரு ஆசிரியர் கூப்பிட்டார்..

சின்னா, எனக்கொரு டீ வாங்கி வா..

மற்றொருவர் " எனக்கும்.. க்ளாஸை நல்லா கழுவிட்டு டீ போட்டு வாங்கிட்டு வா.."

சின்னா 2 தேனீர் குவளைகளுடன் திரும்பினான்..

" யார் சார் கழுவின க்ளாஸ்லே டீ கேட்டது.. இந்தாங்க...!"

ராஜா
06-12-2006, 03:50 PM
சின்னா ஒருநாள் அழுதுகொண்டே பள்ளிக்கு வந்தான்.. தலைமை ஆசிரியர் ஏனென்று கேட்டார். சின்னா சொன்னான்..

" நம்ம பள்ளிக்கு வர்ற மேட்டு ரோட்டுலே டேனியல் சார் சைக்கிளை ஏறி மிதிச்சுட்டு வந்தார்.. திடீர்ன்னு பெடல் வழுக்கி...." என்று சொல்லிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தான்,,

தலைமை ஆசிரியர்," அடடா.. சரி.. சரி.. இதுக்கெல்லாம் ஆம்பளைப் பையன் அழலாமா.? எங்கே.. சிரி.. பார்க்கலாம்." என்றார்.

"போங்க சார்.. அங்க சிரிச்சதுக்கு அவர் அடிச்சதினாலே தான் அழறேன்..! இங்கே வேறே சிரிக்க சொல்றீங்களே...!!!"

ராஜா
06-12-2006, 03:50 PM
ஏண்டா சின்னா நம்ம வாத்தியாரை டீ கடையிலே ரவுண்டு கட்டி அடிச்சாங்க..?

பஜ்ஜி சாப்பிட்டு சும்மா வரவேண்டியதுதானே..? பழக்க தோஷத்திலே உங்க பொண்ண பாட சொல்லுங்க ன்னுருக்கார்..!!

ராஜா
06-12-2006, 03:53 PM
ஒரு காட்டுக்கு புதுசா ஒரு குதிரை வந்தது.. தான் உண்டு..தன் வேலை உண்டுன்னு இருந்தது. அது ஒடறதும் ஆடறதும் எல்லாருக்கும் பிடிச்சாலும் ஒரு நரிக்கு மட்டும் பிடிக்கவேயில்லே..
ஏன்னா அதுதான் அதுக்கு முன்னாடி சூப்பர் ஸ்டாரா இருந்துச்சு.

என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சு ஒருநாள் தன்னோட எடுபிடிய புலிக்கிட்ட அனுப்பி இந்த மாதிரி இந்த இடத்திலே ஒரு குதிரை மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு.. இப்போ வந்தா தின்னலாம்ன்னு சொல்ல சொன்னுச்சு.. புலியும் ஒருநாள் வந்துது..

புலி வர்றதப் பார்த்த குதிரை சட்டுன்னு ஒரு எலும்பை வாயிலே கவ்விக்கிட்டு, சத்தமா சொல்லுச்சாம்.." என்னதான் இருந்தாலும் புலிக்கறி ருசியே தனி.. இப்ப இருக்கற பசிக்கு இன்னொரு புலி கிடைச்சால்கூட திம்பேன்"!!!

இதைக்கேட்ட புலி எடுத்துச்சாம் ஓட்டம்..

இருந்தாலும் நரிக்கு தோல்விய ஒத்துக்க முடியல.. மறுபடியும் குறுக்கு புத்திய உபயோகிச்சு என்ன பண்ணலாம்ன்னு பார்த்துச்சு.
ஒருநாள் மறுபடியும் புலிக்கிட்ட போய் நடந்ததையெல்லாம் சொல்லி, இப்படித்தான் உன்னை முட்டாளாக்கிடுச்சு குதிரைன்னுச்சாம்.

புலி இருந்தாலும் எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்ன்னு யோசிச்சுது.

நரி நானே உன்னை அழைச்சுட்டு போறேன் வா.. அதுவும் இன்னைக்கு பின் பக்கமா தாக்குவோம்.. அப்படின்னு சொல்லி புலியை கையோட அழைச்சுட்டு வந்துச்சாம்..

தெய்வாதீனமா இந்த தடவையும் குதிரை இதை பாத்துடிச்சாம்..
சட்டுன்னு அவங்க வர்ற திசைக்கு எதிர் திசையிலே திரும்பி நின்னுக்கிட்டு, ரொம்ப சத்தமா.."இன்னைக்கு எப்படியும் ஒரு புலியை அழைச்சுட்டு வர்றேன்னு சொல்லிட்டு போச்சுது அந்த சனியன் புடிச்ச நரி.. 1 மணி நேரம் ஆகுது.. இன்னும் கானோமே" ன்னு தனக்குள்ளேயே பேசிக்கறமாதிரி சொல்லுச்சாம்..

அப்புறம் என்ன.. நரியின் கதி என்னாச்சு..அப்படிங்கறதெல்லாம் நான் சொல்லியா தெரியணும்..?

ராஜா
06-12-2006, 03:54 PM
என்னங்க.. அவர் ஏன் கழுதை மாதிரி கத்தறாரு..?

கையிலிருந்த பேப்பரை பிடுங்கிட்டேனாம்...!!!

ராஜா
06-12-2006, 03:55 PM
ஏங்க உங்க பையன் கல்யாணத்துக்கப்புறம் ஏதாவது சீரியல் எடுக்கறாரா..?

ஆமாம்.. காத்து..கருப்பு..!!!

ராஜா
13-12-2006, 04:25 AM
ஒரு ஆமை மரத்தில் மிகச் சிரமப்பட்டு ஏறியது..அங்கிருந்து மறுபடி கீழ்நோக்கி பாய்ந்தது. பாயும் போது தன் கால்களை காற்றில் ஆட்டிக்கொண்டே பாய்ந்து வந்தது. கீழே மண்ணில் விழுந்து அடிபட்டுக்கொண்டாலும் மீண்டும் மீண்டும் அந்த முயற்சியை செய்துகொண்டே இருந்தது. இதை இரு பறவைகள் மரத்தின் இன்னொரு கிளையில் அமர்ந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தன.. பெண் பறவை கடைசியில் ஆண் பறவையிடம் சொல்லியது..

என்னங்க.. பாவம்ங்க... அவன் கிட்டே சொல்லிடலாம்ங்க.. அவன் நம்ம புள்ள இல்லே.. தத்து எடுத்திருக்கோம்ன்னு...!

ராஜா
13-12-2006, 04:26 AM
ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

மற்றொரு நாள்.. பேர்ந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்".

இவன் அடுத்தபடியாக கேட்டான்,,

"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"

ராஜா
13-12-2006, 04:27 AM
சின்னா ; அம்மா.. நண்பர்களோடு சினிமாவுக்கு போகணும்.. ஒரு 50 ரூபாய் தா..

அம்மா ; என்கிட்டே ஒரு பைசா கூட இல்லே..

சின்னா ; அப்பன்னா நேத்து நீ அழகு நிலையம் போயிருந்தப்போ வேலைக்காரிட்டே அப்பா என்ன சொன்னாருன்னு சொல்லமாட்டேன் போ..

அம்மா ; சரி.. சரி.. இந்தா.. 100 ரூபாயா வச்சுக்கோ.. சொல்லுடா கண்ணா.. அப்பா என்னடா சொன்னார்..?

சின்னா ; ( பையில் பணத்தை சொருகியவாறே..) இன்னைக்காச்சும் என் காலுறையை துவைச்சுப் போடு முனியம்மா...!

ராஜா
13-12-2006, 04:27 AM
உங்கப்பன் கிட்ட சொல்லுடி.. இந்த மாசம் சம்பளம் வாங்கினதும் எப்படியாவது அவர்கிட்ட வாங்கின கடனை திருப்பி கொடுத்துடுறேன்னு..

ஏங்க.. என்னாச்சு..?

அங்க பாரு.. கேபிள் டி.வி. லே விளம்பரம் ஓடுது.. "என் மாப்பிள்ளை கடன் வாங்கி இன்றோடு 22 வது நாள்"ன்னு..!

ராஜா
13-12-2006, 04:28 AM
புது காரை எடுத்துச்சென்ற மனைவி கணவனுக்கு தொலைபேசினாள்..

என்னங்க.. ஒரு கெட்ட செய்தி.. ஒரு நல்ல செய்தி..

கெட்ட செய்தி தானே எப்போதும் சொல்லுவே.. என்ன இன்னொரு நல்ல செய்தி.. ? அதை முதல்ல சொல்லு..

பின் பக்க கண்ணாடியை மட்டும் மாத்த வேண்டாம்.. அது நல்லா இருக்கு..!

ராஜா
13-12-2006, 04:32 AM
காதலன் காதலியிடம்...

நீ சோதனைக்குழாய் மூலம் பிறந்தவங்கறதுக்காக, நம்ம முதலிரவை வீராணம் குழாய்லே வச்சுக்கலாமான்னு கேட்கறதெல்லாம் ரொம்ப அநியாயம் குழலி..!

ராஜா
13-12-2006, 04:33 AM
டாக்டர் ; கவலையை விடுங்க சார்.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி கனவு வரும்.. உங்களுக்கு டி.வி. நிகழ்ச்சி மாதிரி கனவு வருது..

நோயாளி ; அதுமட்டும் இல்லே சார்.. கனவு ஆரம்பிக்கறதுக்கு முந்தி விளம்பரம்லாம் வருது சார்..!

ராஜா
13-12-2006, 04:34 AM
என்ன டாக்டர்.. வழக்கமா 50 ரூபாய் தானே "கன்சல்ட்டிங் பீஸ்" வாங்குவீங்க.. இன்னைக்கு 100 ரூபாய் கேட்கறீங்க..?

வெளிலே உட்கார்ந்திருக்கும்போது நர்ஸ்கிட்டே புண்ணாக்கு(ம்) டாக்டர் எப்போ கூப்பிடுவார்ன்னு கேட்டீங்களாமே.. அதுக்கு "இன்சல்ட்டிங் பீஸ்" 50 ரூபாய் சேர்த்திருக்கேன்..!

ராஜா
13-12-2006, 04:34 AM
ஒரு செல்வந்தர் அபாயகரமான நோயிலிருந்து ஒரு மருத்துவரால் காப்பாற்றப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்படும்போது...

செல்வர் ; டாக்டர்.. நீங்கள் என் தெய்வம்.. எனக்கு உயிர் கொடுத்தவர்.. உங்களுக்கு மருத்துவக் கட்டணம் என்ற பெயரில் ஒரு சிறு தொகையைக் கொடுத்து உங்களை சிறுமைப் படுத்த விரும்பவில்லை.. நான் நேற்று எழுதிய உயிலில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சொத்து எழுதியுள்ளேன்.. இது என் காணிக்கை.

மருத்துவர் ; இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்..? சரி.. இனி தாங்கள் சாப்பிடவேண்டிய மருந்துப் பட்டியல் ஒன்று தந்தேன் அல்லவா..? அதைக் கொஞ்சம் கொடுங்கள்..

செல்வர் ; ஏன் டாக்டர்..?

மருத்துவர் ; ஒரு சிறு மாறுதல் செய்யவேண்டும்..!!!

ஓவியா
13-12-2006, 06:13 PM
சிரித்தேன், ரசித்தேன்.

நன்றி

தொடரவும் அண்ணா

ஆதவா
15-12-2006, 09:26 AM
ராஜா, அநியாயத்திற்கு ஹாஸ்யவாதியாக உள்ளீரே!!!

அனைத்தும் அருமை.

ராஜா
20-12-2006, 02:05 PM
டாக்டர்.. எனக்கு பொருள்களைத் திருடும் நோய் (kleptomania) இருக்கு டாக்டர்..

இந்தாங்க.. இந்த மாத்திரைகளைப் போட்டுப் பாருங்க..

அப்படியும் குணமாகலேன்னா என்ன டாக்டர் பண்ணுறது..?

எனக்கு ஒரு நோக்கியா மொபைல் புது மாடல் தேவைப்படுது.. போற இடத்திலே நல்லதா கிடைச்சா கிளப்பிக்கிட்டு வாங்க..விலை போட்டு தரேன்..!

ராஜா
20-12-2006, 02:06 PM
"டாக்டர்... எனக்கு காரணம் இல்லாம பயம் வருது...!"

"இந்தாங்க... இந்த மாத்திரையை சாப்பிடுங்க.."

" இனி பயம் இருக்காதா..?"

" இல்லே... இனி பயப்படுறதுக்கு காரணம் தெரியும்..!"

ஆதவா
20-12-2006, 02:08 PM
ராஜா நீங்க எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைங்க.. ப்ளீஸ்

ராஜா
20-12-2006, 02:09 PM
நயாகரா நீர்வீழ்ச்சி அருகே சுற்றுலா பயணிகளிடம்..ஒரு வழிகாட்டி சொல்கிறார்...

"இதுவே உலகின் மிகப்பெரிய அருவி.. இதன் ஓசை அளவிட முடியாதது.. ஒரே நேரத்தில் 20 அதிவேக விமானங்கள் எழுப்பும் ஒலியைவிட அதிகமானது.. அம்மணிகளே.. சற்று அமைதியாக இருங்கள்.. அருவியின் ஓசையை நன்கு கேட்கலாம்...!!!"

ராஜா
20-12-2006, 02:11 PM
ஒரு பதின்ம வயது மாணவி பள்ளியில் இருந்து வந்தவுடன் தன் பாட்டியைக் கேட்டாள்...

"பாட்டி.... காதலன் என்றால் யார்..?"

" காதலனா...? காதலன் என்றால்..... வந்து.... ஐய்யோ.... என் ரவீ... "

பாட்டி ஓடிப்போய் ஒரு பெரிய பழைய பெட்டியை திறக்க அதற்குள் பதுங்கிய நிலையில் ஒரு எலும்புக்கூடு பரிதாபமாக உட்கார்ந்திருந்தது....!

ராஜா
20-12-2006, 02:12 PM
ஏங்க.. என்கிட்டே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எது..? என்னோட அழகா..? என்னோட புத்திசாலித்தனமா..? இல்லே என்னோட குடும்பம் நடத்துற திறமையா..?

உன்னோட இந்த நகைச்சுவை உணர்ச்சிதான்.. கோகிலா..!!!

ராஜா
20-12-2006, 02:15 PM
ஆதவன் ; என்னங்க ராஜா.. உங்க நகைச்சுவைய படிச்சு சிரிச்சு பாதி உயிர் போயிடுச்சு..

ராஜா ; இன்னொரு தடவை படியுங்க ஆதவன்..!

ஆதவா
20-12-2006, 02:27 PM
அய்யய்யோ ராஜா,,,

ராஜா
24-12-2006, 09:17 AM
தலைவருக்கு தேர்தல் பற்றிய அனுபவம் இல்லேன்னு நினைக்கிறேன்..

ஏன்..?

ஓட்டை பிரிச்சா வெற்றி நிச்சயம்ன்னு சொன்னதுக்கு, நான் ஒரு காலத்துல கொத்தனாரா இருந்தவன்தான்னு சொல்லிட்டு கூரை மேல ஏறிட்டாரு

ராஜா
24-12-2006, 09:18 AM
தலைவர் என்ன குஷியா இருக்காரு..?

இடைத்தேர்தல்ல நிக்கிறது அவர் சின்ன வீடாம்....? அவங்க சின்னம் வீடாம்..

ராஜா
24-12-2006, 09:18 AM
தலைவர் வீட்டு சோதனையிலே கிடைச்ச 2000 செருப்புகளுக்கு என்ன சமாதானம் சொல்லி சமாளிச்சாரு..?

காசு குடுத்து வாங்கியிருந்தா கணக்கு காட்டலாம்.. மேடையிலே வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னு சொல்லிட்டாரு..

ராஜா
24-12-2006, 09:19 AM
தெரியுமா..? தலைவர் நேத்து மூணாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாரு..

அப்ப மூணாவது "அண்ணீ'யை உருவாக்கிட்டாருன்னு சொல்லு..

ராஜா
24-12-2006, 09:20 AM
தலைவர் தேர்தல்ல ஜெயிச்சதும் தலை கால் புரியலேன்னு நினைக்கிறேன்..

ஏன்..?

அங்க பாரு.. கழுத்துல விழுந்த மாலையை கழட்டி மக்களைப் பார்த்து வீசறதுக்கு பதிலா வேஷ்டிய அவுத்து வீசறதை..!!

ராஜா
24-12-2006, 09:20 AM
என்னது..? தலைவர் அவ்வையார் சொன்னபடி வாழ்க்கை வாழறாரா..?

ஆமாம்.. எத்தனை மனைவின்னு கேட்டா "பொண்'ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை" ங்கிறாரே..!! delete

ராஜா
01-01-2007, 11:53 AM
ஏன் சிங்கு நீ பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டே..?

நான் எங்கே விட்டேன்.. அந்த ஆபீஸ் வேறே இடத்துக்கு மாத்திட்டாங்க.. இன்னி வரைக்கும் அது எங்கே இருக்குன்னு எங்கிட்டே சொல்லாம வச்சிருக்காங்க..!

ராஜா
01-01-2007, 11:54 AM
ஒரு சர்தாரின் மரண ஊர்வலம்.. ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்.. வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..

" அடப் போய்யா..! இன்னிக்கு இந்தாளு செத்தாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..

"அப்படியா..? எப்படி செத்தார்..?"

" மூளைக் காய்ச்சல்லே...!"

ராஜா
01-01-2007, 11:55 AM
அஞ்சா சிங் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தாரு.. அவர் தம்பியும் ஒரு குதிரைய வாங்கிட்டு வந்துட்டாரு.. அடையாளம் வச்சுக்கறதுக்காக அஞ்சா தன் குதிரையோட வலது காதை வெட்டிட்டாரு.. ஆனா அவங்க அடுத்த வீட்டுக்காரன் ராவோடு ராவா கஞ்சா வோட குதிரை காதையும் அறுத்துட்டான்..

அசராத அஞ்சா இன்னொரு காதை வெட்ட அ.வீ.கா. இன்னொரு குதிரை காதையும் வெட்டிட்டான். இப்படியே கண்ணு காலு எல்லாம் ஒவ்வொண்ணா போயிருச்சி.

அப்புறமும் அசராத அஞ்சா தம்பிக்கிட்ட சொன்னாரு..

" கவலப் படாதடா கஞ்சா.. கருப்பு கலர் குதிரை உன்னோடது.. வெள்ளை என்னோடது..!

ராஜா
01-01-2007, 11:56 AM
நம்ம சர்தார் ரயில்ல போனாரு.. கூட இருந்த பயணிக்கிட்ட 50 ரூபாய் பணம் கொடுத்து அமிர்தசரஸ் ஸ்டேஷன்லே எழுப்பி விடச் சொன்னார்.. அந்த இன்னொரு பயணி நாவிதர்..அந்த 50 ரூபாய்க்கு இன்னும் எதாவது செய்யணும்ன்னு நெனைச்சு சர்தார் தூங்கும் போதே சவரம் வேறே பண்ணிவிட்டுட்டாரு..விடிகாலையிலே நிலையம் வந்தவுடன் எழுப்பியும் விட்டுட்டாரு..

அடிச்சு புடிச்சு எழுந்த சர்தார் எறங்கி வீட்டுக்கு ஓடினாரு.. முகம் கழுவும்போது தான் கவனிச்சாரு.. உடனே கத்தினார்..

அய்யய்ய்யோ... பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டான்..

சர்தாரிணி கேட்டுச்சு.. என்னங்க ஆச்சு..?

எனக்கு பதிலா வேறே ஆளை எழுப்பி நம்ம வீட்டுக்கு அனுப்பிட்டாண்டி அந்த எதிர் சீட்டு காரன்...!

ராஜா
01-01-2007, 11:56 AM
சர்தார் ஒருநாள் நண்பன்கிட்ட சொன்னாரு..

நான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா கடவுள் ஆகிக்கிட்டு வர்றேன்..

அப்படியா.. சொல்லவே இல்ல..

ஆமாம்..நான் எங்கே போனாலும் மக்கள் இப்போ " அடக் கடவுளே... நீ இங்கேயும் வந்துட்டியா..? " ன்னு கேட்கறாங்க..!

thoorigai
05-01-2007, 07:54 AM
ஏம்யா? எங்குருந்து கொணாந்தீரு இந்த சோக்கெல்லா......

அறிஞர்
05-01-2007, 03:12 PM
எங்காவது படித்ததை கொண்டு வரவேண்டியது தானே....

தூரிகை நீங்களும் கொஞ்சம் எடுத்துவாங்க....

மன்மதன்
06-01-2007, 05:33 PM
எல்லாமே அருமை... கலக்கல்ஸ்..

ராஜா
12-01-2007, 04:50 PM
ஒரு காட்டுவாசிகளிடையே ஒரு மத போதகர் உரையாற்றிக் கொண்டிருந்தார்..

" அன்புக் குழந்தைகளே.. கடவுள் அன்பானவர்.."

"பவானா..!"

" அவர் வல்லமை மிக்கவர்.. எல்லாப் பக்கங்களிலிருந்தும் உங்களைப் பரிவுடன் பார்த்துக் கொள்வார்.."

"பவானா..!"

" நான் உறுதியாகச் சொல்லுவேன்.. நீங்கள் எது குறித்தும் அச்சப்படத் தேவையில்லை...!"

"பவானா...!"

" எந்த ஆபத்திலிருந்தும்.. அபாயத்திலிருந்தும்.. சாத்தானிடமிருந்தும் அவர் உங்களைக் காப்பார்..!"

"பவானா....!"

அதன்பின் "பவானா" என்றால் புலி வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்னரே அந்தப் பிரசங்கி மோட்சமடைந்து விட்டார்."

ராஜா
12-01-2007, 04:51 PM
ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது. ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்..

"அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..."

"நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??"

" வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..."

" என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக் கண்டுபிடித்தீர்களா உங்கள் ஆய்வில்..?"

" மன்னிக்கவும் அய்யா.. இது...."

"நான் இன்னும் முடிக்கவில்லை..என்னுடைய தம்பி கடனாளி ஆகி குடும்பத்துடன் விஷம் குடித்தானே.. அது தெரியுமா உங்களுக்கு..?"

" தெரியாது அய்யா.."

" அவ்வளவு அவஸ்தைப் பட்ட அவர்களுக்கே நான் ஒரு பைசா கொடுக்கவில்லை.. உங்களுக்கு தருவேனா..? போய் வாருங்கள்..!"

ராஜா
12-01-2007, 04:53 PM
அதிபர் புஷ் வானுலகம் சென்றார்.. எமன் அவருக்கு தண்டனை விதித்து அதற்கான மூன்று தேர்வுகள் கொடுத்து எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொன்னான்..

முதல் அறையைத் திறந்து காட்ட, ஹிட்லரை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தார்கள்.. புஷ் தன்னால் அடி தாங்க முடியாது என்று சொல்ல அடுத்த கதவு திறக்கப் பட்டது.
அங்கு இடி-அமீனை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்கள்.. புஷ் அதுவும் முடியாதென்று மறுக்க.. அடுத்த கதவு திறந்துகாட்டும் போது எமன் சொன்னான்..

இதற்கு உமக்கு அருகதையே இல்லை.. இருந்தாலும் மூன்றாவது சாய்ஸ் இதுதான்..

அங்கு காந்தி அவர்களுக்கு எலிசபெத் டெய்லர் கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.. புஷ் மிகுந்த சந்தோஷத்துடன் இதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூற.. எமன் எலிசபெத் டைலரிடம் சொன்னான்..

" அம்மையாரே.. நீங்கள் கிளம்புங்கள்.. உங்கள் தண்டனைக் காலம் முடிந்து விட்டது.. இனி புஷ் பார்த்துக் கொள்வார்..!"

ராஜா
12-01-2007, 04:54 PM
[B][/Bஒரு வேலைக்கான நேர்காணல்..

அதிகாரி ; இதுவரைக்கும் சிறப்பா செஞ்சுருக்கீங்க. இந்த மொழியறிவுச் சுற்றுலயும் தேர்வடைஞ்சுட்டீங்கன்னா வேலை கிடைச்சுடும்.. ஓ.கே. வா. சரி சொல்லுங்க..கூட்டுக்குறைபாட்டு குழுப்பதிவு சித்தாந்தம். இது பற்றி விளக்க முடியுமா..?

ம்ம். முடியுமே.. என் சித்தப்பா மகனுக்கு இந்த வேலையைக் கொடுத்தாச்சு. நீ போகலாம் அப்படின்னு அர்த்தம்.
__________________
]

ராஜா
28-01-2007, 11:20 AM
ஹோட்டலில் சரக்கு மாஸ்டர் முதலாளியிடம்..

அய்யா.. மாவு சரியில்லே போலருக்கு.. ஜாங்கிரி உதிர்ந்து குப்பையும் கூளமுமா வருது..

சரி.. சரி.. இன்றைய ஸ்பெஷல் "குப்ஸ் 'ன்' கூல்ஸ்" ன்னு போர்டுல எழுதுங்க.. விலை கொஞ்சம் ஜாஸ்தியாப் போடுங்க..!
__________________

ராஜா
28-01-2007, 11:20 AM
[B][/ஒரு பெண் வேலை தேடி விளம்பரம் செய்திருந்தாள்..

அந்தரங்க உதவியாளர் வேலை தேவை.. கெட்ட பழக்கங்கள் எதுவுமில்லை.. கற்றுக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை..!
__________________B]

ராஜா
28-01-2007, 11:20 AM
[B][தகப்பனார் சட்டையை எடுத்து மாட்டும் போது பையை கவனித்தார்.. காசு குறைந்தது.. பையனைத் திட்டினார்.. பையன் இல்லையென்று மறுத்தான்..தகப்பனார் நம்பவேயில்லை.. அம்மாக்காரி மகனுக்கு பரிந்து பேசினாள்..

ஏங்க பிள்ளையை கரிச்சு கொட்டறீங்க..? நான் எடுத்திருக்கக் கூடாதா..?

சான்ஸே இல்லே கமலா.. இன்னும் பணம் மிச்சம் பையில இருக்கே..!
__________________/B]

ராஜா
28-01-2007, 11:21 AM
[B][கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்.. மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்.. ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது..பிலாக்கணம் பாடினாள்..

ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?

இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..

கிழட்டு மாடுகளுடன் சகவாசமா..?வெட்கமா இல்லே..?

மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..

அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?
__________________
/B]

ராஜா
28-01-2007, 11:21 AM
என்னங்க ஆபரேஷன் பண்றதுக்குள்ளேயே தியேட்டர்லேருந்து பச்சை ட்ரெஸ்ஸோட ஓடியாந்துட்டீங்க..?

இல்லே.. நர்ஸ் சொன்னாங்க.. இது சின்ன ஆபரேஷந்தான்.. டென்ஷன் ஆகாதீங்க..கடவுள் இருக்கார்.. அப்படின்னு..

சரி.. அதுக்கு எதுக்கு ஓடி வந்தீங்க..? தைரியம் தானே சொல்லியிருக்காங்க..

தைரியம் சொன்னது எனக்கு இல்லே.. டாக்டருக்கு..!
__________________

ராஜா
28-01-2007, 11:22 AM
மேலாளர் தட்டம்மையிடம்..

என்ன..? கிளார்க் உனக்கு திடீர்ன்னு முத்தம் குடுத்துட்டாரா..? அவர் ரொம்ப குள்ளமாச்சே.. எப்படிம்மா முடியும்..?

ஏன்.. என்னால குனிய முடியாதா..?
__________________

ராஜா
28-01-2007, 11:22 AM
கணேசா.. என்னப்பா சொல்றே.. " பத்து பெத்து.. எட்டு செத்து.." படத்தோட முடிவு சந்தோஷமா இருந்துச்சா..? எல்லாரும் சோகப் படம்ன்னு சொல்றாங்க..?

அட அதில்லப்பா..! படம் ஒருவழியா முடிஞ்சுதேன்னு எல்லோரும் சந்தோஷப் பட்டோம்..!
__________________

ராஜா
28-01-2007, 11:23 AM
கல்லூரிக்கும் மனநோயாளர் காப்பகத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன..?

மனநோயாளர் காப்பகத்தில இருந்து வெளியேற நல்ல முன்னேற்றம் காட்ட வேண்டும்..!

__________________

ராஜா
28-01-2007, 11:23 AM
ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தேன்.. செவிலியர் (நர்ஸ்) அனைவரும் ஆப்பிள் டிசைன் போட்ட புடவை கட்டியிருந்தார்கள்.. எனக்கு தெரிந்த செவிலியர் ஒருவரைக் கேட்டேன்..

" என்னப்பா.. எல்லாம் ஆப்பிள் டிசைன் புடவை கட்டியிருக்கீங்க..?

"அதுவா ராஜா..? டாக்டரை தூரமா வைக்கதான்..?"
____________________________________________
an Apple A Day Keeps Doctor Away...!
__________________

leomohan
28-01-2007, 11:24 AM
கல்லூரிக்கும் மனநோயாளர் காப்பகத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன..?

மனநோயாளர் காப்பகத்தில இருந்து வெளியேற நல்ல முன்னேற்றம் காட்ட வேண்டும்..!

__________________


ஐயோ இப்படி சொல்லி நம்ம கல்லூரிகளையெல்லாம் ஒன்னுமில்லாமல் ஆக்கிட்டீங்களே.

சூப்பர் தான்.

ஓவியா
28-01-2007, 11:28 AM
அண்ணா,
அனைத்து கடியுமே சூப்பர்

அதுவும் நம்ப காந்தி தாத்தா....ஹா ஹா ஹா :)

ஆப்பில் ஹீ ஹீ ஹீ :D

மொட்ட தலை ஹூ ஹூ ஹூ :p

ராஜா
28-01-2007, 11:39 AM
என்னம்மா ஓவியா.. கராத்தே கத்துக்கறியா..?

ஓவியா
28-01-2007, 11:47 AM
என்னம்மா ஓவியா.. கராத்தே கத்துக்கறியா..?

இல்ல அண்ணா

கத்துக்கொடுக்குறேன் :D

ஷீ-நிசி
28-01-2007, 11:51 AM
[B][கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்.. மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்.. ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது..பிலாக்கணம் பாடினாள்..

ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?

இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..

கிழட்டு மாடுகளுடன் சகவாசமா..?வெட்கமா இல்லே..?

மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..

அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?
__________________
/B]

ரொம்ப நாளைக்கப்புறம் ஜோக் படிச்ச பிறகு வாய்குலுங்கி சிரிச்சேன்..

மதுரகன்
28-01-2007, 06:15 PM
ஐயோ :D ஐயோ :D ஐயோ :D
சிரிப்பு ஓயவில்லை..
வெளுத்துக்கட்டுகிறீர்கள் ராஜா....

சே-தாசன்
29-01-2007, 04:28 AM
ஒருவர்: மச்சான் காலையில் இருந்து ஒரே அவுட்கோயிங்கா போகுது,விதம் விதமா றிங்டோனும் போகுது.

மற்றவர்: என்னடா சொல்றாய் புரியேல்லையே?

ஒருவர்: காலையில் இருந்து தொடர்ந்து வயித்தால போகுதடா

ராஜா
01-02-2007, 09:10 AM
காதலன் ; நீலக்கடல் எவ்வளவு அழகாக இருக்கிறது பார் கண்ணே..!

காதலி ; தினம் தான் நீலக்கடலை காட்டுறீங்களே.. இன்னிக்காவது ஒரு 4 ரூபாய் செலவழிச்சு நிலக்கடலை வாங்கிக் காட்டக்கூடாதா கண்ணாளா..?
________________________________

கேடி கபாலியோட மகளை, நம்ம இன்ஸ்பெக்டர் மகனுக்குக் கேட்டாங்களே என்னாச்சி?"

" பழக்க வழக்கம் சரியிருக்காதுன்னு கபாலி வேண்டாமுன்னு
சொல்லிட்டான்..!
__________________

டிக்டேட் பண்ணும்போது ஸ்டெனோகிட்டே சில்மிஷம் பண்ணினது தப்பா போச்சா? ஏன்?

அவ டிக்டேட் பண்ணினதை டைப் அடிச்சப்புறம் பார்த்தா இடைஇடையே ஸ்.... விடுங்க....ஆ....என்ன இது... ம்.... போங்க...ன்னு வார்த்தை சேர்ந்திருக்கு!
__________________

ஆசிரியர்:எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒருவிஷயத்த புரியவைக்க முடியலயோ அவன் ஒரு முட்டாள். புரியுதா?


மாணவர்கள்(ஒரே குரலில்)சுத்தமா புரியல சார் ...!
__________________

ஆசிரியர் : ஏண்டா எவ்வளவு சொன்னாலும் அதிகப்பிரசங்கித்தனமா பேசுற? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..

சின்னா : நல்ல மாட்டுக்கு ஏன் சார் சூடு போடணும்? அது தான் நல்ல மாடு ஆச்சே?
__________________

ஆசிரியர் : மாணவர்களே, நீங்க எல்லாரும் வைரம் மாதிரி....

சின்னா : நீங்க கூட வைரம் தான் ஸார்..

ஆசிரியர் : எப்படி சொல்றே ?

சின்னா : ஒரு வைரத்தால தானே இன்னொரு வைரத்தை அறுக்க முடியும்..?!!!!!!!
__________________

சோதனை அதிகாரி : உங்க பள்ளியில் சுமாரா எத்தனை மாணவிகள் இருப்பாங்க?

சின்னா: எங்க பள்ளியில எல்லா பொண்ணுங்களுமே சுமார் தான் சார்...!!!!
__________________

ஆசிரியர் ; கடவுள் நம்ம பாவங்களை எல்லாம் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும்..?

சின்னா ; வேறென்ன.. பாவம்தான் பண்ணனும்..!
__________________

மனோஜ்
01-02-2007, 09:23 AM
அறுமை ராஜா இன்னும் நான்:D :D :D :D இருக்கேன்

மன்மதன்
01-02-2007, 07:03 PM
ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தேன்.. செவிலியர் (நர்ஸ்) அனைவரும் ஆப்பிள் டிசைன் போட்ட புடவை கட்டியிருந்தார்கள்.. எனக்கு தெரிந்த செவிலியர் ஒருவரைக் கேட்டேன்..

" என்னப்பா.. எல்லாம் ஆப்பிள் டிசைன் புடவை கட்டியிருக்கீங்க..?

"அதுவா ராஜா..? டாக்டரை தூரமா வைக்கதான்..?"
____________________________________________
an Apple A Day Keeps Doctor Away...!
__________________

அனைத்துமே அருமை... இது சூப்பர்ர்ர்ர்............

ராஜா
03-02-2007, 10:24 AM
ஏன்ங்க.. டிரைவருக்கு பின்னால உக்காந்து இருந்தவர் எறங்கி தலை தெறிக்க ஓடுறார்..?

சென்னை வந்ததும் என்னை கொஞ்சம் எழுப்பிவிடறீங்களான்னு டிரைவர் கேட்டாராம்..!
__________________

கண்ணா ; எனக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் வரவே வராதுன்னு வாத்தியார் சொல்லிட்டார்டா..

சின்னா ; அப்படியா..? அது மாதிரி வராம இருக்க எதும் "தடுப்பு ஊசி" போட்டு இருக்கியா..?
__________________

கணவர்கள் சமைக்கிறது.. துணி துவைக்கிறது.. ஆபீஸ்ல தூங்கறது.. இப்படி வர்ற ஜோக் எல்லாம் பார்த்தா எனக்கு எரிச்சலா இருக்கு சார்..

ஏன்..?

ஜோக்குன்னா கொஞ்சமாவது கற்பனை இருக்கணும்..!
__________________

பெண்1: அந்த விஞ்ஞானி கூட ஓடி போய்ட்டு அப்பறம் எதுக்கு திரும்பி வந்துட்டே?

பெண்2: அடிபோடி அது வெறும் சோதனை ஓட்டம்'னு சொல்லி திருப்பி அனுப்பிடான் விளங்காதவன்..
________________________
திருடன் 1 ; டேய்.. போலீஸ் வந்துடிச்சு.. வா ஜன்னல் வழியா வெளியில குதிச்சு ஓடிடலாம்..

திருடன் 2 ; முடியாதுடா.. நாம இருக்கறது 13 வது மாடி..

திருடன் 1 ; மூட நம்பிக்கைக்கெல்லாம் இப்போ நேரம் இல்லே.. குதிடா முட்டாள்..
_________________________________

முதலாளி ; அடிக்கடி லீவு போடறே.. என்னை என்ன முட்டாள்ன்னு நெனைச்சியா..?

ஊழியர் ; [தலை குனிந்தவாறு] இல்லே சார்..

முதலாளி ; என்ன குனிஞ்சிகிட்டு முனகறே.. என் முகத்தைப் பாத்து சொல்லு..
___________________________________

ஆசிரியர் ; மாணவச் செல்வங்களே.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை..

சின்னா ; ட்யூபில் இருந்து பேஸ்ட் பூரா எடுத்துட்டு திருப்பி உள்ள வைக்க முடியுமா சார்..?
____________________________________

டாக்டர் சார் நான் பொழச்சுக்குவேனா..?

கண்டிப்பா..

இல்லே.. 10 க்கு 9 பேர் இந்த வியாதில செத்துருவாங்கன்னு படிச்சேன்..

அதனாலென்ன.. இன்னிக்கு காலை வரைக்கும் நம்ம ஆஸ்பத்திரியில 9 பேர் இந்த வியாதியால செத்துட்டாங்க.. சோ .. உங்களுக்கு 100% பிழைக்க வாய்ப்பு இருக்கு..
_______________________________________

சின்னாவோட அம்மா முகத்துல ஃபேஸ் பேக் போட்டுட்டு இருந்தாங்க. சின்னா எதுக்கு இப்படி பண்றேன்னு கேட்டதுக்கு முகத்தை அழகா வச்சுக்கறதுக்குன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா க்ரீமை ரிமூவ் பண்றப்போ சின்னா கேட்டான்..

ஏன் மம்மி..? முடியாதுன்னு தெரிஞ்சு போச்சா..?
________________________________________

சின்னா 5-ம் வகுப்பு பரிட்சையில தோல்வி அடைஞ்சுட்டான்.. ஹாஸ்டல்ல இருந்து அவங்க அப்பாவுக்கு தந்தி அடிச்சான்..

" அப்பா.. அஞ்சாப்பு வாத்தியாருக்கு என் படிப்பு ரொம்பப் பிடிச்சு போயிடுச்சு.. ஒன்ஸ் மோர் கேட்டுருக்காரு..!
________________________________________

மனைவி ; குடிச்சுட்டு வந்து கதவை நடு ராத்திரியில தட்டாதீங்கன்னு எத்தன வாட்டி சொன்னேன்..

கணவன் ; நான் எண்ணலே.. நீ கணக்கு வச்சிருப்பேன்னு நெனச்சேன்..!
_________________________________________

நாவிதர் ; அய்யா முகத்தை கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பி காட்டுறீங்களா..?

இந்தப் பக்கம் முடிச்சுட்டியா..?

இன்னும் இல்ல.. ஆனா காது அறுந்து தொங்கறத பார்த்தா மயக்கம் வருது..
_________________________________

ராஜா
09-02-2007, 05:34 PM
அதோ போறாரே.. அவர் பெரிய E. N. T. ஸ்பெஷலிஸ்ட்..

டாக்டரா..?

இல்லே.. ஒண்ணும் இல்லாத விஷயத்தைகூட கண்ணு, காது, மூக்கு எல்லாம் வச்சு புளுகுவார்..!
__________________
அதோ போறாரே.. அவர் அஜித் ரசிகர் மன்றத்துலேருந்து விலகிட்டாரா..? ஏன்..?

திருப்பதி படம் பார்த்துட்டு, நானும் என் தங்கச்சிகளைக் கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டுதான் என் வாழ்க்கையை அமைச்சிப்பேன்னு அப்பா அம்மாட்ட சவால் விட்டாராம்..

நல்ல விஷயம் தானே..? அதுக்கு ஏன் விலகணும்..?

நேத்து ஒரு தங்கச்சி பாப்பா பொறந்துருக்கு..!
__________________
அதோ போறாரே.. அவர் விஞ்ஞானின்னு பீலா விட்டுக்கிட்டு திரிஞ்சதைக் கண்டுபிடிச்சுட்டாங்க..

எப்படி..?

அகில உலக விஞ்ஞானிகள் மாநாட்டுல போய், பூமி தன்னைத் தானே சுத்திக்கிட்டு, சூரியனையும் சுத்துதே.. எப்போ மயக்கம் அடிச்சு விழப்போகுதுன்னு கேட்டாராம்...!
__________________
அதோ போறாரே... அவர் ஆஸ்பத்திரியில் இல்லாத வசதிக்ளே கிடையாது..

அப்படியா..?

ஆமாம்.. ஆப்பரேஷன் தியேட்டர் வாசலிலே ஒப்பாரி பாடுறவங்க போன் நம்பர் கூட எழுதி வச்சுருக்காருன்னா பாத்துக்கோயேன்..!
__________________
டாக்டர்: "உங்க மருமக ரொம்பப் பயப்படறா!"

மாமியார்: "ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான் தானே?"

டாக்டர்: "ஆபரேஷனை நல்லா பண்ணிடுவேனோன்னுதான் பயப்படறா!"
__________________
உன்னுடைய கடைசி ஆசை என்ன?"

"என்னைத் தூக்கில் போடறத வீடியோவா எடுத்து எனக்கு டிவியில் போட்டுக்காட்டுங்க!"
__________________
உங்களுக்காக 15 வருஷமா காத்திருக்கேன்னு உன் காதலி கடிதம்போட்டதும் ஆர்வமா போனியே! என்னாச்சி?"

"காதலிக்கிறப்போ அவ வாங்கித்தந்த சுண்டலுக்கு 2,438 ரூபாயை வட்டியோட கேட்கத்தான் கூப்பிட்டிருக்கா
__________________
ஒருவன்: "யோவ்! என்னய்யா அர்த்த ராத்திரியில அந்த வீட்ல இருந்து வேகமா ஓடிவந்து கம்பியை நீட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கிறே?"

திருடன்: "நான் தொழிலுக்குப் புதுசுங்க! வீட்ல பூந்து பணத்தைத் திருடிக்கிட்டு `கம்பி' நீட்டணும்னு என் தோஸ்த்து சொன்னாங்க..
__________________
"என்னங்க....நான் போட்டிருக்கிற இந்த கண்ணாடி நல்லால்லேன்னு சொன்னீங்க, உங்களுக்கு இனிமே முத்தம் குடுக்க மாட்டேன்!"

"குடுக்கவே வேண்டாம்! ஏன்னா நான் பக்கத்து வீட்டுக்காரன்!"
__________________
அம்மா மகனிடம்: நான் மாடாட்டம் உழைக்கிறேன்னு சொன்னது உண்மைதான்! அதுக்காக எனக்கு உடம்பு சரியில்லேன்னு சொன்னதுக்கு வெட்னரி டாக்டரைக் கூட்டிவர்றாடா உன் பொண்டாட்டி
__________________

மயூ
09-02-2007, 06:05 PM
வாழ்த்துக்கள் நண்பா!
வயிறு வலிக்கச் சிரித்தேன்...

மன்மதன்
09-02-2007, 06:06 PM
காது அறுந்த ஜோக்

குபீர் சிரிப்பு..

கம்பி நீட்டிய திருடன்

டுபீர் சிரிப்பு...

எல்லாமே அசத்தல்பா..

ஓவியா
09-02-2007, 07:44 PM
பூமி எப்போ மயக்கம் அடிச்சு விழப்போகுது, திருடன் `கம்பி' நீட்டணும் :D :D

அனைத்தும் தூள்

நல்லா ரச்சித்தேன் அண்ணா :D

ராஜா
12-02-2007, 07:13 AM
ரயிலில் தினமும் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது நம்ம சர்தாருக்கு...

"நீங்க பேசாம சீசன் டிக்கெட் எடுத்துடலாமே!" என்று ஆலோசனை கூறினார் நண்பர் ஒருவர்.

மறுநாள் டிக்கெட் கெளண்டரில் போய்," வெயில் சீசனுக்கு ஒரு டிக்கெட்டும் மழை சீசனுக்கு ஒரு டிக்கெட்டும் கொடுங்க!" என்று கேட்டார் நம்ம சர்தார்!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சர்தார் ; சின்ன வயசிலே ஒரு தடவை கார்லே அடிபட்டுட்டேன்..

நண்பன் ; அப்புறம் என்னாச்சு.. செத்தியா..பொழச்சியா..?

சர்தார் ; தெரியல.. ரொம்ப வருஷத்துக்கு முந்தி நடந்தது.. ஞாபகம் இல்லே..!!!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உணவு விடுதி ஒன்றில் அமர்ந்திருந்த சர்தார் பக்கத்தில் இருந்த ஒரு விளக்கைத் தேய்க்கவும் அதிலிருந்து ஒரு தேவதை வந்தது. ''ஓகே... உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன். கேள்'' என்றது அந்த தேவதை.

நம்ம சர்தாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. மின்னல் வேகத்தில் அவனுக்கு ஒரு யோசனை வந்தது. ''ம்.. குடிக்கக் குடிக்க வற்றாத ஒரு கூல்ட்ரிங்க் பாட்டில் வேண்டும்'' என்றான்.

தேவதை கையை மூடி விரிக்கவும், ஒரு கூல் ட்ரிங்க் பாட்டில் வந்துவிட்டது. அதை வாங்கி சர்தார் குடிக்கக் குடிக்க கூல்ட்ரிங்க் வந்துகொண்டே இருக்கவும் ரொம்பவும் த்ரில் ஆனான். ''சரி.. அடுத்த இரண்டு வரங்கள் என்ன?'' கேட்டது தேவதை. சர்தார் சொன்னான் - ''இதே மாதிரி இன்னும் ரெண்டு பாட்டில் கொடுத்துடுங்க!''
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நம்மவர் :- நேத்து எங்க வீட்டுல பாம்பு வந்திருச்சு ,

சர்தார் :- அய்யோ அப்புறம் ....???

நம்மவர் :- பின்ன பாம்பாட்டிய கூட்டியாந்து வந்து அடிச்சோம்

சர்தார் :- அடப்பாவிகளா பாம்பு வந்ததற்கு எதுக்கு பாம்பாட்டிய கூப்பிட்டு அடிச்சீங்க..?
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சர்தார்ஜி ஒரு கணினி நிறுவனத்திடம் எப்படி மின்னஞ்சல் அனுப்புவது என்று உதவி கேட்டு மின்னஞ்சல் ஒன்று அனுப்பினார்.

கணினி நிறுவனத்திலிருந்து நீங்கள் சரியாகத் தான் மின்னஞ்சலை அனுப்புகின்றீர்கள் என்று பதில் வந்தது.

உடனே சர்தார்ஜி, "அது சரி! வந்த மின்னஞ்சலுக்கு பதில் எப்படி அனுப்புவது?" என்று பதில் அனுப்பினார்.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சர்தார்ஜி டூ வீலரில் ஒரு லாரியைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் அவர் மிகவும் அபாயகரமான முறையில் கைகள் இரண்டையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரல்களையும், இன்னொரு கையில் ஒரு விரலையும் காட்டி, ஏதேதோ சைகை செய்து கொண்டே போனார்.

அவரின்ன் வினோதமான ஆக்சனைப் பார்த்த டிராபிக் போலீஸார் அவரை நிறுத்தி, ஏன்... இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்க, லாரியின் பின்புறம் எழுதப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார் சர்தார்ஜி. அதில், பெண்ணின் திருமண வயது 21 திரும்புமுன் சைகை செய்யவும் என்று எழுதியிருந்தது!
///////////////////////////////////////////////////////////////

நாளைக்கு என்னைத் தேடாதே... சினிமா பார்க்கப் போறேன்! என்றார் நண்பர்.

அப்படின்னா, என்னையும் சில வருடங்களுக்கு நீ தேடாதே... என்றார் சர்தார்ஜி.

ஏன்? என்றார் நண்பர்.

நான்... மெகா சீரியல் பார்க்கப் போகிறேன் என்றார் சர்தார்ஜி!

////////////////////////////////////////////////////////////////

சர்தார்ஜி வாரப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது ஏதாவது எழுதி அனுப்புவதுண்டு. அதில் ஏதாவது அபூர்வமாகப் பிரசுரமாகி, அந்த வாரப் பத்திரிகையின் காம்ப்ளிமெண்ட்ரி காப்பியும், சன்மானமும் அவருக்கு வருவதுண்டு. ஒரு முறை சர்தார்ஜியின் நாடகம் ஒன்று டெலிவிஷனில் ஒளிப்பரப்பானது. அதற்கான சன்மானம் மட்டும் சர்தார்ஜிக்கு வந்து சேர்ந்தது. கடுப்பாகிப் போனார் சர்தார்ஜி. ஏன்... இன்னும் காம்ப்ளிமெண்ட்ரி டி.வி. செட்டை எனக்கு அனுப்பவில்லை? எனக் காரசாரமாக அந்த டி.வி. நிலையத்துக்குக் கடிதம் எழுதினார் சர்தார்ஜி.
/////////////////////////////////////////////////////////////////

சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

அடியேய்... நானும், நீயும் அமெரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது என்றார் சர்தார்ஜி.

அதைக் கேட்ட அவரது மனைவி, அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்... என்றாள்.

அதற்கு சர்தார்ஜி, என்னடி தெரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே? என்றார் கோபமாக!...

சே-தாசன்
12-02-2007, 07:22 AM
ஐயோ வயிறு வலிக்குது.

ஓவியா
12-02-2007, 10:47 PM
தூள் அண்ணா

ராஜா
13-02-2007, 08:22 AM
டாக்டர் அய்யா.. நான் அவசியம் கண்ணாடி போட்டாகணும்ன்னு நெனைக்கிறேன்..

நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்.. இந்தாப்பா தம்பி.. இவரை பக்கத்து கட்டிடத்துல இருக்கற டாக்டர் வீட்லே விட்டுட்டு வா..!
________________________________________________________________
டாக்டர் அய்யா.. நான் காப்பி குடிச்சா கண்ணு வலிக்குது..

கப்புல இருக்குற ஸ்பூனை எடுத்துட்டு குடிங்க.. சரியாயிடும்..!
_________________________________________________________________
டாக்டர் அய்யா.. எப்போதும் எனக்குள்ள ஒருத்தர் பேசிக்கிட்டு இருக்கற மாதிரியே இருக்கு..

சரி.. சரி..ஒவ்வொருத்தரா குறையை சொல்லுங்க..
___________________________________________________________________
டாக்டர் அய்யா.. மனசு செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருது..

இந்த மாத்திரையை 100 சுத்துக்கு ஒன்னுன்னு சாப்பிடுங்க.. சரியாயிடும்..!
____________________________________________________________________
நேத்து ராத்திரி ரயில்ல போறது மாதிரி கனவு வந்தது டாக்டர்..

இதுக்கு முன்னால இப்படி எதாவது கனவு வந்துச்சா..?

ஆமா.. டாக்டர்.. முந்தாநாள் டிக்கட் ரிசர்வ் பண்ற மாதிரி வந்துச்சு..
_____________________________________________________________________
பியூலாஸ்ரீ ; வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாகிக்கிட்டு வருது டாக்டர்..

டாக்டர் ; ஏன் அப்படி சொல்றீங்க மேடம்..?

பியூலாஸ்ரீ ; விவாகரத்து-ங்குற கான்செப்ட் ஒன்னு இருக்குறதையே மறந்துட்டு இதே கணவரோட ரெண்டு வருஷமா இருந்துட்டேன்...!
_____________________________________________________________________

ராஜா
07-06-2008, 04:05 PM
இதையும் கொஞ்சம் பாருங்க மக்கா..!

அன்புரசிகன்
07-06-2008, 04:30 PM
டாக்டர் அய்யா.. நான் அவசியம் கண்ணாடி போட்டாகணும்ன்னு நெனைக்கிறேன்..
நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்.. இந்தாப்பா தம்பி.. இவரை பக்கத்து கட்டிடத்துல இருக்கற டாக்டர் வீட்லே விட்டுட்டு வா..!

அவர் யார்வீட்டிலும் அடி உதை என்பன வாங்காமல் வரலியே....டாக்டர் அய்யா.. நான் காப்பி குடிச்சா கண்ணு வலிக்குது..
கப்புல இருக்குற ஸ்பூனை எடுத்துட்டு குடிங்க.. சரியாயிடும்..!

நம்ம மலரு வீட்ல அல்வா சாப்பிட்டாலே பல் வலிக்கிறதாமே....


டாக்டர் அய்யா.. எப்போதும் எனக்குள்ள ஒருத்தர் பேசிக்கிட்டு இருக்கற மாதிரியே இருக்கு..
சரி.. சரி..ஒவ்வொருத்தரா குறையை சொல்லுங்க..

திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிடுங்கோ....


நேத்து ராத்திரி ரயில்ல போறது மாதிரி கனவு வந்தது டாக்டர்..
இதுக்கு முன்னால இப்படி எதாவது கனவு வந்துச்சா..?
ஆமா.. டாக்டர்.. முந்தாநாள் டிக்கட் ரிசர்வ் பண்ற மாதிரி வந்துச்சு..

ரொம்ப ச்சீப்பான கனவாயிடுச்சே. காண்றது தான் காண்றது ஒரு ஃப்ளைட்டில் போறமாதிரி காண்றது....


பியூலாஸ்ரீ ; வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாகிக்கிட்டு வருது டாக்டர்..
டாக்டர் ; ஏன் அப்படி சொல்றீங்க மேடம்..?
பியூலாஸ்ரீ ; விவாகரத்து-ங்குற கான்செப்ட் ஒன்னு இருக்குறதையே மறந்துட்டு இதே கணவரோட ரெண்டு வருஷமா இருந்துட்டேன்...!

ஒரு வல்லாரை தோட்டமே அந்த கணவனுக்கு எதிரியாக (நண்பனாக) இருக்கிறதே....
கலக்கல் மாப்பு...

SathyaThirunavukkarasu
07-06-2008, 05:21 PM
நகைச்சுவை அருமை தொடர்ந்து தாருங்கள்

பூமகள்
07-06-2008, 05:58 PM
சர்தார்ஜீயின் அறிவாற்றலும்... வரம் கேட்கும் சமயோஜித புத்தியும் நினைச்சி நினைச்சி சிரிக்க வைக்கிறது அண்ணா..!!

அசத்தலோ அசத்தல்.. பட்டைய கிளப்புறீங்க போங்க..!! ;)

அக்னி
08-06-2008, 08:14 PM
நேற்றிரவு...
விழித்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்... நித்திரை வந்து என்னை அழுத்த, நான் இந்தத் திரியை அழுத்த,
அப்புறம் நித்திரை ஓடியே போச்சு...

அனைத்தையும் ரசித்தேன்... சிரித்தேன்... மகிழ்ந்தேன்...

SathyaThirunavukkarasu
29-06-2008, 01:59 PM
சர்தார் : சர்தார் ஒரு ஆங்கிலேயரை விருந்திற்கு அழைத்திருந்தார், விருந்தில் தயிர் பரிமாறப்பட்ட்டது.
ஆங்கிலேயர்: தயிரைப்பார்த்து என்ன இது என்று கேட்டார்
சர்தார் : சர்தார்ஜிக்கு தயிரை ஆங்கிலத்தில் ஆங்கிலத்தில் சொல்லத்தெரியவில்லை. உடனே "Milk sleeping in night, morning
becomes tight" என்று கூறினார்


ஒரு சர்தார்ஜி ரயிவே துறையை ஏமாற்ற நினைத்தார், மிகுந்த யோசனைக்கு பின் பயணசீட்டு வாங்கினார் ஆனால் பயனல் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்.


ஒரு சர்தார்ஜி ATM-ல் பணம் எடுத்தார் அப்பொழுது பின்னாலிருந்த்வர் கூறினார் உங்களுடைய கடவு எண் எனக்கு தெரியும் அது 4 * என்று கூறினார்,
உடனே சர்தார்ஜி ஹா! ஹா! ஹா! இல்லையே என்னுடைய கடவு எண் 1234 என்றார்.


சர்தார்ஜி Air india travels -க்கு phone செய்து ஜலந்தருக்கு போக எவ்வளவு நேரம் ஆகும் என்றுகேட்டார்
just a sec என்று customer service assistant சொல்ல
உடனே சர்தார்ஜி நன்றீ என்று கூறி phone-ஐ வைத்துவிட்டார்.


சர்தார்ஜி தொலைக்காட்சிபெட்டி வாங்க கடைக்கு சென்றார், கடைக்காரரிடம் உங்களிடம் வண்ணதொலக்காட்சி பெட்டி உள்ளதா என்று கேட்டார்
கடைக்காரர் உள்ளது என்றார் உடனே சர்தார்ஜி பச்சைக்கலர் ஒன்று தாருங்கள் என்றார்.


முட்டாள்தனத்தின் உச்சம், இரு சர்தார்ஜிகள் motarcycle-ல் ஜன்னலோர சீட்டிற்கு அடித்துக்கொண்டது.

ராஜா
29-06-2008, 02:17 PM
ஹா... ஹா.. சூப்பர் நண்பரே..!

அதிலும் ஜன்னல் ஓர சீட்டுக்கு சண்டை போட்டது... அருமை..!

சிவா.ஜி
29-06-2008, 02:48 PM
பாவம் சர்தார்கள்...சகோதரி சத்யாவிடம் மாட்டிக்கொண்டு அல்லோலகல்லோலப் படுகிறார்கள்...ரசித்தேன்...ஹி...ஹி..

SathyaThirunavukkarasu
29-06-2008, 05:50 PM
ராஜா அவர்களுக்கும், சிவா அண்ணாவிற்கும் நன்றி

ராஜா
26-08-2008, 07:13 AM
______________________________________________________
______________________________________________________

வீட்டுக்காரரும் வேண்டாத விருந்தாளியும்...

வீ.கா.; மார்க்கெட்டுக்கு போய் கொஞ்சம் கறிகாய் வாங்கிட்டு வரீங்களா..?

விரு ; ஐயோ.. எனக்கு காய்கறி வாங்கத் தெரியாதே..

வீ.கா.; சரி.. காய்கறி நானே வாங்கிட்டு வந்துட்டேன்..கொஞ்சம் நறுக்கி
தரீங்களா..?

விரு ; ஐயோ.. கையை வெட்டிக்குவேன்.. என்னால் ஆகாது.

வீ.கா.; சரி.. சமையல் ஆயிடுச்சு.. சாப்பிட வரீங்களா..?

விரு.; ஹி..ஹி.. எல்லாத்துக்கும் மறுப்பு தெரிவிக்கறது சரியில்ல.. இதையாவது
கேட்கணுமில்ல.. இதோ வர்ரேன்.

______________________________________________________
___தமிழ் நகைச்சுவைத் தனியினம். 17-04-07.______________

ராஜா
26-08-2008, 07:14 AM
_____________________________________________________
_____________________________________________________

நோயாளி.; ..டாக்டரய்யா..! வயித்துப்போக்கு அரெஸ்ட்
ஆயிடும்ன்னு மாத்திரை கொடுத்தீங்க.. மறுபடி வந்துடிச்சே...!

டாக்டர்.; . கவலைப்படாதீங்க.. "ஜாமீன்" ல வந்திருக்கும்..
இப்போ "அரெஸ்ட்" பண்ணிடறேன்..!
______________________________________________________
_______தமிழ் நகைச்சுவைத் தனியினம்.14-04-07._______________

ராஜா
26-08-2008, 07:17 AM
OLD IS GOLD.. !

═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬

அன்புச் சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...!

கண்ணம்மா ; ஏங்க.. நமக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆகுது.. அப்போலேருந்து என் சமையலைக் குறை சொல்லிகிட்டுதான் இருக்கீங்க..
இன்னும் என் சமையலை நீங்க சாப்பிட்டு பழகலைன்னா அதுக்கு
நானா பொறுப்பு..?
_________________

ராஜா ; ஏம்மா .. இது நல்லா டேஸ்டா இருக்கே..? என்ன இது..?

கண்ணம்மா ; அடப் பாவி மனுஷா... இது தண்ணிங்க..

ராஜா ; அப்படியா.. எதிலே தயார் பண்ணது இது..?
_________________

கண்ணம்மா.. கல்யாணத்துக்கு முந்தி நீ விதம் விதமா
சமைப்பேன்னு சொன்னாங்க..இப்படி உப்பில்லாம,
உறைப்பில்லாம, புளிப்பில்லாம, ருசியில்லாம,
சமைக்கிறதைத்தான் சொன்னாங்கன்னு இப்பத்தாம்மா புரியுது..!
_________________

ஏங்க.. பஸ்ஸில யாரோ ஒரு அழகான பொண்ணு கூட ஒண்ணா
உக்காந்து வந்தீங்களாமே..? ரொம்ப ஜாலியா..?

அட நீ ஒண்ணும்மா..! கொஞசம் கூட வெக்கப்படாம என்
பக்கத்துல உக்காந்து வந்தா என்ன அர்த்தம்..?எனக்கு ரொம்ப வயசாயிடுச்சுன்னுதானே..?
_________________

வீட்டுக்கு வருகை தந்த ஆதவனும் நானும்...

என்ன அய்யா.. கண்ணம்மா அக்கா கொஞ்சம் முரட்டு சுபாவமோ..?

ஹி..ஹி.. எப்படி தெரியும்..?

அங்கங்கே பேண்டேஜ் துணியும் டிஞ்சர் பாட்டிலும் வச்சிருக்கீங்களே..!

═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬

tamilambu
26-08-2008, 07:34 AM
இவ்வளவு நகைச்சுவைகளையும் எங்கேதான் பொறுக்கிறிங்களோ...
சிரிப்பு தாங்கமுடியல்ல...

அமரன்
26-08-2008, 07:41 AM
விருந்தாளி=விருந்தாழி
மருத்துவர்களை வைத்து மனம் நோகும் படியான நகைச்சுவைகளை தருவோர் மத்தியில் நகைச்சுவை பேசும் வைத்தியர். இவரைப் போன்ற மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்க எனக்கு விருப்பம்.
அடுத்தது நிசமாவே தங்கம்

ராஜா
31-08-2008, 02:05 PM
மனைவி: அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய "கொடுத்து வைத்தவள்..."

கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்....?

பூமகள்
31-08-2008, 03:56 PM
ஹீ ஹீ... புத்திசாலி மனைவி..!!

ஒரே கல்லில் இரு மாங்காய்..! இதுக்கு பேரு தான் வஞ்சப் புகழ்ச்சியோ?? அல்லது இரட்டுற மொழிதலோ?? எதுன்னு சொல்லுங்கப்பா...

இப்படித்தான் குத்தாம குத்திக் காட்டனும்.. அப்பவாச்சும் வரதட்சணை இனி வாங்க மாட்டேன்னு மத்தவங்க சொன்னா சரி தான்.. ;)

பாராட்டுகள் ராஜா அண்ணா.

மதுரை மைந்தன்
31-08-2008, 03:57 PM
பேத்தி: தாத்தா தாத்தா ஒரு கதை சொல்லுங்க

தாத்தா: ஒரு ஊர்லே ஒரு சாமியார் இருந்தார்

பேத்தி: போங்க தாத்தா செக்ஸ் கதையெல்லாம் சொல்லாதீங்க

(இந்த ஜோக்கை கமல ஹாஸன் தன்னிடம் சொன்னதாக கவிஞர் கபிலன் சொன்னார் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில்)

aparajithc.achan
23-04-2009, 10:22 AM
நகைச்சுவைத் துணுக்குகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

SathyaThirunavukkarasu
26-04-2009, 03:51 PM
ஒரு சர்தார் காட்டுபகுதி வழியாக வந்துகொண்டு இருந்தபோது ஒரு மலைபாம்பு மரத்தில் தொங்கி கொண்டு இருந்ததை கவனித்தவர்
”பாம்பை பார்த்து சும்மா தொங்காதே அம்மாவ complan வாங்கிதரசொல்லு” னாரம்

பாரதி
26-05-2009, 05:30 PM
இந்த சிரிப்புத்துணுக்குகள் ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
------------------------------------------------------------

மனைவி: என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
கணவன்: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.


டாக்டர்: நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
சர்தார்: அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர். ..!!?


வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒரு பெண்ணை.
வக்கீல்: (கோபத்துடன்) பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..

ஓவியா
26-05-2009, 08:13 PM
முன்பு படித்த அதே சிரிப்புசுவைகளை மீண்டும் ருசித்தேன்.

கொடுத்து வளங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

பாரதி
01-06-2009, 09:47 AM
கடுமையாக தவமிருந்தவனின் நிலையைக்கண்டு இறைவன் அவன் முன் தோன்றினார்.

”உன் தவத்தில் மகிழ்ந்தேன். என்ன வேண்டுமோ கேள்” என்றார் இறைவன்.

“ஒரு வேலை, பை நிறைய பணம், வண்டி முழுதும் பெண்கள்” - வேண்டினான் அவன்.

அதன் பிறகு,
----------------------
----------------------
----------------------
அவன் மகளிர் மட்டும் பேருந்தில் நடத்துனராக அமர்ந்திருந்தான்!

பரஞ்சோதி
01-06-2009, 09:58 AM
ஹா! ஹா!

நடத்துநர் வேலையா சூப்பர்

பரஞ்சோதி
01-06-2009, 10:03 AM
ஒரு சர்தார் காட்டுபகுதி வழியாக வந்துகொண்டு இருந்தபோது ஒரு மலைபாம்பு மரத்தில் தொங்கி கொண்டு இருந்ததை கவனித்தவர்
”பாம்பை பார்த்து சும்மா தொங்காதே அம்மாவ complan வாங்கிதரசொல்லு” னாரம்

ஹி ஹி

அவரே பாம்பிற்கு காலை உணவாக மாறாமல் இருந்தால் சரி :lachen001:

பாரதி
10-07-2009, 05:25 PM
சர்தார் ஒரு தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் பயணச்சீட்டு பரிசோதகர் அவரிடம் பயணச்சீட்டை சோதிக்க கேட்கும் போதுதான் அவர் அதை எங்கோ தவற விட்டதை உணர்ந்தார். உடனே உரத்த குரலில் அழ ஆரம்பித்தார்.

ஒரு வழியாக அவரைத் தேற்றிய பரிசோதகர் தான் அபராதம் எதுவும் விதிக்கப்போவதில்லை என்று சொன்னார். அதற்கு அந்த சர்தார், "நான் ஒன்றும் அதற்கு அழவில்லை; பயணச்சீட்டில்தானே நான் எங்கே செல்ல வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அது இல்லாமல் நான் எங்கே செல்வது என்பது எப்படி எனக்குத்தெரியும்?" என கேட்டபடியே அழ ஆரம்பித்தார்!

அறிஞர்
10-07-2009, 09:00 PM
பாரதி கையில் சர்தார் ரொம்பவே கஷ்டப்படுகிறார்.

பாரதி
11-07-2009, 04:27 AM
சர்தார் தெருவில் நடந்து கொண்டிருந்த போது, ஒரு சுவற்றில் "இதைப்படிப்பவன் முட்டாள்" என எழுதியிருந்தது.
அதைப்படித்ததும் சர்தாருக்கு மிகவும் கோபம் வந்தது.
சுவற்றில் எழுதி இருந்ததை அழித்து விட்டு, "இதை எழுதியவன் முட்டாள்" என எழுதிவிட்டு கம்பீரமாக நடக்க ஆரம்பித்தார்.

பாரதி
11-07-2009, 04:41 AM
வீர்சிங்: பல்பீர், சந்தைக்கா போயிட்டு வரே...?
பல்பீர் : ஆமா.
வீர்சிங்: பைக்குள்ளே என்ன வச்சிருக்கே..?
பல்பீர் : கோழி
வீர்சிங்: பைக்குள்ளே எத்தனை கோழின்னு பார்க்காம சொல்லிட்டா எனக்கு ஒரு கோழி தர்றியா...?
பல்பீர்: ஒரு கோழி என்ன... மொத்தமா ரெண்டு கோழியையும் நீயே எடுத்துக்க..!
வீர்சிங்: அஞ்சு கோழி... சரியா...??

மன்மதன்
14-07-2009, 11:11 AM
வீர்சிங் கரெக்டாத்தான் சொல்லியிருக்கிறார்.. ஆனால் முன்கூட்டியே சொல்லிட்டார்..ஹிஹி..

பாரதி
15-07-2009, 07:33 PM
வீர்சிங் கரெக்டாத்தான் சொல்லியிருக்கிறார்.. ஆனால் முன்கூட்டியே சொல்லிட்டார்..ஹிஹி..

அட... ஆமா மன்மதன்..!!!!!
-----------------------------------------------------------------

வீர்சிங்கும், பல்பீர்சிங்கும் ஒரு காரில் வெடிகுண்டு ஒன்றை இரகசியமாக மாட்டிக்கொண்டிருந்தனர்.

பல்பீர் : இந்த வெடிகுண்டை வைக்கிறதுல உனக்கு பயமே இல்லையா..?

வீர்சிங் : பயம்கிறதே எங்க பரம்பரையிலேயே கிடையாது.

பல்பீர்: இந்த குண்டை வைக்கும்போதே வெடிச்சிருச்சின்னா நீ என்ன செய்வ..?

வீர்சிங் : அப்படி ஏதாவது நடந்ததுன்னா, சரியா வைக்க இன்னொரு வெடிகுண்ட பைல வச்சிருக்கேனே...:lachen001:

பாரதி
20-09-2009, 05:52 AM
ஆசிரியர் : நான் உன்னிடம் முதல் நாள் ஒரு ஜோடி முயல்கள் கொடுப்பேன். அடுத்த நாள் இரண்டு ஜோடி முயல்கள் கொடுப்பேன். உன்னிடம் அப்போது மொத்தம் எத்தனை முயல்கள் இருக்கும்?

வீர்சிங்: ஏழு

ஆசிரியர் : நான் சொல்வதை நன்றாக கவனித்து பதில் சொல். மூன்று ஜோடி முயல்களை கொடுத்தால் உன்னிடம் எத்தனை முயல்கள் இருக்கும்?

வீர்சிங் : ஏழு

ஆசிரியர் : நான் உன்னிடம் முதல் நாள் ஒரு ஜோடி பீர் பாட்டில்கள் கொடுப்பேன். அடுத்த நாள் இரண்டு ஜோடி பீர்பாட்டில்கள் கொடுப்பேன். உன்னிடம் அப்போது மொத்தம் எத்தனை பீர் பாட்டில்கள் இருக்கும்?

வீர்சிங் : ஆறு.

ஆசிரியர் : இது சரி. ஆனால் முயல்கள் மாத்திரம் ஏன் ஏழு வருகின்றன?

வீர்சிங் : ஏன் என்றால் என்னிடம் ஏற்கனவே ஒரு முயல் இருக்கிறதே!

பாரதி
20-09-2009, 06:13 AM
வீர்சிங் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கொசு அவரது காதருகில் வந்து ரீங்காரமிட்டது. அவர் காதை மூடிக்கொண்டு தூங்க முயற்சி செய்தார். இருந்தாலும் கொசு ரீங்காரம் இடுவதை நிறுத்தவில்லை. இதனால் அவருக்கு தூக்கம் போய்விட்டது. வீர்சிங்கிற்கு சரியான கோபம்... கொசுவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.

நீண்ட நேர முயற்சிக்கு பிறகு கொசுவை பிடித்தார். ஆனால் அவர் பிடித்ததில் கொசு இறந்துவிட்டது. ஆனல் அதிலிருந்து இரத்தம் எதுவும் வரவில்லை. அவர் கொசுவிடம்.... நல்லா தூங்கு..... நல்லா தூங்கு.... என்று மெதுவாக கூறி தலையணையில் படுக்க வைத்தார். சிறிது நேரம் பொறுமையாக காத்திருந்தார். கொசுவிடம் எந்த அசைவும் இல்லாததைக் கண்டு.... அது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டதாக நினைத்தார்.

மெதுவாக கொசுவின் அருகில் சென்று .... கொசு சத்தமிடுவதைப் போல சத்தமாக ரீங்காரமிட்டார். ”இப்ப தெரியுதா என் கஷ்டம் எவ்வளவுன்னு”... என்று முணுமுணுத்தவாறே மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.


நன்றி : ஹிந்தி நகைச்சுவைத்தொகுப்பு.

ராஜா
28-09-2009, 08:30 AM
சரியான கொசுக் கொலையாக இருக்கிறதே..!

மனம்விட்டுச் சிரிக்க நல்ல நல்ல நகைச்சுவைகள்..

பகிர்வுக்கு நன்றி பாரதி..!

ஓவியன்
28-09-2009, 09:26 AM
ஆஹா ராஜா அண்ணா வந்தாச்சு, இனிமேல் ஆரம்பமாகப் போகுது சிரிப்புக் காலம், மறுபடியும்..!! :)

samuthraselvam
29-09-2009, 06:19 AM
சிங் நகைச்சுவை அனைத்தும் அருமை.... பகிர்வுக்கு நன்றி பாரதியண்ணா....

பாரதி
01-03-2010, 04:37 PM
வீர்சிங்கின் மனைவி : நான் செத்துட்டா அப்புறமா நீங்க என்ன செய்வீங்க?
வீர்சிங் : நானும் செத்துடுவேன்.
வீர்சிங்கின் மனைவி : என் மேலே அவ்ளோ பாசமா..?
வீர்சிங் : ரொம்ப சந்தோசப்பட்டாலும் ஹார்ட் அட்டாக் வந்திருமாம்.

அக்னி
01-03-2010, 04:41 PM
சூப்பர் அட்டாக்...

அண்ணி கண்ணில மட்டும் இந்தப் பதிவு மாட்டிச்சு...

சிவா.ஜி
01-03-2010, 04:51 PM
இதைப்படிச்சதும் எனக்கு மின்னஞ்சல்ல வந்த இன்னொரு நகைச்சுவை நினைவுக்கு வருது.

ஒரு சர்தார்ஜியும் அவரது மனைவியும் ஓயாமல் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள். அன்று சண்டையின் தீவிரம் அதிகமாகி...சர்தார்ஜி ஆண்டவனை வேண்டுகிறார்

'கடவுளே இந்த ராட்சசிக்கிட்ட இருந்து காப்பாத்த சீக்கிரமா என்னை உன்கிட்ட கூப்ட்டுக்கோ'

உடனே மனைவியும்,

'எதிலுமே விட்டுக்கொடுக்காத இந்த பாசமில்லாத ஆள்கிட்டருந்து காப்பாத்த என்னையும் உன்கிட்ட சீக்கிரமா கூப்ட்டுக்கோ'

என்றதும்....சர்தார்ஜி,

"கடவுளே இந்தமுறை நான் விட்டுக் கொடுக்கிறேன்...என் மனைவியின் கோரிக்கையை உடனே நிறைவேத்து..."

பாரதி
01-03-2010, 04:53 PM
கடை வீதியில்....

வீர்சிங்கின் மனைவி : ஹும்... உங்களை கட்டிக்கிட்டதுல நான் என்னத்த கண்டேன்..? கழுத்து இருக்கு, நெக்லஸ் இல்ல... கை இருக்கு... தங்க வளையல் இல்ல.... விரல் இருக்கு.... மோதிரம் இல்ல.... கொஞ்சமாவது யோசிச்சீங்களா..?

வீர்சிங்: இப்ப எங்கிட்ட கூடத்தான் பர்ஸ் இருக்கு... பணம் இல்ல. இதுக்கெல்லாம் யோசிக்க முடியுமா...?

சிவா.ஜி
01-03-2010, 04:58 PM
ஆமா....இப்ப எனக்குத் தலையிருக்கு மூளையில்லை....இதுக்கெல்லாம் யோசிக்க முடியுமா?

பாரதி
01-03-2010, 05:06 PM
சாப்பிடும் போது....
வீர்சிங் : இன்னைக்கு சாப்பாடு உங்கம்மா தயார் செஞ்சாங்களா...?

வீர்சிங்கின் மனைவி : ஆமா...!! எப்படி கண்டு பிடிச்சீங்க..!

வீர்சிங் : வழக்கமா சாப்பாட்டுல கருப்பு தலைமுடிதான் கிடக்கும். இன்னைக்கு வெள்ளைமுடியா இருக்கு... அதனாலதான்....

பாரதி
01-03-2010, 05:07 PM
ஆமா....இப்ப எனக்குத் தலையிருக்கு மூளையில்லை....இதுக்கெல்லாம் யோசிக்க முடியுமா?

நல்ல வேள சிவா... நான் கூட முதல் தடவையா படிக்கும் போது.... தப்பா படிச்சுட்டேன்....:lachen001:

அக்னி
01-03-2010, 05:10 PM
2 பேரோட க்ரைம் ரேட் ஏறிக்கிட்டே போகுதாமே...
2 பேர் ஓடறத நெனச்சுப் பார்த்தாலே குஷி ஏறுது...


நல்ல வேள சிவா... நான் கூட முதல் தடவையா படிக்கும் போது.... தப்பா படிச்சுட்டேன்....:lachen001:
நீங்களுமா... :icon_ush:

பாரதி
01-03-2010, 05:25 PM
திருவிழாக்கூட்டத்தில்..

வீர்சிங் மனைவி: இவ்ளோ கூட்டமா இருக்கே...! இதுல நான் காணாம போய்ட்டா என்ன செய்வீங்க?

வீர்சிங் : பேப்பர்ல விளம்பரம் கொடுப்பேன்.

வீர்சிங்கின் மனைவி: என்னான்னு விளம்பரம் கொடுப்பீங்க?

வீர்சிங் : எங்கிருந்தாலும் நலமோடு வாழ்க.. அப்ப்படீன்னு.

அன்புரசிகன்
01-03-2010, 08:49 PM
ஆமா....இப்ப எனக்குத் தலையிருக்கு மூளையில்லை....இதுக்கெல்லாம் யோசிக்க முடியுமா?
அது அப்படியல்ல... தலையிருக்கு ஆனா முளைக்கல.... அப்படி வரணும். :lachen001:

இளசு
01-03-2010, 09:36 PM
ஹாஹ்ஹ்ஹா!

பாரதி - வீர்சிங் மற்றும் குழு உன்னிடம் சிக்கி சின்னாபின்னமாகும் காட்சிகள்...
ஒவ்வொன்றுக்கும் வாய்விட்டு சிரித்தேன்....


-------------------------------

பின்குறிப்பு : அக்னி -சிவாவின் தலையாய விவாதப்பதிவுகளை நான் வாசிக்கவே இல்லை..!!!!!!

அக்னி
04-03-2010, 09:37 AM
பின்குறிப்பு : அக்னி -சிவாவின் தலையாய விவாதப்பதிவுகளை நான் வாசிக்கவே இல்லை..!!!!!!
ஏன் அண்ணா பின்குறிப்பில் ஏதும் எழுதவில்லை... :cool: :rolleyes:

பாரதி
06-03-2010, 04:19 PM
நீதிபதி : போன வருடம் உன் முதல் மனைவி கார் விபத்தில் இறந்தாள். இப்போது உன் இரண்டாவது மனைவி விஷம் குடித்து இறந்திருக்கிறாள். ஏன் இப்படி நடந்தது?

வீர்சிங்: ஐயா, ரெண்டாவது பொண்டாட்டிக்கு கார் ஓட்டத் தெரியாதுங்களே.

நீதிபதி : ....?

பாரதி
06-03-2010, 04:39 PM
கடையில்...

முதலாளி: (கோபத்துடன்) ஒரு மணி நேரமா மணி அடிச்சிட்டு இருக்கேனே... ஏன்...கேட்கலையா..?

வீர்சிங்: ஐயா.... நீங்க முதலாளி! ஒரு மணி நேரம் என்ன.... ஒரு நாள் முழுக்க கூட மணி அடிக்கலாம். அதையெல்லாம் நான் எப்படீங்க கேக்குறது?

சிவா.ஜி
06-03-2010, 04:51 PM
ஆஹா....ஆஹா....அசத்தல். அதுவும், மணியடிச்ச முதலாளிக்கு வீர்சிங்கின் பதில் டாப்.

பகிர்வுக்கு நன்றி பாரதி.

ஜனகன்
06-03-2010, 10:10 PM
வீர்சிங்:என் மனைவியை குயிலே, மயிலே என்று கொஞ்சியது தபாய் போச்சு.

வீர்சிங்கின் நண்பன்; ஏன்? என்னவாகி விட்டது?

வீர்சிங்: குயில் மாதிரி பாடுகிறேன் என்றாள்,
என் காத்து "கப்"என்று அடைத்துக்கொண்டு விட்டது.
மயில் மாதிரி ஆடுகிறேன் என்று வீட்டு மேசை மீது ஆடினாள்,
மேசை உடைந்து போய் விட்டது.

வீர்சிங்கின் நண்பன்; !!!!!!!!!???????????