PDA

View Full Version : சவால்.இந்த விடுகதைக்கு பதிலைச் சொல்லுங்கராஜா
05-11-2006, 07:29 AM
ஒரு கணவன் மனைவி குழந்தை..இருந்தாங்க..ஒரு நாள் புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சண்டை..அதிசயமா (!) பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு வீட்டைவிட்டு வெளியே போயிட்டா..புள்ளையையும் தூக்கிக்கிட்டுதான்..
ரெண்டுபெரும் இல்லியா..அய்யா சந்தோஷமா 1 வாரம் இருந்தார்..அப்புறம் முடியலே..
தேடிக்கிட்டு போனார்..ஒரு இடத்துலே கொழந்தை மட்டும் இறந்து கெடந்தது..பக்கத்துலே நின்னுகிட்டு இருந்தவன் கிட்டே புருசன்காரன் என்னாச்சுன்னு கேட்டான்..
அந்தாளு வெவகாரமான பதிலைச் சொன்னான்..
"இந்த புள்ள இன்னிக்கு (திங்கள் தான் செத்துச்சு..ஆனா இந்த சாவுக்கு காரணமான ஆள் நேத்தே (நாயிறு) செத்துட்டாப்பல.!
அந்த ஆள் செத்ததும் அதுக்கு முதல் நாள்( சனி) செத்துப்போன ஒரு உயிராலேதான்..
அந்த உயிர் போக காரணமான விசயம், அதுக்கு முதல் நாளே(வெள்ளி) மன்டையைப் போட்டுட்டுது..
அந்த விசயத்தை அடிச்சு கொன்னது எற்கனவே ( வியாழன்) செத்துப்போனதும், அதை வெட்டிக் கொன்னது முதல் நாளெ ( புதன்) செத்ததும் தான்யா கொடுமை.." அப்படின்னு ஒரு ஏழரையை அவுத்து விட்டான்.. !!!!
நம்ப ஆளு அசந்து போயி, புள்ள செத்த சோகத்தையும் மறந்து இதுக்கு விடை கண்டுபிடிச்சுட்டுதான் மறுவேலைன்னு அங்கேயே உக்காந்துட்டான்..
உங்களுக்கு விடை தெரிஞ்சா சொல்லுங்களேன் பார்ப்போம்..!!!

ஓவியா
05-11-2006, 03:49 PM
விடுகதையை படித்தேன்
விடை தெரியவில்லை

மன்னிக்கவும்

யாராவது புத்திசாலி வந்து பதில் போடவும்
நன்றி

மன்மதன்
06-11-2006, 09:55 AM
இன்னாபா இது தலைய சுத்த வக்கிது.;) ;) . வடைய சீக்கிரம் சொல்லுபா...:D :D

பரஞ்சோதி
06-11-2006, 05:46 PM
ஏலே மன்மதா, என்னமோ இன்னைக்கு தான் உனக்கு தலை சுத்துவது போல் சொல்கிறாய்.

- போட்டு வாங்கிய திருப்தியில்
பரம்ஸ்

பென்ஸ்
06-11-2006, 06:03 PM
இரும்பு செத்து அருவா ஆனது புதன் கிழமை
அருவா வெட்டி புலி செத்தது வியாழகிழமை
புலி அடிச்ச ஆடு நோய்வாய் பட்டு செத்தது வெள்ளிகிழமை...
அட்க்கை தின்ன நாய் பேய் நாயாகி அந்த பென்னை கடிச்சு செத்தது சனி கிழமை
அந்த அம்மினி நாய் கடியால செத்தது ஞாயித்து கிழமை
அம்மா பால் இல்லாமல் குழந்தை செத்தது திங்கள் கிழமை...

ஒத்து வாறமாதிரி இருக்கா???

ராஜா
06-11-2006, 06:11 PM
இல்லீங்.................ணா..!

ஓவியா
06-11-2006, 06:15 PM
இரும்பு செத்து அருவா ஆனது புதன் கிழமை
அருவா வெட்டி புலி செத்தது வியாழகிழமை
புலி அடிச்ச ஆடு நோய்வாய் பட்டு செத்தது வெள்ளிகிழமை...
அட்க்கை தின்ன நாய் பேய் நாயாகி அந்த பென்னை கடிச்சு செத்தது சனி கிழமை
அந்த அம்மினி நாய் கடியால செத்தது ஞாயித்து கிழமை
அம்மா பால் இல்லாமல் குழந்தை செத்தது திங்கள் கிழமை...

ஒத்து வாறமாதிரி இருக்கா???


:eek: :eek:
ஆமாசாமி ஆமாசாமி

அப்ப மன்றதுலே இருக்கர ஒரே..............................நீங்கதானா பெஞ்சு.....:D :D


சாரே,
வர்ணம் பூசிய பகுதிதான் விளங்கவில்லை

பென்ஸ்
06-11-2006, 06:17 PM
அதை தின்ன நாய், பேய் நாயாகி...

இதைதான் சொல்ல வந்தேன்

ஓவியா
06-11-2006, 06:23 PM
அதை தின்ன நாய், பேய் நாயாகி...

இதைதான் சொல்ல வந்தேன்


:D :D :D :D
அப்படிபோடு அறுவாவ
விடுகதையையே குழப்பிவிட்டது உங்க பதில்...

பெஞ்சு
தங்களின் பதில்
ரொம்ப சமத்தான பதில்
ஆனால் பரிட்சையில் பாசாகலையே மக்கா..............:D

pradeepkt
07-11-2006, 05:37 AM
என்ன பென்ஸூ, கடைசியில காலை வாரிட்டாங்க...
பரவாயில்லை... வீரர்களின் வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம்.
ராஜா நீங்களே அந்த விடையச் சொல்லீருங்களேன்...

அறிஞர்
07-11-2006, 02:03 PM
பிரதிப்பீன் விடை ஒத்துவருவது போல் இருந்தது......

கொஞ்சம் குழப்பமான விடுகதைதான்....

நீங்களே பதில் சொல்லுங்கள் ராஜா..

gragavan
07-11-2006, 04:01 PM
நாயும் பாம்பும் வருமா........தெரியலையே.........ஜிஞ்சினக்கா ஜினக்கா...ஹேய் ஜிஞ்சினக்கா ஜினக்கான்னு ஒரு புதிர்...புரியலையே...ராஜா வா ராஜா வா

ராஜா
08-11-2006, 10:26 AM
இதோ பதில்...( ரொம்ப லாஜிக் பாக்காதீங்க !)

--------------------------------------------------------------------------------

ஒரு விறகுவெட்டி ஒரு கிளையை ஒடைச்சு காய வச்சு அதில் கோடரி கைப்பிடி தயார் செஞ்சான்.

அப்படி முதல் நாள் செத்துப்போன கிளையிலே தயாரிச்ச கோடரியை வச்சு மறு நாள் ஒரு பெரிய கிளையை வெட்டினான். ஆனா அது துண்டாகி கீழே விழும்போது வேறொரு கிளையிலே சிக்கிக்கிச்சு..!
விறகுவெட்டி அதை அப்படியே விட்டுட்டுப் போயிட்டான்.

ஒரு பாம்பு நல்லா இரையெடுத்துட்டு நகர முடியாம அந்த மரத்துக்குக் கீழே நிழல்லே ஓய்வு எடுத்துட்டுருந்துச்சு. முதல் நாள் வெட்டுப்பட்டு கீழே விழாமல் தொங்கிக்கிட்டு இருந்த மரக்கிளை காத்துலே ஆடி அந்தப் பாம்பு மேலே விழுந்துடுச்சு.

படுகாயமடைஞ்ச பாம்பு மெல்ல நகர்ந்து போயி பக்கத்துலே உள்ள நீர்நிலை ஒன்னுலே விழுந்து விஷத்தைக் கக்கி உயிரை விட்டுடுச்சு.

மறுநாள் அந்தத் தண்ணியக் குடிச்ச அந்தப் பொண்ணு ( சண்டை போட்டுட்டு வந்த மனைவி) உடல்லே விஷம் பரவி செத்துப்போயிட்டா..

முதல் நாள் நல்லா பால் குடிச்சுட்டுத் தூங்கிட்டு இருந்த குழந்தை மறுநாள் பசியாலே ரொம்ப நேரம் அழுதுட்டு, செத்துதுப்போன அம்மா மார்பைத் தேடி விஷப் பாலை உறிஞ்சிக் குடிச்சுட்டு உயிரை விட்டுடுச்சு.

gragavan
08-11-2006, 11:15 AM
இதுதான் விடையா...பாம்பு வரும்னு நான் நினைச்சேன். நினைச்சேன். ஆனா முழுசையும் சொல்ல முடியலை. அது சரி...இறந்து ஒரு நாள் ஆனப்புறம் பால் எப்படி இருக்கும்? ஆனா நச்சு நீர் உருவாக வாய்ப்புண்டு.

பென்ஸ்
08-11-2006, 11:24 AM
லாஜிக் பாக்கபிடாதுன்னு சொன்னபிறகும்....
ராகவா... நீரு லா லா லோ லோலாகிக் ராகவந்தான்யா...

ராஜா... லாகிக் பாக்கலைனா என் விடையும் சரிதானே...
எல்லாவிடைக்கும் நாம் எதிர்பாத்த விடைதாண் வரனும்ன்ன்ய் இல்லையே...????

ராஜா
08-11-2006, 01:33 PM
ராஜா... லாகிக் பாக்கலைனா என் விடையும் சரிதானே...
எல்லாவிடைக்கும் நாம் எதிர்பாத்த விடைதாண் வரனும்ன்ன்ய் இல்லையே...????
__________________
நட்புடன்...
பெஞ்ஜமின் வி. வின்ஸ்

நீங்க முழு விடையையும் சொல்லலீங்கண்ணா..

நடுவிலே வந்த கேரக்டர் "அருவா" சாகவே இல்லையே..

அப்புறம் முக்கியமான விடுகதையின் சிறப்பம்சமான.." ஒருத்தர் சாவுக்கு காரணமா இருக்கற கேரக்டர் முத்ல் நாளே செத்துருக்கணும்ங்கற நிபந்தனையை நீங்க முழுசா பின்பற்றியிருக்கீங்களா ன்னு ஒரு தடவை சரி பார்த்துட்டு வாங்கண்ணா...!

முழுசா சொன்னாதான் அது விடை..இல்லேன்னா அது.....
(எதுக்கு பொல்லாப்பு..? நாமளே இப்போதான் புதுசா வந்திருக்கோம்..)

அறிஞர்
08-11-2006, 02:39 PM
திருச்சிக்காரரின் பதில் அருமை...

அடுத்த புதிர் கொடுத்து.. இன்னும் கொஞ்சம்.. சிந்திக்க வையுங்கள்.. :rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
08-11-2006, 05:17 PM
திருச்சிக்காரங்களே இப்படிதான் யோசிப்பீங்களா.......என்னமா யோசிக்கறீங்க......
விடை இதுதானா....ஒரு நாள் முழுக்க ஒக்காந்து யோசிச்சாலும்
நான் இந்த விடையை கண்டேபிடிக்க முடியாது.......:D

ஆனாலும், நம்ப பெஞ்சு, ஒரு விடையை (75% சரியா இருந்தாலே பரிட்சை பாஷ் தான்) போட்டு மன்றத்து மானத்த காப்பாத்தியாச்சே.......

மதி
09-11-2006, 02:54 AM
திருச்சிக்காரங்களே இப்படிதான் யோசிப்பீங்களா.......என்னமா யோசிக்கறீங்க......
விடை இதுதானா....ஒரு நாள் முழுக்க ஒக்காந்து யோசிச்சாலும்
நான் இந்த விடையை கண்டேபிடிக்க முடியாது.......:D

ஆனாலும், நம்ப பெஞ்சு, ஒரு விடையை (75% சரியா இருந்தாலே பரிட்சை பாஷ் தான்) போட்டு மன்றத்து மானத்த காப்பாத்தியாச்சே.......
:D :D :D
:D :D
:D

pradeepkt
09-11-2006, 04:16 AM
பிரதிப்பீன் விடை ஒத்துவருவது போல் இருந்தது......

கொஞ்சம் குழப்பமான விடுகதைதான்....

நீங்களே பதில் சொல்லுங்கள் ராஜா..
ஐயய்ய... நான் ஒண்ணும் சொல்லலீங்களே... :D

மன்மதன்
09-11-2006, 11:56 AM
'கொன்னுட்டிங்க போங்க'ன்னு இந்த பதிவுக்கு தாராளமா சொல்லலாம்..:D

அறிஞர்
09-11-2006, 01:58 PM
ஐயய்ய... நான் ஒண்ணும் சொல்லலீங்களே... :D பெஞ்சுவுக்கு பதிலா உங்களை சொல்லிட்டேனுங்கன்னா.... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
09-11-2006, 07:33 PM
ஐயய்ய... நான் ஒண்ணும் சொல்லலீங்களே... :Dபிரதீப் இன்னும் விடையை சொல்லவே இல்லைனுதான் நாசுக்கா சொன்னாரு...
அப்பவாச்சம் அசத்தலா ஒரு விடையை சொல்லுவீங்கனுதான்.....:D :D