PDA

View Full Version : ஒருவர் ஒரு வரி கதை

leomohan
03-11-2006, 03:37 PM
மன்ற நண்பர்களே நாம் இங்கு ஒரு வரி ஒருவர் கதை விளையாட்டு விளையாடலாமா. இந்த தளத்திற்கு முதலில் வருபவர் ஒரு வரியில் ஒரு கதை எழுதுவார். அடுத்து வருபவர் அதை தொடர வேண்டும். இப்படியே கதை எங்கே போகிறது என்று பார்ப்போமா?

தலைப்பு - முதலில் வருபவர் வைப்பார்.

முதல் வரி எழுதுங்க. வாங்க.

தாமரை
04-11-2006, 01:52 AM
நானே ஆரம்பித்து வைக்கிறேன் (இது தலைப்புப்பா.. நம்புங்க)

மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது...

meera
04-11-2006, 03:55 AM
இந்த விளையாட்டுக்கு நான் வரல. எனக்கு பாட்டி வடை சுட்ட கதைதான் தெரியும் சொல்லட்டுமா?யாராவது கேளுங்கப்பா plssssssss

leomohan
04-11-2006, 05:20 AM
குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக தொளைத்தன.

தொடர்ந்து...

ஓவியா
04-11-2006, 12:29 PM
மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது...குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக தொளைத்தன....எத்தனை இதயங்களை காயப்படுத்தி...எத்தனை தவறுகள்....வருடங்கள் கடந்தாலும் மனது மட்டும் நினைவலைகளை அவ்வப்போது வருடியது...

meera
04-11-2006, 03:17 PM
அட,ஆரம்பிச்சுட்டீயே மக்கா :confused: :confused: :confused:

leomohan
04-11-2006, 03:32 PM
அட,ஆரம்பிச்சுட்டீயே மக்கா :confused: :confused: :confused:

வாங்க மீரா. தூர நின்னு வேடிக்கை பார்த்தா எப்படி. ஜோதியில கலந்துடுங்க.

ஓவியா
04-11-2006, 03:38 PM
அட,ஆரம்பிச்சுட்டீயே மக்கா :confused: :confused: :confused:

:eek: :eek:
செல்வன் அண்ண,
மீரா உங்களைதானே சொல்லுறாங்க...........:D :D :D

தாமரை
04-11-2006, 03:41 PM
மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது... குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக துளைத்தன....எத்தனை இதயங்களை காயப்படுத்தி...எத்தனை தவறுகள்....வருடங்கள் கடந்தாலும் மனது மட்டும் நினைவலைகளை அவ்வப்போது வருடியது...

இத்தனை நாள் சிந்திக்காமலே இருந்த அவன் இன்று சிந்திக்க காரணம் இருந்தது. காரணம் அவள்.

ராஜா
04-11-2006, 03:54 PM
அவளை காவல்துறை வண்டியில் கைதியாகப் பார்த்த போது, அதிர்ச்சியுடன், காதலிக்கும் காலத்தில் முகர்ந்தால் குழையும் அனிச்சமாய் இருந்தவள் இன்று எப்படி குற்றவாளியாக என்ற கேள்வியும் அவன் மனதைக் குடைந்தது...

தாமரை
05-11-2006, 04:14 AM
எங்கே தவறு நடந்தது என்று புரியவில்லை.. என்ன காரணம் என்றும் புரியவில்லை

meera
05-11-2006, 05:11 AM
அவளை சந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான்.

meera
05-11-2006, 05:12 AM
வாங்க மீரா. தூர நின்னு வேடிக்கை பார்த்தா எப்படி. ஜோதியில கலந்துடுங்க.

மோகன், போதுமா ஜோதில கலந்தாச்சு.:D :D :D

meera
05-11-2006, 05:14 AM
அவளை காவல்துறை வண்டியில் கைதியாகப் பார்த்த போது, அதிர்ச்சியுடன், காதலிக்கும் காலத்தில் முகர்ந்தால் குழையும் அனிச்சமாய் இருந்தவள் இன்று எப்படி குற்றவாளியாக என்ற கேள்வியும் அவன் மனதைக் குடைந்தது...

வாங்க ராஜா,ஆரம்பமே கலக்கலா ஆரம்பிச்சுருக்கீங்க வாழ்த்துகள்.

meera
05-11-2006, 05:17 AM
:eek: :eek:
செல்வன் அண்ண,
மீரா உங்களைதானே சொல்லுறாங்க...........:D :D :D

அண்ணா நம்பாதீங்க நான் ஓவியாவை தான் சொன்னேன்.

ஓவி,நாங்க சண்டை போடலைனா உங்களுக்கு தூக்கம் வரல போல இருக்கே.:eek: :eek: :eek:

தாமரை
05-11-2006, 06:19 AM
அவளை சந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான்.

மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது... குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக துளைத்தன....எத்தனை இதயங்களை காயப்படுத்தி... எத்தனை தவறுகள்....வருடங்கள் கடந்தாலும் மனது மட்டும் நினைவலைகளை அவ்வப்போது வருடியது...

இத்தனை நாள் சிந்திக்காமலே இருந்த அவன் இன்று சிந்திக்க காரணம் இருந்தது. காரணம் அவள்.

அவளை காவல்துறை வண்டியில் கைதியாகப் பார்த்த போது, அதிர்ச்சியுடன், காதலிக்கும் காலத்தில் முகர்ந்தால் குழையும் அனிச்சமாய் இருந்தவள் இன்று எப்படி குற்றவாளியாக என்ற கேள்வியும் அவன் மனதைக் குடைந்தது...

எங்கே தவறு நடந்தது என்று புரியவில்லை.. என்ன காரணம் என்றும் புரியவில்லை.. அவளை சந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான்.

நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருக்க, காவல் நிலையத்தில் எப்படி நுழைவது என யோசித்தான்.. எப்படியாவது அவளைச் சந்தித்து கேட்டுவிட வேண்டும்..

இத்தனை நாள் வாழக்கையிலே எத்தனையோ பெண்களை உபயோகித்துக் கொண்டாயிற்று.. ஆனால் இவள் எனக்கே எனக்கு என்று நினைத்தல்லவா அவளுக்கு எதுவுமே தெரியாத மாதிரியல்லவா பார்த்துக் கொண்டான்.. இவள் தவறாக மாட்டிக்கொண்டாளா இல்லை தவறு செய்து மாட்டிக் கொண்டாளா?

ஓவியா
06-11-2006, 06:59 PM

மெல்ல காவல் நிலையத்தினுள் நுழைகின்றான்... வணக்கம் சார். என் பெயர் மதி......நான் ஒரு வக்கீல்.....நீங்க கொஞ்சம் முன்பு அழைத்துவந்த பெண்......அவங்களை கொஞ்சம் பார்க்கனும்..... காவல் அதிகாரியின் முகத்தில் சிறு அதிர்ச்சியலை ஓடுவது மதியின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தனா...

மதி
07-11-2006, 03:08 AM
தீவிரவாதி என அழைத்து வந்த பெண்ணை ஒருவன் வந்து பாக்கணும்னு சொல்றானே...யார் இவன்...? சந்தேகக் கண்களோடு பார்க்க ஆரம்பித்தார் அந்த காவல்துறை அதிகாரி.

மதி
07-11-2006, 03:09 AM
மெல்ல காவல் நிலையத்தினுள் நுழைகின்றான்... வணக்கம் சார். என் பெயர் மதி......நான் ஒரு வக்கீல்.....நீங்க கொஞ்சம் முன்பு அழைத்துவந்த பெண்......அவங்களை கொஞ்சம் பார்க்கனும்..... காவல் அதிகாரியின் முகத்தில் சிறு அதிர்ச்சியலை ஓடுவது மதியின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தனா...

அக்கா..ஏதோ என் பேர் பயன்படுத்தியிருக்கீங்க...கடைசியில வில்லங்கமா இல்லாம பாத்துக்கோங்க..

ராஜா
07-11-2006, 04:23 PM
அதே நேரத்தில், பிறிதொரு நிழலிடத்தில், தலைவன் இவ்வாறு சொன்னான்.." காம்ரேட்ஸ்..பாத்திமா எதையும் போலிஸ்கிட்டே சொல்லக்கூடாது..அவள முடிச்சுடுங்க..!"

ஓவியா
07-11-2006, 04:52 PM
அக்கா..ஏதோ என் பேர் பயன்படுத்தியிருக்கீங்க...கடைசியில வில்லங்கமா இல்லாம பாத்துக்கோங்க..

அடடா புள்ள ரொம்ப புத்திசாலிதான்...:D :D
மாட்டிஉடறத கண்டுபிடிச்சுருச்சே......:eek: :eek:

ஓவியா
07-11-2006, 05:00 PM
மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது... குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக துளைத்தன....எத்தனை இதயங்களை காயப்படுத்தி... எத்தனை தவறுகள்....வருடங்கள் கடந்தாலும் மனது மட்டும் நினைவலைகளை அவ்வப்போது வருடியது...

இத்தனை நாள் சிந்திக்காமலே இருந்த அவன் இன்று சிந்திக்க காரணம் இருந்தது. காரணம் அவள்....அவளை காவல்துறை வண்டியில் கைதியாகப் பார்த்த போது, அதிர்ச்சியுடன், காதலிக்கும் காலத்தில் முகர்ந்தால் குழையும் அனிச்சமாய் இருந்தவள் இன்று எப்படி குற்றவாளியாக என்ற கேள்வியும் அவன் மனதைக் குடைந்தது..
எங்கே தவறு நடந்தது என்று புரியவில்லை.. என்ன காரணம் என்றும் புரியவில்லை.. அவளை சந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான்.

நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருக்க, காவல் நிலையத்தில் எப்படி நுழைவது என யோசித்தான்.. எப்படியாவது அவளைச் சந்தித்து கேட்டுவிட வேண்டும்.....இத்தனை நாள் வாழக்கையிலே எத்தனையோ பெண்களை உபயோகித்துக் கொண்டாயிற்று.. ஆனால் இவள் எனக்கே எனக்கு என்று நினைத்தல்லவா அவளுக்கு எதுவுமே தெரியாத மாதிரியல்லவா பார்த்துக் கொண்டான்.. இவள் தவறாக மாட்டிக்கொண்டாளா இல்லை தவறு செய்து மாட்டிக் கொண்டாளா?

மெல்ல காவல் நிலையத்தினுள் நுழைகின்றான்... வணக்கம் சார். என் பெயர் மதி......நான் ஒரு வக்கீல்.....நீங்க கொஞ்சம் முன்பு அழைத்துவந்த பெண்......அவங்களை கொஞ்சம் பார்க்கனும்..... காவல் அதிகாரியின் முகத்தில் சிறு அதிர்ச்சியலை ஓடுவது மதியின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தனா...தீவிரவாதி என அழைத்து வந்த பெண்ணை ஒருவன் வந்து பாக்கணும்னு சொல்றானே...யார் இவன்...? சந்தேகக் கண்களோடு பார்க்க ஆரம்பித்தார் அந்த காவல்துறை அதிகாரி...

அதே நேரத்தில், பிறிதொரு நிழலிடத்தில், தலைவன் இவ்வாறு சொன்னான்.." காம்ரேட்ஸ்..பாத்திமா எதையும் போலிஸ்கிட்டே சொல்லக்கூடாது..அவள முடிச்சுடுங்க..!"......போஷ் அவ நல்ல பொண்னு, சதியாலதான் நம்மலிடம் மாட்டினா....எதுவும் சொல்லமாட்டானு நம்பிக்கை இருக்கு.....கொஞ்சம் யொச்சிக்கலாமே...காம்ரேட்ஸ்டின் குரலில் ஒரு கருனை...மடையா ஆவலாள் நாமக்கு ஆபத்துடா...சொன்னதை செய்....

guna
15-11-2006, 07:13 AM

போஸின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாதவனாய் காம்ரேட்ஸ், அந்த இடத்தை விட்டு வெளியேரினான்.எப்படியாவது பாத்திமாவை காப்பாற்ற வேண்டுமென அவன் மனம் தவியாய் தவித்தது.

பென்ஸ்
15-11-2006, 07:39 AM
நண்பர்கள் மன்னிக்க... கதை எங்கோ ஒட்டாதது போல் போகிறது...
திறமைசாலிகள் பூசி மொழுகவும்...

ஓவியா
15-11-2006, 04:56 PM
நண்பர்கள் மன்னிக்க... கதை எங்கோ ஒட்டாதது போல் போகிறது...
திறமைசாலிகள் பூசி மொழுகவும்...

திறமைசாலிகள் பூசி மொழுகவும்
அப்ப நான் அப்பீட்டு....

எங்க இடிக்குதுனு சொன்னதானே,
எப்படி பூசி மொலுகுவதுனு யோசிக்க முடியும்.....:D

guna
24-11-2006, 06:17 AM
தாமரை அண்ணா, உங்க பயொடாட்டல பன்னது போதும் வம்பு ..
இங்கேயும் தேவைப்படுது உங்க பங்கு..

தலைப்பு கொடுத்து ஆரம்பிச்சிட்டா மட்டும் போதுமா?
இப்படி பாதியிலேயே காணாமல் போறது நியாயமா?

பெஞ்ஜமின் திறைமைசாலிகள் வரனும் பூசி மொலுக'ன்னு சொல்லிட்டு போயாச்சு..
அது நீங்க இல்லையா?:cool:

ஓவியா இப்படி "அப்பீட்டு" ஆனா எப்படி?

தாமரை
24-11-2006, 09:04 AM
அத்தியாயம் - 1

மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது... குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக துளைத்தன....எத்தனை இதயங்களை காயப்படுத்தி... எத்தனை தவறுகள்....வருடங்கள் கடந்தாலும் மனது மட்டும் நினைவலைகளை அவ்வப்போது வருடியது...

இத்தனை நாள் சிந்திக்காமலே இருந்த அவன் இன்று சிந்திக்க காரணம் இருந்தது. காரணம் அவள்....

அவளை காவல்துறை வண்டியில் கைதியாகப் பார்த்த போது, அதிர்ச்சியுடன், காதலிக்கும் காலத்தில் முகர்ந்தால் குழையும் அனிச்சமாய் இருந்தவள் இன்று எப்படி குற்றவாளியாக என்ற கேள்வியும் அவன் மனதைக் குடைந்தது..

எங்கே தவறு நடந்தது என்று புரியவில்லை.. என்ன காரணம் என்றும் புரியவில்லை.. அவளை சந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான்.

நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருக்க, காவல் நிலையத்தில் எப்படி நுழைவது என யோசித்தான்.. எப்படியாவது அவளைச் சந்தித்து கேட்டுவிட வேண்டும்.....இத்தனை நாள் வாழக்கையிலே எத்தனையோ பெண்களை உபயோகித்துக் கொண்டாயிற்று.. ஆனால் இவள் எனக்கே எனக்கு என்று நினைத்தல்லவா அவளுக்கு எதுவுமே தெரியாத மாதிரியல்லவா பார்த்துக் கொண்டான்.. இவள் தவறாக மாட்டிக்கொண்டாளா இல்லை தவறு செய்து மாட்டிக் கொண்டாளா?

மெல்ல காவல் நிலையத்தினுள் நுழைந்தான்... வணக்கம் சார். என் பெயர் மதி......நான் ஒரு வக்கீல்.....நீங்க கொஞ்சம் முன்பு அழைத்துவந்த பெண்......அவங்களை கொஞ்சம் பார்க்கனும்..... காவல் அதிகாரியின் முகத்தில் சிறு அதிர்ச்சியலை ஓடுவது மதியின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது...தீவிரவாதி என அழைத்து வந்த பெண்ணை ஒருவன் வந்து பாக்கணும்னு சொல்றானே...யார் இவன்...? சந்தேகக் கண்களோடு பார்க்க ஆரம்பித்தார் அந்த காவல்துறை அதிகாரி...

அத்தியாயம் - 2

அதே நேரத்தில், பிறிதொரு நிழலிடத்தில், தலைவன் இவ்வாறு சொன்னான்..

" காம்ரேட்ஸ்..பாத்திமா எதையும் போலிஸ்கிட்டே சொல்லக்கூடாது..அவள முடிச்சுடுங்க..!"......

"போஸ் அவ நல்ல பொண்னு, சதியாலதான் நம்மலிடம் மாட்டினா....எதுவும் சொல்லமாட்டானு நம்பிக்கை இருக்கு.....கொஞ்சம் யொச்சிக்கலாமே" ...காம்ரேட்ஸ்டின் குரலில் ஒரு கருனை...

மடையா அவளால் நமக்கு ஆபத்துடா...சொன்னதை செய்....

போஸின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாதவனாய் காம்ரேட்ஸ், அந்த இடத்தை விட்டு வெளியேரினான்.எப்படியாவது பாத்திமாவை காப்பாற்ற வேண்டுமென அவன் மனம் தவியாய் தவித்தது.

அத்தியாயம் - 3

ஃபாத்திமா தலையை முழங்கால்களுக்குள் புதைத்துக் கொண்டு இருந்தாள்.. பார்ப்பதற்கு அவள் அழுவது போல் தெரிந்தாலும், உண்மையில் அவள் அழவில்லை. அவள் மனம் இறுகிப் போயிருந்தது..

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்த காலமெங்கே!. பகட்டிலும் ஸ்டைலிலும் மனதைப் பறிகொடுத்து பட்டிணத்திற்கு ஓடி வந்த காலமெங்கே.. ஏமாற்றப்பட்டோம் என் அறிந்து தற்கொலைக்கு முயன்றபோது பொஸின் பேச்சுக்கள் அவள் மனதை மாற்றி அவள் வாழ்விற்கு கொடுத்த புது அர்த்தமெங்கே.. இன்று ஆயுதக் கடத்தலில் போலீஸிடம் சிக்கி பட்ட அனுபவம் எங்கே.. இத்தனையும் மனதில் வந்தாலும் மனம் மரத்துப் போயிருந்தது..

மதி.. அவனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறாள்.. அவன் அவள் கையில் சிக்கியதும்.. அவனையும் கொன்று தன் வாழ்வின் லட்சியத்தையும் வாழ்க்கையையும் ஒரே சமயத்தில் முடிக்க வேண்டும்.

கண்களில் கண்ணீர் அல்ல வெறி பளபளத்துக் கொண்டிருந்தது.

தாமரை
24-11-2006, 09:05 AM
நண்பர்கள் மன்னிக்க... கதை எங்கோ ஒட்டாதது போல் போகிறது...
திறமைசாலிகள் பூசி மொழுகவும்...
துண்டுகளைத் தச்சாச்சு.. இனித் தொடருங்க

மதி
24-11-2006, 09:47 AM
ஐயா..சாமி...
எல்லாமே போட்டு தள்ளறதுக்குன்னே இருக்காங்களே.!!!

தாமரை
24-11-2006, 10:06 AM
ஐயா..சாமி...
எல்லாமே போட்டு தள்ளறதுக்குன்னே இருக்காங்களே.!!!
எதுக்கும் கொஞ்சம் உஷாராவே இருங்க..:rolleyes: :rolleyes: :rolleyes:
கதையில பங்கெடுத்துகிட்டா கண்டத்துக்கு பரிகாரம் இருக்கு ..;) ;) ;)
இல்லைன்னா...!:eek: :eek: :eek:

மதி
24-11-2006, 10:39 AM
எதுக்கும் கொஞ்சம் உஷாராவே இருங்க..:rolleyes: :rolleyes: :rolleyes:
கதையில பங்கெடுத்துகிட்டா கண்டத்துக்கு பரிகாரம் இருக்கு ..;) ;) ;)
இல்லைன்னா...!:eek: :eek: :eek:

கறுப்புக்கு பிறகு இது வேறயா..???:eek: :eek: :eek: :eek:

gragavan
24-11-2006, 11:51 AM
மதியை எப்படியாவது பழி வாங்க விரும்பிய ஃபாத்திமாவுக்கு மதியே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தது அதிர்ச்சியாக இருந்தது. எதற்கு வந்திருக்கிறான் அந்தப் படுபாவி என்று அவள் உள்ளம் நினைத்தது. அவனைப் பார்க்கப் பார்க்க வயிறும் உடலும் உள்ளமும் எரிந்தது. அவனால்தான் தான் இருந்ததெல்லாம் இழந்தோம் என்று தவறாக நினைத்திருந்தாள் ஃபாத்திமா. அதனால்தான் அவன் மேல் அத்தனை ஆத்திரம். ஊரிலிருந்து அவனோடு வந்த முதல் நாளில்தான் கொண்டு வந்த பணம் காணாமல் போனது. அவளது கெட்ட நேரம் அடுத்த நாளே அவளது கற்பும் பறிபோனது. ஆனால் அப்பொழுதெல்லாம் அவள் மதியைத்தான் நம்பினாள். பார்த்த இரண்டாவது நாளிலேயே இவ்வளவு நம்பிக்கையும் உரிமையும் உண்டானது ஆச்சரியந்தான். எப்படி பணமும் கற்பும் பறிபோனது தெரியுமா? அதை விட மூன்றாம் நாள் மதியே பறிபோனது எப்படி தெரியுமா?

ஓவியா
24-11-2006, 03:59 PM
தாமரை அண்ணா, உங்க பயொடாட்டல பன்னது போதும் வம்பு ..
இங்கேயும் தேவைப்படுது உங்க பங்கு..

தலைப்பு கொடுத்து ஆரம்பிச்சிட்டா மட்டும் போதுமா?
இப்படி பாதியிலேயே காணாமல் போறது நியாயமா?

பெஞ்ஜமின் திறைமைசாலிகள் வரனும் பூசி மொலுக'ன்னு சொல்லிட்டு போயாச்சு..
அது நீங்க இல்லையா?:cool:

ஓவியா இப்படி "அப்பீட்டு" ஆனா எப்படி?

தங்கச்சி இதுலேருந்து இன்னா தெரியுதுனா...
நானாவது சொல்லிட்டு போனேனே....:D

ஓவியா
24-11-2006, 04:03 PM
ஐயா..சாமி...
எல்லாமே போட்டு தள்ளறதுக்குன்னே இருக்காங்களே.!!!

மதி கதைக்கு கதானாயகனா உன்னை வச்சது என்னாமா வேலை செயுது பார்....:D

மதிக்கு எதிரணியெல்லாம் கொஞ்சம் இப்படி உலா வாங்கப்பா..:D

ஓவியா
24-11-2006, 04:54 PM
திட்டமிட்டு எமாற்றிவிட்டன் என்று ஒரு வெறி அவளுல், அழகில் பணத்தில் மயங்கிட்டுமே இல்லை மயகிட்டானா....ராஸ்கல், என்னமா தேனாய் பேசினான், இந்த வாய்ப்பை விட கூடாது எப்படியும் பலிவாங்கியே ஆகனும்னு மனதிற்க்குள் ஒரு ஆவேசம்...இருந்தும் காட்டிக்கொள்ளாதவள் போல் சிலையாய் இருந்தாள்

ராஜா
25-11-2006, 12:30 PM
அந்த நேரம் பார்த்து தொலைபேசி சிணுங்கியது..

மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிப்பதைப்போல அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தொலைபேசி துப்பப்போவது தெரியாமல் காவல் அதிகாரி ஒலிவாங்கியை கையில் எடுத்தார்..

-----------------------------------------------------------------------------
இப்படி அப்பப்ப வந்து எதையாவது சொல்லி எல்லாரையும் கொலையிலே விடறது எவ்வளவு சுவாரஸ்யமா இருக்கு தெரியுமா..?

அப்படியும் சமாளிச்சு கதையை நகர்த்திக்கிட்டுப் போற திறமையை பாராட்டாம இருக்க முடியலே..

தாமரை
26-11-2006, 02:44 AM
" ஸார், நீங்க சொன்ன அந்த ஆளை பின் தொடர்ந்தேன், விஷயம் நாம நினைக்கறதை விட ரொம்ப சீரியஸ், இது சின்ன நக்ஸல் கும்பல் இல்ல, இதில இண்டர்நேஷனல் கிரிமினல்கள் நிறையப் பேர் சம்பந்தப் பட்டிருக்காங்க "

செய்தியைக் கேட்ட காவல் அதிகாரி சிந்தனையுடன் ஃபோனை வைத்தார். இவனை கொஞ்சம் விட்டுப் பிடித்தால் என்ன.. இந்த மூஞ்சி ஒரு வழக்கறிஞர் இல்லை என்பது நல்லா தெரியும்.. இந்த தீவிரவாதிகள் கிட்ட விசாரணையில் உருப்படியா எதையுமே கறக்க முடியாது.. வேற ரூட்டிலதான் போகணும்..

சரி.. சரி.. 10 நிமிஷம் பேசிட்டு போங்க. இனிமேல பாக்கணும்னா, கோர்ட்டுல புரட்யூஸ் பண்ணின பிறகு கோர்ட்டு உத்தரவு வாங்கின பின்னாலதான் பார்க்க முடியும்...

இன்ஸ்பெக்டரின் உத்தரவு வாங்கிய மதி, லாக்கப் அருகே சென்று சொன்னான்

"ஓவியா முதல்ல என்னை மன்னிச்சுடு"

தாமரை
26-11-2006, 02:49 AM
-----------------------------------------------------------------------------
இப்படி அப்பப்ப வந்து எதையாவது சொல்லி எல்லாரையும் கொலையிலே விடறது எவ்வளவு சுவாரஸ்யமா இருக்கு தெரியுமா..?

அப்படியும் சமாளிச்சு கதையை நகர்த்திக்கிட்டுப் போற திறமையை பாராட்டாம இருக்க முடியலே..

விளையாட்டுதானே விளையாடலாமே.. சும்மா இருந்த சிங்கத்தை சுரண்டி விட்டுட்டீங்க.. இனிமே இருக்கு ராசா..:D :D :D

ஓவியா
26-11-2006, 12:52 PM
"

சரி.. சரி.. 10 நிமிஷம் பேசிட்டு போங்க. இனிமேல பாக்கணும்னா, கோர்ட்டுல புரட்யூஸ் பண்ணின பிறகு கோர்ட்டு உத்தரவு வாங்கின பின்னாலதான் பார்க்க முடியும்...

இன்ஸ்பெக்டரின் உத்தரவு வாங்கிய மதி, லாக்கப் அருகே சென்று சொன்னான்

"ஓவியா முதல்ல என்னை மன்னிச்சுடு"

அதே நேரத்தில், பிறிதொரு நிழலிடத்தில், தலைவன் இவ்வாறு சொன்னான்.." காம்ரேட்ஸ்..பாத்திமா எதையும் போலிஸ்கிட்டே சொல்லக்கூடாது..அவள முடிச்சுடுங்க..!"

செல்வன் அண்ணா,
ராஜா அண்ணா முன்பே அவளுக்கு பெயர் போட்டுட்டார்.....கவனிக்கா

நன்றி

அப்பாடா தப்பித்த
ஓவியா

தாமரை
26-11-2006, 12:59 PM
செல்வன் அண்ணா,
ராஜா அண்ணா முன்பே அவளுக்கு பெயர் போட்டுட்டார்.....கவனிக்கா

நன்றி

அப்பாடா தப்பித்த
ஓவியா
ஓவியா என்ற கிராமத்துப் பேர், நக்ஸல் கும்பலால் ஃபாத்திமா என்று மாற்றப்பட்டதாய் கதை.. அதற்காகத்தான் அதை வண்ணமிட்டுக் காட்டியிருக்கிறேன்.. இம்மாதிரி இயக்கங்களில் யாரும் பழைய பெயரை உபயோகப்படுத்துவதில்லை... மதிக்குத் தான் அவள் தீவிரவாதி என்று தெரியாதே!.. பட்டிணத்திற்கு அழைத்து வந்து மூன்றாவது நாளே எஸ்கேப்பானவன் அல்லவா..அதனால் பழைய பேரைச் சொல்லி அழைக்கிறான்..

தப்பிக்க வழியில்லை.. சாவி என் கையில்...

ஓவியா
26-11-2006, 01:09 PM

அய்யோ,
சரி, இனிமேல் தான் கதை பிச்சுகிட்டு ஓடபோவுது...

தலையில் முக்காடுடன்
ஓவியா

தாமரை
26-11-2006, 01:58 PM
மதி கதைக்கு கதானாயகனா உன்னை வச்சது என்னாமா வேலை செயுது பார்....:D

மதிக்கு எதிரணியெல்லாம் கொஞ்சம் இப்படி உலா வாங்கப்பா..:D
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

ஓவியா
26-11-2006, 02:08 PM
அத்தியாயம் - 1

மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது... குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக துளைத்தன....எத்தனை இதயங்களை காயப்படுத்தி... எத்தனை தவறுகள்....வருடங்கள் கடந்தாலும் மனது மட்டும் நினைவலைகளை அவ்வப்போது வருடியது...

இத்தனை நாள் சிந்திக்காமலே இருந்த அவன் இன்று சிந்திக்க காரணம் இருந்தது. காரணம் அவள்....

அவளை காவல்துறை வண்டியில் கைதியாகப் பார்த்த போது, அதிர்ச்சியுடன், காதலிக்கும் காலத்தில் முகர்ந்தால் குழையும் அனிச்சமாய் இருந்தவள் இன்று எப்படி குற்றவாளியாக என்ற கேள்வியும் அவன் மனதைக் குடைந்தது..

எங்கே தவறு நடந்தது என்று புரியவில்லை.. என்ன காரணம் என்றும் புரியவில்லை.. அவளை சந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான்.

நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருக்க, காவல் நிலையத்தில் எப்படி நுழைவது என யோசித்தான்.. எப்படியாவது அவளைச் சந்தித்து கேட்டுவிட வேண்டும்.....இத்தனை நாள் வாழக்கையிலே எத்தனையோ பெண்களை உபயோகித்துக் கொண்டாயிற்று.. ஆனால் இவள் எனக்கே எனக்கு என்று நினைத்தல்லவா அவளுக்கு எதுவுமே தெரியாத மாதிரியல்லவா பார்த்துக் கொண்டான்.. இவள் தவறாக மாட்டிக்கொண்டாளா இல்லை தவறு செய்து மாட்டிக் கொண்டாளா?

மெல்ல காவல் நிலையத்தினுள் நுழைந்தான்... வணக்கம் சார். என் பெயர் மதி......நான் ஒரு வக்கீல்.....நீங்க கொஞ்சம் முன்பு அழைத்துவந்த பெண்......அவங்களை கொஞ்சம் பார்க்கனும்..... காவல் அதிகாரியின் முகத்தில் சிறு அதிர்ச்சியலை ஓடுவது மதியின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது...தீவிரவாதி என அழைத்து வந்த பெண்ணை ஒருவன் வந்து பாக்கணும்னு சொல்றானே...யார் இவன்...? சந்தேகக் கண்களோடு பார்க்க ஆரம்பித்தார் அந்த காவல்துறை அதிகாரி...

அத்தியாயம் - 2

அதே நேரத்தில், பிறிதொரு நிழலிடத்தில், தலைவன் இவ்வாறு சொன்னான்..

" காம்ரேட்ஸ்..பாத்திமா எதையும் போலிஸ்கிட்டே சொல்லக்கூடாது..அவள முடிச்சுடுங்க..!"......

"போஸ் அவ நல்ல பொண்னு, சதியாலதான் நம்மலிடம் மாட்டினா....எதுவும் சொல்லமாட்டானு நம்பிக்கை இருக்கு.....கொஞ்சம் யொச்சிக்கலாமே" ...காம்ரேட்ஸ்டின் குரலில் ஒரு கருனை...

மடையா அவளால் நமக்கு ஆபத்துடா...சொன்னதை செய்....

போஸின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாதவனாய் காம்ரேட்ஸ், அந்த இடத்தை விட்டு வெளியேரினான்.எப்படியாவது பாத்திமாவை காப்பாற்ற வேண்டுமென அவன் மனம் தவியாய் தவித்தது.

அத்தியாயம் - 3

ஃபாத்திமா தலையை முழங்கால்களுக்குள் புதைத்துக் கொண்டு இருந்தாள்.. பார்ப்பதற்கு அவள் அழுவது போல் தெரிந்தாலும், உண்மையில் அவள் அழவில்லை. அவள் மனம் இறுகிப் போயிருந்தது..

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்த காலமெங்கே!. பகட்டிலும் ஸ்டைலிலும் மனதைப் பறிகொடுத்து பட்டிணத்திற்கு ஓடி வந்த காலமெங்கே.. ஏமாற்றப்பட்டோம் என் அறிந்து தற்கொலைக்கு முயன்றபோது பொஸின் பேச்சுக்கள் அவள் மனதை மாற்றி அவள் வாழ்விற்கு கொடுத்த புது அர்த்தமெங்கே.. இன்று ஆயுதக் கடத்தலில் போலீஸிடம் சிக்கி பட்ட அனுபவம் எங்கே.. இத்தனையும் மனதில் வந்தாலும் மனம் மரத்துப் போயிருந்தது..

மதி.. அவனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறாள்.. அவன் அவள் கையில் சிக்கியதும்.. அவனையும் கொன்று தன் வாழ்வின் லட்சியத்தையும் வாழ்க்கையையும் ஒரே சமயத்தில் முடிக்க வேண்டும்.

கண்களில் கண்ணீர் அல்ல வெறி பளபளத்துக் கொண்டிருந்தது.

ஓவியா
26-11-2006, 02:10 PM
அத்தியாயம் தொடருகின்றது

தாமரை
26-11-2006, 02:15 PM
அத்தியாயம் - 4

மதியை எப்படியாவது பழி வாங்க விரும்பிய ஃபாத்திமாவுக்கு மதியே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தது அதிர்ச்சியாக இருந்தது. எதற்கு வந்திருக்கிறான் அந்தப் படுபாவி என்று அவள் உள்ளம் நினைத்தது. அவனைப் பார்க்கப் பார்க்க வயிறும் உடலும் உள்ளமும் எரிந்தது. அவனால்தான் தான் இருந்ததெல்லாம் இழந்தோம் என்று தவறாக நினைத்திருந்தாள் ஃபாத்திமா. அதனால்தான் அவன் மேல் அத்தனை ஆத்திரம். ஊரிலிருந்து அவனோடு வந்த முதல் நாளில்தான் கொண்டு வந்த பணம் காணாமல் போனது. அவளது கெட்ட நேரம் அடுத்த நாளே அவளது கற்பும் பறிபோனது. ஆனால் அப்பொழுதெல்லாம் அவள் மதியைத்தான் நம்பினாள். பார்த்த இரண்டாவது நாளிலேயே இவ்வளவு நம்பிக்கையும் உரிமையும் உண்டானது ஆச்சரியந்தான். எப்படி பணமும் கற்பும் பறிபோனது தெரியுமா? அதை விட மூன்றாம் நாள் மதியே பறிபோனது எப்படி தெரியுமா?

அத்தியாயம் - 5

திட்டமிட்டு எமாற்றிவிட்டன் என்று ஒரு வெறி அவளுல், அழகில் பணத்தில் மயங்கிட்டுமே இல்லை மயகிட்டானா....ராஸ்கல், என்னமா தேனாய் பேசினான், இந்த வாய்ப்பை விட கூடாது எப்படியும் பலிவாங்கியே ஆகனும்னு மனதிற்க்குள் ஒரு ஆவேசம்...இருந்தும் காட்டிக்கொள்ளாதவள் போல் சிலையாய் இருந்தாள்.

அந்த நேரம் பார்த்து தொலைபேசி சிணுங்கியது..

மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிப்பதைப்போல அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தொலைபேசி துப்பப்போவது தெரியாமல் காவல் அதிகாரி ஒலிவாங்கியை கையில் எடுத்தார்

" ஸார், நீங்க சொன்ன அந்த ஆளை பிந்தொடர்ந்தேன், விஷயம் நாம நினைக்கறதை விட ரொம்ப சீரியஸ், இது சின்ன நக்ஸல் கும்பல் இல்ல, இதில இண்டர்நேஷனல் கிரிமினல்கள் நிறையப் பேர் சம்பந்தப் பட்டிருக்காங்க "

செய்தியைக் கேட்ட காவல் அதிகாரி சிந்தனையுடன் ஃபோனை வைத்தார். இவனை கொஞ்சம் விட்டுப் பிடித்தால் என்ன.. இந்த மூஞ்சி ஒரு வழக்கறிஞர் இல்லை என்பது நல்லா தெரியும்.. இந்த தீவிரவாதிகள் கிட்ட விசாரணையில் உருப்படியா எதையுமே கறக்க முடியாது.. வேற ரூட்டிலதான் போகணும்..

சரி.. சரி.. 10 நிமிஷம் பேசிட்டு போங்க. இனிமேல பாக்கணும்னா, கோர்ட்டுல புரட்யூஸ் பண்ணின பிறகு கோர்ட்டு உத்தரவு வாங்கின பின்னாலதான் பார்க்க முடியும்...இன்ஸ்பெக்டரின் உத்தரவு வாங்கிய மதி, லாக்கப் அருகே சென்று சொன்னான்

"ஓவியா முதல்ல என்னை மன்னிச்சுடு"

ஓவியா
26-11-2006, 02:36 PM
ஓவியா முதல்ல என்னை மன்னிச்சுடு"

செல்வனின் சிந்தனையில்..
ஓவியா என்ற கிராமத்துப் பேர், நக்ஸல் கும்பலால் ஃபாத்திமா என்று மாற்றப்பட்டதாய் கதை.. அதற்காகத்தான் அதை வண்ணமிட்டுக் காட்டியிருக்கிறேன் .. இம்மாதிரி இயக்கங்களில் யாரும் பழைய பெயரை உபயோகப்படுத்துவதில்லை... மதிக்குத் தான் அவள் தீவிரவாதி என்று தெரியாதே!.. பட்டிணத்திற்கு அழைத்து வந்து மூன்றாவது நாளே எஸ்கேப்பானவன் அல்லவா..அதனால் பழைய பேரைச் சொல்லி அழைக்கிறான்..)

:cool:

sriram
26-11-2006, 03:54 PM
அந்த வண்ணமயமான நாட்களை எண்ணி பார்த்தான். இனிததது.
17 வயதில் ,அவளோடு நட்பும் , காதலும் குழைந்த நாட்களில் அவள் அவனை விட்டு பிரிவாள் என்று அப்போது அவன் நினைக்கவில்லை.

மதி
27-11-2006, 02:32 AM
மதி கதைக்கு கதானாயகனா உன்னை வச்சது என்னாமா வேலை செயுது பார்....:D

மதிக்கு எதிரணியெல்லாம் கொஞ்சம் இப்படி உலா வாங்கப்பா..:D

கதாநாயகனா வில்லனா..
ஒன்னுமே புரியலியே...!

குழப்பத்துடன்...

தாமரை
27-11-2006, 06:15 AM
அந்த வண்ணமயமான நாட்களை எண்ணி பார்த்தான். இனிததது.
17 வயதில் ,அவளோடு நட்பும் , காதலும் குழைந்த நாட்களில் அவள் அவனை விட்டு பிரிவாள் என்று அப்போது அவன் நினைக்கவில்லை.

இது ஒட்டலியே!... மதி அல்லவா ஓடியது... இது ஒட்டலியே!... மதி அல்லவா ஓடியது...

கதை ஓட்டத்தையும் சற்று கவனியுங்கள்.. லாக்கப்பில் உள்ள ஓவியா வை மதி சந்தித்து பேச ஆரம்பித்து இருக்கிறான்.. இந்த வேளையில் எப்படி பழசை அசை போடுவது?

ஓவியா
28-11-2006, 07:59 PM
அத்தியாயம் - 6

நடிப்புக்காக மெதுவாக அழ ஆரம்பித்திருந்தாள்....

இன்னும் என்னா இருக்கு மதி, உனக்குதான் நான் தேவைப்படாத ஒரு பொருலாயிட்டேனே, அன்று இரவு நீ மட்டும் என்னை தனியா விட்டுட்டு போகலைனா, இன்னேரம்.....(விசும்பினால்)...

மன்னிச்சுடு ஓவி, சரி அழாதே இனி என்ன நடந்தாலும் நான் பாத்துகுறேன்,

என்னாதான் நடந்தது ஏன் உன்னைபோய்...போலிஸ்.....சொல்லு, நீ உண்மய சொன்னாதான் என்னால உன்னை காபாற்ற முடியும், என்ன நடந்துச்சு? சொல்லு ஓவி..

ஊரிலேருந்து வந்ததும் நாம தங்கிய அந்த பண்ணையார் பயனோட வீடு,

அங்கே யாரோ கள்ள நொட்டு அடிக்கறதா தகவல் கிடச்சுதாம், போலிஸ் வந்து பின் பக்க ஸ்டோரிலே என்னமோ துருவி துருவி எடுத்தாங்க, அப்ப நான் தான் விட்டில் இருந்தே அதனலே என்னை இங்கு கொன்டு வந்துட்டாங்கா......

அப்ப நீ இன்னும் அந்தா சந்துருவோட தான் இருக்கியா, இடிவிழுந்தவன்போல் முகம் கருக்கா, மதிக்கு அழவேண்டும் போல் இருந்தது.

சரி நான் இப்பவே அந்த சந்துருவ போய் பார்க்குறேன் நீ கவலைபடாதே, காசுக்கு ஆசபட்டு ஒருமுறைதான் நான் உன்னை தொலைச்சிட்டேன், இப்ப எனக்கு புத்திவந்துருச்சு, என்னை மன்னிச்சுடு....

இனி என் உயிர் போனாலும் உன்னை கைவிடமாட்டேன் ஓவி, நான் வரேன்...திரும்பி பார்க்காமல் சென்றான்

சார்,

சொல்லுங்க மதி,

அப்ப நான் அவங்களை கோர்ட்டு உத்தரவுடன் நாளைக்கு வந்து பார்க்குறேன். ....................வரேன் சார்

இன்ஸ்பெக்டர் செல்வனாயகம் ஏதோ யோசனையில் சரி என்று தலையசைத்தார்,

ஓவியா
28-11-2006, 08:42 PM
அத்தியாயம் - 7

ஓவ்வொரு அடியும் நடை பிணமகவே நடந்தான்,

மதி நீ அந்த பொண்ண டாவடிகிறாதானே.....சந்துரு சிரிக்க.....

இல்லடா லவ்வே பண்ணுறேன்டா...ஒரு இரண்டு வருஷமாடா மனசுகுள்ளே, ஆனா சொல்ல பயமா இருக்குடா......,

ஏன்டா... சந்துரு குறுகிட்டான்

அவங்க அப்பா ஒரு வீனாபோனாவன் காதல் கல்யாணம்னா ஒத்துக்க மாட்டாறாம்,
அவ தம்பி சொன்னான்.

யாரு அந்த செட்டியாரா? சந்துரு கேட்டான்......

ஆமான்டா மதி, .....இது அவளுக்கு தெரியுமா?,

அட போடா அவதான்டா ஐ லவ் யுனு மொத சொன்னா,
ஆனா நான் இன்னும் ஓக்கேனு சொல்லவே இல்லடா......

அட இதோபாருடா மாப்பிளைய, சரி எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்டா நளைக்கு பாக்கறேன்.....ம்ம் வரட்டா.....சந்துரு சென்றான்

சந்துருவிடம் என் காதலை சொல்லிய முதல் நாள்.....
எனக்கு நானே கொள்ளியும் வைத்தநாள்......

ச்சே....அப்பவே அவன் ஓவிய.....பணக்காரனாலே புத்தி இப்படிதான் போகுமா......

ஆசையிலே அறிவிழந்துட்டேன்டா....நானே அவள கல்யாணம் பண்ணிகிறேன்........நீ எங்கயாவது போயிடுனு சொன்னானே...

பின்னே, ஒரு திருவிழா சந்திப்பில் அவ எங்கே இருக்கானு தெரியலடானு சொன்னானே...........

---------------------------------------------------------------------------

மதி,
எதோ ரொம்ப யொசிச்சு உன்னை காப்பாத்திட்டேன்.....யரோ ஒரு மகாசந்துருன் வில்லனா மாட்டிருக்கான் ......அப்பாடா

செல்வன் அண்ண
இந்த பகுதிக்கு நீங்கதான் எனக்கு வில்லன்....மாட்டிவிட்டிங்கள்ளே....
இருங்க இருங்க வச்சிகிறேன் உங்களை...(பல்லை நாநரநரநர)

மோகன்
இந்த பகுதியில் உங்களை காணவில்லையே

தாமரை
28-11-2006, 10:52 PM
மதி,
எதோ ரொம்ப யொசிச்சு உன்னை காப்பாத்திட்டேன்.....யரோ ஒரு மகாராஜன் மாட்டிருக்கன் வில்லனா......அப்பாடா

செல்வன் அண்ண
இந்த பகுதிக்கு நீங்கதான் எனக்கு வில்லன்....மாட்டிவிட்டிங்கள்ளே....
இருங்க இருங்க வச்சிகிறேன் உங்களை...(பல்லை நாநரநரநர)

மோகன்
இந்த பகுதியில் உங்களை கானவில்லையே

ராஜா வோட பதிவுகளைப் பார்த்த பின்னர்தான் இந்த முடிவு எடுத்தீங்களா?

தாமரை
28-11-2006, 11:05 PM
குட்மார்னிங் ஸார்!

கமிஷனர் விக்ரம் நிமிர்ந்தார்! வாங்க செல்வநாயகம்! எனி புரோக்ரஸ்?

இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தன் கையில் இருந்த டேப்ரிகார்டரை ஒலிக்க வைத்தார்.

"ஓவியா முதல்ல என்னை மன்னிச்சுடு" டேப் தான் உள்வாங்கிய அனைத்தையும் கக்கியது.

இது அந்தப் பொண்ணோட இறந்த காலம்தானே! கமிஷனர் கேட்க.

"ஆமாம் ஸார்.. இந்தப் பெண் பேசறதைக் கேட்டீங்களா.. ஏமாத்திய காதலன் மேல இருக்கிற வெறி இல்ல..."

"அதனால"

"இரண்டு சான்ஸ் இருக்கு.. ஒண்ணு இவள் இவனை பழிவாங்கப் போறா.. இல்லை இவன் உதவியோடு எஸ்கேப் ஆகப் பார்க்கிறா"

சரி, இவள் எஸ்கேப் ஆகப் பார்க்கிறான்னு வச்சுக்குவோம்.. அப்ப..

"இவனை மாட்டி விட்டுருவா"

"இவனை பழி வாங்கப் போறான்னா"

"அதுக்கு இவ அந்தக் கும்பலை விட்டு வெளிவரணும்"

"ஏன்"

"ஏன்னா நமக்கு ஒத்துழைச்சாதான் அவள் இவனை முடிக்க வாய்ப்பு கிடைக்கும்"

"ஸோ"

"இவ பழிவாங்கப் பார்க்கிறா என்கிற கோணத்தில் செல்லலாம் என் நினைக்கிறேன்"

"அதனால"

அதனால் நாம என தன் திட்டத்தை வரிவரியாக செல்வநாயகம் விவரிக்க

"அப்போ மதியை பலிகடா ஆக்கறீங்க"

"அதற்கு வேற ஒரு ஏற்பாடு வச்சிருக்கேன், மோகன்" செல்வநாயகம் அழைக்க...

காம்ரேட்ஸ் உள்ளே வந்தான்..

==============================================================

மதி
29-11-2006, 01:58 AM
இதுல விக்ரம் யாரு?
மோகன் யாரு..???

மதி
29-11-2006, 01:59 AM
"அப்போ மதியை பலிகடா ஆக்கறீங்க"

அதான் ஆக்கியாச்சே..
இன்னும் என்ன..?:eek: :eek: :eek: :eek:

தாமரை
29-11-2006, 03:13 PM
மதி ! சரி உங்க ரெகமெண்ட் படியே நான் இன்ஸ்பெக்டராகி.. ஒரு வழி பண்ணறேன்

ஓவியா
29-11-2006, 07:00 PM
அதனால் நாம என தன் திட்டத்தை வரிவரியாக ராகவன் விவரிக்க
"அப்போ மதியை பலிகடா ஆக்கறீங்க"
"அதற்கு வேற ஒரு ஏற்பாடு வச்சிருக்கேன், மோகன்" செல்வநாயகம் அழைக்க...
காம்ரேட்ஸ் உள்ளே வந்தான்.

:eek: :eek: :eek:

-------------------------------------------

ராஜா வோட பதிவுகளைப் பார்த்த பின்னர்தான் இந்த முடிவு எடுத்தீங்களா?

அச்சோ....இதுவேற இருக்கா....:eek:
மாற்றிவிட்டேன், இப்ப அவன் சந்துரு

மதி ! சரி உங்க ரெகமெண்ட் படியே நான் இன்ஸ்பெக்டராகி.. ஒரு வழி பண்ணறேன்

இது எந்த முகபாவனையில் சொன்னீங்க...:eek: .:rolleyes:

-------------------------------------------------------
அண்ணா,
இதுவரை வந்த கதாபாத்திரத்தை கொஞ்சம் விரிவா கொடுங்களேன்

செல்வநாயகம் = இன்ஸ்பெக்டர்
விக்ரம் = கமிஷனர்
ராகவன் = போலிஸ்
சந்துரு = பண்ணையார் மகன்
மதி = கதானாயகன்
மோகன் = காம்ரேட்ஸ்
அப்பாவி ஓவியா = மதியின் காதலி
பாத்திமா = ஓவியா

தாமரை
30-11-2006, 12:20 AM
செல்வநாயகம் = இன்ஸ்பெக்டர்
விக்ரம் = கமிஷனர்
ராகவன் = போலிஸ்
சந்துரு = பண்ணையார் மகன்
மதி = கதானாயகன்
மோகன் = காம்ரேட்ஸ்
அப்பாவி ஓவியா = மதியின் காதலி
பாத்திமா = ஓவியா

ராகவன் = போலிஸ் இது மட்டும் தவ்று, நான் இன்ஸ்பெக்டராக ராகவனை போட நீங்க செல்வ நாயகத்தை போட்டுட்டீங்க. அதனால் ராகவன் பெயர் வேறு யாருக்காவது சூட்டப்படும்...:D :D :D

மோகன் போலீஸ் ஆளா போஸ் ஆளா என்ற சஸ்பென்ஸை தயவு செய்து காப்பாற்றவும்...:rolleyes: :rolleyes: :rolleyes:

மதி
30-11-2006, 02:04 AM
அதனால் நாம என தன் திட்டத்தை வரிவரியாக ராகவன் விவரிக்க
"அப்போ மதியை பலிகடா ஆக்கறீங்க"
"அதற்கு வேற ஒரு ஏற்பாடு வச்சிருக்கேன், மோகன்" செல்வநாயகம் அழைக்க...
காம்ரேட்ஸ் உள்ளே வந்தான்.

:eek: :eek: :eek:

-------------------------------------------

அச்சோ....இதுவேற இருக்கா....:eek:
மாற்றிவிட்டேன், இப்ப அவன் சந்துரு

இது எந்த முகபாவனையில் சொன்னீங்க...:eek: .:rolleyes:

-------------------------------------------------------
அண்ணா,
இதுவரை வந்த கதாபாத்திரத்தை கொஞ்சம் விரிவா கொடுங்களேன்

செல்வநாயகம் = இன்ஸ்பெக்டர்
விக்ரம் = கமிஷனர்
ராகவன் = போலிஸ்
சந்துரு = பண்ணையார் மகன்
மதி = கதானாயகன்
மோகன் = காம்ரேட்ஸ்
அப்பாவி ஓவியா = மதியின் காதலி
பாத்திமா = ஓவியா

இன்னும் எவ்வளவோ கதாபாத்திரம் இருக்கே...!
அடியிலேர்ந்து தப்பிக்க கொஞ்ச நாள் தலைகாட்டாம இருக்கணும் போலருக்கே..!

தாமரை
04-12-2006, 02:41 PM
யாரவது கொஞ்சம் எழுதுங்களேன்.. கதை சுவரஸ்யமான கட்டத்தில் உள்ளது...

ஓவியா
04-12-2006, 03:57 PM
9 பக்கம் பார்க்க
நன்றி

ஓவியா
04-12-2006, 03:59 PM
9 பக்கம் பார்க்க
நன்றி

ஓவியா
04-12-2006, 04:01 PM
9 பக்கம் பார்க்க
நன்றி

ஓவியா
04-12-2006, 04:27 PM
செல்வநாயகம் = இன்ஸ்பெக்டர்
ராகவன் = கமிஷனர்
போஸ் = இண்டர்நேஷனல் கிரிமினல்களின் தலைவன்
சந்துரு = பண்ணையார் மகன்
மதி = கதானாயகன்
மோகன் = காம்ரேட்ஸ்
அப்பாவி ஓவியா = மதியின் காதலி
பாத்திமா = ஓவியா

கமிஷனர் விக்ரம் கதையில் இருந்து ரிடையர் ஆகிவிட்டார்....
சொ இப்ப கதைக்கு கமிஷனர் = ராகவன்

தாமரை
04-12-2006, 05:01 PM
மதி அந்த லாட்ஜின் எதிரில் நின்றிருந்தான்.. ஓவியாவின் முகம் அவன் கண்ணில் நிழலாடியது.. போலீஸ் எப்படியும் த்ன் போலி என்று தெரிந்து கொண்டுவிடும். இனிமேல் தான் ஜாக்கிரதையாக் இருக்கவேண்டும்...

மும்பை அனில் கோர்படே முன்பெல்லாம் பாதுகாப்பான மறைவிடம் தருவான்.. இப்போதுதான் அவன் சங்காத்தமே வேண்டாம் என் விட்டாயிற்றே.. அவனுக்காக எத்தனைப் பெண்களைக் கடத்தி கொடுத்தாயிற்று.. அவன் கண்ணில் ஓவியா விழ வேண்டாம் என்றுதானே சந்துரு வீட்டிற்கு அழைத்துச் சென்றான்...

டெல்லி மஸ்தான்.. இவனும் இப்போது மதியை தேடிக்கொண்டிருப்பான்.. வங்கக் கடல் வழி வரும் போதை மருந்துகளுக்காக..

இப்போதைக்கு இவன் ஒரு ஒன் மேன் ஆர்மி.. ஒரிசாவின் ஒரு ஓரத்தில் பங்களா வாங்கிப் போட்டாயிற்று.. ஓவியாவை மட்டும் விடுவித்து அழைத்துக் கொண்டால்...

ஓவியா
04-12-2006, 05:16 PM
9 பக்கம் பார்க்க
நன்றி

கதைய சீக்கிரமா முடிங்கப்பா...தலை சுத்துது

மதி
05-12-2006, 01:05 AM
ஆமாமா...சீக்கிரம் முடிங்க...
போற போக்க பாத்தா...
ஊரில இருக்குற எல்லா குத்தமும் செய்யிறவனா ஆக்கிடுவீங்க போலருக்கு..!

தாமரை
05-12-2006, 03:37 PM
அத்தியாயம் 10

ஓவியாவிற்குப் புரியவில்லை.. என்ன நடக்கிறது என்னைச் சுற்றி.. மதி எப்படி போலீஸ் ஸ்டேஷனுக்குள்? அதுவும் போலீஸ் அவனை எப்படி இவ்வளவு தூரம் அனுமதித்தார்கள்? இது இன்னொரு வலையோ?

இருக்கட்டும். என் வாழ்வின் இலட்சியம் மதியின் அழிவுதான். அதற்காக நான் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.. அது போஸாக இருந்தாலும் கூட..

மனதில் சட்டென காம்ரேட்ஸ் வந்தான்.. அவனது ஆதரவான முகமும் நினைவிற்கு வந்தது..

போஸை காட்டிக் கொடுத்தாலும் காம்ரேட்ஸை காட்டிக் கொடுக்கக் கூடாது...

சரி இனிக் காத்திருக்க வேண்டியது தான்..

செல்வநாயகம் குறுக்கும் னெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.. அப்போது ஏட்டு ஏகாம்பரம் ஒரு பெண்ணை கொண்டு வந்து ஓவியா இருந்த லாக்கப்பில் தள்ளி பூட்டிவிட்டு, தன் நாற்காலியில் அமர்ந்து தொப்பியைக் கழற்றி மேசை மேல் வைத்து விட்டு ரிலாக்ஸ் ஆனார்..

ஓவியா
05-12-2006, 04:44 PM
9 பக்கம் பார்க்க
நன்றி

மீராவ சொருவுரா மாதிரி இருக்கு..:eek: ........
(இல்ல இல்ல அவள நான் காப்பாத்திடுவேன்......:D :D ...)

மதி
06-12-2006, 02:00 AM
யக்கா..
என்னவோ போங்க....
வரிக்கு வரி திருப்பங்கள்...

ஆனா ஒன்னு நம்மல கொல்லாமவுட மாட்டீங்க போலருக்கு...!
கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா..?

மதி
06-12-2006, 02:01 AM
மீராவ சொருவுரா மாதிரி இருக்கு..:eek: ........
(இல்ல இல்ல அவள நான் காப்பாத்திடுவேன்......:D :D ...)

அக்கா..
தோழிய காப்பாத்திட்டு
தம்பிய கொல்றீங்களே....
நியாயமா..???

பாவமாய்...

அல்லிராணி
06-12-2006, 02:30 PM
அத்தியாயம் 12

அல்லிராணி சமயம் பார்த்துக் காத்திருந்தாள்.. எப்போ இந்த போலீஸ் ஸ்டேஷன் நிசப்தமாகும்.. எப்போ ஓவியாவின் கதைக்கு முடிவுரை எழுத ஆரம்பிக்கலாம் என்று. அப்பாவி ஓவியா பாவம் அல்லிராணியை பற்றி அறிந்திருக்கவில்லை.. போஸ் சொன்னது அவள் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது இவளை ஒழிக்காவிட்டால் நம் கும்பலே காலியாகிவிடும்..எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்...

ஓவியா
06-12-2006, 02:46 PM
அக்கா..
தோழிய காப்பாத்திட்டு
தம்பிய கொல்றீங்களே....
நியாயமா..???

பாவமாய்...

அப்ப நீங்க தான் அள்ளீய அனுப்பியதா?
என்னவோ போங்க....
வரிக்கு வரி திருப்பங்கள்...

ஆனா ஒன்னு மதி, நம்மல கொல்லாமவுட மாட்டாங்க போலருக்கு...!..:D

எப்படியோ ஒரு கொல கன்!"பம்,

**********************************************

யக்கா
திருத்திட்டேன்

அல்லிராணி
06-12-2006, 02:49 PM
அப்பா நீங்க தான் அள்ளீய அனுப்பியதா?என்னவோ போங்க....
வரிக்கு வரி திருப்பங்கள்...

ஆனா ஒன்னு மதி, நம்மல கொல்லாமவுட மாட்டாங்க போலருக்கு...!..:D

எப்படியோ ஒரு கொல கன்!"பம்,

மதி இதென்னது அப்பா ஆயிட்டீங்க.. சொல்லவே இல்ல...:confused: :confused: :confused: :confused: :confused:

meera
06-12-2006, 03:29 PM
[QUOTE=ஓவியா;162228]மீராவ சொருவுரா மாதிரி இருக்கு..:eek: ........
(இல்ல இல்ல அவள நான் காப்பாத்திடுவேன்......:D :D ...)

மீராவை காப்பாத்திய தோழி ஒவியாவுக்கு ஒரு ஜெ!
இந்த ஏரியாவுல நாம அப்பீட்டு சாமீஈஈஈஈஇ;) ;) ;) :cool:

ஓவியா
06-12-2006, 03:39 PM

அதெல்லாம் செல்லாது தாயே

வந்து ஒரு அதியாயமாவது எழுதனும்...இல்லனா உல்லே இழுத்துவுடுவோம்

கதையை ஒரு இரண்டு முறை நல்லா படித்து....

அடுத்த அதியாயத்தை எழுதவும்

அன்பு வேண்டுகோள்

gragavan
06-12-2006, 04:12 PM
இருட்டத் தொடங்கியிருந்தது. ஏட்டையா பிரியாணிக்குள் புதையல் எடுத்துக் கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர் வீட்டிலிருந்து ஃபோன் வந்ததெனப் போய் விட்டார். ஒன்றிரண்டு கேஸ்களை லாக்கப்பில் போட்டு வைத்திருந்தார்கள். அவர்கள் உக்காந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஓவியாவின் கடிதம் அல்லிராணியின் இடுப்புச் சேலை மடிப்புக்குள் இருந்தது. பெண்களை ரொம்ப நேரம் வைத்திருக்க மாட்டார்கள். இன்னும் அரைமணி நேரந்தான் அல்லியை வெளியே அனுப்ப வேண்டும். அல்லது பெண்கள் சிறைக்கு அனுப்ப வேண்டும். அதே நிலைதான் ஓவியாவிற்கும்.

அதற்குள் வந்த வேலையை முடிக்க நினைத்தாள் அல்லி. "இந்தாமே கையக் காட்டு. ஒன்னோட வருங்காலத்தைப் புட்டு வெக்கிறேன்." ஓவியா முதலில் தயங்களினாள். அல்லியை நம்பிக் கையைக் குடுக்க அவளுக்கு யோசனையாக இருந்தாது. ஆனாலும் கடிதத்தையே குடுத்த பிறகு கைதானே என்று நீட்டினாள்.

"நல்லாகீதுமே!...ஒனக்கு நல்ல புருசன் வருவான். நல்ல புள்ள பொறக்கும்." அடுக்கிக் கொண்டே போனாள் அல்லி. இதெல்லாம் எங்கே நடக்கப் போகிறது என்று ஓவியா நினைத்துக் கொண்டிருந்த பொழுது கையில் சுருக்கென்றது. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று முகத்தைச் சுருக்கினாள்.

"வளையலு குத்தீருச்சுமே" என்றாள் அல்லி. வளையல் மட்டுமா?

அல்லிராணி
06-12-2006, 04:12 PM
நிழல்கள் நீளமாகி மங்கின.. இரவின் ஆதிக்கம் மெதுவாக ஆரம்பித்தது.. ஓவியா கடிதத்தை எழுதி முடித்திருந்தாள். அவள் முற்றிலுமாக அல்லிராணியின் வலையில் விழுந்திருந்தாள்..

ஏகாம்பரம் அல்லிராணிக்கு ஒரு பிரயாணி பொட்டலம் தந்துவிட்டு, ஓவியாவிற்கு இரண்டு இட்டிலியும் கெட்டிச் சட்னியும் தந்து விட்டு செல்ல
வாசலில் நிழலாடியது.. நைட் டூட்டி பெண்போலீஸ் மீரா..
ஏகாம்பரம் தந்த இட்லியை அப்பாவி ஓவியா அதில என்ன கலந்திருக்கிறது என்று தெரியாமலேயே சாப்பிட ஆரம்பித்தாள்..

மதி
07-12-2006, 01:07 AM

அட இவங்களையும் கதையில இழுத்தாச்சா..??

யக்கா...
இப்ப என்ன செய்வீங்க..??
இப்ப என்ன செய்வீங்க.....???

meera
07-12-2006, 04:57 AM
அட இவங்களையும் கதையில இழுத்தாச்சா..??

யக்கா...
இப்ப என்ன செய்வீங்க..??
இப்ப என்ன செய்வீங்க.....???

சந்தோஷத்துல மதிக்கு தலை, கால் புரியல போலருக்கு.:eek: :eek: :eek:

meera
07-12-2006, 05:09 AM
நிழல்கள் நீளமாகி மங்கின.. இரவின் ஆதிக்கம் மெதுவாக ஆரம்பித்தது.. ஓவியா கடிதத்தை எழுதி முடித்திருந்தாள். அவள் முற்றிலுமாக அல்லிராணியின் வலையில் விழுந்திருந்தாள்..

ஏகாம்பரம் அல்லிராணிக்கு ஒரு பிரயாணி பொட்டலம் தந்துவிட்டு, ஓவியாவிற்கு இரண்டு இட்டிலியும் கெட்டிச் சட்னியும் தந்து விட்டு செல்ல
வாசலில் நிழலாடியது.. நைட் டூட்டி பெண்போலீஸ் மீரா..
ஏகாம்பரம் தந்த இட்லியை அப்பாவி ஓவியா அதில என்ன கலந்திருக்கிறது என்று தெரியாமலேயே சாப்பிட ஆரம்பித்தாள்..

ஏகாம்பரம் தந்துவிட்டு போன இட்லியை சாப்பிடும் போதே ஓவியாவுக்கு என்னவோ செய்தது.தன் உடம்புக்கு என்ன என்று யோசிக்கும் போதே கண்கள் மெல்ல மெல்ல இருள தொடங்கியது.

மதி
07-12-2006, 05:14 AM
சந்தோஷத்துல மதிக்கு தலை, கால் புரியல போலருக்கு.:eek: :eek: :eek:

பின்ன முதல்ல என்னை மாட்டிவுட்டது ஓவியா...என்னை கொல்ல வெறியோடு இருக்காங்க..(கதையில). இப்ப அவங்களே பாவம்...

நான் மட்டும் கொல்லப்படனுமா என்ன...???:D :D :D

மதி
07-12-2006, 05:17 AM
நிழல்கள் நீளமாகி மங்கின.. இரவின் ஆதிக்கம் மெதுவாக ஆரம்பித்தது.. ஓவியா கடிதத்தை எழுதி முடித்திருந்தாள். அவள் முற்றிலுமாக அல்லிராணியின் வலையில் விழுந்திருந்தாள்..

ஏகாம்பரம் அல்லிராணிக்கு ஒரு பிரயாணி பொட்டலம் தந்துவிட்டு, ஓவியாவிற்கு இரண்டு இட்டிலியும் கெட்டிச் சட்னியும் தந்து விட்டு செல்ல
வாசலில் நிழலாடியது.. நைட் டூட்டி பெண்போலீஸ் மீரா..
ஏகாம்பரம் தந்த இட்லியை அப்பாவி ஓவியா அதில என்ன கலந்திருக்கிறது என்று தெரியாமலேயே சாப்பிட ஆரம்பித்தாள்..

ஏகாம்பரம் தந்துவிட்டு போன இட்லியை சாப்பிடும் போதே ஓவியாவுக்கு என்னவோ செய்தது.தன் உடம்புக்கு என்ன என்று யோசிக்கும் போதே கண்கள் மெல்ல மெல்ல இருள தொடங்கியது.
யதேச்சையாய் திரும்பிய மீரா கண்களில் ஓவியா தடுமாறுவது தெரிந்தது.

"ஏய்..என்ன ஆச்சு..?"
"ழான்...ழா.."

பதில் பேச முடியாமல் நாக்குழறினாள் ஓவியா.

ஓவியா
07-12-2006, 05:27 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7130&page=12

ஓவியா
07-12-2006, 05:28 PM
http://www.tamilmantram.com/vb/showt...t=7130&page=12

ஓவியா
07-12-2006, 05:30 PM
http://www.tamilmantram.com/vb/showt...t=7130&page=12

ஓவியா
07-12-2006, 05:36 PM
http://www.tamilmantram.com/vb/showt...t=7130&page=12

ஓவியா
07-12-2006, 06:08 PM
http://www.tamilmantram.com/vb/showt...t=7130&page=12

மதி
08-12-2006, 01:09 AM
ஹைய்ய்யா...
டாக்டர் பெஞ்சமினா...????????

கதை இப்போதைக்கு முடியாது போலருக்கே..?!

தாமரை
09-12-2006, 07:42 AM
டாக்டர் பெஞ்சமின் கையை பிசைந்தவாறே வெளியே வந்தார்.. மீரா என்ன டாக்டர் என்ன ஆச்சு? ஏனிப்படி என கேள்விகளாய் அடுக்க, பெஞ்சமின் சொன்னார்..

பார்த்தா அலர்ஜிக் ரியாக்சன் மாதிரி தெரியுது.. இவங்களுக்கு அலர்ஜி இருக்கான்னு தெரியலை.. என்ன அலர்ஜின்னும் தெரியலை என்றார்..

உங்களாலேயே "கிரேக்" பண்ண முடியலைன்னா எப்படி டாக்டர்.. ஏகாம்பரம் இட்லியும் சட்னியும் மட்டும்தான் கொடுத்தார்.. மற்றபடி வேற எதுவுமே சாப்பிடலை..இட்லி சட்னிக்கு அலர்ஜி அதுவும் ஒரு தமிழ் பொண்ணுக்குன்னா நம்பவே முடியலை.. வேற எதாவது...

புரியலை.. மாதிரிகளை லேபுக்கு அனுப்பி இருக்கோம்.. இவளோட லாக்கப்பில யாராவது இருந்தாங்களா...

அல்லிராணி ன்னு லோக்கல் கேஸூ.. சாயங்காலம்தான் ஏட்டு அரெஸ்ட் பண்ணி கொண்டுவந்தார்.. இரவில் பெண்கள் லாக்கப்பில இருக்கறதால் பெண்போலீஸ் இருந்தோம்.. மற்றபடி அல்லிராணியும் இவளும் நல்லாத்தான் பேசிகிட்டு இருந்தாங்க..

ஆமாம் இந்த பொண்ணு என்ன கேஸில் மாட்டிச்சு..

ஏன் கேட்கறீங்க... இது ஒரு ஆயுதக் கடத்தல் கேஸ்..

இல்லை எதாவது மருந்து சயனைட் குப்பி மாதிரி உபயோகப்படுத்தி இருக்கோன்னு செக் செய்யணும்.. சில மருந்துகள் இருக்கு, அதை உபயோகப்படுத்தினால் இப்படி உணவு அலர்ஜி வரலாம்.. இது இவள் தப்பிக்க போட்ட திட்டமாவும் இருக்கலாம்..

அப்ப ஹாஸ்பிடலைச் சுத்தி பலமா காவல் போட்டிறவா என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது...

"வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே" என மீராவின் செல்போன் பாட செல்போனை எடுத்து பொத்தானை அமுக்கி ஹலோ என்றாள்...

"நான் இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் பேசறேன்" என்றது செல்ஃபோன்,,

ஓவியா
11-12-2006, 02:28 PM
அத்தியாயம் 16

யேஸ் சார், மீரா பேசுறேன் சார்

எந்த ஆஸ்பித்திரியில் இருகீங்க மீரா,

மூனாவது தெருவுல இருக்கற பெஞ்சமின் மெடிகல் சேன்டர்ல சார்....போய்சன் கேஸுனு பக்கதிலே வந்துட்டோம் சார்

என்ன நடந்தது,
எப்படி இவ்வளவு அலட்சியமா இருந்தீங்க, சரி செல்லில் யாரு யாரு இருந்தா?

விவரமாய் சொல்லி முடித்து போணை வைக்க, அய்யோனு ஆடி போனாள், சே... நம்ப டூட்டிலேதான் நடக்கனுமா.....

மறுமுனையில் கமிஷ்னர் ராகவனுக்கு செய்தி எட்டியது
தீவிரவாதிகளுன் இவள் எப்படி சேர்ந்தாள், இது ஒரு ஆயுதக் கடத்தல் கேஸா, கள்ள நொட்டு அடிக்கறகேஸா......

யோசித்து கொண்டே காருக்குள் அமர்கிறார்...

டிரைவர் சந்தானத்தை பெஞ்சமின் மெடிக்கல் சேன்டர் போ என்று கட்டளையிட்டார்

எப்படியோ கிரீட்டிகல் சிட்டுவேஷனில் இருந்து காப்பாதிட்டோம் ஆனா கண்விழிக்க எப்படியும் ஒரு 24 மணி நேரமாவது ஆகும்... கொஞ்சம் ஸ்ட்ரோங்கா மேடிஸன் கொடுத்திருகோம் அதனாலே...கொஞ்சம் பொருமையாய் இருங்க கமிஷ்னர் சார் ...டாக்டர் பெஞ்சமின் பேசிகொண்டெ லாப்பினுல் நுலைந்து.....அந்த போய்ஸன் கேஸ் ரிசல்ட் வந்துருச்சானு....நர்ஸ் ஷீலவை கேட்க....

அமா சார், இப்பதான் வந்துச்சுனு சொல்லி கையில் கொடுத்துவிட்டு........நான் கிளம்புறேனு சொல்லி சென்றாள்...

பிரித்து படித்த டாக்டர் பெஞ்சமின்,

கமிஷ்னர் சார், இது ஒரு பெரிய கேஸா இருக்கும் போல.....ரீசால்டுலே...ரெண்டுவகை போய்சன் கொடுத்ததா இருக்கே....
ஒன்னு வயிறில் இது சப்பாட இருக்கலாம்...இன்னொன்னு எதோ ஊசியில் உடலில் செலுதியது போல் இருக்கும் போல்...

எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க, எதாவது விசயம் இருந்த உங்களை பேர்சனலா கூப்பிடுறேன் .....

சரி டாக்டர் நான் வரேன்....கமிஷ்னர் ராகவன் சென்றார்....

********************************************************************************************

ஏலே அல்லி அந்த கடிதாசை இப்படி குடு இன்னாதான் எழுதீருக்குனு பார்ப்போம்...
அல்லி கடிதத்தை ரேசனிடம் கொடுக்க.....

அல்லிராணி
12-12-2006, 12:58 PM
[COLOR="Red"]

********************************************************************************************

ஏலே அல்லி அந்த கடிதாசை இப்படி குடு இன்னாதான் எழுதீருக்குனு பார்ப்போம்...
அல்லி கடிதத்தை ரேசனிடம் கொடுக்க.....
அடச்சே! இதுக்குத்தான் வீக்கானவங்களை சேர்க்கக்கூடாதுங்கறது.. மயூரேசன் அலுத்துக் கொண்டான்.. மோகன்?? யாரது??? முகவரி இருக்கே.. ஈஸியா புடிச்சிரலாம்.. ஒருவேளை ஃபாத்திமாவை அரஸ்ட் பண்ணின போது ஒருவன் பின்னாலேயே மறைந்து மறைந்து தொடர்ந்தானே அவனா? ஃபாத்திமாவுக்கு இன்னும் வெளியுலக கனெக்ஷன் இருக்கிறதென்றால் முதலில் அதை கட் செய்யணும்.. மயூரேசன் கடிதத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்..
[B]
அத்தியாயம் 17

போஸ் கோபத்தின் உச்சத்திலிருந்தான்.. இப்படியா அரைகுறையாய் திட்டம் போடுவது? ஃபாத்திமா பிழைத்து விட்டாளே.. இனி காவல் பலமாகி விடுமே. அவள் தன்னை கொல்ல நினைத்தது யார் என்று புரிந்துகொண்டாள் விபரீதமாகி விடுமே..

உடனே மயூரேசனை வரச் சொன்னான்,,

gragavan
12-12-2006, 03:38 PM
போஸ் அழைத்ததும் மயூரேசன் விரைந்து சென்றான். பசிவேளை. ஆனால் பார்க்க முடியுமா? வேலை...என்ன வேலை...போஸிடம் பார்ப்பதெல்லாம் வேலையா...வெறுப்புதான். ஆனாலும் வேறு வழி ஏது? சொன்னதைச் செய்கிறவன். அவ்வளவுதான். நல்ல வேலை கிடைத்தால் இதையெல்லாம் விட்டு விட்டுப் போகிறவந்தான். ஆனாலும் சொன்ன வேலையைச் செய்யக் கூடியவன். அதனால்தான் பாத்திமா கடிதம் குடுத்தாள் என்றதும் பதறித்தான் போனான். ஆனால் போஸ் அழைத்ததும் கடிதத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நேரில் பார்த்துச் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் விதி விட்டதா? வழியில் ராகவனிடம் மாட்டிக் கொண்டான்.

ஓவியா
12-12-2006, 08:41 PM
அத்தியாயம் 18

மதியின் மனதில் ஒறே போராட்டம்.......ச்சே என்ன செய்வது...இப்படி ஆயிபோச்சே.....யார உதவிக்கு கூப்பிடறது...யோசித்த வன்னம் கைத்தொலைபேசியை எடுத்து...........ஒரு-ஒரு எண்ணாக பார்க்க................பளிச்சென்று மின்னியது அந்த எண்......பிரீன்ஸ் பிரன்க்லின்

மறுமுனையில்.....அலோ

அலோ.....மேய் ஐ ஸ்பீக் டு யுர் எம் டி பிரீன்ஸ் பிலீஸ்.....

யூர் கூட் நேம் ப்லீஸ்....ஒரு சிட்டு கூவியது

ஓ சொரி, ஐ எம் லாயெர் மதி ப்றோம் சேன்னை...

வேய்ட மினிட் பிலிஸ்..... ஆப்பரேட்டர் 'என்னை தாலட்ட வருவாள இசையில் லைனை வைத்தள்....

அலோ...

அலோ டேய் எப்படி இருக்கே....

ஓ மதியா சொல்லு....

எனக்கு ஒரு உதவி வேணும்....பீலிஸ் போனை வச்சுடாதே.....பிலீஸ்.....கெஞ்சினான் மதி

சரி ஏன் மும்பை அனில் கோர்படேவும், டெல்லி மஸ்தானும் உன்னை தேடறானுங்க..............மதி........இப்ப எங்க இருக்கே சொல்லு....

நான் வர ஒரு ரேண்டு அவர் ஆகும்........நாம சந்திக்கும் பங்களாக்கு வந்துடு......சரியா...........ம்ம்ம் பாய்

மதிக்கு பிரிந்த உயிர் வந்தது போல் இருந்தது.....

மும்பை அனில் கோர்படேவும், டெல்லி மஸ்தானும் பிரீன்ஸ் பிரன்க்லின் நண்பர்கள்....அப்பாடா தப்பித்தோம் என்று மனம் மகிழ்ந்தது

இப்ப மதி கண்ணுக்கு பிரீன்ஸ் பிரன்க்லின் தெய்வமாக தெரிந்தான்...பெரிய கோடிஸ்வரன்.....பணதிற்க்கு கஷ்டமில்லை...............

ஓவியாவை காபாற்றி கூட்டி சென்றுவிட மனம் ஏங்கியது..........

மருத்துவமனையில் ஓவியாவின் உயிர் மெல்ல மெல்ல .......................................

*********************************************************************************

கதையை சீக்கிரம் முடிங்கப்பா..............மேக சீரியலே தோத்துடும் போல இருக்கு................:D :D :D

மதி
13-12-2006, 01:15 AM
அதே அதே தான் நானும் சொல்றேன்...
சீக்கிரம் முடிங்கப்பா..
ஒன்னு கதையை இல்லேன்னா ஆளை..!

gragavan
13-12-2006, 09:28 AM
அதே அதே தான் நானும் சொல்றேன்...
சீக்கிரம் முடிங்கப்பா..
ஒன்னு கதையை இல்லேன்னா ஆளை..!
அதுக்குத்தான மயூரேசன ராகவன் கிட்ட மாட்டி விட்டதும். ஆசுபித்திரியில் ஓவியாவோட உயிர் மெல்ல மெல்லன்னு போடுறதும். அடுத்து அல்லியோ தாமரையோ வந்து முடிச்சுகளை அவிழ்க்கனும்.

அல்லிராணி
13-12-2006, 10:03 AM
அதுக்குத்தான மயூரேசன ராகவன் கிட்ட மாட்டி விட்டதும். ஆசுபித்திரியில் ஓவியாவோட உயிர் மெல்ல மெல்லன்னு போடுறதும். அடுத்து அல்லியோ தாமரையோ வந்து முடிச்சுகளை அவிழ்க்கனும்.

கதையோட பேரு நானே ஆரம்பித்து வைக்கிறேன்.. இன்னும் ஆரம்பமே ஆகலை.. அதுக்குள்ள முடிக்க நினைக்கிறீங்களே:D :D :D

gragavan
13-12-2006, 10:13 AM
கதையோட பேரு நானே ஆரம்பித்து வைக்கிறேன்.. இன்னும் ஆரம்பமே ஆகலை.. அதுக்குள்ள முடிக்க நினைக்கிறீங்களே:D :D :D
தாயே அல்லி....வேற வழியில்ல. இந்தக் கதைய முடிச்சிட்டு..அடுத்து மாயாஜாலக் கதை எழுதலாம். அதுலதான் மன்ற நண்பர்கள விட்டலாச்சார்யா படம் மாதிரி குரங்கு எலி பூனைன்னு மாத்தீரலாம். :D :D :D :D

அல்லிராணி
13-12-2006, 10:22 AM
[COLOR="red"][B]மருத்துவமனையில் ஓவியாவின் உயிர் மெல்ல மெல்ல ............:D :D :D

தன்னை உணரத் தொடங்கி இருந்தது.. எங்கேயே தண்ணீரில் மிதப்பதைப் போல ஒரு உணர்வு.. கண்கள் பாரமாய் இருந்தது.. திறக்க முடியவில்லை.. தலைக்குள் ஒரு ரங்க ராட்டினம் சுழல்வதைப் போலிருந்தது.. ஏதோ ஆகாயத்தில் இருந்து சுழன்றவாறே கீழே இறங்குவதைப் போல உணர்வு.. யாரோ அவளை உலுக்குவதாய் ஒரு உணர்வு ஏற்பட கண்ணை திறக்க முயன்று தோற்று வாயைதிறக்க முயன்றால்..

பெஞ்சமின் முகம் சற்றே நிம்மதியைக் காட்டியது.. அப்போது நர்ஸ் ஷீலா வந்து சார் போலீஸ் கமிஷனர் உங்களை கூப்பிடுகிறார் என்று சொல்ல..
அந்த அறைக்குள் நுழைந்தார்..

ராகவனும் - செல்வ நாயகமும் உள்ளே இருக்க பெஞ்சமின் புருவத்தை உயர்த்தினார். ராகவன் செல்வ நாயகத்தை அறிமுகப் படுத்தினார்..

செல்வ நாயகம் ஓவியா எப்படி இருக்கிறாள் என்று விசாரித்தார். பெஞ்சமின் தற்போது நம்பிக்கை இருக்கிறது.. இன்னும் இரண்டு நாள் ஆகலாம் எதையும் தெளிவாகச் சொல்ல என்றார்..

"இப்போதைக்கு ஃபாத்திமா இறந்திட்டதா அனவ்ன்ஸ் பண்ணிடுங்க"

தாமரை
13-12-2006, 11:01 AM
மோகன் சிந்தனையில் இருந்தான்.. ம்ம்ம் போஸின் இன்னொரு ஆள் இருக்கான் யார் அது என்று அவனது மண்டையை குடையத் தொடங்கியது.

இனி மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.. ஓவியாவிற்குப் புதுப்பெயர் வேண்டும். ஸ்டெல்லா என மாற்றிவிடலாம். அதற்குத் தேவையான டாக்குமெண்டுகள், படிப்புச் சான்றிதழ்கள், ஓட்டுச் சீட்டு, ரேஷன் கார்ட் எல்லாம் ரெடி.. இவளை தயாராக்கினால் போஸிற்கு எங்க்கிருந்து ஆயுதங்கள் வருகின்றன எனத் தெரிந்து விடும், ஆனால் ஒத்துழைப்பாளா?

மயூரேசன் நல்லவன் போலத்தான் தெரிகிறான்.. அவனையும் நம் வலைக்குள் கொண்டுவரவேண்டும்..

ம்ம்ம்... நிறைய சாதிக்க வேண்டும்.. எங்கேயாவது சின்ன தவறு வந்தாலும் எத்தனை உயிர் பலியாகும் என்று தெரியாது..

என்னேரமும் விழித்திருக்க வேண்டிய சமயமிது.. இன்று மாலை போஸை பார்த்து ஃபாத்திமா ஒழிந்தாள் என்று சொல்லிவிட வேண்டியதுதான்

ஓவியா
13-12-2006, 06:50 PM
அதே அதே தான் நானும் சொல்றேன்...
சீக்கிரம் முடிங்கப்பா..
ஒன்னு கதையை இல்லேன்னா ஆளை..!
உன் பேச்சை யாரு கேக்குறாக...வயசு அப்படியப்பூ......பொறு

அதுக்குத்தான மயூரேசன ராகவன் கிட்ட மாட்டி விட்டதும். ஆசுபித்திரியில் ஓவியாவோட உயிர் மெல்ல மெல்லன்னு போடுறதும். அடுத்து அல்லியோ தாமரையோ வந்து முடிச்சுகளை அவிழ்க்கனும்.
அதே அதே சபாபதி

மருத்துவமனையில் ஓவியாவின் உயிர் மெல்ல மெல்ல
தன்னை உணரத் தொடங்கி இருந்தது.. "இப்போதைக்கு ஃபாத்திமா இறந்திட்டதா அனவ்ன்ஸ் பண்ணிடுங்க"

அய்யோ மறுபடியும் காப்பாத்தியாச்சா...
எப்ப சாக போனாலும் இப்படிதான் சிவன் பூஜயில் யாரவது வந்து நுலைந்து...
(கடவுளுக்கு கருனையே இல்லைதான்)

leomohan
13-12-2006, 08:35 PM
இனி மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.. ஓவியாவிற்குப் புதுப்பெயர் வேண்டும். ஸ்டெல்லா என மாற்றிவிடலாம். அதற்குத் தேவையான டாக்குமெண்டுகள், படிப்புச் சான்றிதழ்கள், ஓட்டுச் சீட்டு, ரேஷன் கார்ட் எல்லாம் ரெடி.. இவளை தயாராக்கினால் போஸிற்கு எங்க்கிருந்து ஆயுதங்கள் வருகின்றன எனத் தெரிந்து விடும், ஆனால் ஒத்துழைப்பாளா?

Selvan, you are full of energy ;-)

ஓவியா
13-12-2006, 08:41 PM
Selvan, you are full of energy ;-)

தாழ்மையான வேண்டுகோள்

ரிபன் வெட்டிய நீங்கள் இப்படி தூர நின்று பார்த்தால்.........சரியா...:angry: :angry:

தயவு செய்து கதையை தொடர்ந்து எழுதவும்.....:cool:

மன்னிக்கவும் மோகன்

வணக்கம்

gragavan
14-12-2006, 08:26 AM
கமிஷனர் ஆபீசிலிருந்து வெளியே வந்தான் மயூரேசன். கமிஷனர் ராகவன் சொன்னதெல்லாம் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும் பயமாக இருந்தது. இதெல்லாம் நடக்குமா? தானும் நிம்மதியாக நல்ல சோறு சாப்பிடுவோமா என்ற ஆவலும் உள்ளுக்குள் இருந்தது. சரி. ஆனது ஆயிற்று. முடிவுக்கும் வந்தாயிற்று. இனிமேல் துக்கப்படக்கூடாது என்று முடிவு செய்தான்.

அங்கே வாசலில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் சிகரட் வாங்கிப் பற்ற வைத்தான். புகையை வளையம் வளையமாக விட்டவன் கண்ணில் வளையலாக மாட்டிக் கொண்டான் ஒருவன்.

"ஏய் மதி!" மயூரேசன் கைதட்டி அழைத்தான். கமிஷனர் ராகவனும் தானும் முடிவு செய்ததை மதியிடம் தொடங்க முடிவு செய்தான். அதனால் மதியை அழைத்தான்.

மயூரைப் பார்த்த மதிக்கும் வியப்பு. "ஏய்! சந்துரு! நீ எங்க இந்தப் பக்கம்? அதுவும் கமிஷனர் ஆபீஸ் வாசல்ல.".......................

தாமரை
14-12-2006, 09:18 AM
மதியின் மனம் தீயாய் எரிந்துகொண்டிருந்தது.. முதலில் இவன் கதையை முடிக்கவேந்தும்.. இவனால் அல்லவா ஓவியாவை இழக்க நேரிட்டது.. இருக்கட்டும் இருக்கட்டும்.. பட்சி தானாய் வந்து வலையில் விழுகிறது.. இவனிடமிருந்தே எனது கணக்கை தீர்க்க ஆரம்பிக்கிறேன்..

என்ன சந்துரு.. எங்க இந்தப் பக்கம் என்று கேட்க.. அது ஒண்ணுமில்லை.. சும்மாதான் என்ன புதுசா எதாவது பார்ட்டி தேறுமா? மயூரேசன் கேட்க..

அதெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு சந்துரு... இப்ப நான் புது ஆளு.. பிஸினஸ் செய்யறேன்.. அது விஷயமாத்தான் ஆடிட்டரை பார்க்கப் போயிட்டிருக்கேன்.. உனக்குத் தெரியுமா, நீ கொடுத்த அந்தப் பணம்தான் இந்த புது வாழ்க்கைக்கே அடித்தளம்.. இந்த சனிக்கிழமை ஃபிரீயா இருக்கியா மீட் பண்ணுவோம் நிறைய பேசலாம்..

மயூரேசனும் ஒப்புக்கொண்டான்.. இவன் மூலம் நமக்கும் ஒரு மறைவிடம் கிடைக்கலாமே!.. சந்தோஷமாய் மீட் பண்ணலாம்.. நானும் உன்னோட நிறைய பேசணும்...

ஓவியா
14-12-2006, 04:27 PM
இதுவரை

இதில் யாரு சந்ரு...யாரு மயூரன்...டபல் அக்கட்டீங்கா....புரியலையே....சந்துருதான் பாஸ் கூட இருக்கான்.....மயூரன் கூலிஆளுதானே..அதுவும் அல்லியோட வூட்டுகாரன்......எங்கையோ இடிக்குதா.......

ராகவன்.....தாமரை அண்ணா....உங்க வரிகள் ஒத்து போகலையே........இடிக்குதே.....பழைய அத்யாயத்தை மருபடியும் படிங்கோ....

மதி
15-12-2006, 01:50 AM
நான் யாரு எனக்கொன்னும் புரியலியே
நீங்க யாரு அதுவும் கூட தெரியலியே...??

அடடா..ஒரே கதாபாத்திரத்துக்கு எத்தன பேரு..???

யப்பா சாமி...இப்பவே கண்ண கட்டுதே..!

தாமரை
15-12-2006, 03:32 AM
இதுவரை

இதில் யாரு சந்ரு...யாரு மயூரன்...டபல் அக்கட்டீங்கா....புரியலையே....சந்துருதான் பாஸ் கூட இருக்கான்.....மயூரன் கூலிஆளுதானே..அதுவும் அல்லியோட வூட்டுகாரன்......எங்கையோ இடிக்குதா.......

ராகவன்.....தாமரை அண்ணா....உங்க வரிகள் ஒத்து போகலையே........இடிக்குதே.....பழைய அத்யாயத்தை மருபடியும் படிங்கோ....
அதாவது...

சந்த்ரு = மயூரேசன் ...

ஊருக்குள்ள சந்துரு ஆனா அந்த கிரிமினல் கும்பல்ல அவன் மயூரேசன்..

போஸ் மோகனை முழுசா நம்ப முடியாததால ஃபாத்திமாவைக் கொல்ல போட்ட திட்டம் அல்லிராணி மூலம் அவளுக்கு விஷ ஊசி போடறது.. அது மெல்லக் கொல்லும் விஷம்...

செல்வ நாயகம் ஃபாத்திமாவை சீனில் இருந்து மறைக்க போட்ட திட்டம் ஏகாம்பரம் மூலம் மருந்து கலந்த இட்லியைக் கொடுத்தது..

மெல்லக் கொல்லும் விஷம் என்னன்னு பெஞ்சமினால கண்டு பிடிக்க முடியலை..

மயூரன் நீங்க எழுதனப்ப கூலி ஆளுன்னு சொல்லலியே

இப்போதைக்கு

காம்ரேட்ஸ் = போலீஸ் உளவாளி மோகன்
ஓவியா = ஃபாத்திமா = ஸ்டெல்லா
சந்துரு = மயூரன்

இனிமே தான் மதியின் சாகசங்கள் ஆரம்பம்

மதி
15-12-2006, 03:34 AM
இனிமே தான் மதியின் சாகசங்கள் ஆரம்பம்
இனிமேயாஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....???
:eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek:
:eek: :eek: :eek: :eek: :eek: :eek:

ஆதவா
15-12-2006, 08:35 AM
அட இது ரொம்ப நல்ல இருக்கே,.,,

gragavan
15-12-2006, 08:55 AM
அட இது ரொம்ப நல்ல இருக்கே,.,,
அப்புறமென்ன நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிற வேண்டியதுதானே!

ஓவியா
15-12-2006, 09:23 AM
அத்தியாயம் - 1

மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது... குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக துளைத்தன....எத்தனை இதயங்களை காயப்படுத்தி... எத்தனை தவறுகள்....வருடங்கள் கடந்தாலும் மனது மட்டும் நினைவலைகளை அவ்வப்போது வருடியது...

இத்தனை நாள் சிந்திக்காமலே இருந்த அவன் இன்று சிந்திக்க காரணம் இருந்தது. காரணம் அவள்....

அவளை காவல்துறை வண்டியில் கைதியாகப் பார்த்த போது, அதிர்ச்சியுடன், காதலிக்கும் காலத்தில் முகர்ந்தால் குழையும் அனிச்சமாய் இருந்தவள் இன்று எப்படி குற்றவாளியாக என்ற கேள்வியும் அவன் மனதைக் குடைந்தது..

எங்கே தவறு நடந்தது என்று புரியவில்லை.. என்ன காரணம் என்றும் புரியவில்லை.. அவளை சந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான்.

நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருக்க, காவல் நிலையத்தில் எப்படி நுழைவது என யோசித்தான்.. எப்படியாவது அவளைச் சந்தித்து கேட்டுவிட வேண்டும்.....இத்தனை நாள் வாழக்கையிலே எத்தனையோ பெண்களை உபயோகித்துக் கொண்டாயிற்று.. ஆனால் இவள் எனக்கே எனக்கு என்று நினைத்தல்லவா அவளுக்கு எதுவுமே தெரியாத மாதிரியல்லவா பார்த்துக் கொண்டான்.. இவள் தவறாக மாட்டிக்கொண்டாளா இல்லை தவறு செய்து மாட்டிக் கொண்டாளா?

மெல்ல காவல் நிலையத்தினுள் நுழைந்தான்... வணக்கம் சார். என் பெயர் மதி......நான் ஒரு வக்கீல்.....நீங்க கொஞ்சம் முன்பு அழைத்துவந்த பெண்......அவங்களை கொஞ்சம் பார்க்கனும்..... காவல் அதிகாரியின் முகத்தில் சிறு அதிர்ச்சியலை ஓடுவது மதியின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது...தீவிரவாதி என அழைத்து வந்த பெண்ணை ஒருவன் வந்து பாக்கணும்னு சொல்றானே...யார் இவன்...? சந்தேகக் கண்களோடு பார்க்க ஆரம்பித்தார் அந்த காவல்துறை அதிகாரி...

அத்தியாயம் - 2

அதே நேரத்தில், பிறிதொரு நிழலிடத்தில், தலைவன் இவ்வாறு சொன்னான்..

" காம்ரேட்ஸ்.......பாத்திமா எதையும் போலிஸ்கிட்டே சொல்லக்கூடாது..அவள முடிச்சுடுங்க..!"......

"போஸ் அவ நல்ல பொண்னு, சதியாலதான் நம்மலிடம் மாட்டினா....எதுவும் சொல்லமாட்டானு நம்பிக்கை இருக்கு.....கொஞ்சம் யொச்சிக்கலாமே" ...காம்ரேட்ஸ்டின் குரலில் ஒரு கருனை...

மடையா அவளால் நமக்கு ஆபத்துடா...சொன்னதை செய்....

போஸின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாதவனாய் காம்ரேட்ஸ், அந்த இடத்தை விட்டு வெளியேரினான்.எப்படியாவது பாத்திமாவை காப்பாற்ற வேண்டுமென அவன் மனம் தவியாய் தவித்தது.

அத்தியாயம் - 3

பாத்திமா தலையை முழங்கால்களுக்குள் புதைத்துக் கொண்டு இருந்தாள்.. பார்ப்பதற்கு அவள் அழுவது போல் தெரிந்தாலும், உண்மையில் அவள் அழவில்லை. அவள் மனம் இறுகிப் போயிருந்தது..

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்த காலமெங்கே!. பகட்டிலும் ஸ்டைலிலும் மனதைப் பறிகொடுத்து பட்டிணத்திற்கு ஓடி வந்த காலமெங்கே.. ஏமாற்றப்பட்டோம் என் அறிந்து தற்கொலைக்கு முயன்றபோது பொஸின் பேச்சுக்கள் அவள் மனதை மாற்றி அவள் வாழ்விற்கு கொடுத்த புது அர்த்தமெங்கே.. இன்று ஆயுதக் கடத்தலில் போலீஸிடம் சிக்கி பட்ட அனுபவம் எங்கே.. இத்தனையும் மனதில் வந்தாலும் மனம் மரத்துப் போயிருந்தது..

மதி.. அவனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறாள்.. அவன் அவள் கையில் சிக்கியதும்.. அவனையும் கொன்று தன் வாழ்வின் லட்சியத்தையும் வாழ்க்கையையும் ஒரே சமயத்தில் முடிக்க வேண்டும்.

கண்களில் கண்ணீர் அல்ல வெறி பளபளத்துக் கொண்டிருந்தது.

ஓவியா
15-12-2006, 09:24 AM
அத்தியாயம் - 4

மதியை எப்படியாவது பழி வாங்க விரும்பிய பாத்திமாவுக்கு மதியே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தது அதிர்ச்சியாக இருந்தது. எதற்கு வந்திருக்கிறான் அந்தப் படுபாவி என்று அவள் உள்ளம் நினைத்தது. அவனைப் பார்க்கப் பார்க்க வயிறும் உடலும் உள்ளமும் எரிந்தது. அவனால்தான் தான் இருந்ததெல்லாம் இழந்தோம் என்று தவறாக நினைத்திருந்தாள் பாத்திமா.

அதனால்தான் அவன் மேல் அத்தனை ஆத்திரம். ஊரிலிருந்து அவனோடு வந்த முதல் நாளில்தான் கொண்டு வந்த பணம் காணாமல் போனது. அவளது கெட்ட நேரம் அடுத்த நாளே அவளது கற்பும் பறிபோனது. ஆனால் அப்பொழுதெல்லாம் அவள் மதியைத்தான் நம்பினாள். பார்த்த இரண்டாவது நாளிலேயே இவ்வளவு நம்பிக்கையும் உரிமையும் உண்டானது ஆச்சரியந்தான். எப்படி பணமும் கற்பும் பறிபோனது தெரியுமா? அதை விட மூன்றாம் நாள் மதியே பறிபோனது எப்படி தெரியுமா?

அத்தியாயம் - 5

திட்டமிட்டு எமாற்றிவிட்டன் என்று ஒரு வெறி அவளுல், அழகில் பணத்தில் மயங்கிட்டுமே இல்லை மயகிட்டானா....ராஸ்கல், என்னமா தேனாய் பேசினான், இந்த வாய்ப்பை விட கூடாது எப்படியும் பலிவாங்கியே ஆகனும்னு மனதிற்க்குள் ஒரு ஆவேசம்...இருந்தும் காட்டிக்கொள்ளாதவள் போல் சிலையாய் இருந்தாள்.

அந்த நேரம் பார்த்து தொலைபேசி சிணுங்கியது..

மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிப்பதைப்போல அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தொலைபேசி துப்பப்போவது தெரியாமல் காவல் அதிகாரி ஒலிவாங்கியை கையில் எடுத்தார்

" ஸார், நீங்க சொன்ன அந்த ஆளை பிந்தொடர்ந்தேன், விஷயம் நாம நினைக்கறதை விட ரொம்ப சீரியஸ், இது சின்ன நக்ஸல் கும்பல் இல்ல, இதில இண்டர்நேஷனல் கிரிமினல்கள் நிறையப் பேர் சம்பந்தப் பட்டிருக்காங்க "

செய்தியைக் கேட்ட காவல் அதிகாரி சிந்தனையுடன் போனை வைத்தார். இவனை கொஞ்சம் விட்டுப் பிடித்தால் என்ன.. இந்த மூஞ்சி ஒரு வழக்கறிஞர் இல்லை என்பது நல்லா தெரியும்.. இந்த தீவிரவாதிகள் கிட்ட விசாரணையில் உருப்படியா எதையுமே கறக்க முடியாது.. வேற ரூட்டிலதான் போகணும்..

சரி.. சரி.. 10 நிமிஷம் பேசிட்டு போங்க. இனிமேல பாக்கணும்னா, கோர்ட்டுல புரட்யூஸ் பண்ணின பிறகு கோர்ட்டு உத்தரவு வாங்கின பின்னாலதான் பார்க்க முடியும்...இன்ஸ்பெக்டரின் உத்தரவு வாங்கிய மதி, லாக்கப் அருகே சென்று சொன்னான்

"ஓவியா முதல்ல என்னை மன்னிச்சுடு"

அத்தியாயம் - 6

நடிப்புக்காக மெதுவாக அழ ஆரம்பித்திருந்தாள்....

இன்னும் என்னா இருக்கு மதி, உனக்குதான் நான் தேவைப்படாத ஒரு பொருலாயிட்டேனே, அன்று இரவு நீ மட்டும் என்னை தனியா விட்டுட்டு போகலைனா, இன்னேரம்.....(விசும்பினால்)...

மன்னிச்சுடு ஓவி, சரி அழாதே இனி என்ன நடந்தாலும் நான் பாத்துகுறேன்,

என்னாதான் நடந்தது ஏன் உன்னைபோய்...போலிஸ்.....சொல்லு, நீ உண்மய சொன்னாதான் என்னால உன்னை காபாற்ற முடியும், என்ன நடந்துச்சு? சொல்லு ஓவி..

ஊரிலேருந்து வந்ததும் நாம தங்கிய அந்த பண்ணையார் பயனோட வீடு,

அங்கே யாரோ கள்ள நொட்டு அடிக்கறதா தகவல் கிடச்சுதாம், போலிஸ் வந்து பின் பக்க ஸ்டோரிலே என்னமோ துருவி துருவி எடுத்தாங்க, அப்ப நான் தான் விட்டில் இருந்தே அதனலே என்னை இங்கு கொன்டு வந்துட்டாங்கா......

அப்ப நீ இன்னும் அந்தா சந்துருவோட தான் இருக்கியா, இடிவிழுந்தவன்போல் முகம் கருக்கா, மதிக்கு அழவேண்டும் போல் இருந்தது.

சரி நான் இப்பவே அந்த சந்துருவ போய் பார்க்குறேன் நீ கவலைபடாதே, காசுக்கு ஆசபட்டு ஒருமுறைதான் நான் உன்னை தொலைச்சிட்டேன், இப்ப எனக்கு புத்திவந்துருச்சு, என்னை மன்னிச்சுடு....

இனி என் உயிர் போனாலும் உன்னை கைவிடமாட்டேன் ஓவி, நான் வரேன்...திரும்பி பார்க்காமல் சென்றான்

சார்,

சொல்லுங்க மதி,

அப்ப நான் அவங்களை கோர்ட்டு உத்தரவுடன் நாளைக்கு வந்து பார்க்குறேன். ....................வரேன் சார்

இன்ஸ்பெக்டர் செல்வனாயகம் ஏதோ யோசனையில் சரி என்று தலையசைத்தார்,

ஓவியா
15-12-2006, 09:24 AM
அத்தியாயம் - 7

ஓவ்வொரு அடியும் நடை பிணமகவே நடந்தான்,

மதி நீ அந்த பொண்ண டாவடிகிறாதானே.....சந்துரு சிரிக்க.....

இல்லடா லவ்வே பண்ணுறேன்டா...ஒரு இரண்டு வருஷமாடா மனசுகுள்ளே, ஆனா சொல்ல பயமா இருக்குடா......,

ஏன்டா... சந்துரு குறுகிட்டான்

அவங்க அப்பா ஒரு வீனாபோனாவன் காதல் கல்யாணம்னா ஒத்துக்க மாட்டாறாம்,
அவ தம்பி சொன்னான்.

யாரு அந்த செட்டியாரா? சந்துரு கேட்டான்......

ஆமான்டா மதி, .....இது அவளுக்கு தெரியுமா?,

அட போடா அவதான்டா ஐ லவ் யுனு மொத சொன்னா, ....ஆனா நான் இன்னும் ஓக்கேனு சொல்லவே இல்லடா......

அட இதோபாருடா மாப்பிளைய, சரி எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்டா நளைக்கு பாக்கறேன்.....ம்ம் வரட்டா.....சந்துரு சென்றான்

சந்துருவிடம் என் காதலை சொல்லிய முதல் நாள்.....
எனக்கு நானே கொள்ளியும் வைத்தநாள்......

ச்சே....அப்பவே அவன் ஓவிய.....பணக்காரனாலே புத்தி இப்படிதான் போகுமா......

ஆசையிலே அறிவிழந்துட்டேன்டா....நானே அவள கல்யாணம் பண்ணிகிறேன்........நீ எங்கயாவது போயிடுனு சொன்னானே...

பின்னே, ஒரு திருவிழா சந்திப்பில் அவ எங்கே இருக்கானு தெரியலடானு சொன்னானே...........

அத்தியாயம் - 8

குட்மார்னிங் ஸார்!

கமிஷனர் ராகவன் நிமிர்ந்தார்! வாங்க செல்வநாயகம்! எனி புரோக்ரஸ்?

இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தன் கையில் இருந்த டேப்ரிகார்டரை ஒலிக்க வைத்தார்.

"ஓவியா முதல்ல என்னை மன்னிச்சுடு" டேப் தான் உள்வாங்கிய அனைத்தையும் கக்கியது.

இது அந்தப் பொண்ணோட இறந்த காலம்தானே! கமிஷனர் ராகவன் கேட்க.

"ஆமாம் ஸார்.. இந்தப் பெண் பேசறதைக் கேட்டீங்களா.. ஏமாத்திய காதலன் மேல இருக்கிற வெறி இல்ல..."

"அதனால"

"இரண்டு சான்ஸ் இருக்கு.. ஒண்ணு இவள் இவனை பழிவாங்கப் போறா.. இல்லை இவன் உதவியோடு எஸ்கேப் ஆகப் பார்க்கிறா"

சரி, இவள் எஸ்கேப் ஆகப் பார்க்கிறான்னு வச்சுக்குவோம்.. அப்ப..

"இவனை மாட்டி விட்டுருவா"

"இவனை பழி வாங்கப் போறான்னா"

"அதுக்கு இவ அந்தக் கும்பலை விட்டு வெளிவரணும்"

"ஏன்"

"ஏன்னா நமக்கு ஒத்துழைச்சாதான் அவள் இவனை முடிக்க வாய்ப்பு கிடைக்கும்"

"ஸோ"

"இவ பழிவாங்கப் பார்க்கிறா என்கிற கோணத்தில் செல்லலாம் என் நினைக்கிறேன்"

"அதனால"

அதனால் நாம என தன் திட்டத்தை வரிவரியாக செல்வநாயகம் விவரிக்க

"அப்போ மதியை பலிகடா ஆக்கறீங்க"

"அதற்கு வேற ஒரு ஏற்பாடு வச்சிருக்கேன், மோகன்" செல்வநாயகம் அழைக்க...

காம்ரேட்ஸ் உள்ளே வந்தான்..

அத்தியாயம் - 9

வாங்க மோகன், எப்படி இருகீங்க

சல்யூட் அடித்து, நல்லா இருக்கேன் சார்

ரொம்ப ஆபத்தான வேலைய துனிஞ்சு செயரீங்க பாரட்டுறேன்...
ஆனால் ரொம்ப கவனமா இருக்கனும் உயிருக்கே ஆபத்து இருக்கு...

தெரிஞ்சுதான் சார் தைரியமா இறங்கினேன்...
நாட்டுக்கு செவை செவதை என் முதல் கடமையா நினைக்கிறேன் சார்....

இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் :
நல்லது நீங்க போலிஸ் ஆளுனு அவங்களுக்கு தெரியாதே

இல்ல சார் தெரியாது
மனதிற்க்குள் போஸ் கேட்டது ஒலித்தது....நீ நம்ம ஆளுனு போலிஸுக்கு தெரியாதே.......இல்ல போஸ்

கமிஷனர் ராகவன் குறுகிட்டு
மோகன், இதுவரைக்கும் என்னென்னே ரகசியங்களை கண்டு பிடிச்சாச்சு
டீபார்ட்மெண்ட்டில் தகவல் எல்லாம் பைல் பன்னியாச்சா?? அடுத்த நடவடிக்கை என்னாது?

செல்வநாயகம் :
எனக்கு எல்ல விசயமும் டீடேய்லா வேணும், அப்பதான் நான் உங்களுக்கு வேண்டிய உதவிய வழங்க முடியும்

கமிஷனர்:
மோகன், நீங்க கொஞ்சம் வேளியில் இருங்க......

சரி சார்... ஒரு சல்யூட்

மோகன் சென்றவுடன்

இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் என்னமோ கிசு கிசுகின்ரார்...

ஓவியா
15-12-2006, 09:25 AM
அத்தியாயம் - 10

மதி அந்த லாட்ஜின் எதிரில் நின்றிருந்தான்.. ஓவியாவின் முகம் அவன் கண்ணில் நிழலாடியது.. போலீஸ் எப்படியும் த்ன் போலி என்று தெரிந்து கொண்டுவிடும். இனிமேல் தான் ஜாக்கிரதையாக் இருக்கவேண்டும்...

மும்பை அனில் கோர்படே முன்பெல்லாம் பாதுகாப்பான மறைவிடம் தருவான்.. இப்போதுதான் அவன் சங்காத்தமே வேண்டாம் என் விட்டாயிற்றே.. அவனுக்காக எத்தனைப் பெண்களைக் கடத்தி கொடுத்தாயிற்று.. அவன் கண்ணில் ஓவியா விழ வேண்டாம் என்றுதானே சந்துரு வீட்டிற்கு அழைத்துச் சென்றான்...

டெல்லி மஸ்தான்.. இவனும் இப்போது மதியை தேடிக்கொண்டிருப்பான்.. வங்கக் கடல் வழி வரும் போதை மருந்துகளுக்காக..

இப்போதைக்கு இவன் ஒரு ஒன் மேன் ஆர்மி.. ஒரிசாவின் ஒரு ஓரத்தில் பங்களா வாங்கிப் போட்டாயிற்று.. ஓவியாவை மட்டும் விடுவித்து அழைத்துக் கொண்டால்...

அத்தியாயம் - 11

ஓவியாவிற்குப் புரியவில்லை.. என்ன நடக்கிறது என்னைச் சுற்றி.. மதி எப்படி போலீஸ் ஸ்டேஷனுக்குள்? அதுவும் போலீஸ் அவனை எப்படி இவ்வளவு தூரம் அனுமதித்தார்கள்? இது இன்னொரு வலையோ?

இருக்கட்டும். என் வாழ்வின் இலட்சியம் மதியின் அழிவுதான். அதற்காக நான் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.. அது போஸாக இருந்தாலும் கூட..

மனதில் சட்டென காம்ரேட்ஸ் வந்தான்.. அவனது ஆதரவான முகமும் நினைவிற்கு வந்தது..

போஸை காட்டிக் கொடுத்தாலும் காம்ரேட்ஸை காட்டிக் கொடுக்கக் கூடாது...

சரி இனிக் காத்திருக்க வேண்டியது தான்..

செல்வநாயகம் குறுக்கும் னெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.. அப்போது ஏட்டு ஏகாம்பரம் ஒரு பெண்ணை கொண்டு வந்து ஓவியா இருந்த லாக்கப்பில் தள்ளி பூட்டிவிட்டு, தன் நாற்காலியில் அமர்ந்து தொப்பியைக் கழற்றி மேசை மேல் வைத்து விட்டு ரிலாக்ஸ் ஆனார்..

அத்தியாயம் 12

அள்ளிராணி தலையை சொரிந்துகொண்டே ஓவியாவின் அருகில் அமர்ந்தாள்,
அட நீயும் கஞ்சா கேஸா, .........இல்லயா........பின்னே எதயாச்சும் திருடினியா,

உன்ன பார்த்தா அப்படி தெரியலையே பின்னே ******** கேஸா(மனிக்கவும் மக்களே)
சட்டேன சிதறிய ஓவியாவின் ஓரபார்வை அள்ளியின் மனதில் நெறுடலை உண்டாக்கியது...........அப்புறம் இன்னா பன்னே

சரி உடு தாயி...பாத்த நல்ல செட்டியாருவூட்டு பொண்ணுமாதிரி இருக்கே...இங்கன வந்து உகாந்துகிட்டு....என்னமோ போ என்று மடியில் சொறுவியிருந்த வெற்றிலை பையை எடுத்து இரண்டு பாக்கை வாயினுல் போட்டாள்

ஓவியாவின் மனதில் ஒரி ஐடியா தோன...

ஏங்க உங்களுக்கு இந்த ஏரியாவா என்றாள்

ஆமா தாயி ...யின்னா விசயம்...ஆரையாவது கூபிடனுமா...இப்ப என்டவூட்டு ஆளு ஜாமின் எடுக்க வருவான்...சொல்லு ஆருகிட்டையாவது தகவல் சொல்ல்னுமா......

ஒரு கடிதம் எழுதி குடுத்தா அந்த அட்ரஸுக்கு கொடுத்துடிவீங்களா... ஆர்வமாய் கேட்டால் ஓவி

அம்மாக்கா இல்லே அப்பாக்கா.....அள்ளியின் எச்சில் ஊரியா வாய் அசைந்தது

இல்ல என் தோழிக்கு
அய்யோ பேப்பர் பேனா எதுவுமே இலையே...புலம்பினால் ஓவியா

இருபுள்ளே அந்த புண்ணாக்க நான் வாங்கி தாறேன்..அந்த ஏட்டையா நம்ம தெருவுதான்....சிக்க்னல் கொடுத்தால் ஏட்டுக்கு.....(கையால் எழுதுவதுபோல் சைகை செய்து கேட்டாள்)

இரண்டு நிமிடத்தில் பேப்பர் பேனா உள்ளே வந்தது....

ஓவி அள்ளிராணியின் பின் மறைவாக அமர்ந்து எதோ எழுத ஆரம்பித்தாள்

மோகன்,
நான் செய்யா போகும் கொலைக்கு......................................

ஓவியா
15-12-2006, 09:26 AM
அத்தியாயம் 13

நிழல்கள் நீளமாகி மங்கின.. இரவின் ஆதிக்கம் மெதுவாக ஆரம்பித்தது.. ஓவியா கடிதத்தை எழுதி முடித்திருந்தாள். அவள் முற்றிலுமாக அல்லிராணியின் வலையில் விழுந்திருந்தாள்..

அல்லிராணி சமயம் பார்த்துக் காத்திருந்தாள்.. எப்போ இந்த போலீஸ் ஸ்டேஷன் நிசப்தமாகும்.. எப்போ ஓவியாவின் கதைக்கு முடிவுரை எழுத ஆரம்பிக்கலாம் என்று.

அப்பாவி ஓவியா பாவம் அல்லிராணியை பற்றி அறிந்திருக்கவில்லை.. போஸ் சொன்னது அவள் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது இவளை ஒழிக்காவிட்டால் நம் கும்பலே காலியாகிவிடும்..எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்...

ஏட்டையா பிரியாணிக்குள் புதையல் எடுத்துக் கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர் வீட்டிலிருந்து ஃபோன் வந்ததெனப் போய் விட்டார். ஒன்றிரண்டு கேஸ்களை லாக்கப்பில் போட்டு வைத்திருந்தார்கள். அவர்கள் உக்காந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஓவியாவின் கடிதம் அல்லிராணியின் இடுப்புச் சேலை மடிப்புக்குள் இருந்தது. பெண்களை ரொம்ப நேரம் வைத்திருக்க மாட்டார்கள். இன்னும் அரைமணி நேரந்தான் அல்லியை வெளியே அனுப்ப வேண்டும். அல்லது பெண்கள் சிறைக்கு அனுப்ப வேண்டும். அதே நிலைதான் ஓவியாவிற்கும்.

அதற்குள் வந்த வேலையை முடிக்க நினைத்தாள் அல்லி. "இந்தாமே கையக் காட்டு. ஒன்னோட வருங்காலத்தைப் புட்டு வெக்கிறேன்." ஓவியா முதலில் தயங்களினாள். அல்லியை நம்பிக் கையைக் குடுக்க அவளுக்கு யோசனையாக இருந்தாது. ஆனாலும் கடிதத்தையே குடுத்த பிறகு கைதானே என்று நீட்டினாள்.

"நல்லாகீதுமே!...ஒனக்கு நல்ல புருசன் வருவான். நல்ல புள்ள பொறக்கும்." அடுக்கிக் கொண்டே போனாள் அல்லி.

இதெல்லாம் எங்கே நடக்கப் போகிறது என்று ஓவியா நினைத்துக் கொண்டிருந்த பொழுது கையில் சுருக்கென்றது. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று முகத்தைச் சுருக்கினாள்.

"வளையலு குத்தீருச்சுமே" என்றாள் அல்லி. வளையல் மட்டுமா?

அத்தியாயம் 14

ஏகாம்பரம் அல்லிராணிக்கு ஒரு பிரயாணி பொட்டலம் தந்துவிட்டு, ஓவியாவிற்கு இரண்டு இட்டிலியும் கெட்டிச் சட்னியும் தந்து விட்டு செல்ல வாசலில் நிழலாடியது.. நைட் டூட்டி பெண்போலீஸ் மீரா..

ஏகாம்பரம் தந்த இட்லியை அப்பாவி ஓவியா அதில என்ன கலந்திருக்கிறது என்று தெரியாமலேயே சாப்பிட ஆரம்பித்தாள்..

ஏகாம்பரம் தந்துவிட்டு போன இட்லியை சாப்பிடும் போதே ஓவியாவுக்கு என்னவோ செய்தது.தன் உடம்புக்கு என்ன என்று யோசிக்கும் போதே கண்கள் மெல்ல மெல்ல இருள தொடங்கியது.

யதேச்சையாய் திரும்பிய மீரா கண்களில் ஓவியா தடுமாறுவது தெரிந்தது.

"ஏய்..என்ன ஆச்சு..?"

"ழான்...ழா.." பதில் பேச முடியாமல் நாக்குழறினாள் ஓவியா......

எதோ சதி நடந்துல்லது என்று அறிந்ததும் ஒன்றும் காட்டிக்கொள்ளாதவள் போல்....உஷரான மீரா....உடனே ஆம்புலேன்ஸுக்கு அழைத்து..............

டாக்டர் பெஞ்சமீன் மேசை மீது எதோ ஒரு X-ரய்யை வைத்து கொண்டு நோட்டம் விட்டு கொண்டிருந்தார்.....

நர்ஸ் ஷீலா இன்டர்கோமில் அழைத்தாள்..

சார்,...எதோ பொய்சன் கேஸாம்....போலீஸும் கூடவே வந்துருக்கு...கொஞ்சம் வாங்களேன்

ஓவியா
15-12-2006, 09:29 AM
அத்தியாயம் 15

டாக்டர் பெஞ்சமின் கையை பிசைந்தவாறே வெளியே வந்தார்.. மீரா என்ன டாக்டர் என்ன ஆச்சு? ஏனிப்படி என கேள்விகளாய் அடுக்க, பெஞ்சமின் சொன்னார்..

பார்த்தா அலர்ஜிக் ரியாக்சன் மாதிரி தெரியுது.. இவங்களுக்கு அலர்ஜி இருக்கான்னு தெரியலை.. என்ன அலர்ஜின்னும் தெரியலை என்றார்..

உங்களாலேயே "கிரேக்" பண்ண முடியலைன்னா எப்படி டாக்டர்.. ஏகாம்பரம் இட்லியும் சட்னியும் மட்டும்தான் கொடுத்தார்.. மற்றபடி வேற எதுவுமே சாப்பிடலை..இட்லி சட்னிக்கு அலர்ஜி அதுவும் ஒரு தமிழ் பொண்ணுக்குன்னா நம்பவே முடியலை.. வேற எதாவது...

புரியலை.. மாதிரிகளை லேபுக்கு அனுப்பி இருக்கோம்.. இவளோட லாக்கப்பில யாராவது இருந்தாங்களா...

அல்லிராணி ன்னு லோக்கல் கேஸூ.. சாயங்காலம்தான் ஏட்டு அரெஸ்ட் பண்ணி கொண்டுவந்தார்.. இரவில் பெண்கள் லாக்கப்பில இருக்கறதால் பெண்போலீஸ் இருந்தோம்.. மற்றபடி அல்லிராணியும் இவளும் நல்லாத்தான் பேசிகிட்டு இருந்தாங்க..

ஆமாம் இந்த பொண்ணு என்ன கேஸில் மாட்டிச்சு..

ஏன் கேட்கறீங்க... இது ஒரு ஆயுதக் கடத்தல் கேஸ்..

இல்லை எதாவது மருந்து சயனைட் குப்பி மாதிரி உபயோகப்படுத்தி இருக்கோன்னு செக் செய்யணும்.. சில மருந்துகள் இருக்கு, அதை உபயோகப்படுத்தினால் இப்படி உணவு அலர்ஜி வரலாம்.. இது இவள் தப்பிக்க போட்ட திட்டமாவும் இருக்கலாம்..

அப்ப ஹாஸ்பிடலைச் சுத்தி பலமா காவல் போட்டிறவா என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது...

"வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே" என மீராவின் செல்போன் பாட செல்போனை எடுத்து பொத்தானை அமுக்கி ஹலோ என்றாள்...

"நான் இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் பேசறேன்" என்றது செல்ஃபோன்

அத்தியாயம் 16

யேஸ் சார், மீரா பேசுறேன் சார்

எந்த ஆஸ்பித்திரியில் இருகீங்க மீரா,

மூனாவது தெருவுல இருக்கற பெஞ்சமின் மெடிகல் சேன்டர்ல சார்....போய்சன் கேஸுனு பக்கதிலே வந்துட்டோம் சார்

என்ன நடந்தது,
எப்படி இவ்வளவு அலட்சியமா இருந்தீங்க, சரி செல்லில் யாரு யாரு இருந்தா?

விவரமாய் சொல்லி முடித்து போணை வைக்க, அய்யோனு ஆடி போனாள், சே... நம்ப டூட்டிலேதான் நடக்கனுமா.....

மறுமுனையில் கமிஷ்னர் ராகவனுக்கு செய்தி எட்டியது
தீவிரவாதிகளுன் இவள் எப்படி சேர்ந்தாள், இது ஒரு ஆயுதக் கடத்தல் கேஸா, கள்ள நொட்டு அடிக்கறகேஸா......

யோசித்து கொண்டே காருக்குள் அமர்கிறார்...

டிரைவர் சந்தானத்தை பெஞ்சமின் மெடிக்கல் சேன்டர் போ என்று கட்டளையிட்டார்

எப்படியோ கிரீட்டிகல் சிட்டுவேஷனில் இருந்து காப்பாதிட்டோம் ஆனா கண்விழிக்க எப்படியும் ஒரு 24 மணி நேரமாவது ஆகும்... கொஞ்சம் ஸ்ட்ரோங்கா மேடிஸன் கொடுத்திருகோம் அதனாலே...கொஞ்சம் பொருமையாய் இருங்க கமிஷ்னர் சார் ...டாக்டர் பெஞ்சமின் பேசிகொண்டெ லாப்பினுல் நுலைந்து.....அந்த போய்ஸன் கேஸ் ரிசல்ட் வந்துருச்சானு....நர்ஸ் ஷீலவை கேட்க....

அமா சார், இப்பதான் வந்துச்சுனு சொல்லி கையில் கொடுத்துவிட்டு........நான் கிளம்புறேனு சொல்லி சென்றாள்...

பிரித்து படித்த டாக்டர் பெஞ்சமின்,

கமிஷ்னர் சார், இது ஒரு பெரிய கேஸா இருக்கும் போல.....ரீசால்டுலே...ரெண்டுவகை போய்சன் கொடுத்ததா இருக்கே....
ஒன்னு வயிறில் இது சப்பாட இருக்கலாம்...இன்னொன்னு எதோ ஊசியில் உடலில் செலுதியது போல் இருக்கும் போல்...

எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க, எதாவது விசயம் இருந்த உங்களை பேர்சனலா கூப்பிடுறேன் .....

சரி டாக்டர் நான் வரேன்....கமிஷ்னர் ராகவன் சென்றார்....

********************************************************************************************

ஏலே அல்லி அந்த கடிதாசை இப்படி குடு இன்னாதான் எழுதீருக்குனு பார்ப்போம்...
அல்லி கடிதத்தை ரேசனிடம் கொடுக்க.....

அடச்சே! இதுக்குத்தான் வீக்கானவங்களை சேர்க்கக்கூடாதுங்கறது.. மயூரேசன் அலுத்துக் கொண்டான்.. மோகன்?? யாரது??? முகவரி இருக்கே.. ஈஸியா புடிச்சிரலாம்.. ஒருவேளை ஃபாத்திமாவை அரஸ்ட் பண்ணின போது ஒருவன் பின்னாலேயே மறைந்து மறைந்து தொடர்ந்தானே அவனா? ஃபாத்திமாவுக்கு இன்னும் வெளியுலக கனெக்ஷன் இருக்கிறதென்றால் முதலில் அதை கட் செய்யணும்.. மயூரேசன் கடிதத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்..

ஓவியா
15-12-2006, 09:34 AM
அத்தியாயம் 17

போஸ் கோபத்தின் உச்சத்திலிருந்தான்.. இப்படியா அரைகுறையாய் திட்டம் போடுவது? ஃபாத்திமா பிழைத்து விட்டாளே.. இனி காவல் பலமாகி விடுமே. அவள் தன்னை கொல்ல நினைத்தது யார் என்று புரிந்துகொண்டாள் விபரீதமாகி விடுமே..

உடனே மயூரேசனை வரச் சொன்னான்,,

போஸ் அழைத்ததும் மயூரேசன் விரைந்து சென்றான். பசிவேளை. ஆனால் பார்க்க முடியுமா? வேலை...என்ன வேலை...போஸிடம் பார்ப்பதெல்லாம் வேலையா...வெறுப்புதான். ஆனாலும் வேறு வழி ஏது? சொன்னதைச் செய்கிறவன். அவ்வளவுதான்.

நல்ல வேலை கிடைத்தால் இதையெல்லாம் விட்டு விட்டுப் போகிறவந்தான். ஆனாலும் சொன்ன வேலையைச் செய்யக் கூடியவன். அதனால்தான் பாத்திமா கடிதம் குடுத்தாள் என்றதும் பதறித்தான் போனான். ஆனால் போஸ் அழைத்ததும் கடிதத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நேரில் பார்த்துச் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் விதி விட்டதா? வழியில் ராகவனிடம் மாட்டிக் கொண்டான்.

அத்தியாயம் 18

மதியின் மனதில் ஒறே போராட்டம்.......ச்சே என்ன செய்வது...இப்படி ஆயிபோச்சே.....யார உதவிக்கு கூப்பிடறது...யோசித்த வன்னம் கைத்தொலைபேசியை எடுத்து...........ஒரு-ஒரு எண்ணாக பார்க்க................பளிச்சென்று மின்னியது அந்த எண்......பிரீன்ஸ் பிரன்க்லின்

மறுமுனையில்.....அலோ

அலோ.....மேய் ஐ ஸ்பீக் டு யுர் எம் டி பிரீன்ஸ் பிலீஸ்.....

யூர் கூட் நேம் ப்லீஸ்....ஒரு சிட்டு கூவியது

ஓ சொரி, ஐ எம் லாயெர் மதி ப்றோம் சேன்னை...

வேய்ட மினிட் பிலிஸ்..... ஆப்பரேட்டர் 'என்னை தாலட்ட வருவாள இசையில் லைனை வைத்தள்....

அலோ...

அலோ டேய் எப்படி இருக்கே....

ஓ மதியா சொல்லு....

எனக்கு ஒரு உதவி வேணும்....பீலிஸ் போனை வச்சுடாதே.....பிலீஸ்.....கெஞ்சினான் மதி

சரி ஏன் மும்பை அனில் கோர்படேவும், டெல்லி மஸ்தானும் உன்னை தேடறானுங்க..............மதி........இப்ப எங்க இருக்கே சொல்லு....

நான் வர ஒரு ரேண்டு அவர் ஆகும்........நாம சந்திக்கும் பங்களாக்கு வந்துடு......சரியா...........ம்ம்ம் பாய்

மதிக்கு பிரிந்த உயிர் வந்தது போல் இருந்தது.....

மும்பை அனில் கோர்படேவும், டெல்லி மஸ்தானும் பிரீன்ஸ் பிரன்க்லின் நண்பர்கள்....அப்பாடா தப்பித்தோம் என்று மனம் மகிழ்ந்தது

இப்ப மதி கண்ணுக்கு பிரீன்ஸ் பிரன்க்லின் தெய்வமாக தெரிந்தான்...பெரிய கோடிஸ்வரன்.....பணதிற்க்கு கஷ்டமில்லை...............

ஓவியாவை காபாற்றி கூட்டி சென்றுவிட மனம் ஏங்கியது..........

மருத்துவமனையில் ஓவியாவின் உயிர் மெல்ல மெல்ல .......................................

ஓவியா
15-12-2006, 09:44 AM
அத்தியாயம் 19

தன்னை உணரத் தொடங்கி இருந்தது.. எங்கேயே தண்ணீரில் மிதப்பதைப் போல ஒரு உணர்வு.. கண்கள் பாரமாய் இருந்தது.. திறக்க முடியவில்லை.. தலைக்குள் ஒரு ரங்க ராட்டினம் சுழல்வதைப் போலிருந்தது.. ஏதோ ஆகாயத்தில் இருந்து சுழன்றவாறே கீழே இறங்குவதைப் போல உணர்வு.. யாரோ அவளை உலுக்குவதாய் ஒரு உணர்வு ஏற்பட கண்ணை திறக்க முயன்று தோற்று வாயைதிறக்க முயன்றால்..

பெஞ்சமின் முகம் சற்றே நிம்மதியைக் காட்டியது.. அப்போது நர்ஸ் ஷீலா வந்து சார் போலீஸ் கமிஷனர் உங்களை கூப்பிடுகிறார் என்று சொல்ல..

அந்த அறைக்குள் நுழைந்தார்..

ராகவனும் - செல்வ நாயகமும் உள்ளே இருக்க பெஞ்சமின் புருவத்தை உயர்த்தினார். ராகவன் செல்வ நாயகத்தை அறிமுகப் படுத்தினார்..

செல்வ நாயகம் ஓவியா எப்படி இருக்கிறாள் என்று விசாரித்தார். பெஞ்சமின் தற்போது நம்பிக்கை இருக்கிறது.. இன்னும் இரண்டு நாள் ஆகலாம் எதையும் தெளிவாகச் சொல்ல என்றார்..

"இப்போதைக்கு ஃபாத்திமா இறந்திட்டதா அனவ்ன்ஸ் பண்ணிடுங்க"

அத்தியாயம் 20

மோகன் சிந்தனையில் இருந்தான்.. ம்ம்ம் போஸின் இன்னொரு ஆள் இருக்கான் யார் அது என்று அவனது மண்டையை குடையத் தொடங்கியது.

இனி மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.. ஓவியாவிற்குப் புதுப்பெயர் வேண்டும். ஸ்டெல்லா என மாற்றிவிடலாம். அதற்குத் தேவையான டாக்குமெண்டுகள், படிப்புச் சான்றிதழ்கள், ஓட்டுச் சீட்டு, ரேஷன் கார்ட் எல்லாம் ரெடி.. இவளை தயாராக்கினால் போஸிற்கு எங்க்கிருந்து ஆயுதங்கள் வருகின்றன எனத் தெரிந்து விடும், ஆனால் ஒத்துழைப்பாளா?

மயூரேசன் நல்லவன் போலத்தான் தெரிகிறான்.. அவனையும் நம் வலைக்குள் கொண்டுவரவேண்டும்..

ம்ம்ம்... நிறைய சாதிக்க வேண்டும்.. எங்கேயாவது சின்ன தவறு வந்தாலும் எத்தனை உயிர் பலியாகும் என்று தெரியாது..

என்னேரமும் விழித்திருக்க வேண்டிய சமயமிது.. இன்று மாலை போஸை பார்த்து ஃபாத்திமா ஒழிந்தாள் என்று சொல்லிவிட வேண்டியதுதான்

அத்தியாயம் 21

கமிஷனர் ஆபீசிலிருந்து வெளியே வந்தான் மயூரேசன். கமிஷனர் ராகவன் சொன்னதெல்லாம் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும் பயமாக இருந்தது. இதெல்லாம் நடக்குமா? தானும் நிம்மதியாக நல்ல சோறு சாப்பிடுவோமா என்ற ஆவலும் உள்ளுக்குள் இருந்தது. சரி. ஆனது ஆயிற்று. முடிவுக்கும் வந்தாயிற்று. இனிமேல் துக்கப்படக்கூடாது என்று முடிவு செய்தான்.

அங்கே வாசலில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் சிகரட் வாங்கிப் பற்ற வைத்தான். புகையை வளையம் வளையமாக விட்டவன் கண்ணில் வளையலாக மாட்டிக் கொண்டான் ஒருவன்.

"ஏய் மதி!" மயூரேசன் கைதட்டி அழைத்தான். கமிஷனர் ராகவனும் தானும் முடிவு செய்ததை மதியிடம் தொடங்க முடிவு செய்தான். அதனால் மதியை அழைத்தான்.

அத்தியாயம் 22

மயூரைப் பார்த்த மதிக்கும் வியப்பு. "ஏய்! சந்துரு! நீ எங்க இந்தப் பக்கம்? அதுவும் கமிஷனர் ஆபீஸ் வாசல்ல.".......................

மதியின் மனம் தீயாய் எரிந்துகொண்டிருந்தது.. முதலில் இவன் கதையை முடிக்கவேந்தும்.. இவனால் அல்லவா ஓவியாவை இழக்க நேரிட்டது.. இருக்கட்டும் இருக்கட்டும்.. பட்சி தானாய் வந்து வலையில் விழுகிறது.. இவனிடமிருந்தே எனது கணக்கை தீர்க்க ஆரம்பிக்கிறேன்..

என்ன சந்துரு.. எங்க இந்தப் பக்கம் என்று கேட்க.. அது ஒண்ணுமில்லை.. சும்மாதான் என்ன புதுசா எதாவது பார்ட்டி தேறுமா? மயூரேசன் கேட்க..

அதெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு சந்துரு... இப்ப நான் புது ஆளு.. பிஸினஸ் செய்யறேன்.. அது விஷயமாத்தான் ஆடிட்டரை பார்க்கப் போயிட்டிருக்கேன்.. உனக்குத் தெரியுமா, நீ கொடுத்த அந்தப் பணம்தான் இந்த புது வாழ்க்கைக்கே அடித்தளம்.. இந்த சனிக்கிழமை ஃபிரீயா இருக்கியா மீட் பண்ணுவோம் நிறைய பேசலாம்..

மயூரேசனும் ஒப்புக்கொண்டான்.. இவன் மூலம் நமக்கும் ஒரு மறைவிடம் கிடைக்கலாமே!.. சந்தோஷமாய் மீட் பண்ணலாம்.. நானும் உன்னோட நிறைய பேசணும்...

**************************************************************************************************

அய்யா சாமிகளா,
நான் வர ஒரு 20 நாளாகும்.....எப்படியோ கொல்லுங்க.....:D :D :D ..இல்ல சமாலிங்க....

*********************************************************************************************

புதிய நண்பர்களே,
அத்தியாயத்தை சீரமைத்து கொடுத்துல்லேன்....
படித்து......குழம்பி......யோசித்து.......தொடருங்கள்......

வாழ்த்துக்கள்..........:) :)

ஓவியா
15-12-2006, 10:07 AM
அதாவது...

சந்த்ரு = மயூரேசன் ...

ஊருக்குள்ள சந்துரு ஆனா அந்த கிரிமினல் கும்பல்ல அவன் மயூரேசன்..

போஸ் மோகனை முழுசா நம்ப முடியாததால ஃபாத்திமாவைக் கொல்ல போட்ட திட்டம் அல்லிராணி மூலம் அவளுக்கு விஷ ஊசி போடறது.. அது மெல்லக் கொல்லும் விஷம்...

செல்வ நாயகம் ஃபாத்திமாவை சீனில் இருந்து மறைக்க போட்ட திட்டம் ஏகாம்பரம் மூலம் மருந்து கலந்த இட்லியைக் கொடுத்தது..

மெல்லக் கொல்லும் விஷம் என்னன்னு பெஞ்சமினால கண்டு பிடிக்க முடியலை..

மயூரன் நீங்க எழுதனப்ப கூலி ஆளுன்னு சொல்லலியே

இப்போதைக்கு

காம்ரேட்ஸ் = போலீஸ் உளவாளி மோகன்
ஓவியா = ஃபாத்திமா = ஸ்டெல்லா
சந்துரு = மயூரன்

இனிமே தான் மதியின் சாகசங்கள் ஆரம்பம்

ராகவன் = கமிஷனர்
செல்வநாயகம் = இன்ஸ்பெக்டர்
காம்ரேட்ஸ் = போலீஸ் உளவாளி மோகன்

ரகுபதி = போஸ் = இண்டர்நேஷனல் கிரிமினல்களின் தலைவன்
சந்துரு = (பண்ணையார் மகன்) = மயூரன்
அல்லிரானி = மயூரனின் கையாள்

மதி = கதானாயகன்
ஓவியா = ஃபாத்திமா = ஸ்டெல்லா
பிரின்ஸ் பிரங்கலின் = மதியின் நண்பன்

மீரா = பெண் போலிஸ்
பெஞ்சமின் = டாக்டர்

ஆதவா
15-12-2006, 10:46 AM
அய்யோ ஓவியா(ம்மா) !!! இதென்ன காவியமா? நான் வந்துட்டேன்ல... இனி கதையே மாறப் போகுது.

என் வழி------------------ தனி வழி.. ஆங்

மதி
15-12-2006, 10:50 AM
நடத்துங்க உங்க வழி...!

ஓவியா
15-12-2006, 10:57 AM
அய்யோ ஓவியா(ம்மா) !!! இதென்ன காவியமா? நான் வந்துட்டேன்ல... இனி கதையே மாறப் போகுது.

என் வழி------------------ தனி வழி.. ஆங்

:eek: :eek: :eek:
:D :D :D :D

மிகவும் சந்தோஷம்

வாழ்த்துக்கள்

மக்களே,
தயவு செய்து அத்தியாயம் போட்டு எழுதுங்க

ஆதவா
16-12-2006, 05:31 AM
பேசிக் கொண்டே மதியும் மயூரேசனும் சிகரெட் பற்ற வைத்தார்கள்,, மதியின் மனதில் சிகரெட்டைப் போல மயூரேசன் எரிந்து கொண்டிருந்தான், மனதில் கொஞ்சம் வஞ்சகம் இருந்தாலும் உதட்டில் சிரிப்பை வரவழைத்தான்... சனிக்கிழமை இவன் கதையை முடித்துவிடலாமா? அல்லது கொஞ்ச நாள் விட்டு வைப்போமா என்று எண்ண அலைகளால் எண்ணிக் கொண்டிருந்தான் மதி..

என்ன மதி ஒரே சிந்தனையாவே இருக்கீங்களே?

மதி அவனை ஒருமாதிரியாகவே பார்த்து கொண்டு, "இல்ல சந்துரு. ஓவியாவை எப்படி வெளிய கொண்டுவரதுண்ணு யோசிச்சிட்டிருந்தேன்.. "

"அவ இப்போ ஹாஸ்பிடல்ல இல்ல இருக்கா?"

இவனுகெப்படி தெரியும். ஆ.. ஆமா,, அதுசரி, சனிக்கிழமை பார்ப்போம். எத்தனை மணிக்கு மீட் பண்ணலாம்?"

"காலையில?"

"ம். சரி சந்துரு.. பை.. மதியின் மனதில் பல எண்ண ஓட்டங்கள்..
அப்படியே அவன் திரும்பி நடக்கயில் அங்கே ஒருவன் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு, நின்று கொண்டிருந்தான்......

மதியின் முகம் வேர்த்து ஒழுகியது..

தாமரை
21-12-2006, 11:37 AM
போஸ் சந்தோஷமாய் இருந்தான்.. பரவாயில்லையே.. இருமுனைத் தாக்குதல் பலன் கொடுத்திருக்கிறது.. போலீஸ் இனி கொஞ்சம் விழிப்பாய் இருக்கலாம். எனவே கொஞ்ச காலம் தலைமறைவாய் இருப்பது நல்லதுதான்..

இப்போதைக்கு காம்ரேட்டயும் மயூரேசனையும் பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும்.. எங்கே விட.. யோசித்ததில் ஃப்ராங்க்ளின் ஞாபகம் வந்தது

franklinraja
28-12-2006, 01:16 PM
மக்களே...

நானும் ஒருவரியை என் பங்குக்கு சேர்த்துவிடலாம் என்று யோசித்து
அனைத்து 22 அத்தியாயங்களையும் Print-எடுத்து
உட்கார்ந்து படித்துவிட்டு வரும்போது அது 24 அத்தியாயங்களாகிப்போனது...

இதையும் சேர்த்துக்கொண்டு (தொடரும் என்று என் பெயரல்லவா இருக்கிறது) ;)
சீக்கிரம் நானும் ஒரு வரியாவது எழுதிவிடுகிறேன் மக்களே..! :D

meera
28-12-2006, 02:29 PM
அட, யாராவது கதைக்கு சுபம் போடுங்கப்பா.

தாமரை
08-05-2007, 10:07 AM
கதையைத் தொடருவோமே!

umakarthick
08-05-2007, 10:13 AM
இது சரியா வரலைங்க..பாட்டுக்கு பாட்டு மாதிரி இது ஹிட் ஆகாதுங்க

இணைய நண்பன்
08-05-2007, 12:24 PM
பேசிக் கொண்டே மதியும் மயூரேசனும் சிகரெட் பற்ற வைத்தார்கள்,, மதியின் மனதில் சிகரெட்டைப் போல மயூரேசன் எரிந்து கொண்டிருந்தான், மனதில் கொஞ்சம் வஞ்சகம் இருந்தாலும் உதட்டில் சிரிப்பை வரவழைத்தான்... சனிக்கிழமை இவன் கதையை முடித்துவிடலாமா? அல்லது கொஞ்ச நாள் விட்டு வைப்போமா என்று எண்ண அலைகளால் எண்ணிக் கொண்டிருந்தான் மதி..

என்ன மதி ஒரே சிந்தனையாவே இருக்கீங்களே?

மதி அவனை ஒருமாதிரியாகவே பார்த்து கொண்டு, "இல்ல சந்துரு. ஓவியாவை எப்படி வெளிய கொண்டுவரதுண்ணு யோசிச்சிட்டிருந்தேன்.. "

"அவ இப்போ ஹாஸ்பிடல்ல இல்ல இருக்கா?"

இவனுகெப்படி தெரியும். ஆ.. ஆமா,, அதுசரி, சனிக்கிழமை பார்ப்போம். எத்தனை மணிக்கு மீட் பண்ணலாம்?"

"காலையில?"

"ம். சரி சந்துரு.. பை.. மதியின் மனதில் பல எண்ண ஓட்டங்கள்..
அப்படியே அவன் திரும்பி நடக்கயில் அங்கே ஒருவன் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு, நின்று கொண்டிருந்தான்......

மதியின் முகம் வேர்த்து ஒழுகியது..

மேனியிலே பதற்றம் என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.அவனைக்கண்டும் காணாதவாரு மெல்ல நடக்கத்துவங்கினான் மதி.ஆனால்...மறு நிமிடம்,

மதி
08-05-2007, 02:47 PM
ஆஹா..மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்கப்பா..!

ஆதவா
08-05-2007, 02:57 PM
விஸ்தா!! இது எப்போது எழுதப்பட்டது தெரியுங்களா? நான் மன்றம் சேர்ந்த புதிதில்... ஓவியாக்கா கதையை கோர்த்திருப்பார்கள் பாருங்கள்....

இணைய நண்பன்
08-05-2007, 10:37 PM
விஸ்தா!! இது எப்போது எழுதப்பட்டது தெரியுங்களா? நான் மன்றம் சேர்ந்த புதிதில்... ஓவியாக்கா கதையை கோர்த்திருப்பார்கள் பாருங்கள்....

ஓவியாக்கா கதையை அத்தியாயம் 1 முதல் 22 வரை கோர்த்திருந்தார்.அதன் பின் நீங்கள் எழுதியிருந்தீர்கள்.அதைத்தொடர்ந்தே நான் எழுதியிருக்கேன்.தவறேதும் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்.நன்றி

lolluvathiyar
09-05-2007, 04:13 PM
மேனியிலே பதற்றம் என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.அவனைக்கண்டும் காணாதவாரு மெல்ல நடக்கத்துவங்கினான் மதி.ஆனால்...மறு நிமிடம்,

பேனாவை கீழே வைத்து விட்டு
லொள்ளு வாத்தியார் யோசித்து கொண்டிருந்தார்
இந்த கதையை இனி எப்படி கொண்டு போவது என்று
அவருக்கே புரியவில்லை.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை
எத்தனை திட்டும், அர்ச்சனையும் வந்தாலும் பரவில்லை என்று
அனைத்து அத்தியாயங்களையும் கிழித்து விட்டு
இனி கதையே எழுதகூடாது என்று முடிவு செய்தார்
முற்றும்

ஓவியா
09-05-2007, 06:17 PM
முற்றும் என்று எழுதியவுடன் அடுப்பில் வேக வைத்த சாதம் நினைவிற்க்கு வரவே.....மனைவி லதாவின் மேல் உள்ள பயத்தை காட்டிக்கொள்ளாமல் பாய்ந்து சமயறைக்கு ஓடினார் லொள்ளுவாத்தியார்.

சாதம் கஞ்சியாயிருந்தது.

அடடா இன்றும் உருட்டுக்கட்டை வருமே என்ற பயத்தில் அங்கேயே பிரமித்து போய் அமர்ந்து விட்டார்.....கண்களில் பொல பொலவென்று கொட்டிய கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

அத்தியாயம் 25

தற்ச்செயலாக மகள் உதயநிலா படிக்குமறையினுல் வரவே, என்ன இது இவ்வளவு குப்பை என்று பார்த்தாள், காகிதங்களை ஒன்றினைத்து கதையினை படிக்கலானாள்.......

அத்தியாயம் 24ல் படித்து முற்றும் என்ற வரியை பார்த்தவுடம், கண்கள் சிவக்க எரி மலையானாள், இந்த ஆண்களே இப்படிதான்.......:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

யோசிக்கும் பொழுதே வானோலியில் 'நல்லதோர் வீணை செய்து' என்று ஒலிக்க, புளுதியில் போடக்கூடாது என்று முடிவு செய்தாள்.

சரி இனி கதையை நம் அனைவரும் தொடருவோம் என்று முடிவு செய்து முற்றும் என்ற வார்தையை அழித்து விட்டு தொடரும் என்று எழுதினாள்.

மனோஜ்
09-05-2007, 07:24 PM
கைபேசியை எடுத்து எண்களை சுழுற்றினார் போஸ்
நீங்க தொடர்பு கொள்ளும் வாடிக்கையாலர் தற்சமயம் தொடர்பு எல்லையில் இல்லை என்று கூறியது
இது ஒத்து வராது நம்ம காட்டு பங்களாதான் சரி யோசித்து கொன்டே
உடன் தொடர்பை துன்டித்து விட்டு மயூரேசனை அழைத்தார் போஸ்
சொல்லுங்க போஸ் என்ன விஷயம்
நீ எங்க இருக்கிற
நா இப்ப ஒரு கடையில் சாப்பிட்டு கொன்டிருக்கிறோன்
சரி நீ உடன் கிளம்பி இங்க வா
எங்க போஸ் இருக்கிங்க
உம்... நீ நம்ம காட்டு பங்களாவுக்கு வா
சரி போஸ் என்றதும் போஸ் இனைப்பை துன்டித்தார்
இவர் எதுக்கு திடுதுப்புனு நம்மல காட்டு பங்களாவுக்கு கூப்பிட்டார் என்று மனதில யோசனையூடன் சாப்பிட்டு கொன்டிருந்தான் மயூரேசன்
போஸ் அடுத்ததாக காம்ரேட்க்கு அழைத்தார்
செல்லுங்க பாஸ் என்றான்
நீ உடன் கிளம்பி நம் காட்டு பங்களாவுக்கு வந்திடு என்றதும்
மறுப்பு ஏதும தெரிவிக்காது
சரி பாஸ் என்றான்
போஸ் காட்டு பங்களாவில் தன்னுடைய ஆட்களுடன் இருவரின் வரவுக்காக காத்திருந்தார்

lolluvathiyar
10-05-2007, 06:32 AM
முற்றும் என்று எழுதியவுடன் சமயறைக்கு ஓடினார் லொள்ளுவாத்தியார்.

தற்ச்செயலாக மகள் உதயநிலா கதையினை படிக்கலானாள்.......

இந்த ஆண்களே இப்படிதான்.
சரி இனி கதையை நம் அனைவரும் தொடருவோம் என்று முடிவு செய்து முற்றும் என்ற வார்தையை அழித்து விட்டு தொடரும் என்று எழுதினாள்.

நண்றி ஓவியா, நான் எதிர்பார்த்தது தான்
ஒரு விளையாட்டுக்காக செய்தேன்.
நீ எழுதிய வகையிலேயே தான் இந்த
கதையை அடுத்த நாள் தொடர முடிவு
அதற்க்குள் நீங்கள் முந்தி கொண்டீர்கள்
அதிலேயும் ஒரு வம்பு ஆண்களை திட்டுவது

franklinraja
10-05-2007, 03:46 PM
மக்களே...

நானும், ஒரு நல்ல நாளில் தொடர்வோம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்... ;)

அந்த நல்ல நாள், நல்லவேளையாக வந்துவிட்டது... :D

விரைவில், நானும் தொடர்கிறேன்...

ஓவியா
12-05-2007, 07:45 PM
திரி ஆரம்பித்து வைத்த புண்ணியாவான் எங்கே!! எங்கே!!! எங்கே!!!!

இதுவரை எழுதிய கதை இங்கே காண்க
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9272

தொடருங்கள் மக்களே.

leomohan
13-05-2007, 05:13 AM
ஒரு வரி கதை விட்டு ஒரு வரி கவிதை துவங்கலாம்

அல்லது ஒவ்வொருவரும் ஒரு அத்தியாயம் எழுதலாம்.

எப்படி இருக்கு யோசனை.

ஓவியா
13-05-2007, 12:19 PM
ஒரு வரி கதை விட்டு ஒரு வரி கவிதை துவங்கலாம்

அல்லது ஒவ்வொருவரும் ஒரு அத்தியாயம் எழுதலாம்.

எப்படி இருக்கு யோசனை.

இப்படி பாதியிலே விட்டுட்டு போனா பம்பாய் மஸ்தான், திருபாச்சி அருவா, ஆல்தோட்ட பூபதியின் ஆட்டோ, வருமென்று அன்பாக, பண்பாக, அழகாக முக்கியமாய் அமைதியாக சொப்புகிறேன் நைனா. கதையை முடிக்க ஒரு வழியை கண்டு பிடிங்க சாரே.

இதுவரை எழுதிய முழுக்கதையும் இங்கே,http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9272

மோ, உங்கள் திறமைக்கு ஒரு முறை கதையை படித்தீர்கள் என்றால் 3 அல்லது 5 அத்யாயத்தில் அருமையாக, அமர்களமாக, சிறப்பாகவும் கதையை முடிக்கலாம்.

செல்வன் அண்ணாவும் இணைந்து பங்காற்றுவார்.

இது நீங்கள் கொளுத்திய திரி.

ஓவியா
14-07-2007, 03:04 AM
இந்த திரியை முடித்து ஒரு சாதனை படைக்கலாம் வாருங்கள் மக்களே...............................நானும் காத்து காத்து கண்களும் பூத்து விட்டனவே!! உதவி பிலிஸ். யாராவது உதவுவீர்களா???

aren
14-07-2007, 03:07 AM
இது என்னன்னு எனக்கு தெரியாது. நான் படித்துவிட்டு பங்கெடுக்க முடிந்தால் நிச்சயம் களத்தில் குதிக்கிறேன். அனால் என்ன, நமக்கு அந்த தகுதியெல்லாம் கிடையாது.

விதி யாரை விட்டது. உங்களுக்கு அந்த மாதிரி தலையில் எழுதியிருந்தால் நான் இங்கே எழுதுவதை படித்தே தீரவேண்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

வெற்றி
14-07-2007, 03:43 AM
உலகம் அழிந்து விட்டது,அவனைத்தவிர யாரும் இப்போது உலகில் இல்லை,நிம்மதியாய் உணர்ந்தான்,,அப்போது கதவு தட்டும் ஓசை கேட்டது..!!!

அக்னி
07-09-2007, 05:57 PM
லியோமோகன் அவர்கள் கொளுத்திய திரி...
ஓவியா அவர்கள்
இங்கே...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9272 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9272)
தொகுத்து பதிந்துள்ளார்கள்...
பின்னூட்ட இலக்கம் 136 வரைக்கும் பதிந்துள்ளார்கள்...
இப்போது மன்றத்தில் கதை எழுதுவோரும் அதிகம் இருப்பதால்,
தயவு செய்து இதனைத் தொடர்ந்து,
நிறைவுசெய்ய அன்போடு அழைக்கின்றேன்...
அப்படியும் இத்திரி நகராவிட்டால்,
லியோமோகன் அவர்களையே
இந்தக் கதையை முடித்துத் தருமாறு
தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கின்றேன்...

ஓவியா
01-12-2007, 01:47 PM
வணக்கம் நண்பர்களே.

இந்த ஒருவர் ஒரு வரிகதை இப்படி பாதியிலே தூக்கிலிட்ட பொம்மைபோல் ஆடிக்கொண்டிருக்கிறது, இதனை இன்னுமொரு 20அத்தியாயங்கள் எழுதி சாதனை படைத்து ஒட்டியாகலாம் என்று முடிவெடுத்துள்ளேன். :eek::eek:.

கதையை தொடர்ந்து 'சுபம்' போட்டு முடித்து விடலாம் என்று நமது மன்ற தமிழ்மகன் சொல்லின் வேந்தர் தாமரைச்செல்வன் அவர்களும் நானும் (ஓவியா) ஆசைப்படுகிறோம்.

இதுவரை இதில் பங்கெடுத்த அன்பர்களின் பெயரை கீலே கொடுத்துள்ளேன். இந்த கூட்டணி 25 அத்தியாயம் எழுதியுள்ளனர். :icon_b:

லியோமோகன்
தாமரை செல்வன்
ஓவியா
ராஜா
மீரா
மதி
guna
gragavan
sriram
அல்லிராணி
ஆதவா
இக்ராம்
lolluvathiyar
மனோஜ்
மொக்கச்சாமி
...................................................................................

இனி வரும் 20 அல்லது 25 அத்தியாயத்தை நானும் தாமரை அண்ணாவும், ஆதவாவும் கதை எப்படி போக வேண்டும் என்று ஆலோசித்து, இனி பங்கெடுக்க போகும் நண்பர்களுக்கு தனி மடலில் கருவாக கொடுப்போம், அவர்கள் அந்த கருவை ஒரு அத்தியாயமாக எழுத வேண்டும்.

இதில் பங்கெடுக்க விருபுபவர்கள் உங்களின் பெயரை தாமரை அண்ணாவிடம் கொடுக்கவும். இதுவரை எழுதாத ஒரு 20 மன்ற கண்மணிகள் முன்வந்து ஆளுக்கொரு அத்தியாயம் எழுதினால் சிறப்பாக இருக்கும்.

தேவைப்பட்டால் மட்டுமே நாங்களே அவர்களை தேர்ந்தெடுக்கவும் உள்ளோம். :D

வெகு ஆவலுடன்
ஓவியா. :)

மதி
01-12-2007, 01:54 PM
நல்ல முடிவு...
சீக்கிரம் முடிங்கப்பா..

ஓவியா
01-12-2007, 02:05 PM
இன்னும் பல அத்தியாயத்தை ஓட்டனும். நீங்கதான் மன்ற மக்களை வந்து கலந்துக்க சொல்லனும்.

நன்றி மதி.

மதி
01-12-2007, 02:08 PM
இன்னும் பல அத்தியாயத்தை ஓட்டனும். நீங்கதான் மன்ற மக்களை வந்து கலந்துக்க சொல்லனும்.

நன்றி மதி.

இது தான் சொந்த செலவில் சூன்யமா..?
அக்காவின் வேண்டுகோள் ஏற்று மன்ற உறவுகளையும் தோழர்களையும் கதையை முடிக்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

ஓவியா
01-12-2007, 03:00 PM
ஆமாம் நான் ஒரு 25 பெயரை அழைக்கிறேன்.

1. மயூ
2. சிவாஜி
3. அக்னி
4. அமர்
5. இதயம்

6. பூமகள்
7. யவனிகா
8. மலர்
9. சாம்பவி
10. பிச்சி

11. ஓவியன்
12. இனியவள்
13. ஜெயாஸ்தா
14. சடகோபன்
15. விராடன்

16. ஆரேன்
17. அன்புரசிகன்
18. சூரியன்
19. நேசம்
20. சுகந்தப்ரீதன்

21. தங்கவேல்
22. சுட்டி சஞ்சய்
23. எஸ். ராஜா
24. கமலகண்ணன்
25. கஜினி

யாரின் பெயராவது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும், ஸ்பெஷல் பிரிவிலேஜ் ஏதும் இல்லை. எதோ கண்களுக்கு எட்டிய பெயர்களை அழைத்தேன், அவ்வளோதான். :)

ஆதவா
01-12-2007, 03:08 PM
யக்கா... கோதாவுல குதிக்க நான் ரெடி.. ஷி−நிசி பேரைக் காணோம்???

ஓவியா
01-12-2007, 03:16 PM
உன் பேரையே நான் எழுதும் லிஸ்டில் போடவில்லை, காரணம் ஏன் தெரியுமா??? ஆகக்கடைசியா நாம 3 பேரும்தான் எழுத போரோமோ என்று ஒரு அச்சம்தான். காத்திருப்போம். எத்தனி பேர் எழுத முன் வருகிறார்கள் என்று.

நாம கோதாவில் இருந்தப்பவே பல முறை படித்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றுள்ளார். ஒரு சமயம் அவரின் இண்ட்ரஸ் இதில் இல்லை போல் என்று நினைத்துதான் விட்டேன். (தவராயின் மன்னிக்க ஷீ).

மற்றும் பிரதீப், மன்மதன், முகிலன் பேரும் சேர்க்கவில்லையே!!!!

ஆதவா
01-12-2007, 03:22 PM

ஹி ஹி ஹி....

பிரதிப் மன்மதராசாவாகி முகில்ல ஓய்வெடுக்கிறார்.... அதனால அவர் வரமாட்டார்.

ஓவியா
02-12-2007, 04:39 PM
ஆமாம் நான் ஒரு 25 பெயரை அழைக்கிறேன்.

1. மயூ
2. சிவாஜி
3. அக்னி
4. அமர்
5. இதயம்

6. பூமகள்
7. யவனிகா
8. மலர்
9. சாம்பவி
10. பிச்சி

11. ஓவியன்
12. இனியவள்
13. ஜெயாஸ்தா
14. சடகோபன்
15. விராடன்

16. ஆரேன்
17. அன்புரசிகன்
18. சூரியன்
19. நேசம்
20. சுகந்தப்ரீதன்

21. தங்கவேல்
22. சுட்டி சஞ்சய்
23. எஸ். ராஜா
24. கமலகண்ணன்
25. கஜினி

யாரின் பெயராவது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும், ஸ்பெஷல் பிரிவிலேஜ் ஏதும் இல்லை. எதோ கண்களுக்கு எட்டிய பெயர்களை அழைத்தேன், அவ்வளோதான். :)

என்ன யாருமே ஆதரவு கரம் கொடுக்கலையா!!?? :eek::eek:

அட எனக்காக இல்லனாலும், நம்பா ஆதவாவ விடுங்க தாமரை அண்ணாகாகவாவது வந்து எழுதுங்களேன்!!! :):)

இனி கெஞ்ச மட்டேன். :D:D....................:traurig001::traurig001:

mukilan
02-12-2007, 04:44 PM
என்ன பாண்டிய நாட்டிற்கு வந்த சோதனை! ஓவியா என்னையும் ஆட்டைக்குச் சேர்த்துக்கோங்க. ஆனா என்ன செய்யணும்னு "தெளிவா" சொல்லிடுங்களேன்.

ஓவியா
02-12-2007, 04:50 PM
நீங்கள் வருவது குறைவாக இருந்தது என்றுதான் உங்கள் பெயரை சேர்க்க வில்லை. முகில்ஸ் உங்க திறமைக்கு நான் இப்படி ஒரு சோதனை வச்சேயிருக்காகூடாது!!! மன்னிக்க நண்பா.

இப்படி ஒரு எழுத்து பெட்டகம் தானே வந்து கேட்கும் அளவிற்க்கு நான் செய்து விட்டேனே!! எனக்கு மன்னிப்பே கிடையாது. அய்யோ நெஞ்சு துடிக்குதே நண்பா...........

mukilan
03-12-2007, 01:34 AM

இங்க என்ன நடக்குது! என்னை வெச்சு காமடி கீமடி பண்ணலையே! ஹுய்யோ! ஹய்யோ!! இன்னமுமா இந்த மன்றத்துல் என்னை நம்புறாய்ங்க!

மலர்
03-12-2007, 03:09 PM
என்ன யாருமே ஆதரவு கரம் கொடுக்கலையா!!?? :eek::eek:

அட எனக்காக இல்லனாலும், நம்பா ஆதவாவ விடுங்க தாமரை அண்ணாகாகவாவது வந்து எழுதுங்களேன்!!! :):)

இனி கெஞ்ச மட்டேன். :D:D....................:traurig001::traurig001:

ஏன் இல்லை...
நாங்க எல்லாம் இருக்கும் போது இப்படி அழுவலாமா..
கண்ண துடச்சிக்க...:icon_rollout::icon_rollout:

தாமரை
03-12-2007, 03:49 PM
கதையை முழுக்க இன்னொருமுறை படிச்சேன், தலை கிறுகிறுன்னு சுத்துது.. அம்மா தங்கைகளா யாராச்சும் டீ போட்டுக் குடுங்கம்மா!

அமரன்
03-12-2007, 03:54 PM
கதையை முழுக்க இன்னொருமுறை படிச்சேன், தலை கிறுகிறுன்னு சுத்துது.. அம்மா தங்கைகளா யாராச்சும் டீ போட்டுக் குடுங்கம்மா!
மன்ற மங்கைகளையா டீ கேட்டீங்க.. என்னா தைரியம் அண்ணா உங்களுக்கு:icon_b:

பூமகள்
03-12-2007, 03:55 PM
நான் இன்னும் படிக்கவே இல்லையே..!:fragend005::fragend005:
தாமரை அண்ணாவுக்கே தலை சுத்துதுன்னா... என்னை ஐசியூவில் தான் வைக்கனுமே..!! :frown::frown::traurig001::traurig001:

ஏன்னா..இப்படி பயமுறுத்துறீங்க..!! :frown::icon_ush::icon_ush::frown:
ஏதோ... மன்றத்தின் கல்வெட்டில் நம்ம பேரும் வந்தா நல்லாருக்குமேன்னு இருந்த கொஞ்ச நஞ்ச நப்பாசையும் போச்சே..!!:traurig001::traurig001:

மலர்
03-12-2007, 03:59 PM
கதையை முழுக்க இன்னொருமுறை படிச்சேன், தலை கிறுகிறுன்னு சுத்துது.. அம்மா தங்கைகளா யாராச்சும் டீ போட்டுக் குடுங்கம்மா!
அப்போ முதுகை எல்லாம் பாத்திங்களா அண்ணா..??:D:D
நீங்க குடிக்க ரெடின்னா
நான் டீபோட்டு தர ரெடி..

மலர்
03-12-2007, 04:12 PM
மன்ற மங்கைகளையா டீ கேட்டீங்க.. என்னா தைரியம் அண்ணா உங்களுக்கு:icon_b:
தாமரை அண்ணா உயிரை கூட துச்சமாக நினைப்பவர்...
அப்படித்தான....

ஆர்.ஈஸ்வரன்
16-12-2007, 10:46 AM
அவளைக் காப்பாற்றி வெளியே கூட்டிக் கொண்டு வந்தான். வந்ததும் அவள் சொன்னாள் "

meera
01-02-2008, 04:15 AM
மன்ற மக்களே ஓடி வாங்க இந்த கதைக்கு ஒரு முடிவ சொல்லுங்க.

முடிவை சொல்பவருக்கே பரிசு பரிசு பரிசு

(என்ன பரிசுன்னு எல்லாம் கேக்ககூடாது. அத்த யோசிச்சி அப்பரமாட்டி சொல்லுவேன் க்கும்)

ஈஸ்வரன் தயவு செய்து நீங்களாச்சும் முடிவு சொல்லுங்களேன் சகோதரா.

ஓவியன்
01-02-2008, 03:53 PM
மன்ற மக்களே ஓடி வாங்க இந்த கதைக்கு ஒரு முடிவ சொல்லுங்க.

சரி சொல்லுறன்.....!!

முற்றும்........!! :D:D:D

meera
01-02-2008, 10:08 PM
சரி சொல்லுறன்.....!!

முற்றும்........!! :D:D:D

ஆஹா வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க.................

ஒவியன் அண்ணா, சோக்கா??????????:cool::cool:

இத்த சொல்லவா உங்களை கூப்பிட்டென்.

முடிவ சொல்லுங்கப்பா.க்கும்:traurig001::traurig001:

ஆதவா
02-02-2008, 12:55 PM
என்ன யாருமே ஆதரவு கரம் கொடுக்கலையா!!?? :eek::eek:

அட எனக்காக இல்லனாலும், நம்பா ஆதவாவ விடுங்க தாமரை அண்ணாகாகவாவது வந்து எழுதுங்களேன்!!! :):)

இனி கெஞ்ச மட்டேன். :D:D....................:traurig001::traurig001:

சரி சரி அழாதீங்க... ஏதாச்சும் ஐடியா பண்ணலாம்..

அனுராகவன்
03-02-2008, 06:19 AM
என்ன முடிவு.
ம்ம் நான் வந்து முடிவு சொல்ரேன்..
கதை இன்னும் முழுமையாக படித்துவிட்டு வரேன்..
ம்ம் என் நன்றி